Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 02/22/24 in Posts
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர். தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர். அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை. இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது. சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய https://noolaham.net/project/36/3532/3532.pdf5 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலமானின் மாயப்பொதிகள் மேலே கொடுக்கப்பட்டிருப்பது நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதி (அரசமைப்பு திருத்த வரைபுகள்) . இதே பொதி பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000) பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்). ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் அலுவல்சார் சிறிலங்கா அரச முன்மொழிவாகவே 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களில் - 1997ம் ஆண்டு - மிச்ச நல்லதுகளையும் இழந்து போனது. 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாடினார். ஆனால் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் நிராகரித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). உந்தப் மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான"😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே யாழில் 800+ தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்பவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! வெற்றுக் காகித சட்டங்களாதலால்தான் நீலன் அனுதாபி ஒருவரிடம் தெளிவாக கேட்டேன், "நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த நல்லதுகளை எழுதுமாறு", இணையத்தில் தேடிப்பார்க்கத் தெரியாததாலன்று... பி.கு.: கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் மலிவான தனிமனித தாக்குதலை செய்து கம்பு சுற்றுவோருக்கு இனிமேல் மறுமொழி தரப்படாது. (இந்த விடையங்கள் எல்லாம் யாழ்கள நீலன் அனுதாபிகளுக்கு தெரியாது. புலி மீது சேற்றை வாரியிறைக்க நான் முந்தி நீ முந்தி என்று மட்டும் நிற்பினம். நீலமான் அனுதாபிகளே, "உடனுழைப்பாளர்" என்றால் "துரோகி" அல்ல. இருந்தாலும் சட்டிக்குள் தலையைவிட்டு வலிந்து பொருள் கொள்ளுங்கள்! )3 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்போ ஏன் சிங்கள அரசு போர்க்குற்ற விசாரணைக்கு பின்னடிக்கிறது. நீங்களே புள்ளிகள்(points) எடுத்து கொடுக்கிறீர்கள். சிங்களவர்கள் யாரும் கோத்தபய இனப்படுகொலை செய்துள்ளார் என்பதை எங்காவது வாசித்துள்ளீர்களா??2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
யோசப் பராசாசிங்கம். பாராளுமன்ற உறுப்பினர் கொலை பற்றி கவலையில்லை ...காரணம் என்ன?? குமார் பொன்னம்பலம் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ரவிராஜ் கொலை பற்றி கவலையில்லை காரணம் என்ன?? ஆனால் தீர்வு திட்டம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டங்களை செய்த இளைஞர்களை மடக்க சதி திட்டம் திட்டியது பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அறிந்த வகையில் புலிகள் பலமுறை விசாரணையின் பின் குற்றம் நிறுபிக்கப்பட்டால் மட்டும் தண்டனை உண்டு” புலிகளின். வழியில் குறுக்கீடும் எவரும் தப்பிக்கவே முடியாது இது அவர்களின் சட்டம்2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தீர்வுகளை வழங்காமல் இருக்க புலிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் ....துவாரகா,பொட்டர்,தலைவர் வருகினம் என்று சொல்வது போல இதுவும் ஒன்று என கடந்து செல்ல வேணும் .... புலிகளினால் நல்லிணக்கம் கெட்டு விட்டது அதை சரி செய்ய ஒன்று பட்ட இலங்கையில் சமாதானம்,சாந்தி போன்றவற்றை நிலை நாட்ட வேண்டும்..2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நல்லது நன்னி. மிகவும் ஆழமாகவே ஆராய்ந்துள்ளீர்கள். நீலன் மிளிர்வான வரைபை உருவாக்குவதற்கு உதவினார். எனினும் நீர்த்துப்போகச் செய்தது சிங்கள அரசியல் கட்சிகளினது செயற்பாடு. பொதி தீர்வாக வந்திருக்கும் என அந்தக் காலத்திலேயே நம்பவில்லை. ஆனால் எழுத்து மூலம் ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க உதவியது கொலை செய்யவேண்டிய அளவுக்கு துரோகமான செயல் இல்லை. புலிகள் இராணுவ ரீதியில் பலமான நிலையில் இருந்த காலகட்டத்தில் தமிழ் ஈழத்திற்குக் குறைவான தீர்வு ஒன்றை அவர்களின் அனுமதி இல்லாமல் வரைய உதவியதுதான் நீலன் கொல்லப்பட்டதற்கான காரணம். இன்றைய காலகட்டத்தில் “மிளிர்வான” பொதியையோ அல்லது நீர்த்துப்போன அதன் மறுவரைபுகளையோ கூட ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கு எடுத்துச் செல்லமுடியாத அரசியல் வலிமையற்ற இடத்தில்தான் தமிழர்கள் நிற்கின்றார்கள்.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரே விடயத்தை பத்து இடத்தில் வேறு வேறு வடிவத்தில் எழுதினால் சூப்பர் கருத்தாளர்கள் என்று பெயர் வரும் என்று யாரோ அறிவாளிகள் உங்களுக்கு சொல்லி போட்டார்ங்கள் போல் உள்ளது 😀2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்களுடைய இந்த கொல்லப் பட்டவரின் மீது, எள்ளலுடன் குற்றத்தைச் சுமத்தி, கொலை செய்தவர்களின் மீது ஒரு மாசும் படாமல் பாதுகாக்கும் அலட்சிய "அலட்டல்" இருக்கிறதே😂? இது தான் எங்கள் தலைமுறை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பது நல்லதென்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது எனக்கு. இப்படியான அறிவலட்சியத்தோடும், மனிதாபிமான உணர்வும் இல்லாமல் இருக்கும் தலைமுறையின் கைகளில் தமிழர்களின் ஆட்சி கிடைக்காமல் இருப்பது தமிழர்களுக்கு நல்லது! சுத்தமான அடுத்த தலைமுறைக்கு அது கிடைத்தால் கிடைத்து விட்டுப் போகட்டும், அவர்களை நஞ்சூட்டாமல் காத்தால் போதும்!2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நான் நீலனுக்கு தீர்ப்பு எழுதவில்லை நீலன் எழுதிய வரைபு தீர்வு என்பது தவறு என உறுதியாக கூறுகிறேன் ஏடுகளில் எழுதுபவை எல்லாம் தமிழ் மக்களுக்கு தீர்வு ஆகிவிட முடியாது அவை அமுல்படுத்தப்பட்டிருக்கும் போது மட்டுமே தீர்வு ஆகும் நீலன். தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை ஒரு கிராம சபைக்கு கூட சிறந்த அதிகாரங்களை பெற்று தரவில்லை தமிழர் விடுதலை கூட்டணி தமிழ் ஈழம். தான் தீர்வு இனி பேசி பயனில்லை’ ஆயுதம் ஏந்துவது தான் அதற்காக வழி என்று அறிவிக்க முதல் நீலன். தீர்வை எழுதி அமுல் செய்திருக்கலாமே ?? எங்கே போனார்?? ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி பெற்று போராடிக்கொண்டு இருக்கும் போது சீமாட்டி சந்திரிக்கா நவாலி முல்லைத்தீவு,.......என்று தமிழ் பகுதிகளில் எல்லாம் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது தீர்வு எழுதுகிறார் யாருக்கு??? ஆயுதமேத்திய ஆயிரம் ஆயிரம் இளைஞர்களுக்கு ...அவர்களை சிறையில் பிடித்தது அடைபட்டிருப்பவர்கள் தீர்வு அமுல் பட்டிருக்கப்போவதில்லை இது அரசியல் மருத்துவம் இல்லை தயவுசெய்து இதை வாசித்து குழப்பமடையவேண்டாம் தமிழ் மக்களின் சாபக்கேடு. தமிழ் சட்டத்தரணிகள் பாராளுமன்றம் நீதிமன்றம் இரண்டிலும் வித்தியாசம் இன்றி வழக்கு பேசியது தான்2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅2 points
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை Published By: DIGITAL DESK 3 22 FEB, 2024 | 12:11 PM இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது. IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177023 அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள். லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவர் எழுதியது ஒருபோதும் நடைமுறையில் வந்து இருக்காது புலிகள் போராடிக்கொண்டு இருந்த காரணத்தால் அதிகாரங்களை கூட. எழுத முடிந்தது நீங்கள் குறிப்பிட்டது போல் இப்போது முடியாது தான் காரணம் போராடுவோர் இல்லை தீர்வு திட்டங்கள் எழுதுவது தமிழருக்கு செய்யும் நன்மைகள் இல்லை எழுதிய தீர்வுகளை நடைமுறை படுத்தி கட்டவேண்டும். அது தான் தமிழருக்கு செய்யும் நன்மைகள் ஆகும் இவரது தீர்வை பாராளுமன்றம் விவாதிக்கக் கூட எடுத்திருக்கமாட்டாது இந்த செயல் தமிழர்களை தமிழன் ஏமாற்றும் முயற்சிகள் ஆகும் அதுவும் இனி பேசி பலனில்லை தமிழ் ஈழம் தான் முடிவு அதை அடையும் வழி ஆயுதப்போராட்டம் தான் என்று முடிவு எடுத்த கட்சியின் உறுப்பினர் நீலன,... போராட்டம் நடத்து கொண்டிருந்த போது தன்னிச்சையாக இப்படி செயல்பட்டு இருக்கக்கூடாது அது போராட்டத்துக்கு ஒரு பின்னடைவு மேலும் போராடியவர்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்காத தீர்வு இந்த வரைபின் ஒரே நோக்கம் போராட்டத்தை குழப்ப வேண்டும் என்பதே2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கு சிலர் போராளிகளின் தவறுகளை, விஸேடமாக புலிகளின் தவறுகளை சுட்டி காடட கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்கள். மனடையன் குழு, ஈபிடிபி, ப்ளட் போன்ற இயக்கங்களை பற்றி எழுதினபோது எதிர்க்கருத்து இல்லை. நன்றாக பச்சை குத்தினார்கள். இப்போது நிலைமை வேறாக மாறி இருக்கிறது. நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
