Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோகா வகுப்பு சிறுவருக்கு சரியா பிழையா?

Featured Replies

என் மகனை கராத்தே வகுப்புக்கு அனுப்ப விரும்புகின்றேன். கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தில் யோகாவும் (யோகாசனம்) சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு 5 வயது சிறுவரை யோகாக்கு அனுப்புவது சரியா? யோகா தீவிரமான உணர்வுகளை மழுங்கடித்து சாமியார் மாதிரி மாற்றி விடுமா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு. இந்தச் சந்தேகம் சரியா? பொதுவாக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ விரும்புகின்ற எனக்கு, அவனை யோகா போன்ற ஒன்றின் மூலம் மழுங்கடிக்க முயல்கின்றேனா என்ற பயம் இருக்கு,

இதில் உங்கள் யாருக்கேனும் அனுபவம் உண்டா? உங்களில் யாரேனும் யோகா பயின்றோ அல்லது உங்கள் பிள்ளைகளை யோகா வகுப்புக்கு அனுப்பியோ அனுபவம் இருக்கா?

நன்றி

பெரிய ஆக்களோட சின்னப்பிள்ளைகளும் ஒன்றாக யோகாசனம் பழகுறது வழமை. சாமியாராய் போறதுக்கும் யோகாவுக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறன். உங்களுக்கு விருப்பம் பிடிப்பு இல்லை, சந்தேகம் என்றால் பிள்ளையை யோகாவுக்கு அனுப்பாமல் விடுறதுதான் நல்லது.

.

சிறுவர்களை கட்டாயம் யோகா செய்ய அனுப்பவேண்டும். கூடவே பெற்றோரும் போய்ப் பழகினா இன்னும் நல்லம். மனக்கட்டுப் பாடு சிறிதளவேனும் வந்தால் கல்வி கற்க இலகு. இசை பழகவும் உதவும். உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். பொடியனுக்கு கொஞ்சம் confidence உம் அதிகரிக்க வாய்ப்பிருக்கு.

தீவிர உணர்வால எந்தப் பிரியோசனமும் இல்லை.

மற்றப்படி இப்பதான் சாமியார் எல்லாம் செக்ஸ் சாமியார்கள் என்று நிரூபணமாச்சே.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டும் கற்றுக் கொடுக்கலாம் ஆனால் இரண்டும் ஒரே காலத்தில் கற்றுக் கொடுப்பது பிழை!

யோகா: மெதுவாக மிக மிக மெதுவாக அந்தந்த இடங்களில் மனசை அழுத்திக் குவித்துச்செய்வது

காற்றை உடம்பசைவுடன் மெதுவாய் உள்ளிழுத்து பின் அதேபோல் மிக மெதுவாய் வெளியேற்றுவது !

கராத்தே : மெதுவாக ஆரம்பித்து வேகமாக மிக மிக வேகமாய் நுரையீரலில் காற்றை நிரப்பி பலமாக வெளி விடுவதும், அப்படியே பலமாய் உள்ளிழுத்தும் செய்வது!

ஊரில் முன்பு நல்லை ஆதீனத்தில் அதிகாலை 4 , 4 /2 மணியளவில் யோகா கற்றுக் கொடுப்பார்கள். அதில் பங்கு கொள்ளும் பலர் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலையில் சட்டநாதர் கோவிலடியில்(கல்வியங்காடு) கராத்தே பயில்வது (சிறுவர்கள் உட்பட) எனக்குத் தெரியும்!

வசதிப்பட்டால் குழந்தைகளுக்கு யோகா மிகவும் நல்லது. யோகா பயிலும் உடல் சுலபமாய் கராத்தேயை ஏற்றுக்கொள்ளும்!

சாமியாராய்ப் போவதென்பதெல்லாம் மிக,மிகப் பெரிய விடயம்! அது அவ்வளவு சுலபமானதல்ல! :rolleyes:

வாழ்த்துக்கள் நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய ஆக்களோட சின்னப்பிள்ளைகளும் ஒன்றாக யோகாசனம் பழகுறது வழமை. சாமியாராய் போறதுக்கும் யோகாவுக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறன். உங்களுக்கு விருப்பம் பிடிப்பு இல்லை, சந்தேகம் என்றால் பிள்ளையை யோகாவுக்கு அனுப்பாமல் விடுறதுதான் நல்லது.

