Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

790 பள்ளிப் பிள்ளைகளைக் கொல்லும் சிறீலங்கா விமானப்படையின் திட்டம் முறியடிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.

17_01_08_kli_07.jpg

புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம்.

பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமது நாசகார நோக்கத்துக்கான இலக்குகளை அடைய முடியாத விமானிகள்.. இலக்குகளைச் சுற்றிய பகுதிகளில் குண்டுகளைப் போட்டு விட்டு விமானங்கள் தப்பிப் பறந்துள்ளன. இதனால் ஒருவர் பலியாகி 7 பேர் காயமடைந்துள்ளனர்.

17_01_08_kli_18_66328_445.jpg

விமானத் தாக்குதல் வலிந்து ஓய்வுக்குக் கொண்டு வரப்பட்ட பின் மக்கள் பாதுகாப்பிடங்களை நோக்கி ஓடும் பதட்டமிகு காட்சி.

17_01_08_kli_13_66324_218.jpg

விமானப்படை வீசிய குண்டுகளில் ஒன்று நிலத்தை ஊடுருவி வெடித்ததில் ஏற்பட்ட 20 அடி ஆழமான குழி.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24320

Edited by nedukkalapoovan

20080117008.jpg

மொனராகலை பஸ்ஸைப் போல் நூறை, இதற்காகப் போட வேண்டும்!!

சர்வதேசத்தை ஒருபுறம் வைத்து விட்டு, குட்டுபவனுக்கு நோ என்றால் என்ன என்று புரிய வைக்க வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் மூலைமுடுக்கெங்கும் தனிநபர் கையாளக்கூடிய நெடுந்தூரம் சென்று குறிதவறாமற் தாக்கும் விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கொண்டுதிரியும் போராளிகள் நிறையவேண்டும். அத்தகைய ஆயுதப் பெருக்கத்தி;கு புலம்பெயர் சமூகம் தனது முழுப்பங்களிப்பையும் செய்யவேண்டும். ஏவுகணைகளைவிட கையால் இயக்கக்கூடிய விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளே இந்த நெருக்கடியான கட்டத்தில் தமிழனைப் பாதுகாக்கும் செலவு குறைந்ததும் மிகவும் பயனுள்ளதுமான ஆயுதங்களாக இருக்கும். அஞ்சா நெஞ்சங்கொண்ட போராளிகள் நிறைந்த தேசத்தில் எதிரியின் விமானங்கள் குருவிகளைப்போல் சுடப்பட்டு தலைகுப்புற விழும் காட்சிகள் இனி விரைவில் அரங்கேறும்.

மோட்டுச் சிங்களவனின் விமானம் போடுற குண்டே 20 அடி ஆழத்தில கிடங்கு கிண்டு எண்ணத்தான் யோசிக்கிறன் பழந்தமிழர்களின் புஸ்பக விமான போட்ட குண்டு கிண்டித்தான் பராக்கிரமபாகு சமுத்திரம் வந்ததோ எண்டு?

மோட்டுச் சிங்களவனின் விமானம் போடுற குண்டே 20 அடி ஆழத்தில கிடங்கு கிண்டு எண்ணத்தான் யோசிக்கிறன் பழந்தமிழர்களின் புஸ்பக விமான போட்ட குண்டு கிண்டித்தான் பராக்கிரமபாகு சமுத்திரம் வந்ததோ எண்டு?

உங்கள் கோவம் நியாயமானது ஆனால் எல்லாவற்றிலும் கிண்டலடிப்பது வரவேற்க தக்கதல்ல :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச் சிங்களவனின் விமானம் போடுற குண்டே 20 அடி ஆழத்தில கிடங்கு கிண்டு எண்ணத்தான் யோசிக்கிறன் பழந்தமிழர்களின் புஸ்பக விமான போட்ட குண்டு கிண்டித்தான் பராக்கிரமபாகு சமுத்திரம் வந்ததோ எண்டு?

