Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    1487
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    14
    Points
    46790
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19129
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/02/24 in all areas

  1. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  2. யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம் 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கும். சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன் சென்ற போது நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது. பனைமரத்தில் ஏறிய இந்த நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்." என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள். இது சம்பந்தமான விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும், முதல் கட்டமாக நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார். Kaathilai puu. Com
  3. மேற்குநாட்டு நிவாரணப் பணியாளர்கள் உட்பட 7 பணியாளர்கள் இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முற்றான முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டு, செயற்கையான பட்டினிச்சாவினை எதிர்நோக்கியிருக்கும் மில்லியன் கணக்கான பாலஸ்த்தீனர்களுக்கு நிவாரணம் வழங்கவென வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சென் (World Central Kitchen) எனும் நிவாரண அமைப்பு முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் பகுதியில் இயங்கி வருகிறது. அடைபட்டிருக்கும் பலஸ்த்தீனர்களின் வெறும் 30 வீதமானவர்களுக்கு மட்டுமே போதுமான நிவாரணப் பொருட்களை இஸ்ரேல் அனுமதித்திருக்கும் இவ்வேளையில், இப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணியிலேயே இப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரு வாகனங்களில் புறப்பட்ட இப்பணியாளர்கள், தமது வாகன விபரங்கள், அடையாளங்கள், செல்லுமிடம் போன்ற அனைத்து விபரங்களையும் இஸ்ரேலிய இராணுவத்திடம் அறிவித்த பின்னரே தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், தமக்கு வழங்கப்பட்ட வாகன அடையாளங்களை வைத்தே இஸ்ரேலிய விமானப்படை இவ்வாகனங்களை யுத்த சூனிய வலயம் என்று இஸ்ரேலினால் அறிவிக்கப்பட்ட பகுதியில் வைத்துத் தாக்கியழித்திருக்கிறது. இத்தாக்குதலில் 4 மேற்குநாட்டு பணியாளர்கள் உட்பட ஏழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்க கனேடிய பிரஜாவுரிமை பெற்ற ஒருவர், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்தவர்கள், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் போலந்து நாட்டவர் என சிலர் அடக்கம். இந்த நிவாரணப் பணியகத்தின் நடத்துனர் இத்தாக்குதல் குறித்துப் பேசுகையில், நாம் வழங்கிய வாகன விபரங்களைக் கொண்டே எமது பணியாளர்களை இலக்குவைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். வழமை போல இத்தாக்குதல் குறித்து தகவல் ஏதும் இல்லை, வேண்டுமானால் விசாரித்துப் பார்க்கலாம் என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் கூறியிருக்கிறார். சுமார் 2.2 மில்லியன் பாலஸ்த்தீனர்களை செயற்கையான பட்டினிச் சாவிற்கு தள்ளிச் சென்றிருக்கும் இஸ்ரேல், வேண்டுமென்றே இம்மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் அளவை குறைத்து அனுமதித்து வருவதுடன், அத்தியவசியமாகத் தேவைப்படும் மருந்துப் பொருட்களையும் தடை செய்திருக்கிறது. 2008 - 2009 இல் வன்னியில் சிங்கள மிருகங்களால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த 420,000 தமிழர்களுக்கு வெறும் 25 வீதமான உணவுப்பொருட்களை மட்டுமே அனுமதித்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வைத்தியசாலைகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்ட புவியியல் அமைவிடப் புள்ளிகளைப் பயன்படுத்தியே அவ்வைத்தியசாலைகள் மீது இலக்குவைத்து தாக்கி பல நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட, சிங்கள இராணுவம் நடத்திய அட்டூழியங்களை ஒத்தவை இத்தாக்குதல்கள். பாலஸ்த்தீன மக்கள் மீதான அப்பட்டமான இனக்கொலையில் இதுவரை இஸ்ரேலிய மிருகங்கள் 33,000 அப்பாவிகளைப் படுகொலை செய்திருக்கின்றன. இஸ்ரேலிய இனக்கொலையினை ஆதரிக்கும் அன்பர்களுக்கு இது சமர்ப்பணம். https://edition.cnn.com/2024/04/01/middleeast/world-central-kitchen-killed-gaza-intl-hnk/index.html
  4. சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும். இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இஸ்ரேல், சிரியாவில் அவர் நடமாடியவேளை கொன்றிருக்கிறது. 2020 இல் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய மூத்த தளபதியான அல் சுலைமானியின் இழப்பிற்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கும் ஈரானின் மிக முக்கிய தளபதி இவரென்பது குறிப்பிடத் தக்கது. இவரது படுகொலைக்குப் பழிவாங்கியே தீருவோம் என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இஸ்ரேலுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நேரடியான மோதலொன்றைத் தவிர்க்க விரும்பும் ஈரான், தனது முகவர்களான லெபனானின் ஹிஸ்புள்ளாக்கள், யெமெனின் ஹூத்திகள், ஈராக் ‍- சிரியாவில் இயங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://edition.cnn.com/2024/04/02/middleeast/iran-response-israel-damascus-consulate-attack-intl-hnk/index.html
  5. ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை. சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால் சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த திருட்டுக்கூட்டம் இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும் இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை ஈழத்தில் தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது. தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல் போய்க்கொண்டுதான் இருக்கிறது
  6. Solid shot. இங்கே எல்லாருக்கும் தமிழக அரசியல்வாதிகள் எல்லாரும் பொய்யர்கள், சந்தர்பவாதிகள், ஊழல்வாதிகள் என்பது தெரியும். ஆகவே அதை பற்றி அலட்டி கொள்ள தேவை இல்லை. அது அவர்கள் விடயம், நாம் விலகி நின்று எல்லாருடனும் சம தூரத்தில் நின்று பழகலாம். புலிகள் அப்படித்தான் பழகினார்கள். ஆனால் @பாலபத்ர ஓணாண்டி போன்றவர்களே…சும்மா வாய்ப்பேச்சுக்கு “தலையிடாமை” பற்றி கதைத்தாலும், மிச்சம் எல்லாரும் கள்ளன், சீமான் மட்டுமே சொக்கத்தங்கம் என்ற ரீதியில்தான் எழுதுகிறார்கள். உதாரணமாக பொம்பிளை விசயத்தில் சகல தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் மோசம் என நாம் கூறிய போது, விஜி அண்ணி விடயத்தில் ஓணாண்டி எட்டாக வளைந்து சீமானுக்கு முட்டுக்கொடுத்தார். இப்படியாக சீமான் ஏனையோரை விட திறம் என நிறுவ, பிரச்சாரம் செய்ய விழையும் போதுதான், அவரும் இன்னொரு தமிழக அரசியல் கழிசடைதான் என்பதை உரக்க சொல்ல வேண்டியதாகிறது.