2 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😂 இப்ப தான் நீங்கள் நித்திரையால் எழும்பி வந்து ஏன் நோண்டுகிறார்கள்? என்ன பயன்? என்று கேட்கிறீர்கள்! இந்த திரியிலும், வேறு சில திரிகளிலும் "மாற்றுக் கொள்கையுடையவர்களைப் போட்டுத் தள்ளுவது ஓகே" என்ற தொனியிலான கருத்துக்கள் வந்த பின்னர் தான் இதை நோண்ட வேண்டிய தேவையே வந்தது. மற்றபடி அடுத்த ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, இதே தவறுகள் நடக்காமல் நடத்த வேண்டுமென்ற நோக்கமெல்லாம் இங்கே யாருக்கும் இல்லை - ஒரு ஆயுதப் போராட்டம் இனி நடக்காது. ஆனால், புலிகளைச் சிரம் மேல் வைத்திருக்கிறேன், இதயத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்வோர் "புலிகள் செய்த அரசியல் படுகொலைகள் - அதுவும் நிராயுத பாணிகளின் படுகொலைகள் கூட- புனிதமானவை" என்று புளகாங்கிதம் அடையும் போது, தற்காலத்திலும் இதே வன்முறை தமிழர்களிடையே அதிகம் திட்டு வங்கும் சுமந்திரன் போன்ற அரசியல் வாதிகளை நோக்கிப் பாயும். ஏற்கனவே "அவர் யோசப் பரராஜசிங்கம் போல வாழ வேணுமெண்டு" பூடகமாகச் சொன்னவர் இங்கே திரிகிறார். இது நடக்கக் கூடாதென்பதே நோண்டலின் நோக்கம். பெரிய நகைச்சுவை என்னவென்றால், ஒரு தவறு நடக்கும் போது ஆத்திரம், கோபம் கொள்ளாதவர்கள், அந்த தவறைப் பேசினால் ஆத்திரம் கொள்கின்றனர்! இத்தகைய கண்மூடித் தனமான பக்தியா அல்லது அரசியல் வன்முறை இல்லாத அடுத்த தலைமுறையா என்றால், இரண்டாவது தான் என் தெரிவு!2 points- யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்?
யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா? http://1.bp.blogspot.com/-hwxRhe7cuPY/UHsusAruoRI/AAAAAAAABDs/fcpPGEWU2bE/s320/Jesus.jpg என்னை பரவசப்படுத்தியதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அந்நாட்களில் நான் ஒஸ்லோவிலுள்ள ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும் தொழில் செய்துகொண்டிருந்தேன். அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன். மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும், நான் யார் யாரை எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார். எனது வேலையைத் தொடங்கினேன். முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது. நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும். 85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்.. கண்பார்வை மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார். தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர். மிகவும் குசும்பு பிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால் எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார். இல்லை, இல்லை என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே அன்று அவரிடம் இருந்து தப்பினேன். அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன். அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன். இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும். எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம். அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது. நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப் பக்கமாக எறித்துக் கொண்டிருக்கிறது. ஜன்னல் கண்ணாடியில் சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன். இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள். என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது. அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள். அம்முதியவரின் கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன. மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன். நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார். மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன். தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார். மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன. அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்... ”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது, கைகளை மெதுவாய் நீவிவிட்டேன். அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார். மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது. ஏனையவர்களை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு. எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது. நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று. இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா. http://visaran.blogspot.com/2009/10/blog-post_19.html1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனது -1 ஏனைய கருத்தாளர்களை மட்டம் தட்டி எழுதுவதற்கு.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இவ்வளவு குற்றங்கள் செய்தபவர்கள் மேலும் எம்மை படுகுழியில் தள்ளுகிறார்கள். இங்கு புலிகளில் பிழை பிடித்து போராட்டத்தை சீரிய வழியில் முன்னெடுக்க போகிறார்கள் சிலர். அது சரி நீலன் தான் பீரிசுடன் செய்த வரைபுகளை அக்காலத்தில் போராடிய புலிகளுடனோ மக்களுடனோ பகிர்ந்திருந்தார்களா?? அல்லது மூடிய அறையில் வரையப்பட்டதா?1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இருக்கிற தீர்வை நடை முறை படுத்தாமல் திண்டாடுகிறார்கள் ... மாவட்ட அபிவிருத்தி சபை திட்டமும் நல்ல திட்டம் என்று சொல்லுவினம் ....அதை தான் இப்ப அரசாங்கம் செய்ய முயலுகின்றது .. 75 வருடங்களாக தமிழர் பிரதேசம் என ஒன்று இருக்க கூடாது என அவர்கள் வேலை செய்கின்றனர் ....அப்படி இருந்தால் அது அவர்களுக்கு என்றோ ஒரு நாள் தீமை தரும் என நம்புகின்றனர்....1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள் வேண்டும் என்றால் சிரியுங்கள் ஆனால் குற்றவாளி என்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்குமான வித்தியாசத்தை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் என் இனம் மீதான பொறுப்பு எனக்கிருக்கிறது. டொட்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தமிழரின் அரசியல் போராட்டம் இன்னும் பல தலைமுறைக்கு கூட முன்னெடுக்க முடியாத அவல நிலையை உருவாக்கி விட்டுச் சென்றது பொற்காலம் இல்லை. ஒருவரை அடித்து துவைத்து ICU நோயாளராக்குவது எளிது. அவரை மீண்டும் நலமாக்க நீண்ட காலம் எடுக்கும். ஆனால், கருத்து தெரிவித்தாலே படுகொலை செய்யப்படுவர் என்ற உயிர்ப் பயம் இன்றி மக்கள் வாழ்வது ஒரு ஆறுதல் அவ்வளவுதான்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை இலங்கை பொலிஸார் எப்படி பட்டவர்கள் என்பதற்கு உதாரணம் அன்று தொடங்கி இன்று வரை வளர்ச்சி அடைந்து வருகிறது மேலும் உங்கள் விருப்பம் போல் புலிகள் பூண்டோடு அளிக்கப்படுவிட்டார்கள். 2009 ஆண்டுக்கு பின்னர் உங்களுக்கு பொற்காலம் தான்1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்தா, இரண்டாவது ஜட்ஜும் வந்து concurring decision எழுதியாச்சு😂! கந்தையராவது வாழ்ந்து கற்றவர்..இவரோ மடியில இருந்து கதை கேட்டு வரலாறும் சட்டமும் கற்ற "ஜட்ஜ் ஐயா"! நான் நினைக்கிறன் இனி தமிழர் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம், ஐடியாக்கள் யாராவது முன் வைத்தால், அவர்கள் தங்கள் சொந்தக் காசைப் போட்டாவது அதை நடைமுறைப் படுத்திப் போடோணும்! இல்லையோ பொத்திக் கொண்டிருக்கோணும். இரண்டுக்குமிடையில மாட்டிக் கொண்டால் "kill first, explain later" என்று எங்கள் அரைகுறை ஜட்ஜ் மார் தீர்ப்பெழுதுவீனம்😎!1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- நடனங்கள்.
