Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3057Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்8Points20018Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/10/24 in Posts
-
இந்த ஏழு நாட்கள்
8 pointsஇந்த ஏழு நாட்கள் ----------------------------- ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள். வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது. பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன். உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏 நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம். கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍 பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர். இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍 எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣 மிக்க நன்றி கள உறவுகளே....🙏8 points
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
3 pointsமஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் ஜெயமோகன் March 9, 2024 சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள். மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள். அது எப்படியோ போகட்டும், எல்லா படங்களுமே விதவிதமான ஜோடனைகள்தான். வெறும் பொழுதுபோக்குகள். எளிய அறிவுத்துறை அறிமுகம்கூட இல்லாமல் சினிமாவில் மட்டுமே உழன்று, அதையே விவாதித்து, ஏதோ அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகப் பாவனைசெய்து வாழும் பாமரப்பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் வெந்ததைத் தின்று விதிவரும் வரை இங்கே வாழவேண்டும். அவர்களின் பைக்காசுதான் நம் வங்கியை நிரப்புகிறது என்பதனால் அவர்கள்மேல் ஓரளவு கரிசனமும் எனக்குண்டு. புல் வளர்கிறதே என மாடு மகிழ்ச்சிதான் அடையவேண்டும். மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடல்லூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள். பலமுறை இவர்களுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறோம். ஒரு முறை வாகமண் புல்வெளியில் எங்களுடன் வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தில்குமார் இவர்கள் தூக்கி வீசிய புட்டிகளை அவரே அள்ளி பொறுக்கி சேர்த்து அகற்றினார். ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில்சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழகப்போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள். இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதை கண்டிருக்கிறேன். குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது. கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாளப்படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா ? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூகஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன். காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமைக் கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள். போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalaize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிகசினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்தவகையான அறிவுப்பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்கமுடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும். இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள். மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை. கேரளத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்குச் செல்வதென்பது மிக ஆபத்து. பல வெளியே சொல்லமுடியாத அனுபவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் மகளையும் மருமகனையும் தேனிலவுக்காக நானே அனுப்பினேன். அன்று இப்படி ஒரு கும்பல் வந்து செய்த அட்டூழியத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடவேண்டியிருந்தது. நான் ஒரு சினிமாவுக்காகத் தங்கியிருந்த மானந்தவாடி ரிசார்ட்டில் ஒரு வட இந்திய இணையரை இக்கும்பல் தாக்கி பாலியல்பலாத்காரமே செய்ய முயன்றது. நான் அதில் தலையிட்டு எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து காப்பாற்ற நேர்ந்தது (அங்கே மானேஜர் கூட இல்லை. இரண்டு மலையாளம்கூட தெரியாத வங்காளிப் பையன்கள் மட்டுமே) இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன். இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கிச் சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை. https://www.jeyamohan.in/197808/3 points
-
மயிலம்மா.
3 points
-
இந்த ஏழு நாட்கள்
3 points..96 பச்சை புள்ளடி கொடுத்திருக்கிறார்கள்.முன் வரிசையில் நிற்கிறீர்கள் உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் தந்த அங்கீகாரம். நிகேதனம் என்றால் என்ன என்று உங்கள் மூலம் அறிந்தேன். தொடருங்கள் ...நேரம் கிடைக்கும் போதெல்லாம். ( ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம்.)3 points
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
பதவிக்கு வரும் மட்டும் எதுக்கெடுத்தாலும் வாயை திறப்பினம். பதவிக்கு அல்லது செல்வாக்கு வந்தாப்பிறகு சாப்பிட மட்டும் வாயை திறப்பினம் 😎2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி.. பச்சை மலைப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க... 😂2 points
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெளத்த பேரின புகழ்வாதி சொறீலங்கா.. எக்க ராஜ்ஜய வாதி ஜனாதிபதி சட்டவாதி தமிழசுக் கட்சி சுவீகரிப்புவாதி புலி இனச்சுத்திகரிப்பு வாதி இப்படி பல வாதங்களோடு ஏன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.. எப்பவும் ரணிலுக்கு பின்னால் பக்கத்தில் தான் நிற்பார். அதிசயமோ ஆச்சரியமோ அல்ல. டக்கி இலக்கம் 2 தயாராகி கொண்டிருக்குது.2 points
-
தடங்களில் அலைதல்
2 pointsதடங்களில் அலைதல் sudumanalMay 8, 2023 நூல் அறிமுகம் “உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன். என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார். “எங்கடை பிள்ளையள் எங்களுக்குப் பிறக்காம என்னடா வம்பிலா பிறந்தவங்கள்” என தொடங்கி சிங்கள இராணுவத்தின் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் வழியாக தனது தூசணங்களோடு போய்க் கொண்டிருந்தார். என்னைச் சுற்றி கூட்டம். எல்லோரும் என்னை அடிக்கத் தயாராகிவிட்டனர். நாட்டிய ஆசிரியை ஒருவரின் கணவர் இடையில் புகுந்து, “இவரை நாங்கள் கூப்பிடாமலேயே தானாக வந்து மேடையேறிவிட்டார்” என்று வேறு சொல்லிவிட்டார். என் நம்பிக்கைகள் சிதறின. என் ரோச நரம்புகள் செத்துக் கிடந்தன. என்னை அவர்கள் விடுவதாயும் இல்லை. ஓடவும் முடியாது. கூட்டத்தில் நின்ற நியாயவாதி ஒருவர் கூறினார், “நாங்கள் எல்லாரும் ஏதோவொரு வகையில் பைத்தியக்காரர்கள்தான். ஆனால் என்ன… இவருக்கு கொஞ்சம் மிகை… அவ்வளவுதான்” என்றார். அப்போ தெரிந்தவர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டு, “ஏன்… என்ன பிரச்சினை” என கேட்டு என்னை மீட்டுச் சென்றார். இந் நகரத்தின் ஒரு அறியப்பட்ட புத்திஜீவி என்னைக் காப்பாற்றிவிட்டார் என நினைத்துக் கொண்டேன். “நான் கலீல் ஜிப்ரானின் கவிதை ஒன்றை மேடையில் சொன்னன்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவர், “உனக்கேன் தேவையில்லாத வேலை… இலங்கை முஸ்லிம் பிரச்சினையை இங்கை எதுக்குப் பேசினாய்” என திருப்பிக் கேட்டார். தடங்களில் அலைதல் நூலின் ஆசிரியர் சுசீந்திரனை கலீல் ஜிப்ரான் இவ்வாறான ஒரு பிரச்சினையில் மாட்டிவிட்டிருந்தார். புகலிட இலக்கியம் இந்தச் சுழிகளுக்குள்தான் இயங்கியது, இயங்குகிறது. நாம் கடந்துவந்த அனுபவங்கள், அதை குறித்துவைத்த கடதாசித் துண்டுகள், பதிவுகள், குறிப்புகள், கடிதங்கள் என்பன பல காலத்தின்பின் கிளறப்படும்போது அவற்றிலிருந்து எழும் நினைவுகள் கதைசொல்லிகளாக மாறிவிடுவதுண்டு. அனுபவங்களை பட்டறிவு என்கிறோம். இற்றைப்படுத்தப்பட்ட இன்றைய அறிவில் அன்றைய அனுபவங்களில் விதையாய் விழுந்து புதைந்த வார்த்தைகள் மீண்டும் வெவ்வேறு அர்த்தங்களுடன் முளைத்து உயிர்கொண்டு வியாபிக்கிறதெனின் அவை காலமாகிவிடவில்லை என்பதுதானே அர்த்தம். தடங்களில் அலைதல் என்ற இந்த 120 