Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3314
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    2166
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/14/24 in all areas

  1. விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார். தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன். எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
  2. ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில் வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁),
  3. உண்மைதான்.. அது மட்டுமல்ல 8 வருடங்களுக்கு முன் கொழும்பில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.. நான் முதன்முதலாகப் போன மெஹெந்தி வைக்கும் சடங்கு அதுதான். அந்த திருமண நிகழ்ச்சியில் இன்னொரு புது விடயத்தையும் பார்க்க முடிந்தது. அது எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது என்பது உண்மை. தாலி கட்டி, மெட்டி எடுத்து etc சடங்குகள் முடிந்து மணமக்களை ஆசீர்வதிக்க ஆயத்தமாகும் நேரத்தில் மணமகளின் தாய் அவர்களது உறவுக்காரர் ஒருவரின் சிறு வயதுக்கு குழந்தையை வாங்கி மணமகளின் மடியில் வைத்தார்.. இன்னொருவரின் குழந்தையை எடுத்து மடியில் வைத்தவுடன் அவருடைய மகளுக்கும் குழந்தை கிடைத்துவிடுமா? தர்ம சங்கடமான நிலையைத் தானே மணமக்களுக்கு ஏற்படுத்தும்!! இது போன்ற செயல்களை செய்யும் பொழுது கொஞ்சமும் யோசிப்பது இல்லையா? இதனால்தான் இப்பொழுது தனியே இரு பக்க பெற்றோர்கள், சாட்சிக்கு இருவர் என பத்துப் பேருடன் நடக்கும் திருமணங்களை சிலர் விரும்புகிறார்களே தெரியவில்லை
  4. நேற்று வாழ்வில் முதல் தடவையாக ஒரு பெண்ணினது வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். என் நெருங்கிய உறவு ஒருவரது மருமகள் என்பதால் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியவில்லை. இந்தியாவில் நடப்பது போன்று வித விதமாக வண்ணமயமான காப்புகளை கர்ப்பிணிக்கு ஏனைய பெண்கள் (மட்டும்) அணிவித்து கொண்டாடினனர். இதில் லைட்டா மனசில் ஒரு வெறுப்பை உணர்ந்தாலும் அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு இளம் ஈழத் தமிழ் பெண் தம்பதியையும் (lesbian couple) நிகழ்வுக்கு அழைத்து இருந்தனர். அவர்களும் எல்லாரையும் போல, ஏனைய நண்பர்கள் உறவினர்களுடன் சந்தோசமாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயத்தில் எம் இளம் சமூகத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளமை மனசுக்கு திருப்தியாக இருந்தது.
  5. உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ள இயலாத tone-deaf ஆட்கள் அல்ல யாழில் இருப்பது😂! மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் இதய நலனுக்கு ஒவ்வாதவை என்பது மருத்துவ அறிவியல் உண்மை. ஆனால், அந்த மருத்துவக் காரணங்களாலா "மாட்டிறைச்சி தடை" கேட்கிறார்கள் என்கிறீர்கள்? இங்கே இவர்கள் கேட்பது "பெரும்பான்மையாக இந்தப் பிரதேசங்களில் வாழும் இந்துக்களால் வணங்கப் படும் ஒரு விலங்கை, இந்து அல்லாதோரும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்" என்ற திணித்தல் முயற்சி. இது தான் எதிர்க்கப் பட வேண்டியது. ஒருவருக்கு தன் ஆரோக்கியம் காரணமாக மாட்டிறைச்சி சரி வரவில்லையானால் தாராளமாக அவர் தவிர்க்கலாம். ஆனால், தனக்குப் பக்கத்தில் இருப்பவனும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் இயற்றக் கோருவது, சாப்பாட்டை ஒரு மத நம்பிக்கைக்கேற்ப கட்டுப் படுத்தும் அவசியமற்ற திணிப்பு. இதே போன்ற தொனியில் ஒரு தீவகப் பாடசாலையில் மச்ச உணவுத் தவிர்ப்பு அறிவிப்பு வந்து நீண்ட விவாதம் இங்கே நடந்தது. அப்போதும் "சுத்தம், ஆரோக்கியம்" என்று மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு சந்து பொந்துக்கால் ஓடிக் களைத்து, இறுதியில் "உள்ளே கோயில் இருக்கிறது, அது தான் காரணம்" என்று பம்மினார்கள்😎.
