Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி சாட்சி

Featured Replies

இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் நேற்று சாட்சியமளித்துள்ளார். விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது பற்றி நேரடியாகக் கண்ட ஒருவர், அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவி, போர் நடைபெற்ற இறுதிக்காலகட்டத்தில் அங்கு இருந்தவர் என்ற வகையிலும் இன்னும் பல்வேறு வழிகளிலும் ஆனந்தி சசிகரனின் இந்தச்சாட்சி முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் அவருடைய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.

18.05.2009இல் எனது கணவர் தள பொறுப்பாளர் போராளிகளுடன் சரணடைந்தவர். எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார். எனக்கு அவரைக் காட்டச் சொல்லியே அந்தக் கமிசனிடம் நான் கேட்டேன்.

எந்த இடத்தில் சரணடைந்தார்கள்? வெள்ளி முள்ளிவாய்க்காலிலா?

இல்லை. கடைசிநேரம் ஆமியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சனம் எல்லாம் வந்த பிற்பாடு முல்லைத் தீவு வட்டுவாகையைத் தாண்டி ஒரு இடத்தில் ‐ அது முல்லைத் தீவுப் பிரதேசம் தான் ‐ அதில் தான் அவர்கள் எல்லோருமாய் அணிதிரண்டு போய் சரணடைந்தார்கள். ஆங்கில மொழிக்கல்லூரி அதிபர் பாதர் பிரான்ஸிஸ் தலைமையில் தான் அவர்கள் போய் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களின் மனைவிமாரும் கூட அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வரை அவர்கள் பற்றி எதுவித தகவலும்இல்லை.

பாதர் பிரான்ஸிஸ் தற்போது எங்கிருக்கிறார். அவரோடு தொடர்பு ஏதும் கிடைத்ததா?

அவரும் எங்கேயென்று தெரியவில்லை. நான் இன்னுமொரு பாதரை ஒருமுறை வவுனியாவில் கண்டபோது பாதர் பிரான்ஸிஸ் எங்கேயென்று கேட்டேன். அவரும் தாங்கள் இதுவரை அவரைச் சந்திக்கவில்லை என்றும் தாங்களும் அவரைத் தேடிக்கொண்டு திரிவதாகவும் அவர் சொன்னார்.

எழிலனோடு சரணடைந்தவர்களில் மற்றைய முக்கியமானவர்கள் யார் யார்?

அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் தங்கன். நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பூவண்ணன். பிரியன், இளம்பரிதி, விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் ராஜாவும் அவரோடை சேர்ந்த மூன்று பிள்ளைகள், லோறன்ஸ் திலகர், யோகி, குட்டி, தீபன், பாபு ஆகியோருடைய பெயர்களைத் தான் தெரியும். ஏனையவர்களைத் தெரியும். ஆனால், அவர்களின் பெயர் தெரியாது.

இவர்கள் சரணடைந்ததும் அவர்களை மட்டும் கூட்டிப் போனார்களா? அல்லது உங்களையும் சேர்த்துக் கூட்டிப் போனார்களா?

இவர் சரணடையப் போன போது நானும் பிள்ளைகளும் கூடப் போனோம். இடையில் என்னை இராணுவ அதிகாரிகள் மறித்து விட்டார்கள். இவர் போகும் போது இராணுவ அதிகாரிகள் இவரை இனங்கண்டு மாவிலாறு எழிலன் என்று தான் கூப்பிட்டார்கள். நீங்கள் ஒரு அரசாங்க உத்தயோகத்தராக இருக்கிறபடியால் நீங்கள் சனத்தோடு போங்கள். நாங்கள் அவரைப் பின்னர் விடுவோம் என்று இராணுவ அதிகாரிகள் கூறினார்கள்.

உங்களை வவுனியா முகாமுக்குக் கொண்டு வந்தார்களா?

அவர்கள் சரணடைந்து அரை மணித்தியாலத்தில் எங்களை பஸ்ஸில் ஏற்றி மற்றப் பாதையால் ஓமந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அதுக்குப் பிறகு எனக்கு அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை.

