Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3055Posts -
இணையவன்
கருத்துக்கள பொறுப்பாளர்கள்10Points7596Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/10/24 in Posts
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி4 விக்கெட்டுகளை 23 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும், ஹென்றிக் க்ளாஸனதும் டேவிட் மில்லரினதும் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இறுதியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய நிதானமாக ஆடினாலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் வெல்வதற்கு எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களையே எடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் என்ற நிலையை மட்டுமே அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 21 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 36 2 பிரபா USA 34 3 ரசோதரன் 34 4 ஈழப்பிரியன் 32 5 சுவி 32 6 நந்தன் 32 7 வாதவூரான் 30 8 ஏராளன் 30 9 குமாரசாமி 28 10 தமிழ் சிறி 28 11 கிருபன் 28 12 கந்தப்பு 28 13 வாத்தியார் 28 14 எப்போதும் தமிழன் 28 15 நீர்வேலியான் 28 16 வீரப் பையன்26 26 17 நிலாமதி 26 18 தியா 26 19 புலவர் 26 20 P.S.பிரபா 26 21 நுணாவிலான் 26 22 அஹஸ்தியன் 26 23 கல்யாணி 26 இப்போதைக்கு @goshan_che முதல்வர் பதவியில் இருந்து இறங்குகின்ற திட்டத்தில் இல்லை!5 points
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர். பிரான்சின் கலாச்சாரம் இந்த வெற்றிலைத் துப்பல் கூட்டத்தினால் சீரழிந்து விட்டதாகவும் தமது வேலைவாய்ப்பினைப் பறித்து வெற்றிலை துப்பாத கூட்டம் முன்னேறி விட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் வெளிநாட்டவர் வேண்டப்படாதவர்கள். ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣 எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலரும் இந்த இனவாதக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். ஏனென்றால் வெளிநாட்டவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம் 😂. இந்தத் தமிழர்கள் யாரென்று பார்த்தால் அரசாங்கத்துக்கு வரி ஏய்ப்புச் செய்பவர்களும் உதவிப் பணத்தை எடுத்துக் கொண்டு களவாக வேலை செய்பவர்களும் மற்றும் வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களுமாவர் இதில் அடங்கும்.4 points
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
கடந்த வாரம் தான் அதி வலது சாரி நாசிகளின் பிடியில் இருந்து மேற்கு ஐரோப்பாவை மீட்க இலட்சக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், கனேடிய இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து நோர்மண்டியில் வந்திறங்கிய (D-Day) 80 வருடத்தை நினைவு கூர்ந்தார்கள். இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்😎!4 points
-
நன்றி கெட்ட உலகமிது 😡
3 pointsபிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வலதுசாரிகளின் வெற்றியை நீங்கள், "மண்ணின் மைந்தர்களின்" வெற்றியாக கருதி, நா.த. கட்சியையும் அவர்களைப் போன்றவர்களே என்று சொல்கின்றீர்கள். அதாவது 16 வீதம் எடுத்து இரண்டாவதாக வந்த இனவாதக் கட்சியையும் நா.த.க வினரையும் ஒன்றாக ஒப்பிடுகின்றீர்கள். தமிழகத்தில் தமிழ் தேசியத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் வலதுசாரிகளின், இனவாத அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு ஒப்பானது என்றும் சொல்கின்றீர்கள். இந்த இனவாத எழுச்சியைத் தான் நா.த.க வினரும் செய்கின்றனர் என நம்புகின்றீர்கள். இங்கு நான் உட்பட நா.த,க வின் அரசியலை வெறுப்பதன் காரணமும் இதுதான். நாம் எழுதவேண்டிய பல விடயங்களை நீங்களே, இரண்டு தரப்பினரையும் ஒன்றாக தராசில் வைத்து எழுதியமைக்கு நன்றி3 points
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இன்று பிராந்சில் நடந்து முடிந்த ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும். தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........2 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்க வேண்டும், குருஜீ. இப்ப காலம் மாறிப் போச்சு..... இப்ப சின்ன அணிகள், பெரிய அணிகள் வேற: பெரிய அணிகள்: ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ........... சின்ன அணிகள்: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ............2 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??2 points
-
நன்றி கெட்ட உலகமிது 😡
2 pointsஇல்லை மிகுதி 80% இல் 20 % வெளிநாட்டவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கக் கூடாது எனும் பகுதி. ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் ஒரு 20 % வெளிநாட்டவர்களை தங்கள் அடிமைகளாக நினைத்து அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த நினைப்பவர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம் மிகுதி 20 வீதத்தினர் வெளிநாட்டவர்கள் தங்களைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறுவதை பிடிக்காதவர்கள் . அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் 20 வீதமானவர்கள் நித்திரை போல நடிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே வெளிநாட்டவர்களுக்கு எதிராகப் பேசிக்கொள்வார்கள் நல்லவர்களை போல நடித்துக் கொண்டிருப்பார்கள் . நேரம் வரும்போது AFD எனும் கட்சியை விடப் பலமடங்கு துவேசத்தைக் காட்டுவார்கள் . ஆனாலும் அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்2 points
-
நன்றி கெட்ட உலகமிது 😡
