Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19134
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  4. island

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1749
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/06/24 in all areas

  1. இந்த தடவை தான் கூடுதலான ஆக்கங்களைப் படைத்த ஆண்டாக இருக்கப் போகிறது.
  2. (குறுங்கதை) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் -------------------------------------------------------------- அன்று அவன் காரை அதன் தரிப்பிடத்தில் நிற்பாட்டும் போது அங்கு பல கார்கள் ஏற்கனவே நின்றிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்பொழுதும் காலை ஏழு அல்லது ஏழரை மணி அளவில் வேலைக்கு வந்து விடுவான். அங்கு பெரும்பாலானவர்கள் பத்து மணிக்கு பின்னரே வேலைக்கு வருவார்கள். ஒருவர் மட்டும், பெரும் தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக, அதிகாலை ஐந்து மணிக்கு வந்து விடுகின்றார். இது அவரே சொல்லும் ஒரு தகவல். இதுவரை அதை எவராவது உறுதிப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. அமெரிக்கரரான அவர் மதியம் உணவை முடித்துக் கொண்டு, ஒரு மணி அளவில், இன்றைய வேலை முடிந்தது என்று தினமும் கிளம்பி விடுவார். வேலை தளத்தில் பலர் ஏற்கனவே வேலையில் மூழ்கி இருந்தனர். இப்படியொரு திங்கள் காலையா என்று நினைத்தவன் உறை நிலையில் இருந்த அவனின் கணினியை தட்டி எழுப்பினான். இந்த நிறுவனத்தில் அவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருக்கின்றது. இதுவரை அவன் இங்கு வேறு சில நிறுவனங்களில் பல வருடங்கள் வேலை செய்துள்ளான். ஆனால் இங்கே தான் முதன் முதலாக பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாடு மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுடன் வேலை செய்கின்றான். இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருள் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவின் முன்னணி கணினி தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுத்துள்ளார்கள். அதில் சில நூற்றுக்கணக்கானவர்கள் அங்கிருந்து இங்கு வந்துள்ளனர். அங்கிருந்து இப்படி வருபவர்கள் முதலில் ஆறு மாதங்கள் மட்டும் இங்கே இருந்து பணி செய்யும் ஒப்பந்தத்துடன் வருவார்கள். சிலர் ஒரு வருடம், இன்னும் சிலர் சில வருடங்கள், பல வருடங்கள் என்று அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு. இப்படியான நிலைகளில் ஒரு அளவிலான பணியாளர்களை, இங்கே குடி உரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களை, வேலைக்கு எடுக்க வேண்டும் என்ற ஒரு முறையும் இங்கே இருக்கின்றது. அவனை அப்படியே எடுத்திருந்தார்கள். 'ஏன் விக்னேஷ், எத்தனை மணிக்கு வேலைக்கு வந்தீர்கள்?' என்று கேட்டான். விக்னேஷ் சென்னையை சேர்ந்தவன், இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கின்றான். 'இல்ல சார், நாங்க நேற்றிலிருந்தே இங்க தான் உட்கார்ந்திருக்கிறம்.' இவர்கள் சிலருடன் இருக்கும் ஒரு பெரிய தொல்லை இது. எவ்வளவு தான் சொன்னாலும் இவர்கள் இந்த சார் என்று கூப்பிடுவதை விடவே மாட்டார்கள். இவர்களிடையே வேலைத் தளத்தில் இராணுவத்தில் இருப்பது போன்ற பதவி வரிசைகளும், அதற்கான ஒழுங்கும், மதிப்பும் இருக்கும். இங்கு மற்றவர்களிடையே பொதுவாக அப்படியான ஒரு ஒழுங்கோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட பணிவோ இருப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையை செய்து கொண்டு, மிகச் சாதாரணமாக இருப்பார்கள், பழகுவார்கள். இங்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. 'நேற்று ஞாயிறில் இருந்தா, ஏன்?' 'ஆமாம் சார். வாற சண்டே ப்ராடக்ட் ரிலீஸ் என்று டெட் லைன் போட்டு விட்டார்கள். அதால சென்னையிலும், இங்கேயும் எங்க டீம் ஒண்ணா உட்கார்ந்து வேலை செய்யிறாங்கள்.' அங்கு மிச்சமாக விடப்பட்டிருக்கும் பீட்சா துண்டுகளை அவன் அப்பொழுது தான் கவனித்தான். விக்னேஷிற்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது. ஆறு மாதங்களின் முன் விக்னேஷின் மனைவியை மருத்துவரிடமும், பின்னர் மருத்துவமனைக்கும் கூட்டிப் போக வேண்டி இருந்தது. முடிவில் தனிமையும், மன அழுத்தமுமே காரணம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். இவர்கள் வேலைக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அவனால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. காரணம் கேட்டால் அங்கே இஎம்ஐ கட்ட வேண்டும் என்பார்கள், இப்படி சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்பார்கள், இப்படி ஏதேதோ சொல்வார்கள். 'உங்க டீம் பண்ணி முடிச்சிட்டாங்களா, சார்?' 'தெரியல விக்னேஷ், இனித்தான் பார்க்கணும்.' விக்னேஷும், இவனும் வெவ்வேறு அணியில், மென்பொருளின் வெவ்வேறு பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவனுடைய அணியின் முதன்மைப் பொறியியலாளன் இவன் தான். விக்னேஷிற்கு அவர்களின் ஊரைச் சேர்ந்த கணேஷ் என்னும் ஒருவர் மேற்பார்வையாளராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் அவருக்கு மேலிருப்பவர்களை எப்படி ஆச்சரியப்பட வைக்கலாம் என்று யோசிப்பவர் கணேஷ். இவனுக்கு கணேஷுடன் பெரிதாக ஒட்ட முடியவில்லை. சுருக்கமாக் சொன்னால், ஒரு நவீன கங்காணியாகவே இவன் கணேஷைப் பார்த்தான். கணேஷிற்கும் அது தெரியும். தன் இடத்தில் வந்து அமர்ந்து, வந்திருந்த மின் அஞ்சல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் நூறுக்கும் மேற்பட்டவை வந்திருந்தன. 'நேற்றும், முந்தா நாளும் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே' என்றபடியே முருகன் வந்தார். இந்த திட்டத்திற்கு அவர்களின் பக்கத்தில் இருந்து வந்திருக்கும் திட்ட மேற்பார்வையாளர் அவர். அப்படியா என்றபடி இவன் கைத்தொலைபேசியை வெளியில் எடுத்தான். 'சனி ஞாயிறு ஆளைப் பிடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆமா, சனி ஞாயிறில் வேறு ஒரு உலகத்துக்கே போய் விடுகின்றாயா, என்ன?' சிரித்து சமாளித்துக் கொண்டே ஏதோ வீட்டு வேலையில் இருந்து விட்டேன் என்றான். அப்படி ஒன்றும் வீட்டில் வெட்டி நிமிர்த்துவது கிடையாது. ஆனாலும் இவர்களுடன் சேர்ந்து கண் மண் தெரியாமல் ஓடுவதில்லை என்ற முடிவை அவன் எப்பவோ எடுத்திருந்தான். முருகன் கொஞ்சம் வயதானவர். அவர் இவனுடன் ஒரு மாதிரியும், அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்னொரு மாதிரியும், கொஞ்சம் கடுமையாகவும், நடந்து கொள்வார். அவர்கள் இரவு பகலாக வேலை செய்தனர். சொன்னபடியே அந்த ஞாயிறன்று புதிய மென்பொருள் பரீட்சாத்தமாக வெளியிடப்பட்டது. பின்னர் இரண்டு வாரங்களில் அது வாடிக்கையாளர்களுக்கு, சில பிழை திருத்தங்களின் பின், வெளியிடப்பட்டது. இங்கு எந்த மென்பொருளையும், எல்லாவற்றையும் படைத்தவர் என்று ஒருவர் இருந்து, அவரே வந்து உருவாக்கி, எழுதினாலும் அதில் பிழைகள் வந்தே தீரும். பில் கேட்ஸின் விண்டோஸ் என்னும் மென்பொருளில் இந்த உலகம் பார்க்காததா? அவரை ஒரு ஜீனியஸ் என்று சொல்வார்கள். ஆரம்ப நாட்களில், பல வருடங்களின் முன், அந்த மென்பொருள் இடையிடையே கணினித் திரையை அப்படியே முழு நீலமாக மாற்றி விட்டு, அப்படியே நின்றும் விடும். முழு நீலம் ஒரு குறியீடு போல, நடுக்கடலில் உன்னை தள்ளி விட்டுள்ளோம், இனி நீயாகவே நீந்திக் கரை சேர் என்று சொல்வதற்கான ஒரு குறியீடு. இந்த நிறுவனத்தின் புதிய மென்பொருளும் வாடிக்கையாளர்களின் கைகளில் பலத்த அடி வாங்கியது. ஆனால் அதற்கு முன்னேயே புதிய மென்பொருளை சொன்ன நேரத்தில் வெளியிட்டதற்காக பெரும் விழா ஒன்று நடந்து முடிந்திருந்தது. அத்துடன் இந்த நிறுவன ஊழியர்கள் பலருக்கு மட்டும், இவன், கணேஷ் உட்பட, சன்மானமும் கொடுத்திருந்தனர். விக்னேஷிற்கோ அல்லது அவர்களின் பக்கத்தில் இருந்து எவருக்குமோ எதுவும் கொடுக்கப்படவில்லை, வெறும் 'தாங் யூ சோ மச்' என்ற வார்த்தையைத் தவிர. பின்னர் சில நாட்களில் இந்த புதிய மென்பொருளின் தோல்வியாலும், நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தினாலும் பலரை வேலையிலிருந்து நீக்கும் முடிவை நிறுவனத்தின் மேல் நிர்வாகம் எடுத்தது. இவனையும் நீக்கினார்கள். கணேஷையும் நீக்கினார்கள். 'என்ன சார், இப்படி அநியாயம் பண்ணிட்டாங்கள். உங்களை ஏன் சார் தூக்கினாங்கள்?' என்று கடைசி நாளான அன்று வந்து நின்றான் விக்னேஷ். அவர்களின் நிறுவனத்திலிருந்து எவரையும் வேலையிலிருந்து, இன்னமும், நீக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் வேறு ஒரு புதிய மென்பொருள் ஆரம்பிக்கும் திட்டம் ஒன்றும் முன்னமே இருந்தது. 'இதில என்ன இருக்கு, விக்னேஷ், தூக்க வேண்டும் என்று முடிவு செய்து எல்லாரையும் ஒன்றாக தூக்கினார்கள்.' 'நீங்க எப்படி சார் இப்படி ஈசியா இருக்கிறீர்கள். கணேஷ் சார் எங்களுடன் பேசவே இல்லை, அழுதிருப்பார் போல.' 'இதெல்லாம் இங்க சாதாரணம், விக்னேஷ்.' 'உங்களுக்கு இஎம்ஐ எதுவும் இல்லையா, சார்.' 'வீட்டிற்கு இருக்குது, இரண்டு காருக்கும் இருக்குது, இன்னும் எவ்வளவோ இருக்குது.' 'என்ன பண்ணுவீங்க, சார்?' 'அடுத்த வேலையை தேட வேண்டியது தான். இந்த துறையில் இங்க வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று எவருமில்லை.' விக்னேஷ் ஆச்சரியமாகப் பார்த்தான். கை கொடுத்தவன் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டான். இருவரும் ஒருவரின் கண்களை மற்றவர்கள் பார்ப்பதை தவிர்த்தனர். அப்படியே திரும்பி நடந்த விக்னேஷை இவன் கூப்பிட்டான். 'என்ன, சார்' என்று விக்னேஷ் திரும்பினான். 'குடும்பத்தை பார்த்துக் கொள், விக்னேஷ்' என்றான் இவன்.