பக்க நூலின் அந்த முளைப்புகளையும் வியாபித்தலையும் ரசித்தபடி வாசித்தேன். சிறுவயதில் தங்கை உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலின் நடு அச்சாணியின் முனையிலுள்ள ‘நட்’டுகளை கழற்றி வீசிவிட்டு, சுவாரசியத்துக்காகக் காத்திருந்தபோது அது தந்தையால் வேறு அனுபவமாக மாற்றப்பட்டுவிடுகிறது. விளையாட்டுத்தனமாக தொடங்கிய அந்தச் செயல் இன்று சக மனிதருக்கு ஆபத்து விளைவிப்பதை செய்யத் துணியாத மனவளத்தில் ஓர் அச்சாக சுழல்வதால், அது மறக்கப்படாமல் இருக்கிறது. வார்த்தைகள் முளைத்துக் காட்டுகின்றன. தாயின் இன்னொரு கையாக இருந்த தையல் மெசினோடு தந்தை ‘அலவாங்கு’ கொண்டு போர் புரிகிறார். “என்னைக் கொன்றபின் அதைக் கொல்” என்கிறாள் தாய். அதற்கு நானேதான் ஒரே சாட்சி என பெருமூச்சால் முற்றுப்புள்ளி இடுகிறார் சுசீந்திரன். அங்கும் வார்த்தைகள் இயற்கை எய்திவிட முடியாததாக தடங்களில் அலைகின்றன. எடி ஜேக்கோவின் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்”, மிகயில் ஷோலகவ்வின் “டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது”, ஹைன்றிஷ் பொல்லின் “ஒரு கோமாளியின் பார்வைகள்” போன்றவை உட்பட வேற்றுமொழி நாவல்கள் சிலதையும், தமிழ் நாவல்கள் சிலதையும் அவ்வப்போது புகலிட இலக்கிய முகத்திற்கு அறிமுகமாக்கிய கட்டுரைகளும் இந் நூலில் இடம்பெறுகின்றன. தோளோடு சாய்ந்து நின்ற தோழர்களின் அவ்வப்போதான மரணங்களின் போது எழுதிய சில அஞ்சலிக் குறிப்புகளும் தடங்களில் அலைதலில் வருகின்றன. முக்கியமாக பாரிஸில் வைத்து புலிகளால் கொல்லப்பட்ட தோழர் சபாலிங்கம்!. புகலிட வாழ்வின் இலக்கிய அரசியல் வெளிகளிலிருந்து அழித்துவிட முடியாத அந்தத் தோழரின் கொலையும் காலச்சிதைப்பும் சுசீந்திரனின் அஞ்சலிக் குறிப்பிலும் உயிர்த்தே நிற்கின்றன. தடங்களில் அலைதல் நூலானது கட்டுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறான இலக்கிய வடிவங்களின் வகைப்பாடுகளின் சட்டகங்களுக்குள் சசீந்திரனின் தடங்களில் அலைதல் நூல் அகப்படாமல் இருக்கிறது என்றே வாசிப்பு அனுபவம் சொல்லி முடித்தது. கட்டுரைகள், நூல் அறிமுகங்கள், தனிநபர் அறிமுகங்கள், வாழ்வனுபவங்கள், அஞ்சலிக் குறிப்புகள் என தடங்களில் அலைதல் ஓர் அறிதலையும் சீரிய வாசிப்பனுபவத்தையும் ஒருபுறம் தருகிற அதேவேளை, இன்னொரு புறம் வலியும் நினைவுச்சுகமும் என முரண்களை அருகருகே வைப்பவையாகவும் இருக்கின்றன. அவை காலத்தைப் பின்னோக்கி நகர்த்திக்காட்டும் வல்லமை கொண்டவை. கால மாற்றத்தோடும் அறிவோடும் அனுபவங்களோடும் இற்றைப்படுத்தப்பட்டு முன்னோக்கி வந்துவிடுகிற நம் ஒவ்வொருவரையும் பின்னோக்கிய காலத்தில் இழுத்துச் சென்று அவற்றின்மீது புதிய பரிமாணங்களைக் காட்டுகிறது. அந்த புதிய பரிமாணமானது அறிவை சரிபார்ப்பதிலும் செழுமையாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. தடங்களில் அலைதல் நூலை வாசித்து முடித்தபோது இந்த எண்ணங்களே சேர்ந்தலையத் தொடங்கின. அனுபவங்களானவை உள்ளுடனில் உணர்வுகள் உணர்ச்சிகள் காயங்கள் வலிகள் என ஒரு பக்கத்தையும், அவை நினைவாக எழும்போது தரும் சுகமும் சுவாரசியமும் என இன்னொரு பக்கத்தையும் எப்போதுமே கொண்டிருக்கும். அது தடங்களில் அலைதலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. //மகிழ்ந்திருத்தல் என்பது அபரித ஆடம்பரமானது என்று எணணும் ஒரு வாழ்வினை வரித்துக் கொண்டவர்களில் எனது தாய் முதன்மையானவர் என நான் நினைப்பதுண்டு. அவளது கூறைச்சேலை சிவப்பு நிறமும் வெள்ளிச் சரிகை வேலைப்பாடும் கொண்டது. அதை நான் காவலாளியாக நடித்த ஒரு நாடகத்தில் உடுத்தியிருந்தேன். அதுவே என் இராக்கால போர்வையாகவும் இருந்தது. நான் அறிய அவள் கோவில்களுக்குச் சென்றதில்லை. சுற்றம்சூழ என்பார்களே.. அதை அவள் அனுபவித்ததில்லை. என் அப்பாவை அவள் நேசிப்பதற்கு ஏதாவது முகாந்திரம் இருந்ததுவா என்று நான் இன்று எண்ணிப் பார்க்கிறேன். தாய் பற்றி எழுத உங்கள் எல்லோருக்கும் இருப்பதுபோலவே எனக்கும் ஆயிரம் உண்டு// என நூலாசிரியர் தடங்களில் அலைதலுக்கான பயணத்தில் சக பயணிகளைக் காண்கிறார். எம்மையும் நினைவுத் தடங்களில் அழைத்துச் செல்கிறார்! * நூலாசிரியர் சுசீந்திரன் (ஜேர்மனி) மேற்குலக புகலிட இலக்கிய வெளியின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் சுசீந்திரன். 80 களின் கடைசியில் தொடங்கிய இலக்கியச் சந்திப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இருந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் சுமார் 40 வருட கால நீண்ட புகலிட இலக்கிய அரசியல் வெளியில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர். தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல யேர்மன் மொழியிலும் புலமையுடையவராக இருந்ததால் மொழிபெயர்ப்புகளின் மூலமும் புகலிட இலக்கியத்துக்கு தன் பங்குக்கு வலுச் சேர்த்தவர். சேர்த்துக் கொண்டிருப்பவர். இன்னமும் அதிகமாக மொழிபெயர்ப்பில் அவர் செயற்பட்டு அவற்றை தமிழுக்கு தந்திருக்க முடியும், தர முடியும் என்பது என் அபிப்பிராயம்! https://sudumanal.com/2024/03/09/தடங்களில்-அலைதல்/#more-59962 points
-
மயிலம்மா.
2 pointsமயிலிறகு .......10. வாமன் கிணற்றின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலை அவனை கொஞ்சம் சீண்ட நினைத்து என்ன பார்க்கிறாய்....... யார் நானா ......பின்ன இங்கு வேறுயார் இருக்கிறார்கள். உன்னைத்தான் கேட்கிறேன். நீ பார்க்கிறதை பார்த்தால் மோட்டரை லவட்டிக் கொண்டு போற பிளான்போல கிடக்கு. அவளுக்கு அவனது முதலாவது அறிமுகமே மாங்காய்க்கு கல்லெறிந்து ஏச்சு வாங்கிக் சென்ற துடிப்பான வாலிபன் மற்றும் அவளும் இப்பொழுது பலரை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளியாக இருக்கிறாள்.அதனால் அந்த கம்பீரம் அவள் குரலிலும் தொனிக்கிறது. அவனை நீ நான் போடா வாடா என்றே அழைக்கிறாள். அப்படி வேலைகள் செய்கிறதாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்ப பணத்துக்கு உங்களிடம் வாறம். கிணற்றில் தண்ணி நல்ல தெளிவாக இருக்கு குடிப்பம் என்றால் குழாயில் தண்ணி வரவில்லை. ஓ......அதுவா அடிக்கடி தோட்டத்துக்கு நீர் இறைப்பதால் தண்ணி தெளிவாய் இருக்கு. இது நல்ல ஊற்றுக் கிணறு.இப்ப சில நாளாய் மோட்டர் வேலை செய்யவில்லை. எல்லாம் அவர்தான் பார்க்கிறவர்.இந்த வேலையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் மின்சார வேலை தெரிந்த ஒரு ஆளுக்கு சொல்லியிருக்கிறன். அவருக்கும் நேரமில்லை நாலுநாள் பொறுங்கோ வாறன் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் பயிர் எல்லாம் நீரின்றி சோர்ந்து போய் கிடக்கு. அது கிடக்கட்டும் உன்னைப் பற்றி சொல்லு, நீ என்ன செய்கிறாய். என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு. என் பெயர் வாமதேவன். நானும் சுந்தரேசனும் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகத்தான் படித்து வந்திருக்கிறோம்.அவன் நல்லா படிப்பான். நான் சுமாராய் படிப்பன். இப்ப அவன் கம்பசுக்கு தெரிவாயிட்டான். ஆனாலும் நான் படித்துக் கொண்டே எங்கட விதானையாரிடம் பகுதிநேர வேலை செய்கிறேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதைவிட அவருடன் நாலு இடத்துக்கும் போகும்போது ஒரு கெத்தாய் இருக்கும்..... அவள் உதட்டை பிதுக்கி புருவத்தைத் தூக்கி ....ம் .....பெரிய வேலைதான் (அவருக்கு தான் அடியாள் போல என்பது கூடத் இவனுக்குத் தெரியவில்லை) சரி மேல சொல்லு..... போற இடங்களில் தண்ணிக்கும் விருந்து சாப்பாட்டுக்கும் குறைவில்லை. அதை விட அதிகாரிகளோ போலீசாரே யார் பார்த்தாலும் மரியாதையுடன் பழகுவார்கள். யார் எங்கட அரசு விதானையுடனோ வேலை செய்கிறாய் ....... ஓம்.....உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும்.அவருடன்தான்.....அவர் சொல்லி நானும் கிராமசேவகர் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.அநேகமாய் ஒரு மாதமளவில் கிடைக்கலாம் என்று விதானையார் சொன்னவர். அது சரி நான் இந்த மோட்டர் அறையைப் பார்க்கலாமா .......அதுக்கென்ன பார் என்று சொல்லி கதவைத் தள்ளி திறந்து விடுகிறாள்.வாமன் உள்ளே செல்ல அவளும் பின்னால் போகிறாள். அவன் மோட்டரை கையால் சுற்றிப்பார்த்து இது சரியாய் இருக்கு என்று சொல்லி பியூஸ் போர்ட்டைத் தேட அது எதிர் சுவரில் இருக்கு.