Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்12Points33600Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்11Points15791Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்11Points2954Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/13/24 in Posts
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
9 pointsதுமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும் பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது. வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில், நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன் இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி தரையில் கிடந்த விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன் இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், "குருடாகப் பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award 12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது. Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில், நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார். நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது. Stern சஞ்சிகை இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின் 26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில் நான் எழுதியிருந்தேன். -கவி அருணாசலம்9 points
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஒருபால் திருமணம்" [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும் அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது. டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட, அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம். "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்) "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது? இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால் அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?. மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார். உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி” “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.” இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.” என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting]. இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு. மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]6 points
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
மிகச் சரியான பேச்சுத்தான் அது! சரணடைந்த புலிப்போராளிகளுக்கு, பொது மக்களுக்கு என்ன நடந்ததென தெரியாத, தெரிய மறுக்கும் மக்களின் பேச்சது. பல லட்ஷம் மக்கள் வன்னியில் சிக்குண்டிருந்த போது, வெறும் எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று ஏன் அரசு பிரச்சாரம் செய்தது? மிகுதிப்பேர் அவ்வளவானோரையும் கொல்வதற்காகவா? சரி, மக்களை மீட்க போர் நடத்தியதாக கூறும் பொறுப்புள்ள அரசு, அவர்களை மீட்டு எங்கே தங்க வைப்பதாக என்ன ஆயத்தம் செய்திருந்தது? வெட்ட வெளியில் முள்ளுக்கம்பிகளுக்கிடையில் மந்தைகளைப்போல் தண்ணீர் வசதியில்லை, உணவு வசதியில்லை, சுகாதாரம் கிஞ்சித்துமில்லை. தொற்று நோயாலேயே பல மக்கள் இறந்தார்கள். அப்போ போர்நிறுத்தம் கோரியிருந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள்? வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் பொறுப்பானவர்களுக்கு அறிவித்தே சென்றார்கள். அவர்களின் மரணத்திற்கு இவர்களின் பதிலென்ன? புலிகளை அழித்த பின்னே தமிழருக்கு தீர்வு என்று சொன்னவர்கள், அவர்களை அழித்த பின் இப்போ, புலிகள் இல்லை தமிழருக்கு தீர்வு என்பது தேவையற்றது, தமிழர் இங்கு வாழ விரும்பினால் வாழலாம் தீர்வு எதுவும் கேட்க முடியாது என சொல்வதன் அர்த்தம் என்ன? நம் தமிழ்த் தலைமைகள் விட்டுக்கொடுக்காத விடையங்களா? செய்யாத சமரசங்களா? எழுதாத உடன்படிக்கைகளா? செய்யாத அஹிம்சை போராட்டங்களா? அவைகளை மதித்ததா சிங்களம்? எதற்கு எழுபத்தாறு ஆண்டுகளாக இந்தப்பிரச்சனை நீடிக்கின்றன? உண்மையான நோக்கத்துடன் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடோ செயற்பட்டிருந்தால் இந்தப்பிரச்சனை எப்போதோ சுமுகமாக தீர்த்திருக்கலாம். ஆனால் சிங்களமே பலதடவை சொல்லியிருக்கு நாங்கள் பிரச்சனைக்குரிய தீர்வை வைக்க முயற்சிக்கும்போதெல்லாம் இந்தியா எங்களை அழைத்து அறிவுறுத்துகிறது என்கிறார்கள். இதுவரையில், நாட்டில் என்ன பிரச்சனை நடைபெறுகிறது எதனால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது எனஅடையாளம் காணத்தெரியாதவர்களால் எப்படி என்ன தீர்வை வைக்க முடியும்? தமிழருக்கு நாட்டில் பிரச்சனை இல்லை என்கிறார்கள், அபிவிருத்தியே அவர்கள் பிரச்சனை என்கிறார்கள், அயர்லாந்து கொள்கையை யோசிக்கிறோம், தென்னாபிரிக்க கொள்கையை பரிசீலிக்கிறோம் என்று ரீல் விடுகிறார்கள். ஆனா தீர்வேதும் இல்லாமலே தமிழரை அவர்தம் நிலங்களிருந்து விரட்டுகிறார்கள், கோயில்களை உடைக்கிறார்கள். பிரச்னையேதும் இல்லாமலா தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன? எரியூட்டப்பட்டன? பேச்சுக்கள் நடந்தன? உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன? போராட்டம் நடந்தது?5 points
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
சீமான், பிரபாகரனை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பாவிக்கிறார் என்பதுதான் உங்கள் உண்மையான பிரச்சனையா? உந்தக் கதைகளை வேறு எங்காவது அவிழ்த்து விடுங்கள். உதை நம்புவதற்கு "ஞானப்" பழம் தின்று கொட்டை போட்ட பலர் இருக்கிறார்கள். 🤣3 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
28வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 47 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 28 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 46 2 ரசோதரன் 46 3 கோஷான் சே 46 4 ஈழப்பிரியன் 44 5 சுவி 44 6 நந்தன் 44 7 தமிழ் சிறி 40 8 ஏராளன் 40 9 கிருபன் 40 10 கந்தப்பு 40 11 வாத்தியார் 40 12 எப்போதும் தமிழன் 40 13 நீர்வேலியான் 40 14 வீரப் பையன்26 38 15 நிலாமதி 38 16 குமாரசாமி 38 17 தியா 38 18 வாதவூரான் 38 19 அஹஸ்தியன் 38 20 கல்யாணி 38 21 புலவர் 36 22 P.S.பிரபா 36 23 நுணாவிலான் 36 முதல்வர் பதவியில் அமெரிக்கப் பிரபா அமர்ந்துள்ளார்!2 points
-
தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த அமித்ஷா - தமிழிசை அதிருப்தி
தமிழிசை சவுந்தர்ராஜனை... தமிழில் கண்டித்த அமித்ஷா.2 points
-
வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை!
ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதை என்று தமிழில் ஒரு சொலவடை இருக்கெல்லோ!2 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா அம்பி, அவர் ஒரு கோர்ட்டு போட்டுகொண்டு கோர்ட்டுக்கு போகாத வக்கீல் தெரியுமோல்லியோ ....... அப்படித்தான் சொல்லுவார்.......! 😂2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நீங்கள் சொல்வது போலவே ஜாதி பேதம் அழிந்தால் அது இன்னொரு புதுயுகமாகவே இருக்கும். ஆனால் உண்மையில் நிலைமை தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டல்லவா போகின்றது. அவர்களின் மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளை பார்த்திருப்பீர்கள் தானே, ஒவ்வொருவருக்கும் ஒன்றல்லவா இருக்கின்றது. அதில் பெருமை வேறு கொள்கின்றார்கள். இந்தப் பாடலும், வள்ளிக் கும்மியும் சமீபத்தில் பெரிய எடுப்பில் கொங்கு மண்டலம் எங்கும் கொண்டாடப்பட்டது: "சத்தியம் சத்தியமே, சின்னமலை சத்தியமே! கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே! இது போதும், இது போதுமே, எனக்கு வேறு ஏதும் வேண்டாம், அம்மா!" ஒவ்வொரு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் பங்கு பற்றியிருந்தார்கள். உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நாங்கள் இங்கே கதைக்கும் தேசியம் இவர்களிடம் என்று போய் சேரும்? ஓரிரு மிகப் பெரிய நகரங்களை விட, மற்ற இடங்கள் எல்லாமே ஏதோ ஒரு 'பெல்ட்' என்று தானே இன்றுவரை அடையாளப்படுத்தப்படுகின்றது. பாமக அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே 'ஏமாற்றுக் காதல்' பற்றி சொல்லியிருந்தனரே. திருமண வயதை 21 ஆக கூட்டுவோம் என்றது அது. அது தெட்டத் தெளிவாக பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை தானே. ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியும். இது எங்கே மாறுது. எங்கேயும், எதுவும் மாறவில்லையே. நாதகவும் இதில் எதையும் மாற்றவில்லையே. மாற்ற முயலவும் இல்லையே. நீட் சோதனையால் அனித்தா முதலாவதாக இறந்த பின், நாதக போராட்டத்திற்கு போகவில்லையே. விசிகவும், கம்யூனிஸ்டுகளும் தானே முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். காரணம் என்னவென்று ரஞ்சித் ஒரு தடவை சொல்லியும் இருக்கின்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் முதலில் முன்னுக்கு நின்றது வைகோ. நாதக அங்கே ஆரம்பத்தில் போகவில்லை. இன்றும் இதுவே தான் நிலைமை. தொல்.திருமாவும், சீமானும், ரஞ்சித்தும் ஒரே மேடையில், ஒரே போராட்டத்தில் அமர்வார்களா, இல்லை தானே. எல்லோரையும் உள்வாங்காமல் அதை எப்படி உண்மையான தேசியம் என்று நாங்கள் சொல்ல முடியும்? எங்களிற்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்கள் எல்லோரையும் உள்வாங்கி இருந்தார். அதனால் தானே அவரை தேசிய தலைவர் என்று நாங்கள் சொன்னோம். சமீப காலங்களில் தமிழக அரசியலில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் என்றால் அது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரே. விஜய்காந்திற்கும் எந்த அடையாளமும் இருக்கவில்லை. நாதகவோ, சீமான் அவர்களோ இந்த வரிசையில் இல்லை. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முன்னரை விட அதிக வாக்குகளை அவர் பெறுவார் என்பது வெறும் ஊகம் என்பது என் அபிப்பிராயம்.2 points- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
