Leaderboard
-
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்20Points15791Posts -
Nathamuni
கருத்துக்கள உறவுகள்14Points13720Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்13Points9976Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்11Points9308Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/10/21 in Posts
-
இனி இளவேனில் காலம் - நிழலி
15 pointsஇனி இளவேனில் காலம் - நிழலி வெயில் சரம் பிடித்து நிலம் நோக்கி இறங்குகின்றது வானை வகுந்தெடுத்து பெரும் காற்று வீசுகின்றது பனிக்காலத்தை பெயர்த்து இளவேனில் விதைகளை விதைத்து செல்கின்றது வசந்தகாலத்தின் முதல் பாடல்களை சுமந்த வண்ணம் வனக் குருவிகள் ஊர் திரும்புகின்றன குளிர்காலம் இராப்பாடகனின் தொலைதூர குரலை போல் மெல்ல தேய்கின்றது முதன் முதலில் குறுக்கு கட்டியவளின் மார்பின் சரிவுகளில் தேங்கிய நீர்த் துளி போல் இலைகள் துளிர்க்க தொடங்குகின்றன வனம் இனி சூல் கொள்ளும் சிற்றாறுகள் உறைவிலிருந்து உருக்கொள்ளும் முத்தங்களுக்கிடையில் பரிமாற ரோசாக்கள் பூக்கத்தொடங்கும் கட்டைக் கால் தாராக்கள் குஞ்சுகளுடன் வெளிவரும் ரக்கூன்கள் குட்டிகளுடன் முற்றத்தில் வந்து நின்று விடுப்பு பார்க்கும் ஒரு நாளும் கேட்காத பாடல்களை சிறுகுருவிகள் பாட புதிய காலைகள் மலரும் பகல் ஒரு நீண்ட ரயிலாக வளைந்து செல்ல இரவு கடைசிப் பயணியாக வந்து அமரும் காலம் மீண்டும் தப்பாமல் இளவேனில் காலத்தை கொண்டுவரும் (இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)15 points
-
சமூகமும் ஓட்டமும்
8 pointsசிறு வயதில் கனக்க கதைகள் படித்திருப்போம் கேட்டிருப்போம் ஏன் கனக்க அனுபவங்களை கதைகளாக நாமே கண்டிருப்போம் அவை சொல்லப்படும் விதமும் எம்மை வந்து சேர்ந்த விதமும் மாறுபடுவது போல கதையை அல்லது அனுபவத்தை கிரகித்தலும் மாறுபடலாம் மாறுபட்டு விடக்கூடும் ஆனால் கதையின் கருவும் அனுபவத்தின் அனுகூலமும் மாறுவதில்லை அதேநேரம் அதை நாம் கடந்து செல்வதும் கூட அல்லது கண்டும் காணதுபோவதும் போவது போல பாசாங்கு செய்வதும் கூட நடக்கும் நடந்திருக்கலாம்? சின்ன சின்னக்கதைக்குள் திருக்குறளைப்போல பெரும் புதையலும் கருவும் பாடமும் புதைந்து கிடக்கின்றன அவரவரது அனுபவங்களுக்கேற்ப ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுபடுமே அன்றைய சமூக கால நேர நிலைக்கேற்ப மாறுபடுமே தவிர புதிதாக எதையும் கண்டு பிடிப்பதில்லை என்பதைப்போன்றதே கதையும் கருவும் ஏன் இசையும் கூட. இதில் சில விடயங்களை நாம் தவிர்த்தே செல்கின்றோம் தவிர்க்கின்றோம் என்பதற்காக அவை எம்மை விட்டு வைப்பதில்லை நாமுண்டு எம் வாழ்வுண்டு என்று நாம் விலகிச்சென்றாலும் இந்த சமூகமும் அதன் கட்டுமானங்களும் எம்மை தங்களுக்குள் இழுக்காமல் விடுவதில்லை பொருளாதாரம் சார்ந்த இன்றைய உலக ஒழுங்கில்..... அப்படியொரு கதையை சொல்ல விளைகின்றேன் (எல்லோரும் தாண்டி வந்த பாதையாதலால் சிலரை குத்தக்கூடும் பலரது மனதை சாந்தப்படுத்தக்கூடும்) ஆமையும் முயலும் இந்த சின்னக்கதைக்குள் எவ்வளவு அர்த்தங்கள்?? ஆமை : தளராத முயற்ச்சி தன்னம்பிக்கை அடுத்தவரைப்பார்த்து தன்னை மாற்றாமை கல்லெறிகளின் போது பொறுமை எவருடனும் போட்டி போடாத தன்மை முயல்: ஆணவம் அதீத நம்பிக்கை சோம்பேறித்தனம் வல்லவன் என்ற மமதை அகங்காரம் தனக்கு கீழுள்ளோரை மிதித்தல் முக்கியமாக தமக்கு பிடிக்காதவரை பிரச்சினைகளுக்குள் தள்ளி விட்டு நகைத்தல்..... தொடரும்....8 points
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
7 pointsநான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்7 points
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
3 pointsஅன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல் ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் . அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் . அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை அண்ண இஞ்ச கொஞ்சம் வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா?? அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள். போய் பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது . அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள் கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. தொடரும் .3 points
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- சமூகமும் ஓட்டமும்
2 pointsசின்னதிரைகள் வந்தபின் எல்லாமே தொடரும் தொடரும் தொடரும் விசுகு என்ன விதிவிலக்கா.2 points- பெண்மை எனும் நல் மனையாள் .