  3. ஆகா இவருக்கு சுகர் வருத்தம் ....சுகர் வருத்தம்.....சுகர் வருத்தம் எனக்கு இண்டையான் பொழுது ஆகா ஓகோ 🤣🤣
  4. இது "மன்னிப்பு இல்லாத மன்னிப்பு போல இருக்குது😂. ஒருவரது வயது, ஓய்வு நிலை என்பவற்றை சுட்டிக் காட்டிப் பேசுவது யாழ் கள விதி மீறலாக இருக்கலாம், ஆனாலும் உங்களை ரிப்போர்ட் செய்யவில்லை. ஏனெனில், கருத்தை அகற்றி விட்டு சும்மா விட்டு விடும் நிர்வாகம் - அதில் ஒருவருக்கும் படிப்பினை கிடைக்காது. உங்கள் கருத்தை அப்படியே விட்டு "இவர் இப்படித் தான்" என்று வாசகர்களுக்கு அடையாளம் காட்டி விடுவது மிகவும் பயனுள்ள நடைமுறை என்பதால் ரிப்போர்ட் செய்யவில்லை. ஆனால், பென்சன் எடுக்கும் வரை விரல் நுனியில் இருக்கும் இணையத்தில் தேடி சரி பார்க்காமல் அறிவலட்சியமாக இருப்பது உங்களுக்கே ஆபத்தாக ஒரு நாள் முடியலாம் என அஞ்சுகிறேன். அலரிக்காயை அரைத்துத் தின்றால் இதயத்திற்கு நல்லது என்று யாராவது இணைய வம்பர்கள் பதிவிட, அதை சரி பார்க்காமல் நீங்கள் பரப்பினால், பின்பற்றினால்..யோசித்துப் பாருங்கள்😎, நீங்கள் பென்சன் எடுப்பதைப் பற்றியே யோசிக்க வேண்டியதில்லை!
  5. படங்கள் I காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு படம் 1 - நுழைவு வாயில். 2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்). 3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட். 4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு. 5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).
  6. உங்கள் இணைப்புக்கள் திரியை சுவாரசியமாக்குவதோடு இல்லாமல் - நான் எழுதாமல் விட்ட அனுபவங்கள் சிலதை எழுதவும் ஊக்கியாக அமைகிறது. ஆகவே நான்தான் நன்றி சொல்ல வேண்டும். அதே போல்தான் ஏனையோர் வைத்த கருத்துக்கள், கேட்ட குறுக்கு கேள்விகள், சவால்கள், நக்கல்கள் கூட. யாழுக்கு மீள, மீள வருவதும், எழுதுவதும் இந்த உறவுக்காகவே.
  7. நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை ராசா…. 😂 🤣
  8. பதிலுக்கு நன்றி கோஷான். நீங்கள் இலங்கையின் பல இடங்களுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றிருப்பதால் மேலும் பல தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது போன்ற பயண வீடியோக்களை இணைத்து உங்கள் பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைக்கின்றேனோ என்று தயங்கி தயங்கியே இதனை இணைத்தேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளூவீர்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், உங்கள் நேர்மறையான பதில் கண்டு திருப்தியடைந்தேன். நன்றி கோஷான். இலங்கை முழுவதற்குமான பயண தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் இந்த இளம் தம்பதியினரின் யூருயூப் தளத்தில் உள்ளன. நான் அறிந்த வரை இலங்கையில் இயங்கும் யூருயூப் தளங்களில் மிக தரமான தளம் இவருடையது. சுற்றுலா பிரதேசங்களின் தகவல்களை துல்லியமாக முன்பே திரட்டி தேவையற்ற அலட்டல்களை தவிர்தது சிறந்த மொழி நடையில் இவர்கள் தரும் பாணி மிகச் சிறப்பானது.
  9. 5 கிலோகிராம் என்ன? தனிய மிளகாய்தூள் தான் சாப்பிடுகிறனீர்கள். ?? 🤣
  10. கோசான்... நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால், ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த சிவப்பு அரிசிமாவும், இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே... ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது. அடுத்தமுறை பாப்பம்.
  11. கண்ணை நம்பாதே.... உன்னை ஏமாற்றும்.... நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது.
  12. வணக்கம் @நியானி. ஊர்ப் புதினம் பகுதியில் உள்ள, தமன்னா திரியை... யாழ். அகவை சுய ஆக்கம் பகுதிக்கு நகர்த்தி விட முடியுமா.
  13. பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது. பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும் ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை, பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.
  14. கிருபன் எல்லோருக்கும் தனிமடல் போட்டுள்ளேன்.ஓரிருவர் தவிர மற்றவர்கள் கலந்த கொள்வார்கள். நீங்கள் நினைத்ததை விட கூடுதலான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். என்ன இப்போ போட்டி நடந்து கொண்டிருக்கிறமையினால் அதனைப் பார்த்து கடைசியில் முடிவெடுக்கலாம் என்று இருப்பார்கள். பையனும் பதிந்துவிட்டார்.ஆனாலும்; பின்னர் அதற்காக வருத்தப்படலாம்.
  15. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  16. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/
  17. என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
  18. எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார். குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. மனம்தானே அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும் அதனால் விரும்பட்டும் விரும்பட்டும்.......! 😁
  20. "முதுமையில் தனிமை" / பகுதி: 03 பகுதி 02 இல் நாம் முக்கியமான, முதுமையில் தனிமையைப் பற்றிய, முதல் ஐந்து தகவல்களை பார்த்தோம். "சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென் கட் செல்வம் செல்வம் என்பதுவே." என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நற்றிணை 210 , பிறரைத் துன்புற விடாமையே சான்றோர் மதிக்கும் செல்வம் என்கிறது. அப்படியென்றால், எமது பெற்றோரை எம் மதிப்புக்குள்ள முதியோரை தனிமை படுத்தி, அதனால் தனிமை அவர்களை துன்புறுத்த நாம் விடலாமா? என்பதை நாம் கட்டாயம் ஒரு தரமாவது சிந்திக்க வேண்டும். அந்த சிந்தனையை தூண்ட நான் மேலும் சில தகவல்களை கீழே தருகிறேன். 6. சமூக தனிமை பொதுவாக நீண்டகால நோய்க்கு வழி வகுக்கலாம். உதாரணமாக, நீடித்த அல்லது வீரியம் குறைந்த நாள்பட்ட நுரையீரல் நோய் [chronic lung disease],கீல்வாதம் [arthritis],பலவீனமான அசைவுத்தன்மை [impaired mobility], மற்றும் மனச்சோர்வு [depression] ஆகும். எனவே சரியான பராமரிப்பு ஒன்றை அவர்களுக்கு உறுதி செய்வதன் மூலம் இவற்றை நாம் குறைக்கலாம். உதாரணமாக, வீட்டில் இருக்கும் முதியோர்களுக்கு தொலை பேசியில் கதைப்பதாலும் அவர்களிடம் போய் வருவதாலும் [phone calls and visits] இவற்றின் தாக்கங்களை குறைக்கலாம். அப்படியே மற்றவர்களுக்கும் ஆகும். இது மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்கு [high blood pressure] கூட வழி வகுக்கிறது. 7.சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட மூத்தவர்கள் [Socially isolated seniors] அதிகமாக எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற வர்களாக பொதுவாக இருக்கிறார்கள். எனவே அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, சமூகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் [community-based programs and services] அங்கு கட்டாயம் தேவைப் படுகிறது. 8..உடல் மற்றும் புவியியல் தனிமை [Physical and geographic isolation] சமூக தனிமைக்கு அநேகமாக வழி வகுக்கிறது. இங்கு உடல் தனிமை என்பது மனித தொடர்புகள் மிக அருகி காணப்படும் ஒரு நிலை அல்லது ஒரு தனிமை சிறையில் இருப்பது போன்ற ஒரு நிலை எனலாம் [limited Human contact or solitary confinement].அதே போல புவியியல் தனிமை என்பது தனது இனத்தில் இருந்து பிரிந்து இருத்தல் எனலாம். உதாரணமாக, ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ஆறுக்கு ஒரு முதியோர் உடல், பண்பாடு மற்றும் புவியியல் தடைகளுக்கு [physical, cultural, and/or geographical barriers] முகம் கொடுத்து, அதனால் அவர்கள் தங்கள் சக உறுப்பினர்கள் மற்றும் சமூகங்களில் [peers and communities,] இருந்தும் விலக்கப் படுகிறார்கள்.சலுகை மற்றும் சேவைகள் [benefits and services] பெற்று தங்கள் பொருளாதார பாதுகாப்பை [economic security] மேம்படுத்தும் வாய்ப்பை இந்த விலகல் தடைசெய்கிறது. அது மட்டும் அல்ல,ஆரோக்கியமான, சுயாதீன வாழ்க்கையை வாழக்கூடிய திறனையும் தடை செய்கிறது. முதுமையில் தனிமையில் இருப்பவர்களுக்கு பொதுவாக நீண்ட கால பராமரிப்பும் தேவைப்படுகிறது. 9.ஒருவர் தனிமையையும் தனிமை படுத்தலையும் எதிர் நோக்க பெரிய ஆபத்து காரணியாக அமைவது,அவர் தனது துணையான கணவனையோ அல்லது மனைவியையோ இழப்பது ஆகும். பொதுவாக கையறுநிலை [ bereavement] தனிமையை ஏற்படுத்துவதுடன், கூடவே சமூகத்துடனான பரஸ்பரத்தையும் [social interactions] இழக்க வழி கோலுகிறது. மேலும் இன்று வாகனத்தை பாது காப்பாக ஓட்டும் ஆற்றல் [safe driving expectancy] இருபாலாருக்கும் 70 வயதை தாண்டினாலும், இன்னும் பல முதியோர் தமக்கு போக்கு வரத்து வசதிகள் பற்றாது என உணர்கிறார்கள். ஆகவே இதுவும் தனிமையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்து விடுகிறது. 10.முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர் [family caregiver] கூட சமூகத்தில் இருந்து தம்மை தனிமைப்படுத்தும் ஒரு ஆபத்தை பொதுவாக எதிர் பார்க்கிறார்கள். குடுப்ப உறுப்பினராக இருந்து, பெற்றோரை, கணவனை அல்லது மனைவியை, அல்லது இன்னும் ஒரு குடும்ப உறுப்பினரை பராமரிப்பது ஒரு மகத்தான பொறுப்பு ஆகும். உதாரணமாக, அந்த உறுப்பினர் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோயில் [Alzheimer’s disease], அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் பைத்தியமான டிமென்ஷியா நோயில் [dementia], அல்லது ஒரு உடல் வலுக்குறைவில் [a physical impairment] இருந்தால், அது பராமரிப்பவருக்கு பெரும் பொறுப்பாக அமைகிறது. இதனால், அந்த குடும்ப பராமரிப்பவர் தனது சமூக தொடர்புகளை குறைக்க வேண்டி அல்லது புறம் தள்ள வேண்டி இருக்கலாம். இது அவர்கள் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது. 11.தனிமை தொற்றும் [contagious] தன்மையுடையது. அதாவது ஒருவர் தனிமையில் இருக்கும் பொழுது ,அந்த தனிமை அநேகமாக அவரின் நண்பருக்கோ அல்லது அவர் தொடர்பு கொள்ளும் ஒருவருக்கோ பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு, இதனால் தங்கள் சமூக பிணையலை [social cohesion] பாது காக்கும் பொருட்டு, மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை மேலும் தனிமைப்படுத்த பார்க்கிறார்கள். இது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அது மட்டும் அல்ல தனிமையான மக்கள் ஆரோக்கியமற்ற நடத்தைகளில் [unhealthy behavior] தம்மை பொதுவாக ஈடுபடுத்து கிறார்கள். உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவு, குறைந்த உடற்பயிற்சி [lack of physical activity], புகை பிடித்தல் [smoking] போன்றவையாகும். எனவே ஒரு சமூக சூழலில் வாழ்வதே இவையே தடுக்கும் ஒரு வழியாகும். மேலும் அவர்கள் தொண்டூழியராக [ Volunteering] தொழிற்படுவதன் மூலம் தனிமையையும் தனிமை படுத்தலையும் குறைக்க முடியும் .முதியோர்கள் தமது அனுபவங்களை அறிவாற்றல்களை பயன் படுத்தி தமது சமூகத்திற்கு பங்களிக்க முடியும். இது அவர்களின் வாழ் நாளை கூட்டுவதுடன் [boost longevity] மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கும் [mental health and well-being] பங்களி க்கிறது. நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால், கட்டாயம் சுகாதார தொடர்பான பாடங்கள், கணனி சம்பந்தமான பாடங்கள், அல்லது உடற்பயிற்சி சம்பந்தமான பாடங்கள் போன்றவற்றில் பங்கு பெறுவது நன்மை பயர்க்கலாம்? 12. தொழில் நுட்பம் [Technology] ஓரளவு தனிமையை குறைக்கலாம் என நாம் எதிர் பார்க்கலாம்.உதாரணமாக, காது கேட்க்கும் தன்மையை இழந்தவர்களுக்கு காதொலிக்கருவி [hearing aid ] ஒன்று கொடுப்பதன் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களின் தனிமையை குறைக்கலாம். அதே போல உடல் பயிற்சிகள் [Physical activity] தனிமையை குறைக்கின்றன.உதாரணமாக,கூட்டு உடற் பயிற்சி [Group exercise programs] இதில் முக்கியமான ஒன்றாகும். முதுமையில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்றாயினும் அதை பற்றிய விபரங்களை, உண்மைகளை அறிவதன் மூலம் நாம் அதை தடுக்க அல்லது குறைக்க முடியும். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப் படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளைவிட பொதுவாக,மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும்போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும்தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்துவிடப்படும்போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லிக்கொடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை,பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள்... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர்.ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று
  21. இணைப்புக்கு நன்றி பாலபத்திரரே. முழுவதும் பார்த்தேன். இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அத்தனையும் ஆரோக்கியமானவையே. எமது இனத்துக்குள் இருக்கும் சமூகப்பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். ஆனால் இங்கு பேசியவர்களை பார்க்கும் போது கருத்து வேறுபாடுகளின் போது குரலை உயர்ததி கத்துவதும் பணபற்றமுறையில் அங்கும் இங்கும் நடந்து திரிவதும் பார்கக ரசிக்க கூடியதாக இல்லை. புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்தும் எம்மவர்கள் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றத்தையும் தம்முள் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அமைதியான முறையில் எதிரில் இருப்பவர்களுக்கு புரியக் கூடிய வகையில் கருத்தாடல்களை செய்திருந்தால் அவர்கள் பேசிய ஆரோக்கியமான விடயங்கள் மக்களை இலகுவில் சென்றடைந்திருக்கும்.
  22. ற…ர.. றா…ரா…. லக்கலக்கலக்கலக்கலக்கலக்கலக்க தாம்-தரிகிட தீம்-தரிகிட தோம்-தரிகிட நம்-தரிகிட…🤣 ஏ.. பந்தமோ.. இதி ஏ.. பந்தமோ.. ஏ.. ஜன்ம பந்தால சும கந்தமோ.. 🤣🤣🤣
  23. யூ டியூபில் இருக்கின்றது.......நானும் கொஞ்சம் பார்த்தேன் ....நல்ல படம் பிரியன் ....... அதுதான் அது பெரிதாகப் பேசப்படவில்லை.......உண்மையை சொல்வதென்றால் இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்......வசூல் பெறவேண்டும்........! 👍
  24. உண்மையில் இப்போ கொஞ்சம் பிசியாக நிற்கிறேன். சீமான் திரியில் வழமை போல் இறங்கி அடிக்கவில்லை. வேறு திரிகளை பார்க்கவே நேரம் இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனது பயண கட்டுரை திரியில் செலவழிக்கிறேன். அப்படி இருந்தும்….என்னடா பெரிய தலையள் எல்லாம் இந்த திரியில் மினக்கெடுதே எண்டு ஆர்வம் மேலிட எட்டிப்பார்த்தேன். பெரும்ஸ்…. @பெருமாள்சும்மா சொல்லக்கூடாது…சார் … சும்மா கிண்டி கிழெங்கெடுக்கிறீங்க😂… அதுவும் அந்த மன்னிப்பு கேட்ட பாணி…ஈயம் பூசியும், பூசாமலும்…. வேற லெவல், வேற லெவல் பாஸ்😁
  25. கலிபோர்ணியாவில் தடக்கி விழுந்தாலும் ஐடிக்காரன் மேலே தான் விழ வேணும்.
  26. போது மா சிறியண்ண..😆இவ்வளவுக்குமே ஒரு லக்கேஜ் வேணுமே..என்ன பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு நோமாக்களுக்களுக்கும் குடுத்து சாப்பிடப்போறீங்களா....✍️😀
  27. கட்டுரையில் அவசியமற்ற புலி வெறுப்பு இருக்கிறது. ஓணாண்டியார் இணைத்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது. இலக்கியம் என்றால் சமூகத்தின் சமகால பிரச்சினைகளில் இருந்து வருவது, வரலாறும் அதில் இருக்கும். "ஏன் இலக்கியக் கூட்டமென்று விட்டு சாதியைப் பேசுகிறீர்கள்?" என்று கேட்ட இளையவர் எதை இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன் (லியோ திரைப்படம், ராணி காமிக்ஸ்?😂) பி.கு: ஜேபிசி மெசின் தேர் விளக்கம் அடிக்கடி மாறுகிறது. சேற்றில் புதைந்த தேரை இழுத்தோம் என்பது மாறி இப்போது குடும்பப் பிரச்சினையாகி விட்டது.
  28. ஏன் யாழ் களத்திலை குறைச்சலா?
  29. இந்த டொல்பின்கள் புண்ணியம் பெற்றவை. இப்ப இந்திய நாட்டின் கடற்கொள்ளையர்களின் கைகளில் அகப்பட்டிருந்தால் நிலமை வேறு. வாழ்த்துக்கள் அருமைத்துரை சம்மட்டி டீம்! 👏
  30. இப்ப விளங்குதே ஆள் ஏன் கொதியன்(ர்) எண்டு🤣
  31. கந்தையா அண்ணை... ஐந்து கிலோ மிளகாய்த்தூளும் எனக்குத் தனிய இல்லை. பக்கத்து வீட்டு ஜேர்மன்காரிக்கும், முன்னாலை வீட்டு துருக்கிக்காரிக்கும் குடுக்கத்தான். 😋 எங்கள் மிளாகாய்த்தூள் வாசம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக அடிக்கடி சொல்வார்கள். 😂
  32. 🤣🤣🤣 இதென்ன…நான் பத்து வருசம் முதல் தனி திரி திறந்து சொன்னதை இப்ப கேட்டு ஷாக் ஆகிறியள்🤣. #இந்திராகாந்தி செத்துட்டாவா😝 ஓமா…ஓமா… அடுத்த முறையும் போட்டு வந்துதான் சொல்லுவன்🤣. இப்பவே புளுகொடியல், கோப்பி, இறால் கருவாடு, மிக்சர், சித்தாலேப, மா, பனங்கட்டி, எள்ளுருண்டை, நைஸ், லெமன்பப், கண்டோஸ் எண்டு ஒரு சரக்கு லொறி மாரித்தான் திரும்பி வந்தது😝.
  33. என்னப்பா இது சொர்க்கபுரியில் ....?
  34. யாழில் ஒரு முறை ஈழபிரியன் அண்ணா மாட்டுப்பண்ணைகள் பற்றிய ஒரு செய்தியில், இப்படியான பண்ணைகள் எங்கே உள்ளன என கேட்ட போது….அம்பேவல, நியூசிலாந்து பண்ணைகள் பற்றி எழுதினேன். அருமையான இடம். வேலையாட்கள் பலரும் மலையக மக்களே. நான் டிக்கெட் எடுத்து பார்த்ததை நீங்கள் சம்பளம்+கொத்துடன் பார்த்துள்ளீர்கள்😀. ஹோர்ட்டன் சமவெளிக்குள் இருப்பது பேக்கேர்ஸ் நீர்வீழ்ச்சி என நினைக்கிறேன். தண்ணீர் ஒரு curtain போல பரந்து விழும். பம்பரகந்த இரத்திரபுரி, நுவெரெலியாவின் பின்புறத்தில் இடையே உள்ளது. நெடிய “பாகுபலி டைப்” நீர் வீழ்ச்சி. குளிக்கலாம். தலையில் நீர் விழும். நேர் எதிரே ஒரு சிங்கள அம்மாவின் தேனீர் கடை. நீர்வீழ்ச்சியை பார்த்தபடியே தேனீர் அருந்தலாம்.
