Jump to content

கையிலாயம் போறன்


Recommended Posts

கையிலாயம் போறன்

 

310192-7322-3.jpg

 

 

வணக்கம் பிள்ளையள் ,

நான்தான் சுறுக்கர் வந்திருக்கிறன் . நான் விசையம் இல்லாமல் இங்காலிப் பக்கம் தலை வைச்சு
படுக்றேலை தான் . ஆனால் இந்த விசையம் என்னை செரியா பயப்பிடுத்தி போட்டுது .  போன
வியாழகிழமை இரவு நான் ஒரு கனாக் கண்டன் . அதலை என்னை ஒராள் ஒரு புல்லு
வெளியுக்காலை கூட்டியந்து ஒரு கதவை திறந்து விட்டார் . எனக்கு ஆள் கலங்கலாய்தான்
தெரிஞ்சுது . நானும் உவர் என்ன படம் காட்டிறார் எண்டு அந்தக் கதவுக்காலை எட்டிப்
பாத்தன் . என்ரை கடவுளே அங்கை கைலாய மலை , சுத்திவர ஒரே பச்சையா மேல்முகட்டில பனி
உருகாமல் சும்மா தகதக எண்டு மினுங்கீச்சுது . எனக்கு கையும் ஓடேலை காலும் ஓடேலை .


பேந்தும் ஒருக்கால் எட்டி பாத்தான் . இப்ப சிவபெருமானும் தெரிஞ்சார் . எனக்கு என்ன
செய்யிறதெண்டு தெரியேலை . என்ரை கை ரெண்டும் தன்ரை பாட்டிலை தலைக்கு மேலை போட்டிது
. இதை நான் பாத்தது விடியக்காத்தாலை மூண்டு மணிக்கு . நான் உயிரோடதான் இருக்கிறனோ
எண்டு எனக்கு ஒரு சமசியம் . நான் பாருங்கோ கையை நுள்ளி பாத்தன் . ஆனா நுள்ளின கை
மனுசிக்காறியின்ரை .

"என்னப்பா காலங்காத்தாலை கையை காலை நுள்ளுறியள் "

எண்டு மனுசி சன்னதம் ஆட எனக்கு வந்த கனவு கலைஞ்சாலும் , உள்ளுக்கை விறாண்டி கொண்டு
கிடந்திது . இந்த விசையத்தை மனிசிகாறிக்கு சொன்னன் .

"என்ன சிவபெருமானும் உங்கடை கனவிலை வந்தவரோ ??உங்களுக்கு நோர்மலாயே மண்டையுக்கை
ஒண்டும் கிடவாது . இப்ப துண்டாய் கழண்டு போச்சிது "

 

எண்டு எனக்கு கீல் ஏத்தினாள் . எனக்கு என்ரை விறாண்டல் மட்டும் நிக்கேலை . பேந்து போன
சனிக்கிழமை என்ரை சோதரம் ஒண்டு கனடாவிலை இருந்து ஸ்கைப்பிலை வந்தான் . வழக்கமாய்
என்னோடை கதைக்கிறதை ஒரு அவமானமாய் நினைக்கிறவன் ஏன் வாறான் எண்டு குழம்பிக்கொண்டு
எடுத்தன் . அப்ப அவன் ஒரு விசையத்தை சொன்னான் . தன்ரை மனிசியின்ரை தாய்காறி ஒரு
பத்துநூசத்திக்கு முதல் செத்து போனாவாம் . நான் ஏங்கி இடிவிழுந்து போனன் . எனக்கு
அந்த மனிசியை என்ன நிறம் எண்டும் தெரியாது . நான் ஏன் போன வியாழன் கையிலாயத்தை
கனவிலை கண்டன் ?? அப்ப மனுசி சாகப்போறது ஏதோமாதிரி எனக்கு தெரிஞ்சிருக்கு எண்டுதானே
பிள்ளையள் அர்த்தம் .

 

செத்தால் பிறகு என்ன நடக்கும் ?? இதை ஆருக்கும் முதல் தெரிய வருமோ ??? எண்டெல்லாம் எனக்கு கனக்க யோசினையள் . உங்களுக்கும் இப்பிடி ஏதாவது அசுமாத்தங்கள் உங்கடை வாழ்க்கையிலை
தெரிஞ்சதோ எண்டு சொல்லுங்கோவன் . சுறுக்கரும் ஒரு தெளிவுக்கு வரவேணுமெல்லோ ??? அப்ப
நான் போட்டு வாறன் பிள்ளையள் .......

