Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    21
    Points
    87993
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    38771
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    14
    Points
    15791
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/04/22 in all areas

  1. சமூகத்தின்... நான்கு தூண்கள். 🤣 1) டாக்டர். 😅 2) என்ஜினியர். 😛 3) ரீச்சர். 😁 4) அட்வகேட். 😂
  2. சரித்திரம் - 2 சிறுவயதினில் இவனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி பாசத்தை பொழிந்த இவனது மாமியே இன்று இவனை நடத்தும் முறை அவனது மனதை பிழிந்தது. குளித்து முடிக்கமுன் பிரதான நீர்க்குழாயை மூடுவதும், இரவு 10 மணிக்குப்பின் இவனது அறைக்குரிய சுற்றுடைப்பானை அணைத்துவிடுவதும் இப்படி இவன் அனுபவிக்கும் கொடுமைகளை மனது அசைபோட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இந்த சனியன் எப்போது இங்கேயிருந்து வெளியேறுமோ" என்று இவன் காது படவே பேசிக்கொண்டது இவனால் தாங்கமுடியாத சம்பவமாகி அது ஒரு வடுவாகவே பதிந்தும் விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இனி இந்த இடத்திலிருந்து வெளியேறுவதே நல்லது நமது குறைந்த பட்ச மரியாதையையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்று முடிவெடுத்ததன் வெளிப்பாடே இந்த தேடல். ஒருவாரியாக இன்றைய இலத்திரனியல் நேரத்தாளினை பூர்த்திசெய்தாகிவிட்டது, இனி மென்பொருள் ஒருங்கிணைப்பு சோதனையாளர் அவரது வழு கண்டுப்பிடிப்புகளை பதிவேற்றும் வரை அவனுக்கு சிறு நிம்மதி வேலையில் மூழ்கியிருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான் கடிகார முள் மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. தனது கணனி மேசையிருந்து விடுபட்டு அவனது மேலாளரின் அறையின் கதவினை தட்டினான். வரலாம் என்ற ஆங்கில உச்சரிப்பு கதவின் சாரளம் ஊடே வரவும் திறந்து கொண்டு உள்ளே சென்றான். "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்ற மெதுவான வார்த்தையை கேட்ட அவனது மேலாளர் கணணிக்குள் புதைத்திருந்த தலையை விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து பார்வையினாலேயே அவனை அளந்தார். சேர் ஒரு வன் அவர் பெர்மிசன் வேணும், புது ரூம் ரெண்டுக்கு பார்க்கிறேன் 5 மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்த மேலாளர் "ஹவ் அபௌட் தி டாஸ்க் லிஸ்ட்" என்று வரவேண்டிய இடத்திற்கு தயக்கமே இல்லாமல் பாய்ந்தார். அவனும் அதுதானே பயலாவது கேட்டவுடன் தூக்கி கொடுப்பதாவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே "ஐ ஹாவ் கொம்பிலீட்டட் இட் அண்ட் ரிலீஸ்ட் போர் கியூ ஏ டெஸ்டிங்: என்று முடித்தான். திருப்தியுடன் தலையை ஆட்டிய மேலாளர் "ஓகே யு கேன் டேக் தி பிரேக்" என்று முடித்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராமல் கணனியினுள் மீண்டும் தலையை புதைத்தார். "தங் யூ சேர்" என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்த அவன் ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கி கையை நீட்டினான் தலையை வெளியே நீட்டிய சாரதி சேர் எங்க போகவேணும் என்று சிங்களத்தில் கேட்கவும். தெஹிவளை மேம்பாலம் அருகில் என்று முடித்தான் . சாரதி "சேர் மீட்டர் போடல ஒரு 300 ரூபாய் கொடுங்க" என்று அவன் தலையை சொறியவும், 300 அதிகம் 250 தாறன் ஆனால் இவ்வளவு விரைவாக கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக போகவேண்டும் என்று இவன் சொல்லவும். ஏறுங்கோ சேர் என்று சிரித்துக்கொண்டே முச்சக்கரவண்டியின் இக்னிஷியனை உசுப்பினான், சற்றைக்கெல்லாம் டுப்ளிகேஷன் தெருவில் முச்சக்கரவண்டி