Leaderboard
-
அக்னியஷ்த்ரா
கருத்துக்கள உறவுகள்25Points1962Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்24Points15791Posts -
உடையார்
கருத்துக்கள உறவுகள்11Points23926Posts -
P.S.பிரபா
கருத்துக்கள உறவுகள்8Points1866Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/01/21 in all areas
-
பாவத்தின் சம்பளம்
14 pointsமீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்14 points
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 2: சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார். "ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது. ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால் இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர். ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை. இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன் பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார். இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும். சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை. உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார். இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார். பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை. - தொடரும்;9 points
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)7 points
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
பகுதி 3: - தவறான மருந்து இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில் இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை. பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி, சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். "எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார். "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார். " நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார். அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு. - தொடரும்7 points
-
வெண்பனித்தூறல்..!
5 pointsநான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-5 points
-
பாவத்தின் சம்பளம்
5 points1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)5 points
-
பாவத்தின் சம்பளம்
4 pointsசைக்கிளை திருப்பிய வில்லிக்கு எந்தவொரு ஆச்சரியமும் தராமல் தனது இருகைகளையும் இடுப்பின் இருபுறமும் குத்தியவாறு முறைத்துக்கொண்டிருந்தார் அவரது தாயார் சீமாட்டி சோபியா (Sophia Eijkman), கணவனை இழந்தபின்னும் தனது பிள்ளைகளை தனியாக நின்று கண்டிப்புடன் கவனமாக வளர்த்த அந்தத்தாயின் நிற்கும் தோரணையே வில்லிக்கு இன்றைக்கு நமக்கு சகட்டுமேனிக்கு அர்ச்சனை ஆரம்பம் தான் என்று சொல்லாமல் சொல்லியது, இது எதனையும் அறியாமல் ஓடிவந்து வில்லியின் மீது ஏறிப்பாய்ந்து தனது நாவினால் அவரது உடலில் வழியும் வியர்வயை துடைத்துக்கொண்டிருந்தது வில்லியின் செல்ல நாய் டியூக். அப்படியே கதவோரத்தில் அண்ணன் வாங்கிக்கட்டப்போவதை வேடிக்கை பார்க்க வில்லியின் தங்கையும் தம்பியும் தயார்நிலையில் இருந்தனர், தாயின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தனது பார்வையை தாழ்த்திக்கொண்டு மெதுவாக நழுவி தாண்டிப்போக நினைத்த வில்லியை தடுத்துநிறுத்தியது தாயின் கை , அவரிடமிருந்து வந்த ஒரே ஒரு கேள்வி இன்று என்ன நாள்...? வில்லியோ எனக்கு தெரியும் அம்மா மன்னித்துவிடுங்கள், தயாரிடமிருந்து வந்த பதில் சரி போ சீக்கிரம் தயாராகு, தலை குனிந்தவாறு வில்லி மாடியேறி தனது அறைக்கு சென்றுவிட அண்ணன் வாங்கிக்கட்டுவான் வேடிக்கை பார்க்கலாம் என்று வந்த வில்லியின் தங்கையும், தம்பியும் ஏமாற்றத்தில் வந்த வழியே திரும்பி அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர் 2003, இலங்கை கிழக்கு மாகாணம் சைக் ...