Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்17Points46808Posts -
தனிக்காட்டு ராஜா
கருத்துக்கள உறவுகள்11Points9976Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87997Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்7Points15791Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/12/21 in all areas
-
போர் + ஆட்டம் (போராட்டம்)
7 pointsநேரம் வேலையும் பிள்ளையும் இருப்பதால முற்றாக எழுதி முடிக்க முடியல கணணியை திறந்தால் ஏறி மடியில் இருந்து கீ போட்டை தட்டுகிறாள் ரெண்டு மூணு கீ போர்ட் மாத்தியாச்சு என்றால் பாருங்கோவன் கருத்துக்கு மிக்க நன்றி விரைவில் கதை முடியும் ( தணிக்கைகைகளுக்குள் கதையும் கட்டுப்படுகிறது) நன்றி புத்து கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி தோழர் நன்றி உடையார் ஒரு பக்க விமர்ச்னம் என்பதை உன்மையெனவும் ஏற்றுக்கொள்ள மனம் ஏற்க மறுக்கிறது எங்கள் பயிற்ச்சி ஆரம்பமானது அரைகாற்சட்டையுடன் முடி ஒட்டையாக வெட்டி பயிற்ச்சிகள் கனமாக இருந்தது எனது பெயரோ மாற்றப்பட்டு கங்கையாழியன் என அழைக்கப்பட்டது கங்கா எனவும் சுருக்கமாக அழைத்தார்கள் நாள் தோறும் காலையில் அம்மா வருவா ஆனால் சந்திக்க முடியாது பயிற்சி முடிவடைந்ததும் தளபதிகள் முன்னிலையில் அணி வகுப்பு நடந்து பாசறையிலிருந்து வெளியேறுகிறோம். அன்றுதான் முக்கியமான தளபதிகளை நேரில் காண்கிறோம் அன்று பூசிக்கப்பட்டவர்கள் அவர்கள். வன்னிக்கான படையும் செல்ல தயாராக இருந்தது கிழக்கில் பெரும் சண்டைகள் தொடர்வதில்லை அதனால் வன்னிக்கே படையணிகளில் அதிகமானவர்கள் அனுப்பப்படுவதுண்டு போராட்டத்தின் இதயம் அது தலைவர் தலைவரே எல்லாம் என எங்களுக்கும் உரம் ஊட்டப்பட்டது அவரின் நாமத்துக்கே பலபேர் இணைந்தார்கள் என்றும் சொல்லலாம் அந்த அணியில் என் பெயர் இல்லை ஆயிரக்கணக்கில் போராளிகள் மட்டக்களப்பில் இருந்ததை அன்று காணக்கிடைத்தது மட்டக்களப்பில் பொருட்களுக்கு பஞ்சம் இல்லை ஆனால் மாற்று இயக்கத்திற்கும் , ஆளஊடுவல் செய்யும் ஆட்களும் மிகவும் சவாலாக இருந்தார்கள். அதையும் சமாளித்து போராட்டம் வலுபெற்றிருந்த காலம் அது. அதற்கு புலனாய்வு துறையை சிறப்பாக செய்த தளபதியை பாராட்டலாம் கிழக்கை அக்குவேர் ஆணிவேராக அறிந்திருந்தவர் வன்னி போல் அல்லாமல் கிழக்கில் எந்தப்பக்கமும் இருந்தும் எதிரிகள் உள் நுழையலாம் அத்தனை பேரையும் சமாளிக்கும் துணிச்சல் மிக்க அணிகள் அவர்கள் அப்போது மாவீரர் நாள் வருகிறது துயிலுமில்லங்கள் வண்ணக்கோலம் பூண்கிறது போராட்டம் , இழப்பு , பாராமரிப்பு என அத்தனை விடயங்களும் கற்று அன்றைய நாளுக்காககவும் நினைவு கூரலுக்காகவும் புலிப்படை திரள்கிறது அதில் நானும் எனும் போது பிரமிப்பாக இருக்கிறது .அன்றைய நாளில் எனைக்காண வந்த அம்மா, அண்ணா , தங்கச்சியை கண்டதில் மிகுந்த சந்தோசம் எனக்கும். எல்லாச்சாப்பாடும் கிடைக்குமாடா ஓமோம் அங்க கிடைக்காத சாப்பாடு எல்லாம் கிடைக்கும் இங்க அதுக்கு கவலையே இல்ல அம்மா. எனது குடும்பம் சந்தோசத்திலிருக்க மற்ற அம்மாக்கள் அழ துளிர்விட்டசந்தோசமும் அழுகையாக மாறுகிறது அம்மாவை தேற்றியவனாக அங்கே துயிலும் எங்கள் உறவுகளின் கனவுகளை சொல்லி அம்மாவை தேற்றுகிறேன். மாவீரர் நாள் முடிந்ததும் அழைக்கப்படுகிறோம் சின்ன தாக்குதலுக்கு அன்றுதான் முதல் சண்டையென்பதால் ஒரு பத பதப்பும் , பயமும் தொற்றிக்கொள்கிறது நாங்கள் 10 பேரும் சிலவிபரங்களுடன் காட்டுக்கு செல்கிறோம் பல கிலோ மீற்றர் நடந்து சென்று சருகுக்குள் ஆளை மறைத்து படுத்துக்கொள்கிறோம் காலை விடிகிறது நேரம் 6 மணி இருக்கும் சருகு மெல்ல சரசரக்கிறது சிங்கள உரையாடலுடன். பேச்சு சத்தம் எங்களை நோக்கி வருகிறது இன்னும் பயம் அதிகரிக்கிறது போர் என்றால் ஆளையாள் சுடுவார்கள் என்ற நினைப்பு அந்த நொடி எனக்குள் வரும் போது அது என்னை மிரட்டும் நொடியாக அந்த நிமிடம் இருந்தது . எந்த ஒரு அசைவும் வராமல் நாங்கள் பதுங்கியே இருந்தோம். இன்னும் ஒரு பகுதி மட்டும் மீதம் இருக்கிறது ....................7 points
-
மொழி ஆதிக்கம்..!