சீறத்தொடங்கியது. பாம்பு போவதுபோல வளைந்து நெளிந்து முச்சக்கரவண்டி எடுத்த வேகத்தில் எதற்க்காக இவனிடம் வேகமாக செல்லச் சொன்னோமோ ..? பாவி நமக்கே பால் ஊத்திவிடுவான் போல என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் அவன். நேரம் 4:50 காலிவீதி போக்குவரத்து நெரிசலை முச்சக்கரவண்டியின் வேகத்தில் லாவகமாக கடந்து நெருங்கியிருந்தான் அவன். இன்னும் மார்க்கஸை காணோம் சரி கொஞ்சம் பொறுக்கலாம் என்று நினைத்த மாத்திரத்தில் கைபேசி கிறுகிறுத்தது மார்க்கஸிடமிருந்து ஒரு குறுந்தகவல், வந்துகொண்டேயிருக்கிறேன் இன்னும் 5 நிமிடத்தில் நெருங்கிவிடுவேன் என்று இருந்தது. சரியாக சொன்ன நேரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளிப்பட்டான் மார்க்கஸ், கையை அசைத்தவாறே நெருங்கியவன் "என்ன மச்சி ரெடியா வா போகலாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இரண்டு அறைகளில் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறதாம், ஒன்று முதலாம் மாடியிலும் மற்றயது அதே தளத்திலும் தான் இருக்கிறதாம். இரண்டிலும் ஒவ்வொரொருவர் வீதம் இருப்பதால் நீ சேர்ந்துதான் தங்கவேண்டும் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான். இவனோ தனது நிலையை முழுவதுமாக மார்க்கசிடம் சொல்லவில்லையென்பதால் மார்க்கசும் பயல் எதற்கும் தயார் என்பதை அறியவில்லை. சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை மச்சி என்று சொல்லிவிட்டு இன்னுமோர் முச்சக்கரவண்டியை இடை மறித்து மார்க்கசுடன் அதில் ஏறிக்கொண்டான் முகவரியை முச்சக்கரவண்டி சாரதியிடம் சொல்லவும் அவனும் கல்கிஸ்ஸை பக்கம் முச்சக்கரவண்டியை விரட்டத்தொடங்கினான், சரியாக ஒரு 15 நிமிட பயணத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக கடற்கரையை அண்டியாதாக ஒரு பெரிய கட்டிடம் தெரியத்தொடங்கியது, மார்க்கஸ் இவனை உசுப்பி அந்த கட்டிடத்தை காட்டினான். கொஞ்சம் வெளிறிப்போய் அழுக்குப்படிந்திருந்த அந்த கட்டிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பழைய கட்டிடம் என்று மிக இலகுவாக வெளிக்காட்டிக்கொண்டது. கட்டிடத்தின் முன்னே இறங்கிய இருவரும் இறங்கவும் காவலாளி வெளிப்படவும் சரியாக இருந்தது, நாணயத்தாள்களை எண்ணி இவன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கொடுத்துக்கொண்டிருக்க மார்க்ஸோ காவலாளியுடன் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். சரியாக இவன் திரும்ப மார்கசோ உரிமையாளர் உள்ளே தான் இருக்கிறாராம் முதலாம் மாடியில் ஏறி போகட்டுமாம் என்று கையை வாயிலை நோக்கிகாட்டினான். காவலாளியும் ஒரு முறைப்புடன் இருவரையும் ஏறியிறங்க பார்த்துக்கொண்டே கதவை திறந்து விட இருவரும் உள்நுழைந்தனர் ....(தொடரும்)
  3. மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக.. நேற்று முன்தினம் போராட்டம் நடந்த இடத்தை பார்வையிடும் மகிந்தவும், நாமலும். நிலத்தில்... எவ்வளவு கல் உள்ளது என்று பாருங்கள். இரண்டு பேரினதும்... சிவப்பு சால்வையை காணவில்லை. அது, ராசி இல்லை என்று நினைத்தார்களோ. 😎
  4. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  5. கோவில்களில் திருவிழாக்கள் முடிந்ததும் சிலர் அடுத்தடுத்த நாள்களில் இப்படித் தான் தொலைத்த சாமான் தேடுவது போல தேடுவார்கள். அப்படி தேடும்போது என்ன தான் தேடுகிறீர்கள் என்றால் நிறைய சில்லறைகள் சிலவேளைகளில் குழந்தைகளின் தோடு மோதிரம் இப்படியும் அம்புடும் என்றார்கள். இவர்கள் தேடுவதைப் பார்த்தாலும் எனக்கு ஏனோ அந்த நினைப்புத் தான் வருது.
  6. குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும்........! 🌹
  7. இந்த.. "பெட்ஷீற்" எப்படி இருக்கு?