  7. [1] அறம் பாடுதல் என்பது தமிழ் இலக்கியத்தில் ஒரு கவிஞன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணரும்போது அநீதி இழைத்தவர் அழியவேண்டும் என்று சாபமிட்டு பாடல் எழுதும் செயலாகும். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஒரு சவம், தனது இறுதி சடங்கில் காணும் அனுபவமே தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் இறுதி வேண்டுகோளுடன் [2] அதற்கு முன் இறுகிப் போயிருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாமல் விரலை வெட்டி எடுத்ததைக் காணேலையோ? கட்டாயம் என் அனுபவத்தில், நான் கண்டதில், அப்படியான தரம் குறைவான நிகழ்வு ஒன்றும் இல்லை. நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  8. எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது. ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை! உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  9. இதையே தான் அமெரிக்காவில் ட்ரம்பின் பின்னால் திரியும் வெள்ளைக் காரர்களும் (சில பிறவுண் தோல் ஆசியர்களும்) கேட்கீனம்: "all men are created equal" என்று இருக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு ஏன் affirmative action மூலம் இட ஒதுக்கீடு? இதைக் கொஞ்சம் திருத்தி, இடம் மாற்றிக் கேட்டுப் பாருங்கள்: "சிறிலங்கன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழருக்கு தனியான சுயாட்சி என்ற கோஷம்?"😎 புரிகிறதா?
  10. "அறம் பேசுமா?" அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இறந்து விடுகிறான். அறம் அவனை காக்கவில்லை. அறத்திற்கு எதிரானவனின் பக்கம் போய், அவனை கடவுளாகவும் பிற்காலத்தில் ஆக்கிவிட்டது. புண்ணியம் செய்தவன் இறந்து விட, அந்த புண்ணியத்தை ஏமாற்றி பெற்றவன் கடவுளாகிறான். இது தான் என் மனதை குழப்பிக் கொண்டு இருந்தது. அன்று தீபாவளியை எம் பாடசாலை கொண்டாடிக்கொண்டு இருந்தது. என் மனக் குமுறல் எரிமலையாக வெடித்தது. நான் எப்படியோ துணிவை வரவழைத்து, அதிபரிடம், மிக பணிவாக என் கருத்தை கூறி, நான் இன்று இரவு நடக்க போகும் மகாபாரத நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் போட மாட்டேன் என்று திடமாக, ஆனால் அடக்கமாக கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்திற்கு கூட்டி சென்று, நீ நடிக்கிறாய் , இல்லை என்றால் பாடசாலையில் இருந்து விலத்துவோம் என்று வெருட்ட தொடங்கினார். நான் மிக பணிவாக என் நிலையை காரணத்துடன் கூறினேன். அவர் என்னை பிரம்பால் அடித்து, ஒரு மாதம் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன். நான், என் மனதில் இருந்த உண்மையை, பொய் கூறாமல், உண்மைக்கு புறம்பாக நடிக்காமல், அதை அப்படியே கடைபிடிக்க விரும்பினேன். அதையும் அடக்கத்துடனும் பணிவுடனும். ஆகவே எனக்கு இந்த தண்டனைகள் ஒரு வேதனையையும் தரவில்லை. பொய் பேசாமலிருப்பது சிறந்த அறம். அதை நிஜமாகவே கடைபிடிப்பவர்களுக்கு தர்மங்கள் செய்யத் தேவையே இல்லை என்ற திருவள்ளுவரின் குறள் தந்த இன்பத்துடன் வீடு சென்றேன். "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று." (குறள் – 297) அதன் பின் நான் பல்கலைக்கழகம் நுழைந்து பொறியியலாளராகவும் பட்டம் பெற்றேன். என் முதல் நேர்முகப் பரீடசைக்கு அன்று சென்று இருந்தேன். என் பாடசாலை அல்லது பல்கலைக்கழக வாழ்வில் நடந்த, மறக்க முடியாத சம்பவம் ஒன்றை கூறச் சொன்னார்கள். நானும் எந்த பொய்யும் சொல்லாமல், எனக்கு நடந்த பிரம்படியையும், தற்காலிக நீக்கத்தையும் அதற்கான காரணத்தையும் கூறினேன். அவ்வளவுதான், நீங்க போகலாம் என ஏளன சிரிப்புடன் உடனடியாக முடித்து விட்டார்கள். அது ஏன் என்பது ஒரு மாதம் கழித்து வந்த ' உங்கள் தேர்வு வெற்றி பெறவில்லை' என்ற வாசகம் எனக்கு தெரிய படுத்தியது. அங்கு ஒரு பொய் சொல்லி இருந்தால் அல்லது மறைத்து இருந்தால் கட்டாயம் வேலை கிடைத்து இருக்கும். ஆனால் நான் கவலைப் படவில்லை. அறம் பேசுதோ பேசவில்லையோ, முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கை என்னை மீண்டும் விண்ணப்பம் செய்ய வைத்தது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. குமாரசாமியின் தனிமடல் பெட்டி நிறைந்துவிட்டது. அவர் தேவையற்ற தனிமடல்களை அழித்தால் மறுபடி இயங்கும்.
  12. (குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.
  13. தமன்னா காவோலை தா…காவோலை தா என்றுதானே கேட்டவா? ஏன் மரத்தையே வெட்டி கொடுத்துள்ளார்கள்🤣. பிந்திய செய்தி வெட்டிய மரம் எட்டுக்கோடிக்கு ஏலம் போனது🤣
  14. இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அயல்நாடுகளின் உதவியுடன் கமாஸ் போல வன்னியிலிருந்து ஒரேநாளில் 5000 ரொக்கட்டுகளை ஏவியபடி சிங்களவன் தேசத்திற்குள் நுழைந்து 1300 பேரை பாலினம் வயசு பாராமல் வகை தொகையின்றி கொன்று குவிக்கவில்லை, இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த எந்த வகையிலும் யுத்தத்திற்கு சம்பந்தமில்லாத மக்களை ஓட ஓட கொல்லவுமில்லை. அப்பாவி சிங்கள பெண் ஒருவரை நிர்வாணபடுத்தி என்னை கொல்லாதீர்கள் என்று கெஞ்ச கெஞ்ச கொன்று உடல்மேல் எச்சி துப்பி அவள் உடல்மேல் உக்கார்ந்து இருந்து சுற்றி வர நின்று கொண்டாடவுமில்லை. தள்ளாடும் முதியவர்களிலிருந்து தளிர்கள் வரை பயணகைதிகளாக பிடித்து வந்து இன்றுவரை கொடூரமாக அடைத்து வைக்கவுமில்லை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இருந்து மேற்குலகில் நடத்தப்படும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை பாலஸ் தீனர்கள் பண்ணுவதுபோல் கொடிகளை கைகளில் ஏந்தியபடி பெண்கள்ள் சிறுவர்கள் அனைவரும் உற்சாக கோசமெழுப்பியபடி கொண்டாடியதும் இல்லை. எம் மண்ணை அபகரிக்க முனைந்தவர்களுடன் இறுதிவரை போரிட்டோம் அதுதான் வரலாறு,அதேபோல் தம் மண்ணை அபகரித்த இஸ்ரேல் ராணுவத்துடன் எவ்வளவு கொடூரமாக கமாஸ் மோதியிருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ அவர்கள் வீரத்தை பாராட்டியே தீருவோம். அதைவிட்டு கிழடு கட்டைகளிலிருந்து பச்சிளம் குழந்தைகள்வரை ஒரேநாளில் கொன்று பணயகைதிகளாக்கி வீரம் காட்டினால் வலிமையுள்ள எதிரி நிச்சயமாக போர் தொடுத்தே ஆவான், ஆனால் இஸ்ரேல் எல்லை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடுகிறது அதை மறுப்பதிற்கில்லை ஆனால் எம் பிரதேச பிரச்சனைகளை இவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை. இவர்களுக்கான அநீதியை கேட்க, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு பண்ண, இவர்களுக்காக போர் தொடுக்க, ஆயுதங்கள் , நிதி மருத்துவம் வழங்க மேற்குலகிலிருந்து அரபுநாடுகள்வரை தோள் நிற்கின்றன, ஆனால் நாம் எவரும் இல்லாமல் உரிமை