Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87992
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    929
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46798
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/23 in all areas

  1. வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா?? அவர்களுடன் பேசி இருக்கின்றோமா? என்றால் இல்லை என்பது தானே எமது பதில்? நான் அப்படி யாரும் அருகில் வந்தால் அல்லது அவர்களின் பக்கத்தால் போகவேண்டி வந்தால் கடந்து செல்லும்வரை மூச்சை நிறுத்துபவன் அல்லது முகத்தை முழுமையாக கிடைப்பதால் மூடுபவன் நான். ஆனால் அவர்களும் மனிதர்கள் இந்த நிலைக்கு அவர்கள் வர ஏதாவது வலுவான காரணமுண்டல்லவா? நாம் சிந்தித்துண்டா? முதன் முதலில் வீதிக்கு வரத்தான் கடினமாக இருக்கும் வந்துவிட்டால்??? இப்படித்தான் பாரிசின் வீதிகளில் பல நூறுபேர்... நான் கண்டு கொண்டதில்லை எந்த உதவியும் செய்ததில்லை கண்டால் மூச்சையே நிறுத்துபவனால் எப்படி அருகில் சென்று உதவமுடியும்?? அண்மையில் எனது சின்ன மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் எனது கடைக்கு பக்கத்தில் இவ்வாறு வீதியில் இருக்கும் ஒரு பெண்ணைக்கண்டதும் நான் முகத்தை மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகல எனது மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தாள் என்ன என்று கேட்க அவருக்காக ஒரு சாப்பாடு தான் வாங்கி வந்ததாக சொன்னாள். இப்படி பலரும் அவளுக்கு சாப்பாடும் தண்ணீரும் உடுப்புக்களும் கொடுப்பதை பலமுறை நானும் கண்டிருக்கின்றேன் ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது என்பதும் இவர்கள் தங்க பல இடங்களை அரசு ஒதுக்கி இருக்கிறது ஆனால் இவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை இருந்தது நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர் வந்தார் அந்த பெண்ணுடன் இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு வந்தது அதனால் இவரிடம் எனது மகளும் சாப்பாடு கொடுத்ததை சொல்லி இவர்கள் பற்றிய அவரது கருத்தைக்கேட்டேன் அவர் சொன்னார் ஏன் இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா? அரச ஒதுக்கும் இடங்களில் வீதிகளில் நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள் அங்கே ஆண்களே வல்லுறவுக்கு தப்பமுடியாதபோது பெண்களின் நிலை என்ன??? என்றார் தூக்கிவாரிப்போட்டது எனக்கு... உலகில் எவ்வளவு விடயங்களை அறியாமல் விமர்சனமும் வியாக்கியானமும் கேலிகளும் செய்தபடி வாழ்கிறோம்???? யாழுக்காக விசுகு...............
  2. இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
  3. வாசிக்க நல்ல சுவராஸ்யமாக இருக்கு சிறி. இலங்கையின் அழகுக்கும் வளத்திற்கும் எங்கேயோ இருக்க வேண்டிய நாடு. இப்போது நிறைய வெள்ளைக்காரர் மரக்கறிக்காரராக மாறுவதால், இணையத்தளத்தில் இருந்து இலங்கை இந்திய உணவு செய்முறைகளை பார்த்து பொருட்கள் வேண்டி சமைக்கிறார்கள். பிலாக்காய், சோயாமீட், பன்னீர் போன்றவற்றை தேங்காய் பால் சேர்த்து சமைக்கிறார்கள். நானும் பார்த்தவரையில் வெள்ளைக்காரருக்கு யாழ்ப்பாணம் நன்றாக பிடிக்கிறது.
  4. 2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.
  5. ஈழப்பிரியன் மறக்க முடியாத நினைவுகள். அங்குள்ள படத்துடன் போட்ட பதிவு அழகு. 🙂 சில பெரிய நிறுவனங்களில்... பல நாட்களுக்கு முன்பே முற்பதிவு செய்தால்தான் இடம் கிடைக்கும். காசு அதிகம் என்றாலும், உலகத்தின் ஒரு பெரிய நிறுவனத்திற்குள் சென்று பார்த்த திருப்தியுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை. 🙂
  6. 1936´ம் ஆண்டில், வீதி ஓரம் இருந்து "கோகோ கோலா" விற்கும் சிறுவன். 1910´ம் ஆண்டில், கோகோ கோலா விநியோக வண்டியின் அருகே இரண்டு ஆண்கள் நிற்கிறார்கள். 1900 ஆம் ஆண்டு வாகனத்தின் ஓரத்தில், அமர்ந்திருந்த மூன்று சிறுவர்களுடன் கோகோ கோலா விநியோக வண்டி.
  7. கவுண்டமணியின் கருத்தான நகைச்சுவைகள் காலத்தால் அழிக்க முடியாதவை, நன்றி கு. சா.....! 👍 நீங்கள் பொறுமையாய் இருந்து முழுமையாய் வாசித்ததுக்கு நன்றி விசுகர்.........! 😁
  8. திரும்பும் வரலாறு -பாகம் 4 போர்மேகமும் இடிமுழக்கமும் நாசி ஜேர்மனி 1938 இலேயே அயல் நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டதை முன்னைய பாகத்தில் பார்த்தோம். இந்த ஆக்கிரமிப்புக்கள் பாரியளவு எதிர்ப்புகளின்றி நிகழ்ந்தன. முதலில் ஆஸ்திரியா பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிகள் என்பன வீழ்ந்தன. இந்த நாடுகளின் இயற்கை வளங்களை நாசி ஜேர்மனி தன் இராணுவ மயப்படுத்தலுக்கும், பொருளாதாரப் பலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டது. அதே வேளையில், ஜேர்மனியின் யூதர்களுக்கெதிரான கொள்கைகளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குப் பரவின. ஐரோப்பாவில் யூத மக்களுட்பட்ட ஆரியல்லாத மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியானது. இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத யூதர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். இன்னும் பல்லாயிரம் பேர், அத்திலாந்திக்கைத் தாண்டி அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அடைக்கலம் தேடினர் - எல்லோருமே இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. உதாரணமாக, கியூபாவை நோக்கியும், கனடாவை நோக்கியும் யூத அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்கள் சில திருப்பி விடப் பட்டன. அந்தக் கப்பல்களில் இருந்து இறக்கப் பட்ட யூத அகதிகள் வதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர், அவர்களுள் பலர் உயிரோடு மீளவில்லை! யூத அகதிகளுக்கு நடந்த இந்த அவலம், மீள நிகழாமல் இருக்க பிற்காலத்தில் ஐ.நா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒன்று தான் ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) என்ற பதவியின் உருவாக்கம். இந்த அமைப்பினால் பயனடைந்தவர்களுள் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் அடங்குகின்றனர். அதே வேளை ஈழத்தமிழர்கள் போல அதிர்ஷ்டம் கிட்டாத றோஹிங்கியா அகதிகளும் கூட ஓரளவுக்கு இந்த அமைப்பினால் தான் பாதுகாக்கப் படுகின்றனர். (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) ஹிற்லரைக் குளிர்வித்தல்! ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டது போல, ஹிற்லர் , நாசிகள் அவர்கள் கொள்கைகள் என்பன உடனடியாக உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை. உதாரணமாக, அமெரிக்கா நாசி ஜேர்மனிக்குத் தான் கொடுத்த கடன்களை எப்படிப் பவ்வியமாகத் திருப்பி வசூலிப்பதென மட்டும் யோசித்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராஜதந்திர அனுபவமில்லாத ஆனால் ஜேர்மன் மக்கள் மீது அபிமானம் கொண்ட ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியரை தன் தூதுவராக பேர்லினில் நியமித்தது. நாசி ஜேர்மனியை எதிர்க்கும் வலுவுடன் எஞ்சியிருந்தவை மூன்று நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம். பிரான்ஸ், மஜினோ லைன் என்ற ஒரு எல்லைக் கோட்டை பாதுகாப்பு அரண்களுடன் அமைத்து விட்டு போர் வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தது. பிரிட்டனில் ஆட்சியில் இருந்த நெவில் சம்பர்லின் போரை விரும்பவில்லை. "ஹிற்லர் மரியாதையை எதிர்பார்க்கிறார், அதைக் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்" என்று நினைத்த பிரிட்டன் அரசியலாளர்களுள் ஒருவராக இருந்த சம்பர்லின், 1938 இல் ஜேர்மனி சென்று ஹிற்லரை நேரடியாகச் சந்தித்து ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு வந்தார். மியூனிக் (Munich) ஒப்பந்தம் எனப்பட்ட அந்த ஒப்பந்தம், ஜேர்மனியும் பிரிட்டனும் இனி ஒரு போதும் யுத்தத்தில் எதிரிகளாக இருக்க மாட்டா என்றிருந்தது. இத்தகைய "சர்வாதிகாரி எதிர்பார்ப்பதைக் கொடுத்தால் சமாதானம் நிலைக்கும்" என்ற கொள்கையை "குளிர்வித்தல் கொள்கை" (appeasement policy) என்று அழைப்பர். இன்றும் ரஷ்யாவின் புட்டின் கேட்பதைக் கொடுத்தால் உக்ரைனில் அழிவு நிற்கும் என்போர் இதே குளிர்வித்தல் கொள்கையையே வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஹிற்லர் மியூனிக் உடன்படிக்கை உருவாகி சில மாதங்களிலேயே முழு செக்கோஸ்லோவாக்கியாவையும் ஆக்கிரமித்து குளிர்வித்தல் சரிப்பட்டு வராத ஒரு கொள்கையென நிரூபித்தார். இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஹிற்லரை நம்பிய உலக நாடுகளும் தலைவர்களும் இருந்தனர், அவர்களுள் ஒருவர் சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்ராலின். ஏற்கனவே பிரான்சுடன் ஒரு எதிர்கால ஒத்துழைப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து, நாசி ஜேர்மனியை எதிர்க்கக் கூடிய அணியில் சோவியத் ஒன்றியத்தை வைத்திருந்தார். ஆனால், 1939 ஆகஸ்ட் மாதம், மின்னாமல் முழங்காமல் நாசி ஜேர்மனியோடு ஒரு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து கொண்டார். மொலரோவ் - றிப்பன்ட்ரொப் உடன்படிக்கை என்ற பெயர் கொண்ட இந்த உடன்பாடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், அது உண்மையில் ஐரோப்பாக் கண்டத்தைப் பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. இந்தப் பங்கு பிரிப்பு ஆரம்பித்தது போலந்தில். 1939, செப்ரெம்பர் 1 ஆம் நாள் ஜேர்மனி போலந்தின் மீது ஆக்கிரமிப்பை முடுக்கி விட்டது. அதிகாலை 4.45 மணிக்கு, நாசி ஜேர்மனியின் பீரங்கிக் கப்பலில் இருந்து போலந்தின் வட கரையோர நகரான டான்சிக் (Danzig, தற்போதைய பெயர் கடைன்ஸ்க் - Gdansk) மீது ஏவப்பட்ட முதல் குண்டு தான், இரண்டாம் உலகப் போரின் முதல் வெடியெனக் கருதப் படுகிறது. இரண்டு வாரங்கள் கழித்து, ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் போலந்தின் கிழக்குப் பாதியைப் படையெடுத்து ஆக்கிரமித்தது. ஹிற்லர் ஸ்ராலின் கூட்டின் முதற்பலி போலந்து! போலந்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த நாசி எதிர்ப்பு நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நாசி ஜேர்மனி மீது போர்ப் பிரகடம் செய்தன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் நாசி ஜேர்மனியின் இராணுவ வலிமையை இந்த இரு நாடுகளின் தரை, வான், கடற்படைகளால் மழுங்கடிக்க இயலவில்லை. 1940 ஏப்பிரலில், மீண்டும் ஒரு சுற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்த நாசி ஜேர்மனி சடுதியாக நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. 1940 மே மாதம் ஆரம்பித்த போது மேற்கில் பிரான்ஸ் மஜினோ எல்லையை நோக்கி நாசிகள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். முடிவிற்கு வந்த குளிர்வித்தல் கனவு ஹிற்லரின் சடுதியான இராணுவ வெற்றிக்கு சம்பர்லினின் குளிர்வித்தல் கொள்கை ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1939 இல் சம்பர்லின் மியூனிக் உடன்படிக்கை மூலம் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தாரென சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, பிரிட்டனின் றோயல் விமானப் படை (RAF) 1939 இல் ஒரு போரை எதிர்கொள்ளக் கூடிய ஆள், தளபாட பலங்களோடு இருக்கவில்ல. ஆனால் 1940 இல் நாசிகள் பிரிட்டன் மீது தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திய போது, ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு றோயல் விமானப் படை வளர்ந்திருந்தது. ஆனால், ஹிற்லரின் வளர்ச்சிக்கு வழி கோலி விட்டார், தொடர் தோல்விகளுக்கு தலைமையாக இருக்கிறார், ஆகிய காரணங்களால் சம்பர்லின் தொடர்ந்து பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம் ஓங்கியது. அவரும் உடல் நலக் குறைவால் பதவி விலக, வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரதமரானது 1940, மே 10 ஆம் திகதி. சேர்ச்சிலின் வரவோடு, சண்டைக்காரனைக் குளிர்விக்க வேண்டுமென்ற குரல்கள் பிரிட்டனில் அடங்க ஆரம்பித்தன. வின்ஸ்ரன் சேர்ச்சில் சேர்ச்சில் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர் அவர் அப்பழுக்கற்ற ஒரு பூரணமான அரசியல் தலைவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (அப்படி யாரும் இன்றும் இல்லை என்பதே உண்மை). பிரிட்டனின் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை எதிர்த்த பிரிட்டன் அதிகார மட்டத்தில் சேர்ச்சில் முக்கியமானவர். உள்ளூரில், அரசியல் கொள்கையை விட தனது அரசியல் முன்னேற்றத்தை ஒரு படி மேலே வைத்திருந்த சேர்ச்சில் ஓரிரு தடவைகள் கட்சியை மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தலைமையேற்க அவசியமான பல பண்புகளுக்கு சேர்ச்சில் சொந்தக்காரராக இருந்தார். 1. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் - இதனால் தன் கருத்துகளை இலகுவாக பகிரங்கப் படுத்த முடிந்தது, போர்க்கால இங்கிலாந்தில் இந்தத் தொடர்பாடல் மிகவும் பலன் தந்தது. 2. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய அனுபவமும், முதல் உலகப் போரில் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவமும் சேர்ச்சிலிடம் இருந்தன. எனவே, பிரதமரான சேர்ச்சில் அது வரை இல்லாதிருந்த பாதுகாப்பு அமைச்சை புதிதாக உருவாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டு நேரடியாக பிரிட்டனின் படை நடவடிக்கைகளைக் கண்காணித்தார். 3. சேர்ச்சில் இறுதி வரை ஒரு வரலாற்று மாணவனாகவே இருந்தார். கடந்த காலங்களின் போர் வரலாறுகளை வாசிப்பதிலும், சமகாலப் போர்களை வரலாறாகப் பதிவு செய்வதிலும் ஆர்வமாக இருந்த சேர்ச்சிலுக்கு, அவரது எழுத்துப் பணிக்காக பிற்காலத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. நாசி விமானப் படை விமானங்களைத் தேடி தூரநோக்கிக் கண்ணாடியூடாக அவதானிக்கும் றோயல் விமானப் படைத் தொண்டர் - இப்படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரேடாருக்கு மேலதிகமாக பணியில் இருந்தனர் (பட உதவி: நன்றியுடன் அமெரிக்க அரசு ஆவணக்காப்பகம்) நாசிகளை எதிர்க்கும் முயற்சியில், சேர்ச்சில் சில உடனடி நடவடிக்கைளை எடுத்தார். இது வரை நாசிகளின் தாக்குதல் பாணி, செறிவான விமானக் குண்டு வீச்சுகள் , பீரங்கித் தாக்குதல்கள் மூலம் இலக்கைச் சிதைத்து விட்டு, பின்னர் தரைப் படையை அனுப்பி ஆக்கிரமிப்பது என்பதாக இருந்தது (blitzkrieg - அதிரடி அல்லது செறிவடி எனத் தமிழில் கூறலாம்). எனவே, நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து நாட்டைக் காக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டன. பிரிட்டனின் கரையோரங்களில் ரேடார் நிலையங்கள் அமைக்கப் பட்டன. றோயல் விமானப் படைக்கென புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கு தனியான ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டது - அதன் தலைவராக செயல்திறன் மிக்க ஒருவர் நியமிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புதிய தாக்குதல் விமானங்கள் சில மாதங்களிலேயே பாவனைக்கு வெளிவிடப் பட்டன. பிரிட்டனின் அந்தக் கால விமான இயந்திரவியல் தொழில்னுட்பத்திற்குச் சாட்சியாக ஹரிகேன் (Hurricane), ஸ்பிற்fயர் (Spitfire) ஆகிய சிறந்த சண்டை விமானங்கள் உருவாக்கப் பட்டன. கடற்படையைப் பொறுத்தவரை, பிரிட்டனை விடப் பலம் வாய்ந்த கடற்படை பிரான்சிடம் இருந்தது, ஆனால் பிரான்ஸ் நாசிகளிடம் தோற்றால் அந்தக் கடற்படையே பிரிட்டனுக்கு ஆப்பாகும் என்பதையும் சேர்ச்சில் உணர்ந்திருந்தார். இதனாலேயே, பிரான்ஸ் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை அடிக்கடி பிரெஞ்சுத் தலைவர்களிடம் நினைவுறுத்தி வந்தார் சேர்ச்சில். வீழ்ந்தது பிரான்ஸ் இந்த இராணுவ நிலவரத்தை மறுகரையில் இருந்த நாசிகளும் உணர்ந்திருந்தனர். எனவே, சேர்ச்சில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற அன்றே பிரான்சை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் நாசிகள் ஆரம்பித்தனர். பிரெஞ்சுப் படைத்தலைமை தனது மஜினோ கோட்டின் வலிமையை சற்று அளவுக்கதிகமாகவே நம்பியிருந்தது. ஆனால், இந்த மஜினோ எல்லை என்பது ஒரு தொடரான காவலரண் சுவர் அல்ல. தெற்கே பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் ஆரம்பிக்கும் இந்தக் காவலரண்கள் நிறைந்த கற்பனைக் கோடு, சுவிஸ் எல்லையில் முடிவுற்று, பின்னர் ஜேர்மனியின் எல்லையோடு மீள ஆரம்பித்து, வடக்கில் பெல்ஜியத்தின் எல்லையோடு முடிவுறுகிறது. இந்த பெல்ஜியம்- பிரான்ஸ் எல்லையில் இருக்கும் ஆர்டென் காடுகள் (Ardennes forest) மிக அடர்த்தியான, நதிகளால் நிறைந்த ஒரு கன்னிக் காட்டுப் பிரதேசம். பிரெஞ்சுப் படைகளுக்கு, மஜினோ லைனைத் தாக்குவதாகப் பாசாங்கு காட்டிய நாசிகள், தங்கள் தாங்கிப் படையினரை இந்த ஆர்டென் காடுகளூடாக அனுப்பி பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் நுழைந்தார்கள். இது வரை எந்தப் படையாலும் ஊடுருவப் படாத ஆர்டென் காட்டினூடாக நாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி இருந்த பிரான்ஸ், பாரிய இழப்புகளுடன் அடுத்த ஒரு மாதத்தினுள் நாசி ஜேர்மனியிடம் சரணடைந்தது. தற்போது பிரிட்டனின் நிலைஅபாயகரமானதாக மாறி விட்டது. நிச்சயம் பிரிட்டன் நாசிகளின் இலக்காக இருக்கும். "பிரெஞ்சுக் கடற்படையை தான் கைப்பற்றப் போவதில்லை" என ஹிற்லர் உத்தரவாதம் வழங்கியிருந்தாலும், அவ்வுறுதியின் நம்பகத் தன்மையை உலகம் அறிந்திருந்தது. எனவே, சேர்ச்சில், பிரான்சுக்கு வெளியே அதன் காலனிகளில் தரித்திருந்த பிரெஞ்சுக் கடற்படையினருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தார். ஒன்று: பிரிட்டனுக்கு அல்லது பிரிட்டன் காலனிகளுள் ஒன்றுக்கு கப்பல்களோடு வந்து விடுங்கள், உங்களை இணைத்துக் கொள்கிறோம், இரண்டு: எங்களிடம் சரண்டையுங்கள், கப்பல்களை வைத்துக் கொண்டு உங்களை விட்டு விடுகிறோம், மூன்று: கரீபியன் தீவுகளுக்குச் சென்று அமெரிக்காவிடம் கப்பல்களை ஒப்படையுங்கள், அமெரிக்கா யுத்தம் முடியும் வரை கப்பல்களை வைத்திருக்கும். சில நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட பிறகும் இந்த மூன்றில் ஒன்றுமே நடக்காமையால், பிரிட்டன் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையின் கப்பல்களைக் கைப்பற்றும் நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்தது. இத்தகைய ஒரு நடவடிக்கையின் போது ஆயிரம் பிரெஞ்சுக் கடற்படையினர் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரொக்கோவின் துறைமுகமொன்றில் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப் பட்டனர். இந்தக் காலப்பகுதியில், ஹிற்லரும் அவரது உள்வட்டத்தினரும் அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிட ஆரம்பித்து விட்டிருந்தனர். ஹிற்லர் இன்னும் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடுத்த பாகத்தில் நாம் பார்க்கும் போது, ஏன் சேர்ச்சிலும், 1940 களில் வாழ்ந்த பிரிட்டன் மக்களும் உலகத்தை பேரழிவிலிருந்து காத்த புண்ணியவான்கள் என்பது புலப்படலாம். -தொடரும்..
