Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்18Points20018Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்13Points2954Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்12Points3055Posts -
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்8Points1487Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/03/24 in all areas
-
சம்பந்தர் காலமானார்
8 pointsகல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும் போது உலகம் போற்றக் கூடியவர்களாகவே இருந்தார்கள். வாழைப்பழத்தில ஊசி ஏத்துற மாதிரி நாசூக்காக உங்கள் எரிச்சல்களைக் கொட்டாதீங்கள்.8 points
-
குறுங்கதை 6 -- சிலந்தி வலை
5 pointsசிலந்தி வலை ---------------------- காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன். சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம். இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே. பல போதைப் பொருட்களின் வீரியத்தை, தாக்கத்தை அறிய அவற்றை சிலந்திகளுக்கு கொடுத்து அதன் பின்னர் அவை பின்னும் வலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவை பின்னியவை எல்லாமே கோணல், ஓட்டை வலைகள். ஒரு புழு பூச்சியும் அங்கே சிக்காது. இந்த ஆராய்ச்சி அறிக்கையின் பின்னர் அந்தக் குறிப்பிட்ட போதை மருந்துகளின் விற்பனை குறைந்ததா அல்லது கூடியதா என்ற தரவுகளை எவரும் வெளியில் விடவில்லை. சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர். எல்லா சிலந்திகளும் வலை பின்னித் தான் இரையை பிடிக்கும் என்றில்லை. கொய்யா மரத்தில் ஏறி, அடுத்த கொப்பில் கைவைக்க, அங்கே ஒரு புலி முகம் நிற்க, சர்ரென்று சறுக்கி கீழே வந்து, உள்ளுக்குள் போயிருக்குமோ என்று பயப்பட, அந்தப் பயத்தில் எல்லா இடமும் ஏதோ ஊர்வது போன்று உணர்வு வர, பதறி அடித்து எல்லா உடுப்புகளையும் கழட்டி எறிந்த நிகழ்வும் உண்டு. புலிமுகம் அப்படியே மேலே அந்தக் கொப்பிலிருந்தே இந்தக் கூத்தை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். வீட்டின் முன் வாசலுக்கு வெளியே இரண்டு பக்கங்களிலும் வரிசையாக ஒரு பத்து அடிகளுக்கு பூச்செடிகள். எல்லாமே ரோஜாவின் வகைகள் தான். உயர்த்தி மண் போட்டு, அதற்கு கான்கிரீட்டால் எல்லை போட்டு வளர்க்கப்படுகின்றன. நடுவால் போய் வரும் பாதை. நித்திரைக்கு போக முன் வெளியே எட்டிப் பார்த்து விட்டு வருவோமே என்று போனேன். முகத்தில் அடித்தது ஒரு சிலந்தி வலை. பின்னேரம் இது இங்கே இருக்கவில்லை. அதற்கிடையில் முழு வலையை ஒரு சிலந்து கட்டி விட்டதா என்று ஆச்சரியமாக இருந்தது. முதலே வேறு எங்கோ கட்டி வைத்து, அப்படியே தூக்கி வந்து, இரண்டு வரிசை பூச்செடிகளுக்கும் இடையில் பொருத்தும் தொழில்நுட்பமாகவும் இருக்குமோ என்றும் ஒரு யோசனை வந்தது. முகத்தில் பட்டு அறுந்த சிலந்தி வலையில் இருந்து ஒரு சிலந்தி கீழே விழுந்து ஓடுவது தெரிந்தது. 'அடப் பாவமே....... என்னால் இதனுடைய இன்றைய இரவுணவு இல்லாமல் போய் விட்டதே.........' என்று பார்த்து நிற்க, திடீரென்று பூச்செடி ஒன்றின் அடியிலிருந்து தோன்றிய பல்லி ஒன்று அதன் நாக்கை நீட்டி சிலந்தியை வளைத்து எடுத்துக் கொண்டது.5 points
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
5 points
- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford and Bow டெவினா பால், தொழிற் கட்சி Devina Paul, Labour Party Candidate for Hamble Valley கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam மயூரன் செந்தில்நாதன், சீர்திருத்த யுகே Mayuran Senthilnathan, Reform UK Candidate for Epsom & Ewell கமலா குகன், லிபரல் டெமாக்ராட்ஸ் Kamala Kugan, Liberal Democrats Candidate for Stalybridge and Hyde நரனீ ருத்ரா-ராஜன், பசுமைக் கட்சி Naranee Ruthra-Rajan, The Green Party Candidate for Hammersmith and Chiswick4 points- சம்பந்தர் காலமானார்
3 pointsஅவருக்குத் தெரியாமல் அவரது கையில் சிங்கக்கொடியைக் கொடுத்தது போல், திருகோணமலையில் புலிக்கொடி என்று தெரியாமலே அந்தக் கொடியை அவர் ஏற்றி இருக்கலாம் என்றொரு வாதத்தையும் வைக்க முடியும் அல்லவா?3 points- இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points- குறுங்கதை 6 -- சிலந்தி வலை
3 pointsஓரிரு மாதங்களுக்கொரு தடவை வீட்டுக்குள் போகும் நம்ம நிலமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்க சார். கொண்டு போகும் பொதிகளை வாசலில் வைத்துவிட்டு நீச்சல் குளத்தில் நீச்சலடித்தது போல கைகளை அசைத்துக் கொண்டு போனாலே உடம்பில் வலைகள் ஒட்டாமல் போகலாம். இதைவிட வாசலில் சிட்டுக்குருவி கூடுகட்டி இப்போ பெரிய குடும்பம் நடத்துகிறார்கள். இருண்ட பின் முன் கதவைத் திறக்கப் போக இப்ப என்னத்துக்கு கதவைத் திறக்கப் போறீங்கள் என்று மனைவியின் அதட்டல். ஏனப்பா என்ன நடந்தது? முன்னுக்கு ஏதோ வாகனச் சத்தம் கேட்டதே. உனக்கு கேட்கலையா? என்றால் யாராவது வந்தால் பெல் அடிப்பாங்கள் தானே இப்ப கதவைத் திறந்து சத்தம் போட குருவிகள் பயப்பிடப் போகுது என்கிறா. இனி ஆட்களைக் காணலையே என்று என்னவெல்லாம் வந்து குடியேறப் போகுதோ?3 points- சம்பந்தர் காலமானார்
3 pointsசம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம். வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா? தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்? முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர். இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர். அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும். டொட்.3 points- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