என்ன இதுக்குத்தான் உந்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவை தூக்கினோமோ, படிக்கிறன்,படிக்கிறன் உந்த கோதாரிபுடிச்ச இன்னோர்கானிக்கும் , தொழிற்படும் தாவரமும் முடியுதே இல்ல, இண்டைக்கு எப்படியாவது மிச்சம் இருக்கும் துண்டுகளை சப்பி துப்பி முடிச்சிடனும் ,என்று சைக்கிளை பலமாக மிதிக்கிறான் அவன், எப்படியும் நம்ப கம்பைன் ஸ்டடி அணி இண்டைக்கும் வரும் சேர்ந்து படிச்சு முடித்திடலாம் என்று நினைத்துக்கொண்டு இரண்டாவது மிதி மிதிக்கும் போது தொலைவில் அந்த பரிச்சயமான உருவம், இரவு 7:30 மணிக்கே அடையாளம் காணுமளவு பருத்த உருவம், இந்த உருவத்தை இரவு 12:00 மணிக்கும் அடையாளம் கண்டுவிடலாம், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் இவனோட சைசுக்கு ஆளே இருக்காது என்று மனத்திற்குள் கலாய்த்துவிட்டு தனது உற்ற நண்பன் சுலக்சனை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் அவன், நண்பனும் அவனது பங்கிற்கு படித்துவிட்டு தூங்க தலையணை, படுக்கைவிரிப்புகள் சகிதம் புத்தகங்களையும் சுமந்துகொண்டு இவனை நோக்கி நடந்து வருகிறான். அணியில் இவர்கள் இருவர் மட்டுமல்ல மொத்தமாக ஐவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவு நேரத்தில் அவர்கள் படிக்கும் பாடசாலையில் தங்கியிருந்து படிப்பது வழக்கம், அவ்வாறு தங்கியிருந்து படிக்க பாடசாலை அதிபரும் அனுமதி வழங்கியிருந்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு பாடசாலைக்குள் நுழைந்தனர், மச்சி இண்டைக்கு மத்த பார்ட்டி வருமோ தெரியாது நாம ரெண்டுபேரும் ஆரம்பிப்போம் வா என்று இருவரும் மெதுவாக புத்தகங்களை திறந்து சுலக்சன் பௌதீகவியலை படிக்க ஆரம்பிக்க, இவனோ இரசாயனவியலை திறந்து மெதுவாக பக்கத்தை புரட்டினான்...... அப்போது (தொடரும்)4 points
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
2 pointsகைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.2 points
-
பாவத்தின் சம்பளம்
2 pointsடமார் என்று ஒரு ஓசை இருவருக்கும் பின்புறமிருந்து , திடுக்கிட்டு இருவரும் திரும்பிப்பார்க்க பாடசாலை இரவுநேர காவலாளி, பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தின் உடைந்து இற்றுப்போய்விட்ட கதவினை திறக்க முயன்று கீழே விழுந்துவிட்ட கதவினை தூக்க பகீரதப்பிராயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார், சுலக்சனும்,அவனும் உடனே ஓடிப்போய் கைலாகு கொடுத்து தூக்கிவிட காவலாளியோ "தம்பிகள் வழமையாக மேடையில் தானே படுக்கிற நீங்கள், இண்டைக்கு மழை வரும்போல கிடக்கு அதுதான் அதிபர் மணடபத்தை திறந்து விட சொன்னவர் நீங்கள் படிச்சு முடிச்சுட்டு மண்டபத்திற்குள்ளேயே படுங்கோ என்று சொல்லிவிட்டு , தம்பிகள் வழமை போலவே கூடைப்பந்து மைதானம் தாண்டி இரவையில் போகாதீங்கோ கட்டாக்காலி நாய்கள் பின்பக்க வேலியால் உள்ள வரும், இருட்டில் வெருண்டு கடிச்சுப்போடும் எனக்கும் இரண்டு தடவை கடிச்சு இருக்கு அதனால் நான் என்ன சத்தம் கேட்டாலும் அங்காலை போறதில்லை நீங்களும் போகாதீங்கோ" என்று விட்டு தன்னுடைய டோர்ச்விளக்கினை ஒருதடவை சரிசெய்து பார்த்துக்கொண்டார் , நாங்கள் எதுக்கண்ணை அங்காலே போகப்போறம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் வந்தவனுடைய கண் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது 1943, ஆம்ஸ்டர்டாம் 15 நிமிடத்தில் தயாராகிவந்து தாயின் முன் நின்றார் வில்லி, தனது மகனின் மிடுக்கினை பார்த்து சோபியா பெருமிதமடைந்ததுடன் மட்டுமல்லாது இன்று தனது சந்ததியின் முதல் பட்டதாரியை கண்டுகளிக்கப்போகும் சந்தோஷத்துடன் வில்லியின் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பசகிதம் தயாராகி தங்கள் மகிழுந்தில் அமர்ந்தனர் , இன்றுடன் தனதுமகன் தன் குடும்ப பாரத்தை சுமக்க தயாராகிவிடுவான், தகப்பனுடைய வியாபாரத்தையும்,பரம்பரை சொத்துக்களையும் அவன் முகாமைசெய்யும் காலம் நெருங்கிக்கொண்டுவருகிறது என்று பெருமிதத்தில் பூரித்துப்போயிருந்த சோபியாவின் மௌனத்தை வில்லியின் குரல் கலைத்தது, "அம்மா" "ஆம் மகனே " "இன்று உங்களது கனவில் ஒன்றை நிறைவேற்ற போகிறேன் " "எனக்கு தெரியும் நீ ஒரு சிறந்த மகன், பொதுநலம் கொண்டவன்,மற்றவர்களின் கஷ்ட்டம் காண சகியாதவன் உன்னை ஒரு சிறந்த மனிதனாக வளர்த்ததில் என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் " "அம்மா எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும் " "சொல் மகனே உனக்கு என்ன வேண்டும் " "பட்டமளிப்பு விழா முடிந்ததும் கேட்கிறேன்" சோபியா இருந்த பூரிப்பில் அவன் சொன்ன வாக்கியங்களை அவள் உள்வாங்கியதாக தெரியவில்லை (தொடரும் )2 points
-
இயற்கையே மாறிப்போச்சு..!