1 pointபெ ண்மை எனும் நல் மனையாள் . பெண் என்பவள் ,என் தாய்க்கு பிறகு , அவளுக்கு நிகராக, என்னையும் எல்லா விதத்திலும் கரிசனை கொள்ள வந்த தாரமானவள். என் மனைவி , எனக்கானவள் . என்னை நம்பி வந்தவள். என் உயிர் தாங்கி பத்து மாதம் சுமந்து வலி தாங்கி என் மகவை பெற்றவள் . செல்வி என வாழ்ந்தவள். திருமதியானவள். தன் பெயர் மாற்றி என் பெயர் தாங்கியவள். (ஒரு சில விதிவிலக்குண்டு ) என் பசியாற்றுபவள் என் வாரிசுகளுக்கு அம்மா . என் மகனுக்கு/மகளுக்கு , அப்பா என அறிமுகம் செய்தவள்.தாலி எனும் வேலி தாங்கி எனக்காக வாழ்பவள். தன பசி மறந்து நம் பசி போக்கியவள். உதிரத்தை பாலாக்கி உணவூட்டியவள். விலையில்லாதவள் . என் தாய்க்கு மகளாக என்தந்தைக்கு மறு மகளாக (மரு மகளாக ) என் மக்களுக்கு தாயாக வாழ்ந்தவள் . ஆண்மைக்கு உயிர் கொடுத்தவள் தனக்கு நிகராக என்னையும் மக்களையும் நேசித்தவள் சபையிலே எனக்கு கெளரவம் தந்தவள் . மக்கள் பேற்றின் மூலம் உலகை உருவாக்கியவள் . என் குடும்ப நிர்வாகி , நல்ல வழி காட்டி. தாய்மையை போற்று வோம் . சகல பெண்களுக்கும் இன்றைய தினத்தில் சமர்ப்பணம். இப்படிக்கு ஆண்மை (ஆண்மக்கள் )1 point- காவலூர்க் கனவுகள்
1 pointமிகவும் சிறப்பான மண்மணம் வீசும் கவிதை......நான் nrtb யில் வேலை செய்த காலத்தில் காரைநகர் ஜெற்றியில்தான் டிப்போ இருந்தது.அப்போது புது டிப்போ கட்டப்படவில்லை. சிலதடவை அந்த கடற்கோட்டைக்கு சென்றிருக்கின்றேன். அந்நாட்கள் மறக்க முடியாதவை.கரம்பொன்னிலும் நிறைய உறவினர்கள் உள்ளார்கள். பாராட்டுக்கள் சகோதரி.......! 👍1 point- இனி இளவேனில் காலம் - நிழலி
1 point- சமூகமும் ஓட்டமும்
1 pointசிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன. அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 21, வைகாசி 2017 காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிதேடலினை அடக்குவதற்கு மேற்குலக நிதியினைப் பாவிக்கும் ரணில் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ புலநாய்வுத்துறையினரின் வழிநடத்துதலில் இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைப்படைகளால் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீதிகோரிவரும் பெண்கள் அமைப்புக்களை வாய்மூடி மெள்னிக்கவைக்க மேற்குலக நிதியுதவியின் மூலம் செயற்படும் ஓட்டமாவடியைச் சேர்ந்த அரசுசார்பற்ற அமைப்பொன்றினை ரணில் அரசாங்கம் பாவித்துவருவதாக அப்பெண்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கிழக்கிற்கான சமூக அபிவிருத்தி நிதியம் எனும்பெயரில் இயங்கிவரும் இவ்வமைப்பு காணமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் முன்னின்று போராடிவரும் பெண்களைக் குறிவைத்து தனது நிகழ்ச்சித்திட்டத்தை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் ஐக்கியநாடுகள் சபையினூடாகக் கிடைக்கும் நிதியுதவியினைக் கொண்டே இவ்வமைப்பு இயங்கிவருவதாகத் தெரியவருகிறது. ஆனாலும், இவ்வமைப்பின் நிர்வாக இயக்குனரான புகாரி முகமது கூறுகையில், தமது அமைப்பிற்கான நிதியினை இங்கிலாந்தின் ஒரு அமைப்பும், லக்ஸம்பேர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னொரு அமைப்புமே வழங்கிவருவதாகக் கூறியிருக்கிறார். காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிவரும் பெண்களைக் குறிவைத்து செயற்படும் இவ்வமைப்பு கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் நீலன் திருச்செல்வம் நிதியத்தின் மூலமும் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான விடயங்களில் தலையிட்டு வருவதாகத் தெரிகிறது. கொழும்பிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி மட்டக்களப்பில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிவரும் பெண்களின் குரலினை அடக்குவதற்கே இந்த அரசுசாரா அமைப்பினை ரணில் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அத்துடன், இப்போராட்டங்களில் முன்னால் நின்று செயற்பட்டுவரும் பெண்களை அணுகியுள்ள இவ்வமைப்பின் அதிகாரிகள், போராட்டங்களைக் கைவிடுமாறும், அதற்குப் பதிலாகப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறும் பலதடவைகள் வற்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். அவர்கள் இதுபற்றி மேலும் கூறுகையில் கருணா மற்றும் பிள்ளையான் கொலைப்படையினரின் விபரங்களையேந்தியும், ராணுவப் புலநாய்வுத்துறையினரை அடையாளம் காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இப்பெண்களை போராட்டத்திலிருந்து விலக்குவதற்காக ரணில் அரசாங்கத்தின் தரகர்களாக இவ்வமைப்பினர் செயற்பட்டுவருவது அப்பட்டமாகத் தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும், பாலின வேறுபடுத்தல்கள் தொடர்பாக சில குறிப்பிடத் தக்க நடவடிக்கைகளை இவ்வமைப்பு மேற்கொண்டுவந்தாலும் கூட, இவ்வமைப்பின் உண்மையான நோக்கம் கொழும்பின் அரசிற்கு ஆதரவாகச் செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் குரலினை அடக்கி ஈற்றில் நீதிகிடைப்பதை இல்லாமல்ச் செய்வதுதான் என்று கிழக்கின் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 4, பங்குனி 2017 