Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

Featured Replies

முன்குறிப்பு:

பொருத்தமான படங்களை மேலதிகமாக இணைக்க முடியாத காரணத்தினால்,

பகுதி- 08 இல் இருந்து இந்த தனியான திரியில் கதை தொடர்கின்றது.

இக்கதையின் முன்னைய பகுதிகளினை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101519&#entry753878

[08]

அஞ்சலி எங்கே உட்கார்ந்திருக்கின்றாள் என்று ஒரு பார்வையை விட்டபடி... அந்த கொஃபி சொப்பிற்குள் நுழைந்த இருவரும் அஞ்சலியும் றிஷானாவும் இருக்கும் இடத்தை நெருங்கவும்...

அவனும் விமலும் வருவதைப் பார்த்த அவர்கள் இருவரும் எழுந்து ஹாய் என்று புன்னகையுடன் வரவேற்றார்கள்.

விமலுக்கு வாய் சும்மா கிடக்காமல்.... மச்சான் நீ 'வாத்தி' எண்டுறதை இவையள் இன்னும் மறக்கேலப் போல கிடக்கு... என அவனுக்கு மட்டும் கேட்கக்கூடியமாதிரி கிசுகிசுத்தான்.

இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத அவன்...

"ஹாய்... ஹலோ..! இவன் என்னுடைய பெஸ்ட் பிறண்ட் விமல்" என்று விமலை அறிமுகப்படுத்தியவன் புன்னகைத்தபடி உட்கார... விமலும் ஒரு "ஹாய்... ஹலோ " சொல்லிவிட்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான்.

அனைவரும் உட்கார்ந்து... ஒரு நிமிடம் ஆகிவிட்டது. யாரும் எதுவுமே பேசவில்லை. அவ்வப்போது புன்முறுவல்கள் மட்டுமே அங்கே.

அஞ்சலியே ஆரம்பித்தாள்....

"சொறி, நான் நேற்று உங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப லேட்டாப் போச்சுது. இப்ப அப்பா வெளிநாட்டில

நிக்கிறபடியால் அம்மாவோடதான் படுக்கிறனான். அம்மா அப்பாவுக்கு போனெடுக்க ஹோலுக்கு போன ரைமிலதான் நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணினான்.

அப்பா வாற கிழமை வந்தாப்பிறகு... நான் என்ர றூமிலதான் படுப்பன். அதுக்குப் பிறகு

பிரச்சினை இல்லை..." என்று அஞ்சலி சொல்லிவிட்டு,

அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஓகே அஞ்சலி... நான் உங்கட மெசேஜ் வருமெண்டு பாத்துக்கொண்டு இருந்தனான்..." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே

அப்போது அங்கு வந்த வெய்ட்டர்.... "என்ன வேண்டும்?" என சிங்களத்தில் வினவ..

"கொஞ்சம் பொறுங்கோ...! நாங்கள் வந்து ஓடர் பண்ணுறம்" என்று சிங்களத்தில் அஞ்சலி சொன்னதும்,

அந்த வெயிட்டர் அங்கிருந்து அகன்றார்.

வழமைக்கு மாறாக அமைதியாக இருந்த விமல்...

"சரி எதையாவது ஓடர் பண்ணுங்கோவன்... குடிப்பம்!" என்று சிரித்தபடி சொல்ல...

தங்களுக்குள் என்னென்ன வேண்டுமென்று பேசிக்கொண்டபின்,

அவனும் அஞ்சலியும் எழும்பினார்கள்.... அதை ஓடர்பண்ணி எடுத்து வருவதற்கு.

விமல் ஒரு மாம்பழப் பிரியன்... அதனால் அவன் சொன்னது மங்கோ ஜூஸ், றிஷானாவுக்கு அப்பிள் ஜூஸ்.

அஞ்சலியும் அவனும் எதுவென்று சொல்லிக்கொள்ளவில்லை அதுவரைக்கும்.

"உங்களுக்கு என்ன வேணும்..? என்ன குடிக்கப் போறீங்கள்?" என்று அஞ்சலி கேட்கவும்,

உங்களுக்கு என்ன விருப்பமோ... அதையே எனக்கும் ஓடர் பண்ணுங்கோ! என்று சொல்லிவிட்டு,

அவள் ஓடர் பண்ணியதும்.... பில்லைக் கொடுத்தவன்,

அவளுடன் வந்து மீண்டும் அமர்ந்தான் தங்கள் இடத்தில்.

அவள் ஓடர் பண்ணியிருந்தது... சூடான நெஸ்கஃபே. அவனுக்கு நெஸ்கஃபே பிடிக்கவே பிடிக்காது.அவனுக்கு தேத்தண்ணிதான் விருப்பம். ஆனாலும், அன்று அவள் ஒரு கப் விஷம் சொல்லியிருந்தாலும் அதனைக் குடிக்கத் தயாரான மாதிரித்தான் அவன் இருந்தான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நாளிகைகள் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன.

விமலுக்கு மங்கோ ஜூஸும் றிஷானாவுக்கு அப்பிள் ஜூஸும் அடுத்த சில நிமிடங்களிலேயே வந்து விட்டது. ஆனால் இவர்களது நெஸ்கபே இன்னும் வரவில்லை.

தான் போய் எடுத்துக்கொண்டு வாறன் என்று போன அஞ்சலி ஒரு கப் நெஸ்கஃபேயுடன் மட்டுமே வர... விமல் அவனை ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு,

10120-kajal-agarwal-cute-photo-shoot-3.jpg

என்ன தங்கச்சி... "ஒரு கப் மட்டுமே...? இவனுக்கு இல்லையோ?" என்று அஞ்சலியைப் பார்த்துக் கேட்க,,

"இல்லை அண்ணா....! ஒரு கப்பில நாங்கள் ரெண்டுபேரும் குடிப்பம் எண்டுதான்.... " என இழுத்தபடி,

வெட்கத்துடன் சிரித்தாள் அஞ்சலி.

அதைக் கேட்டதும் அவன் மனதுக்குள் அத்தனை சந்தோசம்.

"சரி சரி ...ம் ம் .... நடக்கட்டும் நடக்கட்டும்! நான் இந்த மங்கோ ஜூஸைக் குடிச்சிட்டு கிளம்புறன்.

எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு" என்று சொன்ன விமல் , ஜூஸை ஒரே இழுவையில் இழுத்தபின் அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, வாறன் தங்கச்சி... இன்னொருநாள் ஆறுதலா சந்திப்பம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான். விமல் காரணத்தோடதான் போறான் என்பது அவனுக்கு விளங்கியது

"விமல் போனது ஏன்?" என றிஷானாவுக்கும் புரிந்திருக்க வேண்டும் போல, அவளும் அந்த அப்பிள் ஜூஸை பாதிதான் குடித்திருப்பாள்... "அஞ்சலி! நான் ஒருக்கா பக்கத்தில உள்ள பாமசிக்கு போயிட்டு வாறன். கிளாஸ் முடிஞ்சு வரக்குள்ள.... அம்மா மருந்து வாங்கிக்கொண்டு வரச்சொன்னவ. நீங்கள் கதைச்சுக்கொண்டு இருங்கோ! நான் டக்கெண்டு போயிட்டு வாறன்! என்று கூறிவிட்டு அவளும் கிளம்பினாள்.

இப்போது அவனும் அவளும் மட்டுமே...

கண்களும் கண்களும் மோதுமென எதிர்பார்த்து இருந்தவனுக்கு,

அவள் தலை குனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து இருந்தது என்னவோ போலிருந்தது!

"அஞ்சலி! என்ன.... ஒண்டுமே கதைக்காமல் இருக்குறியள்? ஏன் என்னில ஏதாவது கோவமே?" என்று அவளிடம் பேச்சை ஆரம்பித்தான்.

நிமிர்ந்து பார்த்தவள்... "ஓம் கோவந்தான்...! ஒரு மனுசரை கவிதையில எப்பிடி எப்பிடி திட்ட முடியுமோ.......

அப்பிடி அப்பிடித் திட்டித்திட்டி எழுதிப்போட்டு... ஆளப் பாரன்!!! கோவமாம் எண்டு......."

செல்லமாக உரிமையுடன் கோபித்தாள் அஞ்சலி.

"இவளின்ர செல்லக்கோபத்தை சமாளிக்கிறதுக்கு.... இப்ப இந்த கிப்ற்ரை குடுத்தால்தான் சரி" என்று சிந்தித்தவன்...

"அஞ்சலி..! இது உங்களுக்காக நான் வாங்கினது..." என்று சொல்லிக்கொண்டே, அவன் வாங்கிய

அந்த அழகான ஜோடிப்புறா சிலை இருந்த பார்சலை அவளிடம் கொடுக்கவும்....

two-gift-boxes8.jpg

முதலில் "தாங்ஸ்" என்று சொல்லி வாங்கிக் கொண்டவள்.... "என்ன... ஐஸ் வைக்குறீங்களோ சேர்....?"