மட்டும் கேட்ட ஒரே காரணத்துக்காக பூட்டிய அறையினுள் வைத்து கொல்லப்பட்ட மூட்டை பூச்சிபோல் நசுக்கி கொல்லப்பட்டோம் இன்றுவரை எவரும் பெரிதாக ஏனென்று கேட்கவில்லை, அப்பப்போ மனித உரிமை ஐநா பொறுப்புகூறல் என்பதோடு எம் கொலைகள் கணக்கிலெடுக்கப்படாது விடப்பட்டுவிட்டது. ஆனால் போர் ஆரம்பித்தநாளிலிருந்து அவர்களைபற்றி பேச அவர்களுக்காக வாதிட ஒட்டுமொத்த சர்வ வல்லமை பொருந்திய உலகநாடுகளும் போர் ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்தே அணியில் நிற்கின்றன, அதை இஸ்ரேல் செவிமடுக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை எங்கள் பிரச்சனை அல்ல, ஏனென்றால் எந்த துணை வலிமையும் இல்லாமையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதனால் வலிமையுள்லவர்களுக்கிடையிலான பிரச்சனைபற்றி நமது கருத்துக்கள் சபையினில் எடுபடாது. ஆனால் எமது பிரச்சனையும் அவர்கள் பிரச்சனையும் ஒன்றல்ல என்பதுபற்றி மட்டும் வாதிட முடியும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அப்பாவி வன்னி மக்கள் கொல்லப்பட்டதை இறுதி போருக்கு வாழ்த்து சொல்லி சிங்களத்துடன் கை குலுக்கிய வரலாறு பாலஸ்தீனத்துக்கு உண்டு. சொல்லபோனால் மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் தொகையைவிட மூன்றேநாளில் கொன்றொழிக்கப்பட்ட எம்மக்கள் தொகை இரண்டு மூன்று மடங்கு அதிகம், இஸ்ரேலிய இனகொலைகளை எவரும் ஆதரிக்க போவதில்லை, ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது என்பதே கடந்தகாலம், கணப்பொழுதில் கடந்தவைகளை மறந்துபோகும் எமக்கு இதுவும் பத்தோடு பதினொன்றுதான். மறுபடியும் உரக்க சொல்வதானால் மக்கள் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் மீண்டும் ஒருமுறை எம் மக்கள்மீது ஒரு படுகொலை நடத்தப்பட்டால் பாலஸ்தீனம் ஒருபோதும் எமக்காக குரல் கொடுக்காது, அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதும் என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்கள், அநியாயம் அக்கிரமம் என்பார்கள், பிறருக்கு வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள் இது அவர்களின் சுயரூபம் என்பதை உலகமே பார்த்திருக்கிறது இனியும் பார்க்கும் கேட்க நாதியின்றி அழிந்துபோன நாம் ,கேட்க பலர் இருக்கும் இவர்கள் போரை மெளனமாக கடந்து போவதை தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை , நாம் வழமைபோல வன்னியையும் பாலஸ்தீனத்தையும் ஒப்பிட்டு சிறந்த மனிதாபிமானிகளாக தொடர்ந்து செல்வோம். கொல்லப்பட்ட அனைத்து தரப்பு அப்பாவிகளுக்கும் கொல்லப்பட்டுவிட்ட ஒரு இனத்தின் சார்பில் அஞ்சலிகள்
  15. நீங்கள் சொல்வது சரிதான். இதை சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளிலும் கடைப்பிடித்திருக்கலாமே? ஆமைக்கறியை வைச்சு ஒரு புடி புடிக்கேல்லை? 🤣
  16. மதிய வணக்கம் கந்தையர்! 🙏🏼 இப்ப என்ரை கேள்வி என்னெண்டால் வடக்கு கிழக்கிலை இந்தியாவின்ரை ஆதிக்கம் இருக்குதோ இல்லையோ? ஈழத்தமிழர் பிரச்சனையிலை இந்தியா மூக்கை நுழைச்சு தானே வைச்சிருக்கு. இந்திய / தமிழ்நாட்டு அரசியல் ஈழத்தமிழருக்கு தேவையில்லை எண்டால் என்ன கோதாரிக்கு தமிழர் பகுதியிலை மட்டும் காந்திசிலை,நேரு அங்கிள் சிலை,ஔவையார் சிலை,எம்ஜிஆர் சிலை? (கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கேல்லை எண்டது வேறை விசயம்)😁 ஏன் எங்கடை சிலோன் ரமில்ஸ் அரசியல்வாதிகளும் இந்தியாவின்ர வாயை பாத்துக்கொண்டுதானே அரசியல் செய்யினம்? அப்பிடியிருக்க நாங்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி கதைக்கக்கூடாது? 😎 அது ⨡ வேண்டாம் ஆனால் இது வேணுமாக்கும் ↓ 🤣
  17. "உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும் துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம். துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும் யாரும் அவரை இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது, வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில், நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும் பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ தலையிடாமல் நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று. அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது. ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம் வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர, இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான். அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works: Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM. Rajaratna, Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards
  18. திராவிட சித்தாந்தம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது. பேதமற்ற ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவது. அதை நோக்கிய படிக்கட்டுகளை கட்டி எழுப்புவது. பெரியாரின் பல தசாப்ச போராட்டம் மனிதர்களுக்கு இடையிலான பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகும். அதற்காகவே தேர்தல் அரசியலில் பங்கேற்காது தனது சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அது தமிழ் நாட்டில் முழுமை பெற்று விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை இன்னும் முன்னேற பல விடயங்கள் உள்ளது என்பதே பதில். பத்தாம்பசலித்தனத்தில் இருந்து விடுபட்டு இன்னும் பல மாற்றங்களை அது உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் முன்னேற்றம் கண்டிருக்கிறதா என்றால் ஆம் என்று கூறலாம். தமிழ் நாட்டில் தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் அடிபடையற்ற போலி அறிவியலை முன்னிறுத்தும் காணொளிகளை உருவாக்கி அதை பரப்பிவருவதை நீங்கள் அவதானிக்கவில்லையா? தமிழ் தேசியம் உலகளாகிய ரீதியில் வலுப்பெற வேண்டுமானால் அறிவியல் ரீதியில் அது பலம் பெற வேண்டும். அப்போது தான் உலகில் மற்றய இனங்களுக்கு நிகராக தலைநிமிர்ந்த இனமாக எமது சந்ததி வாழமுடியும். இன்று தமிழ்தேசியவாதிகள் என்று கூறிக்கொள்வோர் செய்துவரும் போலி அறிவியலை ஊக்குவித்தல், பத்தாம்பசலித்தனம், விட்டுத்தொலைக்கவேண்டிய மூடப்பழக்கங்களுக்கு அறிவியல் முட்டுக்கொடுத்து அதை பரப்புவது, வெறுமனே உசுப்பேற்றுவது ஆகியவை தமிழருக்கு பெருமை தரும் விடயங்கள் அல்ல. ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம். அந்த பெயரில் அது தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக இருந்ததை அவதானித்துள்ளேன். ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும்.
