Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 03/24/24 in Posts
-
ஒரு பொய்
3 points(குறுங்கதை) ஒரு பொய் ---------------- 'இது மைக்கேல். இன்றிலிருந்து இவர் உங்களுடன் வேலை செய்யப் போகின்றார்' என்று மைக்கேலை ஒரு நாள் வேலையில் எனக்கு அறிமுகப்படுத்தினர். ஆரம்ப நல விசாரிப்புகளின் பின், மைக்கேலை அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேசைக்கு கூட்டிச் சென்றேன். மைக்கேல் தனது தோள் பையிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான். அதனுள்ளே மெல்லிய ஈரமுள்ள கடதாசிகள் ஒரு கட்டாக இருந்தன. மேசை, கதிரை, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் கணினி மற்றும் திரைகள் என்று எல்லாவற்றையும் அழுத்தமாக, சுத்தமாக துடைத்தான். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, நாங்கள் இருவரும் இன்னும் கைகுலுக்கவில்லை என்று. நிரந்தரமாக பலர் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் சில வேளைகளில் தற்காலிகமாகவும் சிலரை, வேலையின் அளவைப் பொறுத்து, வேலைக்கு எடுப்பார்கள். மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று அவர்களுக்கு வேலை இருக்கும். அதை தாண்டியும் சிலர் இருப்பார்கள். இரண்டு பக்கங்களுக்கும் பிடித்துப் போக, நிரந்தரமாகவே அந்த நிறுவனத்தில் இணைபவர்களும் உண்டு. மைக்கேல் ஆறு மாத வேலைத் திட்டம் ஒன்றிற்காக வந்திருந்தான். வேலையில் அவனின் இடத்தையும், பொருட்களையும் சுத்தப்படுத்துவதற்கு அதிகமாகவே நேரம் எடுத்துக் கொண்டாலும், மைக்கேல் வேலையில் மிகவும் திறமையானவனாக இருந்தான். அவனின் குடும்பம் நீண்ட நாட்களின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் இருந்து இங்கு குடி வந்துள்ளனர். அவன் பெரும்பாலான பாடசாலை மற்றும் பல்கலை கல்வியை இங்கே அமெரிக்காவிலேயே கற்றிருந்தான். பொதுவாக என் அனுபவத்தில் நான் கண்ட ரஷ்யர்களுக்கு இருக்கும் அபரிதமான கணித ஆற்றல் அவனிடமும் இருந்தது. ஆனாலும், தான் ஒரு ரஷ்யன் இல்லை என்றும், தான் ஒரு உக்ரேனியன் என்றும் என்னிடம் ஒரு தடவை தெளிவாகச் சொன்னான். அப்பொழுது ரஷ்யா - உக்ரேன் சண்டை ஆரம்பித்திருக்கவில்லை, ஆனால் சோவியத் ஒன்றியம் உடைந்து, இவை இரண்டும் தனித்தனி நாடுகளாக இருந்த காலம் அது. ஒழுங்காக தினமும் நேரத்திற்கு வந்து, மிகவும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்த அவன் திடீரென இரண்டு நாட்கள் வேலைக்கு வரவில்லை. எங்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மூன்றாம் நாள் அவனை தொலைபேசியில் கூப்பிட்டேன். உடனேயே தொலைபேசியை எடுத்தவன், தன்னுடைய வீடு எரிந்து விட்டதாக சொன்னான். இங்கு வீடு எதுவும் எரிந்ததாக உள்ளூர் செய்திகளில் நான் பார்க்கவில்லை, ஆதலால் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எரிந்த எல்லா வீடுகளையும் செய்திகளில் காட்ட வேண்டும் என்றும் இல்லைத்தான். பின்னர் வீடு எரிந்திருப்பதை காட்டும் சில படங்களை எனக்கு அனுப்பினான். அதன் பின்னர் ஒரு வாரம் ஒழுங்காக வேலைக்கு வந்தான். அந்த ஒரு வாரமும் நன்றாக வேலை செய்தான். மீண்டும் இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. தற்காலிகமாக வேலைக்கு வருபவர்கள் வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தேவையில்லை என்றாலும், நாங்கள் செய்து முடிக்க வேண்டிய வேலை நிறையவே இருந்தது. மைக்கேலின் திறமையைப் பார்த்து, அவனை வைத்தே அதில் பெரும் பகுதி ஒன்றை முடித்து விடலாம் என்றும் திட்டமிட்டிருந்தேன். அவன் ஒரு தடவை எங்களின் அடுத்த தளத்தில் ஒரு ரஷ்யர் வேலை செய்வதாகச் சொன்னான். நான் எனக்கு அவரை தெரியாது, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அந்த மனிதனின் கண்களை தான் பார்த்ததாகவும், அதில் ஒரு தீராத கோபம் தெரிந்ததாகவும் அவன் சொன்னான். அந்தக் கோபம் ரஷ்யர்களுக்கு மட்டுமே உரியது என்றான். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்கும் என்ன வித்தியாசம் என்று அன்று எனக்கு தெரியாது, இரண்டும் ஒன்றே எனக்கு அன்று. நான் ஏன் நீ வேலைக்கு வரவில்லை என்று கேட்க, இவர்களின் தீராத கோபத்தை என் மீது இறக்கி விடுவார்களோ என்று ஒரு யோசனையாகவும் இருந்தது. இந்த தடவை அவனின் கார் களவு போய் விட்டதாக சொன்னான். சில நாட்கள் தொடர்ந்தும் வேலைக்கு வராமல் தன்னுடைய காரை தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனின் கார் ஒரு கறுப்பு நிற பிஎம்டபிள்யூ. ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு, அவனின் காரை மெக்சிக்கோ எல்லைக்கு அருகே கண்டு பிடித்து விட்டதாகவும், தான் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான். அடுத்த நாளும் அவன் வேலைக்கு வரவில்லை. மீண்டும் அவனே தொடர்பு கொண்டான். இந்த தடவை தான் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னான். என்ன நடந்தது என்றேன். கால் உடைந்து விட்டது என்றான். எப்படி உடைந்தது என்று கேட்டதிற்கு, தான் தன்னுடைய காரை காலால் அடித்ததாகவும், அப்பொழுது வலது கால் பாதம் உடைந்து போய் விட்டதாகச் சொன்னான். இதைச் சொல்லி விட்டு, தனக்கு தன்னுடைய காரின் மேல் கோபம் வந்ததால், காரை உதைத்ததாகச் சொன்னான். இது தான் தீராத கோபம் போல. அவன் இப்படியே ஏதாவது சொல்லி வேலைக்கு வராமலேயே இருந்தான். ஒரு நாள் அவனை வேலையில் இருந்து நிற்பாட்டுவதாக அவனுக்கு செய்தி அனுப்பினோம். சில மாதங்களின் பின்னர், ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அவர் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் மற்றும் தனது பதவி பற்றிச் சொல்லிய பின், 'உங்களுக்கு மைக்கேலை தெரியுமா?' 