Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    2954
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3057
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/17/24 in all areas

  1. கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில், இரயிலில் பயணிப்பதற்காக, இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத்தில், நீங்கள் ஆணா? பெண்ணா? என்ற கேள்வியில் எங்கே ‘ஆம்’ என்று போடுவதில் அவருக்குச் சிக்கல் வந்தது. காரணம் அவர் ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பால். கோபத்துடன் அவர் இரயில் திணைக்களத்துக்கு இது விடயமாக மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். பதில் அவருக்கு அனுகூலமாக இல்லாததால், நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றார். இரயில் திணைக்களம் அவருடன் சமரசம் செய்ய முயற்சித்தது. அவருக்கேற்பட்ட மன அழுத்தத்துக்கான நட்ட ஈடாக 1000 யூரோக்களைத் தருவதாகவும் கேட்டுப் பார்த்தது. அவர் உடன் படவில்லை. “இது ஒருவரது தனிப்பட்ட விடயம் அல்ல. பொதுவானது. ஆகவே உங்கள் (இரயில் திணைக்களம்) படிவங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதுவும் ஆறு மாதங்களுக்குள்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்கள் குறைவானது ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறோம் என இரயில் திணைக்களம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர் குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமல்ல, எங்களது முழு ‘சிஸ்ரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பெரும் பணமும், கால அவகாசமும் தேவை என்றார்கள். இப்பொழுது மாற்றம் செய்து விட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை இன்று யேர்மனியில் உள்ள சகல நிறுவனங்களுக்கும் இருக்கிறது. திரு,திருமதி என்று விழிக்காமல் எல்லோருக்கும் பொதுவாக ‘ஹலோ” என்றே அழைக்கலாமா? என குளம்பிப் போய் இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களின் குடும்ப வாழ்வை யேர்மனியும் அங்கீகரிக்கிறது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. யேர்மனியில் வளரும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பாலியல் சம்பந்தப்பட்ட விபரங்களை சொல்லித் தருகிறார்கள். பாடசாலைகளிலும் பாலியல் சம்பந்தமான விடயங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். ஆகவே ஓரினச் சேர்க்கையாளர்களின் பிள்ளைகளும் தங்கள் பாதுகாவலர்கள் போல் மாறி விடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது. தவறாக ஏதும் நடந்தாலும்,பாடசாலையில் பிள்ளைகளின் நடத்தையை ஆசிரியர்கள் அவதானித்து அது சம்பந்தமான திணைக்களத்துக்கோ (Jugendamt), பாடசாலை அதிபருக்கோ அறிவித்து விடுவார்கள். ஓரினச் சேர்ககையாளர்களும் எங்களைப் போன்று வாழப் பிறந்தவர்கள். அவர்களுக்கான உரிமையையும், மதிப்பையும் தருவதுதான் முறையானது.
  2. 39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 39வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 64 2 ரசோதரன் 64 3 கோஷான் சே 64 4 ஈழப்பிரியன் 62 5 நந்தன் 62 6 சுவி 60 7 தமிழ் சிறி 58 8 ஏராளன் 58 9 கிருபன் 58 10 கந்தப்பு 58 11 வாத்தியார் 58 12 எப்போதும் தமிழன் 58 13 நீர்வேலியான் 58 14 வீரப் பையன்26 56 15 நிலாமதி 56 16 குமாரசாமி 56 17 தியா 56 18 வாதவூரான் 56 19 அஹஸ்தியன் 56 20 புலவர் 54 21 P.S.பிரபா 54 22 கல்யாணி 54 23 நுணாவிலான் 52
  3. நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.
  4. உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.
  5. யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
  6. கிருபன் இரக்கப்பட்டு ஓமென்று புள்ளி தந்தாலும், நீங்கள் விடமாட்டீர்கள் போல இருக்கு
  7. மிகவும் தெளிவான கருத்து. ஓரின இணைகளில் மட்டுமல்ல, எதிர்ப்பால் இணைகளிடையேயும் கூட பாலியல் உறவு என்பது ஒரு மிகச்சிறு வீதத்தில் தான் அவர்களது பிணைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதுவும் பிள்ளைகள், குடும்பம் என்று உண்மையான பயணம் (அதுவும் கஷ்டமான பகுதி) சூடு பிடிக்கும் போது, செக்ஸ் என்பதை நினைக்காமலே பிணைப்பிலும், பாசத்திலும் இருக்கும் நிலை இருக்கிறது. ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂! வந்திறங்கிய நாள் முதல், அமெரிக்காவின் நீல மாநிலங்களில் தொடர்ந்து வாழ்ந்த அனுபவத்தில், இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் கொண்ட குடும்பங்கள் சிலவற்றைக் கண்டு பழகிய அனுபவம் இருக்கிறது. எனக்குப் புரிந்த வரை, இவர்கள் சாதாரணமான மனிதர்கள். சில விடயங்களில், சாதாரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக ஒதுக்கப் படும் மக்களின் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்கள். இவர்களை நாம் ஒதுக்கி வைக்க ஒத்துழைத்தால், குடியேறிகளின் வம்சாவழியினராக வாழப் போகும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு தரப்பைப் பகைத்து எமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் முட்டாள்களாக இருப்போம்!
