Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19134
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7053
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33035
    Posts
  4. வைரவன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    345
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/12/23 in all areas

  1. அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா? இது தான் ஈனத்தமிழ் குணம். சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர். இப்படியே நடத்துங்கோ இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ.
  2. @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்) --------------------------------------------------- நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪 ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 15, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன். அடுத்து, இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு) எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்: 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன். அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன். மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள். இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்! பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்) இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன்.
  3. இரெண்டாம் உலக யுத்ததின் முன்னும், அதன் போதும்…..கால்நடைகளை விட மோசமாக ஒட்டு மொத்த யூத இனமே நடத்தப்பட்டது. ஹிட்லரால் மட்டும் அல்ல. தன்னை நோக்கி படை எடுக்காமல் விட்டால் - யூதரை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை ஸ்டாலின் எடுத்தார். கிட்லருடன் உடன்படிக்கை செய்தார். யூதரை பற்றி எதுவும் சொல்லாமல், செக்கொஸ்லோவியாவின் Sudetenland ஐயும் எடுத்துக்கொள், ஆனால் அடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் பிடியாதே என கிட்லரோடு ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனின் சேம்பர்லின். பேர்ல்காபர் தாக்கப்படும் வரை - யூதர் கொலைகள் அமெரிக்காவை போரில் இறக்கவில்லை. இப்படியா மில்லியன் கணக்கான யூதர்களின் சாவு, இழப்பு, வன்கொடுமைகள் போரின் சகல தரப்பாலும் கிள்ளுகீரையாகவே நடத்தப்பட்டது. ஆனால் இன்று? ஒரு யூத தாயின் கோரிக்கை பிரஞ்சு தொலைகாட்சியில் ஒரு மணி நேரம் போகிறது. ஜனாதிபதி விரைந்து பதில் கொடுக்கிறார். பாடம் புரிகிறதா?
  4. "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!" என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎! இப்படி ஊர் உலக நிலவரம் தெரியாத புரினெல்லாம் ஒரு அணுவாயுத நாட்டின் தலைமையில் இருக்கிறார் என்றால் எங்கையோ உதைக்கிறது!
  5. இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்? 1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே? இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல். உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது? இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே.
  6. உங்களுக்கு விளக்க குறைபாடு என்றால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது. 1. நான் எங்கும் நன்னி அப்படி எழுதியது சரி என்று எழுதவில்லை. 2. அவர் முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டவர் என அவரே எழுதியுள்ளதாக எனக்கு நியாபகம் என்றே எழுதினேன். இதை எழுதியது கூட, இந்த திரியில் அவர் எழுதியது சரி என சொல்ல அல்ல, மாறாக ஏதோ நாம் யுத்த அனுபவம் இல்லாதோர் ஆகவே இழப்பின் வலி தெரியாதோர் என நி.க எழுதினார். ஆகவேதான் அப்படி இல்லை என்பதை சுட்ட அதை எழுதினேன். 3. போரின் இழப்பை அதிகம் அனுபவித்தவர் என்பதால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பங்களித்தார்கள் என அவர் கருதும் முஸ்லிம்கள் மீது அவர் கோவத்தில் எழுதி இருக்கலாம் என எழுதினேன். இதுவும் அவரின் நிலைப்பாட்டுக்கு வக்காலத்து இல்லை. மாறாக அவர் ஏன் அப்படி எழுதினார் என்பதை நான் விளங்கி கொண்ட முறை. ஒருவர் இன்ன காரணத்துக்காக இன்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்ற என் கருத்தை எழுதுவது, அந்த நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன் என்றோ, அல்லது அவர் அந்த நிலைப்பாட்டை எடுத்ததை நான் நியாயப்படுத்துகிறேன் என்றோ ஆகாது. இங்கே நன்னி ஏன் கடுமையாக இலக்கு வைக்கப்படுகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். யார் அவரை இலக்கு வைக்கிறார்கள் என்பதையும் நான் கண்டு கொள்கிறேன். நான் மட்டும் அல்ல, வாசிப்பவர்களும் இதை காண்பார்கள் என்றே நினைக்கிறேன். காய்கும் மரம்தான் கல்லடி படும் என்பார்கள். நன்னி சிலருக்கு உவப்பிலாதா பழ தோட்டங்களையே உருவாக்கி வைத்துள்ளார். கடுப்பாகுமா இல்லையா🤣.
