Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

Featured Replies

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம்.

அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்சோந்தி என்று குறிப்பிடுகிறான் அவன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ தன்னைத் தன் பலவீனங்களோடும் இயலாமைகளுடனும் ஏற்றுக்கொள்வார்களோ என்ற குழப்பத்தில் தன்னுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு சாதாரணனாகத் தான் மற்றவரிடத்தில் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறான்.

r87437_258131.jpg

பிறந்தது முதல் 2 ஆண்டுகள் அம்மம்மாவுடனும் பின்னர் 7 வயது வரை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு உறவினர்களுடனும் வளர்ந்தான்.அதாவது வளர்ந்துவரும் ஒரு செடியை இடம் மாற்றி மாற்றி நட்டால் என்ன நடக்கும்?? அத்திவாரம் அடிக்கடி ஆட்டம் காணுமில்லைாயா? அவன் பந்தாடப்பட்டான்.இறுதியில் 7 வயதில் foster home ல் சேர்க்கப்பட்டான்.அங்கு போனதும் அவன் இவ்வளவு நாளாக யாரை அம்மா என்று நினைத்தானோ அது தன் உண்மையான அம்மா இல்லையென்ற உண்மை அவனுக்குத் தெரிய வருகின்றது.அப்பா யாரென்று ஆரம்பித்திலிருந்து அவனுக்குத் தெரியாது தற்போது அம்மா என்ற உறவும் பொய்த்துப்போக தன்னை தன் உறவினர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவர்களை வெறுக்கத் தொடங்குகிறான்.அம்மாவாக நினைத்தவர் அன்ரியாகிவிட அன்ரியாக இருந்தவர் அம்மா என்றாக அவனுக்கு உறவுகள் புரிபடவில்லை.

இந்நேரத்தில் அம்மாவின் நண்பராக அறிமுகமாகிறார் X. பழைய உறவுகள் பொய்த்துப்போக புதிதாக வந்த X ஐ ஏனோ Paul க்குப் பிடித்துப்போய்விட X அவனுடைய நண்பனாக ஆசானாக Mentor ஆக தன்மேல் அக்கறை காட்டும் ஒரோயொரு ஜீவனாக நினைக்கிறான் Paul.X Paul ஐ விளையாட அழைத்துச்செல்வது வழக்கம்.அப்படிச் சென்றபொழுது ஒரு பூங்காவில் வைத்துத்தான் முதன்முறையாக Paul ஐ கிச்சு கிச்சு மூட்டுவது போல தொடங்கிப் பின்னர் எல்லை மீறியுள்ளது.Paul க்கு ஓரளவுக்கு நடப்பது என்னென்று விளங்கினாலும் தனக்கு நெருக்கமாகவுள்ள ஒரேயுறவையும் இழக்க விரும்பாமல் வெறும் விளையாட்டுப் போல என்று ஆரம்பத்தில் சகித்திருக்கிறான். தனக்கது violent touching ஆகத் தெரியாததாலும் X தானாகவே ஒரு கட்டத்தில் நிறுத்திவிடுவார் என்று நினைத்தும் அவர் மது அல்லது போதை வஸ்துவின் வேலையால் தன் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொள்கிறார் போல என்று பல காரணங்களைத் தனக்குத்தானே அறிவுறுத்தியாகச் சொல்கிறான் ஏனென்றால் அவனிருந்த சூழ்நிலையில் X உடன் வெளியில் போய் வருவதுதான் அவனுக்கு இருந்த ஒரு பொழுதுபோக்கு.

முதல் தடவை நடந்தபோது காரணங்களைத் தேடியவனுக்கு 2ம் முறையும் X நடந்துகொண்ட விதம் அப்படி நினைக்க விடவில்லை.X வேணுமென்றே அப்படிச் செய்கிறார் என்பதை அவன் புரிந்துகொண்டான்.இருந்தாலு

Edited by வலைஞன்
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது!

இப்போது போலுக்கு எத்தினை வயது? எக்ஸ் ஓர் ஆண் தானே? அவருக்கு எத்தனை வயது? இது உண்மைக் கதையா அல்லது கற்பனையும் கலந்து எழுதப்பட்டதா? இப்படி சிறிய குழந்தை பிக்குகளை பயன்படுத்தும் முற்றிய பிக்குகள் பற்றி கேள்விப்பட்டு உள்ளேன். எம்மவர்களிற்கு இப்படியான பிரச்சனைகள் ஏதாவது இருந்ததாக அல்லது இருப்பதாக கேள்விப்படவில்லை.

  • தொடங்கியவர்

இப்ப 27 வயது . இதை அவன் எழுதும்போது 17 வயது. அவனுக்கு எட்டு வயதாக இருந்தபோது X க்கு 30 வயது.

சிநேகிதி நீங்கள் வாசித்த கதைய எங்களுக்கும் அறியத் தந்ததுக்கு நன்றி. சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் (abuse க்கு நல்ல தமிழ்ச் சொல் என்ன?) பல சந்தர்ப்பங்களில் பல வகையாக நடைபெறுகிறது. இதுபற்றி அன்றாடம் செய்தித் தாள்களிலும் நாம் அறிகிறோம். மேற்கத்தைய நாடுகளில் மட்டுமில்ல, இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இது அதிகம் இருக்கிறது. நான் இணையத்தில் பார்க்கிற இந்தியச் செய்திகளில் இதுபற்றி அன்றாடம் அறிந்துகொண்டுதானே இருக்கிறோம். "மகளைக் கர்ப்பமாக்கிய தந்தை" போன்ற தலைப்புகள் இதற்கு ஒரு உதாரணம்.