அவன் சேர்ட்டைக் கழட்டி கதவில் கொழுவிவிட்டு சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு அங்கு போகிறான். அந்த இளம் வாலிபனின் மார்பிலும் கால்களிலும் சுருள் சுருளான உரோமங்கள். அவளுக்கு தலைமுடியில் சுருள்கள் கிடையாது, ஆனால் நீளமான நீண்ட முடிகள். தன்னிச்சையாய் தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொள்கிறாள். அங்கு குவிந்திருக்கும் சாக்குகளை விலத்தி மெயின் சுவிட்சை நிறுத்தி விட்டு பியூஸ் கட்டையை புடுங்கிப் பார்க்கிறான்.அது எரிந்து போய் கிடக்கு. அங்கேயே தேடி வேறு ஒரு பியூஸை எடுத்து அதில் சொருகி அதை சரியான இடத்தில் பொருத்தி விடுகிறான். அங்கே அந்தப் பெட்டிக்கு மேல் ஒரு சாராயப்போத்தல் இருக்க அவன் அதை எடுக்கிறான்....அவன் கேட்காமலே அவளும் அது அவர்தான் வைத்திருக்கிறார். அவர் உங்க போறவாற இடமெல்லாம் தான் குட்டிப்பதற்கு வைக்கிறது வழக்கம். விரும்பினால் நீ எடுக்கலாம் என்கிறாள். அவனும் அதைத் திறந்து மறுபக்கம் திரும்பி நின்று குடிக்கிறான். பின் அவன் மெயின் சுவிட்சைப் போட பைப்பில் முதல் காற்று வந்தது. அவன் அதை பொத்திப் பிடிக்க சற்று நேரத்தில் அவன் கையைத் தள்ளிக்கொண்டு அழுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அது புஷ்வாணமாய் அறை முழுதும் பாய்கிறது. அவன் பின்னால் நின்ற அஞ்சலா அஞ்சி என்ர அம்மா என்று கத்தியபடி அவனையும் இழுத்துக் கொண்டு தடுமாறிக் கீழே விழுகிறாள். இருவரும் தெப்பலாய் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். அவளது நீல நைலான் சேலை நன்றாக நனைந்து உடலை சிக் என்று இறுக்கிப் பிடித்திருக்கு. வாமன் தடுமாறி எழ முயற்சிக்க அவள் இடையில் அவன் முகம் பொருந்தி இருக்கிறது. கைகள் அவளை இறுகப் பற்றியிருக்கின்றன.அந்தப் பிடியில் இருந்து விலக அவளும் பிரயத்தனப் படவில்லை.அப்படியே கொஞ்சம் நிதானித்துக் கீழிறங்க அவன்மேல் பருவச்சுமை அழுந்துகிறது. காத்து வாக்கில் பூத்த வாசம் நாசியை நிறைக்கின்றது.கல்லுபோன்ற மாதுளைகள் அவன் கன்னங்களை உரசிக்கொண்டு அவன் வெற்று மார்பில் தஞ்சமடைய இளமையில் இள மயில் உறவு தேடித் தவிக்குது.நிலமையைப் புரிந்து அவனது பிடிகள் தளர்கின்றன. அவள் தன் கைகளால் அவன் தலைமுடியைக் கோதி தன் முகத்துடன் சேர்த்துக் கொண்டு மெல்ல காதுக்குள் கம்மும் குரலில் கிசுகிசுக்கிறாள், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள். இதுவரை இதுபோன்ற அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. காலத்தை மறந்து ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்கிறார்கள்.அந்தச் சிறு நேரத்துக்குள் அவன் இந்தமாதிரி அனுபவமில்லாதவன் என்று புரிந்து கொண்டு அவன் தொடைகள் நடுங்குவதை தன் கால்களால் உணர்ந்து கொள்கிறாள். புல்லாங்குழல் வாசிப்பதற்குத் துவாரங்களைக் கையாலத் தெரிய வேண்டும். அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் நடுங்குகிறது. குழாயால் அறை முழுதும் சீறிப் பாய்ந்த தண்ணீர் குழாய்க்குள் அடங்கி தொட்டிக்குள் சீராக விழுகின்றது. மெதுவாக அவன் கன்னத்தில் அழுத்தி ஈர முத்தமொன்றைத் தந்துவிட்டு எழுந்து தனது ஆடைகளைச் சரிசெய்து கொள்கிறாள். அவனும் எழுந்து கொள்கிறான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு கூச்சமாக இருக்கின்றது. நிராயுதபாணியாய் இராவணன் சென்றது போல் எழுந்து சென்று அறைக்குள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மிச்ச சாராயத்தையும் ஒரு மிடறில் குடித்து விட்டு மோட்டரையும் நிப்பாட்டிவிட்டு நனையாத சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வருகிறார்கள். அவன் உம் என்று வருவதை பார்த்த அஞ்சலா அவனைக் கலகலப்பாக்க நினைத்து, அவனைப் பார்த்து கண் சிமிட்டிகொண்டே நான் மீண்டும் ஒருமுறை குளிக்க வேண்டி வந்திருக்கும் நல்லகாலம் தப்பீட்டன் என்று சொல்ல அவனுக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறது. அவன் சொல்கிறான் இப்ப மட்டும் என்ன அந்த ஈரச்சாக்கு ஊறலுக்குள் உருண்டு பிரண்டு எங்கட உடுப்புகளும் நாறுது, போய் குளிக்கத்தான் வேணும். அப்போது அங்கு மயிலம்மாவும் வருகிறாள். என்னக்கா எல்லாம் சரியா இருக்கா..... ஓம் பிள்ளை.....என்ன இரண்டு பேரும் நனைந்து போய் வருகிறீர்கள் என்று வினவ ..... அதொன்றுமில்லை அக்கா, சில நாட்களாக மோட்டர் வேலை செய்யவில்லை.அதுதான் இவன் அதைத் திருத்தினவன்.அப்போது எதிர்பாராமல் குழாயில் இருந்து தண்ணீர் சீறி அடித்து எங்களை நனைத்துப் போட்டுது..... மயிலம்மாவும் வாமன் வலு கெட்டிக்காரன் ......எல்லா வேலைகளும் தெரியும்....உடனே பிழைகளைக் கண்டு பிடித்து செய்து போடுவான் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்கிறாள். அப்போது அஞ்சலா மெதுவாக இவனிடம் ...ம்....எனக்குத்தான் தெரியும் இது இன்னும் "எலி பிடிக்கப் பழகாத பூனை" என்று மெதுவாய் அவன் காதைத் திருகிவிட்டு சொல்கிறாள். உடனே வாமன் உஸ் என்று ஜாடையால் மயிலம்மாவைக் காட்டி கேட்டிருக்கும் என்கிறான்......! 🦚 மயில் ஆடும்.......! 10.2 points
-
மரணம்
2 pointsமண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது. அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன். 16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள். அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான். அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன். முற்றும்.2 points
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
1 pointவடமாகாணத்தில் இரண்டும் நடை பெறுகிறது ஒரு பக்கம் நல்லிணக்க செய்ல்பாடு ....வெடுக்குநாறிமலையில் ஆக்கிரமிப்பு ...தாயகத்திலும் இந்த புறு புறுப்பு உண்டு ....இங்கு வயது போனவர்கள்...அங்கு இளைஞர்கள்1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் மொழி அழியாம இருக்க தமிழகம் செல்ல செழிப்பாய் இருக்க...........தமிழர்கள் வட நாட்டானிடம் அடி வேண்டி வாழாம சுதந்திரமாய் வாழ நாம் தமிழர ஆதரிக்கிறேன்..............தலைவர் புகழ் மாவீரர் தியாகங்கள் அழியாம பார்த்து கொள்ள நாம் தமிழரை ஆதரிக்கிறேன்🙏.....................1 point
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
விசுகு பலஸ்தீனத்தில் நடக்கும் அராஜகங்களை எந்த மேற்கு நாடு தட்டிக் கேட்கிறது. ஒரு பக்கம் காசாவில் போர் அடுத்த பக்கம் சும்மா கிடந்த மேற்குக் கரையில் 3500 வீடுகள் கட்டுவதற்கு யுதருக்கு பிரித்து கொடுக்கிறார்களாம்.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.1 point
-
யாழ். இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
வீடு விற்பனை போல இதுவும் ஒரு அத்தியாவசிய சேவை தேவை இன்று வடக்கில். எனவே திருந்த வேண்டியது மக்கள் தான்1 point
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
மூன்றென்று சொல்லுங்க...யாழிலும் ஒரு குறூப் ..மூச்....நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்1 point
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேணும் அரசியலை அரசியலாக பார்க்கவேணும் ...யாழ் களத்தில் நான் படிச்ச பாடங்களில் ஒன்று.... புட்டினும் ரொனால்ட் டிரம்பும் கை குழுக்கி வியாபாரம் பண்ணுவது போல் இதுவும் ஒன்று ... கஞ்சா மாபியா தலைவன் பொலிஸ் அதிகாரிகள்,முதலமைச்சர் ஆகியோருடன் படம் பிடித்து பொக்கற்றுக்குள் வைத்து கொள்வான் தேவை ஏற்படின் அந்த படத்தை காட்டி தப்பித்துக் கொள்வான்.... அது போல இவரும் தேவை ஏற்படின் ..ஐ .நா... மற்றும் மந்திரி பதவி ....1 point
-
புதுக்குடியிருப்பில் பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
அரச அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் மட்டுமே செய்யும் கடத்தலைச் சாமானியர்கள் பொலிசாருக்கு லஞ்சம் கொடுக்காமல் செய்தால் இப்படித்தான் முடியும். 😏1 point
-
வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ? போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 pointதம்பீ எழுதுவதற்கு யோசிக்கவில்லை. ஆபீசில இருந்து எழுதுறாங்க பாருங்க. அது தான் கொஞ்சம் உதைக்குது. நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.1 point
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
1 pointபோதைபொருள் ஜாபர் செய்திகளில் இருந்து இனி விடைபெறுவார் அடுத்து கொஞ்ச நாளைக்கு ஜெயமோகன் தான் இரு மாநில செய்தி ஊடகங்களிலும் கிழித்து தொங்க விடபடுவார் .இனி என்ன ........................ஸ்டார்ட் மியுசிக் .😀1 point
-
சீனாவுடனான தனது எல்லையை வட கொரியா வேகமாக மூடுவது ஏன்? என்ன பிரச்னை?
