Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46798
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87993
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    32015
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/01/23 in Posts

  1. வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா?? அவர்களுடன் பேசி இருக்கின்றோமா? என்றால் இல்லை என்பது தானே எமது பதில்? நான் அப்படி யாரும் அருகில் வந்தால் அல்லது அவர்களின் பக்கத்தால் போகவேண்டி வந்தால் கடந்து செல்லும்வரை மூச்சை நிறுத்துபவன் அல்லது முகத்தை முழுமையாக கிடைப்பதால் மூடுபவன் நான். ஆனால் அவர்களும் மனிதர்கள் இந்த நிலைக்கு அவர்கள் வர ஏதாவது வலுவான காரணமுண்டல்லவா? நாம் சிந்தித்துண்டா? முதன் முதலில் வீதிக்கு வரத்தான் கடினமாக இருக்கும் வந்துவிட்டால்??? இப்படித்தான் பாரிசின் வீதிகளில் பல நூறுபேர்... நான் கண்டு கொண்டதில்லை எந்த உதவியும் செய்ததில்லை கண்டால் மூச்சையே நிறுத்துபவனால் எப்படி அருகில் சென்று உதவமுடியும்?? அண்மையில் எனது சின்ன மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் எனது கடைக்கு பக்கத்தில் இவ்வாறு வீதியில் இருக்கும் ஒரு பெண்ணைக்கண்டதும் நான் முகத்தை மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகல எனது மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தாள் என்ன என்று கேட்க அவருக்காக ஒரு சாப்பாடு தான் வாங்கி வந்ததாக சொன்னாள். இப்படி பலரும் அவளுக்கு சாப்பாடும் தண்ணீரும் உடுப்புக்களும் கொடுப்பதை பலமுறை நானும் கண்டிருக்கின்றேன் ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது என்பதும் இவர்கள் தங்க பல இடங்களை அரசு ஒதுக்கி இருக்கிறது ஆனால் இவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை இருந்தது நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர் வந்தார் அந்த பெண்ணுடன் இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு வந்தது அதனால் இவரிடம் எனது மகளும் சாப்பாடு கொடுத்ததை சொல்லி இவர்கள் பற்றிய அவரது கருத்தைக்கேட்டேன் அவர் சொன்னார் ஏன் இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா? அரச ஒதுக்கும் இடங்களில் வீதிகளில் நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள் அங்கே ஆண்களே வல்லுறவுக்கு தப்பமுடியாதபோது பெண்களின் நிலை என்ன??? என்றார் தூக்கிவாரிப்போட்டது எனக்கு... உலகில் எவ்வளவு விடயங்களை அறியாமல் விமர்சனமும் வியாக்கியானமும் கேலிகளும் செய்தபடி வாழ்கிறோம்???? யாழுக்காக விசுகு...............
  2. இங்கே ஒரு வாழ்வு இருந்தது அங்கே ஒரு கதை இருந்தது அதிலும் ஒரு அறம் இருந்தது அப்போ எல்லாம் அழகு இருந்தது வீடு இருந்தது மரம் இருந்தது மரத்தில் பல பறவை இருந்தது பாடி இருந்தது கூடி இருந்தது பல குஞ்சுகள் அங்கு கூவி இருந்தது நிலவும் இருந்தது கனவும் இருந்தது நித்தம் இசைக்கும் பாடல் இருந்தது ஆட்டம் இருந்தது கூத்தும் இருந்தது எங்கும் சலங்கை ஒலியாய் இருந்தது நதி இருந்தது கடல் இருந்தது பூ இருந்தது கனியும் இருந்தது அருகில் எங்கும் ஆலயம் இருந்தது அங்கே ஒலிக்கும் மணி இருந்தது பள்ளி இருந்தது படிப்பும் இருந்தது துள்ளித் திரிந்த காலம் ஒன்றிருந்தது அடிக்கடி கூடும் நண்பர் இருந்தனர் அணைத்து எம்மை தாங்கும் ஆலமரமிருந்தது கோவில் இருந்தது சாமி இருந்தது வருடா வருடம் திருவிழா நடந்தது அம்மன் ஆடி வரும் தேரும் இருந்தது அதை விட அழகு எது தான் இருந்தது அறிவு இருந்தது தேடல் இருந்தது ஆயிரம் பள்ளிகள் அருகில் இருந்தது