Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    1487
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3057
    Posts
  3. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    34974
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    11
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/03/24 in all areas

  1. ஒருவரது மரணத்தை கண்ட பின் தான் இந்தியா இவர்களையாவது விடுவித்திருக்கிறது..அந்த வகையில் இவர்கள் விடுதலைக்காக உழைத்த அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றிகள்..இனிமேலாவது இவர்களை நின்மதியாக வாழ விட வேண்டும்..இந்த மீடியாக்கள் மற்றும் யூருப்பர்ஸ் இவர்களது மிகுதி கால நலன் கருதியாவது இந்த உறவுகளை தொந்தரவு செய்யாது வாழ விடுங்கள்.🙏
  2. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம் அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ளலாம். பார்வை ஒன்று பொருள் இரண்டு எந்த ஒரு பொருளையும் இயன்றவரை வள்ளுவப் பெருந்தகையிடம் தொடங்குவது மங்களகரமாய் அமையும் என்ற நல்ல நம்பிக்கையோ அல்லது மூடநம்பிக்கையோ மனதில் படிந்து விட்டது போலும். வள்ளுவன் காட்டும் தலைவன் தன் தலைவியின் உளக்குறிப்பை அவள் பார்வையில் அறிகிறான். "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள் 1091; அதிகாரம் : குறிப்பறிதல்; காமத்துப்பால்) பொருள் : இவளது மையுண்ட கண்ணில் (உண் கண்) - பார்வையில் - இரு பொருள்கள் (இருநோக்கு) உள்ளன. ஒன்று - என் உள்ளத்தில் காதல் - நோய் தருவது; மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாவது. காதல் கொண்டோர் தமக்குள் காதல் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், ஏனையோர்க்கு அக்காதலை மறைத்த பொதுப்பார்வை காதலர்க்கே உரித்தானது. "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" (குறள் 1099; அதிகாரம்: குறிப்பறிதல்; காமத்துப்பால்) (ஏது - குற்றம்; ஏதிலார் போல - குற்றமற்றவர் போல - இங்கு ஏதும் அறியாதார் போல எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்) சீவக சிந்தாமணியின் நாயகன் சீவகன் பல்லவ நாட்டிலிருந்து ஏகி தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைகிறான். அங்கு சுபத்திரன் என்னும் வணிகன் தன் மகள் கேமசரிக்குச் சீவகன் உற்ற தலைவனாகலாம் என்ற எண்ணத்தில் சீவகனைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறான். சீவகன் அவ்வில்லத்தின் வாயிலை அடைந்த மாலைப்பொழுதில் மனையின் முற்றத்தில் பெற்றோர், உற்றார் சூழ கேமசரி யாழோடு வீற்றிருக்கிறாள். சீவகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். தனக்கு மட்டும் காதற் பொருளை உணர்த்தி ஏனையோர்க்குக் கள்ளமில்லாத பொதுப்பொருள் உணர்த்திய அவளது பார்வைக்கு இவ்வுலகையே விலையாய்த் தரலாம் என்று பாவையவளின் பார்வை நலம் பாராட்டுகிறான் சீவகன் : "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" (சீவக சிந்தாமணி பாடல் 1485; கேமசரியார் இலம்பகம்) (பொருள் கொள்ள வசதியாக சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன). பொருள் : தான் மனதில் என் மீது கொண்ட - காதலைக் (காதன்மை - காதல் தன்மை) கண்ணில் அடக்கி அந்தக் கண் எனும் தூதினால் தான் எண்ணிய - காதல் - பொருளை (துணி பொருள் - துணிந்த பொருள்) உணர்த்தி, தான் தன் சுற்றத்தார்க்குக் (தமர்க்கு) கள்ளமில்லாத பார்வை மட்டும் தெரியுமாறு (ஏதின்மை பட) - அக்காதற் பொருளை - மறைத்திட்ட (கரந்திட்ட) வாள் போன்ற அவளது கூரிய பார்வைக்கு (வாட்கண் நோக்கு), பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதையும் (ஓத நீர் அமுதும்) இந்த உலகத்தையும் விலையாய்த் தருதல் தகும் (உலகும் விற்குமே). பாடல் ஒன்று அணி இரண்டு இங்கும் தொடங்கி வைக்க வள்ளுவனைத்தானே அழைக்க வேண்டும் ! "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" (குறள் 90; அதிகாரம் : விருந்தோம்பல்) பொருள் : அனிச்ச மலரானது நாம் முகர்ந்து பார்த்த (நோக்க) அளவில் - நம் மூச்சுக்காற்றின் வெம்மையால் - வாடிவிடும் (குழையும்). அதுபோல - அவர்கள் வரவினால் - மகிழ்ச்சியைக் காட்டாத நம் பார்வையைக் (முகம் திரிந்து நோக்க) கண்டு விருந்தினர் மனம் வாடிப் போகும் (குழையும் விருந்து). மேற்கொண்ட பொருள் கோளினால் குறள் எடுத்துக்காட்டுவமை அணியின்பாற் பட்டது ('அதுபோல' என்று உவம உருபை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதால்). இக்குறளைச் சிறியதொரு விலகலுடன் பொருள் கொள்வாரும் உண்டு. அஃதாவது, "அருகில் எடுத்து முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம்பூ வாடிப் போகும். ஆனால் விருந்தினரோ, சற்றுப் பழகிய பின் என்றில்லாமல், முகம் மாறி நோக்குவதாலேயே வாடிப்போவர்" என்பதாம். இப்பொருள் கோளின்படி குறள் வேற்றுமை அணியின்பாற் பட்டது. வாடிப்போதலில் ஒற்றுமையைக் கூறி, முகர்தலும் நோக்குதலும் என்ற அளவீட்டின் படி வேற்றுமைப் படுத்துவதால் வேற்றுமை அணியானது. இரு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையைக் கூறிப் பின் வேற்றுமைப்படுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாம். மேற்கண்ட குறளில் வெவ்வேறு வகையில் பொருள் கொண்டமையால் இரு வேறு அணிகள் அமைந்து நின்றன. மாறாக, ஒரு பொருளுக்கே இரு வேறு அணிகள் அமையவும் காணலாம். சீவக சிந்தாமணியில் முற்சொன்னவாறு பல்லவ நாட்டிலிருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலை சூழ்ந்த கானகத்தின் வழியே செல்கிறான். சுனைகளாகிய கண்களையும் சுனைகளைச் சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளையும் கொண்ட மலையாகிய மங்கை கானகத்தின் வழியே வரும் சீவகனின் துன்பம் கண்டு இரங்கி அழுவது போல மலையருவி வீழ்வதாய்த் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி ஆக்கியோர்) பாடுகிறார். சுனைகளாகிய கண்கள், குவளையாகிய விழிகள் என்றெல்லாம் உருவகித்ததால் அங்கு உருவகவணி ஆளுமை கொண்டது. அம்மலைசூழ் கானகத்தில் இயற்கையான நிகழ்வில் புலவர் தம் (கதைக்கான) குறிப்பை ஏற்றியதால் தற்குறிப்பேற்ற அணியானது. "சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்" (சீவக சிந்தாமணி பாடல் 1417; கேமசரியார் இலம்பகம்) பொருள் : சுனைகள் கண்களாக - சுனைகளாகிய கண்களைக் கொண்டு; சூழ்ந்த குவளை விழியா - (சுனைகளைச்) சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளைக் கொண்டு; வனையலாகா உருவ நோக்கி - (சிற்பியால்) வடிக்க இயலாத (சீவகனின் பொலிவான) உருவம் நோக்கி; மைந்தர்க்கு - வீரனாகிய சீவகனுக்கு; இரங்கி - இரக்கமுற்று; இனைவ போலும் - அழுவது போன்ற; வரையின் அருவி - மலையின் அருவியில்; இனிது ஆடி - இனிமையாய் நீராடி; நனைகொள் போது - தேனில் நனைந்த மலர்களை; வேய்ந்து - தூவி; நாதற் பாடுகின்றான் - அருகனாகிய நாதனைப் போற்றிப் பாடுகின்றான். வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், ஊறுஅறியா மெய் யாக்கை யொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே" (புறநானூறு பாடல் 167) பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால் - கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால் - இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரே - உன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின் புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்று - கேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) ! சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!
  3. பெரியவர்கள் எம்மை எச்சரிப்பார்கள். இப்படி செய்யக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்று. அவை மிகச் சிறிய விடயங்களாக மிக மிக அசாதாரண விடயங்களாக எம் வாழ்வில் நடக்கமுடியாத நாம் சந்திக்காத விடயங்களாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து விட்டால்......?? சில விடயங்களை நான் இங்கே எழுதுகிறேன் நீங்களும் நீங்கள் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட விடயங்களை எழுதுங்கள். எவராவது பயன் பெறட்டும். 1 - பிரெஞ்சில் இருந்து எனது நண்பர் ஒருவர் டென்மார்க்கில் உள்ள ஒரு ஆலயத்தில் தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் (இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் கடைசி ஆண் குழந்தை) சென்றிருந்தார். அந்த கோயில் உள்ள இடம் வயலும் காடும் நிறைந்த இடம். அங்கே அந்த ஆண் குழந்தைக்கு (2 வயது) ஒரு பூச்சி கடித்து விட்டது. அது அருகில் இருந்த குதிரைகளின் வளாகத்தில் இருந்து வந்ததாக வைத்தியர்கள் சொல்கிறார்கள். அன்றிலிருந்து அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. இன்று அவனுக்கு 20 வயதுக்கு மேல். 2- எனது நண்பர் ஒருவரின் 30 வயது மகன். ஸ்பெயினுக்கு இரண்டு வார விடுமுறையில் நண்பர்களுடன் சென்றிருந்தான். அங்கே மைதானத்தில் உதை பந்து விளையாடிய போது கையில் தோள் பக்கம் ஒரு பூச்சி கடித்து விட்டது. தட்டி விட்டு விட்டு அதை மறந்து விட்டான். ஆனால் நாளாக நாளாக அந்த இடத்தில் ஒரு வித கடி. தோலில் சில மாற்றங்கள். இங்கே வைத்தியரிடம் காட்டிய போதும் பல பரிசோதனைகள் செய்து பார்த்த போதும் எதுவும் புலப்படவில்லை. ஆனால் கையில் தோலில் ஏற்படும் மாற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. நன்றி தொடரலாம்.....