  9. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  10. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  11. நான் உங்கள் தொடரை குழப்ப வரவில்லை. மறு பக்க நியாயங்களையும் சொல்ல வந்தேன். 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மனிய மக்களுடன் பழகுவதால் வரலாற்று புத்தகங்களில் வராத பல நிகழ்வுகளையும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.நானே நான் பழகுபவர்களோ ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் ஹிட்லர் செய்த பல்லாயிரக்கணக்கான விடயங்களை இந்த நாட்டுக்காக செய்தவற்றை வரலாற்று புனைவாளர்கள் சொல்ல தவறுகின்றனர். நான் வசிக்கும் இடத்தில் அழிந்த நாஷிகளின் ஆயுத தொழிற்சாலையும் உண்டு. அருகில் மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு பெரியதொரு ஏரியும் உண்டு. மக்கள் ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் வெறுத்தாலும்....... ஹிட்லரின் அதி உன்னத அபிவிருத்திகளை இன்றும் வெறுக்கவில்லை. நன்றி இத்துடன் இத் திரியிலிருந்து விடை பெறுகின்றேன்.🙏🏼 ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு. திருத்தி வாசிக்கவும்
  12. இதுவரை அறியாததை கண்டு கொண்டோம் படங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
  13. நியூயோர்க்கிலும் இப்படி ஒருவருடன் பேசும்போது உங்களுக்குத் தானே எவ்வளவு வசதிகள் செய்து தருகிறார்கள் அங்கு ஏன் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள் என்றால் உள்ளே பல மாபியாக்கள் அவர்களின் அடியாட்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொல்லையைவிட வெளியே குளிரோ மழையோ பனியோ பரவாயில்லை என்றார். எனது மூத்த மகளுக்கும் இதே பழக்கம் உண்டு. சாப்பாடு உடுப்புகள் என்று எப்போதும் கொடுப்பார்.. எனது மனைவி பாம்புக்கு பாலை வார்த்தாலும் ஒரு நாளைக்கு உனக்கு கொத்தும் அப்ப பார் என்பா. சன்பிரான்சிஸ்கோ போய் வந்தவர்களுக்கு வீடில்லாமல் தெருவோரம் இருப்போரை பார்க்காமல் திரும்பவே முடியாது.
  14. நான் முன்பு இருந்த இடத்தில் பலருடன் நன்றாகவே பழகி இருக்கிறேன்......மேலும் பல செய்திருக்கிறேன் சொல்வது அழகல்ல.......பகிர்வுக்கு நன்றி விசுகர்.......! 😢
  15. விசுகு…. நீங்கள் சொல்லும் மன நிலையில்தான், வீதியில் இருந்து யாசகம் பெறுவோரை இது வரை நினைத்திருந்தேன். அரசு கொடுக்கும் இடங்களில்… அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போது… அவர்களும் நடுவீதிக்கு வரத்தானே வேண்டும். மூன்று கிழமைக்கு முன்…. இப்படி யாசகம் பெற்றுக் கொண்டு இருந்தவரை கடந்து சென்றேன். ஏனோ தெரியவில்லை, அவரின் முகம் அடிக்கடி நினைவில் வருகின்றது. கொஞ்ச காசாவாது கொடுத்திருக்கலாமே… என்று இரு தடவை அந்த இடத்திற்கு சென்று பார்த்திருக்கின்றேன். அங்கு அவர் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. சமூகப் பார்வையுடன் எழுதிய ஆக்கத்திற்கு நன்றி.
  16. நீங்கள் வாசித்து விட்டுத் தான் கருத்து சொல்கிறீர்களென தவறாக நினைத்து விட்டேன்😂. ஹிற்லரின் கூட்டை ஏன் ஜேர்மனியர்கள் தேர்ந்தார்களென முதல் பாகத்திலேயே எழுதியாகி விட்டது (அதே போல இனப்படுகொலையாளர் குடும்பமான பக்ஷக்களை ஏன் சிங்களவர்கள் தேர்ந்தார்களென நீங்களும் தேடிப் பார்த்து அதன் பின்னாலுள்ள நியாயங்களையும் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன், அப்படியா?😎 ) ஜேர்மனிய யூதர்கள் ஹிற்லருக்கு முன்னர் செய்த அக்கிரமங்களை நீங்கள் தான் சொல்ல வேண்டும்! ஏனெனில் ஒழுங்கான ஒரு வரலாற்று நூலிலும், ஆவணத்திலும் யூதர் செய்த அக்கிரமங்களைக் காணவில்லை. நீங்கள் பார்க்கும் சதிக் கோட்பாட்டு வீடியோக்களில் மட்டுமே அவை இருக்கின்றன என நினைக்கிறேன்.
  17. வயர் இல்லாத, செக்கூரிட்டி கமெரா. 🤣 🐕‍🦺
  18. சிறி அங்கே பெரியதொரு பகுதியை எடுத்து 15-20 மெசின் போட்டுள்ளனர்.ஒவ்வொரு மெசினிலும் 7-8 வகையான அவர்களின் தயாரிப்புகள் இருக்கும். கூடவே சிறிய சிறிய பிளாஸ்ரிக் கப் வைத்துள்ளார்கள்.ருசி பார்ப்பதற்காக ஒவ்வொரு முடர் ஒவ்வொன்றிலும் குடித்து பார்த்தோம்.
  19. சென்ற கிழமை அற்லான்ரா போயிருந்தேன்.அப்போது கொக்கோ கோலா கம்பனியை 2 மணி நேரமாக சுற்றிப் பார்த்தோம்.