கலை இருந்தது தமிழ் மொழி இருந்தது காக்கவென்றொரு தெய்வம் இருந்தது மார்கழி மாதம் ஊர்களில் எல்லாம் கூவுத் திரியும் குயில்கள் இருந்தனர் பூவும் ஆட கூந்தலும் ஆட கண்கள் ஆலே கவிதைகள் பேசி சந்திரன் போலே பெண்கள் இருந்தனர் காதல் இருந்தது கனிவும் இருந்தது பாசம் இருந்தது நேசம் இருந்தது பங்கு பிரித்து உண்ணும் வாழ்வு இருந்தது உண்மை இருந்தது நேர்மை இருந்தது நீரும் இருந்தது நெருப்பும் இருந்தது நித்திய வாழ்வினில் சத்தியம் இருந்தது அறமும் இருந்தது தர்மமும் இருந்தது அழியாப் பிரம்ம ஜோதி எரிந்தது இத்தனை வாழ்வும் எங்கே போனது எத்தனை கனவுகள் வந்து போகுதே இன்னும் கனவுகள் உயிர்க்கவில்லையா எமக்காய் இரவுகள் விடியவில்லையா எங்கே கனவுகள் தொலைந்து போனதா. பா.உதயன்✍️
  3. அய்யய்யயோ நாங்கள் கந்தர்மடம் காப்புரிமை எடுக்க முதல் சுவி வீட்டில் இருந்து யூரோப் முழுவதும் பிரபல்யம் ஆகி விட்டதே (தோட்டுரிமையோட😂) ஆனால் உண்மையிலேயே உடையார் ஒழுங்கை நாவலர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து அப்பம்மாவின் வளவில் ஆறு மாதத்துக்கு போதுமான தூள் சம்பல் இடிப்பித்து எல்லாக்குடும்பக்களிடையும் பிரித்து எடுத்ததைப்போல நான் வேறெங்கும் பார்க்கவில்லை. நாலு மா இடிக்கும் பெண்கள் விடியவே வந்து கடலைப்பருப்பு, உளுந்து, பயறு, செத்தல் மிளகாய், கருவேப்பிலை எல்லாம் வறுத்து கல்லுரலில் அருவல் நெருவலாக இடிப்பார்கள். நிறைய தேங்காய் துருவி கருக வறுத்து கொஞ்ச தூள் சம்பலுக்கு அதையும் சேர்த்து செய்வார்கள். இது,தென் இந்தியாவில் செய்யும் இட்லி தோசை பொடி மாதிரி இருக்கும். தோசை, சோறு, பால் சோறு எண்டு எல்லாத்துக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம்
  4. விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன். புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!
  5. ஒரு நவம்பர் மாதத்தில் பொப்பியையும், காந்தழையும் ஒப்பிட்டு என் மகனுக்கு நான் எழுதிய கவிதை கீழே 🙏🏾. நினைவு மாதம் மகனே, போர் இடர் மிகுந்து மானிடர் மடிந்து வானது பிழந்து வல்குண்டு வீழ்கையில் தான் - அதை மறந்து தன்னினம் நினைந்து பூத்திடும் புன்னைகை சூடி சா - அதை துணிந்து செருக்களம் புகுந்து சாக்களம் ஏகிய செல்வர்கள் வானுள்ள வரைக்கும் வையகம் வாழ்த்தும் வயதில்லா வாலிபர் அவர்தாம். இதில் கசகசா ஒன்றே காந்தழும் அதுவே வீரமும், தியாகமும் ஒன்றே.
  6. தையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻
  7. இப்பதான் கதையை வாசிக்க தொடங்கியிருக்கின்றேன்.. இப்படி கஜுவையும் பாதாமையும் சாப்பிட்டால், உரச உரச பற்றும் தீ புரியாணியை வெளுத்துக் கட்டச் சொல்லும் தானே..
  8. உங்களுக்கு நன்றி தெரிவித்து உடனே அமோசானில அனுப்பியிருக்கிறார்.......நான் இப்ப வாசலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறன்......! 😂
  9. அல்லது ஒவ்வொரு திரி பதியும் போதும் Follow என்பது காட்டும். அதை அழுத்தி விடுங்கள்.
  10. வணக்கம் சகோதரி உங்கள் திரியில் யாராவது எழுதுவதை அறிய செற்றிங்கில் போய் Follow என்பதை அழுத்திவிட்டால் உங்கள் பதிவில் யார் எழுதினாலும் உடனே தெரியவரும்.
  11. அவுஸ்ரேலியவிற்கு வந்த ஆரம்பத்தில் இப்படியானவர்களைப் பார்த்தவுடன், “ அட இங்கேயுமா” என்று வியப்பாக இருந்தது.. முன்னேறிய நாடு, பின் தங்கிய நாடு என்ற வேறுபாடில்லாமல் இவர்களைக் காணலாம் என்றதை விளங்கிக்கொள்ளமுடிந்தது.. அப்பாவிகளும் உள்ளனர் அதே நேரம் ஆபத்தானவர்களும் இருக்கிறார்கள்.. பல்வேறு காரணங்களால் வீதிக்கு வந்தவர்களும் உள்ளனர்.. நன்றி விசுகு அண்ணா!!