பொதுவேட்பாளரோ தனி வேட்பாளரோ சிங்கள வேட்பாளரோ யாராலும் அரசியல் பிரச்சினைக்கு ஒரு ஆணியும் புடுங்கப்போவதில்லை.. அஞ்சு சதத்துக்கு பிரஜோசனுமும் இல்லை.. ஆனால் புலத்தில் இருப்பவர்களுக்கு, நாளைக்கு உலையில அரிசி கொதிக்கவேணும், பொடியனுக்கு அரசாங்கவேலை ஒண்டு எடுக்கோனும், ஏதாவது உதவித்திட்டம் வருமோ, இந்தமாதம் வயல் தோட்டம் பயிர் அழிவுக்கு காசு தருவாங்களோ, சமூர்த்தி ஏதும் வருமோ, விதானை வேலைக்கு எடுப்பாங்களோ, எலெக்ரிக் போட்டில எடுப்பாங்களோ…?? இப்படி எந்த சிக்கலும் இல்லாததால் உலக நாடுகளுக்கு கெத்துக்காட்ட பொது வேட்பாளரை ஆதரிக்கவேணும் எண்டு ஃபன்னெடுப்பாங்கள்.. ஊரில் இருப்பவர்கள் வெல்லக்கூடிய அதேவேளை நமக்கும் மேல உள்ள அன்றாட பிரச்சினைக்கு தீர்வு ஏதும் கிடைக்கும் என்ற நோக்கில் சிந்தித்து பிரதான கட்சியின் வேட்பாளர்கள் யாருக்காவது போடத்தான் சான்ஸ் அதிகம்.. ஆனால் ஆர் வந்தாலும் அரசியல் தீர்வு எண்ட விடயத்தில் அஞ்சு சதத்துக்கும் பிரயோசனம் இல்ல.. பொறுத்திருந்து பாப்பம்..2 points- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
சர்வதேசத்திற்கு ஈழத்தமிழர்கள் சொல்லும் செய்தி உறுதியானதாக இருக்க வேண்டும் :அதைச் சொல்வதற்கான நேரம் ஜனாதிபதி தேர்தல் தான் பொது வேட்பாளர் என்பது காலத்தின் கட்டாயம்: சுமந்திரன் எதையும் கூறலாம்: ஆனாலும் முடிவு மக்களின் கைகளில் உள்ளது: மக்கள் நம்பும் அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தால் சுமந்திரன் இருக்கும் இடம் தெரியாமல் செல்லும் காலம் வரும்: கை மாறும் பெட்டிகள் கனமானதாக இருக்கும்நேரம் எல்லாம் சுமந்திரன் இப்படி ஊழையிடுவது வழமை.2 points- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
நன்றி நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் அதாவது இலங்கையிடம் எதுவும் இல்லை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இருந்தால் தானே ஒப்புக் கொள்ள முடியும் நடந்து முடிந்த போர் பற்றி சரி பிழை கதைப்பது பிரயோஜனம் அற்றது புலிகள் சரணடைந்தால்,.சுட்டுக்கொல்லப்பட்டிருப்பார்கள். உதாரணம்,நடேசன். புலிதேவன்,...... மக்களை போகும்… படி விட்டால்,.இராணுவம் புலிகள் கொல்லப்படுவது இலகுவானது மேலே சொன்ன படி நடந்து முடிந்து இருந்தால் ....உங்கள் கருத்துகள் இப்போது எழுதுவதற்கு நேர்யெதிர் மாறாக இருக்கும் இலங்கையிடம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லையா?? நம்ம அமைச்சர் டக்ளஸ் அப்படி தான் கிடக்கிறார். ஆனால் குழந்தை தான் உருவாவில்லை 🤣😂 யாரிடம் பிழை உண்டு” டக்ளஸ் இடமா?? அல்லது அரசாங்கத்திடமா?? மருத்துவரிடம் காட்டி பார்க்கலாம் 🤪2 points- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள். தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள். இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு! நன்றி கெட்ட உலகம் இது.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
25வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டமிழந்தாலும், சூரியகுமாரின் 50 ஓட்டங்களின் உதவியுடன் இறுதியில் 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 25 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 42 2 பிரபா USA 40 3 ரசோதரன் 40 4 ஈழப்பிரியன் 38 5 சுவி 38 6 நந்தன் 38 7 வாதவூரான் 36 8 ஏராளன் 36 9 குமாரசாமி 34 10 தமிழ் சிறி 34 11 கிருபன் 34 12 கந்தப்பு 34 13 வாத்தியார் 34 14 எப்போதும் தமிழன் 34 15 நீர்வேலியான் 34 16 வீரப் பையன்26 32 17 நிலாமதி 32 18 தியா 32 19 புலவர் 32 20 P.S.பிரபா 32 21 நுணாவிலான் 32 22 அஹஸ்தியன் 32 23 கல்யாணி 322 points- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தெய்வமே ! கிருபன், நிழலி , கோஷான், சிறியரை உச்சியில் ஏற்றிவிட்ட நீங்கள் ஒரு நிமிஷம் யோசித்து நம்ம ஈழப்பிரியனை ஒரு நாள் முதல்வராகவேனும் உச்சியில் ஏற்றி அழகு பார்த்திருக்க எண்ணம் வரவில்லையா.......! 😢2 points- யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்று நாங்கள் எழுதலாம் ஆனால் இறந்தவருக்கு அதுதான் தீர்வாகி உள்ளது. அவரால் பிரச்சனையை எதிர்கொள்ள முடியவில்லை.. ஒருவருக்கும் அவரது பிரச்சனையோ அல்லது அவரது விருப்பங்களோ தெரியவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக கதைத்து தீர்வுகளை எடுக்கும் நிலை எங்களது சமூகத்தில் இல்லை. மற்றவர்கள் என்ன கூறுவார்களோ என்ற நிலையில்தான்/பயத்தில்தான் அனேகமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 46 முதலமைச்சர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள். 2 ரசோதரன் 46 இப்ப தான் துணை முதல்வரா வந்திருக்கிறீங்க @ரசோதரன்1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னை நம்பி வந்த மூன்று பேர நான் கை விட வில்லை என்னை விட அவர்களுக்கு கூடுதல் புள்ளி கிடைக்கும் அதே எனக்கு போதும் ஈழப்பிரியன் அண்ணா நான் அவர்களை விட குறைந்தது 8புள்ளிக்கு கீழ நிப்பேன் அவர்கள் மேல நிப்பினம் இந்தியா கைகொடுத்தால் இன்னும் கூடுதல் புள்ளி கிடைக்கும் பாப்போம் பினல் அன்று யாழ் களத்தில் கத்தி பொல்லுகளுடன் யாழ்களமே அதிரும் இந்தியா பினலுக்கு வந்தால் ஹா ஹா லொல்......................................1 point- "வெள்ளந்தி மனிதர்கள்"
1 point"வெள்ளந்தி மனிதர்கள்" கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது! நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, பேரூந்தில் செல்கிறேன். எனக்கு பக்கத்திலும் , பின்னாலும் ஒரு தாயும் இரு மகளும் அவர்களின் பாட்டி, தாத்தாவுடன் அதே கிராமத்துக்கு பயணம் செய்தார்கள். எனக்கு பக்கத்தில் தாத்தாவும் பாட்டியும் , பின்னால் மற்ற மூவரும் வந்து அமர்ந்தார்கள். அவர்களின் கதைகளில் இருந்து அவர்கள் எல்லோருமே நெடுங்காலமாக பட்டண வாசிகள் என்று தெரிய வந்தது. இது நீண்ட தூர பயணம் என்பதால், நான் அவர்களின் தாத்தா பாட்டிக்கு ஒரு அறிமுகத்துக்காக, 'வணக்கம்' கூறினேன், பின் திருப்பி தாயையும் இரு மகளையும் பார்த்தேன், அக்காவும் தங்கையும் தமக்குள் எதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கும் 'வணக்கம்' என்றேன். அவர்களின் தாத்தா ஆங்கிலத்தில், 'தம்பி நீங்க என்ன செய்கிறீர்கள், உங்க ஊர் அந்த குக்கிராமமா?' என்று கேட்டார், நான் மறுமொழி சொல்ல முன்பே தாம் பட்டணத்திலேயே பிறந்து வளர்ந்ததாகவும், தாமுண்டு தமது வாழ்வுண்டு என்று எல்லா வசதிகளுடனும் வாழ்வதாக கதையை ஆரம்பித்தார். நான் தமிழில், 'நான் ஒரு பொறியியலாளர், அதே பட்டணத்தில் தான் பிறந்து வளர்ந்தவன், இப்ப ஒரு தற்காலிக இடமாற்றத்தில் சில மாதங்களுக்கு அந்த கிராமத்துக்கு போகிறேன். எனக்கு அரச விடுதியும் ஒரு வாகனமும் ஒதுக்கி உள்ளார்கள். ஆகவே எனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது என்றாலும், பிரச்சனை இருக்காது' என்றேன். அதன் பின் பாட்டி, தாம் அங்கு ஒரு கல்யாண வீட்டுக்கு போவதாகவும், அவர்களை முன்பு ஒருமுறை பட்டணத்தில் தமது கடையில் உடுப்புக்கள் வாங்கும் பொழுது சந்தித்ததாகவும், அதன் பின் நண்பர்களாகி விட்டார்கள் என்றும், இந்த கல்யாணத்துக்கான உடுப்புகள், நகைகள் எல்லாம் தம்மிடமே வாங்கியதாகவும் பெருமையாக கூறினார். அப்ப தான் அவர்கள் ஒரு பெரும் கடைக்காரர்கள் என்று தெரிய வந்தது. 'வரிகள் எல்லாம் அரசாங்கம் கூட்டி இருக்கிறார்களே, உங்களை பாதிக்கவில்லையா?' என்று தாத்தாவிடம் கேட்டேன். அதற்கு தாத்தா , தனக்கு தெரியாது முகாமையாளரைத்தான் கேட்க வேண்டும் என்றார். 'நீங்க எந்த கட்சிக்கு வாக்கு போட்டீர்கள்?' என்று கதையை தொடங்கி 'தேர்தல் வரப்போகிறது, உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். உங்கள் கோரிக்கை எதாவது உண்டா ?, இந்த வரிகளில் இருந்து தப்பிப்பிழைக்க' என்று முடித்தேன். அப்ப பாட்டி, 'நம்மை மதித்து வாக்கு கேட்கிறார்கள், அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும். நம்மை மதித்து வருகிறார்களே அதுவே போதும். நமக்கு அவர்களாக பார்த்து ஏதாவது செய்வாங்க', 'எமக்கு எம் சாமி உண்டு, அவன் எல்லாம் கவனிப்பான், கைவிடமாடடான்' என்று கூறி, தன் தலையில் இரு குட்டும் குட்டினார். அதற்குள் தாத்தா குறட்டை விட தொடங்கிவிட்டார். அதை பார்த்த பின்னல் இருந்த தாய், 'அந்த பையன் பாவம், நீங்க இருவரும் பின்னல் வாங்க, பிள்ளைகள் முன்னால் போகட்டும்' என்று கூறி அவர்களை இடம் மாற்றினார். இப்ப தான் அவர்களின் இரு மகளையும் முழுமையாக பார்த்தேன். பெரியவளுக்கும் சின்னவளுக்கும் நல்ல வயது வித்தியாசம். சின்னவள் இன்னும் பாடசாலை மாணவி போலவே தெரிந்தது. எனவே பெரியவளை பார்த்து 'ஹலோ' என்றேன். உண்மையில் அவள் மிக அழகாக அமைதியாக இருந்தாள், சின்னவளும் அழகு என்றாலும் இன்னும் சின்னபிள்ளைத்தனம் மாறவில்லை. எதோ அக்காவுடன் குறும்பு செய்து கொண்டு இருந்தாள். நான் மீண்டும் 'வணக்கம்' என்றேன். பதிலுக்கு இருவருமே 'தேங்க்ஸ்' என்றனர். அதன் பின் அக்கா ஒரு புன்சிரிப்புடன், பின்னுக்கு தாயைப் பார்த்துவிட்டு - அவர்கள் மூவரும் அப்பொழுது தூங்கிவிட்டார்கள் - 'ஹாய்' என்றார். 