நீங்கள் சரணடைந்த பிறகு எழிலனுடன் ஒரு முறையாவது பார்த்துப் பேசினீர்களா?

இல்லையில்லை. எனக்கு ஒரு தொடர்பும் இருக்கவில்லை. ஒரு கடிதத் தொடர்போ எதுவும் இல்லை. அவரைப் பார்த்தது என்று கூட எனக்கு சொல்வார் எவருமில்லை.

முன்னாள் போராளிகள் பலரை தற்போது அரசாங்கம் இப்போது விடுவித்து வருகிறது. . அப்படி விடுவிக்கப்பட்ட யாராவது வந்து எழிலனைப் பார்த்ததாகச் சொல்லி இருக்கிறார்களா?

அப்படி விடுபட்டவர்களை உடனே நான் கண்டு கேட்டிருக்கிறேன். இப்போது ஊனமுற்ற போராளிகள் பலரை விடுவித்திருக்கிறார்கள். அவர்களை நான் கண்டு கேட்டேன். தாங்கள் காணவில்லை என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். இப்போதும் விடுவிக்கப்படுகிறவர்களை நான் கண்டு இவரைப் பற்றி எதுவும் தெரியுமா கண்டீர்களா என்று கேட்பேன். ஆனால் இவர் பற்றிய தகவல் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றே அவர்கள் சொல்கிறார்கள்.

யார் யார் உள்ளே இருக்கிறார்கள் என்பது பற்றி அவரவருடைய குடும்பங்களுக்குச் சொல்லி விட்டோம் என்று டியூ குணசேகரா சொல்லி இருக்கிறார். உங்களுக்கு அவ்வாறு ஏதும் சொல்லப்பட்டதா?

நான் எனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய் கிளிநொச்சியில் வைத்து டியூ குணசேகராவை சந்தித்து எனது நிலைமைகளை விளக்கி கடிதம் கொடுத்துக் கேட்டேன். அவர் எனக்கு அப்படி ஒரு பதிலையும் தரவில்லை. அவர் போய் ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில் அவர் இன்னொரு அமைச்சுக்கு எனது முறைப்பாட்டுக் கடிதத்தையும் அனுப்பி தான் கேட்டிருப்பதாக எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருந்தார். எனக்கு எந்தவிதமான பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.

இப்போது இந்தக் கமிசன் முன்னால் நீங்கள் சாட்சியமளித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது. இதனால் மாற்றம் ஏதும் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

ஜனாதிபதியாலேயே ஒன்றையும் செய்யமுடியவில்லை. இதனால் என்ன செய்து விட முடியும்? சும்மா எனது மன ஆறுதலுக்குப் போய் சொல்லிவிட்டு வந்தது மாதிரித் தான் இருக்கிறது.

அதேநேரத்தில் நீங்கள் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பகுதிக்குள் இருந்தீர்கள். அந்த இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் பல அத்துமீறல்களைச் செய்தார்கள். சிறார்களைப் படையில் சேர்த்தார்கள். போர்ப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியவர்களைச் சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு நீங்கள் சாட்சியம் அளித்த போது அதுபற்றி ஏதாவது கேட்டார்களா?

இல்லை. அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு திறந்த வெளி பங்கருக்குள் தான் நாங்கள் இருந்தோம். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டு நாங்கள் இருக்கவில்லை. முன்னர் எல்லோரும் விடுதலைப் புலிகளிளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது இராணுவத்தின் கட்டப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து விட்டால் இராணுவத்துக்குச் சார்பான கதைகளைக் கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு நாட்டில் இருந்து எங்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கும் அவலப்பட்டதற்கும் ஏதோ ஒரு விடிவு வரும். ஒரு நல்ல மத்தயஸ்தினூடாக ஏதாவது வரும் என்று தான் நாங்க்ள எதிர்பார்த்தோம். ஆனால் ஒன்றும் வரவில்லை. எல்லாமே கை மீறிப் போய் நடைப்பிணங்களாகத் தான் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நாம் வந்தோம்.

எழிலன் போன்றவர்கள் தப்பித்து வேறு நாட்டுக்குப் போக முயற்சி செய்யவில்லையா?

