Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்16Points19667Posts -
விசுகு
கருத்துக்கள உறவுகள்13Points35001Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்9Points46977Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points88816Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/08/24 in all areas
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.4 points
-
உடல்நலம்: பூண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் - நிபுணர்கள் விளக்கம்
டாக்டர் கார்த்திகேயன் MBBS டாக்டர் தான், ஆனால் பூண்டு மருத்துவம் பற்றிய அவரது கருத்துக்கள் மனிதர்களில் நிகழ்த்தப் பட்ட ஆய்வு ஆதாரங்கள் அற்றவை. Cochrane library என்ற ஒரு தளம் இருக்கிறது. இது வரை பூண்டின் ஆரோக்கிய குணங்கள் பற்றி செய்த ஆய்வுகளை மீள ஆய்ந்து (systemic review) தந்த முடிவுகள் கீழே இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் கண்டு பயனடைக: https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD007653.pub2/full (இதய நலன் - ஆதாரம் இல்லை) https://www.cochranelibrary.com/cdsr/doi/10.1002/14651858.CD006206.pub3/full (சளிக் காய்ச்சல் - ஆதாரம் இல்லை) எனவே, யூ ரியூப் வியாபாரத்திற்காக நிஜ டாக்டர் வந்து நீங்கள் கேட்க விரும்புவதைச் சொன்னாலும் நம்ப வேண்டிய அவசியமில்லை, நீங்களே தேடிப் பார்க்கலாம், தரவு சரி பார்க்கலாம்!3 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி சகோ அந்த வீடியோவை முதலில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு மரியாதையுடன் தங்கச்சி தலைவர் மற்றும் ஈழம் பற்றி பைசுவதை தவிருங்கள் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அவா என்னடா பெரிய கொம்பா என்ன எனக்கு அப்படி இப்படி என்று வம்பை ஆரம்பிக்கிறார். அப்பொழுதும் அந்த உங்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர் படத்தை எடுத்து விடு தங்கச்சி என்று தான் சொல்கிறார்கள். இங்கே மரியாதை கௌரவம் பண்புகள் பற்றி பேசுபவர்களுக்கு தெரியாது இவாவின் இந்த அடாவடித்தனத்தை இன்று கேட்காமல் விட்டால் ல சப்பலில் இனி எந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவு நாட்களை நினைவு கூருவதற்கு ஏன் மாவீரர் நாளுக்கே அக்காவின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டி வரும் என்பது.3 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஏற்கனவே பத்துப் பக்கம் வந்து விட்டது. இனி வருவதெல்லாம் போனஸ். 👍2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
வணக்கம் நொச்சி, இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார்.2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தலைவர் சொன்னதை விரிவாக சொல்கிறீர்கள்? சும்மா இருந்தாலும் அழிப்பான் தட்டிக் கேட்டாலும் அழிப்பான். தட்டி கேட்டா சிலவேளைகளில் வெல்ல சந்தர்ப்பம் உண்டு. முயன்று பார்க்கலாம்.2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ, 1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை 2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும். 3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள். 4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும். 5. பயங்கரவாதிகள் என்கிற நாமம். 6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது நல்லதே. அங்கே இவற்றிற்கான விடை கிடைக்கும். போன வருடம் என்று நினைக்கிறேன். பிரெஞ்சு ஜனாதிபதியின் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பிரெஞ்சு மக்களும் ஊடகங்களும் அதற்கு கொடுத்த பெயர். இது அவருக்கான பிரெஞ்சு மக்களின் அறை என்று. எனவே பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியையே அடிக்க முடியும். ஆனால் ஏன் எதற்கு நேரம் சந்தர்ப்பம் என்று இருக்கிறது.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இதைத் தான் நானும் எண்ணினேன்.கண்டனங்கள் எழலாம் என்று விட்டுவிட்டேன். சுவி சொன்னது போல பையனுக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கலாமே? @கிருபன்,2 points
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......! 😂 (விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு.2 points- "அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை"