"ஏன் இப்பவும் நீங்கள்,தாங்கள் எண்டு கொண்டு... இந்த 'சேர்' எல்லாத்தையும் மறந்திட்டு என்னை வா , போ எண்டு கூப்பிடுங்கோவன்...." என்று சொன்னவள்.... தான் கொண்டு வந்திருந்த கிப்ற்ரை எடுத்து... "இது என்ர கிப்ற்டா... என்று "டா" போட்டு உரிமையோடு கொடுத்தவளிடமிருந்து... சந்தோசமாக சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டான் அவனது முதற் காதல் பரிசினை.

"கொஃபி ஆறப்போகுதடி.... குடிப்பமா?" என்று அவனும் "டி" போட்டு உரிமையோடு சொல்லவும்... அவனுக்கு பக்கத்துக் கதிரையில் வந்து உட்கார்ந்தவள்...

அந்த கொஃபி கப்பை எடுத்து அவனிடம் நீட்ட குடித்துவிட்டு... அவன் மறுபடி அவளிடம் நீட்ட என்று.... முதல் நாளிலேயே நெருக்கமாகிக் கொண்டது... அந்த இளங்காதல் ஜோடி!

surya%20jyothika%201.jpg

நிறையப் பேசினார்கள். பேசுவதற்கு இன்னும் நிறைய இருந்தது... ஆயுள் போதாது என்பதுபோல் உணர்வு அவர்களுக்குள். பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது.

"நீ குடிமா...! நீங்க குடிங்க...! " என்று சொல்லியபடியே..... அந்த கொஃபியின் கடைசி முடர் மட்டும் எஞ்சியிருந்தது.

ஆனால் நேரம் வேகமாக நகர்ந்து விட்டிருந்தது

ஒன்றரை மணிநேரம் எப்படி போனது... என்றே தெரியவில்லை.

திடீரென ஞாபகம் வந்தவளாய் அஞ்சலி கேட்டாள்...

"போட்டோ கொண்டு வரச்சொன்னனான்... கொண்டு வந்தனிங்களோ?"

"அஞ்சலி...! இப்ப என்னிட்ட பாஸ்போட் சைஸ் போட்டோதான் இருக்கு. நான் கொழும்பு வந்ததில் இருந்து போட்டோ ஒண்டும் எடுக்கேல. இது பாஸ்போட் அப்ளை பண்ணுறதுக்காக எடுத்தது."

"இது ஓகேதானே..?" என கேட்டபடி தனது பர்ஸிலிருந்து அந்த பாஸ்போட் சைஸ் போட்டோவை எடுத்துக் கொடுத்தான்.

அதை முகம் மலர வாங்கிப் பார்த்துவிட்டு...

"உங்கட பர்ஸை ஒருக்கா குடுங்கோவன் " என்று அவனிடம் கேட்டாள் அஞ்சலி.

'ஏன் கேக்கிறாள்...?' என்ற எண்ணத்துடன் கொடுத்தவனின் பர்ஸை திறந்து தனது சின்ன சைஸ் போட்டோ ஒன்றை அதனுள் அழகாக செருகி வைத்தவள் மீண்டும் அவனிடம் கொடுத்தாள்.

kajal-agarwal-wallpaper.jpg

.

அவனது பர்ஸுக்குள்ளும் அவனின் தேவதை சிரித்துகொண்டிருந்தாள் அத்தனை அழகுடன்.

இவனுக்குள் சந்தோசமோ சந்தோசம்... அப்படியொரு சந்தோசம்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதலுடன் புன்னகைத்துக் கொண்டார்கள்.

அந்த புன்னகைகளினூடு தமக்குள் உள்ள காதலை பரிமாறிக் கொண்டார்கள் இருவரும்.

வெளியே சென்றிருந்த றிஷானா மீண்டும் அங்கு வரவும்.... அவர்கள் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தார்கள். தற்பொழுது விடைபெற வேண்டுமே என்ற ஏக்கம் அவர்கள் மனதை ஆட்கொண்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை இருவரும்.

"அம்மாவுக்கு மருந்து வாங்கிட்டியா றிஷானா?" என அஞ்சலி கேட்கவும்,

தான் கையில் வைத்திருந்த மருந்துப் போத்தலை காட்டியபடி..." ம் வாங்கிட்டன் அஞ்சலி" .......பதிலளித்தாள் றிஷானா.

"சரி அஞ்சலி... உங்களுக்கு ரைம் ஆச்சுது எண்டு நினைக்கிறன்... உங்கட அம்மா தேடி வந்தாலும் வந்திடுவா கூட்டிக்கொண்டு போக. முதல் நாளே மாட்டுப்படுற மாதிரி ஆயிடும்! " என்று அவன் சொல்லவும்,

"ஓம்... நாங்கள் வெளிக்கிடுறம், ரைம் கிடைக்கிற நேரத்தில உங்களுக்கு போன் பண்ணுறன்.

நீங்கள் அடிச்சிராதையுங்கோ... சிலவேளை அம்மா பக்கத்தில இருந்தா யாரெண்டு கேப்பா...!" எனச்

சொல்லிவிட்டு அவனைப் பார்க்க...

"சரிமா... நீங்கள் எக்ஸாமிற்கு படிக்க வேண்டி இருக்கும். முதலில எக்ஸாம் முடியட்டும்...

அதுக்குப் பிறகு ஆறுதாலாக் கதைப்பம்" என்று அவன் சொன்னாலும்,

அது அவனுக்கும் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

ஓகே நான் பாக்கிறன்... நாங்கள் போட்டு வரவோ? என்று கேட்டாள் அஞ்சலி அவனை ஏக்கத்தோடு பார்த்த படியே.

சரி அஞ்சலி... கவனமா போய்ட்டு வாங்கோ. பிறகு சந்திப்பம். ரேக் கேர்.. பை! என்று விடைகொடுக்க..... அஞ்சலியும்,றிஷனாவும் பை சொல்லிவிட்டு புறப்பட்டார்கள்.

அவர்கள் பின்னாலேயே கடைக்கு வெளியே வந்தவன் கண்ணுக்கெட்டிய தூரம் தாண்டி...

தன் கண்களிலிருந்து அவள் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றவன்....

arya-trouble.jpg

அஞ்சலியின்... செல்லத்தனமான பேச்சு, கொஞ்சுங் குரல், சுட்டித்தனம், கொள்ளை அழகையே

கொள்ளையடித்த மாதிரிஅவளது சிரிப்பு, அந்த துரு துரு கண்கள் எல்லாமே....

அவனின் எண்ணங்களில் நிரந்தரமாக குடிபுகுந்ததும் தனை மறந்தவனாய்....

தன் கால் வந்த திசையில் நடக்க ஆரம்பித்தான் மனம் நிறைந்த பூரிப்புடன்.

தனை மறந்து நடந்து சென்றவனின் பின்னாலிருந்து, தோளில்

யாரோ கையை வைத்ததைப் போல உணர்ந்தவன்... திடுக்கிட்டபடியே திரும்பினான்

தொடரும்...

[09]

அவன் பின்னால் வந்த விமல்தான்... அவனது தோளில் கையை வைத்திருந்தான்.

"எங்கை இவளவு நேரம் போயிருந்தனி விமல்..?" என்று அவன் கேட்க,

"இதுக்குள்ளதான் சும்மா சுத்திக்கொண்டு நிண்டனான். முதற்தடவையா ரெண்டு பேரும் நேரில கதைக்கிறியள். அதுக்குள்ள நான் 'கரடி மாதிரி' இருந்து குழப்ப விரும்பேல. அதுதான் எழும்பி வந்திட்டன் மச்சான்.... கதைச்சு முடிஞ்சுதே?" என்று கூறினான் விமல்.

"நீ போன கையோட றிஷானாவும்... தான் பாமசிக்கு போயிட்டு வாறன் என்டிட்டு போயிட்டாள்டா.

அதுக்குப்பிறகு ரெண்டு பேரும் சும்மா கதைச்சுக்கொண்டிருந்தம்.

டக்கெண்டு நேரம் போயிட்டுது மச்சான்" என்று கவலையான மாதிரி சொன்னான் அவன்.

"சும்மா கதைச்சுக்கொண்டு இருந்தனி...? சரி நம்பிட்டமாக்கும்!!

ஆ.. அது சரி..... கையில என்ன அது...? கிப்ற்ரோ??? அவளும் குடுத்தவளே உனக்கு...!? ஓப்பன் பண்ணு பாப்பம்...! என அவனைவிட ஆவலாய் விமல் கேட்க,

அவனும் அதை ஆர்வமுடன்.. ஆனால் அவள் சுற்றியிருந்த 'பார்சல் பேப்பர்' கிழிந்துவிடக்கூடாது என்ற அவதானத்துடன் மெதுவாகத் திறந்தான்.

திறந்து உள்ளுக்குள் இருந்ததைப் பார்த்தவுடன்...

விமலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டுச் சிரித்தவன்,

"என்ன மச்சான் இது...?!!!!!" என்றுவிட்டு மீண்டும் விடாமல் சிரித்தான்.

அவனோ ஒன்றும் பேச இயலாமல்...

அந்த அழகான பாக்கர் பேனாவை பார்த்தபடி இருந்தான். அவள் அவனுக்கு கொடுத்திருந்தது....

ஒரு அழகான பாக்கர் பேனாதான்.

Pen%20Parker%20gold-black-big.jpg

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதான்...

