Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19134
    Posts
  2. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1488
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    53011
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/14/24 in Posts

  1. எந்த அரசியல்வாதியின் உதவியும் இல்லாமல், ஒரு தனிமனிதன்+ ஊரவர்கள் சேர்ந்து மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கட்டி எழுப்பியுள்ள turf மைதானம். இப்போ இதில் சர்வதேச போட்டிகளை நடத்த இலங்கை கிரிகெட் சபையை அணுகியுள்ளார்கள். யாழில் இல்லாத புலம்பெயர் தனவந்தர்களா? கொமிசன்-வாதிகளை 30 வருடமாக நம்பி கொண்டிராமல் இப்படி முயலலாம்.
  2. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. தாக்குதலை முடித்து கொண்டோம் -ஈரான்- #பருத்தி மூட்டை கொடொன்லயே இருந்திருக்கலாம். அனைவரும் முடிந்தளவு ஊசிகளை வாங்கி சேமித்து கொள்ளவும். அமெரிக்காவும் கூட்டாளிகளும் பின் வாங்கி, பின் வாங்கி - ஊசி சப்ளையை கிட்டதட்ட இல்லை என்ற அளவுக்கு ஆக்கி விடப்போகிறார்கள்.
  4. எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..
  5. அப்பனுக்கே அரைக்கோவணம்…. இழுத்தி போத்திகடா மகனே என்றாராம்🤣
  6. நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂
  7. உங்களின் சுயமதிப்பீடு செய்யாயது தான் எனக்கு பிடித்தது.🙃 இஸ்ரேல் பணயகைதிகளை மீட்காத போதே அவர்களின் பொட்டுக்கேடு புரிந்து விட்டது. 33000 ஆயிரம் மக்களை கொன்று குவித்தது தான் அவர்களின் சாதனை.
  8. உங்களை போல் முட்டு, கொடுத்து கொடுத்து…இப்போ மிக மோசமன மத, இன, பாலின அடக்குமுறையாளரான முல்லாக்களுக்கும் முட்டு கொடுக்கும் நிலையில் நான் இல்லை ப்ரோ… #முல்லாக்களுக்கு முரட்டு முட்டு # மு (ல்லா)ட்டு சந்து ————— ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அரை கோவணம் இல்லை. முழு கோவணம்தான். ஏன்? 1. உக்ரேனுக்கு ஆதரவளித்து, மூன்று வருடமாய் முக்கி 21% நிலத்தை மட்டுமே பிடிக்க கூடியவாறு செய்து, அரக்க முடியாத நிலையில் (படைகளை தாம் நேரடியா இறக்காமலே) ரஸ்யாவை, அதன் பலத்தை முடக்கியமை. 2. தனது சகாவான தென் கொரியா, ஜப்பான் மீது தாக்காமல் வடகொரியாவை கட்டுக்குள் வைத்துள்ளமை. 3. இதையே பெரும் சக்தியான சீனாவுக்கு கூட தைவான் விடயத்தில் செய்தமை. 4.சகாவான இஸ்ரேலை நோக்கி ஈரான் அனுப்பிய 99% அனுமான் ராக்கெட்டை, ஜோர்தானில் வைத்து ஊதி நூத்தமை. இதெல்லால்லாம்தான் ஒரு உலக வல்லரசின் அடையாளங்கள். இது முட்டு இல்லை. நடப்பதை பட்டியல் இட்டுள்ளேன். இது முழுக்கோவணம்தான். பக்கதில் இருக்கும், ஒரு கோமாளியால் வழி நடத்தப்படும் உக்ரேனை 48 மணியில் பிடிப்போம் என வெளிக்கிட்டு, 3 வருடமாய், 21% சதவீத நிலத்தை மட்டுமே பிடித்ததும், இதுவும் ஒன்றா? 👆🏼இது அரைகோவணம்தான். 2/300! வீரவேல்…வெற்றிவேல்🤣. அதிலும் சேதம் ஏதுமில்லை. ஓம்…அதுதான் உலக வல்லரசு கூட்டணியின் சகாவாக இருப்பதில் உள்ள நன்மை. ஆனால் இஸ்ரேலுக்கு சல்லி காசு விரயம் இல்லை🤣. ஈரானின் நிலைக்கு 1000 டொலரே பெரிய விடயம். எனக்கு £50 பெரிய காசு. அதுவே @பாலபத்ர ஓணாண்டி க்கு £5000 உம் டிப்ஸ் கொடுக்கும் காசு.
  9. சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள். இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும். இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.
  10. வானவேடிக்கை.... சும்மா இருந்து பலவீனத்தை வெளியே காட்டாமலாவது இருந்து இருக்கலாம். 100 யை அனுப்பி லட்சத்தை வா என்று வரவழைத்து விட்டார்கள்.. வானவேடிக்கை முடிய ஈரான் அதிரும்.
  11. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது.