'ஆ...., நல்லாவே தெரியும்' என்றேன் நான். 'மைக்கேல் எங்களின் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார்.' 'நல்ல விடயம்.' 'உங்களை தான் ஒரு பரிந்துரையாளராக போட்டிருக்கின்றார். நான் உங்களிடம் சில தகவல்களை கேட்கலாமா?' 'நிச்சயமாக, நீங்கள் தாராளமாக கேட்கலாம்.' மைக்கேலின் தொழில்நுட்ப அறிவு, திறமைகள் பற்றியே எல்லா கேள்விகளும் இருந்தன. அதில் மைக்கேலிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. உண்மையில் நான் பார்த்தவர்களில் அவன் மிகவும் திறமையானவன். கடைசி கேள்வி: 'மைக்கேல் திரும்பவும் உங்கள் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தால், நீங்கள் அவனை வேலைக்கு எடுப்பீர்களா?' 'நிச்சயமாக எடுப்பேன்' என்றேன் எந்தத் தயக்கமும் இல்லாமல். இன்றைய உலகில் பொய் கூட ஒரு தயக்கமும் இல்லாமல் வருகின்றது.3 points
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இப்படி ஒன்றை தபால் நிலையத்தில் £ 5.50 ற்கு எடுத்துச் சென்று சிறீலங்காவில் வாகனம் ஓட்டுவது வழமை. உங்கள் வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். ஆனால் 2022 இல் இருந்து கொழும்பில் உள்ள AA இன் அலுவலகத்தில் காசு கட்டி மேலதிக சான்றிதழ் ஒன்றும் பெற வேண்டும். நான் நினைக்கின்றேன் இந்த அனுமதியை இப்போது விமானநிலையத்திலேயே வழங்கப் போகிறார்கள். எல்லாம் $$$$ ற்காக.. சிறீலங்காவில் காசைக் கொடுத்தால் மாற்றம் எப்போதும் வரும்…🤣🤣🤣🤣🤣3 points
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே. நன்றி3 points
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால் பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம். நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢3 points
-
பிஞ்சுக் காதல்…
2 pointsபிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)2 points
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இதிதேல்லாம் சிங்களத்துக்கு பின்பக்கம் கழுவும் கூட்டதுக்கு புரியபோவதில்லை .அதுகளுக்கு பெல் அடித்தால் உடனே பஞ்சை துக்கிக்கொண்டு ஓடிவரும் குணம் பல தலை முறை தாண்ட்டியும் மாறாது .2 points
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ? அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?2 points
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......! 😁2 points
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள். ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும் புட்டின் பெருந்தலைவர் என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- நானும் கவிதாயினியும்.....💕
2 pointsஎண் சாண் உடம்படியோ.. ஏழிரண்டு வாயிலடி.. பஞ்சாயக் காரரைவர்.. பட்டணமும் தானிரெண்டு.. அஞ்சாமற் பேசுகிறாய்.. ஆக்கினைகுத் தான் பயந்து.. நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா.. நிலை கடந்து வாடுறண்டி.2 points- என் இந்தியப் பயணம்
2 pointsஒரு பத்து நிமிட ஓட்டத்தில் கோயில் வந்துவிட்டது இறங்குங்கள் என்று கூற இறங்குகிறோம். முன்னர் தூர நின்று பார்த்தாலே கோபுரம் தெரியும். இது தெற்கு வாசலோ மேற்கு வாசலோ என்று ஓட்டுனர் கூறியதும் மறந்துவிட்டது. ஒரே திருவிழாக் கூட்டம். கட்டடங்களும் வீதியோரக் கடைகளுமாக முன்னர் பார்த்த கோயில் வீதி இல்லை அது. எனக்கு சந்தேகமாக இருக்க மீனாட்சி அம்மன் கோவில் தானே என்று பக்கத்தில் நின்ற ஒருவரைக் கேட்க, அவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு நடந்து போங்கம்மா வரும் என்கிறார். காலை ஒன்பதுக்கே வெயில் கொழுத்துகிறது. செருப்புகளை கழற்றி விடும் இடத்தில் கொடுத்துவிட்டு அதற்குரிய அட்டையை வாங்கிக்கொண்டு திரும்பினால் உங்கள் போன் ஒன்றும் கொண்டுபோக முடியாது. அங்கே கொடுத்து ரிசீட் வாங்கிக்கங்க என்கிறார் ஒருவர். கொடுத்து றிசீற் வாங்கிக்கொண்டு வாசலைத் தேடினால் எல்லாப் பக்கமும் மூடி அடைத்து ஆட்கள் கோவிலுக்கு உள்ளே போவதற்கு பாதுகாப்புப் பரிசோதனை வேறு. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வரிசை. ஆண்கள் வரிசையில் ஒன்று இரண்டு பேர்தான். பெண்கள் வரிசையைப் பார்த்தால் நீண்டதாக இருக்க போய் நிற்கிறேன். பத்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் முறை வந்தால் அந்த டிவைஸ் கீ கீ என்கிறது. என் கைப்பையை வாங்கி திறந்து உள்ளே கைவிட முயல நான் எடுத்துக் காட்டுகிறேன் என்று தடுக்க, சரி எல்லாவற்றையும் வெளியே எடுக்கச் சொல்கிறார் அந்தப் பொலீஸ்காறி. நான் கைவிட்டுக் கிளறினால் என் போர்ட்டபிள் சார்ஜர் வருகிறது. இதை ஏன் கொடுக்கவில்லை என்கிறா இன்னொரு போலீஸ்காறி. போனைத்தானே கொண்டுபோகக் கூடாது என்றார்கள் என்கிறேன். சரி சரி படம் எடுத்துடாதீங்க என்கிறா மற்றவ. இதில் எப்பிடிப் படம் எடுக்க முடியும் என்று கூறியபடி வெளியே வந்த பொருட்களை உள்ளே வைத்து என் கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றால் அங்கும் வாசலில் டிக்கற் கவுண்டர். ஒருபக்கம் இலவசமாக வணங்கும் மக்களுக்கான வரிசை. மறு பக்கம் 50, 100, மற்றும் சிறப்புத் தரிசனத்துக்கான வழி. சிறப்புத் தரிசனத்துக்குப் போனால் விரைவில் போய்விடலாம் என்கிறேன். போய் என்ன செய்யப் போறாய்? இன்று