'நான் பேனை குடுக்கிறேல, வாங்கிறேல... மை முடிஞ்சிடும்,உறவு முறிஞ்சிரும்' எண்டு யாரோ சொன்ன மாதிரி இருந்திச்சுது! இப்ப என்ன செய்யப் போறாய்..?" என நக்கலாகக் கேட்ட விமல், சிரித்து முடிய கொஞ்ச நேரம் எடுத்தது.

ஒன்றுமே பேசாமல் இருந்தவன்.... "ஏன்டா நல்லாத்தானே இருக்கு இந்தப் பேனை....! மை முடியாமல் வைச்சிருப்பம். அப்ப ஓகேதானே...!" என்று சொல்லவும்,

விமல் சொன்னான்... "டேய் நீ வழமையா நெஸ்கஃபே குடிக்க மாட்டாய்...! வயித்தப்பிரட்டும் எண்டுவாய்...! ஆனா, இண்டைக்கு அதை எவ்வளவு சந்தோசமாக் குடிச்சனி!? இப்ப....இந்தப் பேனை மாற்றர்!

சரி விடு.. விடு...!!"

"போகப் போக என்னென்ன நடக்கப் போகுதோ? அது...அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இதுக்குத்தான் எனக்கு 'லவ்' பண்ணவே பயம்.

என்னவோ பண்ணித் துலை...! "என்று சிரிச்சுக்கொண்டே சொல்லிவிட்டு...

இருவரும் வெள்ளவத்தை பீச் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

சிகரெட் ஒன்றை வாயில் வைத்து பற்றவைத்துவிட்டு.... பெட்டியையும் லைற்றரையும் அவனிடம் நீட்டியவன்,

புகையை வாயினால் ஊதியபடியே அவனை பார்த்துக் கேட்டான்,

"மச்சி... அதெல்லாம் கிடக்கட்டும், இந்த சிகரெட் அடிக்கிறது, பியர் அடிக்கிறதெல்லாம் அஞ்சலிக்குத் தெரியுமோ? சொல்லிட்டியோ?" என்று கேட்க,

"எப்பிடி மச்சான் இப்பவே சொல்லுறது...?! அவளின்ர எக்ஸாம் முடிய... ஆறுதலாக் கதைக்கைக்குள்ள சொல்லுவம்" என்றவன்...

"விமல்! O/L எக்ஸாம் ரைம் ரேபிள் ஒருக்கா எடுக்கோணும். அவளிட்ட கேக்கோணும் எண்டிட்டு மறந்து போச்சுது..." என அவன் சொல்லவும்,

"போனகிழமை மாணவர் மலர்ல வந்திருந்திச்சுது. அந்தப் பேப்பர் றூமிலதான் கிடக்கு... யோசிக்காத! " என அவன் ஏன் கேக்கிறான் என்று புரிந்து கொண்டவன்போல கூறியவன்.

"அப்ப ஒரு முடிவோடுதான் இருக்கிறாய்... அந்தப் பிள்ளையை ஒழுங்கா எக்ஸாம் எழுத விடு...!

நீயே படிப்பிச்சுப்போட்டு நீயே கெடுத்து விட்டுடாதை... "என்று அவனிடம் கொஞ்சம் கண்டிப்புடனேயே

சொல்லி வைத்தான் விமல்.

"விளங்குதடா...! ஆனா அவளைப் பாத்துக்கொண்டே இருக்கோணும் போல இருக்கு. அதுதான்... கேட்டன்!

என்னைப்பத்தி உனக்குத் தெரியுந்தானே மச்சான்..? குளம்பாத!!

நான் சும்மா பாக்கிறதுக்குத்தான்..." என இழுக்க,

"என்னத்தையாவது பண்ணு...ஆனா யோசிச்சுப் பண்ணு! காதலிக்கத் தொடங்கின உடனயே அவசரப்படாமல்...

நிதானமா நட!" என்று விமல் அறிவுறுத்தினான் .

அவன் ஒன்றுமே சொல்லாமல்... "ம்" என்ற ஒரு சத்தத்தோடு மட்டும் தலையாட்ட...

அதற்குப்பிறகு விமல் அதைப்பற்றி பேசவில்லை.

"மச்சான் நான் ரெண்டு மூண்டு நாளில ஊருக்கு ஒருக்காப் போகோணும்... சொந்தக்காரரின்ர கலியாண வீடு ஒண்டு இருக்கு. அதோட எல்லா வேலையையும் முடிச்சிட்டு வர ஒரு பத்துநாள் எடுக்கும். வீட்டுக்காரனுக்கு ஆறாந்தேதி வாடகை குடுக்கோணும். மறந்திடாதை! என்றான்.

அதற்கு சில நாட்களின் பின் விமல் ஊருக்குப் போய்விட்டான்.

O/L எக்ஸாம் ஆரம்பித்திருந்தது.

அஞ்சலி படித்தது வெள்ளவத்தையில் உள்ள ஒரு மகளிர் பாடசாலையில்தான்.

அன்று மதியம்.

வெள்ளவத்தை "லிட்டில் ஏசியா" கடைக்கு முன்னால் நின்றிருந்தான்.

இடைவேளையில் சாப்பிடுவதற்காக மாணவிகள் வெளியே வந்திருந்தார்கள்.

அஞ்சலியைப் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் எனக் காத்திருந்தவன்... தன் பார்வையால்.... அஞ்சலி தென்படுகின்றாளா? என நோட்டமிட்டான்.

அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அஞ்சலியும் றிஷானாவும் அங்கிருந்த "றோயல் பேக்கரிக்குள்" சென்றுகொண்டிருந்தார்கள். தானும் போவோமா? விடுவோமா? என்று முதலில் தயங்கியவன்...

அவளை எப்படியாவது பக்கத்தில் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையில்... அதற்குள் நுழைந்தான்.

royalbakery.jpg

தானும் பெயருக்கு ஒரு பெஸ்ரியும் பெப்சியும் வாங்கியவன்... அந்த பெப்சியைக் குடித்தவாறே...

அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான். ரெட்டைப்பின்னல், பள்ளிக்கூட யூனிபோமிலயும் அவள் தேவதையாய்த்தான் தெரிந்தாள் அவனுக்கு!

அஞ்சலி அவனைக் கவனிக்க முன்னமே றிஷானா அவனைக் கண்டுவிட்டாள். அவள் அஞ்சலிக்கு தன் கண்ஜாடையால் காண்பிக்க... திரும்பிப் பார்த்தவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம். இவனுக்கும்தான்.

ஆனால், அங்கு அவர்கள் பேசமுடியாத அளவுக்கு அவளது சக மாணவிகள் குவிந்திருந்தனர்.

பார்வைககளால் மட்டுமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடிந்தது..

அச்சமயத்தில்...அவைகூட அவனுக்கும் அவளுக்கும் அளவற்ற சந்தோசத்தைக் கொடுத்திருந்தன.

dhanush_3_movie_new_stills_shruti_hassan_2636.jpg

சில நிமிடங்கள் கழிய... நேரமாகிவிட, கண் பேசும் வார்த்தைகளோடு விடைபெற்றவளை..

மீண்டும் பார்ப்பதற்காக அன்றைய பரீட்சை முடியும் வரைக்கும் காத்திருந்தான்.

இதுவே அந்த பரீட்சைக் காலம் முடியும்வரைக்கும் வழக்கமானது. பார்வைகளால் தம் காதலை வெளிப்படுத்தியபடியே இவர்கள் இருவரும் தமக்குள்ளான காதலை வளர்த்துக்கொண்டுவர...

O/L பரீட்சைகள் அனைத்தும் முடிந்திருந்தன.

அதற்குப்பிறகு அஞ்சலியை மறுபடியும் அன்றையைப்போல் பார்க்கலாம்.... என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனின் எதிர்பார்ப்புக்கள் சிதையத் தொடங்கியது!

சில நாட்களாக அஞ்சலியைக் காணவில்லை. ஒரு போன் கோல், ஒரு எஸ்.எம்.எஸ் என்று எதுவுமே வரவில்லை!!

அவளது வீட்டுப்பக்கம் பலதடவை போய் அவளைத் தேடியும்.... அவளைக் காண முடியவில்லை.

surya-mounam-pesiyadhe02.jpg

இவனோ தவிப்பில் தவியாய்த் தவித்தான்.

"எங்க போனாள்...? ஒரு மெசேஜ் கூட இல்லையே...?

போன் பண்ணினாலும் பிரச்சினை! அவள் என்ன சூழ்நிலையில் இருக்கின்றாளோ தெரியாதே.... என்று சிந்தித்து, மனங்குழம்பியபடியே,

என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தவன்...

"எதுக்கும் ஒருக்கா... விமலுக்கு அடிச்சு விசயத்தை சொல்லுவம்" என்று நினைத்துக்கொண்டு... விமலுக்கு போன் பண்ணினான்.

விமலின் போன் றிங்காகிக் கொண்டிருந்தது.....

இவனின் மனமோ.... அஞ்சலிக்காக ஏங்கிக்கொண்டிருந்தது...!!

தொடரும்...

[10]

தனக்கு வந்துகொண்டிருந்த அவனின் அழைப்பை எடுத்த விமல்....

