Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    33811
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3127
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    53012
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33372
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/14/24 in Posts

  1. ஒரு கொய்யா மரத்தின் விவரம் ----------------------------------------------- நான்கு சிறு துளிர் இலைகளுடன் நிற்கும் போதே அது ஒரு கொய்யா மரம் என்று தெரிந்துவிட்டது. ஊரில் மரங்களோடும், நிலங்களோடும், கடலோடும் ஒட்டி ஒட்டியே வாழ்ந்ததால் கிடைத்த பயன் இது. மரங்களும், மண்ணும், கடலும் நன்கு பழகினவையாக, எது எது என்று தெரிந்தவையாக இருக்கின்றன. ஒரு சிசு போல பரிசுத்தமாக, எந்தப் பயமும் இல்லாமல் அது அங்கே நின்று கொண்டிருந்தது. ஒவ்வொரு பறவையும் ஐந்நூறு மரங்களை உண்டாக்குகின்றன என்று சொல்வர். ஒரு பறவையின் ஐநூறில் ஒன்று இது. முன்னும் பின்னும் கான்கிரீட் சூழ்ந்த ஒடுக்கமான ஒரு மண் கீலத்தில் பறவை ஒன்று போட்ட வித்தில் இருந்து முளைத்திருந்தது. எல்லாக் கொய்யா மரங்கள் போலவும் இதன் இலைகள் கூராக இல்லாமல், இதன் இலைகள் அகன்றதாக வந்து கொண்டிருந்தன. இளமரத்திலேயே பட்டைகள் உண்டாகி, அவை உரிந்து வீழ்ந்தன. அதனால் மரம் எப்போதும் வழுவழுப்பாக இருந்தது. அதன் காலம் வர, அது பூக்கத் தொடங்கியது. மற்றவை போலவே பூக்கள் வெள்ளையாகவே இருந்தாலும், ஓரிரு நாட்களிலேயே பூக்கள் கருகிப் போயின. பூக்களின் காம்புகள், கொஞ்சம் வித்தியாசமாக, சின்ன விரல் அளவு தடிப்பில் இருந்தன. சில மரங்கள் பூப்பதில்லை. சில மரங்கள் வெறுமனே பூக்கும், காய்க்காது. இந்த மரம் பூக்கும், காம்புகள் வரும், பின்னர் கருகி விடும், அவ்வளவுதானாக்கும் என்று விட்டுவிட்டேன். சில நாட்களின் பின் எதேச்சையாக அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் ஒவ்வொரு காம்பிலும் இரண்டு மூன்று காய்கள். நல்லையா மாஸ்டர் கீறும் வட்டங்கள் போல ஒழுங்கான உருவங்களில் நேர்த்தியான உருண்டையாகக் காய்த்திருந்தன. காய்கள் கடும் பச்சையிலிருந்து வெளிர் பச்சையாகி, பின்னர் இளமஞ்சளாகி, கடைசியில் கடும் மஞ்சள் ஆகின. பழத்தின் வாசம் வீடெங்கும் பரவியது. அங்குதான் பிரச்சனையும் ஆரம்பம் ஆகியது. ஒருவருக்கு வாசம் என்பது இன்னொருவருக்கு மணமாகவோ அல்லது நாற்றமாகவோ ஆகலாம். இங்கு ஆகியது. வேறு கொய்யா மரங்களும் வீட்டில் இருப்பதால் இந்த மரத்தை வெட்டி எறிவதென்ற முடிவு எடுக்கப்பட்டது. வீரம், விவேகம், அறம், தர்மம் என்று சதாகாலமும் படிப்பிக்கப்பட்டு, பலவீனமானவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற பாடப்புத்தக முடிவுடன் இருந்த என்னால், அதுவாகவே முளைத்து ஆளான அழகான ஒரு கொய்யா மரம் அநியாயமாக வெட்டப்படுவதை தடுக்க முடியவில்லை. ஆகக் குறைந்தது, அன்றைய முதல்வர் கருணாநிதி செய்தது போல ஒரு அடையாள உண்ணாவிரதம் கூட நான் இருக்கவில்லை. வெட்டினாலும் அடி மரத்திலிருந்தும், அதன் வேர்களிலிருந்தும் மீண்டும் மரம் முளைக்கும் என்று ஒரு கறுப்பு இரசாயனம் அதன் அடிக்கட்டை மேல் கவிழ்த்து ஊற்றப்பட்டது. பல வல்லுநர்கள் சேர்ந்து இந்த முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தினர். பின்னர் இந்த ஊரில் நான்கு வருடங்கள் மழையே இல்லை. எங்கும் புழுதி எழும்பிப் பறக்கும் நிலங்கள். இரசாயனம் ஊற்றா விட்டால் கூட, அந்த மரம் வெட்டிய பின் பிழைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஐந்தாவது வருடம் சேர்த்து வைத்தது போல மழை கொட்டியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிந்தன. புழுதி பறந்த நிலங்களை பச்சை புற்கள் மூடி வளர்ந்தன. மீண்டும் ஒரு நாள் எதேச்சையாக அந்தப் பக்கம் பார்த்தால், அதே அழகுடன், அகன்ற இலைகளுடன் அந்தக் கொய்யா மரம் மீண்டும் வளர்ந்து கொண்டிருந்தது. மொட்டும், பூவும் கூட இருந்தன. அருகே சென்றேன், 'நானும் தான் இங்கே வாழ்ந்து விட்டுப் போகின்றேனே' என்று சொல்வது போல அதன் சிறு கிளைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.
  2. மயிலிறகு........... 14. நேரே மயிலம்மா வீட்டுக்கு வந்தவன் முன்னால் இருந்த அம்மன் கோயிலில் வண்டியை நிப்பாட்டி விட்டு சென்று அம்மனைக் கும்பிட்டு கற்பூரம் ஏற்றி ஒரு சிதறுதேங்காயும் உடைத்து மூன்று பட்டும் ஒரு மஞ்சள் பட்டுச் சேலையும் அவ காலடியில் வைத்து விட்டு, சைக்கிளுடன் வீட்டுக்குள் வருகிறான். அவனைக் கண்டதும் மயிலம்மாவுக்கு முகம் மலர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் ஏன்டா வாமு இப்பதான் உனக்கு வழி தெரிஞ்சதோ. இத்தனை நாளா உன்னை இங்காலுப் பக்கம் காணேல்ல. சும்மா கோவப்படாதையுங்கோ மயிலம்மா.ஒரு நல்ல செய்தி உங்களிடம் சொல்ல வருகிறன் என்று சொல்ல.......பின்ன எனக்கு கோவம் வராதா கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கு உன்னையும் காணேல்ல நான் என்னெண்டு நினைக்கிறது எதையென்று நினைக்கிறது சொல்லு. முதல்ல எனக்கு கிராமசேவகர் வேலை கிடைத்திருக்கு மயிலம்மா.நீங்கள் அப்போது வீட்டுக்கு வந்ததா அம்மா சொன்னவ. எனக்கு இப்ப விதானையாருடன் வேலை அதிகம். விடிய வெள்ளன அவரோடு போனானான் பின்னேரம்தான் வீட்டை வந்தனான் என்று சொல்லி தான் அஞ்சலாவிடம் மோட்டார் சைக்கிள் வாங்கியதுவரை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கிறான். உண்மையா வாமு நான் கொஞ்சம் பயந்திட்டன்டா. சரி ஏதோ பொல்லாத காலம் அதெல்லாவற்ரையும் மறந்திடுவோம். அதென்ன கையில் பார்சல் என்று கேட்கிறாள். இது மயிலம்மா உங்களுக்குத்தான் எடுத்து வந்தனான்.அவளும் அதை அங்கேயே பிரித்துப் பார்க்க அதில் சுந்துவுக்கு ட்ரவுசர் சேர்ட் பனியன், பூவனத்துக்கு மூன்று சுடிதார் ஹீல்ஸ் செருப்பு, மயிலம்மாவுக்கு நாலு சேலைகள் சட்டைகள் பாவாடைகள், உள்ளாடைகள் அத்துடன் பாட்டா உட்பட ரெண்டு சோடி செருப்பு எல்லாவற்றுடனும் இனிப்பு சொக்கிலேட் எல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்த மயிலம்மாவுக்கு மனம் நெகிழ்கின்றது. பின் அதில் இருந்து ஒரு சேலையும் சுடிதாரும் தனியாக எடுத்து வைத்து உள்ளே சென்று ஒரு புது வேட்டியையும் கொண்டு வந்து அதோடு சேர்த்து சொக்கிலேட் மற்றும் இனிப்புகளும் வைத்து அவனிடம் இதை நீ கனகத்திடம் குடு. நாங்கள் ஒன்டுக்க ஒன்டாய் பழகிறானாங்கள். அவர்களும் சந்தோசப் படுவினம். பின் அவள் சிறிது தள்ளிச் சென்று கனகத்தைக் கூப்பிட அவளும் தன் வீட்டில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வருகிறாள். கனகத்திடம் தனக்கு வேலை கிடைத்ததை சொல்லிய வாமன் பார்சலை அவளிடமும் தர அவளும் நெகிழ்ந்து போய் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொள்கிறாள். அடுத்து செய்யவேண்டுய வேலைகள் பற்றி மயிலம்மாவும் வாமுவும் கலந்துரையாடி ஒரு கொப்பியில் எழுதுகின்றனர்.பின் மயிலம்மா அவனை வீட்டுக்குள் கூட்டிச்சென்று அந்த ஒரு லட்சம் ரூபா பணத்தில் இருந்து இருபத்தையாயிரம் ரூபாவை தனியாக எடுத்து அவனிடம் தர அவனும் என்ன மயிலம்மா இது எதுக்கு எனக்கு என்று கேட்கிறான். டேய் இது உனக்கென்று தரவில்லையடா. நான் ஒரு எழுபது எழுபத்தைஞ்சுக்குள் இந்தக் இந்தக் கலியானச் செலவுகளை முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கையில அதிகம் பணம் இருந்தால் கண்டபடி செலவு செய்யத் தோன்றும். மேலும் உனக்கு பூவனத்தைப் பற்றி தெரியும்தானே. என்ர மகள்தான் ஆனால் இந்தப் பணத்தைக் கண்டால் பெரிசாய் சிலவு செய்து கலியாணம் கட்ட நிப்பாள் அல்லது இந்தப் பணத்தை அப்படியே தனது புருஷன் வீட்டுக்கு கொண்டுபோக அடம்பிடிப்பாள். அம்மா படும் கஷ்டத்தைப் கொஞ்சமும் நினைக்க மாட்டாள். என்ர பிள்ளையைப்பற்றி எனக்குதான் தெரியும். இதை நீ கவனமாய் வீட்ட கொண்டுபோய் வைத்துக்கொள். அந்தப்பிள்ளை எவ்வளவு நம்பிக்கையுடன் நகைகளைக் கூட எடுக்காமல் நம்பிப் பணம் தந்தது. அதனால் எப்படியும் ஆறுமாதத்துக்குள் கடன் அடைச்சுப்போட வேணும் என்கிறாள்.அவனுக்கும் அது சரியென்றே தோன்றியது. அன்று அந்தச் சம்பவம் வெய்யிலில் வானவில் தோன்றி மறைவதுபோல் தற்செயல் நிகழ்வாய் நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதிலிருந்து மயிலம்மா மது பாவிப்பதை அறவே விட்டிருந்தாள். வாமனும் தனது வேலையின் நிமித்தம் ஆங்காங்கே கொஞ்சமாவது பாவிக்க வேண்டிய அல்லது பாவிப்பதுபோல் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குது. அவனால் அவளைபோல் அறவே விட முடியவில்லை. பூவனத்தின் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சுந்துவும் வந்து விட்டான். அவர்கள் ஒரு வாடகைக்காரில் பெரியகடைக்கு சென்று தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள்.வாமுவும் மற்றவர்களும் சுந்துவோடு அவன் இல்லாத சமயத்தில் நடந்த சம்பவங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.வாமனுக்கு கிராமசேவகர் வேலை கிடைத்தது பற்றி கதை வந்தபோது பூவனம்தான் சொல்கிறாள் அண்ணா அவன் அலுவலகம் திறக்க இடம் பார்க்கிறான் இன்னும் சரியா அமையவில்லை. சுந்துவும் என்னடா இவள் சொல்வது உண்மையா, நீ எனக்கு சொல்லவில்லை. அதெடா சுந்து இடத்தை பிடிச்சுட்டு சொல்லுவம் என்று இருக்கிறன் என்கிறான். கொஞ்ச நேரம் யோசித்த சுந்து ஏண்டா நீ எங்கட முன் அறையைப் பாவிக்கக் கூடாது. தங்கச்சியும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிடுவா, நானும் இங்கில்லை, அம்மாவும் தனியாய் இருக்கிறா.நீ இங்கிருந்தால் அவவுக்கும் துணையாய் இருக்கும். நாங்களும் பயமில்லாமல் இருப்பம். நீ என்னம்மா சொல்கிறாய் என்று தாயாரைக் கேட்கிறான். அவளும் நான் அதைப்பற்றி நினைக்கவில்லை, நீங்கள் விரும்பினால் அப்படியே செய்யலாம் என்கிறாள். வாமு நீ என்னடா சொல்கிறாய் என்று கேட்க அதில்லடா சுந்து விதானையின் அலுவலகம் எண்டால் நாலுவிதமான ஆட்களும் வந்து போவினம்.அது மயிலம்மாவுக்கு இடைஞ்சலாய் இருக்கும் இல்லையா..... அது ஒன்றும் இடைஞ்சல் இல்லை. உனக்கு வேறு நல்ல இடம் கிடைக்கும் வரை கூட நீ இதைப் பாவித்துக் கொள்ளலாம். அப்போது பூவனம் நீ விதானையானால் அலுவலகத்துக்கு தொலைபேசி தருவார்கள் எல்லோ. ஓம் தருவார்கள்....அப்ப நாங்கள் அண்ணனுடன் கதைக்கலாம் என்ன.... பின் எல்லோரும் கலைந்து போகிறார்கள். உற்றார் உறவினர் நண்பர்களுடன் பூவனத்தின் கல்யாணம் அருகில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. திருமணத்துக்கு அரசு விதானையும் அஞ்சலாவும் கூட வந்திருந்து அன்பளிப்புகள் கொடுத்து சிறப்பித்திருந்தார்கள். சுந்துவும் சமயத்தில் அவள் செய்த உதவிக்கு மனதார நன்றியைத் தெரிவித்து கொண்டான்.அடுத்து வந்த இரு நாட்களில் அவன் எல்லோரிடமும் சொல்லி விடை பெற்றுக்கொண்டான். அவன் வாமுவுடன் புகையிரத நிலையத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் எனக்கு ஒரு மாத விடுமுறை வருகிறது அப்ப சந்திக்கலாம் என்று சொல்லி வந்த வண்டியில் ஏறி கையசைத்து விடை பெற்றுக்கொள்கிறான்........! 🦚 மயில் ஆடும்........! 14.