  35. பலர் கலந்துகொண்டால்தான் சுவாரசியமாக இருக்கும்! இந்த முறை சறுக்கு மரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம்😂
  36. "காதல் அழிவதில்லை" யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகம் தேவையில்லை. உலகில் தமிழையும் மண்ணையும் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழர்கள் வாழும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். போர்த்துக்கேயர் 1621 ஆம் ஆண்டளவில் தற்போதுள்ள இடத்தில் யாழ்ப்பாண மாநகரத்தினைப் பிரகடனப்படுத்திக் நாற்சதுரக் கோட்டையையும் அமைத்துக் கொண்டு ஆண்டனர். அந்தவகையில் பார்க்கும் போது யாழ்ப்பாண நகரிற்கு தற்போது வயது 400. ஆனால் நல்லூரையும் மேலும் பல இடங்களையும் இடங்களையும் தலைமையிடமாகக் கொண்டு விளங்கிய யாழ்ப்பாண அரசுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. என்றாலும் யாழ்ப்பாணத்தில் சனத் தொகை இன்று மிகவும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போரில் இளைஞர்கள் கொல்லப்பட்டமை, போரில் மக்கள் கொல்லப்பட்டமை, வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தமை, கொழும்பு நீர்கொழும்பு போன்ற தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்தமை, போன்ற காரணிகளால் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. அப்படியான யாழ்ப்பாணத்தின் பரபரப்பான தெருக்களில், அங்கு தமக்கேயுரிய சமையல் மசாலாக்களின் வாசனை காற்றில் மிதக்க, பாடசாலை மாணவ மாணவிகளின் துடிப்பான வாழ்க்கையின் ஒலிகளுக்கு மத்தியில், யாழோன் என்ற உயர் வகுப்பு மாணவன் வெளிநாடு ஒன்றில் உயர் கல்வி கற்க கனவு கண்டான். அவனது விருப்பம், ஏக்கம் எல்லாம் அவனை சொந்த ஊரின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றது, யாழோனின் கனவுகள் நியமாகி, தனது சொந்த ஊரின் அமைதியான அரவணைப்பிலிருந்து லண்டனின் பரபரப்பான பெருநகரத்திற்கு அவனை அழைத்துச் செல்லும் என்பதை அவன் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை. அது மட்டும் அல்ல, அங்கே தனக்கு காதல் மலர்ந்து, கசப்பான நினைவுகளை அது விட்டுவிட்டு வாடிப்போகும் என்றும் அவனுக்கு அப்பொழுது தெரியாது. "காதல் அழிவதில்லை" என்பது தான் அவனின் நினைவாக, கருத்தாக அன்று இருந்தது. யாழோனின் கல்வித் திறமையும் இடைவிடாத உறுதியும் அவனுக்கு லண்டனில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் புலமைப் பரிசு வழங்கியது. பரபரப்பான பெருநகரமும் அதன் வான் உயரும் கட்டிடங்களும் புதிய வாழ்வின் தொடக்கங்களின் வாக்குறுதிகளும் அவனை வரவேற்றது. லண்டன், கலை, இலக்கியம், பொருளாதாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்து கொண்டு இருக்கிற இங்கிலாந்து நாட்டின் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தலைநகரம் ஆகும். பலப்பல இனம், பண்பாடு, மொழி ஆகியன பேசும் மக்கள் சுமார் ஒன்றரைக் கோடி பேர் லண்டனில் வாழ்கிறார்கள். அதில் 125000 க்கும் - 150000 க்கும் மேலான தமிழர்கள் இங்கிலாந்துவில் வாழ்கிறார்கள், அதில் கூடிய தொகையினர் லண்டனில் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, லண்டனை சுற்றி பல மலைகள் சூழ்ந்துள்ளன. லண்டன் நகரத்தை அணைத்தபடியே தென்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தேம்ஸ் நதி ஓடுகிறது. போக்குவரத்தை மிக இலகுவாகும் லண்டனின் பாதாள ரெயில் ஐரோப்பாவில் மிகவும் பழமையானதும் நீளமானதும் கூட. ஆகவே அவனுக்கு அங்கு படிப்பதில் மட்டும் அல்ல, தமிழ் பண்பாடும் அங்கு நிறைந்து இருந்தது. ஒருமுறை பல்கலைக்கழகத்தின் மாணவ கொண்டாட்டம் ஒன்றில் யாழோனின் பாதை, அமோதினி என்ற இளம் மலையாளப் பெண்ணின் பாதையுடன் குறுக்கிட்டது. அவளும் தொலைதூர தேசத்தில் இருந்து வந்தவள்தான்! கண்ணகி கோவலன் மாதவி வாழ்ந்த, பண்டைய தமிழ் பேசும் மன்னன் சேரனின் பூமி, இன்று அது மலையாளம் பேசும் பூமியாக மாறிவிட்டது. என்றாலும் இன்னும் இலங்கைத் தமிழரின் தோற்றமும் பண்பாடும் அங்கு ஓரளவு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்துப்பூச்சி (moth) யைப் போல யாழோனை இழுத்துச் செல்லும் ஒரு புதிரான வசீகரத்தைக் அவள் கொண்டிருந்தாள். யாழோன், அளவான உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, பொது நிறம், நெற்றியை முத்தமிடும் முடி, கர்ணனின் வில் போல், வளைத்து இணைந்த புருவங்கள், காண்போர் அனைவரையும், குறிப்பாக இளம் பெண்களை கண்டிப்பாக ஈர்க்கும் அளவான கூர்மையான விழிகள், செதுக்கிய மூக்கு, கொஞ்சம் இறுக்கமான, கொஞ்சம் மென்மையான உதடு, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படையான நேர்மையான குணம் கொண்டவன். அதனாலோ என்னவோ அமோதினியும் தன் விழிகளை அவன் மேல் இருந்து எடுக்கவே இல்லை. மகிழ்ச்சியான பெண் என்ற பெயரைக் கொண்ட அமோதினியைக் கண்டதும் அவனுக்கு அவள் மேல் மையல் உண்டாகிவிட்டது. அவன் ஆசை கரை கடந்து போய் அவளைத் தனக்குரியவளாக ஆக்கிக் கொள்ள வேண்டு மென்று எண்ணம் கொண்டான். இளம் பெண்ணான அவளும் அவனைக் கண்டவுடன் அவன் மீது மோகம் கொண்டு விட்டாள். அவளை அவன் கூர்ந்து கவனித்தான். அவளும் அவனை ஒரு புரியாத உணர்ச்சியுடன் நோக்கினாள். அப்படி இருவரின் பார்வைகளும் சந்தித்த போது அவர்களின் உயிரும் உடலும் ஒன்றாய்க் கலந்தது போல் உணர்ந்தார்கள். அவள் உள்ளம் பூரித்தாள், மகிழ்ச்சி கொண்டாள். பேரலை போல் வந்த மகிழ்ச்சியில் மூழ்கி வெட்கத்தை நீக்கினாள், இவ்வுலக நினைவுகளே இல்லாமல், எல்லையில்லா இன்பக் கனவினிலே உறைந்து விட்டாள். யாழோனின் திண் தோளை ஆசையோடு கட்டித் தழுவிக் கொண்டு, அவன் இதழில் தேன்பருக சிந்தை கொண்டாள். யாழோனோ தேனில் விழுந்த ஈயினைப் போல், விந்தைமிகு காந்தத்தால் இழுக்கப்படும் இரும்பினைப் போல், ஆசையோடு அவளை ஆறத் தழுவி முத்தமிட முயன்றான், எனினும் இருவரும் கொஞ்சம் தள்ளி நின்றே ஒருவரை ஒருவராவர் தங்கள் கண்ணுக்குள் சிறைவைத்தனர். அவர்களின் சந்திப்புகள் அதன்பின் தொடர் ஆரம்பித்து, நெரிசலான விரிவுரை மண்டபங்களில் கண்ணியமான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது. அவளது சிரிப்பு காற்றில் நடனமாடும் ஒரு மெல்லிசையாக இருந்தது, அவளுடைய கண்கள் ரகசியங்களை புதைத்து வைத்திருந்தன. அவர்களின் ஆரம்ப சந்திப்புகள் வெட்கப் புன்னகை மற்றும் தயக்கமான வார்த்தைகளால் ஆரம்பித்தாலும் ஒவ்வொரு நாளும், அவர்களின் தொடர்பு ஆழமாகி ஆழமாகி, வெறும் அறிமுகத்தின் எல்லைகளைத் தாண்டியது. சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாத படி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும். ஆனால் இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று தன் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின், அமோதினியின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று அவன் மனதுக்குள் ஏங்கிக் கொண்டான். “புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்," அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை உடையவள். பூ மொட்டு போல் இரண்டு கண்களை உடையவள். என் உள்ளத்தைக் கட்டி வைத்திருப்பவள். என் நெஞ்சு அவளைக் கண்டு அல்லாடுகிறது என்று உள்ளத்தில் புலம்பினான். "நீயும் தவறிலை; நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்; நிறை அழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறை அறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான்..." அமோதினி, நீயும் தவறிலை. உன்னைத் [லண்டன் பல்கலைக்கழக] தெருவிலே சுதந்திரமாகத் திரிய விட்ட பெற்றோரும் [சுற்றத்தாரும்] தவறுடையவரில்லை. [அந்த காலத்தில்,] மதங்கொண்ட யானையை நீர்த்துறைக்கு விட்டால் முதலில் பறையறைந்து பின்னர் அனுப்புவார்களே அதுபோல் உன்னையும் பறைசாற்றியே செல்ல விடல் வேண்டும் என்று ஆணையிடாத இந் பல்கலைக்கழக அதிகாரிகளே [இந் நாட்டு மன்னனே] தவறுடையவன் போல அவன் உணர்ந்தான். யாழோனும் அமோதினியும் பல்கலைக்கழகத் பூந் தோட்டத்தின் ஒதுக்குப்புறமான மூலையில் ஒரு பெஞ்சில் அமர்ந்து, மறையும் சூரியனின் மென்மையான ஒளியில் குளித்தனர். அமோதினியின் கை யாழோனின் கையை வருடியது, அவளது அந்த பட்டும்படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வால் அவன் எல்லையற்ற ஒரு உணர்வை அனுபவித்தான். அவர்கள் இருவரும் நெருக்கமாக ஒருவர் மேல் ஒருவர் இறுக்கமாக சாய்ந்தனர், அவர்களின் உதடுகள் ஒரு மென்மையான முத்தத்தில் முதல் முதல் சந்தித்தன, அது ஒருவருக் கொருவர் புரியாத மொழியில் பேசியது. அவர்கள் இருவரும் தங்கள் உணர்ச்சியின் ஆழத்தில் தங்களை இழந்தார்கள். யாழோனுக்குத் தெரியாமல், அமோதினி ஆங்கில பையன் ஒருவனுடனும் சில உறவுகளை வைக்க தொடங்கினாள். அவளைப் பொறுத்தவரையில் வாழ்வை எப்படி எப்படி விதம் விதமாக அனுபவிக்க வேண்டுமோ அப்படி அப்படி அனுபவித்து, பின் ஒரு நேரம் நல்ல வசதியான, தன் மனதுக்கு ஏற்ற பையன் கிடைக்கும் பொழுது அவனை நிரந்தரமாக தனக்கு ஏற்றவனாக மாற்றிட வேண்டும் என்பதில் மட்டும் ஆர்வமாக இருந்தாள். அதில் முதல் அவளின் சந்திப்புத் தான் யாழோன். ஆனால் யாழோன், முதல் காதலே