இந்த நாட்டுக்கும் இந்த அடக்குமுறையாளனுக்கும் எம்மவர்களிடம் ஆதரவு இருக்கிறது 😪1 point
-
மயிலம்மா.
1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 pointஇதே சந்தேகம் தான் எனக்கும், நீங்கள் எல்லாம் எனக்கு முன்னரேயே மிகவும் பழக்கமான ஆட்கள் போல என்று.......😀 இல்லை தமிழ் சிறி, நான் இங்கு முன்னர் வரவில்லை. நண்பர்களுடன் சில வாட்ஸ்அப் குழுமங்கள் தவிர வேறு எந்த சமூக ஊடகங்களிலும், முகப்புத்தகம் உட்பட, நான் இல்லை. ஈழப்பிரியனை ஒரு தடவை சந்தித்திருக்கின்றேன். நீர்வேலியான் என்னுடைய நீண்டகால நண்பன்.1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 pointமுதலில் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சமஸ் கிருதம் என்று எண்ணிவிட்டேன். எனக்கும் ஒரு சந்தேகம்? @ரசோதரன் இத்தனை கதைகளையும் எழுதினாரா? இல்லை முதலே எழுதி வைத்திருந்ததை எடுத்து எடுத்து கொளுவினாரா? “வந்தான்ரா ஆறு பந்திலும் ஆறு சிக்ஸ் அடித்தான்டா” என்ற மாதிரி இருக்கு.1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 point👍👍..... 'ஆரோக்கிய நிகேதனம்' என்பது வங்காள எழுத்தாளரான தாரசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் எழுதப்பட்ட ஒரு பெரும் நாவல். இதில் மூன்று தலைமுறைகளாக மருத்துவம் செய்யும் ஒரு குடும்பத்திலிருக்கும் ஒருவர் மையப் பாத்திரமாக வருகின்றார். இந் நாவல் இந்திய இலக்கியத்தில் மிகச் சிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. தாகூர் அவர்களுக்கு பின்னர் தாரசங்கர் பந்த்யோபாத்யாய இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக முன் மொழியப்பட்டு, பரிசீலனையிலும் இருந்தார். ஒரு பெரும் படைப்பாளி.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அண்ணை எல்லாம் அந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி்க்காகவா? என எண்ணத் தோன்றுகிறது.1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 pointரசோதரன்... இந்த ஏழு நாட்களில், உங்கள் எழுத்தின் ரசிகனாகி விட்டேன். 🥰 எனக்கு என்னவோ.... நீங்கள் முன்பு வேறு பெயரில் யாழ்.களத்தில் எழுதியமாதிரி, ஒரு சந்தேகம். 😂சந்தேகம் மட்டுமே... இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை. 🤣 (பகிடிக்கு சீரியஸாக எடுக்காதீர்கள்.) 🙂1 point
-
இந்த ஏழு நாட்கள்
1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கெதிராக காலகாலமாய் சர்வசாதாரணமாக நடந்த சம்பவங்கள் தான், கனடாவில் இது அதிர்ச்சியாக இருக்கலாம். அதாவது, உயிர் பிழைத்தவர் காருண்யமானவர், அன்பானவர், சம்பந்தப்பட்டவருக்கு உதவும் நோக்கிலேயே அவரை அழைத்து வந்து தங்க வைத்ததாக செய்திகள் கூறுகின்றன, அதே நேரம் அவரின் மனோநிலையை அங்கிருந்த விக்கிராதிபதிக்கும் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் அதற்கு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை ஆற்றுப்படுத்த முன்வரவில்லை? இங்கு பௌத்த மதத்தின் பெயரால் இரத்த ஆறு ஓடவைக்க முனையும் அவர்களால் வேறு எதை சாதிக்க முடியும்? இருந்தாலும் ஒரு ஆறுதல், வழமையாக தமிழர்தான் முன்னுக்கு ஓடிச்சென்று உதவி செய்து தாக்குபடுபவர்கள், இந்த முறை தப்பிக்கொண்டனர். அந்தப்பையன் இங்கிருந்திருந்தால் நம்மினத்துக்கு ஒரு சவாலாக இருந்திருக்க கூடும்.1 point- இந்த ஏழு நாட்கள்
1 pointஇன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கோ இதெல்லாம் வாடிக்கை.1 point- இந்த ஏழு நாட்கள்
1 pointசும்மா பயப்படுத்தவேண்டாம். அவருடைய எழுத்தும் ஒரு அழகு தான் வாசிக்கலாம் ஆர்வமாக இருக்கிறது பொழுதும் நன்றாகவே போகிறது உங்களுக்கு எப்படி???1 point- இந்த ஏழு நாட்கள்
1 pointஇப்ப தானே இறங்கியுள்ளீர்கள். இனித் தான் என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சொந்த நாட்டில் அமைதியாக வாழ தெரியாத இனம் உலகில் எங்கு சென்றாலும் நாய் வாலை நிமித்த முடியுமா ?1 point- யாழில் விமானப்படையின் கண்காட்சி
1 pointசாந்தன் அண்ணாவின் இறுதிநிகழ்வை காட்டமுடியாத யாழ்ப்பாண யூரியூப்பர்களுக்கு இது ஒன்றுதான் கேடு1 point- ஆரோக்கிய நிகேதனம்
1 pointஅப்படி, தண்ணீர் மட்டும் கேட்டாலும்….. 🚰 Gas தண்ணி வேணுமா… Gas இல்லாத தண்ணி வேணுமா ? “கிளாசில்“ ஊற்றி தரவா… இல்லாட்டி போத்திலோடை தரவா? அதற்குள் ஐஸ் கட்டி போடவா… வேண்டாமா ? என்று கேட்டு கடுப்பேத்துவார்கள். 😁 😂 அவர்கள் அலுப்பு தாறதெண்டு முடிவெடித்தால், எந்த ரூபத்திலும் தந்தே தீருவார்கள். 🤣1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointகருநாநிதி நடத்திய நாடகமும், எம்.ஜி.ஆர் புலிகளுக்குக் கொடுத்த இரண்டு கோடி ரூபாய்களும் தமிழ்ப்போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்கிற பொதுவான விருப்பம் தமிழ்நாட்டில் அன்று இருந்துவந்தது. இதனை தனது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த தந்திரசாலியான எம்.ஜி.ஆர் எண்ணினார். போராளி அமைப்புக்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்த தமிழ்நாட்டின் பொலீஸ் உளவுத்துறைத் தலைவர் மோகன் தாஸ், போராளிகளை எம்.ஜி.ஆர் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார். இந்த சந்திப்பு குறித்து பத்திரிக்கைகளிலும் பரவலான விளம்பரம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவராக அன்று இருந்த கருநாநிதியுடன் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் தலைவர்கள். 1984 ஆம் சித்திரையில் பாலசிங்கம் தம்பதிகள் சென்னை திருவாண்மியூரில் தங்கியிருந்தனர். அருகிலிருந்த இன்னொரு வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். அடையாரில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்ப் பணிமனையில் ஒருநாள் பாலசிங்கம் இருந்தவேளை தமிழ்நாடு பொலீஸ் புலநாய்வுத்துறையைச் சேர்ந்த பொலீஸ்காரர் ஒருவர் போராளித் தலைவர்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சந்திக்க விரும்புவதாகக் கூறி அழைப்பிதழ் ஒன்றினைக் கொடுத்தார். மேலும் இச்சந்திப்பின்போது ஐந்து போராளி அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பொதுவான அமைப்பொன்றினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் அப்பொலீஸ் அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார். போராளிகளுக்கிடையிலான பிணக்குகள் குறித்து எம்.ஜி.ஆர் அக்காலத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததுடன் "ஒற்றுமையே பலம்" என்றும் அடிக்கடி பேசி வந்தார். மறுநாள் அதேவகையான அழைப்பிதழ் ஒன்றினை எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த கருநாநிதியிடமிருந்தும் பாலசிங்கம் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர் நடத்தவிருந்த சந்திப்பிற்கு ஒருநாள் முன்னதாக கருநாநிதி தனது சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். கருநாநிதியின் போராளிகளுடனான சந்திப்பிற்கும் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தம்மை விலத்தியே வைத்திருப்பது என்கிற புலிகளின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல்த் தலைவர்கள் விடுத்திருந்த சந்திப்பிற்கான அழைப்புக்கள் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன. பாலசிங்கம் தமிழில் எழுதிவந்த விடுதலை இதழில் குறிப்பிடும்போது தன்னிடம் வழங்கப்பட்ட இரு அழைப்பிதழ்களையும் பிரபாகரனிடம் தான் காட்டியபோது அவை எவற்றிலும் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று அவர் கூறியதாக எழுதுகிறார். பிரபாகரனின் இந்த முடிவிற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது, எம்.