  20. இப்பதான் விதைத்துள்ளேன், நல்ல சத்துள்ள கீரை என பலர் சொன்னார்கள்,
  21. ரேடியோத் தகவலின் மர்மம் சன்சொனி பார்க்கத் தவறியிருந்த இரண்டாவது விடயம் தான் யாழ்ப்பாணத்தில் பொலீஸாரால் தமிழ் மக்கள் மேல் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் எவ்வாறு நாடுமுழுதுவதற்கும் பரவியது என்பது. தமிழ் மக்கள் மீது நாடு தழுவிய ரீதியில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்குக் காரணமாக இருந்தது யாழ்ப்பாணம் ஆரிய குளத்தருகில் அமைக்கப்பட்டிருந்த நாக விகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொலீஸார் அனுப்பிய ரேடியோத் தகவலே. இந்த ரேடியோச் செய்தி யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகரிடமிருந்து பொலீஸ் மாதிபருக்கு ஆவணி 17 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. "இன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்கள் நான்கு எரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள நாகவிகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்களவர்களைத் தாக்குவதற்காக ரயில்நிலையத்தில் பாரிய கூட்டம் ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, நிலைமை மிக மோசமாக இருக்கிறது" என்று அந்த ரேடியோச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த ரேடியோச் செய்தியில் அனுப்பப்பட்ட அத்தனை தகவல்களும் தவறானவை, பொய்யானவை. ஒரு போக்குவரத்துச் சபை பஸ்தன்னும் எரியூட்டப்படவில்லை. ஆணைக்குழுவின் முன்னால் பலர் அளித்த சாட்சியங்களில் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சில பஸ்களை கடத்திக்கொண்டு யாழ்நகரின் நகைக்கடைகளுக்குச் சென்றது யாழ்ப்பாணப் பொலீஸாரே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நகைக்கடைகளை உடைத்த பொலீஸார் அவற்றைக் கொள்ளையடித்தனர். நாக விகாரை ஒருபோதுமே தாக்குதலுக்குள்ளாக்கப்படவில்லை. ரயிலில் வரும் பயணிகளைத் தாக்கவென ஒரு தமிழர் கூட புகையிரத நிலையத்தில் காத்துக் கிடக்கவில்லை. விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்த போலீஸார் சிலர்கூட அனுப்பப்பட்ட ரேடியோத் தகவல் பொய்யானது என்று கூறியபோது சன்சொனி அதனை ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால், இந்த பொய்யான செய்தி எங்கிருந்து உருவானது? இதன் பின்னால் இருந்தது யார்? ஆணைக்குழுவின் சாட்சியமளித்த பொலீஸ் கொன்ஸ்டபிள் குமாரசாமி, பொலீஸ் தலைமைக் காரியாலயத்தின் தலைமை அதிகாரி குணசேகர தன்னைப் பணித்தன்படியே தான் அந்தத் தகவலைத் தயார் செய்ததாகக் கூறியதுடன் அத்தகவலை ரேடியோ அறையில் பணிபுரியும் ரேடியோ இயக்குநரான ஜேக்கப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும் , குணசேகர தனக்குக் கூறியதன்படி தகவலை தான் எழுதிக்கொண்டிருக்கும்போது, குணசேகரவுடன் பொலீஸ் பரிசோதகர் குருசாமியும் அருகில் இருந்ததாக அவர் கூறியிருந்தார். பின்னர் ரேடியோ இயக்குநர் அத்தகவலை கொழும்பு பொலீஸ் தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்ப, அத்தகவல் நாட்டிலுள்ள அனைத்துப் பொலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குணசேகர பொய்யான தகவலை குமாரசாமியைக் கொண்டு எழுதும்போது தான் அருகில் நிற்கவில்லை என்று முதலில் குருசாமி மறுத்திருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் லெஸ்லி பார்லெட்ட் குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, அத்தகவல் குணசேகரவால் தயார் செய்யப்படும்போது தானும் அருகில் இருந்ததை குருசாமி ஒப்புக்கொண்டதுடன், மேலிடத்திலிருந்து வந்த கட்டளையின்பேரிலேயே அத்தகவலைத் தாங்கள் தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார். பொலீஸாரைத் தொடர்ச்சியாகக் குறுக்கு விசாரனை செய்த லெஸ்லி பார்லெட்ட் பின்வரும் விடயங்களைக் கண்டறிந்திருந்தார். "ஆவணி 17 ஆம் திகதி காலை, பொலீஸ் செயற்பாட்டு அறையில் குருசாமியும், குமாரசாமியும் கடமையில் இருந்தார்கள். காலை 11 மணியளவில் செயற்பாட்டு அறைக்குள் நுளைந்த குணசேகர, குமாரசாமியைப் பார்த்து நான் கூறுவதை அப்படியே எழுதுங்கள் என்று கட்டளையிட்டுவிட்டு பேசத் தொடங்கினார், "4 இ.போ.ச பஸ்வண்டிகள் எரியூட்டப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நாக விகாரை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ரயில்களில் வரும் பயணிகளைத் தாக்குவதற்கு பாரிய குழு ஒன்று புகையிரதநிலையத்தில் காத்துக்கிடக்கிறது. நிலைமை மோசம்" என்று கூறிவிட்டு, இந்தத் தகவலை உடனடியாக பொலீஸ் மா அதிபருக்கு ரேடியோ மூலம் அறிவிக்குமாறு குணசேகர குமாரசாமியைப் பணிக்கிறார். அருகில் இருந்த குருசாமியும், குமாரசாமியிடம் அத்தகவலை உடனடியாக அனுப்புமாறு அழுத்தம் கொடுக்கிறார். அதன்பிறகு அத்தகவலை எடுத்துச் சென்று ரேடியோ அறையில் கடமையிலிருந்த ரேடியோ இயக்குநர் ஜேக்கப்பிடம், குமாரசாமி கொடுத்துவிடுகிறார். இறுதியாக ஜேக்கப்பினால் அத்தகவல் 11 மணிக்கு பொலீஸ் மாதி அபருக்கு அனுப்பப்படுகிறது". "இத்தகவலைப் பெற்றுக்கொண்ட கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தின் ரேடியோப் பிரிவு இத்தகவல் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று யாழ்ப்பாண பொலீஸ் ரேடியோப் பிரிவிற்கு தகவல் அனுப்புகிறது. பொலீஸ் பரிசோதகர் குருசாமி உடனடியாக ரேடியோ அறைக்கு அழைக்கப்படுகிறார். குருசாமி 11:05 இற்கு அளித்த ரேடியோப் பதில் இப்படிக் கூறியது, " எனது தற்போதைய தகவலுக்கு மேலதிகமாக வேறு தகவல்கள் இல்லை, இத்தகவலை புறக்கணியுங்கள், வேறு தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் - இப்படிக்கு யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "காலை 11:20 இற்கு, யாழ்ப்பாண ரேடியோ அறைக்கு பொலீஸ் மா அதிபரிடமிருந்து பின்வரும் கட்டளை கிடைத்தது, "கடற்படையினர் நாக விகாரைக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். நாக விகாரையின் பாதுகாப்பிற்கு காவலர்களை ஒழுங்கு செய்யுங்கள்" . இத்தகவலின் பின்னர் பொலீஸ் மா அதிபரிடமிருந்து வேறெந்த தகவல்களும் வரவில்லை. அதன்பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து வேறெந்த தகவலும் அனுப்பப்படவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவல் தவறானது என்பதையும் போலீஸ் மா அதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவும் எவருக்கும் அறிவிக்கவில்லை. கடைசியாக ரேடியோவில் பகிரப்பட்ட தகவல் 11:20 இற்கு பொலீஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய தகவல் மட்டும்தான். அத்தகவலில் யாழ்ப்பாணத்திலிருந்த இரு பிரதான பெளத்த விகாரைகளுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது. அத்தகவல் எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பிறகு பொலீஸ் ரேடியோ அலைவரிசயில் நிசப்தமே