  3. சர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  4. மயிலிறகு.......... 15. வாமன் சாதாரணமாய் அஞ்சலா வீட்டுப்பக்கம் போய்வர நேர்ந்தால் அவளோடும் தாயாருடனும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு வருவான்.அது அவர்களுக்கும் பிடித்தமானதாயும் பொழுதுபோக்காகவும் இருந்தது. அன்றும் அப்படி ஒருநாள் போனபோது அஞ்சலா மிகவும் சோகமாய் இருந்தாள். என்ன இன்று மிகவும் கவலையுடன் இருக்கிறீர்கள்..... அதொன்றுமில்லையடா வாமு, "மழை விட்டும் தூவானம் போகேல்ல" என்ற மாதிரி என் நிலைமை இருக்கு. என்னெண்டு சொல்லுங்கோ.......இவற்ர இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான் எல்லோ அவன்தான் அன்று இவற்ற செத்தவீட்டில் என்னோடு குழப்பம் செய்தவன். சரி ....அதுக்கென்ன....... இப்ப அவர் என்னை கடத்திக் கொண்டுபோய் அவற்ர நண்பனுக்கு மணமுடித்து விடுகிற பிளானில் இருக்கிறார் என்று அவர் பாரில் தன் நண்பர்களுடன் கதைத்ததை எனக்கு நம்பகமான ஒருத்தர் அங்கிருந்து கேட்டுவிட்டு வந்து சொன்னவர்.அதைக் கேட்டதில் இருந்து மனம் ஒரே குழப்பமாய் இருக்கு. என்ன பணம் சொத்து எல்லாம் இருந்தால் என்ன எல்லாம் அவங்கட கையில் இருக்கிறமாதிரி நடக்கிறாங்கள். வாமனும் ....இல்ல நான் ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ஏன் நீங்கள் அவர் சொல்லுற இடத்தில கலியாணம் செய்யக்கூடாது. அதுக்கில்ல.....எனக்கு அது விருப்பமில்லை....விட்ட படிப்பைத் தொடரலாமா என்றும் ஒரு எண்ணம் எனக்கு வருகுது.....அதுக்குள்ளே இவன் இந்தமாதிரி வேலை பார்க்க நிக்கிறது எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல. இவற்ற சம்சாரமோ மூத்தப்பிள்ளையோ வந்து கதைத்தால் கதைத்துப் பார்க்கலாம்.அதை விட்டிட்டு கடத்திக் கொண்டு போக நினைப்பதெல்லாம் துப்பரவாய் சரியில்லை. ஓம்.......நீங்கள் சொல்லுறதும் சரிதான்..... நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து இரண்டு முறைதான் இந்தப் படலையைத் தாண்டி இருக்கிறன். அவற்ர செத்தவீட்டுக்கும், மயிலம்மா வீட்டுக் கலியாணத்துக்கும்தான். எனக்கென்ன தெரியும் அவங்களை மீறி நான் என்ன செய்ய முடியும். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ......அவன் என்ன செய்யுறான் என்று நானும் பார்க்கிறன். இன்னும் இரண்டு நாளில் சுந்துவும் விடுமுறையில் வருகிறான். நான் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வரவேண்டும். எதையும் யோசித்து செய்யலாம். அதுக்குள்ள ஒன்றும் நடக்காது என்று நினைக்கிறன். அப்படி பிரச்சினை என்றால் உங்கட தொலைபேசியால் அரசு விதானைக்கு அறிவியுங்கோ. அல்லது அங்கு போய் இருங்கோ. அநேகமான நேரங்களில் நானும் அங்குதான் இருப்பேன்.இப்ப போய் நானும் அவரிடம் சொல்லி வைக்கிறன். பின் வாமன் அரசு விதானையிடம் சென்று விஷயத்தை சொல்கிறான். அதற்கு அவர் நீ ஒன்றுக்கும் யோசிக்காத. ஆர் அந்த யோகிபாபுதானே, அவன் ஒரு மொக்கன். அவனைத் தெரியும் எனக்கு. வைத்தி இருக்கேக்க அவரை ரெண்டு கேசில இருந்து காப்பாற்றி விட்டனான். மூத்தவன் விவேக் கொஞ்சம் நல்லமாதிரி சொன்னால் கேட்பான். விடு அதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஏன்டா நீ அவளுக்காக இவ்வளவு கரிசனைப் படுகிறாய்...என்ன விசயம் சொல்லு. அப்படி ஒன்றுமில்லை அண்ணா ....அந்தப் பிள்ளை எங்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கு. நல்ல பிள்ளை அதுதான்.... சரி....சரி.....அப்படி ஏதாவது இருந்தாலும் சொல்லு செய்திடலாம் யோசிக்காத.... ஒன்று சொல்லுறன் கேள், பிறகு விதானைக்கு பொம்பிளை தர மாட்டாங்களாடா.......சும்மா சொல்லுவாங்கள் அரச உத்தியோகம்.....நல்ல வேலை என்று எல்லாம்....... பொம்பிளை கேட்டுப் போனால்தான் தெரியும்.....ஹா .....ஹா என்று வெடிச்சிரிப்பு சிரிக்கிறார். அடுத்து வந்த சில நாட்களில் சுந்து விடுமுறையில் வருகிறான். வாமன் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அவன் வீட்டில் விடுகிறான்.அங்கு அவன் தனது தாய் சகோதரங்களுடன் வழமையான குசலங்கள் விசாரித்து விட்டு, அம்மா நான் வாமனுடன் வெளியே போய் விட்டு வருகிறேன் என்று சொல்லி அவனின் அலுவலக அறைக்கு சென்று அவனையும் அழைத்துக் கொண்டு இருவருமாக மோட்டார் சைக்கிளில் வெளியே போகிறார்கள். அப்போது வாமன் ஏதோ யோசனையில் இருப்பதை சுந்துவும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் வழமையாகப் போகும் "பாரு"க்கு சென்று அரைப்போத்தல் சாராயமும் தண்ணிப் போத்தலும், கணவாய்ப் பிரட்டலும் வாங்கிக் கொண்டு வந்து ஒரு கதிரையில் அமருகிறார்கள். இப்போது வாமன் விதானையாகிய பின் எங்கு சென்றாலும் அவனுக்கு தனி மரியாதை கிடைக்கின்றது. அப்போது அங்கு ஒரு குடிமகன் போதையில் தள்ளாடியபடி வந்தவர் வாமனைப் பார்த்துவிட்டு தம்பி புது விதானையார் எனக்கொரு சந்தேகம்..... கொஞ்சம் விளக்க முடியுமோ..... வாமனும் என்ன அண்னை சொன்னால் தானே தெரியும்......சரி.....நீங்கள் மாளிகைக் கடைக்குப் போனால் என்ன செய்வீங்கள்..... சாமான்கள் வாங்குவோம் .......பிறகு .......பிறகு பணம் குடுப்போம். .... முடி வெட்டப் போனால் ......முடி வெட்டுவோம் ....பிறகு பணம் குடுப்போம் .... உடுப்புகளை சலவைக்குப் போட்டால் ........இதென்ன கேள்வி கொண்டு வந்து தந்தபின் பணம் கொடுப்போம். தேனீர் சாப்பாட்டுக் கடைக்குப் போனால் .......சாப்பிட்டுட்டு பணம் கொடுத்து விட்டு வருவோம்......சரி......சரி......ஆனால் ஒரு பாருக்கு போனாலோ, சினிமாவுக்கு போனாலோ அல்லது விலைமாதிடம் போனாலோ என்ன செய்கிறீர்கள் .......பக்கத்தில் குடித்துக் கொண்டிருந்த ஒரு வண்டிச்சாரதி சொல்கிறார் .....ஹா....ஹா.....இது நல்ல கேள்வி..... முதலில் பணத்தைக் குடுத்து விட்டுத்தான் பொருளை நுகர்கிறோம்....சரியா .....மெத்தச் சரி...... விதானைத் தம்பி நீயே கேள் இவனிட்டை ஒரு கால் போத்தல் தாடா நாளைக்கு காசு தருகிறேன் என்றால் தராமல் விரட்டுறான். அங்கிருந்த எல்லோரும் சிரிக்கிறார்கள்.....வாமனும் சிரித்து விட்டு சரி அண்ணை நான் சொல்லுறன் நீங்கள் போய் வாங்குங்கோ நான் அவரிட்டை சொல்லுறன். அவர் தள்ளாடி கும்பிட்டுக்கொண்டு போகிறார். சுந்து சொல்லுறான், டே வாமு ஆனாலும் விதானை வேலை ரெம்பக் கஷ்டமடா.........! 🦚மயில் ஆடும்............. 15.
  5. முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும் காரணங்கள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்குத் தெரிந்து கொண்டு தான் கேட்டிருக்கிறீர்கள் என அறிவேன். ஆனால், வாசகர்கள் அறிந்து கொள்ள: 1. சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு (ICC) இலங்கையின் குற்றங்கள் இன்னும் முறையாக முன்வைக்கப் படவில்லை. பிரதான காரணம், அப்படி மனு செய்வதற்கான 3 பொறிமுறைகளில் எதுவும் தமிழர்கள் தரப்பின் வசம் இல்லை. வேறொரு அங்கத்துவ நாட்டினூடாக மனு செய்யும் முயற்சி ஓரிரு ஆண்டுகள் முன்பு பிரிட்டனில் ஆரம்பித்தது, நிலை எனவென்று தெரியவில்லை (அந்த முயற்சியைக் கூட, மியன்மாரின் றொஹிங்கியா மக்களின் வழியைப் பின்பற்றித் தான் பிரிட்டன் தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது வரைக்கும் எவரும் அக்கறையாக எப்படி ICC ஐ அணுகுவது என்று யோசித்ததாக நான் அறியவில்லை) 2. அப்படியானால் எங்கே விசாரணை நடக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் (OHCHR) நடக்கிறது. 2014 இல் "..எதிர்கால தீர்ப்பாயமொன்றில் சமர்ப்பிப்பதற்காக ஒரு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்ற வாக்கியத்தோடு முதல் தீர்மானம். தீர்மானத்தின் இணைப்பு கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/oisl#:~:text=In its resolution A%2FHRC,violations and abuses of human இடையில், இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி ஒழுக மாட்டேன் என்ற போது, அமெரிக்காவின் அணி, இன்னொரு தீர்மானம் மூலம் இலங்கையை தொடர்ந்து உடன் வைத்திருக்க பணியாற்றியது. அந்த அமெரிக்க நிலைப்பாட்டிற்கு சுமந்திரன் ஆதரவாக இருந்தார். இதையே "தவணை கொடுத்தார்கள்" என்று சுமந்திரன் எதிர்ப்பு அணி குத்தி முறிந்து வியாக்கியானம் செய்தன. தவணை கொடுத்திருக்கா விட்டால், சர்வதேச/ஐ.நா படைகள் வந்திறங்கி தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்று நினைத்தார்களோ தெரியாது😂. தற்போது, 2021 தீர்மானத்தின் படி Sri Lanka Accountability Project (SLAP) என்ற பொறுப்புக் கூறல் திட்டம் மூலம் தகவல் சேகரிப்பு நடந்து வருகிறது. அதன் இணைப்புக் கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/sri-lanka-accountability/index#:~:text=In its resolution 46%2F1,Lanka with a view to விசயம் இவ்வளவு தான்! "சுமந்திரன் இதைக் குழப்பினார் , விக்கி ஐயா இதை முன்னேற்றினார்!" என்பதெல்லாம் மேல் தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள் போடும் கூச்சல் - white noise!
  6. சுமந்திரனை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?
  7. ஆயுதம் இல்லாமல் கை கடிக்கும் நேரத்தில் ரனிலை சந்திக்க முடியும். 🙃மக்ரோனின் "இதோ வருகிறோம் என்பது "புட்டினின் நேர்காணலில் தயார் நிலை பற்றி சொல்லி உள்ளார். ஆபிரிக்க நாடுகளின் எதிர்ப்பு புட்டினினின் பின்னணியில் நடைபெற்றதும் ( மாலி உதாரணமாக) மக்ரோனை கடுப்பாகி உள்ளதை விளங்கி கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு அணுசக்தி நாடுகள் மோத நினைப்பது மில்லியன் காசா ஆகி விடும் என்பதே உலக மக்களின் அச்சம்.
  8. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா
  9. வெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது. மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.
  10. யாழ்க‌ள‌ம் முன்பு போல் வேக‌மாக‌ வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட‌ நேர‌ம் எடுக்குது க‌ருத்துக்க‌ள‌த்துக்குள் வ‌ர‌...............