ராணுவப் புலநாய்வுத்துறைப் போர்க்குற்றவாளிகளையும், துணைராணுவக் கொலைப்படைகளையும் காத்துவரும் ரணில் விக்கிரமசிங்க சந்திரிக்கா குமாரதுங்க காலத்திலிருந்து மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம்வரைக்கும் தமிழ்மக்கள் மேல் கடத்தல்கள், காணாமற்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவந்த ராணுவப் புலநாய்வுத்துறையினரையும், ராணுவ புலநாய்வுத்துறையினரால் இயக்கப்படும் தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரையும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது நீதிதேடலின் முக்கிய குற்றவாளிகளாக தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுவருவதனையடுத்து இந்த போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, இவர்கள் தொடர்பான ஆதாரங்களையும், ஏனைய விபரங்களையும் அழிக்கும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இறங்கியிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள இப்போர்க்குற்றவாளிகளை ராணுவத்தினதோ அல்லது காவல்த்துறையினதோ வேறு பிரிவுகளுக்கு ரணில் அரசாங்கம் மாற்றிவருவதாகவும், பலருக்கு ஓய்வினை வழங்கி தலைமறைவாக வாழ ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் அரச துணைராணுவக் கொலைப்படையான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் தமிழ்நெட் செய்திச் சேவைக்கு வழங்கிய தகவலில் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்ஷவின் இனக்கொலை அரசால் ஸ்தாபிக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை அமைப்பான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பின் முன்னால் சாட்சியம் வழங்கிய தமிழர்கள் தமது உறவுகளைக் கைதுசெய்து இழுத்துச்சென்று காணாமலாக்கிய போர்க்குற்றவாளிகளை தெளிவாக அடையாளம் காட்டியிருந்ததும், கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும், கடத்தப்பட்ட இடம், நேரம் ஆகிய விடயங்களையும் வெளிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களால் அடையாளம் காணப்பட்ட ராணுவப் புலநாய்வுத்துறையினரில் பிரிகேடியர்கள், கேர்ணல்கள், லான்ஸ் கோப்ரல்கள், மேஜர்கள், கப்டன்கள் ஆகிய அதிகாரிகளும் அடங்கியிருப்பது சிங்களப் பேரினவாதிகளுக்கு தமது புலநாய்வுத்துறையினரைக் காக்கவேண்டிய கட்டாயத்தினை ஏற்படுத்திவிட்டிருந்தது. ஆகவே இவ்வதிகாரிகளின் இருப்பினை மறைப்பதற்கு இவர்களுக்கான பாதுகாப்பினை வழங்கியுள்ளதோடு, அவர்களின் சொந்த ஊர்களுக்கே மீளவும் வேறு பதவிகளைக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தம்ழினக்கொலையில் முன்னின்று செயற்பட்ட தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் டயஸ், வசந்த கரன்னகொட ஆகிய அதியுயர் அதிகாரிகள் உட்பட பலரை சர்வதேச நாடுகளின் இலங்கை உயர்ஸ்த்தானிகராலயங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களுக்கும் அனுப்பி, அவர்களின் குற்றங்களில் இருந்தான பாதுகாப்பினை, விலக்களிப்பினை உறுதிசெய்துவைத்திருந்தார். தமிழ்மக்களுக்கெதிரான போர்க்குற்றங்களிலும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்ட பல ராணுவப் புலநாய்வுத்துறையினரின் பெயர் விபரங்களை விடுதலைப் புலிகள் சேகரித்து வந்ததோடு, புலிகளின் புலநாய்வுத்துறையினர் துணைராணுவக் குழுக்களுக்குள் ஊடுருவியும் பல போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து வைத்திருந்தனர். இவ்வாறு மக்களாலும், புலிகளாலும் போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட அனைத்து ராணுவ புலநாய்வுத்துறையினருக்கும், துணை ராணுவக் கொலைப் படையினருக்கும் "தேசிய பாதுகாப்பு" எனும் திட்டத்தின் மூலம் பாதுகாப்பினை வழங்கிட ரணில் அரசாங்கம் முயற்சியெடுத்து வருகின்றது. 2006 இல் புலிகளின் புலநாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மாணினால் தயாரிக்கப்பட்டு நோர்வே சமாதானக் குழுவிற்கு வழங்கப்பட்ட ஆவணமொன்றில் புலிகளுடன் நிழல் யுத்தம் ஒன்றினை அப்போது தொடங்கி நடத்திவந்த அரசாங்கத்தின் அச்சாணிகளாகச் செயற்பட்டு வந்த ராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் தமிழ்க் கொலைப்படை உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டிருந்தது. புலிகளால் அடையாளம் காணப்பட்ட அனைத்து ராணுவப் புலநாய்வுத்துறையினர் மற்றும் தமிழ் கொலைக்குழு உறுப்பினர்கள் என அனைவருமே தலைமறைவாகியுள்ளதுடன், இவர்கள் பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. புலிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் குறைந்தது 4 மேஜர்களும் 10 கப்டன்களும், பல கீழ்நிலை அதிகாரிகளும் அடங்கியிருந்ததோடு பல தமிழ் துணைராணுவக் கொலைப்படையினரும் அடங்கியிருந்தனர். புலிகளால் நோர்வே சமாதானக் குழுவினருக்கு வழங்கப்பட்ட அந்த ஆவணம் இலங்கையரசுக்கும் கிடைத்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டு நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருக்குக் கையளிக்கப்பட்ட ஆவணத்தின் ஒரு பகுதி. https://www.tamilnet.com/img/publish/2011/12/Chapter_4_Partners_in_Crime.pdf1 point- சமூகமும் ஓட்டமும்