2 points"அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை" ["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.] பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ, பின் ஒன்று சேர்ந்து விளையாட. சித்திரைப் புதுவருட தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும். கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும், இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub] கள் நண்பர்களை சந்திக்க உதவுவது போல அது தொடர்ந்து இருந்தது. எம்மை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது ."நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை இது நினைவூட்டும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை . "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது. நாம் சிறுவராக இருந்த போது அங்கு நாம் விளையாடுவது உண்டு. 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல, நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட. நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் - பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே! பொதுவாக யாழ்ப்பாண நகர்,யாழ் கோட்டை, சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown." எனவும் கூறலாம். இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது. யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள். கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி, நல்லூர், கந்தர்மடம், .. இப்படி வட்டாரம், இடக்குறிப்பையும் சேர்த்து கூறுவார்கள். இது ஒரு நல்ல பண்பாடு. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம். பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது.இன்னல், துன்பம் வரும் போது,யாழ்ப்பான மக்கள்,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் . "யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை,பல்கலைக்கழக மாணவன். யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது' 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்ட தென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல திரிபு அடைந்து யாழ்ப்பாணம் [Yarlpaanam]- யாப்பாணம்- ஜப்பாணம்- ஜப்பணம் - ஜவ்வணம் [Jaffanam]- ஜவ்ண [Jaffna] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன். யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இருக்கும் மதகு, தெரு கம்பம் இவைதான் எங்களின் பாராளுமன்றம்! இதுவே எங்களின் வெள்ளை மாளிகை!! இறுதியாக, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய ஒரு பாடலை முடிவுரையாக இங்கு தருகிறேன். "சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும் பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப் படிமேல் வணங்கு பவர்க்கு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- "தாத்தாவும் பேரனும்"
2 points"தாத்தாவும் பேரனும்" குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள் என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒரே ஓய்வில்லாது இருக்கிறார்கள். ஆக பாட்டன் பாட்டி தான் பொதுவாக அவர்களுடன் பொழுது போக்கக் கூடியவர்களாக இருப்பதே ஆகும். இப்படியான சூழ்நிலையில் தான், நான் ஓய்வு பெற்றதும் என் மகள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைப்புவிட்டார். என் மகளின் வீடு லண்டனுக்கு வெளியே உள்ள, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் [Hertfordshire] என்ற ஊரில் உள்ள வெலின் கார்டன் சிட்டி [welwyn garden city] என்ற ஒரு சிறு கிராமம் ஒன்றில் இருந்தது. அங்கு தொண்ணுற்று ஐந்து வீதத்துக்கும் மேற்பட்டோர்கள் பிரித்தானியா வெள்ளை இனத்தவர்கள் ஆவார்கள். ஆகவே எனக்கு தொடக்கத்தில் நண்பர்கள் என ஒருவரும் சேரவில்லை. எனக்கு நண்பர்கள் என்றால் என் இரு பேரன்கள் மட்டுமே! ஒரு சனிக்கிழமை, சின்ன பேரன், அவருக்கு வயது சில மாதங்களே, தாயுடன் இருக்க, பெரிய பேரனுடன், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து போய், அதன் அருகில் உள்ள ஒரு குளத்திற்கு வந்தோம். அந்த குளத்தில் பல சிறுவர்கள் தொலைமுறைக் கட்டுப்பாட்டு மூலம் படகுககளை [remote-controlled boats] இயக்கி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். என் பேரனும் நாமும் அவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, அங்கு இருந்த வாங்கு ஒன்றில் நாம் இருவரும் அமர்ந்தோம். கொஞ்சநேரம் போக, பேரன் என்னிடம் தாத்தா வீட்டுக்கு போய் எமது விளையாட்டு படகை எடுத்து வருவமோ என்று கேட்டார். இனி நாம் வீடு போய் திரும்பி வர நேரம் போகும் என்பதாலும், நான் என்னுடன், பேரனுடன் பொழுது போக்க காகிதம், கத்தரிக்கோல் & வண்ண எழுதுகோல்கள் எடுத்துக்கொண்டு வந்ததால், ஒரு காகித படகு செய்து அதற்கு வண்ணம் பூசி, குளத்தில் விட்டு அவருக்கு ஒரு புது உற்சாகம் ஊட்ட எண்ணினேன். முதலில் அதை மறுத்து, இது உங்க ஊருக்குத்தான் சரி என்று பேரன் அடம்பிடித்தாலும், நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய, அதில் அவருக்கு ஒரு ஆர்வமே வந்துவிட்டது. நான் அந்த காகித ஓடத்தை மேலும் நன்கு அழகுபடுத்த அங்கு மரங்களில் இருந்து விழுந்த ஓர் இரு சுள்ளிகளையும் சில புல்லுகளையும் ஓர் இரு பூக்களையும் பொறுக்கி வரும்படி பேரனிடம் கூறினேன். அவனும் மிக மகிழ்வாக துள்ளி ஓடி எடுக்க தொடங்கினார். நானும் மு.