4 pointsமொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-4 points
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான, ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர, வீதி அமைதியாகவே இருக்கும். வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்... 9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால், தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து, வேலை கேட்கலாம் என முடிவெடுத்து.... 8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும், அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி என்ன சொல்லுவாரோ... கை, கால் எல்லாம் உதறல் எடுத்தது. 🥶 வீட்டிற்கு... திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும், 🍛 "சோத்துக்கு... என்ன வழி❓" என மனதை திடப் படுத்திக் கொண்டு, வருவது வரட்டும் என நின்றான். ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில் தனியே... வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன், கையை அசைத்து... அவரின் காரை மறித்தான். கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗 முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று.. தனக்கு நடந்த சோகங்களை சொல்லி... தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது, "நீ... திரும்பி வருவாய் என்று, எனக்குத் தெரியும்." ஒரு கிழமை... கழித்து, வேலையில் வந்து சேர். என்று சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார். மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது. குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான். மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால், முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது. ஆனாலும்... மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம் அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢 //"விட்ட காசை, திருப்பி எடுப்பம்" என்று... அவனது 🐵 "மங்கி" புத்தி 🐒 சொன்னதால்...// சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான். என்ன... ஆச்சரியம்!!!!!! அவனுக்கு... "7 மில்லியன் ஐரோ", விழுந்து விட்டது. 😮 ➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣3 points
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
2 pointsதூங்கி எழுந்தது போன்ற உணர்வுடன் அவன் கண்ணை விழித்து, தான் எங்கிருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்த முயன்ற போது தான், மிருதுவான, ஆனால் மென்மையான வெட்பத்துடன் ஒரு சோடிக் கைகள் அவனது கைகளைப் பிடித்திருந்ததை உணர்ந்தான். தலையைத் திருப்பிப் பார்க்கக் கூடிய ஒரு நிலைக்குத் தன்னை சுதாகரித்துக் கொண்டவனுக்கு, அந்தக் கைகளிலில் பச்சை குத்தியிருந்த ரோஜாப்பூக்களின் அழகு, அவனுக்கான நினைவுகளை மீட்டெடுக்கப் பிரயத்தனம் செய்தன. இந்தக் கைகளை எங்கோ பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன்! ரோஜாப் பூக்கள் போன்ற அந்தக் கைகளிலும் ரோஜாப்பூக்களா என வியந்தும் இருக்கிறேன் என்பதும் நினைவுகளின் சுழற்சியில் அவனுக்கு வந்து போனது. அந்தக் கைகளின் சொந்தக்காரியையோ அவளது முகத்தையோ அவன் முன்னெப்போதும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை என்பது மட்டும் திடமாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அவள் எப்படி இங்கே என்பது தான் புரியாத புதிராய்... தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்கு புரிந்தது. அவனுக்கு முதுகைக் காட்டியபடி வைத்தியருடன் அவள் பேசுவதும் பல மைல் தூரத்திற்கப்பால் கேட்பது போலிருந்தது. அவள் முகம் தெரியவில்லை, பாதி மயக்கத்திலும் அவள் முகம் தேடி அவன் கண்கள் அலைந்தன. இன்று மட்டுமல்ல அவளைப் பார்க்கவென பரிதவித்த கடந்த பல மாதங்களும் மனக்கண்ணில் வந்து போயின.முதன் முதலாய் ஒரு பெண்ணின் நெருக்கத்தை தேடி அலைந்த அந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாறாங்கல் ஒன்றைத் தலையில் தூக்கி வைத்திருப்பது போன்ற வலியோடு, அப்போது தான் அவனுக்கு தனக்கு என்ன நடந்திருக்கும் என்பதான கேள்வி ஒன்று எட்டிப் பார்த்தது. முழுவதும் ஞாபகம் வரவில்லை. இருந்தாலும் அவன் மிகப்பிரயத்தனப்பட்டு சில நினைவுகளை சுழியோடிப் பிடித்துக் கொண்டான். ****************************************************************************** வழமை போலவே அன்றும் விடிகாலை ஐந்தரை மணிக்கு சொல்லி வைத்தாற் போல் கீழே கதவை திறக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் மீண்டும் கதவை அறைந்து சாத்தும் சத்தமும் கேட்டது. தினசரி வேலைக்குப் போக முன்னே வீட்டுக்கழிவுகளைக் கட்டி வெளியேயுள்ள கழிவுப்பெட்டிக்குள் எறிந்து விட்டுப்போகும் அந்தப் பெண்ணின் முகத்தை அவன் தன் மூன்றாவது மாடியிலிருந்த அறையின் சாளரத்தினூடே மறைந்து நின்று பார்க்கும் போதெல்லாம், அவனுக்குத் தெரிந்தது அவள் கைகள் மட்டுமே. கழிவுப்பையை எறியும் போது கூட மிக நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவள் அதை சிரத்தையுடன் செய்வது போலிருக்கும். குளிருக்காக தன் தலையை குளிர் அங்கியால் மூடியபடி, ஒரு ரோஜாப்பூ பறந்து போவது போல மெதுவாக அவள் அந்த மென்பனியில் இன்றும் மறைந்து போனாள். கடந்த சில மாதங்களாகவே முகம் தெரியாத அந்த ரோஜாப்பூவிற்காக அவன் மனதில் இனம் புரியாத ஒரு தேடல் பரிதவிப்பாய் மாறிக்கொண்டிருந்தது. இப்போதைக்கு மூன்று பேரில் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே போய் விட்டது உறுதியாகியது அவனுக்கு. அடுத்த இரண்டு கதவுச் சத்தங்கள் வரும் வரை அவன் கட்டிலை விட்டு இறங்க மாட்டான். இதுவே கடந்த பல மாதங்களாக, முக்கியமாக தொற்றுப் பரவத் தொடங்கிய பேரிடர் காலத்திலிருந்து நடை பெற்று வருகிறது. மாதங்கள் கடந்ததில், ஊரடங்கிய நிலைமை வழமையானதாய் போக, தனிமையாய் இருப்பது, வழக்கமாகிப் பழக்கப்பட்டுப் போயிற்று. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. யாரையும் முகம் பார்த்துக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. மனிதர்களை அதுவும் புதிய மனிதர்களைச் சந்திப்பதென்பது மனதின் ஆழத்தில் ஒரு பயத்தை, ஒரு பதற்றத்தை அல்லது ஒரு இனம் தெரியாத படபடப்பை அவனுக்குத் தோற்றுவித்திருந்தது. இந்த நாட்டில் அவனுக்கென்று கைவிட்டு எண்ணக்கூடிய நண்பர்களே இன்றுவரை இருக்கிறார்கள். வேறு யாருக்கும் அவன் சக பணியாளர்களைத் தவிர அவனது இருப்பிடமோ வேறு தனிப்பட்ட விபரங்களோ தெரியாது. தெரிய வரக்கூடாது என்பதில் அவன் தன்னால் முடிந்தவரை சிரத்தை எடுத்துக் கொண்டான். அவனது அறைக்கும் வெளியே இருந்த வீதிக்குமிடையே ஒரு பத்து யார் தூரம் தான் என்றாலும், வாகனங்களின் இரைச்சல், வீதி ஓரமாக நடந்து போகும் பாதசாரிகளின் காலடிச் சத்தங்கள், சில வேளைகளில் அவர்கள் தொலைபேசியில் சத்தமாக கதைக்கும் உரையாடல்கள் என எல்லாமும் அவனுக்கு துல்லியமாக கேட்கத் தொடங்கியிருந்தன. இதற்கு முன் இவையெல்லாம் காதுக்குக் கேட்காமல் இல்லை. வழமையான சத்தங்கள் தாம், ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு சின்னஞ்சிறு ஒலியும் வழமையை விட பிரமாண்டமாகக் கேட்பது போல் ஒரு உணர்வு. அது பிரமையாய் இருக்குமோ என்று பல தடவை யோசித்தும் பார்த்தான். எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. அவனது அறையோடு ஒட்டிய வீதியின் ஓரமாக ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் இருந்த மரக்கிளைகளின் உறவினர்கள் விடி காலையிலேயே இதமாகப் பாடத் தொடங்கி விட்டனர். கீச்சுக் கீச்சென்ற பாடல்கள் அவனுக்கு பிடித்திருந்தாலும் அவர்களின் பாடல்களின் ஒலி ஒவ்வொரு நாளும் வர வர அதிகமாகி வருவது போலவே அவனுக்கு நினைக்கத் தோன்றியது. அவர்களின் ரீங்காரமும் சுரமும் சுருதியுமாக மிகத் தெளிவாகக் கேட்பதை அவன் ரசிக்கத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்த போது மீண்டும் அவன் அறைக்கு வெளியே, கீழ்த் தட்டிலிருந்து இரண்டாவது தடவையாக கதவு திறக்கும் ஓசையும் பின் அதை அறைந்து சாத்தும் ஓசையும் கேட்டு அடங்கியது. அவன் கடிகாரத்தைப் பார்க்காமலே இப்போது மணி ஐந்தே முக்கால் என நினைத்துக் கொண்டான். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தால் இயற்கை உபாதைகளை வராமல் தடுக்கலாம் என்ற மனப்பக்குவமும் நாளடைவில் வந்து விட்டிருந்தது. இன்னும் ஒரேயொரு கதவுச் சத்தம் தான் மிச்சமிருந்தது. அதை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். இன்னும் ஒரு பத்து நிமிடங்களுக்குள் அதுவும் கேட்டு விடும் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை. இரண்டாவது தட்டிலிருந்த அறைக்கதவு திறக்கப்படும் ஓசையும் அதைத் தொடர்ந்து இதோ தட தடவென்ற காலடிச் சத்தம் வீட்டின் பிரதான வெளிக் கதவை நோக்கி நகர்ந்து போவது அவன் காதுகளுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது . வர வர அவன் காதுகள் இரண்டும் மிகவும் தீவிரமாக வேலை பார்ப்பது போல இருப்பதை அவனால் புறம் தள்ள முடியவில்லை. அப்பாடி வீட்டிலிருந்த மூன்று மனிதர்களும் வேலைக்குப் புறப்பட்டு விட்டார்கள், இனி மதியம் தாண்டி, மாலை ஐந்து, ஆறு மணி வரையில், அவர்கள் வருவதற்கிடையில் அவனுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் எத்தனையோ இருந்தன. அவற்றுக்கான சிறிய நேர அட்டவணை ஒன்று அவன் அலுவலக மேசையின் சுவரில், நிறங்கள், வேலைகளின் முக்கியத்துவம் குறித்த வித்தியாசங்களைக் காட்டி நிற்க, ஓட்டப் பட்டிருந்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்கத் தொடங்கிய புதிதில் எதுவுமே பிடிக்காமல், மனதில் ஒட்டாமல் செயற்கைத் தனமாய் இருந்தது என்னவோ உண்மை தான். இருந்தாலும் எல்லாம் நாளடைவில் மாறத் தொடங்கியதற்கு வலுவான காரணம் என்ன என எதையும் அவனால்ச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஆனால் அவனோடு மிக நெருங்கிய உறவுகள் இரண்டு திடீரெனத் தொற்று ஏற்பட்டு இறந்து போனதும், அவன் இருந்த நாட்டில் அவசர காலச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு, எல்லோரும் வீடு அடங்கி இருக்க வேண்டி வந்ததோடும் தான் எல்லாமுமே அவனுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கணிப்பீடு ஒன்றும் அவனுக்குள் இல்லாமல் இல்லை. முக்கியமாக அவனுடைய வேலை தொழில் நுட்பம் சார்ந்திருந்த படியினால் அவனுக்கு அவன் பணி சார்ந்த அனைத்து பட்டறிவையும் அனுபவத்தையும் ஒரு விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. எப்போதாவது சந்தேகங்கள் வந்த போது அவனுடைய குழுவில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பினால் அவர்களில் ஒருவர் எப்படியாவது ஒரு பத்தே நிமிடத்தில் அந்தப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பதென்பதை 'மாதிரிக் காணொளி வாயிலாக' (demo video) அல்லது அது குறித்த ஆவணத்தில் போய் (Google document) தேவையான மாற்றங்களைச் செய்து அனுப்பி விட்டு, தொலைபேசியில் வந்து அவனுக்கு விளக்கமும் தந்து விடுகிறார். அதைப் பற்றி நினைத்து, அதற்காக அலட்டிக் கொள்ளும் மன நிலையில் அவன் இப்போது இல்லை என்பது தான் நிஜமாகிப் போனது. இன்று அவனுக்கிருந்த வழமையான வேலைகளுடன் இன்னுமொரு புதிய அதிகப்படியான கடமை ஒன்றும் ஒட்டியிருந்தது. அம்மாவுக்கு தொலைபேச வேண்டும், அவனது குரலுக்காக ஏங்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். இன்று அவனது பிறந்த நாள், ஏதோ அவளுக்குத் தான் பிறந்த நாள் போல கடந்த முறை கதைத்த போதே சொல்லி வைத்திருந்தாள். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் இது போல இருக்குமா அல்லது இவளுக்கு மட்டும் தான் அநியாயத்துக்கு இப்படி ஒரு ஏக்கமா? அம்மாவை நினைத்த போது கண்களில் இயல்பாக ஈரம் தோன்றியதை அவன் கைகள் பட்டெனத் துடைத்து விட்டன. அவள் நினைவுகள் அந்தக் குளிரின் கடுமையைக் குறைத்து தற்காலிகமாக ஒருவித வெப்பத்தை அந்த அறையில் கொண்டு வந்ததைப் போல உணர்ந்தான். அவனுக்கு அம்மா மீதிருந்த பாசத்தையும் மீறி அன்றைய பொழுதில் முடிக்க வேண்டிய வேலைகளுக்குள், இதுவும் ஒரு வேலையாக, வேலைப்பளுவை அதிகரித்த மனோநிலையானது சாதுவான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. நேர அட்டவணையில் மிகவும் நெருக்கமான இரண்டு மதிய வேளை அலுவலகக் கூட்டங்களுக்கிடையே தொலை பேச வேண்டியதையும் சிவப்பில் அடிக்கோடிட்டிருந்தான். அவனுடைய போதாத காலம், அவனுடைய பிறந்த நாள் புதன் கிழமையில் வந்து தொலைத்திருந்தது. புதன் கிழமைகளில் வழமையாக இருக்கும் அவன் சார்ந்த குழுவின் கூட்டத்தோடு அலுவலகப் பணியாளார்கள் அனைவரும் சேர்ந்து பங்கு பற்ற வேண்டிய வழமையான கூட்டமும் ஒன்று இருந்தது. பரவாயில்லை, முதலாவது கூட்டத்திற்கும் இரண்டாவது கூட்டத்திற்குமிடையே இருபத்தியைந்து நிமிட இடைவெளி இருந்தது. அந்த இடைவெளிக்குள் எப்படியும் அம்மாவுக்கு தொலைபேசி விடவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். முதல் நாள் இரவு வேலைப்பளுவினால் மின் அஞ்சல்களுக்குப் பதில் எழுவதை சற்றே ஒதுக்கி வைத்திருந்தான். அதன் விளைவு இன்று தெரிகிறது, பல்வேறு விதமான மனிதர்களின் தேவைகளும் கேள்விகளும் அவனைச் சற்றே களைப்படைய வைத்தது. பதில் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்களுக்கு ஏற்றாற்போல் பதில்களை அனுப்பினான். சில மின் அஞ்சல்களுக்கு ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டிய கட்டாயமிருந்தது. ஒவ்வொன்றையும் மிகக் கவனமாகக் கையாண்டவன், மேசைக்கு எதிரே தினசரி நேர அட்டவணையைக்குப் பக்கத்தில் இருந்த