  6. தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள் என்பதனைவிட எல்லோரும் எல்லோருக்கும் உறவினர்கள் என்பதே சரியானதாகும். இந்நிலையில் அயற்கிராமத்தைச்சேர்ந்த நாதன் பெயரை எழுதிக்கொண்டு வந்து தன்னை அழைத்தது கலாபதி எதிர்பாராத ஒன்றே! நல்லவேளை நாதன் பெயரை எழுதிக்கொண்டு வரும்வேளையில் கலாபதி வீட்டுவாசலிலேயே நின்றிருந்தமையால் எவ்வித ஆள்மாறாட்டமுமின்றி இருவரும் சந்தித்துக்கொண்டனர். நாதன் கூறியசெய்தியோ மீண்டும் ஆச்சரியத்தை அல்ல பேராச்சரியத்தையே கலாபதிக்கு கொடுத்தது. காரணம் தங்களைக் கையுடன் கூட்டிவரச் சொன்ன நபர் ‘பிரபாகரன்’ என்பதைக் கேட்டால் யாருக்குத்தான் ஆச்சரியமாக அமையாதுவிடும். ஆம் இன்றுமட்டுமல்ல அன்றும்கூட அவரைத் தெரியாதவர்களிற்கு சாதாரண இளைஞராக காட்சியளித்த தேசியத்தலைவருடைய செயல்கள் அவரைத் தெரிந்த ஊரவர்களிற்கும் உறவினர்களிற்கும் அசாதரணமாகவும் வியப்பிற்கு உரியதாகவும் அமைந்திருந்தன. 1970 – 1972 காலப்பகுதிகளில் சிங்களஇனவெறி அரசிற்கெதிராக கொடும்பாவி பஸ்எரிப்பு குண்டுவீச்சு எனப்பல தீவிரவாதச்சம்பவங்களில் ஈடுபட்டு இறுதியாக வல்வெட்டித்துறை நெற்கொழுவில் நடந்;த கைக்குண்டுத் தயாரிப்பு விபத்தில் முடியவே படுகாயமடைந்தநிலையில் பொலிசாரின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து இந்தியாவிற்குச்சென்ற சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் குட்டிமணி தங்கத்துரை என்னும் தன்னைவிட வயதில் கூடிய போராளிகளுடன் இணைந்து செயற்பட்டவர் பிரபாகரன் என்பதும் அவ்வாறு மூத்தோருடன் இணைந்து செயல்ப்பட்டதால் ‘தம்பி’ என்ற அழைபெயரால் வல்வெட்டித்துறை சமூகத்தில் அன்புடன் இவர் அழைக்கப்பட்டதும் கலாபதிக்கு தெரிந்ததே! இதனைவிட காயமடைந்தவர்கள் தப்பிச்செல்வதற்கு கலாபதியுடைய உறவினரான சித்திரம் என்பவரே படகினை ஏற்பாடுசெய்ததும் கலாபதியுடைய மூத்தசகோதரன் சிறிபதியும் இந்த ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டதும் கலாபதிக்கு நன்குதெரிந்தே இருந்தது..1972அக்டோபர் 05இல் நடந்த இக்குண்டு வெடிப்பின் பின் கடந்த இரண்டு வருடங்க ளிற்கு மேலாக இக்குழுவில் இருந்த குட்டிமணியைத்தவிர வேறுயாரையும் ஊர்ப்பக்கங்களில் அதிகமாக காணமுடிவதில்லை. இதன்தொடராக சில காலங் களின் முன்பு டைனமெற் என்ற வெடிபொருளை வெடிக்கச்செய்யும் கெற்பு எனும் பொருளினை கடல்மார்க்கமாக கொண்டு வரும்பொழுது அவை எதிர்பாராமல் இலங்கை கடற்படையினரிடம் சிக்கியது. இதனைத் தொடர்ந்த விசாரணைகளின் பின்பு இந்தியஇலங்கைப் பொலிசாரினால் திருச்சியில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையின் ஏதே ஒரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கலாபதி அறிந்தேஇருந்தார். இந்நிலையில் இத்தீவிரவாதக் குழுவைச்சேர்ந்த பிரபாகரன் தன்னையும் தனதுநண்பனையும் அழைத்துவரச் சொன்னதாக அறிந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது! எனினும் பிரபாகரன் அழைத்து வரச்சொன்னதாக நாதன் சொன்னதும் ஏன்? என விளக்கம் கேட்காமலேயே நாதன் எழுதிக்கொண்டு வந்த அடுத்த பெயருக்குரிய நண்பனின் வீட்டிற்குச்சென்று அவனையும் அழைத்தனர். குறிக்கப்படும் இந்நண்பன் சிலகாலத்திற்கு முன்பு மேற்குறிப்பிட்ட போராளிகளால் இந்தியாவின் வேதாரணியத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்திற்கு சென்று ‘தம்பி’பிரபாகரன் உட்பட அனைவரையும் சந்தித்து திரும்பியிருந்தார். இப்போது மூவரும் கதைத்துக்கொண்டு பிரபாகரனை சந்திக்கச் சென்றனர். பிரபாகரனும் கலாபதியும் 1968இல் பொன்னம்பலம் மாஸ்டர் வீட்டில் ஒன்றாகப்படிக்கும் காலத்திலேயே அறிமுகமானவர்கள் என்பதால் கலாபதிக்கு பிரபாகரன் புதியவர் அல்ல என்;பது இங்கே குறிப்பிடத்தக்கது. நெற்கொழு வைரவர்கோவில்வரை இவர்கள் நடந்துவரும் பொழுது அங்கிருந்த வாசிகசாலையில் தமக்காக பிரபாகரன் காத்துநிற்பதைக் கண்டனர். இவர்களைக்கண்டதும் வெளியேவந்த பிரபாகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். நண்பகலான அவ்வேளையில் தனது கடமை முடிந்தது என நாதன் இவர்களைவிட்டு பிரிந்துசென்றார். அருகிலிருந்த மைதானம்வரை தொடர்ந்து நடந்துவந்த மூவரும் அங்கிருந்த புல்வெளியில் அமர்ந்து கொண்டனர். நடந்துவந்த களைப்புத்தீர இவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் பிரபாகரன் தான் இவர்களை அழைத்தகாரணத்தை கூறத் தொடங்கினார். இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் பெரியசோதி தங்கத்துரை சின்னச்சோதி நடேசுதாசன் எனும் முன்னோடிகளுடன இருந்துவிட்டு தான் இப்பொழுது தனியாகவே ஊருக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் காலம்கனியட்டும் என காத்திருப்பது போல் தோன்றுவதால் இவ்வாறான முடிவிற்கு தான் வந்துள்ளதையும் நியாயப்படுத்திய அவர் ஓய்வின்றி எதையாவது செய்ய வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். 1974ஆம் ஆண்டில் கலாபதியும் அவர் குழுவினரும் மேற்கொண்ட தீவிரவாத முயற்சிகளைக்கேள்விப்பட்டே அவர்களினைத்தான் சந்திக்கவிரும்பிய காரணம் என்பதையும் விளக்கமாக கூறினார். தொடர்ந்து இனத்தின் அடிப்படையில் தேவையின்றி அப்பாவிமக்களை அநாவசியமாக தாக்கும் அரசபடைகளிற்கு எதிராக எதையாவது செய்யவேண்டுமெனவும் அதற்காக அவர்களை தன்னுடன் இணைந்து பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 1967இல் வல்வெட்டித்துறை சந்தியில் அரசபடைகள் பொதுமக்களிற்கு எதிராக தாக்குதலைநடத்தியது. அத்தாக்குதலில் அப்பாவியான சிவஞானசுந்தரம் கொல்லப்பட்டார். இதுபோன்ற மிலேச்சத்தனமான தேவையற்ற தாக்குதல்களை கண்டும் கேள்விப்பட்டும் சிறுவனானபிரபாகரன் வேதனை யுற்றார். இதனால் தாக்கப்படும் மக்களிற்காக வேதனைப்பட்ட இவர் சிங்களப்படைகளின் மீது வெறுப்புக்கொண்டார். 