நிலவியது. இந்தச் செய்திகள் அனைத்தும் பொலீஸாரை ஆத்திரப்படவைக்க அவர்கள் எவ்வாறு தமிழ்மக்களுடன் நடந்துகொண்டார்கள் என்பதை விசாரணைக் குழுவிற்குக் கிடைத்த ஆதாரங்கள் விளக்கியிருந்தன. விசாரணைகளின்போது, பொய்யான பொலீஸ் செய்தியத் தயாரித்தது யாரென்பதை மறைக்க பொலீஸார் பகீரதப் பிரயத்தனத்தனத்தில் ஈடுபட்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பொய்களை மறைக்கும் கைங்கரியம் குருசாமியிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. முதலில், அத்தகவல் தயாரிக்கப்படும்போது குணசேகரவுடன் தானும் குமாரசாமியின் அருகில் இருந்ததை அவர் மறுத்திருந்தார். பின்னர், குணசேகர அத்தகவலை தயாரிக்குமாறு குமாரசாமிக்குக் கட்டளையிடவில்லை என்று அவர் கூறினார். ஒருகட்டத்தில் அத்தகவலை யார் தயாரித்தார்கள் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். ஆனால், குமாரசாமியுடன் சேர்ந்து தான் அத்தகவலை கொழும்பிற்கு அனுப்பி சரியாக 5 நிமிடங்களில் கொழும்பிலிருந்து தாம் அனுப்பிய தகவலை உறுதிப்படுத்துமாறு தகவலொன்று வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். குமாரசாமி கைப்பட எழுதிய முதலாவது தகவலை தான் கண்ணுற்றதாகவும், பின்னர் அத்தகவல் தவறானது, மேலதிக தகவல்களுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியதாகவும் குருசாமி கூறினார். குணசேகரவும் முதலில் அத்தகவலைத் தான் தயாரிக்கவில்லை என்று மறுத்தார். அத்தகவல் குறித்து முதன்முதலாக தான் கேள்விப்பட்டது புரட்டாதியில் விசாரணைக் குழுவினரூடாகத்தான் என்று கூறினார். வழக்கறிஞர் லெஸ்லி பாட்லெட், குருசாமியைக் குறுக்கு விசாரணை செய்தபோது, தனது மேலதிகாரிகளிடமிருந்து வந்த கட்டளையின்படி செயலாற்றியிருக்கும் குருசாமி, முதலில் அனுப்பப்பட்ட பொய்யான தகவலை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்தபோதும் வேண்டுமென்றே தாமதித்து 10 நிமிடங்களின் பின்னரே அத்தகவல் தவறானது, வேறு தகவலுக்காகக் காத்திருங்கள் என்று கொழும்பிற்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். மேலும், மேலிடத்து அழுத்தத்தினால், குருசாமி தவறான தகவல்பற்றிய மேலதிக விபரங்களை கொழும்பிற்கு தெரிவிக்காதும் விட்டிருக்கிறார் என்று கூறினார். விசாரணைகளின் முடிவில் மனமுடைந்து அழுத குருசாமி, அத்தகவல் பொய்யானதென்று தனக்குத் தெரியும் என்றும், பொய்யொன்றையே தாம் செய்தியாக ரேடியோவூடாக அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டார். இறுதியாக வாக்குமூலமளித்த குருசாமி, தனது மேலதிகாரிகளின் சதியே இவற்றிற்கான காரணம் என்று கூறியதுடன், தனக்கும் இச்சதிக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார். லெஸ்லி பார்லெட் முன்வைத்த தனது அறிக்கையில், பொலீஸ் ரேடியோச் சேவையூடாக வேண்டுமென்றே பொய்யான தகவலை அனுப்பிய பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ணவும் ஏனைய உயர் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாது என்று எழுதியிருந்தார். "பொய்யான தகவல் பரப்பப்பட்டபோது பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண, பொலீஸ் அத்தியட்சகர் ஏ. எஸ். செனிவிரட்ண, பொலீஸ் தலைமையக பரிசோதகர் குணசேகர ஆகியோர் தத்தமது செயற்பாட்டு அறைகளில் இருந்திருக்கின்றனர், ஆகவே இவர்களே இந்தப் பொய்யான தகவல் நாடு முழுவதற்கும் பரப்பப்படக் காரணமானவர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை" என்று லெஸ்லி பார்ட்லெட் முன்வைத்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள மறுத்த சன்சொனி, இதனை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று கூறினார். ஆகவே, இப்பொய்யான தகவலை யார் தயாரித்திருப்பார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறி கையை விரித்துவிட்டார். மேலே குறிப்பிடப்பட்ட இரு முக்கியமான கேள்விகளுக்குமான பதிலை சன்சொனி தேடியிருந்தால், 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்பதை மிக இலகுவாக அவரால் கண்டுபிடித்திருக்க முடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பரம வைரியும், ஆய்வாளருமான ராஜன் ஹூலின் கருத்துப்படி தமது புதிய அரசியல் எஜமானர்களான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் கட்டளையின்பேரிலேயே பொலீஸார் இந்த வன்முறைகளைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கூறுகிறார். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், தமிழரின் விடுதலை வேட்கையினை அடக்குவதற்கு அவர்கள் மீதான இனவன்முறையே கட்டாயமான ஆயுதமாகப் பாவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ் மிதவாதிகளுடன் தொடர்பாடலைப் பேணுவதற்கான கதவினை அவர் இறுக மூடிக்கொண்டார். இரு வருடங்கள் கழித்து, 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்டம் எனும் புதிய சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் ஜனநாயக வழியிலான தீர்விற்கான முழுக்கதவினையும் அடைத்துக்கொண்டதோடு, பொலீஸாருக்கும், இராணுவத்திற்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை அள்ளி வழங்கி மிதவாதத் தமிழர்கள் மீது ஆயுத வன்முறையினையும் கட்டவிழ்த்து விட்டார்.
  22. பொலீஸ் பயங்கரவாதம் பொலீஸ் பயங்கரவாதி - அனா செனிவிரட்ண யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பகையுணர்வு என்பது பல வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயம். குறிப்பாக 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 11 அப்பாவிகள் கொல்லப்படக் காரணமான பொலீஸாரின் அடாவடித்தனம் இடம்பெற்ற காலத்திலிருந்து இந்தப் பகைமையுணர்வு அதிகரித்தே வந்திருந்தது. ஆனால், பொலீஸாரின் தமிழ் மக்கள் மீதான இந்த வன்மத்தை சன்சொனி பார்க்க விரும்பவில்லை. மேலும், 1974 ஆம் ஆண்டுப் படுகொலையில் நீதிபதி கிரெஸ்டர் அளித்த தீர்ப்பில் பொதுமக்களின் கொலைக்கு பொலீஸாரின் நடவடிக்கைகளே காரணம் எனும் முடிவை பொய்யாக்க பொலீஸாருக்கு ஒரு சந்தர்ப்பத்தையும் சன்சொனி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். மேலும், தமிழ் மக்களுக்கு சரியான பாடம் ஒன்றினைப் புகட்டவேண்டும் என்று செயலாற்றிய அனைத்துப் பொலீஸ் அதிகாரிகளும் பதவியுயர்வுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றதற்காக சிறிமாவினால் உதவி பொலிஸ் அத்தியட்சகரான சந்திரசேகரவிற்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது போன்றே, 1977 ஆம் ஆண்டு பொலீஸார் நடத்திய படுகொலைகளுக்காக அனா செனிவிரட்ண, ஜெயவர்த்தனவினால் பொலீஸ் மாதிபராக பதவியுயர்வு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இந்தப் பதவி உயர்வு பொலீஸார் மீதான குற்றச்சாட்டுக்களை சன்சொனி விசாரித்துவந்த நிலையிலேயே நடந்தேறியது என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் யாழ்ப்பாண