Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த மூன்றில எந்தச் சோடி உங்களைக் கவர்ந்தது?

Featured Replies

எதேச்சையா கிடைச்ச ஒரு சின்ன இன்ஸ்பிறேஷனை வைச்சு ஒரு குட்டிப்பதிவு. மூன்று ஜோடிகள் சந்திச்ச விதம் பற்றியது.

இந்த மூன்றில எந்தச் சோடி உங்களைக் கவர்ந்தது?

ோடி ஒன்று

'வணக்கம். நான் வள்ளுவன். சந்திக்கிறதில சந்தோஷம் எப்பிடி இருக்கிறியள்'.

'வணக்கம். நான் மாதுளா. சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்லாருக்கம். நீங்கள்?'

'ம்...வரேக்க இருந்தததை விட நல்லா இருக்கிறன்'.

நாகரிக முறுவல்....

'இந்தக் கோப்பிக்கடை எனக்கொரு இரண்டாம் வீடுபோல. நீங்கள் எங்க சந்திக்கலாம் என்றதும் எடுத்த எடுப்பில இது தான் வாயில் வந்தது. உங்களிற்கொன்றும் வருவதில் சிரமமிருக்கேல்லைத் தானே'

'இல்லை. அண்ணா றைட் தந்தவர்'

'நீங்கள் ட்றைவ் பண்றேல்லையோ'

'பண்ணுறனான். ஆனால் இப்பிடியான சந்திப்பிற்கு அண்ணா இறக்கிவிடுவது சரியா இருக்கும் என்று அம்மாக்கொரு மனநிலை'

'அண்ணா உங்களிற்கு கிட்டவான வயதோ'

'என்னை விட ரெண்டு வயசு கூட'

'இரண்டு பேரும் தானா நீங்கள் பிள்ளகைள்'

'ம்... நீங்கள்'

'மூன்று தங்கச்சி. நான் மட்டும் தான் பேச்சுக்கலியாண ட்ற்றாக்கில நிக்கிறன்'

'என்ன நடந்தது'

'நியதியாயிருக்குமோ?'

'நிறைய புத்தகம் படிப்பியளோ'

'மனிதரையும் படிக்கப் பிடிக்கும்'

'எப்பிடிப் போகுது கடந்த இருபது நிமிட வாசிப்பு'

'நிறுத்த முடியாமல் பக்கங்கள் புரண்டுகொண்டிருக்கு. எல்லாம் மகிழ்வாத்தான் இருக்கு..'

வெட்கம்....

'ஹோம்வேர்க் செய்தியளோ...வாறதுக்கு முன்னால'

'நாங்கெல்லாம் பரிட்சையில போய் இருந்து சோதினைப்பேப்பரைப் பாத்துத்தான் என்னசோதினை என்றே தெரிஞ்சுகொள்ளுற ஆக்கள்'

'அது சரி. அது தான் பேசிக்கட்டிறியளாக்கும்'

'இளகிய இடத்தில இடிக்கிறது இளம்பிள்ளைக்கு அழகாவா இருக்கு?'

'சும்மா பகிடிக்கு. கொஞ்சம் ஓவராப்போச்சோ பகிடி?'

'எங்கள வச்சு யாராச்சும் காமடி பண்ணனுங்கிதுக்காகவே எங்கம்மா பெத்துப்போட்ட பயலுவள் நாங்கள். இதுக்கெல்லாம் ஆடுவமா என்ன'

'சரி சரி வேற ஏதாவது கதைக்கலாமே. சுpன்னதா ஆரம்பிப்பம். தமிழ் படம் பாப்பியளோ?'

'நிறைய'

'நானுந்தான். உங்களிற்கு மிகப்பிடிச்ச டைறக்ரர்?'

