Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. island

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1749
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7054
    Posts
  4. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    5
    Points
    9997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/23/24 in Posts

  1. வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா? முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன். இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது. அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி? முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும். இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன: 1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும். 2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது. எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.
  2. யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிய விளக்கத்துடன் இணைந்தபின் கருத்தினை / பதிவினை எவ்வாறு வைப்பது என்பது பற்றிய விளக்கம்.
  3. நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி. 1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம்.
  4. இதைத் தான் நாங்களும் சொல்லுகிறோம் புலிகளின் ,மற்றும் ஏனைய இயக்கங்களின் கொலைகளை மீண்டும் மீண்டும் பேசாமல் தொடர்வோம் எமது நிலத்தையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய செயல்களில்.... இன்று பல நல்ல திட்டங்களை தனிநபர்கள் முன் வந்து செய்கின்றனர் ...யாரும் எதிர் பார்க்காத திட்டங்கள் ..பொதுவாக யாழ்ப்பாணத்தார் "நப்பி" மற்றவர்களுக்கு ஒன்று கொடுக்க மாட்டான் என்ற கருத்து பரவலாக இருந்தது ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கும்வகையில் பல யாழ்ப்பாணத்தவர்கள் செயல் படுகின்றனர் ...
  5. மிகச் சிறந்த கருத்து ஜஸ்ரின். இக்கொலைகளைச் செய்த புலிகள் இல்லாத போது இவற்றை பேசுவதால் என்ன பிரயோசனம் என்று ஒரு உறவு கேட்டார். இந்த அரசியல் கொலைகள் தேசியப் பெருமை என்று எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்படலாம் என்பது மிக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. எனவே தான் இவை அத்தனையும் எமது வரலாற்றின் தவறான பக்கங்கள் என்பதை எமது அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அவசியம் உள்ளது.
  6. அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் யாழுக்கு வர ஒரு தூர நோக்குண்டு. அதற்கு முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து சொல்லணும். ஆனால் அதற்கான பரிசுகள் புலிகள் மீதான சேறப்புத்தான் என்றால் அது நான் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமாகி விடும். இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு. குடும்பம் மற்றும் உறவுகளுக்கு சில இழப்புகள் வருத்தம் தரும் என்பதைவிட அது ஒரு இனத்தையே அழித்து விடும் என்றே நான் பார்ப்பதுண்டு. இந்த களை பிடுங்குதலுக்கு என் குடும்பமும் இலக்காகி இருக்கிறது. புலிகள் அப்படி தான் தன் குடும்பத்தையே பலி கொடுத்தும் புலிகளை பாதுகாத்த பலரை எனக்கு தெரியும். அதேபோல் தன் குடும்பமே அழியப் போகிறது என்று தெரிந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணித்த புலிகள் பல நூறு. மற்றும் படி உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பால் முழு உயிருக்கும் ஆபத்து வரும் என்றால் அதை எடுத்து விடுவதற்கு இன்றும் ஆதரவானவன். எனவே தயவு செய்து கடந்த காலங்களை கிளறி சேறடிக்காது இன்று என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். எம்மால் முடிந்ததை செய்யலாம். நன்றி.
  7. புலிகள் இல்லாத வெற்றிடத்தில், (தன்னைப் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாக பீற்றும் ஒருவர்) எந்த அடிப்படையில் கருத்து வெளியிடுவார்? அடிப்படை அறிவு வேண்டாமா இந்த முட்டாள்களுக்கு ? இந்த முட்டாள்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு அவப்பெயரை சேர்க்கின்றனர் என்று உங்களுக்குப் புரியவில்லையா? இத்தனை தியாகங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு போராட்டத்தில், தவறுகளை அடையாளம் கண்டு, அவகற்றைக் களைந்து, எல்லோரையும் ஒன்று சேர்த்து பயணிக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லையா? புலிகளுக்கு நிதி சேகரித்த காரணத்தால் ஒருவர் விடுதலைப் போருக்கு உரிமை கொண்டாடுகிறார். இன்னொருவர் பல்வேறு தளங்களிலுமிருந்து தகவல்களை ஒன்று சேர்க்கும் காரணத்தால் புலிகளின் குரல்தரவல்ல அதிகாரியாகப் பீற்றுகிறார். மற்றும் சிலரோ ஊரில் விபு க்களின் காலத்தில் சைக்கிள் பார்க்கிங்கில் ரிக்கற் கிழித்தவர்கள் எல்லோரும் புலிகளின் ஆயுதம் தாங்கிய போராளிகளுக்கு நிகராக தங்களை கருதிக் கொண்டதுபோல தற்போது கருத்துக் கூறுகின்றனர். தனி மனிதப் படுகொலைகளை நியாயப்படுத்தும் செயலை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்? சரியாகச் சொன்னீர்கள. ***