கருணா நிதியின் 'மறக்க முடியுமா ?' பாடலை எனக்குள் முணுமுணுக்க தொடங்கினேன் 'காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்' அப்படி எம் படகு ஒருக்காவும் கவுலாது, அவன் என் பேரன், கட்டாயம் வெற்றி வீரனாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில், திடீரென ஒரே ஆரவாரத்தைக் கேட்டு திரும்பி பார்த்தேன், என் பேரனுடன், அங்கு விளையாடிக் கொண்டு இருந்த மற்ற வெள்ளை சிறுவர்களும் நான் செய்வதை பார்க்க கூட்டமாக தங்கள் மூத்தோர்களுடன் சுற்றி நின்றார்கள். எல்லோருக்கும் இது அதிசயமாகவும் உற்சாகமாகவும் இருந்தததை உணர்ந்தேன் நான் அவர்களுக்கு எப்படி செய்வது, அழகு படுத்துவது என்று விளங்கப் படுத்திக் கொண்டு, பேரன் கொண்டு வந்தவற்றை இணைத்து ஒரு செயல் விளக்மே [demonstration] செய்து காட்டினேன். எல்லோரும் கை தட்ட, பேரன் அந்த தொலை முறைக் கட்டுப் பாட்டு மூலம் இயங்கும் படகுகளுடன் ஓரளவு போட்டி போல் தண்ணீரில் விட்டார். முதலில் எம் காகித படகு கொஞ்சம் தத்தளித்தாலும், அங்கு வீசிய இளம் காற்று துணை சேர அது ஆடி ஆடி அழகாக குளத்தில் பயணிக்க தொடங்கியது. மேலும் கொஞ்ச நேரம் போக, மற்றவர்களின் மின்கலம் [battery], தம் தம் வலுவை இழக்க அவர்களின் விளையாட்டு படகுகள் ஓய்வுக்கு வந்துவிட்டன. ஆமாம் 'கொண்டாட்டம் போட்டு கொடிகளும் ஏற்றி படகை ஓட்டி மகிழ வைத்தது காலமும் போக நேரமும் வர வலு இழந்து சோகம் செய்தான்' என்றாகி விட்டது! சங்ககாலத்தில் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing), முன்படகு (canoeing] பாய்மர படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்ததாக அறிகிறோம். படகை அன்று புணை என்றும் அழைத்தனர். எம் காகித படைக்கும் காற்றால் இயங்கும் ஒரு பாய்மர படகு என்று சொல்லலாம். அது இயற்கை சக்தியில் இயங்குவதே. ஆகவே பேரனின் காகித படகு மட்டும் நிமிர்ந்து நின்று இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது!. இப்ப எல்லா சிறுவர்களின் கவனமும் பேரனின் படகில் மட்டுமே. பேரன் இப்ப பெரிய வீரன் போல [hero] புன்முறுவலுடன் அவர்களின் மத்தியில் நின்று துள்ளிக் கொண்டு நின்றான்!! 'கதைப்பதைக் கேட்க ஆட்களும் இல்லை நட்பு வழங்க யாருமே இல்லை' என்று இருந்த எனக்கு, அன்று முதல் பல நண்பர்களும் வளர தொடங்கின!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மேலோட்டமாக பார்த்தால் இப்படி தான் எனக்கும் இருந்தது. ஆனால் இதன் அத்திவாரம் ஆரம்பம் தமிழர்களுக்கு, புலிகளுக்கு எதிராக பிரான்ஸில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று தொடங்கும் போது தொடங்கி விட்டது. ஆமாம் சிங்களத்திற்கு ஆக்கிரமிப்பு பைத்தியம், பௌத்த விகாரைகள் முளைப்பது மலச்சிக்கல், சிங்களம் தமிழர்கள் மேல் போடும் சட்டங்கள் மலம்....... இப்படியே சொல்லி சொல்லி விலகி ஓடலாம். ஆனால் எல்லோராலும் அது முடியாது அல்லவா ?? அப்படியான ஒரு சிலரால் தானே உலகம் மாற்றம் கண்டது. காணும்2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் I காங்கேசந்துறை கடற்கரை, கலங்கரை விளக்கு படம் 1 - நுழைவு வாயில். 2- நடைபயிலும் பாதை (இராணுவ பயிற்ச்சியும் நடக்கும் அடையாளங்களுடன்). 3 - முழுக் கடற்கரையின் தோற்றம். தொலைவில் மக்கள் காணியில் நேவி நடத்தும் தல செவன ரிசார்ட். 4 - இன்னும் அடைப்புக்குள் இருக்கும் காங்கேசந்துறை கலங்கரைவிளக்கு. 5 - பாவனையில் இல்லாத, உடைந்த நிலையில் உள்ள காங்கேசந்துறை இறங்குதுறை (ஜெட்டி).2 points- உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு உதாரணங்கள் தேவையில்லை. அந்த பெண்ணிற்கு நடந்த சிறு தாக்குதல் சம்பந்தமாக பெரும்பாலான ஊடகங்களில் இணையத்தளங்களில் சரியனவே 99 வீதமானோர் கருத்திட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் தமிழினத்திற்கு பாதிப்புகள் வரப்போவதில்லை என்பது என் கருத்து. இன்னொரு சில்லறை தலையெடுக்காமல் இருக்க சில்லறைத்தனங்களும் தேவை.1 point- "பாசம்"
1 point"பாசம்" எம் திருமணத்தின் பரிசாக எம்கையில் தவழும் அவன்மேல் பாசம் அத்தனையும் கொட்டிவளர்த்தோம். அது தன்னலம் என்று என்றுமே எண்ணவில்லை. ஏன் - பாசத்தை உணரவும், கொடுக்கவும் பெறவும் திறன் பெரும்பாலும் உயிரியல் ரீதியானது என்றுகூட சிந்திக்கவில்லை. இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்றுயாராவதுகேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே பாசமும் ஆகும். அவனுக்கு எல்லா வசதியும் கொடுத்து, படிப்பில் ஒரு எல்லைக்கே கொண்டுபோனோம். நல்ல உயர்தர வேலையும் கிடைத்தது. அழகானபெண்ணும் காதலியாக வரவே, அவனின் விருப்பத்தின்படி, சிறப்பாக ஆடம்பரமாக திருமணமும் மகிழ்வாக நிறைவேறியது. பாசத்திற்கு நாம் நாளாந்தவாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக்கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "பாசத்தை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய பாசம்" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. திருமணத்துக்கு முன் இருந்த அவனின் போக்கு இப்ப மாறத் தொடங்கி, நாம் இதுவரை புரியாததை ஒவ்வொன்றாக அளந்து காட்ட தொடங்கியது. பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் அவசியமாகிறது. அதுமாட்டு அல்ல, தன்னலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. பாசம்கூட அதற்கு விதிவிலக்கல்ல!! ஆனால், பெற்ற தாய் தந்தையரைகூட புறந்தள்ளும் அளவிற்கும் அதுபோகும் என்பது நாம் நினைக்கவே இல்லை. பணம், அந்தஸ்து எல்லாவற்றையும் மறைக்கும் என்பது உண்மைதான் ! தாயின் மறைவிற்கு கொள்ளிவைக்கவென வந்த பொழுது தான் நான் கடைசியாக அவனை பார்த்தேன். தமிழ் மூதாட்டி ஔவையாரின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" இப்ப என்னை பாடையில் கிடத்திவிட்டார்கள். எனக்கு இன்று இறுதிச்சடங்காம். நான் தீயில் சங்கமிக்கும் பொழுது, நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது, மகனை ஒருமுறை பார்க்க தேடிப் பார்த்தேன். உறக்கம் துறந்த பாசங்களை கண்டேன். அவர்களுக்கிடையில் உரிமை காட்டிட வந்த மகனையும் கண்டேன்!! கடைசியாக என் மகனிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், என் பெயரை மறக்க வேண்டாம், என் பெயர் எம் அடையாளம், எங்கள் இருப்பு, இனத்தின் வாழ்வு!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- "கடவுள் கேட்கிறார்"
1 point"கடவுள் கேட்கிறார்" "பாலை ஊற்றி என்னை குளிப்பாட்டுகிறாய் காலை மாலை எனக்கு படைக்கிறாய் சாலை ஓரத்தில் என் மகன் மாலை வரை இருக்க தவிக்கிறான் !" "பட்டும் பகட்டும் எனக்கு எதற்கடா? தட்டும் படையலும் எனக்கு எதற்கடா? கொட்டும் பாலை அவன் குடிக்கட்டும் சொட்டும் தேன் வயிற்றை நிரப்பட்டும்!" "தடல் புடலாக என்னை பூசிக்கிறாய் கடல் கடந்து யாத்திரை போகிறாய் குடல் வற்றி அவன் சாகிறான் உடல் சிதறி அவன் வாடுகிறான்!" "எங்கும் என்னை தேடி அலையாதே இங்கு கொட்டும் கறந்த பாலை அங்கு வறியவன் வாயில் கொட்டு அங்கு அவன் சிரிப்பில் நானே !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
1 pointமொழி பெயர்ப்புத் தவறு. உலக வங்கி சொன்னது இது: "..While prices have eased off recently, the World Bank estimates the poverty rate in Sri Lanka will remain above 22% until 2026. It was about 26% in 2023, compared to pre-COVID levels of 11.3% in 2019, the World Bank said." https://www.reuters.com/world/asia-pacific/world-bank-raises-sri-lankas-growth-forecast-22-2024-2024-04-02/ "World Bank raises Sri Lanka's growth forecast to 2.2% for 2024" "றொய்ற்றர்ஸ் கக்கா" என்று திட்ட ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்😂!1 point- வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும் பொழுது இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆசிரியர்கள் என்ற கோபமே வருகிறது.. புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள நடைமுறைகளாலால் எங்களது எண்ணங்களிலும் மாற்றம் வருகிறதா? தெரியவில்லை ஆனால் எங்கள் ஊர் ஆசிரியர்கள் கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும் என நினைக்கிறேன்.1 point- கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 முழு சூரிய கிரகணம் / Monday, April 8, the 2024 total solar eclipse]
கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும் / On Monday, April 8, the 2024 total solar eclipse will sweep through the sky over North America.] கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும். எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம். புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை “வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்” "கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து -ஆங்கு, இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி, அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி, திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!" ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி, திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது. நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது "அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல" அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Indra Vizha chapter from Puhar Kandam in Silapathikaram [Poet: Illango Adikal], under the heading "One of the young men thus celebrated his beloved lady"[“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”], mentioned about eclipse as below. “The Moon, in fear of Rahu, monster who devours her on the days of her eclipse, fled from the sky in search of shelter. framed in the dark clouds of you hair, she reappeared then as your pallid face. she chased away the hairs from your fair cheeks, painted two soot- black fish- shaped eyes, and in the middle placed kumil flower, that since then passes for your pretty nose.” A solar eclipse occurs when the moon passes between the Sun and the Earth so that the Sun is fully or partially covered but this celestial spectacle also brings along with it a string of superstitions all over the world. In India & Sri Lanka, people believe when the sun rays are covered by the moon, the atmosphere becomes polluted. Therefore, for the whole day -- about 12 hours of the day time -- people observe fast and do not eat any food in the polluted atmosphere. People pray during the eclipse period so that they did not indulge in any evil activity. The same is done during Lunar Eclipse but the period of fast is only nine hours. “There are several false beliefs prevalent in our society regarding solar eclipse. Some people even lock themselves up in their homes to avoid ‘the bad rays’ from the eclipse,” Many also take a dip in holy rivers to cleanse themselves after the eclipse and some avoid cooking and eating during the eclipse. There are others who believe that pregnant women should refrain from coming out during the eclipse as it can lead to deformities in the foetus. . There is no basis in truth for these superstitions, All these superstitions originate when human beings do not have the knowledge to explain away natural phenomena. The eclipse causes emission of UV rays and hence you should not watch it with naked eyes. This is one of the reasons; why it is not considered good. Later stories were built around it as above. Lastly as per "panchangam" [பஞ்சாங்கம் / Hindu astrological almanac] the presence of Rahu and Ketu makes it bad time for a birth or to conduct any good ceremony. Actually there is no truth in it; if you trust science. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointகாற்றில் பறந்தபடி லக்னோ வீரர் பிடித்த மாயாஜால கேட்ச்; குஜராத் அணி செய்த தவறுகள் என்னென்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோவின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இல்லாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி, லக்னோ அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் இரண்டாவது வது வெற்றியைப் பெற்றுள்ளது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 21-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் எனும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் வெற்றி ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் அறிமுகமானபின், குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ அணி ஒருமுறை கூட வீழ்த்தியதில்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வென்று லக்னோ அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை 160 ரன்களுக்கு மேல் அடித்து அந்த ஆட்டத்தில் தோற்றதில்லை என்ற சாதனையை வைத்திருந்தது. அதை நேற்றைய ஆட்டத்திலும் அந்த சாதனையைத் தக்கவைத்தது. அது மட்டுமல்லாமல் லக்னோ அணி இதுவரை முதலில் பேட் செய்த போட்டிகளில் 80 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது, எதிரணியை இலக்கை எட்டவிடாமல் செய்து வெற்றி பெறுவதை சவாலாக வைத்திருக்கிறது. அந்த சவால் நேற்றும் தொடர்ந்து லக்னோ அணி தனது சாதனையைதக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.நிகர ரன்ரேட்டும் 0.775 என்று ஏற்றத்துடன் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது, நிகர ரன்ரேட்டும் மைனஸ் 797 ஆகச் வீழ்ந்துள்ளது. லக்னோ ஆடுகளம் பேட்டர்களுக்கு உகந்த விக்கெட்டைக் கொண்டது. இந்த மைதானத்தில் 163 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், அந்த ஸ்கோரை அடித்து, குஜராத் அணியை டிபெண்ட் செய்துள்ளனர் லக்னோ பந்துவீச்சாளர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்விக்கு காரணம் என்ன? அதிரடியான தொடக்கத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 54 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 48 ரன்களுக்குள் சீட்டுக்கட்டு சரிவதுபோல் 