சுவர் மணிக்கூட்டைப் பார்த்ததும் ஒரு வினாடி அதிர்ந்து போனான். முதலாவது கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருந்தன. உடனடியாக, தற்சமயம் செய்து கொண்டிருந்த மின் அஞ்சல் தொடர்பான ஆவணங்களை சேமித்து வைத்துவிட்டு, மின்னம்பல வழி (zoom meeting) கூட்டத்திற்கு தன்னை தயார்படுத்தி, அதில் அமர்ந்து கொண்ட அந்த நிமிடத்தில் கூட்டம் ஆரம்பமானது. அவன் எப்போதுமே கூட்டங்களுக்கு இணையவழியிலோ அல்லது இப்பேரிடர் காலத்தின் முன்னே நேரடி வருகைகளுக்கோ பிந்திப் போனதில்லை. அவனுக்கு அலுவலக ஊழியர்கள் மத்தியில் இதற்கென நல்லதொரு பெயர் எப்போதுமே இருந்து வருகிறது. அதைப் பேணிப் பாதுகாப்பதில் அவனுக்கொரு அலாதியான மகிழ்ச்சி மனதின் ஆழத்தில் இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு வித ஆர்வத்துடனும் அதே சமயம் புன்னகையுடனும் இருந்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் அனைவருமே அவனுடன் ஒரு அலுவலகத்தின் பணி சார்ந்து வேலை பார்ப்பவர்கள். எதிர்வரும் வாரத்தில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு, அவற்றை அவன் உட்பட தமது கடமைக்கான பங்கை அனுப்பியிருந்ததால் அதை எல்லோருக்கும் சமர்ப்பித்து, அதில் எதாவது மாற்றங்கள் அல்லது மேற்கொண்டு அத்துடன் இணைக்க வேண்டிய கடமைகள் ஏதாவது உண்டா எனப்பார்ப்பதே அக்கூட்டத்தின் பிரதான நோக்கமாயிருந்தது. இருந்தாலும் கூட்டம் அதிகாரபூர்வமாக ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் கை அசைத்தோ, புன்னகைத்தோ அல்லது வணக்கம் சொல்லியோ கொண்டது அவனுக்கு பெரியதொரு ஆறுதலைத் தந்தது. அவர்கள் அவனுக்குத் தெரிந்தவர்கள், அவர்களுடன் பழகுவது பாதுகாப்பானது, அவர்கள் அவனுக்கு பல வழிகளிலும் அவன் பணி சார்ந்த தொழில் நுட்பங்களை அவனுக்கு அறிமுகம் செய்து, அது தொடர்பான சிக்கல்களைக் கூட தீர்ப்பவர்கள். வாரத்தில் ஒரு முறை இப்படியாவது அவர்களைச் சந்திப்பது அவனுக்கு மனத்திருப்தி தந்தது. கூட்டம் அவனுடைய சில கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டதுடன் அது தொடர்பாக சில மாற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டது. அவனும் வணக்கம் சொல்லி விடை பெற்றுக் கொண்டான். நேர அட்டவணையை நிமிர்ந்து பார்த்ததில் அவன் தன்னுடைய தனிப்பட்ட மின் அஞ்சல்களை வாசிக்காதது தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அந்தப் பக்கத்தை திறந்து, முக்கியமான மின் அஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என ஆராய்ந்தான். வீட்டின் சொந்தக்காரர் ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருந்தார், அதை அவசரமாகப் பிரித்தான். வழமையாக அவரிடமிருந்து வாடகைக்கான நன்றி சொல்லி ஒரு வரியில் ஒரு அஞ்சல் வரும். இது என்னவோ வித்தியாசமாக இருந்ததில் அவன் வாசிப்பதை ஆறப்போடாமல் கண்ணால் மேயத் தொடங்கினான். அன்புள்ள என்று தொடங்கி, அவனுக்கு ஒரு விடயத்தை தெரிவிப்பது நல்லது என்ற ரீதியில் கடிதம் தொடர்ந்தது. இந்த வீட்டில் சில திருத்த வேலைகள் இருப்பதால், அந்த வீட்டில் இருக்கும் மற்றைய அறைகளில் இருப்பவர்களை வீட்டை விட்டு எழுப்புவதற்கு அறிவித்தல் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவனது அறை நல்ல நிலையில் இருப்பதால் அவன் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அடிக்கோடிட்டு எழுதியிருந்தார். இவ்வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அனைவரும் அவனுக்குப் பின்னர் தான் அவ்வீட்டிற்கு குடி புகுந்திருந்தனர். அவர்களும் அவனும் எப்போதுமே சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவன் இந்த அறையில் இருப்பது தெரிந்திருந்தும் அவரவர் வேலையும் வீடுமாய் இருந்த இந்த பேரிடர் காலம் அவனை முற்றாக இவ்வுலகத்தில் இருந்து வெகு தூரத்தில் வைத்திருந்தது. அவன் ஒருவன் தான் அந்த வீட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நீண்ட கால வாடகைக்காரனாயிருப்பதால் வீட்டின் உரிமையாளருக்கும் அவனுக்கும் இடையில் ஒரு நல்ல உறவு நிலவியது. அவரைப் பற்றி ஒரு சில நிமிடங்கள் சிந்தித்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாய், நேரத்தைப் பார்த்த போது அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது! அடுத்த அலுவலக கூட்டத்திற்கு இன்னும் பதினைந்தே நிமிடங்கள் இருக்க, அந்த இடைவெளியில் அம்மாவுடன் பேசவும் சாப்பிடவும் வேண்டும் என்பதை மூளையும் வயிறும் ஞாபகப்படுத்தின. அலுவலக மேசையிலிருந்து அவசரமாய் எழுந்து, தன் அறைக் கதவில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்கண்ணாடியூடாக வெளியே யாராவது நடமாடும் அசைவுகள் இல்லை என்பதை உறுதி செய்த அதே வேளை அவன் காதுகளும் துல்லியமாக எந்த அரவமும் இல்லை என்பதை அடித்துக் கூறின. அவன் அப்படியிருந்தும் சத்தமின்றி கதவைத் திறந்து, இரண்டாவது தளத்தில் இருந்த சமையலறையை இரண்டே நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எட்டி, கைகளை நன்றாகக் கழுவி, குளிர் சாதனப்பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த தன் உணவை மின்கதிர் சூடாக்கியில் மூன்று நிமிடங்களில் சூடாக்கி பழையபடி தன் அறைக்குத் திரும்பிய போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு, இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் இருந்தன. அவசர அவசரமாக உணவு வயிற்றினுள்ளே போய் பசியை அடக்கியது, ஏற்கனவே மேசையில் வைத்திருந்த தண்ணீரையும் அருந்திக் கொண்டான். இனி மாலை ஆறு மணிவரை வயிறும் மனதும் சொல்வழி கேட்டு நடக்கும் என்பது உறுதியாயிற்று அவனுக்கு. ஊரில் இப்போதே ஆறு மணிக்கு மேலாகி விட்டது, இதற்குப் பின் தொலைபேசினால் அம்மா சோர்ந்து போவாள், கவலைப்படுவாள், அழுதபடியே தூங்கி விடுவாள், அவளுக்கு அவன் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இப்பேரிடர் காலத்தில் படும்பாடுகளை புரிய வைக்க முடியாது. அப்படி அவன் முயன்றதும் கிடையாது. அவன் அம்மாவிற்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து கொடுத்தும் இணைப்பை ஏற்படுத்த முடியாது தவித்த வேளை அவனுடைய அலுவலகக் கூட்டமும் ஆரம்பித்தது. அவன் ஒரு நாளும் இல்லாதவாறு தன் காணொளி, ஒலி வாங்கி இரண்டையும் மறைத்தவாறே அம்மாவுக்கு அழைப்பை அனுப்பியவாறே இருந்தான். ஏன் அம்மா தொலைபேசி அழைப்பை இணைக்கிறாள் இல்லை என்ற யோசனை பலமாகத் தாக்கியதில் அவனுக்கு கூட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மாவின் இணைப்புக் கிடைத்த போது அவனுக்கு சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அம்மாவும் அவன் அலுவலகத்தில் பலரோடு இருப்பதாகத் தெரிந்த போது, அவசர அவசரமாக அவனை வாழ்த்தி விடை பெற்றது, அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அலுவலகக் கூட்டம் முடிந்த