'நீங்க என்ன செய்கிறீர்கள்' என்று கதையை தொடங்கினேன். இப்ப சின்னவளும் அக்காவின் மடியில் தலை சாய்ந்து படுத்துவிட்டார், நானும் அவளும் தான் முழிப்பு. எனக்கு அவளை பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும், கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை தூக்கத்தை தடுத்துவிட்டது. அவளுக்கு எப்படியோ எனக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக இப்ப அவள் மெல்ல மெல்ல தாராளமாக கதைக்க தொடங்கினாள். அதில் பல அப்பாவித்தனத்தையும் நிறைய மூட நம்பிக்கைகளையும் காணக்கூடியதாக இருந்தது. கிராமப்புற மக்கள் என்றால் கள்ளம் கபடமற்றவர்கள். எளிதில் யாரிடமும் ஏமாந்து விடுவார்கள் என்று தமிழ் திரைப்படங்களில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக, பட்டணத்து வாசியான இவள் அதே குணஇயல்பில் இருப்பதைக் கண்டு ஆச்சிரியப் பட்டேன்! சாடிக்கு ஏற்ற மூடி மாதிரி, பாட்டிக்கு ஏற்ற பேத்தி என்று எண்ணினேன். ஆமாம் பாட்டியின் முன்னைய பதில் அப்படித்தான் எண்ண வைத்தது. பழைய கள்ளங் கபடம் இன்னும் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் வெள்ளந்தி மக்கள் கிராமத்தினர் மட்டுமே என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். ஆனால் இந்த நகர்ப்புற குடும்பத்தை பார்த்ததும் அது முற்றிலும் பிழை என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் எங்கும் இருக்கலாம்? அப்படி என்றால் தேவை இல்லாமல் மாற்றத்தை கேட்டு பெற்றுள்ளேன் என்று என்னையே நான் நொந்தேன். பரவாயில்லை, இந்த பயணம் தானே ஒரு அழகிய, ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே பேசும் இவளை அறிமுகப் படுத்தியது என்று சமாதானம் செய்து கொண்டு, மேலும் அவளின் சுவாரஸ்யமான [கவர்ச்சியான] பேச்சுக்களை கேட்க சில தனிப்பட்ட கேள்விகளை கேட்ப்போம் என்று முடிவு எடுத்தேன், அதற்கு சாதகமாக எல்லோரும் உறக்கத்தில் இருப்பதும் துணை புரிந்தது. உங்களுக்கு ஆண் நண்பர் [பாய் பிரின்ட்] உண்டா என்ற கேள்வியுடன் மீண்டும் ஆரம்பித்தேன். அவள் அதெல்லாம் இல்லை என்று கண் மூடிய படியே பதில் சொன்னாள். அப்படி என்றால் எப்படியானவரை காதலிக்க அல்லது கல்யாணம் கட்டிட விருப்பம் என்று தொடர்ந்தேன். அதெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான். படைத்தவனுக்கு படி அளக்க தெரியாதா? என்று என்னை பார்த்து குறும்பாய் சிரித்தாள். உங்களுக்கு என்று ஒரு விருப்பமும் இல்லையாடா என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டேன். என்னை படைத்தவனுக்கு அதெல்லாம் தெரியும் தானே? பின் எதற்க்காக நான் கவலைப்பட வேண்டும் என்று எள்ளிநகை யாடினாள். இவளுடன் கதைப்பதில், நான் தான் இறுதியில் முட்டாள் ஆகிவிடுவேனோ என்று எனக்குத் தோன்றியது. என்றாலும் கடைசியாக, நீங்க திருமணம் செய்த பின், எத்தனை பிள்ளைகள், எப்படி வேண்டும் என்ற திட்டமாவது ஒன்று உங்களிடம் உண்டா என்று கேட்டேன். கொஞ்சம் பின்னுக்கும் , தங்கையையும் இன்னும் எல்லோரும் உறக்கமா என்று பார்த்துவிட்டு, பிள்ளை பெறுவது எம் கையில் இல்லை, எல்லாம் அவன் செயலே! அவன் எதை தருகிறானோ, அதுவே என் விருப்பம் , இதற்கு எல்லாம் திட்டம் எதற்கு என்று என்னைப் பார்த்து கேட்டாள். நான் அதற்குப் பின் தனிப்பட்ட கேள்விகளை நிறுத்திவிட்டேன். அவளும் கொஞ்ச நேரத்தால் கண் அயர்ந்துவிட்டாள். எனக்கு நித்திரை வரவில்லை அவளின் முகத்தை, அழகை ரசித்தபடியே மிகுதி பயணத்தை தொடர்ந்தேன். "சயனகோலம் அவளின் அழகு கோலம் சரிந்த படுக்கையில் தேவதை கோலம் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகிறது அவளின் பார்வை!" "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில் சற்று நானும் என்னை மறந்தேன்!" "சக்கர தோடு கழுத்தை தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கை கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுது இள நகை!" "சகுனம் பார்த்தே காரியம் செய்வாளாம் சஞ்சலம் தந்து என்னை வருத்துகிறாள் சகிதமாய் குடும்பம் சூழ பயணிக்கிறாள் சந்தோசம் பொங்க நானும் ரசிக்கிறேன்! " "சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சச்சரவு தரா அவள் நடத்தை சம்மதம் கேட்க இதயம் ஏங்குது!" "சதாசிவன் மகிழ்ந்த நடன மகள் சரஸ்வதி ரசித்த இசை மகள் சந்திக்க எனக்கும் சந்தர்ப்பம் வந்ததே சத்த மின்றி அவள் ஒதுங்குகிறாளே! " அந்த அவளின் முகம் எனக்கு பல கதைகள் சொல்லிக்கொண்டு இருந்தது மட்டும் அல்ல, கிராமத்தினர் மட்டுமே வெள்ளந்தியாக இருப்பர் என்ற கதாசிரியர்கள், திரைப்பட ஆசிரியர்களின் சுவை தரும் எண்ணங்களுக்கு ஆப்பு வைப்பது போல இருந்தது. என்னை அறியாமலே அவள் மேல் ஒரு இரக்கமும் அதே நேரம் காதலும் இருந்தது. அவள் தன் பெயர் சயந்தி என்று, தொடக்கத்தில் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குது. சயந்தி என்றால் இந்திரன் மகள் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது. அவள் உறங்கி இப்ப ஒரு மணித்தியாலம் இருக்கும். நான் மீண்டும் அவள் முகத்தை பார்த்தேன். அவள் மெல்ல கண்விழித்தது தெரிந்தது, 'ம்ம் நல்ல நித்திரை ஆக்கும்' என்று கதையை ஆரம்பித்தேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கண் வெட்டாமல் என்னையே , பாத்தாள், பின் மெல்ல குனிந்து 'ஐ லவ் யு' என்று சொன்னாள். எனக்கு ஒரே ஆச்சரியம், என்ன நடந்தது என்று வியப்பில் இருக்கும் பொழுதே, 'ஆண்டவன் உறக்கத்தில் வந்து, நீங்க தான் இனி என் வருங்கால கணவன்' என்று சொல்லிவிட்டு போனார் என்று ஒரு போடு போட்டாள். எனக்கு உள்ளுக்குள் விருப்பம் இருந்தாலும், வெளியில் அதைக் காட்டவில்லை. எல்லோரும் உறக்கத்தில் இருப்பதால், பட் என்று கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் அப்படியே மலைத்துப் போய் இருந்தாள்! மீண்டும் அவள் என் கண்ணை உற்றுப் பார்த்தாள், எனக்கு நல்ல சந்தோசம், நீங்களும் ஆம் என்பதால் தானே முத்தம் தந்தீர்கள் என்று கொஞ்சம் வெட்கத்துடன் தலை குனிந்து சொன்னாள். நான் இல்லை, என் கனவில் அப்படி ஆண்டவன் சொல்லவில்லை, ஆக முத்தம் கொடு என்று மட்டுமே சொன்னார் என்று ஒரு பொய் கூறினேன். ஆண்டவன் அப்படி செய்யார். எனக்கு நம்பிக்கை உண்டு, நீங்க பொய் சொல்லுகிறீர்கள் என்று கொஞ்சம் கோபத்துடன் கண்ணீர் துளி ஒன்று இரண்டு விழ, என்னைப் பார்த்தபடி சொன்னார். நான் அப்படி வந்து சொன்னால் சொல்கிறேன் என்று சொல்லவும் சின்னவள் உறக்கத்தில் இருந்து எழும்பவும் சரியாக இருந்தது. அவள் கொஞ்ச நேரம் என்னையே பார்த்தபடி இருந்தாள். அவள் கண் மௌனத்தில் பல கேள்விகள் என்னைக் கேட்டுக் கொண்டு இருந்தன. பின் ஒரு சிறுதாளில் தன் தொலை பேசி இலக்கத்தை எழுதி 'மூன்று நாட்களுக்குள் சொல்லவேண்டும், எனக்கு வந்த ஆண்டவன் கட்டாயம் உங்களுக்கும் வருவார். சொல்லுவார். முத்தம் கொடு என்று ஆண்டவன் சொன்னது, நான் இனி உங்களுடையவளே என்பதால் தானே? ஆண்டவன் என்றும் பிழைவிடார் , காத்து இருப்பேன். மறுமொழி இல்லை என்றால், நான் இனி இப்படியே காலம் கழிப்பேன், இது சத்தியம்' என்று அதில் இருந்தது. அவள் எழுதியதை வாசித்து முடிக்கவும், பேரூந்து அந்த கிராமத்து பேரூந்து தரிப்பிடத்துக்கு வரவும் சரியாக இருந்தது. அவள் என்னைத் திருப்பி கூட பார்க்கவில்லை, சின்னவளும் மற்றவர்களும் கை அசைத்து, மீண்டும் சந்திப்போம் என்று இறங்கி போனார்கள். நான் அங்கிருந்து வாடகை மோட்டார் வண்டியில், எனக்கு என தரப்பட்ட விடுதிக்கும் போனேன். என்றாலும் என்னால் அவளின் அந்த கடைசி நேர வாடிய முகத்தை மறக்க முடியவில்லை. அவள் தந்த தொலைபேசி இலக்கத்தை திருப்ப திருப்ப பார்த்தேன். பாவம் அவள் என்ற நினைப்புத்தான் மனதில் விடாமல் தோன்றிக்கொண்டு இருந்தது. நான் புது வேலையை பாரம் எடுத்து, அதில் மும்மரமாக போனதால் அவளை ஓரளவு மறந்தே விட்டேன். மூன்றாம் நாள் , நான் வேலை முடித்து, அருகில் இருந்த பொது விடுதியில், கொஞ்சம் களைப்பு ஆற பீர் [beer] அருந்தும் பொழுது, அங்கு சில சோடிகள் வயலில் ஒன்றாக மகிழ்வாக வேலை முடித்துக் கொண்டு வரம்பில் இருந்து கதைப்பதை பார்க்கும் பொழுது தான் அவளின் ஞாபகம் மீண்டும் வந்தது. ஏன் நீ அவளுக்கு அவசரப்பட்டு முத்தம் கொடுத்தாய்? என்று உள்மனம் என்னைத் திட்டுவது போல இருந்தது. நேரத்தை பார்த்தேன் ஐந்து மணி ஆகிறது. அவள் அன்று ஆறுமணி அளவில், மூன்று நாளுக்கு முன் தொலை பேசி இலக்கம் குறித்த தாள் தந்தது ஞாபகம் வந்தது. இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள் நான் விடை கொடுக்க வேண்டும். உடனே என் தொலை பேசியில், அவள் தந்த இலக்கத்துக்கு அழைப்பு விட்டேன். அது ஒலித்துக்கொண்டு இருந்தது, ஆனால் அவளோ அல்லது யாரோ எடுக்கவில்லை எனக்கு ஒன்றும் புரியவில்லை, மீண்டும் மீண்டும் அழைப்புவிட்டேன். கடைசியாக சின்னவள் எடுத்து யார் என்றார். நான் பேரூந்தில் சந்தித்த அண்ணா, அக்கா எங்கே என்றேன் ?. சின்னவள் அக்கா சாமி கும்பிடுகிறார். இன்று எனோ சில மணித்தியாளமாக சாமி அறையிலேயே இருக்கிறார் என்றார். நான் விறைத்தே போய்விட்டேன். நான் அதில் 'சாமி வந்தார். சம்மதம் சொல்ல சொன்னார்' என்று சிறு செய்தி அனுப்பி அக்காவிடம் கொண்டுபோய் உடன் கொடுக்கும் படி கூறினேன். அவர் ஆம் கட்டாயம் என்றார். சிலவேளை பொய் ஒருவருக்கு சந்தோசம் கொடுக்கும் என்றால் சொல்லலாம் என்று நினைக்கிறன். இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஆனால் அதன் பின்பும் ஒரு பதிலும் அவளிடம் இருந்து வரவில்லை. இன்னும் ஒரு அழைப்பு விடுவதா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. நான் இனி நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு, இரவு சாப்பாடு சாப்பிட தொடங்கினேன். மணி பத்தாகி விட்டது. நான் சாப்பிட்டு விட்டு உறங்கிவிடேன். அடுத்த நாள் வழமை போல வேலைக்கு போக ஆயுத்தமாகிக்கொண்டு இருந்தேன், அப்பொழுது என் தொலை பேசி விடாமல் அலறத் தொடங்கியது. எடுத்துக் பார்த்தேன். அது அவள் தான். நான் எடுத்து 'ஹாய் சயந்தி' என்று சொல்லவும் அவள் 'ஐ லவ் யு' சொல்லவும் சரியாக இருந்தது. 'ஏன் நேற்று பேசவில்லை?' என்று என் அவாவை கேள்வியாக கேட்டேன் . அவள் ஒரு புன்முறுவலுடன் , 'நான் நல்ல நேரத்துக்கு காத்திருந்தேன்' என்று மகிழ்வாக சொன்னார். நானும் உடன் 'ஐ லவ் யு' என்றேன். அவளின் அழகுடன் அவளின் வெள்ளந்தியான பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. மெத்தப் படித்த குடும்பம் தான். அவளின் பேச்சில் உண்மை இருந்தது. அதனால் கள்ளம் கபடம் அங்கு காணவில்லை. இப்போது படிக்காதவர்கள் கூட வெள்ளந்தி மனிதர்கள் என்று என் முடிவை மாற்றவேண்டி இருந்தது? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அருமையான கட்டுரை தில்லை அண்ணா.. என் மனதில் இருந்ததை கூட்டிசேர்த்து எழுத தவித்துக்கொண்டிருந்ததை ஒரு அருவிபோல கொட்டி இருக்கிறீர்கள்..1 point- "வெள்ளந்தி மனிதர்கள்"