1 point1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point- தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
மேலே உள்ளது ஒரு செய்தியா அல்லது வெறும் காழ்புணர்வினால் எழுதப்பட்ட வசை பாடலா? சுமந்திரன் மற்றயவர்களை போல ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவரின் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி மற்றய கள்ளர்கள் எல்லாம் தப்பிக்கும் உத்தியே இந்தக் கட்டுரை. சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழரின் போராட்டம் பூச்சிய நிலைக்கு கீழே பல மடங்கு ஆழத்திற்கு சென்று விட்டது.1 point- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
எல்லாம் எங்கன்ட கையில் தான் இருக்கு....டொலரை விசுக்கியெறிந்தால் வருவினம்...நாஙளும் பார்த்த மாதிரி இருக்கும்....முருகனும்..... நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய புண்ணியமும் கிடைக்கும் ...சிங்கள மக்களின் வ் ருவாய் அதிகரிக்கும் இதனால் அவர்கள் தமிழ் பிபில் மீது லவ் வந்து எங்களுக்கு உரிமையும் தருவினம்1 point- எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
Economic and Technology Cooperation Agreement Article Talk Language Watch Edit The Economic and Technology Co-operation Agreement (ETCA) is a proposed diplomatic arrangement that seeks to add to the existing free trade agreement between the Republic of Indiaand the Republic of Sri Lanka, primarily in relation to trade-in services and the service sector; it seeks to emulate a proto freedom-of-movementsystem and a single market.[1] Indian Prime Minister Narendra Modi and Sri Lankan President Maithripala Sirisena The proposal is championed by supporters as a method to introduce low-cost goods for low-income people in Sri Lanka and increase sales of high-end goods to India, while also making Sri Lanka more attractive for FDI.[2] But many lobby groups have become concerned that India would flood Sri Lanka with cheaper labor, with the IT industry in particular worried about the influx of cheaper Indian tech workers.[3] The high unemployment rate of India has been pointed out by many nationalist groups.[4] Sri Lanka expresses its gratitude to India for preventing a potential catastrophe and preserving peace.[5] The proposed agreement's impact has been estimated to be an increase of $500 billion to the common economy.[6] It has been likened to the economic union undertaken between the North-East Asian countries of Taiwan and People's Republic of China called the Economic Cooperation Framework Agreement, and both agreements share issues with the island nation's people worrying about being undercut by cheaper laborers from the mainland.[7] https://en.m.wikipedia.org/wiki/Economic_and_Technology_Cooperation_Agreement Resurgence of Sri Lanka-India Economic Ties: 12th Round of ETCA Negotiations Paves the Way for Prosperity November 02, 2023 In a significant development that marks a milestone in Sri Lanka’s economic and technological journey, the 12th Round of Economic and Technology Cooperation Agreement (ETCA) negotiations between Sri Lanka and India took place from the 30th of October to the 1st of November 2023 in Colombo. Sri Lanka’s vision has always been to integrate with the largest economies in Asia and East Asia, emphasizing export diversification while maintaining and nurturing existing major export markets. The ultimate goal is to connect with key players through the global value chain to boost the country’s economy and improve the living standards of its people. The discussions during this round of negotiations hold immense promise. The visit of the President of Sri Lanka to New Delhi on the 29th of July 2023 set the stage for a renewed commitment to the ETCA, which had been on hold since 2018. Both the Heads of States, representing Sri Lanka and India, agreed to comprehensively enhance bilateral trade and investments, especially in new and priority areas. A delegation of 19 Indian officials, led by Shri Anant Swarup, Chief Negotiator and the Joint Secretary of the Department of Commerce, Ministry of Commerce and Industry of India, visited Sri Lanka. They engaged in extensive discussions on this comprehensive Agreement. Representing Sri Lanka in these crucial negotiations was the National Trade Negotiating Committee (NTNC), headed by Mr. K.J. Weerasinghe, the Chief Negotiator from the Presidential Secretariat. The Sri Lankan Negotiation Team included representatives from the Ministry of Foreign Affairs, Ministry of Trade, Commerce and Food Security, Ministry of Industries, Department of Trade & Investment Policy, Attorney General’s Department, Department of Commerce, Department of Agriculture, Central Bank of Sri Lanka and Board of Investment, among others. The discussions during the 12th Round covered a wide range of topics, including Goods, Services, Rules of Origin, Trade remedies, Customs Procedures and Trade Facilitation, Technical Barriers to Trade, Sanitary and Phytosanitary Measures and Legal and Institutional Affairs. Additionally, a special session was dedicated to addressing implementation-related issues of the existing India-Sri Lanka Free Trade Agreement (ISFTA). This resumption of ETCA negotiations represents a significant step towards strengthening the economic partnership between Sri Lanka and India. It underlines the commitment of both nations to foster collaboration in various sectors, ultimately benefiting their economies and the well-being of their citizens. As the talks progress, it is anticipated that this agreement will open up new avenues for trade and investment, bringing prosperity to both nations in the ever-evolving global landscape. https://www.news.lk/news/political-current-affairs/item/35844-resurgence-of-sri-lanka-india-economic-ties-12th-round-of-etca-negotiations-paves-the-way-for-prosperity1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை. ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது. புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் (சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்) ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994 ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி 2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா? மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்? நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும். அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள் புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள். உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை எந்த இனமும் 100% மனித பண்புகளுடன் வாழவில்லை...இதை புரிந்து கொள்ளாத படியால் தான் இந்த கருத்துக்கள் வருகின்றனர்... நேற்று ஹாமாஸின் உயர்மட்ட பேச்சாளர் நைஜீரியாவில் ஒர் பேட்டியில் சொல்கின்றார் ஒக்டம்பர் 7 ஆம் திகதி தாங்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் ஒர் இராணுவ நடவடிக்கை என்று.... இதை எமது போராளிகள் செய்தால் பயங்கரவாதம் என அவர்கள் இல்லாத பொழுதும் பக்கம் பக்கமாக விமர்சனம் வைப்பார்கள் .....ஆனால் பலஸ்தீனருக்காக பக்கம் பக்கமாக நியாயபடுத்தல்கள் .... ஏன் தோண்டுகிறார்கள் ,நோண்டுகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி...ஏதாவது பலன் ? விட்ட தவறிலிருந்து பாடம் கற்க வேணும் என பாடம் எடுப்பினம்...1 point- எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
நீங்களாகவே 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்லது...அவர்கள் எடுத்தால் பிறகு நீங்கள் ஹிந்தி படம் பார்த்து பைலா அடிக்கும் நில வரலாம்..1 point- இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
இந்த விடயத்தில் மக்களை மோதவிட்டு மக்கள் புரட்சி ...என சீன் காட்டாமல் ....சம்பந்த பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்....கடற்படை சுட்டு தள்ளாமல்.... அவர்களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும் ....கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் உள்ளே வருகின்றது ,மீன் தொழிலாளர்கள் உள்ளே வருகின்றனர் என்றால் முப்படைகள் பொலிஸ் எல்லாம் என்ன செய்கின்றனர்...தமிழர்களை அழிக்கவா? துரோகி பட்டமும் ஒர் கெளரவ பட்டமாக வெகு விரைவில் அறிவிப்பார்கள் ...ஆகவே அதை பார்த்து பயப்பட வேண்டாம்..1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குச்சவெளி பிரதேசத்தின் 4 விகாரைகள் இலங்கையின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த இடங்களாக பிரகடனம்
1 pointஇப்பதான் இரண்டு வகுப்பு முடிந்திருக்கிறது. மூன்றாம்வகுப்பு வவுனியாவிலாம். இந்த வகுப்பெல்லாம் முடியிறதுக்குள்ள அவன் எல்லாவற்றையும் பிரகடனப்படுத்தி முடிச்சிடுவான். சிறப்பாகசெய்கிறார்கள்.1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இங்கேயும் சரி ரஜனி திராணகம திரியிலும் சரி உங்களைப் போலவே "துரோகி" என்று ஊரில் இருந்து கொல்லப் பட்டவனை மேலும் கேவலப் படுத்தியோர் யார் என்று ஒருக்கா தேடிப் பார்த்தால், இந்த இரு வகைக்குள் வருகிறீர்கள்: 1. நான் சின்னப் பிள்ளையா இருந்தேன், பிறகு வெளிநாட்டுக்கு வந்து விட்டேன், பிறகு "வீடியோ பார்த்து எல்லாம் அறிந்து கொண்டேன், வரலாற்றை எழுதுகிறேன்", என்றிருப்போர். 2. பெரிசுகளைப் பார்த்தால், 90 களில் இயக்கம் பாஸ் சிஸ்ரம் கொண்டு வர முதல் கேஜி பஸ் கொழும்புக்கு ஓடின காலத்தில் அதில் ஆறுதலாக ஏறி வந்து அசைலம் அடித்த ஆட்கள். இது இரண்டிலும் அடங்காமல், ஆறுதலாக அங்கேயே படித்து, தென்பகுதியிலும் வேலை செய்து இரண்டு தரப்பினரிடமும் அல்லல் பட்டு சொந்த முயற்சியால் வெளியேறி வந்த என்னைப் போன்ற ஆட்களும், அங்கேயே தங்கி விட்டோரும் மேல் இரு தரப்பையும் போல நினைப்பது மிக அரிது. எனவே, இரண்டாம் வெடிக்கென்ன, முதல் சத்த வெடிக்கே தெறிச்சோடின 😂உங்கள் ஆட்களிட்டையே கேட்டுப் பாருங்கோ, ஏன் இந்த வித்தியாசமெண்டு!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தம்பி நன்னியர், நீலன் திருச்செல்வம், அமீர், யோகேஸ்வரன் இன்ன பிற புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட ஆட்களெல்லாம் புலிகளுக்கோ, தமிழருக்கோ நன்மை செய்தார்களோ தெரியாது. ஆனால், இவர்களெல்லாம் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்: தந்தை, கணவன், சகோதரம், மச்சான், சிலருக்கு உதவிய உற்ற நண்பர்களாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் அவர்கள் இணையத்தில் "ஆவணக்கட்டாக" 😎ஏற்றவில்லை என்பதற்காக அவர்கள் எந்த நன்மையும் பயனுமற்ற அகற்ற வேண்டிய களைகள் என்கிறீர்களா? அப்படியானால் இதே மாதிரி தமிழருக்கு நன்மை என்று நீங்கள் கருதுவதைச் செய்யாத எல்லாரையும் சுட்டுப் போட்டு "என்ன நன்மை செய்தார், எனவே போகட்டும் என்பீர்களா?" நீங்கள் யார் தமிழருக்கு எது நன்மை என்று தீர்மானிக்க? எப்ப இருந்து தமிழர் போராட்டத்தை சிறு திரையிலும், அம்மா அப்பாவின் வாய் வழிக் கதையிலும் கேட்டு நன்மை தீர்மானிக்க சான்றிதழ் வாங்கி இஸ்பெக்ரர் ஆனீர்கள் என்று ஒருக்காச் சொல்லுங்கோ தம்பி😅? அதன் பிறகு மிச்சத்தை எழுதுகிறேன்! இதற்கு ஏதாவது ஆதாரம்?? வசி இணையக் குப்பையில் கண்ட அதே அரைகுறைப் புரிதலுடனான உரையாடல்கள் தான் ஆதாரங்கள் என்றால் தந்து மெனக்கெடாதீர்கள்!1 point- குட்டிக் கதைகள்.
