Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்16Points38756Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்13Points2954Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்8Points87990Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20018Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/25/24 in all areas
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
கருத்துப்படம் போட்டுவிட்டு அதற்கு விளக்கமும் கொடுக்க வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் கருத்தாடலுக்கு நான் பதில் கொடுக்க வேண்டி வரும். அது இன்னும் ஒரு ஆக்கத்தை உருவாக்குவதற்கு எனக்கு சிரமத்தைத் தரலாம், நேர விரயத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் கூடுதலாக எனது கருத்துப்படங்களுக்கு நான் விளக்கம் அளிப்பதில்லை. தமிழக அரசியலில் அதிக ஈடுபாடு எனக்கு இல்லை. நகைச்சுவைக்காக எப்போதாவது கிறுக்குவது உண்டு. ஆனால் சீமான் விடயம் வேறு. அவர் எங்களது பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் பார்க்கிறார். அதைக்கூட விட்டுவிட்டுப் போய்விடலாம். எங்களது கடல் விவகாரத்தில் மூக்கை நுளைக்கும் போது என்னால் பேசாமல் இருக்க முடியாது. றோலர் மூலம் மீன்களைப் பிடிக்கும் போது, மீன் வளங்களே அழிந்து போகின்றன. தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள கடல் வளங்களை ஆழ்கடல் மீன்பிடி மூலம் அழித்து விட்டார்கள். இப்பொழுது அவர்கள் மீன் பிடிப்பதற்காக வேறு நாடுகளின் எல்லைக்குள் உள்ள கடல்களின் புகுந்து, அந்தந்த நாட்டு மக்களின் மீன்பிடித் தொழிலுக்கு ஊறு விளைவிப்பது மட்டுமல்லாது அவர்களது கடல் வளங்களையும் அழிக்கிறார்கள். கச்சதீவை இலங்கைக்குக் கொடுத்ததால்தான் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாகிறார்கள் என ஒரு பிரம்மையை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வரும் இடங்களோ நெடுந்தீவு, காங்கேசன்துறை, பருத்தித்துறை… போன்ற கடல் பகுதிகளாக இருக்கின்றன. தங்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், வீதிக்கு வந்து போராடுகிறார்கள், இந்திய, இலங்கை அரசுகளுக்கு அறிக்கை தருகிறார்கள். இங்கே சீமானின் பேச்சுக்கள், தமிழக மீனவர்களை உசுப்பேற்றி விடும் வகையில்தான் இருக்கின்றன.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைக் காண்பித்து, “நான் இவரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தவன். நெய்தல்படையை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, கையில் வெடிகுண்டு கொடுத்து அனுப்புவேன். ஆறு பேர் போகும் படகில் இன்னும் இரண்டு பேரைச் சேர்த்து ஏத்து. தொட்டால் தூக்கு…” என்றெல்லாம் பேசுகிறார். இங்கே பிரபாகரனைக் காட்டி ஈழத்தமிழர்களுக்கு சீமான் ஊறு செய்கிறார் என்பது வெளிச்சமாகவே தெரிகிறது. முன்பும் ஒரு தடவை கருத்தொன்றுக்கு எழுதியிருந்தேன். மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன். தமிழக அரசியலில் சீமான் என்ன செய்கிறார் என்பதோ மேடையில் தனக்கு வேண்டாதவர்களை ஏக வசனத்தில் அவர் பேசுவதோ, அவரது கடந்து வந்த அரசியல் பாதைகளோ எனக்குத் தேவையில்லாதது. ஈழத்து மக்களின் பிரச்சனைகளை வைத்து, அவர்களின் போராட்ட எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் பயன் படுத்தி அரசியல் நடாத்துவதும், ஈழத்து மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதும் தொடருமாயின் என்னால் முடிந்த சிறிய வேலையான சீமானுக்கு எதிரான கருத்துப்படங்கள் வரும். அது சிலருக்கு கசப்பாகவும் என்மேல் வெறுப்பையும் தரலாம். சீமானின் கட்சியைப்பற்றி என்னிடம் கருத்துக்கள் இல்லை. அவர் தனித்தோ அல்லது தம்பி தளபதி விஜய்யோடு சேர்ந்தோ ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரானாலும் எனக்கு எந்தவித உணர்வுகளும் இருக்கப் போவதில்லை. தமிழகத் தலைவர்களாலும், முதலமைச்சர்களாலும் ஈழத்தமிழர்களது பிரச்சனைகளை முடித்து வைக்க முடியாது என்பதை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நிறைய ப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை வைத்து அவர்கள் தங்களது அரசியலைச் செய்யட்டும். எங்கள் ஈழ மீனவர்களுக்கு அவர்கள் துன்பம் செய்யாமல் இருக்கட்டும்.5 points
-
துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம்
5 points5 points
- அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் - சுப.சோமசுந்தரம் நேற்றைய (23-06-2024) ஒரு அனுபவப் பகிர்வு : உறவினர் மகளின் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். கல்லூரியொன்றில் கணிதப் பேராசிரியையாய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த நண்பரின் கணவர் வந்திருந்தார். "சார், மேடம் வரவில்லையா ?" என்று கேட்டேன். "அவளுக்கு சுமார் ஒரு வருடமாக சுயநினைவு இல்லை. அல்சீமர் (Alzheimer) ஆட்கொண்டுள்ளது" என்றார். "பலரை நினைவில்லை. ஆனால் உங்கள் mathematics மீது அவளுக்குப் பெரிய அபிமானம் உண்டு. உங்களைப் பார்த்தால், epsilon delta எல்லாம் நினைவு வரலாம். ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள்" என்றார். மேடத்திற்கு பக்தி நெறியில் ஈடுபாடு உண்டு. ஒரு முறை அவரிடம் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பேசிய நினைவு. "கடைசிக் காலத்தில் உடலும் உள்ளமும் நலிந்து உன்னை நினைக்கும் ஆற்றலை நான் இழந்தாலும் என்னைக் காத்து நிற்க வேண்டும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று திருவரங்கப் பெருமானிடம் பெரியாழ்வார் இறைஞ்சும் பாடல் அது. அப்பாடல் அந்த மேடத்துக்கே பொருந்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். Let me see whether Epsilon,Delta or connectedness (a topological concept in mathematics) gets us connected. பெரியாழ்வார் போன்ற பக்தி இலக்கியத்தையும் முயற்சி பண்ணலாம். Before that I should check with my friend, a psychologist, if it's okay to try with the 'memory card' of someone under Alzheimer. இனி அந்த பெரியாழ்வார் பாசுரம் : " துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே! ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்! எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! " - பெரியாழ்வார்; பாடல் 422; பத்தாவது திருமொழி https://www.facebook.com/share/p/Smb17pYeYzZ6uLg6/?mibextid=oFDknk3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல....... உங்களின் அணி எதுவென்று சொன்னால், நாங்கள் தேசிக்காய் உருட்டி அதைக் கவிழ்த்து விடுவம்...........பையனின் அணிகளை அப்படித்தான் கவிழ்த்தனாங்கள்..........