  11. சீனா இந்தியா ரஷ்யா அமெரிக்கா எண்டு ஹை லெவல் ஆக்களோட தான் சிரிலங்கா டச்சிங்ல இருக்கு 🤣
  12. மேய்ப்பன் ---------------- ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று நாங்கள் ஊரில் சொல்வதுண்டு. ஒருவர் உருப்படி இல்லாமல் இருக்கின்றார் அல்லது உருப்படவே மாட்டார் என்று தெரிந்தால், அவரின் வீட்டில் குறைந்தது ஒரு ஆமையாவது இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாமாக்கும். ஒரு தடவை இங்கு ஒரு அயலவரின் வளர்ப்பு ஆமை காணாமல் போய்விட்டது. நேரடியாக என் வீட்டுக் கதவைத் தட்டினார். 'என்னுடைய ஆமை வீட்டை விட்டு ஓடிவிட்டது, உங்கள் வீட்டிற்கு அது வந்ததா?' என்று கேட்டார். அவரின் கேள்வி விளங்க எனக்கு சில விநாடிகள் எடுத்தது. அவரின் ஆமை இரவோடிரவாகவே ஓடியிருக்க வேண்டும் என்றும் சொன்னார். ஒரு ஆமை ஒரு இரவில் எவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நான் கணக்குப் போடத் தொடங்கினேன். ஆனால் அயலவரோ ஆமை என் வளவிற்குள்ளேயே இருக்கின்றது என்பது போல வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். பலத்த தேடுதலின் பின் ஆமை என் வளவிற்குள் இல்லை என்று முடிவாகியது. நிலையான ஒரு புள்ளியிலிருந்து ஒரு குறித்த மாறாத தூரத்தில் இயங்கும் ஒரு புள்ளியின் ஒழுக்கு வட்டம் என்று மனம் சொல்லிக் கொண்டேயிருக்க, கதவு மீண்டும் தட்டப்பட்டது. இன்னொரு அயலவர் கையில் ஒரு பெரிய ஆமையுடன் வாசலில் நின்றார். 'உங்களின் ஆமை என் வீட்டுக்கு வந்துவிட்டது' என்று ஆமையை என்னிடம் நீட்டினார். ஆமைக்கும், எனக்கும் எக்கச்சக்கமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்று ஏன் இவர்கள் எல்லோரும் நினைக்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். ஆமை இறைச்சி கூட இதுவரை சாப்பிட்டதும் இல்லை. அப்பொழுது தான் நான் அந்த ஆமையை முதன்முதலாகப் பார்த்தது. பெரிய ஓட்டு ஆமை. அவர் நீட்டவும், ஆமையும் ஓட்டுக்குள்ளிருந்து தலையை வெளியே நீட்டியது. 'அடடே, உங்களின் ஆமைக்கு உங்களைத் தெரிகின்றதே' என்று அவர் ஆச்சரியம் காட்டிச் சிரித்தார். இருவருமாக ஆமையை உரியவரிடம் கொடுத்தோம். ஆமையை ஓடவிட்டவர் எனக்கு நன்றி சொன்னார், புதிதாக ஆமை புகுந்த வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். ஒரு நேரும், ஒரு மறையும் சேர்ந்து ஒன்றுமில்லை என்றாகியது. ஆமை மறந்து, காலம் முயல் போன்று ஓட, இந்த வாரம் ஒரு மாறுதலுக்காக, ஏலியன்ஸ் இங்கு வந்திறங்கினால் என்ன சொல்லித் தப்பலாம் என்று வாசலில் நின்று பகலிலேயே வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏலியன்ஸ் ஏன் அமெரிக்காவில் மட்டும் வந்து இறங்குகின்றார்கள் என்று தெரியவில்லை. இதுவரை இங்கு வாழ்ந்த மொத்த காலங்களிலும் சில டோஸ் ஃபைஸர் கோவிட் மருந்து மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்ட ஒரே ஒரு பொருளும், நிகழ்வும். ஏலியன்ஸ் அரிசி, பருப்பு, காசு, வீடு இப்படியானவற்றை இலவசமாக வழங்கும் ஒரு நாட்டில் இறங்கினால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஏதாவது தேறும். அமெரிக்காவில் எதுவும் தேறாது. கழுத்து வலித்து, ஏலியன்ஸை விட்டு பார்வையை கீழே இறக்கினால், அதே ஆமை வீதியைக் கடந்து என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த வீட்டுக்காரர் பாவம், இரவில் தான் ஆமை ஓடுகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார். இது 24 மணிகளும் ஓடுகின்ற அதே பழைய ஆமை. இந்தப் பரம்பரை இப்படித்தான் முயலை வென்றது. ஆமையை அங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாலு அடிகள் பாய்ந்து நான் போக, ஆமையும் நானும் நடுரோட்டில் சந்தித்தோம். ஆமை அங்கேயே நடுரோட்டில் படுத்துவிட்டது. இந்தப் பக்கம் என்னுடைய வீடு, அந்தப் பக்கம் ஆமை வாழும் வீடு, நடுரோட்டில் ஆமையும் நானும், அப்பப்ப கார்கள் வந்து போகும் தெரு அது. ஊரில் வாத்து மேய்ப்பது என்பார்கள், சவூதியில் போய் ஒட்டகம் மேய்ப்பது என்பார்கள், அமெரிக்கா போய் ஆமை மேய்க்க வேண்டும் என்று எவரும் சொல்லவேயில்லை.
  13. மயிலிறகு ........... 13. வாமன் அந்த சாவிகளைப் பயன்படுத்தி யந்திரத்தை மூடியிருந்த இருபக்கப் பெட்டிகளையும் கழட்டிவிட்டு அழுக்கேறியிருந்த பில்டர், பிளக் எல்லாவற்றையும் சுத்தமாக்கி மீண்டும் பொருத்தி விடுகிறான்.பின் அதில் சாவிபோட்டு பொத்தானை அமுக்க அது இயங்கத் தொடங்கி விட்டது. சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட்டு நிப்பாட்டுகிறான். பின் பக்கத்துப் பெட்டிகளை பூட்டும்போது அதில் ஏதோ நெகிழிப் பையில் சுற்றியபடி இருக்க முதலில் அதை வாகனப் புத்தகம் என்று நினைத்தவன் எதுக்கும் பார்ப்பம் என்று எடுத்துக் பார்க்க அதில் வாகனப் பத்திரத்துடன் தனியாக ஒரு கட்டுப் பணமும் இருக்கு.அதைமட்டும் பூட்டாமல் அருகில் வைத்து விட்டு அருகில் இருந்த குழாயில் தண்ணிர் எடுத்து வண்டியை நன்றாக கழுவித் துடைத்து விடுகிறான். அப்போது அஞ்சலா ஒரு பையுடன் அங்கு வருகிறாள். அஞ்சலா இங்கு கொஞ்சம் வாங்கோ என்று அழைத்து அந்தப் பணக்கட்டை எடுத்து இது இங்கே இருந்தது என்று சொல்லித் தருகிறான். அதை அவள் வாங்கிப் பார்த்துக் கையில் வைத்துக் கொண்டு அது சரி வண்டிக்கு நீ முன்பணம் தரவேண்டும் என்கிறாள்.அவனும் அதுக்கென்ன என்று சொல்லி இப்பதான் விதானையார் சம்பளப்பணம் தந்தவர் என்று அதில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாவை எண்ணிஎடுத்து மீண்டும் பொக்கட்டில் தேட அவள் என்ன என்று கேட்கிறாள்......அதுவந்து இன்னும் ஒருரூபாய் தேடுகிறேன் என்று சொல்ல அங்கிருந்த ஆச்சி தனது கொட்டப்பெட்டிக்குள் இருந்து ஒரு ரூபா நாணயத்தை எடுத்து அவன் கையில் தர அதை அப்படியே அஞ்சலாவின் கைகளில் தருகிறான். அவளுக்கு அவன் செயல்களைப் பார்க்க சிறுபிள்ளைத்தனமாயும் சிரிப்பாகவும் இருக்கிறது. மேலும், உன்னிடம் யாராவது இந்த சைக்கிள் சம்பந்தமாய் ஏதாவது கேட்டால் நான் அதை திருத்தத் தந்தது என்று சொல்லி அவர்களை என்னிடம் அனுப்பு என்கிறாள். பின் தன் கையில் இருந்த பையை வண்டியின் பக்கப் பெட்டியில் வைத்து விட்டு இதில் கொஞ்சம் வெற்றிலை, தேசிக்காய், மாங்காய் பணியாரம் எல்லாம் இருக்கு கொண்டுபோய் உன் வீட்டுக்கும் மயிலக்கா வீட்டுக்கும் குடு என்கிறாள். அவனும் அவளுக்கு மிகவும் நன்றி சொல்லி விட்டு மோட்டார் சைக்கிளை வீதிக்கு உருட்டிக்கொண்டு வந்து சர் என்று சீறிக்கொண்டு பறக்கிறான். வீட்டுக்கு வர அவன் தாய் தம்பி உனக்கு ஒரு தபால் வந்திருக்கு, அப்பாதான் கையெழுத்துப் போட்டு வாங்கினவர் என்று சொல்லிக் குடுக்கிறா. அதோடு கொஞ்ச நேரத்துக்கு முதல் மயூரியும் வந்திருந்தவ. உன்னை அங்காலுபக்கம் காணேல்லயாம் ஏதும் சுகயீனமோ என்று பார்க்க வந்தவ. ஓமன அம்மா இப்ப கொஞ்சம் வேலைகள் கூட அதுதான் அங்காலுபக்கம் போகேல்ல. எனக்குத் தெரிந்த ஆட்கள் இந்த மோட்டார் சைக்கிளை வச்சு பாவிக்கச்சொல்லி தந்திருக்கினம் என்று சொல்லி விட்டு கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறான். அது அவன் கிராமசேவகர் நியமனத்துக்கான கடிதம். அந்த நல்ல செய்தியை தாய் தகப்பனிடம் சொல்லிவிட்டு நாளைக்கு அரசு விதானையிடம் சென்று அதற்குரிய சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். இனி நான் கிராமசேவகர் அம்மா என்று சொல்லியபடி பக்கப் பெட்டியைத் திறந்து பையை எடுத்து தாய்க்கு அஞ்சலா தந்த பொருட்களை எடுத்துக் குடுக்கும்போது அங்கு அவன் அஞ்சலாவிடம் குடுத்த பணப்பை இருக்கின்றது. அஞ்சலா நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் என்று கண்களை மூடி சொல்லிக் கொள்கிறான். சரியம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நேராக கடைத்தெருவுக்கு செல்கிறான். அங்கு ஒரு கடைக்குள் சென்று தொலைபேசி வாங்கி சுந்துவுக்கு போன் செய்ய சிறிது நேரத்தில் சுந்துவுக்கு தகவல் போய் அவன் வந்து தொடர்பு கொள்கிறான். அவனிடம் வைத்தி வீட்டில் பணம் வாங்கியதில் இருந்து இன்று தனக்கு வேலை கிடைத்தது வரை சொல்கிறான்.சுந்துவும் தான் கல்யாணத்துக்கு ஒரு கிழமைக்கு முன் வருவதாகச் சொல்கிறான். பின் அங்கு ஒரு புடவைக்கு கடைக்கு சென்று சில பல புடவைகள்,வேட்டிகள், காற்சட்டை சேர்ட்டுகள் என்று எல்லோரையும் நினைத்து தனித்தனியாக பார்சல் பண்ணி எடுத்துக் கொள்கிறான். இப்பொழுது கையில் நிறையப் பணம் இருக்கின்றது அத்துடன் வேலையும் கிடைத்திருக்கு.அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியவில்லை. வெளியே வரும்போது அங்குள்ள பொம்மை அணிந்திருந்த சுடிதாரைப் பார்த்ததும் அஞ்சலாவின் நினைவு வர அவளுக்கு இது மிகவும் அழகாய் இருக்கும் என்று நினைத்து அதோடு அவள் தாய் தந்தைக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கிக் கொள்கிறான். பின் செருப்புக்கு கடைக்கு சென்று நல்ல நல்ல செருப்புகள் மற்றும் பாட்டா செருப்புகள், இனிப்புகள் சொக்கிலேட் எல்லாம் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தாயிடம் சேலைகள் வேட்டிகள் இருக்கும் பார்சலைக் குடுத்து விட்டு அஞ்சலா வீட்டுக்கு வருகிறான். அப்போது அஞ்சலா திண்ணையில் இருந்தவள் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் எதோ நினைவில் வைத்தி என்று நினைத்து ஓடிவந்து கேட்டைத் திறக்கிறாள். அங்கு சைக்கிளுடன் வாமனைக் கண்டதும் ஒரு நிமிடம் தனது செயலை நினைத்து வெட்கம் வருகிறது. வாமனும் சைக்கிளை ஸ்ராண்டில் நிப்பாட்டி விட்டு என்ன சிரிக்கிறீங்கள் என்று கேட்டுக்கொண்டே ஒரு பார்சலைக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். அவளும் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு அதை வாங்கி அவன் முன்பே திறந்து பார்க்கிறாள். அதில் வேட்டி சேலைகளுடன் ஒரு அழகான சுடிதாரும் பொன்னிற வாருடன் ஹீல்ஸ் வைத்த செருப்பும் இருக்கிறது. அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. இப்படி ஒரு பரிசு இதுநாள் வரை எனக்கு யாரும் தந்ததில்லை. நீ எனக்குத் தந்தது பெரிதில்லை என் பெற்றோரையும் நினைத்து வாங்கிக் கொண்டு வந்தது என்னை என்னவோ செய்யிறதெடா ......சீ ....போடா....என்னை கொஞ்சம் தனியா விடுடா....நிறைய அழவேனும் போல் இருக்குடா. அந் நிலையிலும் அவள் உன் பெற்றோருக்கும் உடுப்புகள் எடுத்தனியாடா என்று கேட்க ....வாமனும் ஓம் அவைக்கும் எடுத்து அங்கேயும் குடுத்து விட்டுத்தான் வருகிறேன். பின் அவன் அவளை நெருங்கிச் சென்று அவளது கைகளை எடுத்து சிறிது நேரம் தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்திருந்து விட்டு எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வருகிறான்........! 🦚..........மயில் ஆடும்.......... 13.