  8. 1989 ஆண்டு, எனக்கு அப்பொழுது 17 வயது நான் சாதரணதரம் எடுத்து விட்டு இருந்த காலம். ஒரு மருந்தாளராக வரும் ஆர்வம் என்னிடமிருந்தது. மேலும் குடும்பத்தின் வறுமை நிமித்தமாக கொழும்பில் ஒரு பிரதான வீதியில் அமைந்துள்ள அந்த தனியார் கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சிறிய கிளினிக்கில் என்னுடன் சேர்த்து நாங்கள் நான்கு பேர் வேலை செய்தோம். இரண்டு நர்ஸ், ஒர் டாக்டர். ஒரு நர்ஸ் நடிகை சரிதா போல் இருப்பர். மற்றவர் இளமைகாலங்கள் பட நடிகை சசிக‌லா போல் இருப்பார். காலை 8 மணிக்கு திறக்கும் இந்த சிறிய க்ளினிக் மதியம் 1 மணிவரை பின்பு 3 மணிமுதல் இரவு 9 மணிவரை. இப்பொழுது நான் செய்யும் தொழில் கணனியில் முன் உட்கார்ந்து வேலை செய்வது அது ஒரு இயந்திரம் மனித உணர்வுகளை வெளிப்ப்டுத்தாது. மனிதர்களை தொட்டு வேலை செய்யும் போது கிடக்கும் திருப்தி அலதியானது. காலபோக்கில் இங்கு நான் வேலை செய்து பழகியதில் ஒரு சிற‌ந்த நான் மருந்து கட்டுபவராக மாறினேன். பல்வேறு காயங்களை கண்டுளேன். சில வெட்டுக்காயங்களாக இருக்கும், சில எரிகாயம் இதற்கு நெட் போன்ற ஒரு களிம்பை வைத்து திறந்து காற்றுப்பட வேண்டும். சிலர் அடிபட்டு வீக்கத்துடன் வருவார்கள், சிலர் விளையடும் போது காயம் ஏற்பட்டு வருவார்கள். சிலர் விபத்தில் அடிபட்டு தோல் உரிந்து வருவார்கள், சிலரோ கை / கால் சுளுக்க்கி / மூட்டு விலகி வருவார்கள் இன்னும் சிலர் கற‌ல் பிடித்த தகரம் வெட்டி / ஆணி குத்தி இரத்தத்துடன் வருவார்கள். இவர்களுக்கு டெட்னஸ் ஊசி அடிக்கப்படும். இவர்களுடன் அன்பாக பேசிக்கொண்டே வலி தெரியாமல் நான் மருந்து போடுவேன். கத்திரி கோலால் பஞ்சை பிடித்து ஸ்பிரிட்டில் முக்கி எடுத்து இலேசாக துடைப்பேன் சீழ் வெண்ணிறத்தில் பொங்கி வரும், வலியாலும் / வேதனையினாலும் துடிப்பார்கள். பின்பு புண்ணிற்க்கு ஏற்ப களிம்பு அல்லது பவுடர் போட்டுவிட்டு,பிளாஸ்டர் அல்லது பன்டேஞ் கட்டப்படும். ஆண் பெண் சிறுவர்கள் என பலருக்கு நான் மருந்திட்டுள்ளேன். விசேடமாக நீரிழிவு நோயளிகளுக்கு புண்கள் ஆறாது. ஒருவித தூர் நாற்றம் அடிக்கும். பல்லை கடித்து கொண்டு பொறுமையாக போடுவேன் . 15 வயது மீன் விற்கும் சிறுமியும் என்னிடம் வந்து மருந்து போடுவாள். மீன் நாற்றம் இவள் கூடவே வரும். இவள் வந்தால் மீனம்மா வருகின்றாள் என பட்டப்பெயரால் அழைப்போம். நர்சும் உதோ உன் ஆள் வந்து விட்டள் போய் போய் களிம்பை தடவி மருந்தை கட்டு என கூறி சிரிப்பார்கள். அதே நேரத்தில் பக்கத்தில் உள்ள மினி தியெட்டரில் இருந்த்து மீனம்மா..மீனம்மா கண்கள் மீனம்மா, தேனம்மா தேனம்மா என பாடல் ஒடும் எனக்கோ மிகவும் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் வியாழக்கிழமை மதியம் 6:30 அளவில். பக்கத்தில் இருந்த கத்தோலிக்க தேவாலய ஒலிப்பெருக்கியில் திருப்பலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. "அண்டவர் உங்களோடு இருப்பராக என பாதர் சொல்ல உமது ஆன்மாவோடும் இருப்பாரக என சனம் பதிலுரைத்தது". அப்பொழுது அவர் உள்வந்தார் ஒர் 27 அல்லது 28 வயதிருக்கும். கருத்த நிறம், மெலிந்த தேகம். போதைவஸ்துவிற்கு