Leaderboard
-
உடையார்
கருத்துக்கள உறவுகள்10Points23926Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46808Posts -
புங்கையூரன்
கருத்துக்கள உறவுகள்8Points13683Posts -
பெருமாள்
கருத்துக்கள உறவுகள்6Points15755Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/16/21 in all areas
-
அசரீரி..!
6 pointsஅசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய். மனிதனாய் வாழவே உன்னை படைத்தான் மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான் பொது நலம் தவிர்த்து நீ சுயநலமானாய்-பூமி பொறுமை இழந்துமே போராளியானாள். அன்புடன் -பசுவூர்க்கோபி- 16,03.20216 points
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!4 points
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு புரிந்து கொள்வது?? எந்தவகையில் நீ போராடினாலும் எந்த வகையிலும் நீ கவனிக்கப்படமாட்டாய் இது சிறீலங்கா சொல்வதல்ல உலகம் ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது? இன்றைய ஈழத்தமிழினத்தின் மௌனநிலை என்பதும் கூட மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல ஈழத்தமிழினம் தன்னால் இதற்கு மேல் அழிவை சந்திக்கமுடியாது இதற்கு மேலும் தன்னிடம் போராடும் வலு கிடையாது என்பதனால் வந்தது அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த கட்டம் என்ன?? மீண்டும் உண்ணாவிரதம் ஊர்வலங்கள்? ஒன்றை மதிப்பவரிடம் அல்லது மனித மாண்புகளை கொண்டோரிடம் நாம் பரீட்சிக்கவேண்டியவை இவை கொலைகாரர்களிடம் அதற்கு துணைபோனவர்களிடம் அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் .... எவ்வாறு ஒரு படியாவது அவர்கள் முன்னகர்த்துவர்??? அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியாதா??? நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன் இது வருடத்துக்கு 2 அல்லது 3 ஆக இருக்கும் இவ்வாறு செல்வதென்பது எவ்வளவு கடினமானது எவ்வளவு நேரத்தை விழுங்கக்கூடியது எவ்வளவு செலவானது என்று பல தமிழருக்கும் தெரிவதில்லை (அவ்வாறு தெரிந்தால் அவை பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்) 2 நாட்கள் லீவு வேண்டும் மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள் திருப்பி அனுப்புதல்கள்....??? மற்றும் செலவுகள்?? இதையெல்லாம் தாண்டித்தான் போவதுண்டு போய் கால் கடுக்க பல மணி நேரம் நின்று நடந்து ஊர்வலமாக சென்றால் அங்கே எதையுமே கணக்கெடுக்கமாட்டார்கள் இத்தனை வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக வருகிறார்களே எமது கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம் கேட்டு திரும்பி சென்று மீண்டும் மீண்டும் அமைதியாக வந்து கெஞ்சுகிறார்களே என்று எந்த மனச்சாட்சியும் அற்ற செயற்பாடற்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். கடைசியாக நான் சென்றது 2018. அன்று அதே நடைமுறை அதே நடை ஊர்வலம் மேடைப்பேச்சு... இவை நடந்து கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள் கேட்டன அங்கே சென்று பார்த்தபோது சில இளைஞர்கள் ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள் காவலர்கள் இவர்களை தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள் உட்புக எத்தனித்தனர் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது நானும் அவர்களுடன் சேர்ந்த கொண்டேன் மேலும் நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால் முடியாது போவதை உணர்ந்து மேலதிக காவல்த்துறையினரை வரவளைத்து சுற்றி வளைத்தனர். ஆனால் இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை பாவிக்கவோ இல்லை இறுதியாக இனியும் முன்னேறுவது என்றால் வன்முறையை தவிர வேறு வழியில்லை என்பதால் அழுதபடியும் திட்டியபடியும் எல்லோரும் பின் வாங்கினர். நானும் தான் அதற்கு பின்னர் நான் ஐநா ஊர்வலத்துக்கு போவதில்லை ஏனெனில் அவர்கள் எம்மிடம் வன்முறையை மட்டுமே விட்டு வைத்திருக்கின்றனர். இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து உலகம் தலைகீழாக மாறினால் மட்டுமே எமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு எம்மினத்தின் மேல் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு நியாயம் கிடைக்க சிலவேளைகளில் வழியுண்டு.. அதைவிடுத்து அமைதி வழி இவர்களுக்கு புரியும் என்று அப்பாவித்தனமாக நம்பி திலீபனாக பூபதி அம்மாவாக முருகதாசாக இறுதியாக அம்பிகை அம்மாவாக .... கைவிடப்படுவீர்கள்????? (ஆனால் அதே கதவை இன்றும் இன்னும் பலர் தட்டியபடி தான் உள்ளனர். தட்டுங்கள்)4 points
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம் தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள். சரி பரவாயில்லை. போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?4 points
-
காற்றாய் நீயும் மாறிவிடு
3 pointsநல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......! நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப் பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத அடிமையாய் வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ ! 😎3 points
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இயற்கையும் தன்னாலான வரை போராடுது? இயலாமல் போனதும் போராட்ட முறையை மாத்திப் பாக்குது! அது தான் கொரோனாவைச் சொன்னேன்!😄 இன்னொரு திரியில் சொல்லப்படுகின்றது...இன்னும் 24 வகை , ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் கண்டு பிடிக்கப் பட்டிருக்காம்! ம்ம்...இயற்கையிடம்...இன்னும் பல ஆயுதங்கள் கை வசம் இருக்குது!🥱3 points
-
காற்றாய் நீயும் மாறிவிடு
2 pointsசிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள் பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை மானிட வாழ்வில் பெருமையும் இல்லை உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள் உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே உயிர் காத்திடும் மருந்தும் அவளே உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே உணர்வுகள் தந்து உறவுகள் காக்க தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து சொந்தம் காக்க சொற்கள் குறைத்து பந்தம் போற்றப் பலதும் துறந்து உதிரம் தந்துயிர் தந்திடுவாள் பெற்றவர்க்காகப் பெருமை துறந்து மற்றவர்க்காக மனதைப் புதைத்து கற்றிருந்தாலும் கலைகள் மறந்து பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க பாரங்கள் பலவும் சுமந்திடுவாள் குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள் தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை தயங்காது உழைத்திடும் அவளின் மேன்மை திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம் காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப் போவதும் கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும் காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள் மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள் பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள் பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள் பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள் பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம் குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும் பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும் பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர் ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன் ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள் ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம் உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில் பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும் மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும் மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும் தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும் கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும் பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும் காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும் பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும் ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும் கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும் கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு2 points
-
பாவத்தின் சம்பளம்
2 pointsஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில் உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும், ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான் மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு ,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது . சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " , ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' இது அவன் :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' ஐடியாமணி : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ" அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது " ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா" இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம் " தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 1952, இலங்கை கிழக்கு மாகாணம் வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார், பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம் நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர் ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுதேசியாக இந்திய சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான் இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும் நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும், பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர், (தொடரும்)2 points
-
இறைவனிடம் கையேந்துங்கள்
2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!1 point- காற்றாய் நீயும் மாறிவிடு
1 pointபுத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள். புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள். புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள். புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள். புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம். புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே. புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள். புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை. புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள். புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள். புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள். புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார். புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள். புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான். புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள். சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே. புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள். புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள். புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள். புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள். புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும். புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள். புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள். புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு. புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள். புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள். புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள். புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை… புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது…1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
இவர்கள் பற்றி சொல்வதென்றால் அவர்களும் எமக்கு வன்முறையை தவிர வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை அண்ணா. அதைத்தவிர அனைத்தையும் நாம் செய்து பார்த்தாகிவிட்டது. உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியவில்லை வச்சுக்கொண்டா அவர் வஞ்சகம் செய்கிறார்?? பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்??1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
யாரைக் கேட்க்கிறிர்கள்? உங்கடை நாடு நினைத்தால் ,முடியும்..இப்ப உப ஐனதிபதி பதவியும்..உங்கள் கையிலுண்டு...முயற்ச்சி செய்து பாருங்கள்1 point- அசரீரி..!
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அட.... இவ்வளவு நாளும், மேலை இருந்தா கொட்டிக் கொண்டிருந்தவர்கள். 😮1 point- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