  12. 1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே! இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம் 'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும் ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும் ஒற்றுமை உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும் அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ? என்றாலும் இவை எல்லாம் தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ?? உதாரணமாக, "ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!" தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். "பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்" (பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். இன்னும் ஒரு சமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று பாடினார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
  14. "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !! சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை," சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்கு கிறது: "எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514] நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா?????? முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" [குறுந்தொகை-2] பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, ''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. [குறுந்தொகை-269] சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம். ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்? காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்! ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா? முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல", ஆகவே: "சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. உங்களது இதிகாசங்களின் அலசல் நன்றாக இருக்கின்றது ...... ஆனால் என்ன நாங்கள் அந்தந்த கதாபாத்திரங்களின் அந்தந்த நேரத்து செயற்பாடுகளை வைத்துத்தான் கருத்துரைக்கின்றோம்......அவற்றுக்கு முற்பட்ட நிகழ்வுகளையும் அவதாரங்களின் நோக்கங்களையும் கவனத்தில் கொள்வதில்லை.......! நன்றி தில்லை......!
  16. ஓ…. 1. சம்பந்தே இல்லாமல் நான் எழுதிய பயணகட்டுரையில் வந்து -நான் இலங்கை உளவாளி, நாதம் என் கூட்டு 2. இன்னும் பல திரியில் நான் யூனிவர்சல் கிரெடிட் எனும் சோசல் காசில் வாழ்கிறேன் 3. அங்காலே ஓடி கொண்டிருக்கும் ஈரான்-இஸ்ரேல் திரியில் நானே இல்லாமல் எனக்கு ஒரு @ கூட போடாமல் (பேடித்தனமாய்) நான் சன்ரைசில் தண்ணி அடிக்கிறேன். இந்த ஒரு மாதத்தில் இன்னும் பல திரிகளில் - இதை விட கேவலமாக- என்னை பற்றி அவதூறு பரப்பியது இந்த பெருமாள்தானா? அல்லது இன்னொரு பெருமாளா? நான் ஒரு ரசம் பூசிய கண்ணாடி - நீங்கள் என்னை எப்படி நடத்துகிறீர்களோ, நானும் அப்படியே நடப்பேன். இங்கே வரும் 9/10 உறவுகளோடு நான் சுமூகமாய் (கருத்து வேறுபாடு வரினும்) பழகுவதை பார்த்தால் இது புரியும்.
  17. அவர் யாரைத்தான் விட்டு வைத்து இருக்கிறார் Heathrow Airport பற்றி கதைக்கணும் என்றால் பிளைட் ஓடும் பைலட் கருத்து எழுதினால்த்தான் நம்புவன் என்பவர் .
  18. நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.
  19. கெளதீஸ் பார்த்துக்கொண்டு செங்கடலில் நிற்கிறார்கள். உக்ரேன் வெண்டுட்டுதாம். 🙃 சிலோனுக்கு போனதோடை அதுவும் மழுங்கி போச்சு.😝
  20. என்னெண்டாலும் ஈரான்காரன் மோடனுகளுள்ள கொஞ்சம் புத்திசாலிதான் உந்த மத்தாப்பூக்களை புட்டினுக்கு வித்து காசாக்கிப் போட்டானுகள்!😂
  21. இங்கே பலருக்கு உலகத்தில் என்ன நடைபெறுகிறதென்றே தெரியவில்லை. "பழைய" கீறல் விழுந்த றெக்கோட்டை திரும்பத்திரும்ப போட்டபடியே இருக்கின்றனர். உக்ரேனிய யுத்தத்தில் NATO சேடம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. Yemen யுத்தத்தில் சவூதி சேசம் இழுக்கிறது. பலஸ்தீன யுத்தத்தில் இஸ்ரேல் சேடம் இழுக்கிறது. இப்படி எல்லாமே எதிர்பார்த்ததற்கு மாறாக நடைபெறுகிறது. இஸ்ரேலின் உண்மையான நோக்கமே பலஸ்தீன பிரச்சனையைக் காரணம் காட்டி USA யையும் அதன் கூட்டாளிகளையும் இந்தப் பிரச்சனைக்குள் இழுத்துவிட்டு ஈரானை அழிப்பதே. ஆனால் அது நடக்கப்போவதில்லை என்றே தோன்றுகிறது.
  22. தங்களின் அறிவியல் சார்ந்த அலசல் மிக்க நன்று. பாராட்டுக்கள்.
  23. இந்த லிங் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா @பாலபத்ர ஓணாண்டி 🤣🤣🤣 இஸ்ரேலில் ஒரு சிறுமிக்கு தலையில் சிராய்ப்பு காயம். அதை விட வேறொன்றும் இல்லை. இது தன் மக்கள் மத்தியில் நானும் ரவுடிதான் என காட்ட ஈரான் செய்த புஸ்வாண வேடிக்கை. ——- உண்மையில் தூதரகத்தை தாக்குவது மிக மோசமானதும், எதிர்பாராத பின்விளைவுகளை தரகூடியதும், சட்டமீறலுமாகும். ஆனால் இஸ்ரேல் தந்திரமாக உரிமை கோரவில்லை. ஆனால் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உரிமை கோரி ஈரானிய முல்லா அடிப்படைவாத அரசு நீண்ட சிக்கலில் மாட்டியுள்ளது. @வாலி இதை பற்றி முன்னர் எழுதினார். ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இதுவரை நடந்தது புரொக்சி யுத்தம். ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வைத்து ஈரானும், உரிமை கோராமல் இஸ்ரேலும் தாக்கி கொண்டன. உள்நாட்டில் ஏலவே பலர் எதிர்க்கும் ஈரானிய முல்லா அடிப்படைவாதம் - இஸ்ரேல் மீது கை வைத்தால், ஈரானில் தன் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து நேரடியாக இறங்குவதில்லை. ஆனால் மேற்கு, இஸ்ரேல் படிபடியாக முல்லாகளிடம் இருந்து ஈரானை மீட்பது (regime change) என்ற முடிவுக்கு வந்து, ஈரானை சீண்டி இந்த நிலையை உருவாக்கியுள்ளன. தூதரக தாக்குதல் ஈரானுக்கு ஒரு செக்மேட். பதிலடி கொடுக்காவிட்டால் - உள், வெளிநாட்டில் முல்லாக்கள் மீதான, பயம், மரியாதை போய் விடும். பதிலடி கொடுத்தால் - முல்லாக்கள் ஆட்சியையே ஆட்டம்காண வைக்க கூடிய போர் வரக்கூடும். ஆனால் நடந்தது என்ன? ஈரான் தாக்கியும், ஒரு பாதிப்பும் இல்லை. மொக்கேனப்பட்டதே மிச்சம். ஆனால் இனி இதை வைத்தே இஸ்ரேல் எழும்பி ஆடும். இது மட்டும் அல்ல, முதலில் ரஸ்யாவை உக்ரேனில் அரக்க முடியாமல் மாட்ட வைத்ததும் - சிரியா போல் இங்கேயும் ராஸ்யா தலையிடுவதை தடுக்க அல்லது தலையீட்டின் பாதிப்பை குறைக்க. இங்கே நடப்பது ஒரு 4D chess விளையாட்டு.
