Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3057
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15741
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/07/24 in Posts

  1. லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........' என்று ஒரு பாடலுக்கு சுற்றி சுற்றி துள்ளிக் குதித்து ஆடுவார். கண்ணை கடகடவென்று வெட்டுவார். அவர் முகத்தை குளோஸ்அப்பில் காட்டுவார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும். எலுமிச்சை நிற எம்ஜிஆருக்கு சோடியாக கலர்ப் படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு ஒப்பனையை கன்னடத்து பைங்கிளிக்கு செய்தார்கள் போல. படம் பார்த்த பின், எப்படியாவது லவ் பேர்ட்ஸ் வாங்குகின்றோம், வளர்க்கின்றோம் என்று முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதியும், காசும் கேட்கும் போது இன்னும் மேலதிகமாகவே சொன்னோம் - வாங்குகின்றோம், வளர்க்கின்றோம், பெருக்குகின்றோம், விற்கின்றோம் என்று. வீட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவர், வழமை போலவே, இதையும் நம்பவில்லை. மற்ற பொறுப்பாளர், அவரும் வழமை போலவே, இதையும் நம்பினார். முதலில் கூடு செய்தோம். தச்சு வேலை தெரிந்தவர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவர் அவருக்கு உதவியாளர்கள். அப்பொழுது கூட்டுக் கோழி வளர்ப்பது சரியான பிரபலம். கோழிக் கூடு செய்தது போக மிகுதியாக 'கோழி வலைகள்' சில தெரிந்தவர்களிடம் இருந்தது. இலவசமாகவே கொடுத்தார்கள். யாழ் கொட்டடியில் இருக்கும் ஒருவர் தான் மிகப் பிரபலமான லவ் பேர்ட்ஸ் விற்பனையாளர் என்று அறிந்து அங்கு போனோம். அவர் வீட்டில் இரண்டு கூடுகள். இரண்டும் பெரியவை. ஒன்றுக்குள் விற்பதற்கென்றே நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார். இன்னொன்றில் அவரின் ஆசைக் கிளிகள். அவை விற்பனைக்கு இல்லை என்றார். மொத்தமாகவே இரண்டு தான் வாங்கப் போயிருந்தோம். எப்படி ஆண், பெண் பார்ப்பது என்று தெரியவில்லை. கோழி, சேவல் போல தெளிவாக வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. அவரே சொல்லித் தந்தார். மூக்கின் நிறம் தான் அந்தச் சூத்திரம். நீல மூக்கு ஆண், வெள்ளை மூக்கு பெண். ரோஸ் கலர் மூக்கும் வரும், அதுவும் பெண் தான். ஒரு நீல மூக்கும், ஒரு வெள்ளை மூக்கும் சிமெந்துப் பைக்குள் போட்டுக் கொடுத்தார். இரண்டிலிருந்து நாலாகி, நாலிலிருந்து பதினாறு ஆகி என்று பவளக்கொடி போலவே சிந்தனை ஓடியது. பலர் வந்து பார்த்து போனார்கள். ஊரில் எவரிடமும் லவ் பேர்ட்ஸ் இருக்கவில்லை. கொட்டடியில் ஒரு குவியலாக இவை இருக்கின்றன என்ற விபரமும் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திணை மட்டும் தான் சாப்பிடும், சாமை சாப்பிடாது என்று நாங்கள் கொடுத்த விளக்கம் கேட்டு அவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறை. எது திணை, எது சாமை என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய இயற்கை அறிவாகிக் கொண்டிருந்தது. லவ் பேர்ட்ஸ் சோடி மாறாது, அவை ஒன்று போனால் மற்றதும் போய் விடும் என்ற விளக்கமும் நன்றாகவே விலை போனது. ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. கோழி வளர்த்திருந்தாலும் வீட்டிற்கு ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஒரு பொறுப்பாளர் அடிக்க வந்தார். 'பிள்ளைகள் ஆசைப்பட்டுதுகள்.......' என்று மற்ற பொறுப்பாளர் அன்றும் காப்பாற்றிவிட்டார். அந்தக் குருவிகள் லவ் பேர்ட்ஸ் இல்லை என்று வளர்ந்த பின்னர் தெரிய வந்தது. 'அன்பே வா' படத்தில் அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். அந்தக் குருவிகள் பரகீட். லவ் பேர்ட்ஸ் என்பவை வேறு. ஆனாலும் எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.
  2. தவறான புரிதல் தமிழ் சிறி. சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிரானவர்கள் என்று சுட்டுகின்றீர்கள். நான் வாசித்த கருத்துக்களில் அப்படி யாரும் சைவத்துக்கும் ஈழத்துக்கும் எதிராக எழுதியதை யாழ் களத்தில் காணவில்லை. நடைபெறும் தவறுகளைத்தான் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் என்பதைத்தான் என்னால் பார்க்க முடிகிறது. சைவ சமயத்தை முன் நிறுத்தி மற்றவர்களை முட்டாள்களாக்கும் செயல்களைத்தான் எதிர்க்கிறார்கள். நேற்றுக் கூட ஒரு செய்தி வாசித்தேன். “கைத்தொலைபேசி, சமூக ஊடகங்களைப் பார்த்து உங்கள் கண்களில் கர்மா நிறைந்திருக்கும். உங்கள் கண்களின் கர்மாவைப் போக்க, தங்கத் தேர் இழுத்து, அதைப் பாருங்கள். கர்மா நீங்கி விடும். ஆலய நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றிருந்தது” இப்படியான மோசடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் தப்பில்லைத்தானே. சரி விடயத்துக்கு வருகிறேன் இல்லத்தில் உள்ள பெண்கள் குளிக்கும் இடத்தை நோக்கிப் பொருத்தப்பட்ட கமரா ஒரு நிகழ்வு, தராதரமற்ற நிலையில் இயங்கிய சிறுவர் இல்லங்களை மூட வேண்டும் என்பது இரண்டாவது செய்தி. நீங்கள் இரண்டையும் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்திருக்கிறீர்கள். அல்லது யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள். கமரா விடயம் நீதிமன்றம்வரை போய் விட்டது. அங்கேதான் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு நிறுவனத்தை நடாத்துவது ஒன்றும் சுலபமான விடயமல்ல. அங்கே ஏதாவது நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள் இருந்தால், பதில் சொல்ல வேண்டியவர் அதன் பொறுப்பாளர். “எனக்கு ஏதும் தெரியாது. யாரோ விசமிகள் செய்ததற்கு நான் பொறுப்பேற்க முடியாது” என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போக முடியாது. “தவறு ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்திருக்கின்றது. உரிய நடவடிக்கைகள் எடுத்து, இனி வரும் காலங்களில் இப்படியான தரக்குறைவான நிகழ்வுகள் நடைபெறாது பார்த்துக் கொள்கிறோம்” என்பதுபோல் அறிக்கை விட்டு ஆவன செய்திருந்தால் பிரச்சனை முடிந்துவிடப் போகின்றது. அதை விடுத்து ‘அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. அது நாங்கள் இல்லை. நாங்கள் இவரின் வாரிசுகள். பலகாலங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்ற பாணியில் நிற்பது ஒரு நிறுவனத்திற்கோ, அதன் பொறுப்பாளருக்கோ அழகல்ல. ‘நான் நல்லவன். அப்பழுக்கற்றவன். நான் இவரது வாரிசு’ என்று சொல்வது எல்லாம் ஒருவர் தனது ஒழுக்கங்களுக்கு மேலாகப் போட்டுக் கொள்ளும் போர்வைகள். ‘கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு ….’ என்று சுண்டல் எழுதி இருந்தார். இந்த இரண்டு வரிகளுக்குப் பின்னால் கண்ணதாசன் இப்படி எழுதியிருக்கிறார். ‘காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் கள்ளர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி குணத்துக்குத் தேவை மன சாட்சி…’ சமூகத்தில் ஒரு தவறான பிரச்சனை நடந்தால், தட்டிக் கேட்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்க் குரலாவது கொடுக்கலாம். அதுதான் நல்ல ஒரு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் உரமாக இருக்கும்.
