Jump to content

Leaderboard

  1. P.S.பிரபா

    P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      1866


  2. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      17882


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      45089


  4. suvy

    suvy

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      31005


Popular Content

Showing content with the highest reputation on 05/02/24 in all areas

  1. Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை. பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய் ஆடும் போய் விட்ட கதைதான்................
    4 points
  2. குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் வித்தாச்சா??
    3 points
  3. உங்களது பிள்ளைகள் ஒரு வயதுக்கு வந்தபின்புதானே இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களது சிறு வயதில் அவர்களுடன் ஊரில் போய் இருக்க நினைத்திருப்பீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் தனது இரு சிறுவயது பிள்ளைகளுடன் ஊரில் போய் ஒரு வருடம் இருந்த பின் இங்கே திரும்பிவிட்டார் காரணம் பிள்ளைகளை அங்கே பாடசாலையில் bully செய்வதாலும் மொழிப் பிரச்சனையாலும். அவர் இப்பொழுது கூறுவது பிள்ளைகள் வளர்ந்த பின்பு போக நினைத்திருப்பதாக. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் ஊரில் போய் படிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் அவர்களைப் பாதிக்காதா? எனக்கும் ஊரில் போய் வாழ விருப்பம் ஆனால் முடியாது. நான் பார்த்த அளவில் அங்கே சமூகம் விதிக்கும் அல்லது எதிர்பார்க்கும் வரையறைக்குள் இருக்கவேண்டும் அது எனக்கு சாத்தியமாகத் தெரியவில்லை. அவுஸ் வராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அதனை ஒட்டி வாழ்ந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது முடியாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. ஆனாலும் பிறந்த இடம், சொந்த மண் என்பதால்தான் இன்று வரை அங்கே தேடித்தேடிப் போகிறேன்.
    3 points
  4. வலையன்மடம் - வலையனைக் காணவில்லை ஆனால் தனித்து நிற்கும் மரத்தைத் தான் காணமுடிந்தது. புதுமுறிப்புக் குளம் - வாய்காலில் விளையாடும் சிறு வயசுப் பையன்கள் கயிறாக காத்திருக்கும் சணல்..சுண்டிக்குளம் போகும் வழியில்..
    3 points
  5. அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள். நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.
    3 points
  6. Zubin Karkaria CEO and Founder of VFS Global Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian https://en.wikipedia.org/wiki/VFS_Global இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான் 🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
    2 points
  7. இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா விசா வழங்குகிறார். இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா? மோடி ஜீ வாழ்க….
    2 points
  8. இந்திய கம்பனியே இதை நடத்துவதாக செய்தியில் கூறும்போது அவசர அவசரமாக இந்தியாவுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஏன் இந்திய உயர்ஸ்தானிகர் அறிக்கை விட்டார். எவ்வளவு ஒரு முக்கியமான பொறுப்பு வாய்ந்த துறையை போதிய பரிசோதனைகள் செய்யாமல் எப்படி களமிறக்கிவிட்டனர். நீங்கள் ஆச்சரியப்பட்டது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்னும் இன்னும் வரும். மயங்கி விழுந்துடாதேங்கோ.
    2 points