 

Link to comment
Share on other sites

மனுசி வருததில செத்திருக்கும்.அதுக்கு சிவபெருமன் தன்ர கனவில வந்தாராம் எண்டு கோமகன் முடிச்சுபோட்டு எழுதுவதை நினைக்க சிரிப்பாய் இருக்கிறது. :lol: சிலவேளை நீங்கள் தீர்க்க தரிசி ஆகீட்டியளோ தெரியேல்ல கோமகன்.எதற்கும் உங்கள் பொன்மொழிகளை எழுதிவையுங்கள்.பின்னர் பைபிளின் வரப்போகும் புதியபதிப்பில் யாராவ்து சேர்ப்பார்கள். :D

Link to comment
Share on other sites

மனுசி வருததில செத்திருக்கும்.அதுக்கு சிவபெருமன் தன்ர கனவில வந்தாராம் எண்டு கோமகன் முடிச்சுபோட்டு எழுதுவதை நினைக்க சிரிப்பாய் இருக்கிறது. :lol: சிலவேளை நீங்கள் தீர்க்க தரிசி ஆகீட்டியளோ தெரியேல்ல கோமகன்.எதற்கும் உங்கள் பொன்மொழிகளை எழுதிவையுங்கள்.பின்னர் பைபிளின் வரப்போகும் புதியபதிப்பில் யாராவ்து சேர்ப்பார்கள். :D

 

வரவுக்கும் கருத்திற்கும் நன்றி .

 

Link to comment
Share on other sites

வரவுக்கும் கருத்திற்கும் நன்றி .

 

என்ன கோமகன் நன்றி சொல்வதுதான் உங்கள் அகராதியில் இல்லையே ^_^ . இதென்ன புதிதாக? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமதர்மன் எருமைக் கடா வாகனத்தில்தானே உயிரை எடுக்க வருகின்றவர். அவரல்லவா கனவில் வந்திருக்கவேண்டும்!

 

சிவபெருமான் கனவில வந்தார் என்றால் கோமகன் நாயன்மாரில் ஒருவராகப் போகின்றார் அல்லது கோயில் ஒன்று கட்டப் போகின்றார்! :blink:  இல்லாவிட்டால் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சந்து ஒன்றில் வாங்கிய சுருட்டிய இலையைக் கொளுத்தி உள்ளே இழுத்த புகையின் தாக்கமாகவும் இருக்கலாம் :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்குக் குளிர் பழக்கமில்லாவிட்டால், அவவுக்கு ஒரு நல்ல 'சுவேட்டரா'ப் போட்டு அனுப்பச் சொல்லுங்கோ, கோமகன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல்வெளி, மலை, பனி இவைகளுக்கூடாக நானும் கைலாயம் போ****** :D

Link to comment
Share on other sites

இழுவை அறுவையாக இருக்கு

 

சமீபத்தில் மயூரனுக்கு ஏதோ அறிவரை சொன்னமாதிரியிருக்கு

 

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=113383

 

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி

Link to comment
Share on other sites

கோமகனின், சுறுக்கர் கையிலாயம் போனாரோ இல்லையோ ஆனால் அதற்காக அவர் வழங்கிய படம் என்னையும் கையிலாயம்நோக்கிப் பறக்கவைக்கிறது.

Link to comment
Share on other sites

யமதர்மன் எருமைக் கடா வாகனத்தில்தானே உயிரை எடுக்க வருகின்றவர். அவரல்லவா கனவில் வந்திருக்கவேண்டும்!

 

சிவபெருமான் கனவில வந்தார் என்றால் கோமகன் நாயன்மாரில் ஒருவராகப் போகின்றார் அல்லது கோயில் ஒன்று கட்டப் போகின்றார்! :blink:  இல்லாவிட்டால் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள சந்து ஒன்றில் வாங்கிய சுருட்டிய இலையைக் கொளுத்தி உள்ளே இழுத்த புகையின் தாக்கமாகவும் இருக்கலாம் :lol: 

 

 

இதிலை ஒண்டுமே நான்செய்யப் போறதில்லை கிருபன் .  கொஞ்சம் சீரியசாய் கதைப்பமோ ??  நான் கனவு கண்டது உண்மை .  இப்பிடி நடந்ததும் உண்மை . ரெண்டு நாளைக்கு முதல் டொக்ரர் முருகானந்தனின்ரை கட்டுரை படிச்சன் . அதிலை மரணப்படுக்கையும் ,மரணத்தின்பின் வாழ்வு உண்டா ?? என்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தார் . ஆனால் அதை நேரடியாக இணைத்தால் பத்துடன் பதினொன்றாக போகும் .  வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று இப்படி எழுதினேன் . ஆனால் இங்கு ஒரே நக்ஸ் ஆக இருக்கின்றது . ஒருவேளை இந்தப் பதிவை நேரம் செலவளித்து தொடங்கியவர் பிழையோ ?????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமி கனவில் வாறது எனக்கும் சின்னனிலை நடந்திருக்கு ஆனால் புலம்பெயந்து வந்ததோடை அவையும் தங்கட விசிட்டை நிப்பாட்டிப் போட்டினம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் அம்மா சொல்லி இருக்கிறா.

 

2007ம் ஆண்டு என்னுடைய ஒன்று விட்ட அண்ணா ஒருத்தன் வேலைக்குப் போகும் போது நெல்லியடிக்குப் போற வழியிலை வச்சு இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன்ரை தங்கச்சி சோதியா படையணியிலை இருந்தவள்.

அண்டைக்கு எல்லாம் முடிச்சு வர அம்மா சொன்னா இரவு தான் ஒரு கனவு கண்டவாவாம்.