அவர்கள் தாங்களும் போக முயற்சிக்கவில்லை. எங்களை ‐ குடும்பத்தினரையும் போக விடவில்லை. அவருடைய விசுவாசம். மற்றது பிழையான முன்னுதாரணமாய் இருக்கக்கூடாது. இவ்வளவு சனத்துக்கும் சேர்த்து வருவது தான் எங்களுக்கு வரும். வாழ்வோ சாவோ சனத்தோடையே சேர்ந்து போவோம் என்று தான் எங்களையும் தங்களுடன் வைத்திருந்தார்கள். நாங்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரை விட்டு விட்டு நாங்கள் எப்படி வெளியேறுவது?

நீங்கள் முன்னர் கூறியிருந்தீர்கள். மாவிலாறு எழிலன் என்று இனம்கண்டு இராணுவத்தினர் அழைத்துச் சென்றார்கள் என்று. தமிழ் சமூகத்திடமே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இந்தப் போர் ஆரம்பித்ததற்கே காரணம் மாவிலாறு போர் நடவடிக்கை தான் காரணமென்று. அதை எழிலன் சரியாகக் கையாளவில்லை என்று. அதனால் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக:குள் இருந்த போதோ அல்லது இப்போதோ ஏதாவது அழுத்தங்கள் வருகிறதா?

எங்களுடைய சமூகத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் 40 வருடம் அதோடு இருந்தனான். மாவிலாறை பூட்டுவது என்கிற முடிவு எழிலன் தன்னிச்சையாக எடுத்த முடிவில்லைத் தானே. அதுக்கென்று ஒரு மத்தியகுழு இருக்கிறது. அங்கு கதைத்துப் பேசிஎடுத்த முடிவு அது. மாவிலாறைப் பூட்டியதால் கையாள முடியாமற் போனது என்பது பொய்க்கதை. அதைப் பூட்டியதால் வரும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடைய அமைப்பு பொறுப்பாளர்கள் தீர்மானித்திருக்க வேண்டிய ஒன்று. நல்லது நடந்தால் நல்லதாகச் சொல்வதும் அதால் ஏதாவது சிறிது தவறு நடந்தாலும் கெட்டதாகச் சொல்வதும் சமூகத்தின் இயல்பு தானே?

இப்போது உங்களுடைய தனிப்பட்ட நிலைமையைச் சொல்லுங்கள். நீங்கள் மூன்று பெண்களுக்குத் தாய் என்று நினைக்கிறேன். அவர்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது? உங்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?

நான் ஒரு அரச உத்தியோகத்தர் என்றபடியால் என்னால் அவர்களைப் பராமரிக்க அவர்களுடைய படிப்பைக் கவனிக்க முடிந்தாலும், . நிறைய சாவைக்கண்டது நிறைய சடலங்களைக் கண்டு வந்தது தந்தை இல்லை என்பது அவர்களை உளவியல்; ரீதியாகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அப்பாவைப் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் என்னால் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. கூடியளவுக்கு அவர்களுடைய படிப்பையும் ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறேன்.

தற்போது எழிலன் எங்கு இருப்பார். அவருக்கு என்ன நடந்திருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா? உங்களுடைய ஊகம் என்ன?

அவருக்கு ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக நினைக்க வேண்டும். போர் நடந்த நேரத்தில் அவர் இல்லை என்று சொன்னால் இராணுவத்தில் ஷெல்லடியிலையோ அல்லது கிபீர் அடியிலையோ செத்திருக்கலாம் என்று நினைக்கலாம். இது போர் எல்லாம் முடிந்து அதன் பிறகு எனது கண்ணுக்கு முன்னால் இராணுவத்திடம் சரணடைந்தவர் அவர். அவர் எங்கோ இருக்க வேண்டும். இது இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாத ஒன்றல்ல. இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனபடியால் அவரை எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். போர் முடிந்த பிறகு அவரைக் கொல்லும் நோக்கில் இராணுவம் இருந்திருக்காது.