  14. மயிலிறகு......... 12. சில நாட்களாக வாமன் மயிலம்மா வீட்டுப் பக்கம் போகவில்லை.அவனுக்கு அதிகமான வேலைப்பளுவும் ஒரு காரணம்.அன்று அரசு விதானையுடன் சென்று இரு சகோதரர்களுக்கான எல்லைப் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அவர்கள் கோழி அடித்து விருந்து வைக்க சாப்பிட்டுவிட்டு இருவரும் விதானையாரின் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறார்கள்.அப்போது விதானையார் ஒரு பேரூந்து தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி இந்தாடா வாமு நான் கனநாளாய் உனக்கு காசு தரவில்லை, இப்ப இதை வைத்துக்கொள் பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்.இப்பவெல்லாம் நீ தனியாக சென்று வேலைகள் செய்யுமளவு தேறி விட்டாய். அநேகமாய் இந்த வாரத்தில் கூட உனக்கு வேலைக்கு கடிதம் வந்து விடும். நீ தினமும் தபால்காரரை விசாரித்துப் பார்.இப்ப எனக்கு இங்கால சில வேலைகள் இருக்கு, நீ பேரூந்தில் வீட்டுக்குப் போ என்று சொல்லி விட்டுப் போகிறார். அவன் பேரூந்தை எதிர்பாராமல் வழியில் வரும் சைக்கிள்களிலோ ட்ராக்டர்களிலோ செல்லலாம் என்று நினைத்து நடந்து வருகிறான். அப்படி வரும் வழியில் வட்டி வைத்தி வீட்டை கடக்கையில் ஒரு பெண் ஓடிவந்து அவனை மறித்து அண்ணா உங்களை அம்மா ஒருக்கால் வந்துட்டுப் போகட்டாம் என்று சொல்ல, அவள் அன்று அந்த அம்மா மயங்கி விழுந்த போது ஓடிவந்து ஒத்தாசை செய்த பெண் என்று கண்டு என்ன மோட்டார் வேலை செய்யவில்லையா என்று கேட்கிறான். சீச்சீ அதெலாம் நல்லா வேலை செய்யுது நீங்கள் வாங்கோ என்று சொல்லி முன்னாள் போகிறாள். வீட்டுக்கு வர கேட்டுக்கு அருகில் அஞ்சலா நிக்கிறாள். என்ன பிறகு உன்னை இந்தப் பக்கம் காணேல்ல....சரி....சரி ...உள்ளேவா உனக்கு நன்றி சொல்லத்தான் கூப்பிட்டானான். வேறு ஒன்றுமில்லை என்பதை நமுட்டுச்சிரிப்புடன் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறாள். எதுக்கு நன்றி......உண்மையிலேயே நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இக்கட்டான நேரத்தில் நீங்கள் செய்த உதவி பேருதவி. (இருவரும் திண்ணையில் அமர்கிறார்கள். அவளின் தாயார் அருகில் கால்களை நீட்டியபடி வெற்றிலை இடித்து கொண்டிருக்கிறார்). அதை விடுடா ....அதெல்லாம் தொழில். நான் ஒன்றும் சும்மா செய்யவில்லை.வட்டிக்குத்தான் தந்தனான்.இன்னும் காணி உறுதி என்னிடம்தான் இருக்கு மறந்திடாத. இது அதில்லை.அண்டைக்கு நீ வரப்பில் மயங்கி விழுந்த என்ர அம்மாவை தகுந்த நேரத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டதாக இவளும் அம்மாவும் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.அது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா. அது நான் என்ர அம்மாவாய் இருந்தால் செய்ய மாட்டனா, யாராய் இருந்தாலும் அதை செய்திருப்பார்கள். அவள் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்து எடி கவிதா, உள்ளே போய் பால் தேத்தண்ணியும் போட்டுகொண்டு பனங்காய் பணியாரத்தையும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வா என்று சொல்ல அவளும் உள்ளே போகிறாள். அம்மா சுகமாக இருக்கிறாவா .....ஓம் இந்த நீரிழிவு வருத்தத்தால கொஞ்சம் கவனமாய் அவவைப் பார்த்துக் கொள்ள வேணும்.ஆனாலும் மனுசி சொல்வழி கேட்கிறேல்ல....ஒளிச்சு வைச்சு இனிப்புகள் சாப்பிடுது. அப்போது வீதியால் ஒரு நாய் போக மோட்டார் சைக்கிள் அருகில் படுத்திருந்த ஜிம்மி ஆக்ரோஷமாய் குரைக்கிறது. ஜிம்மி சும்மா இரு என்று அடக்கிய அஞ்சலா இதுக்கொன்றும் குறைச்சலில்லை அவரைமாதிரி குரைக்கத்தான் தெரியும் ஒரு சதத்துக்கு பிரயோசனமில்லை என்று சொல்ல அது புரிந்ததுபோல் எழுந்து வாலை பின்னங் கால்களுக்குள் மடக்கிக் கொண்டு அப்பால் போகிறது. திண்ணையில் இருந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்த வாமன் நீங்கள் இது ஓட்டுவீங்களா என்று கேட்கிறான்...... இல்லை சைக்கிள் ஓட்டுவன்.அதில்தான் பாடசாலைக்கும் போய் வந்தனான். உன்ர வேலைகள் எல்லாம் எப்படிப் போகுது......இப்பவும் வேலையாலதான் வருகிறேன். விதானையார் என்னை பேரூந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுட்டுப் போகிறார். பஸ்ஸை காணேல்ல வந்தால் மறித்து ஏறுவம் என்றுதான் நடந்து வந்தனான். அப்ப இண்டைக்கு உனக்கு நல்ல விருந்து சாப்பாடும் தண்ணியும் கிடைத்திருக்கும் இல்லையா. ....ம்.....அதெல்லாம் கிடைத்ததுதான், ஆனால் இப்ப சாராயம் குடிக்க வெறுக்குது. சும்மா அவங்களுக்காக கொஞ்சம் எடுத்தனான். பின் அந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தபடி நீங்கள் இதை விக்கிற எண்ணமிருந்தால் எனக்குத் தருவீங்களா என்று கேட்கிறான். எனக்கு அதை விக்கிற யோசனையில்லை.என்ன இருந்தாலும் அவர் பாவிச்சது.அவற்ர பிள்ளைகளும் இருக்கினம்.அண்டைக்கு ஒருநாள் சரியான மழை அவர் நல்ல வெறியில இந்த சைக்கிளோட சறுக்குப்பட்டு பள்ளத்துக்க விழுந்து எழும்ப முடியாமல் அப்படியே இறந்து போனார்.அப்போது இரவுநேரம் அருகில் யாரும் இல்லை. இதுவும் சேதமாயிட்டுது. பின் உதை அப்படியே கொண்டுவந்து திண்ணையில் விட்டதுதான்.அப்படியே நிக்குது. அதுக்கில்லை ஓரு மோட்டார் சைக்கிள் வாங்கத்தான் பார்த்துத் திரியிறன். ஒன்றும் தோதாக அம்பிடவில்லை. அதுவும் இப்ப வேலையும் அதிகம். அத்துடன் விரைவில் கிராமசேவகர் வேலையும் கிடைத்து விடும்.வெறும் சைக்கிளுடன் அந்த வேலை பார்க்கிறது சிரமம். அதுதான் கேட்டனான். ஓ......இப்பதான் ஞாபகம் வருது, நீ மோட்டார் சைக்கிள் வாங்க வைத்திருந்த காசைத்தான் உன்ர நண்பனுக்கு குடுத்ததாக அக்கா சொன்னவ. உண்மைதான் .....நானும் சுந்துவும் சிறுவயதில் இருந்தே அவ்வளவு பிரியமான நண்பர்கள். அவனளவு எனக்கு வேறு நண்பர்கள் கிடையாது.அப்படித்தான் அவனுக்கும். அவனது படிப்பை விட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பெரிதில்லை. (அப்போது கவிதா மூவருக்கும் பால்தேநீரும் பணியாரத் தட்டையும் கொண்டு வந்து வைத்து சீனி போடாத தேநீரை ஆச்சியின் அருகில் வைத்த விட்டுப் போகிறாள்). சரி...நீ முதல்ல அதை எடுத்து திருத்தி கொஞ்சநாள் ஓடிப்பார். பின்பு உனக்குப் பிடித்திருந்தால் நான் அக்காவிடம் கதைத்து விட்டு பிறகு விலையைப் பேசிக்கொள்ளலாம். அவன் கண்கள் மின்ன இப்பவே எடுக்கவா........ ....ம் பாரேன் அவற்ரை அவசரத்தை...... சரி போய் எடு. அவன் எழுந்து சென்று அந்த ஹோண்டா 200 மொடல் மோட்டார் சைக்கிளை செல்லமாய் வருடிவிட்டு மெதுவாக உருட்டிக்கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தி விட்டு சாவியைப் போட்டு பட்டனை அமுக்கினால் அது இயங்கவில்லை. அதை உதைத்துப் பார்த்தும் ம்கூம்..... பின் அவன் அதன் பெட்டியைத் திறந்து பார்க்க அதற்குள் சாராயப்போத்தல்,மிக்ஸர் பைக்கட், ரெண்டு ஜட்டி, ஒரு வேட்டி துவாய் அவற்றின் அடியில் சில சாவிகள் குறடு,திருப்புளியுடன் சில தாள்காசுகள் சில்லறைகள் என்று இருக்கின்றன.அவன் ஆயுதங்களை தவிர்த்து ஏனையவற்றை எடுத்து அவளிடம் தருகிறான். அவளும் அவைகளை வாங்கிக் கொண்டு இன்னும் எந்தெந்தக் கடங்காரங்களின் வீட்டில் ஜட்டிகளும் வேட்டிகளும் கிடக்குதோ தெரியாது என்று சொல்லியபடி அவற்றை வாங்கிக் கொண்டு உள்ளே போகிறாள்........! 🦚 மயில் ஆடும்.............. 12.
  15. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/
  16. கேட்ட கேள்விக்கு பதில் வராமல் சுற்றி வளைத்து பதில் சொல்வதை பார்த்திருப்பீர்கள். சொந்த மக்களுக்கே (சிங்கள) இந்த நிலைமை எனில் நாம் எம்மாத்திரம்.
  17. மனிதரின் சிந்தனைகள் சிவப்பாய் இருப்பதால் அது கொல்லும் , மரங்களின் வேர்கள் பச்சையாய் இருப்பதால் அது வெல்லும்........! 😁
  18. இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாகச் சரியும் வரை மையத்தை வலுவாக்கிக் கொண்டே செல்வார்கள். மையத்தின் எடை தாளாமல்தான் பெரும்பாலான அமைப்புகள் சரிகின்றன. சாமானியர் என இங்கே சொல்லப்படுவதில் வாழ்க்கையின் எல்லா தரப்பினரும் உண்டு.மறு சொல்லே இல்லாமல் குடும்பத்தை கட்டியாளும் குடும்பத்தலைவரை மையமாகக் கொண்ட குடும்பங்கள் வலுவானவையாக இருக்கும் என நம்பும் கோடிக்கணக்கானவர்கள் இங்குண்டு. அதே நம்பிக்கையுடன் தேசத்தை ஆட்சி செய்பவர்களும் உண்டு. சிறு வணிக நிறுவனங்கள் முதல் பெரிய நிர்வாக அமைப்புகள் வரை, சிறிய சேவை அமைப்புகள் முதல் மதங்கள் வரை இந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல என்பதை நாம் கண்கூடாக நம் குடும்பங்களிலேயே காணலாம். வலுவான குடும்பத்தலைவரால் நடத்தப்படும் குடும்பங்களில் மிக எளிதில் பூசல்கள் உருவாகின்றன.பிளவுகள் தோன்றுகின்றன. அனைவருக்கும் இடமுள்ள நெகிழ்வான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கின்றன. மிக மிக ஆற்றல் கொண்ட மையம் கொண்டிருந்த தேசங்கள் ஒரு நூற்றாண்டைக்கூட கடந்ததில்லை. அண்மைக்கால உதாரணம் சோவியத் ருஷ்யா. அப்படியே பின்னுக்குச் சென்றால் ஹிட்லரின் ஜெர்மனி, பிரிட்டிஷ் பேரரசு என, ஒவ்வொரு உதாரணமும் நம்மை திகைப்பிலாழ்த்தும். அதற்கான காரணம் மிக மிக எளிதானது. அது இயற்கையின் விதி. இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும் பிரிந்து பிரிந்துதான் வளர்கின்றன. ஒன்றுடனொன்று போட்டியிட்டு மோதி நிலைகொள்கின்றன. மிக வலுவான ஒன்றுக்கு அதேயளவு நிகரான வலிமைகொண்ட ஒன்று உடனே உருவாகிவிடுகிறது. அந்த முரண்பாடுதான் இயற்கை இயங்கும் வழி. அதை மேலைச்சிந்தனை dialectics என்கிறது. இந்திய சிந்தனைமரபில் யோகாத்ம தரிசனம் என்பது அதுவே என நடராஜ குரு அவருடைய நூல்களில் விளக்குகிறார். வலுவான மையத்தை உருவகிப்பவர்கள் எதிர்ப்பே இல்லாத ஒரு புள்ளியை கற்பனை செய்கிறார்கள். அப்படியொன்றுக்கு இயற்கையில் இடமே இல்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இன்று இங்கே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் அப்படி ஒரு மையப்புள்ளிக்கு இந்து மெய்யியலில் எந்த இடமும் இல்லை என்பதை அறிந்திருப்பதில்லை. இந்து மெய்யியலில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி உருவகிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் எல்லா தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படும் நிகரான ஆற்றல்கொண்ட சக்திகள் உண்டு. முழுமுதல் (absolute) என உருவகிக்கப்படுவது வேதாந்திகள் சொல்லும் பிரம்மம் மட்டுமே. அது தொடக்கமும் முடிவும் அற்றது. அது அன்றி வேறேதும் இல்லை. ஆனால் அந்நிலையில் அதற்குச் செயல்தன்மையே கிடையாது. அது செயல்வடிவம் பெறவேண்டும் என்றால் அதற்குச் சமானமான எதிர்விசை தேவை. அந்த விசையாக மாயையை உருவகிக்கிறது வேதாந்தம். வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி ரிக்வேதத்தில் உள்ள சிருஷ்டிகீதம். அது அனைத்தையும் இணைப்பதும், அனைத்துமாக ஆவதுமான ஒரு பிரம்மத்தையே உருவகிக்கிறது. ஒரு பதிலை முன்வைப்பதில்லை, எத்தனை விளக்கினாலும் முழுமையாக சொல்லிவிட முடியாத ஒரு கேள்வியையே முன்வைக்கிறது. மையத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக விரிந்து விரிந்து செல்லும் ஒரு பயணத்தை தொடங்கி வைக்கிறது. அந்தப் பயணமே உபநிடதங்களில் விரிந்தது. ஒன்றை இன்னொன்று கடுமையாக மறுக்கும் பல்வேறு ஞானவழிகளை உருவாக்கியது. தெற்கே சைவசித்தாந்தம் வரை அது வளர்ச்சி அடைந்தது. இந்து மெய்ஞானத்திற்கு அது நிலைகொள்ளும் மையம் என ஏதுமில்லை. ஏனென்றால் அது ஓர் அமைப்பு அல்ல. அது ஒரு தேடல். பலநூறு ஞானப்பயணங்கள் நிகழும் களம். எல்லா பாதையும் சென்றடைவது ஓரிடத்தையே என்று உபநிடதங்கள் கூறின. இந்தியாவின் பிரதமர் ராமர்கோயில் கட்டுவது 130 கோடி மக்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகிறார். அந்த கோடிகளில் நான் ஒருவன் அல்ல. எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனக்கு பதற்றமும் வருத்தமும்தான் உருவாகிறது. இந்த பூசல் தொடங்கிய காலம் முதலே இதைத்தான் எழுதி வருகிறேன். நான் சொல்வது அரசியல் அல்ல. ஓர் உறுதியான இந்துவாக, வேதாந்தியாக நின்று இதைச் சொல்கிறேன். இது இந்துமெய்ஞானத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு. நீண்டகால அளவில் இது அழிவையே உருவாக்கும். இந்த ஆலயத்தை இந்து மதத்தின் ஒற்றை மையமாக உருவகிக்கிறார்கள். இந்துதேசியத்தின் மிகமிக வலுவான ஒரு புள்ளியாக இதை நிறுவுகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொருவரும் அதை ஏற்றாகவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதைத்தான் பிரதமரின் சொற்கள் காட்டுகின்றன. அந்த மனநிலையில் இருப்பது இந்தியத்தன்மை அல்ல, இந்துத்தன்மையும் அல்ல. இது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் உருவாகிவந்த பண்பாட்டுத் தேசியவாத மனநிலை. அதை இங்கே நகல் எடுக்கிறார்கள். அதற்குரிய பண்பாட்டு அம்சத்தை மட்டும் இங்கே மதத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அதில் முதன்மையானது ராமர் அவ்வளவுதான். பழைய மன்னராட்சிகள் கூட்டு அதிகாரம் கொண்டவை. பிரபுக்கள் மற்றும் சிற்றரசர்களின் அதிகாரத்தை நிர்வகிக்கும் மையம்தான் அன்றைய மன்னரின் சபை. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து மன்னர் முற்றதிகாரம் கொண்டவராக ஆனார். அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் உருவாகி நவீன அரசுகள் அமைந்தன. அந்த அரசுகள் வலுவான ஆட்சிமையத்தை உருவாக்கிக்கொண்டன. அந்த மையத்தை உருவாக்கிக்கொள்ள அவை கண்டடைந்த வழிதான் பண்பாட்டுத்தேசியம். அது சர்வாதிகாரிகளை உருவாக்கியது. உலக வரலாற்றில் மதஅரசுகளும் மன்னர் அரசுகளும் உருவாக்கியதை விடப்பெரிய அழிவை அவைதான் உருவாக்கின. அந்த அழிவைக் கண்டபின்னர்தான் ஐரோப்பா நெகிழ்வான மையம் கொண்ட சமூகங்களையும் அரசையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அரசியல் என்பது முழுக்க முழுக்க பொருளியல் சார்ந்தது என்றும் அதில் மதம், இனம், மொழி போன்ற பண்பாட்டுக்கூறுகளுக்கு இடமில்லை என்றும் வகுத்துக்கொண்டது. இந்தியாவில் நாம் 1947ல் தொடங்கியபோதே ஐரோப்பாவில் நிகழ்ந்த அழிவுகளில் இருந்தும் இங்கே நிகழ்ந்த மதக்கலவரங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு நெகிழ்வான, அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய தேசியத்தையும் அரசையும் உருவாக்கிக்கொண்டோம். இன்று மூர்க்கமாக திரும்பிச்சென்று பழைய ஐரோப்பிய பண்பாட்டுத்தேசியவாதத்தை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். உறுதியான அதிகார மையங்களை உருவாக்க பண்பாட்டை பயன்படுத்தும் வழி என்பது பண்பாட்டுக்கூறுகளை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்குவது. கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்களை அதன்மேல் ஏற்றுவது. பண்பாட்டு தேசியவாதிகள் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பாவில் அவற்றுக்கு மாபெரும் சிலைகள், கட்டிடங்கள் போன்ற வடிவங்களை உருவாக்கினர். உச்சகட்ட பிரச்சாரங்கள் வழியாக மிகையுணர்ச்சிகளை பரப்பினர். அந்த உணர்ச்சிவேகத்தை பயன்படுத்தி அதிகாரங்களை அடைந்தனர். அந்த அதிகாரத்தின் முகங்களாக தனிமனிதர்கள் தங்களை முன்வைத்தனர். பிஸ்மார்க், முஸோலினி, ஹிட்லர், ஸ்டாலின் அனைவரும் ஒரே வார்ப்புகள் கொண்டவர்களே. அனைவருமே மாபெரும் கட்டிடங்களையும் சிலைகளையும் நிறுவியவர்கள் என்பதை நாம் கவனிக்கவேண்டும். ஏன் சர்வாதிகார மனநிலைகொண்டவர்கள் மிகப்பெரிய கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள்? ஏனென்றால் சர்வாதிகாரிகள் அஞ்சுவது காலம் என்னும் மாபெரும் ஓட்டத்தைத்தான். அது எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு செல்கிறதென அவர்களுக்கு உள்ளூரத்தெரியும். அவர்கள் நிலைத்து நிற்க ஆசைப்படுகிறார்கள். தற்காலிகத்தன்மையை அஞ்சுகிறார்கள். ஆகவே நிலையான எதையவாது உருவாக்க துடிக்கிறார்கள். பட்டேல் சிலை, ராமர் கோயில் எல்லாம் அதன் வெளிப்பாடுகள்தான். அவை உடனடியாக பயனளிக்கும். மக்களின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களை கும்பல்களாக ஆக்கி, அதிகாரத்தை ஈட்டித்தரும். ஆனால் நீண்டகால அளவில் அவை இணையான எதிர்விசைகளை உருவாக்கி அழிவையே அளிக்கும். அதிகாரம் என்பது கண்ணுக்குத்தெரியாத ஒரு புரிந்துணர்வு. ஒவ்வொரு கணமும் நிகழும் பலநூறு ஒப்பந்தங்களின் வழியாக நிகழ்வது. சர்வாதிகாரிகள் அதை கண்கூடான ஓர் அமைப்பாக நிறுவ நினைக்கிறார்கள். சாமானியர் அதை வியந்து பார்க்கவேண்டும், அஞ்சவேண்டும். ஆகவே மாபெரும் கட்டுமானங்களை உருவாக்குகிறார்கள். சொற்கள் அழியும் ஆனால் கல் அழியாமல் நின்றிருக்கும் என கற்பனை செய்துகொள்கிறார்கள். கல் நின்றிருக்கும் என்பது உண்மை. ஆனால் அதிகாரம் அழிந்தபின், அதிகாரம் என்பது அழியும் என்பதற்கான நினைவுச்சின்னமாகவே அந்த கல்லமைப்பு நிலைகொள்ளும். அதையே வரலாறு காட்டுகிறது. இந்த விவாதத்தில் எப்போதும் கேட்கப்படும் வினா, பழைய மன்னராட்சியில் ஆலயங்கள் கட்டப்படவில்லையா என்பது. மன்னராட்சிக்காலம் என்பது தீராத போர்களும் அழிவுகளும் நிகழ்ந்த யுகம். ஒரு மன்னர் உருவாக்கும் ஆலயம் இன்னொரு மன்னரால் அழிக்கப்படும். இருவருமே ஒரே மதத்தினராக இருப்பார்கள். அந்த மதச்சார்பு உருவாக்கிய அழிவைக் கண்டபின்னர்தான் உலகமெங்கும் ஜனநாயகம் உருவாகியது. ஜனநாயகத்திற்கு முதல் எதிரி பெரும்பான்மைவாதம்தான். பெரும்பான்மையினரின் பண்பாட்டை வலியுறுத்துவது நீண்டகால அளவில் அழிவைநோக்கிச் செல்வது. கண்கூடான உதாரணம் ஸ்ரீலங்கா. எழுபது ஆண்டுகளுக்கு முன்பே அங்கே அரசியல் மதஅடிப்படை கொண்டதாக ஆகியது. அதற்கு வித்திட்டவர் ஐரோப்பியர்களிடமிருந்து பௌத்தத்தை கற்றுக்கொண்டவரான அநகாரிக தம்மபாலா என்பவர். அவர் முன்வைத்தது மதத்தை அல்ல, ஐரோப்பிய பாணியில் மதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு தேசியவாதத்தை. பௌத்தம் அரசுமதமாகவே முன்வைக்கப்பட்டது. மதகுருக்களை பணிந்து ஜனநாயகரீதியாக தேர்வுசெய்யப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியேற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்டவர்களாக மதகுருக்கள் மாறினர். அதன் விளைவுகள் முப்பதாண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போர். உயிரழிவு, பொருளியல் பேரழிவு. அந்த மனநிலை மெய்ஞானத்தின் களத்திற்குள் வரும்போது மேலும் அழிவை உருவாக்குவதாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் இங்கே சிதைக்கப்படுவது சில மனிதர்களால் ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நாடு, அரசு போன்ற புறவயமான அமைப்புகள் அல்ல. அவை அழிந்தால் இன்னொருவகையில் உருவாக்கிக்கொள்ள முடியும். இங்கே சிதைவுறுவது நுண்மையான அகவய அமைப்பு. அது பல்லாயிரம் ஆண்டுகளாக தன்னியல்பாக உருவாகி வந்தது. ஞானிகள், கலைஞர்கள், தத்துவசிந்தனையாளர்களால் திரட்டப்பட்டது. நம்மையறியாமலேயே நமக்குள் உருவாகியிருப்பது. அதை இழந்தால் நாம் திரும்ப அடைய முடியாது. வேதாந்தத்தின் அணுகுமுறையில். ராமன் வைணவ மதத்தின் ஒரு தெய்வ உருவகம். வைணவம் இந்து மதப்பிரிவுகளில் ஒன்று மட்டுமே. அந்த தெய்வ உருவகத்திற்கு அதற்குரிய தனித்தன்மைகள் உண்டு. ‘அறத்தின் உருவமான அரசன்‘ என சுருக்கமாக வலியுறுத்தலாம். தொன்றுதொட்டு இருந்துவரும் தந்தைவழிபாடு, அரசன் வழிபாடு ஆகியவை அந்த உருவகத்தில் இணைகின்றன. அந்த உருவகத்தை இந்துமெய்ஞான மரபுகள் அனைத்துக்கும் தலைமையான ஒரு தெய்வவடிவமாக வலியுறுத்துவது என்பது மெய்ஞானத்தேடலின் மற்ற வழிகள் அனைத்தின்மீதுமான ஒடுக்குமுறையாகவே ஆகும். சிவலிங்கம் போன்ற உருவமற்ற உருவம் (அருவுரு) வழிபடப்படும் மதப்பிரிவுகள் இந்து மதத்திற்குள் உண்டு. உருவவழிபாட்டை ஏற்காத வேதாந்தப்பிரிவுகள் உண்டு. அவர்களெல்லாம் ராமனை ஏற்றுக்கொண்டாகவேண்டிய இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் ராமனை மறுப்பதென்பது தண்டனைக்குரிய இறைநிந்தனையாக இங்கே மாற்றப்படலாம். அது மதத்தை ஓர் உறுதியான நிறுவனமாக ஆக்குவதில் கொண்டுசென்று நிறுத்தும். எங்கே அப்படி ஓர் உறுதியான மதமையம் உருவாக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அதற்கு எதிரான உறுதியான குரல்கள் உருவாவதை வரலாறு காட்டுகிறது. அந்த எதிர்க்குரல்களை மதநிந்தனை என்னும் குற்றம்சுமத்தி மையமரபு வேட்டையாடுகிறது. ரத்தம் தோய்ந்த போராக அது உருமாறிவிடுகிறது. அவ்வாறான ஒரு நிலைநோக்கி இன்றைய மையப்படுத்துதல் எதிர்காலத்தில் இந்து மதத்தை கொண்டுசெல்லக்கூடும். வைணவர்கள் தங்கள் தெய்வத்திற்கு என ஓர் ஆலயம் அமைத்துக்கொண்டால் அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி. அவர்கள் ராமனே முழுமுதல்வ்தெய்வம் என்று சொன்னாலும் அதில் பிழையில்லை, அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அரசு அந்த ஆலயத்தை அதிகாரபூர்வமாக அமைத்து, இந்திய தேசத்தின் அனைவரின் வாக்குகளையும் பெற்ற ஆட்சியாளர்களால் அது திறந்து வைக்கப்படும் போதுதான் மையப்படுத்தல் நிகழத்தொடங்குகிறது. ஏனென்றால் இந்து மதத்தின் செயல்பாட்டு முறை என்பது மையப்படுத்துதலுக்கு எதிரானதாகவும், பன்மைத்தன்மை கொண்டதாகவும், உள்விவாதம் கொண்டதாகவும்தான் எப்போதும் இருந்து வந்துள்ளது. சைவம், வைணவம், சாக்தம் ஆகிய மூன்று பெருமதங்கள் இன்று அதற்குள் உள்ளன. வேதாந்தம் என்னும் தூய தத்துவப்பார்வை உள்ளது. இதைத்தவிர பலநூறு சிறுவழிபாட்டு முறைகள் உள்ளன. பலநூறு புதிய புதிய தத்துவப்பார்வைகள் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இன்னொன்றை மறுப்பதும் விமர்சிப்பதுமாகும். மையம் என ஒன்று திரண்டுவந்தாலே ஒடுக்குமுறை தொடங்கும். மிகச்சிறந்த உதாரண நிகழ்வு ஒன்றுண்டு. இந்தியாவில் ராமன் ஒரே வகையாக எங்கும் சித்தரிக்கப்படவில்லை. வட இந்திய ராமன் அங்கே புகழ்பெற்றிருக்கும் வைணவ பக்தி மரபான புஷ்டிமார்க்கத்தால் உருவாக்கப்பட்ட உருவகம். தென்னிந்தியாவில் அப்படி அல்ல. கேரளத்தின் பெருங்கவிஞரும், நாராயண குருவின் வேதாந்த மரபில் வந்தவருமான குமாரன் ஆசான் எழுதிய‘சிந்தனையில் ஆழ்ந்த சீதை’ என்னும் குறுகாவியம் மிகப்புகழ்பெற்றது. பல ஆண்டுகளாக கல்விநிலையங்களில் பயிலப்படுவது. அதில் சீதை ராமனை அரசனாக மட்டுமே நிலைகொண்டு கணவனாகவும் தந்தையாகவும் கடமையை மறந்தவன் என விமர்சிக்கிறாள். செப்டம்பர் 2015ல் மாத்ருபூமி நாளிதழில் அந்தக் கவிதையை பற்றி எம்.எம்.பஷீர் என்னும் புகழ்பெற்ற கல்வியாளர் ஒரு கட்டுரை எழுதியபோது கேரளத்தில் இந்துத்துவ ஆதரவாளர்களால் அவர் வேட்டையாடப்பட்டார். அந்த இதழ் அக்கட்டுரையை திரும்பப்பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோரியது. (நான் அந்நிகழ்வில் கடுமையாக எதிர்வினையாற்றி பஷீருக்கு ஆதரவாக எழுதினேன்) அது உண்மையில் வேதாந்தத்தின்மேல், நாராயண குருவைப்போன்ற ஞானிகள்மேல் நிகழ்த்தப்பட்ட நேரடித்தாக்குதல். இன்றைய அரசுமதம் என்னும் போக்கு சென்று சேரக்கூடிய இடம் அதுதான். இந்து மெய்ஞானத்தின் உச்சகாகவும் இந்து மதத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் திகழும் வேதாந்தத்தை எதிரியாக்கி அழிக்க முயல்வது. அது இந்துமதத்தையே அழிப்பது. ஆகவே ஒவ்வொரு இந்துவும் எதிர்க்கவேண்டிய ஒரு செயல் இவர்கள் செய்துகொண்டிருப்பது. https://www.jeyamohan.in/197947/
  19. பட மூலாதாரம்,GOFUNDME கட்டுரை தகவல் எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் 'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார். கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அலெக்சாண்டர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும், வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அத்துடன் ஒரு சுய சரிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார். "பால் அலெக்சாண்டர், 'தி மேன் இன் அயர்ன் லங்'(The Man in Iron Lung) நேற்று காலமானார்" என்று நிதி திரட்டும் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. 'பால் ஒரு அற்புதமான மனிதர்' பட மூலாதாரம்,PHILIP ALEXANDER படக்குறிப்பு, பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர். "இரும்பு சிலிண்டர் உதவியோடு வாழ்ந்த பால், கல்லூரிக்குச் சென்றார், ஒரு வழக்கறிஞரானார், மேலும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். பால் ஒரு அற்புதமான முன்மாதிரி," என்கிறார் பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர். பால் அலெக்சாண்டர் பற்றிக் குறிப்பிடுகையில் "எப்போதுமே பிறரை புன்னகையுடன் வரவேற்கும் அன்பான நபர் அவர்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் பாலின் புன்னகை புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். "என் சகோதரர் பால் என்னைப் பொறுத்தவரையில் ஓர் இயல்பான மனிதர். அனைத்து சகோதரர்களைப் போன்று நாங்களும் சண்டையிடுவோம், விளையாடினோம், நேசித்தோம், ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றோம். அவர் ஒரு இயல்பான சகோதரர், நான் அவரின் நிலை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை," என்று பிலிப் பிபிசியிடம் கூறினார். நோயின் தாக்கத்தால், உணவு உண்பது உட்பட சுயமாக எந்த அன்றாடப் பணிகளையும் செய்ய முடியாமல் போன சூழலிலும், தனது சகோதரர் தன்னிறைவு பெற்ற மனிதராக வாழ்ந்ததாக பிலிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் "அவரது ராஜ்ஜியத்தில் அவரே ராஜா. அவருக்கு உதவும் நபர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் உதவுபவர்," என பிலிப் கூறினார். கடந்த சில வாரங்களில் பாலின் உடல்நிலை மோசமானது. அவரின் இறுதி நாட்களை தன் சகோதரருடன் கழித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம்களை பகிர்ந்து கொண்டனர். "அவரது வாழ்வின் இறுதி தருணங்களில் அவருடன் இருப்பது என் பாக்கியம்" என்று பிலிப் குறிப்பிட்டார். உலோக உருளைக்குள் வாழ்ந்தவர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால் அலெக்சாண்டர் 1952இல் நோய்வாய்ப்பட்டபோது, அவரது சொந்த ஊரான டல்லாஸில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் போலியோ பாதிப்பால் அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை. அதன் விளைவாக இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் - ஒரு உலோக உருளை அவரது கழுத்து வரை உடலைச் சுற்றிப் பொருத்தப்பட்டது. அந்த உலோக உருளைக்குள்தான் அவர்தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. செயற்கை இரும்பு நுரையீரலை பால் 'பழைய இரும்புக் குதிரை' என்றே குறிப்பிடுவார். அந்த பழைய இரும்புக் குதிரையால்தான் அவர் சுவாசித்தார். பெல்லோஸ் என்னும் உபகரணம் சிலிண்டரில் இருந்து காற்றை உறிஞ்சி, அவரது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை உள்வாங்கச் செய்தது. காற்று மீண்டும் உள்ளே நுழையும்போது, அதே செயல்முறை தலைகீழாக நிகழ்ந்து அவரது நுரையீரலைச் சுருங்க செய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்கவும் கற்றுக்கொண்டார், இதனால் அவர் குறுகிய காலத்திற்கு அந்த இரும்பு நுரையீரலை விட்டு வெளியேற முடிந்தது. இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்ட பெரும்பாலான போலியோ போராளிகள் போல, அவரும் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். 1950களில் போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மேற்கத்திய நாடுகளில் போலியோவை ஒழித்த பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார். கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1984இல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். "நான் என் வாழ்க்கையில் ஏதேனும் செய்யப் போகிறேன் என்றால், அது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன்’’ என்று பால் 2020இல் கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறினார். அதே ஆண்டு, அவர் தன் சுயசரிதை நூலையும் வெளியிட்டார், நண்பரின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் குச்சியைப் பயன்படுத்தி ஒரு விசைப் பலகையில் தட்டச்சு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதி முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாலின் சகோதரர் பிலிப், அந்த சுயசரிதை புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரது சகோதரர் எவ்வளவு உத்வேகம் அளித்து முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்ததாகக் கூறினார். மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் 1960களில் இரும்பு நுரையீரல் மருத்துவ முறை வழக்கற்றுப் போய்விட்டது, அதற்குப் பதிலாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அலெக்சாண்டர் இரும்பு சிலிண்டருக்கு பழகிவிட்டதால் அந்த உருளையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். இரும்பு நுரையீரலில் அதிக காலம் வாழ்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அவர் அங்கீகரிக்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/czdzkp5452go