சிநேகிதி... நீங்கள் இப்பதான் ஆண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றி அறிந்திருக்கிறீர்களோ? :) இப்பவாவது அறிந்துகொண்டீர்களே. மகிழ்ச்சி. கிட்டடியில் கூட வலைப்பதிவு ஒன்றில் இப்படியான ஒன்று பற்றி ஒரு ஆக்கம் வெளிவந்திருந்தது. அது இலங்கை இராணுவத்தால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர்கள் பற்றியது...

அதனைப் படிக்க: வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்

நடிகர் தனுசுக்கு மிகப்பெரும் திருப்புமுனையை உருவாக்கிக் கொடுத்த "காதல் கொண்டேன்" திரைப்படம் கூட சிறுவர் (ஆண்) மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றி சொல்கிறதே. மனதளவில் எப்படியாகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் அந்தத் திரைப்படம் தொட்டுச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம் என்னென்றால் ஆண்கள் கூட ஆண்களாலேயே அதிகளவு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக சிறுவர்கள் தான் அதிகம் இப்படிப் பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் சொன்னது போல் வெளியில் இதனைப் பகிர்ந்துகொள்கிற சந்தர்ப்பம் அமையாதபோது, பலர் தமக்குள் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

இப்படி சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்பவர்களில் அதிகமானோர் மதுபானம் அருந்தியிருக்கும் போது, போதைப் பொருட்களின் பாவனையில் இருக்கும்போதே ஈடுபடுகிறார்கள். ஆனால், அப்படி இல்லாத சந்தர்ப்பங்களிலும் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கூட ஒருவகையில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக, பாலியல் ரீதியாக தமது இச்சைகளை சரியான சந்தர்ப்பங்களில் சரியான முறையில் வெளிப்படுத்த தவறியவர்களாக இருப்பார்கள்.

இந்த சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் என்பது நேருக்கு நேர் நிகழ்வதாக மட்டுமில்லாமல், இன்று இணையத்தில் Webcam ஊடாகவோ அல்லது Chattting ஊடாகவோ நிகழ்வதை அறிந்திருப்பீர்கள். இதுபற்றிய பல செய்திகளையும் படித்திருப்பீர்கள். இதுபற்றிய ஒரு காணொளிக் காட்சியினை (விளம்பரம்) எடுத்து வைத்திருந்தேன் ... இப்போது தேடும்போது கிடைக்கவில்லை... கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன்.

கலைஞன் கேட்டிருந்தீர்கள் நம்மவர்களில் (ஈழத்து தமிழ்ச் சமூகத்திடம்) இது இருக்கிறதா என்று. தாராளமாக நிறையவே இருக்கிறது எம்மவர்களிடம். இந்தியாவில் இருப்பது பற்றி முதலில் குறிப்பிட்டிருந்தேன். புலம்பெயர்ந்த நமது சமூகத்திலும் இது இருக்கிறது. சிநேகிதி குறிப்பிட்டுள்ளதுபோல் வெளியில் யாரும் சொல்வதில்லை. "நாம் புனிதமானவர்கள், எம்மைச் சுற்றி புனித ஒளிவட்டம் சுழன்று கொண்டிருக்கிறது, நாம் எப்போதுமே புனிதமானவர்களாகவே இருப்போம்". சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றி கனடாவில் சுமதி ரூபனின் குறும்படம் ஒன்று வெளியாகியிருந்தது. பெயர் ஞாபகத்தில் இல்லை. சிநேகிதிக்குத் தெரியும்.

அதேபோல், சோபா சக்தி எழுதிய "ம்.." என்கிற நாவல் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு தமிழ்த் தந்தை தனது மகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தது பற்றிய கதையிலிருந்து தொடங்குகிறது. இதுபற்றிய விமர்சனம் (சுருக்கமான) ஒன்று இணையத்தளத்தில் உள்ளது வாசித்துப் பாருங்கள்.

அதனைப் படிக்க: "ம்" நாவல்

கருத்துக்களத்தில் முன்னர் உறுப்பினராக இருந்து கருத்துக்கள் எழுதிய சந்திரவதனா அக்காவும் இது தொடர்பான சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். யேர்மனியில் தமிழ்க் குடும்பம் ஒன்றில் நடந்த சம்பவத்தைப் பற்றியதாகவே அது இருக்கிறது. உண்மைக் கருப்பொருளாகத் தான் இருக்கவேண்டும்.

அதனைப் படிக்க: அவள்

தெரிந்த கதைகள் சில. தெரியாதவை பல. நாம் புனிதர்களாக வாழ ஆசைப்படுவதால் அனைத்தையும் வெளியில் சொல்வதில்லை. நமது ஊடகங்களும் இவற்றில் அக்கறை செலுத்துவதில்லை. சுவிற்சர்லாந்து நாட்டில் மிருகம் மீது (ஆடு) பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கையர் (தமிழர் என்றே நினைக்கிறேன்) கைது செய்யப்பட்ட செய்தியும் யாழ் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்தது.

சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திலிருந்து எமது சிறுவர்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி: வெளிப்படையாக ஊடகங்களில் இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்தாடல்களை நிகழ்த்துவதே. இன்னும் நாங்கள் புனித விம்பங்களைக் காவித் திரிவதில் பயனில்லை. "எங்கட சமூகத்தில ஒண்டுமில்லை, வெள்ளைக் காரன பார்... அவன்தான் நாகரீகம் என்ற போில கூத்தடிக்கிறான்" என்று சொல்லி சொல்லி நம்மை நாமே ஏமாத்தாது, உரிய முறையில் இந்த விடயங்களை அணுகுவது நல்லது. பிள்ளைகள் ஒரு விடயத்தை பெற்றோரிடம் சொல்லும் போது பெற்றோர் அவ்விடயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கக்கூடாது. "நீ சும்மா இரு", "அலட்டாமல் போ" என்று அவர்களைப் புறக்கணிக்காது அக்கறையோடு சிறுவர்கள் சொல்வதை செவிமடுக்கவேண்டும். இது பற்றிய விவாதம் கருத்துக்களத்தில் தொடர்ந்து நடந்தால் நல்லது...

