Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தரை ஏற்றுக் கொள்ளுங்கள்! தமிழருக்கு சொல்ஹெய்ம் ஆலோசனை

Featured Replies

” ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஏற்றுக் கொள்ளுங்கள்.” இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு ஆலோசனை கூறி உள்ளார் நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவரும், இந்நாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கை- அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் மத்தியஸ்தராக 1997 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே செயற்பட்டது.

பின் மத்தியஸ்தர் பணியில் இருந்து விலகிக் கொண்டது. இவற்றின் பின்னணியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில் உறவை மீண்டும் புதுப்பிக்க நோர்வே பேரார்வம் வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நோர்வே பிரதமர் Jens Stoltenberg இற்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் ஐ.நாவின் நியூயோர்க் அலுவலகத்தில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. ஐ.நாவின் 65 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்ற வந்திருந்தபோதே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்கின்றமை தொடர்பாகப் பரஸ்பரம் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்தனர். நோர்வே தரப்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Jonas Gahr Støre, சர்வதேச அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும் கலந்து கொண்டார். இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இப்படிக் கூறினார்.

அவர் முக்கியமாக தெரிவித்துள்ளவை வருமாறு:-

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் நாம் அந்நாட்டுடன் கட்டாயம் நல்லுறவைக் கட்டி எழுப்ப வேண்டும். இலங்கையுடன் நல்லுறவைப் பேணும் நோர்வேயின் நகர்வு குறித்து இலங்கைத் தமிழர்கள் பலரின் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தேன்.

அவர்கள் எமது இந்நகர்வுக்கு பேராதரவை வெளிப்படுத்தினர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்ச்சைக்குரிய ஒரு தலைவர்தான். ஆனால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். மக்களின் பேராதரவையும், அமோக வாக்குகளையும் தேர்தலில் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவர் அவர் என்பதை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் நோர்வேயுடன் நல்லுறவை பேணுகின்றமையில் பேரார்வமாக உள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி மஹிந்தருடன் ஒத்துழைக்கின்றமையே அதற்கான ஒரேயொரு மார்க்கமாக உள்ளது. தமிழர்கள் எதிர்காலத்தைச் சிந்தித்து செயற்படுதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுடன் இணங்கி நடக்க வேண்டும்.”

ppppp.jpg

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10801:2010-09-22-09-58-37&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Edited by KILI TIGER

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆலோசனை :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வசனத்தை முன்பும் எங்கே கேட்டதுபோல் ஞாபகம்....

கே.பி. இவருக்கு முன்னோடியா...???

அல்லது

கே. பி.க்கே இவர் முன்னோடியா...???

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய ஆலோசனைகள்..

2000

யுத்தம் நிறுத்தம் ஒன்றின் மூலமே இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்த முடியும்.

(அப்போது விடுதலைப்புலிகள் கை போர்க்களத்தில் ஓங்கி இருந்தது.)

2002

விடுதலைப்புலிகளோடு பேசாமல் இலங்கையில் சமாதானத்தை உருவாக்க முடியாது.

(விடுதலைப்புலிகள் தமிழ் மக்களிடம் அதிகம் செல்வாக்குச் செய்யும் நிலையை நோர்வே கணித்துக் கொண்டபின் விட்ட அறிக்கை.)

2005

விடுதலைப்புலிகள் சமாதான பேச்சு மேடைக்கு திரும்ப வேண்டும். இன்றேல் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்.

(விடுதலைப்புலிகளை இராஜ தந்திர ரீதியிலும்.. இன்னும் பல வழிகளிலும் பலவீனப்படுத்திய பின் ஐரோப்பிய ஒன்றிய தடை கனடா தடை கொண்டு வந்த பின் அவர்களை அச்சுறுத்தி பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட அறிவித்தல்.)

2007

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது.

(சிறீலங்கா அரசை எச்சரிப்பதாக காட்டிக் கொண்டு.. அதன் இராணுவ நகர்வை வலுப்படுத்த பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை அதற்கு ஈட்டிக் கொடுத்தலும் புலிகளை போரில் தோற்கடிப்பதும்.)

2009

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையளித்துவிட்டு சிறீலங்காவிடம் சரணடைய வேண்டும்.

(விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் பயனற்றது.. சரணடைதலில் முடிவடைவது. தமிழ் மக்களுக்கு அதனால் பயனில்லை என்று காட்டி போராட்டத்தின் மீதான நம்பிக்கையை தமிழ் மக்களிடம் தகர்ப்பது.)

2010

தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மகிந்தவிடம் சரணடைய வேண்டும்.