'வெற்றிமாறன்'

'வெறுக்கிற டைறக்ரர்'

'ஏ.ஆர்.முரகதாஸ்'

'பிடிச்ச பாடகி'

'சின்மயி, லதா மங்கேஷ;க்கர்'

'பிடிச்ச பாடகர்'

'உதித் நாராயணன், வேல்முருகன், ஜீ.வி.பிறகாஷ;, தேவிசிறீபிரசாத்'

'ஏனுங்க நித்திரையால எழும்பும்போதே குத்துப்பாட்டோடயா எழும்புவீங்கள்'

'உங்களுக்கு காமடி நல்லா வருது. ப்ளீஸ் கன்டினியூ'

க்ளுக் சிரிப்பு...

'நடிகையில பிடிச்சது'

'கஜோல், றாணி முகர்ஜி தொட்டு எல்லாரையும் பிடிக்கும்'

'நடிகர்கள்'

'கமல், தனுஷ;, சூரியா தவிர வேற எனையும் பிடிக்காது'

'அதென்ன நடிகை எல்லாரும் பிடிக்கும் நடிகன் மூன்றைத் தவிர எவனையும் பிடிக்காது?'

'ஏனென்டா நடிகரிடம் நான் கொஞ்சம் நடிப்பை எதிர்பார்ப்பேன்'

வசீகர புன்னகை...

'நாங்க சண்டை போடாமல் படம் பாக்கலாம் என்றது மட:ஷ்டும் உறுதி. ரசனை ஒரே அலைவரிசைதான்'

'எந்த டேற்ல கலியாணத்தை வைப்பம்'

'என்ன படம்பாக்கவா கலியாணம் கட்டுறது'

'படம் கூடச் சேர்ந்து பாக்கமுடியாத எத்தினையோ பேர் கலியாணங்கட்டியிருக்கிறாங்கள். இது ரொம்ப அதிகம். உங்களிற்கு ஓகேன்டா எனக்கு ஓகே. அண்ணா வரணுமா நான் ட்றொப் பண்ணவா'

'வாங்க எங்க அம்மாவை அறிமுகப்படுத்தி வைக்கிறன்'

ஜோடி இரண்டு

'வணக்கம். நான் சேரன்'

'வணக்கம் நான் அவ்வை'

'பிளேனில வரவர கால்வைக்கிறதுக்கு இடமே இல்லாமல் போய்கொண்டிருக்கிறது'

'நாங்கள் பறக்காமலா இருக்கிறம்? உச்சலாபம் நோக்கியது தானே வாணிபம்'

'பொதுசனம் பொத்திக்கொண்டிருக்கவேண்டியது தான் என்டுறியள்'

'இல்லை பொதுசனம் முதல்வகுப்பில் பயணிக்கும் நிலைநோக்கி உழைக்கவேண்டும் என்கிறன். அனைத்துக் கட்டமைப்புக்களிற்குள்ளும் முதல்வகுப்பு அனைத்து வசதிகளும் பெற்று எப்போதும் இருக்கவே செய்யும்'

'எல்லாரும் முதல்வகுப்பானால் முதல்வகுப்பு என்னாகும்'

'முதல்வகுப்பு என்பது நிலையான ஒரு இடம் என்று யார் சொன்னது? அது உயர்ந்துகொண்டிருக்கும்'

'அப்ப அதைப்பிடிக்கிறதுக்கு ன்ன வேகத்தில நாங்கள் ஓடுறது?'

'ஒரே வேகத்தில ஓடவேண்டின் தான் வேக அளவு தேவைப்படும். ஆனால் நீங்கள் முதல் வகுப்பில் நிற்கணும் என்றால் வேகம் ஹொக்கித்தடி வடிவில கூடிக்கொண்டிருக்கணும்'

'கேக்கவே களைக்குதே'

'அப்ப கால்வைக்கிற இடம்பற்றிக்க கண்டுக்காமல் பயணிக்கப்பழகுவது தவிர்க்கமுடியாதது'

'நீங்கள் எப்பிடி இந்த வகுப்பில பயணிக்கிறியள்'

'ஓட முடியாமை தான்! விiளாட்டு அணியின் பயிற்றுனர்கள் எல்லாம் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்கமுடியுமா என்ன'

'உங்களை நான் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை ஆனால் நெடுங்காலம் தெரிந்தது போல ஒரு பரிட்சயம்'