"ஹலோ! டேய்... **** !(நண்பன் என்ற உரிமையில் சில வேளைகளில் கெட்ட வார்த்தைகளையும் அவர்கள்

தங்களுக்குள் மட்டும் உரிமையோடு பாவித்துக் கொள்வார்கள்)

எப்பிடியடா இருக்கிறாய்? என்ன நடக்குது...?

பத்துநாள் எண்டுபோட்டு வந்தனான்... மூண்டு கிழமை ஆகிட்டுதடா!

நான் இங்க வந்ததில இருந்து கொஞ்சம் பிஸி மச்சான்."

"அஞ்சலியோட கதைச்சனியோ...? எக்ஸாம் எப்பிடி எழுதினவளாம்?நீயும் அவளும் சந்திச்சனியளே?" என்று அவன் அடுக்கிக்கொண்டுபோன கேள்விகளுக்கு

அவன் பதிலளிக்காமல் மெளனமாக இருந்ததும்....

விமலுக்கு என்னவோ போல இருந்தது.

inline-Adrian-Grenier%27s-Vision-for-Socially-Conscious-Entrepreneurship.jpg

விமலுக்கு அவனின் மெளனத்தில் ஏதோ மனதில் தட்டுப்பட....

" என்ன மச்சான்!? என்ன ஆச்சுது? ஏன் ஒரு மாதிரியா இருக்குறாய்?" என

கொஞ்சம் அக்கறையுடன் விசாரித்தான் விமல்.

"ஒண்டும் இல்ல மச்சான்... O/L எக்ஸாம் முடியிற வரைக்கும் அவளைப் பாத்தன். ஆனா... அதுக்குப்பிறகு அவளை பாக்கவே முடியலடா. ஒரு போன்,மெசேஜ் எண்டு எந்த மண்ணாங்கட்டியும் இல்ல மச்சான்.

அவளின்ர வீட்டுப்பக்கம் போய்ப் பாத்தன். வீட்டில ஆரையும் காணேல..." என்று

அவன் கலங்கியபடி சொல்லும்போதே விமலுக்கு இவனது நிலைமை புரிந்துவிட்டது.

"அடேய் இதுக்கெல்லாம் யோசிக்காத மச்சான்...! றிஷானாவைப் பாத்தனியோ? அவளுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரிஞ்சிருக்கும்"

என்று விமல் சொல்லவும்,

"நான் நேற்றுப் பின்னேரந்தான் றிஷானாவைப் பாத்துக் கேட்டனான்.

அவளுக்கும் இதைப்பற்றி ஒண்டும் தெரியேலயாம்! ஆனா,றிஷானாவோட கடைசியாக் கதைக்கும்போது... 'அவளின்ர அப்பா வந்திட்டார்' என்று சொல்லியிருக்கிறாள் அஞ்சலி"என்று சொன்னான் அவன்.

"சரி மச்சான்...! ஒண்டுக்கும் யோசிக்காதை! நான் நாளைக்குக் காலம வாறதுக்கு வெளிக்கிடுறன்.

நேரில வந்து கதைக்கிறன். யோசிக்காதடா!"

என்று கூறிய விமல்.....

அடுத்த நாள் மாலை வேளையில் கொழும்பில் வந்து நின்றான் அவனோடு.

என்ன கவலையோ சந்தோசமோ... அவனுக்கும் விமலுக்கும் ஆறுதல் குடுக்கிறது, அந்த பியரும் சிகரெட்டுந்தான்!!

அப்பொழுது, வெள்ளவத்தையில் இருந்த அந்த "சைனிஸ்"பாருக்குள்தான் இருவரும் இருந்தார்கள்.

அன்று அவன் அதிகமாகவே குடித்துக்கொண்டிருந்ததை விமல் கவனித்தான். வழமைக்கு மாறாக...

சிகரெட்டையும் ஒன்றன்பின் ஒன்றாக பற்ற வைத்துகொண்டிருந்தான்.

"டேய்... இதுக்குத்தாண்டா இந்த லவ்வு மசிர் எல்லாம் வேணாமெண்டு சொன்னனான்" என்று சொல்ல வாயெடுத்தவன்... அவனின் மனதறிந்து, "மச்சான்! இதுக்கேன் யோசிக்கிறாய்...? குடும்பமாய் எங்கையாவது வெளியாலை போயிருப்பாள்டா. இப்ப ஸ்கூல் லீவு வேற இருக்கு. அப்பிடியாத்தான் இருக்கும். இதுகெல்லாம் பீல் பண்ணாதை. அவள் வந்த உடனயே கோல் எடுப்பாள் பார்!" என்று சொல்லி ஆறுதல் படுத்தினான் அவனை!

ஆனால்... அவனோ குடித்துக்கொண்டே இருந்தான்.

அவன் அவளின் காதலுக்குள் ஆழமாக மூழ்க ஆரம்பித்திருந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான்.

ஆனால் விமல் சொன்னதைப்போலவே... நடந்திருந்தது என்பதனை அடுத்த நாள் காலைநேரம் நிரூபித்தது.

அஞ்சலியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது. அதுவும் ஒரு சனிக்கிழமைதான்.

முதல் நாள் அளவுக்கதிமாக் குடிச்சுப்போட்டு... சத்தியெடுத்திருந்த அவன் இன்னும் எழும்பவே இல்லை.

அவனது போன் றிங்காகிக் கொண்டிருந்ததை கவனித்த விமல்...

யாரென்று பார்த்தான். அதில் "Dream Girl" என்று இருந்தது. "அஞ்சலியாத்தான் இருக்கோணும்" என்று ஊகித்தவன்....

"டேய் எழும்படா..! அஞ்சலி போன் பண்ணுறாளடா...!" என அவனை எழுப்ப முயன்றும் அவனால் இயலவில்லை.

இன்னும் போதை தெளியாத மயக்க நிலையிலேயே அவன் இருந்தான். இவனை இப்போதைக்கு எழுப்பேலாது என்று முடிவெடுத்தவன்,

முதலில்... "என்ன நடந்தது?" என்ற விசயத்தை அறியவேண்டும் என்று நினைத்த விமல், அவளது அழைப்பினை எடுக்கின்றான்.

"ஹலோ நான் விமல் கதைக்கிறன்" என்றவுடன்...

"ஹலோ அண்ணா! நான் அஞ்சலி கதைக்கிறன். அவர் எங்க?" என்று அவனைக் கேட்கவும்...

அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு....தொடர்ந்தவன்,

"அவனுக்கு தலை வலிக்குது எண்டு போட்டு நேற்றிரவு மருந்து குடிச்சிட்டு படுத்தவன்தான். இன்னும் எழும்பேல.

அஞ்சலி... நீங்கள் இவ்வளவு நாளும் எங்க போனியள்? இவன் உங்கட கோலுக்காண்டி பாத்துக்கொண்டே இருந்தவன்....! போன் அடிச்சுக்கொண்டிருக்கே எண்டுபோட்டு எடுத்தா..., நீங்கள் எடுத்திருகிறியள். சந்தோசம். என்ன நடந்தது?" என வினவினான் விமல்.

"பிரச்சினை ஒண்டும் இல்லை அண்ணா. எக்ஸாம் முடிஞ்ச கையோட ஃபமிலியா ஒரு ரூர் போறதா பிலான் பண்ணியிருந்தனாங்கள். ஆனா அப்பா எக்ஸாம் முடிஞ்ச அண்டைக்கு நைட்டே போவம் எண்டிட்டார். அதுதான் அவருக்கும் சொல்ல ஏலாமப் போச்சு. அதோட என்ர போனையும் எடுத்துக்கொண்டுபோக மறந்திட்டன். சரி அண்ணா! அவரிட்ட சொல்லிவிடுங்கோ."

"அதோட...இண்டைக்கு ஈவ்னிங் அஞ்சு மணி போல, நான் அவரை அண்டைக்குப் பாத்த

அதே கொஃபி சொப்பில மீட் பண்ண வேணும் எண்டு சொன்னனான் எண்டும் சொல்லிவிடுங்கோ" என்று சொல்லிவிட்டு அஞ்சலி போனை வைத்ததும்....

"அப்பாடா! ஒருமாதிரி இவனின்ர பிரச்சினை முடிவுக்கு வந்திட்டுது"

என்று நினைத்தபடி...

அவனது போனில் இருந்த கோல் லிஸ்டிலிருந்து... அஞ்சலி அப்பொழுது போன் பண்ணியதற்குரியதை மட்டும்

அழித்துவிட்டு போனை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான் விமல்.

மதியம் 3 மணிக்கு பிறகு எழும்பியவனுக்கு... சாப்பாட்டுப் பார்ஷல் மட்டும் அருகில் இருந்தது. அவனுக்கும் பசி தாங்க முடியவில்லை. குளித்துவிட்டு வந்தவன் முதல்வேலையாக அதை சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்த பின்... விமல் எங்க போய்ட்டான்?" என்று யோசிச்சுக்கொண்டிருக்கவும், விமல் அவனுக்கு போன் பண்ணினான்.

"அடேய் எழும்பிட்டியோ...? பக்கத்தில சாப்பாட்டுப் பாஷல் வைச்சிருக்கிறன்.

சாப்பிட்டிட்டு.... சரியா நாலரை போல வெளிக்கிட்டு ரெடியா நில்லு! நான் போன் பண்ணுறன்.