  12. வெரி சொறி தமிழ்சிறி & நில்மினி ....இது ஏற்கனவே "நல்லூர் கோப்பி" என்னும் பிராண்டில் காப்புரிமை, மோதிர உரிமை எல்லாம் பெற்றாகி விட்டது ...... எனது "சதி" இப்படித்தான் செய்து யூரோப் முழுதும் இருக்கும் தனது, எனது சகோதரங்களுக்கு எல்லாம் அனுப்பி வைக்கிறவ......அவர்களும் இங்கு வரும்போது மறக்காமல் கோப்பிகொட்டை பைக்கற்றுகளுடன் வருவார்கள்........! 😂
  13. இந்த நாய் இதுக்கு மேலே எப்படி ஏறினது, வீட்டுக்காரன்தான் ஏத்தி விட்டு படம் எடுத்திருக்கிறார்......! 😁
  14. நில்மினி.... இதே முறையில், முன்பு அம்மா செய்வார்கள்.நல்ல வாசமாக இருக்கும். 😋 அத்துடன் தடிமன், இருமல் இருந்தாலும்... இதனை குடிக்க நல்ல பலன் கிடைக்கும். 🙂 இந்தக் கோப்பி.... "கந்தர்மடம் ஸ்பெஷல்" போலுள்ளது. 😂 இப்படி கோப்பி அரைக்கும் முறையை, காப்புரிமை (Copyright) எடுத்து வைக்க வேணும். 😎 இல்லாட்டி... மற்ற ஊர்க்காரர், தங்கடை ஊர் கோப்பி என்று உரிமை கொண்டாடுவார்கள். 😜
  15. அம்மா செய்யும் மூலிகை கோப்பி: கொத்தமல்லி, சீரகம், ஓமம், மிளகு, வேர்க்கொம்பு, ஓரிரு கராம்பு, ஏலக்காய் எல்லாம் கருக வறுத்து, விரும்பினால் கொஞ்ச கோப்பியையும் வறுத்து நன்றாக அரைத்து ஆறவைத்து போத்தலில் போட்டு வைத்தால் 6 மாசம் வரை இருக்கும். கருப்பட்டியுடன் குடிக்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம்
  16. நான் கார் மூலம் தூர பயணங்கள் வரும் போது ஓரிரு கோப்பிகள் குடிப்பேன். மற்றும் படி தொடுவதில்லை. வீட்டில் கோப்பி மெசின் கூட இல்லை. தேநீரும் அதிகம் இல்லை. சுடுதண்ணீர் அல்லது மூலிகை தண்ணீர் மட்டுமே. கோப்பி குடித்தால் பிரசர் உச்சத்தை தொடுது
  17. நான் இந்த நாசம் கெட்ட கோலா பெப்சி எதுவுமே தொடுவதில்லை பச்சை தண்ணிதான் ஆனாலும் இந்த coffee latte அடிமையாக்கியுள்ளது எனது கெட்ட நேரம் .
  18. ருசி எப்படித்தான் இருந்தாலும் கோலா சுகாதாரத்திற்கு கேடான பானமாக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து கொண்டு வருகின்றதே?
  19. நல்ல சுவாரசியமான ஒரு பயணக் கட்டுரை நில்மினி. நீங்கள் 2017 இல் உங்களது ஒரு பதிலில் மடகஸ்கார் பற்றி குறிப்பிட்டு இருந்ததைக் கண்டவுடன், அது பற்றி எழுத முடியுமா என நான் கேட்டது நினைவு. வெளினாட்டு பயணிகள் பலரை கவரும் நாடாகவும், மாணிக்க கற்கள் விளையும் பூமியுமாக இருப்பினும் இவர்கள் ஏன் 500 வருடங்களுக்கு முற்பட்ட வாழ்க்கையைப் போன்று வறுமையாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் 13 நாட்களுக்கு அமெரிக்க டொலர் 12000 அறவிடும் விடுதிகளை கொண்ட ஒரு நாட்டில்.
  20. அப்புறம் இன்னும் கலியாணம். கட்டவில்லையா. ?🤣. அப்படியென்றால் வேறு நபர்களை மாற்றி கட்டி விடுவார்கள்....
  21. இதிலும் பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடல் வேண்டும். பொதுவாக கேட்போருக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி, உடைத்து நான் ஒன்றை எடுத்து விட்டு (கடையில் கொடுத்து காசாக்கி குடு/குடிப்பதை தடுக்க) மிகுதியை கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் வீதி விளக்கில் நின்று யாசகம் எடுப்பவர்கள் பலர் இவ்வாறு உணவை வாங்க மாட்டார்கள். அல்லது வேண்டா வெறுப்பாக வாங்குவார். தொடர்ந்து போகும் வழி என்றால் - அடுத்து உங்கள் காரை தவிர்த்து விட்டு (இந்த லூசன் பிஸ்கெட்தான் தருவான்🤣) அடுத்த காருக்கு போவார்கள். அவர்கள் செய்வது வேலை. மாபியாக்கள் முதலாளிகள். நான் கடவுள் படம் தத்திரூபமாக காட்டி இருக்கும். அதே போல் ஒரு சாண்ட்விச் வாங்கி தா என கேட்பவரும் உண்டு. இங்கே இப்படி பாவம் பார்த்து வீட்டை கொண்டு போய் வச்சு, வேலையும் எடுத்து கொடுத்த ஆட்களை திரும்பி ஒருநாள் திடீரென வந்து குத்து கொண்டதும் உண்டு. தாயும் 13 மகனும் அவுட். தந்தைக்கு பலத்த காயம். https://www.independent.co.uk/news/uk/crime/mother-and-son-killed-stourbridge-west-midlands-took-homeless-man-in-tracey-peter-pirece-wilkinson-tripple-stabbing-a7661501.html?amp
  22. வயர் இல்லாத, செக்கூரிட்டி கமெரா. 🤣 🐕‍🦺
  23. யாராவது மனசாட்சியை தொட்டு ,நெஞ்சை நிமிர்த்து சொல்லுங்கள் பார்ப்போம் சிங்களவனது இன துவேசத்தால் பாதிக்கப்பட்டு ,குடும்ப உறவுகளை எல்லாம் பழி கொடுத்து,சொத்து சுகங்களை எல்லாம் இழந்து வாழ வழியில்லாமல் நாங்கள் நாட்டை விட்டு வந்தோம் என்று ...உண்மையாய் பாதிக்கப்பட்டவன் போராட்டத்திற்கு போனான் ....பொருள் உழைக்கவும் ,வசதி வாய்ப்புக்களை பெருக்கவும் புலம் பேந்து விட்டு கொஞ்சம் கூட சூடு ,சுரணை இல்லாமல் கதைகள் என்றால் ...ஆட்களும் ,மண்டைகளும் 😠
  24. உதயன் நீங்கள் கவிதை எழுதுவதில் வல்லவர் என தெரியும். ஆனாலும் இப்படி ஒரு தரமான கவிதை!?!?!?!?! நன்றி உதயன்
  25. மிகவும் அருமையான கவிதை உதயன். இளமைக்கால நினைவுகள் கண்முன்னே வந்து போனது.
