Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்13Points33809Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்13Points19668Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்10Points1592Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points88820Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/16/24 in Posts
-
எனது அறிமுகம்
3 pointsஎனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்3 points
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.3 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர் (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம் மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன். இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.3 points
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?2 points
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
கருணாவுடன் இருந்த படிப்பு அறிவு இல்லாத பிள்ளையான் அரசியலில் பெரிய இடத்தில் இருக்கும் போது கூலிக்கு மார் அடிக்கும் சிங்களவன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு வட்டின அமுக்கிறது சின்ன வேலை புத்தன் மாமா🤣😁😂.......................................2 points
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsஇந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா….. வேணும்…… என்ர புத்திக்கு…. வேணும் ஆசை யாரைத் தான் விட்டது. பாத்திட்டால் சோலி முடிந்தது.2 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம். நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.2 points
-
கருத்தொன்றில் ஏற்பட்ட அசெகரியங்களுக்காக வருத்தத்தினைத் தெரிவிக்கின்றோம்.
நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.2 points
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!2 points
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜2 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......! 😂2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில் அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும் செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும் 2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால், Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம் The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) கொழும்பு வை எடுத்துக்கொண்டால் பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல இனம் சனத்தொகை மொத்த % 1 சிங்களவர் 265,657 41.36 2 இலங்கைத் தமிழர் 185,672 28.91 3 இலங்கைச் சோனகர் 153,299 23.87 4 இலங்கையின் இந்தியத் தமிழர் 13,968 2.17 5 இலங்கை மலேயர் 11,149 1.73 6 பறங்கியர் 5,273 0.82 7 கொழும்புச் செட்டி 740 0.11 8 பரதர் 471 0.07 9 மற்றவர்கள் 5,934 0.96 10 மொத்தம் 642,163 100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது] இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession [amnesty international அறிக்கை] Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights. THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer நன்றி2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளால் தமிழரின் நலனும், தேசமும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒருமுறை நீங்கள் இங்கு பதிய முடியுமா? ஏன் கேட்கிறேன் என்றால், எந்த அரசு எமக்கான தீர்வைத் தரவில்லை என்று நாம் சொல்கிறோமோ, அதே அரசுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறீர்கள். தனக்கெதிராகப் போராடியபோது கொடுக்காத விடயங்களை, தன்னுடன் சேரும்போது கொடுத்துவிடும் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும். தேவநாயகம், இராசதுரை, டக்ளஸ், தொண்டைமான், கதிர்காமர், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், மகேஸ்வரன் தம்பதிகள் போன்ற தமிழர்கள் அரசில் நேரடியாகவோ அல்லது கூட்டணிக் கட்சியாகவோ அங்கம் வகித்தவர்கள். இவர்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டதன் மூலம் சிங்களம் அடைந்த ஒரு பிரச்சார நண்மை என்னவென்றால் தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள், எமது கொள்கைகளை ஆதரிக்கிறார்கள், அவர்களது நலன்களை நாம் பாதுகாக்கிறோம் என்று கூறுகிறார்கள், ஒருசில தமிழர்கள் தான் முரண்டுபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் என்று சர்வதேசத்தில் தனக்கு நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடிந்தமைதான். ஆனால், இத்தமிழ் அரசியல்வாதிகளால் காக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் என்ன? தொண்டைமான் கூட மலையக மக்களின் பல விடயங்களில் அரசுடன் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டியதாயிற்று. அவர்களின் அன்றாட வாழ்க்கை நூற்றாண்டுகளாக இன்னும் அப்படியே கிடக்கிறது. ஏனைய தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று எமக்குத் தெரியும். இத்தனை தமிழ்த் தலைவர்களும் ஏறத்தாள அடிமைகளைப்போன்றே அரசில் ஒட்டியிருந்தார்கள். அப்படியிருக்க, இனிவரும் தலைமுறை சிங்கள அரசுடன் எவ்வாறான இணக்கப்பட்டுடன் செல்லாம் என்று கருதுகிறீர்கள்? இவர்களையும் தமது "தமிழ் நண்பர்களாக" அரசு சர்வதேசத்தில் காட்டாது என்பது என்ன நிச்சயம்?2 points- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு அச்சொட்டாய் ஆதாரம் காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்.... ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂 ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂 உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂 என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣 அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎2 points- ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். இளைஞர் விஜயகாந்த் வியாஸ்காந்த்
Published By: VISHNU 14 APR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்பட சிறந்த வீரர்கள் பலர் குழாத்தில் இடம்பெறுகின்றனர். இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் சில வீரர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்துடன் குழாத்தில் இணைந்து தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை முன்னோடி குழாம் வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் திக்வெல்ல, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார, லஹிரு குமார, டில்ஷான் மதுஷன்க, ப்ரமோத் மதுஷான், சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, லசித் குரூஸ்புள்ளே, சஹான் ஆராச்சிகே, அக்கில தனஞ்சய, ஜெவ்றி வெண்டசாய், துனித் வெல்லாலகே, விஜயகாந்த் வியாஸ்காந்த். https://www.virakesari.lk/article/1810781 point- இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣1 point- இராணுவ சேவையிலிருந்து 8000 வீரர்கள் தலைமறைவு!
தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்1 point- லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
1 pointஅதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence இல்லை Sir.1 point- பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஓம்… ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது. என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்…. பெரிய பானையை உடைக்கக்கூடாது. @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏. சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம். டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣. ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣. அவனவனுக்கு அவனவன் பதவி.1 point- லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
1 pointசவுக்குக்கு ஆதவன் இணையம் பற்றி தெரியுமா ?1 point- எனது அறிமுகம்
1 pointஅகவை என்பது ஒரு எண்ணிக்கை அவ்வளவுதான்! முக்கியம் வேண்டியது ஆரோக்கியமும் வலிமையையும் நல்ல சிந்தனையும் கருத்தாடலும் அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே ஆகவே நான் மௌனமாகிறேன்1 point- "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!"
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது. பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப் subscribers வேணுமென்பதற்காக விட்ட புளுகு பொய் .😀1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி, இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை. https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/ ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல். எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.1 point- எனது அறிமுகம்
1 pointநான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004 க்கு முன் கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தகவலுக்கு நன்றி இந்த ஊர் யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது. இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! அல்லது நீங்கள் கூறலாமே!1 point- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இதுதான் நம்ம ஆட்களின் சொர்க்கபுரி சிறீலங்காவா?1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
இந்தப் பிரதேசத்தை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அந்தப் பிரதேசத்தை மக்கள் கைவிடவில்லை. அந்தப் பிரதேசத்தில் சீமெந்து தொழிற்சாலையை அமைப்பதனால் அந்தப் பிரதேச இயற்கை வளம் மிகவும் மோசமாக பாதிப்படையும். ஏற்கனவே அந்தப் பிரதேசம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு. மாரிகாலத்தில்கூட நன்னீருக்குப் பல மைல்கள் சென்றுதான் குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அத்துடன் அந்தப் பிரதேசம் யானைகளின் வழித்தடத்தில் அமைந்திருக்கிறது. அங்கே சீமெந்து தொழிற்சாலை அமைக்கத் தெரிவு செய்யப்பட அந்த இடத்தின் புவியியல் முக்கியத்துவமே காரணம். இலங்கை வரைபடத்தில் பேய்முனை Devils point என இந்த இடம் அழைக்கப்படுகிறது. இந்த முனையில் ஒரு உயர்ந்த கோபுரத்தை நிறுவினால் வடக்கே நெடுந்தீவிலிருந்து தெற்கே மன்னார் தீவுவரையுள்ள பாக்கு நீரிணையை Palk Strait மிக மிக இலகுவாக (கண்களாலேயே) கண்காணிப்பிற்குள் கொண்டுவர முடியும். சீமெந்து தொழிற்சாலையை அமைக்க விரும்புவது அதானி நிறுவனம் என்று கேள்வி. இப்போது இந்தப் பிரச்சனையின் பின்னணியை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியுமல்லவா 🤨1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில் பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது ரசிக்கப் பட்டதோ அதுவும் ஒருநாள் ருசிப்பதற்கு கிடைத்துவிடும்.......! 😂 பொசிட்டிவ்வாக சிந்திப்போம் .......! 😁1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்? இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
உங்களை போல் முட்டு, கொடுத்து கொடுத்து…இப்போ மிக மோசமன மத, இன, பாலின அடக்குமுறையாளரான முல்லாக்களுக்கும் முட்டு கொடுக்கும் நிலையில் நான் இல்லை ப்ரோ… #முல்லாக்களுக்கு முரட்டு முட்டு # மு (ல்லா)ட்டு சந்து ————— ஆனால் அமெரிக்க கூட்டணிக்கு அரை கோவணம் இல்லை. முழு கோவணம்தான். ஏன்? 1. உக்ரேனுக்கு ஆதரவளித்து, மூன்று வருடமாய் முக்கி 21% நிலத்தை மட்டுமே பிடிக்க கூடியவாறு செய்து, அரக்க முடியாத நிலையில் (படைகளை தாம் நேரடியா இறக்காமலே) ரஸ்யாவை, அதன் பலத்தை முடக்கியமை. 2. தனது சகாவான தென் கொரியா, ஜப்பான் மீது தாக்காமல் வடகொரியாவை கட்டுக்குள் வைத்துள்ளமை. 3. இதையே பெரும் சக்தியான சீனாவுக்கு கூட தைவான் விடயத்தில் செய்தமை. 4.சகாவான இஸ்ரேலை நோக்கி ஈரான் அனுப்பிய 99% அனுமான் ராக்கெட்டை, ஜோர்தானில் வைத்து ஊதி நூத்தமை. இதெல்லால்லாம்தான் ஒரு உலக வல்லரசின் அடையாளங்கள். இது முட்டு இல்லை. நடப்பதை பட்டியல் இட்டுள்ளேன். இது முழுக்கோவணம்தான். பக்கதில் இருக்கும், ஒரு கோமாளியால் வழி நடத்தப்படும் உக்ரேனை 48 மணியில் பிடிப்போம் என வெளிக்கிட்டு, 3 வருடமாய், 21% சதவீத நிலத்தை மட்டுமே பிடித்ததும், இதுவும் ஒன்றா? 👆🏼இது அரைகோவணம்தான். 2/300! வீரவேல்…வெற்றிவேல்🤣. அதிலும் சேதம் ஏதுமில்லை. ஓம்…அதுதான் உலக வல்லரசு கூட்டணியின் சகாவாக இருப்பதில் உள்ள நன்மை. ஆனால் இஸ்ரேலுக்கு சல்லி காசு விரயம் இல்லை🤣. ஈரானின் நிலைக்கு 1000 டொலரே பெரிய விடயம். எனக்கு £50 பெரிய காசு. அதுவே @பாலபத்ர ஓணாண்டி க்கு £5000 உம் டிப்ஸ் கொடுக்கும் காசு.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- கருத்து படங்கள்
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- எனது அறிமுகம்
1 point- எனது அறிமுகம்
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?