  24. "என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்] 1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே! இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம் 'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும் ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும் ஒற்றுமை உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும் அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ? என்றாலும் இவை எல்லாம் தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ?? உதாரணமாக, "ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!" தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். "பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்" (பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். இன்னும் ஒரு சமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று பாடினார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை. ஒற்றுமையை குழப்பவென்றே ஒரு கூட்டம் காரணம் எதாவது ஒன்றைக் கூறிக்கொண்டே இருக்கும். அது நாம் கண்ட வரலாறு! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  25. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்! ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. தர்மம் காப்போம் தேசம் காப்போம்.
  26. நத்தினியாகு எங்கேயோ போய் ஒழித்து (விமானத்துடன்) இருந்தவராம். எங்கே போய் ஒழித்தவர்??
  27. நீலனை போட்டு தள்ளிய மாரி, சச்சியை போட்டு தள்ளுங்கள் என நான் எழுதவில்லையே? நீலனை இனம் கண்டு டீல் பண்ணி இருக்க வேண்டும். அதே போல் சச்சியையும். அண்ணை - நீலன் அமேரிக்க ஆசியுடன் ஒரு உத்தேச தீர்வுதிட்டத்தை சந்திரிக்கா, மங்களவோடு, பீரிசோடு இணைந்து தயாரித்தவர். அதன் முதல் வரைபு….87 ஒப்பந்தம் உட்பட இதுவரை எந்த திட்டமும் தர முன்வராத அதிகாரங்களை பகிர முன்வந்தது. அதை இனவாதிகள் எதிர்க்க, சந்திரிகா அதை அடுத்த வரைபில் நீர்த்து போக செய்தார். ஆனால் நீலனின் கனம் அதிகமானது. தனி நாட்டை எதிர்க்கும் அமெரிக்க கொள்கையை முன் தள்ளினார் என்பதை விட அவர் இன விரோதமாக எதையும் செய்யவில்லை. அமெரிக்காவை புலிகள் அணுக மிக உதவியாக இருந்திருக்க கூடியவர். அவரை புறம் தள்ளி அரசியல் செய்தால் கூட பரவாயில்லை - போட்டு தள்ளினோம். நீலனோடு ஒப்பிட்டால் சச்சி ஒரு பிஸ்கோத்து. தமிழரின் எஞ்சி இருக்கும் ஒரே பலமான இந்து-கிறிஸ்தவ ஒற்றுமையை குலைக்க என்றே ஒரே நோக்கில் வேலை செய்யும் ஏஜெண்ட். இவர் மூலம் எதையும் அடைய முடியாது. அப்படி இருந்தும் இவரை போட்டு தள்ளுங்கள் என நான் சொல்லவில்லை. இவரின் சூழ்சியை இனம் கண்டு விலத்தி நடவுங்கள் என்பதே நான் சொல்வது.