1 pointவெள்ளந்தி மனிதர்கள் எங்கும் இருக்கலாம். பேரூந்துக் காதல் கதைக்கு நன்றி ஐயா.1 point- பொதுச்சுடர் - தெய்வீகன்
1 pointபொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். எனக்கு முன்னும் பின்னுமாக தடித்த கடவுச்சீட்டுக்கள் வேகமாக ஓடியபடியிருந்தன. என்னை முந்திக்கொண்டும் இடித்துத் தள்ளிக்கொண்டும் சில கடவுச்சீட்டுக்கள் பறந்தன. அவர்களது கைகளிலுள்ள தள்ளுவண்டிகள் குட்டி விமானங்கள் போல சிலிக்கான் தரையில் வழுக்கியபடி சென்றன. நான் பரபரக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக முட்டிமோதிக்கொள்ளவும் விரும்பவில்லை. எல்லா திசைகளிலும் பார்த்துவிட்டு, என்னைப்போல அவசரப்படாத அப்பாவிகள் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒருவனாக போய் சேர்ந்து கொண்டேன். எனது தோளில் ஒற்றைப்பை. தள்ளி வந்த வண்டிலில் ஒரே ஒரு உடுப்புப்பெட்டி. அவ்வளவுதான். அதிக சோதனைகள் இல்லை. நாய்கூட என்னை கணக்கெடுக்கவில்லை. வெளியில் வந்து “மெல்பேர்ன் வரவேற்கிறது” என்ற மின்மினிப்பலகையை பார்ப்பதற்கு முன்னரே, தயானி பெருங்கூட்டத்துக்குள் நின்று என் பெயர் சொல்லிக் கூவினாள். அவளைப்பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கியதில் முன்னே சென்று கொண்டிருந்தவரின் கால்களில் வண்டியால் இடித்துவிட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் எனது முதலாவது வன்முறைச்சம்பவம் இனிதே நடந்தேறியது. உடனடியாவே மன்னிப்பைக்கேட்டு சிரித்து சமன் செய்தேன். தயானி கையில் பூங்கொத்தோடு சிரித்தபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். திருமணமான பதினொரு மாதங்களில் ஒரு சுற்று பெருந்திருந்தாள். அணைத்து முடியும்வரைக்கும் தயானியின் அப்பா வைத்தீஸ்வரன் சிரித்தபடி காத்திருந்தார். இன்னும் நால்வரும்கூட அவருடன் சிரித்துக்கொண்டே நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்தி, கைகொடுத்து “ஹலோ” சொன்ன பிறகு, தயானி அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள். அனைவரும் அவளது நெருங்கிய உறவினர்கள் என்பதுதான் பெருமகிழ்வின் சாராம்சம். வைத்தீஸ்வரன் தனது அகன்ற அதிகாரம் நிறைந்த தொப்பையோடு கார் தரிப்பிடத்தை நோக்கி முன்னே நடந்தார். எல்லோரும் அவரைத் தொடர்ந்தோம். தயானி என் கைகளை விடவில்லை. எனது ஒற்றைப்பையையும் உடுப்புப்பெட்டியையும் தூக்கிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் அவளது உறவினர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனால், தயானி என்னை தகப்பனுக்கு பின்னால் இழுத்துச் சென்று கொண்டிருந்ததால் திரும்பிப் பார்க்கவும் முடியவில்லை. அவளது உடல் முழுவதும் பிரகாசித்திருந்த குதூகலம் விரல்களில் சுடர் விட்டபடியிருந்தது. புத்தம் புதிய டொயாட்டா “க்ளுகர்” வாளிப்பான அதிவேக நெடுஞ்சாலையில் சத்தமின்றி பறந்து கொண்டிருந்தது. மெல்பேர்ன் ‘டலமறீன்’ விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் பகல் நேரப்பொழுதென்ற காரணத்தினால், விடுமுறை நாளென்ற போதும் சீரான போக்குவரத்து வீதியில் தெரிந்தது. எனது பெட்டியை தள்ளிக்கொண்டு வந்த தயானியின் உறவினர் இப்போது வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். தயானியின் அப்பா அருகிலிருந்தார். மீதி மூவரும் எங்களுக்கு முன்பாக இருந்தார்கள். நானும் தயானியும் வாகனத்தின் ஆகப்பின்னாலிருந்த இருக்கையில் சொகுசாக சரிந்திருந்தோம். வாகனத்தின் நடுவிலிருந்த சிறிய கண்ணாடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மஞ்சள்நிற பிள்ளையார் எல்லோரையும் பார்த்தபடியிருந்தார். அவருக்கு கீழிருந்த தொடுதிரை வானொலிக்கு சற்று மேலாக காணப்பட்ட பகுதி திருநீறு – சந்தனம் – குங்குமம் அனைத்தும் குழைத்து பூசி மெழுகப்பட்டிருந்தது. அப்போது, பிள்ளையார் உட்பட அனைவரும் அடைகாத்துக் கொண்டிருந்த அமைதியை கிழித்தபடி உரையாடல் தொடங்கியது. “செக்கிங் ஒண்டும் இல்லைத்தானே” – இது வைத்தீஸ்வரன். “பாஸ்போட்டை பாத்திட்டு ஏதாவது முறைச்சவனோ” – இது இன்னொரு உறவினர். “நீர் அவங்கள பாத்து முறைச்சனீரோ” – இது எனது பையை தூக்கிக்கொண்டு வந்தவர். “ஹி ஹி ஹி” – இது அவரோடு வந்த இன்னொரு உறவினர். “பகல் நேரம், அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது” – அப்படித்தானே என்று ஆசனத்துக்கு மேல் விளிம்பினால் தலையை எறிந்து அடுத்த கேள்வியையும் கேட்டுமுடித்தனர். நான் தயானியை பார்த்தேன். அவள் விரல்களால் மெல்லிதாக சொறிந்தாள். “சீ..…ஓம்…” – என்றபடி இரண்டும் குழைந்த பதிலோடு உதடுகளையும் ஈரப்படுத்திக் கொண்டேன். கடைசியாக கேள்விகேட்டவர் முன்னுக்கு திரும்பும்வரைக்கும் நான் அவரைப் பார்த்து சிரித்தது, அவருக்கு திருப்தியாக இருந்திருக்கவேணும். முகத்தில் நல்ல புளுகம் தெரிந்தது. “இவன் றோயிண்ட மருமகன் வரேக்க, அவனை அரை மணித்தியாலம் மறிச்சு விசாரிச்சவங்களாம் என்ன” “யார் ஜெனீட்டாண்ட மருகன்….?” “பின்ன….” “அந்தப்பெடியனும் இயக்கமோ அண்ணே?” “டேய், அவனும் கடைசிநேரத்தோடதானே வெளியில வந்தவன்” “என்ன சொல்லுறியள்….?” “பின்ன….” நான் நினைத்தது போலவே கதை சுழன்றடித்து மீண்டும் என்னிடம் வந்தது. “உமக்கு தெரியுமே, ரெஜியெண்டு…. இயக்கப்பெயர் என்னெண்டு தெரியேல்ல… நல்ல வளர்த்தி… சிவலை….” முதல் பின்னுக்கு திரும்பிய அவரேதான் இப்போதும். கேள்வி முடியும்முதலே நான், “தெரியவில்லை” – என்று உதட்டை பிதுக்கியது அவருக்கு சுத்தமாக திருப்தியில்லை. முகத்தில் வாட்டம் தெரிந்தது. வைத்தீஸ்வரன் இயன்றளவு இந்தக்கதைகளில் ஈடுபடாமல் தெருவைப் பார்த்தபடியிருந்தார். நெடுஞ்சாலை முடிந்து சிறுவீதி வழியாக வாகனம் வேகத்தை குறைத்து ஓடியபடியிருந்தது. ஒளிமரங்களுக்கு அடியில் அவ்வப்போது வரிசையில் நின்றது. அருகில் போகும் வாகனங்களில் பார்வையை படரவிட்டேன். உள்ளே அடர்ந்திருந்த அழுத்ததிற்கு வெளிக்காட்சிகள் வசதியாக இருந்தது. எவ்வளவுதூரம் கடந்து போனாலும் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் பெருந்தெருக்கள், பெய்த மழை போதுமென்று ஓங்கிநிற்கும் நெடுமரங்கள், கத்தரித்துவிட்டதுபோல் தார்சாலை ஓரங்கள், பிள்ளையார் எறும்புகள்போல வரிசையிலோடும் கறுப்பு கார்கள். எதைப் பார்த்தாலும் அழகாகவே தெரிந்தது. அப்போது, அருகில் வந்து நின்ற வாகனத்தின் முன் இருக்கையில் சடைத்த நாயொன்று வெளியில் தலையை நீட்டி என்னைப் பார்த்தது. அதன் தொங்கிய சிவப்பு நாக்கு ஆடியபடியிருந்தது. பளபளக்கும் வெள்ளைமுடி வெயிலில் மினுங்கியது. கண்களில் தவழ்ந்த சுதந்திரமும் தனது எஜமானிற்கு அருகிலிருந்து வருகின்ற குதூகலமும் தன் வாழ்வில் பெற்றுக்கொண்ட பெரும்பேறும்போல அதன் கண்களில் ஒளிர்ந்தது. என்னை புதியதொரு நிலம் தாங்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆறு அறைகளுடன் சடைத்திருந்த மாடி வீடு, நான் பறந்துவந்த விமானமே தரித்து நிற்பதுபோல உணர்வை தந்தது. போய் இறங்கியவுடன் வாசலில் இருந்தே பயங்கர வரவேற்பு. என்னை பார்ப்பதற்கு யார் யாரோவெல்லாம் வந்திருந்தார்கள். உள்ளே சென்றவுடன் கை தந்தார்கள். “களைத்திருப்பீர் என்ன” – என்று கேட்டபடி கட்டியணைத்தார்கள். “அம்மா, அவரைக்கூட்டிக்கொண்டு போவன், குளிச்சிட்டு சாப்பிடுவம்” – என்று தயானியின் தயார் சொல்வதற்கும் அங்கிருந்தவர்கள் அதற்கு ஆமோதிப்பதற்கும் போயிறங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகியிருந்தது. அன்று மாலையே இன்னும் பலர் வரிசைகட்டி வரத்தொடங்கினார்கள். “இப்பதான் வந்தவர்” – என்று தொப்பையை வருடிக்கொண்டு வாசலில் இருந்து ஒவ்வொருத்தவராக அழைத்துவந்த வைத்தீஸ்வரன், பெருமையோடு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நேரம் போகப்போக ஒரு கட்டத்தில், எனக்கு எல்லோர் முகங்களும் ஒரே மாதிரியாகவே தெரிந்தன. முதலில் வந்தவர்களே திரும்ப வருவதுபோலவுமிருந்தது. கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு வந்த வைத்தீஸ்வரனின் சகவயது சொல்லக்கூடிய வயதானவர்தான் அந்தக்கேள்வியை கேட்டார். “அப்ப, நீங்கள் இம்ரான் பாண்டியன் படையணியோ….” – என்று இழுத்தார். அதுவரைக்குமானவர்களின் வருகையும் எனக்கான அறிமுகங்களும் அணைப்புக்களும் எனக்குள் குமிழ்களாக எழுப்பியபடியிருந்த மொத்த சந்தேகத்துக்கும் விடைபோல அந்த கேள்வி அவர் வாயால் வந்து விழுந்தது. கேள்வியோடு என்மீது எய்த அவரது பார்வை எனது கண்களிலேயே குந்தியிருந்தது. போர் நினைவுச்சின்னம் போல உணர்வற்றுக்கிடந்த என்மீது, அவர் மிகுந்த உணர்ச்சியோடு பதிலைத் தேடியபடியிருந்தார். அந்தக்கேள்வியும் அந்தப்பார்வையும் எவ்வளவு ஏமாற்றத்தை – இயலாமையை – தோல்வியை – எரிச்சலை – ஆத்திரத்தை என்னுள் ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு எந்தக்கரிசனையும் தெரியவில்லை. எனக்குள் நெடுநாள் காயமொன்றின் காய்ந்த விளிம்புகள் திடீரென்று வெடித்தது போலிருந்தது. “இல்லை, நான் வேற…” – என்று உதடுகள் தானாக ஏதோ ஒரு பதிலை பிதுக்கி விழுத்தியது. இரவுணவு ஆயத்தமானது. அதற்குப் பிறகும் கூட்டம் கலைய இரண்டு மணிநேரமானது. தூக்கம் விழிகளை சரித்து விழுத்தியபடியிருந்தது. மெல்பேர்னில் விமானம் வந்து தரை