மச்சான் சொல்வது சரி. நான் எனது சிறுவயதில் யோகாசனம் பயின்றிருக்கிறேன். மனதை உடலை கட்டுப்படுத்த அந்தப் பயிற்சிகள் உதவுகின்றனவே தவிர.. சாதாரண மனித உணர்வுகள் வயதோடு எழுவதை தடுப்பதில்லை..! இது எனது அனுபவம் மட்டுமே. ஆளாளுக்கு அனுபங்கள் வேறுபடலாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் முன்பு நல்லை ஆதீனத்தில் அதிகாலை 4 , 4 /2 மணியளவில் யோகா கற்றுக் கொடுப்பார்கள். அதில் பங்கு கொள்ளும் பலர் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலையில் சட்டநாதர் கோவிலடியில்(கல்வியங்காடு) கராத்தே பயில்வது (சிறுவர்கள் உட்பட) எனக்குத் தெரியும்!

நல்லை ஆதினத்தில் தான் நானும் பயின்றேன். அதிகாலையில் எழுந்து.. ஆதினத்திற்கு பயிற்சிக்குப் போவது மிக பெரிய மன அமைதியை மகிழ்ச்சியை தரும் விடயம். அந்த நினைவுகள் எப்போதும் மகிழ்ச்சியானவை. இருந்தாலும் நாங்கள் போர் காலத்தில் வாழ்ந்ததால்.. விழுந்து எழும்பி போய் வாறது. எதிரிகள் தந்த அந்த அமைதியின்மையை தவிர மற்றும்படி யோகப் பயிற்சி உடலாரோக்கியத்திற்கும்.. மன கட்டுப்பாட்டிற்கு.. ஞாபக சக்தியை கூட்டவும்.. நல்ல உதவியாக இருக்கும். நன்றி சுவி.. கடந்த காலத்தை நினைவூட்ட வைத்ததற்கு. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனது மக்களுக்கு JUDO பழக்கினேன்

எனது சின்னவன் 3 வயதிலேயே BABY JUDO ஆரம்பித்தான்

ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அது சூடு பிடிக்கும்

அது விளையாட்டு பயிற்சி என்பதைக்கடந்து ..

வெல்வது யார்

அடுத்த கட்டத்துக்கு தெரிவாவது யார் என்றநிலைக்கு வந்துவிடும்

எனது மக்களுக்கு கறுப்பு பட்டிக்கு ஒருவருடம் இருக்கும்போது...

நிறுத்திவிட்டேன்

காரணம்

அதை தொடர்ந்து தொழிலாகக்கொள்பவர்களுக்குத்தான் அது சரிவரும்.

கிழமையில் 3 நாள் பின்னேரம் அவர்களுடன் இருக்கவேண்டும்

சனி ஞாயிறும் அவர்களுக்காக முழுவேளையும் ஒதுக்கவேண்டும்.

படிக்கும் பிள்ளைகளுக்கு சரிவராது.

கராத்தேயும் இப்படித்தான்.

ஆரம்பத்தில் ஏதாவது பழகியிருப்பது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுப்பதுடன் பயத்தையும்போக்கி அமைதியையும் கொடுக்கும்

யோகா பற்றி எனக்கு எதுவம் தெரியாது.

மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

யோகத்தின் சிறப்புhttp://sarankavin.com/RaviYoga/yoga12.html

யோகக்கலையை கற்பதன் மூலம் அடையக் கூடிய நன்மைகள்

நாடவல்லார்க்கு நமனில்லை கேடில்லை

நாடவல்லார்கள் நரபதியாய் நிற்பர்

தேடவல்லார்கள் தெரிந்த பொருளிது

நாடவல்லார்க்கு கூறலுமாமே

(திருமந்திரம்)

பொருள்: யோகத்தை தெரிவு செய்து அதன்படி ஒழுகுபவர்களுக்கு நீண்ட ஆயுள் பலம் உண்டு அத்துடன் வாழ்வில் பல தீமைகள் சூழாமல் தடுக்கமுடியும். யோகத்தை முறைப்படி செய்பவர்கள் உடலுடன் இருக்கும் போதே தெய்வீக ஒளியுடன் இருப்பர். இதன் அளவற்ற நன்மைகள் அனைத்தும் இதனை தேடித் தேடி பயின்ற வல்லவர்களின் அனுபவமாகும். யோகத்தைப் பயில விரும்புபவர்களுக்கு கற்றுக் கொடுப்பது அவசியம்.

பொது நன்மைகள்:

■யோகம் உடலுக்கும் மனதிற்கும் சிறந்த பயன்தரும்.

■யோகாசனங்கள் உடலுக்கு வனப்பையும் வலிமையையும் தரும்.

■உடல் சார்ந்து மனமும், மனம் சார்ந்து உடலும் இயங்குவதால் யோகம் இரண்டையும் சிறப்பாக மேம்படுத்தும்.

■உடலில் ஏற்படும் நோய்கள் அனைத்தையும், முறைப்படி செய்யும் யோக சிகிச்சையால் குணமாக்கலாம்.

■நோய் நொடிகள் அற்று நீண்ட ஆயுள் கிடைக்கிறது.

■செய்யும் வேலைகள், கல்வி கற்றல் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தக் கூடியதாகவிருக்கும் மற்றும் ஞாபக சக்தியும் கூடும்.

■இரத்த ஓட்டம் சீராகவும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாகவும் இயங்கும்.

■உடல், மன ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக விளங்கும் நாளமில்லாச்சுரப்பிகளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.

■உடற் கழிவுகள் சீராக அகற்றப்படுவதால் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

■தேவையற்ற ஊழைச் சதைகள் பற்றாமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இயற்கையான முறையில் சீராக்கலாம்.

■சிறப்பான முறையில் உடல் பராமரிக்கப்படுவதால் நீண்ட இளமை உடலுக்கு வாய்க்கிறது.

■மனித மனதில் மறைந்திருக்கும் அரிய இரகசியங்கள் மனோ தத்துவங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள யோகம் உதவுவதால் தன்னைத் தானே அறியும் வாய்ப்பு கிடைக்கிறது.

■பலவகையான துன்பங்களுக்குக் காரணம் அறியாமை எனும் இருளும் தன்னறிவற்ற நிலையும் ஆகும். யோகம் தன்னையே தான் ஆராய்ந்து ஞானத்தை தந்துதவுவதால் ஆனந்த வாழ்வு மலர்கிறது.

■ஐம்புலன்களில் ஏற்படும் மந்தமான தன்மையால்தான் வாழ்வில் சலிப்பு ஏற்படுகிறது. யோகக் கலையால் புலன்களை கூர்மையாகவும் பலத்துடனும் செயற்பட வைக்க முடிகிறது.

■கொடுந்துயர் தீரவும் மன அழுத்தம் மறைவதற்கும் மனோ பலமே தேவை. யோகம் மனத்திற்கு மிகுந்த பலம் தருகிறது.

■எதிர் மறைச் சிந்தனைகளே வாழ்வில் மிகக் கடுமையான தீய பழக்கமாகும். யோகத்தைக் கற்பதால் இக் குறைபாடு நீங்கி மன உறுதியும் தன் நம்பிக்கையும் உண்டாகிறது.

■யோகத்தின் முதற்படிகளான இயமம், நியமத்தால் மன மாசுகள் அனைத்தும் நீங்குகிறது.

■மனதில் ஏற்படும் காரணமற்ற பயங்கள் நோய்கள் பற்றிய பயங்கள் அனைத்தும் நீங்க நிம்மதியான பெருவாழ்வு வாய்க்கிறது.

மாணவர்கள், சிறுவர்களுக்கு

■சிறுவர்கள் நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் கேட்டு நடப்பவர்களாகவும் மாறுவர்.

■கல்வியில் சிறந்த முன்னேற்றம் காணப்படும்.