"கட்டையிலை கட்டியிருந்த மாடு அறுத்துக்கொண்டு ஓடுதாம் (வீட்டை மாடே இல்லை) கொஞ்ச நேரத்திலை எங்கண்டை சொந்தக்காரர் (அம்மா பெயர் சொன்னா, நான் அவர்களின் பெயர்களைத் தவிர்க்கிறேன்)  எல்லாரும் கூடி நின்று ஒப்பாரி வச்சு அழுகிற மாதிரி கனவு கண்டாவாம்"

 

காலமை 8.30 - 9 மணிக்கெல்லாம் அண்ணாவை ரோட்டிலை சுட்டுப்போட்டிருக்காம் என்று பார்க்க ஓடுறம்.

விஞ்ஞானரீதியாக விளக்கம் கொடுக்க முடியாவிட்டாலும், ஏதும் அசரீரி என்ற வகையிலாவது சிலதை எடுக்க வேண்டும் போல.

 

பழைய நினைவுகளைக் கிளறி விட்டிருக்கிறிங்கள். :(

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை ஒண்டுமே நான்செய்யப் போறதில்லை கிருபன் .  கொஞ்சம் சீரியசாய் கதைப்பமோ ??  நான் கனவு கண்டது உண்மை .  இப்பிடி நடந்ததும் உண்மை . ரெண்டு நாளைக்கு முதல் டொக்ரர் முருகானந்தனின்ரை கட்டுரை படிச்சன் . அதிலை மரணப்படுக்கையும் ,மரணத்தின்பின் வாழ்வு உண்டா ?? என்று ஆதாரங்களுடன் எழுதியிருந்தார் . ஆனால் அதை நேரடியாக இணைத்தால் பத்துடன் பதினொன்றாக போகும் .  வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று இப்படி எழுதினேன் . ஆனால் இங்கு ஒரே நக்ஸ் ஆக இருக்கின்றது . ஒருவேளை இந்தப் பதிவை நேரம் செலவளித்து தொடங்கியவர் பிழையோ ?????

மரணத்தின் பின்பு வாழ்வு உண்டா என்பதை மரித்து உயிர்த்து எழுந்து வந்தவர்தான் சொல்லவேண்டும்!

விஞ்ஞான ரீதியில் அல்லது தத்துவ ரீதியில் விளக்கம் கொடுத்தால் சிலவேளை ஆர்வம் வரலாம். தற்போது என்னைக் கவர்ந்தது இரு விடயங்கள்:

1. மனிதனின் மூளை எவ்வாறு இயங்குகின்றது என்பதை இலட்சகோடி உடுத்தொகுதிகளைப் பற்றியெல்லாம் அறிந்த விஞ்ஞானத்தால் துல்லியமாகச் சொல்லமுடியவில்லை.

2. பிரபஞ்ச தத்துவங்களை விளக்கக்கூடிய dark matter, dark energy, anti matter போன்றன.

இவை பற்றிய தெளிவு இருந்தால் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தைகளையும், மரணத்தின் பின்னரான வாழ்வைப் பற்றியும் இலகுவாகப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் மேல்  அதிகம் அன்பும் பாசமும் வைத்திருக்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம்


 

இப்படியான சம்பவங்கள் நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.


 

 இது கனவில் அல்ல நிஜத்தில்  


 

ஒரு  நாள் எனது அப்பாவின் உருவம் என் வீட்டு வாசலில்

என் கண்களுக்குத் தோன்றியது.  கணப் பொழுது  அவர்

என் பெயர் சொல்லி அழைப்பதைப் போன்று  உணர்ந்தேன் .

 

அடுத்த நாள் தொலைபேசியில் அக்கா அழைத்து 

என் அப்பாவின் இழப்புச் செய்தியைத் தெரிவித்தார்.


எனது நினைவுகளா அப்படியான நிகழ்விற்குக் காரணம்

அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம் 

Link to comment
Share on other sites

மரணப் படுக்கைத் தரிசனங்கள் Deathbed visions

 

"ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்." என்றார் தீனக் குரலில்.

 

காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின.

 

உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது.

'ஐயா' என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது.

 

இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions).

காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார்.

 

பிறப்பு எவ்வாறு எமது கைகளில் இல்லையோ அதேபோல இறப்பும் நிச்சமானதே. அதுவும் எமது வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமேயாகும். இருந்தபோதும் மரண பீதியானது காரிருளில் கன்னமிடும் கள்வன் போல பெரும்பாலானவர்களிடம் மறைந்திருக்கிறது.

ஆனால் மற்றொருவரின் இறப்புக் கணத்தில் சாட்சிபோல அருகில் நிற்பதுதானது மற்றெதையும் விட உள்ளத்தை உலுப்பிப் போடுவதாக இருக்கும். மனதிற்கு நெருக்கமான ஒருவர் நினைவிழந்து, மூச்சுத் திணறி, படிப்படியாக சுவாசம் அடங்கி பிணமாக அடங்கிப் போவதைப் பார்த்திருக்க நேர்வது பெரும் துன்பம். அதைப் போல உணர்வுகளைக் கிளறும் சம்பவம் வேறு எதுவும் ஒருவரின் வாழ்வில் இருக்க முடியாது.