கிழக்கிலும் மேற்கிலும் ----------------------------------- கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும். 'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .........' என்று இழுத்தேன். 'ஓ....... சிலோன்....' என்று என் பதிலைத் திருத்தி விட்டு, அப்படியே தலையை மேலும் கீழும் அசைத்து விட்டு அருகில் இருந்த பெஞ்சில் இலகுவாக அமர்ந்தார். இந்த லாவகத்தை நான் எங்கோ பார்த்திருக்கின்றேன், ஆனால் எங்கேயென்று சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை. 'கரிபியன்........' என்றார் அவர். அதே தான், அவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன். சிறுவனாக ஊரில் இருந்த காலங்களில் மேற்கிந்திய அணி தான் என் அணி, விவ் ரிச்சர்ட்ஸ் தான் என் வீரர். அவர் வந்து நிற்கும் தோரணையே 'இந்த ஊரில் எங்களுடன் போட்டி போட யாராவது இருக்கிறீர்களா............' என்று கேட்பது போல இருக்கும். அந்த நாட்களில் அந்த அணியின் மீது ஒரு கிறக்கத்தில் கிடந்தோம் நாங்கள் பலர். அதே தொனி தான் இவரிலும் தெரிந்தது. பின்னர் தினமும் கதைக்கத் தொடங்கினோம். கிரிக்கெட்டில் ஆரம்பித்த கதைகள் பின்னர் அப்படியே தனிப்பட்ட விடயங்களுக்கு தாவியது. என்னிடம் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு பாதையில், சாதாரணமாக ஒரு நடை நடந்தது போன்றது என் அனுபவங்கள். அவரோ அதற்கு எதிர். அங்கு ஒரு காவலராக ஒரு காட்டில் வேலை செய்திருக்கின்றார். காட்டை கொள்ளை அடிக்க வருபவர்களுடன் ஓயாது போராடுவது தான் அவரது வாழ்க்கையாக இருந்திருக்கின்றது. காட்டின் ஊடாக ஓடும் ஆற்றில் முதலைகள் போன்று வேடமிட்டுக் கூட 'கரிபியன் வீரப்பன்கள்' வந்துள்ளார்களாம். நிஜ முதலைகள் மனித முதலைகளை தண்ணீரில் அமுக்கிய கதைகளையும் சொன்னார். 'நேற்று சிலோனைப் பற்றி ஒரு புத்தகம் வாசித்தேன்.....' என்றபடி ஆரம்பித்தார் ஒரு காலையில். உங்கள் இருவர் மீதும் தப்பில்லை என்றார். யார் அந்த இருவர் என்று நான் கண்களைச் சுருக்கினேன். சிங்களீஸ் அன்ட் டமில்ஸ் என்றார். முழுத் தப்புமே பிரிட்டிஷ் அரசின் மேல் தான் என்றார். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லா நாடுகளிலும் இதையே செய்தனர் என்றார். சிறுபான்மையை உயர்த்தி, பெரும்பான்மையை தாழ்த்தி, பின்னர் அப்படியே ஒரு நாள் இரவோடிரவாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் என்று. வெஸ்ட் இண்டீஸையும் அவர்கள் தானே ஆண்டனர், அங்கேயும் இப்படியா செய்தனர் என்றேன் நான். நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், நீங்கள் ஈஸ்ட் இண்டீஸ், இதன் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியுமா என்று கேட்டார். இதுக்கு என்ன பெரிய அர்த்தம் தேட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் உலகின் மேற்கில் இருக்கிறீர்கள், நாங்கள் உலகின் கிழக்கில் இருக்கின்றோம், அது தானே என்று கேட்டேன். கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார், 'இதன் அர்த்தம் நீங்கள் கிழக்கில் இருக்கும் அடிமைகள், நாங்கள் மேற்கில் இருக்கும் அடிமைகள்.' அப்படியே இன்னும் ஒன்றும் சொன்னார்: இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லாதே, கரிபியன் என்றே சொல்லு என்று.2 points- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
இது பிரித்தானிய தேர்தல் ராசா2 points- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
கிருஸ்ணி ரசிகரன் தொழிற்கட்சியில் கட்சியில் போட்டியிடுகின்றார்.Sutton&Cheam2 points- திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
ஆமாம் சரி தான் சற்று முன் முகநூலில். வாசித்தேன். சின்ன வீடு குறிப்பு வரைக’ ? பதில. தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து போட. .......... கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் சின்ன வீடு .......2 points- "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!" [இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!!] தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த இரா சம்பந்தன், தந்தை செல்வா முதல் இன்றைய தலைமுறையினர் வரை அனைத்துக் காலங்களிலும் கை கோர்த்துப் பயணித்த ஒரு தலைவராக திகழ்ந்தவர், இன்று [30 ஜூன் 2024] ஞாயிறு இரவு 11 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமாகியிருக்கின்றார். என்றாலும் அன்று தொடக்கம் இன்று வரை, தமிழர் பிரிந்து பிரிந்து போவதைத் தவிர, ஒன்று படுவதைக் காணவேயில்லை. ஆனால் ஒரு தற்காலிகமாக அவரின் மறைவில் எல்லா தமிழ் தலைவர்களும் ஒரே கருத்தில் அவரின் புகழ் பாடுவதையும் அஞ்சலி செலுத்துவதையும் காண்கிறோம் . அது ஏன் நிரந்தரமாகக் தொடரக் கூடாது? அப்படியான ஒரு ஒற்றுமை, ஒன்றுகூடல், தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நிரந்தரமாக நாம் ஒன்றுபடவில்லை. இனி இதை எங்கு காண்போம்? வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது. என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது . அது, அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது. சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55] யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார் . “பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்” பெருமையுடைய செல்வத்தையும், பெரிய பெயரையும், வலிய முயற்சியையும், வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம் போல என்கிறது. அதாவது, போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். மேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாகக் பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை. இப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா ? ஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று இப்பாடலில் கூறுகிறார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." [புறநானூறு 58] நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. இன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். பிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக என்கிறது! இதை நாம் இன்னும் உணர்ந்தோமா ? தமிழர் கூட்டணி சூரியன் போல் கதிர்களை வீசாமல், ஒவ்வொரு கதிராக , எதோ ஒரு கதிரைக்கு உடைந்து போனது மட்டும் அல்ல, அப்படி உடைந்ததில் ஒன்றான தமிழ் அரசு என்ற வீடு கூட இரண்டாக உடைந்திடுமோ என்ற நிலைக்குப் போகிறது. எனவே, இரா. சம்பந்தனுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் ஆவது, ஒற்றுமையாக, ஒரே குரலில் தமிழுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒன்றாக இணைவோம் , உறுதியாக இருப்போம் என்று சபதம் எடுப்பார்களா ?? அப்படி எடுத்தால் அதுவே உண்மையான அஞ்சலி !!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ: உலகின் முதல் சம்பவமாக பதிவு
ரோபோவுக்கு தலைக்குள் பதிவுகள் இடும்போது தற்கொலை எண்ணத்தையும் சேர்த்து வைத்திருப்பார்கள்.......! 😂2 points- குறுங்கதை 6 -- சிலந்தி வலை