  3. ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .
  4. பின்னர் எதுக்காக அவரை தேசியத் தலைவர் என்று பட்டியல் இடுகிறீர்கள்??? உங்கள் பட்டியல்ப்படி புலம்பெயர் தேச முட்டாளா நீங்கள்??
  5. உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை, இலங்கை தமிழரசு கட்சி நீதிமன்ற படி ஏறியபோதே இறந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது வாராந்த அரசியல் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் தமிழரசியலுக்கு தலைமை தாங்கி வழி நடாத்திய சம்பந்தன் காலமாகிவிட்டார். சம்பந்தனைப் போல பலத்த விமர்சனங்களுக்கு உள்ளான தமிழ்த்தலைவர் வேறு எவரும் இல்லை என்று கூறலாம். மரபு வழி தமிழ் அரசியலை விடுத்து இன்னோர் அரசியலை நகர்த்த முனைந்தமையே இந்த விமர்சனங்களுக்கு காரணமாகும். அரசியல் போராட்டங்கள் தமிழர் அரசியலின் செல்நெறியை தீர்மானிப்பதற்கு இவரது தலைமைத்துவ காலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சம்பந்தன் ஒருபோதும் தன்னை தமிழ்த்தேசியவாதியாக இனங்காட்டியதில்லை. போராட்ட அரசியல்வாதியாகவும் அவர் இருக்கவில்லை. தமிழ்த்தேசிய அரசியலிலோ அல்லது போராட்ட அரசியலிலோ நம்பிக்கை கொண்டவர் என்றும் அவரை கூறி விட முடியாது. தமிழ் மக்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களிலும் இவர் கலந்து கொண்ட வரலாறு கிடையாது. 1961ஆம் ஆண்டு கச்சேரிகளுக்கு முன்னால் தமிழரசுக்கட்சி தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுத்தது. சம்பந்தன் அப்போது ஓர் இளம் சட்டத்தரணியாக கலந்துகொண்டார். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் படையினர் போராட்டத்தை நசுக்கி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தனர். சம்பந்தனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள்ளேயே “தனக்கும் இப் போராட்டத்திற்கும் ஒரு தொடர்புமில்லை” என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், சம்பந்தனிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் சூழலுடன் இசைந்து செல்லும் போக்கை அவர் கடைப்பிடிப்பார். தலைமை பொறுப்பு 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் 1977 தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு என பிரகடனப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் தமிழீழத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர் அல்ல. அதை அவர் நேரடியாகவே பலரிடம் கூறியிருந்தார். குறிப்பாக கிழக்கின் சூழ்நிலைக்கு தமிழீழத் தீர்மானம் பொருத்தமற்றது என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், சூழலுடன் இசைவுற்று 1977ஆம் ஆண்டு தேர்தலில் அவர் முதன் முதலாக திருகோணமலையில் போட்டியிட்டார். வெற்றியும் அடைந்தார். புலிகள் இயக்கத்தையோ, ஆயுதப் போராட்டத்தையோ சம்பந்தன் ஏற்றுக்கொண்டவர் அல்ல. இருந்தபோதும் புலிகளுடன் இணைந்தும் அரசியல் செய்ய தயாரானார். சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பையும் ஏற்றார். புலிகள் இயக்கம் சம்பந்தனை விரும்பி இருந்தது என்றும் கூறி விட முடியாது. இயக்கம் ஜோசப்பரராசசிங்கத்தையே தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டியது. ஜோசப்பரராசசிங்கம் சம்பந்தனை நியமியுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே சம்பந்தன் தலைவராக்கப்பட்டார். இங்கு தான் ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஆனந்தசங்கரி சூழலுடன் இசைந்து போகின்ற ஒருவர் அல்லர். புலிகள் இயக்கத்தோடு அவரால் ஒத்துப் போக முடியவில்லை. ஆனந்தசங்கரி இதனால் தூக்கி வீசப்பட்டார். உண்மையில் அமிர்தலிங்கம் சிவசிதம்பரத்திற்கு பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை ஆனந்தசங்கரியிடமே சென்றது. அடுத்த மூத்த தலைவர் அவராகத்தான் இருந்தார். 1970ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஒத்துப்போகாததன் காரணமாகவே சம்பந்தனிடம் தலைமை பாத்திரம் சென்றது. இதனால் தான் ஆனந்தசங்கரி அதிஸ்டம் இல்லாத மனிதர் என்று கூறுவதுண்டு. தன்னிடமிருந்த தலைமை பாத்திரத்தை பறித்தவர் சம்பந்தன் என்ற கோபம் ஆனந்தசங்கரியிடம் இன்று வரை உண்டு. சம்பந்தன் 1977ஆம் ஆண்டு தொடக்கம் அரசியலில் செயற்பாட்டாலும் சுமார் 32 வருடங்கள் துணை பாத்திரத்தையே ஆற்ற முடிந்தது. தலைமை பாத்திரத்தை ஆற்ற முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 2009ஆம் ஆண்டே அவருக்கு கிடைத்தது. தலைமை பாத்திரம் தனக்கு கிடைத்தவுடன் தனக்கேயுரிய அரசியலை அவர் முன்னெடுக்க தொடங்கினார். சுதந்திர தினம் அந்த அரசியல் என்பது இணக்க அரசியலே. இந்த அரசியல் தமிழ் அரசியலின் மரபு வழி பாரம்பரியத்திற்கு முரணானது. ஆனாலும், சந்தர்ப்பம் அறிந்து துணிந்து அதனை முன்னெடுத்தார். அவரது இணக்க அரசியலும் கட்டம் கட்டமாக இடம்பெற்றது. முதலில் தான் இணக்க அரசியலுக்கு தயார் என்பதை சைகைகள் மூலம் வெளிப்படுத்தினார். தமிழ் அரசியல் பாரம்பரியத்திற்கு முரணாக யாழ்ப்பாணத்தில் வைத்தே சிங்கக் கொடியை அசைத்துக் காட்டினார். சிங்கக் கொடி தொடர்பான தமிழரசு கட்சியின் நிராகரிப்பு சிங்கக் கொடி உருவான காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ் மக்களை அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்து புறக்கணித்த கொடி என்பது இதற்கு காரணமாக அமைந்தது. தமிழ் தேசியவாதம் முனைப்படைந்த 70களில் தமிழ் பிரதேசங்களில் சிங்கக் கொடி ஏற்றுவதே துரோகமாக கருதப்பட்டது. சுதந்திர தினத்தை பொறுத்தவரையிலும் இதே நிலைதான் பின்பற்றப்பட்டது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு அரசிற்கு கிடைத்த லைசன்சே சுதந்திரம் என கருதப்பட்டது. இதனால் சுதந்திர தினம் வருடம் தோறும் கரிநாளாகவே அனுஸ்டிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு சம்பந்தனின் சொந்தத் தொகுதியான திருகோணமலையில் சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி கட்ட முற்பட்டமையினாலேயே திருமலை நடராசன் சுட்டுக் கொல்லப்பட்டார். மைத்திரிக்கு ஆதரவு தமிழ் அரசியல் மரபுக்கு மாறாக சம்பந்தன் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இதுவும் இணக்க அரசியலுக்கான ஒரு சைகை தான். பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற கோசத்தையும் முன்வைத்து பிரிவினைக்கு எதிரானவன் என்ற தோற்றத்தையும் வெளிப்படுத்தினார். நல்லாட்சி காலத்தில் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க முனைந்தார். இது விடயத்தில் குறைந்த பிசாசுடன் கூட்டுச் சேருதல் என்பது அவரது கொள்கையாக இருந்தது. மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். இதன்போது ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட சந்திரிகா முன்வந்த போதும் அதனை நிராகரித்தார். “மனரீதியான ஒப்பந்தமாக இருக்கட்டும்” என கூறினார். சந்திரிகா “இவ்வளவு காலமும் ஏமாற்றப்பட்டபடியால் தான் ஒப்பந்தத்தை நிராகரிக்கின்றீர்களா?” என கேட்டபோது “மனரீதியாக இசைவு தான் முக்கியம” என குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் இவரது ஒத்துழைப்புக்கு பிரதி உபகாரமாக எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்கியது. அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆளும் கட்சியின் தலைவராகவே இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வலிந்து தோள் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாத்தார். பொறுப்பு கூறல் விடயத்திலும் அரசாங்கத்தை பிணையெடுக்க முற்பட்டார். ஜெனிவாவில் அரசை பாதுகாக்கும் செயற்பாட்டையே அன்றைய காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது. “சர்வதேச விசாரணை முடிந்து விட்டது” என்கின்ற சுமந்திரனின் புகழ்பெற்ற வாசகமும் இக்காலத்திலேயே வெளிவந்தது. அரசியல் யாப்பு மூலமாக தீர்வு என்பதிலும் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். நல்லாட்சி கால புதிய யாப்பு முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சிக்குட்பட்ட தீர்வு யோசனைக்கும் இணக்கம் தெரிவித்தார். தீபாவளிக்கு தீர்வு வந்துவிடும். பொங்கலுக்கு தீர்வு வந்துவிடும் எனவும் கூறிக் கொண்டிருந்தார். நல்லிணக்க அரசியலின் இரண்டாம் கட்டத்தில் கட்சியை அதற்கேற்ற வகையில் மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த முதலாவது அம்பு தான் புலி நீக்க அரசியல். இணக்க அரசியல் புலி நீக்க அரசியலை செய்யாமல் தென்னிலங்கை தரப்பை திருப்திபடுத்த முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதன் அடிப்படையில் புலிசார்பு அரசியல்வாதிகள் என கருதப்பட்ட புலிகளினால் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கஜேந்திரனையும், பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். இது விடயத்தில் கஜேந்திரகுமாரை நீக்குவது சம்பந்தனின் நோக்கமாக இருக்கவில்லை. சர்வதேச விவகாரங்களை கையாள்வதற்கு கஜேந்திரகுமார் பொருத்தமாக இருப்பார் என்பதே அவரது கருத்தாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஒதுக்குவது தன்னை பலவீனமாக்கும் எனவும் அவர் கருதி இருக்கலாம். ஆனால் சம்பந்தனின் இணக்க அரசியலோடு கஜேந்திரகுமாருக்கு உடன்பாடு இருக்காததினால் அவர் கூட்டமைப்பை விட்டு வெளியேறினார். சம்பந்தனின் நிகழ்ச்சி நிரலுக்கான முதல் அடி கஜேந்திரகுமாரின் வெளியேற்றத்தினாலேயே நிகழ்ந்தது. இணக்க அரசியலை எதிர்க்கும் தரப்பிற்கு ஒரு தலைமை கிடைத்தது. எனினும், அத்தலைமை தனக்குரிய இடத்தை பிடிக்க 10 வருடங்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பது வேறு கதை. கஜேந்திரகுமார் இல்லாததினால் அவ்விடத்திற்கு சுமந்திரன் இறக்குமதி செய்யப்பட்டார். உண்மையில் சம்பந்தனின் அசல்வாரிசு சுமந்திரன் தான். விக்னேஸ்வரனும் இதன் அடிப்படையிலேயே இறக்கப்பட்டார். எனினும், அவர் சம்பந்தனோடு ஒத்துழைக்கவில்லை. சுமந்திரன் சம்பந்தனின் இணக்க அரசியலில் ஒரு படி மேலானவர் என கூறலாம். தென்னிலங்கை அரசியல் சம்பந்தன் இணக்க அரசியலை முன்னெடுத்தாலும் அதற்கு மேலாக தென்னிலங்கை அரசியலை முன்னெடுக்க முனையவில்லை. சுமந்திரன் தென்னிலங்கை அரசியலை முன்னெடுப்பதையே தனது பிரதான அரசியல் செயற்பாடாக வரித்துக் கொண்டார். இதனால், சம்பந்தன் பெருந்தேசியவாதத்தின் முதுகு தடவும் அரசியலை தேர்ந்தெடுத்தார் என கூறிவிட முடியாது. அதேவேளை, மலையக அரசியல், முஸ்லிம் அரசியல் போல பெருந்தேசியவாத அரசியலுக்குள் தமிழ் அரசியலை கரைக்கவும் முற்படவில்லை. ஒருவகையில் சம்பந்தன் பின்பற்றிய இணக்க அரசியலை கனவான் இணக்க அரசியல் என கூறலாம். சம்பந்தன் தனது அரசியலில் மிகவும் உறுதியாக இருந்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் தனது சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியினதும் ஜனநாயக கட்டமைப்புகள் தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என கருதியமையால் அதையெல்லாம் மீறினார். எல்லாவற்றிலும் தனி ஓட்டத்தையே மேற்கொண்டார். கூட்டமைப்பாகவோ, தமிழரசு கட்சியாகவோ ஓட முன் வரவில்லை. பல சந்தர்ப்பங்களில் கூட்டு முடிவுகளை நிராகரித்து தனித்தே முடிவுகளை எடுத்தார். மூத்த தலைவர் என்ற வகையில் அவருக்கு பெரிய எதிர்ப்புகள் ஆரம்பத்தில் வராதது அவரது தனி ஓட்டத்திற்கு சாதகமாக அமைந்தது. பிற்காலத்தில் சுமந்திரன் தனி ஓட்டம் ஓடுவதற்கு இவரே வழிகளை திறந்து விட்டார் என கூறலாம். மோடியின் அழைப்பு இணக்க அரசியலின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் தமிழ் தேசிய நீக்க அரசியல். சிங்கக் கொடி அசைப்பு, சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளல், எதிர்ப்பு அரசியலை கைவிடல், தாயகம் , தேசியம் , சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படை கோசங்களை கைவிடல் என்பன இதன் அடிப்படையிலேயே எழுச்சி அடைந்தன. மொத்தத்தில் தமிழ் அரசியலில் பாரம்பரியத்தையே மாற்றி அமைக்க முற்பட்டார் எனலாம். இதன் ஒரு வெளிப்பாடாக இந்தியாவுடனான உறவுகளையும் கைவிட்டார். இந்திய பிரதமர் மோடி அழைத்தும் இந்தியாவிற்கு செல்ல அவர் முன் வரவில்லை. இந்திய சார்பு நிலை பெருந்தேசியவாதத்தை சினப்படுத்தும் என அவர் கருதி இருக்கலாம். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு , தமிழின எதிர்ப்பு என்கின்ற தூண்களில் கட்டமைக்கப்பட்டது என்பது அவருக்கு நன்றாக தெரியும். தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக இந்தியா எதுவும் செய்யும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இந்தியாவில் தங்கி இருப்பதை முழுமையாகவே தவிர்த்துக் கொண்டார். 13ஆவது திருத்தம் தனது வசிப்பிடத்தையும் முழுமையாகவே இலங்கைக்கு மாற்றினார். இணக்க அரசியல் என்பது பரஸ்பரம் இரு பக்கம் சார்ந்த அரசியல். அது பரஸ்பரம் வெற்றி என்ற கோட்பாட்டை கொண்டது. பரஸ்பர முயற்சிகளையும் விட்டுக் கொடுப்புகளையும் வேண்டி நிற்பது. இங்குதான் சம்பந்தனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தென்னிலங்கை தரப்பு அவரது முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்புகளையும் வழங்கவில்லை. அது தொடர்பான ஆத்மார்த்தமான அரசியல் விருப்பம் தென்னிலங்கையிடம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விருப்பு கூட அதனிடம் இருக்கவில்லை. மறுபக்கத்தில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. தனது சொந்த மாவட்டத்திலேயே ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த சம்பந்தனால் முடியவில்லை. கன்னியா வெந்நீரூற்றில் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை தவிர வேறு எவற்றையும் செய்ய அவரால் முடியவில்லை. இறுதியில் விளைவுகள் அகமட்டத்தில் பாரதூரமாக இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது கண்ணுக்கு முன்னாலேயே சிதைவடைந்தது. இந்த சோகம் காய்வதற்கு முன்னர் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியும் சிதைவுற்றது. பெருந்தலைவராக இருந்தும் சொந்த கட்சி நீதிமன்ற படி ஏறுவதை இவரால் தடுக்க முடியவில்லை. அவர் பல தடவை மன்றாடிக் கேட்ட போதும் அவரால் வளர்க்கப்பட்ட சுமந்திரன் அவரது மார்பிலேயே குத்தினார். உண்மையில் சம்பந்தன் இப்போது இறக்கவில்லை. தனது சொந்த கட்சி நீதிமன்றப் படி ஏறியபோதே இறந்துவிட்டார். அவர் தோல்வியடைந்த தலைவராக இறக்க நேரிட்டது தான் மாபெரும் சோகம்” என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/yodhilingam-spoke-about-sampanthan-1720254684?itm_source=article
  6. 25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.
  7. மாட்டுக்கு மாடு சொன்னால் கேக்காது மணி கட்டிய மாடு வரணும்.
  8. பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறிய தமிழ் தரப்பும், இந்திய அதிகாரிகளின் கெஞ்சலுக்கு மசிந்த வரதராஜப் பெருமாளும் தமிழர் தரப்பு அறிக்கையின் இறுதிப்பகுதி அந்த நேரத்தின் இலங்கையிலும், சென்னையிலும் நடந்துவரும் விடயங்கள் குறித்தே பேச விழைந்திருந்தது என்பது வெளிப்படை. ஆவணி 17 ஆம் நாள் காலையில் வவுனியாவிலும், திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவமும், சிங்கள ஊர்காவல்ப் படையினரும் அங்கிருந்த தமிழ் இளைஞர்களை வீடுகளுக்குள் இருந்து இழுத்துவந்து வரிசைகளில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். அன்று நாள் முழுதும் நடைபெற்ற படுகொலைகள் ஆவணி 18 காலை, கொலையாளிகள் தமிழ்க் கிராமங்களை விட்டகன்றபோதே முடிவிற்கு வந்தன. சென்னையில் தமிழ்ப் போராளிகளின் தலைவர்கள் தீவிரமான ஆலோசனைகள் ஈடுபட்டிருந்தனர். பிரபாகரன் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார். மற்றையவர்களும் அப்படித்தான். தமிழ் மக்களை இனவழிப்புச் செய்யும் தனது திட்டத்தினை மறைக்கவே திம்புவில் ஜெயவர்த்தன பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரபாகரன் தெரிவித்தார். அதனால், ஜெயவர்த்தனவின் சதித்திட்டத்தினை உலகறியச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, உலகளவில் பேசப்பட்டு வந்த திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எனும் முடிவினை அவர்கள் எடுத்தனர். அவசரகால சூழ்நிலைமை நிலவியபோதிலும் பிரபாகரன் நிதானத்துடன் காணப்பட்டார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பேச்சுக்களில் புளொட் அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள விரும்புகின்றனவா என்பதை அறிந்துவருமாறு பாலசிங்கம் பணிக்கப்பட்டார். அவர்களும் ஆலோசனைகளில் கலந்துகொள்ள இணங்கினர். அதன் பின்னர், தமிழ் நாட்டில் இயங்கிவந்த பயிற்சி முகாம்களை இந்திய அரசு நிறுத்திவுடுமா என்பதை அறிந்துகொள்ளுமாறு பாலசிங்கத்தைப் பிரபாகரன் பணித்தார். ஆனால், முகாம்களை மூடிவிடப்போவதில்லை என்றி ரோ உறுதியளித்தது. அதன்பின்னர் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்த தமிழ்த் தரப்பை பேச்சுக்களில் இருந்து வெளியேறுமாறு நேரடித் தொலைபேசி அழைப்பினூடாக சென்னையிலிருந்த போராளிகளின் தலைமைகள் பணித்தன. பிரபாகரனின் பணிப்பின் பேரில் திலகருடன் பேசிய பாலசிங்கம், புளொட் அமைப்பே வெளிநடப்பினை முதலில் செய்யும் என்றும் கூறியிருந்தார். திம்புவில் தமிழ்த் தரப்புடன் பேசிய ஹெக்டர் ஜயவர்த்தன, தமது தரப்பால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் பேச்சுக்களுக்கான அடிப்படையாக இருக்கும் என்றும், அதனைத் அதிகாரத் தீர்வுப் பொதியாக தமிழர்தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார். ஆனால், பேச்சுக்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் ஆரம்பித்தவேளை சூழ்நிலை முற்றாக மாறிப்போயிருந்தது. வவுனியாவில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலும் அதனைத் தொடர்ந்து தமிழமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களும் பி.