அடிமையான ஒருவருரின் கண்கள் போல் காணப்பட்ட்டது. டாக்ட‌ரிடம் போய்வந்த பிறகு, மருந்து கட்ட என்னிடம் வந்தார். புறங்கை பக்கம், காலில் காயங்கள் இருந்தன. காயம் சிறிது வித்தியாசமாக காணப்பட்டது. ஆறாமல் நீண்டகாலமாக‌ இருக்கின்றது. நான் பேச்சை கொடுத்தவாரே காயங்களை டெட்டோலினால் துடைத்தேன். முகத்தில் எந்த வித சலனமும் இல்லை. குத்திட்ட‌ பார்வை. இவனுக்கு வலிக்கவேயில்ல்லையா.. பெயரும் சொல்கின்றார் இல்லை.. எந்த ஊர் என்றும் சொல்கின்றான் இல்லை. இப்படி போதை வஸ்துவுக்கு அடிமைகியுள்ளானே என நினத்த்துக்கொண்டேன். வராத்தில் இரண்டு முறை வருவார். வருமுன் அவரை குளித்து விட்டு, காயத்தை கழுவி சுத்தப்படுத்தி விட்டு வரச்சொன்னேன். சில வார்ங்களின் பின் அவருடைய ஒரளவு குணமடைய தொடங்கியது. அனாலும் இவர் ஏன் சகஜாமாக பேசாமாட்டேன் என்கின்றார் என தெரியவில்லை. சில வாரங்கள் இப்படி ஓடியது. கடைசி நாள் நான் அவரது காயத்தை கழுவிவிட்டு, இப்பொழுது காயம் ஆறிவிட்டது இனி மருந்து போட தேவையில்லை இதுவே கடைசி நாள் என்றேன். உங்களை பற்றி எதுவுமே சொல்லவில்லையே என கேட்டு சிரித்தேன். கூர்ந்து பார்த்தார் என்கைகளை பற்றிக்கொண்டார். கண்ணீல் இருந்து கண்ணீர் ஆறாக வழிந்தது, ஆழ அரம்பித்துவிட்டார். தம்பீ நான் யாழ்பாணத்தில் வீட்டில் இருக்கயில் ஆமி எங்கள் குடும்பத்தை சித்திரவதை செய்தது. எனது இரண்டு அக்காமர்களை ஆமி என் கண் முன்னால் கதற‌ கதற‌ அடித்து, துன்புறுத்தி வன்புனர்வு செய்தது. எங்கள் குடும்பத்தை கடுமையாக சித்திரவதை செய்தார்கள். அவர்களில் சில தமிழர்களும் இருந்தார்கள். என்னையும் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். சேர்டை திறந்து உடலில் பல்வேறு பாகங்களை காட்டினார். உடல் நிறைய தழும்புகள் காணப்பட்டன. அதை பார்த்து நான் அதிர்ந்து போய் விட்டேன். பலவீனமான அவரது உடல் நடுங்கியது. அவரது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தினேன். (இக்காலப்பகுதியில் இந்திய ராணுவம் இலங்கையில் களமிரக்கப்ட்டிருந்தது) மேலும் அவர் கூறினார் "நான் இங்குதான் அருகிளுள்ள லொட்சில் தங்கியுள்ளேன், ஒருவாறு நான் தப்பி வந்துவிட்டேன். வெளிநாடு போவதற்காக இங்கு வந்துள்ளேன். இன்னும் சில நாட்களில் நாட்டை விட்டு போய்விடுவேன் என்றார்". என்கையில் சில ரூபாய் நோட்டுக்களை வைத்து அழுத்தினார். அப்போது வேண்டாம் என மறுக்கவில்லை ஏற்றுக்கொண்டேன். அந்த வறுமையான காலப்பகுதில் அது எனக்கு டியுஸன் பீஸ் கட்ட தேவைப்ப்ட்டது. ட்ரெஸ்ஸிங் ரூம் திரை போட்டு மறைக்கப்ப்ட்டிருந்தபடியால் இருட்டில் எங்கள் உரையாடலை யாரும் கவனிக்கவில்லை. அவரை ஆசுவசப்ப்டுத்தி தன்னம்பிக்கையூட்ட்டினேன். இப்பொழுது உற்சாகத்துடன் எழுந்தார் ட்ரெஸ்ஸிங் ரூம் திரையை தூக்கினேன் அறையினுள் வெளிச்சம் வந்தது. என மனதிலும் ஓர் வெளிச்சம் பரவியது. கொழும்பன் ‍ அனுபவம்-1