  8. ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்
  9. Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான் உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...? நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
  10. தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே இன்று கனடாவில் தந்தையர் தினம் கொண்டாடும் ஒரு நாள்
  11. இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1 நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்பியா 0 இங்கிலாந்து 1
  12. புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள், இணக்க அரசியல் என்போர் கூட அவருக்குத்தான் நன்றி கூறவேண்டும். அவரை வைத்துத்தான் பலர் பிரபல்யமடைகிறார்கள்.
  13. 'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த்தீர்களானால் அவர்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. ஜார்ஜ் புஷ், அவர் வேலை எதுவும் செய்வது போல் தெரியவில்லை ஆனால் அவர் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்தார். நீங்கள் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். அல்லாது போனால் உங்கள் சொந்த தலைக்கு உள்ளேதான் நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள் ஆனால் எல்லோருமே அப்படித்தான். *************************** 2. புத்தகங்களை இரல் தருவது --------------------------- நீங்கள் எப்போதும் தருபவராக இருக்கிறீர்கள், பெறுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென என் உளநல சிகிச்சையாளர் கூறினார். ஒரு பெண்ணைச் சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் முதலில் செய்வது உங்கள் புத்தகங்களைக் இரவலாகத் தருவதுதான். அவற்றைத் திருப்பித் தருவதற்காக அவள் திரும்பவும் உங்களைப் பார்க்க வருவாள் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது? அவற்றைப் படிக்க அவளுக்கு நேரம் இல்லை, அவள் உங்களை மீளவும் பார்த்தால் அவற்றைப் பற்றி பேசவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறாள் தவிரவும் நீங்கள் இன்னும் அதிகமாக நூல்களை இரவல் தரவும் கூடும். அதனால் அச் சந்திப்பையே அவள் ரத்து செய்துவிடுகிறாள். நீங்கள் நிறைய புத்தகங்களை இழப்பதோடு அது முடிகிறது. மாறாக நீங்கள் அவளிடம் இரவல் பெறுபவராக வேண்டும். https://akazhonline.com/?p=7575
  14. 23 நுணாவிலான் 52 ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே...😂
  15. வென்றாலும் நல்லது தான்...... கிருபனுக்கு சிரமம் குறையும், ஆப்கானிஸ்தான் அந்தக் குரூப்பில் புள்ளி அடிப்படையிலும் முதலாவதாக வருவதால்........ கோஷான் மீண்டும் முதலிடத்திற்கு வரக்கூடும்... (இங்கு களத்தில்) அமெரிக்காவில் வசிப்பவர்கள் கீழே போனதிற்கு ஆப்கானிஸ்தானே காரணமாகும்........🤣.
  16. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (18 ஜூன்) முதல் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG 18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி P.S.பிரபா பிரபா USA வாதவூரான் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு வாத்தியார் எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி ஆப்கானிஸ்தான் சுவி புலவர் நுணாவிலான் ஏராளன் கோஷான் சே நாளைய போட்டியில் எவர் புள்ளிகளை வெல்வார்கள்?
  17. அன்பு Justin க்கு சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை, ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள் விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள் . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால் அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ?? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின் அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே? ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல?? தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!! அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ?? உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !! ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ?? நன்றி
  18. மழையால் இந்தப் போட்டி ஒரு ஐந்து ஓவர் போட்டி ஆகி பபுவா நியூகினியா 35 ஓட்டங்கள் மட்டுமே அடித்து இந்த உலக கோப்பையில் ஆகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியாகினால் உகண்டா மட்டுமா சந்தோசப்படும்............ 😜.
  19. முந்தி ஒரு காலம் பெட்டைகள் போகும் போது பெடியள் பாடும் பாடல். ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு போவார்கள். அந்த ஒரு தருணம் எத்தனையோ கதை சொல்லும்.