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

இளைஞன் சொன்னது சுமதி ரூபனின் உஷ் என்ற குறும்படம். அதைப்பார்க்க : உஷ்

தந்தை மூலம் சிறுமி கர்ப்பம் - இதையும் வாசியுங்கள்.

இளைஞன் நீங்கள் குறிப்பிட்ட வெளிச்சகூடு தேவைப்படுவேர் படிக்க வேண்டிய குறிப்புகள் ஏற்கனவே வாசித்துள்ளேன். அதைப்பற்றி பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் என்ன சிறுவர்கள் கூட... ல் எழுதியுள்ளேன்.

Edited by Snegethy

  • தொடங்கியவர்

Paul ன்ர கதை II

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று தன் குடும்பத்தினரை கஸ்டப்படுத்துவதற்காகவே தான் ஒழுங்காகப் பாடசாலைக்குச் செல்லாமல் தீய நட்புகளைத் தேடினானாம்.கடைகளில் சிறிய திருட்டில் ஆரம்பித்துப் பின்னர் 12 வயதில் கார் றேடியோ போன்றவற்றை திருடி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியில் தங்க வெளிக்கிட்டானாம்.15 வயதில் மீண்டும் foster home வாழ்க்கை ஆரம்பமானது.அன்றிரவு தன் காதலியுடன் ஒரு சின்ன விசயத்துக்காகச் சண்டை போட்டுத் தோற்றுப்போன ஆத்திரத்தில் போதைமருந்து உட்கொண்டுவிட்டு foster home க்கு வந்தபோது அங்கே வசித்த ஒரு 6 வயதுச் சிறுமியைத் தான் sexual abuse க்குள்ளாக்கியதையும் தானா அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னால் நம்பமுடியவில்லையென்கிறான்.

சரியான சாட்சியங்களில்லாததாலும் தான் அப்படி அந்தச் சிறுமியிடம் நடந்துகொண்டதற்கு தான் சிறுவயதில் sexual abuse க்குள்ளாக்கப்பட்டது ஓரு காரணமாக இருக்கலாம் என்று தான் foster home mother க்குச் சொன்னதாலும் தன்னை அவர்கள் counselling க்கு அனுப்பினார்களாம்.தான் counselling க்குச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் கூட கனவில் வன்மமான எண்ணங்கள் வந்ததாம்.சிறுவர்களையும் சிறுமிகளையும் தன்னால் கனவில் கூட அப்பிடி நினைத்துப்பார்க்க முடியவில்லையாம் அத்தோடு கனவில் நடப்பது போல நிஜத்திலும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சியாக தன் நாளங்களை அறுத்துக்கொண்டானாம்.

தெரப்பிக்குச் சென்று வந்ததால் தான் இப்போது தன் இறந்தகாலத்தை மறந்து நிம்மதியாக இருக்கிறானாம்.தனக்கு ஆண் நண்பர்களும் பெண் நண்பர்களும் இருக்கிறார்களாம்.வளர்ந்த ஆண்கள் அதாவது X ன் வயதையொத்த (>30) ஆண்களைத் தன்னைச் சாதாரணமாகத் தீண்டினால் கூட தனக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து தொல்லைப்படுத்துவதால் இயன்றளவு அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து வருகிறானாம். பெண்களுடன் டேற்றிங் செல்லும்போது தன்னைப் பற்றித் தான் அதிகம் சொல்வதில்லையாம்.Foster home ல் வாழும் தன்னைப் போலவே மற்றவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டானாம்.தாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்களாம்.

இரவில் தூங்கும்போது யன்னல்கள் எல்லாம் மூடியுள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் தன்னால் தூங்க முடிகிறதாம். முன்பு sirens ஒலி கூடத் தன் தூக்கத்தை கெடுப்பதில்லையாம் ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவர் மூச்சு விடும் ஒலிகூடத் தன்னை டிஸ்ரப் பண்ணுதாம்.அதனால் தான் ஒரு பெண்ணோடு பழகி உடலுறவு வரை செல்ல தனக்குக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் தேவைப்படுகிறதாம்.அதனாலோ என்னவோ தற்போது தனக்கு காதலி என்று யாரும் இல்லையாம்.

தெரப்பிக்குச் சென்றதால் தான் தற்போது normal ஆக இருக்கிறானாம்.தனது social worker உடன் தன்னால் மனம்விட்டுப் பேச முடிகிறதாம்.ஒரு snowball போல தன்னுள் வளர்ந்துவந்த வன்மக் குணம் இல்லாது போய் தன்னால் தன் நிகழ்காலத்தையம் எதிர்காலத்தை நேசிக்கக் கூடியதாக உள்ளதாம். சில வருடங்களில் தான் ஒரு truck driver ஆக இருப்பானாம். ஒரு இரவுப்பறவையாக நீண்ட பெருந்தெருக்களில் தனியாகச் சுதந்திரமாக ஒரு truck driver ஆகப் பயணம் செய்தாலும் தனக்கென்று குடும்பம் அமைத்துக்கொள்ள ஆவலாக இருக்கிறானாம்.தன்னைப் போன்றவர்களுக்கு குடும்பம் மிகவும் அவசியமாம் அதுவும் முக்கியமாகத் தன் தாய்க்கு குடும்பம் என்றால் என்னவென்று உணர்த்தும் அவசியம் தனக்குண்டாம்.

dorais_dont_lg.jpg

குறிப்பு : Dón't Tell - The Sexual Abuse of Boys என்ற புத்தகத்திலுள்ள பல உண்மைக் கதைகளில் ஒன்றே Paul ன் கதை.Michel Dorais ஆல் French ல் எழுதப்பட்ட இந்தப் புத்தம் Isabel Denholm Meyer ஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Edited by Snegethy

சினேகிதி கதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. ஈழத்து/ தமிழர்களது நிலை பற்றி இளைஞன் உங்களுக்கு நிறைய விளக்கம் கொடுத்துள்ளார் கலைஞன். நான் மேலதிகமாக சொல்ல எதுவும் இல்லை.