  4. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  5. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள் முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன். ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅 பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..
  6. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. இதை பற்றி அறிய வேண்டுமானால் இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று தகவல்கள் அடங்கிய அறிந்து கொள்ளும் நூல்களை நீங்கள் வாசிப்பது அவசியம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வியில் உரிமை மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான அடக்கப்பட்ட மக்களை மேலே தூக்கி விட இட ஒதுக்கீடு அவசியம். இதை உங்கள் தலைவர் சீமான் அடிக்கடி முஷடியை உயர்த்தி மேற்கோள் காட்டும் புரட்சியாளர் அம்கேத்கார் கூட வலியுறுத்தியுள்ளதுடன் இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. இலங்கையில் மாவட்ட அடிப்படையிலான தரப்படுத்தலும் அவ்வாறே அதை அடிப்படையாகக் கொண்டதே. இதன் மூலம. பின்தங்கிய பிரதேச மாணவர்கள் பலன் பெற்றனர். என்ன பெயரால் அழைத்தாலும் ஒரு மக்கள் கூட்டதின் மீது மேலாதிக்கம் மேற்கொண்டால் அது ஒன்றே தான். இனம் என்று அழைத்தாலென்ன சாதி என்று அழைத்தாலென்ன. சாதிப்பிரச்சனை காலப்போக்கில் அகன்றுவிடும் அதை தூக்கி பிடிக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இனப்பிரச்சனையும் அப்படியே தானாக போய்விடும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  8. எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ... எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது. ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை! உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  9. "யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் குருடருக்கு கண் நான் திருடருக்கு பங்காளி நான் கருவிழியார் மன்மதன் நான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. கடந்த மாதம் இப்படி ஒரு சம்பவம் எனது ஒன்ற விட்ட சகோதரி ஒருவருக்கும் நடந்திருக்கிறது..டென்மார்க்கில் வசித்து வருபவர்..எந்த வகை பூச்சி என்று கண்டு பிடிக்க முடியாதிருக்கிறதாம். அவருக்கு வயிற்றுப் பகுதியில் கடித்து உள்ளால் இன்பெக்ற் ஆக்கி சத்திர சிகிச்சை ஊடாக பாதிக்கபட்ட அவ்வளவு தசைகளையும் எடுத்து விட்டார்கள் என்றும் சொன்னார்.அந்த பூச்சி கடித்து 48 மணித்தியாலத்திற்கு மேற்பட்டிருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏறப்ட்டிருக்கும் என்று வைத்;தியர்கள் சொன்னார்களாம்..அப்படியானவற்றை ஏன் இன்னும் அழிக்காமல் இந்நத நாடுகள் இருக்கிறது.?
  11. நிறையப் பேரை நெளிய வைத்து விட்டது, யாழிணையத்தில் போட்டால் முகநூலில் ரியாக் ஷன் வரும் அளவுக்கு இருக்கிறது. இதில் இருக்கும் எல்லாவற்றையும் கோசானின் கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கிறது. 50 பைசா புல்டோ ரொபி இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்காதா என்று ஏங்குவதை nostalgia என்று தான் அழைக்க முடியும்😂.
  12. இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது. இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம். கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது. எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு . https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/
  13. இங்கே கேள்வி அது இல்லை அண்ணா ஏதோ ஒரு வகையில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை அடக்கி ஒடுக்குகிறதா?? அப்படி ஒடுக்கினால் நாமே அடக்குமுறையாளர்களாக இருந்தபடி இன்னொரு அடக்குமுறை சார்ந்து பேசும் தகுதி இழக்கிறோம்.