 

ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் ஒருவருக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்று Palliative-care physician Ira Byock சொல்கிறார்.

மேலை நாடுகளிலும் பெரு நகர்களிலும் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றன. இதனால் இறுதி நேரத்தில் அருகில் நிற்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் மூன்று தசாப்தங்களான போரில் மரணத்துள் வாழ்ந்த எம்மவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் அளவிற்கு அதிகமாகவே கிட்டியிருக்கும்.

மரணம் என்பது எப்பொழுதும் ஒரே விதமாக நிகழ்வதில்லை. ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவற்றில் தனித்துவங்கள் இருக்கவே செய்யும். மரணங்கள் நிகழும்போது அருகே நின்றவர்களின் அனுபவங்களை Dying Well என்ற தனது நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் மேற் கூறிய மருத்துவரான Ira Byock.

 

இரு வேறு உலகங்கள்

மேற் கூறிய நபர் ஒரே நேரத்தில் இரண்டு உலகங்களில் சஞ்சரித்திருக்கிறார். மறைந்து போன தனது தந்தையுடன் பேசிய அவர், பிறகு நிஜ உலகில் தன்னருகில் நிற்பவர்களுடன் அந்தச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். இது அண்மையில் இங்கு நடந்த சம்பவம்.

 

இது போன்ற பல சம்பவங்களை Ira Byock தனது நூலில் பகிர்ந்திருக்கிறார்.

மிஷேல் என்ற பெண் தான் மரணத்தைத் தழுவுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் 'நான் சாரா அல்ல' என்று சொன்னாள். சாரா என்பது அவளது தாயின் பெயர். அங்கிருந்த எவரது கேள்விக்கான மறுமொழியாக அது இருக்கவில்லை. கண்ணுக்குப் புலப்படாத யாருடனோ பேசியிருக்கிறாள். பிறகு அருகில் நின்ற கணவனைப் பார்த்து 'நான் உங்களை விரும்புகிறேன்.' எனத் தனது அன்பை வெளிப்படுத்தினாள்.

இவ்வாறாக இரண்டு வெவ்வேறு உலகங்களில் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதானது மரணப்படுக்கையில் கிடக்கும் பலருக்கு சிரமமாக இருப்பதில்லை.

  • அருகில் இருப்பவர்களது கண்களுக்குப் புலப்படாத யாருடனனோ பேசலாம்
  • அல்லது சைகை காட்டலாம்.
  • அல்லது அவர்களுக்கு மட்டுமே அவ்வேளையில் புலப்படும் ஒரு இடம் பற்றியோ பொருள் பற்றியோ கதைக்கலாம்.

உதாரணமாக ரம்யமான தோட்டத்தில் நிற்பது பற்றியும் அழகான ஒளி விளக்குகள் பற்றியும் பலர் பேசியதான குறிப்புகள் பல உள்ளன.

 


சுற்றி நிற்பவர்களுக்கு அது சன்னியில் பிதற்றுவதாகத் தோன்றக் கூடும். ஆனால் அவர்கள் தெளிவாகப் பேசியதாகவே அறிக்கைகள் சொல்லுகின்றன. இவற்றில் பல மருந்துவர்களாலும் மருத்துவ உதவியாளர்களாலும் பெறப்பட்ட தகவல்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

75 சதவிகிதமானவர்கள் இறந்து போன தமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பற்றிப் பேசியதாக The Art of Dying என்ற தனது நூலில்
Fenwick கூறுகிறார். இது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கிடைத்த தகவல்களாகும்.

ஆனால் 50 சதவிகிதமான இந்தியர்கள் மதத் தலைவர்கள் பற்றியே பேசினார்களாம். முன்னொருபோதும் அறியாத அந்நியர்கள் பற்றிப் பேசியது ஒப்பீட்டளவில் மிகக் குறைவே.

பொதுவாகப் பார்க்கும்போது அமைதி சாந்தம் மற்றும் பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும் இடங்கள் அல்லது நபர்கள் பற்றியே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

குறியீட்டால் உணர்த்தல்

விட்டு விலக வேண்டிய அவசியம், தவிர்க்க முடியாத மாற்றம், அல்லது மரணம் பற்றிய வேறு குறியீடுகளால் தனது மரணத்தை உணர்த்துவதுண்டு. எங்காவது பயணப்படுவதாகக் கூறிய பதிவுகள் அதிகம். ஆரம்பத்தில் பேசப்பட்டவர் ஆலயத்திற்கு போவது (சந்நிதி) பற்றிக் குறிப்பிட்டார் அல்லவா.

"ஏன் இன்னமும் தாமதிக்கிறோம். அதோ பிளேன் ஆயத்தமாக காத்திருக்கிறது" என Patricia Anderson, தான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் குறிப்பிட்டதாக Ira Byock தனது நூலில் உதாரணம் கூறுகிறார்.

வேறு சிலர் பயணத்திற்கான பொருட்களைப் பொதி செய்வது பற்றியும், அவற்றைச் சரி பார்ப்பது பற்றியும் குறிப்பிடுவதுண்டு.