ஈழத்தை பொறுத்தவரை இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இல்லை. ஆனால் சிறுவர்கள் அதை பற்றி அதிக அறிவு இன்மை, அல்லது உறவினர்கள் மீதான பயம், வெளிச்ச கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகளில் சொல்லப்படுவது போன்ற பரிசுகள் சிறுவர்களை வாய் பேசாது அடைத்துவிடுகிறன.

டி,ஜே தன் வலைப்பதிவில் எழுதி உள்ள கவிதை ஒன்று கூட ஈழத்தையும், கனடாவில் உள்ள நிலையையும் ஒப்பிட்டுள்ளதாக அமைந்துள்ளது. அது ஒரு பெரும் விபரிப்பு கவிதையல்ல. ஆனால் அதில் வரும் ஒரு வரி நிலமையை சொல்ல போதுமானது.

  • தொடங்கியவர்

தந்தை மூலம் சிறுமி கற்பம்.

///“சிறுமி ஒருத்தி (பதினைந்து வயது) கற்பமுற்றிருக்கிறாள் தந்தையின் மூலமாய்.

கற்பத்தை கலைக்கும் எந்தவித அறிவோ..

நடந்ததை சொல்லும் தைரியமோ அற்ற அவள்.

ஏழு மாதக்கற்பிணியாக இருக்கிறாள்.

தந்தையின் மூலமும் இதர பல உறவினர் மூலமும்

யார் உன் கற்பத்துக்கு காரணம் என அடித்து சித்திரவதையும் செய்யப்பட்டு இருக்கிறாள்.

அவளுக்கு மிக பிடித்த அவளது இரண்டாவது தங்கையை கொலை செய்து விடுவேன் என்று

தந்தை மிரட்டியதன் காரணமாக தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிச்சொல்ல முடியாத துர்பாக்கிய நிலையில் மெளனமாகவே எல்லா வலிகளையும் தாங்கியிருக்கிறாள்..

ஆனால் அவன் (தந்தை) இதர உறவினர்களுடன் சேர்ந்து அவளை அடித்து நோகப்பண்ணியும் இருக்கிறான்..

இறுதியில் அவளை காதலித்து கொண்டு இருந்த ஒரு இளைஞனை உறவினர் சந்தித்து அவனே இதற்க்கு காரணம் என நினைத்து

அவனை தாக்கியதில் . அவன் அதை காவல் துறையினருக்கு தெரியப்படுத்தியதன் மூலமாக முழுஉண்மையும் வெளிவந்தது.

ஏழு மாத கற்பிணி ஆகையால் கற்பத்தை கலைத்தல் அவளது உயிருக்கு ஆபத்து எனும் பட்சத்தில் வைத்தியர்களது ஆலோசனைப்படி

பிள்ளையை ஈன்றெடுக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறாள். கேள்விக்குறியான எதிர்காலத்தோடு!!!” ///

ஒரு மார்கழி மாத நடுப்பகுதியில்

இடி மின்னல் இரவொன்றில் அச்செய்தி என் காதுக்கெட்டியது..

என் எண்ணக்குப்பியில் நுரைகள் ததும்பியது..இரத்தம் கசிந்தது..

என் சிந்தனைக்குழந்தைகள் ஒவ்வொன்றாய்

நீர் வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது..

குழந்தைகளற்ற தாயாய் நான் கதறி அழுதேன்.

என் தம்பி அங்கும் இங்கும் மயிர்கள் சிதற ஓடினான்.

அவனுக்கு..அச்செய்தி முழுதாய் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

நெஞ்சு நோகுது என்டான்.

சுருண்டு படுத்துக்கொண்டான்.

அன்று அவன் எனக்கு தெரியாமல் அழுதிருக்க கூடும்.

சொட்டு சொட்டாய் வீட்டினுள் தெளிக்கும் வீதி வெளிச்சத்தில்

காண முடியாதபடிக்கு தலைவரை இழுத்து போர்த்தி இருந்தான்.

அக்கடும் மழைக்கு பின்னரான வானத்தில்..

முகில்கள் ஆண்குறி வடிவில் தெரிந்தது.

உயரப்பறந்து வீறு கொண்டு வெட்டிச்சாய்த்து குதறி

ஒரு கூராயுதத்தால் குத்தி குத்தி ஒன்று சேர்த்து

மாலையாய் போட்டு தாண்டவம் ஆடும் வெறி…!!!

உடம்பெல்லாம் பரந்து விரிந்து வியாபித்தது..

நிதானத்திற்க்கு வந்த போது தம்பி என் தலை தடவி

கொண்டிருந்தான்!

-கீர்த்தனர -

http://keerthanakk.blogspot.com/2007/07/blog-post_21.html

Edited by Snegethy

சிநேகதி... இணைப்புகளுக்கு நன்றி. நான் சொன்ன அந்த சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றின விளம்பரக் காணொளிக் காட்சியை இன்னும் தேடிக்கண்டுபிடிக்கவில்லை. ஆனால் வேறு இரண்டு child pornography பற்றிய விளம்பரங்கள் youtube இல் இருந்து...