1968இல் தனது பதின்நான்கு வயதில் இருந்தே தீவிரவாத போராட்ட உணர்வுடன் செயற்பட்டவர் பிரபாகரன். சிறுவயதிலிருந்தே மாயாவியின் சாகஸக்கதைகளைப் படிப்பதிலும் அவற்றைசேகரிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அதற்கேற்றாப்போல் அக்காலத்தில் கெற்றப்போல் சகிதம் எந்நேரமும் உலாவரும் இவர் தனது பாடசாலைத்தோழர்களுடன் ஒருகுழுவை அமைத்து அதற்கு ‘காட்டுஎல்லைப்படை’ என பெயரும் சூட்டியிருந்தார். (தகவல் சுரேஸ்குமார்;) அதேநேரத்தில் தனதுவீட்டிற்கு அருகாமையில் விளாம்பத்தை காணியுடன் அமைந்திருந்த இடிந்து சிதிலமான ஓதுவார் வீட்டினுள் தன்னைவிட மூத்தவர்களான நடேசுதாசன் ஜெயபால் பாலி மோகன் என்பவர்களுடன் இணைந்து பெற்றோல்க்குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டார். (காலநதிக்கரையில் மீளநினைக்கின்றேன். 1994 ஏப்ரல் மேமாத வெளிச்சம் இதழ்) 1969களில் வேணுகோபால்ஆசிரியர் ஊட்டிய தமிழரின்சுயாட்சிக் கொள்கையினால் உந்தப்பட்டு அவருடன்திரிந்தார். அதேவேளை தனது பாடசாலைத் தோழர்களான சுரேஸ்குமார் குமாரதேவன் என்பவர்களுடன் இணைந்து நெற்கொழு கோழிப் பண்ணையில் சின்னச்சோதியிடம் உடற்பயிற்சி மற்றும் சைனாபுட்டிங் என அழைக்கப்பட்ட சீன தற்பாதுகாப்பு முறைகளையும் பயின்றுகெண்டார். 1970டிசம்பரில் கபொத சாதாரணபரீட்சைக்கு முதன்முதலாக தேற்றியஅவர்; பரீட்சைக்கு முன்பாகவே தமிழ் மாணவர் பேரவையுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1971ஜனவரிமாதத்தில் வல்வெட்டித்துறை வேம்படியில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் வருகையை எதிர்த்;து பதியுதீன் உடைய கொடும்பாவி கட்டியதுடன் போராட்டப்பாதையில் நேரடியாக களம் இறங்கினார். இவ்வேளையில் இனஉணர்வில் வல்வெட்டித்துறையில் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கூட்டணியின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மார்ச் மாத முதல்வாரத்தில் வல்வெட்டித்துறையில் நடந்த Nஆபெரேரா வருகைக்கெதிரான புறக்கணிப்புப் போரில் முன்னின்றார். 1972ஆரம்பம்முதலே மாணவர்பேரவை மற்றும் தமிழர்கூட்டணியின் போராட்டப் பாதையில் தனது தீவிரப்போக்கை வளர்த்துக்கொண்டதுடன் குடியரசு அரசியல்யாப்பிற்கு எதிராக தனது இளவயதுத்தோழர்களை இணைத்து 1972 மே 22 குடியரசுநாள் பகிஸ்கரிப்பு மற்றும் தொண்டைமானாறு பஸ்எரிப்பு (1972 மே 22 இரவு) என்பவற்றை வெற்றிகரமாக செய்துமுடித்தார். அத்துடன் மாணவர் பேரவையினால் நடத்தப்பெற்ற துரையப்பாவின் காணிவேல் குண்டு வெடிப்பை திசைவீரசிங்கத்துடன் இணைந்து (1972செப்டெம்பர்23) நடத்தினார். இக்காலத்தில் குலம் உதயணன் நடேஸ் போன்றோருடன் வல்வெட்டித்துறையின் சிலம்ப வல்லுனரான பிரபுவிடம் தமிழரின் உடற்பயிற்சிக்கலையான தெண்டா சிலம்பம் என்பவற்றையும் கற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே இவர் போராட்ட முன்னோடிகளுடன் இணைந்த நெற்கொழு குண்டுவிபத்து (1972அக்டோபர்05) நடைபெற்றது. இக்காலத்திலேயே வல்வெட்டித்துறைக்கு வெளியேயான தனது தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார். செட்டி ரமேஸ் சிவராசா மற்றும் கண்ணாடி எனும் பத்மநாதன் என்பவர்களுடன் அறிமுகமாகிய இவர் அவர்களுடன் இணைந்து தாக்குதல் முன்னேற்பாடாக கல்வியங்காட்டில் வாழ்ந்த சிங்களடொக்டர் ஒருவரின் காரினைக் கடத்தியதடன் (1972டிசம்பர்24) பொலிசாரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக அக்காரினை எரித்தது உட்பட வேறுபல நிதித்திரட்டல் செயற்பாடுகளிலும் பங்குபற்றியிருந்தார். 1973ஜனவரி14இல் சாவகச்சேரியில் சத்தியசீலனை சந்திப்பதற்காக மோகனுடன் சென்ற இடத்தில் சிவகுமாரனுடன் அறிமுகமாகிக்கொண்டார். அடுத்தநாள் வேலணைக்கு வந்த குமாரசூரியருக்கு கறுப்புக்கொடி காட்ட முடியாது தோல்வியுடன் ஊர்திரும்பிய வேளையில் தான்கலந்துகொள்ளும் இறுதியான அகிம்சைப்போர் இதுவென தன்னுடன்வந்த நண்பனான இந்திரலிங்கத்திற்கு உறுதியாகக்கூறினார். அன்று நடந்த மண்கும்பான் குண்டுத்தாக்குதல் முயற்சி யினைத் தொடர்ந்து மாணவர் பேரவையினர் மீதான காவல்துறையினரின் தீவிரவேட்டையில் சிறிசபாரத்தினத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் 23மார்ச் இரவில் பஸ்தியாம்பிள்ளையிடமிருந்து சமயோசிதமாக தப்பிக்கொண்டார். 42நாட்களின் பின் மோகனுடன் வேதாரணியம் சென்று தனது முன்னோடிகளுடன் இணைந்து கொண்டார். இவர்களுடன் ஏறத்தாள இரண்டு வருடங்கள் வேதாரணியம் திருச்சி, சென்னை என்னும் இடங்களில் கழித்திருந்தார்.இவ்வாறு போராட்ட முன்னோடிகள் மற்றும் மாணவர் பேரவை என்பவற்றுடன் இணைந்து பெற்றுக்கொண்ட நடைமுறை அனுபவங்களின் ஊடாக இடையின்றி இயங்கக்கூடிய ஒருகுழுவை உருவாக்கி ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்கான ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவேடுத்தார். இந்த நோக்கத்தில் 1975மார்ச்மாதத்தில் நடைபெறும் கச்சதீவு உற்சவத்தினூடாக இலங்கை திரும்பியிருந்தார்.