  19. "என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  20. இந்த மேற்குலகு (ஜேர்மனி பெரிய அளவில்) மனிதருக்கு பங்கள் விளைவிக்கும் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகள் பக்கமே தள்ளி விடுகின்றார்கள். அதற்கென்று இப்படியான குப்பைகளை வாங்கும் மாஃபியாக்கள் உலகளவில் இருக்கின்றார்கள்.இதற்கும் அரசிற்கும் எவ்வித தொடர்புகளுமே இருக்காது. அழகான திருட்டு பொருளாதர உலகம். கொன்ரையினர் பிஸ்னஸ்.. உள்ளுக்குள் இருப்பது யாருக்கும் தெரியாது.
  21. ஜேசுவை கொன்றவர்கள் இனி ஒவ்வொருவராக கடவுள் வேடமிட்டு வலம் வரும் நிலை தொடரும்....
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 ஏப்ரல் 2024, 02:26 GMT “இந்த உலகில் ஒருவர் தவிர்க்கவே கூடாத உணவு என்றால் அது காலை உணவு தான். காலை உணவை ஒரு அரசன் உண்பது போல அதிகமாக உண்ண வேண்டும்”, இது போன்ற வாசகங்களை சில இடங்களில் படித்திருப்போம் அல்லது யாரேனும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் ஒரு அரசன் உண்பது போல காலை உணவுகளை உண்ண நேரம் இல்லை அல்லது அவ்வாறு உண்டு விட்டு அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளில் சென்று அமர்ந்தால் வேலை எங்கே நடக்கிறது, வகுப்பை எங்கே கவனிக்க முடிகிறது, தூக்கம் தான் வருகிறது என்று சொல்லி பலர் காலை உணவை தவிர்ப்பதையும் பார்க்கிறோம். அதேவேளையில் காலை உணவைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால் அல்சர் போன்ற பிரச்னைகள் வரும், உடல்பருமன் ஏற்படும், அந்த நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள், முக்கியமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு காலை உணவு அவசியம் என்ற எதிர்தரப்பு வாதமும் உள்ளது. தமிழ்நாடும் அரசும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருவதைப் பார்க்கிறோம். அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் 17 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள் என்கிறது தமிழ்நாடு அரசு. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இருக்க வேண்டும்? காலை உணவு என்பது அவசியம் தானா? தினமும் இட்லி, தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமா? போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொழில் புரட்சிக்குப் பிறகு காலை உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே அதிகரித்தது. காலை உணவின் வரலாறு “ஆங்கிலத்தில் ‘Break the Fast’ (விரதத்தை முறித்தல்) என்று கூறுவார்கள். இரவு உணவுக்குக்கும் காலை உணவுக்குக்கும் 8 முதல் 10 மணிநேரம் வரை இடைவெளி இருக்கும். அந்த விரதத்தை முறித்து உண்பதால் தான் Breakfast என்று பெயர்” என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். “விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்தக் காலை உணவு உண்ணும் வழக்கம் மனிதர்களிடம் ஏற்பட்டது. அப்போது கூட குழந்தைகள், முதியவர்கள், கடின வேலையுடன் நாளை தொடங்குபவர்கள் மட்டுமே காலை உணவை எடுத்துக்கொண்டனர். பலரும் ஒரு நாளின் முதல் உணவை மதிய நேரத்தில் தான் எடுத்துக் கொண்டார்கள்." "தொழில் புரட்சிக்குப் பிறகு இந்த வழக்கம் மாறியது. காரணம் ஷிஃப்ட் முறையிலான வேலை தொழிற்சாலைகளில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் எட்டு மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக காலை உணவு சாப்பிடாமல் மதியம் வரை பணி செய்ய முடியாது." "ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றவாறு இந்த காலை உணவு மாறியது. இவ்வாறு தான் காலை உணவை அனைவரும் உண்ணும் வழக்கம் வந்தது. இதைத் தொடர்ந்து காலை உணவுக்கென்று ஒரு தனி சந்தையே உருவானது” என்கிறார் மருத்துவர் அருண்குமார். தொடர்ந்து பேசிய அவர், “இன்றும் கூட பல நாடுகளில் காலை உணவாக குறைவான மாவுச் சத்துடைய எளிய உணவுகளையே எடுத்துக்கொள்கிறார்கள். மதிய வேளை தான் மாவுச் சத்து சற்று கூடுதலான உணவுகள் எடுத்துக் கொள்கிறார்கள். காலை வேளையில் மாவுச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம் தான் ஆனால் ஒவ்வொரு நபரைப் பொறுத்தும் அவர் பார்க்கும் வேலையைப் பொறுத்தும் அளவு மாறுபடும்” என்று கூறினார். பட மூலாதாரம்,DRARUNKUMAR/FACEBOOK படக்குறிப்பு, குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார். சிறந்த காலை உணவு என்றால் என்ன? காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு தான் அன்று நாள் முழுக்க நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் என்பதால், காலை உணவு அதிகமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்படுவது சரியா, ஒரு சிறந்த காலை உணவில் என்னென்ன இடம்பெற வேண்டுமென மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “எல்லோருக்கும் அவ்வாறு பொதுவாகச் சொல்லிவிட முடியாது. முதலில் ஒருவருக்கு உடல்பருமன், நீரிழிவு மற்றும் வேறு ஏதேனும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் இல்லை என்றால் அவர்களுக்கான சிறந்த காலை உணவு என்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்து மாறுபடும். ஒன்று அவர்களது வேலைப் பளுவைப் பொறுத்து. உடலுழைப்பு இருக்கும் வேலை செய்பவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே போதுமானது. இதுவே உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் வேலையிலும் அன்றாட வாழ்விலும் உடலுழைப்பு அதிகம் இல்லை என்றால் மாவுச்சத்து கொண்ட உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலுழைப்பு அதிகம் இல்லாத போது, அடுத்து ஒரு 4 முதல் 5 மணிநேரங்களில் மதிய உணவு எடுத்துக்கொள்வார்கள் என்பதால் உடலில் போதுமான சக்தி இருக்கும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES நீரிழிவு, உடல் பருமன் உள்ளவர்களுக்கான காலை உணவு. நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் காலையில் மாவுச் சத்து குறைவான உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் மருத்துவர் அருண்குமார். “அவர்கள் நட்ஸ், இரண்டு முட்டைகள், சுண்டல், போன்ற மாவுச் சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால் அவர்களது உடலில், இரவுக்கு பின் கிடைத்த நீண்ட இடைவெளியால் இன்சுலின் அளவு கட்டுப்பாடோடு இருக்கும், கொழுப்பு கரையும் செயல்பாடும் நடந்துகொண்டிருக்கும். அவர்கள் காலையில் அதிகளவு மாவுச் சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த செயல்பாடுகள் நின்றுவிடும். இதனால் நீரிழிவு பிரச்னையும், உடல் பருமனும் மேலும் அதிகரிக்கும்” என்று கூறுகிறார் மருத்துவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாமா? பழைய