ஓமோம்.. சிங்களவன் 20 அடி கிண்டுற குண்டு போடுறான்.. எனவே புலிகள் ஆயுதத்தை எனியும் தூக்கிப் பிடிக்கிறது சரியா.. இல்ல கைவிட்டிட்டு சரண்டர் ஆகிறதுதான் புத்திசாலித்தனமா என்றதைப் பற்றி நாங்கள் புலம்பெயர்ந்த மக்கள் தேடல் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாமல் இருக்கிறோமோ என்ற ஆதங்கத்தில் தான் எழுதிறன்.. என்று ஒரு அளவு அளந்தால்.. புஷ்பக விமானம் போட்ட குண்டு தோண்டியா பராக்கிரம சமுத்திரம் வந்தது என்பதை தேடி முடிக்கலாம்..! :rolleyes::rolleyes:

உங்கள் கோவம் நியாயமானது ஆனால் எல்லாவற்றிலும் கிண்டலடிப்பது வரவேற்க தக்கதல்ல :rolleyes:

ஏதாவது சம்பவம் நடந்தால் (சம்பிரதாயத்திற்கு?) சீரியசாக கதைக்கிறியள் மற்ற நாட்கள் எல்லாம் கற்பனைகள் கனவுகள் கிண்டலடிகள். நான் சம்பவம் நடந்துட்டுது எண்டுட்டு சம்பிரதாயத்திற்கு சீரியசாக கதைக்காது தொடர்ந்து கிண்டலடிக்கிறன். சம்பிரதாயம் பழக்க வழக்கம் தெரியாட்டி வரவேற்க மாட்டியள் எண்டு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவரால் விரும்பியபடி நன்கு கதைக்கமுடியும் எழுதமுடியும். நாங்கள் வெளியில் இருக்கிறம் என்டதுக்காக தமிழினத்தின் ஏகோபித்த எண்ணத்தையும் தேவைகளையும் விட்டு விலகிச் செல்ல முடியாது. கதையைக் குறைத்து எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்போம். இதோ ஆயிரம் வார்த்தை சொல்லும் இந்தப் படம் ஒரு உதாரணம்.

நன்றி வணங்காமுடி அவர்கட்கு

இப்போ செயல்மட்டும்தான் தேவை

வாய்வீச்சல்ல

ஏவுகணையே நியத்தில்தேவை

நாளைக்கு B 52வும் F- 14 வந்து குண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்ப எல்லாம் எந்த ஏவுகணையால அடிக்கிறது. அதற்கேற்ப தயார்ப்படுத்தல்கள் அவசியம். அமெரிக்க தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளக் கூடிய பலம் புலிகளுக்கு வர வேண்டும். அப்போதுதான் இராணுவ ரீதியில் எம்மால் சிங்களவனின் போர் வெறிக்கு முடிவு கட்ட முடியும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயமான கருத்து நெடுக்ஸ் அண்ணை. இவ்வளவு காலமும் தமிழனை துண்டு துண்டா பந்தாடினவை இனி ஒரேயடியாப்போட்டு நசுக்கப்போகினம். இனியாவது எல்லாத் தமிழனும் ஒன்றிணைந்து நின்றால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி பயந்தால் எப்படி உயிர் வாழ்வது. யாழ் களம் செய்திகளை பிரசுரிக்கவே பயப்படுது. சாதி சமயம் என்றால் பயமில்லாமல் பிரசுரிக்கும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு டீ 52வும் கு- 14 வந்து குண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்ப எல்லாம் எந்த ஏவுகணையால அடிக்கிறது. அதற்கேற்ப தயார்ப்படுத்தல்கள் அவசியம். அமெரிக்க தொழில்நுட்பத்தை எதிர்கொள்ளக் கூடிய பலம் புலிகளுக்கு வர வேண்டும். அப்போதுதான் இராணுவ ரீதியில் எம்மால் சிங்களவனின் போர் வெறிக்கு முடிவு கட்ட முடியும்..!

நாங்கள் என்றுமே தயாராகவே உள்ளோம்

கடைசிப்பணம் சேர்ப்பு என்று அவர்களேதான் சொன்னார்கள்

நாங்கள் இதோடு எல்லாத்துக்கும் காணும்என்று எதையும் நிறுத்தவில்லை

நாங்கள் என்றுமே தயாராகவே உள்ளோம்

ஏவுகணைக்குப்பின்பும்இதோடு எல்லாத்துக்கும்

காணும்என்று எதையும் நினைக்கவில்லை

அதற்கு பின்பும் அலுவல் இருக்கு

வருமினம் என்பதால் இப்பொழுதே தயாராகவே இருக்கின்றோம்....