கையோடு அவனுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தும் அவன் கேட்டபடியே ஒரு பல்பொருள் அங்காடியொன்றிலிருந்து வீட்டுக்கு வெளியே வந்திறங்கியிருந்தன. யாரும் பார்க்க முதலே அவற்றை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சாளரத்தின் வாயிலாக, பனி படர்ந்திருந்த முன் முற்றத்தை நோட்டம் விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் மெதுவாக கீழ்த் தளத்திற்கு விரைந்தான். இப்படியெல்லாம் பிந்தியதற்கு அந்த ஒரு தொலைபேசி தான் காரணம் எனத் தோன்றியதில் தேவையில்லாமல் அம்மா மீது கோபம் வந்தது. முன் கதவைத் திறந்து முற்றத்திற்கு வந்து உணவுப் பெட்டிகளைத் தூக்கிய போது அவனது வலது கால் பனியில்ச் சறுக்கி அவனை நிலை குலையப் பண்ணியது மாத்திரமில்லாமல், சரிவான ஒற்றையடிப் பாதையில் அவனை வழுக்கி இழுத்துச் சென்று மதிலைக் கடந்து வெளியே தள்ளியது. மதிலின் முனையில் தலையடிபட்ட ஞாபகம் இருந்தது. அவன் தன் கைகளை அந்தப் பனிப்பாறைகளில் ஊன்றி எழும்ப எத்தனித்ததும் ஞாபகம் வந்தது, அவ்வளவு தான், அதற்கு மேல் எதுவும் நினைவில் இல்லை. ****************************************************************************** அந்த ரோஜாப்பூ இப்போது தன் முதுகை அவனுக்கு காட்டியபடியே, வைத்தியருக்கு தன் அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தது எல்லாம் மிகத் தெளிவாக அவனுக்கு கேட்கத் தொடங்கியது. "இவர் நான் இருந்த வீட்டில் தான் ஒரு அறையில் இருந்தார் என்பது எமக்கு ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை. பனியில் சறுக்கி விழுந்து, தலையில் பலமாக அடிபட்டதில் மயங்கியிருக்க வேண்டும் என்பதால் அவரது காற்சட்டைப் பையைச் சோதனை போட்டதில் தான் அவர் முகவரியைக் கண்டு பிடித்தோம். நல்ல வேளையாக சரியான நேரத்தில் அம்புலன்சில் வைத்தியசாலை வரை கொண்டு வந்து சேர்த்தாயிற்று. என்னுடைய கடமை முடிந்தது. நான் இன்றுடன் வீடு மாறிப் போகிறேன்.' அந்த ரோஜாப்பூ முகம் காட்டாமலே அவனிருந்த வைத்தியசாலை அறையிலிருந்து மிக மெல்லிய துள்ளலுடன் மறைந்து போனது. அவனால் பேச எத்தனித்தும் பேச முடியவில்லை, ஆனால் அவள் பேசுவது யாவும் தெளிவாகக் கேட்டது. அவன் கண்களில் கண்ணீருடன் அவள் காலடிச் சத்தத்தை நீண்ட நேரத்திற்கும் , பின் நீண்ட காலத்துக்கும் மிகத் துல்லியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். -2 points
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
2 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிதம் பற்றிய உளவியல் தகவல் -------------------------------------------------------------- (1) ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். (2) அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். (3) எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ "மிஸ்" பண்றீங்களாம். (4) குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர். (5) நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். (6) உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம். (7) சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம். (8) மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம். (9) முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை. (10) இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம். (11) ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது. (12) ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம். (13) ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். (14) ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விடயங்களும் காத்திருக்கும். (15) ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். (16) ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் *(Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார். என்று அர்த்தம். (17) ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது. (18) ஒருவர் அதிகமாக Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) கதைப்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் Negative Thoughts கதைப்பவராக இருப்பார்.👆👆👆 வாட்ஸ் அப்பிலை இப்பதான் வந்தது.2 points- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 pointநான் ஜிம்மாவுக்கு போய் வருகிறன் கடை பூட்டித்தான் இருக்கிறது நீ வெளியில் இரு. சரி காக்கா. அந்த மனுசன் கடவுளுக்கு மிக பயந்தவர் 5 வேளையும் தொழுது கொண்டே இருப்பார். நான் சிறையிலிருந்து வந்து பல இடங்களில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை யாரும் கொடுப்பதாகவும் இல்லை போராளிகளுக்கு வேலை கொடுத்தால் எங்களுக்கு பிரச்சினை வரும் என்று சொன்ன கூட்டங்களுக்காக போராடினோமே என நினைக்கும் போது மனத்துக்குள் எனக்கு நானே காறி உமிழ்ந்து கொள்கிறேன். சிறையிலிருந்த சிங்களவராகட்டும் , சிறைக்காவலராகட்டும் , அடிமை என நினைத்தாலும் மனிதராக பார்த்தார்கள் தமிழர்களோ மனிதராக பார்க்காமல் விரோதியாகவும் , துரோகியாவுமே பார்த்தார்கள் இதில் தமிழர்களின் பழக்கம் ஒன்று இருக்கிறது எப்பவும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை கணித்து விடுவது, அல்லது இப்படித்தான் நடந்து இருக்குமெனவும் எண்னி கணித்தும் விடுவார்கள் இதுதான் இன்றுவரைக்கும் தொடர்கிறது என நினைத்து. வெளியில் இருந்த ஒரு உடுப்பு மூடையில் சாய நித்திரை வருகிறது எப்போதும் வேலை நேரத்திலே நித்திரை வரும் .நித்திரைக்கு போனால் நித்திரை வரவே வராது எனக்கு. பலர் ஏன் மதம் மாறுகிறார்கள் இனத்தை விட்டு தூர செல்கிரார்கள் என மெல்ல எனக்கும் புரிய வைத்தது அந்த வேலைத்தள சம்பவங்கள் எப்போதும் கஸ்டத்தில் இருப்பவர்களை கண்டு கொள்ளாது நம்ம சமூகம் அவன் வேறு மதத்தை தளுவிக்கொண்டால் அவன் வம்சத்தை இழுத்து கழுவிதிரிவார்கள் , காவியும் திரிவார்கள். நித்திரை மெல்ல கண்ணை அரட்ட என் இருண்ட வாழ்வு கனவு வெளிச்சத்தில் நிழலாக மிதந்து வருகிறது. எடேய் சின்னவோவ்!!................ அவன காணல்ல அம்மா என்ற சத்தத்தோடு பெரியவன் வருகிறான் அவன கண்ட நீயா? பள்ளிவிட்டு வந்தான் இந்தா புத்தக பைய எறிஞ்சு போட்டு , சோத்துக்கோப்பையும் கழுவல விளையாட ஓடிட்டான் நீ வெளிய எங்கயும் போகாத எங்க தங்கச்சி? இந்தா உள்ள இருக்கா சரி ரெண்டு பேரும் வீட்டில இருங்க அவனுக்கு ரெண்டு போட்டு ஆள கூட்டுக்கொண்டு வாரன் என செல்கிறாள் பொன்னி . பொன்னி வாழ்வது படுவாங்கரையில். படுவாங்கரையென்பது மட்டக்களப்பில் சூரியன் எழும் பகுதி எழுவாங்கரையெனவும் மறையும் பகுதி படுவாங்கரையெனவும் அந்த காலத்திலிருந்து சொல் வழக்கில் வருகிறது படுவாங்கரையில் அழகிய கிராமம் தும்பங்கேணி. பொன்னியும் அவள் மூன்று பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறார்கள் . மூத்தவன் ( மோகன் ) சின்னவன் ( கீரன் ) புள்ள ( கீதா) தன் பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கமாட்டாள் பொன்னி மூத்தவனை மூத்தவன் எனவும் , இளையவனை சின்னவன் எனவும் பெண் பிள்ளையை புள்ள எனவும் செல்லமாக கூப்பிடுவாள். ஊரவர்களும் அப்படியே கூப்பிடுவார்கள் மூத்தவன் உயர்தரம் படிக்க, இளையவன் தரம் 10 படிக்க , பெண் புள்ள தரம் 8 படிக்கிறாள் . தகப்பனாரோ விறகு வெட்ட காடு சென்றவர் இதுவரை வீடுதிரும்பல இவர்களும் தேடாத காடு இல்லை. சின்னவனை தேடிச்சென்ற பொன்னிக்கு அவன் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தான் எடேய் இப்ப வரப்போறியா இல்ல கம்ப முறிச்சு வெளுக்கட்டுமா உனக்கு? நான் வரமாட்டன் போ போ என்றான் அவன். எடேய் நீ எங்க விளையாடுனாலும் ராவைக்கு வீட்டுக்குத்தானே வரணும் வா உனக்கு அப்ப பூச தாரன் . ஒரு வழியாக அவனும் வர எடேய் கெதியா வாடா வீட்டுக்கு விசயம் ஒன்று சொல்லுறன் என்ன சொல்லுங்கவன் ஊட்ட வா சொல்லுறன் ம் வீட்டை வந்தடைந்ததும் முதலில் வாசலில் இருந்த முருங்க கம்பை முறிச்சு நாலு அடி போட்டாள் பொன்னி அவனும் அடியாதீங்க அம்மா அடியாதீங்க அம்மா என கத்தினான் . அடேய் நாளைக்கு பொடியனுகள் ஆள் பிடிக்கப்போறாங்களாம் உங்க மாமா வந்து சொல்லிட்டு போனான். உங்கள கவனமா இருக்கட்டாம் நீ சொன்ன கேட்கமாட்டியா உங்க அப்பன தொலச்சிட்டு நான் படுற பாடு காணாத நீங்களும் போகப்போறிங்களா? அவனுகள் வேற வீட்டுக்கு ஒருவர் வந்து போராட்டத்துக்கு வாங்க என கூப்பிடுறானுகள் உங்க மாமாவ அம்மம்மா காறி கொடுத்துட்டு இப்பவும் அழுது கொண்டிருக்கிறது நீங்க பார்க்கலயா? நானும் அது போல வாழ்நாள் முழுக்க அழணுமா? சொல்லு சொல்லு என கண்னைக்கசக்கினாள் பொன்னி. நீ இங்க படிக்காத கல்லடி சிவானந்தா கொஸ்டலில் படி இளையவா அண்ணா இங்க படிக்கட்டும் வீட்ட ரெண்டு பொடியனுகள் இருந்தால் விடமாட்டானுகள் எப்படியும் பிடிச்சிட்டு போயிடுவானுகள் . சொல்லுறது விளங்குதா ம்ம் அங்க உங்க அப்பாட சொந்தங்கள் எல்லாம் இருக்கு அவங்க கிட்ட போகவேணாம் போனால் எப்படியும் நாலு கத கத கதைக்கும் காது பட. நீ கொஸ்டலில இருந்து படி அப்பாவும் இல்லலெண்டால் படிக்க இடம் தருவாங்கள் நான் இங்க ஆட , மாட வச்சி இவங்களுக்கு சோறு கொடுப்பன் . உன்னை நாளைக்கு கொண்டு போய் அங்க சேர்க்கிறன் என்ன ம்ம் என்றான் இளையவன். ஆட்டம் தொடரும்1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
மிஷேல். ஜேர்மனியில்...லொத்தர் வெண்டான் எண்டு...நான் நினச்சன்! மனுசன் டொலரில காசை....மெசினில போட்டு எண்ணுது! 😆 தொடருங்கோ....சிறியர்!1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நிர்வாகத் திறன் இல்லை என்றால் மிசேலாக இருந்தா என்ன யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் பூட்டுவிழும்.1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2017 கிரானில் தனியார்க்காணிகளை பலவந்தமாகப் பறித்தெடுத்து தனது சகோதரியின் பெயரில் எழுதிய கருணாவும் எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் மட்டக்களப்பு காவல்த்துறையும் இலங்கை சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைப்படையொன்றினை நடத்திவருபவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கிரான் பிரதேசத்தில் தடாணை பகுதியிலுள்ள 16 பேருக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் தனியார் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி தனது சகோதரியின் பெயரில் பதிவுசெய்திருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தம்மால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பொலீஸார் ஏற்கமறுத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட காணியுரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 2009 இல் முடிவுற்ற இனக்கொலையில் முற்றாகப் பங்கெடுத்து ராணுவத்திற்கு உதவியதற்குச் சன்மானமாக மகிந்த அரசாங்கத்தின் துணையமைச்சராக பதவி கொடுக்கப்பட்ட கருணா, பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைந்து அதன் துணைத்தலைவர்களில் ஒருவராகவும் வலம்வந்தவர். பின்னர், தனது சகோதரியை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண்கள் பிரிவின் தலைவியாகவும் நியமித்திருந்தார் கருணா. மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் அரசின் கீழ் சுதந்திரமாகச் செயற்படும் கருண கொலைக்கு ஆயுததாரிகள் சத்தியன் எனும் கருணாவின் நெருங்கிய சகா தலைமையிலும் கருணாவின் சகோதரியின் துணையோடும் இவ்வாறு பலாத்காரமாக தாம் பறித்த காணிகளில் இன்னும் விவசாயம் செய்துவரும் உரிமையாளர்களை மிரட்டியிருக்கின்றனர். "தொடர்ந்தும் இக்காணிகளில் விவசாயத்தில் ஈடுபட்டால் உங்களை வெட்டிக் கொல்வோம்" என்று கருணாவின் சகோதரி இந்த உரிமையாளர்களை மிரட்டியதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். கிரான் பிரதேச சபை இக்காணிகள் அந்த உரிமையாளர்களுக்கே சொந்தம் என்று உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், கருணாவும் அவரது சகோதரியும் கூறுகையில் இக்காணிகள் புலிகள் காலத்தில் ஒரு பண்ணையாகப் பாவிக்கப்பட்டதாகவும், இன்று புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் இக்காணிகள் தமக்கே உரியவை என்று வாதாடிவருவதாகவும் கூறப்படுகிறது. காணியுரிமையாளர்கள் இதுபற்றிக் கூறுகையில் புலிகளின் காலத்தில் சமுதாயத்தின் நலனுக்காக தமது காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்த தாமே காணிகளை முன்வந்து வழங்கியிருந்ததாகவும், இக்காணிகளுக்கான குத்தகையினைப் புலிகள் தமக்கு வழங்கிவந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், சமூக நலனுக்காக அன்று பாவிக்கப்பட்ட தமது காணிகளை தமிழினத்திற்கு எதிராக இன்றுவரை செயற்பட்டுவரும் ஒரு துரோகிக்கு தாம் வழங்கவேண்டிய தேவை இல்லையென்றும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். கிரான் மக்களின் கூற்றுப்படி, புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதிகள் இருந்த காலத்தில் சுமார் 32 குடும்பங்களைச் சேர்ந்த 112 ஏக்கர்கள் தனியார் காணிகளில் புலிகள் பண்ணையொன்றினை நடத்திவந்ததாகவும், பெரும்பாலும் உள்ளூர் தொழிலாளிகளே இங்கெ வேலை செய்துவந்ததாகவும், பலருக்கு இப்பண்ணை வாழ்வாதாரமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்தப் பண்ணையின் ஒரு பகுதியான 25 ஏக்கர்களையே கருணாவும் சகோதரியும் ஆயுதமுனையில் உரிமையாளர்களிடமிருந்து பறித்திருப்பதாகத் தெரியவருகிறது. மழை காலத்தில் வெள்ளப்பெருக்கின் அபாயத்தினை எதிர்கொள்ளும் இப்பகுதியில், காணிகளை பரவலாக்கம் செய்து