சாதத்துடன் சிறிது தயிர் கலந்து சின்ன வெங்காயம், வடாம் அல்லது வற்றல் கொண்டு சாப்பிடுவது தமிழ்நாட்டில் பலருக்கும் பிடித்தமான காலை உணவு. மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது, லாக்டோபாசிலஸ் என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகி நொதித்தல் செயல்முறை நடந்து புரோபயாட்டிக் உணவாக மாறுவது தான் பழைய சாதம். இதை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம். “பழைய சாதத்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது கண்டிப்பாக உடலுக்கு நல்லது தான். காரணம் அதில் புரோபயாட்டிக் எனும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் அதை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். அன்றாட வாழ்வில் அதிக உடலுழைப்பு இல்லாத வேலைகள் செய்பவர்கள் மிகக்குறைவாகவே அதை உண்ண வேண்டும். ஒரு சிறிய கிண்ணம்ம் அளவு பழைய சாதம் போதும். ஆனால் அதுவே விவசாயம் செய்பவர்கள், தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்கள் என்றால் திருப்தியாகவே காலை உணவாக பழைய சாதத்தை உண்ணலாம். இதே தான் இட்லி, தோசை, போன்ற உணவுகளுக்கும். அதிகளவு காலை உணவு உடலுக்கு தேவையில்லை” என்கிறார் மருத்துவர் அருண்குமார். படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. காலை உணவைத் தவிர்த்தால் என்னவாகும்? காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் மற்றும் அதைத் தொடர்ந்து தவிர்த்து வருபவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியிடம் கேட்டோம், “ஒரு நாளை ஆரோக்கியமாகத் தொடங்குவதற்கு காலை உணவு மிகவும் அத்தியாவசியமானது. காலை உணவில் 60 சதவிகிதம் வரை மாவுச் சத்து இருக்கலாம். அதன் பிறகு புரதங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகக் குறைவு. உதாரணமாக, இட்லி, காய்கறிகள் மற்றும் பருப்புடன் கூடிய சாம்பார் ஒரு நல்ல காலை உணவு. எத்தனை இட்லிகள் என்பது அவரவர் உடல் எடை, உயரம் மற்றும் உடலுழைப்பைப் பொறுத்து மாறுபடும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. “சிலர் இரவு உணவை அதிகமாக எடுத்துக்கொண்டு, காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இது மிகவும் தவறு. உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு. உடலின் சர்க்கரை அளவு குறையும். இதனால் நமது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்." "அதிலும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காலை உணவு கொடுக்க வேண்டும். காலை உணவைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு கற்றல் திறன் கூடுகிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES காலை உணவுக்கான சிறந்த நேரம் எது? அதே வேளையில் காலை உணவு என்ற பெயரில் எல்லா உணவு வகைகளையும் உட்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. “எண்ணெயில் பொரித்த உணவுகள், பூரி, சோலே பட்டூரே போன்றவை, அதிக மசாலா உடைய உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். காலை உணவில் அசைவம் குறைவாக எடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அரிசி உணவுகளை விட ஓட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லதா என கேட்டபோது, “ஓட்ஸ் நல்லது தான். ஓட்ஸ் உடன் சேர்த்து, நட்ஸ், பால், பழங்களை சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது மாவுச் சத்து, புரதம், வைட்டமின்கள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் அதை விட சிவப்பு அவல், சிறுதானியங்களை இதே முறையில் எடுத்துக்கொள்வது இன்னும் நல்லது” என்றார். காலை உணவு எடுத்துக்கொள்ள சிறந்த நேரம் எதுவென கேட்டபோது, “தூங்கி எழுந்து இரண்டு மணிநேரங்களுக்குள் எடுத்துக்கொள்வது நல்லது. பதினோரு மணிக்கு மேல் எடுத்துக்கொள்வது காலை உணவே இல்லை” என்றார். “முக்கியமான விஷயம், காலை உணவைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்ளும்போது அதீத பசியில் அதிகளவு உணவு உண்பார்கள். நாளடைவில் இது உடல் பருமனுக்கு வித்திடும். எனவே காலை உணவு என்பது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமானது, அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி. https://www.bbc.com/tamil/articles/ck5w6p0ej0xo
  23. 🙏........... விளையாட்டுகள் தான் நான் எழுதாதற்கு காரணம். எப்போதும் ஏதாவது விளையாடுவேன். மிகுதியாக கிடைக்கும் நேரத்தில் வாசிப்பு, சினிமா என்று போய்விடும். எப்பவோ ஆரம்பித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகின்றது. இப்பவாவது ஆரம்பித்தேனே என்று நிறைவடைய வேண்டியது தான்...........😀
  24. நீங்கள் கூறிய கருத்துக்கள் 200% சரியானது ...இதில் இந்தியாவுடன் சேர்ந்து பல மேற்கு நாடுகளும் செயல் படுகின்றது. சிறந்த உதாரணம் இனப்படுகொலை சிறிலங்காவில் நடந்த பொழுது பெரிதாக அலட்டி கொள்ளாத அவர்கள் ஈஸ்டர் படு கொலை நடந்த வேளை சிறுபான்மை மதங்களின் உரிமைகள் பாதுகாக்க பட வேணும் என பக்கம் பக்கமாக அறிக்கை விட்டனர் .. சாள்ஸ் அன்டணி என தனது மகனுக்கு பெயர் வைத்து தமிழர்கள் என்றால் கிறிஸ்தவர்களும்,சைவர்களும் என உலகுக்கு சொன்ன போராட்ட தலைவர் வாழந்த மண் தமிழ் கிறிஸ்தவர்களின் போராட்ட பங்களிப்பு என்பது அளப்பரியது
  25. சாதி வேறு இனம் வேறு இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுகின்றேன் 👈🏽 🙏🏼 குமாரசாமி ஆகிய நான் தமிழன் பொன்சேகா என்பவர் சிங்களவன் இது இனம் அவர் சிகையலங்காரம் செய்பவர் ஆகையால் அவர் அந்த சாதி என அழைக்கப்படுகின்றார். இவர் மேளம் அடிப்பவர் அதனால் அவர் இந்த சாதி என அழக்கப்படுகின்றார்.ஆனால் இருவரும் தமிழினத்திற்குள் அடங்குவர். கறுப்பர் வெள்ளையர் இவை இனத்தவர்கள். சாதியினர் அல்ல. தமிழினத்துக்குள் சாதி பிரிவுகள் இருக்கின்றது. இப்போது புரிகின்றதா? அல்லது மேலதிக விளக்கங்கள் தேவையா? வெட்கப்படாமல் கேளுங்கள். பூரண விளக்கம் தர காத்திருக்கின்றேன். 😎
  26. @இணையவன் எதற்காக ❤️ போட்டிருக்கிறீர்கள்? செய்தியை இணைத்ததற்காகவா அல்லது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதற்காகவா அல்லது ஈரானியத் தூதரகம் தாக்கப்பட்டதற்காகவா அல்லது ஈரானியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்காகவா,....... சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁
  27. விஜ‌ய‌காந் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிச்சு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌ ந‌ப‌ர் அதோடு அவ‌ர் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌வ‌ர்..............ஆர‌ம்ப‌த்தில் சொன்னார் தான் ம‌க்க‌ளுட‌ன் தான் கூட்ட‌னி வேறு க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌னி கிடையாது என்று 2011ம் ஆண்டு ஆதிமுக்கா கூட‌ குட்ட‌னி வைச்சு எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் ஆனார்................அத‌ற்க்கு பிற‌க்கு விஜ‌ய‌காந்தின் அர‌சிய‌ல் சிறு கால‌த்தில் அதிக‌ வீழ்ச்சி அடைந்த‌து ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னிக்கு பிற‌க்கு தே மு தி க்கா க‌ட்சியை யாரும் கூட்ட‌னிக்கு சேர்க்க‌ வில்லை க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் வாக்கு வித‌ம் 2க்கு குறைவு............... உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 2 தேர்த‌லோட‌ அவ‌ரின் க‌ட்சி ச‌ரி..............க‌ம‌ல் பெற்ற‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 4க்குள் என்று நினைக்கிறேன் ச‌ரி சீமானின் அர‌சிய‌லுக்கு வ‌ருவோம் சீமான் ஒன்றும் பெரிய‌ ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் கிடையாது குறைந்த‌து ஒரு சில‌ ப‌ட‌ம் தான் எடுத்தார் சில‌ ப‌ட‌ங்க‌ளில் சின்ன‌ க‌தா பாத்திர‌த்தில் ந‌டித்தார்....................விஜ‌ய‌காந் ம‌ற்றும் க‌ம‌லுட‌ன் ஒப்ப்பிடும் போது......................விஜ‌ய‌காந் க‌ம‌ல் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளால் ந‌ங்கு தெரிய‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள் ஆனால் சீமான் அப்ப‌டி இல்லை சீமான் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாக‌ அவ‌ரின் பேச்சு ம‌ற்றும் த‌மிழீல‌ தேசிய‌ த‌லைவ‌ரை நேசிக்கும் ம‌க்க‌ள் சீமான் பின்னால் போன‌வை ஆனால் சீமான் 2010க‌ளில் க‌ட்சி ஆரம்பிச்சார் க‌ம‌ல் 2017க‌ளில் க‌ட்சி ஆர‌ம்பிச்சார் க‌ம‌லை விட‌ சீமான் 2019 பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் அதிக‌ ஓட்டை பெற்றார் 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் முன்பை விட‌ கூடுத‌லா 13ல‌ச்ச‌ம் ஓட்டு கூட‌ பெற்றார்........................................ க‌ம‌லுட‌ன் ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சு கூட‌ இவ‌ர்க‌ளால் த‌மிழ் நாட்டில் மூன்றாவ‌து இட‌த்தை கூட‌ பிடிக்க‌ முடிய‌ல‌......................ஆனால் த‌னித்து நின்ற‌ நாம் த‌மிழ‌ர் மூன்றாவ‌து இட‌த்தை பிடிச்ச‌து............................சீமானின் வாக்கு ச‌த‌வீத‌ம் ஏறிட்டு தான் போகுது..................விவ‌சாயி சின்ன‌த்தை ஏன் ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்தார்க‌ள் என்று இந்தியா நாட்டை ஆளும் வீஜேப்பிக்கு ந‌ங்கு தெரியும் சீமானின் வ‌ள‌ர்ச்சி எதை நோக்கி போகுது என்று 30ல‌ச்ச‌ ஓட்டும் ச‌ல்லி பைசா குடுக்காம‌ கிடைச்ச‌ ஓட்டு.......................யாழில் சில‌ர் சீமானின் வ‌ள‌ர்ச்சிய‌ பார்த்து பொறுத்து கொள்ள‌ முடியாம‌ எரிச்ச‌லில் வ‌ன்ம‌த்தை க‌க்குவ‌தை க‌ண் கூடாய் பார்க்க‌ தெரியுது............... 2000ரூபாய் அதோட‌ ப‌ல‌ கூட்ட‌னி ஊட‌க‌ ப‌ல‌ம் இப்ப‌டி தான் ஊழ‌ல் கூட்ட‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம் பெரியார் ச‌மாதி மீது தீ மு க்கா ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ட்டும் பாப்போம் தேர்த‌ல் நேர‌ம் ம‌க்க‌ளுக்கு காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறோம் என்று உவிய‌காந்தின் உங்க‌ட‌ பார்வை 100/100 ச‌ரி க‌ந்த‌ப்பு அண்ணா வாழ்த்துக்க‌ள்........................................................
  28. க‌த்தையா நான் வெளிப்ப‌டையாய் சொல்லுகிறேன் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ப‌ற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை இந்த‌ திரிக்குள் கொட்டுறீங்க‌ள் கொட்டுங்கோ😁😜...........................
  29. விஜயகாந்தின் கட்சி 2006 இல் முதலாவதாக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முதல் தேர்தலில் 8.5% வித வாக்குகளை பெற்றது. வன்னியர் அதிகம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்குள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.29% வாக்குகளை தேமுக பெற்றது . 2011 இல் அதிமுக அணியில் தேமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற சிலர் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயாலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவை வழங்கினார்கள் . அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்தார்கள். (கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்து ரணில் பிரித்ததினை போல) விஜயகாந்தின் மனைவி, மைத்துனரின் கட்சியில் செல்வாக்கு செலுத்த பல தொண்டர்கள் அதிமுக, திமுகவில் இணைந்தார்கள். அப்பொழுதே தேமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழருவி மணியன் முயற்சியில் பிஜேபி கூட்டனி , 2016 இல் திமுகவுடன் பேரம் பேசி அதைவிட அதிக இடங்கள் மக்கள் நலக்கூட்டணியில்பெற்று போட்டியிட்டு தேதிமுக வாக்குவீதத்தினை இழந்து செல்வாக்கினை இழந்து விட்டது திமுக , அதிமுகவுக்கு மாற்று என்று தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜய்காந்த். இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழரின் நிலமை ஓரளவு தெரியும். வாக்குவீதம் எவ்வளவு அதிகரிக்கும் ? அல்லது குறையுமா?
  30. ஈழத்தமிழர்கள் எது நடந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டு உறவுகளை தொப்புள்கொடி உறவுகள் என்றுதானே சொந்தம் கொண்டாடுகின்றார்கள். தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக நாங்கள் தமிழர் என்றுதானே சொல்கிறோம். தற்காலத்திற்கு அனுமான் சிலை,திருப்பதி சிலை சரியாக இருக்குமா? எம்மால் இந்தியாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால் எமது கருத்துக்களை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். சொல்லவேண்டிய கட்டாயம். கந்தையர் உது பொது அறிவுக்கை வராது. வேணுமெண்டால் யூனிவசிற்றி அறிவுக்கை வரலாம் 😛
  31. இளைஞர்கள் தான் வயோதிபர்கள் ஆவது .....அதே போல் கருத்துகள் சிந்தனைகள் எண்ணங்கள் செயலாற்றம் எல்லாம் மாறும் இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ......இந்தியாவில் எந்த பிரதமரும். ..தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரரும். கூட காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை ....அது வீணாகிக் கடலில் போகிறது இந்தியாவில் இருக்கும் வளத்தை செல்வத்தை இந்தியன் பாவிக்க முடியவில்லை என்ன காரணம்?? தமிழ்நாடு காவல்துறையை அனுப்பி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமா??