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் குழிக்குள் விழுந்தது. குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில்(19), சுதர்சன்(31) ஆகியோர் தவிர நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைக்கவில்லை. நடுவரிசை பேட்டர்களின் ‘ஷாட்கள்’ தேர்வு நேற்றைய ஆட்டத்தில் படுமோசமாக இருந்தது, விக்கெட்டுகளை எளிதாக லக்னோ அணிபந்துவீச்சாளர்களுக்கு தூக்கிக் கொடுத்து பெவிலியன் சென்றனர். திவேட்டியா(30) வெற்றிக்காக தனி ஒருவனாகப் போராடியும் பலன் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பேட்டர்களின் தோல்விதான் குஜராத் அணியை வீழ்ச்சியில் தள்ளியது. அது மட்டுமல்ல டேவிட் மில்லர் காயத்தால் அணியில் இடம் பெறாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு, நடுவரிசையிலும் பள்ளத்தை ஏற்படுத்தி ஆங்கர் ரோல் இல்லாத வெற்றிடத்தை ஏற்படுத்தியது. குஜராத் அணியின் திறமையான பல வீரர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களை இதுபோன்ற நேரத்தில் களமிறக்கி பரிசோதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடுவரிசைக்கு ஆங்கர் ரோல் செய்யக்கூடிய அனுபவமான பேட்டர் வில்லியம்சனைத் தவிர யாரும் இல்லை. ஆல்ரவுண்டரான அபினவ் மனோகர் இதுவரை வாய்ப்புத் தரவில்லை, ஆஸ்திரேலியாவின் “சிறந்த ஃபினிஷர்” எனக் கூறப்படும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடை, பரத்துக்குப் பதிலாகச் சேர்த்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதேபோல ஆல்ரவுண்டர் ஓமர்சாய்க்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்புத் தரப்பட்டது. குஜராத் அணியில் நேற்றைய ஆட்டத்தில் வில்லியம்ஸனுக்குப்பின், களத்தில் நிலைத்து ஆடுவதற்கு அனுபவமான பேட்டர், சர்வதேச அனுபவம் கொண்ட பேட்டர் யாருமில்லை. பேட்டர்கள் இல்லாமல் பந்துவீச்சாளர்களை மட்டும் தேர்ந்தெடுத்தது அந்த அணிக்கு எதிராகவே அமைந்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நல்ல ஆடுகளம், பேட்டிங் மோசம்’ குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ லக்னோ மைதானம் பேட்டர்களுக்கு உகந்த நல்ல விக்கெட். ஆனால், எங்களின் மோசமான பேட்டிங்தான் தோல்விக்கு காரணம். நன்றாகத் தொடங்கி, நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம், அதிலிருந்துஎங்களால் மீள முடியவில்லை. எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, 163 ரன்களில் கட்டுப்படுத்தினர்.” “180 வரை எதிர்பார்த்தோம் ஆனால், அதற்குள் சுருட்டிவிட்டனர். எந்த நேரத்திலும்ஆட்டத்தை திருப்பக்கூடிய மில்லர் காயத்தால் இல்லாதது பெரிய பின்னடைவு. இந்த இலக்கு அடைந்துவிடக்கூடியதுதான், ஆனால், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில்நான் ஆட்டமிழந்திருக்கக் கூடாது. உமேஷ் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார், நல்கன்டேயின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்தார் கட்டுக்கோப்பான பந்துவீச்சு லக்னோ அணி 160 ரன்களுக்கு மேல் குவித்து இதுவரை தோல்வி அடைந்தது இல்லை என்ற வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் லக்னோவின் “வேகப்புயல்” மயங்க் யாதவ் ஒரு ஓவர் வீசியநிலையில் காயத்தால் போட்டியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அதை சமாளித்து மற்ற பந்துவீச்சாளர்களை வைத்து கேப்டன் ராகுல் வெற்றியை நோக்கி வழிநடத்தினார். அதிலும் குறிப்பாக யாஷ் தாக்கூர், குர்னல் பாண்டியா, ரவி பிஸ்னோய், நவீன் உல்ஹக் ஆகிய 4 பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை உலுக்கிஎடுத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டநாயகன் தாக்கூர் குறிப்பாக யாஷ் தாக்கூர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அற்புதமாகப் பந்துவீசிய தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி அதில் ஒரு மெய்டன் 30 ரன்கள், 14 டாட்பந்துகள் எடுத்து 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வெற்றிக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பேட்டர்கள் கில், திவேட்டியா, விஜய் சங்கர் என பேட்டர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப்பாதை அமைத்தது யாஷ் தாக்கூர் பந்துவீச்சுதான். குருணல் பாண்டியாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் குஜராத் பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போட்டது என்று கூறலாம். 4ஓவர்கள் வீசிய குர்னல் பாண்டியா 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 13 டாட்பந்துகள் உள்பட ஒரு பவுண்டரி,சிக்ஸர்கூட அடிக்கவிடாமல் பந்துவீசியது சிறப்பாகும். அதிலும் குஜராத்தின் ஆபத்தான பேட்டர் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி குர்னல் பாண்டியா ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் பிஆர் சரத், நல்கன்டே இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினாலும், அவர் விக்கெட் எடுத்தவிதம், கேட்ச் பிடித்தவிதம் அணிக்கு வலுவாக அமைந்துவிட்டது. வில்லியம்ஸன் அடித்த ஷாட்டை ஸ்பைடர் போல் காற்றில் பறந்து, அந்தரத்தில் 52மைக்ரோ வினாடிகள் இருந்து ஆகச்சிறந்த கேட்சைப் பிடித்தார். வில்லியம்ஸன் விக்கெட்டை எடுத்தது குஜராத் அணியின் முதுகெலும்பை உடைத்தது போன்றதாகிவிட்டது, லக்னோ அணியும் பாதி வெற்றியை அடைந்த மனநிறைவை பிஸ்னோய் ஏற்படுத்திக் கொடுத்தார். 