  14. துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.சனம் குறைவாக இருந்தது.கொஞ்ச பக்தர்களே இருந்தார்கள்.கோவில் பெரிதாகவும் அழகாகவும் இருக்கு. முன் வாசலில் காராம்பசு கன்றுடன் நின்று வரவேற்கிறது. சிறப்பாக அம்பாளை தரிசனம் செய்து அர்ச்சனையும் செய்து விட்டு வெளியே வருகிறோம். எனக்கு மாவிட்டபுரத்தில் எங்கள் வீட்டையும் அருகே இருக்கும் காளிகோவிலையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சென்று வந்த எனது தங்கை சொன்னார், வீடெல்லாம் உடைத்துக்கொண்டு போட்டார்கள். ரோட்டில் இருந்து ஒரே காடாய் கிடக்கு.போகும் வழியெல்லாம் மரங்களாலும் பற்றைகளாலும் மறைந்து போய் கிடக்குது என்று. முன்பு லொறி போன பாதை இப்போது வான் போகவும் சிரமப்பட்டுக்கொண்டு போகுது. நீங்கள் தெரிந்து எழுதினீங்களோ தெரியாமல் எழுதினீங்களோ தெரியாது நான் முன்பு எழுதிய என் அனுபவ சம்பவத்துடன் அப்படியே ஒத்துப் போகின்றது.......இது 2018 ல் நான் ஊருக்குப் போய் வந்து யாழ் அக்காவை 19 ல் "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" என்னும் ஆக்கத்தில் எழுதியிருந்தேன்.....! அங்கு எங்களுக்கு ஒரு பனங்காணி இருந்தது. அதில் ஒரு பெரிய விளாத்திமரமும் அதற்கு நடுவாய் ஊடறுத்து ஒரு பனைமரமும் இருந்தது. நான் நண்பர்களுடன் அப்பப்ப அந்த விளாத்தியால் ஏறி பின் பனையில் ஏறி நுங்குகள் வெட்டிப்போட்டு வந்து சீவிக் குடித்திருக்கிறோம்......அதற்கு அருகில் மஞ்சமுன்னா மரம் என்று நினைக்கிறேன் அதன் கீழ் ஒரு சாதாரண கல்லுதான் எந்தவிதமான ஆடம்பரங்களை இல்லை அதை "கல்லடி வைரவர்" என்று சொல்லுவார்கள்.....அதில் என்ன விசேஷமெனில் உங்களுடைய பொருட்கள் ஏதாவது கைதவறி தொலைந்து போனால் ஒரு ஒரு சதத்தை துணியில் முடித்து அந்த வைரவரை நினைத்துக் கொண்டு வீட்டு சாமிபடத்துக்கு முன் வைத்தால் போதும் இரண்டொரு நாளில் அவை கிடைத்துவிடும்.....அவை சின்ன சின்ன பொருட்கள் ஆடு மாடுகள் போன்ற காணாமல் போன்றவைகள்.....நான் இவ்வளவு வருடங்களாச்சுது இன்றும் ஏதாவது பொருட்கள் காணாமல் போனால் அவரை நினைத்திக் கொள்வேன் அவர் என்னைக் காய் விட்டதில்லை..... இதில் விவாதங்கள் செய்யமுடியாது, நம்பிக்கைதானே எல்லாம்.......! (இன்னுமொரு சம்பவம் அதை "மயிலம்மா" பக்கத்தில் எழுதுகிறேன்).
  15. எமது ஊரில் ஒதுக்குப் புற காணியொன்றில்..விளாத்தி ஒன்று நின்றது ..நிறைய காய்த்து பழுக்கும்..காணிக்காரன் முள்ளுவேலி போட்டும் பார்த்தார் ..பாதுகாக்க முடியவில்லை ..ஊருக்குள் ஒரு கதைபரப்பிவிட்டார்... விளாவில் முனி இருப்பதாகவும்..பகலில் போறவையை சுரண்டுவதாகவும்....எங்கடை சிறார்பருவம் பேய்..முனியை நம்பும்காலம்தானே...இதனால் சின்னப் பள்ளிக்காரர்களிடமிருந்து...சின்னத்தொகை விளம்பழத்தை காணிக்காரர் சேமித்துக்கொண்டார்..
  16. பனைமரத்த வெட்டினால் கோபம் வராது கண்டியளோ! ஏனெண்டால் அது ஒரு கற்பகதரு.தமிழனை மாதிரி வெட்ட வெட்ட தளைக்கும் கொள்கை கொண்டது.ஊரிலை பனங்கொட்டையை எங்கையெண்டாலும் தாட்டு பாருங்கோ தன்னிச்சையாய் வளரும்.தண்ணியும் ஊற்றி வளர்க்க தேவையில்லை. பராமரிக்கவும் தேவையில்லை. மரம் வளர்ந்தா பிறகு அதின்ர பலனை அனுபவிக்க மட்டும் அதுக்கு கிட்ட போனால் போதும். மற்ற மரங்கள் அப்பிடியில்லை. கண்ணும் கருத்துமாய் வளர்க்கணும்.