முழுவதும் இதுதான் வேலை என்று சொல்லும் மனிசனுடன் 100 ரூபாய் டிக்கற் எடுத்து வரிசையில் நிற்கிறோம். சில அகலமான இடங்களில் எம்மை முந்திக்கொண்டு போகிறார்கள். உள்ளே செல்லச் செல்ல காற்றோட்டமே இன்றி வியர்க்கிறது. தண்ணீர்ப் போத்தலையும் கணவர் தன் பையுடன் கொடுத்துவிட்டார். சில்வர் அண்டா போன்ற ஒன்றில் நீரைக் கொண்டுவந்து ஊற்றுகிறார்கள். பலரும் எடுத்துக் குடிப்பதனால் அதைக் குடிக்கவே தோன்றவில்லை. கற்பக்கிரகம் இருக்கும் இடத்துக்கு போவதற்குள் சீ என்று போய் விட்டது. ஐயர்மார் இருவர்தான் தெரிக்கிறார்கள். போங்கம்மா போங்கம்மா என்று ஐயர் ஒருவர் கூற போகாமல் இங்கேயா நிற்கப்போறம் என்கிறேன். என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்கிறார். மீனாட்சியையோ சுந்தரேசரையோ பார்க்காமல் வெள்ளியே வந்து வெளி மண்டபத்துக்கு வந்தால் அங்கே பொங்கல்,கேசரி, ஆப்பம் என்று விற்கிறார்கள். ஆங்காங்கே வேறு சிலரும் நிலத்தில் சப்பாணி கட்டியபடி அமர்ந்திருக்க அதில் வாங்கு போல இருந்த ஒன்றில் நானும் கணவரும் அமர்கிறோம். போவோர் வருவோரைப் புதினம் பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருக்க ஒரு வயதுபோன பெண் வந்து சுவாமியை வைக்கும் இடத்தில் இருக்கிறீங்களே. எந்திரிங்க என்று கூற சிரித்தபடி எழுந்து வர தாமரைப்பூக்கள் அற்ற பொற்றாமரைக் குளம் பச்சை நிறத்தில் தெரிகிறது. அதன் கரையில் அமர்ந்தபோது முன்னர் வந்த நினைவுகள் எழுகின்றன. முன்னர் கீழே சென்று காலை நனைத்துவிட்டுத்தான் கோவிலின் உள்ளே சென்றோம். இப்போ கீழே செல்ல முடியாதவாறு கம்பி வேலி போட்டிருந்தார்கள். கோயில் தொன்மையானதாக இருந்தாலும் வருமானம் ஈட்டுவதே குறிக்கோளாக கோயில் என்று உணரவே முடியாததாக இருக்க மனதில் ஒரு ஏமாற்றமும் தோன்றியது. கணவர் வாங்கிவந்த பொங்கலும் கேசரியும் கூடச் சுவையாக இல்லை. வெளியே வந்து ஒரு கடையில் பழச்சாறு வாங்கி அருந்திவிட்டு வெளியே வருகிறோம். மனிசன் மீண்டும் ஊபர் அப்பில் ஓட்டோவை அழைக்க ஓட்டோ அகப்படுதே இல்லை. பின் வீதியில் சென்று மறித்தாலும் நிற்கவில்லை. அன்று சனிக்கிழமை ஆதலால் சரியான கூட்டம். தமிழர்கள் மட்டுமன்றித் தெலுங்கு மக்களும் நிறையப்பேர் வந்திருந்தனர். அருகில் ஒருவரிடம் ஓட்டோ எங்கே பிடிப்பது என்றதுக்கு எதிர்ப்பக்கம் போனா ஓட்டோ ஸ்டாண்ட் வரும் என்று கூற அந்த மதிய வெயில் எதையும் இரசிக்க முடியாது செய்கிறது. மறுபடியும் ஓட்டோக்காரர் அறுநூறு சொல்லி ஐநூறுக்கு சம்மதித்து கோட்டலுக்குப் போய் இறங்க பசியே இல்லாது இருக்க போய் சாப்பிட மனமின்றி முகம் கைகால் கழுவிவிட்டு கட்டிலில் போய் விழுகிறோம். எழுந்தால் மணி மூன்று என்கிறது போன். எங்கே போகலாம் என்று யோசித்தாலும் போக மனமின்றி இருக்கிறது. சரி வெளியே போய் நல்ல கோட்டலில் உண்போம் என்றுவிட்டு சென்று உண்டுவிட்டு தெப்பக்குளம் பார்க்கப் போவோம் என்று முடிவெடுத்துப் போய் பாத்துவிட்டு - முன்னர் பார்த்ததை விட குளமும் கோவிலும் அழகாகப் பாராமரிக்கப்பட்டிருக்க மனம் சிறிது நிம்மதியடைகிறது. வைகை அணை, திருமலை நாயக்கர் அரண்மனை, அழகர் கோவில் எல்லாம் பலதடவை பார்த்து அலுத்துப்போயிருந்ததால் போகாது சமணர் மலையைப் போய் பார்ப்பமோ என எண்ணினால் மாலை ஐந்துமணிக்கு போய் பார்க்க நேரம் போதாது என எண்ணி சினிமா ஒன்றுக்குப் போலக்காம் என முடிவெடுத்து ஓட்டோக்காரரிடம் கேட்டால் இப்ப ஆறரை சோ இருக்கு. வெற்றி சினிமா நன்றாக இருக்கும் என்று கூற அங்கு செல்கிறோம். இந்தியாவில் சினிமாத் தியேட்டர்களில் படம் பார்ப்பது அலாதியானதுதான். ஆனாலும் அன்று பார்த்த படம் என்ன என்று இன்றுவரை எனக்கு ஞாபகம் வரவில்லை என்பது வேறு. அடுத்தநாள் காலை எழுந்து காலை உணவை அங்கேயே உண்டுவிட்டு கோட்டல் கணக்கைத் தீர்த்துவிட்டு ஓட்டோ ஒன்றை 1000 ரூபாய்க்குப் பேசி திருப்பரங்குன்றம் சென்று அங்கும் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியே வந்து சொல்லும்படியான கோட்டல் ஒன்றுகூட இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு உணவகத்தில் உண்டுவிட்டு தங்குமிடம் தேடினால் ஒன்றுகூட நன்றாக இல்லை. அங்கிருந்து கீழடி ஒரு 20 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்ததால் கொஞ்சம் வெயில் தணியச் செல்லலாம் என்று கிடைத்த ஓரளவு சுத்தமான கோட்டலில் இரண்டு மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஊபர் காரில் கீழடிக்குச் சென்றால் ஏமாற்றம்தான். ஒரு பத்து மீற்றர் நீள அகலத்தில் ஆறு அகழ்வாய்வு செய்யப்பட்ட குழிகள் மட்டும் இருக்க மிகுதி எல்லாம் அடையாளமற்று மூடிய நிலமாக இருக்க இதைப் பார்க்காமலே இருந்திருக்கலாம் என்னும் எண்ணம்தான் வந்தது. அங்கு அகழ்வாய்வாளர்களுக்கு உதவிக்கு நின்ற ஒருவருடன் கதைத்தபோது இதைக் கூட மூடச் சொல்லீட்டாங்க. சென்றல் கவுண்மென்ட் எதையுமே செய்ய விடமாட்டேனக்கிறாங்க என்றார். அதிலிருந்து ஒரு பத்து நிமிட நேரத் தூரத்தில் ஒரு மியூசியம் ஒன்று அமைத்து சில பொருட்களையும் அங்கு வைத்துள்ளார்கள். அதைக் கூட அங்கு அமைப்பதற்கு மத்திய அரசு முதலில் தடை போட்டதாம். அதன் பின் கனத்த மனதுடன் பேருந்து நிலையம் வந்து படுத்துத் தூங்கியபடி சென்னை வந்து சேர்கிறோம். இனி தாஜ்மகால் வரும்2 points- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....2 points- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத திரிபு சொல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் இல்லை. அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க