பயணப்படுதல் பற்றிய அத்தகைய குறிப்புகள், தான் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக அடி மன உந்துதலால் எழுந்த சமிக்கையாகக் கொள்ளலாம் என பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இத்தகைய நேரத்தில் சுற்றி நிற்பவர்கள் செய்யக் கூடியது என்ன? கண்ணீர் விட்டுக் கதறி அழுது தமது மனத் துயரை வெளிப்படுத்துவதா? நிச்சமாக இல்லை. தாங்கள் படுக்கையில் கிடக்கும் அவரது நிலமையைப் புரிந்து கொள்வதாகவும், பிரிய வேண்டும் என அவர் நினைத்தால் தாம் அதற்குத் தடையாக இல்லை என்பதையும் உணர்த்த வேண்டும். துயருற்றாலும் தாங்கள் துணிவுடன் இருந்து அவர் விட்டுச் செல்லும் பணிகளைத் தவாறாது செய்வோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இறுதிக் கணத்தைத் தானே தேர்ந்தெடுத்தல்.

பொதுவாக மரணப்படுக்கையில் இருப்பவரைச் சுற்றி நெருங்கிய உறவினர்கள் இருப்பார்கள். வேண்டிய பாராமரிப்புகளைச் செய்வார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக இவர்கள் ஒரு சில நிமிடங்கள் வெளியே செல்ல நேரும். திரும்பி வரும்போது அவரது ஆவி பிரிந்திருக்கும்.

"கட்டிக் காத்து நின்றும் கடைசி நேரத்தில் உயிர் பிரியும்போது நாம் அருகில் நிற்கவில்லையே" என இவர்கள் கலங்குவர்.

ஆனால் தனது மரணத்திற்கான கணத்தை தானே தேர்ந்து எடுத்திருக்கக் கூடும் என்பதாக நாம் என்றுமே நினைப்பதில்லை. ஆனால் அதுதான் உண்மை என்கிறார்கள்; இத்துறையில் அனுபவம் உள்ளவர்கள்.

'தமக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருக்கும்போது பெரும்பாலானவர்கள் உயிர் துறப்பதில்லை. அதிலும் முக்கியமாக குடும்பத்திற்கு தலைமை தாங்கி அவர்களை அணைத்துச் சென்றவர்கள் தமது இறுதிக் கணத்தில் தனக்கு நெருங்கியவர்கள் இருப்பதை விரும்புவதில்லை' என எழுத்தாளரான
Lise Funderberg தனது அனுபவங்களை வைத்துக் கூறுகிறார்.

திடீரென நினைவிழந்த தனது தாயை மருத்துவமனையில் அனுமதித்தார் ஒரு மருத்துவர். மூளைக்குள் இரத்தம் உறைந்திருந்தது. கண் திறக்கவில்லை. கட்டைபோலக் கிடந்தார். நினைவு திரும்பாது மரணம் நிச்சயம் என்பது உறுதியாயிற்று. வெளியூர்களிலிருந்து பிள்ளைகள் வந்தனர். மிகுந்த பாசத்தோடு வளர்த்த தாயோடு ஒரு வார்த்iதானும் பேசமுடியாது கவலையோடு நின்றனர்.

மருத்துவர்களின் முடிவுகளைத் தகர்த்துக் கொண்டு திடீரென அந்த அம்மையார் கண் விழித்தார். தனது பிள்ளைகளோடு சில வார்த்தைகள் பேசினார்.


ICU அறையை விட்டு வெளியே வந்த பிள்ளைகள் தமது தாயார் இனித் தப்பிவிடுவார் எனப் பேசி மகிழ்ந்தனர்.

ஒரு சில நிமிடங்கள்தான கடந்திருக்கும். அவள் இறந்துவிட்டதாக பொறுப்பு மருத்துவர் தகவல் சொன்னார். ஆம்! அந்தத் தாய் தனது பிள்ளைகளின் உள்ளங்களைத் திருப்திப்படுத்திவிட்டு மரணத்தை அரவணைத்தார்.

மரணம் வரை தொடரும் அவரவர் தனித்துவங்கள்

தனது தாயாரிடம் 'எனது மகனின் திருமணத்திற்கு தம்பி வரவில்லை' என குற்றம் சாட்டினார் 40 வயதான திருமதி Dawn Barclay. "So shoot him!" என மரணப் படுக்கையில் இருந்த தாயார் சொன்னார். வழமையாகவே பகிடிகளை விடும் அவர், மரணப்படு;க்கையிலும் தனது நகைச்சுவை உணர்வைக் கைவிடவில்லை.

"என்னைத் தெரிகிறதா" என மற்றொருவரது உயிர் நண்பர் கேட்டார். மிகுந்த சிரமத்தோடு தனது தலையைத் திருப்பி அவரைப் பார்த்தபின் "இல்லை" என்றார் மரணப்படுக்கையில் கிடந்தவர்.

வினவியவர் முகம் சோகத்தில் தளர்ந்த போது. "நீ என்னோடு படிக்கவில்லைத்தானே" என்றதும் இவர் முகம் மலர்ந்தார். குறும்பாகப் பேசும் அவரது குணம் இறுதிவரை மாறவில்லை என்பதைப் புரிந்து கொண்டதாலேயே அவர் முகம் மலர்ந்தது.