  28. ஜனாதிபதித் தேர்தல் : தமிழ் நிலைப்பாடு என்ன? - நிலாந்தன். - நாடு ஒரு தேர்தலை நோக்கி போய்க்கொண்டிருக்கும் பொழுது தமிழரசுக் கட்சியானது தொடர்ந்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலையில் காணப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அதன் செயற்பாடுகள் காரணமாக அது படிப்படியாக உடைந்து உடைந்து அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது என்பது உண்மைதான்.என்றாலும் அதுதான் இப்பொழுது உள்ளத்தில் பெரிய கட்சி. அக்கட்சி ஒரு தேர்தல் ஆண்டில் முடிவெடுக்க முடியாதபடி உடைந்து காணப்படுவது,தென் இலங்கைக்குச் சாதகமானது. நீதிமன்றம் கட்சியை முடக்கவில்லை. ஆனால் அண்மையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் செயல்பட முடியாத ஒரு நிலை. அதனால் முன்னைய தலைவராகிய மாவை சேனாதிராஜாவே இப்பொழுதும் தலைவராக உள்ளார். மாவை ஒரு திறமையான தலைவராக இருந்திருந்தால் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது என்ற கருத்து கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் உண்டு. அவருடைய தலைமையின் கீழ் தான் கட்சிக்குள் இரண்டு அணிகள் விருத்தியடைந்தன. தேர்தல் மூலம் ஒரு தலைவரை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.அது ஜனநாயகமானது தான்.ஆனால் அதனால் கட்சி இரண்டாக உடைந்து நிற்கின்றது. யாருடைய தலைமையின் கீழ் தமிழரசு கட்சி இரண்டாக உடையும் வளர்ச்சிகள் ஏற்பட்டனவோ அதே தலைவர் தான் தொடர்ந்து அக்கட்சிக்கு தலைமை தாங்குகிறார். எனவே ஜனாதிபதி தேர்தலில் உடைந்த அணிகள் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அதை நோக்கி கட்சியை ஐக்கியப்படுத்த மாவையால் முடியுமா?அவருக்கு வயதாகிவிட்டது. உடலாலும் மனதாலும் தளர்ந்து விட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி இரு வேறு நிலைப்பாடுகளோடு காணப்படுவதாகத் தெரிகிறது. இதில் சுமந்திரன் அணி தான் முதலிலேயே தன் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்தது. சுமந்திரன் அணியானது தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளரை தான் ஆதரிக்க போகிறேன் என்பதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளரை அவர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கிறார்கள்.பொது வேட்பாளரை கொண்டுவரும் தரப்புக்கள் ராஜபக்சக்களை அதாவது ரணிலை வெற்றி பெற வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஏனெனில் தமிழ் மக்களின் வாக்குகள் இயல்பாக சஜித்துக்கு போவதை தடுத்து அவற்றை பொது வேட்பாளர் பெற்றுக் கொள்வார். அதன்மூலம் சஜித்தின் வெற்றி வாய்ப்புகள் குறையும். அது அதன் தக்கபூர்வ விளைவாக ரணிலே வெல்ல வைக்கும் என்று ஒரு வாதம் உண்டு. இன்னொரு வாதம், தமிழ் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் சிங்கள மக்கள் மத்தியில் இன விரோதத்தைத் தூண்டுவதற்கு வாய்ப்பாக அமைவார். அதன் மூலம் ராஜபக்சக்கள் மீண்டும் தமது வாக்கு வங்கியைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறப்படுவது. மேற்கண்ட இரண்டு காரணங்களையும் முன்வைத்து தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், அவர்கள் அனேகமாக சுமந்திரன் அணியை சேர்ந்தவர்கள்,அல்லது சிறீதரன் அணிக்கு எதிரானவர்கள் என்ற ஒரு தொகுக்கப்பட்ட படத்தைப் பெறலாம். தமிழரசுக் கட்சிக்குள் தேர்தல் நடப்பதற்கு முன்னரே சாணக்கியன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தன் கருத்தை வெளிப்படுத்தி விட்டார். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவை நிராகரித்திருந்தார். அதன் பின் சுமந்திரன் அணிக்கு நெருக்கமானவர்கள்,சார்பானவர்கள் அல்லது மறைமுகமாக அந்த அணியை ஆதரிப்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் அந்த அணியோடு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பவர்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக அபிப்பிராயம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விடயத்தில் சுமந்திரன் அணி தெளிவாகவும் தீர்மானகரமாகவும் காணப்படுகின்றது. கட்சி ஒரு முடிவை எடுத்ததோ இல்லையோ அந்த அணி தன் முடிவை பகிரங்கமாகத் துணிச்சலாகக் கூறி வருகின்றது. ஆனால் அதற்கு எதிரணியாக காணப்படுகின்ற சிறீதரன் அணியோ தன் முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்க தயங்குவதாக தெரிகிறது. சிறீதரன் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்தரங்குகளில் காணப்படுகின்றார்.குறிப்பாக “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் கருத்தரங்கு தந்தை செல்வா கலையரங்கில் நடந்த பொழுது அதில் அவர் உரையாற்றியிருக்கிறார்.அவருடைய உரை தமிழ் பொது வேட்பாளருக்கு சாதகமாகக் காணப்பட்டது. அவர் கொள்கை அளவில் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அது தொடர்பான இறுதி முடிவை கட்சி கூடி முடிவெடுக்க வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் தவராசாவும் அவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். மேலும் கிளிநொச்சியில் சிறீதரனின் வலது கை போல காணப்படும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் முகநூலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்.அதை அவர் தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் ஆனால் கட்சி என்ன முடிவு எடுக்கின்றதோ அதற்குத் தான் கீழ்படிவேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே சிறீதரன் அணியானது பொது வேட்பாளர் தெரிவிக்குக் கிட்டவாக நிற்கிறது. சுமந்திரன் அண்மையில் அனுர குமார யாழ்ப்பாணம் வந்திருந்த பொழுது அந்தக் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார். ஆனால் அதற்காக அவர் ஜேவிபிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சஜித்,தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி தன்னை நோக்கி தமிழ் வாக்குகளைத் திருப்பும் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் அது தொடர்பான உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகளோ இணக்கங்களோ இதுவரையிலும் ஏற்படவில்லை. அதாவது ஜனாதிபதி தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கும் குறையாத காலமே இருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி முடிவெடுக்காத ஒரு நிலை. அதே சமயம் குத்து விளக்குக் கூட்டணியும் அது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. கடைசியாக வவுனியாவில் நடந்த கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஏனைய கட்சிகளோடு உரையாடுவது என்று அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.