Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்19Points87990Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்15Points20018Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்13Points33600Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்10Points31987Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/27/24 in all areas
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஒரு சின்ன உதாரணம் திரு சுமந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த போது சில பொன்(_) மொழிகளை உதிர்த்து இருந்தார். "எஜமான் நீங்க ரொம்ப நல்லவரு, யாழ்ப்பாண மக்கள் மீது உங்களுக்கு சிறப்பு பிரியம் உண்டு. நீங்கள் இந்த மக்களுக்கு கடந்த வருடங்களில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். 2004 தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காமல் உங்கள் வெற்றியை அவர்கள் கேள்விக்குறியாக்கியதை இப்போது மனப்பூர்வமாக உணர்கிறார்கள்" ... இந்த செய்தியை சிங்கள ஊடங்கங்கள், யூ டியூபர்ஸ் வீடியோ வடிவில் வெளியிட்டு சிங்கள இனவெறி அரசியலை வெள்ளை அடிக்கிறார்கள். வடக்கு மக்களுக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!! பாருங்களேன் நம்ம ஜனாதிபதிக்கு ஏன்னா ஒரு வரவேற்பு அங்கே. இந்த டயஸ்போரா தமிழருக்கு தான் இங்குள்ள சுமூக சகஜீவன வாழ்வியலை குழப்பி இனவாதத்தை தூண்டி விடும் அவசரம் தெரிகிறது. ஆகவே கவனமாக இருங்கள் மக்களே. சுமந்திரனை போல நாட்டுப் பற்றாளரை மதிப்போம், ஆதரவு வழங்குவோம் என்று செய்தி போட்டு அவர்கள் சுய இன்பம் அடைகிறார்கள். முதிர்ச்சியான அரசியல்வாதியே இந்த தரம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்!!! பொன்(_) - தவிர்க்க வெண்டிய ஒரு வார்த்தையை பிரயோகித்தமைக்கு மன்னிப்புகோருகிறேன். திருத்தம் செய்யப்பட்டுள்ளது.5 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️4 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
40 நாட்களுக்கு முன் என் குடும்பத்தினர்க்கு ஒரு சுப நிகழ்விற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இன்ன நாள்தான் என முடிவு செய்யப்படவில்லை. தேதியுடன் அழைப்புதழ் வந்ததும் முதலில் வேலை விடுமுறையை முடிவு செய்து விட்டு. சிறித்தம்பிக்கு நான் செல்லும் இடத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடனடியாக அந்த இடம் தான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கின்றது என தெரியப்படுத்தினார். சந்திப்பது பற்றியும் கூறினார். ஆனாலும் இடம் வலம் நேரகாலம் எதையுமே தீர்மானிக்கவில்லை. இருந்தாலும் சிறித்தம்பியை அவர் வீட்டில் என் குடும்ப சகிதம் அவர் வீட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.4 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️4 points
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
குமாரசாமி அண்ணா, தமிழ் சிறி, பாஞ்ச் சிறப்பான சந்திப்பு. முகம் காண கடினமாக இருக்கும் யாழ் உறவுகளின் சந்திப்புக்கள் என்றும் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும். 2015-16 களில் மோகன் உட்பட யாழ் உறவுகள் சிலரை சந்தித்தது பசுமையான நினைவுகளாக இன்றும் உள்ளது. மீண்டும் ஒரு முறையேனும் சந்திக்க ஆவலாக உள்ளேன். சந்திப்புக்கள் தொடரட்டும். வாழ்க்கை என்பது ஒரு முறைதான் வாழ்வது, உங்கள் அறிவினால் அறிமுகமானவர்களை சந்திக்கவேயில்லை என்று மனம் பின்னாளில் ஏங்குவதை தவிர்ப்பது நல்லது .3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points
- சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித உடலின் பல அற்புதமான திறன்களில், கற்களை உற்பத்தி செய்யும் திறனை விசித்திரமான ஒன்று எனக் கூறலாம். சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். ஆனால் அவற்றைத் தவிர்த்து, உடலில் வேறு கற்களும் உருவாகலாம். யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களில் அவை இருக்கலாம். உடலில் உருவாகும் இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? சிறுநீரக கற்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னை உள்ளது. இரத்தத்தில் இருந்து சிறுநீரில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவதால் இது ஏற்படுகிறது. ஆக்சலேட்டுகள் என்பவை தாவரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டிலும் காணப்படும் இயற்கை சேர்மங்கள் ஆகும். அதிக அளவு கால்சியம் மற்றும் ஆக்சலேட் கசிவு காரணமாக, அவை திட நிலையை அடைந்து, ஒரு கல் வடிவத்தைப் பெறும். சிறுநீரக கற்களின் அளவும் மாறுபடலாம். இவை ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். கற்கள் அசாதாரண வடிவத்திலும் இருக்கலாம். ஆனால் சிறுநீரக கால்வாயின் (calyces) கிளைகளுக்குள் கற்கள் உருவாகத் தொடங்கினால், அது மானின் கொம்பு வடிவத்தையும் பெறலாம். இது ஸ்டாக்ஹார்ன் கால்குலஸ் (staghorn calculus) என்று அழைக்கப்படுகிறது. கற்கள் எப்போது பிரச்னையாக மாறுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES சிறுநீரக கற்கள், சிறுநீர்க் குழாய்களின் பாதையைத் தடுக்கும் போது பிரச்னை ஏற்படலாம். அதாவது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை எடுத்துச் செல்லும் இரண்டு குழாய்களில் ஏதேனும் ஒன்றைத் தடுக்கும்போது இது நடக்கலாம். இதனால், சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கீழ் முதுகில் கடுமையான