Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் பறிமுதல் ... முதற்கட்டம் ஆரம்பம்!

Featured Replies

கொழும்பில் 20 அடுக்குமாடி குடியிருப்புகளை கையகப்படுத்த இலங்கை அரசு திட்டம்

z_p27-Global.jpg

கொழும்பு, ஜூலை 5- விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ள தொழிலதிபருக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்புக்களை கையகப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் நிதியுதவி செய்தார் என்று புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன என்றும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

லக்பிம பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அந்த இணையதளங்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளன.

  • தொடங்கியவர்

sri-lanka-accommodation-h55.jpg

புலம்பெயர் தமிழர்களின் இலங்கையில் உள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட ... புலிச்சாயம் பூசும் நடவடிக்கையில் சிங்களம் ஈடுபட்டிருக்கிறது.

அறிந்த மட்டில் ..... வெள்ளவத்தை பகுதி உட்பட பல இடங்களில் புலம்பெயர் சிலரால் "குளோபல் டவர்ஸ்" எனும் பெயரில் ஆடம்பர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இக்குடியிருப்புகள், கடந்த காலங்களில் இதே சிங்கள ஆட்சியாலர்களினாலேயே(முன்னால் சிங்கள பிரதமர் உட்பட, சில அமைச்சர்களும்) அங்குராபணமும் செய்து வைக்கப்பட்டதாம்! ஆனால் இன்றோ புலிச்சாயம் பூசப்பட்டு சிங்களத்தினால் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது.

இன்று புலத்தில் இருந்து ... நாட்டை(சிங்கள) கட்டி எழுப்புவோம் வாருங்கள் ... என்ற பசப்பு வார்த்தைகளுக்கு அடிமையாகி ... ஓட்டப்போட்டி நடத்துவோர்கள் ... உங்கள் முதலீடுகளுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது????? ... நாளை நீங்களும்(ஏற்கனவே முன்னால் புலி உறுப்பினர்களோ/ஆதரவாளர்களோ எனத்தான் கூறி உங்களை ... வருக வருக என்று வரவேற்கிறான், சிங்களவன்) ... இதே முத்திரை குத்தப்பட்டு .....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் சிறிலங்கா சொத்துக்களை என்று தலையங்கத்தை போடுங்கப்பா.

தலையங்கத்தை பார்த்து பயந்து போட்டன் ,நான் இருக்கிற வீட்டையும் பறிமுதல் செய்யப்போறான் என்று.

புலியின் பெயராலை காசை தமிழர் யாரும் அடிச்சால் ( புலி எதிர்ப்பு பிரச்சாரம் வகையில்) குரல் குடுக்கும் கனவான்கள் இதுக்கும் குரல் கொடுப்பினமோ...??

இல்லை இதுகளை குடுத்து தமிழரை மீட்க்கினம் எண்டு கதை அளப்பினமோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போட்ட காசை மறந்துவிடப் பழகிக்கொள்ள வேண்டும்..! :(

சிங்கள தேசத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் போட்ட காசை மறந்துவிடப் பழகிக்கொள்ள வேண்டும்..! :(

சிங்களவனை நம்பி முதலீடு செய்தவைகளையும் இல்லை இனியும் அங்கை முதலீடுகளை வைத்து இருக்கலாம் எண்டு நினைக்கும் தமிழருக்கு கிடைக்க வேண்டிய பலன் தான் இது...

போன ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே பல முஸ்லீம் வியாபாரிகள் மலேசியா இந்தோநேசியா எண்று பெட்டியை கட்டி விட்டார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று புலத்தில் இருந்து ... நாட்டை(சிங்கள) கட்டி எழுப்புவோம் வாருங்கள் ... என்ற பசப்பு வார்த்தைகளுக்கு அடிமையாகி ... ஓட்டப்போட்டி நடத்துவோர்கள் ... உங்கள் முதலீடுகளுக்கு என்ன பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது????? ... நாளை நீங்களும்(ஏற்கனவே முன்னால் புலி உறுப்பினர்களோ/ஆதரவாளர்களோ எனத்தான் கூறி உங்களை ... வருக வருக என்று வரவேற்கிறான், சிங்களவன்) ... இதே முத்திரை குத்தப்பட்டு .....!!!!!