ஜி.ஆர் இற்கும் கருநாநிதிக்கும் இடையிலான அரசியப் போட்டியில் தான் அகப்பட்டு விடக் கூடாதென்பது. அவரைப்பொறுத்தவரை ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு இவ்விரு தலைவர்களினதும் ஆதரவு தேவை என்று அவர் உறுதியாக இருந்தார்.இவர்களுள் எவரினதும் எதிர்ப்பினைத் ஈழத் தமிழர்கள் சம்பாதித்துவிடக்கூடாதென்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இரண்டாவது, இவ்வாறான சந்திப்புக்களின்போது உமாமகேஸ்வரனும் பங்குகொள்வார் என்பதனால் அவ்வாறான சந்திப்புக்களை பிரபாகரன் வெறுத்தார். ஒருவரையொருவர் நேராகச் சந்திக்கும்போது தேவையற்ற மோதல்கள் இடம்பெறலாம் என்று பிரபாகரன் கருதினார். ஆகவே, இது சந்திப்பிற்கான மூல நோக்கத்தையே கலைத்து விட்டுவிடும் என்று பிரபாகரன் வாதிட்டார். ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களின் தலைவர்களில் மூன்று அமைப்புக்களின் தலைவர்களே கருநாநிதியின் சந்திப்பில் கலந்துகொண்டனர். சிறீசபாரட்ணம், பத்மநாபா, பாலக்குமார் ஆகியோரே அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். பிரபாகரனைப் போலவே உமா மகேஸ்வரனும் இக்கூட்டத்தில் இருந்து தன்னை விலத்தி வைத்திருந்தார். ஆனாலும், மூன்று போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்த நிகழ்வினை பெருவெற்றியாகக் காட்டிய கருநாநிதி அச்சந்திப்பின் பின்னர் பெரும் எடுப்பில் பத்திரிக்கை மாநாடு ஒன்றினையும் நடத்தினார். இதனால் எம்.ஜி.ஆர் சினமடைந்தார். போராளித் தலைவர்கள் சிலரைச் சந்தித்தன் மூலம் கருநாநிதி அரசியல் வெற்றியொன்றினைச் சம்பாதித்துவிட்டதாக எம்.ஜி.ஆர் எண்ணினார். ஆனால், கருநாநிதியிடம் தோற்றுப்போக அவர் விரும்பவில்லை. மறுநாள் தான் நடத்த எண்ணியிருந்த போராளித் தலைவர்களுடனனான சந்திப்பினை திடீரென்று அவர் இரத்துச் செய்தார். அவரிடம் வேறொரு திட்டம் இருந்தது. "அன்று மாலை, புலநாய்வுத்துறையின் உப தலைவர் அலெக்ஸாண்டர் அடையார் அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்" என்று பாலசிங்கம் விடுதலையில் எழுதுகிறார். "அவரை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. எமக்குப் பலமுறை அவர் உதவியிருக்கிறார். கருநாநிதியைச் சென்று சந்தித்த மூன்று போராளித் தலைவர்கள் மீதும் எம்.ஜி.ஆர் கோபத்தில் இருக்கிறார் என்று அவர் என்னிடம் கூறினார். அன்று மாலையே புலிகளைச் சந்திக்க எம்.ஜி.ஆர் விரும்புவதாக அலெக்ஸாண்டர் என்னிடம் கூறினார். தனது விருந்தினர் மாளிகைக்கு புலிகளை அழைத்துவர எம்.ஜி.ஆர் தனக்குக் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். நான் தலைமையிடம் இதுகுறித்துப் பேசியபின்னரே முடிவெடுக்க முடியும் என்று கூறவும், உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று அலெக்ஸாண்டர் பதிலளித்தார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார். மேலும், பாலசிங்கத்திடமிருந்து விடைபெற்றுச் செல்லுமுன் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறிச் சென்றார் அலெக்ஸாண்டர். அதுதான், "தமிழ்நாட்டு முதலமைச்சரை கோபப்பட வைத்துவிட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து செயற்படலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்" என்பதுதான் அந்த எச்சரிக்கை. "எம்.ஜி.ஆர் உமாமகேஸ்வரனையும் சந்திக்கிறாரா?" என்று பாலசிங்கம் வினவினார். அதற்குப் பதிலளித்த அலெக்ஸாண்டர், "அவரை இன்னொருநாள் சந்திக்கலாம், ஆனால் பிரபாகரனைச் சந்திப்பதில் அவர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்" என்று கூறினார். பின்னர் பிரபாகரனுடன் இந்தக் கோரிக்கை குறித்து ஆலோசித்தார் பாலசிங்கம். எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாது என்று அவர் பிரபாகரனிடம் விளங்கப்படுத்தினார். இதனையடுத்து பாலசிங்கத்தை சங்கரையும், பேபி சுப்பிரமணியத்தையும், நித்தியானந்தனையும் அழைத்துக்கொண்டு எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்லுமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். நித்தியானந்தன் அப்போது விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர் தன்னை சந்திக்க அழுத்தம் கொடுத்தால் தான் அவரைச் சந்திக்க வரமுடியும் என்றும் பாலசிங்கத்திடம் தெரிவித்தார் பிரபாகரன். புலிகளின் தூதுக்குழுவினரை மிகுந்த வாஞ்சையுடன் வரவேற்ற எம்.ஜி.ஆர், "உங்களின் தலைவர் பிரபாகரன் வரவில்லையா?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த பாலசிங்க, "அவர் சென்னையில் இல்லை, அடுத்த சந்திப்பில் அவரும் கலந்துகொள்வார்" என்று கூறினார். பின்னர், "கருநாநிதி ஏற்பாடு செய்த சந்திப்பில் ஏன் நீங்கள் கலந்துகொள்ளவில்லை" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "போராளிகளுக்கிடையிலான ஒற்றுமை குறித்து பேச முதன்முதலாக அழைப்பு விடுத்த தலைவர் நீங்களே. ஆனால், உங்களைத் தோற்கடிக்கவே கருநாநிதி ஒருநாள் முன்னதாக தனது சந்திப்பினை நடத்தினார். அவரது சந்திப்பில் கலந்துகொள்வதன் ஊடாக அவருக்கு அரசியல் ஆதாயத்தை நாம் வழங்கிவிட விரும்பவில்லை. அதனாலேயே நாம் அச்சந்திப்பினைத் தவிர்த்தோம்" என்று கூறினார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் இன் முகம் பிரகாசமானது. "தமிழ்நாடு அரசியலை நீங்கள் நன்கு தெரிந்துவைத்திருக்கிறீர்கள்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார் எம்.ஜி.ஆர். பின்னர், "நீங்கள் ஏன் குழுக்களாகப் பிரிந்து இயங்குகிறீர்கள்? ஏன் நீங்கள் சேர்ந்து இயங்கக் கூடாது?" என்று பாலசிங்கத்திடம் வினவினார் எம்.ஜி.ஆர். இச்சந்தர்ப்பத்தினை இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினையின் அடிப்படை, பல தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உருவாக்கம், புலிகள் அமைப்பின் கொள்கைகள், கட்டமைப்புக்கள், இலட்சியம் மீதான உறுதிப்பாடு, போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆகிய விடயங்கள் குறித்து விளங்கப்படுத்துவதற்காக பாலசிங்கம் பாவித்தார். இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் வன்கொடுமைகள் குறித்த புகைப்படங்களையும், ஒளிநாடாக்களையும் எம்.ஜி.ஆர் இடம் அவர் காண்பித்தார். பின்னர் , "உமா மகேஸ்வரனைப்பற்றிக் கூறுங்கள். அவர் தனது அமைப்பே உண்மையான புலிகள் என்று கூறிவருகிறாரே? பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே என்னதான் பிரச்சினை?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் அம்.ஜி.ஆர். பாலசிங்கம் பதிலளித்தபோது, "தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஈழத்துப் புலிகள் என்றே அழைக்கிறார்கள். அதனால் சில சமூக விரோத அமைப்புக்களின் செயற்பாடுகளும் புலிகளின் பெயரிலேயே வந்து வீழ்ந்துவிடுகின்றன. உமா மகேஸ்வரனும் ஒருகாலத்தில் புலிகள் அமைப்பில் இருந்தவர்தான், ஆனால் ஒழுக்கச் சீர்கேடு ஒன்றிற்காக அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம்" என்று அவர் மேலும் கூறினார். அதன்பின்னர், இந்தியாவினால் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், நிதியுதவிகள் குறித்து பாலசிங்கத்திடம் எம்.ஜி.ஆர் வினவினார். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், இந்தியப் பயிற்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார். இப்பயிற்சியின் மூலம் 200 புலிகளையே பயிற்றுவிக்க முடிந்திருக்கிறது. புலிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்தியா நடத்துகிறது. புலிகளைக் காட்டிலும் மிக அதிகளவான மாற்றியக்கப் போராளிகளை இந்தியா பயிற்றுவித்து வருகிறது. ஆனால், இப்போராளிகள் ஈழத்தில் செயற்றினுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்று கூறியதோடு, இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் வினைத்திறன் குறைந்த பழமையான ஆயுதங்கள் என்றும், மிகச் சிறிய எண்ணிக்கையான ஆயுதங்களே இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா பயன்படுத்தி வருகிறதென்பது தமக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறினார். பாலசிங்கம் பேசுவதைப் பொறுமையாக செவிமடுத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், "இப்போது எனக்கு எல்லாமே புரிகிறது. நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள். என்னிடம் இருந்து எவ்வகையான உதவியினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் பாலசிங்கத்திடம் வினவினார். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "இந்தியாவினால் பயிற்றப்பட்ட 200 புலிகளைக் கொண்டு இலங்கை இராணுவத்தைப் போரில் வெற்றிகொள்ள முடியாது. குறைந்தது 1000 பயிற்றப்பட்ட போராளிகளாவது எம்மிடம் இருக்க வேண்டும். ஆகவே, மேலதிகப் போராளிகளைப் பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் நாமாகவே சில பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்ள விரும்புகிறோம். பின்னர் அவர்களுக்கான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பெருமளவு பணம் வேண்டும். அதற்கான நிதியுதவியினை உங்களால் கொடுக்க முடியுமா? அப்படி நீங்கள் உதவினால், அது எமது போராட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும். நீங்கள் செய்யும் இந்த உதவியினை எமது மக்கள் என்றென்றும் நினைவில் வைத்து நன்றிகூர்வார்கள்" என்று எம்.ஜி.ஆர் ஐப் பார்த்துக் கூறினார் . "சரி, என்னிடம் இருந்து எவ்வளவு பணத்தினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார் எம்.ஜி.ஆர். இந்த தருணத்தை பாலசிங்கம் இப்படி நினைவுகூர்கிறார், "எனக்கு எப்படிப் பதிலளிப்பதென்றே தெரியவில்லை. எமக்குப் பெருமளவு பணம் தேவைப்படும் என்று நான் இழுத்தேன். பரவாயில்லை, எவ்வளவுதான் வேண்டுமென்று சொல்லுங்கள் என்று அவர் என்னைடம் மீண்டும் கேட்டார். நான் சங்கப்படுவதை உணர்ந்துகொண்ட சங்கர், இடையில் பேசத் தொடங்கினார். எமக்குக் குறைந்தது இரண்டுகோடி ரூபாய்களாவது வேண்டும் என்று அவர் கூறினார். ஆயிரம் போராளிகளைப் பயிற்றுவிக்க ஒரு கோடியும், அவர்களுக்கான ஆயுதங்களை வாங்கிக்கொள்ள இன்னொரு கோடியும் தேவைப்படும் என்று சங்கர் கூறினார். பெருமூச்சு ஒன்றினை வெளியிட்ட முதலமைச்சர், வெறும் இரண்டு கோடிகளா? என்று கூறிவிட்டு, என்னைப்பார்த்து, நாளைக்கு இரவு 10 மணிக்கு ஒரு வாகனத்தையும் எடுத்துக்கொண்டு வந்து பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று சாதாரணமாகக் கூறவும் நாம் வாயடைத்துப் போனோம். அவரது பரோபகாரத்தை மெச்சிக்கொண்ட நாங்கள், நாளை நிச்சயம் பிரபாகரனையும் அழைத்து வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றோம்" என்று கூறுகிறார். பாலசிங்கமும் ஏனையோரு இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரபாகரனிடம் தெரிவிக்க அவரது வாசஸ்த்தலத்திற்குச் சென்றார்கள். பிரபாகரனாலோ அதனை நம்ப முடியவில்லை. ஆகவே, தாம் நகைச்சுவைக்காக இதனைக் கூறவில்லை என்று அவர்கள் மீண்டும் அவரைப் பார்த்துக் கூறினார்கள். அதன்பின்னர் பேசிய பிரபாகரன் ஓரிரு நாட்களில் தான் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, தனிப்பட்ட ரீதியில் இதற்கு நன்றி கூறப்போவதாகக் கூறினார். எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டவாறே மறுநாள் வாகனம் ஒன்றினை அமர்த்திக்கொண்டு எம்.ஜி.ஆர் இன் மாளிகைக்குச் சென்றார் பாலசிங்கம். ரகுவே வாகனத்தை செலுத்திக்கொண்டு போனார். தனது மாளிகையின் வாசலில் பாலசிங்கத்தின் வருகைக்காக எம்.ஜி.ஆர் காத்து நின்றார். வாசலை நோக்கி வாகனம் வருவதை அவதானித்த எம்.ஜி.ஆர் சற்று விலகி நின்று, வாகனத்தை தனது மாளிகையினை நோக்கி செலுத்துமாறு கூறினார். மாளிகையின் முன்னால் வாகனம் நின்றதும் பாலசிங்கத்தை அவர் வரவேற்றார். பின்னர் பாலசிங்கத்திற்கு அருகில் நின்றிருந்த ரகுவைப் பார்த்து, "இந்தப் பையன் யார்?" என்று எம்.ஜி.ஆர் வினவினார். "இவர் பிரபாகரனின் நம்பிக்ககைக்குரிய மெய்ப்பாதுகாவலர்" என்று பாலசிங்கம் பதிலளித்தார். திருப்தியடைந்த எம்.ஜி.ஆர், அவர்களை மாளிகையினுள் அழைத்துச் சென்றார். பின்னர் தனியே பாலசிங்கத்தை அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர், வீட்டினுள் அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டினுள் நுழைந்து வீட்டின் நிலக்கீழ் பகுதிக்குச் சென்றார். லிப்ட்டின் கதவு திறந்துகொண்டதும், அங்கிருந்த அறைகளில் ஒன்றிற்குள் பாலசிங்கத்தை அழைத்துச் சென்றார் அவர். அப்பகுதியில் சில பெட்டிகள் நிரையாக அடுக்கப்பட்டிருக்க இரு திடகாத்திரமான மனிதர்கள் அவற்றிற்குக் காவல் காத்து நின்றனர். அந்த இரு நபர்களுடனும் மலையாளத்தில் பேசிய எம்.ஜி.ஆர், "அவர்களுக்கு இரு கோடிகளைக் கொடுங்கள்" என்று கூறினார். அவர்கள் 20 பெட்டிகளை எடுத்து லிப்ட்டினுள் வைத்தார்கள். வீட்டின் முன்பகுதிக்கு வந்ததும் வாகனத்தில் அப்பெட்டிகளை ஏற்றிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் இடம் நன்றி தெரிவித்த பாலசிங்கம், கூடவே பொலீஸாரையும் துணைக்கு அனுப்பமுடியுமா என்று வினவினார். பெருந்தொகைப் பணத்தை தனியாக எடுத்துச் செல்லும்போது வழியில் பொலீஸார் மறித்தால் விபரீதமாகிவிடும் என்பதே அதற்குக் காரணம். உடனேயே பொலீஸாருடன் தொலைபேசியில் எம்.ஜி.ஆர் பேசவும், சில நிமிடங்களில் ஆயுதம் தரித்த பொலீஸார் இரு ஜீப் வண்டிகளில் வந்திறங்கினர். அவர்களின் அதிகாரியிடம் பேசிய எம்.ஜி.ஆர், பாலசிங்கமும் ஏனையோரும் வந்த வாகனத்தை பத்திரமாக அவர்களின் வீடுவரை வழிநடத்திச் செல்லுமாறு பணித்தார். "எமது வாகனத்திற்கு முன்னால் ஆயுதம் தரித்த பொலீஸ் ஜீப்பொன்று சென்றுகொண்டிருந்தது. இரண்டாவது ஜீப் எமக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. வண்டியில் இரண்டு கோடி ரூபாய்களை வைத்துக்கொண்டு நானும் ரகுவும் சென்னையின் கடற்கரைச்சாலயூடாக திருவாண்மியூரில் இருந்த எமது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம். எமது தலைவர் பிரபாகரன், நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி, கேணல் சங்கர் மற்றும் சில போராளிகள் எமது வருகையினை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருந்தனர். வீட்டினையடைந்ததும், என்னிடம் வந்து பேசிவிட்டு பொலீஸார் அங்கிருந்து சென்றனர்" என்று அந்த எதிர்பாராத அனுபவம் குறித்து பாலசிங்கம் எழுதுகிறார். பெட்டிகளில் இருந்த பணம் பாலசிங்கத்தின் படுக்கையறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு பெட்டியாக அவற்றை அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள். பெட்டிகளுக்குள் நூறு ரூபாய்க் கட்டுகள் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்படிருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் பத்துலட்சம் ரூபாய்கள் இருந்தன. பணத்தை எண்ணி முடிக்கும்போது விடிந்துவிட்டிருந்தது. விரைவில் எம்.