பி.சி செய்திச் சேவையில் ஒலிபரப்பாகியபோது த‌மிழர் தரப்பு கொதிப்படைந்தது. பதற்றமாகி வந்த சூழ்நிலையினைத் தணிப்பதற்கு ஹெக்டர் ஜயவர்த்தன முயன்றார். அரசாங்கத்தால் பரப்பப்பட்ட செய்தியான "வவுனியாவில் குண்டுத் தாக்குதல், பத்தொன்பது பொதுமக்கள் பலி" என்று அச்செய்தியை அவர் வாசித்துக் காட்டினார். மேலும், பொதுமக்களை இராணுவத்தினரே சுட்டுக் கொன்றதாக பரப்பட்டுவருவது திட்டமிட்ட சதி என்றும் அவர் வாதாடினார். ஆனால், பேச்சுக்களில் புளொட் அமைப்புச் சார்பாகக் கலந்துகொண்டிருந்த வாசுதேவா, வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவத்தினரின் தாக்குதல்களில் அதுவரை 250 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் தனது அறிக்கையினை அவர் படித்தார், ஆவணி 16 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் முன்வைத்த புதிய ஆலோசனைகளுக்கு நாம் அளித்த பதில் அறிக்கையில் குறித்த விடயம் ஒன்று தொடர்பாக பிறிதொரு அறிக்கையில் விளக்குவோம் என்று கூறியிருந்தோம். அதன்படி அவ்விடயம் குறித்து இங்கே விளக்க‌வுள்ளோம் என்று அவர் கூறினார். நாம் முன்னர் இங்கு குறிப்பிட்டதுபோல், இலங்கையரசாங்கம் தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் இனக்கொலை ஒன்றினை நடத்திவருகிறது என்பதை கடந்த சில‌ நாட்களாக தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன. வவுனியாவிலும், ஏனைய இடங்களிலும், தமிழர் என்கின்ற காரணத்தினால் அப்பாவிகளான சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் , வயோதிபர்கள் என்று இருநூற்றிற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களில் படுகொலை செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு அவர்களின் தாயகத்திலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியாத சூழ்நிலை நிலவும் நிலையில் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவது கேலிக்குரியதாகும். பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எமது விருப்பாக இல்லாத போதும். இப்பேச்சுக்களுக்கான அடிப்படையான யுத்தநிறுத்தத்தினை உதாசீனம் செய்து, எமது மக்கள் மீது படுகொலைகளை இலங்கையரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளமையானது இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் எம்மால் ஈடுபட முடியாத‌ சூழ்நிலையினைத் தோற்றுவித்திருக்கிறது. வாசுதேவா தனது அறிக்கையினைப் படித்து முடித்தவுடன் தமிழர் தரப்பினர் பேச்சுக்களுக்குத் தாம் கொண்டுவந்திருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றனர். இதனைக் கண்ணுற்ற பேச்சுக்களில் மேற்பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அவர்களைப்போன்றே இலங்கை அரச தரப்பினர் அதிர்ச்சியடைந்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைத் தழுவுவதைத் தடுக்க இந்திய அதிகாரிகள் முயன்றனர். ஆகவே, சென்னைக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த தமிழர் தரப்பினரை தொடர்ந்தும் திம்புவில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து சென்னையின் கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் கூடியிருந்த தமது தலைவர்களுடன் நிலைமையினை விளக்கி நேரடித் தொலைபேசியூடாக அவர்கள் பேசினர். ஆனால், பேச்சுக்களைக் கைவிட்டு விட்டு உடனடியாக சென்னை திரும்புமாறு தமிழர் தரப்பினருக்கு சென்னையிலிருந்த தலைவர்களால் பணிப்புரை வழங்கப்பட்டது. இதனையடுத்து பேச்சுக்களில் தம்மால் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்றும், தம்மை சென்னை திரும்புமாறு தலைவர்கள் அழைத்திருப்பதாகவும் தமிழர் தரப்பினர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அனைத்துப் பிரதிநிதிகளும் சென்னை திரும்ப ஆயத்தமாகி வந்தவேளை ஒரேயொரு உறுப்பினர் மட்டும் சென்னை திரும்பும் முடிவிற்கு எதிராக நின்றார். அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரதிநிதியான வரதராஜப் பெருமாள். தனது சகாவான கேதீஸ்வரனுடன் பேசிய வரதர், "பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கெடுங்கள் என்று இந்திய அதிகாரிகள் கெஞ்சும்போது நாம் எப்படி சென்னைக்குத் திரும்பிச் செல்ல முடியும்?" என்று கேட்டார். இதனையடுத்து கேதீஸ்வரன் சென்னையில் தங்கியிருந்த பத்மநாபாவிடம் வரதரின் முடிவுகுறித்துப் பேசினார். இதன்பின்னர் வரதருடன் நேரடியாகப் பேசிய பத்மநாபா, "மற்றையவர்களுடன் நீங்களும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டும், இல்லாவிட்டால் தெரியும் தானே?" என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
  9. எனக்கும், துருக்கி தோற்றது பயங்கர சந்தோசம். 😁 ஜேர்மனிக்கு கிடைக்காதது, துருக்கிக்கும் கிடைக்கக் கூடாது. 🤣
  10. Budgericar என்று இவற்றை அழைப்பார்கள். இது நல்ல உணவு எனும் புச்செரிகா எனும் அபொரிஜின மொழியின் ஆங்கில வடிவம் ஆகும். இவை அவுஸ்திரேலிய பறவைகள். குளன், ஏரி போன்றவற்றின் கரைகளில், மரப்பொந்துகளின் வாழ்பவை. இவற்றின் குஞ்சுகள் அபோரிஜின் மக்களின் உணவாக ஒரு காலத்தில் இருந்தன. நான் இவற்றில் ஒன்றுக்குத் தமிழில் வணக்கம் சொல்லவும் பழக்கியிருந்தேன்.
  11. ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள். பனம் ஓலைகளை, இவை மாடுகளிற்கு, ஒரு வண்டிலில் பின்னேரங்களில் பொலிகண்டிப் பக்கம் இருந்து கொண்டு வந்து விற்பார்கள். அதையும் ஊரவர்கள் வாங்குவார்கள். நீங்கள் சொல்லும் இந்தச் சின்னக் கிளிகள் பலவற்றை இங்கு கடைகளில், சந்தைகளில் பார்த்திருக்கின்றேன். ஆஸ்திரேலியாவில் இவைகளில் சில வகை சுதந்திரமாக பறந்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கு ஒரு பறவைகள் பூங்காவில் எத்தனையோ வகையான இந்தச் சின்னக் கிளிகள் இருக்கின்றன. கை பெருவிரல் அளவில் கூட அங்கு பச்சைக் கிளிகள் இருக்கின்றன. பல தனி வெள்ளை மயில்களும் அங்கு நின்றன.
