Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்20Points46798Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்16Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87993Posts -
satan
கருத்துக்கள உறவுகள்7Points10104Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/21/23 in all areas
-
மனிதா உன்னைத்தான்!
5 pointsView of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.5 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
4 pointsஇன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😂4 points
-
தையல்கடை.
4 pointsதச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(8). அன்று இரவு சுமதிக்கு தூக்கமே வரவில்லை.அங்கும் இங்கும் புரண்டு புரண்டு படுக்கிறாள். அடிக்கடி எழுந்து போய் தண்ணீர் குடித்து விட்டு வருகிறாள். அவளைப் பார்க்க சுரேந்தருக்கு பாவமாய் இருக்கிறது. முன்பென்றால் இந்த நேரம் நல்ல உறக்கத்தில் இருப்பாள். --- என்னப்பா இந்தக் கடை திறந்ததில் இருந்து நீங்கள் நிம்மதியாய் உறங்கி நான் பார்க்கேல்ல. ஏன் கடையில் ஏதாவது பிரச்சனையோ. --- அதில்லையப்பா, ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களில்லை. இப்ப ஏன்தான் கடை திறந்தேன் என்று இருக்கு. --- எல்லாம் அந்த சீட்டுக்காசு வந்ததால் வந்த வினை. இனிமேல் ஒரு சீட்டும் போடவேண்டாம். கொஞ்சம் பொறுத்து, நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், இதெல்லாம் சரி செய்திடலாம், இப்ப நிம்மதியாக தூங்கும். --- கணவனின் அந்த ஆறுதல் வார்த்தை அவளுக்கு இதமாக இருக்கிறது. சுரேந்தர் லேசில் ஒண்றிலையும் தலையிடுவதில்லை. ஆனால் தலையிட்டால் மனுசன் அதில் ஒரு தீர்வு காணாமல் விடாது. மெதுவாக கொஞ்சம் எழுந்து அவன் மார்பில் தலை வைத்துப் படுக்க அவனும் தனது நீண்ட கரங்களால் அவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொள்கிறான். அன்று திங்கட்கிழமை. லா சப்பலில் கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு. சுரேந்தர் சொல்லியபடி சுமதியும் வேலைக்கு விடுமுறை போட்டிருந்தாள். இருவருமாக காலை 09:00 மணிக்கு கடைக்கு வருகிறார்கள். சற்று நேரத்தில் கடைகளுக்கு c c t v கமரா பொருத்துபவர்கள் வர இருவரும் அவர்களை கடைக்குள் அழைத்து செல்கிறார்கள்.உடனே வேலையைத் தொடங்கியவர்கள்,கடைக்கு உள்ளே வெளியே எல்லாம் கமரா பொருத்தி மேலும் சில இடங்களில் சின்னஞ்சிறிய ரகசியக் காமராக்களையும் அங்கு வேலை செய்பவர்களும் அறியாதவாறு பொருத்திவிட்டு, இவர்களது ஒவ்பீஸ் அறையில் சில சிறிய டீ .வீ களையும் பொருத்தி இருந்தார்கள். பின்பு இவர்களது போனுக்கும் போலீசுக்கும் தொடர்பு ஏற்படுத்தி விட்டு போகிறார்கள். செவ்வாய்கிழமை வழமைபோல் வேலைக்கு வந்தவர்கள் கடைக்கு வெளியேயும் உள்ளேயும் கமராக்கள் பொருத்தி இருப்பதைப் பார்த்து விட்டு அது சாதாரணமானது தானே என்று பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தத்தமது வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்கள். (1) CDD : contrat à durée déterminée = வேலை ஒப்பந்தம் முடிவடையும் காலம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் செய்யப்படும் ஒப்பந்தம். அது ஒரு மாதமோ,மூன்று மாதமோ, ஒரு வருடமோ, இரண்டு வருடமாகவும் இருக்கலாம். அந்தந்த திகதி முடிய அவர்கள் வேலையால் நிப்பாட்டுப் படுவார்கள். சில சமயம் புதுப்பிக்கப் படுவதும் உண்டு. (2) CDI : contrat à durée indéterminée.= நிரந்தரமான வேலை ஒப்பந்தம். தற்போது இவர்களின் கடையில் வேலை செய்ப்பவர்களின் காலம் மூன்று மாதங்கள். இந்த காலகட்டத்தில் முதலாளியும் அவர்களை வேளையில் இருந்து நிப்பாட்டலாம். அல்லது தொழிலாளியும் வேலை பிடிக்காதவிடத்து தாங்களே விட்டு விலகலாம். இவர்களுக்கு அந்த ஒப்பந்தகாலம் முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களே இருந்தன. சுமதியும் இது சம்பந்தமாக தனது கணக்காய்வாளருடன் ( comptabilité) கலந்தாலோசித்துதான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.