  7. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன். எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
  8. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)
  9. "மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்" / பகுதி 01 இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் , பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம். இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல. அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே! போர் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும் அத்தகைய குற்றங்களைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளிவரத் தொடங்கின. இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பாத்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது. இதில், இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின், போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படு கொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும். இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான். ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று. இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்' [INTERNATIONAL MILITARY TRIBUNAL] தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்', 'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன. இன்று உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன. ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும். இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும். போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும். உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல் ஒரு போர் குற்றம் ஆகும். அது போல, எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும். மேலும் ஒரு போர்க்கால சூழலில், சித்திரைவதை, இனப்படு கொலை, பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல், மற்றும் பல வழிகளில் அவர்களைத் துன்புறுத்துதல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும். எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில், மே மாதம் , 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம். அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம். உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி என்ற திருநங்கை] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன் வாளால் வெட்டினான். எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?, எங்கே தருமம்? அப்படியே, கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக, எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார். அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை, இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள். அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர். இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளிவைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு, இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத்திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளைக் காணலாம்? மனிதாபிமானத்திற்கு எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915 இல், பெரிய பிரித்தானியா [கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia] , துருக்கிய அரசாங்கம் [Turkish government], ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது. போர் குற்றம் மாதிரி அல்லாமல், இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும். இந்த பதம் 1915 இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது. திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும். வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கின்றது. பொதுவாக இது, கொலை, முழுமையாக அழித்தொழித்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பாடுகள் போன்றவற்றை குறிக்கும். ஆகவே, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக் கருக்களாகும். அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றத்தில் [European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust], 1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்), நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War], மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும். இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து - யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல் வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும். அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை * கொல்லுதல், *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல், * வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல், *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல், *அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல், ஆகியவை இனப்படு கொலையாகும்! . இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல . பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது . ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி 02 தொடரும்
  10. நான் நேற்று உந்த றோட்டாலை உப்பிடியே நடந்து போகேக்க....உவர் கஞ்சல் காத்திகேசு எதிர்ப்பட வந்தார். என்னப்பா...எப்பிடியப்பா....குடும்ப நிலவரங்கள் விசாரிச்சு அளவளாவிய பிறகு....ஊர்ப்புதினம் பற்றி பெரியாய் கதைச்சம்....அப்ப காத்திகேசு சொன்னார்... உனக்கு தெரியுமோ உவர் சவுக்கு சங்கரை போலிஸ் புடிச்சு உள்ளுக்கை வைச்சு கைய முறிச்சு போட்டாங்களாம்......இப்ப கையிலை புக்கை கட்டிக்கொண்டு உள்ளுக்கை இருக்கிறாராம் எண்டார்.... அப்ப நான் சொன்னன்...... சவுக்கு சங்கர் கேட்பார் இல்லாத நாதியற்றவர். இதே மாதிரி சீமானுக்கும் கையை முறிச்சு ஜெயில்ல போடுவினம் எண்டால் நடக்கிற கதையே வேறை, நாடே கொதிக்கும் எண்டு சொல்லி வாயை மூடுறதுக்கிடையிலை.....கஞ்சல் காத்திகேசு எஸ்கேப் 😎
  11. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டை மீறமுடியாது, அப்படி மீறினால் சட்ட ரீதியான சிக்கலில் இலங்கை மாட்டிக்கொண்டு அபராத தொகை கட்டவேண்டிய நிலை உருவாகும் ஆனால் ஐ எம் எப் இனை வெளியேற்றலாம். அப்படி வெளியேற்றுவது இலங்கைக்கு புதிய கடன் பெறுவதில் மேலும் சிக்கலை உருவாக்கும் எனவே ஐ எம் எப் இனை வெளியேற்றுவது என கூறுவது மக்களை ஏமாற்றுவதற்காக கூறப்படுவதாக இருக்கலாம். இலங்கை விரும்பினாலும் இனி ஐ எம் எப் இனை தவிர்க்கமுடியாது என்பதே நிதர்சனம், ஐ எம் எப் வெளியேற்றம் என்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம் இலங்கை அரசியலில்.
  12. ஈழத்தமிழர்கள் கேட்கும் உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பதை நாசுக்காக சொல்கின்றார். உலகில் நடக்கும் சம்பவங்களை உதாரணம் காட்டி சிங்கள மக்களுக்கான நவீன அச்சுறுத்தல் படம் காட்டுகின்றார்.
  13. இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
  14. படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம். எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும். சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே. அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது. இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே. திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது. மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது. தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது. (தொடரும்..........)
