Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்15Points19152Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87997Posts -
அன்புத்தம்பி
கருத்துக்கள உறவுகள்7Points5633Posts -
முதல்வன்
கருத்துக்கள உறவுகள்7Points657Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/19/21 in all areas
-
ஈழத்தமிழர் அரசியல்
3 pointsதரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள். ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான். இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது. இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது. இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான். ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்). நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது. ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும். சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல. இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது. 1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது. இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது. ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன. தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும். தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும் புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது. இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை. இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை. அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை. சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை. சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்? இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை. அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள். ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம். பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள். ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம். இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை. தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார். ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி. கற்ற பாடங்கள் என நான் காண்பன 1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை). 2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும். 3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது. 4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது. 5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும். அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும். ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை. 6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள். பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.3 points
-
ஈழத்தமிழர் அரசியல்
3 pointsதமிழீழ தமிழர்களின் விடிவுக்காக் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம், அரசியல் நடவடிக்கைகள் மீது பல்வேறு தரப்பினர் விமர்சங்களை வைப்பது வழமை. அவற்றை வெறுமனே விமர்சனங்களாக, எதிரியின் துரோகிகளின் கூவல்களாக கடந்து சென்று விடிவை அடைய முடியாது. புலிகளே தற்போது இருந்தாலும் தாங்கள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்வை, தமிழ்மக்களின் அரசியல் தொடர்பாக கடந்து வந்த பாதையை நிச்சயமாக ஆராய்வார்கள். இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். எல்லாருக்கும் ஒரு நியாயயம் இருக்கும் தங்களின் நியாயம் தான் உலகில் மிகப்பெரியது என்று நினைப்பதால் தான் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொருவரின் நியாயத்தையும் ஆராய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இந்த விமர்சனங்களும் அதற்கான கலந்துரையாடல்களும் எதிர்காலத்தில் எம் விடுதலைக்கு எந்த விதத்தில் ஆவது உதவ வேண்டும் என்பதை மனதில் வைத்து பதிவுகளை எழுதுங்கள். ஒருவரை ஒருவர் வென்றுவிடுவதால் விடிவு கிடைத்துவிடும் என்றால் நான் ஒரு தோல்வியாளனாக முதலில் பதிவு செய்துவிடுகிறேன்.3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
3 points
- ஈழத்தமிழர் அரசியல்
2 pointsமொழி வாரியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்...அதற்கு எதிராய் ஆயுதம் தூக்கினார்கள் . சரி ....பிறகு பிரதேச அதாவது மாவட்ட ரீதியான தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டது ...இதனால் பின் தங்கிய பிரதேசத்தை [வன்னி , மட்டு ] போன்ற இடங்களில் இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு வசதியாய் இருந்தது ...அப்படி இருக்கும் போது தரப்படுத்தல் போராட்டத்திற்கு ஒரு காரணமாய் சொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- ஈழத்தமிழர் அரசியல்