'அப்பா என்ன எண்ணத்தில அவ்வை என்று பெயர் வைச்சாரோ தெரியாது. கதைக்கிறது எனக்கொரு போதை மாதிரி. றொம்பக் கதைச்சிற்றன் போல'

'உண்மையிலேயே நீங்கள் றொம்பக் கதைச்சிருந்தாலும், கால்வைக்க இடமற்ற வகுப்பில் வரைமுறைகளை ஏற்றுக்கொண்டு பொத்திக்கொண்டு பயணிக்கிறன நான், ச்சீச்சீ உங்கள் கதையினை நான் ரொம்ப சுவாரசியமானதாய்ப் பாக்கிறன். ப்ளீஸ் தொடருங்கோ என்று தான் செர்லவேண்டும். ஆனால் உண்மையில் நான் உங்கள் கதையினை சுவாரசியமானதாய் உணர்கிறேன்'

'நன்றி, இன்னும் பதினாறு மணிநேரம் இருக்கு என்பதை மறக்காதேங்கோ'

சிரிப்பு...

ஜோடி மூன்று

'மன்னிக்கோணும் தப்பா நினைக்கேல்லை என்றால் ஒரு கருத்தைச் சொல்லலாமா?'

'ம்...?'

'உங்கள் கையில் நீங்கள் வைத்திருக்கும் புத்தகம் ஏனோ எனக்கு வினோதமாக இருக்கு'

'மன்னிக்கணும். கொஞ்சம் அத்துமீறலாப் படுகுது பேச்சு'

'ஐயோ மன்னிக்கணும் மன்னிக்கணும். ரசனை சிரசிற்கடிச்சால் கதைக்கிறதில கவனம் தப்பிறது என்ர பிரச்சினை தான். நான் உண்மையில் சொன்னது ஒரு புகழ்ச்சி..சொன்ன விதம் தான்..'

'அப்ப இன்னொருக்கா முயலுறது'

'இல்லை, எனது அனுபவத்தில, அதிஅழகான இளம்பெண், நாகரிகத்தின் பிரதிநிதியாக உடையணிந்து, நீங்கள் படிக்கும் புத்தகத்தை ஸ்ரார்பக்சில் படிச்சு முன்னர் பார்த்ததில்லை'

'அப்ப நீங்கள் ஸ்ரார்பக்சில இருந்து உங்கட புத்தகத்தை ஒரு ஒற்றை கூடப் படிக்கிறதில்லைப் போல'

'புத்தகம் காட்டுற பாத்திரங்களைக் காட்டிலும் சுவாரசியம் கண்முன்னால விரியேக்க புத்தகத்தை அடம்பிடிச்சுப் பாக்கிறது அடிமுட்டாள்த்தனம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயயம்'

'இப்பிடி அடிக்கடி கதைச்சுப் பரிட்சயம் போல'

'சத்தியமாய் இல்லை. அவதானிப்போட சரி. இன்றைக்கு உங்களைப் பார்த்தபோது கதைப்பது தவிர்க்கமுடியாததாகிப்போனது. தவிர்க்கமுடியாததாக்கின அந்தக் கடைசிக்காரணி நீங்கள் படிக்கிற புத்தகம்'

'நீங்கள் இதைப் படிச்சிற்றியளோ'

'படிச்சன் என்றதை விட பாடமாக்கிற்றன் என்று சொல்லலாம். அத்தனை தூரம் பிடித்த பத்தகம். உங்களிற்கு இதன் அறிமுகம் எப்பிடிக்கிடைச்சது'

'எனது வேலையிடத்து சகபணியாளர் ஒருவர் மூலம். அது சரி என்னைப் போன்றவர்கள் இந்த புத்தகத்தைப் படிப்பது ஏன் உங்களிற்கு வினோதமாப்பட்டது. என்னைப் பற்றி உங்களிற்கு என்ன தெரிந்திருக்கமுடியும்'