2 pointsசிலந்தி, பல்லி என்று பலவற்றுக்கு வீட்டில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.சாப்பாடு போட்டு அவைகளை வளர்க்கத் தேவையில்லை. உங்களுக்கும் செலவில்லை. இருந்திட்டுப் போகட்டுமே. சிலந்தி வலையை வாசிக்கும் போது. “சிலந்தி வலையைப் பின்னி வைத்து சிறு சிறு பூச்சிகளைப் பிடிக்குதடா பலரை இங்கே பணிய வைக்க பணம்தான் வலையா உதவுதடா…” கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் முதலில் நான் தேடி வாசிப்பது உங்கள் குறுங்கதையைத்தான். உடன்பிறப்புக்களுக்கு கருணாநிதி நாள்தவறாமல் எழுதியது போல் ரசோதரனும் எழுத ஆசைப்படுகிறேன்.2 points- சம்பந்தர் காலமானார்
2 pointsஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் காத்திருந்து கஸ்டப்பட்டு பலர் வாந்தி எடுக்கிறார்கள்.2 points- சம்பந்தர் காலமானார்
2 pointsஅவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 2009இன் பின் புலிகள் இயக்கத்திலேயே 108 பிரிவுகள். ஆளாளுக்கு தேசியத்தை உரிமை கொண்டாடுகின்றார்கள். எந்த கோஷ்டி எந்தப்பக்கத்தால எப்போது யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ன செய்யும் என்று எவருக்கும் தெரியாது. தலைவர் வரப்போறார் வரப்போறார் வந்திட்டார் என்று 15 வருடங்களாக இன்னோர் தில்லாலங்கடி விளையாட்டுக்கள். கடைசியில் தலைவர் புதல்வி துவாரகாவின் மாவீரர் தின உரை. இங்கே பொதுநலத்தின் உச்சத்தை நாங்கள் காண்கின்றோம். தலைவர் அண்ணா மகன் சித்தப்பா இல்லை நம்புங்கள் என உரையாற்றுக்கின்றார். யாராடா நீ புதுசாய் முளைத்து உள்ளாய் என்று தடக்குப்படக்கு கருத்துக்கள். 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்தோருக்கு ஏதாயினும் ஒற்றுமையான நிகழ்ச்சிநிரலோ செயற்பாடோ உள்ளதா? இங்கே சம்பந்தரை கழுவி ஊத்த முன் சம்பந்தப்பட்டோர் தங்கள் ஊத்தைகளை கழுவி சுத்தம் செய்யலாமே. அடிப்படையில் 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உரித்துடையவர்கள் யார் எனும் பிடுங்குப்பாடு நடக்கின்றது. அது இலங்கை தமிழர்களை தாண்டி உரிமை கொண்டாடும் போட்டி இந்தியாவரை சென்றுள்ளது. கொஞ்சம் புத்திசாலிகள் விடுதலை புலிகளை போற்றி புழந்து சொத்து சேர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் தமிழ் ஓட்டுக்கள் மூலம் அரசியலில் இடம்பிடிக்க முயற்சித்தார்கள். ஆக மொத்தத்தில் புலிகள் நாமம் சொல்லி ஆளாள் தாங்கள் பிழைக்கும் வழியை பார்த்தார்கள். இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது.2 points- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல.2 points- சம்பந்தர் காலமானார்
2 pointsகருணா, பிள்ளையானுடன் ஒப்பிடேக்க ஆள் பரவாயில்லை தான். ஆனால் கருணா, பிள்ளையான் போன்ற கேடுகெட்ட போக்கிலிகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமை என்று கதைத்து அரசியல் செய்யுமளவு வெற்றிடத்தை உருவாக்கி கொடுத்ததில் தாத்தாவுக்கு பெரிய பங்குண்டு. இப்போது கூட ஹரிஸ், ரவுப் ஹக்கிம் போன்ற முசுலிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுதாபங்களுடன் கொண்டாடி தீர்க்க முசுலிம் மக்கள் அழாத குறையாக வழியனுப்பி வைக்க தமிழ் மக்களோ பிணத்தை தோண்டி எடுத்து கிழிக்கும் அளவுக்கு வசவுகளை வாங்கும் அளவுக்கு தனது இனத்திற்கு செய்த கசபோக்கிலி அரசியல் மட்டுமே தாத்தாவின் ஆயுட்கால சாதனை2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.
நீங்கள் பல இடங்களில் அடிக்கடி ஆட்சி அமைப்பதை பற்றியே கருத்தெழுதுகின்றீர்கள். ஒரு அரசியலில் அதுவல்ல முக்கியம். சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய நீங்கள் 16 வீதம் என்பதை கடந்து போகின்றீர்கள். உங்களை நினைத்து கொடுப்புக்குள் சிரித்து விட்டு இடம் மாறுவதை தவிர வேறு வழியில்லை. ஒரு நாட்டில் பதினாறு வீத அரசியல் வெற்றி என்பது குறைந்த விடயமல்ல.1 point- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
நெற்றியில் “பொட்டு” வைத்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருப்பார்கள் . 😁1 point- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
மிக்க மிக்க நன்றி ஈழப்பிரியன் & புலவர் கிருஸ்னி ரசிகரன் தொழிற் கட்சி Chrishni Reshekaron, Labour Party candidate for Sutton and Cheam சேர்க்கப்பட்டுள்ளது எல்லோருக்கும் நன்றிகள்1 point- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
பக்கத்து தொகுதி அவர் பெயர் விடுபட்டு இருந்ததால் பதிவிட்டிருந்தேன்.1 point- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
👍........ தொடர்ந்து பார்ப்பதாகவே உள்ளேன், அண்ணை. @வீரப் பையன்26 சாருடன் மல்லுக்கு நிற்க வேண்டுமே..........🤣.1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 pointவிளக்கமாக எழுதவில்லை என்றால் மருந்துச் சீட்டைப் பார்த்தே மண்டையைப் போட்டுடுவாங்களே.1 point- "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
உங்க தொகுதி போல இருக்கு?1 point- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
🤣....... சின்ன வயதில் நிறையவே பார்த்திருக்கின்றேன், அண்ணை. ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் பார்த்ததும் இல்லை, எந்த வீரர்களையும் தெரியாது. கிரிக்கெட்டில் ஒரு கோமா நிலை மாதிரி...... அமெரிக்கன் விளையாட்டுகள் பரிச்சயமாகி, நாளும் பொழுதும் அதனுடனேயே போய்க் கொண்டிருக்கின்றன. இப்பொழுது தான் முதன் முதலாக T20 விளையாட்டைப் பார்த்தேன்........1 point- குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
ஆகா கிரிக்கட்டைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னவர் இப்போ சிறுவயதிலேயே விவி ரிச்சர்ட் தான் என்கிறாரே. அப்போ இவரும் ஒரு கிரிக்கட் ஜாம்பவான் தான்.1 point- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
கிறிஸ்மசுக்கு இலங்கையிலும் லீவு, அமெரிக்காவிலும் லீவு, ஜேர்மனியிலும் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் அதிக இந்தியர்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் தீபாவளிக்கும் பாடசாலைகள் விடுமுறை இருக்கிறது. இது எல்லா மதத்தினரும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டுமென்ற முற்போக்கின் விளைவேயன்றி, மதத்தைத் தூக்கித் தலையில் வைக்கும் அரசின் செயல்பாடல்ல. ரஷ்யா மதச்சார்பில்லாத நாடென்று இன்று நீங்கள் சொல்லித் தான் கேள்விப் படுகிறேன். புரினுக்கு முட்டுக் கொடுக்கும் Patriarch Kirill எந்த மதத்தின் தலைவர்?1 point- சம்பந்தர் காலமானார்