வலியையும் பாதிக்கப்பட்ட நபர் அனுபவிக்கலாம். இதன் காரணமாக, சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் குவியத் தொடங்குகிறது அல்லது சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பித்தப்பையில் கற்கள் உருவாவதும் ஒரு பிரச்னையாகும், இவை பித்தப்பை கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. பித்தப்பையில் இருந்து குடலுக்கு பித்தநீரைச் எடுத்துச் செல்லும் குழாய்களில் அல்லது பித்தப்பைக்குள் இந்த கற்கள் உருவாகின்றன. பித்தநீரில் உள்ள கொழுப்பு அல்லது நிறமிகள் காரணமாக பித்தப்பை கற்கள் உருவாகலாம். அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். சிறுநீரக கற்களைப் போலவே, பித்தப்பைக்குள் (பித்த நாளம் போன்றவை) ஒரு குறுகிய இடத்தில் பித்தப்பைக் கற்கள் சென்றால், அவை வயிற்று வலி, தொற்று மற்றும் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கல் உருவாவதற்கான பிற காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எக்ஸ்-ரேயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நோயாளியின் வலது சிறுநீரகத்தில் கல் இருப்பதைக் காட்டுகிறது. இவை தவிர, வெவ்வேறு உடல் திரவங்களாலும் கற்கள் உருவாகலாம். உதாரணமாக, உமிழ்நீர் கற்கள் அதாவது உமிழ்நீரில் உள்ள கற்கள். காதுகள், தாடை மற்றும் நாக்கின் கீழ் உள்ள சுரப்பிகளால் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உமிழ்நீர் வாய்க்குள் விழுந்த பிறகு, உணவை ஈரமாக்கி, ஜீரணமாக்கும் செயல்பாட்டில் அது பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் போன்ற பல்வேறு தனிமங்களில் இருந்து உமிழ்நீர் கற்கள் உருவாகலாம். உமிழ்நீர் வாய்க்கு வரும் குழாயில், உமிழ்நீர் கல் உருவானாலோ அல்லது சிக்கிக்கொண்டாலோ, அது வாயில் உமிழ்நீர் விழுவதை நிறுத்தலாம். இது நடந்தால், ஒரு நபருக்கு கடுமையான வலி மற்றும் வாயில் வீக்கம் ஏற்படலாம். உமிழ்நீர் நின்றுவிடுவதால் உமிழ்நீர் சுரப்பியில் தொற்று ஏற்பட்டால், அது வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கும் வழிவகுக்கும். டான்சில் கற்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இது தவிர டான்சில்களிலும் கற்கள் காணப்படும். தொண்டையின் அடிப்பகுதியிலும் பின்புறத்திலும் டான்சில் சுரப்பிகள் அல்லது அடிநாவு சுரப்பிகள் அமைந்துள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்பாய்டு திசுக்களின் குழுக்கள். ஆனால் அவை மீண்டும்மீண்டும் வீக்கமடைந்து நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம் என்பது தான் நகைமுரண். டான்சிலில் க்ரிப்ட்ஸ் (Crypts) என்று அழைக்கப்படும் குழிவுகள் (Cavities) உள்ளன. சில நேரங்களில் இவை உணவு மற்றும் உமிழ்நீரைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இதனால் டான்சில் கற்கள் அல்லது டான்சிலோலித்ஸ் உருவாகும். இந்த கற்கள் முதலில் மென்மையாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் அவை கடினமாகிவிடும். இதன் காரணமாக, வாய் துர்நாற்றம் மற்றும் அடிக்கடி தொற்றுநோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவை மட்டுமல்லாது உடலில் உள்ள வேறு சில பொருட்கள் கெட்டியாகி கற்களாக மாறிவிடக்கூடும். உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், மனித மலம் அவ்வாறு மாறக்கூடும். அத்தகைய நிலை கொப்ரோலைட் (coprolite) என்று அழைக்கப்படுகிறது. இது தவிர தொப்புளில் சேரும் தோல் பகுதிகளும் கெட்டியாகி கற்கள் போல் ஆகிவிடும். இந்த கற்கள் ஓம்பலோலித்ஸ் (omphalolyths) என்று அழைக்கப்படுகின்றன. கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES சில எளிய முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் பிரச்னைகளை ஏற்படுத்தும் கற்களைத் தவிர்க்கலாம். இவற்றில் மிக முக்கியமான விஷயம் உடலில் சரியான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்கிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் வாயில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கிறது. இந்த முறையால் உடலில் பல வகையான கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். டான்சில் கற்களைத் தவிர்க்க, வாயை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். வழக்கமான பல் துலக்குதல் மூலம் அதன் ஆபத்தை குறைக்கலாம். இவை தவிர, உணவுமுறையும் முக்கியமானது, குறிப்பாக பித்தப்பைக் கற்களுக்கு. கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் உடல் பருமனும் உடலில் கற்களை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் விரும்பினாலும் கூட தவிர்க்க முடியாத பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, பித்தப்பையில் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். பால் பொருட்கள், கீரை வகைகள் போன்ற கால்சியம் மற்றும் ஆக்சலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்க உதவும். கற்கள் தொடர்பான பிரச்னை இருந்தால் என்ன செய்வது? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏற்கனவே ஒருவருக்கு உடலில் கற்கள் இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. கற்கள் காரணமாக ஒருவருக்கு உடல்நிலை மோசமடைந்தால், எண்டோஸ்கோபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற வேண்டியிருக்கும். சிறுநீரகக் கல் ஏற்பட்டால், சிறுநீரகக் குழாய் வழியாக கல் சிறுநீர்ப்பையை அடைந்து உடலில் இருந்து வெளியேறும் வரை காத்திருக்கலாம். சில சமயங்களில், சிறுநீர்ப்பையில் இருந்து ஒரு கல் வெளியேறும் போது, மடுவில் கல் தாக்குவதால் மெல்லிய சத்தம் உண்டாகும். கற்களைப் பிடிக்க சிறுநீர் கழிக்கும் போது தேநீர் வடிகட்டியைப் பயன்படுத்தும்படி உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்லலாம். உமிழ்நீர் கற்கள் பிரச்னையைப் பொருத்தவரை, சில சமயங்களில் எலுமிச்சையை உறிஞ்சுவது கூட நிவாரணமாக இருக்கும். உமிழ்நீர் உருவாகும் செயல்முறையை எலுமிச்சை அதிகரிக்கும். அதிக உமிழ்நீர் ஒரே நேரத்தில் உமிழ்நீர் குழாயில் வழியாக வரும் போது கல் தானாகவே வெளியேறிவிடும். இதுபோல பல்வேறு வகையான கற்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் எளிய அன்றாட நடவடிக்கைகளும் அவை உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும். https://www.bbc.com/tamil/articles/cn007dq3gkvo2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அண்ணை வேணாம் அடுத்த போட்டிக்கு ஆள் தேவை! அதனால அவசரப்படவேணாம்!!2 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஏன் பையா ...... கொல்கத்தாவின் பீல்டிங்கும் சரி பாட்டிங்கும் சரி விறுவிறுப்பாகத்தானே இருந்தது......! ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா.......! 😢2 points- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இந்த திரியின் போக்கில் எனது முதற்கேள்வியின் தொடர்ச்சியாக அடுத்ததாக நான் இறுதியில் இப்படி கேட்க இருந்தேன். உங்கள் கருத்து அதற்கு அப்படியே சாட்சியாகிறது. கேள்வி: காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில ஆக்கிரமிப்பு எதிரான பேரணிகளில் அல்லது ஒன்று கூடல்களில் பத்து இருபது மக்கள் தொகையில் தான் பங்கு பெறுகிறார்கள். ஆனால் இவ்வாறான இராணுவ அல்லது அரச ஆதரவு மற்றும் ஒன்று கூடல்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள் என்றால் இதில் எந்த பகுதி மக்களை சிங்களவர்கள் அல்லது சர்வதேசம் ஏன் புலம்பெயர் தமிழர்கள் பைத்தியக்காரர்களாக வகைப்படுத்துவர்??? அப்படி வகைப்படுத்தினால் ஒரு பகுதி மேலும் மேலும் குறைந்து செல்வதும் மற்றப் பகுதியினர் தொடர்ந்து அதிகரித்து செல்வதும் தொடர்ந்தால் நாம் இறுதியில்????2 points- கருத்து படங்கள்
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம் நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன். என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எப்படி பலகாரங்கள் தொண்டைக்குள்ளால இறங்கியது. முழியே காட்டிக் கொடுத்திருக்குமே?2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆனாலும் சிங்கன் @குமாரசாமி மகா கெட்டிக்காரன். உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எங்கள் உரையாடலில்… உங்களின் திறமையை பற்றியும் கதைத்தோம். அதிலும்… யாழ். அகவை 26, சுய ஆக்கம் பகுதியில் நீங்கள் பல்வேறு கருப் பொருளில், பல ஆக்கங்களை எழுதிய உங்கள் ஆற்றலைப் பார்த்து வியந்தோம். 🤝👍🏽 அந்தத் திறமைக்கு… எமது பாராட்டுக்கள் ரசோதரன். 👏🏻 🙂2 points- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யார் என்ன தான் சொன்னாலும் விடுதலை தேசியம் என்பது மக்கள் மனங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இதைப்பற்றி ஊரில் கதைக்க எனக்கும் பயம்.அங்குள்ளவர்களுக்கும் பயம். திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மனநிலை இது தான். அதையும் மீறி சாந்தனின் இறுதி ஊர்வலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாவீரர்தினங்களின் போது தம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்.2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsWorld Pictures · Suivre · 9 itinéraires de train les plus dangereux au monde.. * lien en 1er commentaire2 points- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
1. புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று நீங்களும், அரசியல் கட்டுரைகளை எழுதுகின்ற பலரும் கூட தொடர்ந்து தவறாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள். 2000 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த தேர்தலில் திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெல்லவில்லை. மட்டக்களப்பிலும் 2 பேர் மாத்திரமே தெரிவானார்கள். அதே போன்று, யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஐ.தே,க. ஒரு இடத்தில் வென்றது. வவுனியாவில் 3 தமிழர்கள் மட்டுமே வென்று இருந்தனர். இந்த அரசியல் ரீதியிலான பாதக நிலையை உணர்ந்த கிழக்கிலங்கை புத்திசீவிகளும், கிழக்கு இலங்கை பத்திரிகையாளர்களும், 2001 இல் கிழக்கு பல்கலைகழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தி (டி, சிவராம் தலைமை வகித்தார்), தமிழ் கட்சிகள் / தமிழ் இயக்கங்கள் கூட்டாக அணி திரண்டு ஒரு கூட்டணியாக நிற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்துரைத்தனர். அதன் பின்னான தொடர்ச்சியான செயற்பாடுகளின் பின்னால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, இந்த கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு இனி மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வாய்மூல உறுதிப்பாட்டை பெற்று இருந்தனர். இந்த உறுதிப்பாடை கொடுத்தவர்கள் கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலனும், கருணாவும் ஆகும். த.