'ஒத்துக்கொள்ளுறன் ஒத்துக்கொள்ளுறன். சுத்த அடாவடித்தனமான எண்ணம் தான் அது. ஆனால் குறைந்தபட்டசம் அப்பிடி ஒரு கருத்து வந்தது என்று உங்களிற்கு நேர்மையாச் சொல்லுறன் தானே. ஏன் என்று என்பக்க நியாயத்தைச் சொல்லுறன். அதுக்கு முன்னால, பிழையாத்தொடங்கின இந்தச் சந்திப்பச் சரியாக்குவம். வணக்கம். என்ர பேர் செழியன்'

'வணக்கம். நான் மாதங்கி'

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முதலில் பிடித்த ஜோடி மூன்று அப்புறம் முதலாவது ஜோடி :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூண்டும் பிடிச்சிருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் மனந்திறந்து அந்நியர்களுடன் உரையாட முடியுமா என்ன? சும்மா பார்த்துச் சிரித்தாலே வழியுது இல்லாட்டி லூஸு என்று நினைக்கின்றவர்கள் அதிகம் இருக்கும் இலண்டனில் இந்த ஜோடிகளைக் கற்பனையிலும் காணமுடியாது!

மூன்றாவது யதார்த்தமாக இருக்கின்றது (மற்றவரின் வெளியில் அதிகம் புகவில்லை என்பதால்).

முதலாவதற்கும் கண்டதும் காதல் வருவதற்கும் வித்தியாசம் பெரிதாக இல்லை. இப்படியான சில matching & dating தற்போது தமிழர்களிடையேயும் புழக்கத்தில் வந்திருக்கின்றது.

இரண்டாவது விமானப் பயணம் அல்லது நீண்டதூர coach பயணத்தில் சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால் பெயரையும் business card பரிமாற்றத்தையும் தாண்டிப் போக அதிக காலம் எடுக்கும்.

தினம் தினம் rush hour இல் பிதுங்கிக் கொண்டு வேலைக்குப் போய்வருபவர்களைப் பார்க்க நடைபிணம் (zombie) மாதிரி இருக்கின்றது என்று எனது நண்பன் ஒருவன் சேர்ந்த இரண்டு நாளிலேயே வேலையிலிருந்து நின்றுவிட்டான்! நானும் அடிக்கடி இப்பயணத்தை செய்வதால் நடைபிணமாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடும் என்பதால், இப்படியான zombie களாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எப்படியான உரையாடல்கள் நிகழக்கூடும் என்று ஒரு கற்பனைப் பதிவைத் தாருங்கள். உதவியாக இருக்கும்!

rush hour இல் பயணிகள் உரையாடுவதில்லை என்பதால் உரையாடல் telepathy இல் இருக்கவேண்டும்.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

நன்றி ரதி, சுண்டல், கிருபன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

ஏறத்தாள இந்த மூன்று ஜோடிகளையும் ஒத்தவர்களை நான் வாழ்வில் சந்தித்திருக்கிறேன்--தமிழர்களிற்குள்ளாகவே.

கிருபன்,

நீங்கள் த்தரூபமாக விபரிக்கும் வறட்சியினை வாசிக்கும்போது எமக்குத் தண்ணிவிடாய்க்கிறது :D

உங்கள் கருத்து புரிகிறது. இரண்டு சம்பவங்களை விபரித்து விட்டு உங்கள் கருத்துக்கு வருகிறேன்.