  32. தளமும் களமும் வேறு என்பதால் வரும் புரிதலின்மை இது. முன்பே விளங்க நினைப்பவனுக்கு இன்னொரு திரியில் எழுதுல்தியதுதான். சாதி சான்றிதழ் கொடுப்பது சில ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவனை மேலே தூக்கி விட மிக அவசியம். அதே போலத்தான் சாதி வழி இட ஒதுக்கீடும். இலங்கையில் கூட மருத்துவ படிப்பில் முழுக்க முழுக்க யாழ்பாணத்தவரின் எண்ணிக்கைக்கு அதிகமான பிரசன்னத்தை குறைத்து மட்டகளப்பு போன்அ மாவட்டகளுக்கு அவைக்குரிய இடத்தை கொடுத்தது இட ஒதுக்கீடே (வெட்டுப்புள்ளி). சாதி வழி ஒடுக்குமுறை தமிழகத்தில் ஆழமானது - அதை விவேக் பாணியில் சொன்னால் “ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது”. முற்றாக அழிக்க முடியாது ஆனால் முடிந்தளவு திருத்தலாம். அதைதான் காங்கிரஸ் அல்லாத தமிழக கட்சிகள், ஏனைய இந்திய மாநிலங்களை விட மிக சிறப்பாக தமிழ் நாட்டில் செய்துள்ளன.
  33. அப்படியென்றால் நான் கூட மூன்று மனிதர்கள் தான் ... 🤣..இது ஐப்பானியர்களை விட எங்களது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும் அது தான் அவர் மூன்று மனைவிகளை கட்டி கொண்டார் போலும்” 🤣🤣🤣🤣 இந்த உலகமே போலியானது மனிதர்கள் போலியாகயிருப்பதில் வியப்பில்லை ஆனாலும் இந்த அல்லது தொழில்களை பரம்பரையாச் செய்பவர்கள் படித்து பட்டங்கள் பெற விடினும். திறமைசாலிகள்……………… அந்த கால மருத்துவர்கள் குறிப்பாக ஆயுள்வேத மருத்துவர்கள் கையை பிடித்து முகத்தை பார்த்து மருந்துகள் தருவார்கள் இப்போது ஆயிரம் கேள்விகள் கேட்ப்பார்கள். சரியான பதில்கள் சென்னால் மட்டுமே சரியான மருந்துகள் கிடைக்கும் கதை ரொம்ப நன்று
  34. அவர் உயிருடன் இருந்த போது…. அவர் தெலுங்கர்… வீட்டில் தெலுங்கு பேசுபவர்…. ”விஜயகாந்துக்கு எல்லாம் தமிழனை ஆளும் ஆசை வந்துவிட்டது எளிய தமிழ் பிள்ளைகளுக்கு கேவலம்” இப்படி அல்லவா ஓட்டி கொண்டு இருந்தார்கள்? தட் நாறவாய், வேற வாய் மொமெண்ட்👇
  35. இப்படி தவக்கை கத்தி சாவது விஞ்ஞான ரீதியில் உண்மையா? @Justin அண்ணா விளக்கவும். என்ன செய்வது, சீமானியர்கள் தவக்கை, ஆமை என ஆரம்பித்தாலே சந்தேகத்துடந்தான் அணுக வேண்டியுள்ளது🤣. நிற்க யாழில் கத்தும் தவளைகளால் மட்டும் அல்ல, 20 வருடமாக கத்தியிம் மைக் தவளையாலும் ஊரை ஏமாற்ற முடியவில்லை என்பதை காண்க. இனியும் கஸ்டம்தான். தமிழ்நாட்டு மக்கள் படிப்பாளிகள், அறிவாளிகள் இல்லை, ஆனால் புத்திசாலிகள். பின்னர் ஏன் இதே போல் இடித்துரைக்கும் ஏனையோரை காழ்புணர்சியால் கத்தும் தவளைகள் என்கிறீர்கள்? நீங்கள் கண்டித்தால் நற்புணர்ச்சி, ஏனையோர் கண்டித்தால் காழ்புணர்ச்சி ?🤣
  36. பணத்துக்காக இருக்கலாம். கறுப்புத் தோலுடன் குடியுரிமை எடுத்துத் துன்பப்படுவதை விட இலங்கையில் இருந்து பிச்சையெடுக்கலாம்.
  37. முன்னாள் ஜனாதிபதியின் புலனாய்வு அதிகாரி சு.சா குண்டு வெடிப்பு காலத்தில் இந்தியாவில் தான் இருந்திருக்கின்றார்...சிறிலங்காவின் படைகளின் உதவியின்றி இந்த குண்டு தாக்குதல் சாத்தியமில்லை ...சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனதிபதியாக வருவதற்கு அவர்கள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் நடத்திய குண்டு தாக்குதல் ... இந்தியாவின் ஹொட்டலுக்கு குண்டு வைக்காமல் திரும்பி போன குண்டுதாரியை சிறிலங்கா பொலிசார் திசை மாற்றியிருக்கலாம்...இந்தியாவுக்கு செக் வைப்பதற்காக அதை அவர்கள் செய்திருக்கலாம்...அதை தான் முக்கிய சாட்சியாக சொல்கின்றனர் இந்தியாவின் பங்களிப்பு உண்டு என்பதற்கு.... புலனாய்வு,சதிகள் என்பவற்றில் எதுவும் நடக்கும்
  38. தலைப்பைப் பார்த்து இருந்தாலும் இருக்கும் என்று எண்ணினேன். நல்லதொரு திட்டமும் வர்ணனையும். பாராட்டுக்கள் சிறி.
  39. வாசித்ததும் எப்படி தமிழ் சிறியால் இப்படி நகைச்சுவையாக யோசிக்க முடிந்தது என ஆச்சரியப்பட்டேன். யார் கண்டது, உண்மையியே இந்த இரு பனை மரங்களையும் ஆரும் வெட்டினாலும் வெட்டுவர் இனி..
  40. முதல்லை தலைப்பை பாத்திற்று நம்பிற்றன். பேந்து ஏராளன் அவர்களின் கருத்தை வாசிச்சிற்றுத்தான், அட இன்டைக்கு ஏப்ரல் ஒன்டென்டதே ஞாபகம் வந்திது!! கொஞ்சம் ஓட்டியிருந்தால், இந்திய இராணுவம் இலங்கை வந்த கதையாக்கியிருக்கலாம்😂 எங்கட ஊடகங்களும் காவியிருக்கும்.😜 ஒருங்கிணைப்புத் தாக்குதல் முயற்சி ஏமாற்றம்.😄😄
  41. நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை மரங்கள்.
  42. சிறியண்ணையின் வருடாந்த சுயஆக்கம் எங்கே என யோசித்தேன், வந்துவிட்டது!