 

"தாம் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறே மரணத்தையும் தழுவுகிறார்கள். மென்மையானவர்கள் இறுதிக் கணங்களில் மேலும் மென்மையானவர்கள் ஆகிறார்கள். அவ்வாறே பகிடியும் கிண்டலும் உள்ளவர்களிலும் தொடரும். மற்றவர்களை அடக்க முற்படுபவர்கள் இறுதிவரை தமது திமிரை விடுவதில்லை" என்கிறார் 2000 ற்கு மேற்பட்ட மரணங்களுக்குச் சாட்சியாக நின்ற Maggie Callanan. இது இவரது பேசப்பட்ட நூலான Final Gifts இல் வருகிறது.

தரிசனங்களின் உள்ளர்த்தம்

இருந்தபோதும் மரணப்படுக்கையில் உள்ளவர்களது தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் பேச்சாலோ சைகை மொழியாலோ வெளிப்படுத்தும் சம்பவங்கள் அதிகம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் மரணிப்பவர்களில் 10 சதவிகிதமானவர்கள் மட்டுமே இறப்பதற்கு முன் சுய உணர்வோடு இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு
(50% to 67%) மரணப்படுக்கைத் தரிசங்கள் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய இறுதிக்கட்டத் தரிசனங்களின் அர்த்தம் என்ன? அவை மற்றொரு உலகம் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றனவா? மரணத்திற்குப் பின்னான மற்றொரு வாழ்வு இருக்கிறது என்பதை எடுத்துக் கூறுகின்றனவா?

என்னால் அப்படி எண்ண முடியவில்லை. அதற்கான தெளிவான விஞ்ஞான விளக்கங்களும் கிடைக்கவில்லை என்றே சொல்ல முடிகிறது. பரம்பரை பரம்பரையாகவும் கலாசார ரீதியாகவும் நாம் கட்டி எழுப்பியுள்ள நம்பிக்கைகளின் நீட்சி இத்தகைய தரிசனங்களாக இருக்கலாம்.

பார்த்திருப்பவர்களின் உளநிலை மாற்றம்

நெருக்கமான ஒருவரின் மரணத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதானது ஒருவரின் மன உணர்வுகளை உச்சநிலையைத் தீண்டிச் செல்கிறது. அச்சம் தரும் ஒரு நிகழ்வாகவே அதற்கு முன்னர் மரணத்தை பார்திராதவர் உணர்வார்.

 

மறுபரிசீலனை செய்யும் போது அது பயங்கரமானதாகவும் சோகத்தில் திளைக்க வைப்பதாக இருந்தாலும் சில நன்மைகளையும் தருவதைப் புரிந்து கொள்ள முடியும். தன்னலமற்ற அன்பு, வற்றாத பாசம், இயலாதவரைப் பராமரிப்பதில் கிட்டும் உள நிறைவு போன்றவை தன்னில் நிறைந்திருந்ததை அவரால் புரிந்து கொள்ள முடியும்.


பல சில்லறைப் பிரச்சனைகளால் கசந்தும் மறந்தும் போயிருந்த பல உறவுகள் மரணம் நிகழும் கணத்தில் மனதிற்கு நெருங்கியிருப்பார்கள். பழைய காயங்கள் ஆறியிருக்கும். உடன் பிறப்புகளுடனான நெருக்கம் அதிகரித்திருக்கும்.

இறுதிப் பராமரிப்பில் கைகொடுத்த வகையில் மருத்துவர்கள் மருத்து உதவியாளர்கள, ஒத்தாசை அளித்த ஏனையவர்கள் மீதான பற்றும் மரியாதையும் அதிகரித்திருக்கும்.

 

பொறுமை, ஒத்தாசை, அன்பு, கருணை போன்ற நற்குணங்களை வெளிப்படுத்த அந்தத் தருணம் வழிகோலும். எங்கள் ஆழ் மனதில் உறைந்திருந்த பண்புகள் பட்டை தீட்டப்பட்டு மாசுமறுவற்ற சூரியக் கதிர்களாக ஒளிரும்.

ஆம் மரணப்படுக்கையானது மரணிப்பவருக்கு மட்டுமின்றி அதைப் பார்திருப்பவர்களுக்கும் புதிய தரிசனங்களைத் தரவே செய்கிறது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

 

http://hainallama.blogspot.fr/#!/2013/04/deathbed-visions.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் பின்பு வாழ்வு உண்டா என்பதை மரித்து உயிர்த்து எழுந்து வந்தவர்தான் சொல்லவேண்டும்!

விஞ்ஞான ரீதியில் அல்லது தத்துவ ரீதியில் விளக்கம் கொடுத்தால் சிலவேளை ஆர்வம் வரலாம். தற்போது என்னைக் கவர்ந்தது இரு விடயங்கள்:

1. மனிதனின் மூளை எவ்வாறு இயங்குகின்றது என்பதை இலட்சகோடி உடுத்தொகுதிகளைப் பற்றியெல்லாம் அறிந்த விஞ்ஞானத்தால் துல்லியமாகச் சொல்லமுடியவில்லை.