  9. முன்பும் எழுதி இருந்தேன் என நினைக்கிறேன். நிச்சயமாக என் பின் பதின்ம வயதுகளில், நான் இலங்கையில் இருக்கும் போதே, தனி நாடு கிடைக்கும் என நான் நம்பவில்லை. புலிகளை ஒரு போதும் சலித்ததில்லை. ஆனால் தலைவர் இருக்கும் போது இது முடிந்து விடவேண்டும் என அங்கலாய்தேன். அவர் இருக்கும் போது ஒரு பாதி தீர்வு கிடைத்து அதை அவர் 20 வருடம் அமல் படுத்துவது, அவர் இல்லாத போது தனி நாடே கிடைப்பதை விட மேலானது என நம்பினேன். எல்லோரை போலவும் தலைவரின் இயங்கு-காலமும் மட்டுப்பட்டது, இயற்கை இனவாதிகளுக்கு சார்பாக இருக்கிறது. அவர்களும் இதை உணர்ந்து playing for time. என்பதை உணர்ந்திருந்தேன். தனி நாடு கிடைத்திருந்தாலும் நான் 100% திரும்பி போய் இருக்க மாட்டன் என்றே நினைக்கிறேன். ஏனையோரை பற்றி தெரியவில்லை, என்னதான் வெளிநாடு என சொன்னாலும், எனக்கு இங்கேயும் வேர் கொஞ்சம் ஆழமாகவே ஓடி விட்டது. அடுத்தது சுதந்திரம் ஒரு பொல்லாத சாமன் - அதற்கு பழக்கப்பட்டு விட்டால் கஸ்டம். அதை இங்கே போல், கொழும்பிலோ அல்லது புலிகளின் ஆளுகையின் கீழோ என்னால் அனுபவித்திருக்க முடியும் என நான் நம்பவில்லை. குரு அள்ளி கொட்டுதாம்… கொட்டினதை அப்படியே சனி வழிச்சு எடுக்குதாம்… இதுதான் நம்ம லைப் ஸ்டோரி ஆச்சே🤣
    2 points
  10. உண்மைதான்... நம்பியிருந்தோம் ஆனால் எம்மை விட புலிகள் காலத்தில் அவர்களை சலித்து கொட்டியவர்கள் தான் இன்று புலிகள் இருந்தால் நல்லது என முணுமுணுக்கின்றார்கள்.
    2 points
  11. பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை
    2 points
  12. Published By: VISHNU 01 MAY, 2024 | 09:37 PM வடக்கு, கிழக்கில் உள்ள எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றைப் பெறுவதற்கு ஆவனசெய்யவதற்காகவே தமிழ்ப்பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கவேண்டும் என்று சொல்லிவருகின்றோம். அதெப்படி என்று நீங்கள் கேட்கக்கூடும். பொதுவேட்பாளர் தேர்தலில் நாம் தேர்தலில் வெல்ல போட்டியிடவில்லை. பின் எதற்காக என்று கேட்டால் எமது நிலையை எமது மக்களுக்கும் மற்றையோருக்கும் தெளிவுபடுத்தவும் மக்கள் தீர்ப்பு ஒன்றை வட கிழக்கு மாகாணங்களில் பெற ஆவனசெய்யவுமே தான் இந்த ஏற்பாட்டை வலியுறுத்துகின்றோம். ஐ.நா வினால் வடகிழக்கு மாகாணங்கள் மக்கள் தீர்ப்பிற்கு விடப்பட்டால் மக்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். முன்னைய தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவாறு தமிழர்களாகிய நாம் எமது வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து சில போராட்டங்களில் ஈடுபட வேண்டும். வன்முறை தேவையில்லை. பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பொது வேட்பாளரை முன் நிறுத்தி எமது தமிழ்ப் பேசும் உறவுகளை ஒன்றிணைத்து எமக்கென உலக அரங்கத்தில் சில நன்மைகளைப் பெற முயற்சிப்பதே இந்தப் போராட்டம். அவ்வாறான ஒரு போராட்டவழிமுறையாகவே தமிழ் பொதுவேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்தும் செயல் அமைகின்றது. தக்க பொதுவேட்பாளர் ஒருவரை நாம் முன்னிறுத்தினால் அவர் மும்மொழிகளிலும் எமது வரலாறு பற்றி, எமக்கிழைக்கப்பட்ட அநியாயங்கள் பற்றி, இன்னல்கள்,பாகுபாடுகள் பற்றி உலகுக்கு எடுத்துரைத்து எமது வடக்குகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய நாடுகள் நடத்தக்கூடிய தகுந்த மக்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளிக் கொண்டுவர முடியும் என்ற கருத்தை நிலைநாட்டமுடியும். பலர் பொதுவேட்பாளரை முன்னிறுத்தினால் தமக்கு வேண்டிய சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாது போய்விடும் என்று அஞ்சுகின்றார்கள். அது தவறு. பொதுவேட்பாளருக்கு நாம் எமது முதல் வாக்கை அளித்துவிட்டு 2ஆம் 3ஆம் விருப்பு வாக்குகளை நாம் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு அளிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பேணப்படும். எமது எதிர்பார்ப்புக்கள் உலகறியச் செய்யப்படும். அதேநேரத்தில் எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் இடமளிக்கப்படும். இவ்வாறு செய்வதால் இனக்கலவரங்கள் வெடிக்கவேண்டிய அவசியம் எதுவும் ஏற்படாது என்றார். https://www.virakesari.lk/article/182440
    1 point