1 pointஆமை வேகத்தில் எழுதாமல் முயல் வேகத்தில் எழுதுங்கோ😄 .....தொடருங்கள் விசு வாசிக்க ஆர்வமாக உள்ளோம்1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, புரட்டாதி 2016 தமிழர்களின் வாழ்வாதார முடக்குதலோடும், தாயகச் சிதைப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் "கிழக்கின் அபிவிருத்தி" - உபயம் கருணா கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவள அமைச்சினூடாகவே தமிழர் தாயகச் சிதைப்பும், சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்கிற போர்வையில் தமிழர்களின் வாழ்வாதார கால்நடை மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டுவருவதோடு, அவர்களின் தாயகமும் சிங்களக் குடியேற்றங்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழரின் மேய்ச்சல் நிலங்கள் இவ்வருட ஆரம்பத்திலிருந்து இன்றுவரைக்கும் குறைந்தது 1000 ஹெக்டெயர்கள் பசுமையான மேய்ச்சல் நிலங்கள் அடங்கலாக பெருமளவு தமிழர் நிலம் சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் காவுகொள்ளப்பட்டிருக்கிறது. கிரான் பால்ப்பண்ணை விவசாயிகள் அமைப்பின் தலைவரான திரு நிமலன் கந்தசாமி இதுபற்றிக் கூறுகையில் தமது மேய்ச்சல் நிலங்களை அடாத்தாக அபகரித்துக் குடியேறிவரும் சிங்களவர்களின் பாதுகாப்பிற்கென்று ராணுவமும், சிங்கள ஊர்காவல்ப்படையும், முன்னாள் ராணுவ - காவல்த்துறை அதிகாரிகளும் அரசால் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இவர்களே தமிழரை இந்நிலங்களிலிருந்து அச்சுருத்தி விரட்டிவருவதாகவும் தமது கால்நடைகளைக் கொன்றும் களவாடிச் செல்வதாகவும் கூறுகிறார். தமிழர்களின் மேய்ச்சல் நில அபகரிப்பு மயிலத்த மடு மற்றும் மாதவணை ஆகிய பகுதிகளிலேயே அதிகமாக நடைபெற்று வருவதாகவும், இப்பகுதிகளில் நாள்தோறும் சிங்களவர்கள் குடியேறிவருவதாகவும் இவர் கூறுகிறார். கடந்த 3 வருடங்களில் மட்டும் குறைந்தது 1000 பசுக்கள் சிங்களவர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலநூற்றுக்கணக்கான பசுக்களை சிங்களவர்கள் கொன்றபின்னர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரச ஆலோசனைப்படி தமிழர்களின் வாக்குகளால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட இனவாதி மைத்திரிபால தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த திட்டமிட்ட இனரீதியிலான ஆக்கிரமிப்பினை உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கிழக்கு வாழ் கல்வியாளர்களின் கருத்துப்படி, அமெரிக்காவில் வெள்ளையினத்தவர்கள் குடியேறியபோது, மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களைக் கொன்று நிலத்தினைக் கைப்பற்றியதற்கு ஒத்ததாக இன்று மட்டக்களப்பில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் திகழ்வதாகக் கூறுகின்றனர். திரு கந்தசாமி மேலும் கூறுகையில், " கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநராக இருக்கும் ஒரு இனவாதி , மைத்திரியின் கிழக்கு மாகாண ஆலோசகராக பதவி வகிப்பதோடு, அரசால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்கள ஆக்கிரமிப்பினை ஆதரிப்பதாகவும், தமிழர்களின் இதுதொடர்பான முறைப்பாடுகளை அசட்டை செய்துவருவதாகவும் கூறுகிறார். தமிழரின் மேய்ச்சல் நிலங்களை சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கும் கைங்கரியம் 2007 ஆம் அண்டிற்குப்பிறகே அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கருணாவின் துணையுடன் கிழக்குமாகாணம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தபின்னர் இவை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார். இலங்கை அரசாங்க பாற்பண்ணை அமைப்பின் அனுமதிப் பத்திரங்களைக் கொண்டே தமது கால்நடைகளை தமது மேய்ச்சல் நிலங்களில் மேய்த்துவருவதாக இப்பகுதித் தமிழர்கள் கூறுகின்றனர். தமது மேய்ச்சல் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாலும், கால்நடைகள் கொல்லப்பட்டுவருவதாலும் விரக்தியுற்றிருக்கும் தமிழப் பண்ணையாளர்கள், அரசின் பாற்பண்ணை அமைப்பிற்குத் தாம் வழங்கிவரும் பாலினை தற்போது நிறுத்திவைத்து தமது எதிர்ப்பினைக் காட்டிவருகின்றனர். நாட்டின் மொத்த பாற்பொருட்கள் உற்பத்தியில் 22 வீதத்தினை மட்டக்களப்பு பண்ணையாளர்கள் வழங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்களக் குடியேற்றத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென்று கூறிவரும் அரச பாற்பண்ணை அமைப்பு, தெற்கில் சிங்களப் பண்ணையாளர்களுக்குக் கொடுக்கும் விலையினைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைகே தமிழ்ப் பண்ணையாளர்களிடமிருந்து பாலினைக் கொள்வனவு செய்துவருவதாகவும் நிமலன் குறிப்பிடுகிறார். தமிழ் பண்ணையாளர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளையடுத்து இப்பகுதிக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகளும், காவல்த்துறை அதிகாரிகளும் நிலைமையினை ஆராய்ந்து, தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்படுவதையும், கால்நடைகள் கொல்லப்படுவதையும் ஆதாரங்களுடன் அறிக்கையாக கிழக்கு மாகாண இனவாத ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கின்றனர் என்று தெரியவருகிறது. கடந்த வைகாசி மாதம் கிழக்கு மாகாண ஆளுநரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான களுபாகே ஒஸ்டின் பெர்ணான்டோ என்பவனுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க அவன் தொடர்ந்தும் மறுத்துவருவதாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடமிருந்து வைகாசி மாதம் முடிவிற்கிடையே பதிலளிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லையென்று தமிழ்ப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மகாவலி திட்டம் "பி" - படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதி மகாவலி திட்டம் "பி" பிரிவானது தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் நோக்கத்துடனும் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுவருவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர். திரு நிமலன் கந்தசாமியின் கருத்துப்படி 2007 வரை படுவான்கரையின் தமிழர்களின் காணிகளும் வாழ்வாதாரமும் தமிழீழ விடுதலைப் புலிகளால் காக்கப்பட்டு வந்தது. ஆனால், பிரதேசவாதம் பேசிக்கொண்டு அரசுடன் சேர்ந்து சொந்த இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கியிருக்கும் சிலரால் இன்று மட்டக்களப்பு மாவட்டமே முற்றான சிங்களமயமாக்கலின் ஆபத்தினை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார். சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து 2007 வரை புலிகளால் காக்கப்பட்டு வந்த படுவான்கரை இது இவ்வாறிருக்க, அரச வனவளக் கூட்டுத்தாபனம் தமது நடவடிக்கைகளுக்கு தமிழ்ப் பண்ணையாளர்கள் முட்டுக்கட்டைபோடுவதாகவும், மேய்ச்சல் நிலங்களில் இருந்து அகல மறுப்பதாகவும் கூறி 2010 இல் வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருக்கிறது. ஆகவே, தமிழ்ப் பண்ணையாளர்கள் தமது குற்றத்தினை ஒத்துக்கொண்டு, மேய்ச்சல் நிலங்களை விட்டு அகன்று, வனவள அமைச்சின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் சிங்கள நீதித்துறையின்மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது. "நாம் செய்யாத குற்றத்திற்காக நாம் ஏன் பொறுப்பெடுக்கவேண்டும்? எமது தாயகத்தை அபகரித்து, எமது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவருவது அரசல்லவா? அவர்கள்தானே உண்மையான குற்றவாளிகள்?" என்று திரு நிமலன் கேள்வியெழுப்புகிறார். "கொல்லப்பட்ட எமது கால்நடைகளை புகைப்படமெடுத்தும், தகுந்த ஆதாரங்களிக் கொண்டு ஏறாவூர்ப் பொலீஸில் நாம் முறைப்பாடு செய்தபோதும், சிங்கள குடியேற்றவாசிகளுக்கெதிராக தம்மால் நடவடிக்கையெடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்" என்று நிமலன் மேலும் சொன்னார். தமிழர்கள் தமது நிலங்களுக்காகவும், காவுகொள்ளப்படும் கால்நடைகளுக்காகவும் தொடர்ந்தும் போராடிவருமிடத்து சிங்களக் குடியேற்றவாசிகள் மேலும் மேலும் தமிழர் பகுதிகளுக்குள் ஊடுருவி நிலங்களைப் புதிதாக ஆக்கிரமித்து வருவதோடு, அவ்விடங்களில் புத்த விகாரைகளையும் கட்டிவருவதாகவும் நிமலன் கூறுகிறார். "எமது மேய்ச்சல் நிலங்களை, முற்றாக அழித்து, தெற்கிலிருந்து கொண்டுவரப்படும் ஏழைக் கூலித் தொலிழாளர்களைக் கொண்டு விவசாய மண்ணை பல படிமங்களாகக் கொட்டிப் பரவிவருகிறார்கள். இந்த நிலங்கள் விவசாயத்திற்கு உகந்ததல்ல என்பது அவர்களுக்குத் தெரியும், ஆகவே இதன்பின்னால் இவர்களிடம் வேறு ஏதோவொரு திட்டமிருக்கிறது. இவர்கள், பல்வேறான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ராணுவத்தையும், ஊர்காவல்படையினரையும் இணைத்து செயற்படுத்திவருகிறார்கள்" என்றும் நிமலன் மேலும் கூறினார். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பெரும்பகுதி திட்டம் "பி" பிரிவிற்குள்ளேயே அடங்குகிறது. மொத்த திட்டத்தின் நில அளவான 75,441 ஹெக்டெயர்களில் மட்டக்களப்பு - பொலொன்னறுவை மாவட்டங்களில் மட்டும் 27,179 ஹெக்டெயர்கள் நிலம் இத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. இதிலும் பெரும்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இருக்கின்றது. ஆகவே, பொலொன்னறுவை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை சிதைத்து, மகாவலித் திட்டம் எனும்பெயரில் பொலொன்னறுவை மாவட்டத்துடன் இணைத்து சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் பல்லாண்டுகளாகவே இப்பகுதியில் செயற்பட்டு வரும் ஒருவர் என்று தெரியவருகிறது. தமது பிராந்திய, சர்வதேச நலன்களுக்காக ஒரு இனவாத அரசிற்கு முண்டுகொடுத்து, பணத்தினை வாரி இறைத்துவரும் சக்திகள், தமிழரின் தாயகம் இனரீதியாகச் சிதைக்கப்பட்டு, தமிழரின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் ஏதிலிகளாக விடப்படுவதற்கு இதுவரையிலும் உதவியே வருகின்றன என்று கிழக்கு மாகாண கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 08, ஆனி 2016 மட்டக்களப்பில் சட்டவிரோத மரம்வெட்டுதலுக்கு எதிராகச் செயற்படும் அதிகாரிகளை அச்சுருத்திவரும் ராணுவப் புலநாய்வுத்துறையும், கருணா துணைராணுவக் கொலைக்குழுவும் குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பிலும், மரவிற்பனையிலும் ஈடுபட்டுவரும் ராணுவத்தினர் ஐவரை கடந்த முதலாம் திகதி இப்பகுதிக்கான கிராம சேவக அதிகாரி சண்முகம் குரு