2 pointsஇயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-2 points
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை? *நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ?* *தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை* *தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை* *ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை* *அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை* *அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை* *அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை* *துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை* *ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை* *நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை* *எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை* *இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிடச் சிறந்தது ஏதும் இல்லை* *அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !* ======================================= உடம்பின் நடுப்பகுதி வயிறு. அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி ஐம்பது இந்த ஐம்பதாவது வயது ஆரம்பத்தில், நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள். 😊 தொந்தி கனக்க விடாதீர்கள். தொந்தரவு வரும். மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும். 😊 ஒரு மனிதன் வியாதியுடன் வாழப்போகிறானா, வீரியமுடன் வாழப்போகிறானா, நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த ஐம்பது 😊 நிறைய வேலை செய்வதால் நமக்கு நிம்மதி போவதில்லை. உடம்பு உருக்குலைவதில்லை. 😊 என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான் மனிதன்மீது பாரமாக இறங்கி அவனை நொறுக்கிவிடுகின்றன. 😊 பரபரப்பின்றிச் செயல்படுங்கள். கோபப்படாமல் காரியமாற்றுங்கள். நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஆரவாரம் வேண்டாம். அலட்டிக் கொள்ளாதீர்கள். பொறுப்புக்களை சீராக நிறைவேற்றுங்கள். 😊 அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள். அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். 😊 தினசரி மத்தியானம் ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் எக்காரணத்தை முன்னிட்டும் விழித்திருக்காதீர்கள். 😊 பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம். அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள். 😊 ஆண்டவனை நினையுங்கள். இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா. நான் தப்பு பண்ண விடாதே அப்பா." என்று வேண்டிக் கொள்ளுங்கள். 😊 முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள். கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம். 😊 டென்ஷன் இல்லாமல் இருங்கள். பென்ஷன் வாங்கலாம். 😊 ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள். 😊 அதனால்தான் சொல்லுகிறேன். கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் ... ================================================= வியந்து போன வரிகள் "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" நோய் வரும் வரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்! 👌👌👌👌👌👌👌👌 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..! 👌👌👌👌👌👌👌👌 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா? செலவு செய்யுங்க.....! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.! 👌👌👌👌👌👌👌👌 பிச்சை போடுவது கூட சுயநலமே..., புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்... 👌👌👌👌👌👌👌👌 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை..., ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது. 👌👌👌👌👌👌👌👌 வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு..., அதற்கு அவமானம் தெரியாது விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!! 👌👌👌👌👌👌👌👌 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 👌👌👌👌👌👌👌👌 திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்..., ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!! 👌👌👌👌👌👌👌👌 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்..., பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 👌👌👌👌👌👌👌👌 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் என்ற ஒரு காரணத்திற்காகவே, நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...! 👌👌👌👌👌👌👌👌 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 👌👌👌👌👌👌👌👌 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட..., வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............! 👌👌👌👌👌👌👌 பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........! 👌👌👌👌👌👌👌👌 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 👌👌👌👌👌👌👌 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*2 points
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
1 pointபிள்ளை உருவாக்குதல், கலவி, பாலியல் உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில் சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள்.1 point
-
நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??
