Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1962
    Posts
  2. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    13683
    Posts
  3. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    23926
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/02/21 in Posts

  1. காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
  2. விழா இனிதே நிறைவுற்ற மகிழ்ச்சியில் இராவுணவு அருந்திக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினரின் நிசப்தத்தை குலைத்தது வில்லியின் குரல். அம்மா நான் துறவியாகலாம் என்று நினைக்கிறேன் எடுத்தவுடனே தடால் என்று விடயத்தை போட்டுடைத்துவிட்டு தன் தாயின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார் வில்லி , சோபியாவிற்கோ வில்லி சொல்லியது தெளிவாக கேட்கவில்லை தெளிவாக கேட்கவில்லை என்பதை விட கேட்டவிடயத்தை ஜீரணிக்க மூளை நேரம் கேட்டுக்கொண்டிருந்தது. விறைத்துப்போய் நிமிர்ந்த சோபியா மீண்டும் கேட்டாள் என்ன சொன்னாய் வில்லி....?, துறவியாகி ஆசியாவிற்கு சொல்லப்போகிறேன் எவ்வித சலனமுமில்லாத முகத்திலிருந்து தெளிவான தீர்க்கமான பதில், சில நிமிடங்களுக்கு முன் மகிழ்ச்சி ததும்ப காட்சியளித்த சோபியாவின் வீடு சில நிமிட இடைவெளிகளில் ஒரு இழவு வீடு போல மாறிவிட்டது,சோபாவில் அழுது வீங்கிய கண்ணுடன் சோபியா அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவளது கையை பிடித்து தனது மடியில் வைத்துக்கொண்டிருந்தாள் அவளது தங்கை ,கையினால் நெற்றியை தாங்கிக்கொண்டு உட்கார்த்திருந்த தங்கையின் கணவர் , இரண்டு கைகளையும் தனது ஜாக்கெட் பைக்குள் விட்டவாறு யன்னல் வழியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த வில்லியை நோக்கி கேட்டார், என்னப்பா சொல்கிறாய் இந்த சொத்து ,ஆஸ்த்தி, அந்தஸ்த்து இவையெல்லாவற்றையும் விட்டு ஒரு துறவியாக போகப்போகிறாயா ...? வில்லியிடமிருந்து ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் வந்தது , ஆம் அப்படியென்றால் இதையெல்லாம் யார்நிர்வாகிப்பது, அம்மா பார்த்துக்கொள்வார் கூடவே நீங்களும் இருக்கிறீர்கள், தம்பி பராயமடைந்ததும் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். வில்லியிடம் பேசிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் தெரியும் அவனது பிடிவாதக்குணம், அவனை மாற்ற முனைவது விழலுக்கிறைத்த நீர், அவன் போக்கிலேயே விட்டுவிடுவது தான் சரி என்ற முடிவிற்கு வந்து சோபியாவையும் தேற்றி சமாதானப்படுத்தினர், உரோமன் கத்தோலிக்க மதத்தில் அதிக பற்றுடைய சோபியாவும் இது கடவுளின் சித்தம் என்று ஒரு கட்டத்தில் தன்னை தானே தேற்றிக்கொண்டாள். அன்றிலிருந்து இரண்டு வாரத்தில் ஹார்லெம் என்னுமிடத்திலிருந்த அன்புச்சகோதரகள் சபையின் குருமடத்திற்கு தனது மூன்று வருட இறையியல் படிப்பிற்கு சென்றுவிட்டார் வில்லி 2003, இலங்கை கிழக்கு மாகாணம் மணடபத்தினுள் நுழைந்த சுலக்சன் கருமமே கண்ணாக தனது படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை ஓரமாக வைத்து விட்டு மேசைகளை இழுத்து ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தான், இவனது கண்ணோ வழமை போலவே அந்த மண்டபம் முழுவதும் கொழுவிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் மீது ஓடிக்கொண்டிருந்தது, பாப்பரசர் முதல் பாடசாலையின் பழைய ஆண்/பெண் அதிபர்கள், ரெக்டர்கள் என்று வரிசை வரிசையாக மூன்று நிரைகளில் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன, அதில் ஒரு புகைப்படம் மட்டும் இவனுக்கு பிடித்த புகைப்படம் முதல் நிரையில் ஐந்தாவதாக இருக்கும், வித்தியாசமானதும் கூட மற்றைய புகைப்படங்களில் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு எடுத்து என்லார்ஜ் பண்ணியதுபோல் நெஞ்சுப்பகுதியுடன் சிரித்துக்கொண்டிருக்க இந்த புகைப்படத்தில் இருப்பவர் மட்டும் முழு தோற்றத்தில் ஒய்யாரமாக ஒரு தூணில் சாய்ந்திருந்து போஸ் கொடுப்பர், அவரது இடது காலிற்கருகில் ஒருகூடைப்பந்தும் இருக்கும் அதுவும் அந்த புகைப்படத்தில் பதிவாகியிருந்தது, அந்த மண்டபத்திற்குள் ஒரு அரைமணி நேரத்தில் சுற்றி இருக்கும் எல்லா புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டு வரும் ஒருவரிடம் இவற்றில் உங்களுக்கு பிடித்தது எதுவென்று கேட்டால் எந்தத்தயக்கமும் இன்றி காட்டும் புகைப்படம் அதுவாகத்தான் இருக்கும், சிறுவயதிலிருந்தே அடிக்கடி அந்தப்புகைப்படத்தை பார்த்து அதனுடன் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது இந்த ஈர்ப்பு ஏற்பட இன்னுமொரு காரணமும் இருந்தது, அது அவனது கல்லூரியின் வெள்ளிவிழா சஞ்சிகையான "தீபம்" மூலம் ஏற்பட்டது. தீபத்தின் மூன்றாவது வெளியீட்டில் இந்த புகைப்படத்தில் நிற்பவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு இளவயது புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது, அதில் அவர் தன் குடும்பத்துடன் நிற்பது, கூடைப்பந்து பயிற்சியளிப்பது , கல்லூரியின் முதலாவது கூடைப்பந்து அணியுடன் நிற்பது மட்டுமல்லாது ஒரு புகைப்படத்தில் வெள்ளை நிற இயந்திரம் ஒன்றை இயக்குவது போலவும் இருந்தது. இப்படி எல்லாவற்றையும் மனதிற்குள் அசைபோட்ட அவன் மீண்டும் அந்த புகைப்படத்தின் கீழுள்ள பெயரை வாசித்துக்கொண்டான்...