என்று பலதையும் நினைத்துக் கொண்டு தனது வேலையிடத்துக்கு காரில் போகிறாள். மனதில் இதே சிந்தனை. நான் எங்கே பிழை விடுகிறேன். ஏன் என்னால் இதை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. ஒரு சிறு கடையை வைத்திருக்கும் நானே இவ்வளவு சிரமப்படுகிறேன் என்றால் ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு கடையாக பல கடை வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கும். எல்லா இடத்திலும் இருபது , முப்பது பேர் என்று சம்பளத்துக்குத்தானே ஆட்களை வைத்து நடத்துகின்றார்கள். ஒருவேளை என்னால் கடையை நடத்த முடியாமல் போய் விடுமோ. தினமும் நானும் கபிரியேலும் ஐந்து மணியில் இருந்து எட்டு மணிவரை செய்யும் வேளையில் பாதியளவு கூட பகலில் இவர்கள் செய்யவில்லையே. இதோ இந்தக் கருக்கலில் காலை 04:30 க்கு நான் வேலைக்கு போய்கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு எட்டரைக்குத்தானே வேலை தொடங்குது, அதுக்கும் ஒழுங்காய் நேரத்துக்கு வருவதில்லையே.......நிறைய யோசிக்கிறாள். வேலையிடம் வந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு கந்தோருக்குள் போகிறாள். அவள் வருவதற்கு முன்பே பெரும்பாலான தொழிலாளிகள் வந்திருந்தனர்.எல்லோரும் அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு தத்தமது வேலையிடங்களுக்கு செல்கின்றனர். அவளது உதவியாளர் அன்று வேலைக்கு வந்தவர்கள், வராதவர்கள் மற்றும் சுகயீன விடுப்பில் இருப்பவர்கள் என்று அனைவரின் அறிக்கையையும் கொண்டு வந்து அவளிடம் தருகிறார். இப்போது சுமதி தனது கடைப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.அந்த கம்பெனியன் மேலதிகாரியாக மாறிவிட்டிருந்தாள் .அப்போது அரை மணி நேரம் தாமதமாக இருவர் வேலைக்கு வருகின்றனர். --- அவர்கள் மன்னிக்கவும் மேடம், கொஞ்சம் தாமதமாகி விட்டது என்கிறார்கள். --- சுமதி தனது உதவியாளரைப் பார்த்து ஏன் இன்று மெட்ரொ,பஸ் எதுவும் ஓடவில்லையா. அப்படி ஒன்றும் இல்லை மேடம் எல்லாம் வழமைபோல் ஓடுகின்றன என்று அவர் கூறுகிறார். உடனே சுமதி அவர்களின் பக்கம் திரும்பி,நீங்கள் போயிட்டு நாளைக்கு வாங்கோ.உங்களின் இடங்களுக்கு ஆட்களை அனுப்பியாகி விட்டது. --- கொஞ்சம் தயவு செய்யுங்கள் மேடம் இனிமேல் இப்படி நடக்காது என்கிறார்கள். --- உங்களுக்குத் தெரியும்தானே காலை 08:45 க்கு முன்பாக ஒவ்வொரு கந்தோர்களிலும் எமது கிளீனிங் வேலையை முடித்து விட்டு நாங்கள் வெளியேறிவிட வேண்டும் என்பது. நீங்கள் இப்படி தாமதமாய் வந்தால் எப்படி. ஒன்றும் செய்யேலாது நீங்கள் போகலாம். அவர்களும் கொஞ்ச நேரம் சோகமாய் நின்று விட்டு திரும்பிப் போகிறார்கள். இன்னொரு இளம் ஆபிரிக்கன் பெண் அங்கு ஒரு அழகிய சிறுமியுடன் நிக்கிறாள். சுமதியும் அவர்களை பார்த்து நீங்கள் ஏன் இன்னும் இங்கு நிக்கின்றீர்கள் என்று கேட்க உடனே உதவியாளர் அவளிடம் அந்தப் பெண்ணை வேலை பழக pole emploi அனுப்பி இருக்கு.இவவின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த சான்றிதழ் எடுக்கிறதுக்கு வந்திருக்கிறா. அது தயாராக அறையில் இருக்கு, நான் போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு போகிறார்.......! இன்னும் தைப்பார்கள் ................! 🎽4 points
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
கோவையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்: பசுமை நிறைந்த அதிகம் அறியப்படாத பகுதிகள் மோகன் பிபிசி தமிழுக்காக 48 நிமிடங்களுக்கு முன்னர் பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாள் பயணமாக சென்று வரக்கூடிய பெரிதும் அறியப்படாத இடங்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். கோவை குற்றாலம் - சிறுவாணி நீர் வீழ்ச்சி கோவைக்கு மிக அருகில் உள்ள சுற்றுலாத் தளங்களுள் கோவை குற்றாலமும் ஒன்று. அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்தை அடியொட்டி கோவை குற்றாலம் என்கிற பெயர் வந்துள்ளது. சிறுவாணி நீர்வீழ்ச்சிதான் பரவலாக கோவை குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. கோவையிலிருந்து எளிதாக அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கவும் சிறிய தொலைவில் பைக் ரைடு செல்ல விரும்புபவர்களும் தேர்வு செய்யும் இடமாகவும் உள்ளது. நகரின் மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 40 கி.