  7. இதை எழுதும் போது நீங்கள் நன்னியை நினைத்து பாத்தீங்களா? ...நீங்கள் தான் அவர் இறுதி யுத்தத்தின் போது அங்கு இருந்தார் என்று எழுதி இருந்தீர்கள்...மக்கள் கொத்து கொத்தாய் இறப்பதை கண்ணால் கண்ட ஒருவரால் எப்படி மற்றவர்களின் இறப்பில் சந்தோசப்பட முடியுது?
  8. சார், உள் நுழைந்ததுக்கே இப்டி செய்றீங்களே… அங்க ஒருவர் மசூதிய இடிச்சு கோவில் கட்டி கும்பாபிசேகமும் செய்யப்போறாரே அவரை கவனிக்க மாட்டீங்களா?🤣
  9. அமெரிக்கா எனும் உலகப் பயங்கரவாத நாடு... ஈராக்.. சிரியா.. ஆப்கானிஸ்தான்.. வியட்நாம் என்று எல்லா போர்முனைகளிலும் ஒரு தலைப்பட்சமாக வெள்ளைப் பொஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்துள்ளது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் சான்று படுத்தியும் உள்ளன. அதேபோல்.. டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்றொழிக்க.. வெள்ளை பொஸ்பரஸை பாவித்திருக்கிறது. இப்போ.. ரஷ்சிய மொழி பேசும் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் ரஷ்சிய படைகள் மீதான எதிர்தாக்குதலின் போது உக்ரைன் வெள்ளை பொஸ்பரஸ் உட்பட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் வழங்கிய கொத்தணிக் குண்டுகள்.. ஆபத்தான கதிரியக்கக் குண்டுகளை எல்லாம் வீசி வருகிறது. அதற்கு ரஷ்சியா தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. ஆக உக்ரைன் போர் முனையில்.. ரஷ்சியா மட்டுமல்ல.. உக்ரைனும்.. அமெரிக்கா மேற்குலக நாடுகள் வழங்குகின்ற உக்ரைன் அரச பயங்கரவாதத்திற்கு சார்பாக..பேரழிவு.. தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சப்பிளை செய்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால்.. இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனையில் அது அல்ல விடயம். பலஸ்தீனம் சார்ந்து எந்தப் பேரழிவு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. இஸ்ரேல்.. பலஸ்தீனம் மீது ஒருதலைப் பட்சமாகவும் மக்கள் செறிந்து வாழும் இடங்களாகவும் பார்த்து அப்பாவி மக்களை இயன்ற அளவு படுகொலை செய்யும் நோக்கோடு வெள்ளை பொஸ்பரஸ் உட்பட பல வகை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருவதோடு.. இஸ்ரேல்.. சகட்டு மேனிக்கு.. லெபனான்.. சிரியா.. மேற்குக் கரை.. ஜோடான் என்று அயலில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு.. அதன் பிராந்திய அரச பயங்கரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கேட்டுக் கேள்விக்கு உட்படுத்தவிடாமல்.. ஆதரித்து.. ஆயுதங்கள்.. நிதி உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றன. ஆக மொத்தத்தில்.. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தங்களின் சுயநல ஆதாயத்திற்காக.. இஸ்ரேலின்.. உக்ரைனின் அரச பயங்கரவாதங்களை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி வருவதோடு.. மிக மோசமான மனித இனப்படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன. இஸ்ரேல் மீது பலஸ்தீன காசா மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் - கமாஸ் மோதலில் இஸ்ரேல் நடந்து கொண்ட மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவே கமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று கமாஸ் கூறியிருப்பதோடு.. அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் கூறி இருக்கிறது. இந்த நிலையில்.. காசா பலஸ்தீன அப்பாவிகளைக் குறிப்பாக 450 குழந்தைகள் உட்பட 1500 பேரை 4000 தொன் குண்டுகளை கொட்டிக் கொன்ற இஸ்ரேலின் செயல்.. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இஸ்ரேலில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா கமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவும் 1500 கமாஸ் உடலங்களை தாம் அவதானித்திருப்பதாகவும் கூறிவிட்ட பின்னும்.. தாக்குதலாளிகள் தண்டிக்கப்பட்ட பின்னும் காசா மீது குண்டு வீசி 450 குழந்தைகள் உட்பட 1500 அப்பாவி மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குள்ளேயே குண்டு வீசி அழிப்பதன் இஸ்ரேலின்.. அமெரிக்காவின்.. மேற்குலகின் நோக்கம் என்ன.. இன அழிப்பும்.. இஸ்ரேலின் அரச இராணுவ பயங்கரவாதத்தை தமக்கான மத்திய கிழக்கிற்கான.. முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுதலுமே. இந்த சேட்டையை டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் நடப்பு அரச பயங்கரவாதிகளை பயன்படுத்தி செய்ய வெளிக்கிட்டு... ரஷ்சியாவை நேட்டோ விரிவாக்கம் மூலம் அச்சுறுத்த விளைந்ததன் விளைவே.. அதாவது அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத யுத்தமே.. ரஷ்சிய - உக்ரைன் மோதலாக உருவாகியுள்ளது. ஆக மொத்தத்தில்.. அமெரிக்க... ஜனநாயகக் கட்சியின் மனித இனத்துக்கு எதிரான.. கொடும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைமைத்துவ.. கொள்கை வகுப்புக் கொடியவர்களின் செயலால் தான் இத்தனை பேரழிவுகளும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. பல வகையான உருட்டல்களை உருட்டிக்கொண்டு திரிகிறார்கள் இங்கு. அது அவர்களின் மனச்சாட்சிக்கே விரோதம் என்பதும் அவர்களுக்கு தெரியும். இருந்தும்.. விசமத்தனத்துக்காக அதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தவே.. இப்பதிவு இடப்படுகிறது.
  10. என்ன ஜோக்கா? கிரிகெட் போட்டி திறந்தா தெரியும், நானும் @Eppothum Thamizhanஎப்படி பட்ட தோஸ்து எண்டு. உக்ரேன், இஸ்ரேல் விடயத்தில் கருத்து முரண். ஆனால் வேறு பலதில் அவருடன் கருத்தொற்றுமையுடனும் எழுதியுள்ளேன். இதென்ன இவ்வளவு சின்ன புள்ளைத்தனமாக யோசிக்கிறீங்க. அதே போலத்தான் @நியாயத்தை கதைப்போம். உடனும். அண்மையில் கூட அந்த 55+18 திரியில் நானும் நி.க வும் மட்டும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தோம். உண்மையில் ஒரே சூழலில், சிந்தனை புலத்தில் இருந்து வரும் இங்கே எழுதும் பலரின் கருத்தை விட அவரின் கருத்துக்கு ஒரு vale added கனம் இருப்பதாக கருதுகிறேன். மறுபடியும். ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக்கே ஒழிய கருத்தாளருக்கு இல்லை.
  11. நீங்கள் அவருக்கு வக்காலத்து வாங்கி எடிட் பண்ணி எழுதினதை இப்ப தான் பார்த்தேன் .ஜயோ முடியலைடா சாமி ...நீங்கள் எழுதினது உங்களுக்கே ஓவராய் தெரியல்ல ...அவர் என்ன காரணத்திற்காய் தான் யூதர்களுக்கு ஆதரவு என்று எழுதி போட்டு ஒதுங்கி இருந்தார் என்றால் அவரை இந்தளவிற்கு போட்டு தாக்கி இருக்க மாட்டார்கள்..இந்த திரியில் சிலர் வெளிப்படையாகவே தாங்கள் யூதர்களுக்கு ஆதரவு என்று சொன்னார்கள் ஆனால் ஒருத்தர் கூட நன்னியளவிற்கு பலஸ்தீன மக்களது படுகொலையில் அல்லது இறப்பில் சந்தோசம் கொள்ளவில்லை ...அவரது கருத்துக்கள் ஓவராய் போனதால் தான் நான் முதலில் வந்து அவரை நிறுத்த சொன்னேன் . உங்களுக்கு எ.போ.தமிழன் , நி.க போன்றோரில் கடுப்பு அதற்காய் நன்னி விட்ட பிழைகள் உங்கள் கண்ணை மறைக்குது ...இதற்கு மேல் இந்த திரியில் இவரை பற்றி எழுத ஒன்றுமேயில்லை ...இவர் இந்த திரியில் வந்து எழுதி தன் மேல் உள்ள மரியாதையை தானே கெடுத்து கொண்டார் .தன் சுயரூபத்தையும் காட்டி விட்டார்
  12. படம் வெற்றி பெறுவதற்காக செய்யப்பட்டதாக இருக்கலாம்.