அந்தப்பெயர் Rev.Bro Wilheim Henricus Eijkman D.S.L Rector 1956-1962 (தொடரும் )
  3. மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  4. நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்து முதல்,முதல் கொட்டிப்பார்த்த.. வெண்பனித்தூறல் நான் பிறந்த மண்ணின்(ஈழம்) வாசனையே என்னுக்குள் வந்து எழுத வைத்தது. வெண்பனித்தூறல்..! ***************** மார்கழி தொடங்கிவிட்டால் வானம் மந்திரித்துக் கொட்டுமிந்த-வெண்மைநிற தேங்காய்த் துருவலோ? தேசமெல்லாம் பூத்திருக்கும் மல்லிகையோ!முல்லையோ! வெள்ளை நிற றோஜாவோ? வெண்தாமரை இதழ்தானோ-ஏன் கடல் களைத்து கரையொதுங்கும் நுரையலையோ.. கண்சிமிட்டிக் கொட்டுகின்ற விண்மீனோ.. வெட்டுக்களி எழுப்பும் வெண்புளுதிப் படலமோ வெற்றிலைக்கு போட்டுமெல்லும் வெண்நிறத்துச் சுண்ணாம்போ பாலாறு ஓடி தயிர் படிந்து உறைந்ததுவோ பருத்தி மரம் ஈன்ற பஞ்சினத்துக் குஞ்சுகளோ இலவம் காய் வெடித்ததுவோ இளம் பெண்கள் புன் சிரிப்போ முதுமை உலகத்து மூதாட்டி நரை முடியோ கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும். அன்புடன்-பசுவூர்க்கோபி-
  5. பெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள் இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால் சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை" என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ 12:49 மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர் எங்கள் பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால் பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது, ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார் பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப, அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்)
  6. கைக்குழுந்தைகளாக எம் பிள்ளைகள் எம் கையில் தவளத்தொடங்குவதாலோ என்னவோ அவர்களை என்றும் அவ்வாறே நாம் கணக்கிடுகின்றோமா?? அவர்களுக்கான படிப்பு சார்ந்து அல்லது அவர்களின் வயது சார்ந்து அல்லது எமது கல்வி அல்லது கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள் மேல் செலுத்துவது சார்ந்து அதை நாமும் அவர்களும் எவ்வாறு கிரகிக்கக்கூடும் என்று நாம் எந்தளவுக்கு கரிசனை கொள்கின்றோம் அதிலும் உடலின் சில அந்தரங்க உறுப்புக்கள் அல்லது உடலுறவு சார்ந்து எமக்கும் அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்?? அநேகமான பெற்றோர் பிள்ளைகளின் முன் முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில் அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது??? ஆனால் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழகும் போது அவர்களிடமிருந்து வரும் சில விடயங்கள் எம் அனுபவங்களை அவர்கள் பற்றிய எமது அளவுகோளை பொய்யாக்கி நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை மற்றும் கூச்சமற்ற தெளிவு எம்மை தலைகுனிய செய்து விடும் ஒர் இனச்சேர்க்கை சார்ந்து வயது கூடியவர்களை திருமணம் செய்வது சார்ந்து கூடி வாழ்தல் சார்ந்து தனியே வாழ்தல் சார்ந்து....... அவர்களது பார்வையும் கல்வியும் பக்குவமும் எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத தண்டவாளங்களின் நிலை தான். அந்தவகையில் என் பிள்ளைகளிடம் ஆரம்பத்திலிருந்தே நண்பனாக பழகுபவன் என்றரீதியில் இப்படியான நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு எனது மகளது பிறந்த நாள் அன்று அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் சாதாரணமாக சொன்னாள் அப்பா என்னை அம்மாவிடம் தை முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று) நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் அதனால் தான் நான் புரட்டாதி ஒன்றில் பிறந்தேன் என. எனக்கு உடம்பெல்லாம் குறுகி விட்டது ஏனெனில் இதை சொல்லும்போது அவளுக்கு அன்று தான் 12 வயது. முற்றும்.