கனடா வந்த புதிதில், ஒரு வருடத்திற்குள்ளாக என நினைக்கிறேன், ஒரு பண்டிகைக்கால நடனத்திற்குச் சென்றிருந்தேன். பதின்ம வயது,ஊரில் இருந்து வந்த புதிதுவேறு. ஒரு குழுவாகத் தான் சென்றிருந்தோம். அதில் இருந்த ஒரு பெண் (தமிழல்ல) நடன மண்டபத்தில் தன்னை யோரோ ஒருவர் கூர்ந்து பார்ப்பதாகவும் (அவள் குறிப்பிட்ட அந்த நபர் ஒரு தமிழர்), என்னைத் தன்னுடனே நின்று நடனமாடும் படியும் சொன்னாள். நான் வேறு தமிழ்ப்படமாப் பாத்துக் குவித்திருந்தனா, கடமையே கண்ணாக அவள் சொன்னபடியே அவளுடன் ஆட முயன்றுகொண்டிருந்தேன். அவள் குறிப்பிட்ட நபர் அருகருகாக வந்துகொண்டிருந்தார். எனது மனதில் அவளிற்கு இன்னது தான் பிடிக்கும் என்று ஒரு விம்பம் இருந்து அதன் பிரகாரம் நான் நடந்து கொண்டிருந்தேன். ஒரு மணிநேரம் கூட ஆகவில்லை, அவளும் அவளைநோக்கி வந்து கொண்டிருந்த அந்த மற்றைய இளைஞரும் மிகநெருக்கமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய தமிழ்ப்பட மண்டைக்கு அப்போது தான் ஓடி வெளித்தது, குறிப்பிட்ட நபர் அவளை நோக்கி வருவதைத் துரிதமாக்குவதற்கான ஒரு prop தான் நான் என்பது. அதே நேரம் அந்த மற்ற இளைஞன், அவள் ஒருவனுடன் ஆடிக்கொண்டிருப்பது தெரிந்தும் கூலா வந்து வெற்றி பெற்றான்.

அடுத்த சம்பவம், ஏறத்தாள பத்து வருடங்களிற்கு முன்னர், வேலை இடத்தில் ஒரு இந்தியர்--சிந்தி இனத்தவர்--பேச்சுக் கலியாணத்திற்காக இந்தியா சென்று திரும்பியிருந்தார். அவர்களது கலாச்சாரத்தில் முதலிரவிற்குத் தம்பதியர் செல்லும் போது ஒரு தேங்காயினைக் கொடுப்பார்களாம். அவர்களிற்குள் எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால், காலையில் அறையின் வாசலில் அந்தத் தேங்காயினை மணமகன் உடைத்து வைக்கவேண்டுமாம். அதைக்கொண்டு எல்லாம் நல்லபடியாக நடந்ததாக மந்றையவர்கள் உறுதிப்படுத்திக்கொள்வார்களாம். ஆனால் பேச்சுத்திருமணத்தில் முதல்நாளே தான் ஏதாவது முயன்றால் அவள் தப்பாக நினைப்பாள் என நினைத்து தான் எதுவும் செய்யாது படுத்து உறங்கிவிட்டாராம். அதிகாலையில் பெற்றோர்கள் மனம் நோகக் கூடாது என்பதற்காகத் தேங்காயினை உடைத்து வாசலில் வைத்தாராம். அவரைப் பொறுத்தவரை அவளிற்கு இன்னது தான் பிடிக்கும் என்று ஒரு விம்பத்தை அவர் தானாகவே உருவாக்கினது மட்டுமன்றி அதைச் சரிபார்த்துக் கொள்ளக்கூட முயலவில்லை. காமம் என்பது ஆணிற்கான ஒரு வேட்கை மட்டுமே என்பது போன்றும் அவள் தனக்கு ஒரு உதவி செய்வது போன்றதுமே அவரது சிந்தனை. அந்தச் சிந்தனை அவரைப் பொறுத்தவரை முடிந்த முடிபான உண்மை.

லண்டனில் தமிழர்களிடையே வாழ்ந்த அனுபவம் எனக்கில்லை என்பதால் உங்கள் கருத்தை நேரடியாக மறுதலிக்க முடியாது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இடம் மொழி கலாச்சாரங்கள் எல்லாவற்றிற்கும் அப்பால் ஆண் பெண் அறிமுகத்திற்கும் உறவிற்கும் இடையூறாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை இவ்வாறு நடந்து கொண்டால்த்தான் மற்றையபாலாரிற்குப் பிடிக்கும் என்று தமக்குள்ளாக ஒவ்வொருவரும் ஏற்படுத்திவைத்திருக்கும் தவறான விம்பம்.