பொலீஸ் அத்தியட்சகர் உதவிப் பொலீஸ் மாதிபராகவும், யாழ்ப்பாணத் தாக்குதல்களில் முன்னின்று செயலாற்றிய ரொனி குணசிங்க, ஏ எஸ் செனிவிரட்ணவின் உதவியாளராகவும் பதவியுயர்த்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் சந்தைப்பகுதியை பொலீஸார் எரித்துக்கொண்டிருந்தவேளை அப்பகுதிக்குச் சென்றிருந்த கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வாக்குமூலம் பின்வருமாறு, " 15 ஆம் திகதி இரவு யாழ்ப்பான நகரின் பல பகுதிகளில் தீவைக்கப்பட்டிருப்பதாகவும், பொலீஸாரே கடைகளுக்குத் தீ வைப்பதாகவும் எமக்குச் செய்தி கிடைத்தது. பல இளைஞர்கள் அப்பகுதி நோக்கி அவசரமாகச் சென்றுகொண்டிருந்தனர். என்னை எக்காரணம் கொண்டும் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது என்று கூறிவிட்டு எனது மூத்த சகோதரனும் யாழ்நகரப்பகுதிக்கு விரைந்தார். ஆனால், நானும், எனது வயதினை ஒத்த சில நண்பர்களும் வைத்திய சாலை வீதியும், காங்கேசந்துறை வீதியும் சந்திக்கும் இடத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் ஒளிந்துகொண்டு, எனது சகோதரனின் கண்ணில்ப் படாமல் நடப்பதை அவதானிக்கத் தொடங்கினோம். நாங்கள் பொலீஸாரையும் அவரது வாகனங்களையும் நகரத்தில் கண்டோம். சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன. தெய்வாதீனமாக அவர்கள் கண்களில் நாங்கள் படவில்லை". "சில மூத்தவர்கள் டயர்களை இழுத்துவந்து காங்கேசந்துறை வீதிக்குக் குறுக்கே குவியலாகப் போட்டு தீமூட்டினார்கள். பொலீஸார் நாம் இருந்த பக்கம் வருவதைத் தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அப்படியிருந்தும், நாமிருந்த பக்கத்திற்கு அருகில் வந்த பொலீஸார் வீதிகளின் பெயர்களைத் தாங்கி நின்ற பெயர்ப்பலகைகளை கீழே இழுத்து வீழ்த்தினார்கள். பெயர்ப்பலகைகள் பொறுத்தப்பட்டிருந்த தூண்களைக் கொண்டு எரிந்துகொண்டிருந்த டயர்களை ஒவ்வொன்றாக இழுத்துச் சென்று எரிபொருட்கள் சேமிக்கப்பட்ட கடைகள் மீதும், பழைய சந்தைமீதும் அவர்கள் எறிந்த போது அவை தீப்பிடிக்கத் தொடங்கின. நாம் அவர்கள் மீது கற்களை எறிய ஆரம்பித்தோம். எம்மைப்போன்றே பலரும் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தவே அவர்கள் ஓடிச்சென்று தமது வாகனங்களில் ஏறித் தப்பிச் சென்றார்கள்". "மறுநாள் காலை நான் பாடசாலைக்குச் செல்லும்போது, வங்கியின் காவலுக்கு வந்த இரு பொலீஸ்காரர்களிடமிருந்து அவர்களின் ஆயுதங்களைப் பொதுமக்கள் பறித்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அவர்களில் ஒருவர் தாக்கப்படுவதையும் நான் கண்டேன். எனது பாடசாலைப்பையிலிருந்த வட்டாரியினைக் கொண்டு அந்தப் பொலீஸ்காரரின் தொடையில் குத்தி விட்டு பாடசாலைக்குச் சென்றேன். ஒரு துப்பாக்கி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மற்றையதைப் பறித்தவர்கள் அதனை வெளியே வைத்துவிட்டு தேநீர் அருந்தச் சென்றவேளை அங்கு வந்த பொலீஸார் அதனை எடுத்துச் சென்றார்கள்" என்று கூறினார்.
  23. ஒரே மூச்சில் 3, 4 பாகங்களை வாசித்து விட்டேன். பொதுவாக எனக்கு வரலாறு பிடித்தமான ஒன்று அல்ல. வரலாறு சார்ந்த புனைவு நாவல்களைக் கூட விரும்பி வாசிப்பதில்லை. ஆயினும், ஜஸ்ரினது எழுத்து நடையும், அவர் சொல்ல வரும் மையக் கருத்தை (இன்றைய ரஷ்யா - உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பான) நோக்கிய துல்லியமான நகர்வும் வாசிப்பை சுவாரசியமாக்கியுள்ளன.
  24. முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்.. கன்பரா - ஒரு கட்டிடத்தில் இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது..
  25. இரெண்டுமே பிரச்சனைதான் மீரா. 1. நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை. இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது. போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார். இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது. இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள். நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம். இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான். 2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர். இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும். முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣. அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣? நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும். நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣. வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள். அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது. ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.
  26. தரமான கவிதை... வேறுபாடன கோணத்தில் பழையவற்றை எழுதியுள்ளீர்கள்.
  27. உதயன் மிகவும் அருமையான கவிதை. என்னை மறந்து சந்தத்தோடு லயித்து வாசித்த கவிதை இது. நன்றி.
  28. வரிகள் அருமை .பாராட்டுக்கள். கனவுகளைத் தொலைத்து நினைவாலே தேடுகிறோம்.
  29. இருந்தவற்றை நினைத்து ஏங்கிய கவிதை. உதயன்.. இதனை சுய ஆக்கம் பகுதியில் பதிந்தால் நன்றாக இருக்கும்.
  30. காலமாற்றமா? திட்டமிட்ட மாற்றமா? யாமறியோம் பராபரமே. இருப்பைத் தொலைத்த மனிதர்களானோம்.
  31. அருமையான கவிதை உதயன். நன்றி !
  32. நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும்.
  33. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3). "லா சப்பல்" யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள். கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன. சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது. ---ஹலோ....ஓ....ஓ நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க , அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் ..... ---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ.... --- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள். --- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள். --- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும். --- சுமதியும் அவளிடம், பிரேமா நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான். அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ. --- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன். ---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல ....... ---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன். --- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன். பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான் இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு என்று சொல்லி விட்டு போகிறாள். அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள். இன்னும் தைப்பார்கள் ..........! 👗