  8. ஈரமான செல்போனை உலர்த்த என்ன செய்ய வேண்டும்? அரிசிக்குள் வைத்தால் என்ன ஆகும்? - ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரை இருக்கிறது 53 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டியை வெளியிட்டிருக்கிறது. ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செல்போன்கள் நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை நீரில் விழுந்த செல்போனை என்ன செய்யவேண்டும்? நீரில் செல்போன் விழுந்துவிட்டாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. அரிசிப் பைக்குள் போனை வைப்பதற்குப் பதிலாக, சார்ஜர் கனெக்டர் கீழ்நோக்கி இருக்கும் வகையில் போனை வைத்துக்கு கொண்டு மெதுவாகத் தட்ட வேண்டும் என்றும், உலர விட வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும்போதிலும், அவை நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை. ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் நீரில் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கும் புகைப்பட உலகில் இருந்து வந்தது. உலகின் வெப்பமான பகுதிகளில் கேமராக்கள் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கம் 1940 களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஃபிலிம் சுருள்களுக்கும் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பழக்கமே செல்போன்களுக்கும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக, அரசி உள்பட தானியங்களுக்குள் ஈரமான செல்போன்களை வைப்பது எந்த வகையிலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவாது என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈரமான செல்போன்களை உலர்த்துவதற்கு வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றை சிலர் பயன்படுத்துகிறார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி என்ன சொல்கிறது? அரிசிப் பைக்குள் ஃபோனை வைப்பது ஒரு யோசனை என்றால், வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றைக் கொண்டு அதை உலர்த்துவதற்கு முயற்சிப்பது மற்றொரு வகை. ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி இந்த யோசனையையும் தவறு என்கிறது. ஹீட்டர்கள் அல்லது ஹேர் ட்ரையர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்கிறது ஆப்பிள். ஈரம் இருப்பது தெரிந்தவுடன் பருத்தி அல்லது காகிதத் துண்டு போன்றவற்றை போனுக்குள் நுழைக்க முயல்வதும் தவறானது செயல் என ஆப்பிள் வழிகாட்டி எச்சரிக்கிறது. அதற்குப் பதிலாக, சார்ஜரில் மீண்டும் செருகுவதற்கு முன், செல்போனை "காற்றோட்டமான காய்ந்த பகுதியில்" வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரமான செல்போன் "முழுமையாக உலர 24 மணிநேரம் ஆகலாம்" என்று ஆப்பிள் தனது வழிகாட்டியில் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம் ஈரமான செல்போன்களில் என்ன செய்யக்கூடாது? ஐபோன்களைப் பொறுத்தவரை, சார்ஜர் கனெக்டரில் ஈரம் இருந்தால் உடனடியாக திரையில் எச்சரிக்கைச் செய்தி தோன்றும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், ஃபோன் மற்றும் சார்ஜர் இரண்டும் காயும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது. "ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம், அல்லது வேலை செய்வதை நிறுத்தலாம். இதன் விளைவாக உங்கள் ஐபோனின் செயலிழந்து போகலாம்”, என ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி குறிப்பிடுகிறது. ஆப்பிளின் புதிய வழிகாட்டி ஆவணத்தை முதன்முதலில் வெளியிட்ட மேக்வேர்ல்ட் இணையதளம், ஐபோன்களின் புதிய பதிப்புகள் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஐபோன் 12 இல் தொடங்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஆறு மீட்டர் ஆழம் வரை, அதிகபட்சம் அரை மணி நேரம் வரை மூழ்குவதைத் தாங்கும் திறன் கொண்டவை. ஆனால் மற்ற போன் வைத்திருப்பவர்கள், போன் நீரில் நனையும்போது அரிசி வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c514494re9zo
  9. முற்றவெளி மந்திரம் sudumanalFebruary 18, 2023 யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது. சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன். எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை. அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள். இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று. அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான். இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள். பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு. அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம். இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம். சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும். ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது. திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும். யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான். இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது. ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை. முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை! https://sudumanal.com/2024/02/18/முற்றவெளி-மந்திரம்/#more-5984
  10. எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு போன்றன இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு” அதற்கு முதல் அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை இன்று வரை பொதி தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை நன்றி வணக்கம் 🙏