உன்ர அஞ்சலி விசயமா... ஒராளைப் பாக்க வேணும்! என்று விமல் சொன்னதும்,

"அதெல்லாம் சாப்பிட்டாச்சு.... நான் இப்பவே வெளிக்கிடுறன்" என்று சொல்லிவிட்டு

போனை வைத்தான் அவன்.

அஞ்சலியைப் பற்றி ஏதாவது அறிந்துவிட வேண்டும் என துடியாய்த் துடித்தான்.

தனது பர்ஸுக்குள் இருந்த அவளது புன்னகைக்கும் போட்டோவை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன்...

வெளியில் செல்வதற்கு தயாரானான்.

நேரம்.... பின்னேரம் 4.50

மீண்டும் விமலின் அழைப்பு அவனுக்கு வருகின்றது.

" மச்சான் எங்கடா நிக்கிறாய் " நேர அண்டைக்கு அஞ்சலியும் நீயும் கதைச்ச கொஃபி சொப்புக்கு வா!

அங்கதான் அந்தாளை மீட் பண்ணோனும்" என்று சொல்லிவிட்டு விமல் போனை வைக்கவும்...

அவனும் அதை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

2631759-Hotel-Omega-Inn-Hotel-Exterior-1.jpg

அதை நெருங்கியவன் அந்த கொஃபி சொப்பின் வாசலில் விமல் நிற்பதைக் கவனித்தான்.

இன்னும் நெருங்கி... "என்ன மச்சி... என்ன விஷயம்?" யாரைப் பாக்கோணும்?"

என அவன் விமலை ஆர்வமாகக் கேட்க,

"உள்ளுக்க போ... அந்தாள் அண்டைக்கு நாங்கள் இருந்த... அந்த டேபிளிலதான் இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு அவனைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குள் நுழையவும்....

அவனுக்குள் அப்படியொரு சந்தோசம். அவனது மனசு சட்டென சந்தோச மழையில் முழுதாய் நனைந்திருந்தது.

தான் தொலைத்துவிட்ட பெறுமதியான பொருளொன்றை மீண்டும் கண்டெடுத்த மகிழ்ச்சியைவிட பலகோடி மடங்கு மகிழ்ச்சியை அவன் அப்பொழுது உணர்ந்தான்.

அஞ்சலியைக் கண்டதும்... அவளை அப்படியே கட்டிப்பிடித்து அழவேண்டும் போல, கொஞ்ச வேண்டும்போல இருந்தது அவனுக்கு.

7876579_1333019037_31947.jpg

ஆனால்.... அவனது சந்தோசத்தினை எப்படிக் காட்டுவது என்று தெரியாமல் நின்றவன்...

விமலைக் கட்டிப்பிடித்து "தாங்ஸ் மச்சான்" என்று சொன்னவனின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தது.

"தங்கச்சி...! இனி எப்பவுமே இவனை இப்பிடி தவிக்க விட்டிட்டுப் போயிடாதையுங்கோ!

என்னால இவனின்ர அலுப்பைத் தாங்க ஏலாது!" என்று சொல்லிவிட்டு, சிரித்துக்கொண்டே....

அன்றைய நாளினைப்போலவே அவன் அங்கிருந்து அகன்றான்.

அவனும் அவளும் மனம் விட்டுப் பேசினார்கள்.

காதல் என்கின்ற ஒன்று அவர்கள் இருவரையும் கட்டியணைக்க ஆரம்பித்திருந்தது.

அதன் அணைப்பில்.... அவர்களின் காதல் இதமாக தொடர ஆரம்பித்தது.

அன்றைக்குப் பின்... அஞ்சலியை அவன் அவ்வாறு பிரிந்ததில்லை... 22 ஜனவரி 2007 வரைக்கும்!!!

ஆனால் இந்த திகதிக்கு முன்னர்........

தொடரும்...

[11]

அவனும் அவளும் சில மணி நேர சந்திப்புகளுடனும்... பல மணி நேர செல்போன் உரையாடல்களுடனும்

தமது காதலை வழமையான காதலுக்குரிய இயல்புகளுடன் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.

சில வேளைகளில் விடிய விடியப் போனில் பேசியபடியே தூங்கிப்போவார்கள்.

kajal-63-6.jpg

இப்படியே இனிமையாய் தொடர்ந்துகொண்டிருந்த காலத்தில் அவளது O/L பரீட்சை முடிவுகளும் வெளியாகியிருந்தது.

அவன் அவளுக்கு படிப்பித்த பாடத்திலும் அவள் நல்ல 'றிசல்ட்' எடுத்ததை அவனிடம் சொல்லி சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

அதன்பின்னர் அவளது படிப்பு தொடர்ந்தது. தான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தவள்... 'உயிரியல்' பாடத்தினை தெரிவுசெய்திருந்தாள்.

அவள் தனது கல்வியுடனும், இவன் தனது வேலைகளுடனும் தமது நேரங்களைக் கழித்தாலும்.... சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் தமக்குள் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

இலங்கையின் அப்போதைய சமாதானத் தென்றல் இவர்களின் காதலுக்கும் சாமரம் வீசிக்கொண்டிருந்தது.

ஜோடிப் பறவைகளாய் இந்தக் காதற் பறவைகளும் கொழும்பில் சுற்றிப்பறந்தன சுதந்திரமாக.

அப்படியே நகர்ந்த காதல் வசந்த காலங்களின் ஒரு இனிய நாளில்...

ஒரு மாலைப் பொழுது,

பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலிற்கு அவள் தனது குடும்பத்துடன் வந்திருப்பதை எஸ்.எம்.எஸ் மூலம் அவனுக்குத் தெரிவிக்கிறாள். அவள் அதனை அவனுக்கு தெரிவித்தமைக்கு ஒரு விசேட காரணம் இருந்தது. அன்றைக்கு அவள் புடவை உடுத்தி வந்திருந்தாள். அதனை அவனுக்கு காட்டவேண்டுமென விரும்பியே அதனை அவனுக்குத் தெரிவித்திருந்தாள்..

வெள்ளவத்தை டெல்மன் ஹொஸ்பிட்டலுக்கு முன்னால் விமலும் அவனும் பேசியபடியே வந்துகொண்டிருந்தார்கள். அவளிடமிருந்து வந்த மெசேஜை பார்த்ததும்...

"டேய் விமல்... அஞ்சலி பம்பலப்பிடி பிள்ளையார் கோயிலுக்கு வந்திருக்கிறாளாமடா! வரச்சொல்லுறாள்... போவமே?" என்று அவன் கேட்க,

"நீயாவது போகாமல் கிடக்கிறதாவது...! வாற அந்த 100ஆம் நம்பர் பஸ்சை மறி!" என்று விமல் சொல்லவும்,

பஸ்ஸை மறித்து ஏறி கோயிலுக்கு முன்னால் இறங்கினார்கள் இருவரும்.

தமது பாதணிகளை கழட்டி வைத்துவிட்டு கால்கழுவிக் கொண்டிருக்கும்போது,

அவன் விமலிடம்... "மச்சான்! அவள் குடும்பத்தோடதான் வந்திருக்கிறாள். அவளின்ர தாய்க்கு என்னை நல்லாத் தெரியும். கொஞ்சம் கவனமா இருக்கோணும்" என முன்கூட்டியே எச்சரித்தவன்..... காலைக்கழுவி விட்டு விமலோடு கோயிலுக்குள் நுழைந்தான்.

கோயிலுக்குள் அவளை தேடியவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவனது தேவதை. புடவையில் அவள் அத்தனை அழகாய் இருந்தாள். இதற்குமுன் எப்பவுமே அவன் அவளை புடவையில் பார்த்திருக்கவில்லை.

529.jpg

இன்று தன் தேவதையை புடவையில் பார்த்ததும் அளவிட முடியாத சந்தோசத்தில் தன்னிலை மறந்தவனாய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனிடம்.....

"மச்சான்...! ஐயர் சாமிக்கு தீபங் காட்டுறார் . கும்பிடு!" என்று விமல் சொல்லவும்தான் தன்னிலைக்கு வந்தவன்,

"சாமி கும்பிடவோடா வந்தனாங்கள் கோயிலுக்கு..? சும்மா கிடடா!" என்று சொல்லிவிட்டு மீண்டும் அவளையே இரசித்துக்கொண்டிருந்தான்.

தன் தாயிடம் ஏதோ சொல்லிவிட்டு... கோயிலைச் சுற்றிக் கும்பிடப் போனவள் திரும்பி அவனைப் பார்த்தபோதுதான் இவனின் "ரியூப்லைட் மண்டைக்கு" புரிந்தது... அவள் தன்னையும் பின்னால் வரச் சொல்கிறாள் என்று.

உடனே அவன் விமலிடம்... "மச்சான் அவளின்ர தாய் தம்பியாக்களை கொஞ்சம் கவனிச்சுக்கொள்ளு. அந்தப்பக்கம் வந்தால் உடனயே ஒரு மிஸ்கோல் அடியடா..." என்றுவிட்டு

அஞ்சலியின் பின்னால் போனவனும் அவளும் ஒரு கட்டத்தில் பக்கத்துப் பக்கத்தில் வரவும்...