  26. அருமையான கவிதை உதயன் ......இன்றும் எல்லாம் இருக்கிறது ஆனால் இருக்கிற மாதிரி இருக்கிறது கானல் நீர்போல்........! நிர்வாகத்திடம் சொல்லி சுய ஆக்கத்தில் பதியுங்கள், பலரும் பார்ப்பார்கள்......! நன்றி உதயன்......! 👍
  27. உதய்ன்…, கவிதையைப் பல தடவைகள் படித்தேன்..! கவலை மட்டுமே மிஞ்சியது…! வெளிச்சம் வரும் என்று நம்புவோமாக! நண்றி…!
  28. தமிழில் அதிக குத்துக்கள் கொண்ட வசனம்.. இது தான்.
  29. எமது தேசிய பூவைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. இணைப்புக்கு நன்றி சகோதரி.
  30. கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…! என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!
  31. இன்று அதே பாதிக்கப்பட்ட யூத இனம் பலஸ்தீனத்தில் என்ன செய்கின்றார்கள் என உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ஹிட்லர் வருகைக்கு முன் யூதர்கள் ஜேர்மனியில் என்னென்ன அநியாய அக்கிரமங்கள் செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
  32. நீங்கள் same side goal போடுகிறீர்கள். இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள். காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது. இது தான் வேறுபாடு
  33. நான் இழந்துவிட்டேன். 😂 என்ன கூகிள் இது. இப்பிடி மொழி பெயர்க்கிறியே... 🤣
  34. நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் ...அமெரிக்காவில் இருந்து எத்தனையோ பேர் பல வித காரணங்களுக்காய் வேறு நாடுகளில் போய் குடியிருக்கிறார்கள் ...அதற்காய் அமெரிக்கா வாழ தகுதியில்லாத நாடு என்றாகிவிடுமா?..எல்லோரும் தங்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப வாழ்க்கையை தெரிவு செய்கிறார்கள்...அது பிழையில்லை ...ஆனால் அதற்கு பிறகு தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் மாறி எழுதுகிறார்கள் பாருங்கோ அதைத் தான் நான் உட்பட பலர் பிழை என்கிறார்கள்
  35. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பல வகையான லெமூலர் விலங்குகள் வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக அழியும் அபாயத்தில் உள்ளன. அதனால்மடகாஸ்கர் தீவிலுள்ள பல காடுகளையும் சரணாலயங்களாக மாற்றி இந்த லெமூர் விலங்குகள், பச்சோந்திகள் மற்றும் தாவர விலங்கினங்களை பாதுகாக்கிறார்கள். எலி மாதிரி காதுகளும், நீண்ட அகண்ட வாலும், வவ்வால் மாதிரி கால்களும் கொண்ட அய்யி அய்யி என்னும் இனம் (மேலே படத்தில் உள்ளது) தன்னுடைய கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறனைப் பயன்படுத்தி உணவின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது. இதனுடைய அடர் பழுப்புநிற விநோதமான உருவ அமைப்பு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் அதிகளவு அழிக்கப்பட்டு அரிய விலங்கின‌த்தினுள் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. இந்த விலங்கை பற்றிய ஒரு சுவாரசியமான செய்தியை அண்மையில் படித்தேன். இந்த இணைப்பில் உள்ளது https://www.bbc.com/tamil/science-63427908 நன்றி. படங்களுக்கு இடையில் சில விளக்கங்களும் எழுதி வருகிறேன். பார்க்கவில்லையா நிலாமதி?