  15. புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
  16. பொது வேட்பாளர் என்பது ஒரு யுக்தி. இன பிரச்சனை தீர்வுக்கு இந்த யுத்தி எந்த பலனையும் கொடுக்காது என்பதையே பொதுவான கருத்தாக பலரால் தெரிவிக்கப்பட்டது. அது ஏற்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சி மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்கப்போகும், வாக்களிக்கவிருக்கும் மக்களே. பல ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் எம்மால் அதை எப்படிக் கூற முடியும். ஆட்சி மாற்றத்தினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ள தயார் அற்ற வேடிக்கை மட்டும் பார்கக இருக்கும் நானோ நீங்களோ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்?
  17. ஆகவே அல்லது எனவே யாருக்கு தமிழர்கள் வாக்கைப் போடலாம்? இங்கே கருத்து தெரிவித்த பலர் பொதுவேட்பாளர் கூடாது என்கிறார்களே தவிர யாரை ஆதரிக்கலாம் என்பதில் தீக்கோழி மாதிரி இருக்கிறார்கள். துணிந்து ஏதாவதொரு முடிவை எடுக்கலாமே?
  18. ஆகா அருமையான சென்ரர்.
  19. உள்ளம் ஒரு கோயில்.......! 😍
  20. கடும் மழையினால் ஐபிஎல்லில் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு பறினோனது; கொல்கத்தாவுடன் அடுத்த 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி Published By: VISHNU 14 MAY, 2024 | 02:05 AM (நெவில் அன்தனி) அஹமதாபாத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையிலான இண்டியன் பிறீமியர் லீக்கின் 63ஆவது போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு அற்றுப்போனது. இப் போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 11 புள்ளிகளைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இப்போதைக்கு 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வணி மாத்திரமே ப்ளே ஒவ்வில் விளையாடுவதை இப்போதைக்கு உறுதிசெய்துகொண்டுள்ளது. அணிகள் நிலையில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் றோயல்ஸுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் ராஜஸ்தான் றோயல்ஸ் ப்ளே வாய்ப்பை உறுதிசெய்துகொள்ளும். 14 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு ஒரே ஒரு போட்டியே மீதம் இருக்கிறது. 12 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றாலும் அந்த அணிக்கு ப்ளே ஓவ் வாப்ப்பு கிடைக்கும் என்று கூறமுடியாது. ஏனேனில் 14 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 2 போட்டிகள் மீதம் இருப்பதுடன் 12 புள்ளிகளுன் 7ஆம் இடத்திலுள்ள லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸுக்கும் 2 போட்டிகள் மீதமிருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றிபெற்று 16 புள்ளிகளைப் பெற்றால் சென்னை சுப்பர் கி;ங்ஸுக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் திண்டாட்டம்தான். இங்கு குறிப்பிடப்பட்ட 5 அணிகளில் ஏதாவது 3 அணிகள் 14 புள்ளிகளுக்கு அப்பால் பெறாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தனது கடைசிப் போட்டியில் அதிசிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றிகொண்டால் டெல்ஹி நான்காவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். ஆக, இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாத்திரம் ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டுள்ள நிலையில் ப்ளே ஓவுக்கான அடுத்த 3 இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. https://www.virakesari.lk/article/183457
  21. கிடாய் பற்றி தெரியாது. ஆனால் 1950கள் வரை கடுக்கன் போடும் வழக்கம் இருந்துள்ளது.
  22. நீங்கள் தமிழில் இதை எழுதியிருந்தது நன்றாக ஞாபகமிருக்கின்றது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.
  23. வணக்கம் ரகு நான் இங்கே முதலிலேயே எழுதியது தான். எமது பலத்தை காட்டவேண்டும் என்றால் ஒற்றுமை முக்கியம். அது இல்லாதபோது அல்லது அதற்கு சந்தர்ப்பமே இல்லாதபோது இதனை செய்வது பொல்லைக் கொடுத்து அடி வாங்கியது போல அல்லது குளிக்க போய் சேறு பூசியது போலத் தான் ஆகும். அப்படி செய்யாமல் ஏதோ எங்கட வாக்கில தான் சிறீலங்கா அரசு ஓடலாம் என்று ஒரு பயத்தையாவது வைத்திருக்கலாமே.
  24. முதலில் வெடுக்கு லிங்கேஸ் வரரை சிங்கள இனவாத அரசிடம் இருந்து விடுதலை செய்து விட்டு இந்த கோரிக்கையை வைக்க சொல்லுங்க . கவி அருணாசலம் ஐயா உங்கடை ai யை இங்கையும் பாய விடுங்க புண்ணியமா போகும் . இந்தியாவில் சிவன் எப்படி மதிக்கப்படுகிறார் அதே சிவன் வெடுக்கு நாறி இலங்கையில் புத்த பிக்குகளால் கைது செய்யப்பட்டு கொடுமை படுத்துகிறார் அப்படியொரு ai கார்டுடூன் பல தாக்கம்களை உருவாக்கும் .
  25. இந்த சீட் பெல்ட் விசயம் மிக மோசமான பிரச்சினை. ஒவ்வொரு முறையும் இங்கே இருந்து ஏற்பாடு செய்யும் போதும் - பெல்ட் இருக்கா, வேலை செய்யுமா என கேட்பேன். ஆம் என்பார்கள். அங்கே போனால் இராது அல்லது வேலை செய்யாது. 2000 க்கு பிந்தி வந்த வாகனங்களை அமர்த்தினால் இந்த பிரச்சனை குறைவு. புத்தள பாதை - அவ்வளவு மோசம் இல்லை. தவிர புத்தளம்-அனுராதபுரம் இடையே ஓரளவு சுத்தமான கழிப்பறையுடன் கூடிய சேர்விஸ் நிலையமும் உண்டு. வேகமாக ஓடுவதற்காக, பொலிஸ்சுக்கு கப்பம் கட்டுவதை தவிர்க்க காட்டு பாதை வழியாக உங்கள் ஓட்டி வந்துவிட்டு, சாட்டு சொல்லியுள்ளார் என நினைக்கிறேன். நான் அறிய கியூபாவும் இலங்கையும்தான் உலகில் வாகனம் வாங்கினால் விலை appreciate (கூடும்) நாடுகள். கொவிட்டுக்கு முன்பே, வெளிநாட்டில் £100 ம் பெறாத 1992 ஆம் ஆண்டு டவுன் ஏஸ் வானை, இலங்கையில் 20 இலட்சம் என்பார்கள். இப்போ காசு பெறுமதியிழந்து விட்டது. வாகன இறக்குமதி தடை. வாகனங்கள் 2019இல் வாங்கிய விலையின் பலமடங்கு போகிறன. ஆனால் இதில் ஒரு நல்ல விடயம். வெளிநாடு போல், வாகனத்தை உடனே தூக்கி எறியாமல் - எந்த பிழையையும் அங்கே ரிப்பேர் செய்ய முடிகிறது. மீள்சுழற்சி எனப்பார்க்கின் இது 👍.