மீ பயண தூரம். காந்திபுரத்திலிருந்து நேரடி பேருந்துகள் உள்ளன. சொந்த வாகனத்திலும் செல்லலாம். சாடிவயல் சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு வனத்துறையினரின் வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். அதன் பின்னர் சிறிது தூரம் காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றால் கோவை குற்றாலத்தை அடையலாம். நொய்யல் நதி இங்குதான் தொடங்குகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கேத்தரின் நீர்வீழ்ச்சி கோவையில் வசிப்பவர்கள் தேநீர் குடிப்பதற்குக்கூட ஊட்டி வரை செல்வார்கள் எனப் பிரபலமாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான இடங்களைவிடவும் சாகசமான பயணங்களை மேற்கொள்ளும் இடங்களும் உள்ளன. அதில் கேத்தரின் நீர்வீழ்ச்சியும் ஒன்று. கோத்தகிரியிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பிறகு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தேயிலை தோட்டங்கள் வழியாகக் காட்டிற்குள் பயணம் செய்தால் கேத்தரின் நீர்வீழ்ச்சியை அடையலாம். வனப்பகுதிக்குள் இருப்பதால் குளிரான வானிலையே இங்கு நிலவும். நீர்வீழ்ச்சியிலும் பற்களை நடனமாட வைக்கும் உறை குளிர் வெப்பநிலையில் நீர் ஆர்ப்பரித்து ஓடும். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சுற்றுலா பயணிகள் செல்வதற்கு உகந்த நேரம். இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்', டைனோசர் முட்டைகளின் வழிபாடு மற்றும் கடத்தல் – கள நிலவரம் குருசடை தீவு, கண்ணாடி படகு சவாரி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலா தலங்கள் சென்னையைச் சுற்றி இப்படியும் கூட சுற்றுலா தலங்கள் உள்ளனவா- - BBC News தமிழ் கொடிவேரி அணைக்கட்டு கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கொடிவேரி அணைக்கட்டு. கோவையிலிருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் கொடிவேரியை அடைந்துவிடலாம். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கொடிவேரி தடுப்பணை பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எளிதாக வந்து செல்லும் விதத்தில் மூன்று மாவட்டங்களுக்கும் மையமான இடத்தில் கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. நீர்வரத்து சரியாக உள்ள காலங்களில் பொதுமக்கள் அணைக்கட்டில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. 90களில் முக்கியமான படப்பிடிப்பு தளமாகவும் கொடிவேரி விளங்கியுள்ளது. சின்னத்தம்பி திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. ஆனைக்கட்டி கோவையைச் சுற்றி பல்வேறு மலைவாசல் தலங்கள் இருந்தாலும் எளிதாக அடையக்கூடிய இடமாக ஆனைக்கட்டி உள்ளது. கோவையிலிருந்து 30 கி.மீ தொலைவில் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் ஆனைக்கட்டி அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் ஆனைக்கட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இங்கு சுற்றுலா தலங்கள் அதிகளவில் இல்லை. இங்குள்ள மிதமான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்களில் தங்குவது வழக்கம். கோவையைச் சுற்றி பைக் ரைட் செல்ல விரும்புபவர்கள் தேர்வு செய்யும் இடங்களில் ஆனைக்கட்டியும் இடம்பெறும். பரளிக்காடு சூழல் சுற்றுலா கோவை மாவட்டம் காரமடையில் அமைந்துள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. கோவையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பில்லூர் அணையையொட்டி அமைந்துள்ளது பரளிக்காடு கிராமம். இங்கு வனத்துறையால் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி. இணைய வழியாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து மற்றும் ஆற்றுக் குளியல் என வனத்துறையால் முழுமையாக இந்த சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ளவர்கள் காடு, மலை சார்ந்து ஒரு நாள் சுற்றுலா சென்று வர ஏதுவான இடமாகப் பரளிக்காடு உள்ளது. மலம்புழா அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மலம்புழா அணை. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கோவையிலிருந்து எளிதாக செல்லும் இடமாக உள்ளது மலம்புழா அணை. மலம்புழா அணை அருகே பூங்காவும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. படகு பயணம், கேபில் கார் பயணம் என சாகசம் நிறைந்த பல விஷயங்கள் இங்கு அமைந்துள்ளன. மலம்புழா அணை அருகே சிறிய நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ளன. வால்பாறை கோவையிலிருந்து ஒரு நிறைவான பயணம் செல்பவர்கள் தேர்வு செய்யும் பட்டியலில் தவிர்க்காமல் வால்பாறை முதலிடத்தில் இருக்கும். கோவையிலிருந்து 100 கிமீ தொலைவில் வால்பாறை அமைந்துள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 40 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்தால் வால்பாறையை