  13. Azhagu Raja · #மணவாழ்க்கை..... மணவாழ்க்கை*_ யார்க்குத்தான்*_ சரியாக*_ _*இருந்தது*_ தசரதனுக்கும்_ அவன்_ _மனைவிகளுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ இராமனுக்கும் சீதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ கண்ணகி_ மாதவி_ _கோவலனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ அகலிகைக்கும்_ முனிவனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ புத்தனுக்கும்_ யசோதைக்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ பட்டிணத்தார்க்கும்_ மணவாழ்க்கை_ சரியில்லை*_ ஒவ்வொரு_ சாமியார்க்கும்_ சித்தனுக்கும்_ மணவாழ்க்கை_ சரியாக இருந்தால்*_ அவன் ஏன்*_ காட்டை நோக்கிச்*_ செல்கிறான்*_ ஐந்துவிரலும்_ ஒரே நீளமாகவா_ இருக்கு_ ஒவ்வொரு*_ தலையிலும்*_ ஒரு விதி*_ எழுதப்பட்டிருக்கு*_ அதை அழிக்க_ முடியுமா_ பணக்காரன்*_ ரகசியமாகப்*_ புலம்புறான்*_ ஏழை வெளியில்_ புலம்புறான்_ அனைவருடைய*_ வாழ்விலும்*_ ஓட்டையும்*_ _*ஒடச்சலும்*_ இருக்கத்தானே*_ செய்கிறது*_ எல்லாமே_ சரியாக இருந்தால்_ இறைவனை_ மறந்துவிடுவாய்_ என்ற_ _காரணத்தினால்_ கூட்டியும்*_ _*பெருக்கியும்*_ கழித்துவிடுகிறான்*_ மனிதனின்*_ வாழ்க்கையை*_ ஆணும்_ _புலம்புகிறான்_ பெண்ணும்_ புலம்புகிறாள்_ இருந்தும்*_ வாழ்க்கை*_ நடந்துக்கொண்டுதான்*_ இருக்கு*_ அதில் நாமும்_ கடந்துக்கொண்டே_ இருக்கோம்_ வாழ்வதும்*_ வாழ வைப்பதும்*_ நம்ம*_ _*கையில்தான்*_ இருக்கிறது*_ புரிந்து கொண்டு வாழுங்கள்......! 😴
    1 point
  14. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 17/12/1990 பக்கம்: 1 இரு தமிழர்கள் வெட்டிக்கொலை திருகோணமலை மாவட்டம் தோப்பூரில் கடந்த 14 ஆம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினர் இரு தமிழர்களை வெட்டிக்கொலை செய்துள்ளனர். உப்பூறல் பகுதியைச் சோர்ந்த ந. தம்பிராஜா (24 வயது) த.விஜயசிங்கம் (40 வயது) ஆகிய இருவருமே வெட் டிக் கொல்லப்பட்டுள்ளனர். [உ-5] ******
    1 point
  15. $50 க்கு கொடுத்த வீசாவை, இப்ப $75 மற்றும் $25 (கம்பனியின் அட்மின் பீஸ்) ஆக மாற்றியுள்ளனர். கொள்ளைதான் வேறு என்ன. இந்த VFS கம்பெனிதான் இலங்கையில் இருந்து யூகே விசா, யூகேயில் இருந்து இந்தியன் வீசா போன்ற பலதை கையாள்கிறது. ஆனால் இவர்கள் முடிவு எடுப்பதில்லை, அதை அந்த நாட்டு குடிவரவுத்துறையே மேற்கொள்ளும். தொடர்பான திரி
    1 point
  16. சிங்கள ஊடகங்கள் தான்… இப்படி தவறான தகவல்களை பரப்புகிறது என்று பார்த்தால்… Canada City Newsம் நம் மேல் சேறு அடிக்குது.😁
    1 point
  17. வாழ்த்துக்கள். குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.
    1 point
  18. ஒரு ஜேர்மனியனுக்கு இந்த பிரச்சனை இருக்க தான் செய்யும் 🤣🤣
    1 point
  19. தமிழ் கதைக்கத் தெரியும். வாசிக்க கொஞ்சம் பிரச்சினையாய் இருக்கு.😂 அதுகும்… இப்பிடியான செய்திகள் என்றால் வாசிக்க பெரும் சிரமம்.🤣
    1 point
  20. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் ..
    1 point
  21. லக்ஸாந்த செல்வராஜபக்ஸ and அக்ஸயா தர்மகுலேந்திர.................. இப்போது திருப்தியா? 🤣
    1 point
  22. Vignesh Waran · செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது.. தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி, நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது.. ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்.. பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார். நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்.. அவரோட வாய்ப்பு வரும் போது, அவர் Entry போட்றவர் கிட்ட, "ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா.. அப்படியே எழுதி குடுங்கய்யா" ன்னு சொல்ல, Bank officer, "350 ரூபா இருக்கு.. இதுக்கு ஒரு entry வேறயா.. போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி" அனுப்ப, அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைல வந்து நிக்கிறாரு.. அந்த Employee, "யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட, அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப, Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு.. கஷ்டப்படுறவனுக்கத் தான் அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல.. அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து, ஐயா.. "ஏன்யா என் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்.. அதுக்கு Manager, "நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல.. அதான் போட்டுட்டோம்..