■அதிக ஞாபக சக்தியும் அதி கூடிய கவனமும்; ஏற்படும்.

■படிக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் கூடிய விடயங்களை கிரகிக்கும் தன்மை கிடைக்கிறது.

■மொத்தத்தில் தெய்வீகக் குழந்தகளாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பர்.

இளைஞர் யுவதிகளுக்கு

■உடலின் அகச்சுரங்கும் சுரப்பிகள் சம நிலையில் இயங்க யோகம் உதவுவதால் எவ்வகையான தீய பழக்கங்கள் எதுவும் இல்லாமல் நல்ல பிரஜைகளாக வாழ்வர்.

■சிறந்த மனக்கட்டுப்பாடு உடையவர்களாகவும் இருப்பர்.

வேலைபார்ப்போருக்கு

■கடின வேலை செய்து களைப்படைந்த உடலுக்கு யோகம் ஊக்கம் தரும்

■எவ்வகையான உடல் பலவீனமும் தோன்றாமல் இருக்க யோகம் உதவும்

■இரவில் ஆழ்ந்த உறக்கத்தை தந்து அதிகாலையில் உற்சாகமாக துயில் எழ யோகம் உதவும்.

■அலுவலகம், கணனி போன்றவற்றில் தொழில் புரிவோருக்கு; மிகச் சிறப்பான பலன்களை யோகம் தருகிறது.

■இன்றைய இயந்திர உலகில் மனிதனும் இயந்திரம் போல இயங்குவதால் அன்றாடம் ஏற்படும் உடல் மன இறுக்கத்தை அன்றாடமே வெளியேற்ற யோகக்கலை மிக அதிசயமாக உதவுகிறது. இது தற்கால அவசியம் ஆகும்.

■மன இறுக்கமே 80% உடல் உபாதைகளை தருவதாக நவீன மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. இப்பிரச்சனைகளுக்கு யோகக் கலை ஒரு வரப்பிரசாதமாகும்.

இல்லத்தரசிகள், பெண்களுக்கு

■இன்றைய சமூக வாழ்வில் பெண்களுக்கே பல பொறுப்புகள் சுமத்தப்படுகிறது. வேலை மற்றும் வீட்டுக் கடமைகள் என மிகவும் அவதியுறும் பெண்களுக்கு யோகம் உடல் உள பலமும் நம்பிக்கையும் பெற நிச்சயமாக உதவும்.

■மாதவிலக்கின்போது ஏற்படும் வலிகள் அது சார்ந்த நோய்கள் அனைத்திலும் இருந்து விடுபட யோகம் உதவுகிறது.

■முறைப்படி செய்யும் யோகப்பியாசத்தால் சுகப்பிரவசம் ஆரோக்கியமான, அழகான குழந்தைப் பாக்கியமும் கிடைக்கிறது.

■பல பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலம் அதன் பிறகும் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றுகிறது. இவற்றிற்கெல்லாம் யோகக்கலை ஒர் சிரஞ்சிவியாகும்.

■நிறைவாக தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்வதுடன் பெண்மை சார்ந்த சகல குறைபாடுகளையும் நீக்கி லட்சுமிகடாட்சம் பெற யோகம் உதவுகிறது.

■யோகக் கலைமூலம் முதலாவது 100மூ நன்மைகளை பெண்கள் குறிப்பாக் என்பது வெளிப்படை உண்மையாகும்.

முதியோர்களுக்கு

■முதுமையின் வலிகள், சுமைகள், கவலைகள் அனைத்தையும் வென்று ஆன்மீக வாழ்வு பெற யோகக்கலை மிகவும் உகந்தது.

■யோகக் கலை மூலம் உடல் மன உறுதியை பெறுவதால் தளர்வில்லாமல் மற்றவர்களின் உதவியை நடாமல் தாமே தமக்கு பலமாகவிருக்க உதவுகிறது.

■எழிமையான ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் மூலம் மன அமைதியுடன் வாழமுடியும்.

■மென்மையான தினசரி யோக பயிற்சியின் மூலம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து சகல நோய்களையும் வெல்ல முடியும்.