அவர்கள் விசாரித்தபோது, அவரை தமது முகாமிற்கு இழுத்துச்சென்று கடுமையாகத் தாக்கி, குற்றுயிராக வாழைச்சேனை வைத்தியசாலையில் ராணுவத்தினர் எறிந்துவிட்டுச் சென்றது பலருக்கு நினைவிருக்கலாம். தற்பொழுது இந்த கிராமசேவக அதிகாரிக்கு தமது மரம் கடத்தல் தொடர்பான தகவல்களைக் கொடுத்தமைக்காக இப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றிற்கு ராணுவப் புலநாய்வுத்துறையினரால் வழிநடத்தப்படும் கருணா குழு ஆயுததாரிகளால் மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இரு உந்துருளிகளில் வந்த துணைப்படையினர், "இனிமேல் ராணுவத்தினரின் மரம்வெட்டும் விடயத்தில் தலையிட்டீர்கள் என்றால் உயிருடன் இருக்கமாட்டீர்கள்" என்று எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். அச்சுருத்தலுக்குள்ளாகியிருக்கும் குடும்பம் தற்போது நண்பர்களினதும், உறவினர்களினதும் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை ராணுவ அராஜகத்திற்கெதிராகவும் துணைராணுவக் கொலைக்குழுவின் மிரட்டலுக்கெதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இப்பிரதேச கிராம சேவக அதிகாரிகள் , தமது சக உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தாம் பணிக்குத் திரும்பபோவதில்லை என்று கூறியிருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கானாந்தனை பகுதியில் அமைந்திருக்கும் திருமதி மூத்ததம்பி இலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற துணைராணுவக் கொலைப்படையினர், " ராணுவத்தால் குடும்பிமலைக் காட்டிற்குள் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் வெட்டும் தொழில்பற்றி எவரிடமும் கூறினால் வீட்டில் மீதமிருப்போர் அனைவரையும் வெளியே இழுத்துச் சுட்டுக் கொல்வோம்" என்று மிரட்டியிருக்கிறது. ராணுவப் புலநாய்வுத்துறையினராலும், துணைராணுவக் கொலைப்படையினராலும் மிரட்டப்பட்டிருக்கும் இக்குடும்பம் ஒரு மாவீரர் குடும்பம் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தில் உட்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் ஈடுபட்டு வரும் ராணுவம் இனவாதப் பிக்குகளைக் கொண்டு இவற்றினை ஆரம்பிப்பதுடன் அரசின் அனைத்து அமைச்சுக்களினதும் வெளிப்படையான ஆதரவினையும் இதுதொடர்பாக பெற்றிருக்கிறது. தொல்பொருள், வனவளம், வனவிலங்குகள் அமைச்சு, உல்லாசப் பயணத்துறை அமைச்சு என்று மிக முக்கியமான அமைச்சுக்கள் இக்குடியேற்றங்களின் பின்னால் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. தமிழர் தாயகத்தின் உட்புறங்களை அழித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் சிங்கள ராணுவம், தமிழரின் வனவளத்தை அழித்து, தெற்குச் சிங்கள வியாபாரிகளுக்கு குறைந்தவிலையில் மரங்களை விற்றுவருகின்றதென்று இப்பகுதிக் கிராமசேவக அதிகாரிகள் தொடர்ச்சியாகவே முறையிட்டு வருகின்றனர். ஆகவே, தமது தாயகச் சிதைப்பினை வெளியுலகின் கண்களுக்குக் கொண்டுவரும் முகமாக இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், தேசியத்தினை நேசிக்கும் மக்களும் ராணுவத்தின் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி தகவல்களைச் சேகரித்து அதிகாரிகளுக்கு அறிவித்து வருகின்றனர். ஆனாலும், இப்பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையினரால் உலவ விடப்பட்டிருக்கும் கருணா துணைராணுவக் கொலைக்குழு இந்த சமூக ஆர்வலகள் தொடர்பாகவும், தேசியத்தினை நேசிக்கும் மக்கள் தொடர்பாகவும் தகவல்களை தொடர்ச்சியாக ராணுவப் புலநாய்வுத்துறையினருக்கு வழங்கி வருகின்றது. கருணா துணைராணுவக் கொலைப்படையினராலும், ராணுவத்தாலும் மரண அச்சுருத்தல் விடுக்கப்பட்டிருக்கும் திருமதி இலட்சுமி, தற்போது நண்பர்கள் வீட்டில் அடைக்கலம் தேடியுள்ளதாகவும், தனக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல் தொடர்பாக எவரிடமும் பேசுவதற்குக் கூட அச்சப்படுவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கருணா துணைராணுவக் கொலைப்படைக்கு மேலதிகமாக இப்பகுதிகளில் சிங்கள துணைராணுவக் குழுவொன்றினை நிலைப்படுத்தியிருக்கும் ராணுவம், இவர்களைக் கொண்டும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், தமிழர்கள் மீதான பயமுருத்தும் நடவடிக்கைகளிலும் இவர்களைப் பயன்படுத்தி தனது பெயரைக் காத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. கடந்த முதலாம் திகதி ராணுவத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் கிராம சேவகரின் கட்டுப்பாட்டில் வரும் பிரதேசங்களில் மாதவணை மற்றும் மயிலத்தனை ஆகிய தமிழர்களின் ஆக்கிரமிற்குள்ளாகியிருக்கும் மேய்ச்சல் நிலங்களும் அடங்குகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. குடும்பிமலையின் அமைவிடம், குடும்பிமலையின் அருகில், அல்லை ஓடை சந்தி மற்றும் மாவட்டவன் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் புதிய சோதனைச் சாவடிகள்1 point- சமூகமும் ஓட்டமும்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 06, வைகாசி 2016 கருணாவின் சொந்த இடமான கிரானிலேயே