(2009 இல் செய்யப்பட்ட விதைப்புக்கு 2010 செய்யும் அறுவடை.)

------------------------

அடிப்படையில் இவரது ஆலோசனைகள் விடுதலைப்புலிகளை கட்டம் கட்டமாக தோற்கடிப்பதும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மழுங்கடித்து ஐக்கிய அமெரிக்கா விரும்புவது போல் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் நீண்ட கால நலன்களை தமிழ் மக்களின் தேவைகளைக் கொண்டு சிறீலங்காவில் பூர்த்தி செய்வது தான்.

இதையே நோர்வே பலஸ்தீனத்திலும் செய்தது. பலஸ்தீன விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தி பலஸ்தீனப் போராட்டத்தை அமெரிக்க நகர்வுகளுக்கு இணங்க மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தேவைகளுக்கு ஏற்ப நகர்த்திச் செல்வது. இதைதான் நோர்வே அங்கு செய்தது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிட்லர் முசோலினி சதாம் ஏன் பின்லாடன் போன்றவர்களும் சர்சைக்குரிய தலைவர்கள் தான் அவர்களை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.உங்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?இவருடைய ஆலோசனை மட்டும் தான் தமிழர்களுக்கு முக்கியமான தேவையா?போங்கையா நீங்களும் உங்கட சமாதானச் செயற்பாடுகளும்.உங்கள் சமாதான முயற்சியின் விளைவு 50 ஆயிரம் உயிர்களும் பல கோடி சொத்தழிவுகளும்தான்.

எரிக் சொல்ஹைம் தமிழர்களுக்கு என்ன சொல்ல வாறார் என்றால்,

'When rape is inevitable lie back and enjoy it '

வல்லுறவுக்கு உட்படுவது தவிர்க்க முடியாதெனில், அதனை அனுபவித்து விடு.

Edited by thappili

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனத்தை அழித்து பின் எஞ்சியிருப்பதை அடிமைப் படுத்தும் திட்டத்தின் சொந்தக்காரர்களே இந்த வெள்ளையினப் பேய்கள் தான். இந்த நரியின் உள்நோக்கங்களை புலிகள் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்களோ என்பது தான் கவலையாக உள்ளது. குறிப்பாகச் சொன்னால் மூதூதைப் பிடித்து திருகோணமலையை துறைமுகத்தை ஆட்டிலெறி வீச்சுக்குள் கொண்டுவந்த போது இந்த நரி பாய்ந்தடித்து வந்து புலிகளோடு பேசியதும் அவர்கள் பின்வாங்கிவிட்டனரே. இந்த நரியின் சொல்லை கேட்காமல் விட்டிருந்தால் நிலமையே வேறு விதமாகத் திரும்பியிருக்குமோ என்னவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனத்தை அழித்து பின் எஞ்சியிருப்பதை அடிமைப் படுத்தும் திட்டத்தின் சொந்தக்காரர்களே இந்த வெள்ளையினப் பேய்கள் தான். இந்த நரியின் உள்நோக்கங்களை புலிகள் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்களோ என்பது தான் கவலையாக உள்ளது. குறிப்பாகச் சொன்னால் மூதூதைப் பிடித்து திருகோணமலையை துறைமுகத்தை ஆட்டிலெறி வீச்சுக்குள் கொண்டுவந்த போது இந்த நரி பாய்ந்தடித்து வந்து புலிகளோடு பேசியதும் அவர்கள் பின்வாங்கிவிட்டனரே. இந்த நரியின் சொல்லை கேட்காமல் விட்டிருந்தால் நிலமையே வேறு விதமாகத் திரும்பியிருக்குமோ என்னவோ?

தலைவர் படிச்சு படிச்சு சொன்னார் எங்கட விடுதலை எங்கட கைலதான் இருக்கு என்று, சர்வதேசம் ஒரு போதும் எங்களுக்கு உதவி செய்ய போறது இல்லை, தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றுதான் கடைசிவரை பாக்கும் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Jalra.GIF

ஆலோசனைக்கு நன்றி.. ஈழத்தோழர்கள் இவரை மீண்டும் அரசியல் தீர்வு என இழுத்துவிட்டு சந்தி சிரிக்கவைக்கவேண்டும்.. அதுதான் வின்சன்ட் சர்சிலுக்கே ஆப்படிக்கும் செயல் ஆகும்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலோசனைக்கு நன்றி.. ஈழத்தோழர்கள் இவரை மீண்டும் அரசியல் தீர்வு என இழுத்துவிட்டு சந்தி சிரிக்கவைக்கவேண்டும்.. அதுதான் வின்சன்ட் சர்சிலுக்கே ஆப்படிக்கும் செயல் ஆகும்.. :lol:

அவங்களுக்கு சந்தி சிரிப்பதெல்லாம் ஒரு மாட்டரே கிடையாது. சிங்களவன் இவனை திட்டாத திட்டா? எத்தனை சிங்களவனின் வசைபாடல்களை கண்ணெதிரே கேட்டிருப்பான். நாம் தான் emotional பேர்வழிகள். உடனே எந்த விடயத்தையும் personal ஆக்கிவிடுவோம். ஆனால் மேலை தேயத்தவர்கள் அதிலும் குறிப்பாக ராஜதந்திரிகள் எந்த நிலையிலும் strictly business என்னும் கோட்பாட்டை கடைப்பிடிப்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளினதும் எமதும் வீழ்ச்சி ஆரம்பித்தது 2008 இல் இல்லை. மாறாக 2001 இல். எப்போது நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தை என்று இலங்கைக்குள் காலூன்றியதோ அன்றைக்கே எமது போராட்டாம் காட்டிக்குடுக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவும் அதனோடிணைந்த மேற்குலக சக்திகளும் நோர்வேயின் முகமூடிக்குப் பின்னால் மறைந்திருந்து எமது போராட்டத்தை சிறுது சிறிதாக மழுங்கடித்து இறுதியில் அழித்தொழித்தார்கள். இதற்கு நல்ல உதாரணம் 1993 இல் கிளின்ரன் தலமையில் நோர்வே இஸ்ரேலுக்கும் பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்துக்குமிடையில் செய்த சமாதான ஒப்பந்தம். இறுதியில் என்ன நடந்தது ? இஸ்ரேலியப் பிரதமரும் கொல்லப்பட்டு, யாசீர் அரபாத்தும் இறந்து போக பாலஸ்த்தீன விடுதலை இயக்கமும் செயலற்றுப் போனது.

எந்தவொரு போராட்டமும் தமது இயங்குநிலையை நிறுத்தும்போது அவர்களின் போராட்டக்குணம் மங்கி விடுகிறது. பின்னர் அவர்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும். இதைத்தான் இந்த வெள்ளைக்கார நாய்கள் ஈழத்திலே பாவித்தார்கள். அவர்கள் செய்ததெல்லாம் சமாதானப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் சிங்களம் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள சந்தர்ப்பமும் நேரமும் வழங்கியதுதான். நாம் அதே காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தோம்?

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் காலையில் புகையிரதத்தில் பேசிக்கொண்டு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், " இந்தப் பேச்சுவார்த்தை எல்லாம் ஒரு நாடகம், நான் சொன்னதைக் குறித்துக் கொள்ளும், ஒருகாலத்தில யாசீர் அரபாத்துக்கு நடந்தது தலைவருக்கும் நடக்கும், புலிகள் என்கிற இயக்கமே செயலற்றுப் போகும், எமது போராட்டம் பாலஸ்த்தீனர்கள் போல இன்னும் 40, 50 வருடங்களுக்கு இழுபடும்" என்று சொன்னார். நான் அப்படியில்லை , நாம் சுதாரித்துக்கொள்வோம், போரின்மூலம் எமது நாட்டை வெற்றிகொள்ளும் பலம் எம்மிடமிருக்கிறது, யாசீர் அரபாத்திfடம் அந்தப் பலமில்லை என்று வாதாடினேன். ஆனால் அவர் சொன்னதுதான் நடந்தது.

சமாதான நாடகத்தின் ஆக்கத்திலும், குழப்பத்திலும் இந்தியாவுக்கு என்ன பங்கிருக்கிறதோ, அதேயளவு பங்கு அமெரிக்க , மேற்குல சக்திகளுக்கும் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது, புலிகளின் போர்க்குணத்தை சிறிது சிறிதாகச் சிதைத்து, இறுதியில் முற்றாக இல்லாமல் ஒழித்து பூரண வெற்றியொன்றை அவர்கள் மேல் அடைவதுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை, எமது போராட்டமும், வீழ்ச்சியும் தனது சுய கவுரவம் சம்பந்தப்பட்ட விடயம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, எமது போராட்டமும், வீழ்ச்சியும் "கிளர்சித் தடுப்புச் செயன்முறையின் அனுபவம்", மற்றவர்களைப் பொறுத்தவரை எரிகிற வீட்டில் அடிக்கும் கொள்ளை, எம்மைப் பொறுத்தவரை இந்த நாய்களை எல்லாம் நம்பி நாம் அதுவரையிலும் மிகவும் திறமையாகச் செய்துவந்ததை அப்படியே கை விட்டதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.