1 pointசம்பந்தன் எங்கே பிரித்தார்? தமிழ் கூட்டமைப்பின் ஒரேயொரு நிரந்தர முகமாக இருந்தார். யார் பிரிந்து போனார்கள் என்று நியூசில் வாசிக்காமலா இங்கே எங்களுக்கு பாடமெடுக்கிறீர்கள்😂? வாகன இறக்குமதிப் பெர்மிற் விற்பனை, அரச வேலைக்கு கையூட்டு, இடைத்தங்கல் முகாமில் அடை பட்ட தமிழர்களை வெளியே எடுக்க கையூட்டு, இரகசிய கப்பம் என்று குஜாலாக இருந்த கூட்டமைப்பின் முன்னாள் ஆயுத தாரிகளான பா. உக்கள் சம்பந்தனின் அரசியலில் இதை இழக்க விரும்பாமல் பிரிந்தார்கள். வன்முறை அரசியல் சாரா சுமந்திரன் போன்றோர் இணைந்தார்கள். இதெல்லாம் உங்களுக்கு கூட்டமைப்பின் பிரிப்பாக தெரிகிறது, உங்கள் பார்வை அப்படி. எனக்கு இந்த முன்னாள் ஆயுத தாரிகளின் விலகலால் நல்ல திசையில் கூட்டமைப்பு நகர்வதாகத் தெரிகிறது.1 point- திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
ஏனுங்க உங்களுக்கு ‘ட’க்கு மேலே குற்றுப் போடப் பஞ்சியா? விருப்பமில்லையா? அல்லது மரியாதை நிமித்தம் விட்டிட்டீங்களா?1 point- "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
ஒற்றுமையாக இருக்க மக்கள் தயாராகத்தான் இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் தலமைகள்தான் மக்களைப் பிரித்தார்கள் என்பதுதானே உண்மை. அடக்குமுறைக்குள்ளான மக்கள் தங்களுக்கான மீட்பாளர்களாக தலமைகளைத்தான் பார்த்தார்கள். உயிர், உறவு, உடமைகளைத் தந்தார்கள். ஏமாந்து போனார்கள். இன்னும் இன்னும் கீழே அடித்தளத்துக்குள் தள்ளப்பட்டு துன்பத்துக்குள் இருக்கிறார்கள். இனி எதுவுமே இல்லை இப்படித்தான் வாழ வேண்டும் என்று அந்த வாழ்க்கையை பழகிக் கொண்டார்கள். ஆக நாங்கள் தேடும் உண்மையான தலமை எங்கே இருக்கிறார். எப்பொழுது தன்னை வெளிக்காட்டுவார்? கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காண முடியவில்லையே. தனது சரியான கொள்கைகள், செயற்பாடுகளைக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்துச் செல்லக் கூடிய தலமைக்காக நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன். அப்படி ஒரு நிலமை வந்தால் மக்கள் நிச்சயமாக ஒற்றுமையாக அணி அணியாக வருவார்கள்.1 point- "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
நானும் கண்டேன், நம்பினேன். ஆனால் அது எவ்வளவு காலம் ?. ஆறு ஆண்டுகளின் பின் போர்க்குழுக்கள் என ஒன்று ஒன்றாக முளைத்தன. அவைக்குள் தாக்களுக்கு தாங்களே போராடி அல்லது சாக்கடித்து மடிந்த இளைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் எத்தனை ? என்றாலும் பின் ஒரு குழு ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அரசியல் தலைமை 2009 வரை , உண்மையில் அவர்களின், கட்டுப்பாட்டால் நீடித்தது உண்மையே. அதற்கு வாக்கு போட்டவனில் நானும் ஒருவன். ஆனால் அந்த கூட்டின் உண்மையான முகம், 2009 மே திகளின் பின் ஒன்று ஒன்றாக சிதைந்து , வெளிவரத் தொடங்கியதும் உண்மையே!! அது மட்டும் அல்ல, ஒன்று படா போராளிகளின் பிரிவால், ஒன்றாக அன்பால், விட்டுக்கொடுப்பால் புரிந்துணர்வால் இணைந்து இயங்கா தலைமைகளால், இருந்ததையும் இழந்ததே உண்மை !! காட்டிக்கொடுப்புகளும் வஞ்சகங்களும் அங்கு கூத்தாடியதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது அப்படி என்றால், அந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது, எப்படி அழிந்தது என்பதை புரிந்து, ஒரு உண்மையான ஒற்றுமை ஒரு கொள்கை என்ற குடையின் கீழ், தலைவர் யாராக இருந்தாலும், அந்த கொள்கைக்காக, நோக்கத்துக்காக ஏற்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து1 point- குறுங்கதை 6 -- சிலந்தி வலை
1 pointஉங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........! 😂 பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......! அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!1 point- முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
முரல் மீன் குத்தி நபர் பலி! யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்தார். குருநகர் கடலில் நேற்று முன்தினம் (01) இரவு இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ எனத் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://thinakkural.lk/article/3051091 point- கருத்து படங்கள்
1 point1 point- "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாழ்வை இன்னும் காணோம்!"
300 BCஇற்குப் பிறகு அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்ற கருத்துப்பட எழுதியிருக்கிறீர்கள். 1977இல் கட்சி,மதம், ஜாதி வேறுபாடுகள் இன்றி, ஜி.ஜி. பொன்னம்பலம், ஜே.வி. செல்வநாயகம் இருவரினதும் மறைவுகளின் போது ஈழத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்றதை நான் கண்டிருக்கின்றேன்.1 point- சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நீங்களும் மறவன் புலவு போல் விசர் ஆடுகிரியல் இப்போ உங்களுக்கு தேவை அற்ற சண்டை வேணும் என்றால் இனி எங்களால் முடியாது எக்கேடு கெட்டால் என்ன என்று சொல்லி விட்டு அமைதியாகி விடுவதுதான் நல்லது .1 point- சம்பந்தர் காலமானார்
1 pointமறைந்த சம்பந்தர் அவர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு தலைவராக வாழ்ந்த காலம் அவர் பாராளுமன்றத்தில் அங்கத்தவத்தை இழந்த காலம் மட்டுமே . அதன் பின்னர் அவர் பாராளுமன்ற அங்கத்துவத்தை மீண்டும் வெற்றி பெற்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளின் தயவால் மட்டுமல்ல இந்தக் கூட்டமைப்புத் தான் விடுதலைப்புலிகளின் அரசியல் முகம் என்று அந்தத் தேர்தலில் தேர்தல் விஞ்ஞாபனமாக அறிவிக்கப்பட்டதாலும் தான். அந்த நேரத்தில் அந்தகக் கூட்டமைப்பை உருவாக்கிய சிவில் அமைப்புக்கள் அதன் தலைமை கிழக்கிலிருந்து வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபடியால் தான் மறைந்த சம்பந்தன் ஐயா அவர்கள் தலைவராக பரிந்துரைக்கப்பட்டு அவரும் புலிகளை மக்களின் பிரதி நிதியாக ஏற்றுக்கொண்டு அவர்களின் அரசியல் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட சம்மதித்து தலமைப் பதவியை ஏற்றுக் கொண்டார்.( இதையும் புலிகளின் வற்புறுத்தல் , கொலை மிரட்டல், ஏற்றுக்கொள்ளாவிட்டால் போட்டு வைத்திருப்பார்கள் என்ற பாணியில் யோசித்தால் அது உங்கள் யூகம் ) இது தான் உண்மை எப்படி எப்போது எதற்காக சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழர்களின் விடுதலைக் கோட்பாட்டிலிருந்து விலகினார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அன்றிலிருந்தே சம்பந்தர் ஐயாவும் தமிழர்களை அவர்களின் மனதை எப்படியெல்லாம் வெல்லலாம் எனக் கணித்து சந்தர்ப்பம் கிடைத்த நேரம் எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி விட்டு இப்படிச் சென்றுவிட்டார் . 50 களில் தமிழர்கள் திருகோணமலைக்கு யாத்திரை சென்று சிங்கள இனவாதத்திற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 70 களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனி நாடே தமிழர்களின் பாதுகாப்பு என நிறைவேற்றப்பட்டது 80 களின் பின்னர் 2009 வரை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முன்னிலை வகித்து ஈழப்போராட்டம் உலக அரசியலாக மாற்றம் பெற்றது இப்படியே தமிழர்களின் அரசியல் மற்றும் உரிமைப் போராட்டம் ஒரு முன்னேற்றத்திற்கான பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில்... 2009 க்குப் பின்னரும் ஈழத் தமிழர்களின் தலைமை என் கையில் தான் இருக்கும்.... இருக்க வேண்டும்...... என்ற ஒரே கொள்கைப் பற்றுடன் வாழ்ந்த சம்பந்தர் ஐயா அ தே ஈழத்து தமிழர்களின் உரிமைக்காக போராடிய அல்லது அந்த உரிமையை வென்றெடுக்க முன்னெடுத்த ஒரு போராட்டத்தை யாரும் தெரிந்தால் கூறுங்கள்1 point- திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