  13. கத்தியிராவிட்டால் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றே ஆக்கி இருப்பார்கள். ஒரு காலத்தில் கத்தியதன் பலன் கிடைக்கும். நீங்களும் நானும் இருப்போமா தெரியாது.
  14. அதே... அடுத்த அடுத்த கட்டங்களுக்கு எமது அடுத்த தலைமுறையை நகர்த்தியே ஆகணும். அதைவிடுத்து வீதியில் நின்று அல்லது ஐநா வில் நின்று கத்தி எந்த பிரயோசனமும் இல்லை😭
  15. பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை எரிபொருள் இல்லை மின்சாரமில்லை - இஸ்ரேல் திட்டவட்டம் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 04:46 PM ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் வரை காசாமீதான முற்றுகையை தளர்த்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இதனை தெரிவித்துள்ளது. ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்படும் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை என இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். மனிதாபிமானமா, கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகும்வரை மீண்டும் இஸ்ரேல் திரும்பும்வரை மின்சாரத்தை மீண்டும் வழங்கப்போவதில்லை எரிபொருள் வாகனங்கள் எவையும் காசாவிற்குள் நுழையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமானத்திற்கு மனிதாபிமானம் எங்களிற்கு ஒழுக்கநெறி குறித்து எவரும்போதிக்ககூடாது என அவர்தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை துண்டித்துள்ளது. https://www.virakesari.lk/article/166724
  16. உங்கள் மூச்சை விணடிக்காதீர்கள். Don’t waste your breath. சிலருடன் விவாதிக்கலாம், விடயங்களை பகிரலாம், நாமும் கற்று கொள்ளலாம். சிலரை கடந்து போவதே கற்று கொள்வதுதான்🤣. அதுவும் சரிதான் நண்பா. எனக்கெண்டாலும் பரவாயில்லை மாச கடைசியில் CIA, MI6 பாங் டெபோசிட் பண்ணி விடுவார்கள். இந்த மாதத்தில் இருந்து மொசாடும் போடும். எவ்வளவு உருட்டுரோனோ அவ்வளவுக்கு கொட்டும்🤣. நீங்கள் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் 🙏.
  17. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. ம்ம்ம் அந்த சப்பிளை அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊
  18. ஆனால் உக்ரைன் பாவிப்பது.. இவைட கண்ணுக்கு வெள்ளையா தெரியாது. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. காஸா போல் டான்பாஸ் பிராந்தியம் 2014 இல் இருந்தும் அதற்கு முன்னிருந்தும் உக்ரைனால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நல்லா மூடிமறைச்சு.. உருட்டு உருட்ட நினைக்கிறார்கள். பொய்யர்கள்.
  19. அப்படியா எழுதுகிறார்கள் ? எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை அப்படியா எழுதுகிறார்கள் ? எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை
  20. இது அரைவாசிக் காரணம். மிகுதிக் காரணம், இது வரை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் பெற்றோரின் (முதல் 4 நாட்களிலேயே 260 குழந்தைகள் காசாவில் கொல்லப் பட்டன), பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உணர்வு ரீதியான எதிர் வினையாக இருக்கும். காலா காலமாக இத்தகைய இழப்புகளால் பாதிக்கப் பட்டோர் இதயத்தால் தான் யோசிப்பர், தலையால் அல்ல - அப்படி தலையால் யோசிக்கும் படி நாம் ஆலோசனை சொல்வதும் futile exercise என நினைக்கிறேன். அந்த காம்ப் டேவிட் (2000 ஆம் ஆண்டு) சமாதான முயற்சியின் பின்னர் பிறந்த ஒருவர் இப்போது 22 வயது இளைஞராக இருப்பார். வளர்ந்தவர்களே பொய்ச்செய்திகளால் ஆகர்சிக்கப் பட்டு எடுபட்டுப் போகும் இந்தக் காலத்தில், இத்தகைய இளைஞர்களை தம் வசம் இழுப்பது ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு மிக இலகு.