2 pointsமுக்கியமான ஒன்று இக் கட்டுரையில் விடுபடப்பட்டுள்ளது. ஜேர்மனி இராணுவம் எந்த உரிமையில் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் காலூன்றியிருந்ததோ அதே உரிமை ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக ஜேர்மனிக்குள் வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது மட்டுமின்றி அகதிகளை உள்வாங்குதல் சர்வதேச/ஐரோப்பிய உடன்படிக்கைகளின்படி கட்டாயமான ஒன்று. பாவம் பரிதாபம் பார்த்து அவர்களை ஜேர்மன் ஆதரிக்கவில்லை. வந்தவர்கள் விதிமுறைகளை மீறுவதை வேறு விதமாக அணுக வேண்டும். இது மதத் தீவிரவாதம். தங்கள் சமுதாயம் மேற்குலகினால் பாதிக்கப்பட்டதால் பழவாங்கும் நோக்கத்தோடு வருபவர்கள், மேற்குலகின் வெறுப்பை உள்மனதில் வைத்துக் கொண்டு வருபவர்கள் மற்றும் மூளைச்சலவை செய்யப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள். இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர். https://www.lefigaro.fr/international/deuxieme-jour-de-manifestations-en-allemagne-contre-le-parti-d-extreme-droite-afd-202401212 points
-
தோழர் இரும்பு
2 points'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது: ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். ***************** தோழர் இரும்பு (ஜான் சுந்தர்) ----------------------------------------------- வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். மகள்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம். நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….” இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’ பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும் மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. “வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். “தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்” என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு தாளிப்பு துவங்கியது. ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது” மணியைப் பார்த்தேன். பத்தரையாகி விட்டிருந்தது. நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து நான் வெளியே வரவேண்டும். தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல் மாலெ இயக்கத்தில் பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி. “ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” வானம் கழுவி விட்டாற்போலிருந்தது. “ஆச்சு தோழர் சொல்லுங்க” தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால் தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த வாழ்வில் கண்ட மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும். “பொம்பள சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “ சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார். “.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா? ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்! சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக” வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி உருப்படியாக்கித்தருவார். “இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்! ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம் நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்” ” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?” “இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்” நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும். “ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம். எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக கெடைக்க மாட்டாங்க தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா. “…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்” “ம்ம்” மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும். ” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள” “செரி” “பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “ “ஏன்?” ” நமக்குந்தெரீலியே தோழர்… குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு” எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது “நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “ “இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “ “உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “ “பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “ “அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “ “நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “ “கடங்காரனுக தொல்ல” “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “ “ஏதாவது வேல வேணும் “ “இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?” “ம்ம்….ம்ம்” “நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்” “நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க” “பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …” “இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம் கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு” “இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது” “பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு” ”அடங்கொன்னியா!” “பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது” “இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..” “கால்நடைகள பெருகப்பண்ணி…” “பார்ரா” ” ஆமா தோழர்! கூடுதலா கெணறு தோண்டி…” “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள” “கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி மறுக்கா ஊருக்கே போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும் நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “ ” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!” தோழர் அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்” “போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல” “ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன். “அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “ “புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்” “அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது” “அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு” ”அப்பறொம்?” “இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு” ”சிறப்பு தோழர்!” “ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “ “நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு கூப்பிட்டு ஓட்டுவோம். ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்” “அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச, இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “ ”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்” “அதென்னவோ அந்தக்காளுக்கும் அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “ ”சிறப்பு….மிகச்சிறப்பு” “சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா வீட்டுக்கே போயிட்டாப்ள” ”ஓஹோ” “பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “ “கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?” “பொதுப்புத்தி தோழர்” “அந்தாளுக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும் நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு” “அந்தக்காள விட அந்த பசங்க மேல சுனாமிக்கு பாசம் “ “பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” “எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால் பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன். “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன். ” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம் எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க” நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன். “திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு” “பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள” “அடப்பாவமே” “கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,, கண் கொண்டு பாக்க முடியாது” இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம். “ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்” மொட்டை மாடிக் காற்று சிலீரென்று முகத்தை வருடியது. “வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” “எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு” “எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “ “நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?” “அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” “சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “ “எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு” “தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “ பிறகு நான் பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு? உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் . அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் . “அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’ ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார். “ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். https://akazhonline.com/?p=73652 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 34 2 பிரபா USA 32 3 ரசோதரன் 32 4 ஈழப்பிரியன் 30 5 சுவி 30 6 நந்தன் 30 7 வாதவூரான் 28 8 ஏராளன் 28 9 குமாரசாமி 26 10 தமிழ் சிறி 26 11 கிருபன் 26 12 கந்தப்பு 26 13 வாத்தியார் 26 14 எப்போதும் தமிழன் 26 15 நீர்வேலியான் 26 16 வீரப் பையன்26 24 17 நிலாமதி 24 18 தியா 24 19 புலவர் 24 20 P.S.பிரபா 24 21 நுணாவிலான் 24 22 அஹஸ்தியன் 24 23 கல்யாணி 242 points- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. சுமார் 10 நிமிட இடைவேளையில் 150 ரொக்கெட்டுக்கள் இப்பகுதிமீது ஏவப்பட்டிருக்கின்றன. சன அடர்த்தி அதிகமான இந்த அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 210 பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பல சிறுவர்களும் அடக்கம். அப்பகுதியில் இருக்கும் கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு நரகம் போல் அப்பகுதி காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குண்டுவீச்சில் சிதறுண்ட மனித உடற்பாகங்களை நாய்கள் இழுத்துச் செல்வதை மக்கள் கண்ணுற்றிருக்கிறார்கள். பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையின்போது ஹமாஸ் தீவிரவாதிகளுடனான சண்டையில் இஸ்ரேலிய இராணுவத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இஸ்ரேலின் இந்த மீட்புநடவடிக்கையினால், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலியர்களின் தவற்றினால் ஏற்பட்ட அவமானத்தை கழுவிவிட முடியாது என்று ஹமாஸ் கூறியிருக்கிறது. மேலும், இந்தத் தாக்குதலின்போது மேலும் சில பணயக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் அது கூறியிருக்கிறது. மீதமிருக்கும் பணயக் கைதிகளின் பாதுகாப்பினை இஸ்ரேலே இல்லாமலாக்கியிருக்கிறது என்றும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலிய கொலையாளிகளின் ஆக்கிரமிப்பிற்கெதிரான எமது மக்களின் போராட்டம் தொடரும், நாம் சரணடையப்போவதில்லை என்று ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல் அக்ஸா பிரிக்கேட் கூறியிருக்கிறது.1 point- இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!