  7. வில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )
  8. தூங்க ஜடாதர குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
  9. முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம் கதை: வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை. உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு. வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை. நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்: 1. தொற்று - Urinary tract infections 2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone 3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis). 3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate. 4. புற்றுநோய் - Cancer 5. சீறு நீரக காயங்கள்- Kidney injury என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார். தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார். அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார். சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது. (தொடரும்....)
  10. 31.03.2020 மாலை 17.22. எனது செல்லுலாபேசி ஒலிக்கிறது. கைகளில் இருந்த கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு தொலைபேசியைப் பார்த்தேன். பார்த்திபனின் அழைப்பது. அது எனது தனிப்பட்ட தொலைபேசி. அந்த இலக்கம் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்த இலக்கம். அப்போது பகுதிநேர வேலையை ஆரம்பித்து 22நிமிடங்களாகியிருந்தது. 29.02.20 தொடக்கம் இன்று வரை ஒருமாதமாக இடையிடை வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான். இன்று தான் நீண்ட நாளின் பிறகு தொலைபேசியில் அழைத்திருந்தான். பார்த்திக்குட்டி..., அழைத்தவுடனேயே ஓம் என மறுமுனையில் அவன் குரல் வந்தது. எப்பிடி செல்லம் இருக்கிறீங்கள் ? நல்ல சுகம் . நீங்கள் ? அவன் தொடர்ந்து கதைத்துக் கொண்டு வந்தான். இடையில் கேட்டான். தங்கைச்சி எல்லாம் சொன்னவா தானே ? இல்லைக்குட்டி. என்ன ? சொல்லுங்கோ ? ஓகே. எனக்கும் என்ர றூம்மேற்சுக்கும் கொரோனா வந்தது. அவனது நண்பன் ஒருவனின் பெயரைச் சொல்லி 'அவர் கொஸ்பிற்றலில இருந்து வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடுமையா இருந்தது. மற்றைய நண்பனுக்கும் கடுமை தான். ஆனால் இப்ப பறாவாயில்லை. நாங்க வெளியில போகேலாது. அடுத்தவனையும் தன்னையும் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் வீட்டில் தனிமைப்படுத்தி விட்டுள்ளதாகச் சொன்னான். அப்ப சாப்பாடுகள் என்னமாதிரி செல்லம் ? பிள்ளைகள் கொண்டு வந்து தருகினம். நாங்கள் வெளியில போகேலாது. தடை போட்டிருக்கினம். வெளியில நாங்கள் போனால் போலிஸ் பிடிக்கும் தண்டனைக்காசு கட்ட வேணும் , சிறையில அடைச்சிடுவினம். அவன் சொல்லச் சொல்ல நெஞ்சு பதறத் தொடங்கியது. கால்களைத் தாங்கிக் கொண்டிருந்த நிலம் என்னை தூரமாய் இழுத்துச் செல்வது போலிருந்தது. எங்கெல்லாமோ வந்த செய்தி என் குழந்தைக்கும் வந்துவிட்டதை நம்ப முடியவில்லை. வந்த அழுகையை அவனுக்கு வெளிக்காட்ட முடியாதிருந்தது. எனக்குள் நிகழ்ந்த அதிர்வை பயத்தை கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொள்கிறேன். கவனமா இருங்கோ செல்லக்குட்டி. பிள்ளைக்கு அம்மாவும் தங்கைச்சியும் இருக்கிறம். ஓண்டுக்கும் யோசிக்க வேண்டாம். பிள்ளையளிட்டைச் சொல்லி நல்ல சாப்பாடு வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டி. நீங்களும் கவனமாயிருங்கோ. எல்லா இடமும் தான் இது பரவுது. ஓம்குட்டி அம்மா கவனமாயிருக்கிறேன். பிள்ளைக்கு காசு கூட தேவையெண்டா சொல்லுங்கோ அம்மா அனுப்புவன் செல்லம். ஒண்டும் யோசிக்க வேண்டாம் செல்லக்குட்டி அம்மா இருக்கிறன் பிள்ளையளுக்காக. நான் ஒருக்கா உங்களைப் பாக்க வரலாமோ செல்லம் ? இங்கை ஒருவரும் வரேலாது பொலிஸ் தடைபோட்டிருக்கினம். இந்த செமெஸ்டரும் படிக்கேலாது போல. பாப்பம். நான் தங்கைச்சிக்கு கதைக்கப் போறன். உங்களுக்கு இன்னொருநாள் திரும்ப எடுக்கிறன். நீங்கள் கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில திரியாதையுங்கோ. கனக்க வேலை செய்யாமல் வீட்டில இருங்கோ. பலமுறை கவனம் சொல்லி 14.