  11. வன்மையாக கண்டிக்கிறேன் ....ஹி ஹி.... மக்கள் விரும்பி செல்கின்றனர் அதுவும் மத நம்பிக்கையுடன் ...விடுங்கோவன் ... மக்களின் பணத்தை அரசுக்கு எடுக்க இது போன்ற மத சடங்குகள் தேவை....எரிபொருள் விநியோகம் நன்றாக நடந்திருக்கும்...மக்கள் கஸ்டத்தை இறைவனுக்காக சகித்து கொள்வார்கள் என அரசுகளுக்கு நன்றாகவே தெரியும் ....மக்களிடமிருந்து மொத்தமாக பணத்தை வசூலிக்க வேணும் என்றால் இப்படியான மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் தேவை .... நம்ம அரசு வளர்ந்தால் நாம் வளர்வோம் நாம் வளர்ந்தால் நம்மட நமோ நம மாதாவும் வளர்ந்திடுவார்
  12. சட்டங்களை உயிர் உள்ளவர்களுக்கு தான் பயன்படும் பயன்படுத்த முடியும் இறந்தவர்களுக்கு இல்லை உலகில் எந்தவொரு போராட்டமும் பிழையின்றி நடந்நது இல்லை 5% .....10% பிழைகள் புறக்கணிக்கலாம் இது போராட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும். பொருந்தும் அதாவது 100க்கு 100% சரியாக யாரும் நடத்தது சரித்திரத்தில் இல்லை எல்லாம் சரியாக செய்தவனும் இல்லை எல்லாம் பிழையாக செய்தவனுமில்லை அழிக்கப்பட்ட புலிகளை பற்றி இன்று களத்தில் இல்லாத புலிகளை பற்றி கதைப்பது விழலுக்கு இறைத்த நீராகும். ஒரு பிரயோஜனம் அற்ற செயல் வீண் வேலை தேவையற்றதும்கூட 150000. மக்களை கொன்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள் அவர்கள் மீது தான் சட்டம் பாயும் ஆனால் இது பற்றி எவரும் ஒரு வார்த்தை பேசுவது இல்லை ஒருக்கால். பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் முடியாவே முடியாது ஒருபோதும் ஒருவராலும் முடியாது நாங்கள் பிழையை சொல்லுகிறோம்.. ஏனெனில் இனி திருந்தி. பிழையின்றி போராட்டம் நடத்துவோம் இது ஒரு உலக மாகா புலுடா .........30 ஆண்டுகள் போரில் சில பிழைகள் இருக்கலாம் நான் சவால் விடுகிறேன் 30 மணித்தியாலத்துக்கு பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம் ........உங்களால் முடியாது அடுத்தவனுக்கு. எப்படி சொல்லி கொடுக்க முடியும் ?? நான் புலி அல்லது அரசாங்கம் ஆதரவாளன் இல்லை 🙏
  13. 34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு! adminFebruary 23, 2024 வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, 290 பக்தர்கள் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை முதல் பலாலி இராணுவ தலைமையகத்தில் இருந்து பக்தர்கள் இராணுவத்தின் பேருந்து மூலம் ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பூசைப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் யாழ் மாவட்ட செயலர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர், யாழ் மாவட்ட இராணுவ தளபதி ஆகியோருக்கிடையில் பலாலி இராணுவ தலைமையகத்தில் கூட்டம் இடம்பெற்றது. இன்றைய தினம் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் வழிபாட்டு தலங்களை புனர்நிர்மாணம் அல்லது புனரமைப்பு பணிகள் செய்வதற்கு அனுமதிகள் வழங்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டுள்ள போதிலும் ஆலயத்தினர் விரும்பினால் முறையான கோரிக்கையினை மாவட்ட செயலகத்திடம் முன் வைப்பதன் ஊடாக இராணுவத்தினர் மூலம் ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்யமுடியும் என யாழ் மாவட்ட செயலர் அம்பலவானர் சிவபாலசுந்தரம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/200747/
  14. நன்றி ஐலன்ட், இப்படித்தான் கடந்தகால அழிவுகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கு நினைவூட்டி அவர்களை விழிப்பில் வைத்திருக்கவேண்டும்.
  15. பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணை, வாழ்க வளத்துடன்.
  16. மண்டையில் இருந்து வராமல் இடுப்புக்கு கிழே இருந்தா வரும்? உங்களது இந்த வெறுப்பு எங்கிருந்துவந்து? அதையும் எழுதுங்கள்.
  17. ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம். இரண்டாவது இங்குள்ள மீன் உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள். அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
  18. தமிழ் சிறியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
  19. நிச்சயமாக. நல்லவர்களை கெடடவர்களாகவும், கெடடவர்களை நல்லவர்களாகவும் வெள்ளையடிக்கும்போதுதான் இங்கு பிரச்சினை உருவாகின்றது. நீலன் திருச்செல்வமில்லை, குறைந்தது புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துக்கு செவிகொடுத்திருந்தால் கூட பிரச்சினை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்காது.
  20. எதற்கு ஆதாரம்?? மூடிய அறைக்குள் ஒரு இனத்துக்கான தீர்வை இருவர் (பீரிஸ், நீலன்) எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?
  21. 😂😂🤣அட்ரா சக்கை! அப்ப விசுகர் ஐரோப்பிய முறைப்படி "உரிய படிமுறைப்படி-due process" போகும் ஆள் போல! அந்த உரிய படிமுறை புலிகளுக்கு மட்டும் தான் கிடைக்க வேணுமோ அல்லது புலிகள் தண்டனை கொடுத்த அரசியல்வாதிகளுக்கும் தேவையோ😎? உதாரணமாக, நீலன் மீது புலிகள் வைத்த குற்றப் பத்திரிகை எங்கே? எப்படி அவர் விசாரிக்கப் பட்டார்? எங்கே due process? பி.கு: 10 பக்கம் வந்த பின்னர் திடீரென்று குத்துக் கரணமடித்து நீலனைப் புலிகள் கொல்லவில்லை என்றிருக்கிறீர்கள், அப்படியே கந்தயரையும் ரியுனை மாத்தச் சொல்லுங்கோ! சேச்சே நினைத்திருக்க மாட்டார்- நம்புகிறார் அப்படி😂! விசுகரோடான அரசியல் கொலை பற்றிய உரையாடல்கள் வருடக் கணக்காக இப்படித் தான் முடிகின்றன. முதலில் வேள்விக்காக கொலை, பின்னர் அங்க இங்க ஓட்டம், இது இறுதிப் பாகம்: புலிகள் செய்யவில்லை! இந்த ஜோக் அமீர் யோகேஸ்வரன் கொலை பற்றிய திரியிலும் நடந்தது! இனி இந்த திரி "சிரிக்க சிறக்க" மாதிரி இருக்கும்🤣!