தட்டும்போதிருந்த வெறுமை அகன்று, மீண்டும் பாரத்தை உணர்வுபோல மனது கனத்தது. வந்துபோனவர் கேட்ட கேள்வி நெஞ்சை துளையிடுவதுபோல அந்தரமாயிருந்தது. ஆனால், களைப்பு அதைவிட அதிகமாயிருந்தது. படுக்கையில் சாய்ந்ததுதான் தெரியும். நிறைதுயிலில் உறைந்துவிட்டேன். என் மீது பெரும் பாரமொன்று சரிந்ததுபோல உணர்ந்தேன். கண்களை மெல்லத் திறந்தபோது நிச்சயமாக அது கனவில்லை எனத்தெரிந்தது. தனது பருத்த மார்பினை என்மீது வைத்தபடி தயானி, என்னை முத்தமிட்டபடியிருந்தாள். காலை வெளிச்சம் ஒரளவுக்கு அறையினுள்ளேயும் படரத் தொடங்கியிருந்தது. பறவையொலிகள் வெளியே கேட்டன. பிசுபிசுத்த உதடுகளால் கழுத்தில் முத்தமிட்டு உரசியபடி முகத்தை வந்தடைந்தாள். சிக்கெடுக்காத அவள் கேசம் முகத்தில் விழ, அதனை ஆவேசமாக பின்னுக்கு உதறித்தள்ளினாள். அவளோடு கூடுவது இது புதிதில்ல. அவள் வேகமானவள். அது நான் அறியாததும் அல்ல. ஆனால், இப்படிக்கூடுவதுதான் நவீனமாயிருந்தது. இரவுக்கு மாத்திரமான உறவென்று நான் எப்போதும் எண்ணியிருந்ததை இந்த காலைக்கானதாக தயானி வேகமாக வரைந்தபடியிருந்தாள். இதற்காக அவள் காத்திருந்திருக்கிறாள். காலம் அவள் முதுகிலிருந்து அழுத்தி தள்ளியது, அவள் என்னை மெல்ல மெல்ல விழுங்குவதில் தீவிரமாயிருந்தாள். விமானநிலையத்தில் கண்டதிலும் பார்க்க இப்போது இன்னும் பருத்திருந்தாள். அல்லது நான் சிறுத்திருந்தேன். முத்தமிட்டபடி என்னைச்சரித்து மேலே கொண்டுவந்தாள். அது அவளுக்கு இலகுவாக இருந்தது. நான் திமிறுவது போலிருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அதை ரசித்தாள். அவளது கடைவாய் நீரினால் என் முகம் நனைந்திருந்தது. அவளது வாய் நாற்றம் தொடர்ந்து முகத்திலறைந்தபடியிருந்தது. அவளுக்கு நான் உரிமையானவன்தான். ஆனால், இந்தப்புதுநிலத்தின் முதல்காலை எனக்கு இப்படி விடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு வேறு தெரிவிருக்கவில்லை. இரண்டு வாரங்களாக என்னை பார்ப்பதற்காக தொடர்ந்தும் பலர் வந்துபோனார்கள். வைத்தீஸ்வரனின் மாப்பிள்ளை வந்துவிட்டார் என்ற தகவல் கிட்டத்தட்ட மெல்பேர்ன் முழுவதும் பரவியிருந்தது. அன்று தயானி வேலைக்குப் போவதற்கு முன்னர், நான் புதிதாக வேலையொன்றில் சேருவதற்கான உதவியை, தனது நண்பியின் கணவரிடம் கேட்டிருந்ததாக சொல்லியிருந்தாள். அவரது அலுவலகத்தில் என்னை காலையிலேயே கொண்டுபோய் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நான் மெல்பேர்னுக்கு வந்திறங்கிய நாளிலேயே என்னைப்பற்றி கேள்வியுற்றிருந்த அவர், நான் போய் இறங்கியதும் இருகரங்களினால் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். அவர் சேர்ட்டிலிருந்து வந்த வாசத்தை இதுவரை நுகர்ந்ததே இல்லை. ஓடிக்கலோனைவிடவும் நன்றாக இருந்தது. கேள்விகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினார். இறுதிச்சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் வன்னியிலிருந்த தனக்கு தெரிந்த முக்கிய புலி உறுப்பினர்களை தொடர்புகொண்ட போது, தொலைபேசியில் தனக்கு கேட்ட போர் சத்தங்களை பெரிதாக ஒலியெழுப்பி செய்துகாட்டினார். அவை எனக்கு எப்படி கேட்டது என்று கேட்டார். இப்படி பல சந்தேகங்கள் அவருக்கிருந்தன. புலிகளின் பெருந்தளபதிகள் எங்கெங்கெல்லாம் முன்னணி போர் அரண்களை அமைத்திருந்தார்கள் என்று ஒரு ஒற்றையை எடுத்து அதில் ஆள்கூறுகள் குறித்து விளங்கப்படுத்தினார். “எல்லாம் இந்தியாவிண்ட வேலை” – என்று அலுத்துக்கொண்டு ஒற்றையில் ஊன்றிக் குத்தினார். கதையினால் கவலையடைந்துபோன அவரது விரல்களுக்கு இடையிலிருந்த பேனா மெதுவாக சரிந்து ஒற்றையில் விழுந்தது. வெளியில் திடீரென்று மழையொன்று இறங்கியதும் மெல்பேர்ன் வானிலை பற்றிய சிறு விளக்கம் தந்தார். அதில் அவருக்கு எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. அலுவலகத்திற்குள் வெப்பநிலையை சற்று அதிகரித்துவிட்டார். பின்னர், தேனீரை வரவழைத்து தந்தார். “பல காலமாக எல்லோரையும் கேட்டுக்கேட்டு அலுத்துப்போன ஒன்றுதான். வேலை கேட்டு வந்த இடத்தில் கேட்கிறன் என்று மனச்சஞ்சலப்படாதேயுங்கோ. பழசுகளை மறக்கிறது கஸ்டம். அதுவும் பல காலமாக ஒரே இடத்தில இருந்தனியள் எண்டளவில, உங்கட பிரச்சினையளை இஞ்ச இருந்துகொண்டு நாங்கள் புரிஞ்சுகொள்ளயில்ல எண்டு நினைக்காதேங்கோ. அங்க இருக்கிற சனத்தைவிட எங்களுக்கு நல்லாவே தெரியும் ….” – என்று இழுந்துவந்து – “அவர் உயிரோடு இருக்கிறாரோ” – என்றார். அப்போது அவரது தலைமாத்திரம் கழுத்தைவிட்டு மேசையின் அரைவாசிக்கு எனை நோக்கி வந்திருந்தது. அந்தக் கேள்வியை தான் இரகசியமாகத்தான் கேட்பதாகவும் நான் சொல்லப்போகும் பதிலைக்கூட தான் இரகசியமாகவே பேணப்போவதாகவும் தனது மொத்த சரீரத்தாலும் உத்தரவாதம் தந்தார். அப்போது மழை மெதுமெதுவாக குறைந்து வெளித்தாழ்வாரத்தினால் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால், வெளியில் வானம் கறுத்தே கிடந்தது. தீடீரென்று சிறு மின்னல் கீலமொன்று பாளமாக வெளியில் தெரிந்து மறைந்தது. அவருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, “ஊபர்” வாடகைக்கார் ஒன்றை பிடித்து ஏற்றிவிட்டார். போய் வருவதாக நான் தலையசைத்தபோது, அவரது கையசைப்பு மிகவும் தளர்ந்திருந்தது. நேரம் மதியம் தாண்டியிருந்து. பாடசாலை முடிவடைந்த நேர போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலான வீதிகளில் அமைதியான பயணங்களே சாத்தியமாகவிருந்தன. வாகனங்கள் ஊர்ந்தபடியிருந்தன. புதுநிலத்தின் முதல் மழைக்காலத்தை ஆச்சரியத்தோடு ரசிக்கத் தொடங்கினேன். கார் கண்ணாடிகளில் விழுந்து உடையும் மழைத்துளிகளும் நான் முன்பு பார்த்த அழகிய மரங்களின் நீராடலும் என் விழிகளில் புதிய ரேகைகளை வரைந்தன. பாடசாலை சிறுவர்களும் சிறுமிகளும் சிரித்தபடி ஓடிச்சென்று பெற்றோரின் வாகனத்தில் ஏறுவதும் சிலர் தமக்கிடையில் வம்பிழுத்து போலியாக அடித்துக்கொள்வதும் கொஞ்சிக் கொள்வதுமாக வசதியான குறும்புகளோடு வீதியோரங்களில் நின்று கும்மியடிப்பதும் மழையைவிட பரவசத்தை தந்தன. அவர்களது கண்கள் மிகவும் அழகானவை. வண்ணங்கள் நிறைந்த மாபிள்கள்போல அவற்றின் வசீகரம் நான் இதுவரை அறியாத ஒளியால் மிளிர்ந்தன. அந்தக்கண்களுக்கு சிரிக்க தெரிந்திருந்தன. அவர்களது உதடுகள் சிரிக்காத நேரத்திலும் அவர்களது கண்கள் சிரித்தபடியிருந்தன. வெளியில் கண்ட காட்சிகளால் எனக்குள் ஆச்சரியங்கள் பல சுடர்களாய் துள்ளித்துள்ளி எரிந்தன. இறங்கி நின்று நனைந்துவிடலாம் போலிருந்தது. அன்றிரவு என்னையும் தயானியையும் வைத்தீஸ்வரனின் நண்பவர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். வைத்தீஸ்வரனும் மனைவியும் கூடவே வந்திருந்தார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கான விருந்தென்பதால் எங்களது குடும்பத்துக்கு மாத்திரம் மிக எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் என்றெண்ணினேன். விருந்துக்கு எந்த சேர்ட் போடவேண்டும் என்பதைத்தவிர தயானி எதையும் சொல்லவில்லை. ஆனால், அங்கு போய் இறங்கியபோது ஐந்தாறு குடும்பங்களை சேர்ந்த இருபது முப்பது பேர் வீடுமுழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தனர். படலைக்கு வெளியே ஏராளம் கார்கள். உள்ளே பலவர்ண பூங்கொடிகள். அவற்றின் மீது ஒளிச்செடிகள். வீட்டுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் – “சிலிப்பரை வெளியில கழட்டவா” – என்று தயானியை பார்த்து மெதுவாகத்தான் கேட்டேன். அதிர்ந்து போனாள். “அதை ‘தொங்க்ஸ்’ எண்டு சொல்லிப் பழகுங்கோ…” – என்று என்னை அருகில் இழுத்து செவியினுள் அழுத்திச் சொன்னாள். பிறகு, தனது ஷல்வாரை சரிபார்த்துக்கொண்டு உள்ளே நடந்தாள். “தொங்ஸ்…தொங்ஸ்…தொங்ஸ்….” – என்று மனப்பாடம் செய்துகொண்டு உள்ளே நுழைந்த என்னை வழக்கம்போல தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்யத் தொடங்கினார் வைத்தீஸ்வரன். எல்லோரும் என்னை நேரடியாக பார்த்து உரையாடக்கூடிய ஒரு கதிரையில் அமரச்சொன்னார். எனக்கு அருகிலிருந்த மேசையில் பலவகையான போத்தல்கள். அவற்றுக்கு அருகில் பொரித்த – வறுத்த இறைச்சித்துண்டுகள் கறிவேப்பிலைகளுக்குள் விரவிக்கிடந்தன. அவற்றை அவர்கள் கொறித்துக்கொள்ளாத இடைவெளியில், யாராவது ஒருவரிடம் எனக்கான கேள்வி தயாராக இருந்தது. கேள்விகளுக்கு இப்போது நான் பழக்கப்பட்டிருந்தேன். எதை முதலில் கேட்பார்கள், அதைத்தொடர்ந்து எந்தக்கேள்வி முளைக்கும். அது எதில் வந்து முடியும் என்பவற்றையெல்லாம் முழுமையாகத் தெரிந்திருந்தேன். அப்போது அங்கே வந்த தயானி “ஒருக்கா வாறீங்களா” – என்றாள். அந்த அழைப்பு எனக்கு பெரும் விடுதலைக்கான ஒலியாக கேட்டது. பாய்ந்து எழுந்து அவள் பின்னால் ஓடினேன். வீட்டின் நடுவில் அகலமான மரவேலைப்பாடுகளுடைய கதிரைகளில் ஒருதொகை பெண்கள் வட்டமாக புதைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெளியிலிருப்பவர்களின் துணையினர் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஒவ்வொருவரது கையிலும் ஏதோ ஒரு நொறுக்குத்தீனியிருந்தது. “வாரும் வாரும்…வெல்கம் டு மெல்பேர்ன்” – என்று ஒரு பெண்மணி உதட்டுச்சாயம் வெடிக்க சிரித்தபடி அழைத்தார். “உமக்கு வயிற்றிலையா காயம் பட்டது. தயானி சொன்னா, காட்டும் பாப்பம்” – என்று இன்னொரு பெண்மணி சொல்லவும், அவர் கேட்டு முடிப்பதற்குள், தயானி எனது சேர்ட்டை முக்கால்வாசியை கழற்றிக் கொண்டிருந்தாள். மின்னல் ஊர்ந்ததுபோல எனக்கு உடம்பு ஒருகணம் உதறியது. நான் இப்போது என்ன செய்வது, தயானி ஏற்கனவே களையத்தொடங்கிய சேர்ட்டை எப்படித் தடுப்பது? தடுக்கலாமா? காதுகள் சூடாகின. உதடுகள் இறுகிவிட்டன. எச்சிலை விழுங்க முயற்சித்தபோது அது தொண்டைக்குழியினில் இறங்கவில்லை. தயானி முழுதாகவே சேர்ட்டைக் கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு, எனது இடப்பக்க வயிற்றிலிருக்கும் நீண்ட காயத்தை கேள்விகேட்ட பெண்ணுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். அத்தனை