இனி தேவையே இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டது 😜1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குறுங்கதை 5 -- நட்சத்திரங்களுக்கு அப்பால்
நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது. நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார். நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை. 'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. 'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான். இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான். ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார். ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.1 point- முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
இது நடப்பது அருமை தான். பொதுவாக எகிறுபவை. அவை நீரில் இருந்து எகிறும் போது, காற்றுப்பை (swim / air bladder) நிரம்பி முழு உடலும் முறுக்கெடுத்து, கிட்டத்தட்ட நீண்ட ஆட்டிலறி ஷெல் போலத்தான் வரும். இந்த குடும்ப மீன்களால் (முரல், sword fish, மயில் மீன் (sail fish), பாய் மீன் (marlin குடும்பம்) இப்படியான இறப்பு அல்லது பலத்த காயம், அங்கங்கள் துண்டிக்கப்படுதல் அவ்வப்போது நடக்கிறது. பெரிய சீலா மீன் கூட தடித்த ஈட்டியாக வரும் தன்மை உள்ளது.1 point- சம்பந்தர் காலமானார்
1 pointஒரு வேளை டக்ளஸ் இறந்தால் இதைவிட மோசமாக திட்டுவார்கள்.. இந்த சோசல்மீடியா இணையம் இதைப்பற்றி எதுவுமே தெரியாத எங்கள் ஊரில் இருக்கும் பல அம்மா அப்பா பாட்டி தாத்தா அப்பத்தாக்கள் எவ்வளவு கேவலமாந்திட்டுவார்களோ அவ்வளவு கேவலமாக திட்டுவார்கள்.. எனக்கு தெரிஞ்சு மட்டும் சமாதான காலத்தின் இறுதிப்பகுதிகளில்(2004-2006) மட்டும் ஒரு முப்பது பேரை ஸ்கூட்டி பெப்பில் வந்து ஈபிடியினர் ராணுவப்புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து சுட்டிருப்பார்கள்.. சீலன் உட்பட எனது நண்பர்கள் மூன்று பேரை சுட்டிருந்தனர்.. என்னைக்கூட ஆள்மாறி தேடி வந்திருந்தனர்.. ஒரு மயிரிழையில் நான் வன்னிக்கு பின் காணியால் வெளிகிட்டு பஸ் ஏறி போனதால் தப்பினன்.. தேத்தண்ணிக்கடை கண்ணன், பலசரக்குக்கடை சின்ராசண்ணை, பிரபாகரன் பிறந்த நாளுக்கு பொங்கல் பொங்கிய எங்கூரு வர்த்த்க சங்கர்தலைவர், கப்பம் குடுக்காததால் சுடப்பட்ட நகைக்கடை அண்ணை, பஸ் ஓனர் பாலா அண்ணை, ஆட்டோ ஓடுற பொடியள் மட்டும் ஒரு பத்து பேர் வரும் எங்கட ஏரியாவில்.. வரலாற்றின் இடியமின் யாழ்ப்பாண மக்களுக்கு இந்த டக்ளஸ் உம் அவன் கூட்டமும்..1 point- குறுங்கதை 4 - நீர்க்கடன்
1 pointநீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங்கள் அம்மாக்களுக்கு நீர்க்கடன் செய்யாதோர் அதைச் செய்ய இது ஒரு நல்ல இடமும், நேரமும் என்றனர். எனக்கு இந்த நடைமுறை முற்றிலும் புதியதாக இருந்தது. இங்கு இப்படி எதுவும் நான் இங்கு இருந்த காலங்களில் நடந்ததேயில்லை. அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் ஒரு தடவை, 84 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், இராணுவம் எங்கள் ஊரையும், அயல் ஊர்களையும் சுற்றி வளைத்தது. பல இளைஞர்களை இராணுவம் கைது செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருந்தது. கைது செய்து கொண்டு வந்தவர்களை அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் அரைச்சுவர்க் கட்டிடத்தில் ஒரு சுவரைப் பார்த்து முழங்காலில் இருக்க வைத்திருக்கின்றது. பின்னர் அவர்கள் எல்லோரும் அந்த இராணுவத்தால் சுடப்பட்டார்கள். இதில் ஒருவர், சுடப்படுவதற்கு முன் அல்லது சுடப்பட்ட பின், அன்று அங்கு எவருமே உயிர் தப்பாதபடியால் எது உண்மை என்று என்றும் தெரியப் போவதில்லை, ஓடிப் போய் தீர்த்தக் கடலில் விழுந்து இறந்திருந்தார். நாங்கள் போய் பார்க்கும் போது கடலின் நிறம் அதன் நீல நிறமாகவே இருந்தது. அது தன்னை உடனேயே சுத்தப்படுத்தி விட்டு, கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. தீட்டே இல்லாத கடல். புரோகிதர் ஒரு தர்ப்பையை என் விரலில் கொழுவி விட்டு, இன்னொன்றை என் இடுப்பு வேட்டிக்குள் செருகி விட்டார். அப்படியே கடலில் இறங்கி, கிழக்கே பார்த்து அம்மாவை நினைத்து கும்பிட்டு விட்டு, இடுப்பில் இருக்கும் தர்ப்பையை கடலில் விடச் சொன்னார். கங்கா, யமுனா, காவேரி என்று ஏதோ சொன்னார். ஒரே கூட்டமாக இருந்தபடியால், ஒதுங்கி ஒரு ஓரமாகவே இறங்கினேன். நிமிர்ந்தால் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தது. அம்மாவை எப்படி கும்பிடுவது என்று தெரியவில்லை. தோட்டங்களுக்குள்ளாலும், ஒழுங்கைகளுக்குள்ளாலும் என்னை துரத்திக் கொண்டு பள்ளிக்கூடம் வரை கொண்டு வந்து விட்டுப் போன அம்மாவின் முகம் மட்டும் தான் மனதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளும் அடி விழவேயில்லை. இடுப்பில் இருக்கும் தர்ப்பையை எடுத்து கடல் நீரில் விடும் நேரத்தில், அதே இடத்தில் அன்றொரு நாள் முகம் குப்புற ஒருவர் மிதந்து கொண்டிருந்தது ஞாபகமும் வந்தது. அந்த நினைவையும் கலைக்காமல், அப்படியே தர்ப்பையை கடலில் விட்டேன்.1 point- குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