  22. ஒரு அரசியல் கொலை பற்றிப் பேசாவிட்டால் கொலைக்கு ஆதரவு என்கிறீர்களா? இதுவும் உங்கட "வில்லாய் வளைஞ்சு குத்தி முறிந்த" கந்தையா தியரிகளில் ஒன்றா😂? இங்கே யாராவது இந்தக் கொலைகளைப் பற்றிப் பேசப் பட்ட திரிகளில், இந்த பலியான நபர்கள் கொல்லப் படவேண்டிய காரணங்களை அடுக்கி வாதிட்டுக் கண்டிருக்கிறீர்களா? நான் யாழில் உறுப்பினராக இருக்கும் கடந்த 17 வருடங்களில் அப்படி நடந்து காணவில்லை. ஏனென்று நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அரசியல் கொலைக்காளானவரின் கொலைக்கு நியாயம் கற்பிப்பது இன்னும் கொலைகளை ஊக்குவிக்கும் செயல்பாடு. இப்படியான நிராயுத பாணிகளின் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்காமல் ஒருவரைத் தடுப்பது மனிதத் தன்மை. இதில் அரசியல் சார்பு/எதிர்ப்பு எதுவும் அவசியமில்லை. உதாரணமாக நீலனை எடுங்கள், அவரது மக்கள், பேரப் பிள்ளைகள், சகோதரங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டார் என்று என்னைப் போலவே அவர்களும் நம்புகிறார்கள். இங்கே உங்களைப் போன்றோர் கொலை செய்தவனுக்கே மரண தண்டனை வழங்காத ஐரோப்பிய நாட்டில் இருந்து கொண்டு, அவர் கொல்லப் பட்டதை எள்ளலோடு நியாயப் படுத்தும் போது, நீலனின் உறவுகளின் காயத்தில் உப்புத் தடவுகிறீர்கள் என்ற குறைந்த பட்ச புரிதல் கூட இல்லாமலா இருக்கிறீர்கள்?
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறியர்.......!
  24. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சிறியண்ண..🖐️
  25. நான் கொண்டு செல்லும் தீர்வு திட்டம் 1..ஒரு நாடு இரு தேசம்... 2...தமிழ் பிரதேசம் ஈழம் என்று ,சிங்கள பிரதேசம் சிறிலங்கா என்றும் அழைக்கப்பட வேண்டும் 3.சிங்கள தேசத்திற்கு இருக்கும் சகல உரிமைகளயும் தமிழ் தேசத்திற்கு வழங்க வேண்டும்.. இந்த திட்டங்களுடன் முதல் நாள் போய் பகலில் சந்திப்பேன் .. அவர் எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒம் நல்ல திட்டம் இதனால் நாட்டு மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் ..இன்று இரவு இராப்போசனவிருந்துக்கு வாருங்கள் கையொப்பம் இடுகிறேன் என சொல்லி என்னை வழியனுப்புவார்... நானும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டு படங்கள் எடுத்து பத்திரிகை,வட்சப்,முக புத்தகம் போன்றவற்றில் போடுவேன்.... 1 ஒரு நாடு இரு தேசம்...சூப்பர் 2நீங்கள் குறும் தேசியவாதியாக இருக்க வேண்டாம் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழையுங்கள் ,நாங்கள் சிறிலங்கா என அழைப்போம்... 3மூவின மக்களுக்கு சகல உரிமைகளும் சட்டத்தில் உண்டு கண்ணா .....என கூறி ஒர் பார்வை நான் என்னை மறந்திடுவேன் அடுத்த நாள் அறிக்கை விடுவேன் .மடம் ...கூறுகின்றார் நான் கூறிய யாவும் சட்டத்தில் உண்டு என ... ஆகவே நான் தொடர்ந்து மடத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன்....மடத்தின் வீட்டுக்கு பக்கத்தில் ஒர் வீடு வாங்கி அவருடன் நல்லிணக்க அரசியல் செய்ய முடிவு செய்துள்ளேன்...