முன்னர் எப்போதோ நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படம். இரு பதின்வயது யுவதிகள், வாழ்வின் எதிர்பாராத திருப்பங்களினால் நண்பிகளாகி, பின் கொலை முதலிய குற்றங்களையும் கூட சேர்ந்தே புரிந்து வாழ்க்கiயில் நகர்வதைப் படமாக்கியுள்ளது படம். பெரிதாகப் பேசும் படி இல்லாத, ஞாபகத்தில் இருந்து இலகுவாக அகலக் கூடிய இந்தப் படத்தில் (பெயர் கூட எனக்கு இப்போ ஞாபகமில்லை), இடம்பெறும் பின்வரும் காட்சி மட்டும், எனது பார்வையில் வர்ணிக்க முடியாத எழுத்துத் திறமையினை வெளிப்படுத்துகிறது:

ஒரு நாள் இரு நண்பிகளும் தங்களது கடந்த காலம் பற்றி இரைமீட்டுக் கொண்டிருக்கையில் இருவருமே தாங்கள் தந்தை முதலிய உறவுகளால் பாலியல் வக்கிரங்களிற்கு உள்ளாக்கப்பட்டமை பற்றி அறிகின்றனர். இவ்வகையில் தங்களது அனுபவத்தைப் பற்றித் தமக்கிடையே மிகவும் இயல்பாக, பதின் வயதுப் பாவையரிற்கே உரித்தானது என்று சினிமாக்கள் சித்தரிக்கும் பாவனையில் பகிருகின்றனர். அப்போது ஒரு யுவதி தனது தந்தை பற்றிக் கூறுகையில் :

"அவர் ஒரு construction worker. வேலை முடிந்து வீடு திரும்புகையில் அவரின் உடையெங்கும் அழுக்குப் படிந்திருக்கும். வியர்வை முதலியனவால் மிகவும் அசௌகரியமான துர்நாற்றம் வீசும். இருந்தபோதிலும் வீடு வந்ததும் வராததுமாய்க், குளியலறைக்குக் கூடச் செல்லாது, தன்னை எவ்வகையிலும் துப்புரவு படுத்தாது உடை மாற்றாது அழகு படுத்தாது, நேரே எனது அறைக்கு வந்து என்னை வக்கிரத்திற்குட்படுத்தி விட்டே அவர் மறுவேலை பார்ப்பார்..." என்று கூறி விட்டு:

"அவரைப் பொறுத்தவரை, தன்னைத் துப்புரவு செய்வதோ அழகு படுத்துவதோ தேவையற்றது. அவர் வன்புணர்வு செய்வது என்னோடு தானே..." என்று ஒரு வசனம் பேசுவார்.

இப்படி ஒரு படம் பார்தோம் என்பதேனும் எனது மனதில் இன்றளவும் நிற்கின்றது என்றால் அதற்குரிய ஒரே காரணம் மேற்படி வசனம். பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிப்பவர் இருவரது உளவியல் பற்றியும் எத்தனையோ பரிமாணத்தில் ஆழமான கருத்துக்களைப் பேசுகின்றது இந்த வசனம். இந்த வசனம் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் அதன் மேலும் பல பரிமாணங்கள் இன்றளவும் குறையாது எனக்குப் புலப்படுகின்றன. இந்தக் காட்சியும் அதற்கான எழுத்தும் உண்மையிலேயே காவியத் தரம் வாய்ந்தன என்பது எனது கருத்து.

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் நான் அடுத்த எழுத இருப்பது தந்தையால் துன்புறுத்தப்பட்ட மகளைப் பற்றித்தான்.

நீங்கள குறிப்பிட்ட படத்தின் பெயரை முடிந்தால் தேடிப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கீர்த்தனாவின் ள் பக்கத்தை நானே இணைக்க இருந்தேன். சினேகிதி இணைத்திருந்தார். தமிழீழ நீதி மன்றத்தில் இத்தகைய வளக்குகள் நிறைய உள்ளன. நாங்கள் ஒன்றும் ஐரோப்பியர்களிலும் வித்தியாசமான புனித சீவன்கள் அல்ல. எமது புனித கற்பனைகள்தான் எமது மனச்சிக்கல் களுக்கும் எங்கள் மத்தியில் குறிப்பாக எங்கள் பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ள தற்கொளல நாட்டங்களுக்கும் காரணம். தங்கள் பெண்பிள்ளைகளை அழவுக்கு அதிகமாக கட்டுப் படுத்துகிற சில தகப்பன்மார்களின் உடமை உணர்வுகூட ஆழ்மனசில் மறைந்துள்ள இத்தகைய ஒரு விசயம்தான்.

இது ஒரு மனநிலை கோளாறு. எல்லா சமூகத்திலும் உண்டு.

தங்கள் பெண்பிள்ளைகளை அழவுக்கு அதிகமாக கட்டுப் படுத்துகிற சில தகப்பன்மார்களின் உடமை உணர்வுகூட ஆழ்மனசில் மறைந்துள்ள இத்தகைய ஒரு விசயம்தான்.

:) அப்ப இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கலாச்சாரக் காவல் நோக்கில் இல்லையோ? எனக்கு இந்த விடயம் விளங்கவில்லை. எந்த அடிப்படையில் தகப்பன்மார்களின் கட்டுப்பாடுகளை பாலியல் நோக்கில் அணுகமுடியும்?

சிநேகிதி... நீங்கள் உளவியல் படிக்கிறீங்கள். இது பற்றி உங்கட உளவியல் என்ன சொல்கிறது? உதாரணங்களோடு விளங்கப்படுத்துங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிநேகிதி இவ்வகை சிறுவர் பாலியல் வன்முறைகள் மற்றும் வன்முறையாளர்கள் குறித்தும் சமூக அறிவூட்டல் செய்வது பாராட்டத்தக்கது. ஆனால் இந்த அறிவூட்டல் ஆண்கள் மட்டுமே sex predators (including pedophiles) என்ற வகைக்குள் இருக்கின்றனர் என்று காட்ட முனைவீர்கள் என்றால்.. அது பக்கச் சார்பான உளவியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடு என்றே கருத நேரிடும்.