  9. இந்திய ராணுவம் இலங்கையில் தரை இறங்கியது! சரத் பொன்சேகா ராணுவ புரட்சி?.. - Sri Lanka Crisis | India 7:19இல் ... "இந்தியா தீடீரென தனது கமாண்டோ போஸ் எனப்படும் ..... அதிரடிப்படை ....... 180 பேரை அங்கு கொண்டு சென்று தரையிறக்கியுள்ளது" @தமிழ் சிறி நீங்கள் போட்டதில பாதியையும் நான் போட்டதில பாதியையும் கலந்து கைகால் மூக்கு வைத்து இஞ்ச நடக்குது 😂😂. இவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள்.🤦‍♂️ அடியா சக்கை! 🤣🤣🤣🤦‍♂️
  10. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் கவினா வோடு ஒரே பள்ளிக் கூ டத்தில் படிப்பவர்கள். கவினா ஒற்றைப் பெண் குழந்தையாதலால் இவர்களுடனே பள்ளிக்கு செல்வாள். மாணிக்கத்தின் மூத்தமகன் கிருபாகரன் இவளை விட மூன்று வயது கூடியவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். கவிதா கணக்கில் படு மக்கு . பாடம் சொல்லிக் கொடுக்க வேலப்பன் மூலம் கவினா வின் தாய் செய்தி சொல்லி அனுப்பி, அவனும் பாடம் சொல்லிக் கொடுக்க முன் வந்தான். அந்த வருடம் கவினா கணக்கு பாடத்தில் நல்ல புள்ளிகள் பெற்றாள் . ஆசிரியரின் பாராட்டும் பெற்றாள் .அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு முக்கியமான வருடம். தொடர்ந்தும் கணக்கில் முன்னேறினால் தான் உயர்தரம் விஞ்ஞானம் பிரிவில் படிக்க முடியும். தொடர்ந்தும் கிருபன் வந்து பாடம் எடுக்க ஒழுங்கு செய்தனர். அந்த சிறு பண உதவி அவனுக்கு பஸ் போக்குவரத்து போன்ற செலவுக்கு உதவியது . பத்தாம் வகுப்பு இறுதி பரீடசையும் வந்தது ...கவனமாக படிக்க வேண்டும் என இடைக்கிடை கிருபன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது தாயார் வந்து போவார்.சில சமயம் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறுவாள். பரீடசை முடித்து . நல்ல பெறுபேறு கிடைத்தது . கணித்துக்கு டி.. சித்தியும் மற்றும் 4சீ 3 எஸ் .எடுத்தாள் . அவர்கள் உயர்கல்விக்கு எங்கே சேர்ப்பது என் யோசித்து கொண்டு இருந்தார்கள். கவினா வுக்கு கிருபன் வீட்டுக்கு வராதது பெரும் ஏக்கமாக எதோ ஒன்றை இழந்தவள் போல இருந்தாதாள் . வழக்கம்போல அவ்வூர் கோவில் திருவிழா காலம் வரவே ..பெற்றோருடன் சென்றவள் ,கிருபனிடம் தான் அவனை விரும்புவதாக யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றைக் கொடுத் தாள். மறு நாள் பதிலாக அவன் உங்கள் வீட்டு நிலைமையும். எங்களுக்கும் சரிவராது . நாங்கள் நட் ப்பாகவே இருப்போம் என்றான். காலம் மெல்ல நகர்ந்து சென்றது கிருபன் கல்லூரி முடித்து ஒரு வேலை யில் சேர்ந்தான் . அதற்காக தினமும் பஸ் பயணம் செல்வதுண்டு . கவினா வும் உயர் கல்விக்காக பஸ் வண்டியில் செல்ல விரும்பி வீட்டில் கார் வசதி இருந்தாலும் சாக்கு போக்கு சொல்லி கிருபனை காண்பதற்காகவே பஸ் இல் பாடசாலைக்கு சென்று விடுவாள். ஆனாலும் கிருபன் இல்லாத வாழ்க்கையை கற்பனை பண்ண முடியவில்லை . அவன் நினைவாகவே இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு உன் பதில் என்ன? என்றாள்" .அவனும் இளைஞன் தானே ...இருவரும் காதலின் சங்கீதம் பாட ஆரம்பித்தனர். சில நாடகள் சென்றன கவினா வின் போக்கில் சில மாறுதலைக் கண்டு கண்டித்தார். தாயார் . அப்படி ஏதுமில்லை என்று சாதித்தாள் கணவனிடம் கூறிய போது பெண் பிள்ளைக்கு படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் . கலியாணத்தை கட்டி வைப்போம் என்கிறார். இதை மெதுவாக பேச்சு வாக்கில் சொன்னாள் தாயார் . அதற்கு அவள் "நான் சின்ன வயசிலே இருந்து அவனைத் தான் என் மனதில் நினைத்து இருக்கிறேன் எனவே வேறு எதற்கும் சம்மதிக்க மாடடேன்" என்றாள் . மகளின் பிடிவாதத்தை எண்ணியவாறு ...