தே.கூ இன் அன்றைய தேவையை உணர்ந்தது புலிகள் அல்ல. அதே போன்று த.தே.கூ இன் உருவாக்கமும் அவர்களால் நிகழ்த்தப்படவில்லை. த.தே.கூ சந்தித்த முதல் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு அதிகம் இடம்பெற்று இருக்கவில்லை வேட்பாளார் தெரிவில் கூட அவர்கள் செல்வாக்கு செலுத்தாமல் இருந்தனர். பின்னர் தான், பேச்சுவார்த்தை காலத்தில் அவர்கள் த.தே. கூ இற்கு தமது ஆசிர்வாதத்தை பகிரங்கமாக தெரிவித்து இருந்ததுடன், வேட்பாளர் தெரிவு வரைக்கும் தம் அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர். ஒரு கட்டத்தில் விடுதலப் புலிகளின் அரசியல் கட்சி போன்றே த.தே.கூ வை அவர்கள் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். தலைவர் த.தே,கூ இல் அங்கம் வகித்த தலைவர்களை வன்னிக்கு அழைத்து கைலாகு கொடுத்து வரவேற்று இருந்தார். இதில் தமிழ் மக்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து படுகொலை செய்த சுரேஸ் பிரேமச்சத்திரனுக்கு கைலாகு கொடுத்த கூத்து கூட நடந்து இருந்தது. 2. 2004 இன் பின் புலிகளின் இராணுவ அரசியலுக்கு சமாந்தரமாக த.தே.கூ 2009 வரைக்கும் செயற்பட்டு வந்தமையால், 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு அது அரசியல் செய்வதற்கான பலத்தை இழந்து விட்டது. உறுதியான தீர்மானங்கள் எடுக்க கூட திறனற்ற தலைவர்களையும், மாவை, சம்பந்தன் போன்ற, விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான அரசியல் செய்து தோற்றுப் போன மூத்த தலைவர்களையும், இலங்கை / இந்திய இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்த டெலோ, ஈபி போன்ற அமைப்பின் தலைவர்களையும் கொண்ட த.தே,கூ எதையும் சாதித்து விடக் கூடிய அளவுக்கு திறனற்ற, அரசியல் தெளிவுள்ள ஒரு கூட்டணி யாக இருக்க வாய்ப்பில்லை. 2009 இன் பின் கையாலாகாத அரசியல்வாதிகள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு மிச்சமிருக்கின்றனர். காத்திரமான அரசியல் செய்யக்கூடியவர்கள் ஒன்றில் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். என் பதிலில் இதற்கு புலிகள் மட்டுமே காரணம் என பொருள்பட எழுதியது என் தவறு. இதற்கு ஏனைய இயக்கங்களும், கருணா குழுவும் கூட காரணங்களாக உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இன்று இவ்வாறு எச்சங்களாக மிச்சம் இருப்பவர்கள் மூலம் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்று நானும் நம்பவில்லை, தமிழ் மக்களும் இனி நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே வழி, இருப்பதை தக்கவைத்துக் கொண்டு முடிந்தவரை தம்மை முன்னேற்றுவதே. @விசுகு,தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், ஒன்று கூடல்களுக்கு அதிகமாகவும் செல்கின்றனர் என அங்கலாய்த்து இருந்தார். இதுக்கு காரணமும் இதுவே. தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களின் கையாலாகாத்தனத்தையும், செயற்திறனற்ற நடவடிக்கைகளையும், வெற்று முழக்கங்களையும், வெற்றியளிக்காத முயற்சிகளையும் முன்னெடுக்கின்றவார்களின் நிகழ்வுகளுக்கு செல்வதை விட, அவற்றை தவிப்பது தமக்கு நன்மை பயக்கும் என நம்புவதானாலேயே. நன்றி போகின்ற போக்கில் இப்படியெல்லாம் ஜோக் அடிக்க கூடாது சசி.😆1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா ஜரோப்பா கால்பந்தும் தொடங்குது அடுத்த மாதம்.......................... கிரிக்கேட் உலக கோப்பை சீக்கிரம் முடிஞ்சிடும் ஜரோப்பா கால்பந்து அடுத்த மாத நடு பகுதியில் தொடங்குது கிரிக்கேட் இந்தக் கிழமை தொடங்குது🙏.......................................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சுவி அண்ணா தலமையில் ஒரு அணி அமெரிக்கன் கட்டத்துரை தலமையில் இன்னொரு அணி யாழ்கள உறவுகள் விளையாடின கிரிக்கேட்....................... இரு அணிகளுக்கு இவர்கள் தான் கப்டன்😁.................................................... @suvy @ஈழப்பிரியன்1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெற்றி பெற வாழ்த்துக்கள் புலவர் அண்ணா🙏🥰..............................................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
# Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) PAK #A2 - ? (1 புள்ளிகள்) IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI AFG AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) NZ #C2 - ? (1 புள்ளிகள்) AFG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 IND SA IND 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS AFG AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 NZ PAK PAK 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL SL 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 IND AFG IND 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 PAK SL SL 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 NZ ENG NZ 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 IND AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 AFG SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG PAK PAK 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 NZ SL NZ சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG NZ NZ Select NZ Select SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) PAK #அணி 1B - ? (2 புள்ளிகள்) NZ 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS AFG Select AFG Select SA Select SA Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) IND 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) PAK 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்படியும் கடைசியாக வாற ஆள்த்தானே ஆறுதலா வாங்க.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அவசரம் ஒண்டும் இல்லை. ஆறுதலாக வரவும். இப்படிக்கு @goshan_che1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