  26. Mohanathasan Vinasithamby · பிரான்சில் வளர்நிலை 7 இல், தமிழ் கற்றுவரும் மாணவி ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார். ஆசிரியர், எங்களுடைய அம்மா, அப்பாவிற்கு பெரிதாகப் பிரெஞ்சு மொழி தெரியாது… ஆனால் எங்களை நன்றாகப் படிப்பிக்கவேணும், நல்ல முறையில் எங்களை வளர்க்கவேணும் என்று எப்படியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கினம்? நான் யோசிச்சு பார்க்கும் போது ஆச்சரியாமாக இருக்குது என்று அந்த மாணவி சொன்னார். நான் சொன்னேன். எனக்கு ஆச்சரியமாக இல்லை! உங்கள் பெற்றோர்களுக்கு பிரெஞ்சு மொழி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரான்ஸ் வரும் போது வெறுங்கையோடு வரவில்லை. மிகப்பெறுமதியான தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் தங்களோடு எடுத்துக்கொண்டுதான் வந்தார்கள். கல்வியின் அருமையை தமிழர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் பிறரிடம் கையேந்தக்கூடாது தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் தமிழ், பிச்சை புகினும் கற்கை நன்றே என்று விதிவிலக்கையும் சொல்லிக் கொடுத்திருக்குது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிக் கொடுக்குது. வாழ்வுக்கு அறநெறியை எடுத்துச் சொல்லும் திருக்குறளை தமிழர் வாழ்கையோடு அனுபவபூர்வமாக கற்றுவருபவர்கள். அதனால் எப்படிச் சிறப்பாக தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றேன். தமிழ் என்பது வெறுமனே ஒரு மொழியல்ல; அது தமிழரின் வாழ்வு, எம் மூதாதையரின் உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் சுமந்து வந்து எங்களுக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றது. இன்று பெப்ரவரி 21. சர்வதேச தாய்மொழிதினம். தமிழாலேயே சிந்திக்கின்றோம், கருத்தினைப் பகிர்கின்றோம், தமிழாலேயே தாலாட்டி சீராட்டி வளர்ந்தோம். தமிழை மறவாதிருப்போம். தமிழே எம் அடையாளம். Voir la traduction
  27. நீலமானின் மாயப்பொதிகள் மேலே கொடுக்கப்பட்டிருப்பது நீலனும் ஜி.எல்.பீரிஸும் 1995ம் ஆண்டு கொண்டுவந்த தீர்வுப் பொதி (அரசமைப்பு திருத்த வரைபுகள்) . இதே பொதி பல்வேறு மாறுதல்கள், சுரண்டல்களுக்கு உட்பட்டு சந்திரிக்கா மாமியின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் நான்கு விருத்துக்களான (Version) தீர்வுப்பொதிகளாக (1995, 1996, 1997, 2000) பல்வேறு காலகட்ட சிங்களப் படைத்துறையின் சமர்க்கள முன்னேற்றங்களுக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அரசியல் ஆலோசகரான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களும் இப்பொதியினை ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார் (1995 ஓகஸ்டில் (ஆரம்ப கட்டத்தில்) இதற்கு மறுத்தாலும் போர்நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கை ஒன்றிற்கு ஓமென்றிருந்தார். 2000/03/13 அன்று இப்பொதி "சரியான வரைபு... ஏற்கக்கூடியது" என்றார்). ஆனால் இது தனது மெய்யான மிளிர்வில் அப்படியே நாடாளுமன்றத்திற்கு அன்றைய காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பல சுரண்டல்களுக்கு உட்பட்டு அதனது தொடக்கப் பொலிவான தீர்வுகளை எல்லாம் இழந்துதான் அலுவல்சார் சிறிலங்கா அரச முன்மொழிவாகவே 1996ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு போன போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் வடிகட்டல்களில் - 1997ம் ஆண்டு - மிச்ச நல்லதுகளையும் இழந்து போனது. 2000ம் ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இறுதித் தீர்வுப் பொதியானது (நீலன் சாக்கொல்லப்பட்ட பின்னர் வந்தது) அரைகுறையான ஒன்றாகும் என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாடினார். ஆனால் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் "சமச்சீரான சமஸ்டி" நன்மை பயக்கக்கூடிய இதனது மூல வடிவம் என்றுமே தமிழரின் நிகராளிகளாக இருந்த விடுதலைப்புலிகளிடம் அலுவல்சாராக கையளிக்கப்படவில்லை. வெறும் நாளேட்டு செய்திகளாகவும் வாய்மொழி அறிவிப்புகளாகவுமே வெளியாகின. அவற்றையும் புலிகளும் தம் போக்கிற்கு அலுவல்சார் ஊடக வெளியீடுகள் மூலம் நிராகரித்தனர். ஆயினும் போர் நிறுத்தத்தை சிங்கள அரசு செய்தால் தொடர் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்பதை அப்போதே தெரிவித்துவிட்டனர். (1997 