  36. சுவியர் எங்களுக்கும் சேர்த்து தைக்கிறார்.....தைக்கட்டும்....தைக்கட்டும்
  37. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(10). சுமதியும் கதீஜாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு, இவரை நான் புதிதாக வேலைக்கு எடுத்திருக்கிறேன். மிருதுளாவைப் பார்த்து நீ இவளுக்கு இங்கு செய்ய வேண்டிய வேலைகள் பற்றி விளக்கமாய் சொல்லிக் குடு. அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். பின் கதீஜாவிடம் நீ இன்று மதியத்துடன் வீட்டுக்கு போய் விட்டு நாளை காலையில் இருந்து வேலைக்கு வரவும். காலை 08:30 க்கு கடைக்குள் இருக்க வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தி சொல்கிறாள். அவளும் சரி மேடம் என்று சொல்லி விட்டு மிருதுளாவுடன் போகிறாள். பின் சுமதியும் நீங்கள் வேலையைப் பாருங்கள் நான் போட்டு பிறகு வருகிறேன். வெளியே போகிறாள்.....! மதியம் ஒன்டரைக்கு சுமதி கடைக்கு வர அங்கு மிருதுளா,ரோகிணி,கபிரியலோடு கதீஜாவும் நிக்கிறாள். பிரேமா இன்னும் வேலைக்கு வரவில்லை. --- ஏன் கதீஜா நீங்கள் 12:00 மணிக்கே போயிருக்கலாமே. --- பரவாயில்லை மேடம், மிருதுளாவோடு வேலை செய்து கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை.சரி நான் போயிட்டு நாளை காலை எட்டரை மணிக்கு வந்து விடுகிறேன். நன்றி மேடம் என்று சொல்லி விட்டு போகிறாள். வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டரைக்கு பிரேமா அங்கு வருகிறாள். அப்போதும் அங்கு சுமதியைப் பார்த்ததும் அவளுக்கு ஒருமாதிரி இருக்கிறது. நேரம் 15:00 மணி.சுமதி ரோகிணியை கூட்டிக் கொண்டு தனது ஆபீஸ் அறைக்குப் போகிறாள். அங்கு ஒரு நீளமான மேசையும் அதன் மேல் மறைவாக கடைக் கேமராக்களின் பதிவுகளைக் காட்டும் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கிறது. அது கடையின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்துக் காட்டிக்கொண்டிருக்கு. ரோகிணியை எதிரில் அமரச் சொல்லி விட்டு பைலில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள். அதை வாங்கிப் படித்த ரோகிணி,என்ன மேடம் என்னை வேலையில் இருந்து நிப்பாட்டி இருக்கிறீர்கள். நான் ஒழுங்காத்தானே வந்து வேலை செய்து விட்டு போகிறேன். --- இல்லை ரோகிணி நீ இந்த மூன்று மாதத்தில் பலநாட்கள் விடுமுறையில் நின்றிருக்கிறாய். ஆனால் நீ திருப்தியாய் சொல்லிக்கொள்ளும்படி ஒரு வேலையும் செய்வதில்லை. --- எப்படி சொல்லுறீங்கள் மேடம், நான் pole emploi வால் வேலைக்கு வந்தனான். தகுந்த காரணமின்றி நீங்கள் என்னை நிப்பாட்டினால் நான் அவர்களிடம் முறையிட வேண்டி வரும். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சினை. --- சுமதிக்கு எழும்பி நின்று அறையணும்போல இருக்கு ஆயினும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.அதற்குமுன் இதையும் கொஞ்சம் பாருங்கள். தனது போனை எடுத்து இயக்கி அவளின் பக்கம் திருப்புகிறாள். அதில் ரோகிணி வேலைநேரத்தில் கீழ் அறையில் போனில் பாட்டுக் கேட்டு தலையாட்டிக் கொண்டு இருப்பதும், ஆட்கள் வரும்போது விக்ஸ் பூசிக்கொண்டு படுத்திருப்பதும், அவர்கள் போனதும் மீண்டும் பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதும் துல்லியமாக பதிவாகி இருக்கு. --- ஆ.....இதல்லாம் எப்படி.....என்னை மன்னித்து கொள்ளுங்கள் மேடம். அப்படியே சரணாகதியாகி விட்டாள். --- நான் இப்பவே இதை pole emploi வுக்கு அனுப்ப முடியும். அது மட்டுமல்ல இந்த மூன்றுமாத காலத்திற்குள் உனது வேலை எனக்குத் திருப்தி இல்லையென்றால் உன்னை வேளையில் இருந்து தூக்க அதிகாரமும் இருக்கு. அதேபோல் இந்த வேலை உனக்குப் பிடிக்கவில்லையென்றால் கூட நீயாகவே நிக்கவும் உனக்கும் அதிகாரம் உண்டு. சரி....