  43. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நொச்சி......... ஒரு ஆக்கத்துக்கு ரெண்டு வரி விமர்சனம் கிடைக்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கின்றது.........! 👍
  44. "தமிழர்கள் கற்க மறந்த பண்பு எது?" தமிழர் அல்லாத நண்பர்களிடம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்வி: "தமிழர்களின் குரல் முக்கியமான விடயங்களில் கூட ஒரு சேர ஒலிப்பதில்லையே ஏன்?" என்னையும் கூட நீண்ட காலமாக அரிக்கிற கேள்வி இது. தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கும் வளங்கள் - குறிப்பாக - அறிவுசார் வளங்கள், பல துறைகளில் நம்மவர்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் - பிரமிப்பானவை; உலகின் எந்த ஓர் இனத்துக்கும் சவால் விடக் கூடியவை. அப்படியிருந்தும், ஏன் சக்திமிக்க ஓரினமாக நாம் உருவெடுக்க முடியவில்லை? தமிழர்களாகிய நாம், குறிப்பாக கொஞ்சம் யோசிக்கக் கூடியவர்கள், படித்தவர்கள், ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ், ஒரு பொது நோக்கத்தின் கீழ் பணியாற்றும் பண்பை இன்னும் ஏனோ கற்றுக் கொள்ள வில்லை. தமிழர்களில் பெரும் பான்மையினரிடத்தில் - அதாவது, அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகள், ஆளுமைகள், சாதனையாளர்களாக இருந்தாலும் சரி - இந்தப் பலவீனத்தை அதிகமாக இன்னும் கொண்டு உள்ளார்கள். இன்னும் சொல்லப் போனால், இந்த விடயத்தில், சாமானியர்களைக் காட்டிலும் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்தவர்களே மிக மோசமாக இருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழத் தெரியாமல், இருப்பதையும் போட்டு உடைக்கிறார்கள்! அவர்களிடம் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" ஆனால் தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது கி மு 300 அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? இத்தனை அழிவு கண்ட பின்பாவது திரிந்தினோமா ? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப் பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற் கடித்துச் சிறைப் பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி, 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது. அது, அந்த ஒற்றுமை, வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார். “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேண்மதி புகழ் மேம் படுந (53 – 60) பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல, பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப் பயனையுடைய யாழினையும் உடைய கூத்தர்களின் தலைவனே! பிறர் மனதில் கொண்டதைக் குறிப்பால் அறிய வல்லவனே! அறியாமையினால் வழியைத் தவறிச் செல்லாது, இந்த வழியில் என்னைக் கண்டது உன்னுடைய நல்வினையின் பயனே! நான் கூறுவதை நீ விரும்பிக் கேட்பாயாக புகழை உடையவனே! {(பொரு. ஆற். படை: 53-60) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.} மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக. இதை ஏன் எம் இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்னும் உணரவில்லை. அன்று ஒரு கட்சியில் ஆரம்பித்து ஒரே ஒரு தமிழ் தலைவன் இருந்தான், இன்று எத்தனை காட்சிகள், எத்தனை தலைவர்கள் ? இது இன்னும் வேண்டுமா எமக்கு ?? "இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  45. @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான் @புலவர் உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ண‌னியில் இருந்து அழைப்பு கொடுங்கோ...............என்ர‌ கைபேசியில் இருந்து கொடுக்க‌ ச‌ரியா வ‌ருதில்லை.................. சுவைபிரிய‌ன் அண்ணா வாத்தியார் த‌மிழ் சிறி அண்ணா குமார‌சாமி தாத்தா ஏராள‌ன் அண்ணா நீர்வெலிய‌ன் அண்ணா கோஷான் ச‌கோ நுனாவில‌ன் அண்ணா க‌றுப்பி அக்கா
  46. ஆப்ரிக்காவில் ஒரு இஸ்லாமீய அறிஞர் அண்ணா அவர்கள், பெண்குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை தைத்துவிடவேண்டும் அப்போதான் ஆண்களுக்கு நிறைவான சுகத்தை கொடுப்பா என்று அறிவித்து உலக அளவில் பரபரப்பானது. பின்பு இந்தியாவிலிருந்துவிட்டு மலாசியாவுக்கு ஓடிபோய் வாழும் மற்றொரு மத அறிஞர் திலகம் மதத்துக்காக எதுவும் பண்ணிட்டு சொர்க்கத்துகு போனால் அங்கே 62 கன்னிகள் கிடைக்கும் என்றார், அப்போகூட சொர்க்கத்தில் எது முக்கியம் எதை எதிர்பார்க்கிறார்கள் இந்த அறிஞர் கூட்டம் என்பது சில்லிட வைக்கிறது. இன்னொரு அறிஞர் பெண்கள் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்றே அர்த்தம் என்றார், பெண்பிள்ளைகள் இப்போதெல்லாம் 10, 11 வயதில்கூட பூப்பெய்துகிறார்கள் என்பது தற்கால நடைமுறை. பின்பு தலீபான் அறிஞர் கூட்டம் பெண்களுக்கு பிரசவம் பெண்களே பார்க்கவேண்டும் என்று புனித சட்டம் போட்டார்கள், ஆனால் பெண்கள் படிக்க கூடாது என்றும் சட்டம் போட்டார்கள், படிக்காமல் எப்படி டாக்டராகி பிரசவம் பார்ப்பதென்று கடைசிவரை அந்த அறிஞர் கூட்டம் சொல்லவேயில்லை. மத அறிவில் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொரு அறிஞர் கூட்டம் இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே கடைதெருவுக்கு கூட போக கூடாது என்று சொல்லியிருந்தார் ஆனால் இஸ்லாமிய ஆண்கள் ஐரோப்பா அமெரிக்கா என்று போய் பணத்தை அள்ளியிறைத்து பெண்கள் மத்தியிலேயே பொழுது போக்கிட்டு ஊர் திரும்புவார்கள். கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்ககூடாது என்று அறிஞர்கள் அலுமாரியை அவ்டி காரை மூடி வைச்சமாதிரி எத்தனை டிகிரி வெய்யில் என்றாலும் வெப்பத்தை உறிஞ்சி வைத்திருக்கும் கருப்பு துணியால் முழுவதும் மூடி செல்லவேண்டுமென்று சொல்வார்கள் , ஆனால் ஆண்கள் மனைவிக்கு மட்டும் காட்டவேண்டியதை மத்த மதக்காரர் எவர் கிடைப்பா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கணவனுடன் போகும் பெண்களைகூட பார்த்து ஜொள்ளுவிட்டு அலைவார்கள். மொத்தத்தில் அண்ணனோட சிந்தனைகளும் செயல்களும் பெண்ணை பற்றியே சுற்றிவரும். அதையெல்லாம் கூட மன்னிக்கலாம் ஆனால் எல்லாத்தையும் பண்ணிப்பிபோட்டு இறுதியாக ஒரு வரி சொல்வார்கள் பாருங்கள். அதை தாங்கிக்கொள்ள இன்னொரு இதயம் இறைவனிடம் கேட்டு வாங்க வேண்டும் ’எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் பெண்களை மதிக்க கற்று கொடுத்திருகிறது’
  47. மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. போர் மூலம் வந்த வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
  48. பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.