இதற.க மேல் வெளிப்படையாக யாரும் எழுதி உங்கள் சந்தேகத்தை தீர்ப்பார்களாக???.......

எம்மவரால் விரும்பியபடி நன்கு கதைக்கமுடியும் எழுதமுடியும். நாங்கள் வெளியில் இருக்கிறம் என்டதுக்காக தமிழினத்தின் ஏகோபித்த எண்ணத்தையும் தேவைகளையும் விட்டு விலகிச் செல்ல முடியாது. கதையைக் குறைத்து எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்போம். இதோ ஆயிரம் வார்த்தை சொல்லும் இந்தப் படம் ஒரு உதாரணம்.

17_01_08_kli_18_66328_445.jpg

இந்தப் படம் சொல்லும் செய்தி மக்கள் இடம் பெயர்ந்து மரங்களிற்கு கீழ் வசிக்கிறார்கள். அவர்களிற்கு தமிழர் தொண்டுநிறுவனங்கள் மூலம் உதவி செய்யுங்கள். அவர்கள் சோர்வடையாது புனர்வாழ்விற்கான உதவிகளை மட்டும் தான் புலிகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். புலிகளிற்கு ஆயுத தொழில்நுட்ப பொருளாதார தேவைகள் என்று எதுவும் இல்லை என்பதை ஏற்கனவே பல முறை மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லிவிட்டார்கள். இந்தப் படத்தின் பின்னணிக் காட்சியில் கூட அதற்கான ஆதாரத்தைக் காணலம். புலிகள் வில்லு அம்புகளோடு 20 அடி தூரத்தில் நின்று சண்டை பிடித்திருந்தால் படத்தினுள் 1..2 பேராவது வந்திருப்பார்கள். உண்மையில் புலிகள் 20 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் நின்று தான் சண்டை பிடிக்கிறார்கள். அந்தளவ பெரிய இடவெளி சிங்களவருக்கும் தமிழருக்குமான தொழில்நுட்ப மேலாண்மை. அதுவும் இன்ரக் கூலரின் இருந்த படி மடிக்கணினியின் திரையில் பார்த்த படி பொத்தான்களை அமிழ்த்த ஒவ்வொரு களமாக விரிகிற சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தம். அது தான் கூகிள் ஏத்தில பார்க்கிறமாதிரி ஆனால் களமுனைகளை லைவாக பார்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர் அனுப்பின 5...6 செய்மதிகள் மேல சுத்துது.

ஆனா மோட்டுச் சிங்களவங்கள் கதையே படு சோகக் கதை. வறுமை வேலைவாய்ப்பின்மை போன்றவற்றாலை சேர்ந்தவங்களில 1...2 பேர் மகிந்தவின் பொய்ப்பிரச்சாரங்களை நம்பி காசாசையில பத்தையளுக்காலை தவண்டு வந்து போற வாற வாகனங்களுக்கு எல்லாம் தாறுமாறாக கண்ணி வெடி வைக்கிறாங்கள். அதில குருடன் பெண்டாட்டியை அடிச்ச மாதிரி சில அசம்பாவிதங்கள் நடந்திருக்குத்தான். மற்றும் படி களநிலமை இப்ப நினைச்சுப் பார்கேலாதமாதிரி எங்கையே நிக்குது

இன்று எம் போராளிகளால் அந்தக்குழந்தைகள் காப்பற்றப்பட்டு விட்டார்கள் வாழ்நாள் பூராகவும் அவர்கள் காப்பற்றப்படவேண்டும். அது புலம் பெயர்ந்த நம்மவர்களின் கையில்தான் தங்கியுள்ளது

ஒன்றுமே புரியவில்லை

யாருக்காவது புரிந்தால் தெரிவிக்கவும்

இன்று எம் போராளிகளால் அந்தக்குழந்தைகள் காப்பற்றப்பட்டு விட்டார்கள் வாழ்நாள் பூராகவும் அவர்கள் காப்பற்றப்படவேண்டும். அது புலம் பெயர்ந்த நம்மவர்களின் கையில்தான் தங்கியுள்ளது

இது அனைத்து புலம்பெயர் தமிழர்களின் கடமை

அதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர்

நிச்சயமாக அதை எல்லோரும் காணும் நாள்வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான், நீங்கள் மோட்டுச் சிங்களவன், மோட்டுச் சிங்களவன் என்று இந்தக் களத்திலுள்ள தமிழர்களைக் கிண்டலடிக்கிறீர்களா அல்லது, நியாயமாகவே சிங்களவன் செய்யும் வேலைக்காகக் கோபப்படுகிறீர்களா ?