  20. கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்........! 😍
  21. பிரித்தானிய நேரப்படி முதல்சுற்றில் நாளைதான் கடைசிப் போட்டி. 😀 நாளை முதல் சுற்றுக்கான மிகுதிப் புள்ளிகள் கிடைக்கும்!
  22. துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதி இருக்கின்றார். 2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும் பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது. வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில், நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன் இறந்த படி 86 வயதான எடித் லாங்கி என்ற மூதாட்டி தரையில் கிடந்த விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு எடித் லாங்கியின் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில் லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன் இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே எடித் லாங்கி என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். “ஸ்வேபிஸ் ஹாலின் விதவை கொலைகள்" பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், "குருடாகப் பறந்து கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள்" என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award 12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது. Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், "நான் பொலிஸ் துறையின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில், நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தையும் விழா மேடையில் தெரிவித்தார். நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு விருது குறித்து முடிவை எடுத்திருந்தது. Stern சஞ்சிகை இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின் 26 அகவை சுய ஆக்கங்கள் பகுதியில் நான் எழுதியிருந்தேன். -கவி அருணாசலம்
  23. பங்களாதேஷ் கலங்குது..... இலங்கையும் பங்களாதெஷூம் தான் இப்ப பரம எதிரிகளாம் கிரிக்கெட்டில். பரம எதிரியை கவிழ்க்க இலங்கைக்கு இது ஒரு சந்தர்ப்பம்....😉
  24. இன்று சூப்பர் 8 க்கு வங்காளதேசம் தெரிவு செய்யப்பட்டால் 2026 இல் நடைபெறவுள்ள T20 உலககிண்ணபோட்டிக்கு அயர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் போட்டி நடாத்தும் நாடுகள் ( இலங்கை, இந்தியா) ,இப்பொழுது நடைபெறும் போடியில் சூப்பர் 8 க்கு தெரிவான நாடுகள்( தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , அமெரிக்கா, மேற்கிந்தியாதீவுகள், வங்காளதேசம்ஆப்கானிஸ்தான்) ஐசிசி தரவரிசையில் உள்ள மிகுதி 3 நாடுகள் ( பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து) தேர்வு செய்யப்படும். ஆனால் இன்றைய போட்டியில் வங்காளதேசம் தோற்று , இலங்கையை நெதர்லாந்து வென்றால் சூப்பர் 8 க்கு நெதர்லாந்து தெரிவாகும். இதனால் 2026 போட்டியில் நெதர்லாந்து நேரடியாக தெரிவு செய்யப்படும். வங்காளதேசம் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்தினை விட முன்னுக்கு நிற்பதினால் அயர்லாந்துக்கு பதிலாக வங்காளதேசம் 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்யபடும் மற்றய நாடுகள் அமெரிக்கா , பசுபிக் , ஆசியா, ஆபிரிக்கா , ஐரோப்பா போட்டிகளின் படி தெரிவாகும். இதில் அமெரிக்கா போட்டிகளில் ஒரு நாடே தெரிவாகும். ஏற்கனவே அமெரிக்கா 2026 போட்டிக்கு நேரடியாக தெரிவானதினால் கனடாவுக்கு 2026 இல் தெரிவு செயப்பட வாய்ப்பு இருக்கிறது அமெரிக்கா குழுவில் பெர்முடாவும் சிறந்த அணி. கனடாவா பெர்முடாவா என்பது இனி வரும் போட்டிகளில் தெரியும். ஆபிரிக்கா கண்டப்போட்டியில் 2 நாடுகள்உகண்டா , நபிபியா போன்ற நாடுகள் மறுபடியும் தெரிவு செய்யப்படுமா அல்லது சிம்பாவே , கென்யா போன்ற நாடுகளும் 2 நாடுகளுக்குள் வருமா? எனக்கு சிம்பாவே வரவேண்டும் என்பது விருப்பம்
  25. 36வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்களைப் பெறமுடியவில்லை. இறுதியில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், இறுதியில் 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவிற்கு புள்ளிகள் கிடையாது. 36வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 58 2 ரசோதரன் 58 3 கோஷான் சே 58 4 ஈழப்பிரியன் 56 5 நந்தன் 56 6 சுவி 54 7 தமிழ் சிறி 52 8 ஏராளன் 52 9 கிருபன் 52 10 கந்தப்பு 52 11 வாத்தியார் 52 12 எப்போதும் தமிழன் 52 13 நீர்வேலியான் 52 14 வீரப் பையன்26 50 15 நிலாமதி 50 16 குமாரசாமி 50 17 தியா 50 18 வாதவூரான் 50 19 அஹஸ்தியன் 50 20 கல்யாணி 50 21 புலவர் 48 22 P.S.பிரபா 48 23 நுணாவிலான் 46
  26. உத போய் ரோஷம் மானம் உள்ளவங்களுக்கு சொல்லுங்கோ...