  17. இந்த பிரச்சனைக்குள் வன்னியை இழுத்து ஒப்பீடு செய்யவேண்டிய எந்த அவசியமும் இல்லை. அயல்நாடுகளின் உதவியுடன் கமாஸ் போல வன்னியிலிருந்து ஒரேநாளில் 5000 ரொக்கட்டுகளை ஏவியபடி சிங்களவன் தேசத்திற்குள் நுழைந்து 1300 பேரை பாலினம் வயசு பாராமல் வகை தொகையின்றி கொன்று குவிக்கவில்லை, இசை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்த எந்த வகையிலும் யுத்தத்திற்கு சம்பந்தமில்லாத மக்களை ஓட ஓட கொல்லவுமில்லை. அப்பாவி சிங்கள பெண் ஒருவரை நிர்வாணபடுத்தி என்னை கொல்லாதீர்கள் என்று கெஞ்ச கெஞ்ச கொன்று உடல்மேல் எச்சி துப்பி அவள் உடல்மேல் உக்கார்ந்து இருந்து சுற்றி வர நின்று கொண்டாடவுமில்லை. தள்ளாடும் முதியவர்களிலிருந்து தளிர்கள் வரை பயணகைதிகளாக பிடித்து வந்து இன்றுவரை கொடூரமாக அடைத்து வைக்கவுமில்லை, அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் இருந்து மேற்குலகில் நடத்தப்படும் அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளை பாலஸ் தீனர்கள் பண்ணுவதுபோல் கொடிகளை கைகளில் ஏந்தியபடி பெண்கள்ள் சிறுவர்கள் அனைவரும் உற்சாக கோசமெழுப்பியபடி கொண்டாடியதும் இல்லை. எம் மண்ணை அபகரிக்க முனைந்தவர்களுடன் இறுதிவரை போரிட்டோம் அதுதான் வரலாறு,அதேபோல் தம் மண்ணை அபகரித்த இஸ்ரேல் ராணுவத்துடன் எவ்வளவு கொடூரமாக கமாஸ் மோதியிருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ அவர்கள் வீரத்தை பாராட்டியே தீருவோம். அதைவிட்டு கிழடு கட்டைகளிலிருந்து பச்சிளம் குழந்தைகள்வரை ஒரேநாளில் கொன்று பணயகைதிகளாக்கி வீரம் காட்டினால் வலிமையுள்ள எதிரி நிச்சயமாக போர் தொடுத்தே ஆவான், ஆனால் இஸ்ரேல் எல்லை தாண்டி ருத்ரதாண்டவம் ஆடுகிறது அதை மறுப்பதிற்கில்லை ஆனால் எம் பிரதேச பிரச்சனைகளை இவர்களுடன் ஒப்பிட வேண்டியதில்லை. இவர்களுக்கான அநீதியை கேட்க, அத்தியாவசிய பொருட்கள் வழங்க, பேச்சு வார்த்தைக்கு ஒழுங்கு பண்ண, இவர்களுக்காக போர் தொடுக்க, ஆயுதங்கள் , நிதி மருத்துவம் வழங்க மேற்குலகிலிருந்து அரபுநாடுகள்வரை தோள் நிற்கின்றன, ஆனால் நாம் எவரும் இல்லாமல் உரிமை மட்டும் கேட்ட ஒரே காரணத்துக்காக பூட்டிய அறையினுள் வைத்து கொல்லப்பட்ட மூட்டை பூச்சிபோல் நசுக்கி கொல்லப்பட்டோம் இன்றுவரை எவரும் பெரிதாக ஏனென்று கேட்கவில்லை, அப்பப்போ மனித உரிமை ஐநா பொறுப்புகூறல் என்பதோடு எம் கொலைகள் கணக்கிலெடுக்கப்படாது விடப்பட்டுவிட்டது. ஆனால் போர் ஆரம்பித்தநாளிலிருந்து அவர்களைபற்றி பேச அவர்களுக்காக வாதிட ஒட்டுமொத்த சர்வ வல்லமை பொருந்திய உலகநாடுகளும் போர் ஆரம்பித்த அடுத்த நாளிலிருந்தே அணியில் நிற்கின்றன, அதை இஸ்ரேல் செவிமடுக்கிறதா இல்லையா என்பது வேறு பிரச்சனை எங்கள் பிரச்சனை அல்ல, ஏனென்றால் எந்த துணை வலிமையும் இல்லாமையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நாங்கள். அதனால் வலிமையுள்லவர்களுக்கிடையிலான பிரச்சனைபற்றி நமது கருத்துக்கள் சபையினில் எடுபடாது. ஆனால் எமது பிரச்சனையும் அவர்கள் பிரச்சனையும் ஒன்றல்ல என்பதுபற்றி மட்டும் வாதிட முடியும். அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை எந்த வகையிலும் சக மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் அப்பாவி வன்னி மக்கள் கொல்லப்பட்டதை இறுதி போருக்கு வாழ்த்து சொல்லி சிங்களத்துடன் கை குலுக்கிய வரலாறு பாலஸ்தீனத்துக்கு உண்டு. சொல்லபோனால் மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் தொகையைவிட மூன்றேநாளில் கொன்றொழிக்கப்பட்ட எம்மக்கள் தொகை இரண்டு மூன்று மடங்கு அதிகம், இஸ்ரேலிய இனகொலைகளை எவரும் ஆதரிக்க போவதில்லை, ஆனால் எம்மீதான இனகொலையை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சேர்ந்து வாழ்த்தியது என்பதே கடந்தகாலம், கணப்பொழுதில் கடந்தவைகளை மறந்துபோகும் எமக்கு இதுவும் பத்தோடு பதினொன்றுதான். மறுபடியும் உரக்க சொல்வதானால் மக்கள் கொலைகள் கண்டிக்கப்பட வேண்டியது, ஆனால் மீண்டும் ஒருமுறை எம் மக்கள்மீது ஒரு படுகொலை நடத்தப்பட்டால் பாலஸ்தீனம் ஒருபோதும் எமக்காக