163 ரன்கள் என்பது வலுவான பேட்டர்கள் இருந்திருந்தால் லக்னோ போன்ற அருமையான விக்கெட்டில் எளிதாக சேஸிங் செய்யக்கூடிய ஸ்கோர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த குறைவான ஸ்கோரை வைத்துக் கொண்டு டிபெண்ட் செய்து லக்னோ வெற்றி பெற பந்துவீச்சாளர்கள் உழைப்பு முக்கியக் காரணம். பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல்,ஸ்டாய்னிஷ் பொறுப்பான பேட்டிங் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீகாக்கிற்கு நேற்று 100-வது ஐபிஎல் ஆட்டமாகும். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து அதிரடியாகத் தொடங்கி, அடுத்த ஓவரில் பேட்டில் எட்ஜ் எடுத்து உமேஷ் யாதவ் ஓவரில் டீகாக்(6) விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த படிக்கல்(7) தொடர்ந்து 4வதுமுறையாக ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து லக்னோ அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ராகுல், ஸ்டாய்னிஷ் சேர்ந்து அணியை மெல்லச் சரிவிலிருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 73ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பெரிதாக கவலைப்படாமல் நிதானமாக ஆடி 31 பந்துகளில் 33 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நீண்டகாலத்துக்குப்பின் ஸ்டாய்னிஷ் அற்புதமான இன்னிங்ஸை நேற்று ஆடினார். ஆங்கர் ரோல் எடுத்து ஆடிய ஸ்டாய்னிஷ் 40 பந்துகளில் அரைசதம் அடித்து, 58 ரன்னில் நல்கன்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பூரன், பதோனி பங்களிப்பு கடைசி நேரத்தில் நிகோலஸ் பூரன்(32), பதோனி(20) அருமையான கேமியோ ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். பூரன் டெத் ஓவர்களில் அடித்த 3 சிக்ஸர்களும், பதோனி அடித்த 3 பவுண்டரிகளும் லக்னோ அணியை பெரிய சரிவிலிருந்து மீட்டது. இருவரும் கடைசி நேரத்தில் சேர்த்த 52 ரன்கள் லக்னோ அணியை 163 ரன்கள் எனும் கவுரமான ஸ்கோருக்கு கொண்டு செல்ல உதவியது. ஒருவேளை பூரன், பதோனி நிலைக்காமல் இருந்திருந்தால், லக்னோ அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் வாய்ப்பிருந்தது. https://www.bbc.com/tamil/articles/ce9780z7m21o1 point- யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது
இந்தமாதிரியான முதலீடுகள் தமிழ் பகுதியில் வரவேண்டும்.1 point- ரணில் விக்கிரமசிங்க: One Man Government
யாரோ ஒரு யாழ் கள சிங்கள அனுதாபி ஊருக்கு போய்ட்டு வந்து எழுதிய பேய் கதை போலவே இந்தாளும் எழுதியுள்ளார்🤣.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
2022 இல் அல்ல. பல வருடமாகவே இதுதான் நடைமுறை என நினைக்கிறேன். நான் 2010/12 இல் போகும் போது விசாரித்த போதே இதே AA பதிவு பற்றி கூறினார்கள். நீங்கள் மேலே கொடுத்துள்ளது DVLA உங்கள் யூகே லைசன்சின் தகவலை, சர்வதேச லைசன்சுக்கு மாற்றி தரும் பத்திரம். ஆனால் அதை கொண்டு போய் கொழும்பில் AA யிடம் கொடுத்து அங்கே ஒரு அனுமதி எடுக்க வேண்டும். ஆனால் வீதியில் மறிக்கும் இலங்கை பொலிசுக்கு இது தெரியாதபடியால் நீங்கள் காட்டும் பத்திரத்தையே ஏற்பார்கள். இப்போ இந்த கொழும்புக்கு போய் AA யிடம் பதிவதை, ஏர் போர்ட்டிலேயே செய்து தரப்போகிறார்கள். ஓம். நான் மேலே சொல்லி உள்ள விளக்கம்தான். கெத்துத்தான் தலைவா.1 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஒரு யூரின் டெஸ்ட் எடுத்தால் - எத்தனை சதவீதம் தமிழ், எத்தனை சதவீதம் கிறிஸ்டியன், தமிழ்+கிறிஸ்டியன் கலப்பு போதிய ratio வில் உள்ளதா என்பதை எல்லாம் கண்டு பிடித்து விடாலாம் என ஒரு டிக்டொக் அறிஞர் சொன்னார். ஒரு குடுவையை எடுத்து கொண்டு கிளம்புங்கள்🤣.1 point- உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