  26. படம் இல்லாத இலங்கைப் பயணம் - இரண்டு ---------------------------------------------------------------------- கட்டுநாயக்காவில் இருந்து அப்படியே நேரே ஊர் போவது, கொழும்பிற்கு போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். கொழும்பில் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள் இருந்தால் அன்றி, வெறுமனே கொழும்பு போய், பின்னர் அங்கிருந்து ஊர் போவது நாட்களை வீணடிப்பது போலவும் தெரிந்தது. கொழும்பில், வெள்ளவத்தையில், இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் அமைப்பும், நெருக்கமும் அங்கே போக வேண்டும் என்ற விருப்பத்தை இல்லாமல் ஆக்குகின்றன. இந்த தொடர் மாடிக் கட்டிடங்களை, குடிமனைகளை இப்படிக் கட்ட எப்படி அனுமதித்தார்கள் என்பது ஆச்சரியமே. வாகனம் வெளியில் தயாராக நின்றது. நீண்ட தூரப் பயணம், இரவு ஓட்டம், ஆகவே வாகன ஓட்டுனருக்கு ஒரு பேச்சுத் துணைக்கு முன்னுக்கு இருக்கலாம் என்று ஏறினேன். ஆனாலும் முன் இருக்கையில் இருக்கவே கூடாது என்று பலர் கூறிய அறிவுரையும் ஞாபகத்தில் இருந்தது. கொழும்பு - யாழ் ஓட்டத்தில் பல விபத்துகள் நடப்பதாகவும், முன் இருக்கையில் இருப்பவர்களே அதிகமான ஆபத்திற்கு ஆளாகுகின்றனர் என்று ஒரு தரவையும் சொல்லியிருந்தார்கள். ஏறி இருந்த பின், சீட் பெல்ட்டை போடலாம் என்று இழுத்தேன். சீட் பெல்ட் இங்கு பார்க்க மாட்டார்கள் என்றார் ஓட்டுநர். அது வேலையும் செய்யவில்லை. அதை திருத்த வேண்டும் என்று அவரே சொன்னார். சினிமாக்களில் வரும் வாகன விபத்தில் முன் கண்ணாடியின் ஊடாக பறந்து விழுந்து உருளும் ஒரு சினிமா கதாநாயகன் ஒரு சிராய்ப்புக் கூட இல்லாமல் அப்படியே எழும்பி நடப்பார். ஒரு கதாநாயகன் ஆகும் சந்தர்ப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. 'புத்தளம் வழியே தான் போவீர்கள்?' என்று சும்மா கேட்டேன். அப்படித்தானே எல்லோரும் வழமையாகப் போவார்கள். புத்தளத்தில் ஒரு கடையில் நிற்பாட்டுவார்கள். புத்தளம் எனக்கு கொஞ்சம் பழக்கமான இடமும் கூட. 90 களில் சில மாதங்கள் அங்கு இருந்திருக்கின்றேன். புத்தளம் வழியே தாங்கள் ஓடுவதில்லை என்றார் ஓட்டுநர். புத்தளம் நகரத்தினூடு செல்லும் வீதிகள் மிக மோசமானவை என்றும், அதை விட போலீஸ்காரர்கள் பல இடங்களில் சும்மா சும்மா நிற்பட்டித் தொல்லைகள் கொடுப்பார்கள் என்றும் சொன்னார். எதற்காக நிற்பாட்டுகின்றனர் என்றேன். வேறு என்னத்திற்கு, எங்களிடம் ஏதாவது வாங்கத்தான் என்று அலுத்துக் கொண்டார் ஓட்டுநர். நாங்கள் நிற்பாட்டா விட்டால், போலீஸ்காரர்கள் வீதியில் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்தும் விடுவார்கள் என்றும் சொன்னார். என்றுமே தீராத கொடுக்கல்களும், வாங்கல்களும். புத்தளத்தின் பின் பக்க காட்டு பகுதியினூடு வாகனம் சென்றது. குறுகலான, பல திருப்பங்களுடன் இருந்த வீதி அது. நீண்ட நீண்ட தூரங்களிற்கு ஒரு கடையோ, வெளிச்சமோ இல்லாத பகுதிகள். அடிபட்டால் ஏனென்று கேட்பதற்கு ஆள் நடமாட்டமோ, அல்லது வேறு வாகனங்களோ இல்லை. இன்று புது வருட இரவு என்பதால், வேறு வாகனங்கள் தெருவில் இல்லை என்று ஓட்டுநர் சொன்னார். அவர்களின் நிறுவன வாகனங்கள், மொத்தம் 15, அநேகமாக இந்தப் பாதையில் போய் வருகின்றன என்றார். அப்படியே போய் கல்கமுவவில் ஏறி, அனுராதபுரம் போய், பின்னர் யாழ்ப்பாணத்திற்கான வழமையான பாதை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஊர் செல்ல ஒரு முழு வாகனத்திற்கு 40,000 ரூபாய் கட்டணம். தனித் தனி இருக்கைகளாகவும் அவர்களே விற்கின்றனர். ஒரு இருக்கை 4, 000 ரூபாய். ஆனால் ஒன்பது பேர்கள் சேர்ந்தால் மட்டுமே இவர்களின் வாகனம் அன்று போகும். ஒன்பது பேர்கள் சேரா விட்டால், சேர்ந்தவர்களை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுகின்றனர். கொழும்பு - யாழ் ஓடிக் கொண்டிருக்கும் பெரிய சொகுசு பஸ் நிறுவனங்கள் ஒரு இருக்கைக்கு 3,000 ரூபாய் என்று கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், பொதிகளின் எண்ணிக்கை கூடினால், அதற்கு மேலதிக