1 pointஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள். எண்ணிப் பார்க்கிறேன்.1 point
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு பொண்ணு ஒன்னு போனா குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு சிட்டான் ஜினுக்கு சான்} (2) பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா பெண் : இளசுகள தடுத்தா அது கேட்காது குழு : ஹே அடடடடா பெண் : பழசுகள திரும்பி அது பார்க்காது குழு : ஹே அடடடடா பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம் குழு : ஹேய்ய்ய்ய் பெண் : காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே.....! --- கானகருங்குயிலே---1 point
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point
- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
சிறிதம்பி! உந்தவிசயத்திலை ஈழப்பிரியனையும் என்னையும் கேட்டால் இன்னும் கனக்க சொல்லுவம். ஏனெண்டால் நாங்கள் கடவுளையே பாத்திட்டு வந்த ஆக்கள். தம்பிக்கு பக்கத்தாலை ஓட்டை போட்டு கடவுளின் அழகையே பார்தவர்கள்.😁1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointஇயற்கை என்பது வரம். வரங்களை சாபங்கள் ஆக்கியே மானுடத்தேடல்கள் பயணப்படுகின்றன. இயற்கையை பாதுகாக்க மானுடம் தேடல்களை முடக்குமா? இயற்கையை நேசிக்கும் மானுடத்தை கவிதையில் காணமுடிகிறது. வாழ்த்துகள் பசுவூர்கோபி.1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointஇயற்கையைப்பற்றி அருமையான கவிதை, எம்மால் இயன்றவரை இயற்கையை பாதுகாப்போம், பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு பசுவூர்கோபி1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நேர்ஸ் (மனசுக்குள் இத்துணூண்டை வச்சுக்கொண்டு இவன் பண்ணுற அலப்பறை இருக்கே)😄1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointஎன் உள்ளமென்னும் தெய்வீகத் திருவீட்டில் உன் நினைவே என்னை ஆளுதய்யா என் வாழ்வின் கலையாய் தோணுதய்யா1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 இனிய நபிகள் ஓர் தொடர் காவியம் காலை கதிர் ஒளி உதிப்பது போலே1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointஇயற்கையின் செழிப்பையெல்லாம் மனிதன் அழித்ததால் இயற்கையே கொந்தழித்து விட்டது . நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள் பசுவூர்கோபி.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointகவிதைக்கு நன்றி கோபி. நியூயோக்கினை விட சற்று பெரிய ஐஸ் பாறை கரைகிறதாம்.1 point- இயற்கையே மாறிப்போச்சு..!
1 pointபூமியின் அழிவுகள் போதாதென்று மற்றைய கிரகங்களையும் ஆராய்கிறார்கள். பார்ப்போம் முடிவை.1 point- ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
யாழுக்குள் நிறையவிடையங்களுக்காக நான் தான் அதிகம் சங்கடபபடுவது... ஆனால் இப்போ வேலை என்று வெளிக்கிட்டதும் நிறைய விடையங்களை சாதரணமாக எடுத்துக கொண்டு காலத்தை நகர்த்த வேண்டிய சூழ்நிலை கைதி ஆகி விட்டேன்... கொஞ்சம் தடுமாறினாலும் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.🤔1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சிறியண்ணை முழுக்க எழுதிப்போட்டு 2 நாள்ல கதையை முடியுங்கோ.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2014 தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் அம்பிடிய சுமனரத்ன தேரருக்கு ஆதரவாக நிற்கும் காவல்த்துறையும் கருணாவும் தமிழ் அரச அதிகாரிகளைத் தாக்கும் சுமனரத்ன பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையோரத் தமிழ்க் கிராமங்களை அபகரித்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன எனும் பிக்குவே தலைமைதாங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். பிக்குவின் தலைமையில் அபகரிக்கப்பட்ட தமது நிலங்கள் தொடர்பாக மக்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவுசெய்தபோது, பிரதேச செயலகத்தினால் அம்முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். தமிழரின் நிலங்களை அபகரிக்கும் இனவாதப் பிக்குவுடன் சமரசம் செய்யும் கருணா ஆனால், பிரதேச செயலாளரின் துணையோடு