1 pointதொடர்சசியாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளால் தமிழீழ விடுதலை போராட்டம் அடைந்த இலாபம் என்ன? தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதல்களால் தமிழர் போராட்டம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை கண்டது. தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக பிரச்சாரம் செய்ய ஶ்ரீலங்கா அரசுக்கு சிறந்த வாய்ப்பைக் கொடுத்தது. விடுதலைப்புலிகளால் கொல்லப்படாதவர்களையும் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் சேர்தது ஶ்ரீலங்கா அரசாங்கம் பிரச்சாரம் செய்த போது அவற்றறை மறுக்க முடியாத கையறு நிலையில் புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் இருந்தார்கள். பெயர் குறிப்பிட்டு இவர்களை எல்லாம் நாம் கொலை செய்யவில்லை என்று கூறும் போது அப்படியானால் மற்றவைகளை நீங்கள் தானே செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் மௌனமாக அரசின் பரப்புரையை எதிர் கொள்ள முடியாத நிலை இருந்ததை ஜெனிவாவில் தமிழர் தரப்புக்காக செயற்பட்ட பலர் அறிவார்கள். உலக ராஜதந்திரிகளால் நன்கு அறியப்பட்ட நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்ட போது ஜெனிவாவில் தமிழர் தரப்பில் பரப்புரை வேலைகளை மேற்கொண்ட நண்பர்கள் சில காலம் ஜெனிவா பக்கமே போக முடியாமல் இருந்தது. அதை தொடர்தது அதே ஆண்டில் சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல். என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் தனியே வெறும் உணர்சசி வசப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களே. யாழ்பபாண எம். பியாக இருந்த யோகேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாலேயே 1981 ல் அவரது வீட்டை எரித்து அவர் மயிரிழையில் தப்பி இருந்தார். அப்படிப்பட்டவர்களை கொலை செய்து விட்டு இன்று எமக்காக அரசியல்வாதிகள் இல்லையே என்று அழுகிறோம். இது போல் பல விடயங்களை குறிப்பிடலாம். இவற்றை கூறும் போது பழைய விடயங்களை கிளறுவதாக கூறுவார்கள். ஆனால் தாம் சிலாகிக்கும் பழைய விடயங்களை மட்டும் அசைபோட்டு மணிக்கணக்கில் பேசுவார்கள்.1 point- ஈழத்தமிழர் அரசியல்
1 pointஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாறு கணனி விசைப்பலகைகளில் தட்டுவதன் மூலமோ மை கொண்டு காகிதத்தில் எழுதுவதன் மூலமோ உருவாக்கப்படுவதில்லை.அது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிராலும் இரத்தத்தாலும் பல இலட்சக்கணக்கான மக்களின் உழைப்பாலும் வியர்வையாலுமே எழுதப்படுகிறது. அந்த வரலாற்றை அதன் மகத்துவத்தை ஒருபோதும் எதிரிகளாலோ அவர்களது ஒத்தோடிகளாலோ புரிந்துகொள்ள முடியாது. 0000 ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது ஒரு சங்கத்திற்கு அல்லது ஒரு பொது அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பதற்கும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. ஓரு அரசியல் கட்சியில் ஒரு சங்கத்தில் அல்லது ஒரு பொது அமைப்பில் பொதுவாக ஒருவர் அங்கத்துவ படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுத்து அதற்குரிய அங்கத்துவ பணத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் உறுப்பினராகலாம். ஆனால் ஒரு விடுதலை இயக்கத்துக்கு இதே முன்மாதிரியில் அங்கத்துவ படிவம் நிரப்பி அங்கத்துவ பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை அவ்வளவு சுலபமாக சேர்த்துவிட முடியாது. ஒரு விடுதலைப்போராட்டமென்பது மூடிய அறைக்குள் நடத்தும் விவாதமோ ஒரு திறந்த வெளியில் நடத்தும் பொதுக்கூட்டமோ அல்லது ஒரு மைதானத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியையோ போன்றதல்ல. அது இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து போராடும் களமுனைகளைக் கொண்டது.கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய கரடுமுரடான ஆபத்தான பயணப்பாதை அது. பணமும் பட்டங்களும் சமூக அந்தஸ்த்தும் பிரமுகர்களின் பரிந்துரைகளும் இந்தப்பயணத்துக்கு உதவாது. ‘போர்க்குணம்’ என்பது தான் இந்தப்பாதையில் பயணிப்பவனுக்கான முதல் அடிப்படை தகுதியாகும். எவனொருவன் தன்னைச்சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு கோபம்கொள்கிறானோ,அதற்கெதிராக போராடத் துணிகிறானோ அவன் தான் போராளியாக இணைத்துக்கொள்ள அல்லது போராட்ட செயற்பாட்டாளனாக இணைத்துக்கொள்ளத் தகுதியானவன். https://www.facebook.com/siva.sinnapodi1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointLAST VISITED December 1, 2015 இந்த நபர் ஐந்து வருடங்களுக்கு மேல் யாழ் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை ஒளித்து நின்று பார்க்கிறாரோ தெரியலை எதுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......போக்கு வரத்து.க்கு ......!1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- நடனங்கள்.