10 JUN, 2024 | 12:16 PM (புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை (10) புதுடில்லியிலுள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் இந்த இரு தரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார். அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1857311 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointஐரோப்பியர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆசிய ,ஆபிரிக்க வளங்கள் தேவைப்பட்டது. மத்திய கிழக்கு எண்ணை வளம் தேவைப்பட்டது. வட அமெரிக்கர்கள் வாழ,வளர்ச்சி பெற ஆபிரிக்க அடிமைகள் கப்பல் கப்பல்களாக தேவைப்பட்டார்கள்.1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointநான் சொல்லியது இனவாதிகள் தந்தை, மகள் லுபென் Vs ஊழல்வாதி நிகலோய் சார்கோசி போன்றோர் பற்றி. நீங்கள் எதை நினைத்தீர்கள்🤣. பிகு இந்த இன்வாதிகளின் நதிமூலம், ரிசி மூலத்தை நோண்டினால் அவர்களே “வந்தேறிகள்” ஆக இருப்பது வழமை. உதாரானமாக பிரெக்சிற் நாயகன் Nigel Farage. Farage என்ற பெயர் பிரஞ்-லக்சம்பேர்க் எல்லை பகுதியினரது. இவரின் மனைவியிம் ஜேர்மன்காரி. (எதையோ நினைத்து பூட்டை ஆட்ட வேண்டாம்🤣)1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனதூரம் போகாது...🤣 அப்பிடியே 21....22....23 ல முட்டி மோதி நிக்கும். 😂1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointமிகவும் கஸ்ரம் .....கடினம் ஏனெனில் Bundes. Rat. என்ற ஒன்று உண்டு இல்லையா?? அது அனுமதிக்க வேண்டும் அதற்கு இவர்கள் பல மாநிலங்களை ஆள வேண்டும் புண்டாஸ் ரட்டில். பல இல்லாமல் ஆட்சி செய்யும் கட்சி கூட தங்கள் விரும்பும் சட்டங்களை இயற்ற முடிவதில்லை1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointஇந்த மதவாத முட்டாள்களும், AfD போன்ற இனவாத முட்டாள்களும் ஒரே ஆட்கள்தான், பெப்சியும், கொக்கோ கோலாவும் போல. அவர்கள் இல்லாட்டில் இவர்களையும், இவர்கள் இல்லாட்டில் அவர்களையும் நாயும் சீண்டாது🤣.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கவனம் பையா....... "இருமல் கிழவியை குடுத்துட்டு தும்மல் கிழவியை வாங்கிக் கொண்டு" போன கதையாக முடிய போகுது........! 😂1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointஇவர்கள் வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்கள் என நினைக்கின்றேன். தேர்தல் மூலம் முக்கிய பதவிகளுக்கு இவர்கள் வந்தாலும் அரசியல் சாசனங்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா என தெரியாது. ஆனால் இனவாத கட்சிகளின் வெற்றி பழைய/முக்கிய கட்சிகள் தமது இன்றைய நடவடிக்கைகளை மாற்றியமைக்க சாத்தியங்கள் உண்டு. முக்கியமாக அகதிகள் வருகை, உக்ரேன் போர் நடவடிக்கைகள் , வெளிநாட்டவர்களின் சோசல் உதவி வாழ்க்கை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். அதுடன் இன்னுமொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இனவாத கட்சிகளின் வெற்றியை போல் வெளிநாட்டவர்களுக்கு சார்பான கட்சிகளும் வென்றுள்ளன.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் சேர முதலே இதை நான் சொல்லியிருந்தேன்😁 @வீரப் பையன்26 என்னையே நான் மெச்சிக்க கன்யாகுமரி மகளுக்கு நன்றி😍 🍾🍷🍺🍻🥃 நான் இப்ப ட்ரிங்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கேன்! ஓணாண்டியிடம் கொடுத்தாலும் காரியமில்லை! ஓணாண்டி, முகவரி ப்ளீஸ்!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழத்துகள் முதல்வரே. கோஷான் இப்போதைக்கு கீழ இறங்கிற மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் நம்பிககையாகத் தெரிவு செய்த அணிகள் எல்லாம் வீட்டப் போகப் போகிற படியால் இனி புள்ளிகளை எடுப்பது கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
பெருமாள், நான் யேர்மனியில் இருக்கிறேன். வரும் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பிக்கிறது அல்லவா.1 point- நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரேல் பதவி, அறிவியல் ஆசிரியர் 10 ஜூன் 2024, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா? இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட நான்காவது விண்கலம் இது. சீன விண்கலம் சந்திரனின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் முதற்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டன. கடந்த 12 மாதங்களில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சந்திரனின் மேற்பரப்பில் விண்கலங்களை தரையிறக்கியுள்ளன. பிப்ரவரியில், அமெரிக்க நிறுவனமான இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் ( Intuitive Machines) நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனமாக உருவெடுத்தது. அதனை தொடர்ந்து மேலும் பல தனியார் நிறுவனங்கள் விண்கலங்களை நிலவில் தரையிறக்க தயாராகி வருகிறது. நாசா சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் 2026இல் சந்திரனில் தரையிறங்க உள்ளனர். மற்றொரு புறம், 2030-க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவோம் என்று சீனா கூறுகிறது. விரைவான பயணத் திட்டத்துக்கு பதிலாக, சந்திரனில் நிரந்தர தளங்களை உருவாக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இன்றைய யுகத்தில் பெரும் அதிகார அரசியல் உருவெடுத்து வரும் நிலையில், இந்த புதிய விண்வெளிப் பந்தயம் பூமியில் நிலவும் போட்டிச் சூழலை நிலவு வரை கொண்டு செல்ல வழிவகுக்கும். கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் ஜஸ்டின் ஹோல்காம்ப் கூறுகையில், “சந்திரனுடனான நமது உறவில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. விண்வெளி ஆய்வின் வேகம் நமது சட்டதிட்டங்களை மீறுகிறது" என்று அவர் எச்சரிக்கிறார். 