பசப்பு வார்த்தைக்கு ஓடிப்போவோர்களின் முக்கியமான agnenda வே இப்டி எட்டப்பு ஆகிறதன் மூலம் தங்கள் சொத்தை காப்பாற்ரலாம் எண்டு...இதுக்க நீங்கவேற அவங்கள சிந்திக்கச்சொல்லி !

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு ஒரு உறுதியான தீர்வு வரும் வரை புலம் பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் தங்கள் பெயர்களில் முதலீடு செய்வதை சொத்துக்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.வேண்டுமானால் அங்குள்ளவர்களின் பெயரில் முதலீடுகளைச் செய்து சிங்களவரின் பணத்தை தமழர் பகுதிகளக்குத் திருப்ப வேண்டும்.

குளோபல் டவேர்ஸ் கொட்டேல் லண்டனில் இருந்து போனவர் தான் கட்டியது (பீலிக்ஸ்).அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல செல்வாக்கும் இருக்கின்று.

முன்பு பாலசிங்கத்தின் நணபரும் கூட.

தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாம்?

a) பிரித்தானியாவின் நெக்ஸ்ட் (NEXT) என்ற ஆடை உற்பத்தி நிறுவனம் (http://www.next.co.uk/) தன் உற்பத்தி தொழில்சாலைகைளை யுத்த குற்றவாளியான சிங்களத்தில் இருந்து அகற்றியுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72992

==============================================

to : AMcKinlay@next.co.uk

Subject: NEXT leaves Sri Lanka

Mr. A. McKinlay,

Secretary of NEXT

Dear Mr. Secretary of NEXT,

Thanks for making a difficult, but the right choice.

This move would help to save all citizens of Sri Lanka in the long run, as the people of Sri Lanka are being faced with democratically elected dictators.

Sincerely,

==========================================

b) நாம் ஸ்ரீலங்கப் பொருளாதாரத்தில் எந்த வகையில் பணத்தை இட்டாலும் அது எப்படியாவது ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்தைச் சென்றடைந்து தமிழர்களை வேரறுத்து அடிமைத்தளையில் தள்ளவே பயன்படுத்தப்படும்.

►ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்ய வேண்டாம்

►கொழும்புவில் வீடுகள் வாங்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள வங்கி எதிலும் பணத்தை வைக்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்

►ஸ்ரீலங்காவில் பங்குகளோ கடன் பத்திரங்களோ வாங்க வேண்டாம்

►"யாழ்ப்பாண வளர்ச்சி நிதி" அல்லது மட்டக்களப்பு புதுப்பிப்பு அறக்கட்டளை" அல்லது "மறுவாழ்வு" என்பதைப் பெயரில் கொண்ட எந்த கவர்ச்சிகரமான சொற்றொடர்களைக் கண்டும் மயங்கி விடாதீர்கள். சுனாமிக்காக ஸ்ரீலங்கா அரசு வசூலித்த பணம் எதுவும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையவில்லை; அது கொழும்பிலேயே தங்கிவிட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம்.

►துணிமணிகள், பலசரக்குப் பொருட்கள், ஸ்ரீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்லது வேறு எந்தப் பொருட்களையும் வாங்க வேண்டாம், மேலும் சில்லறை வியாபாரியிடமும் (மொத்த விநியோகிப்பாளர் யாரென்று தெரிந்தால் அவரிடமும்) இப்பொருட்களை இனிமேல் விற்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.