நிமிடம் 52 வினாடிகள் கதைத்தான். அவன் விடைபெற்றுக் கொண்டு தொலைபேசியழைப்பை நிறுத்தினான். என்னால் நிற்க முடியவில்லை. தலைசுற்றியது. வயிற்றினுள் ஏதொவெல்லாம் செய்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த கதிரையொன்றில் இருந்து கால்களை மேலுயர்த்திச் சாய்ந்தேன். தாழ் இரத்த அழுத்தத்தை உணர்கிறேன். கண்முன்னால் நீலநிறத்தில் பூச்சிகள் பறக்கத் தொடங்கியது. காதுக்குள் கூவென்ற இரைச்சல் ஆழமாக ஆழமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கைகள் கால்கள் உடலெல்லாம் தளர்ந்து சோர்கிறது. என்னை நானே நினைவிழக்க விடாமல் காக்க வேண்டிய கட்டாயத்தை உணர்கிறேன். கண்களை மூடி என்னை ஆசுவாசப்படுத்த முயல்கிறேன். அரைமணித்தியாலத்திற்கும் மேலாக அப்படியே இருந்தேன். ஓரடி நிமிர நாலடி வீழ்த்திவிடுகிற காலத்தை நினைக்க நினைக்க கோபம் வருகிறது. கடந்த வருடம் அவன் இளமானிப்பட்டப்படிப்பை முடிக்கும் பரீட்சைக் காலத்தில் நடந்த விபத்து , இதேகாலம் என் குழந்தை தன்னை மறந்து போயிருந்தான். என் இருள் நிறைந்த நாட்களின் சூரியனாக இருந்தவன். வவுனீத்தாவின் ஒரே நம்பிக்கை வேராக நின்ற எங்கள் இருவரின் எல்லாமுமானவன். அவனைக் காலம் தன் கைகளிலிருந்து இடுங்கி வீழ்த்திய காலமது. அவனைத்தேடித் தெருத்தெருவாய் அலைந்த இதே நாட்கள் ஒவ்வொன்றாய் நினைவுகளிலிருந்து இறங்கிக் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எல்லாம் ஒரு மர்மமாக கிட்டத்தட்ட 11மாதங்கள் கண்ணீரோடு வவனீத்தாவும் நானும் அழுதழுது அலைந்த காலங்கள் மாறியதாக 2019 நவம்பர் 25ம் திகதி அவன் கணிசமானளவு ஞாபகங்களை மீளப்பெற்று அம்மா தங்கைச்சியை ஏற்றுக் கொண்டான். இன்னும் மர்மமாகவே அந்தக் காலத்தின் முடிச்சுகள் முழுமையாக தழராத கதைகள் கோடியுண்டு. அவன் மீண்டு வந்தது போதுமென்றேன். பரீட்சையெழுத தயாராயிருந்தவன் படித்த படிப்பையெல்லாம் மீளவும் படிக்க வேண்டுமென்ற போது அவன் சோர்ந்து போகாமல் படிக்க முடிவெடுத்தான். ஒருவருடகால போராட்டம் தன்னைத் தானே தேடிக்கண்டடைந்து எங்கள் நம்பிக்கையை மீண்டும் அவன் தான் புதுப்பித்தான். அவனை அழுத்திய பொருளாராதச் சுமையை எனது ஒருபகுதி உதவியோடு வாரம் 40மணித்தியாலம் வேலைசெய்து முழுநேரம் பல்கலைக்கல்வியையும் தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது ஓய்வற்ற உழைப்பை நினைக்காத நொடியில்லை. நின்றால் நடந்தால் இயங்கினால் எல்லா நேரமும் அவன் தான் எனக்குள் அந்தக் காலத்துயரைக் கடந்துவர நான் அடைந்த சுமைகள் இதுவரை கால அலைவுகளெல்லாம் ஒற்றைத்தூசியாயிருந்தது. மருத்துவ உலகம் கைவிட்ட பிறகு அவன் தன்னைப் புதுப்பிக்க தன்மீதுதான் நம்பிக்கையோடு போராடினான். அவனது நம்பிக்கை அவனது துணிச்சல் அவனை எங்களுக்குத் திரும்பத் தந்தது. முன்பைவிட அவன் பலமடங்கு உடல் உள ஆரோக்கியத்தோடு தன்னை மீட்டான். எங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவன் அம்மாவை தங்கைச்சியை தன் உறவுகளாக ஏற்றுக் கொண்டது எனக்கும் வவுனீத்தாவுக்கும் எதுவும் வேண்டாம் அவன் மட்டுமே போதுமென்ற அமைதி. 2020 தொடக்கம் எங்களுக்கு நிமிர்வு காலம் இனி வீழமாட்டோமெனப் பிள்ளைகளுக்குச் சொன்ன எனது வார்த்தைகளைக் கண்ணீர் துடைத்தெடுத்துக் கொண்டிருந்தது. என் குழந்தை தனிமையில் வலிப்பட ஒரு தேனீர் கூட வைத்துக் கொடுக்க முடியாத துயரை எந்தச் சொற்களாலும் மொழிபெயர்க்கத் தெரியாத துயரம். துயரை என்னுள் தொடர்ந்து புதைத்து அழ வைக்கும் காலத்தின் தொடர் தொல்லைகளை ஒவ்வொன்றாய் தாண்டுகிற போதும் இனிமேல் துயரில்லை. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். ஆனால் காலம் ஏனோ என்னோடு மல்லுக்கு நிற்கிறது. அடுத்து மகள் அழைத்தாள். செல்லக்குட்டி அண்ணா எடுத்தவனம்மா நான் சொல்ல அவளும் தொடங்கினாள். அம்மா நீங்கள் யோசிக்காமல் இருங்கோ. அண்ணா சுகமாகீட்டார். அண்ணா மீண்டது அதிசயமம்மா. மற்றவையளுக்கு கூட அண்ணாவுக்குத்தான் தாக்கம் குறையவாம். அவர் சுகமாகினது போதும். அதைவிட வேறையேதும் நினைச்சு யோசிக்காமல் இருங்கோ. எல்லாம் நல்லதே நடக்கும். ஏன் பிள்ளை எனக்கு நீங்கள் சொல்லேல்ல ? அண்ணா முதல் கேட்டவர் உங்களுக்குச் சொல்லட்டோண்டு. நான் தான் சொன்னனான் கொஞ்சம் பொறுக்கச் சொல்லி. நீங்கள் முதல் சொல்லியிருந்தா