சமக்கிருத அறிஞர்கள் மனு ஸ்மிரிதி , பிரஸ்னோத்தர ரத்னமாலிக்கா போன்ற சமக்கிருத இலக்கியங்களில் பயன்படுத்திய சொல். ஆதி சங்கரர் மண்டல மிஸ்ரா வுடன் வாது புரிகையில் தன்னை "திராவிட சிசு" என்று அறிமுகம் செய்கிறார். அதைப்போலவே ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை (இவரும் ஒரு பிராமணர்) சுட்டுகையில் திராவிட சிசு என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். நால்வரில் மற்றவர்களை அப்படி சொல்லவில்லை. மனு ஸ்ம்ரிதி தமிழர்களை சுட்ட சோழர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது , திராவிட என்ற வார்த்தையை அது தென்னகத்து பிராமணர்களை குறிக்க பயன்படுத்துகிறது. நான் பல இடங்களில் சொன்ன உதாரணம் தான் மட்டை பந்து ஆட்டக்காரர் ராகுல் திராவிட் , மயிலை சமக்கிருத கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட் சாஸ்திரிகள் இவர்கள் அனைவரும் பிராமணர்கள் , திராவிட் என்பது அவர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த குடும்ப பெயர். பிராமணர்களை பொதுவாக பஞ்ச திராவிட என்றும் பஞ்ச கௌட என்றும் இரு கூறுகளாக பிரிப்பர். இதில் பஞ்ச திராவிட என்பது தென்னகத்து பிராமணர்களை குறிக்கிறது, பஞ்ச கௌட வட பிராமணர்களை குறிக்கிறது. திராவிட மேட்ரிமோனி என்று பிராமணர்களுக்கான தெலுங்கானாவில் பதிவு செய்த இணையங்களும் உள்ளன. ராபர்ட் கால்டுவேல் என்ற மொழியியல் அறிஞர் பின்னாளில் தமிழ் மொழிக்குடும்பங்களை சுட்ட தமிழ் மொழி அல்லாத ஒரு பெயரை வைக்கும் எண்ணத்தில் சமக்கிருதத்திலிருந்து "திராவிட" என்ற பதத்தை எடுத்து தவறாக தமிழ் மொழி குடும்பத்தை சுட்ட பயன்படுத்தினார். இதையே நீதிக்கட்சிக்கு பெயர் மாற்றம் செய்யும் வேளையில் கிஆபெ விசுவநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பெரியாரிடம் வற்புறுத்தியும் 'தமிழர் கழகம்' என்று வைக்காமல் 'திராவிடர் கழகம்' என பெயர் மாற்றினார். திராவிடம் என்பது எந்த மாநிலமும் அங்கீகரிக்காத ஒரு போலி பெயர் , தமிழர்களை தமிழர் அல்லாதவர்கள் ஆள பயன்பட்ட ஒரு முக மூடி அவ்வளவே ! திராவிடம் என்ற ஒரு இனமோ, மொழியோ , பண்பாடோ தமிழர்களிடம் இருந்ததில்லை , இது வேற்று மொழி பேசுபவர்களால் தங்கள் அடையாளத்தை மறைக்க தமிழர்களை ஏய்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு போலிச்சொல். தமிழனை தமிழன் என்று நேரடியாக சுட்டாமல் போலி முகமூடி அவனுக்கு எதற்கு ? , சாதியை திராவிடம் ஒழித்துவிட்டதா இல்லை மறுத்து தான் விட்டதா ? , வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்று விக்கிரவாண்டி தேர்தலுக்காக பேசியது திமுக தானே ? பிறகு எப்படி சாதி மறுத்த தமிழர்கள் திராவிடர்கள் என்றானார்கள் ? , அளந்து விடுவதை எல்லாம் நம்ப இது நைனா நாயக்கர்கள் காலமல்ல , தகவல் தொழில் நுட்பக்காலம். சமூக நீதி காக்கிறதா திராவிடம் … எங்கே ? இதுவரை ஒரு பொதுத்தொகுதியில் ஒரு ஆதி தமிழரையாவது நிறுத்தி இருப்பார்களா திராவிடர்கள் ? எத்தனை பெண்களுக்கு, இசுலாமியருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள் ?, பிறகு என்ன பம்மாத்து பேச்சு இது? ஆரியத்தை தமிழர்களை விட வேறு யாரும் வரலாற்றில் இதுவரை எதிர்த்தது கிடையாது , ஆரியத்திற்கு அடிபணியாத ஒரே மொழி இனம் அது தமிழினம், ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன் , செங்குட்டுவன் என்று அந்த வரிசை நீள்கிறது. ஆரியத்தை எதிர்க்க திராவிடம் வந்தது என்பது ஒரு பழைய பம்மாத்து, ஆரியம் திராவிடத்தின் பங்காளி, "ஆரியமும் திராவிடமும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு". ஆரியத்தை தமிழர்கள் தான் 2000 வருடங்களாக எதிர்த்து வந்துள்ளனர் , தமிழை மிதித்து ஆரியர்களை கோயில்களில் அனுமதித்து தெலுங்கையும், சமக்கிருதத்தையும் தலையில் வைத்து ஆடியது நாயக்கர்கள், தங்கள் பெயருக்கு முன் ‘வருணாசிரம தர்மங்கனுபாலித்த’ என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டனர், இவர்கள் வழி வந்த திராவிடர்கள் தான் சாதியை ஒழிக்கப்போகிறார்களா, சமூக நீதி சமத்துவத்தை நிலை நாட்டப்போகிறார்களா ? அரசியலுக்காக திராவிடம் என்ற திரிந்த போலி வட வார்த்தை தமிழர்களுக்கு தேவை இல்லை , தமிழர்களை தமிழர் என்றே அழைப்போம்! , தமிழ் மொழிக் குடும்பம் என்றும் தமிழர் நாகரீகம் என்றே அழைப்போம்! , திராவிட என்ற முகமூடி தமிழர்களுக்கு தேவையில்லை! தமிழன் தமிழனே!2 points- அடேங்கப்பா😲 | யாழில் குவிந்த அழகிகள்💃 | Jaffna Bridal Show | Ks Shankar | Sri Lanka
நம்மட அழகிகளையும் அவர்களுடைய அலங்காரங்களையும் பார்த்து இரசியுங்கள்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாடு முன்னேற இன்னும் நிறைய இருக்கு..............தமிழ் நாட்டை அபிவிருத்தி செய்யனும்.........அதுக்கு காசு தேவை..............பல கோடி கோடிய ஊழல் செய்து காசு பூரா அரசியல் வாதிகளின் வீட்டில் வெளி நாட்டு வங்கியலிடம் இருக்கும் போது தமிழ் நாடு எப்படி முன்னேற்றத்தை காணும்...........எத்தனையோ மக்கள் தமிழ் நாட்டில் வீடு வாசல் இல்லாம மரத்தடிக்கு கீழ சமைச்சு அதே இடத்தில் தூங்கி வாழ்க்கைய ஓட்டுதுகள்.................. 1967களில் இருந்து இதுவரை திராவிடம் தமிழர்களை ஏமாற்றி பிழைச்சது.............ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் சுத்தி பாருங்கோ எத்தன இடங்களில் மின்சாரம் இல்லை என்று............