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
1 pointவிடுதலைப் புலிகளின் பெண் குறிசாடுநர் எஸ்.எஸ்.2-வி4(SS2-V4) குறிசாடு துமுக்கியுடன் (இதுவொரு 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த நிகழ்படத்தில் இருந்து நான் திரைப்பிடிப்புச் செய்ததாகும்)1 point- நடனங்கள்.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- மலரும் நினைவுகள் ..
1 point- மனதைக் கவர்ந்த கவிதைகள்
1 pointபடித்துப் பார்த்தேன் .....தேன் ......கவிதையினுள் கரைந்தேன்......! 👌 நன்றி நுணா.......!1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- மனதைக் கவர்ந்த கவிதைகள்
1 pointஎழுதியவர் யார் என்று தெரியவில்லை, ஆனாலும் அருமை.. //ஊரே ஒன்று கூடி..,உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக்குத் தெரியாதா என்ன?யாருடைய பார்வைக்கப்புறம்.பறக்கும் இந்த உயிரென்று?//. இதைவிட எப்படி விபரிப்பது தந்தை - மகள் பாசத்தை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
1 pointதிராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர் ஒருவர்1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஎனது 65வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லோருக்கும் மிகவும் நன்றி.1 point- தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
1 pointஇனம் தெரியா உள்நாட்டு விளைவிப்பு குறிசூட்டுத் துமுக்கி - Unidentified indigenously produced sniper rifle பெரிய குழல்விட்டம் (12.7mm?) கொண்ட துமுக்கியாக தென்படுகிறது... கவசத்தை துளைக்கும் தன்மை உடையாதாக உள்ளது. எனவே பொருண்ம எதிர்ப்புத்(Anti-material) சுடுகலனாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலதிக விரிப்புகள் ஏதும் இல்லை. இருந்தால் அறியத் தரவும். படம் : உவர்மலை அருங்காட்சியகத்தில் இருந்து சமர்க்களத்தில் ஒரு 'கோரமா'வாகத்தான் இருந்திருக்கும் கோரமா=Beast1 point- தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
1 point????? குறிசூட்டுத் துமுக்கியுடன் 1990<1 point- ஈழத்தமிழர் அரசியல்
1 pointநன்றி உடையர் அண்ணா & துல்பேன் அண்ணா.. நிலாந்தனின் இந்த தெளிவான பார்வையை எல்லோருக்கும் இருக்குமா தெரியவில்லை.. அவர் கூறுவது போல தற்போதைய அரசியல்தலைமைகளுக்கு(விரல் விட்டு எண்ணக்கூடியவர்களை தவிர) மக்களின் நலனில் அக்கறை என்பது துளியும் இல்லை.. ஆனால் அவருடைய இந்த காணெளியில் வந்த Think Tank ஏன் எங்களால் இப்பொழுதும் கூட உருவாகவில்லை? சரி அப்படி ஒன்று உருவாகினால் கூட அது இனவாத அரசினால் அரும்பிலேயே கிள்ளியெறிப்படும் சாத்தியங்கள் அதிகமாகதானே இருக்கும்? ஏன் அரசியல்வாதிகளை அதிகளவு உள்ளடக்கித்தான் இந்த Think Tank உருவாக்கப்படவேண்டுமா? புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியை/பலத்தை பற்றி பிறகு பார்த்துக்கொள்வோம் ஆனால் இந்த Think Tank கட்டியெழுப்ப ஏன் எங்களால் இப்பொழுது முடியாதுள்ளது..1 point- ஈழத்தமிழர் அரசியல்
1 pointதமிழீழம் என்னும் இலக்கை அடைய வழிவகுக்கும் ஏழு கொள்கைகள் -சத்தியா சிவராமன் 84 Views ஓர் சுதந்திரமான, இறைமையுள்ள, பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நாட்டை மீட்டெடுக்கின்ற தமிழீழ மக்களின் நீண்ட, கடினமான பயணம், தற்கால வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது. எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையை விட்டு வெளியேற ஆயத்தமான பிரித்தானிய காலனீய அரசு, ஒன்றிணைக்கப்பட்ட சிறீலங்கா அரசிடம் தமிழீழ நாட்டைக் கையளித்த கணப்பொழுதிலிருந்து தமிழீழ மக்களின் விடுதலைக்கான இந்தப் பயணம் ஆரம்பமானது. அதன் பின்னர் கொழும்பை நடுவமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாதம் நிறைந்த, பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக தமிழ் மக்களின் நீதியும் மாண்பும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் வன்முறையற்ற, அமைதி வழிகளில் தமிழ் மக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈற்றில் இப்போராட்டம் ஒரு முழு அளவிலான விடுதலைப் போராகப் பரிணமித்தது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நீடித்த இப்போர், 2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையுடனும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்ட நிகழ்வுகளுடனும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இக்காலப் பகுதியில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் சிறீலங்கா அரச படைகளினால் இழைக்கப்பட்டன. மிகவும் கொடூரமான முறையில் இழைக்கப்பட்ட இக்குற்றங்களுக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறைவுற்ற போது, ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் கைதுசெய்யப்பட்டு, ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவிப் பொதுமக்கள் தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் இழைக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று, ஒருபுறம் கொழும்பில் ஆட்சியில் இருப்போரின் ஆணவத்தையும் மறுபுறத்தில் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரதேசங்களையும் அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அநீதிகளுக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்தவிதத்திலும் அக்கறை காட்டாத பன்னாட்டுச் சமூகத்தையும் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மனம் தளர்ந்து போவதும் நம்பிக்கையை இழப்பதும் இயல்பாகவே எதிர்பார்க்கக் கூடிய விடயங்கள் தான். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, ஊடகங்கள் கோலோச்சும் ஒரு காலப்பகுதியிலும் தொடர்பாடல் வசதிகள் உச்சக்கட்ட நிலையிலிருந்த ஒரு காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பன்னாட்டுச் சமூகம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை. மனித உரிமைகள் பற்றியும் சனநாயகம் தொடர்பாகவும் ஓயாமல் கோசமெழுப்புகின்ற வல்லரசுகள், இந்த இனப்படுகொலையைப் புரிந்து விட்டு இன்றும் சிறீலங்காவின் ஆட்சிக் கதிரையில் இருக்கும் பாசிசவாதிகளைத் தண்டிப்பது தொடர்பாக எந்தவித சலனமும் இன்றி இருப்பதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது. சிறீலங்காவை உற்று நோக்கும் போது, இராஜபக்சாக்களை தலைமையாகக் கொண்ட கொழும்பு அரசு, முழுத் தீவையுமே சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கிறது. பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைச் சிஙகளமயமாக்கும் செயற்பாடு, ஈடுசெய்யப்பட முடியாத வகையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல மொழிகளையும், பல சமயங்களையும், பல இனங்களையும் தன்னகத்தே கொண்ட சிறீலங்கா, ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாறுவதாயின், தமக்குரிய தனிநாடான தமிழ் ஈழத்துக்காகப் தொடர்ந்து போராடுவதைத் தவிர தமிழ்ஈழத் தமிழ்மக்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை. உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து வாழுகின்ற புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடாக, அமைதியான வழிகளிலும், முற்று முழுதாகச் சனநாயக வழிமுறைகளிலும், தமிழ் மக்களுக்கான மாண்பையும், நீதியையும், விடுதலையையும் அடைந்து கொள்ளும் தூரநோக்குடன் இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனப்படுகொலையை மேற்கொண்டவர்களுடன் சமரசம் செய்வதென்ற கேள்விக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்பது மட்டுமன்றி தற்கால சனநாயகத்தின் அடிப்படைகள் பற்றியோ, மனித நாகரிகக் கொள்கைகள் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாதவர்கள் நடுவில் சிறுபான்மை மக்களாகக் ஈழத்தமிழ் மக்கள் காலாதிகாலம் வாழ்வதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்தில், நாம் கைக்கொள்கின்ற தந்திரோபாயங்களை மட்டுமல்ல நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பாகவும், அந்த இலக்கை அடைவதற்குரிய வழிவகைகள் தொடர்பாகவும் இருக்கின்ற அடிப்படைக் கொள்கைகளையும், அனுமானங்களையும் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாகும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட எந்தவொரு மக்களினத்தின் விடுதலையை நோக்கும் பொழுதும், அவர்கள் அந்த விடுதலைக்காக எப்படிப்பட்ட ஈகத்தைச் செய்திருந்தாலும், அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டுத் தளங்களில் பூகோள ரீதியாக எவ்விடயங்கள் இன்று முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன என்ற தெளிவு இன்றி இவை எதுவுமே சாத்தியமாகாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். முதலாவதாக, நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு தூரநோக்குப் பார்வையை (vision) நாம் கொண்டிருப்பதோடு, அந்த இலக்குத் தொடர்பான விபரங்கள் வெளிப்படைத்தன்மையோடு வரையறை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தை முற்றுமுழுதாக எதிர்காலத்தின் கைகளிலே விடுவதும், உணர்ச்சிவசப்பட்டு தெளிவற்ற நிலையில் இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்களாகும். நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு முழுமையான வரைபு தொடர்பாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஆனால் நாம் உருவாக்க விரும்புகின்ற நாட்டுக்கான கட்டமைப்பு, கொள்கைகள், நிறுவனங்கள், சட்டவிதிமுறைகள் என்பவை தொடர்பான முன்குறிப்புகளைப் பற்றியே இங்கு நாம் பேசுகின்றோம். இரண்டாவதாக, சமகாலத் தாயகம், பூகோள அரசியல் நிலைமை, கடந்த கால வரலாறு, எதிர்காலத்தில் முன்னுரிமை