சந்திக்கும் எல்லோரையும் எவரும் காதல்பார்வையோ காமப்பார்வையோ பார்ப்பதில்லை. ஆனால், காதலிக்க விரும்பும் ஒருவராயின், என்னைப் பொறுத்தவரை முதற்சந்திப்பு மிக முக்கியமானது. அது ஒரு sales pitch போன்றது. காதலிக்க விரும்பும் ஒருவருடனான முதற்சந்திப்பை நாம் பிசினஸ்காட் பரிமாற்ற வழியில் செலுத்துவோமாயின், பின்னர் அந்த ட்றாக்கில இருந்து வெளிவாறது முதற்சந்திப்பளவிற்குக் கடினமானதாக இருக்கும். ஒருவருடைய பேர்சனல் ஸ்பேசை அத்துமீறீவிடக்கூடாது என்ற கவனம் கட்டாயம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால், அந்த ஸ்பேசுக்குள்ள அவர்கள் எம்மைக் comfortableஆ உணரும் வகை செய்வது முதல் சில நிமிடங்களிற்குள் நடந்தால் தான் உண்டு. எதேச்சையாச் சந்திக்கும் மனிதர்கள் தொடர்பில் நீண்டகாலத்திட்டம்போட்டு ஆமை வேகத்தில் நகர்வது வினைத்திறனானது அல்ல—அவர்களை அடுத்துச் சந்திப்பதாவது முதற்சந்திப்பில் உறுதிசெய்யப்பட்டால் தான் உண்டு. நகைச்சுவை மிகப்பெரிய ஆயுதம். அதேநேரம் அணுகுபவர் தன்னப்பிக்கைநிறைந்தவராகவும தன்னை எவ்வாறு project பண்ணுகிறார் என்பதும் மிகமுக்கியம். மிகப்பெரும்பான்மையானவர்கள் rejectionகுப் பயந்து தான் ஏதும் முயல்வதில்ல. இரண்டு விடயம் முக்கியம். ஒன்று றியெக்சனைத் தாங்கும் மனநிலை அவசியம். மற்றது, rejectionற்குப் பயந்து இன்றைக்கு வேணாம் வேறொரு சமயம் பாப்பம் என்று இருந்தால் அந்த வேறொரு சமயம் வருமா என்பது முதற்கேள்வி, வந்தாலும் இன்றைக்கு இல்லாத அந்த சிறப்பான அணுகுமுறை அன்றைக்கு வந்துவிடும் என்பதும் இல்லை.

எமக்கு ஒருவர் மேல் ஈர்ப்பு வருகையில் பொதுவாக அந்த ஈர்பு எமக்கு மட்டும் தான் இருக்கிறது, மற்றையவரிற்கு எம்மில் எந்த ஈர்ப்பும் இருக்காது என்று ஒரு வினோத உணர்வு வந்துவிடுவது பல சந்தர்ப்பங்களில் நடப்பது. இது கூட rejection சார்ந்தது தான் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், மற்றைவரிற்கும் எம்மில் ஒரு ஆர்வம் இருக்கும் என்று யோசிப்பின் எமது நடவடிக்கையில் தன்னம்பிக்கையியும் comfortம் வெளிப்படும்.

மற்றைய கனேடிய உறவுகள் சரிபிழை சொல்லட்டும், என்னைப் பொறுத்தவரை கனடாவில் எம்மவர்கள் மத்தியில் 'பாத்தாலே வழியுது' என்று நினைக்கிற கட்டம் தர்ணடிக் கனகாலம் ஆச்சு என்று தான் நினைக்கிறன். அதுக்காக எல்லோரும் எல்லோருகும் workout ஆகும் என்பதல்ல. ஆனால் முயற்சிக்குரிய களம் தாரளமாக இருப்பதாகவே நானுணருகிறேன்.

Rushourல் சாவிகொடுக்கப்பட்ட பொம்மைகளாக நடப்பவர்களை Black&White சீனில் இருந்து colour சீனிற்கு மாத்துவது அநத நடை பயணத்திற்குள் சாத்தியம் என்பதே எனது அபிப்பிராயம்.