  21. இதில் முரண் கருத்து எதுவும் எனக்கு இல்லை. இஸ்ரேல் ஹமாஸ் போல நடந்து கொள்ளக் கூடாதென முதல் வரியிலேயே சொல்லி விட்டேன். இஸ்ரேலுக்கு, பழி வாங்குவதை விட அதிக சுமையான, பொறுப்பான விடயங்கள் உண்டு. அந்த 38% பற்றி மேலதிக விளக்கம்: "1948 இல் Al Nakba என்ற பலஸ்தீனப் பேரழிவின் பின் (இது இஸ்ரேலிடம் பலஸ்தீன நிலம் முதலில் பறி போன நிகழ்வு) நிகழ்ந்த ஒரு நல்ல விடயம் என்ன?" என்ற கேள்விக்குத் தான் ஹமாஸ் உருவானமை என 38% காசா மாதிரிகள் துலங்கள் காட்டியிருக்கிறார்கள். நேரடியாக ஹமாசை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. இதை, கருத்துக் கணிப்பில் இருக்கும் இன்னும் சில கணிப்புகளோடு சேர்த்துத் தான், பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதென்ற கருத்தைச் சொல்கிறேன். இதன் அர்த்தம், காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்கள் ஹமாசின் குற்றப் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுவதல்ல. ஆனால், நேரம் கிடைக்கும் போது முழு ஆவணத்தையும் வாசித்தீர்களானால், பலஸ்தீனர்கள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தாமல் இந்தச் சிக்கலில் இருந்து மீளவே முடியாதென்று நான் நம்புவதன் அடிப்படையை விளங்கலாம்: ஒரு சாம்பிள் - இரு- நாடுகள் தீர்வுக்கான ஆதரவு - மொத்த பலஸ்தீனர்களிடம் 28%, ஆயுதமே வழி என்று சொல்வோர் ~50%. 2008 இன் பின்னர் ஒரு தேர்தலும் நடக்காத நிலையில், இது போன்ற கருத்துக் கணிப்புகள் தான் பலஸ்தீன மக்களின் எண்ண ஓட்டத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
  22. நல்ல கருத்துக்கள். ஆனால் உக்ரேன் விடயத்தில் இந்த அணுகுமுறையும் கருத்துக்களும் ஏனோ மிஸ்ஸிங்? என்ன தைரியம் இருந்தால் அவர்கள் செலன்ஸிகு வாக்கு போடுவார்கள்? செலன்சியின் கொட்டத்தை அடக்க மரியுபோல் மக்களுக்கு அடி போடத்தான் வேண்டும். ஒரு பெரிய நாடு ரஸ்யாவின் பாதுகாப்பை தக்க வைக்க ரஸ்யா செய்வது சரிதான்… இவ்வாறாக உக்ரேனில் நடந்த போர்குற்றங்கள் நியாயப்படுத்த பட்ட போதும் இதே “சிறிலங்கன் ஆமியின் குரல்” உங்கள் மனதில் ஒலித்தல்லவா இருக்க வேண்டும்?