பெறக்கூடிய விடயங்கள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து வரையப்படும் எமது நோக்கங்களை அடைவதற்கான ஒரு நல்ல வழிவரைபு (road map) எமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வழிவரைபை உருவாக்கும் பயணத்தில் உதவக்கூடிய சில கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் மேலும் ஆய்வுசெய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் ஆலோசனைகளாக மட்டுமே தரப்படுகின்றன. விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுகின்ற அனைவரதும் பங்களிப்புடன் இக்கருப்பொருட்களின் அடிப்படையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கொள்கைகள் இறுதிசெய்யப்படலாம். கொள்கை ஒன்று: ஓர் உறுதியான பூகோளப்பார்வையைக் கொண்டிருத்தல் தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நாம் பார்க்க முடியாது. மாறாக இப்போராட்டம், பல்வேறு சக்திகளுக்கு இடையேயான ஒரு பூகோள அரசியல் யுத்தமாகவே நோக்கப்பட வேண்டும். இரண்டாயிரத்து ஒன்பதில் நடைபெற்று முடிந்த போரில், மிகவும் வல்லமைமிக்க பன்னாட்டு மற்றும் பிராந்திய சக்திகளின் கூட்டணியே தமிழ் மக்கள் மேலும் விடுதலை இயக்கத்தின் மேலும் ஒரு இனப்படுகொலைத் தாக்குதலை சிறீலங்கா அரசு மேற்கொள்ள நேரடியாக உதவிசெய்ததை நாம் போரின் இறுதிக்கட்டங்களில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆகவே தான் தமிழ் ஈழத்தை அடைவதற்கான போராட்டத்தில் எமது கண்ணோக்கு, சிறீலங்காவின் வரையறைகளைக் கடந்ததாகவும் பூகோள ரீதியாக நிலவுகின்ற சூழலையும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் உள்ளடக்குவதாகவும் அமைவது இன்றியமையாததாகும். இந்தக் கொள்கையை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு, தன் (சுய)நிர்ணய உரிமை, நீதி, மனித உரிமைகள், சனநாயகம் போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற நாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய பன்னாட்டுக் கூட்டணிகளையும் நட்பு நாடுகளையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு வழியில் சொல்வதென்றால் தமிழ் ஈழத்தை அடைவதற்கான செயற்பாடுகள் மிகவும் உறுதியான பூகோளப் பரப்பிலும், பன்னாட்டுக் கண்ணோட்டத்திலும் வடிவமைக்கப்பட வேண்டுமேயோழிய, அந்த முயற்சிகள் பிராந்தியக் கட்டமைப்புகளுக்குள்ளேயோ அல்லது உப பிராந்திய மட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. கொள்கை இரண்டு: தற்கால நாடிய அரசுகளைக் (nation states) கட்டமைக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ளல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடத்துக்கிடம் மாறிக்கொண்டிருக்கும் நிதி, மனித வளம், அறிவு என்பவற்றின் மூலதனம், மிக அதிக வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் மனித அறிவு, விரைவாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய இவை அனைத்துமே இப்பூகோளத்தையும் நாடிய எல்லைகளையும் ஏன் ‘நாடிய அரசு” என்ற எண்ணக்கருவையுமே புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன. கடந்து சென்ற நூற்றாண்டுகளில் தொடர்வண்டிப் பாதைகளும் வீதி வலைப்பின்னல்களும் எவ்வாறாக முன்னைய அரசுகளை முற்று முழுதாக மாற்றியமைத்தனவோ, அதே போலத் தொடர்பாடலும் நிதி வலைப்பின்னல்களும் இன்று புதிய அடையாளங்களையும் உறவுகளையும் சமூகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய பெருநிறுவனங்கள், நாடுகளை விடவும் பலம் வாய்ந்தவையாக விளங்குவதுடன் நாடிய அரசுகள் இன்று பன்னாட்டு மூலதனங்களுக்கு வழிவிட்டுக்கொண்டிருக்கின்றன. முன்னைய நாடிய அரசு என்ற எண்ணக்கரு தொடர்பாகப் பூகோள ரீதியாக பொருண்மிய முன்னுரிமைகள் இன்று எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி மிக விரைவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது இன்று அவசியமாகியிருக்கிறது. பூகோள ரீதியிலான மூலதனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம் மாறும் தன்மை, நாடுகளின் எல்லைகளையே மாற்றியமைத்து, அரசியல் இறைமை, ஏன் சுதந்திரம் தொடர்பான எண்ணங்களுக்கே புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது. இவ்வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்களைக் கொண்டு இலக்குகள் கட்டமைக்கப்பட்டு கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களைத் துணையாகக் கொண்டும் எதிர்காலத்தில் வலுவாகக் கால் பதித்தவாறும் தமிழ் ஈழத்துக்கான தூரநோக்கு (vision) வடிவமைக்கப்பட வேண்டும். கொள்கை மூன்று: தமிழ் ஈழம் ஏன் அவசியமானது என்பதை முற்றிலும் புதிய முறையில் உலகுக்கு எடுத்துரைத்தல் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது முற்றிலும் நியாயமான ஒரு போராட்டமாகும். ஆனால் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் வெற்றிகரமாக மேற்கொண்ட தவறான பரப்புரைகளின் காரணமாக உலகம் எமது