கட்டணம் அறவிடுகின்றனர். ஒரு மாதத்தில் ஒரு வாகனம் கொழும்பிற்கு எத்தனை தடவைகள் போய் வரும் என்று கேட்டேன். புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாக வரும் கோயில் திருவிழா மாதங்களில் பத்து அல்லது பதினைந்து தடவைகள் கூட போய் வருவோம் என்றார். இந்த நாட்களில் உழைப்பது தான் மொத்த வருமானத்தின் பெரும் பங்கு என்றார். ஒரு மாதத்தில் 15, 000 கிலோ மீட்டர்கள் மேல் ஓடுகின்றனர்! இந்த வாகனங்கள் 25 வருடங்களிற்கு மேலாக தெருக்களில் கை மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. மொத்தமாக எத்தனை ஆயிரங்கள் கிலோ மீட்டர்கள் இவை ஓடியிருக்கும். இவை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமே. அதை விட அவர் சொன்ன இன்னொரு தகவல் ஆச்சரியம். சில வருடங்களில் முன் இதே வாகனத்தை 25 இலட்சம் ரூபாய்களுக்கு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியிருக்கின்றனர். பின்னர் 12 இலட்சங்கள் செலவழித்து திருத்த வேலைகள் செய்திருக்கின்றனர் (ஆனால் சீட் பெல்ட்டை திருத்தவில்லை.....😀). இந்த வாகனத்தின் தற்போதைய பெறுமதி 68 இலட்சங்கள் என்றார். சாதாரண வாகனங்களின் பெறுமதி இப்படி அதிகரிக்கும் என்பது வெளிநாடுகளில் வாழும், வீட்டுத் தேவைக்கு வாகனங்கள் வைத்திருக்கும் எங்களுக்கு நம்ப முடியாத ஒரு விடயம். ஒரே ஒரு இடத்தில் நிற்பாட்டி இலங்கையில் எங்கும் எல்லோரும் அருந்தும் நெஸ்கஃபே ஒன்று குடித்தோம். யாராவது கடையில் நல்ல ஒரு தேநீர் போட்டுக் கொடுக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது. பின்னர் முறிகண்டியில் ஒரு சின்ன வழமையான தரிப்பு. அங்கும் கடையில் நெஸ்கஃபே இயந்திரமே. ஆனையிறவில் இராணுவ வீரர் ஒருஅர் வலுக் கட்டாயமாக வாகனத்தை நிறுத்தினார். இங்கு வேகத்தை குறைக்க வேண்டும், நீ ஏன் குறைக்கவில்லை என்று ஓட்டுநருடன் முறைத்தார். பணம் எதுவும் இருவருக்குமிடையில் கை மாற்றப்படவில்லை. அதை தாண்டியவுடன், 'இவங்களுக்கு வேற வேலை' என்று ஓட்டுநர் சொன்னார். எனக்கு அந்த இராணுவ வீரர் செய்தது சரி என்றே பட்டது. ஆனையிறவைப் பற்றி பிள்ளைகளுக்கு பெரிய கதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பிறகு இன்னொரு தடவை சந்தர்ப்பம் வரும் போது சொல்லுவோம் என்று விட்டுவிட்டேன். பளை எங்கும் புதிய தென்னம் பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சரியாக காலை 6:30 மணி அளவில், ஊரில் இருக்கும் வீட்டு வாசலின் முன் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டினார். 5 1/2 மணி நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து வல்வெட்டித்துறைக்கு. இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும். நாங்கள் எட்டு அல்லது ஒன்பது மணிக்குத்தான் வந்து சேருவோம் என்று வீட்டில் இருந்த எவரும் அந்த நேரத்தில் எழும்பி இருக்கவில்லை. (தொடரும்..........)
  27. முடிவாக நிலாந்தன் சொல்கிறார்: "ஒரு சிங்கள வேட்பாளருக்கு இரகசியமாக முட்டுக் கொடுப்போர் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்கிறார்கள், தமிழர்களை ஒற்றுமைப் படுத்தும் உன்னத நோக்கம் கொண்டோர் மட்டும் தமிழ் வேட்பாளரை வரவேற்கிறார்கள்". முன்னைய தரப்பு "டீல்" குறூப், பின்னைய தரப்பு மக்கள் சேவகர்கள்😂! எதிர் தரப்பால் சொல்லப் படும் காரணங்கள், ஆபத்துக்கள், முன்னர் 2004 முதல் 2020 வரையான தேர்தல் அரசியல் வரலாறுகள், அவை சர்வ தேசத்திற்குச் செய்தி சொன்னமையால் தமிழருக்கு கிடைத்த "பெரும் நன்மைகள்", இவையெல்லாம் over the head, அல்லது காதைப் பொத்திக் கொண்டதால் மிஸ்ஸிங்! இப்படி எதிர் கருத்தாளர்களை demonize செய்து கொண்டே "கூட்டுப் பிரக்ஞை, மக்கள் திரள், ஒற்றுமை" என்று வார்த்தைகளில் ஜாலம் செய்யும் பணி நிலாந்தனுக்கு வாழ்நாள் பணியாக இருக்கும் என நம்புகிறேன்😎.
  28. இதைத் தவிரவும், 2019 இல் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவர் பதவிக்கு வரலாம் என்று சிங்களவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால்த்தான் என்ன?