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எந்தவொரு முன்மொழிவும் அரசாங்கம், பிரதான சிங்கள எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று முக்கிய கன்னைகளின் அங்கீகாரத்துடனேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பீரிஸ் தெரிவித்தார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு புலிகள் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பயங்கரவாத அமைப்பாக சாற்றாணைப் படுத்தப்பட்டதால் அதனுடன் எந்தவிதமான நடவடிக்கைகளும் குற்றமென வரையறைப்படுத்தப்பட்டு விட்டதாலும் இந்தப் பொதியை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகியது.) புலிகளால் ஏன் நிராகரிக்கப்பட்டதெனில்; குறிப்பாக இப்பொதிகளின் வரிசையில் முதல் பொதியின் அறிவிப்பு அலுவல்சாராக (official) வெளியாக முன்னரே சந்திரிக்கா மாமியை அப்போதைய சிங்கள அஸ்கிரிய பீடாதிபதி சிறி சந்தானந்த மகாநாயக்க தேரர் சந்தித்தார். அவர் இப்பொதியின் அலுவல்சார் அறிவிப்பினை வெளியிட முன்னர் விடுதலைப்புலிகளை தோற்கடித்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு சந்திரிக்கா மாமியும் புலிகளை படைய நடவடிக்கை மூலம் "மண்டியிட" செய்த பின்னரே இத்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்! இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. (இத்தகவல் அவர்களின் ஊடக வெளியீட்டில் உள்ளது). உந்தப் மூலப் பொதி நாடாளுமன்றத்தில் அதன் மிளிர்வான வடிவத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டிருப்பின் எப்படியும் நாடாளுமன்ற தெரிவுக்குழு அதன் தமிழருக்கு நன்மை பயக்கக்கூடிய கூறுகளை நீக்கியிருக்கும் (1997ம் ஆண்டு செய்தது போன்றே). அதையும் தாண்டினால் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளை பெற்றால்தான் மக்களிடம் இதனைக் கொண்டுசெல்ல வேண்டும். சிங்கள மக்களிடம் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது செல்லுபடியாகும். இதெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் விடையங்களாகும். மேலும், இதில் தனி இனக்குழுவான முஸ்லிம்களின் வகிபாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. தமிழரோடு ஒன்றிணைந்த தீர்வொன்றிற்கு முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் (ஜெனிவா பேச்சுவார்த்தையினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்). தமக்கான தனி அலகு ஒன்றை எப்படியும் கேட்டிருப்பார்கள். அந்த விடயம் தொடர்பில் இத்தீர்வில் எதுவும் குறிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், எந்த நீலனின் செல்வாக்கால் அரசமைப்பு திருத்த வரைபு கொண்டுவரப்பட்டதோ அதே நீலன் உயிருடன் இருக்கையில் அவர கண்முன்னே தான் சில மாதங்களிலேயே அந்த அரசமைப்பு திருத்த வரைபு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. பின்னர் அவர் கைலாயம் கண்டவுடன் அது குப்பையில் தூக்கியெறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உண்மையிலேயே தமிழருக்கு நன்மை செய்ய விரும்பியிருப்பின் தான் வரைந்ததை முற்றாக நிறைவேற்ற பாடாவது பட்டிருக்க வேண்டும். மாறாக அதை வைத்து சிங்களவர் ஏலுமான வழிகளில் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட மறைமுக ஆதரவு நல்கினார். அடுத்து, இதை வைத்து ஜி.எல். பீரிஸ் மற்றும் கதிர்காமர் ஆடிய திரு விளையாடல்கள் பற்றிப் பார்ப்போம்: இந்தத் தீர்வுப் பொதியின் மிளிர்வான வடிவம் 1995ம் ஆண்டு வெளியானதும் கதிர்காமர் நாடு நாடாக சென்று தவறுத்தகவல் (disinformation) பரப்புரையில் ஈடுபட்டார். வெளிநாடுகளில் இருந்த தவிபு இன் வெளிநாட்டுக்கிளை அலுவலகங்களை மூட வைக்குமாறு அந்நாடுகளிடம் கோரிக்கை விடுத்தார்: புலிகளை தடை செய்யவும் கோரிக்கை விடுத்தார். தானொரு தமிழர் என்றும் சிங்கள அரசாங்கம் தமிழரிற்கான தீர்வினைக் கொண்டுவரப் போவதாகவும் எனவே இனிமேல் புலிகள் தேவையில்லை என்றும் பரப்புரை செய்தார். தமக்கு அமைதிக்கான முறைமை ஒன்றைக் கொண்டுவர போர் வேண்டுமென்றும் புலிகளுடனான நெடுங்கால போரிற்கு தேவையான போர்த்தளவாடங்களை வழங்குமாறும் கோரிக்கைகளை விடுத்தார். அதே நேரம் சிங்கள ஊடகங்களும் போர் முழக்கமிட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு கதிர்காமர் ஆயுத திரட்டலிற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க இங்கால் பீரிஸோ (இதை தயாரித்தவர்களில் ஒருவர்) இந்த