போராட்டத்தை ஒரு நியாயமான போராட்டமாகப் பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எமது போராட்டம் தொடர்பாக உலகின் பெரும் பகுதிக்கு எதுவுமே தெரியாது. இந்த விடயம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். எமது போராட்டம் பற்றிய உண்மை, முழு உலகுக்கும் சொல்லப்படும் வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் அதற்குத் தேவையான பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. தமது சொந்த எதிர்பார்ப்புகளையும் விடுதலைக்கான விருப்பையும் கடந்து தமிழ் ஈழத்துக்கான தமது போராட்டம் இன்று வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டது என்பதை ஈழத்தமிழ் மக்கள் புரிந்துகொள்வது மிக மிக அவசியமானதொன்றாகும். வெறுமனே ஒரு நாட்டின் விடுதலைக்காக மட்டும் முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல எமது போராட்டம். ஜேர்மனி நாட்டின் நாற்சிகள் (Nazi) கைக்கொண்டது போன்ற ஒரு மிக மோசமான பாசிசவாதத்துக் (Fascism) கெதிரான ஒரு போராட்டமாகும். ஒரு காலத்தில் இராஜபக்ச அரசை வெற்றிகொள்வது என்பது ஒரு சிறிய தீவுக்குள்ளே நடைபெறும் யுத்தமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த நிலை முற்றிலும் மாறி, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான ஒரு பூகோளச் சமராக இது மாறிவிட்டதுடன் மனித குலத்தையே தன்நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு போராட்டமாகவும் மாறிவிட்டது. தமிழ் ஈழம் ஈழத்தமிழ் மக்களின் இலட்சியமாக மட்டும் இனிமேல் இருக்க முடியாது. இந்தப் பூகோளப் பந்தில் இருக்கும் மனச்சான்று இருக்கின்ற ஒவ்வொரு மனிதப்பிறவியும் “இப்போது நாங்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தான்” என்று பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாறு இனிமேல் தனியே தமிழ் ஈழ மக்களின் கதையாக மட்டும் இருக்காது. அதற்கு மாறாக அது முழு மனித குலத்தினதும் கதையாகவும் மனிதகுலம் முழுவதற்கும் பொதுவாக அமையக்கூடிய விழுமியங்களுக்கான கதையாகவும் விளங்கப்போகிறது. கொள்கை நான்கு: ஏனைய சமூகங்களோடு இணைந்து பன்னாட்டுக் கூட்டுறவைக் கட்டியெழுப்புதல் இன்றைய சூழ்நிலையில் தங்களைப் போன்ற நிலையிலே இருக்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து கொள்ளாமல் எந்தவொரு குழுவோ, சமூகமோ, நாடோ தாங்கள் விரும்பியதை அடைந்துவிட முடியாது. தமக்காக மட்டுமே போராடுபவர்கள் உலகளாவிய வகையில் ஏனையோரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது. தங்களைப் போன்ற தேவைகளைக் கொண்டிருக்கின்ற ஏனைய மக்களுடன் ஒத்துணர்வுடன் (empathy) இணைந்து செயற்படுபவர்கள் நிச்சயமாக முழு உலகத்தாலும் போற்றப்படுவார்கள். ஆகவே, தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது, உலகிலே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற ஏனைய சமூகங்களுடனும் கைகோர்த்துப் போராடுவதிலேயே தங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையைக் காட்டுவதும், கட்டியெழுப்புவதும் உலகளாவிய வகையில் மட்டுமல்ல; சிறீலங்காவினுள்ளும் குறிப்பாக நீதி, அமைதி, சனநாயகம் போன்ற பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த உலகத்தைப் படைக்க விரும்புகின்ற சிங்கள மக்களையும் உள்ளடக்க வேண்டும். கொள்கை ஐந்து: புதிய எண்ணங்களை ஊக்குவித்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் சண்டைக் களத்தைப் பொறுத்தவரையில், கெரில்லாப் போராளிகள் எதற்கும் அஞ்சாதவர்கள், எதற்கும் துணிந்தவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். சண்டைக் களத்தில் வெளிப்படுத்தப்படும் இந்தப் பண்புகள் அரசியல் அரங்கிலும் அரச தந்திரச் செயற்பாடுகளிலும் கூட வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றால், வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில் முன்சார்பெண்ணங்களோ அல்லது எம்மைக் கட்டிப்போடும் பழக்கவழக்கங்களோ புதிய வழிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் எமது சிந்தனை ஆற்றலை எந்தவிதத்திலும் முடக்கிவிட நாம் அனுமதிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த நிகழ்வு, பலருக்குத் துன்பங்களைத் தந்திருந்தாலும் இந்த நெருக்கடி பல புதிய வாய்ப்புக்களைத் தந்திருப்பதையும் மறுத்துரைக்க முடியாது. ஒரு புதிய நாட்டை மட்டுமல்ல உலகம் அலட்சியம் செய்ய முடியாத வகையில் முற்றிலும் ஒரு புதிய வகையான நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இது தந்திருக்கிறது. உலகெங்கும் பரந்து வாழுகின்ற புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் ஏற்கனவே ஒரு நாடாக (ஒரு தேசமாக) இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது. அரசு அல்லது நிலப்பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்துகின்ற முன்னைய எண்ணக்கருவைப் போலன்றிச், சமகாலச் சிந்தனைகளுக்கு