1967 ஆம் ஆண்டு ஐநா உடன்படிக்கை எந்த நாடும் சந்திரனை சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறுகிறது. அவுட்டர் ஸ்பேஸ் உடன்படிக்கை (Outer Space Treaty) சொல்வது என்னவெனில், `சந்திரன் அனைவருக்கும் சொந்தமானது. அதில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆய்வும் அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும் அனைத்து நாடுகளின் நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம் இந்த உடன்படிக்கை மிகவும் அமைதியான ஒத்துழைப்பான சூழலை குறிக்கிறது. ஆனால், இந்த விண்வெளி உடன்படிக்கை ஒத்துழைப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக சர்வதேச பனிப்போர் அரசியலை உருவாக்கி உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்ததால், விண்வெளி ஒரு ராணுவப் போர்க்களமாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவியது. எனவே ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக எந்த அணு ஆயுதங்களையும் விண்வெளிக்கு அனுப்பக் கூடாது என்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் தற்போதுள்ள புதிய விண்வெளி யுகம் அன்றைய காலகட்டத்தில் இருந்ததை விட வித்தியாசமாக தோன்றுகிறது. இந்த சந்திர யுகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் என்னவென்றால், நவீன கால நிலவு பயணங்களை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் மட்டும் திட்டமிடவில்லை, தனியார் நிறுவனங்களும் திட்டங்களை வகுத்து, போட்டியிடுகின்றன. ஜனவரியில், பெரெக்ரைன் (Peregrine) என்ற அமெரிக்க நிறுவனம் மனித சாம்பல், டிஎன்ஏ மாதிரிகள், பிராண்டிங் பெயர் கொண்ட விளையாட்டு பானம் ஆகியவற்றை சந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்தது. ஆனால் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறி அத்திட்டம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை சந்திரனுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்தது பெரும் விவாதத்தை தூண்டியது. நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்தின்படி மனித குலத்திற்கு பயனளிக்கும் ஆய்வை மட்டுமே சந்திரனில் மேற்கொள்ள வேண்டும் என்ற விவாதத்தைத் தூண்டியது. "எங்களுக்கு திறன் இருப்பதால், சாத்தியம் என்பதால், நாங்கள் சந்திரனுக்கு பொருட்களை அனுப்ப முயற்சிக்கிறோம். இதற்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை,” என்கிறார் விண்வெளி வழக்கறிஞரும், ஃபார் ஆல் மூன்கைண்டின் நிறுவனருமான மிச்செல் ஹான்லன். இந்த நிறுவனம் சந்திரனில் தரையிறங்கும் தளங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்களின் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைக்கும் ஒரு அமைப்பாகும். "தற்போது சந்திரன் நாம் அணுகக்கூடிய தூரத்தில் உள்ளது, எனவே அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கிவிட்டோம்," என்று அவர் கூறுகிறார். சந்திரனுக்கு செல்ல திட்டம் வகுக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், தேசிய நிறுவனங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் பாலிசி அண்ட் லாவின் இயக்குனர் சைத் மோஸ்தேசார் கூறுகையில், "எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசால் விண்வெளிக்கு செல்ல அங்கீகரிக்கப்பட வேண்டும், இது சர்வதேச ஒப்பந்தங்களால் வரையறுக்கப்படும். ” என்கிறார். பட மூலாதாரம்,REUTERS நிலவில் கால் பதிக்கும் திட்டங்களால் ஒரு பெரிய கௌரவம் கிடைப்பதாக உலக நாடுகள் கருதுகிறது. இந்தியாவும் ஜப்பானும் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு, `உலகளாவிய விண்வெளி வீரர்கள்’ என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நாடு, வேலை வாய்ப்புகள் மற்றும் புதுமைகள் மூலம் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொண்டு வர முடியும். அதே சமயம் இந்த `மூன் ரேஸ்’ ஒரு பெரிய பரிசையும் வழங்குகிறது. அது `அதன் எண்ணற்ற வளங்கள்’. தற்போது சந்திரனின் நிலப்பரப்பு தரிசாகத் தோன்றினாலும், அதில் அரிதான நிலப்பரப்புகள், இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் மற்றும் ஹீலியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன, இவை சூப்பர் கண்டக்டர்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கனிமங்களின் மதிப்பீடுகள் பில்லியன்கள் முதல் குவாட்ரில்லியன்கள் வரை பெருமளவில் வேறுபடுகின்றன. எனவே சிலர் சந்திரனை நிறைய பணம் சம்பாதிக்கும் இடமாக பார்க்கிறார்கள். சந்திரனின் வளங்கள் ஒரு மிக நீண்ட கால முதலீட்டாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்திர வளங்களைப் பிரித்தெடுத்து பூமிக்கு கொண்டு வருவதற்கு, தேவையான தொழில்நுட்ப வழிகள் கண்டறியப்பட வேண்டும். 