வீடுகளை அமைப்பதுபற்றியும் சில உரிமையாளர்கள் சிந்தித்துவருவதாகவும் தெரிகிறது. அதனாலேயே இக்காணிகளை பலவந்தமாக தம்வசப்படுத்த கருணாவும் அவரது சகோதரியும் முயல்வதாகத் தெரியவருகிறது.1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointமனமதை மனையை இட்டு குணமதை கலசம் செய்து மங்களப் பொருளாம் மஞ்சள் குங்குமம் அதற்கு வைத்து அன்பெனும் மலர்கள் சூட்டி அதனாலே அர்ச்சனை செய்து வணங்கியே நின்றோம் அம்மா வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே சினமெனும் சிக்கறுத்து சிந்தையை சுத்தி செய்து செந்தூரி அழகே தாயே சேவித்து நின்றோம் அம்மா தனமோடு தாழாகீர்த்தி தந்தருள வேண்டுகின்றோம் தயையுடன் வந்தே நின்று வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே இனம் கண்டு இல்லை என்னும் குணமில்லா குலமே உனது கலைவடிவான உன்னை தினம் பாடும் செயலே எனது கவியுனுள் கருத்தாய் வந்து பொருளென புகுந்து நிற்பாய் புகழோடு வாழ்க்கை வேண்டும் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே என் குல பெண்கள் எல்லாம் தன குலம் செழிக்க வேண்டி முன்புளத் துயரை விட்டு முகம் மலர பூஜை செய்வார் மங்களம் எல்லாம் நிறைந்த மகிழ்வான நாட்கள் வேண்டி வரலக்ஷ்மி விரதம் இருந்தோம் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஆழியில் அமுதுடன் வந்து ஆலியலை மேலே வாசம் செய்து வாழி நீ மகளே என்று வாழ்த்துக்கள் இன்றே சொல்லு பரந்தாமன் பாதம் அமர்ந்து பௌவிய பணிகள் செய்து வானோரே பருகும் அமுதாய் வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே மேருவை எந்திரம் செய்து மந்திரம் பலவும் சொல்லி சுந்தர வடிவே தாயே சுழிமுனை நிறுத்தி உன்னை சூக்ஷும ஒளியாய் எண்ணி சூடமும் ஏற்றி நின்றோம் சூது வாது அறியாய் எமக்கு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஆதியில் சங்கரருக்கு அருள்மழை அன்றே தந்தாய் நீதியை கேட்கின்றேனே பாவை நான் பணிந்து நின்று நீதிகள் எல்லாம் சொல்லும் நிர்மலமானத் தாயே ஈடில்லா செல்வத்தோடு வரங்கள் தா வரலக்ஷ்மி தாயே ஓம் மஹாதேவ்யைச்ச வித்மஹே விஷ்ணு பதனிச்ச தீமஹி தந்நோ லட்சுமிஹி ப்ரோசோதயாத்1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointஇதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே இயேசு நாம கீதத்துக்கு தாளம் இல்லையே வாழ்க்கை எல்லாம் பாடலாம் ஆன்ம சாந்தி கொள்ளலாம் அஆ...அஆ...ஆஆஆஆ 1. வாழ வைப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் வளமை சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கவலை தீர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் 2. இன்னல் அழிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் இனிமை அளிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான் சக்தியை தருவதும் எந்தன் இயேசு நாமம் தான் சகலமும் வாழ்வில் எந்தன் இயேசு நாமம் தான்1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 pointபகிர்விற்கு நன்றி, தொடருங்கள், கதைதானே இப்பவெல்லாம் ஒரே ஒரு பக்க விமர்சனங்கள் மட்டுமே1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- இனி இளவேனில் காலம் - நிழலி
1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 point- போர் + ஆட்டம் (போராட்டம்)
1 pointஅன்றைய நாள் மாலை நால்வரும் சாப்பிட ஆயத்தமாகிறார்கள். பொன்னாங்கண்ணி சுண்டல், மீன்பொரியல் ,செல்வன் மீன் குழம்பு அம்மா கையால அந்த சாப்பாடுதான் கடைசி சாப்பாடு என சின்னவன் நினைத்துக்கொள்கிறான். அடுத்த நாள் காலை மூத்தவனையும் , மகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு சின்னவனை கூட்டிக்கொண்டு களுவாஞ்சிக்குடி வந்து கல்லடியில் உள்ள பாடசாலையில் கதைத்து கொஸ்டலில் சேர்த்துவிட்டு மகன் இங்க நல்லா படி படிச்சால் படிக்கிற பிள்ளையெண்டு ஒன்றும் செய்ய மாட்டாங்கள். சரியா சரி அம்மா அடிக்கடி வாங்கம்மா இல்லாட்டி அண்ணாவையும் ,தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு இங்க வாங்களன் அம்மா நிம்மதியாக இருக்கலாம் தானே. இல்ல மகன் அங்கதானே எல்லாம் இருக்கு இங்க எங்க? ஆடு, மாடு வளர்க்கிற அதுகளை வளர்த்தால் தானே சோறாவது சாப்பிடலாம் நாம். அவனோ ஒன்றும் பேசாமல் இருக்கிறான் சரி மாதத்துக்கு ஒரு தடவையெண்டாலும் வாம்மா உன்ன பார்க்கணும் வரும் போது அண்ணாவையும், தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு வாம்மா சரி நான் போறன். நீ கவனமா இரு ரோட்டால வாகனம் அதிகம் ரோட்டு மாறுததெல்லம் கவனமா மாறு ரெண்டு பக்கமும் பார்க்கணும் சரியா ம் ம் கண்களால் கண்ணீர் சொரிய இருவரும் பிரிகிறார்கள் . அடுத்த பஸ்ஸ பிடித்து ஊர் வருகிறாள் பொன்னி இரு பிள்ளைகளும் வீட்டிலே இருக்க மூத்தவன் என்ன அம்மா ஆள விட்டாச்சோ? ஓம்டா சரியா குளறுறான்டா என்று சொன்னவளும் மன நிம்மதியான அழுகையை தொடர்கிறாள். சரி அம்மா அவன்ற நல்லதுக்குத்தானே எனச் சொல்லி மூத்தவன் பொன்னியை தேர்த்துகிறான் . சில மாதங்கள் கழிகிறது மூத்தவன் ஏ எல் பரீட்சை எழுதி முடித்துவிடுகிறான் மாட்டை மேய்க்க சென்றவன் அன்று மாலை வீடு வரவில்லை. எங்கு தேடியும் அவன் இல்லை ஒரு வழியாக அவனை பொடியங்கள் பிடித்துப்போனதாய் கேள்விப்படவே வீட்டில் பெண்பிள்ளையை விட்டு தனியே செல்ல முடியவில்லை அவளால். அடுத்தநாள் காலை பயிற்சி முகாமுக்கு செல்கிறாள். அவன் வரவும் இல்லை அவனை பிடிக்கவும் இல்லை என்றார்கள் அவர்கள் இவளோ விடுவதாயில்ல என்ற பிள்ளய கொடுங்கள் இல்லாட்டால் நான் தூங்கி சாகப்போறன் என மிரட்டியும் அவன் இங்கில்லை என்ற பதிலை மட்டுமே தந்தார்கள் . அடுத்தநாள் கல்லடிக்கு வந்து சின்னவனைக்கூட்டிக்கொண்டு சைக்கிளில் அவன் ஏற்றிக்கொண்டு அவள் தம்பி இருக்கும் முகாமுக்கு செல்கிறார்கள் (பொன்னியும் இளையவனும்). அவனோ விசாரிச்சு பார்க்கிறன் அக்கா என்று சொல்லிவிட்டு விசாரிச்சு இருக்கிறான் ஓமாம் அக்கா தரவையில தான் நின்கிறான் போல அங்க போ நான் வந்தால் வேற பிரச்சினையாகும் நீ போ கத்து , வெரட்டிப்பாரு என்று சொல்ல சைக்கிள் தரவை விரைகிறது அங்கே சென்று பார்க்கும் போது பல பிள்ளைகள் பயிற்சியில் நிற்கிறார்கள் எல்லோரும் கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டவர்கள் . எடேய் மூத்தவா அவள் கூப்பிட கூப்பிட்ட குரலைக்கேட்டதும் அழுகிறான் அவன். அவன விடுங்கடா என்ட பிள்ளைய தாங்கடா எனக்கு என ஒப்பாரி வைக்க பொறுப்பாளரோ நான் கூட இப்படித்தான் குளறுனான் என்ற அம்மாவும் இப்படித்தானி இஞ்ச நிண்டு அழுதவ என்று சொல்ல அதான் என்ற தம்பிய தந்திருக்கனே என்ட பிள்ளய விடுங்கடா பதில் இல்லை அண்ண இஞ்ச கொஞ்சம் வாங்கள் ஓம் என்ன தம்பி அண்ண அவன விடுங்கள் நான் வாரன் போராட்டத்துக்கு உங்களோட சரியா?? அம்மா மீண்டும் விறைச்சுப்போகிறாள் குளறாதீங்க அம்மா அவனுக்கு ஒன்றும் தெரியாது