சரி எனக்கு நேரமில்லை. பேசாமல் கையொப்பமிட்டு விட்டு பேப்பரை எடுத்துக் கொண்டு கிளம்பு. உனது சம்பளப் பாக்கிப் பணம் உனது வங்கிக் கணக்குக்கு வரும். உனக்கு வேலைகள் நன்கு தெரியும். இப்படி நடிப்பது, தேவையின்றி லீவு எடுப்பது போன்ற தவறுகள் செய்யாது விட்டால் நீ நல்லா முன்னேறலாம். ---ரோகிணியும் கையொப்பமிட்டு கவலையுடன் கடிதத்தை வாங்கிக் கொண்டு போகிறாள். அடுத்து வெளியே வந்த சுமதி பிரேமாவை அழைத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குப் போகிறாள். அவளிடமும் சுமதி அந்தக் கடிதத்தைக் கொடுக்கிறாள். அதை பார்த்த பிரேமா, என்ன சுமதி என்னையும் வேலையை விட்டு நிப்பாட்டி இருக்குதுபோல. --- ஓம் பிரேமா, எனக்கு வேற வழியில்லை. --- ஏன் நான் தாமதமாய் வந்து போகிறேன் என்றா. --- அது மட்டுமல்ல பிரேமா, நீங்கள் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதனால் புதிதாக கடை திறந்த எனக்கு மிகவும் உதவியாய் இருப்பீர்கள் என்றுதான், உங்களுக்கு இந்த நவீன தையல் முறைகள் தெரியாது என்ற போதிலும் உங்களை வேலைக்கு எடுத்தேன். ஆனால் இங்குள்ளவர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்பவர் நீங்கள்தான். இது எனக்கு பெரிய ஏமாற்றம்தெரியுமா. --- நான் மட்டுமா, ஏன் மிருதுளா கூட வெளியே போய்..... போய் வருகிறாதானே. --- ப்ளீஸ் பிரேமா அவளை பற்றி இப்போது கதைக்க வேண்டாம். இதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் இப்போது அல்ல, முன்பே சொல்லியிருக்க வேண்டும். மிருதுளா வெளியே போய் வருகிறாள், ரேணுகா வேலை நேரத்தில் கீழ் அறையில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாள் என்று. ஆனால் இப்போது நான் பல கண்களால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.நீங்கள் செய்யும் வேலைகள் உட்பட. --- பிரேமாவுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. தலை குனிந்து கொண்டு இருக்கிறாள். --- சுமதி மேலும் தொடர்ந்து எட்டரைக்கு திறக்க வேண்டிய கடையை நீங்கள் ஒன்பதரைக்கு வந்து திறப்பதால் இரண்டு வேலையாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்யாமல் வெளியே நிக்கினம். இந்தக் கடைக்கு வரவேண்டிய ஓடர்கள் வேறு இடங்களுக்குப் போய் விடுகிறது. மேலும் நீங்கள் தினமும் 11:30 க்கு போய் பின் 14:30 க்கு வருகிறீர்கள். அதன்பின்பு 16:30 க்கு போய் விடுகிறீர்கள். ஒரு பையில் இருந்து வெட்டிய துண்டு துண்டு துணிகளை எடுத்து மேசைமேல் போடுகிறாள். அவற்றைப் பார்த்ததும் பிரேமா திகைத்து விட்டாள், முழிகள் இரண்டும் பிதுங்கி வெளியே விழுந்திடும் போல் இருக்கின்றன. சுமதி தொடர்ந்து இவையாவும் எங்கட கடைத் துணிகள் இல்லை. நீங்கள் பாட்டுக்கு தனி ஓடர்கள் எடுத்து இங்கு கொண்டுவந்து இங்குள்ள பொருட்களை பயன்படுத்தி தைத்துக் கொண்டு போகிறீர்கள். அதிகம் ஏன் இப்போது கூட நீங்கள் கொண்டுவந்த பையில் உங்களது தனிப்பட்ட ஓடர் துணிகள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை உங்களால் மறுக்க முடியுமா. இது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா. உங்களுக்கு பின் வந்த பொடியன் துணிகளை வெட்டிட பழகியதுடன் விதம் விதமாக தைக்கவும் செய்கிறான். உங்களாலும் கூட முயற்சியுடன் வேலை செய்திருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால்.......சரி ....சரி நீங்கள் கடிதத்தில் கையொப்பமிட்டு விட்டு செல்லுங்கள். --- இல்லை சுமதி இது முழுக்க முழுக்க எனது தவறுதான்.இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கோ. கண்களில் கண்ணீர் முட்டி நிக்கிறது, குரல் தளும்புகிறது. --- இல்லை பிரேமா ......நீங்கள் விரும்பினாலும் உங்களால் அது முடியாது. உங்களின் பேரப்பிள்ளைகளை காலையில் பாடசாலைக்கு கொண்டுபோய் விடவேண்டும்.மதியம் அவர்களை கூட்டிப்போய் சாப்பிடவைத்து மீண்டும் பாடசாலையில் விட்டுட்டு வரவேண்டும். அதனால் இந்த வேலை உங்களுக்கு சாத்தியமில்லை. புரிந்து கொள்ளுங்கள். --- பிரேமாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கையொப்பமிட்டு விட்டு கடிதத்தை எடுத்துக் கொள்கிறாள். --- உங்களுடைய சம்பளப் பணம் வழமைபோல் வங்கிக் கணக்குக்கு வரும்.