திரும்பி நின்று புன்னகைத்தவள்... "சாறி எப்பிடி இருக்கு? ஓகேயா....?" எனக் கொஞ்சம் வெட்கத்துடனேயே கேட்டவளிடம்...

"அஞ்சு... சாறியில அழகாத்தான் இருக்கிறாய்... யார் கட்டிவிட்டது? என்றவனிடம்... நான்தான் கட்டினான்! எனக்கு சாறி கட்டத் தெரியுமே!!" என்று குழந்தைபோல சிரித்துக்கொண்டே சொன்னாள்... அவனது அழகான தேவதை.

Prabhas-kajal-agarwal(1).jpg

அங்கிருந்த திருநீறை எடுத்த அஞ்சலி அவனது நெற்றியில் கீறு போட்டுவிட்டு அவனைப் பார்த்து புன்னகைக்க இவனும் அவளது நெற்றியில் குங்குமத்தால் பொட்டு வைத்தவன்...

"என்ன ஓகேதானே...? அதுசரி, ஹிட்லர் எங்க? ஆளைக்காணேல! என அவளிடம் சிரித்துக்கொண்டே கேட்டான்.

அவளுக்கு புரிந்துவிட்டது... தன் அப்பாவைத்தான் அவன் 'ஹிட்லர்' என்கிறான் என.

"உங்களுக்கு என்ர அப்பா ஹிட்லரோ...? அடி வாங்கப் போறீங்கள்!" செல்லமாக கோபித்துக்கொண்டவள்,

"சரி... அம்மா தேடப்போறா...! நான் வாறன்..." என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

கோயிலை சுற்றி வந்தவனிடம்... "என்ன மச்சான்... கோயிலை எப்பிடி கட்டியிருக்கிறாங்கள்? கொண்டிஷன் எல்லாம் ஓகேதானே...?!" என கொடுப்புக்குள் சிரித்தபடி விமல் கேட்கவும் ,

அவன் ஒரு பார்வை பார்த்து முறைத்துவிட்டு சாமி கும்பிடுவதுபோல பாவனை செய்தவனைப் பார்த்து.

"கும்பிடு கும்பிடு.... அந்தக் கடவுள்தான் உன்னைக் காப்பாத்தோணும்!" என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான் விமல்.

அன்றைய பொழுதும் இனிமையான நினைவுகளுடன் கழிந்திருந்தது

இனிமையான பொழுதுகளோடு அவர்களுடைய காதல் வளர்ந்துகொண்டே இருக்க.

இனிமைக்கும் இனிமை சேர்ப்பதாய் அன்றொருநாள்... அஞ்சலியும் அவனும் மருதானை சினிசிட்டி தியேட்டரில் இருந்தார்கள். "7G ரெயின்போ காலணி" திரைப்படம்.

45307850.jpg

படம் ஓடிக்கொண்டிருந்தது... இவனின் மனமோ அவளது பிஞ்சு விரல்களை எப்படியாவது பற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தது.

இடைவேளை வந்த வேளை... அவள் சாப்பிடுவதற்கு ஸ்னாக்ஸும் பெப்ஸியும் வாங்கிக்கொண்டு வந்தான். தியேட்டர் வெளிச்சமாய்த்தான் இருந்தது அப்போது.

"அஞ்சு... உன்ர கையை ஒருக்காக் குடன்...." என தயக்கத்துடன் கேட்கவும் "ஏன்?" என்பதுபோல் அவனைப் பார்த்தவள்,

"ஏன் கேக்குறீங்கள்?" என்று கேட்டே விட்டாள்.

இவனுக்கு "ஏனடா கேட்டம்" என்பதுபோல் இருந்தாலும் சமாளிச்சுக்கொண்டு... "ஒண்டுமில்ல...சும்மா சாத்திரம் பாக்கத்தான்" என சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி தனது இடது கையை அவனிடம் நீட்டினாள் .

முதன்முதலாய் அவளது பிஞ்சுக் கையை தொடுகின்றான் அவன். அவளது மனசைப்போலவே அவளது கையும் அத்தனை மென்மையாய் இருந்தது.

தனக்கு நிறைய சாஸ்திரம் தெரியும் என்பதுபோல.... அவளது ரேகைகளை பார்த்தவன்.... "இருபத்தஞ்சு வயசிலதான் கலியாணம். ரெண்டு பிள்ளையள். ஒரு ஆம்பிளப்பிள்ள,ஒரு பொம்பிளைப்பிள்ள..." என்று சொல்லவும்,

"கட்டப்போறவன் நல்லவனோ? கெட்டவனோ? எண்டுறதையும் ஒருக்கா பாத்துச் சொல்லுங்கோ" என்று அஞ்சலி சொல்லவும்....

சிரித்தவன்.... அவளது விரல்களுக்குள் தன் விரல்களை இறுக்கிக் கோர்த்துக்கொள்ள... அவனது தோளில் தனது தலையை சாய்த்துக்கொண்டாள் அஞ்சலி.

படம் முடியும்வரைக்கும்.... அவனது கைகளுக்குள் அவளது மென்மையான விரல்கள் விருப்பமுடன் சிறைப்பட்டிருந்தன.

படம் முடிய வெளியே வந்தவர்கள் ஆட்டோ எடுத்து வெள்ளவத்தைக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.

அவளது கண்ணீர் அவனது ரீசேட்டுக்குள் ஊறி அவனது மேனியைத் தொட்டதை உணர்ந்தவன் உண்மையில் துடித்துப்போனான்.

அவனது தோளில் சாய்ந்த அஞ்சலி... அவனது ரீசேர்ட்டை இறுக்கிப் பற்றிபடி விம்மி விம்மிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்...

"அஞ்சு... என்னாச்சுமா?" என்று கேட்டான் ஒன்றும் புரியாமல்...

"டேய்... நான் செத்திட்டன் எண்டால் என்னடா பண்ணுவாய்?" எனக் கேட்டுவிட்டு அவனது தோளில் முகம்புதைத்து அழுதாள்.

அந்த திரைப்படத்தின் முடிவுதான் இவளது அழுகைக்குக் காரணம் என்பதனை உணர்ந்தவன்....

"அஞ்சு... அழாதமா!" என்று சொல்லியபடியே அவளது தலையை வருடிவிட்டான்.

அந்த சிங்கள ஆட்டோ டிரைவர் ஒரு மாதிரியாக பார்க்க... இவளின் அழுகையை எப்படி நிறுத்துவது என்று யோசித்தவன்,

"அஞ்சலி... அப்பிடி நடந்தா கொஞ்ச நாளைக்கு அழுவன். பிறகு நல்ல பெட்டையாப் பாத்து கலியாணம் பண்ணிப்போட்டு... வேணுமெண்டால், உன்ர பெரிய போட்டோ ஒண்டை ஹோலில மாட்டிவைக்கிறன்" என்று சிரித்துக்கொண்டு அவன் சொல்லவும்...

அழுது கொண்டிருந்த அஞ்சலிக்கு சிரிப்பு வந்துவிட்டது." டேய் பாவி! அப்பிடிச் செய்வியோ?

நான் பேயாய் வந்து உன்ர கழுத்தை நெரிப்பன்... சொல்லிப்போட்டன்!" என்றாள்.

அவளது செல்லக் கோபங்கள் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவளின் முகத்தையே சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தவனின் தோள்களில்.... மீண்டும் சாய்ந்தவளின் கன்னத்தில் பரிவோடு தடவிக்கொடுத்தான் அவன்.

149431_340010352728867_100001597141152_954986_271137503_n.jpg

அதுவரை தமது எதிர்கால வாழ்வைப்பற்றி அவ்வளவு யோசிக்காமல் இருந்தவனின் மனதுக்குள்...

அது பற்றிய யோசனை வர ஆரம்பித்திருந்தது.

தொடரும்...

[12]

'காதலின் பின்னரான குடும்ப வாழ்க்கை' என்பதனைப் பற்றி அவன் சிந்திக்க தொடங்கியிருந்தது அப்பொழுதுதான்.

அஞ்சலி பிறந்தது முல்லைத்தீவில்... சிறுபிள்ளைக்காலம் வவுனியாவில்... அதன்பின் எல்லாமே கொழும்பில்தான்.

வீட்டுக்கு செல்லப்பிள்ளையாக வசதியாக வாழ்ந்த பிள்ளை. கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்த பிள்ளை.

அம்மாவுக்கு செல்லம்... அப்பாவுக்கு அதைவிடச் செல்லமானவள். இப்பொழுது தனக்கும் செல்லமாயிருக்கிறாள்.

Kajal%2BAgarwal%2BCute%2BRose%2BPhotos%2B%25281%2529-791656.jpg

இதெல்லாவற்றையும் சிந்தித்தவனின் மனதில்... தன்னோடு அவள் வாழும்போது,

அஞ்சலி அவள் வீட்டில் வசதியாக வாழ்ந்ததைவிட... குறைஞ்சது ஒரு படி மேலாவது சந்தோசமாக வைத்திருக்க வேண்டுமென விரும்பினான். எப்பொழுதும் போலவே அவள் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை அழவைக்கக் கூடாது. தன் குடும்பத்தோடு இருந்ததைவிட கஸ்டப்படுறமே எண்டு அவள் எப்பவுமே நினைக்கக் கூடாது என உறுதியெடுத்தான்.