எந்த இடத்தில் அவர் சரணடைந்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நாளை ஒரு ஆணையத்தில் உங்களால் சாட்சியமளிக்க முடியுமா?

முல்லைத் தீவு வட்டுவாகல் பாலம் தாண்டி வந்த பிறகு ஒரு வெட்டைப் பிரதேசத்தில் முள்வேலிக்கம்பிக்குள் முதலில் இருந்தோம். பின்னர் சிறிது நடந்து வந்து இன்னொரு வெட்டைக்குள் இருந்தோம். அதில் ஒரு சிறிய கட்டிடம் மட்டும் தான் இருந்தது. அதில் தான் அவர்கள் சரணடைந்தார்கள.; திருப்பிப் போனால் நான் அந்த இடத்தை அடையாளம் காட்டுவேனா என்பது தெரியவில்லை. இது தான் அந்த இடம் என்று முகவரி குறிப்பிடத் தெரியவில்லை.

இவரோடு சரணடைந்த மற்றப் போராளிகளுடைய குடும்பத்தினர் இதே நிலைமையில் இருக்கிறார்களா? அல்லது வேறு சில பேர் எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரிய வந்துள்ளதா?

என்னை பஸ்ஸிலோ அல்லது வேறிடங்களிலோ காணும் அவர்களும் தாங்கள் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஐசிஆர்சிக்குப் போகிறோம் ஹியுமன் ரைட்ஸ்க்குப் போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர ஒருவரும் ஒருத்தரையும் காணவில்லை.

ஊடகத்திடம் தைரியமாகப் பேசுகிறீர்கள், இன்றைக்கு வந்து நீங்கள் சாட்சியமளித்ததிருக்கிறீர்கள். இதனால் பின்விளைவுகள் ஏதாவது வரும் என்று அச்சமடைகிறீர்களா?

இல்லை இல்லை எனக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என இன்றைக்கும் ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும்; சொன்னேன்.

நன்றி: பிபிஸி

Source

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

Only the weak will survive the war because all the good men are already dead.

  • தொடங்கியவர்

ஊடகத்திடம் தைரியமாகப் பேசுகிறீர்கள், இன்றைக்கு வந்து நீங்கள் சாட்சியமளித்ததிருக்கிறீர்கள். இதனால் பின்விளைவுகள் ஏதாவது வரும் என்று அச்சமடைகிறீர்களா?

இல்லை இல்லை எனக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என இன்றைக்கும் ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும்; சொன்னேன்.

நன்றி: பிபிஸி

Source

அம்மா, அப்படிச் சொல்லக் கூடாது... உங்களுக்காகத் தான் நாங்கள் நாடு கடந்த அரசு, கவடு கடந்த அரசு என்றெல்லாம் பாடுபடுகின்றோம்...முடிந்தால் உங்களின் மூன்று பிள்ளைகளையும் இணைத்து ஒரு புது இயக்கத்தை கட்டியமையுங்கோ (அதில் இரண்டு தற்கொடையாளிகள் என்றால் சுப்பர்) நாங்கள் புலம் பெயர் சனத்திடம் இருந்து காசு வாங்கி அனுப்புறோம் (அதில் 2 வீதத்தையாவது)

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளின் மேல் பட்டாடை விழுந்துவிட்டது... நமது குடுமி அவனிடம் மாட்டி கொண்டு விட்டது... இதில் இருந்து எப்படி வெளியில் வரவேண்டும் என யோசிக்க வேண்டும்.. என்ன தான் மாட்டி கொண்டு விட்டாலும் அதிலும் நன்மையாக சிலர் அங்கு இருப்பதை இட்டு பெருமைபட வேண்டும் அவர்களின் ஊடாக வெளியில் போராளிகளை எப்படி எடுப்பது என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் ... என்ன சிங்களவன் கமிசன் தொகைதானே எடுத்து கொள்ளட்டுமே... வாழ்ந்துவிட்டு போகட்டுமே..4 ஒரு பங்கையாவது எடுத்து கொடுக்க அங்கு நமக்கு ஆட்கள் உள்ளார்கள்.. அதையிட்டு பெருமை கொள்ளவேண்டும்... இப்படியே சென்றால் யார் அவர்களுக்கு ஆதரவு??? மாவீரர்களுக்கு போராளிகளுக்கு செய்யும் மரியாதை இதுவா?