சமூகம் நலன் என்ற வரையறைக்குள் நின்று நோக்கும் எவரும்.. Female sex predators ஐ இனங்காட்டத் தவறமாட்டார்கள். அதில்தான் இவ்விடயம் தொடர்பான உண்மையான சமூக அக்கறை வெளிப்பட முடியும்.

Women as "Rapists" and "Pedophiles":

http://www.ipce.info/library_3/files/letourneau_women_as.htm

Female sex offenders reveal cultural double standard

"former Tenino math teacher Dawn Welter, 38, was charged with second-degree sexual misconduct after spending the night at a motel with a 16-year-old female student. Her lawyer explained her relationship with the student as "horseplay that became sexual."

"Jennifer Leigh Rice, a 31-year-old former Tacoma teacher, was charged with having sex with a 10-year-old boy who had been in her fourth-grade class. The boy's father says she lavished the boy with attention until she was told not to come to their house anymore."

http://seattletimes.nwsource.com/html/livi...predator10.html

http://antimisandry.com/why_sexually_abusi...253.html?t=7253

சில உளவியல் சொல்கிறது 70 வயது ஆண் அல்லது பெண், 25 வயது பெண்ணை அல்லது ஆணை தேடுறதும் pedophile குணவியல்பின் வெளிப்பாடு என்று. *** தணிக்கை இன்று பல வயதான பெண்கள் கூட 25,30 வயது இளமையான, வயது குறைந்த ஆண்களை டேற்றிங் செய்கின்றனர்.. அப்போ அவர்களும் இவ்வகையினரா என்ற கேள்வி இருக்கிறது...???!

அண்மையில் ஒரு பாடசாலை ஆசிரியை.. 10 வயது மாணவனை தனது பாலியல் தேவைகளுக்காக பாவித்தது கண்டறியப்பட்டது. ஆக.. pedophiles என்பவர்கள் ஆண்கள் என்ற வடிவில் தான் சமூகத்தில் உள்ளர் என்பதை மட்டும் காட்டுதல் பெண் pedophiles சமூகத்தில் சுதந்திரமாக உலவ வகை செய்யும் என்பது மட்டுமன்றி pedophiles என்போர்.. பல வரையறைகளோடு.. உலகில் உலவுகின்றனர் என்பதுவும்.. அதுவும் இன்றைய இணையவலையில் கணணியூடு அறிமுகமாகும் மனிதர்களின் வாயிலாக அதிகம் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

"cyber-sex predators" என்று குறியிடப்படும் வகைக்குள் இருபாலாரும் இணையத்தில் இருப்பது குறித்தும் நாம் பிள்ளைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கு கூட அறிவுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக கணணியோடு.. காலம் தள்ளும் உலகமறியாத பிள்ளைகள்.. இவர்களின் இரையாவது உலகில் அதிகரித்து வருகிறது என்ற வகையில். :):lol:

Edited by வலைஞன்
அவசியமற்ற திணிப்புகளையும், திசை திருப்பல்களையும் தவிர்க்கவும்!

பதிவுகளுக்கும்

கருத்துகளுக்கும்

நன்றி

மனம் திறந்து பேச வேண்டிய விடயங்கள்

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் தாத்தா பெண்களைப் பற்றிய புத்தகங்கள் என்னட்ட இல்லை ஆனால் பக்கச் சார்பாக எதையும் காட்ட நினைக்கேல்ல...இங்கயும் அண்மையில் 30 வயது ஆசிரியர் ஒருவர் 15 வயது மாணவனைப்பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார்.

  • தொடங்கியவர்

oedipus complex ,electra complex , penis envy , castration anxiety இப்பிடி நிறைய விசயங்கள் இருக்கிறதால poet சொன்னது போலவும் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது ஆனால் நான் அதுபற்றி இதுவரை அறியவில்லை எதுக்கும் prof ட்ட கேட்டுச் சொல்றன். அவருக்கும் மகள் இருக்கு என்ன வகுப்புக்கு வெளில பிடிச்சு விடாட்டல் சரி.

பூனைக்குட்டி இளைஞன் அண்ணான்ர கேள்வியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்??

Edited by Snegethy

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுறுப்பை காட்டும் சிப்பர் மேன்களுக்கு எதிராக??

சிறார்கள் முதல் வயது வந்தவர்கள் வரை ஊடகங்கள் திரைப்படங்க ளுனூடாக வீர சாகசங்களை புரிந்துள்ள SpiderMan, Bat Man, Supper Man போன்ற மனிதர்களைப் பற்றி அறிந்துள்ளார்கள் அது அவ்வாறிருக்க ஆணுறுப்பைக் காட்டும் சிப்பர் மேன் மனிதர்களும் (ZIPPER MAN) எம்மத்தியில் இருப்பது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண் ஊழியர்கள் தொழில் செய்யும் பிரதேசங்களில் பாதையின் இருபுறங்களில் நின்றபடி தமது ஆணுறுப்பை காட்டும் மனிதர்கள் இருப்பது இரகசியமல்ல. சுதந்திர வர்த்தக வலயத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் வீதிகளிலும் பேரூந்துகளிலும் புகையிரதத்திலும் இவ்வாறான மனிதர்களை காணமுடியும்.