1 pointசாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என்று சொல்லி அந்தச் சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கி விட்டு, அவரின் பல பழைய விளையாட்டு மற்றும் அது சம்பந்தமான நிகழ்வுகளையும் சொல்ல ஆரம்பித்தேன். மிகவும் உற்சாகமானார். நான் அறியாத பல நிகழ்வுகளைச் சொன்னார். திருமணத்தின் பின் பலர் கழகம் மாறிய கதைகளைச் சொன்னார். பெண் வீட்டுக் கழகத்திற்கு மாறாமல் இருந்த ஒரு சிலரைப் பற்றியும் சொன்னார். ஓடிப் போய் தமிழ்நாட்டில் அகதிகளாக இருந்த காலத்தில், எங்களின் பல கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு அணியாகி, தமிழ்நாடெங்கும் போட்டியிட்ட கதையைச் சொன்னார். ஒரு தடவை அவர்களின் காவல்துறை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அடக்கமாக விளையாடியதை சொல்லிச் சிரித்தார். கதையின் நடுவே, நான் வேட்டியின் மேல் கட்டியிருந்த துவாயைக் காட்டி இது அந்த நாளில் சாரதாஸ் இலவசமாகக் கொடுக்கும் துவாய் என்றார். கட்டுக் கட்டும் போது இந்த துவாய்கள் பலவற்றை அவர்கள் இலவசமாக தருவார்கள் என்றார். கட்டு என்பது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலினூடு கடத்தப்படும் பொதிக்கான உள்ளூர் பெயர். துவாயை அப்பொழுது தான் சரியாகப் பார்த்தேன். மிகவும் சாதாரண நூல் துவாய். நீட்டாகவும் குறுக்காகவும் கோடுகள். மொத்தமே இரண்டு நிறங்கள் தான் அதில் இருந்தது. அதிலும் ஒரு நிறம் மிகவும் தனித்துவமானது. ராசவள்ளிக் கிழங்கை சீவிக் கழுவின தண்ணீரின் மெல்லிய நிறம். எனக்கு அந்த துவாயை மிகவும் வேண்டிய, நெருங்கிய ஒருவரே கொடுத்திருந்தார். புதிது என்று சொல்லியே கொடுத்தார், ஆனால் இலவசமாகக் கிடைத்தது என்று அவர் சொல்லவில்லை. அவர் கட்டு கட்டும் தொழிலில் என்றும் இருந்ததில்லை. யாரோ அவருக்கு இலவசமாகவே கொடுத்திருக்க வேண்டும். கதைத்து முடித்து விட்டு கிளம்பும் போது தனக்கு இப்ப எதுவுமே ஞாபகத்தில் தங்கி நிற்பதில்லை என்றார். என்னையும் மறந்து, இங்கு கதைத்தவற்றைக் கூட அநேகமாக மறந்து விடுவேன் என்றார். திரும்பவும் என்னை மறந்து விடப் போகின்றாரோ என்ற கவலை உடனே வந்தாலும், அது உடனேயே மறைந்து, அவரைப் பார்த்ததும், நீண்ட நேரம் கதைத்ததும் ஒரு இனிய நினைவாக உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள். திருவிழாவில், அதே இடத்தில் அவர் இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அருகில் போய் நின்றேன். அவருடைய கதையின் நடுவே என்னுடைய துவாயை மட்டும் இடைக்கிடை பார்த்துக் கொண்டேயிருந்தார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசின் ஆலோசனைகள் அரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நிராகரிப்பதென்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் சென்னையில் கூட்டாக முடிவெடுத்தனர். தமிழர் தரப்பில் பேச்சுக்களில் கலந்துகொண்டவர்களை இணைந்து, அரசின் ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு பாலசிங்கத்தினூடாகப் போராளிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சத்தியேந்ந்திரா, ஏனைய போராளிகள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசனைகளை நிராகரிக்கும் தமது அறிக்கையினை திம்பு விடுதியில் தயாரித்துக்கொண்டிருந்த அதேவேளை பேச்சுக்கள் தோல்வியடையவிருப்பதை ரொமேஷ் பண்டாரிக்கும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள். ஆவணி 17 ஆம் திகதி காலை திம்புவிற்குப் பயணமான ரொமேஷ் பண்டாரி அங்கு தமிழ்த் தரப்பினரைச் சந்தித்தார். அச்சந்திப்பு சுமூகமானதாக அமையவில்லை. தமிழ்த்தரப்பினர் தமது யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். ஆனால், தமிழர்களுக்கான தனிநாட்டிற்குப் பிரதியீடான தீர்வொன்றை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமையென்பதால், அரசே ஆலோசனைகளை முன்வைக்கவேண்டும் என்று தமிழ்த் தரப்பினர் வலியுறுத்தினர். இதனையடுத்து கடும் கோபம் கொண்ட பண்டாரி, தமிழ்த் தரப்பினரை உறுதியான நிலைப்பாட்டில் இருக்கமுடியாதவர்கள் என்றும், நெகிழ்ச்சித்தன்மையற்றவர்கள் என்றும் கடிந்துகொண்டார். "உங்களுடைய தேறாத கொள்கைகளைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று அவர்களை நோக்கி ஆவேசமாகக் கேட்டார் அவர். பண்டாரியின் ஆவேசமான பேச்சு நடேசன் சத்தியேந்திராவைச் சினங்கொள்ள வைத்தது. பண்டாரி பாவித்த சொற்கள் ஒரு இராஜதந்திரி பாவிக்கமுடியாதவை என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பண்டாரி கவலைப்படவில்லை என்றும் அவரைப் பார்த்துக் கூறினார் சத்தியேந்திரா. தமிழர்களை அடிமைகளைப் போல் பாவித்தே பண்டாரி பேசுவதாகவும் அவர் மேலும் கூறினார். இதனையடுத்து தமிழர்களைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அப்படிப் பேசவில்லை என்று பண்டாரி கூறினாலும், அன்றைய நிகழ்வு தமிழர் தரப்பினருக்கும் பண்டாரிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியிருந்தது. திம்பு அன்று அரச தரப்பினரையும் பண்டாரி தனியாகச் சந்தித்தார். ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசிய பண்டாரி, இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் புதிய யோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளையோ, இந்தியாவின் எதிர்பார்ப்புக்களையோ பூர்த்திசெய்யப் போதுமானவை அல்ல என்று கூறியதுடன், ஆலோசனைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், சென்னையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் யோசனைகள் ஒரு படி பின்னோக்கிச் சென்றிருக்கின்றன என்று கூறி தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபாரம்பரியத் தமிழ்க் கிராமமான திரியாயின் அழிப்பு தமிழ் மக்களை அவர்களின் பூர்வீகத் தாயகத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியும் திட்டத்தின் இரண்டாம் பாகம் ஆனி 1985 இல் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலையில் அமைந்திருக்கும் தமிழ் விவசாயக் கிராமம் திரியாய். முல்லைத்தீவு மாவட்டத்தினையும் திருகோணமலை மாவட்டத்தினையும் இணைக்கும் நிலப்பகுதியில் அமைந்திருக்கிறது இக்கிராமம். வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் இப்பூர்வீக தமிழ்ச் சைவக் கிராமத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றுவதன் மூலம் இவ்விரு மாகாணங்களுக்கும் இடையில் இருக்கும் நிலத்தொடர்பை துண்டித்துவிடலாம் என்பதே ஜெயவர்த்தன அரசாங்கத்தின் திட்டமாகும். 