  20. இயற்கையோடு இணைந்திருப்பதனால் சிலவற்றின் அருமைகள் சிலருக்கு விளங்குவதில்லை..✍️
  21. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின்னர் எவர் எவர் என்ன செய்தார் சொன்னார் என்பதெல்லாம் யாழில் கொட்டிக் கிடக்கிறது. அவர் ஒரு தனி நபர் என்று பெரிய பொறுப்பொன்றை மிகவும் லாவகரமாக புதைத்து விட்டு செல்லும் கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட விரும்பினேன். நன்றி.
  22. https://www.virakesari.lk/article/74368 பிகு: சும் இன் பேட்டி தமிழர் சார்ந்த ஊடகங்களிலே வெளிவரும் அதே போல் சும் இற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ அமெரிக்க பிரித்தானிய அதிபர்கள் குரல் கொடுக்கப் போவதில்லை.
  23. P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later. நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀 வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம். சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர் LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். https://www.yahoo.com/entertainment/p-e-teacher-23-felt-201013198.html
  24. ஏராளன், இன்புழுவன்சா வைரசுக்கெதிராக தடுப்பூசி (flu shot) இருக்கிறது, மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்க முதல் இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழங்குவர். தொற்றிலிருந்து 50% பாதுகாப்புக் கிடைக்கும் இந்த தடுப்பூசியால். மிச்ச 50% பேருக்கு தீவிரம் குறைந்த தொற்று ஏற்படும், எனவே உயிர்காக்கும், நோய்த்தீவிரம் குறைக்கும் தடுப்பூசியாக இன்புழுவன்சா தடுப்பூசி விளங்குகிறது. இலங்கையில் இது பயன்படுத்தப் படுகிறதா எனத் தெரியவில்லை. உங்கள் மருத்துவர் சொன்ன தடுப்பூசி Streptococcus pneumoniae என்ற பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். இதுவா எனக் கேட்டுப் பாருங்கள். https://www.cdc.gov/pneumococcal/index.html
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே சிக்கலை அறிய முடியும் 1 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் சிறுநீரகம் உடலின் ஒரு முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் மூலம் தான் நம் உடலில் திரவ கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான ரத்தம் தொடர்ந்து பரவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான நீர், சிறுநீரகம் மூலம் வடிகட்டப்பட்டு அது சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்படுகிறது. இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன. “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்”-2017 எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஒன்பதாவது முக்கிய காரணமாகும். இந்நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது ஆகியவையாகும். ’நேச்சர்’ இதழின் (Nature) பகுப்பாய்வின்படி, உலகில் 6.97 கோடி பேர் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1.15 கோடி பேர் இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2010-13-இல், சிறுநீரக செயலிழப்பு 15-69 வயதுடையவர்களிடையே 2.9 சதவீத இறப்புகளுக்கு காரணமாகும். இது 2001-03-ஐ விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுநீரக செயலிழப்பு இறப்புகளுக்கு நீரிழிவு நோய் மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD-Chronic kidney disease) 8-17 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுள் சுமார் 10-20 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரகத்திற்கும் சிறுநீருக்கும் என்ன தொடர்பு? இந்த நோய்க்கான காரணங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள சிறுநீரக மருத்துவர் சித்தார்த் ஜெயினிடம் பேசினோம். சிறுநீருக்கும் சிறுநீரகத்துக்கும் உள்ள தொடர்பை அவர் விளக்குகிறார். "உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீர் வாயிலாக சிறுநீரகம் நீக்குகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்ற கழிவுகளை அகற்றுவதாகும். சிறுநீரின் உதவியுடன் இதைச் செய்கிறது" என்றார். சிறுநீரகம் நமது உடலின் ஒரு வடிகட்டி அமைப்பு. சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. "சிறுநீரகத்தின் செயல்பாடு சிறுநீரின் உதவியுடன் உடலில் இருந்து அதிகப்படியான வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்றுவதாகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வளர்சிதை மாற்ற பொருட்களை சிறுநீரகம் நீக்குகிறது" என்று அவர் விளக்குகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது. புரோட்டினூரியா என்றால் என்ன? புரோட்டினூரியா (சிறுநீரில் புரதத்தின் குறிப்பிடத்தக்க இருப்பு) பற்றி மருத்துவர் சித்தார்த் ஜெயின் விரிவாக விளக்குகிறார். “ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலும் சிறுநீரின் மூலம் சில அளவு புரதத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த புரதம் உடலில் இருந்து அசாதாரண அளவில் வெளியேற்றப்படும்போது, அது ஆபத்தானது மற்றும் இந்த கசிவு புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். "புரோட்டீனூரியா உற்பத்திக்கு மிகவும் பொதுவான காரணம் நீரிழிவு நோய். ஒருவருக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால், அதிகப்படியான புரதம் சிறுநீரில் கசிகிறது" என்றார், மருத்துவர் சித்தார்த். "இதனால் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முதல் அறிகுறி புரோட்டினூரியா ஆகும்" என்றார். புரோட்டினூரியாவின் பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிற நோய்கள். புரோட்டினூரியாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், "சிறுநீர் நுரையுடன் இருப்பதாக உணர்ந்தால், அது புரோட்டினூரியாவின் அறிகுறியாகும்." புரோட்டினூரியாவின் மேம்பட்ட நிலைகளில், நோயாளிகள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி அல்லது வயிற்று தொற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். இந்த நோய்க்கான பிற காரணங்கள் ரத்த அழுத்தம் மற்றும் பிற சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. சிறுநீரின் நிறத்தை வைத்தே சிறுநீரகத்தில் உள்ள பிரச்னையை தெரிந்து கொள்வது எப்படி? சிறுநீரில் நீர், யூரியா மற்றும் உப்புகள் உள்ளன. அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடைக்கப்படும்போது யூரியா கல்லீரலில் உற்பத்தியாகிறது. சிறுநீரின் மூலம் வெளியேற்றப்படும் முக்கிய கழிவுப்பொருள் யூரியாவாகும். ஏனெனில், அது சிறுநீரகத்தால் மீண்டும் உறிஞ்சப்படாது. உங்கள் ரத்தத்தில் இருந்து வடிகட்டிய அதிகப்படியான நீர் மற்றும் கழிவுகள்தான் சிறுநீர் என, ’ஹார்வர்ட் ஹெல்த்’ கூறுகிறது. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு வரை இருக்கும். அதன் செறிவு, நீரில் உள்ள கழிவுகளின் அளவைப் பொறுத்தது. இது, நீங்கள் எவ்வளவு திரவத்தை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு நபர் தனது சிறுநீர் சிவப்பு, கருப்பு அல்லது பழுப்பு அல்லது வேறு ஏதேனும் நிறத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர் சித்தார்த் மேலும் கூறுகிறார். மேலும், சிறுநீரின் அளவு, இயல்பை விட மிகக் குறைவாகவோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ, அல்லது ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்ல வேண்டியிருந்தாலோ அல்லது சிறுநீர் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை உணர்ந்தாலோ, கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ, சிறுநீரகப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு என்ன? சிறுநீரகம் உடலின் இன்றியமையாத உறுப்பு. அதன் செயல்பாடுகள்: உங்கள் உடலில் உள்ள கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் ரத்தத்தில் பி.ஹெச். எனும் அமிலத்தன்மையை சமநிலையுடன் பராமரித்தல். உங்கள் உடலில் இருந்து நீரில் கரையும் கழிவுகளை நீக்குகிறது. சிறுநீரின் வாயிலாக அதிகப்படியான நீர், உப்புகள் மற்றும் யூரியாவை நீக்குகிறது. சிறுநீரக தமனி மூலம் ரத்தம் சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தம் உயர் அழுத்தத்தில் வடிகட்டப்படுகிறது மற்றும் சிறுநீரகமானது குளுக்கோஸ், உப்பு அயனிகள் மற்றும் நீர் போன்ற பயனுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சுகிறது. சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ரத்தம் சிறுநீரக நரம்பு வழியாக ரத்த ஓட்ட அமைப்புக்குத் திரும்புகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து, நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. சிறுநீர்ப்பை சிறுநீரை உடலில் இருந்து வெளியேறும் வரை சேமிக்கிறது. நீரிழிவு நோயின் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது மற்றும் உலகளவில் 41.5 மில்லியன் மக்களை இது பாதிக்கிறது. சிறுநீரக செயலிழப்புக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு இறுதியில் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை தீவிர சிறுநீரக நோய்கள் என்ன? நாட்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகும். ஒவ்வொரு சிறுநீரகமும் நெஃப்ரான்கள் எனப்படும் சுமார் ஒரு மில்லியன் சிறிய வடிகட்டி அலகுகளைக் கொண்டுள்ளது. நெஃப்ரான்களை காயப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்த நோயும் சிறுநீரக நோயை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் நெஃப்ரானை பாதிக்கும். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளையில் உள்ள ரத்த நாளங்களையும் பாதிக்கும். சிறுநீரகங்கள் அதிக ரத்த நாளங்களை கொண்டவை. எனவே, ரத்த நாள நோய்கள் பொதுவாக உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானவை. நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் செயல்பாட்டை படிப்படியாக இழப்பதாகும். சிறுநீரகங்கள் ரத்தத்திலிருந்து கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டுகின்றன. பின்னர் அவை சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் ஒரு மேம்பட்ட நிலையை அடையும் போது, திரவம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகள் ஆகியவை ஆபத்தான அளவுக்கு உடலில் சேரும். நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் காலப்போக்கில் உருவாகின்றன. சிறுநீரக பாதிப்பு படிப்படியாக நிகழ்கிறது. குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு மற்றும் பலவீனம், தூக்க பிரச்னைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மனக் கூர்மை குறைதல், தசைப்பிடிப்பு மற்றும் கைகளின் வீக்கம் ஆகியவையும் அறிகுறிகளாகும். பாதங்கள் மற்றும் கணுக்கால் சுளுக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவையும் இந்நோயுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். நாள்பட்ட சிறுநீரக நோய் முற்றிலும் மீளமுடியாத நோயாகும். இது காலப்போக்கில் தீவிரமடையும். இதனால், சிறுநீரகம் அதன் செயல்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். https://www.bbc.com/tamil/articles/c972d83qmgeo ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
  26. இன்னும் கவி ஐயாவின் படங்களைக் காணவில்லையே?! தொடக்கத்தில் மயிலம்மாவை அவ்வளவு ஆர்வமில்லாமல் தான் வாசிக்கத் தொடங்கினேன், இப்போது அடுத்த பகுதி எப்போது என காத்திருக்க வைத்துவிட்டார் யாழ் களச் சாம்பியன் சுவி அண்ணா.