திறந்த பொருளாதாரத்தின் பெறுபேறாகத் தோன்றி சுதந்திர வர்த்தக வலயத்தை அண்டிய பகுதிகளில் தொழில் செய்யும் பெண்களை இலக்குவைத்து அவர்களைக் இம்சைப் படுத்துவதற்காக குறிவைத்து தந்திரோபாயங்களை மேற்கொள்ளும் ஓருசில பொல்லாத ஆண்கள் அன்றுபோல் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்பெண் ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் இம்சைகள், வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் பகல் இரவு வேறுபாடின்றி நடைபெறுவதோடு அவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையும் காணமுடிகின்றது. இப்பெண்கள் இரவு வேலையை முடித்துவிட்டு விடுதிக்குவரும் பாதையின் இருபுறங்களிலும் விசேடமாக கட்டுநாயக்காவை அண்டிய வெலபடைவீதி,அவரிவத்த, கோவின்ன, 18வது மைற்கல் ஆகிய பகுதிகளில் இவ்வாறான ஆண்கள் கூடுதலாக உலாவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியின் இரண்டு பக்கங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் இரவு மின்விளக்குகளை வேண்டுமென்றே கல்லெறிந்து தகர்க்கும் இவர்கள் பெண்களை இருளில் நடக்கச் செய்து தங்கள் ஆசைகளை தணித்துக்கொள்ள இராப்பொழுதை பயன்படுத்துகின்றனர். அது மாத்திரமின்றி இவ்வாறான செயற்பாடுகளின் இறுதி வடிவமாகத் கடத்தல்கள் பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைகள் வரை தொடர இடமளித்துவிட்டு நாங்கள் மௌனம் சாதிக்க வேண்டுமா?

ஓருவரின் விருப்பம் தூண்டுதல் மற்றும் வரவேற்பு இல்லாமல் அநீதியானதும் பாதகமானதுமான முறையில் மேற்கொள்ளப்படும் பாலியல் இயல்பு கலந்த அச்சுறுத்தல் வன்முறைகள் என வரைவிலக்கணம் செய்யப்படுவதோடு இது உடல்ரீதியான வாய்மூல மற்றும் கட்புல ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றவியில் நடவடிக்கையும் ஆகும். 1995ம் ஆண்டு 22ம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட இலங்கை தண்டனை விதிகள் கோவையின் 345வது வாசகத்தின்படி பாலியல் வன்முறைகள் 5 ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றச்செயலாகக் கருதப்படும் அதேவேளை அபராதத்தின் மூலமேனும் அதை பூர்த்தி செய்ய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வல்லுறவுக்கு இலக்கான பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகையொன்றையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

எமது நாட்டின் அதிஉயர் சட்டமாகக் கருதப்படும் இலங்கை அரசியல் யாப்பின் 14 • ஏ வாசகத்தின் கீழ் இலங்கை பிரஜையொருவருக்கு இலங்கையினுள் போக்குவரத்துச் சுதந்திரமும் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கான சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

நிலமை இவ்வாறிருக்க தனியாகப் பிரயாணிப்ப்பதற்கான சுதந்திரமும் இயலுமையும் இந்நாட்டு ஆண்களுக்கு இருப்பதும் பெண்களுக்கு இல்லாதிருப்பதும் யாவரும் அறிந்த ஓரு விடயம். இப்பிரச்சினையை நாம் ஆழமாக ஆய்வு செய்து கூடுதலாக வல்லுறவுக்கு இலக்காவது பெண்களே. இது பற்றிய முறைப்பாடுகளை செய்யும் போது பொலிசார் அல்லது சமூகத்தின் ஏனையவர்கள் இது குறித்து தெரிவிக்கும் பிரதிபலிப்பு மிகவும் கவலைக்குரியது. இவ்வாறான மனிதர்களை ஓழிப்பதற்கு பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதும் அவ்வாறான ஓரு நபரேனும் சட்டத்தின் பிடியில் அகப்படாதிருத்தல் வேதனைக்குரிய விடயமாகும்.

அவ்வாறாயின் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படாதிருக்கின்றன? இதை ஓழித்து நீதியை நிலைநாட்டுதல் அரசின் கடமையா?அதிகாரிகளின் கடமையா? இல்லாவிட்டால் இது சமூகப் பிரச்சனையா? என்பது இன்று எம்மத்தியில் காணப்படும் பாரிய பிரச்சினையாகும்

இந்தியாவில் பேரூந்தில் புகையிரதத்தில் அல்லது ஏதாவதொரு இடத்தில் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு இலக்காகும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் சுற்றியுள்ள பயணிகளின் உதவியுடன் பாலியல் சேட்டை விடும் நபர் அடித்து விரட்டப்படுவார் அவ்வாறல்லா விட்டால் சாரதி, நடத்துனரின் உதவியுடன் குறித்த நபர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார் ஆனால் இலங்கையின் நிலை எத்தகையது? பெண்ணொருவர் பஸ் வண்டியினுள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாலும் அதை காணாத குருடர்கள் போல் மௌனமாக இருக்கும் நபர்கள் எத்தனை பேர்? எனவே இது சமூகப்பிரச்சனை என்பதை நாம் ஏன் உணரவில்லை?

சுதந்திர வர்த்தக வலயப் பெண்களுக்கு மட்டுமன்றி இலங்கையின் ஒட்டுமொத்தப் பெண்கள் சந்ததியினரும் சுதந்திரமாக பயணிக்கும் வாய்ப்பு இருத்தல் வேண்டும். எனவே இதனை ஒழிப்பதற்கு நிறுவனங்களும் கொள்கை வகுப்பாளர்களும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் வல்லுறவில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்டு சிவில் உடையில் கைது செய்யும் வேலைத்திட்டமொன்றைப் பாதுகாப்புப் பிரிவினர் செயற்படுத்த வேண்டும். பாலியல் வன்முறைகள் தொடர்பில் மக்களுக்குத் தொடர்ந்தும் அறிவூட்டுதல் மற்றும் குறுகிய காலத்தில் அவை மறக்கப்படுவதை தவிர்த்தல் இதைத் தனியாக ஒழிக்க முடியாததால் அனைவரின் ஒத்துழைப்புடனும் அது தனக்கு தாய்க்கு மனைவிக்கு அல்லது தனது சகோதரிக்கு நேர்ந்துவிடக் கூடுமென்பதை மனதில் கொண்டு அதை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும்.