  12. இங்லாந் ஜேர்ம‌ன் பிரான்ஸ் இப்ப‌டியா நாடுக‌ளில் திற‌மை இருந்தால் உட‌ன‌ த‌ங்க‌ளின் நாட்டுக்கு விளையாட‌ விடுவின‌ம் டென்மார்க் நாட்டில் திற‌மையான‌ வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் இருந்தாலும் டென்மார்க் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது டென்மார்க் அணி விளையாடும் போது பாருங்கோ யாரும் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் விளையாடுகின‌மா என்று அது தான் எழுதினேன் என‌க்கு டென்மார்க் அணிய‌ விட‌ ஜேர்ம‌ன் அணிய‌ தான் அதிக‌ம் பிடிக்கும் என்று டென்மார்க் அணி விளையாடின‌தை தொலைக் காட்சியில் பார்த்த‌து என்றால் ஒரு ம‌ச்சும் முழுதா பார்த்து இருக்க‌ மாட்டேன்...................ஒரு சில‌ விளையாட்டை அரையும்குறையுமா பார்த்து இருப்பேன் 2002ம் ஆண்டு உல‌க‌ கோப்பை பின‌ல் ஜேர்ம‌ன் பிரேசில் கூட‌ விளையாடின‌ விளையாட்டை முழுதா பார்த்தேன்.....................அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் என‌க்கு பிரேசில் அணிய‌ ரொம்ப‌ பிடிக்கும் என‌து டெனிஸ் பொற்றோர்க‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் சேர்ந்து பிரேசில‌ ஆத‌ரிச்சு விளையாட்டை பார்த்து ர‌சித்தோம்.................... பிரேசில் ஜேர்ம‌ன‌ 2-0 வென்ற‌து....................அந்த‌ இர‌ண்டு கோல்ல‌ அடிச்ச‌து பிரேசில் ரொனால்டோ👏.........................................
  13. யாழில்... சம்பந்தனுக்கு கிடைத்த இறுதி மரியாதையை பார்த்து, சுமந்திரன் தான் செத்தால்... தனது பிரேதத்தை, யாழ்ப்பாணம் கொண்டு போகக் கூடாது என்று நினைத்திருப்பார்.
  14. சந்திரிகா கொண்டுவந்த தீர்வையே நடு பாராளுமன்றில் நின்று கிழித்தெறிந்து சன்னதமாடியராச்சே.
  15. ஆட்டுக்கு குழை சந்தையில் வாங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் இருந்ததை இன்று தான் அறிகிறேன். லவ் பேர்ட், பரகீற் (அமெரிக்காவில் budgie என்பார்கள்), பச்சைக் கிளி (parrot) எல்லாம் Psittacine எனப்படும் பறவைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இந்தப் பெரிய Psittacine குடும்பத்தின் உப பிரிவாக "சின்னக் கிளிகள்" குடும்பம் இருக்கிறது. சின்னக் கிளிகளில் முக்கியமானவை லவ் பேர்ட்டும், பரகீற்றும். வீட்டுப் பிராணியாக வளர்க்க உகந்தவையாக Psittacine பறவைகள் இருந்தாலும், சுகாதாரமான இடத்தில் இருந்து இவற்றை வாங்கா விட்டால் ஆபத்தான நோயான Psittacosis இனை மனிதர்களுக்குப் பரப்பக் கூடிய ஆபத்து இருக்கிறது. அண்மையில், இலங்கையில் ஒரு பெண் வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன்.
  16. 🤣........... ஒரு 'ஆடு ஜீவிதம்' கூட எழுதலாம்.......... பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பருத்தித்துறைச் சந்தையிலிருந்து ஆட்டுக்கு குழை வாங்கி வரவேண்டும். அதில் இரண்டு சிக்கல்கள்: முதலாவது, அந்தக் கூட்டத்தில் குழையையும் காவிக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது. இரண்டாவது, 'என்னடா, உங்கள் ஊரில் குழையும் கிடையாதோ........' என்ற வேறு ஊர் நண்பர்களின் கேலி...........🤣
  17. அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே 7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும். விளையாட்டில் கோல்களை அடிக்க வேண்டும். அதுலவும் ஸ்பானியா நேரத்தோடு கோல் போட்டிருந்த நிலையில் கடைசி நிமிடம் வரைக்கும் கோல்கள் போடாது இழுத்தடித்தது பெரும்பிழை. பரீட்சைக்கு முதலே படித்து ஆயத்தமாகாமல் கடைசிநாள் பஸ்சுக்குள் படித்து சோதனை எழுதின மாதிரித்தான் இதுவும். மேலதிக நேரத்தில் ஸ்பானியாவைpன் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
  18. பன்றிக்கு எப்பொழுதும் அதே நினைப்பு தான் என்று எமது ஊரில் சொல்வது சரி என்று நீங்கள் அடிக்கடி நிரூபிக்கிறீர்கள்.
  19. திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதன் காரணத்தை மக்களுக்கு விளக்கிய தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் - 1987 தீர்வொன்று நோக்கிப் பயணிக்கலாம் என்கிற நம்பிக்கையினை தந்த திம்புப் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியைத் தழுவியிருந்தன. எதிர்பார்த்தது போலவே ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்ப் போராளிகளின் மீது அது சுமத்தியது. தமிழர்களை உறுதியற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள் என்று அது குற்றஞ்சுமத்தியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமையினால், தனக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு இராணுவ முறையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதுதான் என்று அது கொக்கரித்தது. இதனையடுத்து, அதுலத் முதிலியினால் "பயங்கரவாதிகளின் இடங்கள்" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் இறங்கியது. இலங்கையரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மிகவும் தீர்க்கமான பதிலை பிரபாகரன் வழங்கினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளிநடப்புச் செய்ததன் காரணத்தை விளக்கி தமிழில் அறிக்கையொன்றினை அவர் வெளியிட்டார். அவரது அறிக்கை வருமாறு. "இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதயசுத்தியுடன் முயன்ற இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது எனும் நோக்கத்திற்காக மட்டுமே திம்புப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று நாம் முடிவெடுத்தோம். ஆனாலும், அவரின் அந்த முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்பதனை நாம் அறிந்தே இருந்தோம். ஏனென்றால், சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் கொண்ட ஜெயவர்த்தனவின் அரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கறை காட்டப்போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும், யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது என்று நாம் முடிவெடுத்தோம். தமிழ் மக்கள் மீதான ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அடக்குமுறையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றினை வழங்குவதில் அவருக்கு இருக்கும் வெறுப்பினையும் உலகிற்கும், இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இப்பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்துவது என்று நாம் தீர்மானித்தோம். நாம் எதிர்பார்த்தவாறே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எந்தவித அடிப்படைகளையும் முன்வைக்க ஜெயவர்த்தன அரசாங்கம் தவறியிருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களான எம்மை சமாதானப் பொறிக்குள் வீழ்த்துவதன் மூலம் அடிமைகளாக்குவதே ஜெயவர்த்தனவின் திட்டம். தமிழ்ப் புலிகளான நாங்கள் ஜெயாரின் வலைக்குள் வீழ்ந்திடப்போவதில்லை. தான் ஆடும் சமாதான நாடகத்தின் மூலம் தமிழர்கள் மீது தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனக்கொலையினை இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் கவனத்திலிருந்து மறைத்துவிட இலங்கை முயல்கிறது. சிங்கள இனவெறியர்களின் அழிவுத் திட்டத்தை இந்தியா உணர்ந்துகொள்ளுமா என்று நாங்கள் ஆதங்கப்படுகிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, ஜெயாரின் கபடத் தனத்தையும், ஏமாற்றல் முயற்சிகளையும் நன்கு அறிந்தே இருந்தார். புதிய பிரதமரான ரஜீவ் காந்தி சமாதானத்தை விரும்புகிறார். தமிழ் மக்களின் நலனில் அவர் தனியான அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் கெளரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ்வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ரஜீவின் விருப்பங்களை தான் ஆதரிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கம் செய்கிறது. இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்க அது முயன்று வருகிறது. இலங்கையின் சூழ்ச்சியை இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம். சுதந்திரத் தமிழீழமே எமது ஒற்றை விருப்பாகும். அதனை எவராலும் அசைக்க முடியாது. அவ்விருப்பினை அடைவதற்காக எமது உயிரையும் விலையாகக் கொடுத்துப் போராடி வருகிறோம். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு தனது ஆதரவினை வழ‌ங்கிவரும் இந்திய நாடு, தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டத்திற்கும் தனது ஆதரவினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எமது போராட்டத்திற்கு தமது கரங்களை நீட்டி உதவுவதற்கு இந்திய மக்களுக்குச் சற்றுக் காலம் எடுக்கலாம். அதுவரை அதற்கான ஆதரவு வேண்டி நாம் போராடிக்கொண்டிருப்போம்".