  23. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இஸ்ரேல் ஒரு தேசம், எனவே பழிவாங்கும் உணர்வு இருந்தாலும் இஸ்ரேல் படைகள் சிவிலியன்களைப் பாதுகாக்கும் படி நடந்து கொள்வது குறைந்த பட்ச தகுதியாக இருக்க வேண்டும். நிற்க: ஹமாஸ் காசாவில் 2007 இல் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்குக் கரையில் ஹமாஸிற்கு ஆதரவில்லை. ஈரான், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் ஹமாசுக்கு பல் வேறு வழிகளில் நிதியுதவி செய்கின்றன. இவற்றுள், கட்டார் மட்டும் தான் மனிதாபிமான உதவிகளாகச் செய்கின்றது - இது இஸ்ரேலினால் அனுமதிக்கப் பட்டிருக்கும் உதவி என்கிறார்கள். இதை விட எகிப்தில் இருந்து காசாவினுள் வரும் பொது மக்களுக்கான உணவு, பாவனைப் பொருட்கள் மீது வரி விதித்து, ஹமாஸ் வருடாந்தம் பல மில்லியன் வருமானம் பார்க்கிறது. இந்த வரியையும் ஆயுதம் வாங்கத் தான் பாவிக்கிறார்கள் - ஏனெனில் காசா வாழ் மக்கள் கண்டது மருந்து, உணவு எல்லாமே தட்டுப்பாடான வாழ்க்கை தான் கடந்த 16 ஆண்டுகளாக. முக்கியமான கேள்விக்கு வருகிறேன்: காசா மக்கள் ஹமாசை இப்போது ஆதரிக்கிறார்களா? இந்த ஆண்டு ஜூனில் ~1200 பேர்களிடம் எடுக்கப் பட்ட மாதிரிக் கருத்துக் கணிப்பின் படி காசாவில் இருக்கும் 38% பேர் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய வன்முறை அமைப்புகளின் வருகை நல்ல விடயம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீதம் மேற்குக் கரையில் வெறும் 16%! இதற்கு இஸ்ரேல் மீதான வரலாற்றுக் கோபம் உட்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் இஸ்ரேலின் இருப்பை ஒழிக்க வேண்டுமென எழுத்தில் வைத்திருக்கும் இரு அமைப்புகளை கணிசமானளவு காசா வாழ் மக்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. 5 மில்லியன் மக்கள் தொகையில், வெறும் 1200 பேரின் மாதிரியாக (sampling) இருந்தாலும், பல சுவாரசியமான தரவுகளை உள்ளடக்கிய கருத்துக் கணிப்பு ஆவண இணைப்பு இது, நேரம் இருப்போர் வாசியுங்கள்: https://www.pcpsr.org/sites/default/files/Poll 88 English full text June 2023.pdf ஒரு முட்டுச்சந்தில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை முட்டி நிற்கிறது. இந்த முட்டுச் சந்தை விட்டு நகர, இஸ்ரேல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன, ஆனால் பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
  24. கந்தையாண்ணை சொல்வது சிறிலங்கன் ஆமியின் குரலாக என்காதுகளில் ஒலித்து தேன் வந்து பாயுது என் காதினிலே.. ”புலிப்பயங்கரவாதிகள் சிவிலியன்களுக்குள் மறைந்திருந்து தாக்குகின்றனர்.. அதனால் அவர்களை அளிக்க அவர்கள் மறைந்திருந்த பாடசாலையின் மீது குண்டு வீசப்பட்டது..” “புலிப்பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த சந்தையில் குண்டு வீசியதில் 80 புலிப்பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” “புலிப்பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின்மீது குண்டு வீசி தாக்கியதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்”
  25. அது மட்டுமல்ல அவர்களில் பலர் இஸ்ரேல் அரசியலில் இருக்கிறார்கள்.. பாராளுமன்றில் இருக்கிறார்கள்.. நம்மவர் ஜரோப்பா அமெரிக்காவில் வாழ்வதுபோல் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள்.. ஆனால் ஆகக்குறைந்தது பாலஸ்த்தீனர்கள் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காஸா மற்றும் வெஸ்ட் பாங்கிலாவது ஒரு அரசை அமைத்து இஸ்ரவேலை போல் அபிவிருத்தி அடைந்த நாடாக இத்தனை வருடங்களாக மாற்றி அமைக்க முடியவில்லை.. இஸ்ரேலை முற்றாக அழித்து பால்ஸ்தீனத்தை உருவாக்கினால்கூட அந்த நிலத்தில் இவர்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கப்போவதில்லை.. ஆப்கானிஸ்த்தான் ஈரான் ஈராக் போன்ற பெண்களைகூட படிக்க விடாத அடிமுட்டாள் மதவாதிகள் வாழும் முஸ்லீம் நாடுகளை பாருங்கள்.. ஒன்றுமே இல்லாமல் வந்து உழைப்பால் உருவாக்கி ஜனநாயகத்துடன் வாழும் இஸ்ரேலை பாருங்கள்.. மதவா திகள் மற்ற இனத்துக்கு மட்டுமல்ல சொந்த இனத்துக்கு கூட துரோகிகள்..