இதெல்லாம் ஆட்சியாளர்கள் மனம் வைச்சா சில மாதங்களில் செய்து முடிக்கலாம்................திராவிட அரசியல் மாபியா கும்பலுக்கு பணம் பணம் இது தான் அவங்ளுக்கு முக்கியம்..............ஈழத்தை அழிக்க துணை போனதே திமுக்கா அதே ஈழத்து இளைஞர்களை கஞ்சா என்ற போதையில் மிதக்க விடுவதே திமுக்கா திருட்டு கும்பல்................1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கள்ளர், மறவர், அகமுடையார் என்னும் மூன்று குல மக்கள் சேர்ந்தது முக்குலத்தோர். இவர்களை தேவர்கள் என்றும் சொல்கின்றனர். ஒரு காலத்தில் போர் வீரர்களாக இருந்த குடிகள். இன்றும் இவர்களில் பலர் இந்தப் பெருமையுடன் வாழ்கின்றனர். மதுரை, தேனீ, இன்னும் சில தென் மாவட்டங்களில் இவர்கள் செறிவாக வாழ்கின்றனர். நடிகர் சிவாஜி கணேசன் கள்ளர் என்னும் குலத்தை சேர்ந்தவர் என்று தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக வின் கோட்டை இவர்கள். ஆனால் இன்று அதிமுக கொங்கு நாட்டவரான (கவுண்டர்கள்) ஈபிஎஸ் வசம் போன பின், இவர்கள் அதிமுக விசுவாசிகளாக இருக்க மாட்டார்கள் என்பதே பொதுவான ஊகம்.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமான் இந்தத் தேர்தலில் தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.1 point- சங்கீத கலாநிதி
1 pointஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்......👍 எழுத்தாளர் சாரு (சாருநிவேதிதா) டி. எம். கிருஷ்ணா விவகாரத்தில் சற்று வித்தியாசமான ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதை நான் யாழ் களத்தில் வேறு ஒரு திரியில் பகிர்ந்திருந்தேன். https://charuonline.com/blog/?p=144821 point- யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
அவர்கள் படிக்கட்டும். உணர்வுடன் இருக்கட்டும். அரசியலைக் கற்கட்டும். Uni போகும்போது இவர்களுக்கான நேரம் வரும். அதுவரை இவர்கள் பொறுமை காக்க வேண்டும். எங்களவர்கள் அவர்களை பப்பாவில் ஏற்றாமல் விட்டாலே போதும். எல்லாம் சுமூகமாகவே நடக்கும்.1 point- ஒரு பொய்
1 pointஏராளன், நிறைய மெனக்கெட்டு, வள்ளுவரைப் பிடித்துக் கொண்டு வந்து ரசோதரனுக்கு ஆதரவு தர முற்பட்டிருக்கிறீங்கள். பத்தாம்பசலியாக இருக்கிறீங்கள். பத்தியை முழுவதுமாக வாசித்தீர்களா? மைக்கேலால், ’யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக’ என்ற ரசோதரனின் பெரும்தன்மை புரியும்1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்?? ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
அதுக்குத் தான் AAA இருக்குதே? 15 டாலருடன் ஒரு வருட அனுமதிப் பத்திரம்.1 point- ஒரு பொய்
1 pointhttp://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4253&id1=50&id2=18&issue=20171116 குறள் 291: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். குறள் 292: பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். http://www.thirukkural.com/2009/01/blog-post_6053.html https://www.thirukkural.net/ta/kural/adhigaram-030.html1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ? உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ? பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான் ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை. ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.1 point- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
இந்தக் காணொளியில் முதல் பேச தொடங்குபவர் எமது உறவினரும் ஊராவருமாவர். இணைப்புக்கு நன்றி நுணா.1 point- கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
ஆரம்பத்திலேயே, இவர்களுடைய வருகை பொருத்தமான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். முதற்கோணல் முற்றும் கோணல் என்று குறிப்பிட்டது இதற்காகத்தான்.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
அங்கே படிச்சு லைசைன்ஸ் எடுத்தவன்களே சட்டதை மதிப்பதில்லை. கண்டபடி ஓட்டுகிறார்கள். இனி இங்கே காரே ஓட்டாதவன் லைசென்ஸ் இல்லாதவன் எல்லாம் இதை எடுத்து????1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது? SelvamMar 24, 2024 17:36PM திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மார்ச் 29-ஆம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “ரிமோட் எடுத்து டிவியில அடிச்சீங்களே, அந்த ஆளு தான இப்போம் திமுக கூட்டணிக்கு போகுறீங்கன்னு சொல்றாங்க… ரிமோட் இன்னும் என் கையில தான் இருக்கிறது. டிவியும் அங்கே தான் இருக்கிறது. நம் வீட்டு டிவி, நம் வீட்டு ரிமோட். ஆனால், அந்த டிவிக்கான கரண்ட்டையும், ரிமோட்டுக்கான பேட்ரியையும் மத்தியில் ஒரு சக்தி உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதை நான் இனிமேல் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செய்கைகளுக்கு இனி அர்த்தமே இல்லாமல் போய்விடும். நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியதில்லை. அரசியல் களத்தில் தன் எதிரி யார் என்பதை முடிவு செய்தால் தான் வெற்றி நிச்சயம். நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் அரசியல் எதிரி என்றென்றும் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை சாதியம் தான். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் எத்தனை பேர் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதனைதொடர்ந்து கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார பயண திட்டம் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 29 – ஈரோடு மார்ச் 30 – சேலம் ஏப்ரல் 2 – திருச்சி ஏப்ரல் 3 – சிதம்பரம் ஏப்ரல் 6 – ஸ்ரீபெரும்பதூர், சென்னை ஏப்ரல் 7 – சென்னை ஏப்ரல் 10 – மதுரை ஏப்ரல் 11 – தூத்துக்குடி ஏப்ரல் 14 – திருப்பூர் ஏப்ரல் 15 – கோவை ஏப்ரல் 16 – பொள்ளாச்சி https://minnambalam.com/political-news/kamal-haasan-starts-election-campaign-dmk-alliance/1 point- அடேங்கப்பா😲 | யாழில் குவிந்த அழகிகள்💃 | Jaffna Bridal Show | Ks Shankar | Sri Lanka