😜.3 points- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் மெதுவான ஆடுதளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணிக்கு மழை காரணமாக 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக DLS முறையில் குறிக்கப்பட்டது. எனினும் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்கள் எடுத்த லிற்றன் டாஸைத் தவிர அனைவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் 17.5 ஓவர்களில் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. ஆப்கானிஸ்தானின் வெற்றி, அவர்களுக்கு அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் தகுதியை கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்துள்ளது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களால் (DLS method) வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என ஒருவரும் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது. சுப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 109 2 ரசோதரன் 107 3 ஈழப்பிரியன் 103 4 கந்தப்பு 99 5 சுவி 98 6 நந்தன் 97 7 கோஷான் சே 97 8 கிருபன் 94 9 எப்போதும் தமிழன் 94 10 நீர்வேலியான் 93 11 குமாரசாமி 92 12 தமிழ் சிறி 92 13 நிலாமதி 89 14 P.S.பிரபா 89 15 வீரப் பையன்26 88 16 வாதவூரான் 88 17 வாத்தியார் 88 18 அஹஸ்தியன் 87 19 ஏராளன் 85 20 தியா 82 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 முதல் மூன்று நிலைகளிலும் கடைசி நான்கு நிலைகளிலும் மாற்றமில்லை!3 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போகிற போக்கை பார்த்தால் தென்னாபிரிக்கா இங்கிலாந்து இறுதி போட்டிக்கு போகும்போல தெரியுது. எனது GUT FEELING தென்னாபிரிக்காதான் கப் தூக்கப்போகுது. இப்பிடி மட்டுமட்டா வென்றுதான் ரக்பி கப்பும் தூக்கினவங்கள்!!3 points- UEFA Nations League
2 pointsஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து 55 வரை வரிசைப்படுத்தப்படுவார்கள் இந்த லீக் விளையாட்டுக்களின் அடிப்படையில் தான் 2024 ஐரோப்பிய கிண்ணத்திற்கான தெரிவு விளையாட்டுக்களின் குழுக்கள் அமைக்கப்படுகின்றன பத்துக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட தெரிவு அணிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும் விளையாட்டு நடைபெறும் நாடான ஜெர்மனியும் 2024 ஐரோப்பிய உதைபந்தாட்டக் கிண்ணத்திற்கான விளையாட்டிற்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டார்கள் இன்னும் மூன்று இடத்திற்கான தெரிவுகள் இன்னுமொரு பிரத்தியேகமான சுற்று விளையாட்டுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள் சிக்கல் நாடுகளுக்கான அணிகள் விளையாடும் பொது அந்த அந்த அணி விளையாடிய குழுக்களில் முதலாவதாக வரும் 12 அணிகள் இந்தச் சுற்ருக்குத் தெரிவாகும் அணிகளாகும். ஆனால் குழு மட்டத்தில் முதலாக வந்தவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 20 அணிகளில் இருந்தால் அந்த அந்த அணிகளுக்குப் பதிலாக அந்த அணிக்கு அடுத்ததாக அந்தக் குழுவில் இருக்கும் அணி அல்லது திறமை வாய்ந்த அணி தேர்வு செய்யப்படும். 2024 நேரடித் தேர்வுக்கான சுற்றில் உக்கிரையின் குழு சி யில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி விளையாடிய குழுவில் மூன்றாவதாக வந்ததால் நேரடியாகத் தெரிவாகவில்லை ஆனால் ஐரோப்பிய நாடுகளின் அணிகளிற்கான சுற்று விளையாட்டுக்களில் ஸ்கொட்லாந்து விளையாடிய குழுவில் இரண்டாவதாக வந்தது ஸ்கொட்லாந்து தனது நேரடித் தேர்வுக்கான விளையாட்டுக்களில் வென்று அடுத்த சுற்றுக்கு நேரடியாகத் தெரிவானதால் அந்த இடத்திற்கு உக்கிரையின் வந்து தகுதிச் சுற்றுக்குத் தெரிவாகி பின்னர் இறுதிச் சுற்றிலும் இப்போது விளையாடுகின்றன பின்வரும் அணிகள் அந்தச் சுற்ருக்குத் தெரிவாகின குழு A போலந்து , வேல்ஸ் . பின்லாந்து . எஸ்த்துலாந்து குழு B இசுரயேல் ஐஸ்லாந்து . போஸ்னியா ஹெர்செகோவீனா . உக்கிரையினா குழு C ஜோர்ஜியா . லக்ஸம்பேர்க் . கிரீஸ் . கசக்ஸ்தான் இந்த அணிகள் தங்கள் குழுக்களில் இருக்கும் அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற மூன்று அணிகளில் ஒன்று தான் உக்கிரையினா மற்றயவை போலந்து , ஜோர்ஜியாஇப்படித்தான் 24 அணிகளும் தெரிவாகின ரஸ்யா உக்கிரையைனை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டிய ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கழகம் ரஸ்யாவை ஐரோப்பிய நாடுகளுக்கான லீக் விளையாட்டுக்களில் தடை செய்தது யுத்தம் காரணமாக உக்கிரையினை வேற்று நாட்டு மைதானங்களில் தங்கள் குழு விளையாட்டுக்களை விளையாட அனுமதி வழங்கியது கு சா அண்ணை எங்கேயோ ஒரு கேள்வி கேட்ட மாதிரி இருந்தது இப்போது அந்தக் கேள்வியைக் காணவில்லை அதனால் தான் இந்தத் திரி தொடங்கப்பட்டது2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கேள்விகள் 67) க்கும் 70) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இறுதியாக வரும் அணியாக ஐக்கிய அமெரிக்கா அல்லது பங்களாதேஷைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. பங்களாதேஷ் - மூன்று பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா ஒரு புள்ளி வழங்கப்படுகின்றது. 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SL வீரப் பையன்26 SA சுவி BAN நிலாமதி SL குமாரசாமி SL தியா SL தமிழ் சிறி SL புலவர் ENG P.S.பிரபா SL நுணாவிலான் ENG பிரபா USA SL வாதவூரான் AFG ஏராளன் SL கிருபன் BAN ரசோதரன் BAN அஹஸ்தியன் SL கந்தப்பு SL வாத்தியார் SL எப்போதும் தமிழன் SL நந்தன் SL நீர்வேலியான் SL கல்யாணி WI கோஷான் சே SL 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PAK வீரப் பையன்26 PAK சுவி AFG நிலாமதி PAK குமாரசாமி PAK தியா SA தமிழ் சிறி PAK புலவர் AFG P.S.பிரபா PAK நுணாவிலான் AFG பிரபா USA AFG வாதவூரான் NZ ஏராளன் AFG கிருபன் NZ ரசோதரன் PAK அஹஸ்தியன் WI கந்தப்பு PAK வாத்தியார் PAK எப்போதும் தமிழன் PAK நந்தன் AFG நீர்வேலியான் PAK கல்யாணி NEP கோஷான் சே PAK கேள்விகள் 70) வரைக்குமான பதில்களின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 110 4 கந்தப்பு 110 5 சுவி 108 6 கோஷான் சே 108 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 கிருபன் 99 12 நந்தன் 99 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 @பிரபா USA தொடர்ந்தும் முன்னணியில் நிற்கின்றார். அவருக்கு பின்னால் இரண்டு அமெரிக்கர்கள் மரதன் ஓட்டம் போல தொடர்ந்தும் வருகின்றனர். எனினும் @கந்தப்பு பலரை முந்திக்கொண்டு நான்காவது நிலை வரை முன்னேறியுள்ளார்! யாழ்களப் போட்டியில் யார் வெற்றி பெறக்கூடும்?2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 115 2 ஈழப்பிரியன் 109 3 ரசோதரன் 109 ம் பரவாயில்லை. இடம் மாறினாலும் அமெரிக்காகாரர் மூவர் ஒன்றாகவே முன்னணியில் நிற்கிறார்கள்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா தொடர்ந்து இரண்டு முறை ரக்பி கப் தூக்கினவை ஆனால் முக்கியமான கிரிக்கேட் விளையாட்டில் கோட்டை விடுகினம் இந்தியா அணியில் மாற்றம் செய்யனும் . கோலிக்கு பதில் Yashasvi Jaiswal தொடக்க வீரரா விளையட விடனும் நண்பா கோலி ரன் அடிக்காம சீக்கிரம் அவுட் ஆகுவதால் மிடில் வீரர்கள் தங்களின் அதிரடி ஆட்டத்தை அதிகம் வெளிப் படுத்த முடியாம இருக்கு இந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் கோலிய தெரிவு செய்வது தில்லை என்ற முடிவில் தான் இந்தியா தேர்வுக் குழு இருந்தது ஜபிஎல்ல அதிக ரன் அடிக்க கோலி உலக கோப்பைக்கு தெரிவானார் ஆனால் இதுவரை 7மச் விளையாடி இருக்கிறார் உலக கோப்பையில் இதுவரை 100ரன்ஸ்ச கூட தான்ட வில்லை......................... எனக்கு இந்தியா அணிய பிடிக்காது 5புள்ளிக்காக எப்படி எல்லாம் எழுத வேண்டி இருக்கு நண்பா😂😁🤣.....................................2 points- பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம்
பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம் பொசன் போயா தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தானசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பேய் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு, நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்ணொருவர், மற்றுமொரு நபருடன் சென்றிருந்துள்ளார். எனினும், அங்கிருந்த சவப்பெட்டியில் படுத்திருந்தவர், தன்னுடைய கணவர் என்று அப்பெண்ணுக்கு தெரியாது. எனினும், மற்றுமொரு நபருடன் வந்திருக்கும் பெண், தன்னுடைய மனைவி என்பதை அறிந்துகொண்ட சவப்பெட்டியில் படுத்திருந்த நபர், மனைவியுடன் வந்திருந்த நபரையும் அப்பெண்ணையும் (மனைவியையும்) தாக்கியுள்ளார். எனினும், பேய்தான் நண்பனையும் அவரது காதலியையும் தாக்குவதாக ஊகித்த சக நண்பர்கள், அந்த பேயை அடித்துள்ளனர். இதனால், நவகமுவ பேய் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. அதன்பின்னர், மோதல்களில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 பேரை விடுதலை செய்யுமாறு கடுவலை நீதவான் சனிமா விஜயபண்டார, திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார் நவகமுவ ரணவல் பகுதியைச் சேர்ந்த 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 12 இளைஞர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பொசன் போயாவை முன்னிட்டு நவகமுவ ரணல பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று பேய் வீடு கட்டியதாகவும், 21 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலனுடன் மேலும் சில இளைஞர்கள் குழுவொன்றுடன் வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழு பேய் வீட்டிற்குச் சென்று உள்ளே நுழைந்தபோது, சவப்பெட்டியில் கிடந்த மனிதனை அவள் திருமணமான கணவன் என்று அடையாளம் கண்டாள். சடலமாக இருந்த நபரும் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டதாகவும், சடலமாக இருந்தவர் உடனடியாக எழுந்து பெண்ணின் தலையில் தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். குறித்த பெண்ணும், சடலமாக காட்சியளித்த நபரும் திருமண செய்துள்ள நிலையில், சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சட்ட ரீதியாக பிரிந்து வாழவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணை தாக்க முற்பட்டதையடுத்து அவருடன் இருந்த மற்ற இளைஞர்களும் பேய் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதாகவும், பேய் வீட்டில் இருந்த இளைஞர்களும் தாக்கியதால் பெரும் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன்படி, பேய் வீட்டை ஒழுங்குபடுத்தும் குழுவினர் முதலில் நவகமுவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, மற்றைய குழுவினர் பின்னர் வந்துள்ளனர், சம்பவத்தை ஏற்படுத்திய யுவதியின் தந்தை உயர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதனால், தலையீடு செய்ததாக, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கமல் விஜேசிறி நீதிமன்றில் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறி இருப்பதும் தெரியவந்தது. https://www.tamilmirror.lk/செய்திகள்/பண-ஒரவரல-பய-வடடல-பசசகள-ஆடடம/175-3393862 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்படி ஆருடம் பார்த்துத்தான் 18ம் படியில் நிற்கவேண்டியிருக்கு😜 18 வீரப் பையன்26 862 points- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!2 points- துவாரகா விவகாரம் சுவிஸ் தொலைக்காட்சியில் (தமிழில்)- சர்வதேச ஊடகப்பரப்பில் ஈழத்தமிழர் போராட்டம்
2 pointsசுவிஸ் தொலைக்காட்சியில் போலி துவாரகா sudumanal கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு. நிதி சேகரித்து பிடிபடுகிற எல்லா பொறுப்பாளர்களும் தப்பித்தலுக்காக எல்லாவற்றையும் அந்த போலித் துவாரகா மீது கட்டிவிட எத்தனிக்கிறார்களா அல்லது அந்தப் பெண் இந்தப் பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது வெளிச்சத்தில் இல்லை. 70’000 பிராங்குகளை கொடுத்த நபர் இப்போ அதிகாலையில் செய்திப் பத்திரிகைகளை வீடுவீடாக போடுகிற வேலையை செய்துவிட்டு, பின்னர் தனது வேலைத்தளத்துக்கு போய் வேலைசெய்து தான் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானதாக சொல்கிறார். அவரது அதிகாலை பத்திரிகை விநியோக கடமையின்போதே அந்த வீதியில் வைத்தே அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணும் தான் 68’000 பிராங்கினை வங்கியில் பெற்று கொடுத்ததாக சொல்கிறார். போலித் துவாரகா தனது பிள்ளை மாற்றுத்திறனாளியாக இருப்பதாக சொல்லி பணம் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் கூறுகிறார். இப்படி வங்கிகளில் பல ஆயிரக் கணக்கில் பலர் கடனெடுத்துக் கொடுத்து தமிழீழத்துக்கான தமது கடமையை செய்வதாக நினைத்துக் கொண்டது உண்மை. அவர்களில் பலரும் தமது கடன்களை அடைக்க இன்றுவரை மிகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அதிகாலையில் பனி குளிர் எல்லாம் தாண்டி நித்திரையிழந்து வீடுவீடாக செய்திப் பத்திரிகைகள் விநியோகித்துவிட்டு, பின் தமது வேலைத்தளத்துக்குச் சென்று நூறு வீத வேலை செய்கிறார்கள். இன்னும் சிலரோ இந்த இரு வேலைகளோடும் வாரத்தில் கிடைக்கும் மிச்ச இரு நாள் லீவுக்கும் முன்றாவது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துள் விடப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடும் நிலையும் இருக்கிறது. குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் இப்படி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தப் பணமோசடியில் ஈடுபட்டவர்களும் பாதுகாப்பான நிலை எடுக்க எத்தனிக்கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. இவர்கள் சொத்துக்களை மட்டுமல்ல மிகை ஆடம்பரமாக பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்துவது மற்றும் விலையுயர்ந்த கார்கள் என பவுசு காட்டி அலைய, கடனெடுத்து பணத்தை பெருமளவில் கொடுத்தவர்கள் விடுதலையை நம்பிய ‘குற்றத்திற்காக’ தமது வாழ்க்கையை வேலைக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் யார். இதில் போலித் துவாரகாவின் பாத்திரம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாது. அவரையும் ஊடகவியலாளர் சந்தித்து