இப்பொழுதே ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் என யோசித்தவன்.....

இனிமேல் இந்த ஒபிஸ் வேலை எல்லாத்தையும் விட்டிட்டு சொந்தமாக ஏதாவது பிஸ்னஸ் செய்து, தன்னை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர நினைத்தவன்.... அடுத்த சில நாட்களிலேயே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்திருந்தான்.

2004 டிசம்பர் கிறிஸ்மஸ் நேரம்...

அவன் அவனது ஊரில் இருந்தான். அவனும் அஞ்சலியும் காதலிக்க ஆரம்பித்த நாட்களிலிருந்து முதன்முறையாக...

அவனாக அவளைப் பிரிந்து வந்தது அப்பொழுதுதான்.

ஒரு வார விடுமுறை. தனது எதிர்கால திட்டங்களுக்குரிய அலுவல்களை பார்ப்பதற்காகத்தான் அவன் தன் வீட்டிற்கு வந்திருந்தான்.

வந்தவனுக்கு வாய் கிடக்காமல்.... தன் தங்கையிடம் "அஞ்சலி" விடயத்தினை சொல்லிவிட...

அவனின் 'ஓட்டைவாய்' தங்கை தாயிடம் சொல்ல,

அன்றிரவே... அவன் விளக்க மறியலில் நின்றான்.

"அம்மா நான் பிஸ்னஸ் தொடங்கப்போறன்" என்று அவன் சொல்லவும்...

"தம்பி... இஞ்ச பார்! இதெல்லாம் இந்த நாட்டில சரிப்பட்டு வராது. உன்ர சித்தி லண்டனிலயிருந்து

கொஞ்ச போட்டோ அனுப்பி இருக்கிறா... பேசி வந்திருக்கு. போட்டோவைப் பாத்திட்டு முடிவைச்சொல்லு.

வெளிநாட்டுக்குப் போய் குடும்பத்தைப் பாக்கிறதை விட்டிட்டு.... இங்க பிஸ்னஸ் துடங்கி

ஒண்டும் செய்ய ஏலாது தம்பி ! என்று சொல்லி முடித்த தாயிடம்...

( அவனது தாய் அவனை "தம்பி" என்றுதான் அழைப்பா)

"அம்மா...! அதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது! சொந்தமா ஏதாவது பிஸ்னஸ் தொடங்கப்போறன்...

எனக்கு கொஞ்சக் காசு வேணும்" என்றான் அவன் திடமான முடிவுடன்.

"தம்பி... இஞ்ச பார்! நாங்கள் சீவிக்கிறதுக்குத்தான் காசு கிடக்கு... அதை உன்னை நம்பிக் குடுக்கிறதெண்டால்,

வெளிநாட்டுக்குப் போறதுக்கு மட்டுந்தான் குடுக்கலாம். இஞ்ச பிஸ்னஸ் கிஸ்னஸ் பண்ணுறதுக்கெல்லாம் குடுக்க ஏலாது!" என்று கொஞ்சம் கண்டிப்புடனேயே சொல்லி முடித்தா அவனது அம்மா. .

"அம்மா.... எனக்கு வெளிநாட்டுக்கெல்லாம் போக விருப்பமில்லை. இங்கதான் உழைக்கோணும். அங்க போய் குளிருக்குள்ளையும் வெக்கைக்குள்ளையும் கஷ்டப்பட ஏலாது.

உங்களால குடுக்க ஏலாட்டி விடுங்கோ.

நான் வேற ஏதாவது வழியைப் பாக்கிறன்" என்றவன் கொஞ்சம் கோபமாகவே அகன்றான்.

"அவனுடைய இந்த பிஸ்னெஸ் ஆரம்பிக்கும் முடிவு.... அவன் காதலிக்கும் பெண்ணுக்கானது"

என்பதனை அவனது தாயார் புரிந்து கொண்டார்.

சற்று நேரங்கழித்து... அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது...

"இன்னுங் கொஞ்சம் கறி விடவே?" என அக்கறையுடன் கேட்ட அவனது தாய் ...

"தம்பி... யோசிச்சு முடிவெடு! இதுக்குப் பிறகு உன்ர இஸ்டம்" என்றவுடன்...

சாப்பாடை அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவினான்.

அவனது தாய் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லையென்றாலும்..... இதற்குமேல் அவனது விருப்பம் என்று,

அப்படியே விட்டுவிட்டார்!

26 டிசம்பர் 2004 காலைப்பொழுது ...

தன் தங்கை கணவரின் மோட்டர் சைக்கிளில் ஒரு சிகரெட் அடிப்பதற்காக

தேத்தண்ணிக்கடைக்கு வெளிக்கிட்டவனுக்கு...

அவன் கண்களை நம்ப முடியவில்லை. வீதியால் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

என்ன நடந்தது என ஒன்றுமே புரியாமல் நின்றவன்...

அந்த வீதியால் வந்த ஒரு வயதானவரிடம்...

"என்னையா நடந்தது?" என விசாரித்தான்.

"அப்பு! கடல் உள்ளுக்குள்ள வந்து கொண்டிருக்காம். கடக்கரச் சனமெல்லாம் ஓடி வந்து கொண்டு இருக்குதுகள்!!" என்றதும் இவனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!!!

உண்மையில் என்னதான் நடந்தது எனப் பார்ப்பதற்காக,

தன் மோட்டர் சைக்கிளை மீண்டும் ஸ்ரார்ட் செய்தவன் கடற்கரைக்கு போகும் றோட்டில் திருப்பினான். சனங்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

அப்பொழுது ஒரு பெண் கத்திக்கொண்டு போனது அவன் காதில் தெளிவாக விழுந்தது..... "அய்யோ உலகம் அழியப்போகுது...!!! ஊரெல்லாம் கடலில முழுகப்போகுது! ஓடுங்கோ!!!". இப்படிக் கத்திக்கொண்டு அந்தப் பெண் பயந்து பதறியடித்து ஓடியதைப் பார்த்ததும்....

சட்டென்று தன் மோட்டர் சைக்கிள் பிரேக்கை அழுத்தியவன்,

அவனது மனதில் ஏதோ தோன்ற... தன் செல்போனை எடுத்து அஞ்சலிக்கு போன் பண்ணினான்.

தொடர்பு கிடைக்கவில்லை. "Network busy" என்றுதான் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கவும்....

இவனுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பிக்க, போனை தன் சட்டைப்பையில் போட்டுவிட்டு

தன் வீட்டுக்கு போக... தனது மோட்டர் பைக்கினை திருப்பியபோது...

அவனது கால்களுக்கடியில் கடல் நீர் சலசலத்துக் கொண்டிருந்தது.

இவனுக்குள் படு ரென்ஷன்...! போன் வேற பண்ண முடியேல....! வீட்டுக்கு வரும் வழியிலேயே வீதியோரத்தில் ஒரு ஒதுக்குப்புறமாக தன் மோட்டர் சைக்கிளை நிறுத்தியவன்......

மீண்டும் தன் போனை எடுத்து, அஞ்சலியின் நம்பருக்கு டயல் பண்ணிப் பண்ணி கிடைக்காமல்...

ரென்ஷனானவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவன் ரென்ஷனானதுக்கும் காரணம் இருந்தது.

அஞ்சலியின் வீடும் வெள்ளவத்தையிலுள்ள இராமகிருஷ்ணா அவனியூவில்,

கடலுக்கு அருகாமையில்தான் இருந்தது.

"அங்கை கடல் புகுந்திருந்தால்...???" என்ற எண்ணத்தால் இவன் குழப்பத்தில் மூழ்கிப்போயிருந்தான்!

கொழும்பின் நிலைமை அறிய.... விமலுக்கு போன் பண்ணிப்பார்த்தான். அவனுக்கும் கிடைக்கவில்லை.

ஒரு அரை மணி நேரம் இப்படியே அவனது மனப் பதைபதைப்புடன் கழிகிறது...

"அஞ்சலிக்கு என்ன ஆச்சுதோ?" என்று இவன் மனம் பதைபதைத்துக் கொண்டிருந்த அந்த கடினமான தருணங்கள்...

அவனை அழவைத்துவிட்டது. யாருக்கும் தெரியாமல் ஓரமாய் நின்று அழுதான்.

அவனது தந்தை இறந்ததன்பின் முதன்முறையாய் அவன் அழுதிருந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான்.

திடீரென அவனது செல்போன் அடிக்க... அது அஞ்சலி!

இவனுக்குள் அளவிடமுடியாத மகிழ்ச்சி!

அஞ்சலி இவனது நிலைமையை விசாரிக்க... இவன் அஞ்சலி நிலைமையை விசாரிக்க... என தொடர்ந்த அவர்களது உரையாடல்களில் அவர்கள் இருவரினதும்... காதலும், பரிதவிப்பும் நிறைந்திருந்தது.

Tsunami2.jpg

"சுனாமி" என்ற சொற்பதத்திற்குரிய அர்த்தத்தினையும், அதனாலான அழிவுகளையும் உணர்ந்தவனாய்...