மீதமான கேள்விகளுக்கு பதில்களும் போட்டியாளர்களின் நிலைகளும் வெள்ளிக்கிழமையளவில் தரப்படும்😑1 point- எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன்
எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் அவர்கள் தமிழ்மொழியில் பேசினார்கள் என்பதை பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பேராசிரியரின் இந்த நூலை ஆங்கிலத்திலும் கட்டாயமாக சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். இந்த நூல் நிச்சயமாக சிங்களத்தில் சென்றடையவேண்டும். பேராசிரியர் மணல்திட்டில் இருந்திருந்தால் அவரையும் தொல்பொருளாக்கி பெயரை மாற்றியிருக்ககூடிய காலம் இது. இலங்கையில் சைவத்தின் தொன்மை தமிழின் தொன்மை நாகவழிபாட்டின் தொன்மை ஆகியவற்றை இந்த நூல் சான்றுபடுத்துகின்றது. இந்த நூல் நாகர்கள் பற்றியது வடபகுதி நாகதீவு நாகநாடு என அழைக்கப்படுவது எங்களிற்கு தெரியும். யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள். இது அவர்கள் பற்றிய நூல். நாகர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் சான்றுரைக்கின்றது. நாகர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள். இதன் மூலம் இந்த தேசத்தின் தமிழ்மொழியின் தொன்மை உறுதி செய்யப்படுகின்றது. பேராசிரியர் பத்மநாதனின் ஒருமறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் நூல் நாகர்கள் வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது பற்றி பேசுகின்றது. யாழ்ப்பாணத்தில் நாகர்கள் பல இடங்களில் பரந்துவாழ்ந்திருக்கின்றார்கள். வடமராட்சியில் அவர்கள் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன அங்கு நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் இதற்கான ஆதாரங்களாக காணப்படுகின்றன. வடமராட்சியில் கரவெட்டி, அல்வாய், உடுப்பிட்டி போன்ற இடங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளதை பேராசிரியர் தனது நூலில் முன்வைத்துள்ளார். தென்மராட்சியில் சாவகச்சேரியில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர் தீவுப்பகுதியிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். எனது ஊரான காரைநகரில் பல இடங்களில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். வேலணையில் வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாண பட்டினத்தின் பல பகுதியில் அவர்கள் வாழ்ந்துள்ளனர் ஆனைக்கோட்டையில் அவர்கள் பயன்படுத்திய கற்களால் செய்யப்பட்ட செம்புகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் தெரிவித்துள்ளார். நவாலியில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியரின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் நாகர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதை சொல்கின்றது. தென்னிலங்கை வரலாற்றாசிரியர்கள் எழுதும் நூல்கள் பலவற்றில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தமிழ்மக்களின் வரலாற்றின் தொன்மை சைவசமயத்தின் தொன்மை போன்றவை மறைக்கப்படுவதற்கு பல பேராசிரியர்கள் உதவியுள்ளனர். அப்போது இருந்த அரசாங்கம் இதற்கு உதவியது. தற்போதும் இது தொடர்கின்றது. தமிழின் தொன்மை பற்றிய இந்த நூல் நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் வாழ்ந்ததாக கூறுகின்றது. அவர்கள் தமிழ்மொழியில் பேசியுள்ளனர். பிராமி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பற்றியும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஈமத்தாழிகளும் காணப்பட்டமை குறித்து பேராசிரியர் தனது நூலில் தெரிவித்துள்ளார். நாகர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக காணப்பட்டனர் என்கின்றார் பேராசிரியர். பிராகிருதமொழிப் பயன்பாடும் அவர்கள் காலத்தில் காணப்பட்டுள்ளது. அன்பளிப்புகளை வழங்குவதற்கு அவர்கள் பிராகிருதமொழியை பயன்படுத்தியுள்ளனர். நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாபகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் நிறுவியுள்ளது, அது முக்கியமான விடயம். நாகவழிபாடு யாழ்ப்பாணத்திற்கு புதிய விடயமல்ல எனது ஊரில் நாகவழிபாடு முக்கியமான விடயமாக காணப்பட்டது. நாகவழிபாடு கொழும்பில் இல்லை. நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் கோயில் இதற்கான வலுவான ஆதாரம். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நாகவழிபாடு காணப்பட்டது என்பதை பேராசிரியர் நெறிப்படுத்துகின்றார். யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் நாகர் கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. அன்று தமிழ்மொழி பேசப்பட்டுள்ள நாகர் வழிபாடு சைவ வழிபாடு என்பதை பேராசிரியர் ஆதாரத்துடன் நிறுவுகின்றார். தென்பகுதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இந்த நாட்டில் போர்த்துக்கீசரின் வருகையின் பின்னரே யாழ்ப்பாண வரலாறு ஆரம்பமானது என என்னிடம் தெரிவித்தார். நான் அவருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டேன். எனது சொந்த ஊரில் காணப்பட்ட ஐயனார் கோயிலை இடித்தே போர்த்துக்கீசர் காரைநகர் கடற்கோட்டையை கட்டினார்கள் என தெரிவித்தேன். இன்றும் கொழும்பில் யாழ்ப்பாணத்தமிழர் ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் வந்தவர்கள் என தெரிவிக்கும் கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். பேராசிரியர் இதனை முறியடிக்கும் விதத்தில் தமிழின் தொன்மையை சைநெறியின் தொன்மையை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றார். இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் என்பதையும் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நிலங்களை அது சார்ந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினார்கள். விவசாயத்தில் ஈடுபட்டார்கள், வயல்களை அமைத்தார்கள். எந்த இடத்தில் குளங்களை கிணறுகளை அமைக்கவேண்டும் என நாகர்கள் மிக நுட்பமாக திட்டமிட்டார்கள். இது தவிர அவர்கள் மட்கல உபயோகத்தில் ஈடுபட்டார்கள், உலோகங்களை தயாரித்தார்கள் மந்தை மேய்ச்சலில் ஈடுபட்டார்கள். வடக்கில் மேய்ச்சல் தரைகள் குறைவு, அவர்கள் விவசாயத்திற்கு தேவையான மந்தைகளை வளர்த்தார்கள். நாகர்கள் கடல் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். படகுகள் தோணிகள் போன்றவற்றை உருவாக்கினார்கள் நிலவளங்களை போல கடல்வளங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் முன்வைத்துள்ளார். அவர்களின் இந்த கட்டமைபே தற்போதைய யாழ்ப்பாணம் . நாகர்களின் காலம் தன்னிறைவு பொருளாதாரம் காலம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். 30 வருடங்களிற்கு முன்னர் நாங்கள் யுத்தத்தின் போது கடும் பஞ்சத்திலிருந்து தப்பினோம். வேறுநாடுகள் என்றால் பஞ்சத்தில் சிக்குண்டிருக்கும் ஆனால் எங்கள் மக்கள் பஞ்சத்திலிருந்து தப்பினார்கள் என்றால் இதற்கு நாகர்கள் அறிமுகப்படுத்திய கட்டியெழுப்பிய பொருளாதாரமே காரணம். நாகர்களின் உட்கட்டமைப்பு பற்றியும் பேராசிரியரின் நூல் பேசுகின்றது. நாகர்களின் கட்டிடங்களில் தூண்கற்கல் முக்கியமானவை வட்டக்கல் என்பது மற்றுமொரு முக்கிய அம்சம். பௌத்த மதத்தினர் சந்திரவட்டக்கல்லை வைத்து வரலாற்றை திரிபுபடுத்த முயலும்போது நாகர் காலத்து வட்டக்கல் குறித்த விடயங்களை பேராசிரியர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். நாகர்கள் ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டனர் என பேராசிரியர் தனது நூலில் தெரிவிக்கின்றார். பிதிர் வழிபாடு என்பது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட விடயம் திருமண சடங்கின் ஆரம்பத்திலும் பிதிர்வழிபாட்டில் ஈடுபட்டனர், இன்று பலருக்கு தங்கள் முன்னோர்களின் பெயர்கள் கூட தெரியாத நிலை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசியல் எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்துகின்றது, தமிழின் சைவசமயத்தின் தொன்மையை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பேராசிரியரின் இந்த நூல் அவர்கள் உண்மையை புரிந்துகொள்ள உதவும். இனப்பிரச்சினை தீர்வினை கோரும் நாங்கள் கேட்பது எல்லாம் நியாயமானது என ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். இந்த நூல் தென்பகுதிக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எங்களின் நியாயபாட்டினை முன்வைக்கின்றது. இந்த நூலை வாசித்து முடித்தபோது எங்கள் ஊரில் எனது வீட்டிற்கு அருகில் உள்ள நாகர்கோயில் நினைவிற்கு வந்தது. கோயிலை சுற்றி குளம் வயல்கள் காணப்படுகின்றன. இந்த நூலை வாசிக்கும் அனைவரும் தற்போதை சூழ்நிலையில் இந்த நூலை எழுதியமைக்காக பேராசிரியர் பத்மநாதனிற்கு நன்றி தெரிவிப்பார்கள். https://www.virakesari.lk/article/1846181 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆலோசகர்கள் தேவையாக இருந்தா சொல்லுங்க சார்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
🤣...... தேனிசை தென்றல் தேவா அவர்கள் ராஜா என்ன கட்டுப்பாடுகள் போட்டாலும் பிரதி பண்ணியே தீருவது போல.......😀. இன்றைக்கு இங்கே விடுமுறை, மெமோரியல் டே. நாளைக்கு வேலையிலிருந்து தான் ஒரு தீர்வை யோசிக்க வேண்டும்.......🤣.1 point- தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்களிடம் சில கேள்விகள் - நிலாந்தன்
எனக்கும் ஒரு கேள்வி உள்ளது? ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் மட்டும் போதுமா? 2வது 3வது வாக்குகளுக்கும் சேர்த்து இன்னும் இரண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்த ஏன் யோசிக்கவில்லை? ஏன் கேட்கிறேன் என்றால் 2வது 3வது வாக்குகளை யாரோ பெயர் தெரியாத சிங்கள வேட்பாளர்களுக்குப் போடுவதை விட தெரிந்த தமிழ் வேட்பாளர்களுக்குப் போட்டு தமிழர்களது ஒற்றுமையை(????) வெளிக்காட்ட வேண்டியது தானே!! இல்லை 2வது வாக்கு ரணிலுக்கு என்ற dealலா!!1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
படம் காட்டாத..... எண்டு துவங்கினால் என்ன செய்வியள்? என்ன செய்வியள்? 😂1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 point- தமிழீழ வைப்பகம் Bank of Tamil Eelam!
தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23 தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின் பாதுகாப்பு இன்றி ,சி சி டிவி ஏதும் இன்றி எந்த கொள்ளையும் இன்றி இயங்கிய ஒரே வங்கி தமிழீழ வைப்பகம் தான். 1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ வங்கி முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரையும் தமிழீழ மக்களுக்கான சேவையை வழங்கியது. தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர்.அதற்க்கு தமிழீழ மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததோடு மட்டுமல்லாமல் உலக ஊடகங்களும் அதைப்பற்றி எழுத தொடங்கின. வங்கி ஆரம்பிக்கப்படும் போது யாழ்ப்பாணமே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக நகராக இருந்தது.பின்னர் வன்னி பெரு நிலப்பரப்பை நோக்கி நகரும் போது தமிழீழ வைப்பகமும் கிளிநொச்சியுக்கு நகர்ந்தது. 2005 A.F.P சர்வதேச செய்தி நிறுவனம் தமிழீழ வைப்பகம் பற்றி புகழாரம் சூட்டி இருந்தது.இது சர்வதேசம் புலிகளின் நடைமுறை அரசு மீது,குறிப்பாக புலிகள் சர்வதேச ரீதியாக இருந்த பொருளாதார சதிகளுக்குள் சிக்காமல் தம் நிதி நிருவாகங்களை வளர்த்தெடுத்து கொண்டு வந்ததை கண்டு பொறாமை பட்டது என்பதை சில சர்வதேச செய்திகள் அன்று எமக்கு உணர்த்தின. https://www.thaarakam.net/news/a8164b0e-2be3-48aa-b698-2d51aaca2e2b பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின. தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். தமிழீழத் தேசியத் தலைவர் தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள். அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும். திரு. செ.வ.தமிழேந்தி, நிதிப்பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும். எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம். திரு. ம.வீரத்தேவன், மேலாண்மைப் பணிப்பாளர், தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்! இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது. இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார். தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும். இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது. “சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர். 2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன். தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன். தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன. தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர். தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை. தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது. சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை. இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்… அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்… “யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன். தமிழீழ வைப்பகத்தின் கிளைகள் கிளைகள் ஆரம்ப நாள் யாழ்ப்பாணம் 23-05-1994 கிளிநொச்சி 05-06-1995 நெல்லியடி 14-09-1995 முல்லைத்தீவு 14-05-1996 ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள் மாங்குளம் 07-07-1997 விசுவமடு 01-06-2001 புளியங்குளம் 24-07-2002 பளை 14-03-2003 முழங்காவில் 14-01-2004 பணிகள் நிலையான வைப்புகள் Fixed Deposits தேட்ட வைப்புகள் Savings Deposits நடைமுறைக் கணக்குகள் Current Accounts தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange கடன்கள் Loans மேலதிக வரைவுகள் Overdrafts நகையடைவு Pawn Broking காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities வாடகைக் கொள்வனவு Hire Purchase நிலையான கட்டளைகள் Standing Orders பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service நிலையான வைப்புத்திட்டங்கள் Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 08.50 % 12 மாத நிலையான வைப்பு 08.00 % 06 மாத நிலையான வைப்பு 07.00 % 03 மாத நிலையான வைப்பு 06.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள் THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம் 24 மாத நிலையான வைப்பு 07.50 % 12 மாத நிலையான வைப்பு 07.00 % 24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 % 12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 % தேட்ட வைப்புத்திட்டங்கள் Savings Deposit Schemes தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம் வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50% நல்லைத் தேட்டம் 06.00% நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50% சிறார் உண்டியல் திட்டம் 06.50% ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00% அமுதம் சிறார் தேட்டம் 06.50% பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50% கடன் திட்டங்கள் Loan Schemes கடன் திட்டங்கள் வட்டி வீதம் நகையடைவுக் கடன் திட்டம் 18.00% வாணிபக் கடன் திட்டம் 16.00% மேம்பாட்டுக் கடன் திட்டம் வேளாண்மைக் கடன் திட்டம் 15.00% கடற்றொழில் கடன் திட்டம் 15.00% கைத்தொழில் கடன் திட்டம் 15.00% சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00% சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00% கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%1 point- பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நோர்வே தமிழீழத்தை அங்கீகரிக்குமா?