1985 ஆம் ஆண்டு ஆவணி 18 ஆம் திகதி இங்கிலாந்தில் இருந்துவெளியாகும் பத்திரிக்கையான சண்டே டைம்ஸில் திரியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரம் குறித்து அதன் செய்தியாளரான சைமன் விஞ்செஸ்ட்டர் எழுதுகிறார். திருகோணமலையில் இங்கிலாந்து காலத்தின் கடற்படை முகாம் அமைந்திருந்த பகுதியிலிருந்து வடக்காக சில மைல்கள் தொலைவிலேயே திரியாய் கிராமம் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இக்கிராமம் அமைதியாகக் காணப்பட்டதோடு, இப்பகுதியில் அமைந்திருக்கும் சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மரமுந்திரிகை உள்ளிட்ட தமது விளைச்சல்களையும், கால்நடைகளையும் கொண்டுவருவது வழமை. கிழக்கிலங்கையின் நிலப்பகுதி மிகவும் வரட்சியானதுடன், வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் பகுதியுமாகும். அதனால், இப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களிலிருந்து அதிகளவு விளைச்சலினைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால், இப்பகுதியில் இக்கிராமத்தில் வசிக்கும் 2000 விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையானவர்ககளாகக் காணப்பட்டனர். ஆனால், எவரும் பட்டினியினால் இங்கு வாடுவதில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வழியில் தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகிறார்கள். வறுமையாக இருந்தபோதும் இக்கிராம வாசிகள் அனைவருமே கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருபவர்கள். எப்போதாவது இருந்துவிட்டு இப்பகுதிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்துவரும் வாகன ஓட்டிகள் அவ்வபோது எதிர்ப்படும் கட்டாக்காலி யானைகளைக் கண்டு மிரள்வதுண்டு. ஆனால், இன்று திரியாயைப் பார்ப்பதற்கு எந்த உல்லாசப் பயணியும் வரபோவதில்லை. இன்று மட்டுமில்லாமல் இனி எப்போதுமே அவர்கள் இங்கு வரப்போவதில்லை. கடந்த ஆனி 15 ஆம் திகதியிலிருந்து உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் கிராமமான திரியாய் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீடும், கடைகளும், தோட்டங்களும், வயற்காணிகளும் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றன. வயல்களில் வெட்டிக் கொல்லப்பட்ட பசுக்களின் உடல்கள் இன்னமும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றன. சிலநாட்களுக்கு முன்னர்வரை இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மாட்டு வண்டிகள், மோட்டார்சைக்கிள்கள் என்பன உடைத்துச் சேதமாக்கப்பட்டு, புழுதி வாரியிறைக்கும் வீதியோரங்களில் துருப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. வயது முதிர்ந்த ஓரிரு பெண்கள், நடக்கமுடியாது படுக்கைகளில் குற்றுயிராய்க் கிடக்கும் வயோதிபர்களையும் சில சிறுவர்களையும் தவிர புதன் கிழமையன்று நடந்த கொடூரத்தினை நினைவில் வைத்திருக்க அங்கு வேறு எவரும் இருக்கவில்லை. அகோர நாளான அன்று காலை ஆண்கள் வயல்களுக்கு வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் பெண்கள் தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். திடீரென்று வானில் இரண்டு இராணுவத்தினரின் உலங்குவானூர்திகள் வட்டமடிக்கத் தொடங்கின. திரியாய்க் கிராமத்தின் மீது தாழ்வாகப் பறந்த அவை திடீரென்று மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடத் தொடங்கின. அச்சமும் அதிர்ச்சியுமடைந்த மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட குட்டையான பற்றைக்காடுகளுக்குள்ளும் அவற்றிற்கு பின்னால் காணப்பட்ட காடுகளுக்குள்ளும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் அவ்வாறு ஓடி ஒளிய முனையும்போது குச்சவெளியிலிருந்து கடற்கரை வீதி வழியாக இராணுவத்தினர் பஸ்களிலும், ட்ரக் வண்டிகளிலும் அப்பகுதி நோக்கி வரத் தொடங்கினர். சாதாரண நாட்களில் இப்பகுதிக்கு வரும் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பயணிகளை ஏற்றிச்செல்ல இந்த வீதியினை சாரதிகள் பாவிப்பதுண்டு. ஆனால், அண்மைக்காலமாக உல்லாசப் பயணிகளின் வருகையும் வற்றிப்போக, இப்பகுதியில் மிகப்பெரிய இராணுவ முகாமொன்றும் அமைக்கப்பட்டு விட்டது. முற்றான ஆயுதம் தரித்த இராணுவத்தினர் போர்க்களம் ஒன்றிற்குள் செல்வதுபோன்ற தயாரிப்புக்களுடன் பஸ்களிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் பலரிடம் மண்ணெண்ணை நிரம்பிய கான்களும், பற்றவைக்கும் தீ ஜோதிகளும் (Flame Throwers) காணப்பட்டன. வரிசையாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற இராணுவத்தினர் ஓலைகளால் வேயப்பட்ட வீட்டுக் கூரையின்மீது தாம் கொண்டுவந்த எண்ணையினை ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டே சென்றனர். எந்தவீடும் மிஞ்சவில்லை. வீடுகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துவிட்ட இராணுவத்தினர் அவற்றைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அப்பகுதியில் காணப்பட்ட சிறிய நூலகத்திற்குச் சென்ற அவர்கள், உள்ளேயிருந்த சிறிய தொகுதிப் புத்தகங்களை வெளியே எடுத்து வந்து தீமூட்டினர். அப்பகுதியில் காணப்பட்ட வயல்களில் விவசாயிகளால் பாவிக்கப்பட்டு வந்த உழவு இயந்திரங்களை ஒன்றாக இழுத்துவந்து தீமூட்டியதுடன், அவற்றின் பெட்டிகளையும் கொழுத்தினர். திரியாய்க் காடு தமது வீடுகளும், உபகரணங்களும், கால்நடைகளும் அழிக்கப்படுவதை அருகிலிருந்த காடுகளுக்குள் இருந்து அச்சம் உடல் முழுதையும் ஆக்கிரமித்து நிற்க அவதானித்துக்கொண்டிருந்தனர் அக்கிராமத்தவர்கள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமது கிராமத்திலிருந்து உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பலர் காடுகளுக்குள் நீண்டதூரம் ஓடினர். அப்படி ஓடியவர்களில் பலரை இன்றுவரை காணவில்லை. சுமார் 2000 பேர் கொண்ட அக்கிராமத்திலிருந்து காடுகளுக்குள் உயிர்காக்க ஓடி ஒளித்தவர்களில் வெறும் நூறு பேர் மட்டுமே இராணுவப் பேய்கள் கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்றபின்னர் எரிந்துபோய் மீதமாய்க் கிடந்தவற்றில் எதையாவது பாதுகாக்கலாம் என்கிற நப்பாசையில் இருட்டோடு இருட்டாக கிராமத்தினுள் சென்றனர். ஆனால், அங்கு எதுவுமே மீதியாக இருக்கவில்லை. எல்லாமே எரிந்து சாம்பலாகப் போயிருந்தது. ஒரு சில நெற்சாக்குகளைத்தவிர வேறு எவையுமே தீயின் நாக்குகளில் இருந்து தப்பியிருக்கவில்லை. பகுதியாக எரிந்துபோய்க்கிடந்த வீடுகளில் ஒரு சிலவற்றில் மக்கள் தங்கக் கூடிய அளவில் சில பகுதிகள் காணப்பட்டன. ஆனால், பாடசாலையும், தபால் அலுவலகமும் முற்றாக அவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. கிராமத்திலிருந்த இரு கடைகளும் முற்றாகச் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கிருந்த சிவபெருமானினதும் விஷ்ணுவினதும் கோயில் முற்றாக அழிக்கப்பட்டு விக்கிரங்களும் துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டிருந்தன. திருகோணமலைக்கு வடக்காக அமைந்திருக்கும் கடற்கரையோரம் திரியாயில் இருந்து