டிஸ்கி:

வருடம் 2010:

அரசியல் தீர்வு பிறகு...போராளிகளை முதலில் வெளியில் எடுக்கவேண்டும்.. வாழ்வுரிமையை உறுதி படுத்தவேண்டும்

வருடம் 2050:

அரசியல் தீர்வு பிறகு...போராளிகளை முதலில் வெளியில் எடுக்கவேண்டும்.. வாழ்வுரிமையை உறுதி படுத்தவேண்டும்

--------- இப்படிக்கு கருணா ரசிகர் மன்றம்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

எழிலன் போன்றவர்கள் தப்பித்து வேறு நாட்டுக்குப் போக முயற்சி செய்யவில்லையா?

அவர்கள் தாங்களும் போக முயற்சிக்கவில்லை. எங்களை ‐ குடும்பத்தினரையும் போக விடவில்லை. அவருடைய விசுவாசம். மற்றது பிழையான முன்னுதாரணமாய் இருக்கக்கூடாது. இவ்வளவு சனத்துக்கும் சேர்த்து வருவது தான் எங்களுக்கு வரும். வாழ்வோ சாவோ சனத்தோடையே சேர்ந்து போவோம் என்று தான் எங்களையும் தங்களுடன் வைத்திருந்தார்கள். நாங்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரை விட்டு விட்டு நாங்கள் எப்படி வெளியேறுவது?

போராட்ட காலத்தில் ஒரு உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில......... இந்தப் போராளிகளைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நன்றிகெட்ட இனத்துக்காகப் போராடாமல் இருந்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

போராட்ட காலத்தில் ஒரு உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில......... இந்தப் போராளிகளைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நன்றிகெட்ட இனத்துக்காகப் போராடாமல் இருந்திருக்க வேண்டும்.

விஞ்ஞானத்தில் ஒன்று உண்டு. சுப்பர் ட் டுருத் (super truth).... அதாவது எல்லாப் பொய்களையும் களைந்த உண்மை என்று. எம் தலைவரும், அவருடைய தமிழீழ விசுவாசத்தை இறுதி வரை நம்பிய போராளிகளும் இந்த சுப்பர் ட்ருத் இனை நம்பியவர்கள்.....அதாவது தாம் கொண்ட இலட்சியம் தம்மை அல்லாவிடினும் தாம் சார்ந்த இனத்தை நல்ல இடத்தை சேர்க்கும் என.... ஆனால் இந்த வியாபார சுயநல உலகில் இந்த சுப்பர் ட்ருத் சாத்தியமில்லை என்பதை இறுதி வரை உணரவில்லை

தம்மிடம் சரணடைந்த யாராணுவ சிப்பாய்களை பாதுகாத்து விடுவித்தது விடுதலைப்புலிகள் அமைப்பு.

இலங்கை புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கபில ஹெதவிதாரணவிடம் நிர்வாகசேவைப் பொறுப்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பொழுது இராணுவத்திடம் சரணடைவதை யாராவது பார்த்தார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக புலிகளின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பலர் சரணடையும்போது, பலரின் மனைவிமார்களும் கூடவே இருந்திருக்கின்றனர். அவர்களே அதற்கு சாட்சியாகும்!

பணத்துக்காகவும், பதவி, அந்தஸ்துக்காகவும், அரசுடன் கூடித் திரியும் பலர் இருக்கும்போது, இன்னும் மாறாமல் ஈழத்தில் இருக்கும் ஒரு மறத் தமிழச்சியின் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. அதுவும் ஈழத்து தமிழர்களின் உள் உணர்வு என்ன என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கிறது.

இப்படியான வாக்குமூலங்களை யுத்தகுற்றம் சிறிலங்கா செய்ததை உறுதிபடுத்தியுள்ளது.