அதாவது அந்தக் கூட்டணியின் முடிவு என்ன என்பது உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. அக்கூட்டுக்குள் காணப்படும் ஈபிஆர்எல்எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பொது வேட்பாளரை குறித்து அதிகளவு பேசியிருக்கிறார். அறிக்கைகள் விட்டிருக்கிறார் ஊடகச் சந்திப்புக்களையும் நடத்தியிருக்கிறார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலையொட்டி தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலிலேயே முன் வைத்தவர் அவர்தான். ஆனால் அவர் இணைந்திருக்கும் கூட்டின் முடிவும் அதுவா என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. குத்துவிளக்கு கூட்டுக்குள் காணப்படும் கட்சிகளில் இரண்டு கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தளம்புவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக அவர்கள் முடிவெடுப்பதை பெருமளவுக்கு தாமதித்து வருவதாகவும் தெரிகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் தமிழரசுக் கட்சி இணையவில்லை என்றால் அது வெற்றி பெறாது என்று இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களோடு கதைத்திருக்கிறார்கள். எனவே குத்து விளக்குக் கூட்டுக்குள்ளும் தமிழ் பொது வேட்பாளர் என்ற தெரிவில் உறுதியான ஒருமித்த முடிவு இல்லை. இந்த விவாதப் பரப்புக்குள் வராத கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைத்தான் எடுத்தது. இந்த முறையும் அக்கட்சி அதே முடிவோடு காணப்படுகின்றது. ஆனால் அந்த முடிவை மக்களுடைய விருப்பமாக மாற்ற அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. அப்படி என்றால் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள்? மக்களைத் தாமாக முடிவெடுக்குமாறு விடுவதோ அல்லது ஏனைய கட்சிகள் மக்களை வழிநடத்தட்டும் என்று முடிவெடுப்பதோ கட்சி அரசியலில் பொருத்தமான ஒழுக்கம் அல்ல. ஒரு கட்சி தான் எடுத்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதை நோக்கி உழைப்பதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் களத்தில் தமிழ்த் தரப்பு மூன்று விதமான நிலைப்பாடுகளோடு காணப்படுகின்றது. இதில் பகிஸ்கரிப்புக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உழைக்காது என்று பார்த்தால்,நடைமுறையில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் தான் தமிழ்மக்கள் மத்தியில் செயலுருப்பெறும். ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பது.இரண்டு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது. கடந்த 15 ஆண்டுகளில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்ற விடயங்களில் ஒன்று ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களித்தமைதான். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் போரை வழிநடத்திய தளபதியாகிய சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இறுதிக்கட்ட போரில் தற்காலிகமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.எனவே ராஜபக்சங்களுக்கு எதிராக என்ற தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. எனினும்,இம்முறை அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா ? மேற்கு நாடுகள்,பன்னாட்டு நாணய நிதியம் போன்றன ரணில் விக்கிரமசிங்கவை முதன்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.ஆனால் அவர் ராஜபக்சக்களின் பதிலியாகத்தான் தேர்தலில் இறக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை முக்கியம். அப்படி ஒரு நிலைமை வந்தால், மேற்கு நாடுகள் தமிழ்க் கட்சிகளிடம் எப்படிப் பட்ட ஒரு முடிவை எடுக்குமாறு வலியுறுத்தும்? சஜித் பிரேமதாச தன் தலைமைத்துவத்தை இனிமேல் தான் நிரூபிக்க வேண்டும். மேலும் வெற்றியை நோக்கிக் கூட்டுகளை உருவாக்க முடியாதவராகவும் அவர் காணப்படுகின்றார். அது மட்டுமல்ல ஓய்வு பெற்ற படைத் தளபதிகள் அவரை நோக்கிச் செல்கிறார்கள்.ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிக்கும் தமிழ் மக்கள் அந்த ராஜபக்சக்களின் உத்தரவைப் போர்க்களத்தில் அமல்படுத்திய தளபதிகள் அதிகமாக இணையும் ஒரு கூட்டுக்கு வாக்களிப்பார்களா?சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரிபால சிறிசேனலுக்கும் வாக்களித்ததை போலவா இதுவும்? அல்லது தமிழரசுக் கட்சிக்குள் சிறீதரன் அணி தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, துணிச்சலாகத் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்தால், குத்து விளக்குக் கூட்டணியும் உட்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லாத ஏனைய கட்சிகள் ஓர் அணிக்குள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டா ? இது விடயத்தில் சிவில் சமூகங்களின் தலையீடு கட்சிகளை ஒருங்கிணைக்க உதவுமா ?அல்லது கட்சிகள் தனிப்பட்ட ரீதியில் தென்னிலங்கைக் கட்சிகளோடு டீலுக்குப் போகக்கூடுமா ? https://athavannews.com/2024/1378029
  29. அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்! adminApril 14, 2024 ஓரு நண்பர், அவர் ஒரு இலக்கியவாதி, தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த இலக்கிய நண்பர் இந்த முறையும் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க போகின்றார் என்று தெரிகிறது. அவரைப் போன்றவர்களை மயக்கக்கூடிய பேச்சாற்றலும் ஜனவசியமும் அனுரகுமாரடவிம் உண்டுதான். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன முரண்பாடுகள் தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் அனுரகுமார ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வாதிகள் மத்தியில் அதிகம் கவனிப்பை பெற்றிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டச் செயற்பாட்டாளரும் ஆகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார், ஜேவிபியை ஆதரிப்பதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்த முடியுமா என்று. அப்பொழுது இருந்ததைவிடவும் இப்பொழுது, ஜேவிபியின் மவுசு கூடிவிட்டது. இரண்டு பிரதான கட்சிகளையும் விட ஜேவிபி பரவாயில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கருதுகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான எதிர்பார்ப்பு உண்டா ? உண்டாயின், அவ்வாறான எதிர்பார்ப்பு உள்ளவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு ஜேவிபி என்ன பதில் கூறுகிறது என்பதைக் கேட்டுத் தமிழ் மக்களுக்குக் கூறுவார்களா? முதலாவது கேள்வி, இலங்கை இனப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் பல் வகைமையை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் இருந்துதான் தொடங்கியது. இலங்கைத் தீவின் பல்வகைமை எனப்படுவது இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் உண்டு என்பதுதான். இந்த பல்வகைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதம் அதாவது பெரிய இனம் ஏனைய சிறிய இனங்களின் தேசிய இருப்பை அழிக்க முற்பட்டமைதான் இனப் பிரச்சினையாகும். எனவே இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? இது முதலாவது தொகுதிக் கேள்விகள். அனுரகுமார கூறுகிறார் தமிழ் மக்களுக்கு மொழிப் பிரச்சினை, வழிபாட்டுப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என்று. உண்டுதான். ஆனால் அவையனைத்தும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்குள் அடங்கும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கூட்டுரிமையைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை முன் வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதுதான். இந்த அடிப்படையில் இரண்டாவது தொகுதிக் கேள்விகளைக் கேட்கலாம். இனப் பிரச்சினைக்கு ஜேவிபி முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ மஹிந்த கூறுகிறார் 13 பிளஸ் என்று. ரணில் கூறுகிறார் 13 என்று. சஜித் கூறுகிறார் 13 பிளஸ் என்று. இந்த விடயத்தில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு முன் வைக்கும் தீர்வு என்ன? ஏனைய பெரிய காட்சிகளை விடத் தன் கை சுத்தம் என்று ஜேவிபி கூறுகின்றது. ஊழலற்ற, முறைகேடுகளற்ற, குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று வாக்குறுதி அளிக்கின்றது. ஆனால் ஊழலும் முறைகேடும் குடும்ப ஆட்சியும் எங்கிருந்து வந்தன? இலங்கைத் தீவின் ஜனநாயக இதயம் எங்கே தோல்வி அடைந்தது? இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதுதான். அதாவது இனப்பிரச்சினைதான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தாய்ப் பிரச்சனை. அதை ஜேவிபி ஏற்றுக் கொள்கிறதா? ஆயின் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? ஏனைய கட்சிகளை விட வித்தியாசமான ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா? அதைப் பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூற ஜேவிபி தயாரா? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய பாரம்பரியத் தாயகம் ஆகிய வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு போட்டு சட்டரீதியாக அந்த இணைப்பை பிரித்தது ஜேவிபிதான். அதற்காக ஜேவிபி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? அல்லது தான் செய்தது சரி என்றால் அதற்குரிய விளக்கத்தை ஜேவிபி பகிரங்கமாகக் கூறுமா? அதாவது ஜே விபி பகிரங்கமாக பொறுப்புக் கூறுமா? இவை இரண்டாவது தொகுதி கேள்விகள். மூன்றாவது தொகுதி கேள்விகள் வருமாறு… யுத்த காலத்தில் ஜேவிபி படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. போர் வெற்றிகளைக் கொண்டாடியது. ஆனால் தமிழ் மக்கள் அந்த வெற்றிகளை இனப்படுகொலை என்று வர்ணிக்கின்றார்கள். இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் பொறி முறை ஒன்று ஐநாவில் செயற்பட்டு வருகின்றது. போரை ஆதரித்த, போரை வழிநடத்திய அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஜேவிபி பொறுப்பு கூறுமா ? நான்காவது கேள்வி, ஜேவிபியானது அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின்போது புதிதாக இணைக்கும் அங்கத்தவர்களுக்கு நடத்திய அரசியல் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பில் மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என்று விவரித்தது. ஜேவிபி இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு தான் காணப்படுகின்றதா? இந்த விடயத்தில் மலையக மக்களுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்காக ஜேவிபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா? மேற்படி கேள்விகளுக்கு ஜேவிபியும் ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டும். கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அனுரகுமார ஆற்றிய உரைகளில் காணப்படும் கவர்ச்சியான மனித நேய வார்த்தைகளைக் கண்டு மயங்கும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை அல்ல. மொழி பிரச்சினை வழிபாட்டுப் பிரச்சினை போன்றனவும் உதிரிப் பிரச்சினைகள் அல்ல. அவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் சம்பந்தப்பட்டவை. கூட்டு உரிமை என்று எப்பொழுது கேட்கலாம் என்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான். ஆனால் ஜேவிபியும் அதற்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் அரசியல் அடர்த்தி மிக்க விடையங்களை மேலோட்டமாகவும் மனிதாபிமான வார்த்தைகளிலும் கதைத்து விட்டுப் போகப் பார்க்கின்றார்கள். அரசியல் விவகாரங்களை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி மிக்க சொற்களின் ஊடாகத்தான் உரையாடலாம். அடர்த்தி குறைந்த சொற்களுக்கு ஊடாக உரையாடுவதே ஓர் அரசியல் தான்; தந்திரம் தான். ஜேவிபி வெளிப்படையான அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தைகளில் இனப் பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடினால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். எனவே இனப் பிரச்சினை தொடர்பில் ஜெவிபி தெளிவாகப் பேசாமல் ஆனால் கவர்ச்சியாக மனிதாபிமான நோக்கு நிலையில் இருந்து பேசி வருகிறது. ஜேவிபியில் முன்பு உறுப்பினராக இருந்து அதிலிருந்து விலகிய ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பு ஒன்றில் அவர் பின்வரும் பொருள் பட கூறுகிறார். “ராஜபக்சக்கள் வெளிப்படையாகத் தெரியும் இனவாதிகள்.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி “ என்று. இக்கூற்று உண்மையா இல்லையா என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு மட்டுமல்ல ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களுக்கும் உண்டு. https://globaltamilnews.net/2024/201781/
  30. ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது
  31. இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.