  20. கடைசி சம்பந்தர் போர் குற்றங்களில் காப்பாற்றிய சிங்கள அரசு கூட கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட முன்வரவில்லை இதுதான் சிங்களம் . இந்த கதிதான் கருணா பிள்ளையான் டக்லஸ் சுமத்திரன் போன்றவர்களுக்கும் .
  21. அந்த சிந்திக்க தெரியாத முட்டாள் களின் கேள்விக்கு உங்களிடம் உங்கள் விசுவாச கூட்டம்களிடமும் பதில் இல்லையே சம்பந்தனும் சுமத்திரனும் வடகிழக்கு தமிழர்களுக்கு ஆக்க பூர்வமான அரசியல் நன்மை ஒன்றையாவது இங்கு களத்தில் சொல்ல முடியுமா ? மூச்சுக்கு ஆறு தடவை சம்பந்தன் வென்றார் என்கிறீர்கள் அந்த ஆறு தடவையும் சிங்களம்தான் நன்மை பெற்றது தமிழ் மக்கள் ஆறு தடவையும் ஏமாந்தார்கள் இதுதான் உண்மை.
  22. இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல். செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣
  23. பல மருத்துவ மனைகளிலும், கல்லூரிகளிலும்…. டக்ளஸ் தேவானந்தாவால் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க நியமிக்கப் பட்ட ஊழியர்களே அதிகம் வேலை செய்வதும்… அவர்களால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் போன்ற சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் இப்படியான இடங்களில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். யாழ். இந்துக் கல்லூரியிலும்…. சில அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க முற்பட்ட போது தற்போதைய அதிபர் அதற்கு சம்மதிக்காததால் அவரால்… அங்கு சிறந்த சேவையை ஆற்ற முடிகின்றது.
  24. ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால் "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.
  25. நல்ல ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரை. நன்றி ஈழப்பிரியன்.
  26. அது அடிக்க வந்த பொறுப்பாளர், காப்பாற்றி விடும் பொறுப்பாளர் ஜோடிதானே? 1966இல் வந்த படம். வீட்டில் அப்பா எதிர்த்தாலும் அம்மா அனுமதி தருகின்ற வயது. ஓரளவு உங்களது வயதை கணிக்க இந்தப் படம் உதவுகிறது.(திரும்ப திரையிட்ட போது பார்த்த படம் என்று சொல்லாமல் இருக்கும் மட்டும்) படத்தைப் பார்த்து லவ் பேர்ட்ஸ் என்று வாங்கினீர்கள். உங்களுக்கு வித்தவனுக்கே அது தெரிந்திருந்திருக்குமா? அல்லது ஆளைப் பார்த்து வித்தனா? யாரறிவர்? நல்ல நேரம், ஆட்டுக்கார அலமேலு, கோமாதா குலமாதா எல்லாம் பின்னாளில் வந்த திரைப்படங்கள் என்பதால் உங்கள் வீடும் தப்பியது, வீட்டில் இன்னொருவருக்கும் பிரச்சினை இல்லாமல் போயிற்று.
  27. அதுசரி பார்க்க வந்த ஊர்மக்களை எந்தப் பொறுப்பாளர் சமாளித்தார். அப்ப அது பொய்யா கோப்பாலு.
  28. இந்த செய்தி தயாரிப்பின் முக்கிய நோக்கம் சம்பந்தன் அய்யாவை அவமானபடுத்துவதுடன் சுமந்திரனையும் சேர்த்து. ஒரே கல்லில் இரண்டு மாம்பழம். பொயின்ரை கவனியுங்கள் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற ஈழதமிழர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்கு நடக்காத இலங்கை தமிழ் தலைவர்களுக்கு இது தான் நிலைமையாம்.