இறுதிக்காதலும் என்றும், 'காதல் அழிவதில்லை' என்பதிலும் முழு நம்பிக்கை உள்ளவன். அவன் அமோதினியை முழுதாக நம்பினான். ஏன் அமோதினி கூட 'காதல் அழிவதில்லை' என்று தான் சொல்லுவாள், ஏன் எனறால், தன் உணர்ச்சிகளுக்காக மட்டும் வெவ்வேறு ஆண்களுடன் தற்காலிகமாக பழகுகிறாள், பொழுது போக்குகிறாள், அவ்வளவுதான்! காதலுக்காக அல்ல என்பதுதான் அவளின் கொள்கை! காலம் செல்ல, அவளின் நடத்தையில் கொஞ்சம் கொஞ்சமாக யாழோனுக்கு ஒரு ஐயப்பாடு தோன்றியது. ஒருமுறை யாழோன் அவர்களுக்குப் பிடித்தமான ஓட்டலில் அமோதினிக்கு எதிரே அமர்ந்திருந்தான், என்றாலும் ஒரு அமைதியின்மை அங்கு நீடித்தது. அவர்களுக் கிடையில் இப்ப வளர்ந்து வரும் இடைவெளியை, அதன் தூரத்தைப் பற்றி, அவனது குரல் கவலையுடன் அமோதினியிடம் கேட்டது. ஆனால் அமோதினி அதை தந்திரமாக சமாளித்து, அவனின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனுக்கு எம் காதல் அழியாது என்று, ஒரு இனிய முத்தத்துடன் உறுதியளித்தாள். அவளது வார்த்தைகள் என்றென்றும் பொய்யான வாக்குறுதிகள் என்பது அவனுக்கு அந்தநேரம் விளங்கவில்லை. "நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல அவள் பெண்மை திரண்டு நிற்கிறதே! திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா? என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே!" அவன் வாய் அவளின் உறுதியை நம்பி முணுமுணுத்தது! நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறிய போது, யாழோன் மற்றும் அமோதினியின் உணர்ச்சி பூர்வமான காதல் வசந்த காலத்தின் வெம்மையில் ஒரு மென்மையான மலராக மலர்ந்தது. அவர்களின் காதல் நெரிசலான விரிவுரை அரங்குகளில் திருடப்பட்ட பார்வைகளிலும், நிலவொளி வானத்தின் அடியில் கிசுகிசுக்கப்பட்ட உரையாடல்களிலும் வெளிப்பட்டது. அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவழித்த போது, யாழோன் அமோதினியிடம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். அவளது சிரிப்பு அவன் காதுகளுக்கு இசையாக இருந்தது, அவளது புன்னகை லண்டனின் குளிரை போக்கும் அரவணைப்பாக இருந்தது. ஆனால் அத்தனையும் பொய் என்பதை அவன் மனது நம்பவில்லை. ஒரு நாள், யாழோனும் அமோதினியும் இருக்கமாகப் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு, தங்களையே மறந்து ஒரு பூங்காவின் ஓரத்தில் அமைந்து இருந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துக் கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கு தேவைப்பட்டது தனிமை, எங்கே போகிறோம் என்று தெரியவில்லை, அந்தப் பாதையில் ஆள் நடமாற்றம் குறைவு, அந்த மாலை நேரத்தில் அவர்களுக்கு அது தான் தேவைப்பட்டது. அமோதினி எப்போதும் பார்க்க அடக்கமான பொண்ணு, கேரளாவில் பாடசாலை காலத்தில் அடர்த்தியான முடியை இரட்டை பிண்ணல் பிண்ணி ரிபன் கட்டி குனிந்த தலை நிமிராமல் பாடசாலை போனவள் தான், ஆனால் இப்ப குடும்பத்தில் இருந்து தொலை தூரத்தில், எந்த பயமும் மனதில் இல்லாமல், எவனோ ஒருவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தனிமையில் நடக்கும் அளவிற்கு தைரியத்தை கொடுத்துள்ளது காதல், இல்லை, இல்லை, இளமை பாலின்ப விருப்பம், பருவ ஆசை!, ஒரே பல்கலைக்கழகத்தில் இருவரும் கற்றல் நெறியை பயின்றாலும், பார்த்து, கதைத்து சிரித்ததால் அதை காதல் என்று யாழோனும் முழுமையாக நம்ப, இருவரும் இவ்வளவு தூரம் தனிமையைத் தேடி வந்திருப்பது ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளின் நிலைப்பாடும் அவனின் நிலைப்பாடும் முரண்பாடானது என்பது அவனுக்குத் தெரியாது. நம்முள் இருக்கும் அழியா தன்மை தான் ஆத்மா. காற்று அதை தீண்டாது; தீ அதை சுடாது. இந்த உடல் ஆனது வெறும் சட்டையை போன்றது. நாம் சட்டையை மாற்றுவது போல் ஆன்மாவும் உடலை மாற்றுகிறது. இறுதியில் அது தக்க தருணம் கிடைக்கும் பொழுது அழிவில்லாத ஒரு முத்தியை அடைகிறது, அது போல காதலை சோதித்து சோதித்து, தனக்கு ஏற்ற, ஒத்த காதல் கிடைக்கும் பொழுது அதை அழியவிடாமல் பற்றிக்கொள்வது தான் அவளின் உள்நோக்கம், அவளைப் பொறுத்தவரையில் காதல் ஒரு இனக்கவர்ச்சி, வருக்காலத்தை ஒன்றாக வெற்றிகரமாக அமைக்க ஒன்று சேர வழிவகுக்கும் ஒன்று, எனவே சோதித்து, வயதுக்கு ஏற்ற ஆசையை அனுபவித்து, தெரிந்து எடுப்பதில் தவறு என்ன ? ஆனால் அவன், காதல் என்று ஒன்று முதலில் வந்தவுடனேயே, அது அழிவதில்லை என்று நம்புகிறவன். காதல் புனிதமானது, ஒரு நாளும் நாங்கள் பிரிய மாட்டோம், கடைசி மட்டும் சேர்ந்து வாழ்வோம், உங்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியுமா? என்று மற்றவர்களை திருப்பி கேட்பவன்! பிறந்த நாள் பரிசு, காதலர்தின பரிசு என்று இருவரும் பரிமாறிக் கொண்டார்கள், கையில் முத்தம் கொடுக்க ஆரம்பித்து உதட்டளவில் வந்து நிற்கின்றார்கள், அத்துமீறல் தொடுகைகளும் இருக்கவே செய்தது, எதுவென்ன வென்றாலும் என்றாவது தன் எதிர்காலத்தைப் பற்றி அவள் அவனுடன் கதைத்தது உண்டா? இருக்கவே இருக்காது, அன்று, அந்த தருணம் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மட்டுமே யோசிப்பாள் அவள், அது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் அமோதினி மெல்ல மெல்ல யாழோனிடம் தந்திரமாக விலகத் தொடங்கினாள். அவள் யாழோனை சந்திக்காததற்கு சாக்குப்போக்கு சொன்னாள், அவளது பொய்கள் ஒவ்வொரு நாளிலும் மேலும் விரிவடைந்தன. யாழோனின் சந்தேகங்களும் அதிகரித்தன, ஆனால் அவர்களின் காதல் அனைத்தையும் வெல்லும் என்ற நம்பிக்கையில் அவன் இன்னும் அவளுடன் ஒட்டிக் கொண்டே இருந்தான், அவனின் பலவீனமான காதல் இதயத்தில் தாக்கத் தயாராக இருக்கும் அமோதினி என்ற குத்துவிளக்கை அறியும் பக்குவத்தில் அவன் இருக்கவில்லை. அவன் இன்னும் "காதல் அழிவதில்லை" என்று தனக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறான்! என்றாலும் அவன் லண்டன் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவனது இதயம் சோகத்தால் கனத்தது, யாழோன் இனி ஒருபோதும் அன்பின் கொடூரமான அரவணைப்பிற்கு சிக்க மாட்டேன் என்று தனக்குத்தானே சபதம் செய்தான். பேராசை மற்றும் தன்னல லட்சியத்தால் நுகரப்படும் இந்த நவீன உலகில், காதல் என்பதும் ஒரு வியாபாரம் தான் என்ற கசப்பான உண்மையை அவன் கற்றுக் கொண்டான்! அதனால், கனத்த இதயத்துடனும், சோர்வுற்ற உள்ளத்துடனும், யாழோன் லண்டன் தெருக்களில் இருந்து பிரியா விடை பெற்றான், ஒரு காலத்தில் பிரகாசமாக எரிந்த காதலின் சிதைந்த துண்டுகளை தன்னுடன் சுமந்தான். ஏனென்றால், அவர்களது உடைந்த காதலின் சாம்பலில், காதல் மங்கினாலும், அதன் உடனடி அரவணைப்பின் நினைவுகள் நெஞ்சில் அழியாமல் நீண்டு கொண்டே இருக்கும் என்பதால்! காலப்போக்கில் அமோதினி மீதான அவனது காதல் வெளி உலகத்துக்கு மங்கிவிட்டாலும், அவர்களின் பகிர்ந்த காதல் பயணத்திலிருந்து அவன் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள் என்றென்றும் அவனது இதயத்தில் அழியாமல் பதிந்து இருந்தது! ஆமாம் அவனது நினைவுகளின் திரையில், சிரிப்பு மற்றும் கண்ணீருக்கு மத்தியில், அமோதினி மேல் அவன் கொண்ட காதல் மற்றும் அனுபவம் அதன் அனைத்து சிக்கலான தன்மையிலும், உண்மையில் ஒருபோதும் இறக்காமல், அவனுக்கு, அவனின் வருங்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக இருந்து, மீண்டும் ஒரு பொய்யான சிக்கலான நிலைக்குள் மாட்டுப்படாமல் இருக்க, சரியான வழியைக் காட்டிக்கொண்டு இருந்தது! காதல் நம் சமூகத்திற்குப் புதிதல்ல. அது சங்க இலக்கியங்கள் முதல் தற்போதைய நவீன இலக்கியங்கள் வரை காதலைப் பற்றி எழுதாத இலக்கியவாதிகளே இல்லை. ஆனால் சமூகம் அதை எப்படி ஏற்று நடந்து கொள்கிறது என்பதில் தான் சிக்கல்கள் உருவாகிறது. காதலைப் புரிந்துகொள்வோம்! சிறந்து வாழ்வோம்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  37. திம்புப் பேச்சுவார்த்தை முஸ்தீபுகள் 1985 ஆம் ஆண்டு வைகாசி 23 ஆம் திகதி இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரியை அவரது அலுவலகம் அமைந்திருக்கும் செளத் புளொக்கில் சந்திக்கச் சென்றிருந்தேன். அவரைச் சந்தித்து டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக செவ்வி காணவே அங்கு சென்றேன். நான் அங்கு இருந்த நேரத்தில், அறையின் கதவைத் திறந்துகொண்டு சற்றுக் குட்டையான உருவ அமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் உள்ளே எட்டிப் பார்த்தார். "மன்னிக்க வேண்டும், ஒரு இரண்டு நிமிடங்கள் தருவீர்களா?" என்று என்னிடம் கேட்டுக்கொண்ட பண்டாரி, எழுந்துசென்று அந்தக் குள்ளமான மனிதரைக் கைலாகு கொடுத்து வரவேற்றார். சில நிமிட நேரம் அவருடன் பேசிய பின்னர், "நான் உங்களைக் கொழும்பில் சந்திக்கிறேன்" என்று கூறி விடைகொடுத்தார். பின்னர், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டு பேசத் தொடங்கினார். "இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்தியத் தூதுவரே அவர். நான் இலங்கைக்குச் செல்லும்போது, அவரும் அங்கிருப்பார்" என்று என்னிடம் கூறினார். "அப்படியா, ஏன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைக்கவில்லை? நான் அவரிடமும் பல விடயங்கள் குறித்து செவ்வி காணவேண்டுமே?" என்று நான் கேட்டேன். பதிலளித்த பண்டாரி, "நீங்கள் அவரை கொழும்பில் சந்திப்பீர்கள்" என்று கூறினார். அந்தக் குள்ளமான மனிதர் வேறு யாருமல்ல. அவர்தான் வைகாசி 27 ஆம் திகதி கொழும்பிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்ட ஜே.