அடையலாம். வால்பாறை செல்லும் வழியில் தேயிலை தோட்டங்கள் நிறைந்து பசுமை போர்த்தி காணப்படும். மேல் சோலையாறு அணை, சின்ன கல்லார், நல்லமுடி வியூ பாயிண்ட் ஆகியவை வால்பாறையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். ஆழியாறு அணை, குரங்கு நீர் வீழ்ச்சி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. கோவை - வால்பாறை செல்பவர்கள் அவசியம் வந்து செல்லும் இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. அணையின் மேல் பகுதியில் முழு நீளத்திற்கும் நடந்து செல்ல முடியும். அணையின் எழில்மிகு தோற்றத்தை முழுவதும் ரசிக்க முடியும் என்பதால் இளைஞர்கள் போட்டோ ஷூட் எடுக்கும் முக்கியமான இடமாகவும் ஆழியாறு அணை உள்ளது. இங்கு பூங்கா, மீன் காட்சியகம், பார்க் தமிழ்நாடு மீன்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையிலிருந்து 5 கி.மீ தொலைவில் குரங்கு நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆழியாறு அணைக்கு வருபவர்கள் நிச்சயம் குரங்கு நீர் வீழ்ச்சிக்குச் செல்வார்கள். வெள்ளியங்கிரி ட்ரெக்கிங் கோவை மாவட்டம் போலுவாம்பட்டியில் வெள்ளியங்கிரி கோயில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டுள்ளது. ஆறு கிலோ மீட்டர் தூரம் மலை பாதைகளில் பயணித்து ஏழு மலைகளைக் கடந்து சென்றால் வெள்ளியங்கிரி மழை உச்சியை அடையலாம். பக்தர்கள் மட்டுமில்லாமல் ட்ரெக்கிங் செல்ல விரும்பும் பலரும் தேர்வு செய்யும் இடமாக வெள்ளியங்கிரி உள்ளது. பாலமலை கோவை மாநகருக்கு அருகிலேயே அமைந்துள்ள ஒரு சிறிய மலைக் குன்றுதான் பாலமலை. இங்கு அரங்கநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் வழியாகச் சென்றால் பாலமலையை அடையலாம். நகரின் கூச்சல்களுக்கு நடுவே சிறிது நேரம் இளைப்பாற விரும்புபவர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்யலாம். பாலமலையில் நிலவும் மிதமான வெப்பநிலையையும் இயற்கை காட்சியையும் ரசித்துவிட்டு வரலாம். உடுமலைப்பேட்டை கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் உடுமலைப்பேட்டை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின்கீழ் வரும் இந்தப் பகுதியில் திருமூர்த்தி அணை, அமராவதி அணை முக்கியமான சுற்றுலா தலமாக அமைந்துள்ளன. திருமூர்த்தி அணைக்கு மேல் பஞ்சலிங்க நீர் வீழ்ச்சி உள்ளது. நுழைவுச் சீட்டு பெற்றுக்கொண்டு செல்ல முடியும். 20 நிமிடங்கள் நடைபயணமாகச் சென்றால் நீர் வீழ்ச்சியை அடையலாம். திருமூர்த்தி அணையிலிருந்து 20 கிமீ தொலைவில் அமராவதி அணை அமைந்ந்துள்ளது. https://www.bbc.com/tamil/india-64682857 தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்வோர் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.3 points
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும்.3 points
-
அறிவித்தல்: யாழ் இணைய பராமரிப்பு தடங்கல்
இன்று ஐரோப்பிய நேரம் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை மென்பொருள் update காரணமாக யாழ் களம் இயங்காது என்பதை நிர்வாகம் அறிய தருகிறது. நன்றி நிர்வாகம்2 points
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
கவனம் இல்லாமல் வெளியில் நின்றால் நுளம்பு உடம்பில் டிசைன் போட்டுவிடும். பிறகு கடிபட்ட இடத்தை சொறிவது ஒரு தனி சுகம். இப்போது நல்ல நுளம்புவலைகள் உள்ளன. நிம்மதியாக தூங்கலாம். பயம் வேண்டாம்.2 points
-
தையல்கடை.
2 pointsசுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..! ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..! நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! தைக்கட்டும்…!2 points
-
தையல்கடை.
2 pointsதச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(7). கடை வழமைபோல் நடந்து கொண்டிருக்கு. கடைச் சாவி இப்போதும் பிரேமாவிடம்தான் இருக்குது. சுமதி பின்னேரம் வரும்போது அநேகமாக பிரேமா ரேணுகா கடையில் இருக்க மாட்டார்கள். மிருதுளாவும் கபிரியேலும் வேலை செய்துகொண்டு இருப்பார்கள். பின் மிருதுளாவும் அன்றைய கணக்கு வழக்குகளை சுமத்தியிடம் விபரித்து விட்டு போவது வழக்கம். கபிரியேலும் சுமதியும் அதன்பின் 20:00 மணிவரை வேலை செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு செல்வார்கள். இரு வாரங்களின் பின் சித்தப்பா அவள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் ஆதாரங்களுடன் கூறிய