  27. சுமந்திரன் என்ற தனி நபர் சுமந்திரன் அதை தடுத்துவிட்டார் அவர் தனி நபர் அல்ல தமிழரின் பிரதிநிதி. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இதுக்கும் ஆதாரங்கள் வேண்டுமா??
  28. டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவதில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன? “விராட் கோலியின் பலமே சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வதுதான். போட்டி குறித்த அவரது விழிப்புணர்வு அற்புதமானது. 4 ஓவர்களுக்குப்பின், 6 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பார்வை மகத்தானது. சேஸிங்கின்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கணக்கிட்டு பேட்டிங் செய்வதில் வல்லவர்” இந்த வார்த்தைகள் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூறியது. ஆனால், கோலி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் வலம் வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில நாளேடுகள், இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் “2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை,” என்று தெரிவித்திருந்தன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, விராட் கோலியின் பெயர் ட்ரெண்டாகியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களாக விளையாடவில்லை. அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி சொந்தப் பணி காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் கோலி விலகிக் கொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி ஆடுவாரா? பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் கூறுகையில் “வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழி நடத்துவார்,” என்று உறுதி செய்தார். ஆனால் விராட் கோலி குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை, அவர் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் தெரியாது. இந்நிலையில், ஆங்கில இணையதளங்கள், நாளேடுகள் ஆகியவை ‘பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக’ வெளியிட்ட செய்தியில் “மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ‘ஸ்லோ விக்கெட்டைக்’ கொண்டவை. இங்கு பந்து மெதுவாக, தாழ்வாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அதனால் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது. பவர் ஹிட்டர் வீரர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் பொருந்தும். ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்திருந்தன. மேலும், “விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும். சர்வதேச அரங்கில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்படலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடினமான செய்தியை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்தான், விராட் கோலிக்கு தெரிவித்து அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் எப்போது நடக்கின்றன? மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் தவிர, நியூயார்க், டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன. பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV படக்குறிப்பு, விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது. விராட் கோலிக்கு பதிலாக யார்? விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது? சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா,திலக் வர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது. கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்து வீழ்ந்தபோது, விராட் கோலி என்ற ஒற்றை பேட்டர்தான் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தினார். அவரை நீக்குவது எந்த விதத்தில் நியாயம், கோலி போன்ற அனுபவமான பேட்டர் அணிக்கு அவசியம் என்று சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், டி20 போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள், அவரது பேட்டிங் ஸ்டைல் போன்றவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன. விராட் கோலியின் பேட்டிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவை இன்றுள்ள அதிவேக டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பைவிட குறைவாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் கோலியின் பலவீனங்கள் என்ன? விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 37 அரைச் சதங்கள் ஆகியவையும் அடங்கும். சராசரி 51.75, ஸ்ட்ரைக் ரேட் 138 என்று வைத்துள்ளார். டி20 போட்டிகளில் விராட் கோலி 361 பவுண்டரிகள், 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரி எடுத்துக் கொண்டால் விராட் கோலி இன்னிங்ஸ் ஒன்றுக்கு 3.30 பவுண்டரியும், சிக்ஸராக 1.07 மட்டுமே அடிக்கிறார். ரன்கள் வீதம் கணக்கிட்டால், பவுண்டரிகள் வாயிலாக 19 முதல் 20 ரன்கள் வரை சராசரியாக கோலி சேர்க்கிறார். விராட் கோலி டி20 போட்டியில்கூட விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதற்குதான் முன்னுரிமை அளிக்கிறாரே தவிர, பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். விராட் கோலியின் டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்கு பேட்டிங் சராசரி 27.1 பந்துகளில் அவர் 37.5 ரன்களை அணிக்காக எடுக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார் டி20 ஆட்டத்துக்கு தேவை என்ன? கசப்பான உண்மை என்னவென்றால், ‘டி20 கிரிக்கெட் போட்டி என்பது நிதானமான ஸ்ட்ரைக்ரேட்டுடன், சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் போட்டி அல்ல, அதிரடியாக, பேய்த்தனமாக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ஆட்டம் என்பதை உணர வேண்டும்,’ என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். டி20 போட்டியில் மொத்தம் 10 பேட்டர்களும் சந்திக்கப் போவது 120 பந்துகளைத்தான். சராசரியாக ஒரு விக்கெட் 12 பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். இது ஒரு நாள் போட்டியில் 30 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால், டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என எடுக்கலாம். ஆதலால், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் களத்தில் இருக்கும் நேரம், சந்திக்கும் பந்துகள் குறைவு. இந்த முதல் 12 பந்துகளுக்குள் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் தனது விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அதற்காக களத்தில் நிற்க வேண்டுமே என்பதற்காக பந்துகளை வீணடித்து ஸ்ட்ரைக் ரேட்டையும், ரன்ரேட்டையும் குறைத்துவிடக்கூடாது. அதனால்தான் டி20 போட்டியில் ஒரு பேட்டர் களமிறங்கும்போது சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்க்கும் ரன் என்ற கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். தோல்வி(ஃபெய்லியர்), கேமியோஸ், சக்சஸ்(வெற்றி), அன்டர் பார்(சராசரிக்கும் கீழ்) தோல்வி: டி20 இன்னிங்ஸில் ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாக எடுத்தால் அது தோல்வியாகும். கேமியோஸ்: ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தாலும், சந்தித்த பந்துகளில் இருந்த எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்த்தால்அது கேமியோஸ். வெற்றி: ஒரு பேட்டர் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்ப்பது. சரிசரிக்கும் குறைவு: ஒரு பேட்டர் குறைந்தபட்சம் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்ப்பதாகும். பட மூலாதாரம்,TREVOR COLLENS படக்குறிப்பு, கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார் கோலி ‘அன்டர் பார்’ பேட்டரா? இந்த வகையில் பார்த்தால், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்களுடன் ஒப்பிடும்போது, விராட் கோலி சராசரிக்கும் குறைவான ‘அன்டர் பார்’ ஆட்டங்களைத்தான் அதிகமாக விளையாடியுள்ளார். அதாவது கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார். அதேபோல கேமியோஸ் எனப்படும் அதிரடியான ஆட்டங்கள் வரிசையில் கோலி தனது 107இன்னிங்ஸ்களில் வெறும் 8.7% மட்டுமே ஆடியுள்ளார். ஆனால், சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்க்கும் வெற்றியாளர் பேட்டர்கள் சராசரியில் 30.8% வைத்துள்ளார். இது சிறப்பானது என்றாலும் டி20 போன்ற வேகமான ஆட்டத்துக்கு இது பொருந்தாது. விராட் கோலியின் ரன்சேர்க்கும் வேகம், ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும்போது 5.7% மெதுவாகவும், கே.எல்.ராகுலுடன் ஒப்பிடும்போது 5.2% மெதுவாகவும், சூர்யகுமாருடன் ஒப்பிடும்போது 27% சதவீதம் மெதுவாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விராட் கோலி தான்சந்திக்கும் முதல் 100 பந்துகளில் 128 ரன்களைச் சேர்க்கிறார். ரோகித் சர்மா 139 ரன்களாகவும், கே.எல்.ராகுல் 134 ரன்களாக சேர்க்கிறார்கள். ஆனால், முதல் 20 பந்துகளைச் சந்திக்கும் வகையில் ரோகித் சர்மா 127 ரன்கள் என கோலியைவிடப் பின்தங்கினாலும், போட்டியில் ரன்ரேட்டை வேகப்படுத்துவதில் கோலியைவிட சிறந்தவராக திகழ்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர் கோலியைப் போன்ற பிற வீரர்கள் யார்? இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர். இதனால் 120 பந்துகளைக் கொண்ட போட்டியில் கோலியின் ஆங்கர் ஆட்டத்தால் அடுத்தார்போல் காத்திருக்கும் பேட்டர்கள் பல போட்டிகளில் பேட் செய்யாமல்கூட போகலாம். பாகிஸ்தானின் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் போன்றோரில் ஆட்டம் கூட கூட கோலி போன்றதுதான். இதே சிக்கல்தான் நியூசிலாந்தில் கேன் வில்லியம்ஸனிடமும் இருக்கிறது. இதனால்தான் அதிவேகமான ஆட்டத்தைக் கொண்ட டி20 போட்டிகளில் வில்லியம்ஸனால் ஈடுகொடுக்க முடியவில்லை. கரீபியனில் கோலியின் பேட்டிங் எப்படி? கரீபியன் ஆடுகளங்களில் கோலி 7 இன்னிங்ஸ்களில் 229 ரன்களும், அமெரிக்காவில் 3 போட்டிகளில் 63 ரன்களும் சேர்த்துள்ளார். கோலியின் சராசரி இந்த மைதானங்களில் 29 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 120.66 என இருக்கிறது. இங்கு கோலி 30 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த ரன்களில் 49% பவுண்டரி அடங்கும். 100 டி20 போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தாலும் கரீபியன், அமெரிக்க ஆடுகளங்களில் அவருக்கு பெரிதாக அனுபவம் இல்லை, அங்கு அவர் பவர்ஹிட்டராக இல்லை, அன்டர்பார் பேட்டராகவே இருக்கிறார் என்பது தெரிகிறது. பட மூலாதாரம்,BCCI/IPL படக்குறிப்பு, கோலி டி20 ஏற்றார்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது ஐபிஎல் தொடரில் கோலிக்கு என்ன வாய்ப்பு? விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை. வரும் 22-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட தேர்வாளர்கள் இந்திய அணிக்குள் கோலியைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது பாராமுகமாகவும் இருக்கலாம். கோலியின் மனநிலை என்ன? விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் இருக்க 3 காரணங்கள் இருக்கலாம் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி செய்திகளிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில் “ஐபிஎல் மூலம் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள் இந்திய அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக கோலி நீக்கப்படலாம். அடுத்ததாக கோலியின் மனநிலை. எந்தெந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்பதை கோலிதான் முடிவு செய்கிறாரே தவிர, தேர்வுக்குழுவினர் அல்ல. தான் விரும்பினால், டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், பிடிக்கவில்லையென்றால், டி20 தொடரில்கூட விளையாடுவதில்லை. இதுபோன்ற கோலியின் மனநிலை, இப்போதுள்ள தேர்வாளர்கள் சகிக்கமாட்டார்கள்,” என்றார். அவர் மேலும் பேசுகையில், “14 மாதங்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத கோலியை, திடீரென டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மற்ற வீரர்களின் திறமையை, மனநிலையை பாதிக்கும். அணியின் ஓய்வு அறையில் ஒற்றுமையைப் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் இளம் வீரர்கள் பலர் புதிதாக அணிக்குள் வரும்போது, கோலியால் அவர்களுடன் உடனடியாக ஒத்துப்போவது கடினம். அணிக்குள் தொடர்ந்து இருக்கும்போதுதான் சகவீரர்களுடன் புரிதல், ஒற்றுமை, உத்வேகம், ஸ்பிரிட் போன்றவை உருவாகும்,” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘மாற்றுவீரர் இல்லாமல் கோலியை நீக்குவது தவறு’ முத்துக்குமார் மேலும் பேசுகையில், “கோலிக்குப் பதிலாக வலிமையான பேட்டரை உருவாக்கிவிட்டுத்தான் அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் கோலி இல்லாதது எதிரணிக்கு மனரீதியாக வலிமையைக் கொடுத்துவிடும். ஆதலால், கோலியும் அணியில் இருக்க வேண்டும், அவரை முக்கியமான ஆட்டங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, முக்கியமற்ற ஆட்டங்களில் அவருக்குப்பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்,” எனத் தெரிவித்தார். கோலி டி20 போட்டிகளுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முத்துக்குமார் பதில் அளிக்கையில் “ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று குற்றம்சாட்டிய விராட் கோலி மீது, இப்போது டி20 போட்டியில் மெதுவாக ஆடுகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இது ஏறக்குறைய உண்மைதான் என்றாலும், ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடும்போது இதுபோன்றுதான் விளையாட முடியும்,” என்றார். மேலும், “மற்றவகையில், 190 ரன்கள் அடிக்க வேண்டிய ஆட்டத்தில் கோலி கடைசிவரை நிலைத்து நின்றால் 170 ரன்கள்தான் வந்தது என்ற குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதுதான். தொடக்கத்தில் நிதானமாக, மெதுவாக பேட் செய்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து கோலி கொண்டு செல்கிறார், கடைசி நேரத்தில் கேமியோ ஆடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்தது. வரும் ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cn0e4e16llwo
  29. இவர்கள் பேசும் வெத்து வெட்டு தமிழ் தேசியத்தை கட்டிக்காக்க ஒரு வில்லன் தேவை. அந்த வில்லனாக கட்டமைக்கப்பட்டவரே இந்த சுமந்திரன். இவர் இல்லை என்றால் தமிழருக்கு விடுதலை கிடைத்துவிடும் என்பது போன்ற மாயையைக் கட்டமைக்க இவர்களுக்கு சுமந்திரன் தேவை. முன்பென்றால் ஒரு வில்லன் போரடித்தவுடன் அவரைப் போட்டு தள்ளிவிட்டு அடுத்த வில்லனைக் கட்டமைக்கலாம். இப்போது அதை செய்யமுடியாது என்ற விரக்தி சுமந்திரன்போகுமிடமெல்லாம் பின்னால் திரிந்து திரிந்து குலைக்க வேண்டிய பரிதாப நிலை. 😂
  30. பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய மோடி,...... அது என்ன தமிழ்ப் பெண்? ஹிந்திப் பெண்ணைத் தொடமாட்டாரோ? ஆதவா,....😏 பதவி வேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள் என்பது இதுதானோ? 😩
  31. வரலட்சுமிக்கு உளவுத்துறை கேள்விகள் கேட் க வருமாறு கடிதம் அனுப்பி உள்ளதாம். தலைமறைவாகிய ஆதிலிங்கம் வரலட்சுமிக்கு கிழ் வேலை செய்தவராம். புள்ளிகளை இணைத்து பார்க்கவும்.
  32. தமிழ்நாட்டில் பாஜக உதயசூரியனை🌞 கண்ட தாமரை🌷 போல் மலர்ந்தே தீரும்.....மலர்ந்தே தீரும் 🤣
  33. மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தவேண்டும். சமவிகித உணவு, உடலுழைப்பு போன்றவை அருகிவருகிறது.
  34. புட்டுக்குழல் ஐஸ் கிறீ ம் வந்திட்டுது...வடக்கில் அது சாப்பிட்டால் கெத்து...இனி நீத்துப்பெட்டி ஐஸ் கிறீமும் வரும்....பலூடா வகை வகையாக....அப்ப சீனி வருத்தம் கூடுமோ கூடாதோ..