அவன கூட்டிட்டு போங்க என்னை பிரிஞ்சு இருந்து பழகி இருப்பீங்க தானே அது போல நினைச்சுங்க என்றான் இளையவன் அம்மா மீண்டும் ஓலமிட்டா ஆனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்பதை உணர்ந்தேன் நான் உள்ளே செல்ல அண்ணா என்னை கட்டிப்பிடித்து விட்டு அம்மாவைத்தேடி ஓடுகிறான் அம்மாவோ அவனைக்கண்டதும் தம்பிய பிடிச்சிட்டானுகளென மீண்டும் அழுகிறாள் நான் தூரம் செல்கிறேன் வீட்ட போங்கள் என சைகையால் காட்ட அவர்களோ போகாமல் என்னையே பார்த்திருந்தார்கள். போய் பெயர் விலாசம் எல்லாம் பதிந்த பின் வந்து பார்க்கிறேன் அவர்களைப்போல பலரை துரத்திக்கொண்டிருந்தார்கள் பொறுப்பாளர்கள் . பொறுப்பாளர் சொன்னார் இவர்களை இங்கு வைத்திருந்தால் இவர்களை பார்க்க அவர்கள் ஒவ்வொரு நாழும் வருவார்கள் இடத்தை மாற்ற சொன்னார் அவர். இடமும் மாற்றப்பட்டது . அம்மாவுக்கு அதிக பாசம் அவனுடன் மூத்த பிள்ளையும் நல்லா படிப்பான் ஆடு , மாடுகள் கோழிகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக்கொண்டு அப்பா இல்லாமல் போனதும் குடும்பத்தை சுமந்தவனும் அவனே நானோ விளையாட்டுப்பிள்ளை. தொடரும் .1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
குடும்பத்தை இழந்து... தனி மரமாகி நின்ற, மிஷேலுக்கு.... வாழ்க்கையை... இனி, எப்படி நகர்த்துவது என்று புரியாத மாதிரி இருந்த போது... அதனை... எப்படியும், வெல்ல வேண்டும்... என்ற ஓர்மம் அவனை... உந்தித் தள்ளியது. திரும்பவும்... பழைய வேலை இடத்திற்கு சென்று, தான்... நடு விரலைக் காட்டிய முதலாளியிடம், வேலை கேட்கலாம் என்ற... தெரிவைத் தவிர, அவனுக்கு, வேறு வழியே இருக்கவில்லை. ஆனால்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு, அந்த முதலாளியிடம், மீண்டும் வேலை கேட்பது? என்ற அச்சம் இருந்தாலும்... நேரடியாக... தொழிற்சாலைக்கு போய் வேலை கேட்பது, இலகுவான விடயம் அல்ல. அவன்... இழந்ததில், முதலாளியின் தொலை பேசி இலக்கத்தையும், இழந்தது... பெரும் சோகம். ஒரு இரவு முழுக்க... நித்திரை முழித்து யோசித்ததில், அவனுக்கு... புது "ஐடியா" பிறந்தது.... ➡️ ➡️ ➡️ ..... ✍️ ✍️ ✍️ 🤣1 point- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
விழுந்த லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை, ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும், அவன்... ஒரு காதால் கேட்டு, மறுகாதால் வெளியே விட்டு விடுவான். அவனிடம் அதிக பணம் கையில் இருந்ததை கண்டு, பல புதிய நண்பர்கள், சேரத் தொடங்கிய பின்.. அவனது மிகுதிப் பணம் கரையத் தொடங்கியது. மிஷேல்... ஒரு சிறந்த வேலை ஆள் என்றாலும், அவனிடம்... நிர்வாகத் திறமையும், வெளியுலக தொடர்பும் இல்லாததால்... வாடிக்கையாளர் கேட்ட பொருட்களை, குறிப்பிட்ட தவணைக்குள் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. "ஒரு தொழிற்சாலைக்கு, பொருட்களை... வாங்குபவர்கள் தான், முதலாளி" என்ற.. கோட்பாட்டை.. அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு வாடிக்கையாளர்... திருப்திப் படவில்லை என்றால், பத்து வாடிக்கையாளரை... இழந்ததுக்கு சமன் என்று சொல்வார்கள். ஏனென்றால்... தனது அதிருப்தியை, இரண்டு பேருக்கு சொன்னாலே... பத்துப் பேருக்கு... அந்தச் செய்தி போய்ச் சேர்வது இயல்பு. அதன் படி... அவனது தொழிற்சாலையை, இழுத்து மூட வேண்டி வந்து விட்டது. வாங்கிய புதுக் காரை... புது நண்பன், இரண்டு நாள் இரவலாக... கொண்டு போய், திருத்த முடியாத அளவுக்கு, விபத்துக்குள்ளாகி விட்டதை அறிந்து... மிஷேல்... மேலும் இடிந்து, போனான். வருமானம்.... சுத்தமாக, நின்று போன நிலையில்... வங்கியில்... கடனாக வாங்கிய வீட்டை, குறிப்பிட்ட தவணையில், கட்டவில்லை என்று... வங்கி அதனை... திருப்பி எடுத்து, ஏலத்தில் விற்று விட்டது. இதற்கு மேல்.... இந்த மனிதனுடன், வாழ முடியாது என்று, மனைவி... பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிரிந்து போய் விட்டார். மிஷேலுக்கு... 🌠 வெள்ளி திசை 🌟 அடித்து, 🌚 ஏழரைச் சனியன் பிடிக்கும் என்று.... எல்லாம் போன பின்தான்... மெல்ல புரிய ஆரம்பித்தது. 😎 ➡️ ➡️ ➡️ தொடரும்.... ✍️1 point- யாழ் எனும் கைத்தடி..
1 pointஅன்று போருக்கும் போராடியவர்களுக்கும்.. அதற்கு துணை நின்றவர்களுக்கும் கை தடியாய் நின்றது யாழ். இன்று போர் செய்தவர்களும் இல்லை, போராடியவர்களும் இல்லை.. போராட்டுத்துக்காக குரல் கொடுத்தவர்களும் இல்லை. கைத்தடி மட்டும் தனியே நிற்கிறது. கை தாங்கலாய் போராட்டத்தை தாங்கியவர்கள் எல்லோருமே உடலாலும் மனதாலும் கை கால் இழந்து நிற்கின்றனர், இழந்தது மட்டும் இல்லை அது தரும் வலியைகூட வெளியே சொல்ல முடியாமல் அவஸ்தை படுகின்றனர். பலர் நம்பிக்கையிழந்து இந்த மாற்று திறனாளி வாழ்வு இனிமே வேண்டாம் என்று ஓடியே போய்விட்டனர். சிலர் மாற்றங்கள் இனிமேலும் வரும் என்ற ஒற்றை புள்ளி நம்பிக்கையில் இந்த கைதடியை பிடித்தபடி காலம் கழிக்கின்றனர். அன்று நமக்கெதிராய் சிவப்பு புள்ளி உயிர் செலவாய் தெறித்த போரில் கோபம் கொண்டு இக் களத்தில் ஒன்று சேர்ந்தவர்கள், இனிமே எதுவும் ஆகபோவதில்லை என்று ஓடியே போய்விட்டனர். அவர்கள் ஓடி போன பின்பும் பச்சை புள்ளிகளை மட்டும் வரவாய் வைத்துக்கொண்டு சிலர் இந்த தளத்தில் உயிர் நகர்த்துகிறார்கள். எங்களுக்கு வடக்கு அரசியல்வாதிகளை பிடிக்காது, கிழக்கு அரசியல் வாதிகளையும் பிடிக்காது, எங்களுக்கு பிடித்தது எல்லாம் வடக்கு கிழக்கு என்ற வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி வரிபுலி சீருடையில் இருந்த போராளிகள் மட்டுமே. இன்று வடக்கும் கிழக்கும் எங்கள் தாயகம் என்று போரிட்ட எம் தேச வீரர்களும் எங்கள்கூட இல்லை. ஆனால் அவர்கள் விரும்பியிருக்காத பிரதேச வாதங்கள் மட்டும் வடக்கும் கிழக்கும் சேர்ந்த சிலரிடம் விரும்பபட்டு எங்கள்கூட பயணிக்கிறது. அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான்.. உதிப்பது கிழக்கு, மறைவது மேற்கு, இதுக்கு சம்பந்தமேயில்லாம வடக்கு கிழக்கு பிணக்கு பற்றி பேசுகிறவர்கள் உருபடாதவர்கள், அவர்கள் கருத்துக்கள் சபையேறாது. யாழ் எனும் கைத்தடி தனிப்பட்ட எவருக்கும் உரித்தானதொன்றல்ல, இனவிடுதலையில் சோர்வானவர்கள் எவர் வேண்டுமானாலும் அதை பற்றிக்கொண்டு ஓய்வெடுத்துவிட்டு மறுபடியும் அவர்கள் பணத்தில் நகரலாம் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். அகவைகள் வருசம் வருசம் அதிகரிக்கும்போது சராசரி மனிதனுக்கு நாடி நரம்பு தளர்ந்து வயசாகிறது என்றே பொருள்படும். ஆனால் இனத்துக்கான காலபதிவுகளை ஒரு பணியாக தொடரும் தளங்களுக்கு காலம் செல்ல செல்ல நரம்புகள் இன்னும் முறுக்கேறுமே தவிர முடிவுக்கு வராது., வாழிய உங்கள் இன பணி.1 point- பரிசு.
1 point - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.