நீங்கள் கிண்டல்தான் அடிக்கிறீர்கள் என்றால் வழக்கம்போல உங்கள் கருத்துக்களை தூக்கிக் குப்பையில் போடுவதுதான் சரி.

ஏதாவது பிரயோசனமாகக் கதையுங்கள், முடியவில்லை என்றால் ....பேசாமலாவது இருங்கள்.எல்லோருக்கும் நல்லது !

குறுக்கால போவான் சொல்லுற்றதை கேட்க 'வாய் சொல்லில் வீரர் ரடி " எண்ட பாட்டுதான் ஞாபகத்தில் வருகுது...

புலிகளுக்கு ஆயுதம் வாங்கிறம் எண்டு சிலரை தூண்டி விட்டு வரசொல்லி அமெரிக்காவிலையும் கனடாவிலையும் பிடிச்சவையாம் கேள்விப்பட்டன்... அவையோட சேர்த்து கதையை சொல்லி தேசியத்தை பலப்படுத்திய TRO வையும் தடை செய்தாச்சு... இப்படியே தொழில் நுட்டம் சேக்கிறம் எண்டு கிழம்பி செய்யுற உருப்படியான வேலையையும் செய்யாமல், இருக்கிறதையும் கெடுத்து வெட்டி கதை கதைக்கிறதுதான் நம்மட தொழிலா போச்சு...

TRO தடை செய்யபட்டதுகு ஆயுதம் வாங்குறம் எண்டு கிழம்பின குறுக்கால போவானும் ஒரு காரணம்...

ஆமி என்னதை கொண்டு அடிக்க போறான் எண்டதை பாத்து. என்ன ஆயுதம் வாங்க வேணும், என்ன தொழில் நுட்பம் வேணும் எண்டதை இப்ப எல்லாம் புலம் பெயர்ந்தவை முடிவெடுத்து அனுப்பி வையுங்கோ... கோயில் மணியளையும் அதுக்காக அடகு வைப்பம்...

ஊரிலை வியாபாரம் செய்து காசுகளை எடுத்தும், புலிகளை வைத்து விவசாயம் செய்து ஊரிலை இருக்கிற மக்களை புலிகள் காப்பினம்... செஞ்சோலையையும் , முதியோர் இல்லங்களிலையும் இன்னோரன்ன நிலையங்களிலையும் இருக்கிற சனம் போராளிகளின் உணவை பங்கு போட்டு சாப்பிடட்டுக்கும்...

சொல்லி போட்டு சில விசயத்தை செய்யலாம், செய்து போட்டு சில விசயத்தை சொல்லலாம்.... சிலவிசயங்களை செய்யலாம் சொல்ல முடியாது...

Edited by தயா

ரகுநாதன் அண்ணை எனக்கு சிங்களவரில இருக்கிற ஆத்திரத்துக்கு 4 பேரை வெட்டிச் சாய்த்தாலும் அடங்குமோ எண்டு சந்தேகம். எனக்கு முடியுமோ முடியாதோ எண்டது 1 பிரச்சனை ஆனா இங்கினேக்கை அப்பிடி எதாலும் அரெம்பண்ணினாலே உடன் பொலிஸ் வந்து பிடிச்சு உள்ளுக்கை போட்டுவாங்கள். அதான் ஆறுதல்பட மோட்டுச் சிங்களவங்கள் என்று எழுதுறன். நான் ஏன் சும்மா தமிழர்களை கிண்டலடிக்கிறன். அவர்களுக்கு என்ன குறை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெட்டிலுள்ள செய்திகளையும், படங்களையும் பாருங்கள். விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக அந்தச் சிறுவர்களும் அவர்களது பெற்றோரும் படும் பாட்டைப் பாருங்கள். மர நிழல்களிலும், பதுங்கு குழிகளிலும் எமது சமூகம் அடைக்கலம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது ! 790 பள்ளிச் சிறுவர்களின் உயிரெடுபட்டிருக்கும், தெய்வாதீனமாகத் தப்பிவிட்டார்கள்.