நடக்கும் சிங்களக் குடியேற்றமும், தொடர்ந்தும் துணைராணுவக் கொலைக்குழுவாகச் செயற்படும் கருணாவும் மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் வரும் கிரான் பகுதியில் தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களாகவிருந்த 16,000 ஏக்கர் நிலத்தினை விழுங்கியிருக்கும் சிங்களக் குடியேற்றமொன்று, புதிதாக இன்னும் 300 சிங்களக் குடும்பங்களை பொலொன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய பகுதிகளிலிருந்து அழைத்துவந்து குடியேற்றியிருப்பதாக மட்டக்களப்பு செயலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு குடியேறிவரும் சிங்களவர்கள் தாம் புதிதாகக் குடியேறியுள்ள கிரான் பிரிவில் புத்த கோயில் ஒன்றைக் கட்டிவருவதாகவும், இதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் நேரில் சென்று சேகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து பிரதேசவாதக் காரணங்களைக் காட்டி வெளியேறி, அரச ராணுவத்தின் கொலைக்குழுக்களில் ஒன்றாகச் செயற்பட்டுவரும் துணையமைச்சர் கருணாவின் பிறப்பிடம் கிரான் என்பதும், அவர் தனது கிராமம் பறிபோவது தெரிந்தும் அதே ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏஜெண்டாகவும், சிங்கள அரசின் எடுபிடியாகவும் தொடர்ந்தும் செயற்பட்டுவருவது தெரிவிக்கும் உண்மை அவர் கிழக்கு மக்களின் விடிவிற்காக புலிகளிடமிருந்து பிரிந்து செல்லவில்லையென்பதும், தனது சொந்த இச்சைகளுக்காகவும் நலனிற்காகவும் மட்டும்தான் என்பதாகிறது. இப்புதிய குடியேற்றம் பற்றி மேலும் தெரியவருவதாவது. கிரான் பிரதேசத்தில் மையிலத்தைமடு பகுதியில் இடம்பெற்றுவரும் இப்பாரிய சிங்களக் குடியேற்றம் முன்னாள் சிங்களப் பொலீஸ் அதிகாரி தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது. 2007 ஆம் ஆண்டுவரை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பகுதி ராணுவ ஆக்கிரமிப்பின் பின்னர் கடுமையான சிங்களக் குடியேற்ற அழுத்தங்களைச் சந்தித்துவருகிறதென்பது குறிப்பிடத் தக்கது. 2016 இலிருந்து கட்டப்பட்டுவரும் புத்த விகாரைக்கு அண்மையாக இலங்கை ராணுவம் இரு எறிகணைத் தளங்களையும் நிறுவியுள்ளது. தமது மேய்ச்சல் நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 259 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டத்திலும், சுமார் நாளொன்றுக்கு 3000 லீட்டர்கள் தரக்கூடிய பாலுற்பத்தி நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வருவதையும் அறிந்து மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும், கிழக்கு மாகாணசபையின் விவசாய கால்நடை அபிவிருத்தியமைச்சரும் இப்பகுதிக்கு நிலைமைகளை ஆராயும்வண்ணம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். மயிலத்தைமடு - சிங்களமயமாகும் தமிழர் தாயகம், அரச அதிபர் மற்றும் மாகாணசபை அமைச்சருடன் விவாதத்தில் ஈடுபடும் குடியேற்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான இனவாதப் பிக்கு மயிலத்தை மடுவில் கட்டப்பட்டுவரும் புத்த விகாரை புதிதாகக் குடியேறியுள்ள சிங்களவர்களின் தற்காலிக தங்கும் கூடாரம் ஒன்று மயிலத்தை மடுவை "மலமண்டி" என்று சிங்களத்தில் பெயர்மாற்றி குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இன்னொரு சிங்களக் கூடாரம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ்ப் பண்ணையாளர்கள் தெரிவிக்கையில், தமது நாளாந்த வாழ்வாதாரத்தினை இந்தச் சிங்களக் குடியேற்றம் முற்றாக அழித்துவருவதாகவும், தமது கால்நடைகளை குடியேற்றத்திற்குப் பொறுப்பாகவிருக்கும் முன்னாள் பொலீஸ் அதிகாரியும் அவரது மகனும் சுட்டுக் கொன்றுவருவதாகவும் முறையிட்டுள்ளனர். "புலிகள் இருக்கும்வரை எமது வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது, எமது கால்நடைகளும் மேய்ச்சல் நிலங்களும் பாதுகாக்கப்பட்டன. ஆனால் இன்றோ காக்க எவருமின்றி முற்றான சிங்கள மயமாக்கலினை செய்வதறியாது எதிர்கொண்டு நிற்கிறோம்" என்று அரச அதிகாரிகளிடம் அவர்கள் கவலையுடன் கூறியிருக்கிறார்கள். தமது தாயகம் மீது சிங்கள அரசால் நடத்தப்பட்டுவரும் திட்டமிட்ட இனரீதியிலான அழிப்புத் தொடருமானால் தாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதிப்பதனைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களால் மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி சார்ள்ஸிடமும், கிழக்கு மாகாண சபையமைச்சர் துரைராஜசிங்கத்திடமும் செய்யப்பட முறைப்பாடுகளையடுத்து மயிலத்தைமடுவில் இனவாதப் பிக்கு தலைமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் பெளத்த விகாரை தொடர்பாக ஆராய்வதற்கு அவர்கள் அங்கு விஜயம் செய்திருக்கின்றனர். இவர்களுடன் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச சபை அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர். ராணுவத்தாலும், கருணா தலைமியிலான துணைராணுவக் கொலைக்குழுவின் உதவியுடனும் இப்பகுதிக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் இனவாதப் பிக்குவே இந்தக் குடியேற்றத்தில் முன்னோடியாகச் செயற்படுவதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பாக சிங்கள ஊர்காவல்ப்படை எனும் ஆயுதக்குழுவொன்று இப்பகுதியில் நிலைவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தலைவராகச் செயற்பட்டுவரும் முன்னாள் பொலீஸ் அதிகாரியும் அவரது