  27. கவனிக்கவும் தலைவரே !..... நிரந்தர முதல்வர் பதவிக்காக பேரம் பேசுகிறார் 😄
  28. மணிமேகலை புத்த மாதத்தில், அறம் என்பது என்ன என்று உரைக்கும் பொழுது: "அறமெனப் படுவது யாதெனக்கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையளும் அல்லது கண்ட தில்லை" என்று சுருக்கமாக, எல்லா உயிர்களுக்கும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் பாதுகாப்பாக வாழ இடம் ஆகிய மூன்றினை இன்றியமையாதனவாகக் கூறி, அவற்றின் வைப்பு முறையிலேயே தனித்தனி ஒவ்வொன்றின் இன்றியமையாத் தன்மையினையையும் விளக்கிக் காட்டு கிறார். [“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.”] இவ்வற்றை இன்றைய புத்த பிக்குகளும், பௌத்த அரசுகளும் சரியாக கடைபிடித்தால், கட்டாயம் எங்கும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் கூடிய வாழ்க்கை தானாகவே ஏற்படும். அதைத்தான் புத்தரும் உண்மையில் விரும்பினார். தன் சிலைகளை நிறுவி சர்ச்சை, அமைதியின்மை, பேதம் ஏற்படுத்தவல்ல?
  29. அவர் சுற்றுலாவில் இருக்கிறார். நான் கண்டா வரச்சொல்லி சொல்லி விடுகிறேன்
  30. இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?
  31. கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அடக்குமுறை இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பலஸ்தீனத்தில் தற்பொழுது இதே நிலைமை நீடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளிக்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சரிகா சட்டக் கல்லூரியின் கட்டக் கற்கைநெறியை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார். https://tamilwin.com/article/canadaian-tamil-woment-accuesed-sl-forces-1718417103
  32. பால்யத்தில் பக்தியில் பரிநிர்வாணமடைந்தவர் .......... ஜெய் ஆஞ்சனேயா .......! 🙏
  33. நீங்கள் இந்தக் கட்டுரையை முதலே இணைத்திருக்கிறீர்களென நினைக்கிறேன். தற்போது இது கவனம் பெற்றிருக்கிறது. உங்கள் கட்டுரையில் இருக்கும் பல சந்தேகங்களும், வினாக்களும் நாகரீகமான முறையில் அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதைத் தவிர, ஏலவே ஓர்பாலின உறவை எதிர்ப்போர் முன்வைத்து, பரவலாகப் பதில்கள் கொடுக்கப் பட்ட வழமையான சந்தேகங்கள் தான். ஒரு மாதிரிக்கு, 1. மனித இனம் தப்பி, பெருகி வாழ இயற்கையாக வழங்கப் பட்டது ஆண், பெண் உறவு என்கிறீர்கள். ஓர் பாலின தம்பதிகள், தத்துக் கொடுக்கப் பட்ட குழந்தையை அன்புடன் வளர்த்தெடுக்கும் போது , இந்த மனித இனத்தின் தொடர்ச்சி காக்கப் படுவதில்லையா? அல்லது, பிள்ளை பெறாமல் திருமணமாகி இருப்போர் "இயற்கைக்கு மாறாக இருக்கிறார்கள்" என்று அவர்களையும் ஓரினச் சேர்க்கையாளரை தற்போது செய்வதைப் போல ஒதுக்கி வேறு பெயரால் அழைக்க வேண்டுமென்கிறீர்களா? மனித இனத்தோடு சேர்ந்தே வந்திருக்கும் இந்த ஓர்பால் கவர்ச்சியால், நீங்கள் பயப்படுவது போல எந்த மனித இன அழிவும் கடந்த 200K ஆண்டுகளில் ஏற்படவில்லையானால், இனி ஏற்படுமென்று எப்படி சொல்கிறீர்கள்? ஹாவார்ட் கூர்ப்பியல் நிபுணர் டானியல் லிபர்மானின் கருத்துப் படி. "கூர்ப்பு என்பது எப்போதுமே எண்ணிக்கையை அதிகரித்தல்/தப்பி வாழ்தல் என்ற நோக்கத்தில் இயங்குவதில்லை". அது மட்டுமல்லாமல், தற்போது நிகழும் ஹோமோ சேபியன்சின் கூர்ப்பு என்பது, இயற்கையினால் பெரிதும் கட்டுப் படுத்தப் படும் நிலையில் இல்லை