என்.டிக்ஷீட். அதற்கு முதல்நாள் கொழும்பை வந்தடைந்த டிக்ஷீட், தனது நியமனக் கடிதத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹமீதிடம் கையளித்து பணியை ஆரம்பித்திருந்தார். தனது நியமனத்தை ஜெயவர்த்தனவிடமும் அவர் அன்றிரவு 9:30 மணிக்கு அவரது இல்லத்திற்குச் சென்று காண்பித்தார். அவரை முதன்முதலாக பேட்டிகண்ட செய்தியாளரும் நான் தான். மறுநாள் காலை தில்லியிலிருந்து புறப்பட்டு இலங்கை செல்லும் வழியில், திருச்சியில் இறங்கி எனது சகோதரனுடன் ஒருநாளைக் கழித்தேன். திருச்சியில் இருந்த நாளில், கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியும் எனது நண்பருமான ஒருவரைச் சந்திக்க முயன்றேன். அவர் அப்போது தமிழ்ப் போராளி அமைப்புக்கள் மீது இந்தியாவின் கட்டளைகளுக்கு அமைந்து நடக்கும் அழுத்தத்தினை கொடுக்கும் அதிகாரிகளுடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று அறிந்துகொண்டேன். ஆனியில், தில்லிக்குப் பயணித்த தமிழர் பிரதிநிதிகளுடன் அவரும் சென்றிருந்தார். பண்டாரியிடம் விடைபெற்று கொழும்பு செல்ல டிக்ஷீட் வந்தபோது, நான் இலங்கை தொடர்பான இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து பண்டாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். தென்னாசியாவில் சமாதான வலயம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ரஜீவ் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். இந்தியாவின் அயல் நாடுகளுடன் சிநேகபூர்வமான உறவினை உருவாக்க ரஜீவ் முயன்றுகொண்டிருந்தார். அயல்நாடுகளுடன் கெடுபிடியான மூத்த அண்ணன் எனும் அவப்பெயரைக் களைந்துவிட ரஜீவ் முயன்றுவருவதாக கூறப்பட்டது. ஆகவே, ரஜீவின் இந்த சிந்தனையூடாகவே இலங்கையுடனான உறவும் இருக்கவேண்டும் என்று தாம் விருபுவதாக நான் சந்தித்த இந்தியர்கள் என்னிடம் கூறினார்கள். "சிறிலங்காவில் சண்டைகள் நிறுத்தப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். 28 ஆம் திகதி நான் இலங்கைக்குச் செல்லும்போது இதற்கான அடித்தளத்தினை இடும் பணிகளை ஆரம்பிப்பேன்" என்று பண்டாரி என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் கூறும் அடித்தள வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பதை நான் அறிவேன். பங்குனியில் அவர் முதன்முதலாக இலங்கை வந்திருந்தபோது, "இந்தியாவின் விருப்பத்தின்படி ஒழுகி நடக்க போராளிகள் ஒத்துக்கொள்கிறார்களா?" என்று நான் அவரிடம் கேட்டபோது, "அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்தியா சொல்வதை அவர்கள் நிச்சயம் கேட்கவேண்டும். பேச்சுவார்த்தைகள் ஊடாக தமக்குத் தேவையானதை அவர்கள் பெற்றுக்கொள்ள முயலவேண்டும்" என்று பண்டாரி என்னிடம் அன்று கூறியிருந்தார். இயல்பாகவே அடுத்ததாக அவரிடம் கேட்கவேண்டிய கேள்வியொன்று எண்ணத்தில் வந்துபோனது, "அப்படியானால், ஜெயாரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி நடப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஆனால், அன்று அதனைக் கேட்பதை நான் தவிர்த்துக்கொண்டேன். எனது தகவல்களைத் தாங்கியவாறு டெயிலி நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது. நான் கொழும்பை வந்தடைந்தவுடன், லலித் அதுலத் முதலி எனக்கு நன்றி தெரிவித்திருந்ததாக எனது ஆசிரியர் மணிக் டி சில்வா என்னிடம் கூறினார். மேலும், டிக்ஷீட்டை இந்திய வெளியுறவகத்தில் சந்தித்து செவ்வி கண்டமைக்காகவும் மணிக் என்னிடம் நன்றி தெரிவித்தார். டிக்ஷீட் என்னைக் கண்டவுடன் அதிசயித்துப் போனார். "நான் கொழும்பு வருமுன் வெளியுற‌வுச் செயலாளரைச் சந்திக்க வந்தபோது, அவருடன் பேசிக்கொண்டிருந்தது நீங்கள் தானே?" என்று என்னைக் கேட்டார். அந்தச் சந்திப்பும், மட்ராஸ் கிறிஸ்ட்டியன் கல்லூரியில் நாம் இருவரும் கல்விகற்றோம் என்கிற விடயமும் எம்மிருவரையும் நெருங்கி வரப்பண்ணியிருந்தது. என்னிடம் பேசும்போது, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மிகுந்த கண்ணியத்துடன் தன்னை நடத்தியதாக டிக்ஷீட் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தீர்க்கமான உறவு ஒன்று உருவாகும் வேளையில் நீங்கள் வருகை தந்திருக்கிறீர்கள் என்று தன்னை ஹமீது வாழ்த்தியதாகவும் டிக்ஷீட் என்னிடம் கூறினார். இலங்கை தொடர்பாக இந்திரா கடைப்பிடித்த கொள்கைகள், நோக்கங்களை விடவும் ரஜீவ் காத்திரமான கொள்கைகளையும், செயற்பாடுகளையும் மேற்கொள்வார் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஹமீது டிக்ஷீட்டிடம் கூறியிருக்கிறார். இந்த நிபந்தனையுடனேயே இந்தியாவின் கோரிக்கையான போராளிகளுடன் இலங்கையரசாங்கம் நேரடியாகப் பேசவேண்டும் என்பதனை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஹமீது மேலும் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டுடனான முதலாவது சந்திப்பிலேயே அவர் பத்திரிக்கையாளர்களுடன் மிகவும் நட்பாகப் பழகக் கூடியவர் என்பதை அறிந்துகொண்டேன். அதுமட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்களை எப்படி இலாவகமாகக் கையாளவேண்டும் என்கிற உத்தியையும் அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். பத்திரிக்கையாளர்கள் தன்னிடமிருந்து எதனை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்ட அவர், அவர்களைத் தனது நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். ஜெயவர்த்தன்விடம் தனது நியமனக் கடிதத்தினைக் காண்பிக்கச் சென்றபோது, ஜெயவர்த்தனவுடன் தான் பேசிய விடயங்கள் சிலதை, "இதனை வெளியில்க் கூறவேண்டாம்" என்கிற எச்சரிக்கையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார் டிக்ஷீட். ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, பண்டாரி நாளை இலங்கை வருகிறார். வந்தவுடன் உங்கள் அரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒழுங்குகள் பற்றிப் பேசுவார் என்று கூறியிருக்கிறார் டிக்ஷீட். மேலும், தமிழ்ப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிப்போர் குறித்த விடயங்கள் தொடர்பாகவும் பண்டாரி உங்களிடம் அறியத் தருவார் என்றும் ஜெயாரிடம் அவர் கூறியிருக்கிறார். அடுத்ததாக, ரஜீவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கான உத்தியோக பூர்வமான‌ அழைப்பினையும் பண்டாரி விடுப்பார் என்று டிக்ஷீட் கூறியிருக்கிறார். டிக்ஷீட்டிடம் பேசிய ஜெயார், ரஜீவுடனான சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடந்தகால கசப்புணர்வுகளையும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கைகளையும் களைய ரஜீவ் முயற்சிப்பார் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்களுக்கான நடவடிக்கைகள் குறித்த செயற்திட்டத்தினை ரோ வின் இயக்குனர் சக்சேனாவே வரைந்திருந்தார். அதன் பிரதியொன்று லலித் அதுலத் முதலியுடனான சந்திப்பின் பின்னர் அவரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள், கால அட்டவணை போன்றவை உள்ளிட்ட பல இரகசிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பணி என்னவெனில், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதுதான் என்று டிக்ஷீட் என்னிடம் கூறினார். எனது செவ்வியினூடாக இலங்கையரசாங்கத்திற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் யுத்த நிறுத்தம் குறித்த செய்தியை இலங்கை மக்களுக்கு அறியத்தரவும், அதற்காக அவர்களைத் தயார்ப்படுத்தவும் அவர் எண்ணியிருந்தார்.
  38. சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா . வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .
  39. தமிழ் இலக்கியக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கோர்த்த கருத்துகள். கட்டுரையின் தலைப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஆனால் (ஒரு) கூடை நிறைய மாங்கனிகளைக் கோடையில் பெற்ற நிறைவு.
  40. இந்த அளவுக்கு எதிர்மறையான டாக்சி சாரதி தொடக்கம் விடுதியில் வேலை செய்யும் வரை எல்லாரோரையும் அவனே இவனே என்று விளித்து எழுதிய பயணக் கட்டுரை ஒன்றை நான் இது வரை வாசிக்கவில்லை. ஒவ்வொருவரின் மனம் போல தான் வாழ்க்கை யும் அதன் அனுபவங்களும். சக மனிதர்களை மதிக்க தெரியாதவர்களுக்கு போகும் இடமெல்லாம் துன்பமே அன்றி வேறு எது வாய்க்கும்?
  41. நன்றி அண்ணா…. ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… 2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன. கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள். அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.
  42. என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.......! 🙏 நெஞ்சை உருக்கும் பாடல்........மதுரை சோமு........!