உடனும் ரெயினேறி போயிருப்பீங்கள் எங்களுக்கும் சொல்லாமல் அதுதானம்மா உங்களுக்குச் சொல்லேல்ல. அண்ணா தொடர்ந்து என்னோடை கதைச்சுக் கொண்டிருந்தவரம்மா. என் தேவதை என்னை ஆறுதற்படுத்திக் கொண்டிருந்தாள். நான் யோசிக்கக்கூடாதென்று நினைக்கிறாள். அவனுக்கு சாதாரணமாக காலநிலை மாறும் போது வரும் காச்சல் இருப்பதாக 2வாரங்கள் முதல் சொல்லியிருந்தாள். நானும் அப்படித்தான் நம்பியிருந்தேன். ஆனால் மனம் அமைதியைத் துறந்து நித்திரையைப் பறித்து நானடைந்த மனவுளைச்சல். தினமும் ஏதாவது பயங்கரமான கனவுகளால் நித்திரையறும் போதெல்லாம் எழுந்திருந்து நெஞ்சு பதறும் அந்தரத்தை பிள்ளைகளுக்குச் சொல்லாமல் என்னோடு மறைத்து உலவிக் கொண்டிருக்கும் காலமிது. எனினும் உலகை உலுக்கும் கொரோனா என் வீட்டுக்குள் வராதென்ற துணிச்சலில் இருந்தேன். அது என் நம்பிக்கையை உடைத்து என்னைச் சோர வைத்துள்ளது. கடுமையான கட்டத்தை கடந்து அண்ணா வந்திட்டாரம்மா. இனி பயமில்லை. சீனாவுக்கு அடுத்து இத்தாலி உலகை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த இத்தாலியில் இருந்து கொண்டு என்னை என் மகள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அம்மா நீங்கள் அமைதியா வேலையை முடிச்சிட்டு வீட்ட வந்து எடுங்கோ கதைப்பம். சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்தாள் வவுனீத்தா. எனக்கு ஆறுதல் சொல்லும் என் மகள் தனிமையில் அண்ணாவுக்காக அழுவாள் என்பது தெரியும். அவள் அழுதால் என்னால் இனி இயங்கவே முடியாதென்பதை அறிவேன். அவளோடு இயல்பாக இயன்றவரை பேசி முடித்தேன். என்னால் தொடர்ந்து வேலையைச் செய்ய முடியாதிருந்தது. மனம் அடைந்த அந்தரிப்பை பயத்தை துயரை வெளியில் காட்ட முடியவில்லை. ஓடியோடி வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன்.வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் மனம் ஆறாத அந்தரிப்பு தொடர்கிறது. இன்னும் நித்திரை வரவில்லை. விழித்திருக்கிறேன். இப்போது விடியற்காலை 3.47. அன்றைக்கு பிறகு ஒருவாரம் கழித்து பார்த்திபன் சட்பண்ணினான். இன்னும் ரெண்டு கிழமையில நான் எனக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடுவேன். கொரோனா யாருக்கும் வரக்கூடாது. அதுவொரு பொல்லாத நோய். நான் மற்றவைக்கு இனி உதவப் போறன். கவனமாயிருங்கோ. கண்டபடி வெளியில போக வேண்டாம். என் பாதுகாப்பை அடிக்கடி சொல்லிக் கொண்டான். கொரோனா வந்தவர்களுக்கு உதவுதற்கு வானொலிகள் அழைக்கிறது. துணிந்து செல்ல யாரும் அதிகம் விரும்பாத காலமிது. என் குழந்தை அவர்களுக்கு தானாக உதவப் போகிறேன் எனச் சொன்னதை மறுக்க முடியவில்லை. 08.04.20 மீண்டும் பார்த்திபன் தொலைபேசினான். நீண்ட நேரம் சட்பண்ணினான். நான் திரும்பப் படிக்க வேணும். இன்னும் 2 தொடக்கம் 3 வருடங்கள் படிக்க வேணும். முழுநேரம் வேலைசெய்து கொண்டு படிக்க கஸ்ரமாயிருக்கு. நீங்கள் எவ்வளவு காலம் எனக்கு உதவ முடியும் ? நான் படிச்சு முடிய உங்களுக்கு எல்லாம் திருப்பித் தருவன். அவன் மீண்டும் படிக்க வேண்டுமென்ற தன் கனவைச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் படிச்சு முடியும் வரை அம்மா உதவுவேன் செல்லம். நீங்கள் அமைதியா வடிவா சாப்பிட்டு நிம்மதியா இருந்து படியுங்கோ. எனக்கு நீங்கள் ஒண்டும் திருப்பித் தரத்தேவையில்லை. நீங்கள் ஆரோக்கியமா இருந்தால் அதுவே எனக்குக் காணும் செல்லம். காலம் மீண்டும் என்னையும் என் குழந்தைகளையும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. ஓடத் தொடங்கியிருக்கிறேன். நாங்கள் 3பேரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் காலமொன்று எங்களை ஒரு புள்ளியில் சேர்க்குமென்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக விதைத்தபடி ஓடுகிறேன். அச்சம் துரத்தும் கனவுகளை ஆழ்மன வெளியின் அலைவுகளை கனவுகள் பெருகிக் கண்களை நிறைத்துக் கண்ணீர் கடலாய் இரவின் கருமையில் நிறைகிற பொழுதையும் தாண்டிக் கடந்தோடும் தைரியத்தைத் தரும் பிள்ளைகளின் ஞாபகங்கள் அவர்களது வெற்றிகள் பற்றிய நினைவுகளோடு நதியாகி ஓடுகிறேன். 02.05.2020 சாந்தி நேசக்கரம்
  11. நம்ம லெவல் வேற லெவல்... இந்த பாக்கியம் ஒருத்தருக்கும் வராராது.