கேட்கிறார். அவர் தன்மீது பழி போடப்படுவதாகவும் தான் ஒருபோதும் நிதிச் சேகரிப்பில் ஈடுபடவில்லை எனவும் மறுக்கிறார். பணத்தை கையாண்டவர்கள் இந்த பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முன்வராமல் எல்லாவற்றையும் அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முனைகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராவது நீதிமன்றம் போக நேர்ந்தால் பல உண்மைகள் கண்டறியப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த விவகாரம் சுவிஸ் பொலிசாரால் கையாளப்படும் பட்சத்தில் மாவீரர் உரையை தயாரித்ததிலிருந்து அதை ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு என தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஊடாக இதன் சூத்திரதாரியாக நின்றவர்கள் வரை கண்டறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் அப்***. அவர் எதிர்பார்த்திராத வகையில் ஊடகவியலாளர் அவரை தேடிப்போய்ச் சந்தித்து சில கேள்விகளைக் கேட்கிறார். “மாவீரர் உரைக் காணொளியில் வந்தது பிரபாகரனின் மகள் தான். நான் தொலைபேசியில் அவருடன் உரையாடி இருக்கிறேன். 14 வருடமாக எந்த அரசியல் தீர்வும் வராததால் இனி என்ன செய்யலாம்” என தாம் உரையாடியதாகவும் சொல்கிறார். ஆனால் தான் பணச் சேகரிப்பில் ஈடுபடவில்லை என்கிறார். தொலைக்காட்சிக்குக் கசிந்த அப்***வின் தொலைபேசி உரையாடல் ஒன்று காட்டப்படுகிறது. அதில் அவர் “எமது நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பணக் கட்டுமானம் தேவை. அரசியல் ரீதியில் நாடுகளின் ஆதரவுடன் அழுத்தத்தைக் கொடுத்து நாட்டைப் பிரிக்கலாம்” என யாருடனோ உரையாடுகிறார். இதுகுறித்து நேரில் தொலைக்காட்சி நிருபர் கேட்டபோது அப்***வோ “அது நானில்லை” என மறுக்கிறார். தான் யாரையும் நிதிப் பங்களிப்பு கேட்கவில்லை என (ச்ச்)சொல்கிறார்.. இந்த விவகாரம் தொலைக்காட்சிவரை வரும் என்று அவர்கள் எதிர்பாராமல் இருந்திருத்தல் கூடும். வெளியே சொல்லத் தகுந்த எல்லைவரைதான் இச் செய்தியை சுவிஸ் தொலைக்காட்சி பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது என ஊகிக்கலாம். தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரது மீள் வருகைக்கும் குடும்பத்துக்கும் என அந்தப் பெண் பணம் சேகரித்ததாகச் சொல்கிறது தொலைக்காட்சி. 380’000 பணத்தை கொடுத்து தான் ஏமாந்ததாகச் சொல்லும் நபர் அந்தப் பெண் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை தான் நம்பி பணத்தை கொடுத்ததாகக் கூறுகிறார். 68’000 பிராங்கைக் கொடுத்த அந்த நபர் (பெண்) தனது பிள்ளை சுகவீனமாக இருப்பதாக (போலித்) துவாரகா உதவி கேட்டதால் கொடுத்ததாகச் சொல்கிறார். இவர்களுக்கு வெளியே இன்னும் பலர் இருக்கச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறான பெருந்தொகைப் பண விடயத்தில் இந்த “கேட்டார்… கொடுத்தேன்” என்றவாறான காரணங்கள் அவர்கள் சொல்வதை உண்மையென உறுதிப்படுத்துவதை விடவும் அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பதை அல்லது மறைப்பதையே அதிகம் வெளிப்படுத்தும் வலுக்கொண்டனவாக இருக்கின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதைவிடல் (போலித்) துவாரகாவிலிருந்து தொடங்கியதல்ல. 2009 இலிருந்தே உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்ட கதையாடல் அது. பட்டையடி அடித்து உழைத்த பணத்தையெல்லாம் தமிழீழ மீட்புப் போருக்கான தத்தமது பங்களிப்பாகக் கொடுத்தனர் பல தமிழர்கள். அவர்களின் பணத்தை மில்லியன் கணக்காக சுருட்டி, 2009 புலிகளின் வீழ்ச்சியுடன் தத்தமதாக அபகரித்த பொறுப்பாளர்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க முன்வந்தால் தனக்குத் தானே குழிவெட்டுவதாக அமையும். இந்த கள்ள மௌனமும் கூட்டுக் களவாணித்தனம் அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்கு புலத்துப் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுமல்ல புலம்பெயர் புலிகளின் பீடமும் அரசியல் ரீதியில் பெரும் பங்கு ஆற்றியது. நந்திக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல் வந்து மீட்கும் என தலைமைக்கு நம்பிக்கை ஊட்டுமளவுக்கு, அதை நம்புமளவுக்கு விடுதலை அரசியலானது புலத்திலும் புகலிடத்திலும் பலவீனமாக இருந்தது. நிதிப் பொறுப்பாளர்கள் 2009 இல் அவசரகால நிதி என்ற பேரில் பெருநிதியை சேர்த்தனர். அதுக்கு என்னவானது எனத் தெரியாது. ஒருவகையில் இந்தக் கும்பல் அந்தப் பணத்தை தமதாக்கிக்கிக் கொள்ள புலிகளின் அழிவை கள்ளமாக விரும்பினார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை இவர்கள் குறித்து ஒருவர் முன்வைக்க முடியும். இந்த புலம்பெயர் புலிகளின் பணம் சேர்க்கும் வழிவகைகள், கையாடல்கள் என்பன குற்றத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது என மதிப்பிடலாம். இந்தக் குற்றத்தன்மையானது சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் எமது போராட்டம் குறித்த எடுத்த நிலைப்பாட்டில் அவர்களது சூழ்ச்சிகரமான பூகோள அரசியலை மறைக்க உதவியது. அதாவது புலிகளின் ஆயுதப் போராட்டம் குற்றத்தன்மை கொண்டதாக சர்வதேச ரீதியில் ஆக்கப்பட்டதற்கு புலிகளின் குற்றத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் சாதகமாக அமைந்தது. எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்டம் வரலாறாகிக் கொண்டிருந்த அதேநேரம், புலிகளின் தோற்றத்திலிருந்து அதன் அழிவுவரை அவர்கள் மேற்கொண்ட தனிநபர் அழிப்பு, கூட்டுக் கொலை, மாற்று இயக்க அழிப்பு, உட்கொலை, சக இனங்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள், மாற்றுக் கருத்தின்மீதான அராஜகம் மற்றும் ரஜீவ்காந்தி, பிரேமதாச இருவரையும் கொன்றமை என அவர்களது நடவடிக்கைகள் குற்றத்தன்மை கொண்டதாகவும் வளர்ந்துகொண்டுமிருந்தன. இந்த குற்றத்தன்மைப் போக்கின் நீட்சியாக புகலிட புலிகளின் குற்றத்தன்மையான செயல்களை நோக்க முடியும். அது புகலிடத்தில் மாபியாத்தனமான நடவடிக்கைகளுக்கும், எவ்வழியிலாவது பணம் சேர்க்கும் முனைப்புகளுக்கும் இட்டுச் சென்றது. 2009 புலிகளின் அழிவின் பின்னரும் தொடர்ந்து பணம் கறக்கும் வேலைக்காகவும், கொள்ளையடித்த பணத்தை எவரும் கணக்குக் கேட்டுவிடக்கூடிய கொதிநிலையை படிப்படியாக இல்லாமலாக்கும் கள்ள நோக்குடனும் (பிரபாகரன் கொலையுண்டது தெரிந்தும்) “தலைவர் உயிரோடு இருக்கிறார்” எனக்கூறி அவரை மாவீரராகக்கூட அறிவிக்காமல் இழுத்தடிக்குமளவுக்கு இவர்களின் குற்றத்தன்மையான மனநிலை இவர்களை வழிநடத்தியிருக்கிறது. இதற்கு தமிழக தமிழின உணர்வாளர்கள் சிலர் பிழைப்புவாத நோக்கில் துணைபோயினர். ஒருபுறத்தில் விடுதலை அரசியல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரம், இன்னொரு புறத்தில் கிரிமினல்தன்மை கொண்ட போக்கும் அதன் தொடர் வளர்ச்சியும், முடிவும் போராட்டக் குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது. 23062024 Thanks: SRF Link: https://www.srf.ch/play/tv/rundschau/video/spendenaffaere-um-tamil-tigers-lebt-der-anfuehrer-noch?urn=urn:srf:video:ff1fd8c5-b11e-47cf-9b1f-96a1828a73b0 (இச் செய்தியில் 33 வது நிமிடத்தின்பின் குறித்த காணொளி வருகிறது. https://sudumanal.com/2024/06/23/சுவிஸ்-தொலைக்காட்சியில்/#more-60942 points- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