2. பிரபஞ்ச தத்துவங்களை விளக்கக்கூடிய dark matter, dark energy, anti matter போன்றன.

இவை பற்றிய தெளிவு இருந்தால் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தைகளையும், மரணத்தின் பின்னரான வாழ்வைப் பற்றியும் இலகுவாகப் புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். :icon_idea:

நானும் உங்கள் கட்சி தான்,கிருபன்! ஆனால், இந்தப் பிரபஞ்சத்தின் சூத்திரங்களை, மனிதன் ஒரு காலத்தில் அறிந்து வைத்திருந்தான், அல்லது எவராலோ அறிவூட்டப் பட்டிருந்தான்! காரண, காரியம் கேட்காமல், அந்த நியதிக்கேற்றவாறு வாழ்ந்து கொண்டிருந்தான்! பின்பு, இவற்றை, இடைநடுவில் தொலைத்து விட்டான்!

 

ஆயினும், பல பூர்வீக குடிகளின் இன்றைய தலைமுறை, இம்முறையை அனுசரித்து வாழமுனைகின்றது!

 

ஒரு ஆபிரிக்க முதியவர் ஒருவருடன் கதைத்தபோது, தான் மரங்களுடன் கதைப்பதாகக் கூறினார், ஆனால், அதில் உண்மையுள்ளதா என என்னால் சொல்லமுடியாது. ஒன்றுமட்டும் உறுதியாக எனக்குப் புரிந்தது. அவரது வாழ்வு, இயற்கையுடன், அதன் மூலம், பிரபஞ்சத்துடன் ஒருங்கிணைந்தது என்று.

 

இதே நோக்கல், அதிகமான அவுஸ்திரேலிய பூர்வீக குடிகளிடமும் உண்டு. 'கனவு காணுதல்' என்று அதைச் சொல்வார்கள். இயற்கையின், பிரபஞ்சத்தின், படைப்புக்களுடனும், ஆற்றலுடனும் ஒருங்கிணைந்த வாழ்வு!

 

ஒருவேளை, சிந்துநதி நாகரீகத்திலிருந்து நாம் வந்தவர்களாக இருப்பின், அங்கு வாழ்ந்தவர்களும் இயற்கையுடனும், பிரபஞ்ச அசைவினுடனும் ஒத்த வாழ்வையே வாழ்ந்தார்கள். மரங்கள், மிருகங்கள், பறவைகள், தாய்மை என்பவற்றையே அவர்கள் வழிபட்டார்கள். நமது சித்தர்களும் இவ்வாறான முறையில் தான் வாழ்ந்தார்கள், வட இந்திய, வேதங்களால், நிறமூட்டப்படும் வரை, தமிழன் இயற்கையுடன் ஒத்த வாழ்வையே வாழ்ந்திருந்தான்! பதிவு நீண்டு போய் விட்டது. என் பிரச்சனையே இது தான்!  குமாரசாமி அண்ணா மாதிரி, நறுக்கென்று நாலு வார்த்தையில் ஒரு விசயத்தைச் சொல்லத் தெரியாது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது சித்தர்களும் இவ்வாறான முறையில் தான் வாழ்ந்தார்கள், வட இந்திய, வேதங்களால், நிறமூட்டப்படும் வரை, தமிழன் இயற்கையுடன் ஒத்த வாழ்வையே வாழ்ந்திருந்தான்!

முந்தின காலத்தில நிறைய ஓய்வு இருந்திருப்பதால் சிந்திப்பதற்கு நேரம் கிடைத்திருக்கும். எனவே மூலாதர வித்து என்ன என்று ஆராய்ந்திருப்பார்கள். இப்போது ஓய்வொழிச்சல் இன்றி வாழ்வதற்கே ஓடுப்பட்டுத் திரிய வேண்டி இருப்பதால் காசு கொடுத்து விஞ்ஞானிகளை சிந்திக்கச் சொல்கின்றோம்!

 

இயற்கையைக் கொல்லும் வரை மனிதன் ஓயமாட்டான் என்பதால் இனி இயற்கையுடனான வாழ்வுக்கும் அதிக பணம் செலவழிக்கவேண்டிவரும்!

 

Link to comment
Share on other sites

கே: நம்மில் எத்தனை பேருக்குக் கடந்த பிறப்புகள் நினைவில் இருக்கின்றன?

 

ப: நம் உணர்வின் ஏதாவதொரு பாகத்தில் நம் எல்லோருக்குமே நினைவில் இருக்கும். ஆனால் இது அபாயகரமான விஷயமாகும். ஏனென்றால் சுவையான கற்பனைக் கதைகள் மனித மனத்துக்கு மிகவும் பிடித்தவையாகும். மறுபிறப்பு என்னும் உண்மையைப் பற்றி மனித மனம் ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொண்டு விட்டால் போதும், அது உடனேயே அதைச் சுற்றி அழகிய கதைகளைக் கட்ட விரும்புகிறது. …… இவற்றுக்கும் ஆன்மீக வாழ்விற்கும் சம்பந்தமேதும் இல்லை.