பெண்களும் தங்கள் கழுத்துகளை என் வயிற்றை நோக்கி நீட்டி உற்றுப் பார்த்தார்கள். சிறுவர் – சிறுமிகளும்கூட அங்கே ஓடிவந்தனர். தங்கள் மாபிள் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். போதையிலிருந்த வைத்தீஸ்வரனின் நண்பர்களும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை, கோப்பைகளுடன் அங்கு விரைந்து வந்தார்கள். நானும் என் காயமும் நட்டவடுவில் எந்த உணர்ச்சியுமின்றி நின்று கொண்டிருந்தோம். அந்தக்காயம் ஏன் எனக்கு மரணத்தை தரவில்லை என்ற கோபம் முதன்முதலாக நெஞ்சில் வெடித்துப் பாய்ந்தது. எப்போது எனது சேர்ட்டை நான் மீண்டும் அணிவது என்றுகூட எனக்கு தெரியவில்லை. என்னை தயானி திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அந்த இடத்தில் அரைநிர்வாணமாக நிற்பதற்கு தகுதியானவன் என்ற பரிபூரண நம்பிக்கையோடு, தாயின் தோழிகளுக்கு காய விளக்கம் கொடுப்பதில் ஆர்வத்தோடிருந்தாள். காட்சிநேரம் நிறைவடைந்த பிறகு, சேர்ட்டை திருப்பித் தந்தாள். அந்தக்காயம் வெடித்து இரத்த அருவியாக கீழ் விழுந்து, சகதிக்குள் நின்று கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு. அது என் காயம் மாத்திரமல்ல. ஒரு தேசத்தின் காயம். வலியடங்கியபோதும் நரம்பின் முனைகள் அனைத்திலும் கூடுபற்றாத விளக்குப்போல சுவாலையைக் கொளுத்தி வைத்திருக்கும் காயம். சொல்லப்போனால், இப்போது அது ஒரு அவமானத்தின் தடயம். அந்த துயரத்தின் சாட்சியத்தை என்னையே நான் நிர்வாணமாக்கி நின்று காண்பித்தேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. யாரிடமும் பகிரமுடியாத பெருவனத்தீயின் வெக்கை என்னுள் படர்ந்து படர்ந்து புகைந்தது. அழுது விடலாமா என்று நினைத்தேன். ஆனால், அந்த வீதியோர குழந்தைகளின் சிரிப்பு அப்போது நினைவில் புரையேறியது. அந்த வாழ்வுக்கும் இந்த நிலம் இடம்கொடுக்கும் என்ற நம்பிக்கை, நெஞ்சில் சிறு பிடிப்பைத் தந்தது. அன்றிரவு தூக்கம் வரவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தயானியின் குறட்டை. இரண்டாவது விருந்தில் நானடைந்த நிர்வாணம். தயானியுடன் சிலதை மனம்விட்டுப் பேசவேண்டும். அவளுடன்தான் பேசவேண்டும். ஆனால், பேசலாமா? எப்போது பேசுவது? அப்படிப் பேசக்கூடியவனாக என்னை அவளும், அவளை நானும் உணர்கிறோமா? குறட்டை ஆரோகணித்துக்கொண்டு போனது. பேசிச்செய்கின்ற திருமணத்தில் மாப்பிள்ளைக்கான உரிமைகள் என்ன என்று எந்த தரகரும் பட்டியலிடுவதில்லை. பேசிச்செய்கின்ற வெளிநாட்டு திருமணத்தில் எதை எதையெல்லாம் எப்போது எதிர்பார்க்கலாம் என்றுகூட யாரும் முன்கூட்டியே சொல்லிக் கொடுப்பதில்லை. பேசிச் செய்கின்ற ஒரு முன்னாள் போராளியின் திருமணத்தில் எதைத்தான் உரிமையாக நினைப்பது என்றும் எந்த தரகரும் சொல்லித் தருவதில்லை. இவ்வளவும் ஏன், பேசிச் செய்கின்ற திருமணத்தில் குறட்டையைக்கூட ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. இந்த வீட்டில் நான் இன்னமும் வைத்தீஸ்வரனின் மருமகனாகவும் தயானி அவர்களது மகளாகவும்தான் இருந்து கொண்டிருக்கிறோமே தவிர, நான் என்றொருவன் எங்கே வசிக்கிறேன் என்பது வரவர எனக்கே சந்தேகம் பூசத்தொடங்கிவிட்டது. தயானிக்கு என் மீது அன்பில்லை என்றில்லை. ஆனால், அது ஒரு கணவன் மீதான அன்பாக இன்னும் கனியவில்லை. தனது பெற்றொரின் மருமகனுக்கு கொடுக்கும் மதிப்பாக மாத்திரமே என்னில் படர்ந்திருக்கிறது. கட்டில் மாத்திரம் அவளுக்குள் திடீர் விபத்துக்கள் போல என்னை கணவனாக காட்டிக்கொடுத்து விடுகிறது. வந்தும் வராததுமாக எதிர்பார்ப்புக்களையும் குழப்பங்களையும் நான் அதிகம் மனதில் அடுக்கிக்கொள்வதாக எனக்கு பட்டது. டொய்லெட்டுக்கு போய்வந்து தூங்கிவிடலாம் போலிருந்தது. “அது டொய்லெட் இல்லை, வோஷ்ரூம்” – என்று தயானி இரண்டு நாட்களுக்கு முன்னர் அழுத்தி ச்சொன்னது ‘சுளீர்’ என்று நினைவில் வந்து விழுந்தது. “வோஷ் ரூம்…வோஷ் ரூம்….வோஷ் ரூம்…..” – என்று மனதுக்குள் சொல்லியபடி புரண்டு படுத்து நித்திரையாகிவிட்டேன். வெளியே எட்டிப் பார்த்தேன். மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருபது முப்பதுபேர் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பெட்டிகளுக்குள் நிற்பவர்கள் எல்லோரும் என்னைப் போலவே உள்ளாடைகள் மாத்திரம் அணிந்திருக்கிறார்கள். வரிசையில் மண்டபத்திற்குள் வருகின்றவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் நின்று எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். மண்டபத்துக்குள் வருபவர்களுக்கான வரிசையை, எனக்கு வேலை தருவதற்கென்று அழைத்துப் பேசியவர்தான் ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார். எங்களை பார்ப்பவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசுகிறார்கள். எனக்கு அருகிலிருந்த பெட்டியில் நின்று கொண்டிருந்த பெண்போராளிக்கு முன்பாக வரிசை நகராமல் நின்றுவிடுகிறது. அவளது வலது தொடையில் கிழிந்திருக்கும் நீண்ட காயத்தழும்பை வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்கள். குனிந்து கொள்ள இயலாத இறுக்கமான அந்தக் கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தன் உடலை மறைத்துக்கொள்ள முடியாமல் ஒரு புழுபோல நெளிகிறாள். அப்போது குரல்வளை அறுக்கப்பட்ட பலமான மிருகமொன்றின் கடைசியொலிபோல பெருஞ்சத்தமொன்று மண்டபத்தின் எல்லா சுவர்களிலும் மோதித் தெறிக்கிறது. வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருகணம் அச்சத்தில் உடல் அதிர்கிறார்கள். எனக்கு மிகத்தொலைவிலுள்ள பெட்டியில் நின்று கொண்டிருந்தவன் கண்ணாடியில் தனது தலையினால் அடித்து அடித்து குழறுகிறான். அவன் எழுப்பிய சத்தத்தினால் கண்ணாடிப்பெட்டியில் உட்பக்கமாக புகார் படர்ந்திருக்கிறது. அவன் தன் உள்ளாடையுடன் சிறுநீர் கழித்துவிட்டிருந்தான். ஆட்கள் அதிகம் உள்ளே வந்து கொண்டிருப்பதால் பெட்டியை இப்போதைக்கு திறக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அவனது சத்தம் தொடர்ந்து மண்டபத்தை நிறைத்து அதிர்ந்து கொண்டிருக்கிறது. வரிசையில் நின்றவர்கள் அனைவரும் அவனை தங்கள் தொலைபேசியினால் படம் பிடிக்கிறார்கள். அப்போது நான் பலம் திரட்டி இடித்த எனது கண்ணாடிப்பெட்டி என்னோடு சேர்ந்து நிலத்தில் சரிந்து தெறிக்கிறது. குழறித் துடித்தவனின் கண்ணாடிப்பெட்டியை நோக்கி நான் ஓடுகிறேன். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் சிதறியோடுகிறார்கள். நெற்றி வெடித்து வழிந்த இரத்த வாசம் எனக்குள் பரவி தலை சுற்றுகிறது. வாந்தியெடுப்பதற்கு துள்ளியெழுகிறேன். வேகமாக மூச்சு வாங்கியபடியிருந்தது. உடல் வியர்த்திருந்தது. தயானியின் குறட்டையொலி சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. டொய்லெட்டுக்கு போய்வந்து படுத்தேன். காலையில் தயானி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தாள். வைத்தீஸ்வரனும் மனைவியும் வேறேதோ வேலைக்காக வெளியில் போயிருந்தார்கள். இறால் போட்ட முருங்கைக்காய் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும் குசினிலியிருப்பதாக தயானியின் அம்மா சொல்லிவிட்டுப் போயிருந்தார். முதல்நாள் கனவு காலையில் ஞாபகம் வரவில்லை. ஆனால், மனம் ஏதோவொரு பாரத்தை உணர்ந்தபடியிருந்தது. எல்லோரும் வெளியில் சென்றபிறகு நினைவிலிருந்து மேலெழுந்துவந்த இரவின் துண்டங்கள், கரிய மகரந்தங்களாக கண்முன்னால் கனவை வரைந்து காட்டியது. மனசுக்கு வெளிச்சம் தேவைப்படுவது போலிருந்தது. வீட்டுப் பூந்தோட்டத்திற்குள் நடக்கப் போனேன். சிவப்பு மஞ்சள் நிற மணிப்பூக்கள் நிறைந்த சாடிகள் வரிசையாக வைக்கப்பட்டு, பாத்தி வெட்டிப்பிரித்த தோட்டத்தின் விளிம்புகள் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தன. அரிந்து வெட்டப்பட்ட புற்கள் அழகாக பதிக்கப்பட்டு, நடுவில் பெண்ணொருத்தி சரிந்த பானையை இடுப்பில் இருத்தியபடி சிறப்பான சிற்பமாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பானைக்குள் நுழைத்துவிடப்பட்டிருந்த குழாயினால் நீர் பாய்ந்து, சிற்பத்துக்கு கீழிருந்த வட்டத்தொட்டிக்குள் விழுந்து கொண்டிருந்துது. பார்த்த இடங்களில் எல்லாம் பெயர் தெரியாத வண்ண வண்ண பூக்கள் காற்றுக்கு குனிந்து நிமிர்ந்தபடியிருந்தன. ‘மணிப்பிளாண்ட்’ போல பசுமையான மரங்கள் வீட்டிற்கு பக்கத்து வேலியோரமாக வரிசையாக வளர்ந்திருந்தன. அதனைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் வரைக்கும் சென்றபோதுதான், அடிவளவில் சடைத்திருந்த கற்பூரவள்ளி கண்களில் பட்டது. அருகில் போவதற்கு முன்னரே அந்த வாசம் நினைவிலே ஓங்கி அறைந்தது. இரண்டு இலைகளை உடைத்தேன். அதே வாசம்! காடுகளில் கண்டால் பாய்ந்து சென்று முறித்து கைகளில் பிழிந்து தேய்த்துக்கொள்ளும் அதே வாசம்! முகத்தை அருகில் கொண்டு செல்வதற்கு முன்னரே, வாசம் இதயம்வரை சென்று உடலெங்கும் பரவியது. எனது நேசத்துக்குரியவற்றையும் இந்த மண் தன்மீது எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டுதானிருக்கிறது என்பதை எண்ணியபோது மனதில் ஒரு நிறைவு பிரவாகித்தது. அடுத்தநாள் பத்து பத்தரை மணி முதல் வீடு ஒரே சத்தமாக இருந்தது. எங்களது அறையில் கொம்ப்யூட்டரில் நான் ட்ரைவிங் சோதனைக்காக படித்துக் கொண்டிருந்தேன். நடைபெறவிருந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வருடா வருடம் பொதுச்சுடரேற்றும் பொறுப்பிலிருந்து வைத்தீஸ்வரன் விலக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்திருந்தது. முன்னறையில் சேகுவரா படத்துக்கு கீழிருந்த தொலைபேசி ஒலித்தபடியேயிருந்தது. வைத்தீஸ்வரன் தனது அறைக்குள் போவதும் வருவதுமாக அலைகழிந்தபடியிருந்தார். ஆஸ்திரேலிய தமிழ் தேசியக்கழகங்களின் சம்மேளன பொறுப்பாளர் இராவணனோடு தொடர்ச்சியாக தொடர்பெடுத்து கேட்டதில், விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப்போரில் இறந்துவிட்டதாக நான் சொன்ன