  12. 1. காலம்பிறை, படுக்கையாளை எழுப்ப முன்னம், அரை நித்திரையிலே இருக்கேக்கை, ஜெல்லை பூசி, சேவ் எடுத்து விடவேணும். 2. வெள்ளிக்கிழமை பின்னேரம், வழக்கமான பிராண்ட் விஸ்கி, பக்கோடா, மசாலை வடையோடை மேசையில் இருக்க வேணும். 3. சாரி வாங்கி தாங்கோ, பிளவுஸ் வாங்கித்தாங்கோ எண்டு அரியண்டம் தரப்படாது. 4. ஞாயிறு எண்ணெயை பூசி, குளிப்பாட்ட வேணும். (தமிழ்நாட்டின் வளைகாப்பு செய்யலாம் எண்டால், உதுவும் செய்யலாம் தானே) 5. இவ்வளவும் சொன்னா பிறகு, முதுகிலை அன்பா, நாலு போடு போடக்கூடாது.
  13. முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன். வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985
  14. ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎 மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜 ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.
  15. நீங்கள் யோசிக்க வேண்டாம் அக்னீ இதையெல்லாம் போய் சொல்ல மாட்டார் ......! 😂
  16. உலக சாதனைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.......! 👍
  17. நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......! 🤔
  18. இது நண்பருடையது..... நாங்கள் வாங்கியது அப்பார்ட்மெண்ட்......! 😁
  19. வைஸ்ணவி சிறிரஞ்சன் ( ரொரன்டோ)
  20. கிராமத்து சந்தோசங்கள் பட்டினங்களில் வரவே வரராது. தாய்க்குலங்களின் கபடி கபடி...
  21. "Mariamma" Fitness & Dancing.
  22. தினம் தினம் வலம் வரும் எங்கள் காலடி நலம் தரும் வளம் தரும் தெய்வத் தாளடி (2) 1. சரண் என்று தேடினால் தோன்றித் தேற்றுவார் அரண் நாமே அஞ்சற்கென்று ஆற்றல் நல்குவார் (2) வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் - 2 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம் 2. கரையின்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும் மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே (2) இறைகரம் தரும் வரம் போதும் வாழ்விலே - 2 கறைபோக்கி குறை நீக்கி வாழ்வோம் பாரிலே உன்னையன்றி உலகில் உற்றத்துணை எனக்கு
  23. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லோரும் கொண்டாடுவோம் உமக்கும் எனக்கும் வழக்கொன்று
  24. "வெள்ளைப்பனிமலையின் மீது உலாவுவோம் அந்த மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்." நாம் தமிழர் . அழகிய உருவகங்கள் பாராட்டுக்கள் .
  25. பசுவின் பால்போல் வெண்மையும், இனிமையும் கொண்ட கவிதை. 🙌 "பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம்" இந்த வரிகள் கொண்டுள்ள பொருள், பனித்தூறலை மட்டுமல்ல, கொரோனாவையும் கொண்டுவந்து கொள்முதல் செய்ய வைக்கிறதே.!