குரல் கொடுக்காது, அவர்கள் மதத்தை சார்ந்தவர்களுக்கு ஏதும் என்றால் மட்டுமே குரல் கொடுப்பார்கள், அநியாயம் அக்கிரமம் என்பார்கள், பிறருக்கு வரும் வலிகளை சிரித்துக்கொண்டே கடந்துவிடுவார்கள் இது அவர்களின் சுயரூபம் என்பதை உலகமே பார்த்திருக்கிறது இனியும் பார்க்கும் கேட்க நாதியின்றி அழிந்துபோன நாம் ,கேட்க பலர் இருக்கும் இவர்கள் போரை மெளனமாக கடந்து போவதை தவிர நம்மால் ஆவது ஒன்றுமில்லை , நாம் வழமைபோல வன்னியையும் பாலஸ்தீனத்தையும் ஒப்பிட்டு சிறந்த மனிதாபிமானிகளாக தொடர்ந்து செல்வோம். கொல்லப்பட்ட அனைத்து தரப்பு அப்பாவிகளுக்கும் கொல்லப்பட்டுவிட்ட ஒரு இனத்தின் சார்பில் அஞ்சலிகள்
  18. @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான் @புலவர் உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ண‌னியில் இருந்து அழைப்பு கொடுங்கோ...............என்ர‌ கைபேசியில் இருந்து கொடுக்க‌ ச‌ரியா வ‌ருதில்லை.................. சுவைபிரிய‌ன் அண்ணா வாத்தியார் த‌மிழ் சிறி அண்ணா குமார‌சாமி தாத்தா ஏராள‌ன் அண்ணா நீர்வெலிய‌ன் அண்ணா கோஷான் ச‌கோ நுனாவில‌ன் அண்ணா க‌றுப்பி அக்கா
  19. வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
  20. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன் உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! எல்லோருக்கும் நேரத்துடன் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !! "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல்மீன் நடுவண் திங்கள் போலவும் இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" ["பத்துப்பாட்டு – மதுரைக்காஞ்சி"] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. அப்படியில்லை....😎 ரிக்கற் பயங்கர விலையிலும் அடிக்கடி போய்......🤣 பாங்க் சிஷ்ரம் வேறை எண்டு நினைக்கிறன்...😂
  22. செருப்பால் அடித்த மாதிரி இருக்கு...😎 இது லண்டன்,சுவீஸ்,கனடா என 🤣
  23. மற்றவனின் வாழ்க்கை உதாரணங்களை காரணம் காட்டி எமது அவலங்களை சமப்படுத்துவது சரியல்ல என நினைக்கின்றேன். எமது நிலம் போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள். ஆனால் சிங்கள பிரதேசங்கள் அப்படியல்ல. போர் தூசிகள் கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாதவர்கள். அதே போல் பக்கிங்ஹாம் உதாரணத்தை இங்கேயும் கொண்டு வந்து புகுத்தினீர்கள் பாருங்கள்..பிரமாதம்.....மிக மிக பிரமாதம். இனிவரும் காலங்களில் பாண் இல்லையென்றால் கேக் சாப்பிடுங்கள் என சொல்லும் மனப்பான்மையை இப்போதே கண்கூடாக பார்க்கின்றேன். வர்க்க ஏற்ற தாழ்வுகள் எங்கும் உண்டுதான். இன போர் நடந்த இடத்திலுமா என்பது கொஞ்சம் அடி வயிற்றை நோக வைக்கின்றது.
  24. சரி சகோ ஒரு கேள்வி ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???
  25. டெக்சாஸ் முதல் தொகுதி மக்களை கலிபோர்னியாவிற்குத்தான் அனுப்பியது.......😀 இப்படியான ஒரு செய்தியையும் இங்கு நான் கேள்விப்படவில்லை. கலிபோர்னியா மிகக் கவனமாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரிலும் இன்னார் இன்னார் தான் இருக்கலாம் என்பது போல ஒரு எழுதாத சட்டம் இங்கே......🤣.....வீட்டு விலைகளும் அதற்கேற்ப ஒவ்வொரு மட்டங்களில். இங்கு இந்த அகதியாக வந்த மக்களை எங்கு குடியிருத்தி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
  26. இன்சுலின் பாவிப்பவர்கள் பெரும்பாலும் குழுக்கோஸ் குறைந்தால் கோமாவிற்குப் போவது பற்றிக் கவலை கொள்ள வேண்டும் (hypoglycemic shock). ஏனையோர், குறைந்த குழூக்கோஸ் பற்றிக் கவலை கொள்ள அதிகம் காரணங்கள் இல்லை. புள்ளி விபரவியலில் சாதாரண பரம்பல் (normal distribution) என்பதை விளக்க இரத்த குழூக்கோஸ் நல்ல உதாரணம். நீரிழிவு இல்லாத ஆட்களில்: சராசரி (mean) 99 mg/dL, நியம விலகல் (standard deviation) 9 mg/dL என்று எடுத்துக் கொண்டால்: 16% ஆனோரில் 90 ஐ விடக் கீழே 2.5% ஆனோரில் 81 ஐ விடக் கீழே 1.25% ஆனோரில் 72 ஐ விடக் கீழே இருக்க வாய்ப்புண்டு. எனவே இது சாதாரணமான நிலை தான்.