  32. Temu delivery.. பால்னா பொங்கும் பச்சதண்ணி எப்புடி பொங்கும்..
  33. இவர் தன்னை ஒரு ரவுடிகளின் ஏக தலைவர் என்ற நிலையில் வைச்சிருக்கப் பார்க்கிறரோ..?! இவரின் அமைச்சு கடற்தொழில். இவர் பார்க்கிற வேலைகள்.. மாநகரின் வேலை.. விளையாட்டுத்துறையின் வேலை.. நீர் முகாமைத்துவத்தின் வேலை.. கல்வி அமைச்சின்/திணைக்களத்தின் வேலை.. இவர் தான் ஒரு அசகாயசூரன் என்ற நினைப்பில் இப்பவும் இருக்கிறார்.. இந்த நினைப்பு தான் வடமாகாணத்தில் தீவகம் மிகவும் பிந்தங்கிய பிரதேசமாக இருக்க முக்கிய காரணம். தனக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படை தேவைகளை கூட.. பூர்த்தி செய்ய முடியவில்லை. யாழ் - ஊர்காவற்றுறை 779 பேரூந்துச் சாலை இன்னும் முழுமையடையவில்லை. இச்சாலையில் தான் பிரதான திணைக்களங்களும் பள்ளிகளும் அரச தனியார் மற்றும் விவசாயிகளும் தமது தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்கின்றனர். அந்த வீதி இன்று வரை முழுமை அடையாமக்கு.. காரணம்.. இவருக்கு சரியான கமிசன் கொடுக்கக் கூடிய கொத்தராக்கர் வராமையாம். தீவகத்தில் இருக்கும் பல பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக தொலைபேசி வசதி இல்லை. ஒலிபெருக்கி.. ஒலி வாங்கி வசதி இல்லை.. சரியான தொடர் குடிநீர் விநியோகம் இல்லை.. மதிய உணவு கூட இல்லை. காலையில் உணவருந்தாமல்.. 10 க்கு குறைந்தது 5 பிள்ளைகள் பள்ளிக்கு வருகிறார்கள். இவரின் வாக்கு வங்கிக்கான களமாக இருக்கும் தீவகம் கூட இவரால்... முன்னேற்றம் அடைய முடியவில்லை.. இவர் யாழ் நகரை துப்பரவாக்குவாராம். சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பாராம். தீவகம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் விமான நிலையத்திற்கு தகுந்த இடம். உல்லாசப் பயணிகளை கவரக் கூடிய இடம். இருந்தும் ஒரு திட்டமும் அங்கு இல்லை. பெரும் கூச்சலில் ஆரம்பித்த.. வேலணை நகரத்திட்டத்தை.. வங்களாவடிச் சந்தியில் போய் பார்த்தால் தெரியும். இவர் ஆரம்பித்த எதுவுமே.. உருப்படியாக இல்லை. கமிசனை.. வாங்கி பொக்கட்டிக்குள் போட்டதோடு.. சில நாலு தாடிக்காரர்களை கூட்டிக் கொண்டு.. ஊடகக் கமராக்களுக்கு ஓசி விளம்பரம் கொடுப்பதே இவரின் இப்போதைய பணியாக இருக்கிறது. உருப்படியில்லாத தமிழ் தேசியக் கட்சிகளின் நடவடிக்கையால்.. இவரின் தில்லு முல்லு அரசியல் இன்னும்.. நீடித்து நிலைக்கிறது. இவர் உண்மையில் சிங்கள பேரினவாத அரச ஏஜெனட்.. அதாவது ஒற்றர். அதையே அவர் அன்றில் இருந்து இன்று வரை செய்கிறார்.