ஒரு நாள் கிருபனை தன்னை வந்து சந்திக்கும்படி வீட்டுக்கு அழைத்தார்கள் . அவனும் எதோ நடக்க போகிறது . என் எண்ணியவாறு அங்கு சென்றான். அவனைக் கண்டதும் கதிரையில் உடகாரும் என்றார். கேள்வி க்கணைகளாக தொடுத்தார் ... "உமக்கு என்ன வருமானம் இருக்கிறது? ".." என் பிள்ளையை எப்படி காப்பாற்று வீர்? .". என் பணத்தின் மீது ஆசை இருந்தால் ஏதாவது , பிச்சை போடுகிறேன் எடுத்து கொண்டு சென்று விடும் " .... உமக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை எப்படி கரை சேர்ப்பீர் ? . இதெல்லாம் சரிவராது ..உமது வேலையைப்பாரும் ..உமது பெற்றோருக்கு ஒரு நல்ல நிலையை அமைத்து கொடும். என்று அதட்டியவாறே மகள் கவிதாவை அழைத்தார். அவளும் பயத்துடன் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் அவன் மறுத்து விடடான். அவ்வளவு நேரமும் பொறுமையாக , எல்லாவற்றையும் பொறுமையாக கேடடான் . எந்த வித பிரச்சினை வந்தாலும் நான் உன்னைக் கைவிடேன் என்றவள் மெளனமானாள் . நீ யாருடா? என்பதுபோல் பார்த்தாள் . நா நுனி வரை உங்கள் மகள் தான் என்னை பின்னும் முன்னும் துரத்தி காதலித்தாள் . என்னோடு பார்க்கில் வந்து சந்திப்பாள் முதலில் உங்கள் மகளை எச்சரியுங்கள் என்று சொல்ல நினைத்து மெளனமானான் . சரி நீர் போகலாம்" என்றதும் திருப்பியும் பாராமல் வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவே கொழும்புக்கு ..நேர்முக தேர்வு இருப்பதாக சொல்லி , செல்ல ஆயத்த மானான். விடிந்ததும் தனக்கான ஆடைகளை யும் முக்கிய பொருட்களை யம் எடுத்துக் கொண்டு முதல் ரயில் வண்டியில் பயணமானான் . தன்னுடன் ப டித்த ஒரே ஒரு நண்பனை நம்பி, ...கொழும்பை அடைந்ததும் நண்பனைத் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு ...வந்து அவனது தந்தையின் அனுமதியுடன் ...அவர்களது தென்னந்தோப்பில் தொழிலாளி யாக சேர்ந்தான். இயந்திரத்தில் தேங்காய் மடடையை தும்பாக்கி கயிறு தயாரிப்பது ...கால் விரிப்பு ..மெத்தை போன்ற பொருட்களை தயாரிப்பது என்று, எல்லாத தொழில்களையும் கற்று தனது நேர்மையாலும் கடும் உழைப்பினாலும் நண்பனின் தந்தைக்கு அடுத்த முதலாளியாக இருந்தான். நண்பனுக்கு வெளி நாட்டு ஆசை வரவே ..தந்தை படிக்க லண்டனுக்கு அனுப்பி விடடார் . நண்பனின் குடும்பத்தில் அவனும் ஒருவனாக வாழ்ந்தான். நண்பனின் தங்கை திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார் . அக்காலத்தில் அவனுக்கு கீழே நாற்பது பேர் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகாரியானான். முதலாளிக்கு அடுத்த படியாக அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வேலையைப்பிரித்து கொடுப்பது போன்ற ஒரு சின்ன முதலாளியாக வலம் வந்தான். அவனது நேர்மை ஓயாத உழைப்பு நாணயம் வேலையாட்களிடம் பண்பாக வேலை வாங்குவது, என்பவை அவருக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணங்கள் . அவர்க ளின் பொருட்களை தொகையாக வாங்கி விற்கும் வாடிக்கையாளர்களை இவனுக்கும் நண்பராக் கினான். ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் நாங்களே ஒரு உற்பத்தி பொருட்களை விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என அறிவுரை கேடடான் . அதற்கும் அவர் எனக்கும் வயதாகிறது . ஒரே ஒரு மகனும் லண்ட னில் படிக்குபோது நட் ப்பான பிள்ளையைக் கட்டி விடடான் . ஒரு தொகைப்பணம் தருகிறேன் நீரே அதை முதலீட்டு உம்மிடம் காசு உள்ள போது திருப்பி தாரும் என்று சொன்னார். கிருபனின் நாணயம், விடாமுயற்சி தொழில் பற்று, நுட்பம் .வேலையாட்கள் இடம் பழகும் விதம் என்பன அவனை மேலுயர்த்தியது. இரண்டு பெரிய ஸ்டோர் களுக்கு அதிபதியானான். வெளிநாடடவர் சுற்றுலாவில் வரும் போது இவனின் பொருட்களை விரும்பி வாங்கவும் , தென்னையின் ஒவ்வொரு பகுதியும் செதுக்க பட்டு வடிவமைத்து விற்பனை .பொருளாயின. தனது தாய் தந்தையின் வீடடை ஒரு அழகான வீடாக்கினான். ..தங்கைகளுக்கு திருமணம் என எல்லாக் கடமையும் முடித்து ..சற்று தன்னை எண்ணி பார்த்தான் . வயதும் 35 ஐ தாண்டி ண்டி விட்ட்து. கவினா குடும்பத்தின் பணத்திமிர்த்தனம் கண் முன்னே வந்தது . தான் பாவிக்கும் வாகனத்தை விட அழகான இன்னொரு காரை வாங்கி கொண்டு , தன் கிராமத்து நோக்கி பயணமானான் . மீண்டும் கொழும்புக்கு தன் தாய் தந்தையை தன்னோடு தலைநகருக்கு கூட்டி வர நினைத்து சென்றான். நீண்ட பயணத்தில் கவினா அவர்களது வீட்டில் தனக்கு நடத்த அவமரியாதையை எண்ணினான். உனது நிலையை உயர்த்தியப்பின், உன் கடமைகள் முடிந்த பின் , பெண் தருகிறோம் என்றாவது ஒரு நம்பிக்கையை தரவில்லை . எவ்வ ளவு இழிவாக பேசி னர்கள். காலம் உருண்டோடியது . கவினா வும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாக கேள்விபட்டுருந்தான். கணவன் ஒரு புடவைக்கடை,உரிமையாளராக இருந்தான். மார்கழி மாதத்து இளம் மழைத்துளிகள் ஆரம்பித்த ஒரு நாளில் வந்திறங்கினான் ஊருக்கு . தாய் தந்தையரை அழைத்து கொண்டு ஒரு வாரத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டுக்கு கூ ட்டிச் சென்று குடிபுக நினைத்து அழைத்து வர எல்லா ஏ ற்பாடுகளுடனும் வந்து இருந்தான். பயண களைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவனை ,தயார் தேநீருடன் உறக்கம் கலைத்தாள். அவர் தமது ஊர் கோவிலில் அவனுக்காக நேர்த்தி வை த்தாகவும் அதை அவனைக் கொண்டு செலுத்துவதாக வேண்டி இருந்த்தாவும் கூறி கோவிலுக்கு சென்றார்கள் . அருகே கிராமத்து சிறுவர்கள் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்க்க வென்று கூடடமாய் வந்தார்கள். மதிய வேளை க்கு அண்மித்த நேரம் சூரியன் தன் கொடும் கதிர்களால் அனல் வீசிக் கொண்ட பொழுதில் அவ்வழியே தாயுடன் கவினா இரண்டவது குழந்தைக்கு தடுப்பூசி போடச் சென்று வந்து கொண்டிருந்தாள். தூரத்தே , இவனைக் கண்டதும் மலைத்து நின்றாள். அவன் இவளைக் கண்டதும் வந்து நலம் விசாரித்தான். தாயார் முன்னையை பொலிவிழந்து வயதானவராய் தோன்றினார். கொடிய வெய்யிலாக இருக்கிறது. வீடு வரை கொண்டுவந்துவிட