மக்களால் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டவேளையில், வெள்ளாவெளிப் பொலிஸார் அதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தப் பிக்குவின் தலைமையில் அண்மையில் சிங்களவர்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி படுவான்கரையின் சின்னவத்தை எனும் கிராமம் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் ஊடகவியலாளருக்கு பகிரங்க அச்சுருத்தல் விடும் பிக்கு வெள்ளாவெளி பொலீஸ் நிலையத்தில் தமது காணிகளில் அத்துமீறி சிங்களவர்கள் விவசாயம் செய்துவருவதாக லக்ஷ்மணன் நாகமுத்து, கமலலக்ஷ்மி நாகமுத்து, ராசமணி காத்தமுத்து, ராஜலக்ஷுமி காத்தமுத்து ஆகிய காணி உரிமையாளர்கள் முறையிடச் சென்றபோது பெளத்த பிக்குகளுக்கு எதிராக இலங்கையின் காவல்த்துறை ஒருபோதுமே செயற்படாது , ஆகவே உங்களின் முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி அவர்களை விரட்டியடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் காணிகளை அடாத்தாகப் பிடித்துவைத்திருக்கு உள்ளூர் பிக்கு, மட்டக்களப்பு விகாரையின் சுமனரத்ன தேரரின் பணிப்பின்பேரிலேயே செயற்படுவதாக மேலும் இந்த உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த அடாத்தான காணி ஆக்கிரமிப்புப் பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிவருவதாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்கும் சிங்கள அரசின் முகவர் பிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டம் முற்றான சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய தோழரான சுமனரத்ன தேரர் எனும் இந்தப் பிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்களை ராணுவத்தினரின் உதவியோடும், பொலீஸாரின் காவலோடும் , பிரதியமைச்சரும், மகிந்தவின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரான கருணாவின் துணையோடும் தொடர்ச்சியாகச் செய்துவருவதாகக் கூறுகிறார். அரசிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கும், சிங்களக் குடியேற்றங்களுக்கான அரசின் முயற்சிகளும் கருணாவின் துணையோடு பிக்குவினால் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை - மட்டக்களப்பு மற்றும், பொலொன்னறுவை - மட்டக்களப்பு ஆகிய எல்லையோரங்களில் தற்போது நடந்துவரும் இந்தப் பிக்குவின் தலைமையிலான நில அபகரிப்பு தமிழர் மீதான அரசின் திட்டமிட்ட இனவழிப்பின் ஒரு அங்கம் என்பதில் சந்தேகமில்லையென்றும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 2013 இல் திருமதி வில்வரட்ணம் எனும் பிரதேச சபை அதிகாரியுடன் பட்டிப்பளையில் விவாதத்தின் ஈடுபடும் இனவாதப் பிக்கு சுமனரத்ன தேரர். சில மாதங்களுக்குப் பின்னர் பொலீஸாரைக் கூட்டிவந்து பிரதேச செயலாளருக்குக் கொலைமிரட்டல் விடுக்கும் தேரர். தேரருக்கு ஆதரவாக காவல் நிற்கும் சிங்களக் காவல்த்துறை. சிங்கள அரசாங்கம் தமிழர் பகுதிகளில் தான் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினை, அபிவிருத்தி எனும் போர்வைக்குள் மறைத்து அரங்கேற்றிக்கொண்டு வருகிறது. உள்ளூர் அரச அதிகாரிகளால் தலையீடு செய்யப்பட்டபோதும் , அரசின் காவல்த்துறையும், ராணுவமும் அரச அதிகாரிகளை உதாசீனம் செய்து பிக்குவின் தலைமையிலான ஆக்கிரமிப்பினை ஆதரித்து, துணையாகவும் நிற்பது அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சலுகைகளுக்காக சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் தம்பிமுத்து, கருணா மற்றும் பிள்ளையான் இதற்கு மேலதிகமாக கிழக்குத் தமிழர்களின் சுபீட்சமான வாழ்வுக்காக அரசுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறிக்கொள்ளும் கருணாவும் பிள்ளையானும் பிக்குவிற்கு உதவியாக தமது இனத்தின் நிலங்களை ஆக்கிரமிக்க துணைநிற்பதாக மக்கள் விசனப்படுகின்றனர். இதேவேளை, தமிழர்களின் நிலங்களை வெளிப்படையாகவே சிங்களவர்களது என்று அபகரித்துவரும் சுமனரத்ன எனும் பிக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான விரிசலினை பெரிதாக்க முயன்றுவருவதாகத் தெரிகிறது. முஸ்லீம்களை தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பொதுவான எதிரியென்று அடையாளப்படுத்தும் பிக்கு, தமிழர்கள் சார்பாக முஸ்லீம்களுக்கெதிராகத் தான் போராடுவதாகக் காட்டிக்கொண்டு, தமிழரின் நிலங்களைத் தொடர்ச்சியாக அபகரித்துவருகிறான் என்று பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
1 point- பயணம்???
