Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை யாழ்ஆயர் இல்லம் மறுத்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்

'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும், குறிப்பிட்ட மரணம் தொடர்பாக பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவ் விசாரணைக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

மேற்படி உதவிப் பங்குத் தந்தையர்களின் தவறான செயற்பாடுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்படி பெண்ணின் மரணத்துக்கு முன்னான காலப் பகுதியிலோ அல்லது பின்னான காலப் பகுதியிலோ, பெற்றோராலோ அல்லது வேறு எந்தத் தரப்பாலோ, பேராலயப் பங்குத் தந்தையிடமோ அல்லது ஆயர் இல்லத்திலோ எந்தவித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாகக் குறிப்பிட்ட பெண் எவ்வித வெளித் தொடர்புகளுமன்ற நிலையில் வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந் நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மை பாரதூரத்தன்மை என்பவற்றை நாம் ஆய்ந்தறிவதற்கு உதவியாக தொடர்பானவர்கள் உரிய முறையில் எம்மோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவறுகள் மறைக்கப்படக்கூடாது என்பதே எமதும் நிலைப்பாடாகும். எனினும் ஊடகங்களில் வெளிவரும் அனைத்துச் செய்திகளும் முற்றிலும் உணமையானவை என்று ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மிகைப்படுத்தலும் வௌ;வேறு தரப்புக்கள் தமக்குச் சார்பாக விடயங்களை திரிபுபடுத்தலும் இன்றைய சூழலின் யதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந் நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளால் குழப்பமடையாது விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையை அறிய முயலவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அனைத்து கிறிஸ்தவ மற்றும் பிற மத சகோதரர்களுக்கும் எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து குருக்களும் திருச்சபையும் கிறிஸ்தவ நன்நெறிவழி நின்று எமது பணியை முன்னெடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105752/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவையின்ரை நொள்ளு கொள்ளுகளுக்கு பஞ்சமில்லையடியப்பா.. :D
 
பேரை மாத்தி நொள்ளுவிடுவினமாம் அதுதான் கடைசியிலை ஆனந்தா எண்டு முடியும்...அதையேன் பேசுவான் அதுக்கேற்ற சினிமாப்பாட்டுக்கூட போட்டு அசத்துவினமாமெல்லே.. :lol:

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

குற்றம் சாட்டப்பட்டிருக்கு அக்காச்சி .கொஞ்சம் பொறுங்க.......உண்மை தெரியட்டும் நாம் வாய் திறக்கிறோம்.............எதோ நேர நிண்டு பார்த்ததுபோல துள்றீங்க. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தவரின் தாயை பார்க்க மிக பாவமாக  இருக்கு .ஒரு தாய் இப்படிப்பட்ட நிலையில் பொய் சொல்லமாட்டார் .

காமத்திற்கும் கயவர்களுக்கும் மதம் ஏது ?

எல்லா மதத்திலும் இப்படி பட்ட கயவர்கள்  இருக்கின்றார்கள் .நாத்திகரிலும் கயவர்கள் இருக்கின்றார்கள் .

இப்படியான விடயங்களில் தேவைக்கு வசதியாக யாரும் எங்கட மதம் திறம் என்று நியாயபடுதுவதில் அர்த்தம் எதுவுமில்லை .

ஒரு முஸ்லிம் அல்லது பௌத்தன் இதை செய்திருந்தால் இன்னமும் களை கட்டியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள்ளேயே உண்மை கண்டறியப்படும்வரை மௌனமாக இருப்பதே மேலானது

வீடியோவில் இந்த தாயின் வாக்குமூலம் உண்மையாயின் அந்த இரு பாதிரிகளும் உயிரோடு  இருக்க  தகுதியில்லாதவர்கள் .......அவர்கள்  அழியணும் ........நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