தீர்வுப் பொதியை பின்னடிக்க வைக்கும் தந்திரங்களை முன்னெடுத்தார். இப்பொதிக்கு ஒற்றையாட்சி சிறிலங்காவிற்குள் சிறுபான்மையினரின் கட்சிகள் அரசிற்கு ஆதரவு கொடுக்க பீரிஸோ அதை ஏலுமானவரை பிற்போடச்செய்ய எத்தனித்தார். குறிப்பாக 1999ம் ஆண்டில் இவர் எதிர்க்கட்சியான ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, பொதி முதலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் மிளிர்விழந்துவிட்ட தீர்வுப் பொதி வெளிவருவதற்கான கால அமையத்தை இவர் மேலும் நீடிக்கச் செய்தார். இவ்வாறாக தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்க கொண்டுவரப்பட்ட இம்மாயப் பொதியை தோற்றுவித்த "கோழைத்தனமன வன்முறையாளரான"😉 (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999, எஸ்.கே. ரத்தினம்) நீலன் திருச்செல்வம் என்பவர் இறுதிவரை எந்தவொரு நன்மையையும் தமிழருக்கு பெற்றுத்தவில்லை. மாறாக பொதி மூலம் சிங்களப் படைத்துறைக்கு போர்த்தளபாடங்கள் பெற்றுக்கொடுத்தலையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை தாக்காட்டுதல் மூலம் சிங்களப் படைதுறைக்கு போதிய கால அமையம் வழங்கல் என்ற அரசியலையுமே தனது காலத்தில் செய்தார். மேலும் நேரடியில்லாமல் புலிகளின் படிமத்திற்கு உலக அரங்கில் சேறு பூசுவதில் பங்காற்றினார். வாழ்ந்த வரை சிங்கள அரச அதிபரை காப்பாற்றும் வேலையையே செய்து வந்தார். இவரது "செல்வாக்கான" என்ற காலத்திலேயே யாழில் 800+ தமிழர்கள் காணாமல் போயும் தீவெங்கும் பல்லாயிரம் தமிழர் கொத்துக்கொத்தாக செத்தொழிந்த போதும் வாயே திறக்காத இந்த நீலமானின் சாவால் தமிழராகிய நாங்கள் ஒன்றையும் இழந்துவிடவில்லை. அதற்கு இவரது இழவு வீட்டிற்கும் தமிழர் பெருமெடுப்பில் செல்லவில்லை என்பதுவே சிறந்த சான்று. மொத்தத்தில் திரு. லக்ஸ்மன் குணசேகர என்பவர் கூறியது போன்று "தமிழரின் கண்களில் நீலன் சிங்களவருடன் சேர்ந்த ஒரு 'உடனுழைப்பாளர்' " (Collaborator) ஆவார் (கொட் ஸ்பிரிங், ஓகஸ்ட்- செப் 1999) . அவர்களிடமிருந்து நல்லவன் என்ற பெயரை மட்டும் உழைத்துக்கொண்டார். உலகெங்கிலும் உடனுழைப்பாளர்கள் அவரது சொந்த இனத்தாலேயேதான் கைலாயம் அனுப்பப்பட்டனர் என்பது வரலாறு! வெற்றுக் காகித சட்டங்களாதலால்தான் நீலன் அனுதாபி ஒருவரிடம் தெளிவாக கேட்டேன், "நீலன் தமிழர் அரசியலுக்கு செய்த நல்லதுகளை எழுதுமாறு", இணையத்தில் தேடிப்பார்க்கத் தெரியாததாலன்று... பி.கு.: கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாமல் மலிவான தனிமனித தாக்குதலை செய்து கம்பு சுற்றுவோருக்கு இனிமேல் மறுமொழி தரப்படாது. (இந்த விடையங்கள் எல்லாம் யாழ்கள நீலன் அனுதாபிகளுக்கு தெரியாது. புலி மீது சேற்றை வாரியிறைக்க நான் முந்தி நீ முந்தி என்று மட்டும் நிற்பினம். நீலமான் அனுதாபிகளே, "உடனுழைப்பாளர்" என்றால் "துரோகி" அல்ல. இருந்தாலும் சட்டிக்குள் தலையைவிட்டு வலிந்து பொருள் கொள்ளுங்கள்! )
  28. மொறு மொறு கும்பகோணம் ரவா தோசை!
  29. இனவழிப்பு, போர குற்றம் என்று சர்வதேச சமுகத்திடம் நீதி கேட்டுக்கொண்டே அநீதியான அக்கிரமமான இவ்வாறான கொலைகளை கயமைத்தனமாக நியாயப்படுத்தி எக்காளமாக பேசுவதைப் பார்ககும் ஒரு வேளை நாடும் போது நாடும் அதிகாரமும் கிடைத்திருந்தால்……………. இயற்கைக்கே பொறுக்கவில்லைப் போலும்.
  30. அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர் அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு. இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.
  31. மேலே உள்ளது ஒரு செய்தியா அல்லது வெறும் காழ்புணர்வினால் எழுதப்பட்ட வசை பாடலா? சுமந்திரன் மற்றயவர்களை போல ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவரின் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி மற்றய கள்ளர்கள் எல்லாம் தப்பிக்கும் உத்தியே இந்தக் கட்டுரை. சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழரின் போராட்டம் பூச்சிய நிலைக்கு கீழே பல மடங்கு ஆழத்திற்கு சென்று விட்டது.
  32. விமலுக்கு இந்தியர்கள் என்றால் தமிழர்கள் என்ற எண்ணம். அதனால்தான் அவர் இந்திய என்று வரும்போது வீராவேசம் போடுகின்றார். நீங்கள் கூறியதுபோல் நிறைய மலையாளிகள் இங்கு சிங்களவர்களாக , தமிழர்களாக மாறி இருக்கிறார்கள். குருநாகல் எத்தனால் ஜான்சன் பெர்னாண்டோவும் ஒரு மலையாளிதான். ஆனால் நாட்டுப்பற்றுள்ள சிங்களவர்கள் போல பேசுவார்.