2 pointsகுளிர்காலத்தின் காலை வேளையில் மரங்களும் அழகு.. மூடுபனியில் நனையும் கட்டிடங்களும் அழகு!!2 points- கருத்து படங்கள்
2 points2 points- பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை
பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை ஜூலியான் அசாஞ்ச் வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்ச் கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார். அவர் பிரிட்டனில் இருந்து கிளம்பியதையும் வரும் புதன்கிழமை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதையும் விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விக்கிலீஸ்ட் எக்ஸ் சமூகவலைதளத்தில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்களுக்குப் பின்னர், ஜூன் 24 காலை பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையிலிருந்து அவர் வெளியேறினார். இதுஉலகளாவிய பிரச்சாரத்தின் விளைவு. https://www.hindutamil.in/news/world/1269747-julian-assange-freed-from-uk-prison-after-he-strikes-plea-deal-with-us-1.html1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கே யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாமல் உள்ளது மூன்று அமெரிக்கர்களும் முன்னணியில் நிற்பார்களா என்று சொல்லவும் முடியாது ஆனால் ஆரம்பத்தில் இங்கிலாந்து வெளியே போகின்றோம் என்ற நிலையில் இருத்த மாதிரி இருந்து இப்போது அரை இறுதிக்கு வந்து இந்தியாவுடன் மோத இருக்கும் நிலை உண்மையில் அவர்களின் திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்ட்டத்தையும் காட்டுகின்றது. இப்போது எனது கணிப்பு இறுதி விளையாட்டு இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான்1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ரஷ்யா ஒரு சிறுபகுதிதான் ஜரோப்பாவில் உள்ளது மிகுதி பெரும்பகுதி ஆசியாவில் உள்ளது.. பல ஆசிய பூர்வீக இனங்களை விழுங்கி உருவானதுதான் ரஷ்யா.. ரஷ்யா என்றதும் எங்களுக்கு நினைவுக்கு வருவது வெள்ளை ரஷ்யர்கள்தான்.. ஆனால் அதுவல்ல நிஜம்.. ரஷ்யா பல ஆசிய மக்களின் முகங்களை விழுங்கி உருவாகி உள்ளது( நான் சொல்வது சப்பட்டை என்று நம்மாளுகள் சொல்லும் தென்கிழக்காசிய மக்கள்).(தமிழர்களை முழுங்கி உருவான சிறீலங்கா போல்) ஆக உண்மையில் ரஷ்யா ஜரோப்பாவா ஆசியாவா,,?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கேள்விகள் 66) க்கும் 69) க்குமான புள்ளிகள்: இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் முதலாவதாக வரும் அணிகளாக இந்தியா அல்லது தென்னாபிரிக்காவைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கும். இரண்டு கேள்விகளுக்குமான பதில்களில் இரண்டாவதாக வரும் அணிகளாக ஆப்கானிஸ்தான் அல்லது இங்கிலாந்தைத் தெரிவு செய்தவர்களுக்கு தலா இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இந்தியா - 10 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தென்னாபிரிக்கா - நான்கு பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் - ஒருவரும் தெரிவு செய்யாததால் புள்ளிகள் கிடையாது. இங்கிலாந்து - 10 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் WI IND வீரப் பையன்26 IND WI சுவி IND ENG நிலாமதி WI IND குமாரசாமி IND AUS தியா WI PAK தமிழ் சிறி IND WI புலவர் PAK NZ P.S.பிரபா ENG IND நுணாவிலான் PAK NZ பிரபா USA IND WI வாதவூரான் IND ENG ஏராளன் PAK ENG கிருபன் AUS IND ரசோதரன் WI IND அஹஸ்தியன் AUS IND கந்தப்பு IND ENG வாத்தியார் IND AUS எப்போதும் தமிழன் AUS IND நந்தன் PAK WI நீர்வேலியான் IND ENG கல்யாணி SA IND கோஷான் சே WI IND 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) போட்டியாளர் #அணி 2A - ? (3 புள்ளிகள்) #அணி 2B - ? (2 புள்ளிகள்) ஈழப்பிரியன் SA ENG வீரப் பையன்26 SL ENG சுவி IRL AUS நிலாமதி ENG NZ குமாரசாமி SA ENG தியா IND ENG தமிழ் சிறி ENG NZ புலவர் AUS IND P.S.பிரபா AUS WI நுணாவிலான் AUS IND பிரபா USA AUS SA வாதவூரான் SL AUS ஏராளன் AUS IND கிருபன் ENG PAK ரசோதரன் AUS NZ அஹஸ்தியன் ENG SA கந்தப்பு AUS SA வாத்தியார் WI SA எப்போதும் தமிழன் ENG SA நந்தன் AUS IND நீர்வேலியான் WI AUS கல்யாணி PAK NZ கோஷான் சே SA ENG கேள்விகள் 66) வரைக்கும் 68, 69) க்கும் பின்னரான யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 118 2 ஈழப்பிரியன் 114 3 கந்தப்பு 110 4 ரசோதரன் 109 5 கோஷான் சே 108 6 சுவி 107 7 குமாரசாமி 106 8 நீர்வேலியான் 102 9 எப்போதும் தமிழன் 100 10 தமிழ் சிறி 99 11 நந்தன் 99 12 கிருபன் 98 13 வீரப் பையன்26 97 14 வாதவூரான் 97 15 வாத்தியார் 95 16 நிலாமதி 93 17 P.S.பிரபா 93 18 அஹஸ்தியன் 93 19 தியா 91 20 ஏராளன் 91 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 781 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னொரு அமெரிக்காக்காரன் நுணாவிலானைத் துரத்தியபடி உள்ளார் இன்னும் பிடிக்க முடியவில்லை 🤣 பயிற்சி செய்ய சொந்தமாக மைதானம் இல்லாமல், தம் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து ஆப்கானிஸ்தான் பெற்ற இந்த வெற்றி மகத்தானது. நாளைய அரை இறுதிப் போட்டி கொஞ்சம் கவலை தரும் வகையில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமான அணிகள் யார் தோற்று வெளியேறினாலும் கவலைக்குரியதே1 point- இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி
1 pointஇலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி - பொருளாதார தடைகள், இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிப்பது சாத்தியமில்லை : கென்சவேர்ட்டிவ் கட்சி Published By: RAJEEBAN 24 JUN, 2024 | 05:00 PM tamil guardian பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கு நீதி பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர். தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர். கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட்இபசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே ஆகியோர் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமாரும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார். ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம் இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார். தடைகள் இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது. தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். எனினும் முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார். பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார். இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல் கனடா நாடாளுமன்றம் மே 18 ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் குறிப்பிட்ட நினைவுநாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார். குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார். இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது அதன்போது மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார். பரந்துபட்ட தடைகள் இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர் வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார். நாங்கள் கருத்துவெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார். சுயநிர்ணய உரிமை சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார். ஆனால் ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார். மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார். ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன்இஇலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தொழில்கட்சி இதேவேளை தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார். மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது எனினும் அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தில் எங்களிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார். இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார். இரண்டுவாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதார தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார். இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார். அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர் தமிழ் சமூகம் தங்களிற்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c9wwzrpkd1lo1 point- இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
தமிழக கட்சிகளின் பிரச்சார வீடியோக்கள் இணைப்புகள் யாழில் தடைசெய்யப்பட்டதுபோல் தேவை இல்லாத இடங்களில் எல்லாம் ஒரு கட்சியை பற்றியே வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அனுமதி உண்டா..?1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆரம்ப துடுப்பாட்டத்தைப் பார்க்க 10 ஓவர்களில் வென்று அரையிறுதிக்கு போவார்கள் போல இருந்தது. அப்புறமா நாங்களும் போக மாட்டோம்.உங்களையும் விட மாட்டோம் என்று தான் விளையாடினார்கள். ஆனாலும் ஆப்கான் ஏதோ எல்லாம் பண்ணி வென்றுவிட்டது. ஆப்கான் கோச் கதவெல்லாம் அடித்து சாத்தி வெளியேறினார். திரும்ப வந்து கையைக் காட்டினார் கீப்பருக்கு பக்கத்தில் நின்றவன் விழுந்து துடித்தான். இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போனார்கள். நொண்டி நொண்டி வந்தவர் ஓடிஓடி பந்து வீசினார். எல்லாமே ஒரு குறளிவித்தை மாதிரி இருந்தது. அவுஸ் கவிழ்ந்ததோட அவரும் கவிழ்ந்திடுவார். அவுசை கன பேர் நம்பியிருந்தவை. முழுசிக் கொண்டிருக்கிறார்கள். பையன் வியாளனுடன் இந்தியா மூட்டைகட்ட அவரும் சரி. மேற்கிந்திய தீவுகள் போனதோட நாங்க கவிழ்ந்ததை யாரிடமும் சொல்லிடாதேங்கோ. அடபாவி முதலே சொல்லியிருந்தா பிபி க்கு குளிசை போடமல் விட்டிருக்கலாம்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்களாதேஷின் நடவடிக்கைகளைப் பார்க்க நல்லாவே ஏறினது.........நாங்கள் அரை இறுதிக்கு போக மாட்டம், ஆனால் உங்களையும் போக விட மாட்டம் என்று அப்படியே நடுவில நிற்கினமாம்........ விக்கெட் அல்லது கால் என்று ஆப்கான் பந்துகளைப் போட்டு கதையை முடித்தனர்............❤️.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு நிபுணர் (ஆகிய நான்.....😜....) அப்படியே போட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபடியால், பங்களாதேஷ் தோற்கப் போகின்றது என்ற முடிவை உலகத்திற்கு சொல்ல மறந்து விட்டார்....... உலகம் கொஞ்சம் பதட்டப்பட்டு போனது.......1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பரிதாபத்தில் உக்ரெயின் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ரஷ்யா கிறிமியை ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே உக்ரெயின் யூரோ கிண்ணத்தில் விளையாடுகிறது. 1993 இன் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. 1994 இல் ஐரோப்பாவுடனான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தது. அது மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் நெருங்கி இருப்பதால் அனுமதிக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுளைய முயன்று தோல்வியுற்ற துருக்கியும் விளையாடுவதைக் கவனியுங்கள். இன்று முதல் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வழிமுறைகுள் 27 நாடுகளின் ஒப்புதலுடன் நுளைவதால் துருக்கி போலவே உக்ரெயினுக்கும் யூரோ கிண்ணத்தில் விளையாட உரிமையுள்ளது.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
குடிச்சிட்டு பாட்டில திரும்ப கொடுத்தா 10 ரூபா! குடிச்சிட்டு உங்க பாடியவே கொடுத்தா பத்து லட்ச ரூபா!! Anish J P1 point- தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - தமிழக முதல்வர் ஸ்டாலின்
அதை தானே சாதி முத்திரை குத்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். அங்கே என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது) மேலே தெரிவிக்கபட்ட கருத்து போல் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் நடைமுறைபடுத்துவதே சரியான தீர்வு1 point- குட்டிக் கதைகள்.
1 pointShanmugaraj satheeshkumar · கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்.... முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..1 point- கருத்து படங்கள்
1 point1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் சிமி பினலில் தென் ஆபிரிக்கா கூட நாளையிண்டைக்கு விளையா போகினம் வெற்றி வாய்பு அதிகம் தென் ஆபிரிக்காவுக்கு ஆனால் அப்கானிஸ்தான் இந்த உலக கோப்பையில் நிறைய மாஜிக் காட்டி விட்டார்கள் அதே போதும்............................... தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தானை வென்று பினலுக்கு போகும் அதில் சந்தேகம் இல்லை தென் ஆபிரிக்க தொடக்க வீரர் விராட் கோலி போல் ஏன் தான் மைதானத்துக்கு வருகிறார் தெரிய வில்லை ஹா ஹா வருவதும் பந்தை வீன் அடித்து விட்டு அவுட் ஆகுவது . அதையே தான் இந்தியா வீரர் விராட் கோலி இந்த உலக கோப்பையில் தொடர்ந்து செய்கிறார்..............................1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நான் போன இடம் சின்ன இடமில்லை. 1000,2000 ஆயிரம் மொய் வைக்கிற பெரீய இடத்து பங்சன். 😎1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வரேக்கை சொல்லிட்டு வாறன்.1 point- மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுககள் நீதிகோரி போராட்டம்!