ஏற்ப ஓர் புதிய நாடாக இருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழ் மக்களும், தமக்கு எதிரான, தம்மை அடக்கியாளும் எண்ணங்களைக் கொண்ட சக்திகளின் நடுவில் தற்போது அகப்பட்டிருக்கின்ற போதிலும், இந்த நாடு முன்னரைவிட அளவில் எவ்வளவோ பெரிதாகவும் அறிவிலும் ஆற்றலிலும் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் ஒரு மக்களினத்தைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கின்றது என்ற உண்மை உணரப்பட வேண்டும். எதிர்காலத்திலே உருவாகப் போகின்ற ஒரு நாடாக மட்டும் தமிழ் ஈழத்தை நாம் கண்ணோக்க முடியாது. அந்த நாடு ஏற்கனவே உருவாகி விட்டது என்பது மட்டுமன்றி, பூகோளப்பரப்பில் இந்த நாடு தனக்கென்று தனித்துவமான எண்ணத்தை வடிவமைத்து, அந்த எண்ணத்தை உரக்கச் சொல்லத் தொடங்கி விட்டது. உண்மையாகச் சொல்வதாயின், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாம் கொண்டிருக்கின்ற ஆற்றலை முதலில் தெளிவாக இனங்காண வேண்டும். அப்படியாக அந்த ஆற்றல் இனங்காணப்படும் பொழுது, உலகமும் அதனை அங்கீகரிக்கும் நேரம் உருவாகும். பாரம்பரியக் கட்டமைப்புகளுக்குள்ளே மட்டும் நின்று சிந்திப்பதை விடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து பன்னாட்டு அரசதந்திரம் (global diplomacy), குடியுரிமை, சனநாயகம் போன்ற அனைத்து விடயங்களிலும், துணிந்து, புதிய எண்ணக்கருக்களைப் வடிவமைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுப்பதே தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சவால் எனக் கொள்ளலாம். கொள்கை ஆறு: அரசாங்கம் போலவே செயற்படுதல், நாடாகுதல் பல்வேறு தமிழ் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, வேறு விடயங்களில் அவர்கள் எப்படிப்பட்ட மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பொதுத் தளத்தில், ஒரு பொதுவான இலக்குக்காக அனைவரும் பணியாற்றக்கூடிய ஒரு தந்திரோபாயத்தை வகுப்பது, தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஒரே விதமாக எல்லோரையும் சிந்திக்க வைப்பது சனநாயகம் அல்ல. அதற்கு மாறாக, வேறுபாடுகளின் நடுவிலும் ஒரு பொதுவான இலக்கை அடைய அனைவரும் ஒருங்கிணைத்து உழைப்பது தான் சனநாயகம் ஆகும். சனநாயக வழிமுறைகளின் ஊடாக இவ்வாறான ஒரு ஒற்றுமையை எம்மால் காட்சிப்படுத்த முடிந்தால், அப்போது தமிழ் ஈழத்தின் காத்திரமான தன்மையை உலகமும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும். எமது தாயகத்தின் முழுமையான இறைமை இன்னும் அடையப்படாத போதிலும், தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டையும் ஒரு நாடு ஏற்கனவே உருவாகிவிட்டது போன்ற நடத்தையையும் எமது பொதுவான இலக்குகள் உள்ளடக்கியிருக்க வேண்டும். புவியியல் ரீதியாக உலகத்தின் எப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் தமிழ் ஈழத்தை இயங்க வைப்பதும், அதன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதும் தற்போது அவசியமான விடயங்களாகும். எமது ஆளுகைக்கான கட்டமைப்புகள் (structures of governance), எமது வணிகத் தொழிற்பாடுகள், எமது வங்கிகள், எமது பிள்ளைகளுக்கான பாடசாலைகள், எமது பெருநூலகங்கள், எமது பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானத்தில் உயர் வளர்ச்சியைப் பறைசாற்றும் எமது நடுவங்கள், சுகாதார நிறுவனங்கள், எமது விளையாட்டு மைதானங்கள், எமது பண்பாட்டு அரங்கங்கள் போன்றவற்றை இப்போதே கட்டியெழுப்பத் தொடங்குவோம். தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்காமல், இப்போதே நாம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ, அங்கங்கெல்லாம் எமது தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டைத் தொடங்குவோம். கொள்கை ஏழு: எம்மை எதிர்ப்பவர்களது தரத்தை விட எமது தரத்தைப் பன்மடங்கு உயர்வாகப் பேணுதல் எந்த ஒரு போராட்டத்திலும் ஒருவர் தன்னை எதிர்ப்பவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதே நேரத்தில் எதிராளிகள் செய்வதையே எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பின்பற்றுவதும் ஏற்புடைய விடயமாக இருக்க முடியாது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அணியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் தமது போராட்டத்தில் வெற்றியைச் சந்திக்கும் போது, தமது எதிராளிகளைப் போன்று மோசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது எல்லாவிதமான முன்னணி விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினதும் தார்மீக அடிப்படையாகும். பூகோள ரீதியிலான ஆதரவைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் நாடிய விடுதலைப் போராட்டத்தின் (national liberation struggle) அறநெறிமுறைகள் தொடர்பான தெளிவை தமது அணியிலுள்ளவர்களிடையே உறுதிப்படுத்துவதற்காகவும், தமது எதிராளிகளை விடவும் தரத்தில் உயர்ந்த சிந்தனை, செயற்பாடு, நடத்தை