■தியான பயிற்சியின் மூலம் அறியாமை இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க செய்வதற்கு யோகம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

பொதுவாக யோகத்தின் சிறப்புகளை விரிவாக எழுதுவதென்றால் திருமூலர் திருமந்திரம் போன்ற புத்தகம் போல் எழுதினாலும் பூரணமாக எழுதி முடிக்க முடியாது.

யோகக் கலையின் தந்தையாகிய திருமூலர் பெருமான் பின்வரும் திருமந்திரப்பாடலில் இறைவனே உடலில் இருக்கிறார் என்றும் உடலைக் காக்கும் ஓர் உபாயமே யோகக் கலை எனக் கூறுகின்றார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும்மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்.

(திருமந்திரம்)

உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே யுறு பொருள் கண்டேன்

உடம்புள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந் தோம்புகிறேன்

(திருமந்திரம்)

மனிதராக பிறந்து வாழ்வை பூமியில் வாழ்வாங்கு வாழ்வதற்கு யோகம் எல்லா வழிகளிலும் உங்களுக்குக் கை கொடுக்கும். அழகான றோஜா செடி பல மலர்களைத் தருவதற்கு செடி மட்டும் காரணம் அல்ல அதன் வேர் மண்ணில் மறைந்திருந்தாலும் அதுவே முதல் காரணமாகும். அதுபோல் நாம் எச் செயலைச் செய்தாலும் அது சிறப்புறுவதற்கு றோஜாவிற்கு அதன் வேர் போல் எமக்கு யோகம் உதவும். எமது பாரம்பரியக் கலையாகிய யோகம் இன்று உலக மக்கள் அனைவராலும் போற்றிப் பயிலப்படுகிறது. அறியாமையை நீக்கி நாமும் யோகத்தைப் பின்பற்றி சுகவாழ்வு பெறுவோம்.

http://sarankavin.com/RaviYoga/yoga12.html

நல்லை ஆதீனம் தவிர இன்னொரு இடமும் இருக்கிதல்லோ யாழ்ப்பாணத்தில... எனக்கு இப்ப அது மறந்துபோச்சிது. அந்த இடமும் பிரபலம் யோகா கற்றுக்கொள்ள.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை ஆதீனம் தவிர இன்னொரு இடமும் இருக்கிதல்லோ யாழ்ப்பாணத்தில... எனக்கு இப்ப அது மறந்துபோச்சிது. அந்த இடமும் பிரபலம் யோகா கற்றுக்கொள்ள.

கந்தன் கருணை யோக இல்லமா..??! அதுவும் நல்லூர் பின் வீதியை ஒட்டித்தான் இருந்தது. :)

சிறுவர்கள் இயற்கையாகவே பலவிதமான விளையாட்டுக்கள்/ நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருப்பார்கள். இதில் அவர்களுக்கு எது மிகவும் நல்லது, பிரயோசனமானது, எதில் அவைகள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று அறிந்து அதை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே பெற்றோரின் கடமையும் கூட...

நீங்கள் உங்கள் ஐந்து வயது சிறுவனுக்கு கராத்தே, மற்றும் யோகாசனப் பயிற்சிக்கு அனுப்ப நினைப்பதில் யோசிக்கவேண்டியது இல்லை என்றே நினைக்கிறன்.

சிறுவர்களுக்கு உரிய யோகாசனப் பயிற்ச்சியும் பெரியவர்களுக்குரிய யோகாசனப் பயிற்ச்சியும் அதிக அளவில் வேற்றுமை இருக்கும்.

பொதுவாக சிறுவர்களுக்கு உடல் இலகுவாக வளைந்து கொடுக்கக் கூடியதாக இருப்பதால், அவர்களால் இலகுவாக யோகாசனப் பயிற்ச்சியை பயின்று விடுவார்கள் என்று நினைக்கிறன்.