  26. கொட்டிக் குவிந்துவிட்டால் கோபுரமும் தெரியாது-பின்பு பட்டக் குளிர் அடிக்கும் பல நிறமும் உள் மறையும்-இப்போ எல்லாம் ஒரே நிறம் எங்கும் சமாதானம் இது வேண்டும்,வேண்டும்.....! நல்ல கவிதை வெண்பனிபோல் கொட்டி விட்டீர்கள் தொடருங்கள் கோபி.......! 👍
  27. பகுதி 3: - தவறான மருந்து இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில் இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை. பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி, சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். "எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர். அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார். "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார். " நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார். அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு. - தொடரும்
  28. டமார் என்று ஒரு ஓசை இருவருக்கும் பின்புறமிருந்து , திடுக்கிட்டு இருவரும் திரும்பிப்பார்க்க பாடசாலை இரவுநேர காவலாளி, பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தின் உடைந்து இற்றுப்போய்விட்ட கதவினை திறக்க முயன்று கீழே விழுந்துவிட்ட கதவினை தூக்க பகீரதப்பிராயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார், சுலக்சனும்,அவனும் உடனே ஓடிப்போய் கைலாகு கொடுத்து தூக்கிவிட காவலாளியோ "தம்பிகள் வழமையாக மேடையில் தானே படுக்கிற நீங்கள், இண்டைக்கு மழை வரும்போல கிடக்கு அதுதான் அதிபர் மணடபத்தை திறந்து விட சொன்னவர் நீங்கள் படிச்சு முடிச்சுட்டு மண்டபத்திற்குள்ளேயே படுங்கோ என்று சொல்லிவிட்டு , தம்பிகள் வழமை போலவே கூடைப்பந்து மைதானம் தாண்டி இரவையில் போகாதீங்கோ கட்டாக்காலி நாய்கள் பின்பக்க வேலியால் உள்ள வரும், இருட்டில் வெருண்டு கடிச்சுப்போடும் எனக்கும் இரண்டு தடவை கடிச்சு இருக்கு அதனால் நான் என்ன சத்தம் கேட்டாலும் அங்காலை போறதில்லை நீங்களும் போகாதீங்கோ" என்று விட்டு தன்னுடைய டோர்ச்விளக்கினை ஒருதடவை சரிசெய்து பார்த்துக்கொண்டார் , நாங்கள் எதுக்கண்ணை அங்காலே போகப்போறம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் வந்தவனுடைய கண் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது 1943, ஆம்ஸ்டர்டாம் 15 நிமிடத்தில் தயாராகிவந்து தாயின் முன் நின்றார் வில்லி, தனது மகனின் மிடுக்கினை பார்த்து சோபியா பெருமிதமடைந்ததுடன் மட்டுமல்லாது இன்று தனது சந்ததியின் முதல் பட்டதாரியை கண்டுகளிக்கப்போகும் சந்தோஷத்துடன் வில்லியின் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பசகிதம் தயாராகி தங்கள் மகிழுந்தில் அமர்ந்தனர் , இன்றுடன் தனதுமகன் தன் குடும்ப பாரத்தை சுமக்க தயாராகிவிடுவான், தகப்பனுடைய வியாபாரத்தையும்,பரம்பரை சொத்துக்களையும் அவன் முகாமைசெய்யும் காலம் நெருங்கிக்கொண்டுவருகிறது என்று பெருமிதத்தில் பூரித்துப்போயிருந்த சோபியாவின் மௌனத்தை வில்லியின் குரல் கலைத்தது, "அம்மா" "ஆம் மகனே " "இன்று உங்களது கனவில் ஒன்றை நிறைவேற்ற போகிறேன் " "எனக்கு தெரியும் நீ ஒரு சிறந்த மகன், பொதுநலம் கொண்டவன்,மற்றவர்களின் கஷ்ட்டம் காண சகியாதவன் உன்னை ஒரு சிறந்த மனிதனாக வளர்த்ததில் என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் " "அம்மா எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும் " "சொல் மகனே உனக்கு என்ன வேண்டும் " "பட்டமளிப்பு விழா முடிந்ததும் கேட்கிறேன்" சோபியா இருந்த பூரிப்பில் அவன் சொன்ன வாக்கியங்களை அவள் உள்வாங்கியதாக தெரியவில்லை (தொடரும் )
  29. சைக்கிளை திருப்பிய வில்லிக்கு எந்தவொரு ஆச்சரியமும் தராமல் தனது இருகைகளையும் இடுப்பின் இருபுறமும் குத்தியவாறு முறைத்துக்கொண்டிருந்தார் அவரது தாயார் சீமாட்டி சோபியா (Sophia Eijkman), கணவனை இழந்தபின்னும் தனது பிள்ளைகளை தனியாக நின்று கண்டிப்புடன் கவனமாக வளர்த்த அந்தத்தாயின் நிற்கும் தோரணையே வில்லிக்கு இன்றைக்கு நமக்கு சகட்டுமேனிக்கு அர்ச்சனை ஆரம்பம் தான் என்று சொல்லாமல் சொல்லியது, இது எதனையும் அறியாமல் ஓடிவந்து வில்லியின் மீது ஏறிப்பாய்ந்து தனது நாவினால் அவரது உடலில் வழியும் வியர்வயை துடைத்துக்கொண்டிருந்தது வில்லியின் செல்ல நாய் டியூக். அப்படியே கதவோரத்தில் அண்ணன் வாங்கிக்கட்டப்போவதை வேடிக்கை பார்க்க வில்லியின் தங்கையும் தம்பியும் தயார்நிலையில் இருந்தனர், தாயின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தனது பார்வையை தாழ்த்திக்கொண்டு மெதுவாக நழுவி தாண்டிப்போக நினைத்த வில்லியை தடுத்துநிறுத்தியது தாயின் கை , அவரிடமிருந்து வந்த ஒரே ஒரு கேள்வி இன்று என்ன நாள்...? வில்லியோ எனக்கு தெரியும் அம்மா மன்னித்துவிடுங்கள், தயாரிடமிருந்து வந்த பதில் சரி போ சீக்கிரம் தயாராகு, தலை குனிந்தவாறு வில்லி மாடியேறி தனது அறைக்கு சென்றுவிட அண்ணன் வாங்கிக்கட்டுவான் வேடிக்கை பார்க்கலாம் என்று வந்த வில்லியின் தங்கையும், தம்பியும் ஏமாற்றத்தில் வந்த வழியே திரும்பி அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர் 2003, இலங்கை கிழக்கு மாகாணம் சைக் ...