தென் ஆப்பிரிக்காவில் உலக நாடுகள் முதலீடு செய்யாமல் தவிர்த்தது நல்ல விளைவைத் தந்தது. அதன் விளைவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு வளைந்து கொடுத்து இனஒதுக்கல் கொள்கையைக் கைவிட்டது. கொழும்பின் சிங்கள அரசாங்கம் தமிழர்களை அமைதியாகத் தங்கள் தாயகத்தில் எப்போது வாழ விடும் என்பது தெரியவில்லை, ஆனாலும் நாம் நமது கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் எமது மக்களினது வாகனங்களையே உதிரி பாகங்களாக கழற்றி விற்றவர்கள். இதனை (தமிழரின் சொத்துக்களை) விடுவார்களோ? சிறிலங்காவில் முதலீடு செய்ய விரும்புவோர் ஒன்றுக்கு பலமுறை சிந்திப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஷயம் மட்டும் விளங்குது. தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை , கேபீயை சந்திப்பது போல போய், வித்துப்போட்டு வரலாமென்று இங்கையுள்ள சிலர் வெளிக்கிட்டு இருக்கினம் போல கிடக்கு. இனி பெரிய கூட்டமொன்று வெளிக்கிடும். வன்னியில புனர்வாழ்வு செய்யப்போறேன் எண்டு, ஐரோப்பாவிலிருந்து ஒரு சட்டத்தரணி , சிலபேரை கூட்டிக்கொண்டு சென்றவராம். புத்தளத்தில் இருக்கும் அவருடைய காணியில் , முஸ்லிம்கள் குடியேறி இருப்பதை அறிந்து பதறிப்போனவர், போன வேலையை விட்டுப்போட்டு, முஸ்லிம்களை வெளியேற்றி காணியை எப்படி விக்கலாமேண்டு ஓடித்திரிந்தவராம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீ..

இதெல்லாம் மூழைச்சலவை செய்யப்பட்டவர்களின் கட்டுக்கதை.....

என்று சொல்லாமல் தயவு செய்து மீண்டும் கேட்கின்றோம்

நீங்கள் ரத்தத்தை சிந்து உழைத்த பணத்தை

தீரவிசாரித்து முதலிடுங்கள்

  • தொடங்கியவர்

இன்று மாலை நண்பர் ஒருவரை சந்தித்தேன் ... முன்னால் ரெலோ ... தற்போது லண்டனில் வர்த்தகத்தில் ...

... கதையோடு இக்கதை வந்தது ... சொன்னார், தானும், இங்கு வருமான வரி பிரட்சனையில் இருந்து தப்புவதற்காக, சில முதலீடுகளை கொழும்பில் இதே துறையில் இருந்த சிலரோடு முதலிட்டதாகவும் ... இப்போ என்ன செய்வதென்று தெரியவில்லை என்று! ... இத்தனைக்கும் அவர் அடிக்கடி கொழும்பு போய் வரும் ஓர் நபர்!!

ஏன் பயப்படுகிறார்?

... எம் வர்த்தகர்கள் இங்கு(புலத்தில்) வருமானவரி சரியாக காட்டாமல்/கட்டாமல், வரும் இலாபங்களில் பெரும்பாலானவற்றை கறுத்தப்பணமாக வைத்திருப்பார்கள்! அவற்றை எங்கேயும் வட்டிக்கு விடுவதும், உண்டியல் மூலமாக கொழும்பு, சென்னைக்கு அனுப்பி எங்கேயாவது முதலிடுவதும்தான் இதுவரை அவர்கள் செய்து வந்தது! கொழும்பு போன்ற இடங்களில் முதலிடுவதற்கு அனுப்பிய/அனுப்பும் பணமெல்லாம் வங்கியூடாக அன்றி உண்டியல் மூலமாக அனுப்பியே வந்துள்ளனர். அவைகளுக்கு சரியான கணக்குகளோ, ஆவணங்களோ வைத்திருக்கவும் மாட்டார்கள், வைத்திருக்கவும் இயலாது ... ஏனெனில் அது கறுத்தப்பணம்!!!

இன்று சிங்களவன் ... புலிகளின் பணம் ... நிரூபியுங்கள், உங்களது என்று சொன்னால் .... நிரூபிக்க, விசிலா அடிப்பது????????????? ... இழிச்சவாயனடா ஈழத்தமிழன்!!!! வைக்கிறான் ஆப்பு சிங்களவன்!!!!

புலம்பெயர் தமிழரின் சிறிலங்கா சொத்துக்களை என்று தலையங்கத்தை போடுங்கப்பா.

தலையங்கத்தை பார்த்து பயந்து போட்டன் ,நான் இருக்கிற வீட்டையும் பறிமுதல் செய்யப்போறான் என்று.

;-))))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.