உயிர் தப்பக் காடுகளுக்குள் ஓடி ஒளித்த பல தமிழர்கள் முள்ளியவளையினை நடந்தே வந்தடைந்தனர், அவர்களுள் சிலர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். இன்னும் சிலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள். ஆனால், சிலர் மீண்டும் தமது பூர்வீகக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தபோது திரியாயில் 1475 தமிழ்க் குடும்பங்கள் இருந்ததாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால், 1990 இல் இக்கிராமம் மீண்டும் அரச இராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இராணுவத்தினருடன் வாதிடும் சம்பந்தன் 2002 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில், யுத்த நிறுத்த அமுல்ப்படுத்தப்பட்டதையடுத்து திரியாயிலிருந்து தப்பியோடிய 25 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த இக்கிராமத்தினைப் பார்வையிடச் சென்றனர். கிராமத்தின் வாயிலில் இயங்கிவந்த பாடசாலையான தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த கடற்படை முகாமிற்கு அவர்கள் முதலில் சென்றனர். கிராமத்தினுள் சென்று பார்ப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இக்கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களே தமது இடங்களைப் பார்வையிட வந்திருக்கிறார்கள், ஆகவே அனுமதி தரவேண்டும் என்று சம்பந்தன் தொடர்ச்சியாக வலியுறுத்தவே, சம்பந்தனையும் இன்னும் இருவரையும் முகாமினுள் அழைத்துச் சென்ற கடற்படையினர், முகாமின் பிற்பகுதியில் காணப்பட்ட மேடான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கிராமம் அமைந்திருந்த திசைநோக்கிப் பார்க்குமாறு கூறினர். மீதிப்பேரை அருகிலிருந்த, இன்னும் முற்றாக அழிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்த வரலாற்றுப் பெருமைமிக்க வரத விநாயகர் கோயிலில் சென்று காத்திருக்குமாறு கடற்படை பணித்தது. முகாமினுள் சென்று தமது கிராமத்தைப் பார்வையிடச் சென்றவர்களைப் பெருஞ்சோகம் பற்றிக்கொண்டது. அழிக்கப்பட்ட திரியாய்க் கிராமத்தில் பற்றைகளுக்குள் அழிந்துபோன நிலையில் காணப்படும் தமிழர்களின் வீடு ஒன்று முகாமினுள் சென்றுவிட்டு வெளியே திரும்பி வந்த சம்பந்தனும் ஏனைய இருவரும், வெளியே தமக்காகக் காத்து நின்றவர்களிடம், "திரியாய் எனும் கிராமம் முற்றாக இல்லாது அழிக்கப்பட்டிருக்கிறது, அங்கு எதுவுமே இல்லை என்று கூறினர். அங்கு எதுவுமே இல்லை, வீடுகள் இல்லை, எமது முத்துமாரி அம்மன் கோயிலுமில்லை. பிள்ளையார் கோயிலின் சிலை மட்டும் தனியே நிற்கிறது. புத்தரின் படம் ஒன்றினை பிள்ளையாரின் உருவத்தின் மீது ஒட்டி வைத்திருக்கிறார்கள். அப்பெரிய கிராமத்தில் நிற்கும் ஒரே கட்டிடம் தமிழ் மகா வித்தியாலயம் மட்டும்தான். அதுகூட, கடற்படையினர் முகாமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதனால்த்தான் இன்னமும் இருக்கிறது" என்று கூறினர். அழிக்கப்பட்ட தமது கிராமத்தைக் கண்ணுற்றபோது வருந்திய தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், தான் அங்கு கண்டவற்றை விவரிக்கும்போது, மக்கள் திரும்பி அக்கிராமத்தினுள் வருவதைத் தடுப்பதற்காக அக்கிராமத்தை முற்றாக அழித்திருக்கிறர்கள் என்று கூறினார். 2000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீகத் தமிழ்க் கிராமம் திட்டமிட்ட முறையில் அரசினால் முற்றாக அழிக்கப்பட்டுக் கிடக்கிறது. 2004 ஆம் ஆண்டளவில் ஒரு சில தமிழர்கள் திரியாயின் அருகில் அமைந்திருக்கும் பகுதிகளில் குடியேறியிருந்தார்கள். வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் திரியாய் மக்கள் 1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி திம்புப் பேச்சுக்களுக்கு ஏதுவாக யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து தமிழ்க் கிராமங்களை அழிக்கும் தனது செயற்பாடுகளை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஆவணி 16 ஆம் திகதி ஹெக்டர் ஜெயவர்த்தன தனது சதியினை "புதிய ஆலோசனைகள்" எனும் பெயரில் திம்புவில் முன்வைத்தபோது, தமிழ்க் கிராமங்களின் முற்றான அழிப்பு மீண்டும் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்த் தரப்பும் ஹெக்டரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகள், "புதிய போத்தலில் ஊற்றப்பட்ட பழைய கள்ளு" என்று விமர்சித்திருந்தார் அமிர்தலிங்கம். தனது கட்சியினர் 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் நிராகரித்த அதே ஆலோசனைகளையே அரசாங்கம் மீளவும் கொண்டுவந்து காட்டுகிறது என்றும் அவர் கூறினார். தமிழர்களை அடிபணிய வைக்கும் முகமாக மிகக் கொடூரமான வன்முறைகளை தனது இராணுவத்தினரைக் கொண்டு தமிழர்கள் மீது ஏவினார் ஜெயவர்த்தன. திம்புவில் தன்னால் மும்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வைக்க வன்முறைகளைப் பாவிப்பதென்று அவர் உறுதிபூண்டார். ஆனால், 1977 ஆம் ஆண்டில் தான் தெரிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அவர் இதனைத்தான் செய்துவருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தன்னை எதிர்த்த சிங்களவர்களையும் வன்முறைகள் மூலம் அடிபணியவைக்க முடியும் என்று அவர் நம்பினார். https://www.oaklandinstitute.org/sites/oaklandinstitute.org/files/endless-war-web.pdf https://telibrary.com/en/thiriyai-massacre-08-06-1985/ https://www.colombotelegraph.com/index.php/june-1985-may-1986-the-final-assault-on-trincomalee-and-the-trappings-of-a-colonial-war/1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் : வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா - யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர். அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு ஐம்பது வாகனங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார். 29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார். அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன. தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல் இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள் தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து, 1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள் முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன : கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அளம்பில்.1 point - "இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.