கூட்டமுமே தமது கால்நடைகளைச் சுட்டுக் கொன்றுவருவதாகவும் தமிழர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அரச அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இனவாதப் பிக்கு, "சிங்களவர்கள் இப்பகுதியில் 1967 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் தமது நிலத்தில் புதிதாகக் குடியேற்றங்களை உருவாக்குவதையோ, புத்த விகாரையினைக் கட்டுவதையோ யாரும் கேள்விகேட்க முடியாது, அது எமது உரிமை" என்று காட்டமாகக் கூறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பிக்குவின் கூற்றினை முற்றாக மறுதலித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம், "இது முற்றான தவறான தகவல். சிங்களவர்கள் இப்பகுதியில் புதிதாகவே குடியேறி வருவதுடன், பொலொன்னறுவை மாவட்டத்துடன் இப்பகுதியினையும் அடாத்தாக இணைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச எல்லைகளை மாற்றிவருகின்றனர்" என்றும் தெரிவித்தார். மேலும், கருணாவின் நெருங்கிய நண்பரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்களுக்குப் பொறுப்பாக சிங்கள அரசுகளால் அமர்த்தப்பட்டவருமான மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரோ எனும் இனவாதப் பிக்கு, தனது பணிப்பின்பேரிலேயே இந்தப் புதிய குடியேற்றமும், புத்த விகாரையின் நிர்மாணமும் இடம்பெற்றுவருவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்டுவரும் சிங்களக் கிராமத்திற்கு தலைவராக (சிங்களத்தில் சபாபதி) லியனகே எனும் முன்னாள் பொலீஸ் அதிகாரி ஒருவரே செயற்பட்டு வருகிறார். ராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவரும் இந்த முன்னாள் பொலீஸ் அதிகாரி, கட்டப்பட்டுவரும் விகாரையிலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் இரு எறிகணைத் தளங்களை நிறுவுவதற்கான கட்டுமானங்களையும் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. மயிலத்தைமடுவில் புதிதாகக் குடியேறியுள்ள சிங்களவர்கள். முன்னாள் பொலீஸ் அதிகாரி லியனகே ( சிவப்பு நிற மேற்சட்டையுடன் காணப்படுபவர்), இக்குடியேற்றத்தின் பிதாமகரும், பாதுகாப்பிற்குப் பொறுப்பானவரும். இவரும், இவரது மகனுமே தமது ஆயுதப்படையுடன் சேர்ந்து தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாக மக்கள் முறையிட்டுள்ளனர். குறிப்பு : சிங்களவர்கள் மிருகவதை செய்யாதவர்கள், ஒரு பசுவைக் கொன்றால்க் கூட பிராயச் சித்தம் கேட்டு அழுவார்கள், தமிழ்ப் பண்ணையாளர்கள் பணம் படைத்தவர்கள், ஏழை சிங்கள விவசாயிகள் ஓரிரு மாதங்களின் பின்னர் வெளியேறிவிடுவார்கள், இவர்கள் தேவையில்லாமல் சத்தம்போடுகிறார்கள், அபிவிருத்தியே முக்கியம் அதனாலேயே துணைராணுவக் கொலைக்குழுக்களை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு இந்த நிகழ்வு சமர்ப்பணம் !1 point- சமூகமும் ஓட்டமும்
1 point- சமூகமும் ஓட்டமும்
1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointகாலத்துக்கு ஏற்ற சிறந்த பதிவு சகோதரி.மற்றவர்கள் தங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் அப்படி நடந்து கொள்கிறார்கள்.......விட்டுத்தள்ளுங்கள்......நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்......! 😁1 point- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
1 pointஅவர் அப்படி பேசினதும், எதுவுமே சொல்லாமல் பாலியல் வார்த்தைகள் பேசி மிரட்டுகிறார் என்று பொலிசுக்கு அடிச்சிருக்கலாம். காவல்துறை வந்ததும் மாஸ்க் சரியாக அணிய சொன்னேன் அதற்காகதான் அப்படி மிரட்டும் தொனியில் பாலியல் வார்த்தைகள் பிரயோகித்தார் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கலாம். இரண்டு குற்றங்கள் அவர்மேல் பதிவாகியிருக்கலாம், அதற்கு பிறகு இனி போகும் இடங்களிலாவது கொஞ்சம் கண்ணியமாக நடக்க பார்ப்பார். நம்மவர்கள் சிலருக்கு வெளிநாடுகள் வந்ததால் பாஸ்போர்ட்தான் மாறியிருக்கு பழக்க வழக்கங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கு.1 point- செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
1 pointஇலங்கையில் மருத்துவ வசதிகள் நாம் நினைக்கும் வகையில் மட்டமாக இல்லாமல் திருப்திப்படும் அளவில் உள்ளதாக அறிந்தேன். அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகராக நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவாம். முதியவர்கள் விடயத்தில் நாம் எவரையும் நம்ப முடியாது. பிள்ளைகள் சிரத்தை எடுப்பதுபோல் நிச்சயம் வெளியார் கவனம் எடுக்கமாட்டார்கள். குருதி, சிறுநீர் மாதிரிகளை ஆய்வுசாலைக்கு அக்கறையாக எடுத்து அனுப்புவது தொடக்கம் தவணை முறையில் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவது, கவனமாக வெளியில் அழைத்து சென்று கவனமாக வீட்டுக்கு கூட்டிவருவது வரை பிள்ளைகளின் அல்லது கரிசனை உள்ள நெருங்கிய உறவுகளின் உதவி பெரியோருக்கு தேவை. யாரையும் நம்பினால் ஒன்றுக்கும் உத்தரவாதம் இல்லை.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- சமூகமும் ஓட்டமும்
0 points - சமூகமும் ஓட்டமும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.