என்று சுமதி சொல்கிறாள். இருவருமாக வெளியே வருகிறார்கள். சுமதியும் மறக்காமல் கடையின் சாவிக்கொத்தை அவளிடமிருந்து வாங்கி வைத்துக் கொள்கிறாள். பின் பிரேமாவும் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே போகிறாள். அடுத்து மிருதுளாவைக் கூட்டிக்கொண்டு ஆபிஸ் அறைக்கு அழைத்து வந்து கவருடன் கடிதத்தைக் கொடுக்கிறாள். --- என்ன மேடம் அவர்களைப் போல் எனக்கும் வேலை நிறுத்தக் கடிதம்தானே.......நான் உங்களுடன் விவாதிக்கப் போவதில்லை, நான் செய்த தவறு எனக்குத் தெரியும். என் பொல்லாத நேரம் தப்பு செய்தபோது வேலை இருந்தது, அந்தத் தப்பு விலகியதோடு வேலையும் விட்டுப் போகிறது. என்று சொல்லி கடிதத்தைப் பார்க்காமல் கையொப்பமிடப்போகிறாள். --- அவளை இடைமறித்த சுமதி கடிதத்தை வாசித்துப் பார்த்து ஒப்பமிடு மிருதுளா. அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறது. பின் அதைப் படித்துப் பார்த்த மிருதுளா, என்ன மேடம் எனக்கு மேலும் ஆறு மாதங்கள் வேலையை நீட்டித்து இருக்கிறீங்களா. --- ஓம் மிருதுளா.....நியாயமாய் பார்த்தால் நான் உனக்கு நிரந்தர வேலைக் கடிதம்தான் தந்திருக்க வேண்டும். ஆனால் நீ வேலை நேரத்தில் வெளியே போய் விடுகிறாய் அதன் காரணம் எனக்குத் தெரியாது,அதுதான் இந்த ஆறு மாதகால ஒப்பந்தக் கடிதம். வெளியே உனக்கிருக்கும் பிரச்சினைகள் பற்றி நான் கேட்கப்போவதில்லை. ஆனால் அது தெரிந்தால் உனது வேலை நேரத்தை மாற்றித் தருகிறேன். அதற்கு ஒரே காரணம் உனது வேலைத் திறமையும் வேலை நேரத்தில் உன் உண்மையான உழைப்பும்தான். கடைக்குள் ஒரு நிமிடமும் வீணாக்காமல் ரொம்பத் திறமையாக வேலை செய்கிறாய். அதைபோல் தொடர்ந்தும் நீ வேலை செய்ய வேண்டும். நீ என்னை விட இளையவளானாலும் நான் உன்னிடம் இருந்து நிறைய வேலை கற்றுக்கொள்ள வேண்டும். இதை சொல்ல நான் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. அவ்வளவு கெட்டிகாரி நீ. --- மேடம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.நீங்கள் என்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்துக்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி மேடம். இப்போது எனது வேலை நேரம் மாற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன். என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு செய்ய இருந்தேன், இரு நாட்களுக்கு முன் அது எல்லாம் விலகி விட்டது. --- உனக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லு நான் அதைத் தீர்த்து வைப்பேன். --- அதொன்றுமில்லை மேடம், கடந்த ஒரு வருட காலமாக நான் ஒருவரை விரும்பி வந்தேன். அவன் ஒரு வேலையும் செய்யிறதில்லை, எந்த வேலையிலும் நிலைத்து நிப்பதில்லை. (எப்படித்தான் இவங்கள் ஒரு வேலை விட்ட உடனே அடுத்த வேலை எடுக்கிறாங்களோ தெரியாது.) உங்களுக்குத் தெரியுமா நான் இந்த வேலைக்கு வருவதற்கு முன் ஆறு மாதங்கள் chômage சில் வேலை தேடிக் கொண்டிருந்தேன். ( ஒருவர் வேலை இன்றி இருக்கும்போது pole emploi அவர்கள் முன்பு செய்த வேலைகளை கணக்குப் பார்த்து அவர்கள் வேலை எடுக்கும் வரை பணம் குடுக்கும். அது மட்டுமன்றி அவர்கள் வேலை எடுப்பதற்கு உதவிகளும் செய்யும்). இவன் அடிக்கடி என்னிடம் பணம் கேட்பான் நானும் குடுப்பேன்.ஒருநாள் யோசித்து, இவன் என்ன செய்கிறான் என்று சில நாட்களாக அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து கண்காணித்தேன். பார்த்தால் அந்த அயோக்கியன் என்னைப்போல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். நான் பின்பு மற்ற இரு பெண்களையும் சந்தித்து அவரின் ஏமாற்று வேலைகள் எல்லாவற்றையும் சொல்லி இரண்டு நாட்களுக்கு முன் நாங்கள் மூவருமாக சேர்ந்து அவருக்கு நல்லா அடி, குத்து, உதை எல்லாம் குடுத்து விட்டு வந்தோம். இனி நான் யாரையும் நம்பி ஏமாறமாட்டேன் மேடம். --- ஏன் நீ அவனுடன் செக்ஸ் ஏதாவது ...... --- அந்த கன்றாவியை ஏன் கேட்கிறீங்கள் மேடம், அந்த கயவனை காதலன் என்று நம்பி நாலைந்து முறை டேட்டிங் எல்லாம் போனோம், எல்லாம் என் செலவில்தான். --- சுமதியும் அடிப்பாவி என்று சொல்ல அவளும் நானாவது பரவாயில்லை மேடம்.