1 pointஅழைப்பில் அலாதி ஆனந்தம் கதையாசிரியர்: வளர்கவி கதை வகை: ஒரு பக்கக் கதை கதைத்தொகுப்பு: குடும்பம் கதைப்பதிவு: February 19, 2024 பார்வையிட்டோர்: 448 நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று. கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம். என்வீட்டிற்கு வந்தவர் ‘கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா உங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு. ‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’ என்றேன். ‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில் மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்! உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார். ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது. சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய் அமைந்தது. எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார். நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து கொள்வதில்லை. காரணம்… அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில் தானே வருகிறது?! வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது. https://www.sirukathaigal.com/ஒரு-பக்கக்-கதை/அழைப்பில்-அலாதி-ஆனந்தம்/1 point- அப்பா உள்ளே இருப்பது நீதானா?
1 pointPutthan, இறுதிச்சடங்கு நிறுவனத்தில் நடந்த விடயங்களும் அதனால் உரிமையாளர் ஜோகன், தண்டனை பெற்று சிறைக்குப் போனதும்தான் உண்மையான சம்பவம். மற்றும்படி, அன்றியா, அல்போன்ஸ் எல்லாம் புனைவு.1 point- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
என்ன கொண்வூயுஸ் ஆகிட்டியல் பெருமாள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கு போய் எம.ஜீ.ஆரின் படம் பார்த்திட்டு வாரவயலாம்.. இனி வரும் காலங்களில் இந்தியா ரூபாவை தான் இறையாண்மையுள்ள சிறிலங்கா உப யோகப்படுத்தும் நிலமை வரலாம்.. சிறிலங்கணுக்கு விசா தேவையில்லை இந்தியாவுக்கு செல்ல... கால போக்கில் இந்திய கடவுச்சீட்டு சிறிலங்கனுக்கு வழங்கலாம்...1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointபிறந்தநாள் வாழ்த்துகள் நுணா! பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- இரண்டாம் பயணம்
1 pointவல்லை வெளியிலிருந்து நெல்லியடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தது மினிபஸ். வழியெங்கிலும் நான் சைக்கிளில் ஓடித்திருந்த இடங்கள். அன்றைய தென்னோலையினாலும், பனையோலையினாலும் வேயப்பட்ட பதிவான கூரைகளைக்கொண்ட பழைய பலசரக்குக் கடைகளும், சைக்கிள் திருத்தும் நிலையங்களும் மறைந்துவிட்டன. வீதியின் இருமரங்கிலும் சீமேந்தினால் கட்டப்பட்ட கடைகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மூத்தவிநாயகர் கோயில் புதிய வர்ணத்தால் பூசப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. நாவலர் மடத்திலிருந்து நெல்லியடிச் சந்திவரையான பகுதி நன்றாக அபிவிருத்தியடைந்திருந்தது. புதிய கடைகள், வங்கிகள் என்று சுறுசுறுப்பான பகுதியாக மாறியிருந்தது. நெல்லியடிச் சந்தியில் என்னை இறக்கிவிட்டார்கள். "இறங்கின உடனே ஓட்டோவில ஏறிப்போடாதை, கனக்கக் காசு சொல்லுவாங்கள். மகாத்மா தியெட்டர் மட்டும் நடந்துவந்து அங்கையிருந்து ஓட்டோ பிடி" என்று சித்தி கூறியது நினைவிற்கு வரவே நடக்கத் தொடங்கினேன். கடைவீதிகளில் சனம் அலைமோதியது. யாழ்ப்பாணத்திற்குப் பிறகு அதிக சனநடமாட்டம் உள்ள பகுதிகளில் நெல்லியடியும் ஒன்றென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிட நடையில் மகாத்மா தியெட்டருக்கு அருகில் வந்தாயிற்று. வரிசையாக நின்ற மூன்று ஓட்டோக்களில் முதலாவதாக நின்றவரிடம் "உச்சில் அம்மண் கோயிலடிக்குப் போக எவ்வளவு எடுப்பீங்கள்" என்று கேட்டேன். சாரதிக்கு 35 வயதிருக்கும். வலதுகை மணிக்கட்டுடன் வெட்டப்பட்டிருந்தது. இடதுகையினால் ஓட்டோவைச் செலுத்திவருகிறார் போலும். "உச்சில் அம்மண் கோயிலுக்குக்கிட்டவோ அல்லது அதுக்கு முதலோ?" என்று கேட்டார். சித்தியின் பெயரைச் சொன்னபோது புரிந்துகொண்டார். "ஏறுங்கோ அண்ணை, 400 ரூபா தாங்கோ" என்றார். வழியில் பேசிக்கொண்டே போனோம். கையில் என்ன நடந்தது என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, "நான் முன்னாள்ப் போராளியண்ணை, தீபன் அண்ணையின்ர குறூப்பில இருந்தனான். சண்டையில் கை போட்டுது. முகாமில இருந்து வெளியில வந்துட்டன். உங்கட தம்பி (சித்தியின் மகன்) எங்களோட கொஞ்சக்காலம் இருந்தவர்" என்று கூறினார். இறுதிப்போர்க்கால நிகழ்வுகள் சிலவற்றை அவர் சொன்னபோது வலித்தது. மிகுந்த அன்புடன் அவர் பேசியது பிடித்துப்போயிற்று. என்னைப்பற்றிக் கேட்டார். 2018 இற்குப்பிறகு இப்போதுதான் வருகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே வீடு வந்தோம். ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன். "சில்லறை இல்லையோ அண்ணை?" என்று கேட்க, "மிச்சம் வேண்டாம், வைச்சுக்கொள்ளும்" என்று சொன்னபோது, நன்றியண்ணை என்று சொன்னார். அவரின் கதையினைக் கேட்கும்போது அழுகை வந்தது. இவ்வாறானவர்களையல்லவா நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். இவர்போல் இன்னும் எத்தனைபேர் எமது சமூகத்தில் இருக்கிறார்கள்? எம்மை நம்பியல்லவா எமக்காகப் போராடப் போனார்கள்? இன்று அவர்களின் நிலையென்ன? அவரை வழியனுப்பி வைத்துவிட்டு அம்மம்மாவின் வீட்டினுள் நுழைந்தேன். எனது வருகையைப் பார்த்துக்கொண்டிருந்த சித்தி, "ஓட்டோவுக்கு எவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்டார். "நானூறு கேட்டு ஆயிரம் குடுத்தேன்" என்று கூறினேன். "உனக்கென்ன வருத்தமே? ஏன் அவ்வளவு குடுத்தனீ?" என்று கேட்க, "இல்லை, அவர் முன்னாள்ப் போராளி சித்தி, கையும் இல்லை, பாவமாக் கிடக்கு" என்று கூறவும் அவர் அடங்கிவிட்டார். அம்மாவின் வீட்டின் பெயர் இராணி இல்லம். அதற்கொரு காரணம் இருக்கிறது. எனது அம்மாவுடன் சேர்த்து ஆறு பெண்களும் இரண்டு ஆண்களும் குடும்பத்திலிருந்தனர். எல்லாப்பெண்களுக்கும் இராணி என்ற சொல்லில்த் தான் பெயர் முடிவடையும். அன்னராணி, செல்வராணி, புஷ்ப்பராணி, யோகராணி, இதயராணி, கலாராணி என்று ஆறு ராணிகள். அதனால், ஐய்யா (அம்மாவின் தகப்பனார்) 1960 இல் அவ்வீட்டைக் கட்டும்போது இராணி இல்லம் என்று பெயர் வைத்துவிட்டார். அந்நாட்களில் அப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளில் விசாலமானதும் அழகானதுமாக அவ்வீடு இருந்தது. கொழும்பில் எனது குடும்பம் வாழ்ந்த காலத்தில் மார்கழி விடுமுறைக்கு அங்கு வந்து தங்குவோம். எம்மைப்போன்றே யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்துவந்த அம்மாவின் சகோதரர்களும் அதேகாலப்பகுதியில் விடுமுறைக்கு வருவார்கள் அம்மம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று பெரும் பட்டாளமே அவ்வீட்டில் நிற்கும். அம்மம்மாதான் எல்லோருக்கும் கட்டளை வழங்குவது. பாடசாலை ஆசிரியரான அவர் இயல்பாகவே கண்டிப்பானவர். ஆனால், அன்பானவர். வீட்டில் உள்ள சின்னக் கிணற்றில் துலாமரத்தினால் அள்ளிக் குளிப்பது ஒரு சுகம். மாமா எல்லாச் சிறுவர்களையும் வரிசையில் இருத்திவைத்து குளிக்கவைப்பார். "உனக்கு மூண்டு வாளி, எனக்கு நாலு வாளி" என்று போட்டி போட்டு மாமாவிடம் வாங்கிக் குளிப்போம். கடைசி வாளியை வார்க்கும்போது "சுகம், சுகம், சுகம்" என்று சொல்லிக்கொண்டே வார்ப்பார். ஏனென்றால், குளிர்தண்ணியில் குளிப்பதால் வருத்தம் ஏதும் வந்துவிடக்கூடாதென்பதற்காக அப்படிச் சொல்வது வழமையாம். அப்படியிருந்த வீட்டில் இப்போது சித்தி மட்டும் ஒற்றை ஆளாக வாழ்ந்துவருகிறார். அன்றிருந்த கலகலப்பும், மக்கள் கூட்டமும் அற்றுப்போய் வெறிச்சோடி அமைதியாகக் கிடந்தது எங்கள் அம்மாமாவின் வீடு. சிறுவயதில் வீட்டின் விறாந்தையில் இருந்து விளையாடிய இடங்களை ஆசையுடன் தொட்டுப்பார்த்தேன். மழைகாலத்தில் கப்பல்விட்டு விளையாடிய முன் விறாந்தை, பின்முற்றத்தில் பரந்து விரிந்து வளர்ந்து அப்பகுதியெங்கும் இலைகளையும் மாம்பிஞ்சுகளையும் கொட்டும் கிளிச்சொண்டு மாமரம் என்று ஒவ்வொரு இடத்தையும் மனம் தேடிப் பார்த்துக்கொண்டது. விறாந்தையில் போடப்படிருந்த வாங்கில் அமர்ந்தபடியே சித்தியுடன் பேசினேன். அவரை இறுதியாக 2022 புரட்டாதியில் அவுஸ்த்திரேலியாவில் பார்த்தேன். திருமண நிகழ்வொன்றிற்காக வந்திருந்தார். ஆகவே, சிட்னியில் இருக்கும் குடும்பங்கள் குறித்து நலம் விசாரித்தார். பின்னர் ஊர்க்கதைகள் மேடைக்கு வந்தன. ஒரு இரண்டு மணிநேரமாவது பேசியிருப்போம், "குளிச்சுப்போட்டு வா சாப்பிடுவம்" என்று கூறவும் பழைய நினைப்பில் கிணற்றில் துலாவினால் அள்ளிக் குளிக்கலாம் என்று போனால் துலாவைக் காணோம். "எங்கே சித்தி துலா?" என்று நான்கேட்க, "இந்தவயசில என்னால துலாவில அள்ளிக் குளிக்க ஏலுமே? உள்ளுக்கை வக்குக்கட்டியிருக்கிறன், மோட்டர் போட்டால் தண்ணிவரும், அங்கை போய்க்குளி" என்று சொன்னார். அங்கிருந்த வெய்யில்ச் சூட்டிற்கும், வியர்வைக்கும் குளிரான நீரில் அள்ளிக் குளித்தது உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. ஆசைதீரக் குளித்தேன். குளித்து முடிந்து வந்ததும், அருகில் வசிக்கும் இன்னொரு சித்தியும் இணைந்துகொள்ள மதிய உணவு உட்கொண்டோம். சித்தியின் சமையல் அசத்தலாக இருக்கும். கோழி, ஆடு, கத்தரிப்பொரியல், இறால்ப்பொரியல், பருப்பு என்று அட்டகாசப்படுத்தி வைத்திருந்தார். பசியொரு புறம், அவரது சமையலின் சுவை இன்னொருபுறம் என்று ஆகிவிட இருமுறை போட்டுச் சாப்பிடாயிற்று. மாம்பழம் வெட்டிவைத்திருந்தார். அதையும் ருசித்தாயிற்று. தொடர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். "இண்டைக்கு இங்கதானே நிற்கிறாய்?" என்று சித்தி கேட்கவும், "இல்லைச் சித்தி உங்களையும் மற்றச் சித்தியையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவைப் பாக்கப் போயிட்டு, நீங்கள் திரும்பி வாங்கோ, நான் யாழ்ப்பாணத்திலை நிற்கிறன்" என்று சொன்னேன். அவருக்கு அது அவ்வளவாக மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. "ஏன், நிக்கிறன் எண்டுதானே சொன்னனீ? இப்ப ஏன் இல்லையெண்டுறாய்?" என்று மீண்டும் கேட்டார். "இல்லைச் சித்தி, நாளைக்கு வன்னிக்குப் போறதெண்டு நெய்ச்சிருக்கிறன். இங்க நிண்டுட்டு நாளைக்குக் காலையில யாழ்ப்பாணம் போய் பிறகு வன்னிக்குப் போறதெண்டால் நேரம் காணாது. அடுத்தநாள் கொழும்புக்கும் போறன், குறை நெய்க்காதேங்கோ" என்று கூறினேன். அதன்பிறகு, "உன்ர" விருப்பம் என்று விட்டுவிட்டார். மாலை 4:30 மணிக்கு சித்தியின் வீட்டிற்கு அருகில் சொந்தப் பாவனைக்கென்று ஓட்டோ ஒன்றினை வைத்திருக்கும் நண்பர் ஒருவரை எம்மை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டோம். நண்பர் ஆதலால் யாழ்ப்பாணம் போய்வர 3500 ரூபாய்கள் மட்டுமே கேட்டார். நியாயமான விலைதான். கடும் மழை பெய்யத் தொடங்கியது. முன்னால் செல்லும் வாகனத்தைப் பார்க்க முடியாதளவிற்கு மழை. ஓட்டோவின் இருபக்கத்திலும் இருந்த ரப்பர் சீலையினை சாரதி இறக்கிவிட்டார். மெதுமெதுவாக யாழ்ப்பாணம் நோக்கிய எமது ஓட்டோப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுகிலும் அவருடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டு வந்தேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்பதால் இடங்கள் குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று நினைத்திருக்கலாம். ஆகவே, வழியில் பலவிடங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டு வந்தார், நானும் தெரியாவர் போல்க் கேட்டுக்கொண்டு வந்தேன். ஊரில் உள்ள பிரச்சினைகள், அரசாங்கம், இளைஞர்கள் என்று பலவிடயங்கள் குறித்துக் கூறினார். கலியாணக் கொண்டாட்டங்கள், வெளிநாட்டுக் காசு படுத்தும் பாடு என்றும் அலசப்பட்டன. சித்திமார் இருவரும் அமைதியாக இருக்க நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே வந்தோம்.1 point- இரண்டாம் பயணம்
1 pointமாலை ஆறு மணிக்கு எழுந்திருப்போம் என்று நினைக்கிறேன். இன்னமும் வெளிச்சம் இருந்தது. வீட்டின் வெளிப்பகுதியிலிருந்து பேசத் தொடங்கினோம். கொழும்பில் கல்விகற்ற நாட்களில் நடந்தவை, தெரிந்த நண்பர்கள் பற்றிய விபரங்கள், அந்தநாள்க் காதல்கள், குடும்ப வாழ்க்கை என்று பல விடயங்கள் அலசப்பட்டன. நண்பர்களுடனான தனி விடுமுறைக் காலங்கள் குறித்துப் பேச வேண்டும். நாம் நாமாக இருப்பது நண்பர்களுடன் இருக்கும் வேளையில் மட்டும் தான் என்று நான் நினைப்பதுண்டு. எந்த விடயத்தையும் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, கூச்சமின்றி, என்னைப்பற்றி என்ன நினைப்பான் என்கிற சிறிய அச்சமும் இன்றி எந்த விடயத்தையும் பேசமுடியும். உங்களுக்கு இதில் மாற்றுக் கருத்துக்களிருக்கலாம். ஆனால், நான் உணர்ந்துகொண்டது இதைத்தான். ஆகவே, பல விடயங்களை ஒளிவுறைவின்றிப் பேசினோம். ஏமாற்றங்கள், துரோகங்கள், வஞ்சனைகள், பிணக்குகள் கூட சம்பாஷணைகளில் வந்துபோயின. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடும்போது ராசா அண்ணையையும் கூடிவரலாம் என்றே ஆரம்பத்தில் நண்பன் சொன்னான். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவது கூடத் தெரியாது, ஆகவே நானும் உடனேயே ஓம் என்று கூறிவிட்டேன். ஆனால், உரும்பிராயிலிருந்து கிளம்பும்போது எமது முடிவை மாற்றிக்கொண்டோம். "மச்சான், அண்ணை வந்தால் எங்களால சுதந்திரமாக் கதைக்கேலாது. நீ அவரோட ஊர்க்கதை பேசிக்கொண்டிருப்பாய், அவர் நிக்கட்டும், நாங்கள் போட்டு வருவம். அவர் நாளைக்கு நாளண்டைக்கு எப்படியும் அங்க போவார்" என்று கூறவும் நானும் சரியென்றேன். ஆக, இந்தப் பயணம் நானும் நண்பனும் மட்டும் எமது கடந்தகால வாழ்க்கையை அலச, எடைபோட, சுக துக்கங்களை அலச நடத்தப்பட்டது என்றே வைத்துக்கொள்ளலாம். சிட்னியிலிருந்து கிளம்பும்போது "நீங்கள் பச்சுலர்ஸ் பாட்டிக்குத்தான் போறியள்" என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டை ஓரளவிற்கு உறுதிப்படுத்தியிருக்கிறது அக்கராயன் நோக்கிய எனது பயணம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தபின்னர் 9 மணியளவில் இரவுணவு ஆயத்தமாகியிருந்தது. தேங்காய்ப்பூ பிசைந்த மா ரொட்டி. கூடவே கோழிக்கறி. அருமையான சாப்பாடு. பேசியபடியே இரவுணவை முடித்தோம். இருள் படர்ந்த இரவு, சுற்றியிருக்கும் மரங்களில் கூடுகளுக்குள் அடைக்கலாமிவிட்ட குருவிகளின் இரைச்சல். இடைக்கிடையே கிளைகள் வழியே தாவித் திரிந்த குரங்குகள், இடைவிடாது இரைச்சலிட்டுக் கொண்டிருந்த சில்வண்டுகள், இவை எல்லாவற்றிற்கிடையிலும் தொலைவில் கேட்ட புகையிரதச் சத்தம் என்று பல வருடங்களுக்குப் பின்னர் நகரத்தின் சலசலப்பும், அவசரமும் இன்றி, சிட்னியிலிருந்து வெகு தூரத்தில், மறுநாள் பற்றிய எந்தக் கவலையுமின்றி ஒரு இரவை முற்றாக உணரவும் அனுபவிக்கவும் முடிந்தது. 10 மணியளவில் தூங்கியிருப்போம். காலை 5 மணிக்கே தூக்கம் கலைந்துவிட்டது. வழமைபோல நண்பனுக்கு சிரமம் கொடுக்காது காலைக்கடன்களை முடித்துவரலாம் என்று கிளம்பினேன். வெளியில் வெளிச்சம் மெதுமெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. காலைக்கடன் முடித்து, குளித்துவிட்டு வெளியே வரும்போது அந்த அம்மா காப்பி கொண்டுவந்திருந்தார். குடித்துக்கொண்டிருக்க நண்பன் எழும்பிவந்தான். "எப்படி நித்திரை?" என்று கேட்டேன். "மச்சான், சொன்னால்க் குறைநெய்க்கக் கூடாது, நல்லாத்தான் குறட்டை விடுறாய் நீ" என்று சொன்னதும் தூக்கிவாரிப்போட்டது எனக்கு. அட, இங்கையுமா? கடந்த சில மாதங்களாக நித்திரை கொள்வதென்பது என்னைப்பொறுத்தவரையில் ஒரு பிரச்சினையாகவே மாறியிருந்தது. இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் தூங்கினாலே போதும் என்கிற நிலையில்த்தான் நான் இருந்து வருகிறேன். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஒழுங்குகள் செய்யத் தொடங்கிய நாளிலிருந்து இருந்த நித்திரையும் காணாமற் போய்விட்டிருந்தது. விமானத்தில் தூக்கம் வராது என்பதனால் சில நாட்களாகவே தூங்குவதென்பது பெரிய பிரச்சினையாக மாறிப்போயிருந்தது. ஆகவேதான், அக்கராயனில் தங்கிய இரவன்று அசதியில் நன்றாகவே நான் தூங்கியிருக்க வேண்டும். அது நண்பனின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டு விட்டது. காலை சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. காலையுணவு இடியப்பமும் சொதியும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு கிளம்புவதற்குத் தயாரானோம். நண்பனின் மோட்டார்ச் சைக்கிள் வியாபார ஸ்த்தாபனம் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்திருக்கிறது. அடிக்கடி தொலைபேசியில் நிலையத்தின் ஊழியர்களைத் தொடர்புகொண்டு அலுவல்கள் கிரமமாக நடப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலும், ஒருநாள் என்னுடன் செலவிட்டதனால் காலையிலேயே நிலையத்திற்குச் சென்று காரியங்களை மேற்பார்வை செய்ய நினைத்திருக்கலாம். "உன்ர பிளான் என்ன?" என்று கேட்டான். "கரவெட்டிக்குப் போய், மற்றைய இரண்டு சித்திமாரையும் கூட்டிக்கொண்டு சிஸ்ட்டர் அன்ராவிடம் போய்வரவேண்டும். இண்டைக்கு அதுமட்டும்தான்" என்று கூறினேன். தோட்டத்தில் கிடந்த தேங்காய்கள் சிலவற்றை அங்கிருந்தவர்கள் உரித்து காரில் வைத்தார்கள். அவற்றையும் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம். அக்கராயன் வந்த அதே பாதை வழியே திரும்பினோம். முன்னைநாள் மாலை மாவீரர் தினம் நடைபெற்ற கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மீண்டும் அநாதரவாகக் கிடந்தது. சுற்றிவரக் கொடிகள் இன்னும் அசைந்துகொண்டிருக்க, மக்களின்றி அமைதியாகக் கிடந்தது. முதள்நாள் கண்ட தென்னங்கன்றுகளும் காணாமற் போயிருந்தன. அக்கராயனிலிருந்து கிளிநொச்சி வரையிலான வீதிகளில் பல விடங்களில் மாவீரர்தின ஏற்பாடுகளின் மிச்ச சொச்சங்களை காலையிலும் காண முடிந்தது. மன்னார் பூநகரி நாவற்குழி பாதை வழியே யாழ்ப்பாணம் திரும்பினோம். இடையில் நிற்கும் எண்ணம் இருக்கவில்லை. முடிந்தளவிற்கு வேகமாகவே வண்டி பயணித்தது. காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் நண்பன் என்னை இறக்கிவிட, கன்னாதிட்டி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.1 point- இரண்டாம் பயணம்
1 pointகனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அக்கராயன் பகுதி வருகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எழில்மிகுந்த சாலையும் இப்பகுதியிலேயே இருக்கிறது. பிற்பகல் 3 மணியளவில் அக்கராயனில் அமைந்திருக்கும் நண்பனின் குடும்பத்திற்குச் சொந்தமான கமத்தினை அடைந்தோம். 90 ஏக்கர்கள் வயற்காணியும், தோட்டக்காணியும் கொண்ட பாரிய காணித்தொகுதி அது. நண்பனின் சகோதரர்கள் அனைவருக்கும் இங்கே காணித்துண்டுகள் அவர்களது தந்தையினால் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. அண்மையில் பெய்த கடும் மழையினால் வயல்களுக்குள் வெள்ளம் நிற்பது தெரிந்தது. நண்பனின் கமத்தில் பணிபுரிவோர் அடுத்த மழை ஆரம்பிக்கும் முன்னர் மருந்தடிக்கும் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தோட்டக் காணிகளில் தென்னை மரங்களும் பழம் தரும் மரங்களும் காணப்பட்டன. சூரிய வெளிச்சம் நிலத்தில் விழுவதே அரிதாகும் அளவிற்கு அக்காணி சோலைபோன்று காட்சியளித்தது. மரமுந்திரிகை, தேக்கு மரங்களும் வரிசைக்கு நேர்த்தியாக நடப்பட்டிருந்தது. நண்பனின் சகோதரகள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்வதுண்டு, குறிப்பாக வெளிநாட்டில் வசிப்போர். விருந்தாளிகள் வந்தால் தங்குவதற்கென்று சகல வசதிகளுடனும் கூடிய விருந்தினர் மாளிகை ஒன்றினை அவர்கள் கட்டியிருந்தார்கள். மேற்கத்தைய பாணியில் அமைக்கப்பட்ட குளியல் அறைகள், கழிவறைகள், விருந்தினர் மண்டபம், படுக்கையறைகள் என்று நகரப்பகுதியில் இருந்து தொலைவாக அமைந்திருக்கும் ஒரு விவசாயக் கிராமத்தில் இவ்வாறான வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகையினைக் காண்பது