  27. பயணக்கட்டுரை சுருங்கினாலும் 6 பக்கங்களுக்கு திரி வந்துட்டுது விசுகு அண்ணா🤔
  28. 1996இல் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமானவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். ஒரே உடலில் இரு தலைகள் ஒன்றாக ஒட்டியிருக்கும்படியான அரிய வடிவில் (Dicephalus conjoined twins) இவர்கள் உள்ளனர். இவர்கள் இரத்த ஓட்டம் மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்பி வலது கை மற்றும் காலைக் கட்டுப்படுத்துகிறார், பிரிட்டானி இடதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறார். இவர்கள் 1990இல் பிறந்தனர். அறுவைசிகிச்சை மூலம் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூற, இவர்களின் பெற்றோரும் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைசிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர். இரட்டையர்களில் ஒருவரான அப்பி 2021இல் அமெரிக்க இராணுவ வீரரான ஜோஷ் பவுலிங்கை திருமணம் செய்துகொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஜோஷ் பவுலிங்குடன் இரட்டையர்கள் நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அமெரிக்காவின் மின்னசோட்டாவில் வசித்து வரும் இந்த இரட்டையர்கள் இப்போது ஐந்தாவது கிரேடு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 2,00,000 பிறப்புகளில் ஒன்றில் மட்டுமே இந்த பாதிப்பு உண்டாகிறது. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஏறக்குறைய 70 சதவிகித்தினர் பெண்களாக உள்ளனர், இப்படி பிறக்கும் பெரும்பாலானவர்கள் இறந்து பிறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/297653
  29. தமிழினம் சிங்கள இனம் என்று சொல்கிறார்களா? அல்லது தமிழ்ச்சாதி சிங்களச்சாதி என்று சொல்கிறார்களா?
  30. தனித்தொகுதிகளை பார்வையிட https://ta.wikipedia.org/wiki/தனித்_தொகுதிகள்,_தமிழ்நாடு_சட்டமன்றம்
  31. ராபர்ட் பயஸ், முருகன், ஜெயக்குமார் இலங்கை புறப்பட்டனர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பை சென்றடையும் மூவரையும் அவர்களது உறவினர்கள் வரவேற்க காத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் திகதி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத் தமிழர்களும் (இலங்கை தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் என இலங்கைத் தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த 4 பேரையும் உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்; அவர்கள் சொந்த மண்ணில் உறவினர்களுடன் இணைய வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார். இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியது. இதனடிப்படையில் இன்று ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்கு புறப்பட்டனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் மூவரையும் சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் தமது சமூக வலைதளப் பக்கத்தில், எனது அன்பு அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களுக்கு.. இன்றைய பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான 'விடுதலைக்கு விலங்கு' எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள். ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன். சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள். பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள் என்று எழுதியுள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ராபர்ட்-பயஸ்-முருகன்-ஜெயக்குமார்-இலங்கை-புறப்பட்டனர்/150-335560
  32. @பையன்26, அணியைக் குறிப்பிடவேண்டும். RCB என்று எடுக்கவா அல்லது வேறு அணியைப் போடவா?
  33. 👍..... சீனியுடன் கலந்தால் அதன் சுவை சொல்லி மாளாது. இளம் காயை உடைத்துச் சாப்பிட்டால் தொண்டை கட்டினது போல அடைத்து விடும். விளாமரம், இலந்தை போன்றவற்றில் அவைகளில் இருக்கும் முட்களையும் தாண்டி ஏறி இறங்கியிருக்கின்றோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க கொஞ்சம் அதிசயமாகவே இருக்கின்றது.
  34. முருகன்,ஜெயக்குமார்,பயஸ் நாளை இலங்கை பயணமாகின்றார்களாம்.
  35. "சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த காசு விளம்பரமாய் மாற ஊர்த் தலைவன் பதவி எனக்கு !" "வர்ணம் பல நாட்டில் மாற கர்ணம் அடித்து கட்சி தாவி தர்ம கட்டளைக்கு மந்திரி ஆகி வேர்வை சிந்தா பணக்காரன் இப்ப !" "ஆர்த்தி எடுத்து எனக்கு வரவேற்பு மூர்த்தி வழிபாட்டில் எனக்கு தனியிடம் ஊர்த்தி பவனியில் எனக்கு முதலிடம் கீர்த்தி பெருமை எனக்கு தண்ணீர் !" "சொர்க்கம் போக இப்பவும் ஆசை தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன் பார்த்து ரசித்து புராணம் படிக்கிறேன் நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !" "மர்ம சாமியார்கள் புடை சூழ ஊர் வலம் சென்று ஆசீர்வதித்து நேர்மை பற்றி பிரசங்கம் செய்து சர்ச்சை இல்லாமல் களவு செய்கிறேன் !" "ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள சொர்க்க லோகத்திற்கு தலைவன் ஆக அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  36. இதையே தான் அமெரிக்காவில் ட்ரம்பின் பின்னால் திரியும் வெள்ளைக் காரர்களும் (சில பிறவுண் தோல் ஆசியர்களும்) கேட்கீனம்: "all men are created equal" என்று இருக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு ஏன் affirmative action மூலம் இட ஒதுக்கீடு? இதைக் கொஞ்சம் திருத்தி, இடம் மாற்றிக் கேட்டுப் பாருங்கள்: "சிறிலங்கன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழருக்கு தனியான சுயாட்சி என்ற கோஷம்?"😎 புரிகிறதா?