  34. "ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே" "முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே பெருமை பற்பல படைத்து அருமை மாதமாகியது தையே" "பெருகிய அறிவு கொண்ட புருவம் நெளிக்கும் அழகியே ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ? " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  35. சாத்ஸ்…. நீங்கள் உங்கள் கண்ணை ஒருக்கால் கண் டாக்டரிடம் காட்டுவது நல்லது. 😂
  36. நீங்கள் எல்லோரும், வருடத்தில் ஒருநாள் விழுந்தடித்துக்கொண்டு வாழ்த்துவீர்கள், மிகுதி நாட்களெல்லாம் அதை எப்படி சீர்குலைப்பது என்று திட்டமிட்டு செயற்படுவீர்கள். அதனாலேயே நாட்டில் உறவும் ஒற்றுமையும் அழிந்து போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துவோரின் மனம், செயல் உண்மையாயின் அவர்கள் கொடுக்கும் வாழ்த்தும் நிகழும். அழிவையும் வீழ்ச்சியையும் சிந்தித்துக்கொண்டு வாழ்த்தும் சம்பிரதாய வாழ்த்து ஒரு வாழ்த்தா? அது வாழ்த்துவோரின் இதயத்திலிருந்து வரவேண்டும் அது நிலைக்கும்!
  37. இன்று சனி இரவு நாளை மறு நாள் திங்கள் பங்கு சந்தை திறக்கும்போது தெரியும் யார் சிங்கம் யார் ஓநாய் என்பது . செய்தி கேட்ட நேரத்திலே இருந்து ஒரு மணி நேரத்தில் பிட் காயின் பயங்கர அடி வாங்கி உள்ளது . நமக்கு பாப் கோர்ன் வாங்கி வைத்து இருக்கிறேன் நிறைய .😃
  38. இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.
  39. இப்பிடியான ஒரு கதையை யாழ்ப்பாணத்தான்ர வாளிக் கக்கூஸ்சு கதையிலும் சொல்லுவினம் 🤣
  40. "முதல் முறையாக ஈரான் தனது நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது தாக்கியிருக்கிறது. இது சரித்திரத்தில் முன்னர் இடம்பெறவில்லை. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் தாக்குதலை எதிர்பார்த்திருந்தது என்பது உண்மைதான், ஆனால் இதைச் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. இஸ்ரேல் மீது ஏற்படுத்தப்போகும் அழிவுகளை அடிப்படையாகக் கொண்டே இஸ்ரேலின் பதிலடி அமையும். அவர்களிடம் சில தாக்குதல் திட்டங்கள் இருக்கின்றன. ஈரானின் முக்கிய இலக்குகள் மீது அவர்கள் தாக்குவார்கள். நிச்சயம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவும்" என்று முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்புப் பேச்சாளர் பி பி சி இற்குக் கூறியிருக்கிறார். தனது டமஸ்க்கஸ் தூதரகம் மீதான தாக்குதலுக்காகவே இஸ்ரேல் மீது தாக்கினோம். தற்போது அந்த நடவடிக்கை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஐ நா விற்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி கூறியிருக்கிறார். ஆனால், இஸ்ரேல் பதில்த் தாக்குதலில் ஈடுபடுமானால், அதன்மீது மிகக் கடுமையான தாக்குதலை ஈரான் நடத்தும் என்றும், நீதிக்குப் புறம்பான இஸ்ரேல் எனும் நாடு மீது தான் நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா இடைமறிக்கக் கூடாது, விலகி நிற்க வேண்டும் என்றும் அமெரிக்காவை ஈரான் எச்சரித்திருக்கிறது.
  41. பகிர்வுக்கு நன்றி ...படத்தை பார்க்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை
  42. பொது வேட்பாளர் என்பது விசர்வேலை. அதுக்கு முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் வரவேண்டும். அப்படி நடக்கச் சாத்தியமே இல்லை. அப்படி ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அது சிங்களத் தரப்புக்கு சாதகமாகவே அமையும். நிறுதபட்ட வேட்பாளர் தமிழர் தாயகப்பகுதியில் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும். அவ்வாறு நடக்காதுபோயின் சிங்களத் தரப்பு வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என பிரசாரம் செய்ய ஏதுவாக இருக்கும். தனிப்பட தமது எதிர்கால அரசியல் நன்மைகளுக்காக சில அரசியல்வதிகள் தமிழர் நலன்களை அடகுவைக்க முயல்கின்றனர் என நினைக்கத் தோன்றுகின்றது. நாடாளுமன்றக் கதிரைகளே அவர்கள் குறிக்கோள். மறுபுறம் இந்த தேர்தலைப் புறக்கணிக்கும்மாறு எவரும் கோருவார்களாயின் அவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறந்துவிட்டு கோரவேண்டும். தமிழ் மக்கள் சுயமாக தமது வாக்குகளை அளிக்க அறிவுறுத்தப்படவேண்டும். சுயமாக தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம் அலது தேர்தலைப் புறக்கணிக்கலாம். தமிழ் அரசியல் கட்சிகளைவிட மக்களுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு உண்டு.
  43. மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன். அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே விவசாயி சின்னத்தை கேட்டு கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், இப்படியான எந்த காரணத்தையும் பிஜேபி கூட்டணியில் நிற்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் ஆணையம் கூறாமல், கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது. பி.கு: இந்தியாவின் சனநயகம் என்பதே ஒரு கேலிக் கூத்து. வெறுமனே 4.3 வீதம் உள்ள பார்பனர்களால் 95.7 வீதமுள்ளவர்கள் ஆளப்படும் தேசம் அது. இதில் வேறு எதனை எதிர்பார்க்கலாம்?
  44. வணக்கம், இனிய யாழ் களத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம். குழப்பம் தவிர்ப்பதற்காக உங்களை இன்றிலிருந்து "சின்னக் கந்தையா" என்று விளிக்கின்றோம். யாழ் இனிது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.