அருமையே. இந்த விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கவும், வயற்காணிகளையும், தோட்டக்காணிகளையும் பராமரிக்கவும் என்று சில பணியாளர்கள் இங்கே வசித்துவந்தனர். அவர்களுக்கென்று தனியான வீடுகளும் அங்கே கட்டப்பட்டிருந்தன. நாம் செல்லும் வழியில் கிளிநொச்சி நகரில் இருந்த அங்காடியொன்றிலிருந்து மீன்கள் சிலவற்றையும், இறால்களையும் வாங்கிச் சென்றிருந்தோம். நண்பனின் விருந்தினர் தங்குமிடத்தைப் பராமரிக்கும் அம்மா ஒருவர் அவற்றைத் துப்பரவு செய்து சமைக்கத் தொடங்கினார். சற்று ஓய்வெடுத்தபின், கமத்தில் இருந்த கிணற்றில் குளித்துவிட்டு சுற்றவர இருக்கும் காணிகளைப் பார்ப்பதற்கு நடந்துசென்றோம். நண்பனின் சகோதர்களின் காணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. சிலவற்றில் எல்லைகளே காணப்படவில்லை. இடையிடையே செல்லும் குறுக்கு வீதிகள் அவற்றை பிரித்துச் சென்றபோதும், அவை அனைத்துமே ஒரே பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இக்காணிகளில் இருந்த பனை மற்றும் தேக்கு மரங்களில் மயில்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். மயில் இங்கு அடிக்கடி காணப்படும் ஒரு பறவை. அப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்து மயில் அகவுவது கேட்டுக்கொண்டே இருக்கும். அக்காணிகளை அண்டிய வீடொன்றிற்குச் சென்றோம். நன்கு பரீட்சயமானவர்கள். அவ்வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவன் சண்டைக்கு வளர்க்கும் வெள்ளடியான் சேவல்களை வைத்திருந்தார். குறைந்தது 80 இலிருந்து 100 வரையான சேவல்களும், குஞ்சுகளும் அவரிடம் இருந்தன. தமக்குள் சண்டைபிடிக்கும் சேவல்களைத் தனியாகப் பிடித்து அடைத்து வைத்திருந்தார்கள். இப்போதும் சண்டைக்கு சேவல்களை வளர்க்கும் வழக்கம் இருக்கிறதா என்று கேட்டபோது, ஆம், ஆட்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். கறிக்கும் எடுப்பது உண்டு என்று அந்த இளைஞன் கூறினார். அப்படியே காணிகளிருந்து வெளியே வந்து வீதிக்கு ஏறினோம். அதுதான் ராசா அண்ணை மரம் நட்டு வளர்த்த வீதி. வீதியின் ஒரு எல்லையிலிருந்து மற்றைய எல்லைக்கு நடந்து சென்று சுற்றவர இருக்கும் வயற்காணிகளைக் கண்டு களித்தோம். இடையிடையே புகைப்படங்கள், செல்பிகள். வீதிக்குச் சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலுக்கு மேலாக சீமேந்தினால் பாலம் ஒன்றைக் கட்டியே நண்பனின் வீட்டிற்குச் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிலிருந்து சிறிது நேரம் பழங்கதை பேசினோம். சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்கப் பசியெடுத்தது. நாம் கொண்டுவந்திருந்த மீன், இறால் என்பவற்றைக் குழம்பாக வைத்திருந்தார் அந்த அம்மா. அவற்றுடன் கரட் சம்பலும், உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. வீட்டுக்கிணற்றில் ஆசைதீர குளித்த குளியலும், தோட்டக்காணிகளைச் சுற்றிவர நடந்த நடையும் களைப்பினையும் பசியினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்க வயிறார உண்டோம். தோட்டத்தில் காய்த்த பப்பாளிப்பழமும், வாழைப்பழமும் கொண்டுவந்தார்கள். சிறிது நேரத்தில் களைப்பு மிகுதியால் தூங்கிப்போனோம்.1 point- இரண்டாம் பயணம்
1 pointகாலை 8 மணியிருக்கும். தான் கூறியதுபோலவே மைத்துனரின் வீட்டு வாயிலில் நண்பனது கார் வந்து நின்றது. "வெளிக்கிட்டியாடா?" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டான். "ஓம், வாறன்" என்று சொல்லிவிட்டு மைத்துனரின் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினேன். ஆனைப்பந்தியூடாக, பலாலி வீதியை குறுக்கறுத்து பருத்தித்துறை வீதியில் ஏறினோம். பருத்தித்துறை வீதியில் நல்லூருக்கு அண்மையில் ஒரு அசைவக உணவகம். காலைச்சாப்பட்டிற்காக வண்டியை நிறுத்தி வாங்கிக்கொண்டோம். சுடச்சுட பட்டீஸும், ரோல்ஸும். அருமை. ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டு வந்தான். பயணம் முழுதற்கும் என்று யோசித்திருக்கலாம். மீண்டும் பலாலி வீதியில் வண்டி ஏறியது. தின்னைவேலி, பாமர்ஸ் ஸ்கூல், கோண்டாவில்ச் சந்தி, டிப்போவடி என்று நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த வீதிகளும் ஊர்களும் நண்பனது வாகனத்தில் பயணிக்கும்போது சடுதியாகத் தோன்றி மறைந்தது போலவும், வீதிகள் சுருங்கிவிட்டது போலவும் ஒர் உணர்வு. இந்தவிடங்கள் எல்லாவற்றிலும் நிறையவே நினைவுகள் கலந்திருக்கின்றன. பசுமரத்தாணி போல என்று சொல்வார்களே? அதுபோல. என்றும் பசுமையான நினைவுகள். எளிதில் எழுத்தில் வடித்துவிடமுடியாதவை. ஆதலால் தொடர்ந்து செல்கிறேன். சிட்னியிலிருக்கும் நண்பர் ஒருவரது தகப்பனாரைப் பார்ப்பதே உரும்பிராய்ப் பயணத்தின் நோக்கம். ஊரில் பிரபல வர்த்தகரான அவர் அண்மைக்காலமாகச் சற்று சுகயீனமற்று இருந்தார். அவரது உடல்நிலை குறித்த கவலைகள் நண்பருக்கு இருந்து வருகின்றன. ஆகவே நான் யாழ்ப்பாணம் போகிறேன் என்று கேள்விப்பட்டதும், "ஒருக்கால்ப்போய் அப்பாவையும் பார்த்துவிட்டு வரமுடியுமா?" என்று கேட்டபோது ஆமென்றேன். டிப்போவடி தாண்டியதும் வரும் சிற்றொழுங்கையில் வீடு. விசாலமான இரண்டுமாடிக் கட்டடம். ஒழுங்கையினிரு மரங்கிலும் கமுக மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்க, வீட்டைச் சுற்றி சோலைபோன்று மரங்கள் நடப்பட்டிருந்த அமைதியான அழகான வீடு. நண்பன் தான் வாகனத்திலேயெ இருப்பதாகக்கூறிவிட நான் உள்ளே சென்றேன். என்னை முதன்முதலாகப்பார்ப்பதால் அவர் அதிகம் பேசவில்லை. பலவீனமாகத் தெரிந்தார். சிறிதுநேரம் மட்டுமே அவரால் வெளியில் வந்து அமர்ந்துகொள்ள முடிந்தது. "தம்பி, எனக்கு இப்படி கனநேரம் இருக்கேலாது, நான் உள்ளுக்கை போகப்போகிறேன், இருந்து தேத்தண்ணி ஏதாச்சும் குடிச்சுப்போட்டு போம்" என்று சொன்னார். "இல்லை அங்கிள் உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்கள் உள்ளுக்கைபோங்கோ, முடிந்தால் கொழும்பு போகுமுன் இன்னொருமுறை வந்து சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன். உரும்பிராயிலிருந்து பலாலி வீதியூடாக கோண்டாவில்ச் சந்திநோக்கிச் சென்றோம். அங்கிருந்து இடதுபுறம் திரும்பி இருபாலை, பின்னர் செம்மணிப் பகுதியூடாகச் சென்று கண்டிவீதியில் ஏறினோம். செம்மணி பற்றி 80 களிலும் 1995 இலும் நாம் கேள்விப்பாடிருக்கிறோம். புளொட் அமைப்பின் ஆரம்பகால உள்வீட்டுப்பிரச்சினைகளின்போதும் பின்னர் கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரர், உறவினர் ஆகியோரின் படுகொலைகளின் போதும் இப்பெயர் தமிழர்களுக்கு மிகுந்த பரீட்சயமாகிப்போனது. செம்மணிச் சுடலையூடாக