தவறுகளை ஏற்று அதனை எதிர்காலத்தில் தவிர்க்க முயற்சி எடுக்கும் மன நிலை கூட இலங்கையினாலும் முடியவில்லை, அந்த மனநிலைக்கு மக்களும் தயாராகவில்லை ஏனென்றால் அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது நேரடி பங்காளர்களாகவும் அதனை வரவேற்ற நிலையில் இருந்தவர்களுமே பெரும்பான்மையானவர்களாக இருந்துள்ளாகள். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இது நிகழ்கிறது பச்சிளம் குழந்தைக்லள கொதிக்கும் தாரில் போடுவதும் அடுப்பில்லிருந்த சூடான தோசை கல்லில் போட்ட பெளத்த தர்மத்தினை பின்வற்றுபவகளாக அதே நேரம் எங்கோ காசாவில் நிகழும் படுகொலைகளுக்காக கவலைப்படும் மிக மனித நேய சமூகமாக பாசாங்க் காட்டும் அதே வேளை மிகவும் மோசமான மிருகத்தனமாக தனது பிராந்தியத்தில் ஒரு பிரிவு மக்களின் மேல் நடந்து கொண்ட மிருகங்கள் வெளிநாடுகளில் நடக்கும் மனித உரிமைகளுக்காக முக்ட்லை கண்ணீர் வடிக்கும் போலி மனிதர்கள் நிறைந்த தேசமாக இந்த காட்டுமிராண்டி தேசம் உள்ளது. இலங்கையினை பொறுத்தவரை இவை சாதாரண நிகழ்வுகள் எனும் மன நிலையில் இருக்கும் இவர்களால் எவ்வாறு காசாவிற்காகவும் உக்கிரேனிற்காகவும் தாய்வானிற்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்க முடிகிறது, முதலில் மனிதர்களாக நடிப்பதையாவது குறைந்த பட்சம் நிறுத்தவேண்டும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்
ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் June 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. சாத்தியமான அளவுக்கு முரண்பட்டு நிற்பதற்கே தமிழ்க் கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனை அண்மைக் காலமாக தமிழர் அரசியலை ஆக்கிரமித்து நிற்கிறது. அது தொடர்பில் சில தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் அல்ல, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் கூட முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் யோசனைக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக ‘மக்கள் மனு’ என்ற சிவில் சமூக அமைப்பே முதலில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது. தற்போது அந்த முயற்சியை ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற புதியதொரு சிவில் சமூக அமைப்பு முன்னெடுக்கிறது. பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் பரந்தளவிலான ஆதரவை பெறமுடியுமாக இருந்தால் தமிழ்க் கட்சிகளை வழிக்கு கொண்டுவரலாம் என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் முக்கியஸ்தர்கள் நம்புகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான சிவில் சமூக அமைப்புக்கள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியல்வாதிகள் மீது நெருக்குதலைப் பிரயோகித்து அவர்களை ஒழுங்காக செயற்பட வைப்பதற்கு சிவில் சமூக அமைப்பை கட்டமைக்கும் முயற்சிகள் வரவேற்கப்படக்கூடியதே. அவற்றின் இலக்கு போரின் முடிவுக்கு பின்னரான காலப் பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் யதார்த்தங்களுக்கும் பொருத்தமானவையாக இருப்பது அவசியம். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிப்பதில் அர்த்தமில்லை. தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தற்போது தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக் காட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலை வடக்கிலும் கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றும் நோக்கிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் யோசனை முன்வைக்கப்பட்டது. தமிழ்க்கட்சிகள் உறுதியான முடிவை எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ் மக்களின் இறைமை, பாரம்பரிய தாயகம் மற்றும் மக்களை ஐக்கியப்படுத்தி ஒரு தேசமாகக் கட்டியெழுப்புதல் என்று சில கோட்பாடுகளை முன்வைத்து பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறது. பொதுவேட்பாளர் யோசனையை இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் இறுக்கமாக அடையாளப்படுத்தி பிரசாரங்களை செய்வதால் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டு ஆதரவான கருத்துக்களை அவ்வப்போது கூறுவதற்கும் தவறுவதில்லை. பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி இறுதியில் சாத்தியமில்லாமல் போகும் என்று நம்புகின்ற சில அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் தங்களை மிகவும் சாதுரியமானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதுவும் உண்மை. பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் பின்னணியில் இருக்கக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிச்சக்திகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின்றன. தென்னிலங்கையின் குறிப்பிட்ட ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு தந்திரோபாயமே இது என்று ஆரம்பம் முதலிருந்தே சந்தேகிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய அரசியலின் சமகால மையமாக பொதுவேட்பாளரை காட்சிப்படுத்துவதில் தமிழ் மக்கள் பொதுச்சபை முனைப்புக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, தெளிவான அரசியல் கோரிக்கைகளை இன்னமும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்கள் இன்று வேண்டிநிற்பது என்ன என்பதை ஜனாதிபதி தேர்தலின் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக்காட்டிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட சக்திகள் தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றன. வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் 1977 ஜூலை பொதுத்தேர்தலை தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு ஆணையைப் பெறுவதற்கான ஒரு வாக்கெடுப்பாகவே வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் முன்கொண்டு சென்றார்கள். அந்த தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற அந்த தலைவர்களிடம் அடுத்து என்ன செய்வது என்ற எந்த திட்டமும் இருக்கவில்லை. அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலம் அண்மைக்கால வரலாறு. அதேபோன்ற வரலாறு மீண்டும் திரும்பிவரக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்களாக பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவாகப் பேசும் அரசியல்வாதிகளும் புதிய சிவில் சமூக முக்கியஸ்தர்களும் மனதிற்கொள்ள வேண்டும். அதேவேளை, பொதுவேட்பாளரை தெரிவுசெய்வதற்கான செயன்முறை குறித்து ஏற்கெனவே சில தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன. பொதுவேட்பாளர் ஒரு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் கூறவிரும்பும் செய்தியின் ஒரு அடையாளமாக மாத்திரமே இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பொதுவேட்பாளர் ஒரு அரசியல் துறவியாக இருக்கவேண்டும். ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் துறவிகளாக இருப்பவர்களில் சிலர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் உத்தேச பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான வாக்குகளைப் பெறும் பட்சத்தில் அவர் அரசியலில் ஆர்வம் காண்பிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அத்தகைய ஒரு ‘அரசியல் துறவியை’ தமிழ்ச் சமூகத்தில் கண்டுபிடிக்க முடியுமா? ஒரு கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது பொதுவேட்பாளர் வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்குகளைப் பெறுவாரேயானால், தமிழ் மக்களின் எதிர்கால தலைவராக அவர் அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிக்கமுடியாது. இது குறித்த சந்தேகம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவர்களில் பலர் மத்தியில் பொதுவேட்பாளர் விடயத்தில் உற்சாகமான ஒரு மனநிலையைக் காணமுடியவில்லை. பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய ஆதரவைப் பொறுத்து தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு புதிய அரசியல் கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பையும் எளிதில் நிராகரித்துவிட முடியாது. கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிய வருகிறது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவும் முரண்பாடு ஜெய்சங்கர் முன்னிலையிலும் வெளிக்காட்டப்படடிருக்கிறது. மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பொதுவேட்பாளர் விவகாரம் ஒரு ஆலோசனைக் கட்டத்திலேயே இன்னமும் இருக்கிறதே தவிர, உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் அது தொடர்பில் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் தெரியவந்தது. அதேவேளை, பொதுவேட்பாளர் யோசனைக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று வர்ணிக்கும் ஒரு போக்கும் காணப்படுகிறது. இது தமிழர் அரசியலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒரு வக்கிரத்தனமான அரசியல் போக்கின் ஒரு தொடர்ச்சியான வெளிப்பாடே தவிர வேறு ஒன்றுமில்லை. தமிழ்த் தேசியம் என்பது வலுவானதாக இருக்கவேண்டுமானால், தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலப்பரப்பும் அதன் மக்களின் இருப்பும் இன்றியமையாதவை. தங்களது சொந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது சந்ததியினருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அத்தகைய ஒரு சூழ்நிலை வடக்கு, கிழக்கில் இல்லை. பெரும்பாலான தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்வதில் நாட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலைவரம் தமிழ்ப்பகுதிகளின் குடிப்பரம்பலுக்கு பாரதூரமான ஆபத்தை தோற்றுவிக்கக் கூடியதாகும். வடக்கு, கிழக்கில் தமிழர்களில் எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்வதற்கு விரும்புகிறார்கள் என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினால் பயனுடையதாக இருக்கும். பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவை திரட்டுவதில் ஈடுபட்டிருக்கும் சிவில் சமூக அமைப்பு புலம்பெயர்வதில் தமிழர்கள் காட்டும் ஆர்வத்தின் ஆபத்தையும் மக்களுக்கு விளக்கிக்கூறுவதில் கவனம் செலுத்தினால் கூடுதல் பயனுறுதியுடைய ஒரு பணியை செய்வதாக அமையும். இது இவ்வாறிருக்க, ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தின. ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் 13 வது திருத்தத்தை தங்களது எதிர்கால அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்திருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெடுகவும் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 வது திருத்தத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இன்றைய புதிய சூழ்நிலையை தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறு அணுகப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி. 13 வது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறும் தமிழ்க் கட்சிகள் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை கோரிவருகின்றன. அவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாக தமிழ்க்கட்சிகள் நினைக்கமுடியாது. அந்த திருத்தம் தொடர்பில் மாத்திரமல்ல பொதுவில் அதிகாரப் பரவலாக்கம் குறித்தே தப்பபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் உள்ள பிரதான அரசியல் சக்திகள் நேர்மறையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தும் அரசியல் விவேகம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இருக்கவேண்டியது அவசியம். மூன்று பிரதான வேட்பாளர்களும் எடுத்திருக்கும் நிலைப்பாடு 13 வது திருத்தம் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கும் எதிர்மறையான அபிப்பிராயத்தை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கு உதவுமேயானால் அது பெரிய காரியமாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலில் இந்த மூன்று வேட்பாளர்களில் எவர் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தாலும் அவர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மற்றைய இருவரும் அதை எதிர்க்கமுடியாமல் போகும். அவர்கள் மூவரிடமும் தமிழ்க் கட்சிகள் அதற்கான உறுதிமொழியை தேர்தலுக்கு முன்னர் பெறுவது விவேகமான ஒரு அணுகுமுறையாக இருக்கும். இந்த வேட்பாளர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி ஆட்சிமுறையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைப்பார்களா? ஒற்றையாட்சி முறையை மாற்றுவதற்கு இணங்குவார்களா? என்றெல்லாம் சில தமிழ்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவர்களின் அரசியல் விவேகம் குறித்து என்ன கூறுவது என்றே புரியவில்லை. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கே தயாரில்லாமல் இருக்கும் கொழும்பு அரசாங்கங்களிடம் சமஷ்டித் தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று முன்னைய ஒரு இலங்கை விஜயத்தின்போது ஜெய்சங்கர் தங்களிடம் கேள்வியெழுப்பியதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார். இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால் அந்த திருத்தத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கூறுபவர்களிடம் ஒரேயொரு கேள்வி. நாம் விரும்புகின்றோமோ இல்லையோ இன்று இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்க சட்டம் என்றால் அது 13 வது திருத்தம் மாத்திரமே. அதை இலங்கை அரசாங்கம் ஒன்று ஒழித்துவிட்டால் எதிர்காலத்தில் குறைந்த பட்சம் அந்த திருத்தத்தைப் போன்ற ஒன்றை அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடு ஒன்றையாவது கொண்டுவருவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை உங்களிடம் இருக்கிறதா? பயன்தராத பரிசோதனைகளையே மீண்டும் மீண்டும் செய்துபார்த்து வேறுபட்ட விளைவுகளை எதிர்பார்க்கும் ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்கள் இனிமேலும் இருக்கக்கூடாது. https://arangamnews.com/?p=109041 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மிம்ஸ்ச செய்தவன் சரியா செய்து இருக்கிறான் அவங்கட LPL யாரும் பெரிசா பார்ப்பது கிடையாது.........................1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் நெருப்படி விளாசலான 41 பந்துகளில் 92 ஓட்டங்களுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 76 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தாலும், பிற துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து ஆடாததால், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பிறருக்குப் புள்ளிகள் கிடையாது. 51வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 107 2 ரசோதரன் 105 3 ஈழப்பிரியன் 101 4 சுவி 98 5 கந்தப்பு 97 6 கோஷான் சே 97 7 நந்தன் 95 8 நீர்வேலியான் 93 9 குமாரசாமி 92 10 கிருபன் 92 11 எப்போதும் தமிழன் 92 12 தமிழ் சிறி 90 13 P.S.பிரபா 89 14 வாதவூரான் 88 15 வாத்தியார் 88 16 நிலாமதி 87 17 அஹஸ்தியன் 87 18 வீரப் பையன்26 86 19 ஏராளன் 85 20 தியா 80 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அது விஷம் என்று விற்கிறவனுக்கு தெரியும். 25 வருசமாக பொலிஸ் பிடிக்காததும் அதிசயம்தான். வெள்ளி விழா கொண்டாட வேண்டியதுதான். 😂1 point- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
90வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு கோல் அடித்தது. ஜேர்மனி - 1 : சுவிஸ் - 11 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண நிகழ்வு உங்களின் சந்திப்புக்கள் . சொந்த முறை இவை அனைத்தையும் அழகாய் எழுதி இருந்தீங்கள் அக்கா 🥰🙏. தமிழ் சிறி அண்ணா எனக்கு கடந்த வருடமே சொன்னார் நீங்கள் அவரின் சொந்தம் என்று . இன்பமோ துன்பமோ எனது மூத்த அண்ணன் போல் தமிழ் சிறி அண்ணா கூட எதையும் பகிர்ந்து கொள்வேன். தமிழ்சிறி அண்ணாவும் ஒளிவுமறைவு இல்லாம எல்லாத்தையும் சொல்லுவார் . கள்ளம் கவடம் இல்லாம பழகும் நல்ல மனிதர் நல்ல உறவு🥰🙏 ........................... தமிழ் சிறி அண்ணா வயதில் எனக்கு மாமா மார் இருக்கினம் யாழில் இணைந்த காலம் தொட்டு அண்ணா என்று கூப்பிட்டதால் இன்று வரை அண்ணா என்று தான் தமிழ் சிறி அண்ணாவை அழைக்கிற நான் இன்னொரு முக்கியமான மேட்டார் ஈழத்து அரவிந்த சாமிய யாழில் எல்லாரும் தாத்தா தாத்தா என்று தான் அழைப்பது ஆனால் அவரின் வயதுக்கும் இளமைக்கும் அவர் தாத்தா கிடையாது யாழில் 2008களில் இணைந்த காலம் தொட்டு இப்ப வரை தாத்தா தாத்தா என்று கூப்பிட்டு பழகி போச்சி அந்த பழக்கத்தை கைவிட முடியாது , அது வேற யாரும் இல்லை உங்கட அண்ணா குமாரசாமி.................................. தமிழ்சிறி அண்ணாவின் மகன் அழகாய் தமிழில் கதைக்கிறார் என்று எழுதி இருந்தீங்கள் உண்மையில் வாசிக்க சந்தோஷமாய் இருந்தது...................இப்படி மற்ற பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தால் ஆயிரம் வருடம் ஆனாலும் புலம்பெயர் நாட்டில் தமிழ் அழியாது🙏🥰......................1 point- கருத்து படங்கள்
1 point- இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
உண்மை தான் இந்தியர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டவரும் தங்கள் வசதிக்கேற்ப சம்பளம் கொடுப்பார்கள். 85 இல் நான் ஜெர்மனி வந்து முதல் வேலை செய்தது இத்தாலி பீசா கடை ஒரு நாள் பத்து மணி நேரம் வேலை நாள் சம்பளம் 20 ஜெர்மன் மார்க் அதாவது மணித்தியாலம் இரண்டு மார்க் இப்போது கட்டாய சம்பளம் மணித்தியாலம் 12 யூரோ வேலை தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இந்தச் சம்பளம் கொடுத்தே ஆக வேண்டும்🙃1 point- கருத்து படங்கள்
1 pointஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும், ஜனாதிபதி ரணிலும்... கொழும்பில் யோகா செய்தபோது.....1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
இவர்கள் எல்லாம் இனம்,மொழி,குடும்பம் எல்லாம் கடந்த ஞானிகள் ளப்பா...1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஹாஹா...... மோதிரம் போடவா கழற்றவா கடத்தல்? இன்றிலிருந்து இவர்கள் மூவருக்கும் எங்கும் எதிலும் அழைப்போ, அனுமதியோ இல்லையாம். யாரையாவது இவர்கள் சந்திக்க உள்ளே வந்தாலும் உள்ளே அழைத்து தனிப்பட்ட வழியில் பலத்த சோதனையும் கேள்விகளுமாம், ரகசிய கமரா வேறயாம். இதையெல்லாம் தாண்டவேண்டுமென்றால் இவர்கள் கர்ப்பிணிப்பெண் வேடந்தான் போடவேண்டும். இருந்தாலும் இவர்களின் முழிக்கிற முழி காட்டிக்கொடுத்துவிடுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு.1 point - அப்போதைக்கு இப்போதே ....... - சுப.சோமசுந்தரம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.