  26. இருவரும் ஒருவரில்லை என நினைக்கிறேன். இருந்தாலும்… ஒரு இன்ரேலிய பெண் சிப்பாயை, யுத்த முனை அல்லாத இசை நிகழ்சியில் சிவிலியன் உடையில் பிடித்து…காலை முறித்து, மண்டையை பிளந்து, கொலை செய்து, பின் டபிள் கேப்பில் நிர்வாணமாக ஊர்வலம் போவதும், அதை கூடி நிற்கும் ஆண் சிங்கங்கள் இறந்த உடல் மீது துப்புவதும், இறை கோசம் எழுப்புவதும்….. ஏற்புடையதுதான் என்கிறீர்களா மருதர்… அந்த தமிழ் சகோதரியின் பெயர்…. எமது தொலைக்காட்சியில் வேலை செய்தவர்…. எனக்கு இப்போ பெயர் நியாபகம் இல்லை…. இ…என்று தொடங்கும் என நினைக்கிறேன். உங்களுக்கு அவர் பெயர் நியாபகம் இருக்கிறதா மருதர் ? Muhammad Abu Ghali ற்கு எப்படியும் நட்டை இப்போ கழட்டி இருப்பார்கள். திருப்பி பூட்டுவார்களா இல்லையா என்பதுதான் தெரியவில்லை. அண்மையில் வந்த வீடியோக்களின் பின் - ஹமாஸ் போராளிகளுக்கு உயிருடன் பிடிபடுவதை விட சாவது மேலான தெரிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
  27. ரஷ்யா கிரிமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்து விட்டது என கதறும் மேற்குலக ஊடகங்களும் அதன் விசுவாசிகளும்..... இஸ்ரேல் பலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை கையகப்படுத்துவதை கண்டிப்பதுமில்லை.....கண்டுகொள்வதுமில்லை.....கருத்து எழுதுவதுமில்லை. எவன் உச்சத்தில் இருக்கின்றானோ அவனுக்கு செம்பு பித்தளை பாத்திரங்கள் தூக்க பழகிவிட்டோம். ஈழ விடுதலைப்போராட்டத்தையும் தவறு என விமர்ச்சிப்பதும் இங்கு நடக்கும்......நம்புங்கள் இதுவும் நாளை நடந்தேறும்.
  28. அருமையான கருத்து.தமிழர்களை அழிக்க அனைத்து முஸ்லிம்நாடுகளும் உதவி செய்தன.நேரெதிர் போக்கைக் கொண்ட இந்தியா.பாகிஸ்தான் .சீனாவில் இருந்து அமெரிக்க .மேற்குலகம் .ரஸ்ஸியா உட்பட அனைத்து நாடுகளுமே சிறிலங்கா அரசுக்கு உதவின. தமிழர்கள் தனித்து நின்றே பேராடினார்கள்.அதே வேளை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.தேசியத்தலைவைரைத் தவிர அனத்து இயக்கங்களின் தலைவர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்பணம் கொடுத்துப் பயிற்சி பெற்றார்கள்.அவர்களால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு கிடைக்க வில்லை.தொடர்ச்சியாக இஸ்ரேலினால் இனவழஜப்புச் செய்யப்படுகிறார்களே அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள்.
  29. விசய் - லியோ பட ட்ரெய்லரை ரிலீஸ் செய்த ரோகிணி தியேட்டருக்கு நேர்ந்த கதி.. மனிதராக மாற இன்னும் கன காலம் ஆகும்..😢
  30. பிரேத அறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள் Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 01:38 PM காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக மாறுகின்றன என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு மின்நிலையமும் செயல் இழந்துள்ளது . இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன. மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு புதிதாக எரிபொருள் தேவை காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மின்சாரவிநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்திய கிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/166707

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.