பலஸ்தீனம் எனும் தனியாட்சி நாடு உருவாகினால் இஸ்ரேல் அழிக்கப்பட்டு விடும் என யூதர்கள் நினைக்கின்றார்கள்.🤣 ஈழத்தமிழர்களுக்கு என ஒரு நாடு உருவாகினால் சிங்கள தேசம் அழிக்கப்பட்டு விடும் என சிங்கள இனம் நினைக்கின்றது.🤣 ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்து விட்டால் தன் வலிமை குன்றிவிடும் என அமெரிக்க நினைக்கின்றது.🤣 உக்ரேனுக்குள் நேட்டோ நுழைந்து விட்டால் தான் அழிந்து விடுவேன் என ரஷ்யா நினைக்கின்றது.🤣1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வவ்வ்வ்வ்வ்வ் நல்ல சந்திப்பு அது உங்கள் எழுத்தின் மூலம் தெரியுது தமிழ்சிறி அண்ணா🙏🥰............................................................1 point- யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 25/11/20231 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆம் சுவி, எதிர் பார்த்ததை விட ஒரு மங்களகரமான இனிமையான சூழலில் இந்தச் சந்திப்பு நடை பெற்றதாலும்… சந்திப்பின் போது மூவரும் மாறி மாறி சுவராசியமான விடயங்களை பேசிக் கொண்டு இருந்ததாலும் இரண்டரை மணித்தியாலம் எப்படி போனதென்றே தெரியவில்லை. உண்மையில் மனதிற்கு மகிழ்வான சந்திப்பாக அமைந்ததில் எம் மூவருக்கும் மகிழ்ச்சியே. 🥰1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அதை ஏன்…. கேட்கிறீர்கள். குமாரசாமியார் தந்த உபசரிப்பையும், விருந்தோம்பலையும் வாழ்க்கையில் மறக்கவே முடியாத அளவிற்கு செய்து விட்டார். ❤️ நாம் புறப்படும் போது… இரண்டு பெரிய பை நிறைய உளுந்து 🥯வடைகளையும், அதற்கு பச்சை மிளகாய் சம்பலும், பூந்தி லட்டுக்களும், 🍰“கேக்”குகளையும் 🎂 எமது வாகன தரிப்பிடத்துக்கு கொண்டு வந்து தந்து அசத்தி விட்டார். 💓1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
👍..... இங்கு வந்த இந்த சில நாட்களிலேயே எனக்கும் நீங்கள் கடைசி இரண்டு பந்திகளிலும் எழுதியிருப்பது போலவே தோன்றுகின்றது........🙏. 🤣.......... 'படமில்லாத .......' என்பதை ஒரு 'ட்ரேட் மார்க்' ஆக பதிவு செய்யும் திட்டம் எனக்குள்ளது. ஆகவே அதை பாவிப்பவர்கள் இப்பவே பாவித்துக் கொள்ளவும். பின்னர் என்றால் இளையராஜா அவர்கள் போல வக்கீல் நோட்டீஸ் ஒன்றை நான் அனுப்பினாலும், நீங்கள் ஆச்சரியமும், கோபமும் படக்கூடாது........🤣.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
படம் எடுத்தால்.... ஆயுள் குறைந்து விடும் என்று படம் எடுக்கவில்லை ஈழப்பிரியன். (லொள்)1 point- வினா விடை
1 pointமுன்னர் Yahoo,Hot mail என்று இருந்தது. இப்போ Gmail தான் பிரபல்யம் என்று எண்ணுகிறேன்.1 point- "பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!"
1 point- எனது அறிமுகம்
1 pointவணக்கம் தில்லைவினாயகலிங்கம் அவர்களே, யாழின் நரம்பகளை மீட்டி நற்சுவை ததும்பும் இன்தமிழிசை பரப்பி யாழைச்சிறப்பித்து அழகூட்டி அறிவூட்டிட வருகவெனத் தங்களை யாழ்க்கள உறவுகளோடு இணைந்து வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointநீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? - பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும் மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார். இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட். அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன், தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன் ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார். யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால் கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும் பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார். தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும் வழங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார். ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார். ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார். பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழக்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா. இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில் முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித். அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித்.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.