தகவல்களைப் பார்த்த போது சுமதிக்கு தலை வெடித்து விடும் போல் இருந்தது. சித்தப்பா கடையில் நடப்பனவற்றை தன்னிடமிருந்த சிறிய ரகசிய கமராவில் பதிவு செய்து வைத்திருந்தார். அவர் தந்த தகவல்கள் படி.........! --- கடை காலை 09:00 / 09:30 மணிக்கு மேல்தான் தினமும் பிரேமா வந்து கடை திறக்கிறாள். அதுவரை ரோகிணி, மிருதுளா வீதியில் அல்லது தேநீர் கடைகளில் இருக்கிறார்கள். பல வாடிக்கையாளர்கள் கையில் பார்சல்களுடன் வந்து பார்த்து விட்டு வேறு கடைகளுக்கு செல்கிறார்கள். --- பின் அவர்கள் மூவரும் தேநீர் பிஸ்கட் சாப்பிட்டு கதைத்து வேலை தொடங்க மேலும் அரை மணிக்கு மேல் ஆகிவிடும். --- அப்போது வரும் வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் கதைத்து ஓடர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒரு குறையுமில்லை. --- அப்பப்ப சில நாட்களில் மட்டும் ரோகிணி தலையில் விக்ஸ் போன்ற ஓயின்மெண்ட் பூசிக்கொண்டு கீழ் அறைக்குப் போகிறாள். மிஷினில் இருந்து வேலை செய்வது குறைவு. --- மிருதுளா எப்போதும் வயர்லெஸ் போனில் கதைத்தபடிதான் அல்லது பாட்டு கேட்க்கிறாளோ தெரியவில்லை .....வேலை செய்கிறாள். தினமும் மாலையில் கடைக்கு வெளியே சென்று ஒரு இளைஞனுடன் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருகிறாள். கடந்த சில நாட்களில் அவர்கள் இருவரும் வீதியால் போகிறவர்கள் திரும்பிப் பார்க்குமளவு நிறைய சண்டை பிடிக்கிறார்கள். ---காலையில் 11:30 மணிக்கெல்லாம் பிரேமா வெளியே போய் விடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து கவனித்ததில் அவள் நேராக ஒரு சிறுவர் பாடசாலைக்கு சென்று இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டிற்கு கூட்டி செல்வதும் பின் 13:30 க்கு மீண்டும் அவர்களை பாடசாலையில் விட்டுவிட்டு 14:30 மணியளவில் கடைக்கு வருகிறாள்.மாலை 16:45 க்கு மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள். --- ரோகிணியும் மிருதுளாவும் 13:00 மணிக்கு கபிரியேல் வந்ததும் தாம் கொண்டுவந்த உணவையோ அல்லது கடையிலோ சாப்பிடுவார்கள். --- கபிரியேல் மட்டும் தினமும் சரியாக 13:00 மணிக்கு வேலைக்கு வருகிறான்.ஒரு நிமிடமும் சும்மா இருப்பதில்லை.நன்றாக வேலை செய்கிறான். --- கடையில் மிருதுளாதான் ஓடர் துணிகளை வெட்டுகிறாள். கபிரியேலும் ரோகிணியும் அவற்றை தைக்கிறார்கள். --- ஆட்கள் பொருட்கள் வாங்க வரும்போது ரோகிணி கீழ் அறையில் இருந்து வந்து வியாபாரம் செய்துவிட்டு போகிறாள். --- பிரேமாவுக்கு இன்னும் மிஷின்களை சரியாக செட் செய்து தைக்கத் தெரியவில்லை.மிருதுளாவோ ரோகிணியோதான் அவளுக்கு உதவி செய்கிறார்கள். மேலும் அவள் தனது வீட்டில் இருந்து துணிகளை இங்கு கொண்டுவந்து தைத்துக் கொண்டு போவதுபோல் தெரிகிறது. --- பின் மாலை 17:00 மணிக்கு நீ வந்து விடுகிறாய். நீயும் கபிரியேலும் 20:00 வரை வேலை செய்து பின் கடையை பூட்டி விட்டு செல்கிறீர்கள். --- மேலும் கபிரியேல் பகலில் என்ன செய்கிறான் என்று நான் கவனித்ததில் அவன் விரைவில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விடுவான் போல்தான் தெரிகிறது.நன்கு நாட்களுக்கு முன் அவன் பரிசுக்கு வெளியே இருக்கும் ஒரு லொறிக் கம்பெனியில் ஒரு மிக நீளமான (long vehicle) லொறியை அவர்களுக்கு ஓடிக் காட்டியதைப் பார்த்தேன். அவனிலும் பிழையில்லை காரணம் இளம் பொடியள் இப்படி ஒரு அறைக்குள் இருந்து வேலை செய்வது மூச்சு முட்டுறது மாதிரி இருக்கும் அவங்களுக்கு. அவரிடமிருந்து அவ்வளவு தகவல்களையும் வீடியோக்களையும் தனது போனுக்கு மாற்றிவிட்டு எழும்ப சுரேந்தர் வந்து வாங்கோ மாமா, இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ. --- வேண்டாம் மருமோன் அங்க பிரிட்ஸில நேற்றையான் மீன் குழம்பு இருக்கு நான் போறன். --- அதெல்லாம் நாளைக்கு சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு ஒரு கிளாசில் சிகப்பி நிற வைனை குடுத்து விட்டு இது கையாக் (gaillac) வைன் மாமா நல்லாய் இருக்கும். நான் மாசிக் கருவாட்டு சாம்பலுடன் பிட்டும் மற்றும் இறால் குழம்பும் வைத்திருக்கிறன் சூப்பராய் இருக்கும். --- இஞ்சேருங்கோ, இரவாச்சுது பிறகு மாமா தனியா வீட்டுக்கு போகவேனும், கணக்க ஒண்டும் எடுக்கிறேல்ல கொஞ்சமா எடுத்துட்டு போய் சாப்பிடுங்கோ இரண்டு பேரும் என்று சொல்லி விட்டு சுமதி போகிறாள். இன்னும் தைப்பார்கள்.........! 🎀2 points
-
தையல்கடை.