1 point(உண்மையில் நான் எடுத்துக்கொண்ட கருவின் கதை முடிவடைந்து விட்டது ஆனால் பயணம் என்று பெயர் வைத்ததால் அந்தப்பயணம் முடிவடையவில்லை தொடர்கின்றேன்) சார்ல் து கோல் விமான நிலையத்தை விமானம் வந்தடைந்துள்ளதாக விமானி அறிவிக்கவும் எனது தொலைபேசியை மீள இயக்குகின்றேன் எனது பெரிய மகளிடமிருந்து குறும் செய்தி ஒன்று வந்திருக்கிறது உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று. அவள் ஐந்து மாத கர்ப்பிணி அவசரமாக அவளை தொலைபேசியில் அழைக்கின்றேன் அப்பா எனக்கு கொரோனா என உறுதிப்படுத்திய வைத்திய அறிக்கை தற்போது தான் கிடைத்தது நான் உங்கள் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போனதால் வீட்டில் எல்லோருக்கும் பரிசோதனை செய்யணும் தனிமைப்படுத்தணும் ஆனால் நீங்கள் 10 நாட்களாக எம்முடன் இல்லாததால் உங்களுக்கு தேவையில்லை ஆனால் எங்களுக்கு கொரோனா வந்தாலும் பிரச்சினையில்லை உங்களுக்கு வந்தால்தான் ஆபத்து எனவே வீட்டுக்கு வரவேண்டாம் அப்பா மீண்டும் வேறு எங்காவது செல்லுங்கள் என்கிறாள் அடிப்பாவி ஒரு 2 மணித்தியாலத்துக்கு முன் தெரிந்திருந்தால் அக்காவுடனேயே நின்றிருப்பேனே என்றபடி சரி யேர்மனிக்கு ரிக்கற் பாருங்கள். அந்தக்காவும் அத்தாரும் லீவில் வீட்டில தான் நிற்கிறார்களாம். கடுகதி ரயில் ரிக்கற் எடுத்தபடி அடுத்த பயணம் புறப்படுகின்றேன். அங்கும் எங்கும் செல்லமுடியாத நிலை. வீட்டில் இருந்தபடியே ஒரே சமையலும் சாப்பாடும் பல நாட்கள் கதைக்க கிடைக்காத விடயங்களை பேசியபடியும் நாட்கள் போகின்றன. அத்தாருடன் இயக்கம் சம்பந்தமான பெரும் தகவல்களையும் வரலாறுகளையும் அவரது அனுபவங்களினூடாக கேட்க கிடைத்தது. (அவர் செல்லக்கிளி பொட்டம்மான் கிட்டண்ணா ....... என்று பெரும் தளபதிகளுடன் ஒன்றாக இருந்தவர்) அங்கு நின்றபோது வீட்டில் இருந்த எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை மகளுக்கும் 3 அல்லது 4 நாட்கள் உடல் நோ மற்றும் சிறு உபாதைகளுடன் கொரோனா முடிவுக்கு வந்தாலும் தனிமைப்படுத்தல் தொடர்ந்தது ஏழாவது நாள் எனது மச்சாள் ஒருவர் (அப்பாவின் மூத்த தமைக்கையின் மகள்) பிரான்சில் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டதும் அனைவரது வேண்டுகோளையும் புறந்தள்ளி பிரான்சுக்கு வரவேண்டியதாயிற்று. 5எனக்கு இதுவரை கொரோனா தொற்று இல்லை) முற்றும்1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன், அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்.... அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரிய வீடு 🏡 ஒன்றை, அந்த வீட்டின் பெறுமதியில்... பாதிப் பணம் கொடுத்து, மிகுதியை... ஒவ்வொரு மாதமும்... வங்கியில் கட்டுவதாக, 🖋️ ஒப்பந்தம் எழுதி வாங்கினான். 🧐 நல்ல வீடு இருந்தால்... முற்றத்தில் பெரிய கார் இருக்க வேண்டும் என்பது, எழுதப் படாத, சட்டம் என்றாலும்... மிஷேல் வீட்டு முற்றத்திலும்... அவன் ஆசைப் பட்ட கார் நின்றது. 🚘 அதற்கிடையில்... அவன், வேலையை விட்டு வரும் போது... தனது பழைய முதலாளிக்கு, "தினாவெட்டாக"... சொல்லி விட்டு வந்த வாக்கியங்களை மறக்காமல்... 🤨 தான்... பார்த்த வேலை அனுபவத்தை, வைத்து... தன்னுடைய, நான்கு நண்பர்களை சேர்த்து... சிறிய 🛠️ தொழிற்சாலையை ஒன்றை ஆரம்பித்தான். 😜 இடைவேளை... !!! ??? இன்னும், ஒரு 1️⃣ மணித்தியாலத்தில், மீண்டும் தொடரும்.... 🤣1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மழை வெயில்படாது குடை பிடித்துத் தங்களைப் பாதுகாக்க மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியுமா???🤔 நான் வெங்காயம்தான்.... ஆனாலும் குடைபிடித்து என்னைப் பாதுகாக்க எனக்கும் தெரியும்.!! 🤪1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
“ And in the end, All I learned was how to be strong ..Alone. - Quote from quoteambition.com1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point - ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.