தகவல், மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவின் காதுகளுக்கு பெருஞ்சாட்சியமாக சென்றடைந்ததுதான் வைத்தீஸ்வரனை சடங்கிலிருந்து நீக்கியதற்கு காரணமாக கூறப்பட்டது. விட்டு விட்டுக் கேட்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டதில் சிக்கலின் முழுவடிவம் எனக்கு புரிந்து விட்டது. தயானியை வேலையிலிருந்து வேளைக்கு வரும்படி வைத்தீஸ்வரன் அழைத்திருந்தார். சாப்பிடாமலேயே வயிற்றைத் தடவியபடி முன்னறையில் காத்திருந்தார். தயானியின் கார் சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று கதவை திறந்தார். வாசலில் மகளோடு பேசிய இரகசியம் மேல்வீட்டிலிருந்த எனக்கு அவரது குரலின் வழக்கமான ஏற்ற இறக்கங்களோடு நன்றாகவே கேட்டது. தயானி அழைப்பதற்கு முதலே நான் கீழே சென்றேன். விருந்தினர்கள் வந்தால் வரவேற்று இருத்துகின்ற படகுபோன்ற கதிரையின் நுனியில் இருந்துகொண்டு என்னையும் தயானியையும் எதிரே அமரும்படி சைகை செய்தார் வைத்தீஸ்வரன். தண்ணீர் கொண்டுவருமாறு மனுசிக்கு உத்தரவிட்ட பின்னர் இப்படி தொடங்கினார். “தம்பி, நாங்கள் இந்த நாட்டில மரியாதையோடு வாழுற குடும்பம். எங்கட குடும்பத்துக்கென்று ஒரு பெயர்…. கௌரவம்…. இருக்கு. போராட்டமும் சொந்த மக்களிண்ட வாழ்க்கையும் எங்கட இரத்தத்தில் கலந்தது. தயானி சொன்னவவோ தெரியேல்ல. தயானியிண்ட அம்மாண்ட மச்சான் நாட்டுப்பற்றாளராக வீரமரணமானவர். இப்படி போராட்டத்துக்காக நாங்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமில்ல. “போராட்டத்தைப்பற்றி ஒரு சொல்லு கொச்சையா கதைக்கத் தெரியாத குடும்பம் இது தம்பி” தயானியையையும் தண்ணியோடு வந்த மனுசியையும் ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தார் – “அதுக்காக நீங்கள் செய்த தியாகத்தையும் பட்ட துன்பத்தையும் நான் குறைச்சு சொல்லயில்ல. நீங்கள் அண்டைக்கு வேலை கேட்கப்போன இடத்தில, கதைச்ச தேவையில்லாத விசயம், ஏதேதோ மாதிரி கதைபட்டு, இப்ப அது என்ர மடியில வந்து கை வச்சிருக்குது.” “தயானி நிக்கட்டும், நீங்கள் மாத்திரம் என்னோட வந்து ஒருக்கா நான் சொல்லுறவரிட்ட மன்னிப்பு கேட்டுவிடுங்கோ. மிச்சத்த நான் பாத்துக்கொள்ளுறன்” மனுசி நீட்டிய தண்ணியை அண்ணாந்து தொண்டையில் ஊற்றினார். ஓரிரு துளிகள் வாயினால் வழிந்து வண்டிவரைக்கும் வளைந்தோடியது. தயானி என்னைப் பார்த்தாள். முதல்நாள் அவள் வெட்டச்சொன்ன விரல் நகங்களை வருடியபடி அவளை பார்த்தேன். நான் நகம் வெட்டியதற்கு குறைந்தபட்ச அங்கீகாரமாவது அவளது கண்களில் தெரியும் என்று தேடினேன். பிரம்பு போலிருந்தது அவள் பார்வை. ஒரு உலேகப்பறவை போல எனதுடல் அசையாமலிருந்தது. ஒரு கடவுச்சீட்டும் திருமணமும் எனக்குள் பரிபாலித்த வாழ்வு உள்ளே சுவாசிப்பது எனக்கு மாத்திரம் கேட்டது. போர்நிலத்தில் ஓய்வெடுக்கும் துப்பாக்கியின் மீது அமர்ந்து இறகுலர்த்தி தங்களை அழகு பார்த்த பறவைகள் இவர்கள். தூரத்தில் வேட்டொலி கேட்டாலே பறந்துவிடும் சாவின் பயம் நிறைந்த சம்பிரதாயக்குருவிகள். இன்று இவர்கள் ஓய்வெடுப்பதற்கு துப்பாக்கிகள் இல்லை. துப்பாக்கிகளைச் சுமந்தவர்களின் மீதமர்ந்து குரல் எழுப்பி குதூகலிக்கிறார்கள். அது துப்பாக்கிச் சத்தமாகவே எதிலொலிக்கும் என்று தங்கள் குரல்வளைகளில் ஒப்பனையிட்டுப் பார்க்கிறார்கள். நிலமெங்கும் கந்தக விதைகளைத் தூவிய போரின் ஒப்பாரியைவிட இவர்களின் சிரிப்பொலிகள் பதற வைக்கிறது. ‘டொயாட்டா க்ளுகர்’ மெதுவாக சென்று கொண்டிருந்தது. நான் வைத்தீஸ்வரனின் பக்கத்திலிருந்தேன். காருக்குள்ளேயும் தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்து கொண்டிருந்தன. “நான் அவரோட வந்து கொண்டிருக்கிறன் தம்பி, வாறன்…வாறன்…இன்னும் அரைமணித்தியாலத்தில நான் அங்க நிப்பன்” – என்று தனியான ஒரு அழைப்புக்கு அதிக பணிவோடு பதிலளித்தார். பாடசாலை முடிந்தநேரம். வழக்கம்போல போக்குவரத்து நெரிசலாக இருந்தது. வெளியில் பார்த்தேன். பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சிறுமியர்கள் வரிசையில் நின்று என்னைப் பார்த்து கையசைத்தார்கள். புன்னகைத்தார்கள். மாபிள் கண்கள் சுருங்கத் சிரித்தார்கள். முற்றும் https://www.theivigan.co/post/100111 point- யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
எல்லாரும் மனுசர் தானே ஐயா. முதலில் மனுசர் அதன் பின்பே மருத்துவர். நீங்கள் படித்து ஒரு மருத்துராக பணியாற்றினால் அதன்பிறகும் மனுசர் தானே. இன்னோர் வலைத்தள செய்தியின் பிரகாரம் காதல் திருமணம் சம்மந்தமான நிச்சயமற்ற தன்மையே/குழப்பமே அவர் வாழ்வை முடித்துக்கொள்ள காரணம் என சொல்லப்படுகின்றது. உண்மை பொய் தெரியாது.1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என காட்ட....... என்று சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன், நிழலி............👍1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🧐.......... பார்த்திட்டன் அண்ணை.... யானை சரிந்தால் குதிரை... அடி மட்டத்திற்கு போகமாட்டம் (அந்த துணிவில தானே கம்பை சுத்திறம்.......🤣).1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
புலத்திலுள்ளவர்கள் நிலத்திலுள்ளவர்களுக்குப் பலமாக இருக்கலாமே தவிர, எசமானார்களாய் அல்ல. நிலத்தில் உள்ளவன் போராடினால் ஆதரவு கொடுக்கோணும். இல்லை, மாகாண சபையை ஏற்க விரும்புகிறார்களா? அதற்கும் ஆதரவு கொடுக்கோணும். உது புலத்து முட்டாள்களுக்குப் புரிவதில்லை. அதனால் திட்டித் தீர்க்கிறார்கள். 😏 சர்வதேசத்திற்குப் புதிதாக என்னத்தைச் சொல்லப்போகிறீர்கள்? கந்தையர் இப்போதும் முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். 🤣1 point- சிரிக்கலாம் வாங்க
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த அம்பையர்மார் படு கள்ளர். சின்ன டீமோடுதான் அவர்களின் சண்டித்தனமெல்லாம். ரூல் படி பார்த்தால் சூப்பர் ஓவருக்கு பேட்டிங் செய்ய 6 நிமிடத்திற்குள் வரவேண்டிய பாகிஸ்தான் 9 நிமிடங்களின் பின்தான் வந்தவை. முதல் ஆட்டக்காரருக்கு அப்பவே அவுட் கொடுத்திருக்க வேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... பயந்து பதுங்கித் தான் இருந்தனான்....... ஆனால் என்னுடைய அணி கடைசி ஐந்து ஓவர்களிலும் அடித்த அடி இருக்குதே.... கம்பை திரும்பவும் தூக்கிட்டன்....🤣1 point- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கெட்டாஸ்! செய்த களவை கூட அழகான தமிழில் எழுதி என்னமாதிரி பினையிறார் பாருங்கோ....😂1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இல்லை.அறவே இல்லை. அவருக்கும் சத்திய சோதனையாக பல மாற்றுக்கருத்தாளர்கள் இருந்தார்கள். நான் சொல்ல வருவது என்னவெனில் எல்லோராலும் உள்வாங்கப்படும் தலைவர்கள் உலகில் இல்லவே இல்லை என.....1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி நாளை நமதே 6புள்ளியும் நமதே நாளைக்கு வெஸ்சின்டீசுக்கு சங்கு ஊதுறோம் அதோட அமெரிக்கன் குருப் நாளை யாழில் வந்து கம்பு சுத்த முடியாது அதிலும் நம்ம நகைச்சுவை ( மன்னன் ரசோதரன் ) இப்பவே என்ன செய்யிறது ஏது செய்கிறது என்ர குழப்பத்தில் இருக்கிறார் ) மாப்பிளைய நாளைக்கு இந்த திரியில் வடிவாய் வைச்சு செய்வோம் நியுசிலாந் 🙏🙏🙏🥰🥰🥰1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
கந்தையா அண்ணை, எனக்கு இரண்டு பிள்ளைகள், இங்கிருக்கும் ஓணாண்டி, விசுகு மற்றும் பலருக்கு தெரியும் நான் அவர்களுடன் போடும் கும்மாளம். ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் என நான் நம்பவில்லை. ஓரினச்சேர்க்கையாளர்கள் அவரவருக்கு தெரிந்த முறையில் மகிழ்வாக வாழ்கின்றனர்.1 point- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
பிரபாகரன் தலைவன் என்று சொல்லலாம் ஆனால் அவர் படங்களை வைக்ககூடாது.. ஈழவிடுதலைப்போராட்டம் வடுக்களை சுமந்ததால் யாரும் அதை எடுத்து பேசகுடாது.. ஒன்றுக்கொன்று முரணான ஒரு தெளிவில்லாத கருத்துக்கள்.. விடுதலைப்போராளி சேகுவாரா படாத துயரம் இல்லை போராடாத போராட்டம் இல்லை அதற்காக யாரும் சேகுவாராவை பேசாமல் இருந்ததில்லை படத்தை கூட்டங்களில் வைக்காமல் இருந்ததில்லை.. அடையாளங்களை சுமக்காத அரசியல்வாதிகள் இல்லை.. காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், மாவோ, பெரியார் என்று எல்லோருமே போராடியவர்கள்தான்.. எல்லோர் போராட்டமும் எம்மைபோலவே துயரங்களையும் இழப்புகளையும் உள்ளடக்கியதுதான்.. ஆனாலும் இன்று உலகமெல்லாம் அவர்களை விரும்புவர்களுக்கு அவர்கள் அடையாளமே… வழிகாட்டிகளே.. அவர்கள் படங்களை சின்னங்களை யார் யாரோ உலகின் ஏதோ மூலையில் ஏதோ ஒரு மொழிபேசுபவர்களும் காவுகிறார்கள்.. பிரபாகரனும் அவர் போராட்டமும் புலிகளின் சின்னங்களும் ஆயிரம் நூற்றாண்டுகள் ஆனாலும் அவரை விரும்புவர்களுக்கு அடையாளமே.. அவற்றை அவர்கள் காவத்தான் போகிறார்கள்.. காகங்கள் திட்டி மாடுகள் சாவதில்லை…1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣. சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்ஷன்........😜1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாக்கிஸ்தான் சூப்பர் 8க்கு போகுவில் அயர்லாந் கூட வெற்றி பெறனும் அமெரிக்கா அயர்லாந் கூட தோத்தா பாக்கிஸ்தான் சூப்பர்8க்கு போவினம் இந்த உலக கோப்பையில் இனி ஒரு விளையாட்டும் நியூயோக் மைதானத்தில் நடக்காது இனி வரும் போட்டிகள் வேறு மைதானங்களில் நடப்பதால் 150 , 170 இஸ்கோர எதிர் பார்க்கலாம்.........................................................1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பளார் - சுப.சோமசுந்தரம்