 

நம் முற்பிறவிகளைப் பற்றிய மெய்யான நினைவு, பூரண ஞானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அது இதுமாதிரியான கற்பனைகளால் வருவதில்லை.

 

கே: மறுபிறப்பு பற்றி…

 

ப: மறுபிறப்பைப் பொருத்தவரை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய பொது விதி என்று ஏதும் கிடையாது. சிலர் கிட்டத்தட்ட உடனேயே திரும்பப் பிறக்கிறார்கள். தம் குழந்தைகளிடம் மிகவும் பற்றுதல் வைத்துள்ள பெற்றோர்களுக்கு பெரும்பாலும் இப்படி நடக்கிறது. அவர்கள் இறக்கும்போது, அவர்களில் ஒரு பாகம் அவர்களுடைய குழந்தைகளிடம் ஒன்றிக் கொள்கிறது. சிலர் மறுபிறப்பு எடுக்க நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம். தமக்குப் பொருத்தமான சூழலை அளிக்கக் கூடிய வாய்புகள் பக்குவமடையும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.

 

கே: ஆவிகள், பேய்கள் பற்றிச் சொல்லுங்கள், அவை உண்மைதானா?

 

ப: ஆம். அவை சட உலகத்துக்கு அடுத்தாக உள்ள தளத்தில் வசிக்கும் ஜீவன்களாகும். அதைப் பிராண உலகம் என்கிறோம். இந்தப் பிராண உலகம் ஆசைகள், உந்துதல்கள், வெறிகள் மற்றும் வன்முறை, பேராசை, சூது, பற்பல வகையினா அறியாமை போன்றவையெல்லாம் அடங்கிய உலகமாகும். ….. அந்த உலகத்தின் உயிர்களுக்கு சட உலகத்தின் மீது இயல்பாகவே ஒரு விதமான பிடி உண்டு. சட உலகத்தின் மீது அவை நம்முடைய மிகத் தீய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

 

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுடைய பாகங்களில் சில சட தளத்துக்கு அருகில் உள்ள பிராணச் சூழலில் தொடர்ந்து நீடிக்கின்றன. அந்த எஞ்சிய பாகங்கள் இப்படிப்பட்ட பிராண ஜீவன்களாக ஆவதுண்டு. இறந்த மனிதனின் ஆசைகள், வேட்கைகள் ஆகியவை அவனது உடல் அழிந்த பின்பும் தம் வடிவத்தோடு அங்கே தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அவை தம்மை வெளிப்படுத்தி திருப்தியடைவதற்காகச் செய்லபடுகின்றன. இவ்வாறுதான் ஒருவகையான பிராண லோக ஜீவன்கள் தோன்றுகின்றன. ஆனால் இவை அற்பமானவையாகும். இவற்றைச் சமாளிப்பது முடியாத காரியமல்ல.

 

ஆனால் ஒருபோதும் மனித வடிவத்தில் இருந்திராத வேறு வகை உயிர்கள் உண்டு; அவை மிக ஆபத்தானவையாகும். அவை பூமியில் மனித உடலினுள் ஒருபோதும் பிறக்காதவையாகும். அப்படி உடலில் பிறந்து சடப்பொருளுக்கு அடிமையாவதை விட, அவை தம் பிராண உலகிலேயே தங்கிக் கொண்டு, அங்கிருந்து பூமியிலுள்ள உயிர்களின் மீது ஆற்றலோடு விஷமத்தனமான ஆட்சி செலுத்துவதையே விரும்புகின்றன.

 

அவை முதலில் ஒரு மனிதனை தன் கட்டுப்பாட்டின் கீழ் படிப்படியாகக் கொண்டு வருகின்றன. பின்னர் அவனது ஆன்மாவையும், மனித மனத்தையும் வெளியேற்றி அவனை தம்முடைய முழு உடைமை ஆக்கிக் கொள்கின்றன. இந்தப் பேய்கள் புவியிலுள்ள ஒரு மனித உடலைப் பீடித்துக் கொள்ளும்போது அவை மனிதனைப் போலத் தோன்றலாம். ஆனால் அங்கே மனித இயல்பு இருக்காது. ஆகவே இவ்வகைப் பிராண உலக ஜீவர்களோடு தொடர்பு கொள்வது எவ்விதத்திலும் நன்மையைத் தராது.

 

கே: மரணத்தின் பின்….??

 

ப: மனிதன் சட உடலில் பாதுகாப்பாக, சௌகரியமாக இருக்கிறான். உடலே அவனுடைய பாதுகாப்பாகும். சிலர் தம் உடல்களை மிக இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். மரணத்துக்குப் பின் உடல் இல்லாதபோது எல்லாம் இப்போதை விட நன்றாக இருக்கும், எளிதாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உடல்தான் உன் புகலிடம். …. சிலர் ’இந்த உடலில் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது’ என்கிறார்கள். மரணமே விடுதலையாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

 

நன்றி : ஸ்ரீ அன்னை, கேள்வி-பதில்கள் மற்றும் White Roses, அரவிந்தர் ஆசிரமம், புதுவை

 

http://ramanans.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%c2%a9/page/4/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.