1 pointதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 14, ஐப்பசி 2018 மட்டக்களப்பில் அரசு சாரா நிறுவன ஊழியர்களை ராணுவத்திற்காகச் செயற்படுமாறும் வற்புறுத்தும் அவ்வமைப்பின் தலைவரும் கருணா துணைராணுவக் கொலைப்படையும் பிரபல இனவாத பிக்குவின் அருகில் அமர்ந்திருக்கும் ஷக்ய நாணயக்கார கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் அரசு சாரா அமைப்பொன்றின் நிர்வாக இயக்குநரான ஷக்ய நாணயக்கார மட்டக்களப்பில் அவ்வமைப்பின் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் இலங்கை ராணுவத்துடனும் பொலீஸாருடனுன் அவர்கள் சேர்ந்து செயற்பாடமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியதாக இக்கருத்தரங்கில் பங்குகொண்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அரசுசாரா அமைப்புக்களின் தேசியச் செயலகத்தின்மூலம் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பெருமளவு கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். நாணயக்கார தொடர்ந்தும் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில் கிளிநொச்சியில் தமது அமைப்பினைச் சார்ந்த சிலர் ராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்டு வருகையில் மட்டக்களப்பில் மட்டும் தமிழர்கள் ராணுவத்திற்கு உதவாமல், விலகிச் செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ராணுவத்திற்கும் சமூக அமைப்புக்களுக்குமான தொடர்பினை ஏற்படுத்துவதே தனது கடமை எனும் தொனியில் அவர் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு எனும் கோட்பாட்டின் கீழ் "தேசிய கலந்துரையாடல்" அமைப்பினரின் உதயவியுடன் இவ்வமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்குகள் சமூகத்தின் அடிப்படை மட்டத்திலிருந்து "ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் கோட்பாட்டினை முன்வைத்தும், ஈழத் தமிழர் எனும் அடையாளத்தை அழித்தும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாணசபை முறையிலான அதிகாரப் பரவலாக்கம் என்பதனை நிராகரித்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே உரிமை, ஒரே அடையாளம் எனும் கருப்பொருளுடன், தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளைப் பலவீனப்படுத்தி, நலிவுறவைக்கும் கைங்கரியத்தை அரசும் ராணுவமும் முன்னெடுத்துவருவதாக இவ்வமைப்பின் செயற்பாடுகளை அவதானித்துவரும் மனோ கணேசனின் மனிதவுரிமை அமைப்புக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் "மாவட்ட நல்லிணக்க செயற்பாடுகள்" எனும் போர்வையில் நாணயக்கார எனும் அரச - ராணுவ பின்புலத்தில் இயங்கும் நபருக்கு உதவியாக கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரியும் கருணாவின் பிரத்தியே செயலாளருமான வி கமலதாஸ் இக்கருத்தரங்கினை ஒருங்கிணைத்து நடத்தியதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வமைப்பிற்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நாணயக்காரவின் இந்தக் கருத்தரங்கில் பேசிய கருணா துணைராணுவக் கொலைப்படை ஆயுததாரி கமலதாஸ் வடமாகாணத் தமிழர்களையும் அவர்களின் அரசியலையும் கடுமையாகச் சாடியதுடன், கிழக்கு மாகாணத் தமிழர்கள் தனித்து இயங்கவேண்டுமென்றும், ராணுவத்துடன் நல்லுறவைப் பேணுதல் அவசியம் என்றும் ஊழியர்களைக் கேட்டுக்கொண்டதாக இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். நல்லிணக்கம் எனும் பெயரில் அரச ராணுவமும் அதன் துணைராணுவக் கொலைப்படைகளும் தமிழர்களின் அடையாளத்தினை இல்லாமல் அழித்து, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் "ஒற்றையாட்சியின் கீழான ஒருமித்த நாடு - இலங்கையர்" எனும் அடையாளத்தினை விதைக்க முயன்றுவருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.1 point- நடனங்கள்.
1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointஇனியொரு பொழுதும் உனைப் பிரியாத உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும் 1. கனவிலும் நனவிலும் சொல்லிலும் செயலிலும் 2. உயர்விலும் தாழ்விலும் மகிழ்விலும் துயரிலும் 3. வாழ்கின்ற வரையிலும் வாழ்வில் எந்நிலையிலும் இனியொரு பொழுதும் உனைப் பிரியாத உறவொன்று என்னில் நிலைபெற வேண்டும்1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு. தமிழர்களப் பார்த்து நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன செய்யலாம்?1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
என்ன ? இயற்கை கூடவா அப்படி இயங்குகிறது ...நம்பமுடியவில்லை....1 point- இறைவனிடம் கையேந்துங்கள்
1 pointகாலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
போராட்டம் நடந்த போது திட்டினார்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது சொன்னோம் பலித்து விட்டது என்றார்கள். பத்து வருடங்கள் கழிந்து விட்டது. அவர்கள் இதுவரை எதுவுமே செய்ததில்லை.வெளிநாடுகளில் நலமே வாழ்கின்றார்கள். புலிகளால் தொல்லை ஆபத்து என்றவர்கள் பத்து வருடங்களாகியும் ஊர் திரும்பி வாழ எத்தனிக்கவில்லை. மாறாக இன்று மனித உரிமைபோராட்டம் செய்பவர்களை பார்த்து உலக அரசியல் தெரியாதவர்கள் என ஏளனம் மட்டும் செய்கின்றார்கள். கொடுத்த தொழிலை செவ்வனே செய்கின்றார்கள்.1 point- விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointநாட்டு கோழியை இடித்ததன் மூலம், ஒருவகையிழும் சுவைக்க பிரச்சனை ஆகி விட்டார். நாட்டு கோழியின் எலும்பு முறிவு தன்மை கொண்டது, இடித்தால் எலும்பின் சிராய்கள், சிறிய துண்டுகள் கலந்து தொண்டையில் சிக்கிவிட இடம் இருக்கிறது. இடித்ததன் நோக்கம் தசை ஓரளவு இத்து போக வேண்டும் என்று தானே. தனியாக தசையை வார்ந்து, சாடை மாடையாக இடித்து ரசம் வைக்கலாம், எலும்புகளில் குழம்பு வைக்கலாம்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointகாலிப்ளவர் மிளகு குழம்பு.....இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.....! 👍1 point- பாவத்தின் சம்பளம்
1 pointசபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார், பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது 2003, கிழக்கு மாகாணம் 'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம் 100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது, முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும் வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான் நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர் திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர் நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும் புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர் நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன (தொடரும் )1 point- நடனங்கள்.
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point- மாவீரர் புகழ் பாடுவோம்
1 point - கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -1)
Important Information
By using this site, you agree to our Terms of Use.