அடுத்த சில நாட்களிலேயே அவனது பயணம் அவனது தேவதையின் இருப்பிடம் நோக்கி ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவனை வரவேற்கின்றது கொழும்பு.

வந்த சில நாட்களிலேயே தனது நண்பர்கள்,உறவினர்கள் சிலரது உதவியுடன்

தனது புதிய பிஸ்னஸை ஆரம்பிக்கின்றான்.

அவனுக்கும் அஞ்சலிக்குமான எதிர்கால வாழ்க்கைக்காக....

தனது தாயின் விருப்பத்தினையும் மறுதலித்து... தன் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்து வைத்தான் அவன்.

கொம்பியூட்டர்,செல்போன் சம்பந்தப்பட்ட துறை என்பதனால் அவனுடைய புதிய வியாபரமும்

இலாபத்துடன் நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது.

தனது பிஸ்னஸில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

பிஸ்னஸ் என்று வரும்பொழுது "பிஸி" என்பதும் சேர்ந்து வரும்!

அவனைப்போலவே அவனது செல்போனும் பிஸியாகவே இருக்கும். சில சமயங்களில் களைத்துவிடுவான்.

ரென்ஷன் அதிகமாகியது.

அடிக்கடி போன் பண்ணிக் கதைக்கும் அஞ்சலியின் அழைப்புக்களை.... சரியான நேரத்தில் எடுக்க முடியாமல் திணறினான்.

நேரம் கிடைக்கும் நேரங்களில்... உடலும் மனமும் களைத்துப் போயிருக்கும்.

ஆனாலும், தினமும் அடிக்கடி அவளுடன் பேசத் தவறுவதில்லை.

அவனும் அவளும் நேரடியாக சந்தித்துக்கொள்ளும் வேளைகளில்,

அவளிடம் தனது நிலையினை விளங்கப்படுத்துவான். அவளும் விளங்கிக் கொண்டதுபோல் "சரி... நான் போன் பண்ணினா, ஆன்சர் பண்ணி 'நான் பிஸியா இருக்கிறன்' என்று சொல்லிப்போட்டு வையுங்கோ. அது போதும்" என்பாள்.

இவனும் "ம்ம்ம்ம் சரி சரி" என்று தலையைத் தலையை ஆட்டுவான்.

இந்த சின்னச் சின்ன ஊடல்கள்... அவர்களின் நெருக்கத்தினை மேன்மேலும் அதிகப்படுத்தினவே ஒழிய...

ஒரு துளியளவேனும் குறைக்கவில்லை.

கோபித்துக் கொண்டு எழும்புபவளின் கையை பிடித்திழுத்து அவன் "அஞ்சு சொறிடா!" என்று சொல்லும் போதே...

அவள் கொஞ்சும் கிளியாக அவன் பக்கத்தில் அணைவாள் மீண்டும்.

magadheera.jpg

"இடையிடை ஊடல்... அதன்பின் மீண்டும் சேர்ந்து மகிழும் கூடல்" என நகர்ந்த காலம்....

அவர்களுக்கு 2006ஆம் ஆண்டினையும் அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த 2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்தான்....

அவனுக்கும் அவளுக்குமான... " பிரச்சினை" என்று சொல்லக்கூடிய முதலாவது சம்பவம் நடந்தது.

அவனது வேலையிடத்தில் கொஞ்சம் பிஸியாக நின்றவனிடம்...

"டேய் எனக்கு பசிக்குது... வந்து சாப்பிட ஏதாவது வாங்கிக்குடு"! என்று...... அவனது சேர்ட்டைப் பிடித்து உரிமையுடன் இழுத்துக்கொண்டிருந்தாள் "துவாரகா" .

அப்பொழுது... அவனைப் பார்ப்பதற்காக அஞ்சலி அங்கு வந்திருந்தாள்.

தொடரும்...

குறிப்பு:

தொடர்ந்து வாசிப்பதற்கு இலகுவாக பகுதி 12 ம் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான படங்களை மேலதிகமாக இணைக்க முடியாத காரணத்தினால்,

இந்தக் கதையின் தொடர்ச்சி தனியான பிறிதொரு திரியில் தொடர்கின்றது.

இக்கதையின் அடுத்த பகுதிகளினை (பகுதி 13 இல் இருந்து) வாசிப்பதற்கு... கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

http://www.yarl.com/...81

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

Hmmm hmmmm nadakadum nadakadum.....

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமாக நண்பர்கள் தங்களது நண்பனது காதலியின் சிநேகிதிகளைத் தான் சைட் அடிப்பார்கள் ஏன் உங்கட நண்பர் ரிசானாவை சைட் அடிக்காமல் விட்டுட்டு ஓடினவர் அந்தப் பொண்ணு முஸ்லீம் என்பதாலேயா :lol: உங்களுக்கு வேற ஆரியா என்ட நினைப்பு வேற :D :D

  • கருத்துக்கள உறவுகள்
love32.gif
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் உங்கட நினைவாற்றலை பாராட்டுகிறன் கவிதை...குடிக்கிறதுக்கு நண்பன் என்ன ஓடர் பண்ணினவன் என்கிறதிலை இருந்து எல்லாத்தையும் நினைவு வச்சிருக்கிறியள்.. :D

Edited by சுபேஸ்

imagesca5h6ted.jpg

அப்ப ரெண்டுபேரும் ஓரே கப்பில கஃபே ( café ) குடிக்கிறியள் ................. என்னத்தச் சொல்ல நானும் இங்கை ( கஃபே ) குடிச்சன் .................

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

love32.gif

அண்ணை..கதையை வாசிச்சிட்டு உணர்ச்சி வசப்பட்டு ஆருக்கு பூக்குடுக்க புறப்பட்டிட்டியல்.. :D

கதையை நன்றாக நகர்த்துகிறீர்கள். படங்களைத் தேர்வு செய்து போடுவது அழகு.

எனக்கு பர்சில் படம் வைப்பது போன்ற விசர் :unsure: விளையாட்டுக்களில் நாட்டம் இல்லை. :lol:

ஒரே கப்பில் காபி குடிப்பதும் கொஞ்சம் இடறல் தான்! :D

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [09] ம் பகுதி [08]உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்படுள்ளது. :)

"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை"

Edited by கவிதை

போகப் போக என்னென்ன நடக்கப் போகுதோ? அது...அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை - நான் பாத்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்

நல்ல அழகி என்பேன்...

நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் நல்லகவிதை என்பேன்

நல்ல கவிதை என்பேன்..

நான் - வேணாம் மச்சி வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு...

அது மூடி தொறக்கும்போதே உன்னைக் கவுக்கும் குவாட்டறு... :D:lol:

  • தொடங்கியவர்

Hmmm hmmmm nadakadum nadakadum.....

"ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்" எண்டு சொல்லுறது ஈஸி சுண்டல். அதை நடத்தினவனுக்குத்தான் தெரியும் அதின்ர களைப்பும் அலுப்பும்! :lol:

சுண்டல் எப்பவுமே ip 4sம் கையுமா திரியுறதா கேள்வி. :lol::unsure:

எப்பவும் இங்கிலிசிலயே வருது!!!! :rolleyes::lol:

  • தொடங்கியவர்

:D :D :D

ஏன் சிரிக்கின்றீர்கள் இசை...???

சொல்லிப்போட்டு சிரியுங்கோவன்! :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிரிக்கின்றீர்கள் இசை...???

சொல்லிப்போட்டு சிரியுங்கோவன்! :D :D :D

ஏதோ நினைவுகள்..

கனவுகள்.. மனதிலே மலருதே.. :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நடத்துங்கோ , நடத்துங்கோ. அருமையாய் போய்க்கொண்டிருக்கு. விமலை அந்த ஈஸ்வரன் தான் காப்பாற்ற வேண்டும் :rolleyes: . உங்களிட்ட ஆள் நல்லா மாட்டுப்பட்டிருக்கு போல....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் எப்பவுமே ip 4sம் கையுமா திரியுறதா கேள்வி. :lol::unsure:

எப்பவும் இங்கிலிசிலயே வருது!!!! :rolleyes::lol:

சுண்டல் தூங்கும்போதும் ஜ போன்4 உடன் தானாம்......உதாலை கலியாணத்தையும் ஆள் தள்ளிப்போட்டு விட்டதாம்...! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மிச்சக் கதையைக் காணோம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

2 days aachu enga micham?

  • தொடங்கியவர்

தயவுசெய்து மன்னிக்க வேண்டும்... வேலைப்பழுவினால் எழுத முடியாமல் போய்விட்டது.

எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.... ஒரு சில மணி நேரங்களில் போட்டு விடுகின்றேன் அடுத்த பகுதியையும்! :)

2 days aachu enga micham?

காதல், கடலை என்று வந்தால் சுண்டு ஓடி வந்திடுவார் :lol: :lol:

அது சரி சுண்டுக்கு என்னாச்சு??? திண்ணைப் பக்கம் வாறேலை. ஊர்ப் புதினம் கதைக்க ஏணும்!

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [10] ம் பகுதி [08],[09] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. :)

"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை"

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாதிரி இருக்கு கதை.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

Hi alai Akka........ Vaaran vaaran by the way amma is in cana.

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [11] ம் பகுதி [08],[09],[10] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.