  35. தமிழ் நாட்டில் மட்டும் மோதி ஜி காலில் விழுவது ஏன்? இம்முறையும் மண்ணை கவ்வுவோம் என்பதாலா?
  36. நல்ல கவிதை..........பாராட்டுக்கள் கோபி ..........! 👍
  37. கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.
  38. கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர். செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ? இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.
  39. உங்கள் கவிதையுடன் இந்தப் பாட்டு ஒத்துப் போவதால் இணைத்துள்ளேன். கவிதைக்கு பாராட்டுக்கள்.
  40. மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.
  41. இதையே மற்றவர்கள் புலிகளுக்கு சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் போல இருக்கே!!
  42. பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
  43. இந்தியாவில் பயிற்சியில் ஈடுபடும் பிரபாகரன் இந்தியாவினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி போராளிகளைப்பொறுத்தவரையில் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் இதன்மூலம் பெருமளவு இலாபமடைந்தன. தம்முடன் இணைந்துகொள்ள வந்த அனைவரையும் அவர்கள் உள்வாங்கிக்கொண்டனர். இணைந்துகொண்டவர்களின் தரம், இலட்சியத்தின் மீதான‌ உறுதிப்பாடு குறித்து அவர்கள் கவனம் எடுக்கவில்லை. அவர்களுக்கு அன்று தேவைப்பட்டதெல்லாம் தாமே மிகவும் பெரியதும், செல்வாக்குக் கொண்டதுமான போராளி அமைப்பு என்று இந்தியாவுக்குக் காட்டுவது மட்டும் தான். போராளிகளை அமைப்பில் இணைக்கும்போது அவர்கள் கைக்கொண்ட தேர்வு முறையே அவர்களின் வீழ்ச்சிக்குப் பிரதானமான காரணமாக அமைந்தது. ஒழுக்கச் சீர்கேடுகளும் இயக்க உள்முரண்பாடுகளும், போட்டிகளும் இவ்வமைப்புக்களுக்குள் தலைவிரித்து ஆடத்தொடங்கின. ஆனால் பிரபாகரனோ தனது அமைப்பில் இணைய விரும்பிய இளைஞர்கள் குறித்து மிகுந்த அவதானமும், அவர்கள் குறித்த சரியான கணிப்பீட்டினையும் கொண்டிருந்தார். இணைந்துகொள்ள விரும்பிய போராளிகள் ஒவ்வொருவரையும் தானே தேர்ந்தெடுத்தார். கட்டுப்பாடும், கண்ணியமும், இலட்சிய உறுதியும் ஒவ்வொருவரிடமிருந்தும் கண்டிப்பாக அவரால் எதிர்பார்க்கப்பட்டது. தன்னால் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு, உணவளிக்கக் கூடிய அளவிலான போராளிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்தார். 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய அமைப்பாகக் காணப்பட்டது. ஏனைய அமைப்புக்களின் திடீர் எண்ணிக்கைப் பெருக்கம் குறித்து அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஒரு தரமான இராணுவ அமைப்பு திட்டமிட்ட ரீதியிலேயே பரிணாம வளர்ச்சி அடையவேண்டும் என்பதில் பிரபாகரன் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் என்று அன்டன் பாலசிங்கம் போரும் சமாதானமும் என்று தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். "அமைப்புக்களின் அசாதாரணமான எண்ணிக்கை வீக்கம் பல்வேறான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, ஈற்றில் அவ்வமைப்பின் அழ்விற்கும் காரணமாக அமைந்துவிடும் என்று அவர் கருதினார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
  44. பொடியன்களை விட்டு நாம் வெளியேறப்போவதில்லை ‍- யாழ் மக்கள் இராணுவமும் பொலீஸாரும் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். அவர்களை ஊக்குவிக்கும் முகமாக "இராணுவத்தினருக்கு உதவுவோம்" எனும் பெயரில் நிதிச் சேகரிப்பு நிகழ்வினையும் தேசியப் பாதுகாப்பு நிதியத்தையும் ஆரம்பித்துவைத்தார் லலித்.பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் முப்படைகளுக்கு தாராள மனது கொண்டு உதவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பணத்திற்கு மேலதிகமாக மழைக்காலத்தில் பாவிக்கும் ரெயின்கோட்கள், தண்ணீர்ப் போத்தல்கள், கட்டில்கள், நீர்க் கொல்கலன்கள், அலவாங்குகள், குளிர்சாதனப் பெட்டிகள், அலுமீனியத்தால் உருவாக்கப்பட்ட ஏணிகள், மின் சுவிட்சுக்கள், கைப்பந்து மற்றும் ஏனைய விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றையும் பொதுமக்கள் இராணுவத்தினருக்குக் கொடுத்து உதவிட முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். லலித் அதுலத் முதலியின் தேசியப் பாதுகாப்பு நிதிக்கு நிகரான ஒரு நிதியத்தை பிரபாகரனும் ஆரம்பித்தார். அதற்கு தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதியம் என்று அவர் பெயரிட்டார். தமிழ் மக்களுக்கென்று தனியான வேண்டுகோள் ஒன்றினையும் பிரபாகரன் வெளியிட்டார், தலைவர் - 1980 களில் "தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். ஒடுக்குமுறைகொண்ட இராணுவ ஆட்சி தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் அழித்துவிட அரசாங்கம் முயல்கிறது. ஆனால், அடக்குமுறைகள் வெற்றிபெற்றதாக வரலாறுகள் உலகில் எப்பக்கத்திலும் இருந்ததில்லை. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எழுச்சியை அடக்குமுறை மேலும் மேலும் உரமாக்கிவிடவே உதவும். சுத‌ந்திரத்திற்கான மக்களின் அவாவையும் அடக்குமுறை ஊக்குவிக்கும். சுதந்திர எழுச்சிக்கான மக்களின் மனவுணர்வையும் அடக்குமுறை புத்துயிர் பெறச் செய்யும். எமது ஆயுத ரீதியிலான போர் முன்னெடுப்புக்களை அரசாங்கம் முகம்கொடுக்க முடியாது திணறுவது தெரிகிறது. ஆகவேதான் தனது கோபத்தை அப்பாவித் தமிழ் மக்கள் மீது அது காட்டுகிறது. தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அட்டூழியங்கள் ஊடாக தமிழ் மக்கள், போராளிகளை வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிட‌லாம் என்று அரசாங்கம் நினைக்கிறது.அரசாங்கத்தின் இச்சூழ்ச்சிகளை நாம் அறியாதவர்கள் அல்ல. இராணுவம் மக்களைத் தாக்குகிறது என்பதற்காக எமது விடுதலைப் போராட்டத்தை பிற்போடுவது விவேகமானதாக இருக்காது. தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலம் தமிழ் மக்கள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசாங்கம் நினைப்பதைத் தவறு என்று நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களின் இராணுவத்தை நாம் தொடர்ச்சியான போர் ஒன்றிற்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள்ளேயே நாம் முடக்கி வைத்திருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் தனியாக நிற்கவில்லை. தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் எமக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய மக்களின் அனுதாபமும் எம்பக்கம் இருக்கிறது. ஆனால், எம்மீது போடப்பட்டிருக்கும் அடக்குமுறை விலங்கினை நாமே உடைத்தெறிய வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும். இழப்புக்கள் இல்லாது எம்மால் எமக்கான விடுதலையினைப் பெற்றெடுக்க முடியாது. தியாகங்கள் இன்றி விடுதலை கிடைக்கப்பெற்றதாகச் சரித்திரங்கள் இல்லை. சுதந்திரம் கொண்ட , பாதுகாப்பான வாழ்வினை நாம் வாழவேண்டுமானால் நாம் தியாகங்களைப் புரிவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்". பிரபாகரனின் இந்தக் கோரிக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் மனங்களை வென்றது. அது அவர் எதிர்பார்த்த நிதியினையும் அவருக்கு வழங்கியது. யாழ்ப்பாணத்தின் இன்னும் வசித்துவரும் எனது நெருங்கிய உறவுகளை கொழும்பிற்கு வந்துவிடுமாறு அழைக்க நானும் மனைவியும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் எறிகணைகள் எமது வீட்டுப் பகுதிக்குள்ளும் வந்து விழலாம் என்கிற சாத்தியம் இருந்ததனால் நாம் அஞ்சினோம். முதலில் இதுகுறித்து எனது தந்தையுடனும் மாமியாரோடும் பேசலாம் என்று நினைத்தோம். நாம் இதுகுறித்து தந்தையிடம் கேட்டபோது, "பொடியளை விட்டு விட்டு எங்களை ஓடச் சொல்கிறாயா? நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நாம் அனைவரும் இதுகுறித்துப் பேசி ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். நாம் அவர்களுடன் தான் இருக்கப்போகிறோம்" என்று அவர் கூறினார். எனது மாமியாருடன் பேசும்போதும், "பொடியன்கள் எங்களுக்காகச் சண்டை பிடிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடனேயே இருக்கப்போகிறோம்" என்று அவரும் கூறிவிட்டார். அவர்கள் இருவரும் அப்போதுதான் எழுபது வயதைக் கடந்திருந்தார்கள். எனது தங்கையும், மனைவியின் தங்கையும் அதே முடிவில் உறுதியாக இருந்தார்கள். பிள்ளைகளும் தான். எவருக்குமே யாழ்ப்பாணத்தையும், பொடியன்களையும் விட்டு விட்டுத் தப்பியோட விருப்பம் இருக்கவில்லை. நாவற்குழி முகாமையும் எமது கிராமத்தையும் பிரிக்கும் வயல்வெளிக்குச் சென்றேன். தூரத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட காப்பரண்களை என்னால் காண முடிந்தது. முகாமைச் சுற்றிப் போராளிகள் இந்தக் காப்பரண்களை அமைத்து வைத்திருந்ததுடன், முகாமை எப்போதும் தமது கண்காணிப்பில் வைத்திருந்தார்கள். ஒரு போராளி என்னுடன் பேசுகையில், "நாங்கள் முகாமைச் சுற்றி வளைத்திருக்கிறோம். அதனைச் சுற்றிக் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறோம். இராணுவத்தினர் வெளியே வரமுடியாது" என்று கூறினார். நான் அவர்களுடன் அப்பகுதியில் நெடுநேரம் நின்றிருந்தேன். உலங்கு வானூர்திகள் மூலம் உள்ளே அடைபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு பொருட்கள் இறக்கப்படுவது தெரிந்தது. அப்போராளி என்னுடன் தொடர்ந்தும் பேசுகையில், "யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்" என்றும் கூறினார். போராளிகளின் மனோதிடத்தையும், எனது உறவினர்களின் உறுதியையும் கண்ட நாங்கள் நம்பிக்கையுடன் மீளவும் கொழும்பு திரும்பினோம். மக்கள் போராளிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெரிந்தது, குறிப்பாக புலிகளுடன் அவர்கள் மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டார்கள். போராளிகளும் சிறிது சிறிதாக பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்திருந்தார்கள். மார்கழி மாதத்தின் இறுதிப்பகுதியிலேயே நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நான் கண்டவற்றை எனது சிங்கள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன். லேக் ஹவுஸ் ஸ்த்தாபனத்தின் மூத்த ஆசிரியரான மேர்வின் சில்வாவும் அவர்களுள் ஒருவர். அவர் என்னுடன் பேசும்போது, "சபா, இதுகுறித்து இங்கு எவருடனும் பேசாதீர்கள். இதைக் கேட்கும் மனோநிலையில் எவரும் இங்கு இல்லை. இராணுவ ரீதியில் தாம் வென்று வருவதாகவே இங்கு அனைவரும் நினைக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் பயிற்சியையும் வெளிநாடுகள் வழங்குகின்றன, ஆகவே நாம் வெல்வது உறுதி என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். அவர் மட்டுமல்ல, இங்கே பொதுவாக அனைத்துச் சிங்களவர்களும் அதையே நம்பினார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், அனுபவம் அற்றை ரஜீவ் காந்தி அரியணை ஏறியிருக்கும் நிலையில், அரசியலில் சாணக்கியமும், சூட்சுமமும் நிறைந்த ஜெயவர்த்தனவும் அவரது வலதுகரமாகச் செயற்பட்ட லலித் அதுலத் முதலியும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எப்படியாவது இராணுவ ரீதியில் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டனர். மார்கழி 26 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினை முற்றாக நிறுத்திவிடுவது என்று பாராளுமன்றம் முடிவெடுத்தது. பாராளுமன்றத்தின் இம்முடிவினை லலித் அதுலத் முதலி அறிவித்த செய்தியாளர் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். இதுகுறித்து நான் வெளியிட்ட செய்தியின் முதலாவது வசனம் இன்றும் எனது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 1984 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அச்செய்தி வெளியாகியிருந்தது, அரசியல் தீர்வொன்றைக் காணவே அரசு விரும்புகிறது. ஆனால் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிடுவதென்பது அதனைக் காட்டிலும் மிக முக்கியமானது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மனமுடைந்து போயினர். இது குறித்து அமிர்தலிங்கத்தின் கருத்தினையறிய நான் சென்றவேளை அவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அரசியல் அரங்கிலிருந்து மிதவாதிகள் முற்றாக அகற்றப்பட்டுவிட்டார்கள் என்பதை அவர் நன்கு அறிந்துகொண்டார். மிதவாதிகளை சிங்கள அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டார்கள் என்று அவர் கூறினார். தமிழ் மக்கள் முன்னால் தம்மால் போகமுடியாது ஆகிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார். அன்டன் பாலசிங்கம் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டே அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசமுடியும் என்று லலித் அறிவித்ததையடுத்து புலிகளும் தமது பதிலினை சென்னையில் அறிவித்தனர். அவர்களின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு தெரிவித்தார், "தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இராணுவ வழியில் வழங்கவே அரசாங்கம் உறுதிபூண்டிருப்பது தெரிகிறது. இதுதான் அவர்களுக்குத் தேவையென்றால், நாமும் அதற்கான பதிலை இராணுவ வழியிலேயே வழங்க ஆவலாக இருக்கிறோம். எம்மை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளும்வரை எமது நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்துவோம்". 1984 இல் பலமான இராணுவக் கட்டமைப்பொன்றினை உருவாக்குவதன் மூலம் தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கிவிட பிரபாகரன் உறுதிபூண்டபோது அவருடன் கூடவிருந்தவர் என்கிற வகையில் இராணுவ ரீதியில் இராணுவத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை பாலசிங்கம் முழுவதுமாக நம்பினார். இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏறத்தாள 75 வீதமான நிலப்பரப்பினைத் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் வைத்திருக்க முடிகிறதென்றால் அவர்கள் 1984 இல் இட்ட உறுதியான அடித்தளத்தினாலேயே இது சாத்தியமானது என்றால் அது மிகையில்லை (2005 இன் படி).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.