1 pointதையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻1 point
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
2021´ம் ஆண்டு கார்த்திககை 29´ம் திகதியன்று வேலையிடத்தில் நடந்த விபத்தின் பின்... நோயாளர் காவு வண்டியில்.. வேலையிடத்தை விட்டு சென்ற நான், 15 மாத தொடர் சிகிச்சை, தெரப்பியின் பின்... இன்று முதன் முதலாக மீண்டும் வேலையிடத்துக்கு சென்றேன். 🙂 வைத்தியரின் அறிவுரைப்படி... முதல் இரண்டு கிழமைகள் தினமும் 3 மணித்தியாலமும், மூன்றாம், நான்காம் கிழமைகள் தினமும் 5 மணித்தியாலமும், ஐந்தாம், ஆறாம் கிழமைகள் 7 மணித்தியாலமும் வேலை செய்து பார்த்து சரி வந்தால், தொடர்ந்து எட்டு மணித்தியாலப் படி வேலை செய்யலாம் என்று சொன்னார். இன்று முதல் நாள் என்னை வேலை இடத்தில் கண்டது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வேலை இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இருவர் ஓய்வெடுத்து போய் விட்டார்கள். இருவருக்கு... ஒரு கால் கழட்டி நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அதில் ஒருவருக்கு சீனி வருத்தத்ததால் கால் கழட்டியதாம், மற்றவர்.... பல வருடமாக அதிக சிகரெட் புகைத்ததால், கால் கழட்ட வேண்டி வந்ததாம். எல்லோரையும் இன்று கண்ட போதும், எனக்கு விபத்தை ஏற்படுத்தியவர் எனக்கு கிட்ட வர இல்லை, தூரத்தில் அவரின் முகம் தெரிந்தது. நான் பார்த்தவுடன், ஒளித்து விட்டார். குற்ற உணர்ச்சி... எப்படி முகத்தில் முழிப்பது என நினைத்தாரோ தெரியவில்லை. 😎 எல்லோரும் எனக்கு... உடம்பு கூடியிருப்பதாக சொன்னார்கள். ஆஸ்பத்திரி சாப்பாடு செய்த வேலை என்று பகிடிக்கு சொன்னேன். 🙂 உண்மைதான்... முன்பு இருந்ததை விட பத்து கிலோ கூடியுள்ளேன். வேலை செய்த உடம்பு திடீரென சும்மா இருக்கும் போது, கூடுவது வழமை தானே. இனி வரும் காலங்களில்... குறையும் என நினைக்கின்றேன். 😋 விபத்தின் பின் நடந்த சிகிச்சைகளையும், தெரப்பிகளையும் நினைவில் வருபவற்றை அவ்வப்போது தொடர்ந்து பதியலாம் என நினைக்கின்றேன். உங்களுக்கு வாசிக்க விருப்பமா? 😃 பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம். 😂 🤣1 point
-
படம் கூறும் கதைகள்
1 pointஎனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!! அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்.. படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். நன்றி..1 point
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
1 pointகொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...1 point
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-1 point
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.1 point
-
மெய்தீண்டாக் காதல்........!
1 pointமெய்தீண்டாக் காதல் டூயட் பாடல் . ஆண் : அன்பே .....! பெண் : அத்தான்....! மௌனம் அவன் மடியில் சாய்ந்து சொல்லுங்கள் அத்தான்.....! ஆண் : நிலவை மூடி அசையும் முகிலாடையை விலக்கிடவே கரம் தயங்கிடுதே பெண்: நாணம் கொண்ட நானும் நாணம் கெட்டு நிக்கிறேன் மனசாலும் உன் செயலை தடுக்கலையே ஆண் : பாட்டன் வழி வந்த பழக்கதோசம் பேரன் என்னிடமும் நிறைந்திடுதே பெண் : பூட்டி வழி வந்த பண்பாட்டை -- முழுதாய் என் உடலும் காத்திடுதே இருவரும்: மலர்மாலை சூடி மங்கலநான் சுமந்து மங்கியதோர் நிலவினில் மறைபொருள் யாவும் தேடியே மகிழ்ந்தே உறவாடலாம் இருவரும் இணைந்தே இன்பம் காணலாம்......! யாழ் அகவை 25 க்காக ஆக்கம் சுவி ......!1 point
-
படம் கூறும் கதைகள்
1 pointஈழப்பிரியன்… ஆம் பருத்தித்துறை வீதி, அரசடி வீதியிலும் இதே போல் இடம் உள்ளது. ஆனால் பிரபா சிதம்பரநாதன் இணைத்த படத்தில் உள்ள சுந்தரம் பிறதர்ஸ் விளம்பரத்தை பெரிதாக்கி பார்க்க அதில்.. மணல்தறை லேன், கந்தர்மடம் என்று உள்ளது. ஆன படியால் இது… பலாலிவீதி, பழம்வீதியில் உள்ள ஆலடி சந்தி. 🙂1 point
-
தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
பிறகென்ன கோதாரிக்கு அங்க போவான்.......! 😂1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
சிரிக்கலாம் வாங்க
1 point1 point
- மனிதா உன்னைத்தான்!