அதுல ஒருத்தியுடன் அவன் "லிவிங் டு கெதராய்" வாழ்ந்து வந்திருக்கிறான். (இருவரும் கவலையை மறந்து சிரிக்கிறார்கள்). பின் சுமதியும் அவளிடம் கடைச் சாவிக்கொத்தை குடுத்து இனிமேல் நீதான் காலையில் வந்து கடை திறக்க வேண்டும். கடை திறந்ததும் நேரே உள்ளே போகக் கூடாது. முதலில் அலாரமை நிறுத்த வேண்டும்.தவறினால் அது சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிடும். போலீசும் வந்து விடுவார்கள் ஆதலால் கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். --- மிருதுளாவும் அது எனக்கு தெரியும் மேடம்.பிரேமாவுடன் சில சமயங்களில் நானும் திறந்திருக்கிறேன் என்கிறாள்.......! இன்னும் தைப்பார்கள்.......! 👗
  38. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(2). கதவைத் திறந்து கொண்டு வரும்போதே இவங்கள் துலைவராலை மனுஷர் நிம்மதியா ஒரு வேலை வெட்டிக்கு போய் வர ஏலாமல் இருக்கு ......! --- ஏனப்பா வரும்போதே புறுபுறுத்துக் கொண்டு வாறியல் ..... ---அதுக்கில்லையப்பா வருமானம் வருதோ இல்லையோ மாசக்கடைசியில வீட்டுக்காரர் வாடைக்காசுக்கும், மெட்ரொக்காரரின் வேலைநிறுத்தமும் வந்திடும். நான் இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருப்பன் இவங்களால சனத்துக்குள் இடிபட்டு நெரிபட்டு இப்ப வாறன் வேர்த்தொழுக .......உள்ளே போய் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்தண்ணீர்ப் போத்தலை எடுத்து குடித்து விட்டு ஒரு பியர் டின்னையும் எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும் எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது. ---இஞ்சயப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டே ......ம்....சொல்லு...... சேகரிட்ட நாங்கள் போட்ட சீட்டு இந்தமுறை எங்களுக்குத்தான் விழுந்திருக்கு. வழக்கமா சீட்டு ஏத்தி விடுகிற ஆட்கள் இந்த ஸ்ட்ரைக்கால வர பிந்திப் போட்டினம். கழிவு குறைவென்ற படியால் நான் எடுத்துப் போட்டன். வார கிழமை சேகர் காசை கொண்டுவந்து தாறனெண்டு சொன்னவர். ---அப்படியே சங்கதி....இந்த ஸ்ட்ரைக்கால நல்லதும் நடந்திருக்கு எண்டு சொல்லுறாய். நல்லது....நீங்கள்தான் உடுப்புகள் தைத்து கஷ்டப்பட்டு சீட்டு போட்டனீங்கள், வாங்கி பத்திரமாய் வைத்திருங்கோ. --- நானும் முதல் அப்படிதானப்பா நினைச்சனான், பிறகுதான் யோசித்தன், நாங்கள் ஏன் "லா சப்பலில்" ஒரு இடம் எடுத்து தையல் கடை போடக்கூடாது. சுரேந்தர் இடைமறித்து உது உமக்கு இப்ப தேவையோ, ஏற்கனவே நீங்கள் அங்க இங்க என்று அலைந்து திரிந்து செய்யும் வேலை சிரமமானது,...... சுமதியும் கொஞ்சம் பொறப்பா நான் சொல்லுறதையும் கேளுங்கோவன். அதுக்குள்ளே "ஆடறுக்கமுதல் விதைக்கு விலை பேசுறியள் " --- சரி சொல்லும், அவளும் (கிளாசில் பியரை நிரப்பி விட்டு பருப்பு பக்கட்டையும் பிரித்து வைக்கிறாள்). ம்...தங்கட காரியம் நடக்க வேணுமென்றால் எல்லாம் செய்வினம்.மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான், சொல்லவில்லை --- என்னிடம் இப்ப தைக்க வாற ஆட்கள் கனபேர் வருகினம்.கடை திறந்தால் இரண்டு பேரை கூட வைத்தும் வேலை செய்யலாம். அதுக்கு மேல கடை என்று ஒன்று இருந்தால் பின்னடி காலத்திலும் எங்களுக்கு உதவும். ---சிறிது யோசித்த சுரேந்தரும் சுமதி சொல்வதும் சரியென்று தோன்றவே, ம்....முதல்ல காசு கைக்கு வரட்டும் பிறகு இடம் பார்க்கலாம் என்ன .....! சுமதியும் புருஷனை சரிகட்டிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று கோப்பையில் இடியாப்பமும் சொதியும் விட்டுகொண்டுவந்து குடுக்கிறாள். சுரேந்தரும் என்னப்பா ஒரு முட்டையாவது பொரித்திருக்கலாமே என்று சொல்லிப் போட்டு சாப்பிட்டுவிட்டு கட்டிலுக்கு செல்கிறான். சுமதியும் காற்றடியையும் தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........! தைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..........! 💞
  39. குத்திக் கொண்டு நிற்கும்... தலைமுடியை, படிய வைக்க... எங்கள் ஷாம்புவை உபயோகியுங்கள். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.