என்றும் சொல்கிறார். இதற்கான பல உதாரணங்கள் அவரது சுவாரசியமான நூலான The Story of Human Body இல் தருகிறார். எனவே, நான் ஒரு எதிர் கருதுகோளை முன்வைக்கிறேன்: சமூக மாற்றங்களை ஏற்றுக் கொண்டு, சகலரையும் (பால் கவர்ச்சி, தோல் நிறம், உடல் இயலுமை) சமமாக நடத்தினால், உலகில் ஒரு பல்லினத் தன்மையான ஹோமோ சேபியன்ஸ் உருவாகும். அதன் எண்ணிக்கை சிறிது குறைகிறதென்றே வைத்துக் கொள்வோம் ஒரு பேச்சுக்கு. ஆனால், தப்பி வாழும் ஹோமோ சேபியன்ஸ், நியண்டதாலை சேபியன்ஸ் கொன்றது போல ஒருவரை ஒருவர் மறுத்து ஒதுங்கி நிற்க/ ஒளித்திருக்கச் செய்யாமல் ஸேபியன்ஸ் என்ற இனம் முன்னேற உழைப்பவர்களாக மாற்றும். இது கூர்ப்பு ரீதியில் தப்பி வாழ்தல்/நிலைத்திருத்தல் அல்லவா? 2. இன்னொரு மாதிரியாக: இதை அனுமதித்தால், incest ஐயும், விலங்குகளோடு புணர்வதையும் அனுமதிக்க வேண்டி வருமா? என்ற உங்கள் சந்தேகம் உங்களுக்கு வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இரத்த உறவுக்குள் நீங்கள் சொல்வது போல உறவு நிகழ்ந்தால் பல பரம்பரை ரீதியான நோய்களைச் செறிவாக்கும் நிகழ்வு நடக்கிறது, இதனால், சில விலங்குகள் கூட தங்களிடையே தாய், மகன், உடன் பிறப்பு உறவை (in-breeding) நாடுவதில்லை. எனவே, மனிதர்கள் இதைத் தவிர்க்க உறுதியான உயிரியல் காரணம் இருக்கின்றது. விலங்குகளை ஒருவர் புணர முயல்வது சட்டப் படி குற்றம். ஏன்? ஒரு உடலுறவில் consent இல்லை என்றால் அது சட்ட ரீதியான consensual உறவு அல்ல! விலங்குகள் எப்படி consent கொடுக்கும் என நினைக்கிறீர்கள்? எனவே, அழகாக எழுதியிருக்கிறீர்கள், ஆனால், உங்கள் வாதம் உறுதியான அடித்தளத்தில் இல்லை!
  34. கண்களால் நான் வரைந்தேன் வி.குமாரின் அற்புத இசையில்.....
  35. இது தான் குமரன்சாமி அண்ணையோ? மேலே கவி இணைத்த படம் யாருடையது?? கவி அருணசலம். என்று நினைக்கிறேன்! இவ‌ர் தான் ஈழ‌த்து அர‌விந்த‌ சாமி புரிய‌ வில்லையா? குமாரசாமியரைப் பார்க்க சில களத்து உறவுகள் படும்பாடு,,,,, அங்கலாய்ப்புத் தாங்க முடியவில்லை. தம்பி என்கிறார்கள், அண்ணன் என்கிறார்கள், குமரன் என்கிறார்கள், தாத்சாதா என்கிறார்கள், சாமி என்கிறார்கள்….. நான் நினைக்கிறேன் அவரது குடும்பப் படத்தை எப்படியோ இந்தச் சிலர்பார்த்து விட்டதால்!!! “மாமா” என்று அழைக்க முண்டியடிக்கிறார்களோ தெரியவில்லை. குமாரசாமி அவர்களின் குடும்பப் படத்தை நான் யாருக்குமே அனுப்பியதில்லை. “நானும் அனுப்பியதில்லை” தமிழ்சிறி தம்பியும் என் தலைமேல் அடிக்காத குறையாகச் சத்தியம் பண்ணுகிறார். அப்போ எப்படி??????😟🤪
  36. ராசவன்னியர் தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குத் தமிழீழத்தின் சிறிய அடையாளங்கள் கூடத் தெரியும். மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குப் பலமுறை நான் சென்றுள்ளபோதும் கண்டுகொள்ளாத ஒரு காட்சி…. அதாவது சில முனிவர்களின் சிலைகள் அங்கிருப்பதை அவர் சொல்லித்தான் நான் கவனித்துக் கண்டேன்.😄
  37. சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும். என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது. ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம். சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன். யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.