கேட்டும் மறுத்து விடடாள். அவள் கண்கள் நீர்கோர்த்து கொண்டது. இன்னும் கொஞ்சக் காலம் இவனுக்காக காத்திருக்கலாமோ ..? என எண்ணியவாறு நடக்க தொடங்கனாள் . கடந்த காலம் அவளுக்கு திரைப் படம் பார்ப்பதுபோல் மனதில் தோன்றியது . கவினாவின் பெற்றோர்களின் வசதி வாய்ப்பு காரணமாக , வந்த தற்பெருமை , அவன் கேடட ஏளனபேச்சு அதனால் வந்த மன வைராக்கியம் தன்னை இவ்வ்ளவு தூரம் உயர வைத்திருக்கிறதே என் எண்ணிக் கொண்டே வீடு நோக்கி விரைந்தனர். அவ்னது பெற்றோர்களும் மகனின் வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் தமது மகனின் கனவு இல்லத்தை நோக்கி பயணமானார்கள். மனித வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும். சந்தர்ப்பங்கள் தான் ஒருவனை திசை திரும்புகின்றன. அந்த திசைகள் பல சமயங்களில் உயர்ச்சியையும் ஒரு சில சமயங்களில் வீழ்ச்சியையும் தருவதுண்டு. மனதில் உளி என விழும் வார்த்தைகள் தான் இலட்சியம் எனும் சிலையை செதுக்கும் கற்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பிருந்தால் என்றும் எதையும் சாதிக்கலாம்
  11. இப்படி, ஒரு ரெக்னிக்... இருக்கா? முடியல சாமீ... 🤣
  12. தனி,கொழும்பான் மற்றும் யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. யாயினி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂
  14. தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
  15. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  16. யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
  17. யாயினியிற்கும் அண்மையில் பிறம்த தினம் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
  18. உங்கடை கன நாள் புடுங்குப்பாடுகளை பாக்க எனக்கு இந்த சீன் தான் ஞாபகத்துக்கு வரும்... 😁 ரதி:- மோகன்....மோகன் மோகன்:- என்ன மோகன்? ருவன்ரிஃபோர் அவர்ஸ் எனக்கு ரபுள் குடுக்குறே எனக்கு..ஏண்டா யாழ்களத்தை ஆரம்பிச்சன் எண்டு பீல் பண்ணுறன் இப்ப...கொஞ்சம் கூட என்ரை நிலைமை தெரியாமல் கதைக்கிறியள் ரதி:- என்ன மோகன் எனக்கா உங்கடை நிலமை தெரியேல்லை????? மோகன்:- அப்ப நான் என்ன பொய்யா சொல்லுறன்? எல்லாரும் சைன் பண்ணி வாங்கோ எண்டால் ஏன் இடக்கு முடக்காய் உள்ளுக்கு வாறியள்? ஒழுங்காய் வந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காது...உங்களுக்கு சிஸ்டம் தெரியேல்லை...கண்ட கண்ட இடங்களிலை மவுசாலை அமத்துறது....பிறகு மோகன் அது வேலை செய்யேல்லை....இது வேலை செய்யேல்லை எண்டு ஒப்பாரி வைக்கிறது..... இஞ்சை வாற ஆக்கள் எல்லாம் வெறி இன்டலிஜன் ஆக்கள் மிஸ்டர் கோசான்,நாதமுனி,பெருமாள் கிருபன் போல பெரிய ஆக்கள்.....இதுக்குள்ளை அது வேலை செய்யேல்லை இது வேலை செய்யேல்லை எண்டு ஒரே ஓலம்.... அது சரி இப்ப என்ன பிரச்சனை? ரதி:- அதொண்டுமில்லை மோகன் இந்த யாழ்களத்தை என்ரை பேரிலை எழுதி விட்டியளெண்டால்....இல்லாத பிரச்சனையை தூக்கி புடிச்சுக்கொண்டு வரமாட்டன் எண்டு சொல்ல வாறன்... மோகன்:- ????????? மிச்சம் எழுதக்கூடாது🤣
  19. இது எந்த கோவில் நேர்த்திக்கடன்???

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.