  29. சரி, இங்கு சிலர் கவலைப்படுவதுபோல, தமிழ் வேட்பாளர் தமிழர்களின் வாழ்வை அதள பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவார் (இப்போது மட்டும் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கவேண்டாம்) என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே, அவர்கள் விரும்புகின்ற மேற்குலகின் நண்பனான ரனிலுக்கே வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இன்றிருக்கும் நிலையினை விட தமிழர்களின் வாழ்வு எப்படி மேம்படும்? 2002 இலிருந்து 2005 வரை ரணிலே பிரதமராக இருந்தார். 2015 இலிருந்து 2019 வரை நல்லிணக்க அரசாங்கம், (100 நாட்களில் தமிழர்களுக்குத் தீர்வு தருவேன் என்று தனது ஏஜெண்டுகளான சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு) ரணில் அவரது சகாவான மைத்திரியுடனும் ஆட்சி செய்தார். தற்போது கோட்டா தப்பியோடியபின்னர் மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். தமிழரின் வாழ்வு மேம்பட்டதா? கோட்டா உருவாக்கிய தொல்பொருள்ச் சபை, வன வளத்துறை ஆகிய இரண்டும் இன்றுவரை செய்துவரும் சிங்கள பெளத்த மயமாக்கலைத் தடுக்க முடிந்ததா? இவற்றில் பலவற்றைச் செய்விப்பதே ரணில் என்று கூறப்படுகிறது. இன்றுவரை மேற்கின் செல்லப்பிள்ளையான‌ ரணில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறாரா? அரசியல்க் கைதிகளை விடுவித்தாரா? காணமாலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்ச்சியான கண்ணீருக்கும் கோரிக்கைகளுக்கும் ரணில் வழங்கிய பதில் என்ன? "இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிபோய் விட்டார்கள், வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் தருகிறோம்" என்பதற்கப்பால் ரணில் செய்திருப்பது என்ன? வடக்கின் சில பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சிலவிடங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு குறித்த ரணிலும் முடிவு என்ன? இவை எதுவுமே இல்லாமல் அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கேட்பது ஏன்? வெறுமனே சர்வதேச நாணய் நிதியத்தை ஜே வி பியினர் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்கிற பீதியைக் கிளப்புவோர், சர்வதேச நாணய நிதியம் ஒன்றும் இலவசமாக மக்களுக்குப் பணம் தரவில்லையென்பதையும், இப்பணம் வட்டியோடு அம்மக்களின் வயிற்றில் மேலும் மேலும் அடித்தே அறவிடப்படும் என்பதையும் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? அப்போதுமட்டும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமும், சமூகத்தரமும் உயர்ந்துவிடுமா? இன்று ஆட்சியில் இருப்பது ரணில். அப்படியிருக்க தமிழர்கள் உட்பட பலர் வெளிநாடு போவது ஏன்? சர்வதேச நாணய நிதியம் உதவுகிறதென்றால் அவர்கள் ஏன் நாட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியாது? உண்மை என்னவென்றால், ரணில் என்ன, யார் ஆட்சியில் இருந்தாலும் நாடு பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் மகிந்தவும், கோட்டாவும் நாட்டிற்கு கொண்டுவந்து குவித்திருந்த மொத்தக் கடன் 2022 இல் 58.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இக்கடன் 2021 இலிருந்ததைக் காட்டிலும் 0.03 வீதத்தால் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவருடத்தில் அதன் கடன் $58,732,518,598 இலிருந்து $ 58,712,654,401 ஆகக் குறைந்திருக்கிறதாம். ஆனால், ரணிலின் அரசாங்கம் உட்பட முன்னைய அரசினது அதிகரித்த பாதுகாப்புச் செலவிங்களினால் 2020 இலிருந்து 2021 வரையான ஒருவருட காலத்தில் கடன் 3.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலட்சணத்தில் நாடு ரணிலின் ஆட்சியில் முன்னேறிப் பாய்கிறது என்று கூறுகிறார்கள். நம்புகிறோம். ரணில் இன்று காட்டிவரும் பொருளாதார சீர்செய்தல் என்பது வெற்றுக் கோதுதான். வெறுமனே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் இல்லாததையும், மக்களுக்கு காஸ் கிடைப்பதையும் வைத்துக்கொண்டு பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்கிறது என்று கனவு காண்பவர்கள், சர்வதேச நாணய நிதியத்தினால் அரசுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பற்றி அறிவார்களா? அப்படி அவர்கள் கூறுவது போல ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் அசுர வேகத்தில் இன்று வளர்கிறதென்றால், பலர் வெளிநாடு செல்ல முண்டியடிப்பது ஏன்? ஆக, ரணில் இருந்தாலென்ன, அவரின் மச்சான் இருந்தாலென்ன, தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த மக்களினதும் வாழ்வு இப்போதைக்கு வளம்பெறப்போவதில்லை. ஆகவே ரணில் புராணம் பாடுவதை இவர்கள் நிறுத்தவேண்டும்.
  30. முதலில் இந்தக் கைக்கூலியான சிவசேனை மாட்டை ஒழிப்பவற்கே எனது வாக்கு.
  31. இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா? யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?
  32. ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல். “ஓவியம் வரைந்துதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாகவே கருத்துகள் வைக்க வேண்டும் என்று எவருக்குமே கட்டாயம் இல்லை. ஆனால் கருத்துக்களத்துக்குள் நுழைந்து விட்டால் கை துருதுருக்கிறது. ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார் கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.
  33. குமாரசாமி, படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை. தேர்தலுக்கு வாக்குப் போட்டோம். இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம். தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம். தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம். மாற்றங்கள் இல்லை. போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை. பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்’ விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம். ரஞ்சித் குறிப்பிடுவது போல் ‘யாசகம் செய்து வாழ முடியாது’ என்ற வாசகத்தை விட்டு ‘சேர்ந்து வாழ்தல்’ என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம். யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.
  34. எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை, வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன். மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?
  35. பசங்களுக்கு மட்டுந்தான் அந்த வலி தெரியும்.......! 😢
  36. வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்... வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .
  37. பெரு மூச்சு மட்டுமே மிஞ்சுது (இவற்றில் சிலவற்றில் நானும் இருந்திருக்கின்றேன்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.