இங்கு ஒரு சில சிறுவர்கள் பாடசாலைகளில் ஒவ்வொரு நாளும் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு குறைந்த்தது முன்பு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு உடல் உளத்தளர்வு பயிற்சி (Relaxation ) மேலோட்டமாக கற்றுக் கொடுக்கிறார்கள். காரணம், சிறுவர்களுக்கு அவதானிக்கும் திறன், செவிமடுக்கும் திறன், கற்பனைத் திறன், தன்னடக்கம், நிதானம் இவற்றை ஊக்குவிப்பதற்காக. பெரும் பாலான (தம்மைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர சிரமப் படும் சிறுவர்களுக்கும் பயன் படுகிறது). சிறுமிகள் யோகசப் பயிற்ச்சியை கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று நினைக்கிறன், அதே நேரம், சில சிறுவன்கள் யோகா செய்வதன் மூலம் பொடியளுக்கே என்று உள்ள ஒரு சில குணாதிசயம் குறைந்தது போக வாய்ப்புக்கள் இருக்கலாம்...

எதையும் நடைமுறையில் பார்த்தால் தான் அறிந்து கொள்ள முடியும். யோகாசனப் பயிற்சிக்கு அனுப்புவது என்று முடிவு எடுத்தால் ஆரம்பத்திலையே அதிக நாட்களுக்கு அனுப்பாது, வாரத்துக்கு ஒரு மணி நேரம் என்று குறைத்து விட்டுப் பாருங்கள். உங்கள் மகனின் நடவடிக்கைகளை தினமும் அவதானித்து அதில் நல்ல முனேற்றம் இருப்பின் தொடர்ந்தது அனுப்புங்கள், அல்லது நிறுத்தி விடுங்கள்.

இத்துடன் சிருவர்களுக்குரிய யோகாசனப் பயிற்ச்சி பற்றிய ஆங்கிலத்தில் உள்ள சில தளங்களின் இணைப்பையும் இணைத்து விடுகிறேன்.

http://www.whataboutthestorey.com/5-reasons-why-yoga-is-good-for-kids/

http://www.essortment.com/articles/yoga-for-children_4460.htm

http://www.more4kids.info/210/yoga-for-kids/

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா

சிறுபிள்ளைகளின் மீது நாங்களாக அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்கக் கூடாது.

கராத்தேயில் உங்கள் மகனுக்கு ஆர்வம் உண்டா என்பது முதல்க் கேள்வி

உங்கள் விருப்பத்திற்காக கராத்தே வகுப்பிற்கு அவரை அனுப்பினால் அதில் அவருக்கு காலப் போக்கில் விருப்பம் இல்லையென்றால் நிறுத்தி விடுவது நல்லது.

யோகா என்பது என்னைப் பொறுத்த அளவில் மனதைத் தன் வசப்படுத்தும் ஒரு கலை.

குழந்தைகள் முதலில் உலகத்தை அறிய வேண்டும்.

தங்கள் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆசைகளையும் விருப்பங்களையும் அனுபவிக்க வேண்டும்.

அதற்கு முதலே அவர்களின் விருப்பு வெறுப்புக்களை நாங்களாக கட்டுப்படுத்த நினைப்பது தவறு.

சில குழந்தைகள் அதிகம் கோபம் கூடியவர்களாகவும் பிடிவாதக்காரர்களாகவும் முரட்டுச் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அப்படியானவர்களுக்கு சில வேளைகளில் யோகக் கலை உதவலாம்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மகனை கராத்தே வகுப்புக்கு அனுப்ப விரும்புகின்றேன். கராத்தே சொல்லிக் கொடுக்கும் இடத்தில் யோகாவும் (யோகாசனம்) சொல்லிக் கொடுக்கின்றனர். ஒரு 5 வயது சிறுவரை யோகாக்கு அனுப்புவது சரியா? யோகா தீவிரமான உணர்வுகளை மழுங்கடித்து சாமியார் மாதிரி மாற்றி விடுமா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு. இந்தச் சந்தேகம் சரியா? பொதுவாக வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ விரும்புகின்ற எனக்கு, அவனை யோகா போன்ற ஒன்றின் மூலம் மழுங்கடிக்க முயல்கின்றேனா என்ற பயம் இருக்கு,

இதில் உங்கள் யாருக்கேனும் அனுபவம் உண்டா? உங்களில் யாரேனும் யோகா பயின்றோ அல்லது உங்கள் பிள்ளைகளை யோகா வகுப்புக்கு அனுப்பியோ அனுபவம் இருக்கா?