  37. நிச்சயம் பங்குபற்றுவோம். சற்று தாமதமாக!!😜 பையா, 11 ஆவது கேள்விக்கு பதில் அணியின் பெயராக வரவேண்டும்.
  38. 1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும் விளங்கும் நண்பர் Manavai Asokan மணவை அசோகன், மணவைத் தம்பியின் மகனாவார். அவரே இந்த படத்தை எமது நிறுவன முகாமைத்துவ இயக்குநருக்கு வழங்கினார். இப்போது அந்த படம் எமது நிறுவனத்திலேயே உள்ளது. அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் கார் அவருடையது. காரில் திராவிட கழக கொடி இருப்பதை காணலாம். Thevarasha Pramilan
  39. செய்தி கண்டவுடன் குருத்தெடுத்து சாப்பிட ஆசைவந்தது...தேதியைப் பார்த்தேன்...ஏப்பிரில் 01..சிறியர் கடைசியில் தமன்னாவை வைத்து விளையாட்டுக் காட்டிவிட்டார் என்றபடி நகர்ந்தேன்...
  40. இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளையும் கருணாநிதி மோடி போன்றவர்களை மோசமாகத் திட்டியும் உச்சக் கட்டமாகப் பொதுமக்களைக் கொத்தடிமைகள் என்று பல இடங்களில் தூற்றியும் எழுதியது பாரதூரமாகத் தெரிகிறது. இந்திய அரசியலுக்குள் மூக்கை நுளைத்து 92 வீதமான தமிழக மக்களது உணர்ச்சிகளைக் கேவலப்படுத்துவது எமக்குத் தேவையானதா ? அல்லது அதற்கு நாம் தகுதியானவர்களா ?
  41. நான் காலையில் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டு கடந்து போய் விட்டேன் ........! 😂 சூப்பர் சிறியர்......!
  42. தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம். நன்றி
  43. வழமையில் முதலாவது இரண்டாவதாக பதியும் நான் இம்முறை கடேசிவரை காத்திருக்கப் போகிறேன்.
  44. நீங்கள் ஊருக்கே போகாமல் நான் பண முதலைகளை சந்தித்து விட்டு வந்து எழுதுவதாக நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது. நான் அத்தனை தரப்பட்ட மக்களுடனும் பழகிய அனுபவத்யே எழுதுகிறேன். ஏழ்மையும், வர்க்க வேறுபாடும் இலங்கைக்கு புதிதல்ல. நான் தெளிவாக எழுதியுள்ளேன்…2019 இல் 20 ரூபா இருந்த இடத்தை இப்போ 100 ரூபா நிரப்பி உள்ளது என. உண்மையில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாச சம்பளம் எடுப்போர், ஓய்வூதியகாரார், வங்கியில் வட்டி எடுத்கு வாழ்வோர் போன்றோர்தான். மீன் பிடிப்பவரை பொறுத்தவரை, பெற்றோல் விலை கூடியுள்ளது ஆம், ஆனால் அதகேற்ப மீனின் விலையும் கூடி உள்ளது. தோட்டம் செய்பவருக்கும் இதேதான். கூலி வேலைக்கான கூலி கூட இதே அளவால் கூடித்தான் இருக்கிறது. யாழின் காங்கேசன் துறை முதல்- கொக்குவில் வரை ரயில் பாதை அருகே உள்ள தோட்டங்கள் எல்லாம் நல்ல பயிர்செய்யகையாகியே உள்ளது. ஆனால் இலண்டனில் இருப்பது போல் ஏழைகளுக்கான food bank எனப்படும் மக்களால் மக்களுக்கு நடத்தபடும் இலவச உணவு முகாம்கள் அங்கே இல்லை. ஜனசக்தியோ, உணவு முத்திரையோ மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள். அதே போல் சோமாலியாவில் இருந்தது போல் என்பும் தோலுமாக மக்கள் இல்லை. 2019 க்கு முன்பு இருந்தததை விட போஷாக்கின்மை கூடி இருப்பதாக நம்பதகு தகவல்கள் சொல்கிறன. ஆனால் பட்டினிச்சாவு நிலை இல்லை. இதை கண்டு வந்து சொல்ல கொஞ்சம் சமூக அக்கறையும், இரெண்டு கண்ணும் போதும். இரெண்டு மாதம் மூட்டை தூக்கி விட்டு அல்லது கரைவலை இழுத்து விட்டு அல்லது தோட்டம் கொத்தி விட்டுத்தான் இதை உணர மில்முடியும் என்பதல்ல. நீங்கள் அங்கேயே வாழும் @பாலபத்ர ஓணாண்டி சொல்வதை மறுதலிக்கிறீர்களே? நான் சொன்னதை இலங்கையில் இப்போ வாழும் யாழ்கள உறவுகள் யாரேனும் மறுதலிக்கிறார்களா?
  45. கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.