1 pointஉண்மை. ஆனால் தமிழருக்கு அதிகமாக கொடுத்தால் - ஒரு புதிய புத்திரர் தோன்றும் வாய்ப்பு உருவாகும். அல்லது மகிந்தரே மீள புத்திரபாத்திரம் ஏற்கலாம். இதை எஜமானர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால்தான் இப்போ உள்ள ஸ்டேடஸ் குவோவையே நீடிப்பது எஜமானர்களின் தெரிவாக இருக்கிறது.1 point- தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும். JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தேவை என்பது JVP யினருக்குப் புரிகிறது. அது புரிந்த காரணத்தால்தான் அவர்கள் மேற்கில் உள்ளவர்களைத் தேடி வருகிறது. கொசுறு… புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் (தமிழரைப் பலவீனப்படுத்துவதற்காக) கைகோர்க்கிறார்கள்.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நாட்டில் கள நிலவரம் நீங்கள் யாழில், நாட்டை பற்றி உருவாக்கிய விம்பத்துக்கு மாறாக இருப்பதால் ஏற்க கடினமாக உள்ளதை உணர்கிறேன். நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்க்கைதரத்துக்கும் இடையில் இருக்கும் நேர்விகித உறவு பற்றி ஒரு வினா-விடை கீழே தருகிறேன். வாசித்துப்பயனுறுங்கள். Positive correlation between economic growth and standard of living. https://homework.study.com/explanation/describe-the-relationship-between-economic-growth-and-the-standard-of-living.html#:~:text=However%2C they are perfectly positively,people benefit more than others. வருகைக்கும், வரவேற்பிற்கும் நன்றி வாலி. R. விஜி என்றால் படையே நடுங்கும் போது நான் எம்மாத்திரம்🤣.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அப்படியெதுவும் கண்ணியத்துடன் நடக்க வேண்டிய கட்டாயமில்லை. என்ன தான் குறைந்து விடும் கண்ணியத்தை இழந்தால்? அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கும், ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கும் கொடுத்த அதே முத்திரையைக் கொடுப்பர். கல்வி, வேலை, சமூகப் பதவிகளில் தமிழ் வழிப் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் இப்போதிருப்பதை விடக் குறையும். ஒரு தலை முறை கழித்து அந்த தமிழ் வழி வந்த பிள்ளைகள் ஏழைகளாக சமூகத்தின் ஓரங்களில் வாழ்ந்து விட்டுப் போவர். எனவே உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் குறையாது, நாம் இருவரும் புதைந்த இடத்தில் புல் முளைத்திருக்கும்😎!1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நல்ல வேளையாக டய்பட்டிசுக்கு தமிழ் தெரியாது…. இல்லாட்டில் உதை வாசிப்போட்டு எனக்கு மேலே எல்லா ஏறி ஆடும்🤣 நாங்கள் வீரப்பரம்பரை. ஓணாடிகள் போல் வருமோ, வராதோ என்று பயப்படுவதில்லை. வந்த ஆளை அமத்தி வச்சு, நம்ம control இல் வச்சிருக்கிறம். ஓவராகினால், ஊசியால வயித்துல ஒரே குத்து. அடங்கீடுவார்🤣.1 point- ஒரு கிலோ விளாம்பழம்
1 pointதெரியவில்லை . 77க்கு பின்னர் நான் சந்நிதி பக்கம் போகவில்லை. ஊரை விட்டு வெளியேறி விட்டேன். அல்லது பெயர் ஞாபகமில்லை1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உண்மை, இரண்டுதரப்பும் பிரபாகரனை அவமானப் படுத்தியிருக்கிறார்கள்.1 point- நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
1 pointஅது அப்படியில்லை… சீமானிற்கு சேதம் அதிகம் ஆகாமல் தடுக்க….பையன் தன்னைத்தானே தியாகம் செய்துள்ளார்😀. நானும் விளங்கி, விலகியுள்ளேன். Fact-check இல்லாட்டில் எந்த கண்றாவியையாவது யாழில் கொணர்ந்து கூவி விற்கலாம்…. என்ன செய்வது….அறுவார்…பொல்லும் கையுமா ஒவ்வொரு முடக்கிலேம் நிக்கிறானுவ. #மைண்ட்வாய்ஸ்1 point- மனம் சூடான ஒன்றை விரும்புகிறது
1 pointஅண்ணை ஒரு போர்வையும் ஏசியும் போதும் தானே?!😜 எதுக்கு போ(பொ)ண்டாட்டி?!!!😂 சோழியபுரம் எனும் சுழிபுரம்.1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எதுக்காக நீங்கள் தலைவர் புலிப் படை பற்றி எல்லாம் கதைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் அவரை தாக்காமல் இருக்க எந்த ஒரு காரணத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஈழம், தமிழர்கள், அம்மா, பண்புகள் பண்பாடு...... இவற்றையும் தாண்டி போனால் எனது ஊர் (புங்குடுதீவார் புகையிலை வித்தனியே) எனவே இவளை எல்லாம் மனித இனத்துக்குள் அடக்காமல் இருங்க. ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டை உங்கள் வருங்காலத்தை தட்டும்.1 point- எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...
எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார். குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எதிரியை விட நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான். அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
எனக்கு வயித்தெரிச்சல்? சும்மா போய்யா. வாயில வருகுது. அப்புறம் பள்ளிக் கூடம் போகவில்லையா என்று???? தூ.1 point- இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சர்வதேச அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் எங்களுக்கு எப்படி எரிச்சல்?? ஏன் உங்கள் மூளை இப்படி எதற்கு எடுத்தாலும் குறுக்கும் மறுக்குமா விசர்த்தனமா எரியுது? எதற்காக எல்லா இடங்களிலும் சட்டாம்பி வேலை.1 point- இலங்கையில் ஆறு மாதங்கள்
1 pointவிடுப்பு பார்க்கிறதுல ஒரு விருப்பம்தானே அதான் கேட்டுப்பார்த்தன் இந்த 6 மாத விசிட்ட அப்ப போதும் என்று சொல்கிறீர்கள் போல அப்ப சரி ஆளை விடுவம் இது தெரியாம நாம திரிஞ்சு இருக்கிறம் என்றா பாருங்கோவன்1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.