ஓ கோயிலில் மணி ஆட்டுபவர்களை விட எந்த விதத்தில் இவர்கள் மேலானவர்கள்?...காவியுடை உடுத்திய பாதிரிமார் சேர்ச்சுக்கு போகும் இளம் பெண்களிடம் தங்களை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது ,பலவந்தப்படுத்துவது,பெண்களை மிரட்டுவது இது எல்லாம் உங்களை பொறுத்த வரை ஒரு சிம்பிள் மேட்டர் இல்லையா?....இதை விட சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல் துஸ்பிரயோகம் எல்லாம் ஊரில் கிரிஸ்தவ மிசனரியில் நடக்குது தெரியாதா?...நான் படிச்சது கொன்வென்டியில் சிஸ்டர்களும்,பாதர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என ஹொஸ்டலில் இருப்பவர்கள் சொல்ல கதை,கதையாய் கேள்விப்பட்டு உள்ளேன்.[எல்லோரும் இல்லை.உண்மையான ஆன்மீக பற்றோடு சேவையாற்ற வந்தோரும் உள்ளனர்.].... ஊரில ஜயமார் இப்படி பெண்களை நிர்ப்பந்ததித்ததை கேள்விப்பட்டு உள்ளீர்களா?...கோயிலில் மணி அடிக்கிறவர்கள் என்டால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு? கொஞ்சம்,கொஞ்சமாய் உங்களது உண்மையான முகம் வெளியே வருகுது.

அந்த பாதிரிமார் குற்றம் செய்தவர்கள் என்று ஊரே அல்லோகப்படுது.நேரே இருந்து பார்த்த மாதிரி அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று சொல்ல இரு காரணங்கள் தான் இருக்க வேண்டும்.1) மதத்தை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீர்கள்.2) குற்றம் செய்த பாதிரிமார் உங்கட ஊர்க்க்காராகவோ அல்லது சொந்தக்காராக இருக்க வேண்டும்.நல்ல எஜமான விசுவாசம்.இப்படித் தான் இருக்க வேண்டும்.உண்மை வெளி வரட்டும் பார்ப்போம் என்று இருக்கிறீர்கள்.எந்த காலத்தில் இவர்கள் உண்மையை ஒத்த்க் கொண்டார்கள் இனி மேல் ஒத்துக் கொள்வதற்கு?

நித்தியானாந்தா எந்தப் பெண்ணையும் பலவந்தப்படுத்தவில்லை.அவர் செய்த ஒரே பிழை புனிதமான காவியுடுப்பை போட்டுக் கொண்டு பெண்களோடு படுத்தது தான்.அவர் செய்தது கேடு கெட்ட செயல் தான்.இந்த பாதிரிமாரோடு ஒப்பிடுகையில் அவர் செய்தது பரவாயில்லை என்பது தான் என் க்ருத்து.

ஜயர் செய்தாலும் சரி,துறவி செய்தாலும் சரி,பாதிரி செய்தாலும் சரி பிழை என்டால் பிழை தான்.உங்கள மாதிரி குருக்க்ள் செய்தால் பிழை.பாதிரி செய்தால் சரி என்கிற மாதிரி நான் கருத்து வைக்கிறதில்லை.அந்தத் தாயின் கண்ணீரைப் பார்த்தும் எதுவும் நடக்காதா மாதிரி உண்மை வரட்டும் பார்ப்போம் என்று சொல்ல உங்கள மாதிரி கல்நெஞ்சக்காரால் தான் முடியும்[உண்மை வராது எனத் தெரியும்.]இதே உங்கட குடும்பத்து ஆட்களுக்கு நடந்திருந்தால் இப்படி வந்து உங்களால் எழுத முடியுமா என்ன?

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

இங்கு யார் மேலானவர்கர் என்பதல்ல விடயம். ஒரு பிழை நடந்தும் மூடி மறைக்கப்படுகிறது.

எங்களுக்குள்ளேயே உண்மை கண்டறியப்படும்வரை மௌனமாக இருப்பதே மேலானது

இதை மற்ற சமயங்களின் விடயத்திலும் கடைபிடித்தால் நல்லது.