  33. புதினம் தெரியுமோ........ (பட்சி) முந்தி ஆரும் ஒப்பீஸ் வழியில பிழை விட்டாலோ, வேலையை ஒழுங்காச் செய்யாட்டிக்கோ ' உன்னைத் தண்ணியில்லாக் காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிப்போடுவன்' எண்டு மேலதிகாரிமார் வெருட்டுறவை. ஆனால் உண்மையிலேயே தண்ணியில்லாத இடமெண்டால் இலங்கையில அது கச்சதீவாத்தான் இருக்க முடியும். அங்க அந்தோனியார் கோயிலும், நேவிக்காம்பும், மரஞ்செடி கொடியளும் தான் இருக்கு. நேவிக்காரருக்கு கூட அங்க வேற இடத்தில இருந்து தான் தண்ணி போறது. இப்பிடி தண்ணியோ, குடிமனையோ இல்லாத ஒரு தீவுக்கு சனங்கள் அந்தோனியாரைக் கும்பிடப் போகேக்க அவைக்கு அதுக்குரிய ஒழுங்குகளைச் செய்து குடுக்க வேண்டியது அரசாங்கத்தின்ர கடமை. வழக்கமா அந்தோனியாருக்குப் போற இலங்கை ஆக்களுக்கும், இந்தியாவில இருந்து வாறவைக்கும் நேவிக்காரர் தான் சாப்பாடு, தண்ணி குடுக்கிறவை. அதுக்கெண்டு அவைக்குத் தனியா ஒதுக்கீடெல்லாம் இருக்கு. ஆனால் போனமுறை தங்களுக்கு அந்தோனியார் திருவிழாவுக்காக நேவிக்காரருக்கு அரசாங்கத்தால காசு ஒதுக்குப்படேலை. அதால அவை போன வருசம் நடந்த திருவிழாவில ஏனோ தானோ எண்டு தான் சாப்பாடும். தண்ணியும் குடுத்தவை. அதுவும் ஒழுங்கான சாப்பாடில்லை எண்டும், எல்லாருக்கும் கிடைக்கேலை எண்டும் எக்கச்சக்கம் முறைப்பாடு வேற. அதால இந்தமுறை தாங்கள் தண்ணியோ, சாப்பாடோ தரமாட்டம் எண்டு நேவிக்காரர் கைவிரிச்சுப் போட்டினம். அந்தோனியார் திருவிழா ஒண்டும் நேவிக்காரரின் உபயம் இல்லை தானே. அவை சாப்பாடு, தண்ணி தரமாட்டம் எண்டால், கச்சேரிக்காரரோ. இல்லாட்டி நெடுந்தீவுப் பிரதேச செயலகமோ அதுக்கான ஏற்பாட்டைச் செய்திருக்க வேணுமெல்லோ. ஆனால் அவையும் நெடுந்தீவு ஏற்பாட்டுக் கூட்டம் எண்ட பேரில என்னென்னவோ எல்லாம் கதைச்சுப் போட்டு கடைசியில 'அங்க போற எல்லாரும் தங்களுக்கு சாப்பாடு, தண்ணி கொண்டு வரோணும், அங்க வந்து சமைக்கவும் அனுமதி இல்லை' எண்டு அறிக்கை விட்டிருக்கினம் உதோ பொறுப்பான அதிகாரிமார் செய்யிற வேலை? அங்க நல்லதண்ணிக் கிணறு இருந்தாலாவது பரவாயில்லை. அதில தண்ணியைக் கிள்ளி சனம் குடிக்கும் எண்டு சொல்லலாம். அப்பிடியுமில்லை. கடல் பயணம் செய்து போட்டு. சுத்திவர உப்புக்காத்து அடிக்கிற இடத்தில ஒருநாள் முழுக்க நிண்டால் வழக்கத்தை விட தண்ணி கூடத்தான் இழுக்கும். அதைவிட கச்சதீவுக்குப் போற படகுகளும், யாழ்ப்பாணத்து மினிபஸ்ஸுகள் மாதிரி ஆக்களை அடைஞ்சு கொண்டுதான் போறதுகள். அதுக்க உந்தச் சாப்பாட்டுச் சாமான்களையும், தண்ணி பரல்களையும் எப்பிடிக் கொண்டு போக ஏலும்? அதைவிட நெடுந்தீவில ஒரு சாப்பாட்டுக் கடைதான் வழக்கமா போட அனுமதிக்கிறவை. நேவி சாப்பாடு குடுக்கேக்கையே. அங்க நிக்கிற சனம் அந்த ஒற்றைக்கடையில தள்ளுமுள்ளுப்பட்டுத்தான் சாப்பாட்டை வாங்க முடியும். இப்ப நேவியின்ர சாப்பாடும் இல்லையெண்டதால எல்லாச் சனமும் அந்தக் கடையைத்தான் மொய்க்கப்போகுதுகள். சிலவேளை சாப்பாடு வாங்கப்போய் அந்த நெரிசலில சிக்கி, ஆக்களுக்கு பாதிப்பும் வரக்கூடும். இப்பிடி அகதி முகாம் மாதிரி அடிபட்டுச் சாப்பாடு வாங்கித்தானோ அந்தோனியாரைக் கும்பிட வேணும்? கச்சேரிக்காரரிட்டையோ, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திட்டையோ அந்தோனியாரிட்ட வாறவைக்கு சாப்பாடு தண்ணி குடுக்கக் காசில்லாட்டி தனியாரிட்ட யாழ்ப்பாணம் கச்சேரிக்காரர் உதவி கேட்டிருந்தால், அள்ளிக்குடுக்க ஆயிரம் பேர் இருப்பினம். இல்லாட்டி ஆயர் இல்லமாவது ஏதும் செய்திருக்கும். அதை விட்டிட்டு இப்பிடி சனத்திட்ட 'தண்ணியைக் கொண்டுவா. சாப்பாட்டைக் கொண்டு வா எண்டு ஆய்க்கினைப்படுத்திறது அந்தோனியாருக்கே பொறுக்காது கண்டியளோ........ (17.02.2024 உதயன் பத்திரிகை) https://newuthayan.com/article/புதினம்_தெரியுமோ........
  34. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க திட்டம்.????
  35. காதலர்தின கருத்தோவியங்கள். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.