Edited by Innumoruvan

மூன்றாவது பிடித்திருக்கின்றது. ஒருவரை நெருங்குவதில் இயல்பான ஒரு துணிச்சல் இருப்பது சுவார்சியம். தம்மை எதுவும் பாதிக்காத வகையில் பாதுகாப்பு உணர்வுடன் அறிமுகமாவது ஜோடிகள் விடயத்தில் வயதைப் பொறுத்து அமையலாம்.

  • தொடங்கியவர்

நன்றி சுகன் கருத்திற்கு.

இது சும்மா ஒரு குட்டிப்பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மூன்டும் பிடிச்சிருந்தாலும் முதலாவது ஏனோ கூட பிடிச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

என் இயல்பு போல் இருப்பதால் எனக்கு மூன்றாவது முதலிலும் ,இரண்டாவது இரண்டாவதாகவும் மூன்றாவது பிடிக்கவும் இல்லை

  • தொடங்கியவர்

நன்றி சஜுவன் ஜீவா மற்றும் மெசப்பொத்தேமியாசுமேரியர். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

எனக்கு ஏனோ தெரியவில்லை, மூன்று ஜோடிகளையுமே பிடிக்கவில்லை. பொதுவாக சந்தித்தவுடனே கதைக்கக் கூடிய இயல்பு எனக்கு இல்லாமையால் பிடிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

பெயர்களுக்கும் ஒருவருடைய இயல்புகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கும் என நம்புகின்றேன். ஒருவரது பெயர் கூட அவரை இன்ன இயல்பு கொண்டதாக ஆக்குவதற்குரிய அளவுக்கு செல்வாக்கும் செலுத்தும் என நினைக்கின்றேன். அப்படி பார்க்கும் போது கதாப்பாத்திரங்களின் பெயர்கள் எவருக்கும் பொருந்துவதாக உணர முடியவில்லை.

  • தொடங்கியவர்

எனக்கு ஏனோ தெரியவில்லை, மூன்று ஜோடிகளையுமே பிடிக்கவில்லை. பொதுவாக சந்தித்தவுடனே கதைக்கக் கூடிய இயல்பு எனக்கு இல்லாமையால் பிடிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

பெயர்களுக்கும் ஒருவருடைய இயல்புகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கும் என நம்புகின்றேன். ஒருவரது பெயர் கூட அவரை இன்ன இயல்பு கொண்டதாக ஆக்குவதற்குரிய அளவுக்கு செல்வாக்கும் செலுத்தும் என நினைக்கின்றேன். அப்படி பார்க்கும் போது கதாப்பாத்திரங்களின் பெயர்கள் எவருக்கும் பொருந்துவதாக உணர முடியவில்லை.

கருத்துக்கு நன்றி நிழலி.

பெயரிற்கும் இயல்புகளிற்கும் இடையில் தொடர்பிருக்கும் என்ற எண்ணம் எனக்கும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் பரீட்சித்துப் பார்த்தால் சரியாக வருவது போன்றும் தோன்றுவதுண்டு. ஆனால் அதை ஏற்றுக்கொள்வது ஒரு metaphysical தளத்தில் தான் சாத்தியப்படமுடியும். ஏனெனில் குழந்தை பிறக்கு முன்னரே மிகப்பெரும்பான்மையான நேரங்களில் பெற்றோர் பெயரைத் தீர்மானித்துவிடுகிறார்கள். ஒரு மனிதனின் இயல்புகள் என்னவென்று கிஞ்சித்தும் தெரியாத நிலையில் இடப்படுகின்ற பெயர் அந்த மனிதனின் இயல்பைத் தீர்மானிக்கும் என்று எண்ண விளைகையில் எழும் ஏகப்பட்ட கேள்விகளில் குறைந்தது இரண்டாவது அணுகப்பட்டே தீரணும். ஒன்று, இந்தப் பெயர் இந்தக் குழந்தையின் இயல்பை வரைவிலக்கணப்படுத்தும் எனவே வையுங்கள் என்ற ரீதியில ஒரு அரூப சக்தி பெற்றோரின் மனவெளியில் செயற்படவேண்டும். மற்றையது இன்ன பெயர்களிற்கு இன்ன தன்மை என்று ஒரு மாறாத அட்டவணை இருககவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளுவது, metaphysical தளத்தில் தான் சாத்தியப்படும் என்று தோன்றுகின்றது.