எல்லோருமே அழகிகள்தான் சந்தேகமில்லை.........! 😁 ஒரு சந்தேகம்: மணமானவர்களும் மறுமணத்திற்காகவும் வந்திருப்பார்களோ .......! 😴 இணைப்புக்கு நன்றி ஏராளன் ........!1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எனக்கு ஏன் தனிப்பட்ட காழ்ப்புணர்வு வரவேண்டும். நான் திராவிடனுமல்ல ஆரியனும் அல்ல. நான் ஒரு தமிழன். நாடு முன்னேறி என்ன பயன். எல்லாம் சாதிவாரியாக இருக்கும் போது திராவிடம் ஏன் என்றுதான் கேட்கின்றேன். உங்களுக்கு நேரம் இருந்தால் திராவிட கொள்கைகள் என்னவென்பதை பத்து வரியில் எழுதிவிடுங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.1 point- வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன் வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு கட்சிகளை ஒன்றிணைக்கத்தக்க பலத்தோடு ஒரு கட்சி பலமானதாக மேற்கிளம்ப வேண்டும். எதுவாயினும் சிவராத்திரியன்று கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டது வரவேற்கத்தக்கது. இது போன்ற “கலெக்டிவ்” ஆன அதாவது ஒன்றிணைந்த கூட்டு முயற்சிகள்தான் வெற்றியளிக்கும் என்பதற்கு இங்கு அரசியல் அல்லாத வேறு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். எங்களில் எத்தனை பேர் எமது வீடுகளில் உள்ள தென்னை மரங்களில் விளைச்சல் குறைந்து வருவதை அவதானித்திருக்கிறோம்? தென்னோலைகளில் மேற்பரப்பில் கறுப்பாக எண்ணெய்த் தன்மையோடு ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஓலைகளின் கீட் பகுதிகளில் பூஞ்சனம் போல வெள்ளையாக ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது தென்னை மரங்களில் இருந்து தொடங்கி கொய்யா,மா,நாவல்,வாழை, வெண்டி, எலுமிச்சை, செம்பருத்தி, சீத்தாப்பழம், கருவேப்பிலை என்று ஏனைய மரங்களின் மீதும் பரவுகிறது. ஒரு வீட்டில் மட்டுமல்ல, ஒரு கிராமம், ஒரு பிரதேசம் முழுவதும் அது பரவி வருகின்றது. குறிப்பாக வெக்கையான காலங்களில் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ-Spiral Whitefly(Aleurodicus disperses)-அதுவென்று துறைசார்ந்த திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு இலக்காகிய தென்னோலைகள் சத்திழந்து, காய்ந்து கருகி ஒரு கட்டத்தில் மட்டையோடு கழண்டு விழுகின்றன. கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ,நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன,ஆரியகம,பட்டுலுஓயா,முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகப் பரவும் வெள்ளை ஈயினால் இலங்கையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் தென்னந் தோப்புகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மழைக் காலங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் குறைவாக இருக்கின்றது. தென்னோலைகள் கழுவப்படும் போது வெள்ளை ஈயின் பெருக்கம் குறைகிறது. ஆனால் வறட்சியான காலங்களில் வெள்ளை ஈ தென்னந் தோப்புக்களுக்கு எதிராக ஓர் உயிரியல் போரைத் தொடுக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய அந்த அமைப்பின் தலைவராகிய ஐங்கரநேசன் வெள்ளை ஈ தொடர்பாகவும் சுட்டிக்காட்டினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒஸ்ரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழர் கூறிய ஒரு பரிகாரத்தை அவர் மேடையில் வைத்துச் சொன்னார். வீடுகளில் நாங்கள் பயன்படுத்தும் சலவைத் தூளில் இரண்டு அல்லது மூன்று கரண்டிகளை எடுத்து 5 லிட்டர் நீரில் கரைத்த பின் அதனை தென்னோலைகளுக்குத் தெளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சலவை தூளுடன் ஒரு மரத்துக்கு 200 மில்லி லீட்டர் வேப்பெண்ணெயையும் கலந்து அடித்தால் பயன் தரும் என்று தென்னை பயிர்ச் செய்கை சபையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். குறிப்பிட்ட கலவையை தென்னோலைகளின் மீது தெளிப்பதற்கு உயர் அழுத்தப் பம்பிகள் தேவை. வடபகுதி தென்னை பயிர்ச் செய்கை சபையிடம் 10 பம்பிகள் உண்டு என்று கூறப்படுகிறது. சீனாவில் இருந்து சிறிய பம்பி ஒன்றை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று ஒரு வணிகர் கூறினார். வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தத் தவறினால், ஒருகட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படும். அது நேரடியாக வயிற்றில் அடிக்கும். இறுதிக்கட்டப் போரில் தேங்காய்க்கு அலைந்த ஒரு மக்கள் கூட்டம் நாங்கள். இறுதிக் கட்டப் போரில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆனந்தபுரத்தில் நடந்த சண்டையோடு பெரும்பாலும் தேங்காய் இல்லாமல் போய்விட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரையில் தென்னைகள் இருந்தன. ஆனால் அங்கிருந்த அசாதாரண சனத்தொகைக்குப் போதுமான தேங்காய்கள் இருக்கவில்லை. ஆனந்தபுரத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிக தென்னை மரங்கள் இருந்தன. ஆனந்தபுரத்தை இழந்ததோடு தேங்காய்த் தட்டுப்பாடு தொடங்கியது. அதன் பின் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்குத் தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக பால்மாவை பயன்படுத்தப்பட்டது. ஒரு கஞ்சிக்கலயத்துக்கு இரண்டு பால்மா பக்கெட்டுகள். அது போர்க்காலம். ஆனந்தபுரத்தோடு தேங்காய் இருக்கவில்லை. ஆனால் இப்பொழுது 15 ஆண்டுகளின் பின் வெள்ளை ஈ ஏறக்குறைய ஒரு போரைத் கொடுத்திருக்கிறது. அது ஒரு கூட்டுத் தாக்கம். இத்தாக்கத்திலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்கத் தவறினால் தேங்காய்க்கு அலைய வேண்டி வரும். தேங்காய் எண்ணையின் விலை கூடும். தேங்காய் எண்ணெயை பயன்படுத்தும் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் கூடும். பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துவிட்டது. இப்பொழுது ஒரு லிட்டர் 600 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை போகிறது. நுகர்வுக் கலாச்சாரத்துள் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய நல் விளைவுகளில் ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேங்காய் எண்ணையின் தரம் குறித்த சந்தேகங்கள், சமூக வலைத்தளங்களில் பரவலாக வரத் தொடங்கிய ஒரு பின்னணியில், வீட்டில் தென்னைகளை வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தேவையான தேங்காய் எண்ணெயைத் தாங்களே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். அது ஒரு அற்புதமான செயல். தமிழ்ப் பகுதிகளில் அதிகம் தென்ன மரங்களைக் கொண்ட காணிகளை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தேங்காய் எண்ணெயைப் பல்பொருள் அங்காடிகளில் வாங்குவதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், இப்பொழுது வெள்ளை ஈ எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. வெள்ளை ஈயின் உயிரியல் எதிரிகளான பூச்சிகளை, வண்டுகளைப் பெருக்குவதின்மூலம் அதைக் கட்டுப்படுத்தலாமா என்று தென்னை பயிர் செய்கை சபை கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு பரிசோதனை முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. அதன் விளைவுகள் விரைவில் தெரிய வரலாம் என்று கூறப்படுகின்றது. வெள்ளை ஈயின் தாக்கத்துக்கு உள்ளாகிய தென்னை மர உரிமையாளர்கள், தென்னை பயிர்ச் செய்கை சபையை அணுகி பரிகாரத்தைப் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.ஒவ்வொரு பிரதேசத்துக்கும் உரிய கமநல சேவை நிலையத்தில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒரு பிரிவு இயங்குவதாகவும் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளைச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது சில பண்ணையாளர்கள் அதற்கு தீர்வு காண்பதன்மூலம் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த முடியாது. அது ஒரு கூட்டுத் தாக்கம். ஒரு முழுப் பிரதேசத்தையும் அது தாக்குகின்றது. ஒரு வீட்டில் கட்டுப்படுத்தினால் சிறிது காலத்தின் பின் பக்கத்துக்கு வீட்டிலிருந்து வெள்ளை ஈ மீண்டும் வரும். எனவே ஒரு வீட்டில் அல்லது ஒரு பண்ணையில் மட்டும் அதை கட்டுப்பட்டுவதால் பிரியோசனம் இல்லை. அதை முழுச் சமூகத்துக்கும் உரிய ஒரு கூட்டு செயற்பாடாக முன்னெடுத்தால் மட்டுமே வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தமிழ் மக்கள் முள் முருக்கு மரத்தை பெருமளவுக்கு தொலைத்து விட்டார்கள். தமிழ் பண்பாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்வாகிய திருமணத்தில் கன்னிக்கால் என்று கூறி நடப்படுவது முள்முருக்கு. முள் முருக்கில் ஏற்பட்ட ஒரு நோய்த் தாக்கம் காரணமாகவும் நகரமயமாக்கத்தின் விளைவாக உயிர் வேலிகள் அருகிச் செல்வதன் காரணமாகவும் முள் முருக்கு அழிந்து செல்லும் ஒரு தாவரமாக மாறி வருகிறது. தமிழ் மக்கள் மத்தியில் உயர் கல்வி நிறுவனங்களில் தாவரவியல் ஓர் ஆராய்ச்சிப் பிரிவாக உண்டு. தமிழ் பண்பாட்டில் தனக்கென்று தவிர்க்க முடியாத ஒரு தாவரவியல் இருப்பைக் கொண்டிருக்கும் முள்முருக்கைக் காப்பாற்ற ஏன் அதில் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் அல்லது புலமையாளர்களால் முடியவில்லை? திருமணங்களில் முள்முருக்கிற்குப் பதிலாக குரோட்டன் முருக்கந்தடியைப் பயன்படுத்துவதுபோல, தேங்காய்க்குப் பதிலாக வேறு எதையாவது பயன்படுத்தப் போகிறோமா? முள் முருக்குப் போலவே வெள்ளை ஈயின் விடயத்திலும் பொருத்தமான துறை சார்ந்த ஆய்வுகள் அவசியம். வடக்குக் கிழக்குப் பகுதிகள் உலர் வலையத்துக்குரியவை. நாட்டில் உலர் வலையத்துக்கு என்று தென்னை ஆராய்ச்சி மையம் எதுவும் கிடையாது. அதனால், உலர் வலையத்துக்குரிய தென்னை ஆராய்ச்சி மையம் ஒன்று தமிழ்ப் பகுதிகளில் உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, வெள்ளை ஈயிடமிருந்து தமிழ்ச் சமையலைப் பாதுகாக்க, துறைசார் ஆராய்ச்சியாளர்களும் திணைக்களங்களும் சமூக நலன் விரும்பிகளும் சுற்றுச்சூழலியலாளர்களும் கிராமமட்ட அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும் ஊடகங்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுவாக சமூகம் தழுவிய கூட்டு முயற்சிகள் என்று வரும்பொழுது அங்கே அரசியல் தலைமைத்துவம் அல்லது சமூகச் செயற்பாட்டு அமைப்புக்களின் தலைமைத்துவம் தேவைப்படுவதுண்டு. எனவே வெள்ளை ஈ தமிழ் மக்களின் சாப்பாட்டு மேசைக்கு வரமுன்னரே அதைத் தடுக்கும் முயற்சிகளில் கூட்டாகத் தமிழ்ச் சமூகம் இறங்க வேண்டும். வெடுக்குநாறி மலையில் உள்ள தமிழ் மரபுரிமை சின்னத்தைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்க்கட்சிகள் ஒன்று திரண்டதைப்போல. https://www.nillanthan.com/6647/1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் உள்ள காழ்ப்புணர்வால் உங்கள் கற்பனையில் தோன்றுவதை யதார்த்தம் என்று நினைத்து எழுதுகிறீர்கள். மேலே இணைத்த கட்டுரையையாவது வாசித்திருக்கலாம்.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