1979 இல், ஒரு சர்வதேச ஒப்பந்தம் சந்திரனின் வளங்களை எந்த நாடும் அல்லது அமைப்பும் சொந்தமாகக் கோர முடியாது என்று அறிவித்தது. ஆனால் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை - 17 நாடுகள் மட்டுமே இதில் பங்கேற்கின்றன. அமெரிக்கா உட்பட சந்திரனுக்குச் சென்ற எந்த நாடுகளும் இந்த ஒப்பந்த்தில் இல்லை. உண்மையில், அமெரிக்கா 2015 இல் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதன்படி அதன் குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எந்த ஒரு விண்வெளிப் பொருளையும் பிரித்தெடுக்கவும், பயன்படுத்தவும் மற்றும் விற்கவும் அது அனுமதிக்கிறது. "இது சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது," என்று மைக்கேல் ஹன்லோன் என்னிடம் கூறினார். "அமெரிக்காவை பின்பற்றி மெதுவாக, மற்ற நாடுகளும் இதே போன்ற தேசிய சட்டங்களை கொண்டு வந்தன. அதில் லக்சம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவையும் அடங்கும்.” என்றார். மிகவும் தேவையான ஒரு வளம்: தண்ணீர். "அப்பல்லோ விண்வெளி வீரர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட முதல் சந்திரனின் பாறைகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, அவை முற்றிலும் உலர்ந்ததாக கருதப்பட்டன" என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் விளக்குகிறார். "ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உண்மையை நாங்கள் கண்டறிந்தோம். அந்த சந்திரப் பாறைகளில் பாஸ்பேட் படிகங்களில் சிக்கியிருக்கும் தண்ணீரின் சிறிய தடயங்கள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்." என்றார். சந்திரனின் துருவப்பகுதிகளில், இன்னும் நிறைய தண்ணீரின் சுவடு இருக்கிறது என்று அவர் சொல்கிறார் - அதன் பள்ளங்களுக்குள் பனிக்கட்டிகள் உறைந்துக் கிடக்கின்றன. வருங்காலத்தில் நிலவுக்கு செல்பவர்கள் அதன் தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம், ஆக்ஸிஜனை உருவாக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி வீரர்கள் ராக்கெட் எரிபொருளை உருவாக்க பயன்படுத்தலாம், அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்தெடுத்து அதனை சந்திரனில் இருந்து செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் பயணிக்கலாம். சந்திரன் ஆய்வு மற்றும் சந்திர பயணங்கள் தொடர்பாக ஒரு புதிய வழிகாட்டும் கொள்கைகளை நிறுவ அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின்படி "சில புதிய விதிகள் தேவைப்பட்டாலும், சந்திரனில் உள்ள வளங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக `அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தத்திற்கு' (Outer Space Treaty) இணங்க வேண்டும்” என்கிறது. இதுவரை 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் சீனா இந்த பட்டியலில் இல்லை. சந்திர ஆய்வுக்கான புதிய விதிகள் ஒரு தனிப்பட்ட தேசத்தால் வழிநடத்தப்பட கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். "இது உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் வகுக்கப்பட வேண்டும், ஏனெனில் இது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது," என்று சைட் மோஷெட்டர் என்னிடம் விளக்குகிறார். வளங்களுக்கான அணுகல் மற்றொரு மோதலையும் ஏற்படுத்தும். சந்திரனில் நிறைய இடங்கள் இருந்தாலும், பனியால் நிரம்பிய பள்ளங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளே முக்கியத்துவம் பெறும் ‘சந்திர ரியல் எஸ்டேட்’ தளங்கள் ஆகும். அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் அந்த ஒரே இடத்தை கைப்பற்ற விரும்பினால் என்ன நடக்கும்? ஒரு நாடு அந்த பகுதியில் தளம் அமைத்தவுடன், மற்றொரு நாடு தங்கள் தளத்தை சற்று நெருக்கமாக நிறுவினால் என்ன நடக்கும்? அதனை தடுப்பது எப்படி? லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் விண்வெளிக் கொள்கை மற்றும் சட்ட ஆராய்ச்சியாளரான ஜில் ஸ்டூவர்ட் கூறுகையில், "அண்டார்டிக்குடன் இதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒப்புமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த கண்டத்தில் இருப்பதைப் போல சந்திரனிலும் ஆராய்ச்சி தளங்கள் அமைக்கப்படலாம்." என்கிறார். ஆனால் ஒரு புதிய சந்திர தளத்தை நிறுவுவது பற்றிய முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்பது பெரிய கேள்விக்குறி. எடுத்துக்காட்டாக, சந்திரனில் அமைக்கப்படும் தளங்களின் அளவீடுகள் எப்படி இருக்கும்? இவற்றை முடிவு செய்யப்போவது முதலில் சந்திரனில் தளம் அமைக்கப் போகும் நாடு தான். "நிச்சயமாக சந்திரனில் தளங்கள் அமைக்கும் செயல்பாட்டில் முதல் மூன்று நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்," என்று ஜில் ஸ்டூவர்ட் கூறுகிறார். "முதலில் அங்கு சென்று முகாம் அமைக்கும் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒரு சிறிய சலுகை இருக்கும். அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் என்று அர்த்தம் இல்லை, ஆனால் அந்த இடத்தில் சுதந்திரமாக தளம் அமைக்க முடியும்” என்கிறார் அவர். தற்போதைய சூழலில், அங்கு முதலில் குடியேறுபவர்கள் அமெரிக்கா அல்லது சீனாவாக இருக்கலாம், ஏற்கனவே பதற்றமான அவர்களின் உறவுக்கு மத்தியில் புதிய போட்டியைக் கொண்டு வருகிறது. அவர்கள் அங்கு தர நிலையை அமைக்க வாய்ப்புள்ளது. முதலில் அங்கு வருபவர்களால் நிறுவப்பட்ட விதிகள் காலப்போக்கில் நிரந்தர விதிகளாக மாறும். இவை அனைத்தும் தற்காலிகமாக தோன்றலாம். ஆனால் என்னிடம் பேசிய சில விண்வெளி நிபுணர்கள், மற்றொரு பெரிய சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை நாம் மீண்டும் காண வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். சந்திரன் ஆய்வில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது புதிய நடத்தை நெறிமுறைகள் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் ஆபத்தும் நிறைய இருக்கிறது. வானத்தில் பிரகாசமாக ஒளிரும் சந்திரன் தேயும் போதும் மீண்டும் முழுமையாகத் தெரியும் போதும் நமக்கு நிலையான துணையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தப் புதிய விண்வெளிப் பந்தயம் தொடங்கும் போது, சந்திரன் எந்த மாதிரியான இடமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் - மேலும் அது பூமிக்குள் நடக்கும் போட்டிகள் அரங்கேறும் ஒரு தளமாக மாறும் அபாயம் உள்ளது. https://www.bbc.com/tamil/articles/cg33n37del4o1 point- பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி கே. பழனிச்சாமி!
சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனி என்ன தென்னாபிகா வென்றுவிட்டது. வடை பகோடாவோடை மற்றதை திறக்க வேண்டியது தானே. பிளேன் ரீயை மனைவியிடம் கொடுங்க. @கிருபன் க்க நல்லகாலம். தென்னாபிரிகா தோற்றிருந்தால் லாயருடன் கதைத்து ஒரு வழி பார்த்திருப்பேன். லாயர் வேற யார? @goshan_che. உங்களுக்கு பக்கத்தில் இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லைப் போல.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு பிளேன் டீ போடப் போக, ஒரு விக்கட் விழுந்திட்டுது........10 பிளேன் டீ போட, பங்களாதேஷே காலியாகும் போல..........😜.1 point- பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
1 pointநா அடக்கி மெல்ல நழுவினேன் அங்கிருந்து ! ஒரமாய் இருந்து காப்பி குடித்து டிவியும் பார்த்து ரசித்தேன்! ஏதோ மர்மத்தை எதிர் பார்த்து நின்றேன்!" பணிந்து 'நானும்' மெல்ல ஒதுங்கினேன்!" செய்யாமல் பின் வாங்கி அமைதி நிலைநாட்டினேன்!" நன்றாக நிலைமையை விளங்கி கொண்டு, அனுசரித்து போகும் நல்ல கணவனாய் இருந்தீர்கள் என்பதில் பெருமைப்படுங்கள்.1 point- பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
1 pointநானும் எதோ புது விடயம் என்று நினைத்து விட்டேன்1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நான் பொன் ராதாகிருஷ்ணன் 3 ஆம் இடத்தில் வருவார் என நான் கணித்து இருந்தேன், ஆனால் 2 ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். கிருபன் சரியாக 2 ஆம் இடத்தில் வருவார் என கணித்திருப்பதால், 2 புள்ளி அல்லது 3 புள்ளிகள் என்னை விட அதிகமாக எடுத்து இப் போட்டியில் கிருபன் முதலாவதாக வந்து பெற்றி அடைவார்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் வீரர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே வாய்க்கொழுப்பு அதிகம். அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் உருவாக்கிய நக்கலான போஸ்டர் டிசைன்.. ஆனால் போட்டியில் பாகிஸ்தான் மண்டையிலே அமெரிக்கா நங்கென்று உலகிற்கே கேட்கும் அளவுக்கு கொட்டிவிட்டது. Rajesh Krishnamoorthy1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) - 2 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, நுணாவிலான், பிரபா, புலவர் 1)நிழலி - 81 புள்ளிகள் 2)கிருபன் - 81 புள்ளிகள் 3)பிரபா - 71 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 66 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 59 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 47 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 34 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 40 கேள்விகளுக்கு (91 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 ஆம் இடம் கோஷான் சே, தமிழ்சிறியைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 79 புள்ளிகள் 2)கிருபன் - 79 புள்ளிகள் 3)பிரபா - 69 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 64 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 57 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 47 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 32 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 39 கேள்விகளுக்கு (89 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
நான் நினைக்கிறேன் இங்கே கருத்து எழுதும் எவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் நோக்கம் புதியவில்லை என்று.1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) - 3 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, கிருபன் , நிழலி, ஈழப்பிரியன், நுணாவிலான், பிரபா 1)நிழலி - 73 புள்ளிகள் 2)கிருபன் - 73 புள்ளிகள் 3)பிரபா - 64 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள் 7)நுணாவிலான் - 53 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)சுவி - 41 புள்ளிகள் 11)கந்தையா57 - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 13)புலவர்- 30 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 - 16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 36 கேள்விகளுக்கு (83 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.1 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
“பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம்.” எனக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனைகள், முன்னைய சம்பவங்கள் பற்றி ஓரளவு தெரிந்தபடியாலே இவ்வாறு கூறினேன்.1 point- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
இந்த கருவி மூலம் சிறு நீரகம் பழுதடைந்தவர்கள் கிழமைக்கு ஒரு தரம் குறிப்பிட்ட நிலையங்களுக்கு சென்று புது இரத்தம் எனும் பெயரில் சுத்திகரித்து விட்டு வருவார்கள். சென்ற வருடம் ஜேர்மனியில் வாழ்ந்த எம்மவர் ஒருவர் வவுனியாவிற்கு விடுமுறைக்கு சென்று இதே சிகிச்சையின் பின் மரணமாகி விட்டார். காரணம் இங்கே நான் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு நவீன மருத்துவ கருவிகளை அன்பளிப்பு செய்தாலும் அதை கையாளுபவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.1 point- சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் கையளிப்பு!