இதை வெளியிட்ட பி. பி. சி.யும் கலைக்கபட்டு விட்டது.

http://tamilnet.com/art.html?catid=79&artid=32650

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா, அப்படிச் சொல்லக் கூடாது... உங்களுக்காகத் தான் நாங்கள் நாடு கடந்த அரசு, [size="7"]கவடு கடந்த அரசு என்றெல்லாம் பாடுபடுகின்றோம்...முடிந்தால் உங்களின் மூன்று பிள்ளைகளையும் இணைத்து ஒரு புது இயக்கத்தை கட்டியமையுங்கோ (அதில் இரண்டு தற்கொடையாளிகள் என்றால் சுப்பர்) நாங்கள் புலம் பெயர் சனத்திடம் இருந்து காசு வாங்கி அனுப்புறோம் (அதில் 2 வீதத்தையாவது)

ஒரு மட்டூஸ் கத்தைக்கிற கதையா? இதை கேட்க இங்கே யாரும் இல்லையா? குருக்கள் குற்றம், செய்தால் தவறு இல்லையா? இவர்கள்தான் முன்னுதாரனமாக இருக்க போகிறார்கள்? :lol::) இவர்கள்தான் சமூகத்தின் வழிகாட்டிகளா? :D:(:D

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா, அப்படிச் சொல்லக் கூடாது... உங்களுக்காகத் தான் நாங்கள் நாடு கடந்த அரசு, கவடு கடந்த அரசு என்றெல்லாம் பாடுபடுகின்றோம்...முடிந்தால் உங்களின் மூன்று பிள்ளைகளையும் இணைத்து ஒரு புது இயக்கத்தை கட்டியமையுங்கோ (அதில் இரண்டு தற்கொடையாளிகள் என்றால் சுப்பர்) நாங்கள் புலம் பெயர் சனத்திடம் இருந்து காசு வாங்கி அனுப்புறோம் (அதில் 2 வீதத்தையாவது)

மட்டுறுத்தி நண்பா,

பின்னேரக்கையா எழுதின கருத்து என்ன கடுமையா எழுதியிருக்கிறீங்கள் ?

மட்டுறுத்தியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இன்னும் கொல்லக்குடுத்திட்டு அழுகிற அப்பாவிகளிடமிருந்துதான் தற்கொடை கேக்கிறீங்கள்!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரே சொல்கிறார் அரசோடு இருந்தால் அரசுக்கு ஏற்ற மாதிரி கதைக்க வேண்டும் என ஆனால் இங்கே கொஞ்சப் பேர் அவர்கள் செத்தாலும் பரவாயில்லை புலிக்கு ஆதரவாய் கதைக்க சொல்கிறார்கள் :lol:

[ஃஉஒடெ நமெ='நிழலி' டடெ='20 ஸெப்டெம்பெர் 2010 - 12:57 ஆM' டிமெச்டம்ப்='1284940651' பொச்ட்='610686']

விஞ்ஞானத்தில் ஒன்று உண்டு. சுப்பர் ட் டுருத் (சுபெர் ட்ருத்).... அதாவது எல்லாப் பொய்களையும் களைந்த உண்மை என்று. எம் தலைவரும், அவருடைய தமிழீழ விசுவாசத்தை இறுதி வரை நம்பிய போராளிகளும் இந்த சுப்பர் ட்ருத் இனை நம்பியவர்கள்.....அதாவது தாம் கொண்ட இலட்சியம் தம்மை அல்லாவிடினும் தாம் சார்ந்த இனத்தை நல்ல இடத்தை சேர்க்கும் என.... ஆனால் இந்த வியாபார சுயநல உலகில் இந்த சுப்பர் ட்ருத் சாத்தியமில்லை என்பதை இறுதி வரை உணரவில்லை

[/ஃஉஒடெ]