கஷ்டபட்டு வேலை செய்து நாட்டை முன்னேற்றம் காண முடியாதா பஞ்சி பிடித்த சோம்பேறி சிங்களம் வெளிநாட்டில் இருந்து வருபவனிடம் காசு கறக்க புதிது புதிதாய் அலுவல் பார்க்குது . அந்த நாட்டில் முக்கிய சிங்கள அரசியல்வாதியே மோட்டர் வேயில் அடிபட்டு சாகிறான் இதற்குள் இவர்கள் வேறை ................................1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான் எப்போதும் தலை வணங்குபவன். ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும்.1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
கொல்லப்பட்ட 133 அப்பாவிகளுக்கும் ஆழந்த இரங்கல்கள். இதனை எவர் செய்திருப்பினும் கண்டிக்கப்பட வேண்டியதே. உக்ரேன் இத்தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்று கூறுவது பிரச்சாரத் தந்திரமே அன்றி வேறில்லை. இதனை ரஸ்ஸிய மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரேன் எல்லைகளூடாகத் தப்பிச் செல்ல முனைந்தார்கள், ஆகவே உக்ரேனில் இருந்து வந்தவர்கள் தான் என்று வாதிடுவது போலத் தெரிகிறது. ஆனால், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்கள். மிகக் கொச்சையாக ரஸ்ஸிய மொழி பேசும் இவர்கள் தஜிக்கிஸ்த்தான் மொழியை ஒத்த மொழொயைப் பேசுபவர்கள் போலத் தெரிகிறது..90 களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து போன முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களில் ரஸ்ஸியா நடத்திய போர்களின்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களே இதனைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. செச்சென் இஸ்லாமிய பயங்கரவாதிகள் முன்னரும் ரஸ்ஸியாவில் தியெட்டர்கள், பாடசாலைகள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அவ்வாறனதொரு தாக்குதல்தான் இது. இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointயூடுப்பில் 40தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை பார்த்தேன் வீரப்பனின் மகள் இந்த பாராளமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுறா வீரப்பனின் மகளின் பெயரை சொன்னதும் கை தட்டல் கூச்சல் அதிகம் வெளிப்படையாய் சொல்லனும் என்றால் அந்த இடமே அதிர்ந்தது👍👏.................1 point- பிஞ்சுக் காதல்…
1 pointஅழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள்.1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Power comes with responsibility. நீங்கள் விரும்பியபடி எதையும் கதைக்கலாம், எழுதலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு nobody. அதாவது மிகச் சாதாரண மனிதன். எத்தகைய பொறுப்புக்களிலும் இல்லை. விசுகரின் நிலை அப்படி அல்ல. அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருக்கு பொறுப்பு இருக்கிறது. அது காலம் முழுவதும் தொடரும்.1 point- ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இதற்குள். ஏன் புலிகளை இழுத்து கருத்துகள் எழுதுகிறீர்கள் ..கொலைகளை இரசிக்க ரஷ்யா தான் தேவையா உலகில் 200. நாடுகளுக்கு மேல் கொலைகள். நாளாந்தம் நடக்கிறது இல்லையா?? அவற்றை எல்லாம் நாங்கள் இங்கே குறிப்பிடவில்லையே ஆகவே கொலைகளை இரசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் மேலும் புட்டினின். மனநிலையில் கொள்கையில். அவரது படையணிகள் பூரணமாக இல்லை என்பதை கவனியுங்கள்1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சரியான பார்வை🙏👍நன்றி..................... கால நீர் ஓட்டத்தில் திராவிடம் அழிந்து போகும் திமுக்கா தான் திராவிடத்தை தூக்கி பிடிக்கினம் இன்னொரு திராவிட கட்சியான ஆதிமுக்கா திராவிடத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை..........................................................1 point- ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
1 point- என் இந்தியப் பயணம்
1 pointசிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்1 point- சோழ, பாண்டிய மன்னர்கள் 1,000 ஆண்டுக்கு முன்பு பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சியை எவ்வாறு சமாளித்தனர்?
முன்னோர்கள் முன்னேற்பாடாக பலப்பல காரியங்களைச் செய்து வந்துள்ளனர்.......... இப்போது உள்ளதுபோல் ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்களில் கட்டிடங்கள் கட்டும் கலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை........! 😁1 point- என்னோட சாதி..
1 pointபவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நான் சீமான் கட்சி ஆதரவாளன். இருந்தாலும் வட நாட்டு கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்றக்கூடாது என்பவர்களுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.1 point - நானும் கவிதாயினியும்.....💕
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.