என்ன இதுக்குத்தான் உந்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவை தூக்கினோமோ, படிக்கிறன்,படிக்கிறன் உந்த கோதாரிபுடிச்ச இன்னோர்கானிக்கும் , தொழிற்படும் தாவரமும் முடியுதே இல்ல, இண்டைக்கு எப்படியாவது மிச்சம் இருக்கும் துண்டுகளை சப்பி துப்பி முடிச்சிடனும் ,என்று சைக்கிளை பலமாக மிதிக்கிறான் அவன், எப்படியும் நம்ப கம்பைன் ஸ்டடி அணி இண்டைக்கும் வரும் சேர்ந்து படிச்சு முடித்திடலாம் என்று நினைத்துக்கொண்டு இரண்டாவது மிதி மிதிக்கும் போது தொலைவில் அந்த பரிச்சயமான உருவம், இரவு 7:30 மணிக்கே அடையாளம் காணுமளவு பருத்த உருவம், இந்த உருவத்தை இரவு 12:00 மணிக்கும் அடையாளம் கண்டுவிடலாம், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் இவனோட சைசுக்கு ஆளே இருக்காது என்று மனத்திற்குள் கலாய்த்துவிட்டு தனது உற்ற நண்பன் சுலக்சனை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் அவன், நண்பனும் அவனது பங்கிற்கு படித்துவிட்டு தூங்க தலையணை, படுக்கைவிரிப்புகள் சகிதம் புத்தகங்களையும் சுமந்துகொண்டு இவனை நோக்கி நடந்து வருகிறான். அணியில் இவர்கள் இருவர் மட்டுமல்ல மொத்தமாக ஐவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவு நேரத்தில் அவர்கள் படிக்கும் பாடசாலையில் தங்கியிருந்து படிப்பது வழக்கம், அவ்வாறு தங்கியிருந்து படிக்க பாடசாலை அதிபரும் அனுமதி வழங்கியிருந்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு பாடசாலைக்குள் நுழைந்தனர், மச்சி இண்டைக்கு மத்த பார்ட்டி வருமோ தெரியாது நாம ரெண்டுபேரும் ஆரம்பிப்போம் வா என்று இருவரும் மெதுவாக புத்தகங்களை திறந்து சுலக்சன் பௌதீகவியலை படிக்க ஆரம்பிக்க, இவனோ இரசாயனவியலை திறந்து மெதுவாக பக்கத்தை புரட்டினான்...... அப்போது (தொடரும்)
  30. 1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)
  31. இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி-
  32. எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....! 👍 நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....! 😁
  33. இணைய வெளியில் 23 வருடங்கள் ஒரு யுகம்.
  34. நீங்கள் கோயிலுக்கு போனால் பக்திபரவசமாய் நின்று மணி அடிப்பவர் இல்லையென்று தெரிகின்றது...😁 தெய்வமே ...தெய்ய்ய்ய்ய்வமே..
  35. நான் ஓர் கனாக் கண்டேன் “நானோர் கனா.
  36. எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச்செல்கின்றோம்..
  37. கல்லறை விடை திறக்கும்
  38. மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்.. சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம் தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர் கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர் தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று....🔥🔥🔥🔥 விழியூறி நதியாகி விழுந்தோடும் எம்மில்
  39. ஏதிரியின் குருதியில் குளிப்போம்
  40. உள்ளுக்குள்ளே நெருப்பெரியும்
  41. நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வரைகூட அம்மாவுக்கு பக்கத்திலதான் பூனைகுட்டி போல நித்திரை கொண்டிருக்கிறேன். வாசிக்கும் பழக்கும் எனது தாயாருக்கு அதிகமாக இருந்ததினால் பக்கத்தில் படுத்திருக்கும்போது அவ சொன்ன புராண கதைகளை கேட்டே சாதாரணதர பரீட்சையில் மகா பாரதம் கம்ப ராமாயணம் பகுதிகளில் அதிக பெறுபேறுகள் பெற்றிருக்கிறேன். எங்காவது ஊர் விழாக்களுக்கு போனாலும் கிப்ஸ் சாரம் அணியும் வயசிலும் அம்மா பக்கதிலயே போயி குழந்தை போல உக்காந்திருக்கிறேன். ஆக்கினை தாங்காமல் , போய் பொடியளோட விளையாடேன்டா.. எதுக்கு அம்மா அம்மா எண்டு பின்னால திரியுறா? அம்மா செத்து போனால் என்ன செய்வா எண்டு என்ர பாசத்தின் லெவலை அளவிட சும்மா ஒரு கோப கேள்வி பலமுறை கேட்டிருக்கிறா. அப்போ நான் சொன்னதெல்லாம் ’நீ செத்துபோனா நானும் செத்துபோவேன்’. சொன்னபடியே அவ செத்து போயிட்டா... ஆனால் நான் இன்னும் வாழ்கிறேன். வலி தரும் பதிவு குமாரசாமியண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.