என்பவற்றைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும். இனவாத, பாசிசவாதப் பண்புகளைக் கொண்ட ஓர் எதிரிக்கு எதிராகப் போராடுகின்ற அதே நேரம், எந்தவிதத்திலும் எதிரியின் அதே கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றியை ஒருபோதும் அடைந்துவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலுமே முழு மனித குலத்தாலும் மதித்துப் போற்றப்படும் உன்னதமான விழுமியங்களைப் பேணுவதன் மூலமே இப்போராட்டத்தின் வெற்றியை நாம் எமதாக்கிக் கொள்ள முடியும். (சத்தியா சிவராமன் -டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஊடகவியலாளர் என்பதோடு ஒரு சுகாதார ஆர்வலரும் ஆவார்) https://www.ilakku.org/தமிழீழம்-என்னும்-இலக்கை/1 point- ஈழத்தமிழர் அரசியல்
1 pointசிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம் என்று கூறினால் அதுவும் பொருந்தாது. தமிழர்கள் எந்த வகையில் ஒடுக்குமுறைக்கு உட்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான எமது வீரியமும் வெளிப்படும். முன்பு சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தப்பி ஓடவேண்டியிருந்தது. திருப்பி அடிக்கவேண்டியிருந்தது. வேறு நாடுகளில் குடியேறுதல் என்ற புதிய ஒரு வளியும் பிறந்தது. (நாங்கள்) இப்போது "நீ தமிழன் " என்று பொதுமைப் படுத்தி கொல்வதில்லை. அவ்வாறு பொதுமைப் படுத்தி ஒடுக்கினால் அதற்கு ஏற்ப தமிழரும் அதை எதிர்கொள்ள முற்படுவர்கள் என்பதை அறிந்து பகுதி பகுதியாக பிரித்து நுட்பமாக ஒடுக்குமுறையை செய்கின்றார்கள். வாழ்வது, தப்பி பிழைப்பது என்ற நிலையில், சிங்களவனை அனுசரித்து வாழ்வது தாயக மக்கள். நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறி வாழ்வது நாங்கள். இந்த இரு தரப்பையும் கடந்து எமக்கென்று ஒரு நாட்டில் சுதந்திரமாக வாழ்வது என்ற மூன்றாவது நிலையில் தான் தமிழ்த்தேசீயம் வருகின்றது. இந்த மூன்றாவது தரப்பில் தற்போது ஒருவரும் இல்லை. இருக்கிற இரு தரப்பும் தான் இந்த மூன்றாவது தரப்புக்கு நகரவேண்டும். ஏன் நகரவேண்டும் ? ஆசை விருப்பங்களை கடந்து மூன்றாம் நிலைக்கு நகரவேண்டிய தேவை என்ன ? எனக்கு புலம்பெயர் நாட்டில் எல்லாம் ஒகே யா போகுது. தாயகத்தில இருக்கிற என்னுடைய உறவுகள் போராட்ட காலத்தில் கமம் செய்ய படு சிரமம் பட்டது போலன்றி இப்போது இலகுவாக கமம் செய்து வருமானம் ஈட்டக் கூடியவாறு உள்ளது. உரம் மருந்து மின்சாரம் பிரச்சனையில்லை. மூன்றாம் நிலைக்கு போகவேண்டிய தேவையின் அழுத்தம் இல்லை. தேவை தான் பிரதான உந்து சக்தி. கஸ்டம் வந்தால் கடவுளை அதிகம் நாடுவதுபோல தேவை ஏற்படில்தான் தேசீயமும். தேசீயம், இனம், சுதந்திரம் என்ற பொது உணர்வுத் தன்மைகளுக்கு உள்ளே இருப்பது " யாரும் எம்மை கொன்று விடக் கூடாது, நாம் இருந்த இடத்தை வீட்டை காணி நிலங்களை பறித்துவிடக் கூடாது. பட்டிணியால் சாகக் கூடாது".இப்படியான பிரச்சனைகள் தான் உள்ளே இருப்பது. வாழ்க்கைப் போரட்டம் தான் முதலில் பின்னரே எமது அடயாளங்கள் " இப்போது இந்த பொதுத் தன்மைகளுக்கு உள்ளே உள்ள பிரச்சனைகளுக்குள் சிங்கள ஒடுக்கு முறை றால் போட்டு சுறா பிடிக்கும் பொறிமுறையோடு வந்துவிட்டது. இந்த சிக்கலான நிலையை நாம் வெளியில் இருந்து பார்க்கும் போது சிங்களவருடன் சேர்ந்து வாழ விரும்புவது போல தோற்றமளிக்கலாம். கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் இதுவே வாழ்வாகிவிடும் என்பதும் உண்மையே. தேவை என்ற அடிப்படையில் காணாமல்போகடிக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் அவர்களுக்கான நீதியை கேட்கும் தேவை இருக்கின்றது. சொந்த நிலங்களுக்கு திரும்வேண்டிய தேவை இருக்கின்றது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுபடவேண்டிய தேவை இருக்கின்றது. இப்டி ஏராளமான தேவைகள் இருக்கின்றது. ஊரில் இழவு விழுந்தால் எட்டு செலவு வரைக்கும் அருகில் உள்ளவர்கள் சாப்பாடு கொடுப்பார்கள், இழவு விழுந்த வீட்டை மீட்பது எமது குணத்தோடு சேர்ந்து இருக்கின்றது. அறம சார்ந்த அந்த பண்பு போல் தேவைகள் உள்ளவர்களோடு இந்த இரு தரப்பும் இணைந்துகொள்ளவேணும். அதுவே அறம். அறம் சார்ந்த ஒரு வாழ்வுக்கு நாம் மாறும்போது தேசீயம் புத்துயிர் பெறும். 40 ஆயிரத்துக்கும் மேலாக மடிந்த போராளிகள் முரண்பாடுகளால் நிறைந்த இந்த இனத்தில் அவற்றை எல்லாம் கடந்த அறத்தின் அடயாளம் தான். சிறந்த ஒரு அணுகுமுறையாக இது இருக்கும். இவ்வாறான முனைகளை இனம்கண்டு ஆதரவளிப்பது, தொடர்புளை பரந்து பட்டு ஏற்படுத்துவதுதான் இப்போது முட்டு சந்தில் நிற்பதுபோல் நிற்கும் நிலைக்கு புதிய வளிகள் ஏற்படுதும். சரியான தலமை இல்லை என்று புலம்புவதோ எதோ ஒரு காலத்தில் தலமை உருவாகும் என்று காத்திருப்பதோ அர்த்தமற்றது. இவ்வாறான முனைகளுக்கான ஆதரவுதான் வளிநடத்தும் தலமைகள் உருவாகும் சூழலை ஏற்படுத்தும்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- ஈழத்தமிழர் அரசியல்