  43. அவை எல்லாமே பாசப் படங்கள்தான் எவ்வளவு அன்பாக அன்னியோன்னியமாக அரவணைத்து பழகுகிறார்கள்.......பின் எதற்காக அவற்றை ஆ பாசப் படங்கள் (பாசமில்லாத படங்கள் ) என்று விளிக்கிறார்கள், ஏன் என்று தெரியவில்லை......! 😴 வெள்ளிக்கிழமையும் அதுவுமா ....சே......என்ன வாழ்க்கையடா சாமி.......! 😁
  44. கட்டுரை தமிழீழத்தில் முஸ்லீம்கள் மூலம்: குரல் 18, பக்கம் 8, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் தமிழீழம்‌ ஓர்‌ மத சார்பற்ற நாடாகும்‌. ஆனால் அங்கு எல்லோருக்கும்‌ மத சுதந்திரம் உண்டு. அதே வேளை மத வெறியர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இலங்கையில்‌ வாழும்‌ தமிழ்‌ பேசும்‌ முஸ்லிம்கள்‌ தனிச்சிறப்‌புடைய மதக் கலாச்சாரப் பண்புகளைக்‌ கொண்ட இனக்குழு என்பதனையும்‌, தமிழீழத்தில்‌ வாழும்‌ முஸ்லிம்கள்‌ முழுமையான உரிமையுடன்‌ வாழ வேண்டும்‌ என்பதையும்‌ எமது அமைப்பு ஏற்றுக்‌கொண்டுள்‌ளது. இன்று முஸ்லிம்கள்‌ தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள்‌. தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராக முஸ்‌லிம்களைச்‌ செயற்பட வைப்பதில்‌ சிறீலங்கா அரசும்‌ ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தமிழர்களையும்‌, முஸ்லிம்‌களையும்‌ பிரித்தால்‌ தமிழீழப்‌ போராட்டத்தை அழிப்பது சுலபம்‌ என சிறீலங்கா நினைக்‌கின்றது. தமிழீழப்‌ போராட்டம்‌ அழிக்கப்பட்டால் முஸ்லீம்களின்‌ உரிமைக்கான குரலும்‌ அழிந்து போகும்‌ என சரியாகக் கணித்து செயற்படுகின்றது. கிழக்கில்‌ இருந்து கிழக்‌கு வாழ்‌ முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைக்காக போராடப்‌ போவதாக உருவாக்கப்பட்டது, முஸ்‌லிம்‌ காங்கிரஸ்‌. ஆனால்‌ அதன்‌ தலைமையின் நலன் முழுவதும் சிறிலங்காவில்‌ (கொழும்பில்‌) தங்கி இருக்கிறது. அவர்களது குறுகிய வழியில் பதவிகளை தலைமையைப் பெறும் எண்ணத்தையும் கொழும்பில் தங்கிநிற்கும் நிலையையும் பயன்‌படுத்தி தமிழர்களையும்‌ முஸ்‌லிம்களையும்‌ பிரிப்பதில்‌ சிங்கள அரசு வெற்றிகண்டுள்ளது. தமிழீழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடு குறித்து ஓரளவு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்‌. சிறிலங்காவிலோ, தமிழீழத்‌திலோ முஸ்லிம்கள்‌ தமது உரிமைகளுக்காகப் போராடியது கிடையாது. சிறீலங்காவால்‌ தமிழர்களும்‌, முஸ்லிம்களும்‌ ஒடுக்கப்பட்டார்‌கள்‌. தமிழர்கள்‌ ஒடுக்குமுறைக்‌கெதிராகப்‌ போராடினார்கள்‌. ஆனால்‌ முஸ்லிம்களோ தமிழர்‌, சிங்களவர்‌ என்ற முரண்‌பாட்டைப்‌ பயன்படுத்தி வாழ முயன்றார்கள்‌. தாங்கள்‌ தமிழர்களும்‌ அல்ல, சிங்களவர்களும்‌ அல்ல, முஸ்‌லிம்கள்‌ எனவும்‌, அராபியர்‌கள்‌ எனவும்‌ இனம்‌ காண முயன்றார்கள்‌. அதன்‌ மூலம்‌ சிங்கள தேசத்‌திடம் அற்ப சலுகைகளை பெறலாம்‌ என நம்பினார்கள்‌, சில சலுகைகளையும்‌ பெற்‌ றார்கள்‌. உண்மையில்‌ இத்தீவில்‌ வாழும் முஸ்லிம்களில் 95% வீதமானோர் தமிழர்கள்‌. இங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை முறையில்‌ எத்தகைய அராபிய பண்பாட்டையும் காணமுடியாது. ஒரு சிலரைத்‌ தவிர வேறு யாருக்கும்‌ அரபு மொழி தெரியாது. அவர்கள்‌ பாரம்‌பரியமாக வாழ்ந்த எந்த ஊருக்கும்‌ அரபுப்‌ பெயர்‌ கிடையாது. இன்று சிறிலங்காவிலும்‌, தமிழீழத்திலும்‌ முஸ்லிம்கள்‌ தமிழ்‌ பேசுகின்றார்கள்‌. இதற்‌கு முக்கிய காரணம்‌ கலாச்சாரமே. முஸ்‌லிம்‌ பெண்கள்‌ வெளியே சென்று மற்றைய சமூகத்தினரோடு கலந்து வாழாததால்‌ வீட்டு மொழி தாய்மொழித் தமிழ் பிள்ளைகளால் தொடர்ந்து பேசப்படுகிறது. இப்படியாக தமிழ்‌ மொழி சிறீலங்காவில்‌ அழியாமல்‌ காப்பாற்றப்பட்டது. ஆனால்‌ அரபு மொழி பேணப்படவில்லை. இவை முஸ்லிம்கள்‌ தமிழர்‌கள்‌ என்பதை தெளிவாக எடுத்துக்‌ காட்டப்‌போதுமானவை. சிங்களவர்களிடம்‌ சலுகைகளைப்‌ பெறுவதற்காக முஸ்‌லிம்‌ மக்கள்‌ தமது வரலாற்றை மறைத்‌து நிற்பதை நாம்‌ பார்க்கிறோம்‌. கொழும்புத்‌ தலைமைகள்‌ அல்லது அங்கு வணிக மற்‌றும்‌ நலன்களைக்‌ கொண்ட தலைமைகளே, முஸ்லிம்‌ மக்‌களை வழிநடாத்தும்‌ பள்ளிவாசல்களைக்‌ கட்டுப்படுத்துகின்றன. மார்க்கம்‌ என்பதன்‌ பெயரால்‌ அறியாமையில்‌ வாழும்‌ பல முஸ்லிம்‌ மக்கள்‌ இத்‌தலைமைகளால்‌ பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்கள்‌. 33% முஸ்லிம்‌ மக்கள் வாழ்ந்த புத்தளம்‌ இன்று சிங்‌களவர்களிடம்‌ பறிபோயிற்று. 46.1% முஸ்லிம்கள்‌ வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில்‌ 1732 சதுர மைலில்‌ 1200 சதுர மைலுக்கு மேல்‌ சிங்களவர்களிடம்‌ பறிபோயிற்று. விகிதாசார அடிப்படையில்‌ தேர்தல்‌ என்பதின்‌ பெயரால்‌. முஸ்லிம்‌ மக்களின் பிரதிதிதித்துவம்‌ குறைக்கப்பட்டது. முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகம்‌ திட்டமிட்டு சிங்களவர்களால்‌ கைப்பற்றப்பட்டது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம். புத்தளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை உடைக்க புதிய நிலையம்‌ ஒன்று அமைக்கப்‌பட்டு அங்குள்ள கடைகள்‌ சிங்‌களவருக்கு கொடுக்கப்பட்டமை யாகும்‌. இதை எதிர்த்த முஸ்லிம்களைப் பெரிய பள்ளி வாசலுக்குள்‌ வைத்து சிங்களப்‌ படை சுட்டுக்‌ கொன்றது. இவற்றை எதிர்த்து முஸ்லிம்‌கள்‌ போராடவில்லை. பதிலாக, முஸ்லிம்களின்‌ உரிமைகளையும்‌ பாதுகாக்கக்கூடிய தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக சிங்‌கள அரசுகளுடன்‌ சேர்ந்து. அழிக்க முனைகின்றனர்‌. தமிழீழப் போராட்டத்தால்‌ கிழக்கில் 50, 000 சிங்களக்‌ குடும்பங்கள்‌ குடியேற்றப்படுவது தடுக்கப்பட்டது. விகிதாசார அடிப்படையில்‌ வேலை வாய்ப்பு, பதவி உயர்‌ என சில சலுகைகளை சிறிலங்கா வழங்க முன்வந்தது. முஸ்லிம்கள்‌ தமது உரிமை பற்றிப்‌ பேசும் பலத்தைப்‌ பெற்றனர்‌. இப்போராட்டத்தோடு இணைத்து நின்று போராடாமல், போராட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர். 1983 ல்‌ இருந்து தமிழீழப்‌ போராட்டம்‌ கூர்மை அடையத்‌ தொடங்கியதும்‌, தமிழ்‌ மக்களையும்‌, முஸ்லிம்‌ மக்களையும்‌ பிரித்து அழிக்கும்‌ திட்டத்தை சிறீலங்கா செயற்‌படுத்தத்‌ தொடங்கியது. தமிழர்‌, சிங்களவர்‌ முரண்‌பாட்டில்‌ வாழ நினைக்கும் முஸ்லிம்களை சிறிலிங்கா பயன்‌படுத்தியது. முஸ்லிம்‌ ஊர்காவல்‌ படைகளை உருவாக்கியது. தனது கைக்கலிகளைக்‌ கொண்டு தமிழ்‌, முஸ்லிம்‌ சமூகக்‌ கலவரங்களைத்‌ தூண்டியது. விசேட அதிரடிப்படை, முஸ்‌லீம் ஊர்காவற்படையின் துணையுடன்‌ பல தமிழ்‌ கிராமங்களில்‌ கிராமியப்‌ படுகொலைகளை நடாத்தியது. தமிழ்க்‌ கிராமங்களிலலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் குறைந்த விலைக்கு தமது நிலங்களை விற்றனர்‌ அல்லது விட்டுச்‌ செல்ல நிர்ப்பந்திக்கப்‌பட்டனர்‌. சிறிலங்கா எதிர்பார்‌த்தது போல தமிழ்‌, முஸ்லிம் மக்களின்‌ உறவு நிலை உடைக்‌கப்பட்டது. சிறீலங்காப்‌ படையில்‌ அல்‌லது காவல்‌துறையில்‌ சேரும்‌ தமிழர்கள்‌ துரோகிகளாக கருதப்பட்டதால்‌ தமிழர்கள்‌ அதில்‌ சேர்வதைத்‌ தவிர்த்தனர்‌. ஆனால்‌ முஸ்லிம்கள்‌ தாம்‌ தனித்துவமானவர்கள்‌ எனக்‌ கூறிக்‌கொண்டு அதில்‌ சேர்ந்‌தனர்‌. இந்த முரண்பாட்டையும்‌ சிறீலங்கா பயன்படுத்தத்‌ தவறவில்லை. தமிழ்‌, முஸ்லிம்‌ மக்களின்‌ உறவுநிலை மிகப் பாதிப்‌படைத்த நிலையில்‌ நாம்‌ முஸ்‌லிம்‌ மக்கள்‌ சார்பாக ஓர்‌ வேலைத்‌ திட்டத்தை 21.4.1988ல்‌ முஸ்லிம்‌ ஐக்கிய விடுதலை முன்னணியூடாக முன்‌ வைத்தோம்‌. முஸ்லிம்கள்‌ ஒன்றிணைந்த தாயகத்தில் 30% குறைவில்லாத வகையில் மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறவும் அமைச்சரவையில் இடம்பெறவும் உரித்துடையவர்கள். எதிர்காலக் காணிப்‌ பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில்‌ 35% குறைவில்லாத வகையிலும்‌, மன்னார்‌ மாவட்‌டத்தில்‌ 