1 pointசிறப்பான கவிதை karu, இதை நீங்கள் யாழ் அகவை 25 ல் கூட பதியலாம் என்று நினைக்கின்றேன்......! 👍1 point- தமிழ்நாட்டில் உள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தளங்கள்
நல்ல தகவல்கள் நன்றி ஏராளன் ........அடுத்த தேன்நிலவு அங்குதான்......! 😂1 point- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
குளிருக்கு ஏற்றவாறு எமது பொன்னுடல் இசைவாக்கம் பெற்று விட்டது.இனி நுளம்பு குத்தினாலும் பூவுடல் தாங்காது.1 point- தையல்கடை.
1 pointஅடிக்கடி நூல் விட்டால் அறத்தானே செய்யும்.... இவர் இப்பத்தான் நித்திரையாலை எழும்பி வந்திருக்கிறார்...🙃 தல வேற லெவல்1 point- தையல்கடை.
1 pointஅண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்…! அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…! கம்பன் தோற்றான் போங்கள்…! சுபியர்…!😅 சுவியர்…!1 point- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது..1 point- கருத்து படங்கள்
1 point1 point- படம் கூறும் கதைகள்
1 pointமதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…! பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!1 point- தையல்கடை.
1 point- சோடா ஊத்தலையா..?
1 pointநீங்கள் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை. இப்ப மாப்பிளை தண்ணியடிக்கேல்லை எண்டால் தான் சந்தேகப்படுறாங்கள்....ஆள் நோஞ்சான் குஞ்சோ எண்டு ஆயிரத்தெட்டு கேள்வி வேறை.....😎1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
முதலில் சிறியின் ஆக்கத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.மற்றது இங்கு விவாதிக்கப்பட்ட ஊருக்கு போய் வாழ்வது பற்றியது.நான் அறிய பலா; அங்கு வந்து வாழ்கிறார்கள் நான் உட்ப்பட.அதில் வெளி நாட்டு வதிவிடத்தைஅறுதியாக விட்டவர்களும் அடக்கம்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே.பெரும் பணக்காரர்கள் பந்தாவுடன் வாழ்ந்தால் மேலதிக ஆபத்து உண்டுதான்.எந்த வாழ்க்கை முறை பிடிக்கும் என்னறதைப் பொறுத்துத் தான் எங்கு வாழ்வது என்பது அமையும்.1 point- தையல்கடை.
1 pointசுவி. அண்ணா கதை நன்றாக இருக்கிறது..👍...எதையாவது பார்த்து எழுதுகிறீர்களா ?🤣😂 இல்லை உங்கள் சுய ஆக்கமா?. சுரேந்தர் ஏன் கடைப்பக்கம். வருவதில்லை ? இவ்வளவு திறமையுள்ள சுமதிக்கு ஒரு மெஷினைப். பொருத்தி வருகிற......போகிற. நேரத்தை பதிவு செய்ய தெரியவில்லை… வாழ்த்துக்கள்1 point- திரும்பும் வரலாறு!
1 pointதிரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்1 point- படம் கூறும் கதைகள்
1 pointஇந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. இந்த தேவாலயத்தினைக் கடந்துதான் மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று..1 point- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நல்லது அக்கா. இலங்கையில் திரும்பி போய் வாழ்வது பற்றிய சுய ஆக்க திரியோடு ஒட்டி நான் பொதுப்படையாக எழுதிய பதிலுக்கு என்னை தனிப்பட்டு இழுத்து கருத்து எழுதியது யார் என்பது திரியை வாசிப்பவருக்கு புரியும். அந்த திரியிலும் உங்களுக்கு தக்க பதில் அளிக்பட்டே இருந்தது. அந்த பதிலின் வெப்பம்தான் இங்கே உங்களை என்னை இழுத்து எழுத வைத்தது என்பதும் புரிகிறது.1 point- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
கருத்துக்கு பதில் எழுத முடியா விட்டால் ஒதுங்கி இருப்பது உங்களுக்கு மரியாதையை தரும்...அந்தந்த திரிகளில் பதில் கருத்து எழுத முடியாமல் ஓடி விட்டு கள உறவு எழுதிய சுய ஆக்கத்தில் தேவையில்லாமல் சாணக்கியனையும்,,பிள்ளையானையும் இழுத்து எழுதி இருப்பது கருத்து வறுமையை காட்டுது1 point- திரும்பும் வரலாறு!