ஆனால் நாங்கள் இந்தக் களத்தில் யாரையோ கிண்டலடிப்பதற்காக எமது நேரத்தைப் பாவிப்போம். எமக்கு வேறு என்ன வேலை ? ஊரில் நடக்கும் மனித அழிவுகளெல்லாம் எமக்கு இந்தக் களத்தில் யாரையாவது கிண்டலடிப்பதற்கவாவது பயன்படுகிறதே ? அதுபோதும் நமக்கு !

இனி எமது பாடு பரவாயில்லை, ஊரில் நடக்கப்போகும் அழிவுகள் இனிக் கூடத்தானே போகுது ? நாம் சந்தோஷமாக எமது கருத்துக்களை எழுதித் தொலைப்போம் ?!

தமிழர்களின் அவலமா முக்கியம் ? எமது கருத்துத்தானே முக்கியம் ?! நாம் தொடர்ந்து யாரையாவது கிண்டலடித்துக் கொண்டிருப்போம் !

இது புலிகளைப் போருக்கு இழுக்கும் நடவடிக்கை. குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி, புலிகளை ஆத்திரமுறச் செய்யலாம். அல்லது தாக்குதல் நடந்திருப்பின், புலிகள் எதிர் நடவடிக்கைகள் எதிர்க்கவில்லை என தமிழ்மக்கள் புலிகள் மீது ஆத்திரமுறலாம். இப்படி ஏராளமான விடயங்களை அரசு கையாளப்போகிறது. விமானத்தை எதிர்த்துத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் நம்பிக்கையுடனிருக்கலாம் .

தமிழ்நெட்டிலுள்ள செய்திகளையும், படங்களையும் பாருங்கள். விமானக் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக அந்தச் சிறுவர்களும் அவர்களது பெற்றோரும் படும் பாட்டைப் பாருங்கள். மர நிழல்களிலும், பதுங்கு குழிகளிலும் எமது சமூகம் அடைக்கலம் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது ! 790 பள்ளிச் சிறுவர்களின் உயிரெடுபட்டிருக்கும், தெய்வாதீனமாகத் தப்பிவிட்டார்கள்.

ஆனால் நாங்கள் இந்தக் களத்தில் யாரையோ கிண்டலடிப்பதற்காக எமது நேரத்தைப் பாவிப்போம். எமக்கு வேறு என்ன வேலை ? ஊரில் நடக்கும் மனித அழிவுகளெல்லாம் எமக்கு இந்தக் களத்தில் யாரையாவது கிண்டலடிப்பதற்கவாவது பயன்படுகிறதே ? அதுபோதும் நமக்கு !

இனி எமது பாடு பரவாயில்லை, ஊரில் நடக்கப்போகும் அழிவுகள் இனிக் கூடத்தானே போகுது ? நாம் சந்தோஷமாக எமது கருத்துக்களை எழுதித் தொலைப்போம் ?!

தமிழர்களின் அவலமா முக்கியம் ? எமது கருத்துத்தானே முக்கியம் ?! நாம் தொடர்ந்து யாரையாவது கிண்டலடித்துக் கொண்டிருப்போம் !

ரகுநாதன் அண்ணை, தமிழருக்கு தானே தாராளமாக தெய்வங்கள் இருக்கு. பாத்தியளே இண்டைக்கு கூட அந்த ஒரு தெய்வத்திலை ஒண்டின்ரை தீனத்தாலை காப்பற்றப்பட்டிருக்கிறார்க

சரி எல்லாரும் கிழம்புங்கோ... ஆயுதம் வாங்க காசு சேக்கிறம் எண்டு TRO வைபோல வெண்புறாவையும் தடை செய்ய வைக்கலாம்....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசுக்கு இப்போ கடற்காச்சல் என்று சொல்லுறாங்க :rolleyes: இனி அனேகமாக சுருண்டு படுக்க வேண்டியது தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.