மிக ஆர்சரியமாக இருக்கிறது. யாழ்பாண தமிழர்கள் எந்த விசயத்தையும் இன மத கண்ணால் தான் பார்ப்பார்களா. எந்த அநியாயத்தையும் இந்து தமிழர்கள் செய்தால் மற்றவர்கள் செய்யவில்லையா என்று நியாயப்படுத்துவர்கள். வேறு யாரும் தவறு செய்தால் அது இனத்தின் அல்லது மதத்தின் தவறு என்று ஒப்பாரி வைப்பார்கள். ***

Edited by இணையவன்

மதவாதம் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமமான காலப்பகுதியில் பிரதேச வாதத்தையும் விதைக்க முயற்சிக்கும் உங்கள் முயற்சி . :icon_mrgreen: ..........ஆகா அற்புதம் ............. :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியார், துறவிகள், உலமாக்கள் எல்லோரும் மனிதர்கள்தான். இவர்களில் மனத்தை அடக்கத் தெரிந்தவர்களை நல்லவர்கள். அத்தகைய மனத்தை அடக்க மத போதனைகள் பயன்படலாம். ஆனால் மத போதனைகள் இல்லாமலும் நேர்மையாக வாழமுடியும். ஆகையால் மதம் அத்தியாவசியமான ஒன்றல்ல.. :rolleyes:

அப்படிப்பட்ட மதத்தின் பெயரால் முரண்படுவது தவறு.. :D

ஒரு முஸ்லிம் அல்லது பௌத்தன் இதை செய்திருந்தால் இன்னமும் களை கட்டியிருக்கும் .

ஒரு இந்து அல்லது கிறிஸ்தவ தமிழன் முஸ்லிம் பெண்ணையோ பெளத்த பெண்ணையோ இவ்வாறு செய்திருந்தாலும் இதைவிட இன்னமும் அதிகமாகவே  களை கட்டியிருக்கும். இன மத பேதங்களால் பாதிக்கபட்டிருக்கும் ஒரு நாட்டில் இது இயல்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138814

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதம் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமமான காலப்பகுதியில் பிரதேச வாதத்தையும் விதைக்க முயற்சிக்கும் உங்கள் முயற்சி . :icon_mrgreen: ..........ஆகா அற்புதம் ............. :D  :D

நீங்கள் மற்ற மதத்தவரை தாக்கி எழுதும் போது அதில் மதவாதம் இல்லை.நாங்கள் பேசாமல் சிரிச்சிட்டு இருந்திடனும்.ஏனென்டால் நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லையா?.... ஆனால் உங்கட மதத்தில் நடந்ததை கேட்டால் அது மதவாதத்தை விதைக்கிறோம் இல்லையா தமிழ்சூரியன்?...இனி மேல் மற்ற மதத்தினரை பார்த்து கேள்வி கேட்கும் போதோ அல்லது சேர்ந்து நக்கலடிக்கும் போதோ இதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சனை .எப்போதாவது எந்த மதத்தைப்பற்றி நான் விமர்சித்ததை கவனித்தீர்களா ........அவ்வளவு பண்பற்றவன் இல்லை அக்கோய் நான் :lol:  ..........எந்த  மதத்தை பற்றியும் கீழ்த்தரமாய் பேசுபவன் இல்லை .அது எனக்கு தேவையும் இல்லை .ஆனால் நான் பின்பற்றும் மதத்தை பற்றி [ பின் பற்றுபவர்களை   பற்றி அல்ல ]  கீழ்த்தரமாய் யாராவது பேசினால் நானும் கீழ்த்தரமாய் தான் அவர்களை பேசவேண்டி இருக்கும் .அவர்கள் மதத்தை அல்ல ................
 
மதவாதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தியது ஏனென்றால் ........
யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அண்மையில் எம் நீதிக்காக உண்மைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் ..............அவரை ஒதுக்க வேண்டும் என்றால் மதத்தை கையில் எடுத்து செயல்பட வேண்டிய நிலையில் அரசு உள்ளது .....நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்திலேயே ..............ஆனால் பாதிரிமார் தவறு செய்யாதவர்கள் என்று நான் எப்போதும் கூறமாட்டேன் .உங்களை விட எனக்குத்தான் அதிகம் அவர்களை தெரியும் .......ஆனால் உண்மையான ,நேர்மையான பாதிரிமார் உள்ளார்கள் அவர்கள் இந்த விடயத்தில் பாதிக்கப்படக்கூடாது ...நன்றி வணக்கம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.