  34. பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு நிரப்பி, மேலதிகமாகவும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த போதுமாயிருந்தன. இருவரும் கிண்டல் அடிப்பதில் ஆளை ஆள் சளைத்தவர்கள் இல்லை என்பது மேலும் அவர்கள் நட்பை எப்போதும் கலகலப்பான உறவாக வைத்திருந்தது. இவனின் மெசேஜை பார்த்ததில் இருந்து, அவனுக்கு கொஞ்சம் கலக்கலாமகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் இப்படியான pranks செய்வதும் வழமைதான். அதுபோல் இதுவும் இவனின் குழப்படிகளில் ஒன்றாக இருக்கலாம். போன கிழமை கூட வாட்சப்பில் மாவீரர் நாளுக்கு இவன் எழுதியதை வாசித்து விட்டு, அவன் ஒரு தெரியாத நம்பரில் இருந்து கோல் எடுத்து சிங்களத்தில் “மாத்தையா டக்சி ஓடர் பண்ணீர்கள், வீட்டுக்கு வெள்ளை வான் ஒன்று அனுப்பவா” என கேட்டு கலாய்திருந்தான். இதுவும் அதுக்கான இவனின் பதிலடியாக இருக்கலாம். ஆனால் அவனின் உள்ளுணர்வு இது ஏதோ வேறு பிசகு என கூறியது. பரவாயில்லை இன்றைக்கு வேர்க் புரொம் ஹோம்தான், நல்ல வேளையாக வேலை போனையும் கையோடு எடுத்து வந்தது வசதியாக போய்விட்டது. வேர்க் புரொம் ஹோம் என்றாலே வேலையை தவிர மிச்சம் எல்லாம் செய்யும் நாள் என்பது எழுதப்படாத சட்டம் ஆகி விட்ட நாட்டில் அவன் மட்டும் என்ன விதி விலக்கா? கார் கழுவுவது, உடுப்பு தோய்ப்பது, ஆருக்கும் சம்பளம் வாங்காமல் அட்வைஸ் கொடுப்பது, யாழிலும் வட்சாப்பிலும் உழட்டுவது, இடைக்கிடையே, முதலாளி பாவம் எண்டு கொஞ்சம் வேலையும் செய்வது. இதுதான் அவனின் இந்த வேர்க் புரொம் ஹோம் நாட்களின் ரூட்டின். ஆகவே அருகில் இருக்கும் டெஸ்கோவில் காரை விட்டு விட்டு என்ன எண்டு கேட்போம் என நினைத்தவாறே காரை டெஸ்கோ கார்பார்க்குக்குள் விரட்டினான் அவன். என்ன மச்சான் ஓகேயா? அவனின் கேள்விக்கு பதில் வர தாமதித்தது…. மச்சான்…டேய்…என்னடா மெசேஜ் போட்டிருந்தாய்…என்ன ஏர்ஜெண்ட் மட்டர்? தொண்டையை கனத்தபடி இவன் பேசத்தொடங்கினான்….. ஐ’ ம் குட் படி. ஐ டு ஹாவ் எ குவஸ்யன் போர் யூ…. டேய் லூஸ் விளையாட்டு விளாடாத…வேலை கடுப்பில நிக்கிறன் பிறகு அடிக்கிறன்…. நோ..நோ…லிசின் மேட்… ஐயம் சீரியஸ் எபவுட் திஸ்… அட்சரம் பிசகாத லண்டன் உழைக்கும் வர்க்க ஆங்கில உச்சரிப்பில்…. தன் பிரச்சனையை எடுத்து சொல்ல ஆரம்பித்து இருந்தான்…. வாழ்வில் என்றுமே இங்கிலாந்துக்கு வந்தே இராத, பிரித்தானியாவுடன் எந்தவித பரிச்சயமும் இல்லாத இவன். (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  35. எமது மக்கள் அதிகம் குடியேற விரும்புவது G7 + Au+NZ இல் தான் என நான் நினைக்கிறேன். இந்த 9 நாட்டில் எங்கே போவது என்பதில் பலருக்கு அதிகம் தெரிவு இருப்பதில்லை. எங்கே மாணவ, வேலை வீசா கிடைக்கிறதோ, எங்கே மனைவி/கணவன் அமைகிறாரோ, எங்கே ஏஜென்ட் கொண்டுபோய் விடுகிறாரோ, அல்லது எங்கே குடும்பத்தினர், ஊர்காரார் ஏலவே உள்ளார்களோ - அதுவே தெரிவாகிறது. இது முடியாதவர்கள்தான் அடுத்த தெரிவாக எனைய வெப்ப வலய நாடுகளில் குடியேறுகிறனர். அதிலும் சிங்கபூர் போவோர் மட்டுமே நிரந்தரமாக தங்குகிறனர். மேலோட்டமாக பார்த்தால் இது முழுக்க முழுக்க பொருளாதார அடிப்படையான முடிவாக தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த பொருளாதார முன்னேற்றம் கட்டி எழுப்பபட்டுள்ளது இந்த நாடுகளில் இருக்கும் ஓப்பீட்டளவு மேம்பட்ட ஜனநாயகத்தில், வியாபாரம் செய்வது உட்பட்ட மனித சுதந்திரம் மதிக்கப்படுவதிலும், சட்டத்தின் மேலாண்மையிலுமே. உதாரணமாக, ஒரு தமிழர் அம்பாந்தோட்டையிலோ, அபுதாபியிலோ கடை திறந்தால் - அது எந்த நேரமும் பறிக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற/நிச்சயமற்ற தன்மையை உணர்வார். ஆனால் அடிலேடில் கடை திறந்தால் அப்படி பறிக்கப்படுவதில் இருந்து அவுஸ்ரேலிய சட்டம் தன்னை பாதுகாக்கும் என உணர்கிறார். அதனால் முதலையும், உழைப்பையும் முதலிடுகிறார். இதில் உள்ளூர்காரர் (native) என்பதை விட அந்த நாட்டின் ஜனநாயக சுட்டி எங்கே உள்ளது என்பதே பிரதானமாகிறது. தமிழர்கள் G7+ ANZ ஐ தேடி வரும் காரணம் - பாதுகாப்பு - அதில் பெளதீக, பொருளாதார, சிந்தனை, கலாச்சார, மத, கல்வி பாதுகாப்பு+சுதந்திரம் அடங்கியுள்ளது.
  36. பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂 நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க…. அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது… என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍 நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪
  37. நீங்கள் கேட்ட கேள்வியை, இன்று காலை பெடியனிடம் கேட்ட போது… அவன் சிறிதும் யோசிக்காமல், படாரென்று கூறிய மூன்று காரணங்களை கேட்டு எனக்கு ஆச்சரியமாக போய் விட்டது. ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் கூட இலங்கையில் வசிப்பாராம், ஆனால்… நிரந்தரமாக வசிக்க ஜேர்மனிதான் தனது சிறந்த தெரிவு என்றான். 1) இலங்கையில்… உறவுகள், நட்புகள், கை நிறைய சம்பளம் இருந்தாலும், தன்னுடைய முதுமை காலத்தில்… அங்கு வாழ்வதற்குரிய பாதுகாப்பு இல்லையாம். 2) மருந்து தட்டுப்பாட்டை நேரில் பார்த்து அனுபவித்து இருக்கின்றான். இவன் அங்கு கூடுதலாக உல்லாசப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் குடும்பங்களின் வீடுகளில்தான் தங்கி உள்ளான். ஒரு நாள் அந்த வீட்டில் இருந்த முதியவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாம், அவர்கள் அந்த நகரத்தில் உள்ள எந்த மருந்துக் கடையிலும் அதற்குரிய மருந்து இல்லை. இவனுடைய நண்பி ஜேர்மனியில் உள்ள வைத்தியசாலையில் அவசரகால மருத்துவ சேவைப் பகுதியில் வேலை செய்யும் நர்ஸ் என்ற படியால் இவர்கள் கொண்டு சென்ற முதலுதவி மருத்துவ பைக்குள், சிறுநீரக தொற்றுக்கான மருந்தும் இருந்துள்ளது. அவர்கள் கொடுத்த நான்கு குளிசைகளில் அந்த முதியவரின் நோய் குணமாகி விட்டதாம். முதலில் அவர்கள் மருந்து இல்லாமல் அவர்கள் கஸ்ரப் பட்டதையும், மருந்து கொடுத்து குணமாகியதன் பின் அவர்களின் முகத்தில் கண்ட மகிழ்ச்சியும்… அவர்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது. தாங்கள் இங்கு வாங்கிக் கொண்டு போன மருத்துவ பொதியின் விலை 100 € தானாம். அது அங்கு ஒருவரின் நோயை குணப்படுத்த உதவியது மகிழ்ச்சியாக இருந்ததாம். 3) முக்கியமானது அங்கு உள்ள அரசியல் பாதுகாப்பற்ற தன்மை. அரசியல்வாதிகள்… நாட்டை சீனா, இந்தியா, அமெரிக்காவுக்கு விற்று விட்டார்களாம். இனி விற்பதற்கு அங்கு ஒன்றும் இல்லையாம். அப்படி உள்ள நாட்டில் எப்படி நிரந்தரமாக வசிப்பது என்று கேட்கிறான். 🙂 ### அவனது பதிலை பார்த்து உங்களது கருத்தை, அறிய ஆவல். ### 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.