30% குறைவில்லாத வகையிலும்‌, வடமாகாணத்தின்‌ ஏனைய பகுதிகளில்‌ 5% குறைவில்லாத வகையிலும்‌ இருக்க வேண்டும்‌. முஸ்லிம்‌ மக்களுக்கு இஸ்‌லாமிய பல்கலைக்‌கழகம்‌ நிறுவப்படும்‌. தமிழீழத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் விகிதாச்சாரத்தின் படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம்‌ மக்கள்‌ கொண்டிருப்பர்‌. முஸ்லிம்‌ மக்களின் தனித்துவத்தின்‌ உரிமைகள், அக்கறைகள்‌ என்பவற்றை பாதிக்‌கக்கூடிய எதுவித சட்டவாக்‌கங்களும்‌ அவற்றிற்கு முஸ்லிம்‌ பிரதிநிதிகளின் 3/4 பெரும்‌பான்மையினர்‌ சார்பாக வாக்‌களித்தாலன்றி தமிழீழத்தில்‌ நிறைவேற்றப்படலாகாது என்‌னும்‌ வகையில்‌ பல விடயங்‌களில்‌ இணக்கம்‌ கண்டோம்‌. ஓர்‌ சுமூகமான சூழ்நிலை உருவாகத்‌ தொடங்கியது. முஸ்லிம்‌ மக்கள்‌ மனதில்‌ தமிழீழ விடுதலைப்‌ புலிகளின்‌ போராட்டத்தினால்‌ தான்‌ தமது நிலங்களும்‌ உரிமைகளும்‌ பாதுகாக்கப்படும்‌ என்ற உணர்வு வளரத்‌ தொடங்கியது. பல வழிகளில்‌ நாம்‌ முஸ்லிம்‌ மக்களை அணுகிப்‌ பேசினோம்‌. சாதாரண முஸ்லிம்‌ மக்கள்‌ உண்மையைப் புரிந்து கொண்டு போராட்டத்தை ஆதரிக்கும்‌ செயலில்‌ இறங்கத்‌ தொடங்கினர்‌. கொழும்பில்‌ தங்கி நிற்கும்‌ முஸ்லிம்‌ தலைமைகள்‌ தமது தலைமைக்கு ஆபத்து வருவதை உணர்ந்து கொண்டனர்‌. தமது நீண்டகால திட்டங்‌கள் உடைந்து போவதைக்‌ கண்டது சிறீலங்கா. தமிழீழ விடுதலைப்‌ புலிகளை அழித்து தமிழ்‌, முஸ்லிம்‌ மக்கள் உறவை, தமது குறுகிய நலனுக்காக உடைக்க வேண்‌டிய அவசியம்‌ இவர்கள்‌ எல்‌லோருக்கும்‌ ஏற்பட்டது. முஸ்லிம்‌ மக்களுக்கு பாதுகாப்பு என்னும்‌ பெயரில்‌ இந்தியப்படையுடனும் பின்னர்‌ சிறிலங்காவுடன்‌ சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ்‌ ஓர்‌ சமூக விரோதக் கும்பலை, முஸ்லிம்‌ மத வெறியை வளர்த்தது. தமிழீழ விடுதலைப்‌ புலிகளின்‌ முஸ்லிம் உறுப்பினர்களையும் ஆதரவளர்களையும் கொலைசெய்தனர். தமிழீழ விடுதலைப்‌ போராட்‌டத்திற்கு எதிராக அராபிய நாடுகளில் பொய்ப்‌ பிரச்சாரங்‌களைக் கட்டவிழ்த்து விட்டனர். விடுதலைப்‌ புலிகள்‌ முஸ்லிம்‌களை கொல்கின்றார்கள்‌ எனக்‌ கூறி பணம்‌ திரட்டி தமது சு௧போக வாழ்க்கைக்கு பயன்‌படுத்தினர்‌. தமிழீழப்‌ போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு தமிழீழப்‌ போராட்ட வெற்றிகளில்‌ பங்கு வேண்டும்‌ என நியாயமற்ற தீர்வுகளை நிபந்‌தனைகளோடு வைத்தனர்‌. மீண்டும்‌ தமிழீழ-சிறிலங்காப்‌ போர்‌ ஆரம்பித்த போது, சிறீலங்காவுடன்‌ சேர்ந்து பெருமளவில்‌ தமிழ் மக்களைக்‌ கொலை செய்தனர்‌. பல பெண்கள்‌ பாலியல்‌ வன்‌முறைக்குள்ளாக்கப்பட்டனர்‌. கிழக்கில்‌ இவர்களின்‌ செயலால்‌ 4 இலட்சம்‌ தமிழ்‌ மக்கள்‌ அகதிகள்‌ ஆகினர்‌. கொல்லப்‌பட்ட 4000ற்கும்‌ மேலான மக்‌களில்‌ 2000ற்கும்‌ மேற்பட்‌டோர்‌ முஸ்லிம்களால்‌ கொல்‌லப்பட்டனர்‌. அம்பாறையில்‌ 80,000 கும்‌ மேற்பட்ட தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு விரட்டப்பட்டனர்‌. பல கிராமியப்‌ படுகொலைகள்‌ நடந்தன. வடக்கில்‌ இருந்த 600,000ம்‌ மக்களில்‌ 30,000ம் பேர் போர்‌ ஆரம்பித்ததும்‌ சிறீலங்காவுக்கு பாதுகாப்புத்‌ தேடிச்‌ சென்றனர்‌. மிகுதிப்‌ பேர்‌ அவர்கள்‌ பாதுகாப்புக்‌ கருதி அனுப்பிவைக்கப்பட்டனர்‌. விடுதலைப்‌ புலிகளின்‌ கட்டுப்‌பாட்டில்‌ இருந்த பகுதிகளில் ஒரு முஸ்லீம் கூட கொல்லப்படவுமில்லை, ஒரு முஸ்லிம் பெண்கூட பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கும்‌ கிழக்கும்‌ இணைந்த நிர்வாகத்தில்‌ கிழக்கில்‌ 33% இருக்கும்‌ முஸ்‌லிம்‌ மக்களின் வீதம்‌ 18 வீதமாக மறைந்துவிடும்‌. இணைந்த நிவாகத்தால்‌ முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்‌றது. இணைந்த நிர்வாகத்தில்‌ வடக்கில்‌ 4.7% இருக்கும் முஸ்லிம்கள்‌ வீதம்‌ 16 வீதமாக உயருவது பற்றியும்‌ இலங்‌கைத்தீவில்‌ கிழக்கு மாகாணத்‌தில்‌ முஸ்லிம்களின்‌ வீதம்‌ 2.1 ஆகும்‌. இது இணைந்த நிர்வாகத்தில் 18% உயருவதையும்‌ யாரும்‌ பேசுவதில்லை. அம்பாறையில்‌ இருக்கும் 1,01,754 முஸ்லிம் மக்கள் குறித்து பெரிதும்‌ பேசும்‌ முஸ்‌லிம்‌. தலைமை கண்டியில்‌ வாழும் முஸ்லிம்கள் வாழும்‌ 1,25,646 முஸ்லிம்கள் குறித்தும் கொழும்பில் வாழும் 1,68,956 மக்கள்‌ குறித்து எதுவும்‌ பேசுவது கிடையாது. உரிமைப்‌ போராட்டத்திற்கு ஆதரவு தராமல்‌ அதைக்‌ குழப்பும்‌ இவர்களது தன்மை இதனால்‌ தெளிவாகும்‌. முஸ்லிம்‌ மக்களின்‌ உரிமைக்‌காக தமிழர்கள்‌ தொடர்ந்து குரல்‌ கொடுத்து வந்துள்ளனர்‌. 1976ம்‌. ஆண்டு மாசி 2ம்‌ தான்‌ புத்தளம்‌ பெரிய பள்ளிவாசலில்‌ சிறீலங்கா காவற்‌துறையால்‌ 7 முஸ்லிம்கள்‌ சுட்டுக்‌ கொல்லப்பட்டபோது யாருமே அது குறித்துப்‌ பேசாதபோது தழர்கள்‌ தான்‌ அது குறித்துப்‌ பேசினார்கள்‌. தமிழீழ விடுதலைப்‌ புலிகள்‌ தமிழீழத்தில்‌ உள்ள தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல முஸ்லிம்களுக்காகவும்‌ தான்‌ போராடினார்கள்‌. தமிழ்‌ மக்களோடு தமிழீழ விடுதலைப்‌ புலிகளோடு சேராது முஸ்லிம்‌ மக்கள்‌ போராட்டக் காலத்தில்‌ பிரிந்து நின்றதன் மூலம் வரலாற்றுத்‌ தவறையும்‌, தமிழீழ விடுதலைப்‌ புலிகளையும், தமிழ்‌ மக்களையும்‌ அழிப்பதன்‌ மூலம்‌ வரலாற்றுத்‌ துரோகத்தையும்‌ செய்துள்ளனர்‌. தாம்‌ தமிழர்‌ அல்ல, சிங்களவர்‌ அல்ல என தனித்து நின்ற காலம்‌ போய்‌ இப்போது, தம்மை அராபியர்கள்‌ என இனம்‌ காண முயல்கின்றனர்‌. இவர்கள்‌ அராபியர்களும் இல்லை, சிங்களவரும் இல்லை. தமிழர்கள் தான். இவர்கள் தமது தவறைத்‌ திருத்தாது தமிழ்‌ மக்களுக்கு எதிராக தமிழீழ போராட்டத்‌திற்கு எதிராக செயற்பட்டு சிங்கள தேசத்திடம்‌ சலுகைகள்‌, பெறும்‌ எண்ணத்தைக் கைவிட வேண்டும்‌. சிங்கள தேசம்‌ இவர்களைப்‌ பயன்படுத்திய பின்‌ இவர்‌களை அழிக்கத் தயங்காது. இந்த நிலை தொடருமாக இருந்தால்‌ இலங்கைத் தீவில்‌ தங்களது தனித்துவங்களை இழந்த ஒரு உதிரிகள்‌ கூட்டமாகத்தான்‌ முஸ்லிம்கள்‌ வாழு வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்‌. *****
  45. நிழற்படங்கள் படுகொலைகள் தென் தமிழீழத்தில் சிங்களவரோடு சேர்ந்து முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களால் ஏற்பட்ட அழிபாடுகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான படிமங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. படிம மூலம்: தரிசனம் பார்வை-1 இங்கே உள்ள தமிழரின் சடலங்கள் யாவும் அரைகுறையாக எரியூப்பட்டுள்ளன. இவை மட்டு-அம்பாறையில் படம் பிடிக்கப்பட்டனவாகும். 'மட்டு. கல்லடிப் பாலத்திற்குக் கீழே நீர்த்தாவரங்களுக்குப் பக்கத்தில் சடலமொன்று கிடப்பதைக் காண்க'
  46. நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்லிம்கள் செய்த படுகொலையை மறைத்து ஏதோ முஸ்லிம்களின் தமிழர் மீதான தாக்குதலானது காத்தான்குடி நிகழ்விற்குப் பிறகு தான் தொடங்கியது போன்று தவறுத்தகவல் அளிக்கும் கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன் குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 - 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017 அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார். அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான "நாட்டுப்பற்றாளர்" சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது. மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய சாட்சியான கோவிந்தபிள்ளை தியாகராஜாவும் ஒன்றும் குறைந்தபண்டம் அல்ல. இவரும் ஒரு முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உறுப்பினர் ஆவார். இந்த இரு தேச வஞ்சக கும்பல்களும் சேர்ந்து மட்டக்களப்பில் சொந்த இனத்தையே குழிபறிக்கும் வகையில் ஆடிய வேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.