குறித்த தரப்பினரும் சமூகமும் இப்பிரச்சனையை பாராதூரமானதொன்றாக எடுத்துக் கொள்ளாமையினாலும் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியமையினாலும் அன்று முதல் இன்று வரை பெண்கள் வன்முறைகள், இம்சைகள், துன்பங்கள் போன்வற்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செலுத்தும் அந்நியச் செலவாணியைப் பெற்று கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்கின்ற சுதந்திரவலயப் பெண்களினதும் இடம் பெயர்ந்துள்ள பெண் ஊழியர்களினதும் உரிமைகளை வென்றெடுத்தல் ஒட்டுமொத்த இலங்கையர்களின் பாரிய பொறுப்பாகும்.

http://udaru.blogdrive.com/archive/489.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி இளைஞன் அண்ணான்ர கேள்வியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்??

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அக்கா.............. sexu abuse எண்டதுக்குள்ள நிறைய விசயங்கள் வரும்.... அது தனிய உடல் தொடுதல்களோட மட்டும்....... சம்மந்தப்பட்டதில்லக்கா..... நம்பிக்கைத் துரோகம் என்ட பக்கத்தாலயும் பாக்க வேணும்.... poetஅண்ணா சொன்னது அரைவாசி சரி.... ஆனா எல்லா நேரங்களிலயும் அப்பிடித்தான் எண்டு நாங்க நினைக்கத் தேவைல்ல..... இந்த abuse ஆல நீண்டகால பாதிப்புகள் இருக்கு..... உளவியல் தாக்கங்கள் நீண்டகாலத்துக்கு இருக்கும்..... இப்பிடி பாதிக்கப்பட்டாக்களே பிறகு இன்னொரால abuse பண்ற நிலமைக்கும் போவினம்.... இத விபரமா எழுதோணும்... நான் இப்ப வேற இடத்தில நிக்கிறன்... அதால ஆறுதலா பிறகு எழுதுறன்........

  • தொடங்கியவர்

இப்பிடி பாதிக்கப்பட்டாக்களே பிறகு இன்னொரால abuse பண்ற நிலமைக்கும் போவினம்.... இத விபரமா எழுதோணும்... நான் இப்ப வேற இடத்தில நிக்கிறன்... அதால ஆறுதலா பிறகு எழுதுறன்........

Paul ம் 6 வயதுச் சிறுமியைத் தான் abuse பண்ணியதாகச் சொல்லியிருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு காத்தாலை கக்கூசுக்கு போறதிலை பிரச்சனை எண்டு கவலை நீங்கள் என்னவெண்டால் சாப்பாட்டு மேசையிலை சாப்பிட முள்ளுகரண்டி இல்லையெண்ட பிரச்சனை பற்றி கதைக்கிறீங்கள் இந்த பிரச்சனை எங்கையோ ஏதோ ஒண்டிரண்டு நடக்கிற பிரச்சனை ஆனால் நித்தம் தினம் ஒவ்வொரு தமிழாக்கள் வீட்டிலையும் பெண்களிற்கு சாமத்திய சடங்கு எண்ட பெரிலை எவ்வளவு பெரிய வன்முறை சீர்கேடு நீங்கள் சொன்ன பாலியல் சீர்கேடு நடக்கிது ஏனெண்டால் அது கலாச்சாரமாம் இதை பற்றி தயவு செய்து கதைக்க வேண்டாம்: உங்கடை பெட்டை பிள்ளையளுக்கு செய்யாமல் இருங்கோ அதுவே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரி

கலியாணம் என்ற பெயரில் பாலியல் வல்லுறவு நடக்கின்றது? அதைத் தடுக்க என்ன செய்யலாம்? B)

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரி

கலியாணம் என்ற பெயரில் பாலியல் வல்லுறவு நடக்கின்றது? அதைத் தடுக்க என்ன செய்யலாம்? B)

அப்படிப் பார்த்தால் சாத்திரியும் குற்றவாளிக் கூண்டில் நிற்கக் கூடும்.

திருமணமான பின்னர் அல்லது காதலிக்கும் போது..பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதில் அதிகம் பெண்களாக உள்ளனர். காதலிக்கும் போது கூட அருகிருந்து கட்டாயப்படுத்தி கசாமுசா பண்ணுறது.. ஆசைவார்த்தைகளால் தூண்டுவது.. ஆபாச கோணங்களில் படம்பிடித்து ரசிப்பது... பிளக் மெயில் பண்ணுவது.. பின்னர்.. பெண்களை கைவிட்டு ஓடுறது ( கவனிக்கனும் பெண்களும் இப்படி ஆண்களைத் தூண்டி பாலியல் சித்திரவதை செய்வதும் நடக்கிறது. ஆனால் ஒப்பீட்டளவில் அது குறைந்த சதவீதத்தில் இருக்கிறது எமது சமூகத்தில்.. பிற சமூகங்களில் அது தாராளம்) இப்படியும் பாலியல் தொந்தரவுகள்.. துஸ்பிரயோகங்கள்.. பல வகைகளில் தினமும் நடக்கிறது. இது ஆண்களுக்கு எதிராகவும் நடக்கிறது.. பெண்களுக்கு எதிராகவும் நடக்கிறது என்ற கோணத்தையும் பார்க்க மறந்திடாதீர்கள். :):D

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல நெடுங்காலபோவான்.

நாங்கள் சாமத்தியவீட்டை நீக்கி விட்டு, நம் வரும்கால சந்ததியினரை அந்த வயதில் டேட்டிங் அனுப்புவோம். இதன் மூலம் அன்று ஆரியனுக்கு வால்பிடித்த பெருமையை மேலைத்தேயனுக்குப் பிடித்து, வால்பிடிக்கும் கொள்கையைக் கொண்டு செல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.