ஆனால் புனைபெயர்கள், மற்றும் தானாக ஒரு மனிதர் தனக்குச் சூட்டிக்கொள்ளும் பெயர்கள் என்று வருகையில் மேற்படி குணத்திற்கும் பெயரிற்குமான தொடர்பை காரணகாரியங்களின் ரீதியில் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு சுவாரசியமான முனையினைத் தொட்டதால்,இந்தச் சுவாரசியத்தைத் தொடர்வதற்காக ஒரு கேள்வி:

உங்கள் பார்வையில் இந்த மூன்று ஜோடிகளிற்கும் பொருத்தமான பெயர்களாக எவை இருக்கும்? (பிடிக்காத மனிதர்களிற்குப் பெயர்வைப்பது சித்திரவதையான முயற்சிதான் என்றாலும், முயன்றீர்களாயின் வேறு ஒரு விவாத முனை சில சயமம் பிறக்கலாம். நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்).

பெயர் இயல்பு தொடர்பில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. சமாதான காலத்தில் பல இணையங்கள் தொடங்கப்பட்டுக்கொண்டிருந்தவேளையில் ஒரு செயற்பாட்டாளர் தலைவரிடம், புதிதாகத் தொடங்கப்படஇருக்கும் இணையத்திற்கு என்ன பெயர்வைப்பது என்பதில் குளப்பமாக இருக்கிறது என்றபோது, தலைவர் :

"நான் புலிப்படை என்பதற்குப் பதில் கரடிப்படை என்று பெயர் வைத்திருந்தால் கரடி இன்று ஒருவேளை உங்களைப் புல்லரிக்கச் செய்யும் விலங்காக இருந்திருக்கும். பெயர் செயற்பாட்டை நிர்ணயிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. செயற்பாடு பெயரை உச்சப்படுத்தவேண்டும்" என்றாராம்

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

ஜோடி #3 பிடித்திருக்கிறது. உரையாடலை ஆரம்பிக்கும் போதே முதலாமவர் தமக்குள் இருக்கும் பொதுமையை (ஒரே புத்தகம்)யினூடு பேச ஆரம்பிக்கும் போது உரையாடல் சுவாரசியமாக தொடங்கும். பின்னர் மேலும் என்னென்ன பொதுமைகள் இருவருக்கும் இடையில் உள்ளது என தேடிக்கொள்ளலாம். அத்தோடு அவர்களின் உரையாடல் நகைச்சுவையோடு இருவரின் மனதையும் பாதிக்காத வகையில் செல்கிறது.ஜோடி #1 இன் உரையாடல் நகைச்சுவையாக சென்றாலும் ஒப்பீட்டளவில் ஜோடி #3 ஐ விட குறைவான நட்பு தன்மையை(friendly) கொண்டுள்ளதாக உணர்கிறேன். ஜோடி #2 சுயதம்பட்டம் ஆகி விட்டது.

இன்னுமொருவனின் குட்டிப்பதிவை முழுமையாக ஓர்தரமும், மேலோட்டமாக ஓர் தரமும் வாசித்தேன். "மூன்று சோடிகளில் உங்களைக் கவர்ந்தது எது?" என்று கேட்காமல் வேறு ஏதாவது கேள்வி கேட்டிருந்தால் இலகுவாகப்பதில் சொல்லியிருக்கலாமோ தெரியாது.

  • தொடங்கியவர்

நன்றி நுணாவிலான், கலைஞன், சுபேஸ்.

கருத்துப் பதிந்தவர்ளில் கணிசமானவர்களை இந்த மூன்று சோடிகளும் கடுப்பேற்றியிருக்கிறார்கள்/அல்லது இந்தப் பதிவு கடுப்பேற்றியிருக்கிறது என்பதை உணரமுடிகிறது. அனைவரது கருத்துக்களிற்கும் நன்றி.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.