சிறுநீரகம் செயலிழந்தவர்களில் பயன்படுத்தும் dialysis machine ஆக இருக்கும். அல்லது, இதய சத்திர சிகிச்சைகளின் போது பயன்படும் cardiopulmonary bypass machine ஆக இருக்கலாம். விலையைப் பார்க்கையில் dialysis machine என்று ஊகிக்கிறேன்.1 point- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
பஞ்சம் பிழைக்க/ வாய்ப்பு தேடிவரும் வெளிநாட்டவர்கள் சாதுக்களாக இருக்கின்றார்களா? அவர்கள் ஐரோப்பிய சட்டங்களை மதித்து நடக்கின்றார்களா? பிரான்ஸ் லாசப்பலுக்கு போனால் ஒரே வெத்திலை துப்பலும்,கஞ்சலும் குப்பையும்.....வெறிக்கூட்டங்களும்...🤣 இது ஐரோப்பிய கலாச்சாரமா? 😂1 point- பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இங்கே ஜெர்மனியியில் AFD எனும் இனவாதக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது- ஒரு காலத்தில் மலேசியா சிங்கப்பூர் எனக் குடியேறி அல்லது பலவந்தமாக குடியேற்றப்பட்டு அங்கு குடித்தனமாக வாழ்ந்து ஒய்வு காலம் வந்தபோது குறிப்பிட்ட தொகை மக்கள் இலங்கை திரும்பியிருந்தார்கள் . அந்த மாதிரி இனி வரும் காலத்தில் ஒரு தொகை மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் காலம் விரைவில் வரும். அதற்கு இந்த இனவாத ரீதியான கட்சிகளின் ஆக்கரமிப்பும் ஒரு காரணமாக இருக்கும் .1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாங்களே ஜந்து பத்து பிச்சை எடுக்கிறோம் பாக்கிஸ்தானுக்கு அள்ளிக் கொடுக்க நாங்கள் வில்கேச்சா அல்லது அம்பானி குடும்பமா ஹா ஹா நியூயோக் பிச்சில் 140ரன்ஸ் சிரம பட்டு அடிச்சால் கண்ண முடிட்டு சொல்லுவேன் 140ரன்ஸ் அடிச்ச அணிதான் வெல்லும் என்று...............................பிச் அப்படி இன்று மழை பெய்ததால் பிச்சின் தன்மை மாறும் என்று நினைத்தேன் அதே மாற்றம் இல்லா பிச்................................................1 point- "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை.??? நன்றி உங்க வேலையை , நோக்கத்தை, அழகாக சுருக்கமாக வெளிப்படையாக தெரியப்படுத்தியத்துக்கு. நான், எனக்கு உண்மையில் யார் யார் என்ன வேலை, நோக்கம் கொண்டு உள்ளார்கள் என்பதில் அக்கறை என்றும் இல்லை நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். சரி பிழை , அதை வாசிப்பவர்கள் சரியாக சுட்டிக்காட்டும் இடத்து ஏற்றுக்கொள்கிறேன் , அல்லாவிட்டால் அவர்களின் பதிலுக்கு மட்டும் விளக்கமாக வரலாற்றில் இருந்தும் மற்றும் தொல்பொருள் / இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன் அவ்வளவுதான் , நான் என்றும் ஒரு அறிவில் சிறியவனே, ஆனால் அறிந்து கொள்ளும் / கற்றுக் கொள்ளும் ஆவல் உள்ளவன் இரண்டாவது நான் எழுதிய கேள்விகள் / பதில்கள் "பெருமாள்" என்ற ஒருவர் என் கட்டுரைக்கு எழுதிய ------ ..... அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? .................................................................................... முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . .............................................. கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம் ............................................................. என்பதற்கானதே , மற்றும் படி வேறு எவருக்கும் அல்ல. என்றாலும் யாராகினும் அதற்கு நான் எழுதிய 'கேள்விகளுக்கு / பதிலுக்கு' மட்டும், தேவையற்ற, பொருத்தமற்ற அலட்டலை தவிர்த்து, பதில் தந்தால் கட்டாயம் வாசிப்பேன் மீண்டும் நன்றி, அன்பு island க்கு1 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
விசுகர். மீண்டும் மீண்டும் வாசிக்கவும்..1 point- நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
பலஸ்தீன் மீது இவ்வளவு தாக்குதல் அழிவுகளை நடத்தும் இஸ்ரேல் நாடும் அங்கு வாழும் மக்களும் இனி வரும் காலங்களில் சுதந்திரமாக பயமில்லாமல் வாழுவார்கள் என்ற நம்பிக்கை யாருக்கும் உள்ளதா? இன்றைய உலக பல முனை போர்க்களங்கள் பலஸ்தீன பிரச்சனையை முன் வைத்தே முன்னெடுக்கப்படுகின்றன. அப்படியிருக்கும் போது இஸ்ரேலின் வீர தீரம் இன்னும் எத்தனை நாட்களுக்கு? ஏனெனில் முஸ்லீம்கள் ஐரோப்பாவில் மிக வலுவாக காலூன்றி விட்டார்கள் மத்திய கிழக்கு பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அவலங்கள் நிகழப்போவது ஐரோப்பாவிலும் சேர்த்து தான்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பெரிய பெரிய அமௌண்டாக கொடுத்து மாட்சுகளை ஃபிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.....பரிசுத் தொகையை பார்த்து கொஞ்சம் பெரிசா கொடுங்க.....1 point- நன்றி கெட்ட உலகமிது 😡
1 pointபெரும்பாலான ஜேர்மனியர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பு உடையவர்கள். அவர்களிடம் இந்த சிரிய, ஆப்கானிய முஸ்லீம் குரங்குகள்... தகாத முறையில் நடப்பது மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம். துருக்கியர் கூட... இதனை கண்டிக்காதது அவர்கள் இதனை ஆதரிக்கின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது.1 point - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.