ஜி.ஆர் ஐச் சந்தித்து தான் நன்றி தெரிவிக்கப்போவதாக அங்கு பிரபாகரன் அறிவித்தார். பிரபாகரன் சிலிர்த்துப் போயிருந்தார். ஏனையவர்களும் அப்படித்தான். புலிகள் அமைப்பு பெரும் பண நெருக்கடியில் அப்போது சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் உதவியின் மூலமே அவர்களது நாளாந்தச் செலவுகள் சமாளிக்கப்பட்டு வந்தன. சிலவேளைகளில் பிரபாகரன் பெரும் விரக்தியில் காணப்பட்டுவார். புலிகளை கெரில்லா இராணுவம் எனும் நிலையிலிருந்து தேசிய விடுதலை இராணுவமாக மாற்றும் தனது நோக்கம் ஈடேறும் நிலையில் தான் இல்லையோ என்றும் அவர் வருந்தியிருக்கிறார். ஆனால், இந்த அச்சத்தையெல்லாம் போக்கி, அவரது நோக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அன்று உதவியிருந்தார்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?"..[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில், தான் பார்க்கும் நோயாளிகளை முறையாக இன்னும் ஒரு செவிலியிடம் பாரம் கொடுத்து விட்டு, தற்கொலையை எனோ ஒரு தீர்வாக எடுத்து, இரவு இந்த உலகை விட்டு போக வேண்டும் என்பதே அவளின் இறுதி முடிவாக இருந்தது. அதற்கிடையில் இது! ரமேஷ் மீதான அவளுடைய காதல் ஆழமாக இருந்தாலும், காலத்தையும் சமூக எல்லைகளையும் தாண்டிய ஒரு பந்தம் இருவருக்கும் இடையில் இருந்தாலும், அவர்களின் காதல் சமூகத்தின் கடுமையான மரபுகளுடன் மோதியதால், காவியா விரக்தியின் தவிர்க்க முடியாத வலையில் சிக்கிக் கொண்டாள். சமூக எதிர்பார்ப்புகளின் கனமும், அவளது காதலுக்கும் வேரூன்றிய மரபுகளுக்கும் இடையிலான மோதலும், ரமேஷ் இல்லாத எதிர்காலத்தைப் பற்றிய பயமும் காவியாவிற்குள் ஒரு நம்பிக்கையற்ற உணர்வை உருவாக்கியது. தான் ஆழமாக நேசித்த ஒருவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து போக வேண்டும் என்ற எண்ணமும், அவர்களின் காதல் செழிக்கக் கூடிய எதிர்காலத்தை கற்பனை செய்ய முடியாத இயலாமையும் சேர்ந்து, அத்தகைய சோகமான தீர்வை யோசிக்க வைத்தது அவளுக்கு. எல்லாத் தற்கொலைகளும் மூடத்தனமானதுதானா? தன் உயிருக்கு மேலாகத் தான் நம்பும் ஒன்றை நிறுவ உயிரை மாய்க்கும் சமூக விழுமியத்தை நாம் தக்கவைக்க வேண்டாமா? தற்கொலைகளில் தியாகமாக? ஒரு மானுட உச்சமா? அவளால் சிந்தித்து பார்க்கும் நிலையில் அவள் இப்ப இல்லை. வில்லியம் ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களில் அவரது கதாபாத்திரங்கள் தற்கொலையால் இறக்கின்றன. ரோமியோ ஜூலியட்டின் இறுதிக் காட்சியில், இளம் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது கதைக்கு ஒரு கவர்ச்சியை கொடுத்து இருக்கலாம்? மற்றும் படி அது எந்த தீர்வையும் தரவில்லை என்பதே உண்மை! இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், யாழ்ப்பாணத்துக்கே உரிய மசாலா வாசனை, பாரம்பரியத்தில் ஊறிய கலாச்சாரத்தினையும் சேர்த்து ஆழமாக எதிரொலிக்க, பாலச்சந்திரன் குடும்பம் அங்கு பெருமையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வந்தது. பாலச்சந்திரனுக்கு ரமேஷ் என்ற ஒரு மகனும் மூன்று மகளும் இருந்தனர். அதில் ஒருவளுடன் சிறு வயது முதல் நண்பியாக இருப்பவள் தான் காவியா. அதனால் ரமேஸுடனும் தோழியாக, சிறுவயதில் நெருக்கமாக இருந்ததால். பிற்காலத்தில் அது காதலாக மாறி, ஒருவருக்கொருவர் சகவாசத்தில் ஆறுதல் கண்டனர். என்றாலும் அவர்களின் காதல் இரகசியமாகவே மலர்ந்தது. ஏனென்றால் அவர்களுக்கிடையில் சமூக ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் இணைப்புக்கு குறுக்காக நின்றது. ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும் [அழகாகத் திலகம் இட்ட அழகிய ஒளி பொருந்திய நெற்றியும், அழகிய கண்களும்] மட்டும் அல்ல, "அறம்திகழ் தவமும் அகிலமும் இதனால் அழியுமென் றயன்படைத் திலனோ சிறந்தவேல் விழியை முன்படைத்தயர்ந்து செங்கரம் சோர்ந்ததோ திகைத்து மறந்ததோ கரந்து வைத்ததோ களப வனமுலைப் பொறைசுமந் துருகி இறந்ததோ உளதோ இல்லையோ இனிமேல் எய்துமோ அறியொணா திடையே." அறநெறி விளங்கும் வீட்டு நெறியும் உலகியல் நெறியும் இடையினால் அழியும் என்று எண்ணி இடையினைப் படைக்கவில்லையோ? சிறந்த வேல் போன்ற கண்களை முதலில் படைத்து இளைத்துச் சிவந்த கைகள் தளர்ந்தனவோ? செய்வதறியாது மதிமயங்கி மறந்துபோனினனோ? அல்லது அவள் வடிவில் மறைத்து வைத்திருக்கிறானோ? சந்தனக் குழம்பணிந்த அழகிய முலைகளின் பாரத்தைச் சுமந்து உருகி இற்றுப்போயிற்றோ? இடை இருக்கிறதோ இல்லையோ அல்லது இனி மேல்தான் உண்டாகுமோ? இடை இருப்பதாகவே அவளிடம் தெரியவில்லை. அப்படி ஒரு அழகு அவள். அவள் தான் காவியா! அவள் தனது பிரகாசமான புன்னகையுடனும் உறுதியுடனும், காதல் அனைத்தையும் வெல்லும் எதிர்காலத்தை கனவு கண்டாள். ரமேஷ், சமமான உற்சாகத்துடன், ஆனால் குடும்பப் பொறுப்புகளின் சுமைகளை சுமந்து கொண்டு, தனது இதயத்தின் ஆசைகள் மற்றும் தன் மீது சுமத்தப்பட்ட கடமைகளுக்கு இடையே, தவிர்க்க முடியாத மோதலுடன் போராடினான். தன்னால் இரண்டையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு அவனிடம் இருந்தது. ரமேஷ், யாழ்ப்பாணத்தில் உள்ள பல மேல் மட்ட தமிழ் மக்களைப் போலவே, பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு இறுக்கமான சமூகத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயதிலிருந்தே, குடும்ப மரியாதை, கடமை, பெரியவர்களுக்கு மரியாதை போன்ற மதிப்புகளை ஊட்டி வளர்க்கப் பட்டவன். அதிலும் மூன்று தங்கைகளுடன் பிறந்தவன் என்பதால் பொறுப்பும் அதிகம் இருந்தது. இந்த கலாச்சார, கடமை நெறிமுறைகள் அவனது தனிப்பட்ட அபிலாஷைகள் மற்றும் ஆசைகளுடன் மோதின. ரமேஷின் போராட்டத்தின் அடிப்படையானது காவியா மீதான அவனது இதயப்பூர்வமான பாசத்திற்கும் அவனது குடும்பம் அமைத்துள்ள, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதைக்கும் இடையிலான மோதலாகும். பாரம்பரிய நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றியிருந்த அவனது குடும்பம், ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப உறவுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களுடன் இணங்கக்கூடிய இன்னும் ஒரு ஒத்த குடும்பத்தில் அவனுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினர். இருந்தாலும் ரமேஷின் இதயம் காவியாவுக்கே ஏங்கியது. குழந்தைப் பருவத்தில் உருவான அவர்களின் பிணைப்பு, காலப்போக்கில் வலுப்பெற்று, எல்லைகளைத் தாண்டிய காதலுக்குச் சான்றாக இருந்தது. அவன் தனது இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றவும், அன்பே வழிகாட்டும் சக்தியாக இருக்கும் எதிர்காலத்தைத் தழுவவும் விரும்பினான். இதனால், தன் தங்கையினூடாக தன் காதலை பெற்றோரிடம் தெரியப்படுத்தினான். தான் காவியாவை திருமணம் செய்தாலும், கட்டாயம் மூன்று தங்கையின் வாழ்வை தீர்மானிப்பேன், நான் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன். ஆகவே பயம் தேவையில்லை என்று உறுதிமொழியும் கொடுத்தான். என்றாலும் அவனது தந்தை பாலச்சந்திரன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தாயும் கூட தந்தையின் பக்கமே நின்றாள். இதனால் ஏற்பட்ட தவறான புரிதல்களும் குடும்ப அழுத்தங்களும் காவியா, ரமேஷ் இடையே