நன்றி

தாய் தந்தையருக்குத்தான் தெரியும் தங்கள் பிள்ளைகளின் மன நிலைமை.

அதனடிப்படையிலேயே அவர்களுக்கு தேவையான அல்லது சார்பான அறிவுகளை புகுத்த முயற்சிக்கலாம்.

என்னைப்பொறுத்தளவில்...

யோகாசனம் சிறுவருக்கு அவசியமில்லை.இருந்தாலும் அவர்களுக்கு ஒருசில குறைபாடுகள் இருப்பின் அதனை நாடலாம்.

அதற்க்காக இங்கேயுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை பரதநாட்டியம்,நீச்சல்,இசைப்பயிற்சி என்று இன்னும் பல பயிற்சிகளுக்கு அனுப்பி அவர்களை வேறொரு மாயைக்குள் அடைத்துவிடுகின்றார்கள்.

இதன் பின்விளைவுகள் இனிவரும் காலங்களில் தான் தெரியும்?

பலமணிநேரம் கண்ணான கணணியில் கொலைவெறி பிடித்த ஏ.கே47 விளையாட்டு விளையாடும் இளம்பிஞ்சுகளுக்கு நிச்சயம் யோகாசனம் தேவை.

அல்லது..

நிழலி அவர்களே!

உங்கள் எதிர் வீட்டுப்பிள்ளை யோகாசனத்திற்கு சென்றால் உங்கள் பிள்ளையும் கட்டாயம் யோகாசனத்திற்கு செல்ல வேண்டும்.

ஏனெனில்....

இன்றைய காலத்தின் நிலைமை அப்படி :)

  • தொடங்கியவர்

கருத்தும் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்

என் மகன் ௫ வயது என்பதால் இன்னும் தன விருப்பு வெறுப்புகளை தீர்மானமாக கூறும் நிலைக்கு வரவில்லை. ஒரு நாள் பாட்டு நிகழ்சியில் Drums அடிப்பதைக் கண்டால், தனக்கும் விருப்பம் என்பான். பின் Soccer இற்கு போக விருப்பம் என்பான் (இப்போது அது ஒன்றுக்குத்தான் போகின்றான்).. எனவே தன் விருப்புகளை தீர்மானமாக கூற இன்னும் இரு வருடங்களாவது எடுக்கும் என நினைகின்றேன்

அவனை கராதேக்கு அனுப்புவது என்பது, அவனது சுய பாதுகாப்பு பற்றி அவனே அக்கறை கொள்வதற்கு. என் அனுபவப்படி கராத்தே பழகியவர்கள் வீண் சண்டைக்கு போனதையோ அல்லது ரவுடித் தனமாக திரிந்ததையோ காணவில்லை. அச்சமற்ற நிலைக்கு வருபவர்கள் வீண் சண்டை பிடிப்பதில்லை என்பதுடன், தம் திறமையை தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதும் இல்லை.

எல்லாரும் அவன் என்னைப் போலவே வளர்கின்றான் என்று தொடர்ந்து கூறி வருவது தான் அவனை யோகாவுக்கு அனுப்ப விரும்புவதன் முக்கிய காரணம் (என்னை சிறு வயதில் இருந்து அவதானித்தவர்களுக்கு இன்று நான் ஏதாவது ஒரு சிறையில் இல்லாமல் இருப்பது அதிசயமான விடயம். இது பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும் இப்ப ). அவனாவது மனக் கட்டுப்பாடு கொஞ்சமாவது பழக வேண்டும் என்று விரும்புகின்றேன். அத்துடன் யோக மனதை ஒருமுகப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவும் என்று அறிந்திருந்தேன்

உங்களது பதில்களால் அனுப்பிப் பார்ப்பம் என்று முடிவெடுத்துள்ளேன் ..

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.