1 pointபளார் (The Slap - थप्पड़) - சுப.சோமசுந்தரம் தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட குல்விந்தர் கவுர் எனும் பெண்மணி சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர். அடித்ததற்கு அவர் சொன்ன காரணம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கங்கனா ரனாவத் வழக்கமான தனது அதிகப் பிரசிங்கித்தனத்துடனும் அடாவடித்தனத்துடனும் தரக்குறைவாகப் பேசியது என்பது; அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தில் குல்விந்தர் கவுரின் தாயாரும் இருந்ததால், கங்கனாவின் பேச்சு தனிப்பட்ட முறையில் மனதளவில் அவரைப் பாதித்தது என்பதுவும். சங்கிகள் மற்றும் யோக நிலை (!) எய்திய மகான்களைத் தவிர நம்மைப் போன்ற சாமானியருக்கெல்லாம் குல்விந்தர் கவுரின் செயல் நியாயமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அவர் ஒரு வீரப் பெண்மணியாக, சிங்கப் பெண்ணாக சமூக வலைத்தளங்களில் நம்மிடமெல்லாம் பாடல் பெற்றார். மேற்கூறிய நிகழ்ச்சியின் சங்கிலித் தொடராக சமீபத்திய சில நிகழ்வுகளும் நினைவுத்திரையில் அணிவகுப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. மணிப்பூர் கொடுமைகளின் ஆரம்பக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் - அங்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. பத்ரி சேஷாத்திரி, "நீதிபதி துப்பாக்கியுடன் மணிப்பூர் சென்று விடுவாரா ?" என்று கிண்டல், இல்லையில்லை நக்கல் செய்திருந்தார். கிண்டல், நக்கல் இவற்றிற்கெல்லாம் ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் பத்ரி சேஷாத்திரியின் மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அவரது நக்கல் அமைந்தது என்பதைப் பெருவாரியான மக்கள் சமூகம் உணர்ந்ததால், சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருமளவில் கண்டனம் பதிவாகியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்தது தமிழ்நாடு அரசு. உடனே எழுத்தலகைச் சார்ந்த சிலர் பத்ரியை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். "அவர் தவறு செய்து விட்டார். இருந்தாலும் ......." என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தில் கருத்துரிமை பற்றியும் போகிற போக்கில் அவர்கள் குறிப்பிட்டதுதான் வேடிக்கை. இதற்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் 295 A பிரிவினை நீக்க அறிவுலகம் முதல்வருக்கும் பிரதமருக்கும் நீதியரசர்களுக்கும் கடிதம் எழுதலாமே ! அதனை நீக்குவதன் மூலம் மக்களின் மத நம்பிக்கைகளையும் அவர்களின் கடவுளர்களையும் எங்களைப் போன்றோர் எந்தத் தடையுமின்றிக் கிண்டலடித்து மகிழ்வாய் வாழ வழிவகை செய்வதாகுமே ! "That's offensive is not an argument" என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் (Christopher Hitchens) கூற்றினை மக்கள் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லும் பேரின்பம் எங்களுக்குக் கிடைத்ததாகுமே ! பத்ரி சேஷாத்திரி எழுத்தலகைச் சார்ந்த ஒரே காரணத்திற்காக எழுத்துலகம் அவருக்காக நின்றது நியாயந்தானா ? நம்மைப் போன்ற சாமானியருடன் சேர்ந்து பத்ரியின் கைதை அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதானே இந்த விஷயத்தில் விவேகமாகத் தோன்றுகிறது ! அடுத்து கங்கனா ரனாவத்தின் ஆண் வடிவமான சவுக்கு சங்கரிடம் வருவோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் விசாரணையில் இருக்கும் போதே தேவையின்றிப் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்று அடித்துச் சொல்லி எல்லை கடந்ததும் பேசு பொருளானது. இது தொடர்பாக யூடியூப் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரிய நையாண்டியுடன், "நான் ஒப்பாரி வைத்துக் கொண்டே பேச வேண்டுமா ?" என்று ஆரம்பித்து மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்ததெல்லாம் அவருக்கே உரிய அசிங்கத்தின் உச்சம். இந்நிகழ்வு சவுக்கு சங்கரின் சந்தர்ப்பவாதத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவே ! பின்னர் பொத்தாம் பொதுவாகக் காவல்துறையை விமர்சித்து மாட்டிக்கொண்டார். அதனைக் கை தட்டியோ கை தட்டாமலோ வேடிக்கை பார்ப்பதை விட்டு நம்ம ஆட்களில் (!) சிலர் கருத்துரிமை பேசி ஒரு கேவலமான மனிதருக்கு வக்காலத்து வாங்கியதை என்னவென்று சொல்ல ? "ஓய் சவுக்கு, சிறையில் கை உடைந்ததற்கே அழுகிறீரே ! ஒரு மாணவியின் உயிர் போனதைக் கேலியும் கிண்டலும் செய்து அவளது தாய்க்கு எந்தளவு மனவலியைக் கொடுத்தீர் !" என்று வறுத்தெடுத்த நெட்டிசன்கள் முட்டாள்களா என்ன ! சரி, "உங்களுக்கு இதே வேலையாப் போச்சு !" என்று மேற்சென்று தம்மை இடித்துரைப்பதற்கு அவ்வப்போது நம் தோழர்கள் நமக்கு வழி வைப்பார்கள் போலும் ! மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளிலும், பத்ரி மற்றும் சவுக்கு விஷயங்களில் தமிழ்நாடு அரசின் மூலமாக வழக்குகள் தொடரப்பட்டன. 'உள்ளம் பதைக்கும்' நல்லோர் ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்ப்பதும், சங்கிகள் கதறுவதும், சாமானியர்களாகிய நாம் மகிழ்வதும்தானே நியாயம் ! குல்விந்தர் கவுரைப் பொருத்தமட்டில் அவரையும் நம்மையும் உளவியல் ரீதியாகத் தாக்கிய கங்கனா ரனாவத்தின் மீது ஜனநாயக முறையில் வழக்குத் தொடர்ந்து விரைவில் நீதியைப் பெற்றுத் தர நம்மால் முடியுமா அல்லது கங்கனாவின் கன்னத்தில் மாற்றுக் கட்சியின் சின்னத்தைப் (கையைத்தேன் !) பொருத்தி உடனடி நீதி வழங்கும் தீரம் நம்மிடம் உண்டா? இவ்வாறு இருக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் குல்விந்தர் கவுரின் பக்கம் நிற்பதுதானே இயற்கை நீதி ? குல்விந்தர் கவுர் செய்தது தவறு என்று உங்களுக்குப் பட்டால் பகத்சிங் செய்தவையும் தவறு என்பீர்களா ? ஒன்று நாட்டு விடுதலைக்கானது என்றால், மற்றொன்று சமூக விடுதலைக்கானது. இப்போது வீரமங்கை குல்விந்தர் கவுரின் செயலுக்கு இன்னும் எனக்குத் தெரிந்தவரை நமது பாசறையிலிருந்து (!!) எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. வருங்காலங்களிலும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் மௌனம் தொடரட்டும். நாம் ஆசை தீர ஆடுவோமே, பள்ளு பாடுவோமே ! https://www.facebook.com/share/p/43cYSZseaoVJGPFY/?mibextid=oFDknk1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointஅலையில் மூழ்கின்றவர்களைக் காப்பாற்றக் கண் விழித்துக் காத்திருக்கும் காவல் தெய்வங்கள்........! 🙏1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அதிசயக்குதிரை
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
தானே செய்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விடயங்களை செய்ய வினைத்திறன் இன்றி, புலிகளின் ஆயுதங்களை களைவதை தனது பிரதான பணியாகக் கொண்டு, இதர இயக்கங்களை வளர்த்து, தமிழர்கள் மீதான படுகொலைகளை ஆரம்பித்து, கூலிகளை புலிகளுக்கெதிராகத் தூண்டிவிட்டபோது, அவர்கள் மீது போர்தொடுப்பது தவறில்லை. அப்போது நடந்தது இந்தியாவின் கைக்கூலியான ஈ.பி.ஆர்.எல்.எப் எனும் கொலைக்குழுவின் காட்டாட்சி. முற்றான இராணுவ, கூலிக்குழுக்களின் அடக்குமுறையின் கீழேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் அடிமைப்பட்டுக் கிடந்தன. அந்தக் காட்டாட்சியினை குலைத்து, நிறுத்தியது சரிதான். தமிழருக்கென்று வடக்கையும் கிழக்கையும் இணைத்த இந்தியா இன்று அதுகுறித்துப் பேசுவதில்லையே, அது ஏன்? இப்போதாவது புரிகிறதா ஒப்பந்தத்தின் உண்மையான பயனாளிகள் யாரென்று?1 point- தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம் (சொல்லித்தான் ஆகவேண்டும்!)
அரங்கம் செய்திகள் தளத்தில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் புலி எதிர்ப்புக் காச்சாலால் மீகவும் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் போலுள்ளது. புலிகளி பாசிச வாதிகளாக மீண்டும் மீண்டும் நிறுவ முற்படுகின்றவர்களின் கூடாரமாக இந்த தளம் உள்ளது போல. ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகளை கொன்றது மிகவும் தவறான விடயம் என்பதை மறுப்பதற்கில்லை (முப்படைகளின் தளபதியாக இருந்த சனாதிபதிகள் மீதான தாக்குதல் இந்த வகையில் வராது). அதே நேரம், இவ்வாறானவை இடம்பெற்றிராத, புலிகள் களத்தில் நீக்கப்பட்ட இந்த 15 வருடங்களில், தமக்கு (தமிழர்களுக்கு) அரசியல் ரீதியிலான, நியாயமான தீர்வு அவசியமே இல்லை எனும் அளவுக்கு தமிழர்களாலே மனதளவில் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மிழ் தேசிய பிரச்சனை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்பதை இந்த காச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். தமிழர்களுக்கு சிங்கள அரசு கொடுப்பதாக இருந்த அனைத்து தீர்வுகளும் தமிழர் இருப்பை கேள்விக்கு உள்ளாக்குபனவையாகவே இருந்தன. அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளும், யுத்த நிறுத்தங்களும் சிங்கள அரசு தன்னை பலப்படுத்த எடுத்த கால அவகாசங்களே ஆகும். இதற்கு சமாந்தரமாக புலிகளும் தம்மை பலப்படுத்தவே இவற்றினை பயன்படுத்தி இருந்தனர். எனவே இருதரப்புமே நேர்மையாக இதில் நடந்து கொள்ளாத போது, வெறுமனே தலைவரையும், புலிகளையும் மட்டும் குற்றம் சாட்டி நிற்கின்றது இந்த கட்டுரை. உலகில் புலிகளையும் தலைவரையும் தவிர, சிங்கள அரசின் கபடத்தை முற்றாக புரிந்து வைத்திருந்த ஒரு அமைப்போ தலைமையோ உலகில் இல்லை. இந்திய பார்ப்பனிய அரசு ஒவ்வொரு முறையும் மூக்குடைபடும் இடமும் இதுதான். புலி நீக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல். ஒற்றை அரசை ஏற்று, போடும் பிச்சையை வரமாக நினைத்து வழிபடும் அரசியல். நீண்ட காலத்தில் தமிழர்கள் தம் அனைத்து அடையாளங்களையும் துறக்க வைக்கும் அரசியல். இதை வலியுறுத்தும் எந்த தரப்பும், எந்த கட்டுரையும் தமிழர்களின் நியாயமான இருப்பையும், அவர்களுக்கான தீர்வையும் நிராகரிக்கும் தரப்பை சார்ந்தவை. பி.கு: நான் சிகப்பு புள்ளியை குத்தியது, கிருபன் இதனை இங்கு இணைத்தமைக்கு அல்ல. மாறாக, கட்டுரை சொல்லும் அரசியலுக்கு எதிராக1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?