னு Cool aa பதில் சொன்னாரு.." அந்த மனுஷன்.. எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி மொத்த கடன் 22000 த்த மொத்தமா அடச்சிட்டு.. அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது.. (அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு) Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது, சர்வர் கிட்ட சவுண்டு விட்றது, ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது, நமக்கு கீழ வேலை செய்றவங்கள ஒருமைல பேசுறது, இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்.. இங்க யாரும் மேலயும் இல்ல.. கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு ஏத்த வேலை செய்றாங்க.. மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க.. உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே.. உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை.. உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு காரணம் பயம்.. உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character. என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்.. முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.. நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்.. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்........! 🙏
    1 point
  23. இப்படி ஒத்துழைக்கும் ஒரு பெண் கிடைத்தால் நாளைக்கு நானும் ஒரு ஆட்டம் ஆடலாம் என்று இருக்கிறேன்.......! 😂
    1 point
  24. இன்று உமா ராமணனுக்கு விதிவிலக்காக வர்ணத்தில் பாடல் ..........! 💐
    1 point
  25. கையோட குருபெயர்ச்சி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி தான் காரணம் எண்டு சோல்லிட்டு போறது....🤣
    1 point
  26. இவ்வளவு காலமாக தம்மை மீறி யாரும் வாலாட்ட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவை. ஆனால் இப்போது மும்முனைப் போட்டியில் சிக்குண்டுள்ளனர். இதைத் தானே அண்மையில் கட்டாரில் பார்த்தோம். இலங்கையில் செய்ததை கனடா அமெரிக்காவில் செய்யப் போய் மாட்டிக் கொண்ட அனுபவமும் இருக்கு.
    1 point
  27. இப்படியான ஜென்மங்கள் அப்பாவி சீவனுகளை ஏமாற்றி பிழைப்பதை விட ரோட்டில இருந்து பிச்சை எடுக்கலாம்...
    1 point
  28. நோ…நோ பிக் ப்ரோ நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள். இதுவரை எனது வாழ்க்கையை எடுத்தால் நான் அதில் அண்ணளவாக 59% ஐ யூகேயில் தான் கழித்துள்ளேன். 41%தான் இலங்கையில். ஆகவே நான் ஒரு பாதி இங்கிலீஸ்காரன்யா🤣. யாழ்கள வழக்கப்படி மரியாதையாக சொன்னால் மேற்கின் அடிமை. ஆகவே எனக்கு அதுவும் இதுவும் இரெண்டு கண்கள் போல. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றோடு வாழவே முடியாது. எனக்கு இலண்டனில் இருந்து உதயன் வாசிக்கவும் பிடிக்கும், யாழ்பாணத்தில் இருந்து கார்டியன் வாசிக்கவும் வேண்டும். ஆறுமாதம் இங்கே நின்றால் நெய் பரோட்டா கேட்கும். ஆறு மாதம் அங்கே நின்றால் ஒரு ஷீஷ் கெபாப் விடாய்க்கும். ஆகவே அங்கே, இங்கே என வாழ்வதுதான் என் குறிக்கோள். ஆனால் - பெறக்கூடாது, பெற்றால் எம்மால் முடிந்தளவு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த வாய்புக்கள் ஒரு 3ம் உலக நாட்டை விட, உலகின் 4/5 வது பெரிய பொருளாதாரத்தில் அதிகம் என நான் நம்புகிறேன். ஆகவே என் இன்பத்துக்காக இப்போதைக்கு அங்கே, இங்கே என போகப்போவதில்லை. தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது. அடுத்தது - அங்கே, இங்கே வாழ்வது என்றால் - காசு வேணும். ஆகவே சில ஏற்பாடுகளை இப்பவே செய்ய தொடங்கினால் காலம் கனியும் போது செய்யலாம். கற்ற கல்வி கடைசி வடக்கும் சோறு போடுமாமே? முயற்சித்து பார்க்கலாம். ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து இது நிறைவேறாமலே போகலாம். போகட்டுமே….போகும் போது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். முடிந்தளவு அவற்றை இன்பமானதாக சேர்க்க முனைந்தோம் என்ற நிம்மதியில் கண் மூடலாம். #ஆண்டி ***யை தட்டினால் பறப்பது புழுதி🤣
    1 point
  29. திருமதி உமா ரமணன் அவர்கள் மறைந்தாலும் பாடிய பாடல்கள் என்றும் அவரை நினைவூட்டும். அஞ்சலிகள்.
    1 point