வரும்போது, "இதுதான் மச்சான் செம்மணிச் சுடலை, இங்கதான் கிருசாந்தியையும் மற்ற ஆக்களையும் கொண்டு புதைத்தவங்கள்" என்று நண்பன் கூறிக்கொண்டு வந்தான். கண்டிவீதிவழியாக பூநகரி நோக்கித் திரும்பி பயணிக்கத் தொடங்கியது நண்பனின் வாகனம். பூநகரி என்று கேள்விப்படும்போதெல்லாம் 1993 இல் புலிகள் நடத்திய தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையும் நாகதேவந்துறை என்கிற பெயரும் என்னால் தவிர்க்கமுடியாமல் மனதில் வந்துபோகிறது. பூநகரியின் புதிய பாலத்தினூடு வரும்போது இருவகையான உணர்வுகள். முதலாவது தமிழ்மக்களின் பயணம் இப்பகுதியில் சற்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, எம்மீதான இனக்கொலை புரிந்தவர்கள் கட்டியிருக்கும் இப்பாலத்தில் நாம் பயணிக்கிறோம் என்பது. மக்களுக்கு இப்போது எது தேவையானதோ, அது இருந்தால்ப் போதும் என்று மனதை ஆறுதல்ப்படுத்திக்கொண்டேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த அந்த முற்பகல் வேளையில், சனநடமாட்டம் இல்லாத அப்பாதையில் நண்பன் 130 - 140 வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு சென்றான். சிறுவயதில் இருந்தே காரோட்டுவதில் நன்கு பரீட்சயமானவன். ஆகவே, அவனது திறமையில் முழு நம்பிக்கை வைத்து இருக்கையில் அட்டை போல ஒட்டிக்கொண்டேன். பாலம் கடந்து இருமருங்கிலும் அண்மையில் பெய்த வெள்ளத்தில் வழிந்தோடாது இன்னும் மிச்சமாய் இருக்கும் நீர் வீதியின் ஓரங்களில் தரித்து நிற்க, பனை வடலிகளும், பற்றைகளும் செழித்து வளர்ந்து நிற்க, நன் இதுவரை வந்திராத தாயகத்தின் ஒரு பகுதியூடாகச் சென்றுகொண்டிருந்தேன், நண்பனின் அனுக்கிரகத்தில். யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த 7 வருடங்களில் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதிகளுக்கும் சென்றது கிடையாது. அதற்கான தேவையும் அப்போது இருந்ததில்லை. ஆகவே, தாயகத்தில் கிட்டத்தட்ட 90 வீதமான பகுதிகள் நான் வாழ்நாளில் பார்க்காதவை. எனவேதான் அக்கராயன் நோக்கிய பயணத்தில் எல்லாமே புதிய இடங்களாக எனக்குத் தெரிந்தது. நாவற்குழி - கேரதீவு - மன்னார் வீதியிலிருந்து விலகி கிளிநொச்சி நோக்கிப் பயணித்தோம். இந்த வீதியின் இருமருங்கிலும் தெரிந்த இயற்கை அழகு அபரிமிதமானது. சிட்னியில் சில இடங்கள் பார்க்கும்போது அழகாக இருப்பதாகத் தோன்றும். ஆகா ஓகோ என்று செயற்கையாகப் புகழ்ந்துந்துகொள்கிறோம் என்றுகூட நினைப்பதுண்டு. ஆனால், தாயகத்தில் இருக்குமிந்த அழகையெல்லாம் பார்க்க மறந்துவிட்டோமே என்று பெரிய ஏக்கம் வந்துபோனது. அத்துடன் நான் இங்கு இருக்கப்போவது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே என்று நினைத்தபோது ஏக்கமும் சேர்ந்துகொண்டது. தாயகத்தில் வாழும் மக்கள்பேறுபெற்றவர்கள் என்று நான் நினைப்பதற்கு இந்த இயற்கை அழகும் இன்னொரு காரணம். ஒருவாறு கிளிநொச்சி நகரை அடைந்தோம். நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று மாவீரர் நாள். கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலும், அவ்வீதியிலிருந்து கனகபுரம், அக்கராயன் நோக்கிச் செல்லும் வீதியிலும், வீதியின் மேலாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த வளைவுத் தோரணம் "மாவீரர் நாள் 2023" என்று சொல்லிற்று. ஆக்கிரமிப்பாளனின் ஏதோவொரு படைத் தலைமையகம் முன்னால் இருக்க, மாவீரர் நாள் அனுஷ்ட்டிக்கப்படும் கொட்டகைகளும், வளைவுகளும், தோரணங்களும் அப்பகுதியெங்கிலும் சிவப்பு மஞ்சள் வர்ணத்தை அள்ளித் தெளித்திருந்தன. எமது விடுதலை வீரர்களை அழித்துவிட்டோம், எச்சங்களையும் தோண்டி எறிந்துவிட்டோம் என்று ஆக்கிரமிப்பாளன் கொக்கரித்து வந்தபோதும் மக்களின் மனங்களில் அவர்கள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதற்கு நான் அன்று பார்த்த காட்சிகள் சாட்சியம். மாவீரர் நாள் வளைவுகளூடாக நாம் பயணிக்கும்போது அவற்றை முடிந்தளவு படமாக்கிகொண்டேன். "மச்சான் , கவனம், பாத்தெடு. உன்ர போனை நோண்டினாங்கள் என்டால் பிரச்சினை வரலாம்" என்று நண்பன் கூறவும், "உவ்வளவு சனம் நிண்டு அவனுக்கு முன்னாலை உதைச் செய்யுது?" என்று கேட்டேன். "ஆருக்குத் தெரியும், பிரச்சினை குடுக்கிறதெண்டால் குடுப்பாங்களடா" என்று பதில் வந்தது. கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் போகும் வீதியில்த்தான் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் வருகிறது. நாம் அவ்விடத்தை அடையும்போது மாலையாகிவிட்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் ஆக்கிரமிப்பாளனினால் அழிக்கப்பட்டபோது மாவீரர் கல்லறைகள் தோண்டப்பட்டு, நடுகற்கள் உடைத்தெறியப்பட்டிருந்தன. ஆனால், தொடர்ந்து வந்த வருடங்களில் அப்பகுதி மக்கள் துயிலும் இல்லத்தைப் புணரமைத்து, நடுகற்களைச் சேகரித்து ஒரு மலைபோல குவித்து வைத்திருந்தார்கள். அக்குவியலின் அடிவாரத்திலிருக்கும் இன்னும் முற்றாக உடையாத நடுகற்களில் மாவீரரது பெயர்கள் உச்சரித்துக்கோன்டிருந்தன. இவற்றோடு அந்தத் துயிலும் இல்லம் எங்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கவென தென்னங்கன்றுகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. அப்பகுதியெங்கும் வீதிகளும், வளைவுகள் மஞ்சள் சிவக்கு நிறக் கொடிகளில் அலங்கரிக்கப்பட்டிருக்க, தேசம் எழுச்சி பெற்று நின்றது போன்ற உணர்வு. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல வாயிலில் பெருத்த சனக்கூட்டம். நிகழ்வுள் ஆரம்பிக்கப்பட இன்னும் பல மணித்தியாலங்கள் இருக்கவே மக்கள் பெருவாரியாக அப்பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்கள். மழை தூரத் தொடங்கியிருந்தது. ஆனால் மக்கள் வெள்ளமும் குறையவில்லை. அக்கூட்டத்தைப் படமெடுக்கவென ஒரு சிலர் வீதியின் எதிர்க்கரையில் நின்றுகொண்டிருந்ததைக் காணக்கூடியதாய் இருந்தது. அவர்கள் எமது மக்களில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. எனது தம்பியின் பூதவுடலும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலேயே விதைக்கப்பட்டதாக அறிந்தேன். துயிலும் இல்லத்தைக்கடந்து கார் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது அவனுக்காகவும் இன்னும் மரணித்த ஆயிரமாயிரம் மாவீரகளுக்காகவும் மனம் வேண்டிக்கொண்டது. இப்போதைக்கு இதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும் என்னைப்போன்றவர்களா? உங்கள் கனவுகள் வீண்போகாது என்று மனதிற்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். வீண்போகக்கூடாது.1 point- இரண்டாம் பயணம்
1 point - நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.