விஞானத்தில் அப்படி ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை நிழலி, இன்று ஆராயப்பட்டு நிறுவப்பட்டதே இன்றைய உண்மை.இன்றைய உண்மை நாளைய பொய்யாக மாறலாம்.விஞானத்தில் இது பலமுறை நடந்திருக்கிறது.ஆகவே எமக்கு அறியப்படாதவையும் அறியப்பட்டவையும் மட்டுமே இருக்கின்றன.அறியப்படாதவற்றைப் பற்றி அறிய முனையும் ஒரு முறமையே விஞானம் எனப்படுவது.ஆகவே இங்கே எல்லாக் காலத்திலும் உண்மையான ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை.இந்த உலகில் வியாபாரமும் சுய நலமும் இருக்கும் அதே நேரம் அதற்க்கு எதிராகப் போராடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.ஆகவே நாங்கள் மனம் தளர்வதோ மண்டியிடுவதே மிகவும் பல்வீனமான ஒரு மன நிலை.இதில் இருந்து நாங்கள் வெளி வரவேண்டும்.தம்மையே அர்ப்பணித்து பணியாற்றியவர்கள் ஒரு நியாயதிற்காக உண்மையாக இறுதி வரை போராடியவர்கள்.அந்த உண்மையும் நிஆயமும் எங்கள் மனங்களை ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்க்கும்.அதற்காக நாம் என்ன செய்தோம் என்று கேட்க்கும்.அந்தக் கேள்விக்குள் இருந்து தான் அவ்

அந்தக் கேள்வியில் இருந்து தான் உண்மைக்கான நியாயம் பிறக்கும்.அவர்களின் அந்த நியாயத்தைக் காவிச் செல்ல வேண்டியவர்கள் நாங்களே.இதனை விட்டு விட்டு புலம்பிக் கொண்டு ஆளை ஆள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதில் நாம் அந்த உண்மையை நியாயத்தைச் சாகடிக்கிறோம்.

நீங்கல் இருக்கும் இடங்களில் தமிழரை எவ்வாறு ஒருங்கிணைப்பது எமது நிறுவனக்களை எவ்வாறு பலமுள்ளவை ஆக்க்வுவது,சந்தர்ப்பவாதிகளையும் வியாபாரிகளையும் எவ்வாறு வெளியேற்றுவது என்று யோசியுங்கள் செயற்படுங்கள். நாங்கள் வெளியால் இருந்து கொண்டு இருப்பதால் தான் வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் உள் நிழைந்துவிடுகிறார்கள் என்னும் உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இதன் அடிப்படையில் பார்த்தால் எங்கள் எல்லாரிலும் இதற்கான பொறுப்பு இருக்கிறது.சின்ன சின்ன அடிகளை நிதானமாக எடுத்து வைப்போம்.

To be hopeful in bad times is not just foolishly romantic. It is based on the fact that human history is a history not only of cruelty, but also of compassion, sacrifice, courage, kindness."

Howard Zinn (1922- 2010)

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகத்திடம் தைரியமாகப் பேசுகிறீர்கள், இன்றைக்கு வந்து நீங்கள் சாட்சியமளித்ததிருக்கிறீர்கள். இதனால் பின்விளைவுகள் ஏதாவது வரும் என்று அச்சமடைகிறீர்களா?

இல்லை இல்லை எனக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என இன்றைக்கும் ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும்; சொன்னேன்.

துணிந்து உண்மையை வெளியே சொல்லியதற்கு நன்றிதாயே....

காலமெடுத்தாலும் உங்களைப்போல் உண்மையும் வெளிவரும்

இணைப்புக்கும் நன்றி நிழலி

அம்மா, அப்படிச் சொல்லக் கூடாது... உங்களுக்காகத் தான் நாங்கள் நாடு கடந்த அரசு, கவடு கடந்த அரசு என்றெல்லாம் பாடுபடுகின்றோம்...முடிந்தால் உங்களின் மூன்று பிள்ளைகளையும் இணைத்து ஒரு புது இயக்கத்தை கட்டியமையுங்கோ (அதில் இரண்டு தற்கொடையாளிகள் என்றால் சுப்பர்) நாங்கள் புலம் பெயர் சனத்திடம் இருந்து காசு வாங்கி அனுப்புறோம் (அதில் 2 வீதத்தையாவது)

அறிவான வார்த்தைகளாக தெரியவில்லை!! :lol:

  • தொடங்கியவர்

சித்தனுக்கு ஒரு பச்சைப் புள்ளி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.