  30. யதார்த்த பாடகி. இளையராஜா மிக நன்றாக இவர் குரலை தன் இசைக்கு பயன்படுத்தியிருப்பார். ஆர்ப்பாட்டமில்லாத பாடகி. ஆழ்ந்த அஞ்சலிகள்.
    1 point
  31. இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀
    1 point
  32. என்னைப் பொறுத்தவரை ஒரு உறவில் நான் நானாக இருக்கமுடியாது என உணரும் பொழுது அந்த உறவில் இருக்க முடியாது என்பதுதான் உண்மை மனைவிக்கு அல்லது காதலிக்குப் பிடிக்கும் என்பதற்காக தனது கொள்கை/விருப்பங்களை மாற்றி வாழ நினைத்தாலும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் அப்படி இருக்க முடியாமல் போகும் என்றுதான் நினைக்கிறேன். ஒரு உறவில் இருக்கும் ஆணும் சரி பெண்ணும் சரி அவரவர் விருப்பங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான் அந்த உறவு விரிசல் இன்றி தொடரும். ஆனால் தேவையற்ற விதமாக கட்டுப்படுத்துவதும் விதிகளைப் போடுவதும் அந்த உறவினை நம்பவில்லை என்பதுடன் அவமானப்படுத்துவதாகவே கருதப்படும் என நம்புகிறேன். ஒரு உறவில் இருக்கும் பொழுது மூச்சு முட்டி சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமல் இருப்பது அடிக்கடி நிகழுமாயின் அங்கே அந்த உறவில் விரிசல் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். நீண்ட காலம் ஒன்றாக வாழ வேண்டும் என நினைத்தால் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசித்தால், இருவரும் ஒருவரில் ஒருவர் பரஸ்பர நம்பிக்கையும் வைத்திருக்கவேண்டும். அத்துடன் அவரவர் உணர்வுகளுக்கும்/விருப்பங்களுக்கும் மதிப்பு கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் தங்களையும் ஏமாற்றாமல் வாழலாம்.
    1 point
  33. அன்றொருநாள் நானும் நீயும் ஆடும் ஆடுமாய் ஆடினோம் இதோ இந்த இடத்தில் ஆடியபோது என் முதுகில் ஆட நீ ஓடிவந்து தாவினாய், நான் சற்று விலகியபோது போனவன்தான் , நீ வருவாயென நானும் இங்கு .......! 😴
    1 point
  34. ஆர்வ/காம மிகுதியால மூக்குத்தி மூக்கை கடிக்க/----- ......மூக்குத்தி இரைப்பைக்கு போன சம்பவங்களும் உண்டெல்லோ...😍
    1 point
  35. நல்ல காலம்....நமக்கு 40 வருசத்துக்கு முதலே எல்லாம்......😎
    1 point
  36. நமது முட்டாள் தனம் எதிரிகளுக்கு மூலதனம்.
    1 point
  37. சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம். அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 10ம் திகதி Cardiologist இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்). 10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை. வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன். இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ. ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம் கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை. உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும். பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம். விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம். அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம். ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள். மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம். காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான். காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.
    1 point
  38. அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக
    1 point
  39. கட்டுரையில் அவசியமற்ற புலி வெறுப்பு இருக்கிறது. ஓணாண்டியார் இணைத்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது. இலக்கியம் என்றால் சமூகத்தின் சமகால பிரச்சினைகளில் இருந்து வருவது, வரலாறும் அதில் இருக்கும். "ஏன் இலக்கியக் கூட்டமென்று விட்டு சாதியைப் பேசுகிறீர்கள்?" என்று கேட்ட இளையவர் எதை இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன் (லியோ திரைப்படம், ராணி காமிக்ஸ்?😂) பி.கு: ஜேபிசி மெசின் தேர் விளக்கம் அடிக்கடி மாறுகிறது. சேற்றில் புதைந்த தேரை இழுத்தோம் என்பது மாறி இப்போது குடும்பப் பிரச்சினையாகி விட்டது.
    1 point
  40. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.