1 pointஉலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபிரஜாவுரிமைப் பிரச்சினை தொண்டைமானின் வாழ்வினூடாகவும், அவரது சேவையினூடாகவும் தமிழர்கள் முகங்கொடுத்த முக்கியமான பிரச்சினையான பிரஜாவுரிமைப் பிரச்சினையினை நான் கண்களூடு பார்க்கமுடிந்தது. தமிழர்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் நோக்கில் சிங்களத் தலைவர்களால் செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான வஞ்சனை இதுவென்றால் அது மிகையில்லை. தமிழர்களை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் ஒரே வஞ்சனையுடனேயே இந்தச் சட்டத்தினைச் சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களான டி எஸ் சேனநாயக்காவும், ஒலிவர் குணத்திலக்கவும் சோல்பரி கமிஷனை சூட்சுமத்துடன் வழிநடத்தியதன் மூலம், பிரஜாவுரிமை பற்றிய விவாதங்களை நடத்தவும், அதுதொடர்பான முடிவினை எடுக்கவும் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றமே சிறந்தது எனும் வாதத்தினை முன்வைத்து அதில் வெற்றியும் கண்டனர். சுதந்திரம் கிடைத்து சரியாக 6 மாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தின் உதவியுடன் புதிய சட்டமான இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினைக் கொண்டுவந்து சுமார் பத்து லட்சம் தமிழர்களின் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்தனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மற்றும் இலங்கையின் பிரஜைகளாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் என்கிற அடிப்படைகளில் தமிழர்களைப் பிளவுபடுத்தி தமது கைங்கரியத்தினை அவர்கள் அரங்கேற்றினார்கள். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பிரிவு 5 ஆகியவற்றில் பூர்வீகமாக பிரஜாவுரிமைக்குத் தகுதியானவர்கள் யாரென்று விபரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நாளான 1948, கார்த்திகை 15 இற்கு முன்னர் இலங்கையில் பிறந்த ஒருவரின் தந்தையோ, அல்லது பாட்டனாரோ அல்லது பாட்டனாரின் தந்தையோ இலங்கையில் பிறந்திருப்பின் அந்த நபர் இலங்கையின் பிரஜை ஆவார் என்று கூறுகிறது. அதேவேளை பிரிவு 5 இன்படி, ஒருவர் 1948, கார்த்திகை 15 இற்குப் பின்னர் இலங்கையில் பிறந்திருப்பின், அவரது தந்தையார் இலங்கைன் பிரஜையாக இருந்தால் மாத்திரமே அந்த நபர் இலங்கையின் பிரஜையாகக் கருதப்படுவார் என்று கூறியது. இதன்படி, பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரஜாவுரிமையின்படி சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களும், இலங்கை முஸ்லீம்களும் இலங்கையின் பிரஜைகளாக வரையறுக்கப்பட இந்தியத் தமிழர்களும், இந்திய முஸ்லீம்களும் இலங்கைப் பிரஜைகள் அல்ல எனும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன்மூலம் சுமார் 90 வீதமான மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், நாடற்றவர்கள் எனும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இச்சட்டத்தின் பிரிவு 11 இலிருந்து 17 வரையானவற்றில், பிரஜைகளாகப் பதியப்பட்டவர்களின் பிரஜாவுரிமை என்பது ஒருவர் பூரண வயதினை அடைந்தவராகவும், புத்தி சாதுரியமானவராகவும், இலங்கையில் வதிபவராகவும், தொடர்ந்தும் இலங்கையிலேயே வதியும் விருப்பினைக் கொண்டவராகவும், அவரது தாயார் இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் பிரஜாவுரிமைக்காக பதிவுசெய்யும் தகுதியினைப் பெற்றுக்கொள்கிறார் என்று கூறுகின்றது. இதுகூட, ஒருவரின் தாயார் தனது பிள்ளை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் திகதியிலிருந்து குறைந்தது 7 வருடங்களுக்கு முன்னான காலத்தில் இலங்கையில் வசித்திருப்பது அவசியம் என்றும் கூறுகின்றது. இந்தியத் தமிழர்கள் தம்மை இலங்கையின் பிரஜைகளாக பதிவுசெய்வதை முற்றாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டங்களை சிங்களத் தலைவர்கள் கொண்டுவந்திருந்தனர். சிங்களத் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த இனவாதச் சட்டத்தினை எதிர்த்துச் செயற்பட்ட இணைந்த தமிழர்களின் அமைப்பான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் உப தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் இச்சட்டம் நிச்சயமாக இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கவே பாவிக்கப்படுகிறது என்று கூறினார். "இந்தவகையான தமிழர் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் இருந்து தமிழர்களை முற்றாக அழிப்பதிலோ அல்லது பாக்கிஸ்த்தான் போன்றதொரு தமிழர்க்கான தனியான நாட்டினை இலங்கையில் ஏற்படுத்துவிதிலோதான் சென்று முடியும்" என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அன்றைய பிரத மந்திரி டி எஸ் சேனநாயக்க, இந்தியத் தமிழர்கள் இலங்கையின் தற்காலிக வதிவாளர்கள் என்றும், பெருந்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காகவே பிரிட்டிஷாரினால் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதோடு, அடிக்கடி தமிழ்நாட்டிலிருக்கும் தமது கிராமங்களுக்கு அவர்கள் சென்றுவருவது அவர்கள் கூட இலங்கையினைத் தமது சொந்த நாடாகக் கருதவில்லை என்பதனையே காட்டுகிறது என்றும் பதிலளித்திருந்தார். மேலும் இந்தியத் தமிழர்கள் இந்தியாவையே தமது காவலனாகப் பார்ப்பதாகவும், அவர்கள்மேல் இந்தியா எப்போதும் ஒரு கரிசணையான பார்வையினைக் கொண்டிருப்பதாகவும் கூறியதோடு, அவர்கள் உண்மையாகவே இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள், ஆகவே அவர்களை இந்தியா மீள அழைத்துக்கொள்வதுதான் சரியானது என்றும் வாதாடினார். ஆனால், இந்தியாகூட அவர்களை அன்று மீள அழைத்துக்கொள்ள முற்றாக மறுத்துவிட்டது.1 point - மனிதா உன்னைத்தான்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.