கடக்க முடியாத சுவர்களை எழுப்பின. ஏங்கித் தவிக்கும் இரு இதயங்களுக்கும் ரமேஷ் குடும்பத்தின் தவிர்க்க முடியாத கோரிக்கைகளுக்கும் இடையில் அகப்பட்ட காதலர்கள் இருவரும், வாழ்வில் ஒரு பள்ளத்தை எதிர்கொண்டனர். தங்கள் காதலுக்கு, தாங்கள் சேர்ந்த உலகில் ஒருபோதும் இடம் கிடைக்காது என்ற மனவருத்தம் தரும் உணர்வு அவர்களை கடுமையான நடவடிக்கைகளைச் சிந்திக்கத் தள்ளியது. என்றாலும் ரமேஷ் தான் இன்னும் பெற்றோருடன் கதைத்து பேசி நல்ல முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், குடும்ப எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அழுத்தம், சமூகத்தின் தீர்ப்பு பற்றிய பயம் மற்றும் அவர்களின் இக்கட்டான நிலைக்கு சாத்தியமான தீர்வு கிடைக்காது என்ற விரக்தி ஆகியவை காவியாவின் தோள்களில் தாங்க முடியாத பாரமாக மாறியது. இது அவளுடைய தனிப்பட்ட ஆசைகளைப் பற்றியது மட்டுமல்ல, அவர்களின் அன்பைத் தடுக்கும் சமூகத் தடைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியின் வழியில் நிற்கும் கடக்க முடியாத தடைகள் பற்றியதாகவும் விரிந்தது. தன் இறப்பு மூலம் தன் வேதனைக்கு, மனச் சஞ்சலத்துக்கு முடிவு கட்டலாம் என்பதுடன் இது பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து, பிள்ளைகளின் கருத்தையும் அலசும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்று எண்ணினாள். காதல் வெற்றி பெற முடியாததால், அவள் இதயம் வேதனைப் பட்டபோது, அவளுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் எண்ணம் ஒரு தீர்வாக அவளுக்கு தோன்றியிருக்கலாம்? இது ஒரு பகுத்தறிவு முடிவு அல்ல, மாறாக அவளது வேதனையின் ஆழத்தின் பிரதிபலிப்பு, அவளுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் அவள் மூழ்கடிக்கப் பட்ட போது தன்னை இழந்த நிலையில், ஏற்பட்ட ஒரு உணர்வு. அவள் தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால், அது பிந்திவிட்டது. பக்கத்து வீட்டாரின் துணை பெற்று, கதவு உடைத்து திறக்க நேரம் கடந்து விட்டது. தந்தையின் எதிர்பாராத திடீர் விபத்து மரணத்தால், மனம் உடைந்த இளம் உயர் வகுப்பு மாணவன் தாயின் சீலையில் கழுத்தில் தூக்கு போட்டு அங்கு சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தான். அவன் விட்டு சென்றது தாயும், தங்கையும், தந்தை இல்லா நேரம் ஒரு வலுவான துணையாக இருந்து பொறுப்புகளை சுமக்க வேண்டிய ஒருவன், தன்னை மரித்து அதில் இருந்து தப்பிவிட்டான் என்று தான் சொல்லவேண்டும் என்று அவளுக்கு, காவியாவுக்கு தோன்றியது. அப்படி என்றால் ? அவள் சிந்திக்க தொடங்கினாள்! ரமேஷ் மீதான அவளது காதலுக்கு இடையூறுகள் தோன்றி, கடக்க முடியாத தடைகளை எதிர்கொண்டபோது, அவள் அனுபவித்த தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்து, தற்கொலை என்ற இந்த கடுமையான நடவடிக்கை பற்றிய அவளது சிந்தனை தோன்றியது என்னவோ உண்மையே. ஆனால் இப்ப இந்த தொங்கும் சடலத்தையும், வெம்பி வெம்பி அழுது புலம்பிக் கொண்டு இருக்கும் அவனின் தாயையும் தங்கையையும் பார்த்த பின், அவள் மனதில் ஒரு ஞானம், ஒரு தெம்பு பிறந்தது. தான் சாவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை, தன்னை விரும்பியவர்களுக்கு, தன் குடும்பத்துக்கு கவலை மற்றும் துன்பத்தையே அது கொடுத்து, அவர்களின் வாழ்வைக் கூட அது சிதைக்கலாம் என்ற ஞானமே அது! அவள் அன்று வேலை முடிய நேராக ரமேஷ் வீட்டுக்கு போனாள். முன்பு எத்தனையோ தடவை ரமேஷின் தங்கையுடன் அங்கு போனவள் தான். அவனின் பெற்றோர்களை சந்தித்தவள் தான். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. "தற்கொலை தீர்வாகுமா?" என்ற மனதில் ஏற்பட்ட போராட்டத்துக்கு ஒரு மறுமொழியாக அங்கு போகிறாள். வலது கால் எடுத்து மங்கள வாத்தியம் ஒலிக்க ரமேஷின் குடும்பத்துடன் இணைவதற்கு, தானே அவர்களுடன் கதைத்து, விளங்கப்படுத்தி உறுதிகொடுக்க போகிறாள். அது தான் வேறுபாடு. காவியாவுடன் ரமேஸும் இணைய, இருவரின் உணர்ச்சிபூர்வமான நேர்மையும் ஆர்வமும் நிறைந்த வேண்டுகோள், ரமேஷின் பெற்றோர்களுக்கு எதையோ தூண்டியது. மெதுவாக, பாரம்பரியத்தின் விறைப்பு தணிந்து, புரிதல் மற்றும் பச்சாதாபத்தின் ஒரு மினுமினுப்புக்கு வழிவகுத்து, பெற்றோர்களின் மன மாற்றத்திற்கான வாய்ப்பு அடிவானத்தில் மின்னியது. பாலச்சந்திரன் குடும்பம், காவியா ரமேஷின் நேர்மையால் நகர்ந்து, அது உணர்த்திய ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்தனர். இதனால் காவியாவும் ரமேஷும் நம்பிக்கையுடன் மீண்டும் உற்சாகமடைந்தனர், அவர்கள் கைகோர்த்து நின்றனர், இது ஒரு உடனடி புரட்சி அல்ல, ஆனால் மாற்றத்தின் விதை விதைக்கப் பட்டு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிந்துகொள்வதற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தியது. "தற்கொலை தீர்வாகுமா?" என்றால் கட்டாயம் இல்லை. காவியா அதைத்தான் அந்த கடைசி நிமிடத்தில் மனம் மாறி தெம்பு பெற்று, ரமேஸுடன் சேர்ந்து செய்தாள். அந்த இளம் உயர் வகுப்பு மாணவனின் தற்கொலை எந்த தீர்வையும் தந்ததா? என்ற காவியாவின் கேள்வி, அவளுக்கும் ஒரு வாழ்வு சமைக்க வழிவகுக்கிறது என்று நம்புவோம். பாலச்சந்திரனும் அதற்கு எந்த தடையும் இல்லாமல் ஒத்துழைக்கட்டும்! "தற்கொலை தீர்வா? இல்லை வாழ்க்கை ஒரு பாடல்! ஒவ்வொரு இசைச்சுரமும் இடைநிறுத்தமும் வளர ஒரு வாய்ப்பு! வலி கடந்து போகும் காயங்கள் காய்ந்து குணமாகும்! ஆறுதல் ஒன்று தேடுங்கள் அன்பில், நண்பரில் உங்களில்!" "பொறுமையுடன் வாழ்நாள் இருந்தால் பல பெருமைக்கு ஆளாவாயே! துணிந்து நின்றால் துர்க்கையையும் நீ வதம் செய்திடுவாயே! சரித்திரத்தில் இடம் பெற்று சாதிக்க பிறந்த மனிதா! நிற்காமல் ஓடு மானிடா தற்கொலை உனக்கு எதற்கடா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- மரணம்
1 pointஇப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயரம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !1 point- மரணம்
1 point‘’எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை..” இந்த சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது1 point- மரணம்
1 pointநிறைய வேலைப்பளுக்களுக்கு மத்தியில் இந்நிகழ்வை எழுதியிருக்கிறீர்கள் என்று புரிகின்றது........அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்........உங்களைப்போன்ற நண்பர்கள் அவருக்கு கிடைத்தது அவரின் பாக்யம் ......இந்த மரணம் பற்றிய எழுத்தும் அதன் வீச்சும் மனதில் ஒரு நிர்ச்சலமான அமைதியத் தருகின்றது........!1 point- மரணம்
1 point- யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
இத் திட்டத்தால் தற்கொலை செய்ய தண்டவாளத்துக்கு வரும் காதலர்களும் காப்பாற்றப் படுவார்களா ......! 😁0 points- வெடுக்குநாறி மலையில் பதற்றம்: பலர் கைது
எப்படி இருக்க வேணும்? ..பெரும்பான்மையினர் ஆட்சி செய்வதால் சிறுபான்மையினர் அமைதிகாக்க வேணுமா?நில அக்கிரமிப்பு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று...இதை பெளத்தர்கள் விட்டு கொடுக்க மாட்டார்கள் அதாவது எப்படியோ அதிகாரங்களை பாவித்து விகாரையை கட்டி விடுவார்கள் ...பின்பு குடியேற்றம் ... வட மாகாணத்தில விமானப்படை நல்லிணக்க செயலாம் வட மாகாணத்தில் பிக்குமாரும் பொலிசாறும் துட்ட செயல் மூவரும் அரச இயந்திரம்...0 points - ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.