  29. திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறும் தமது நிலைப்பாட்டினை அறிவித்த தமிழ்த்தரப்பு திம்புவில் பேச்சுவார்த்தைகள் குழம்பும் நிலை உருவாகி வந்த அதேவேளை, வவுனியாவிலும் திருகோணமலையிலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் பற்றிய செய்தி பிரபாரகரனின் காதுகளுக்கு எட்டியது.இப்பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்கள் குறித்து விரிவாக அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க கூட்டமொன்றினை ஏற்பாடு செய்யுமாறு பாலசிங்கத்தை அவர் பணித்தார். மேலும், அக்கூட்டத்தில் பங்கேற்கத் தான் சென்றுகொண்டிருப்பதாகவும் பாலசிங்கத்திடம் அவர் அறியத் தந்தார். தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையிலான உறவின் சரித்திரத்தில் 1985 ஆம் ஆண்டு ஆவணி 17 ஆம் திகதி ஒரு முக்கிய நாளாகும். வழமை போல திம்புப் பேச்சுக்கள் அன்று காலையும் பத்து மணிக்கு ஆரம்பமாகின. அதே நேரம் சென்னையில் போராளிகளின் தலைவர்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றினை எட்டுவதற்காகக் கூடியிருந்தார்கள். திம்புவில் தமிழர் தரப்பு தாம் அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகளை நிராகரிப்பதாகக் கூறும் கூட்டு அறிக்கையினை வாசித்தார்கள். சென்னையில் சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமாருடன் பேசிய பிரபாகரன் "தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போரிடுவதைத்தவிர வேறு வழியில்லை" என்று தீர்க்கமாகக் கூறினார். "தமிழர்களை அழிப்பதற்குச் சிங்களவர்கள் கங்கணம் கட்டியிருப்பதால், அவர்களிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பது போராளிகளின் கடமை" என்று அவர் கூறினார். அன்று பிரபாகரன் தீர்க்கமான முடிவொன்றினை எடுத்தார். தமிழர்களின் உரிமைகளை ஆயுதப் போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடைய முடியும் என்பதுதான் அது. திம்புவில் இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனைகளை நிராகரித்திருந்த தமிழர் தரப்பின் கூட்டறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, தமிழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்து திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நாம், இலங்கை அரசாங்கத்தால் ஆவணி 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தீவிரமாகப் பரிசீலினை செய்திருக்கிறோம். தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல் அபிலாஷைகளை புதிய‌ ஆலோசனைகள் எந்தவிதத்திலும் பூர்த்தி செய்யாமையினால் அவற்றை நிராகரிப்பதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். இந்திய அரசாங்கத்தின் முயற்சியினாலேயே திம்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த முயற்சியினை நாம் பாராட்டி வரவேற்றிருந்தோம். குறிப்பாக தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காண இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி எடுத்திருந்த முயற்சிகளை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம். இப்பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது. அவ்வாலோசனைகள் கடந்த வருடம் சர்வகட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்டிருந்த அதே ஆலோசனைகள் தான் என்பது தெளிவானது. சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இவ்வாலோசனைகளை முற்றாக நிராகரித்திருந்த நிலையில், அதே ஆலோசனைகளை மீளவும் திம்புப் பேச்சுக்களில் முன்வைத்திருப்பதானது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் இலங்கை அரசாங்கத்திருக்கும் உறுதிப்பாடு குறித்தும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கடுமையான சந்தேகங்களை எமக்கு எழுப்பியிருக்கிறது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து எம்மால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஆலோசனைகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும், மாவட்ட சபையினால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை. கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு மாவட்ட சபைகள் எடுக்கும் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தொடர்ந்து இருக்கும் என்றும் ஆலோசனை மேலும் கூறுகிறது. மேலும், மாவட்ட சபைக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்விதத்தில் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட ஜனாதிபதியினால் உருவாக்கப்படும் ஆணைக்குழு ஒன்றுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஆலோசனைகளில், மத்தியிலிருந்து மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்குப் பதிலாக, மாவட்ட சபைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டிருக்கும் அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே புதிய ஆலோசனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட சபைகளுக்குக் கொடுப்பதாகக் கூறும் மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளவே அரசாங்கம் எத்தனிக்கிறது என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு அவர்களின் ஏக பிரதிநிதிகளான ஆறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களான எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கையின் ஊடாகவே உருவாக்கப்படமுடியும் என்பதனால், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் இவ்வாலோசனைகளை ஏக‌மனதாக நிராகரிக்கிறோம். பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதிக்குப் பின்போடுவதாகப் பின்னர் முடிவெடுக்கப்பட்டது. அன்றைய தினம் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினை விமர்சித்த அரசாங்கம், இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் இல்லை என்றும், அவர்களுக்கென்று சரித்திர ரீதியான தாயகம் என்று ஒன்று இலங்கையினுள் இல்லை என்றும், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடையாது என்றும் கூறி நிராகரித்திருந்தது. மேலும், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்ய எமக்கிருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்தும் அது கேள்வியெழுப்பியிருந்தது. நாம் ஆவணி 13 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்களின் சரித்திர ரீதியான, உறுதியான அரசியல்ப் போராட்டங்களின் முடிவாகவே சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தமிழ் ஈழத்தைச் சேர்ந்த மக்களான தமிழர்கள் தமக்கென்று தனியான தேசத்தையும், தனியான சரித்திரத்தினையும், தனியான கலாசாரத்தினையும், எம்மக்களுக்கிடையிலான பொதுவான மொழியினையும், அடையாளப்படுத்தக் கூடிய தாயகத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், தொடர்ச்சியான‌ ஆடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சமூகம் என்கிற ரீதியில் அந்த அடக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் விளக்கியிருந்தோம். சர்வதேசத்தில் நடைமுறையில் இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்குத் தேவையான அனைத்துத் தகமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருந்தோம். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரத்தினையும், சிங்கள் தேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பூரண இறைமையுள்ள தனி நாடாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டுமா என்று தீர்மானிக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருப்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேவேளை, தனியாகப் பிரிந்துசெல்லும் தகமையினைக் கொண்டிருந்தபோதும், நியாயமான தீர்வினை அரசு வழங்கும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதனையும் நாம் அரசிற்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுக்களின்பொழுது நாம் முன்வைத்திருந்த அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய தீர்வொன்றினை முன்வைக்க அரசாங்கம் தவறியிருந்தது. ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைய்யுங்கள் என்கிற தமிழர் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பின்னரும் அரச தரப்பு விடாப்பிடியாக முன்னர் தான் முன்வைத்த தீர்வினையே மீண்டும் வேறு பெயரில் முன்வைத்திருந்தது. ஆவணி 16 ஆம் திகதி அரச தரப்பு முன்வைத்த புதிய ஆலோசனைகள் ஏற்கனவே அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சேர்ந்து மாகாண சபைகளாக இயங்க முடியும் என்கிற அடிப்படையிலே அமைந்திருந்தது. அரசு முன்வைத்த இப்புதிய ஆலோசனைகள் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களுக்கென்று தனியான தாயகம் இருப்பதை இந்த புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை புதிய ஆலோசனைகள் அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இப்புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஒன்றுதான் என்பதனையும் இந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. ஆகவேதான், இவ்வாலோசனைகள் தமிழ் மக்களின் நீதியான அரசியல் அபிலாஷைகளை எவ்விதத்திலும் பூர்த்தி செய்யப்போவதில்லை என்கிற முடிவிற்கு நாம் வரவேண்டியதாயிற்று. மேலும், எம்மைப்பொறுத்தவரையில் புதிய யோசனைகள் என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டிருப்பவை புதியன அல்ல என்பதனையும் கூறிக்கொள்கிறோம். ஒரு பாரிய நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அப்பிரதேசத்தில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்படும் மாகாண ரீதியிலான தீர்வொன்றினை 1928 ஆம் ஆண்டிலேயே டொனமூர் ஆணைக்குழு முன்வைத்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டாரநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்ட உள்ளூர் சபைகளின் அதியுயர் ஆணைக்குழு டொனமூர் ஆணைக்குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று 1940 ஆம் ஆண்டு கூறியிருந்தது. 1947 ஆம் ஆண்டு பண்டார்நாயக்க மீளவும் மாகாண சபை நடைமுறையினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தபோதிலும் இன்றுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கைகளும் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு சொக்ஸி தலைமையிலான ஆணைக்குழு கச்சேரிகளின் செயற்பாடுகளை பிராந்திய சபைகள் முன்னெடுக்கமுடியும் என்று பரிந்துரை வழங்க‌, 1957 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க பிராந்திய சபைகள் எனும் ஆலோசனையினை முன்வைத்திருந்தார். இதனடிப்படையில் 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தினூடாக பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்களை நடத்துவதென்றும், இப்பிராந்திய சபைகளுக்கு விவசாயம், கூட்டுறவு, காணி மற்றும் காணி அபிவிருத்தி, குடியேற்றம் மற்றும் கல்வி ஆகிய அதிகாரங்களும் வழங்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்பினால் அவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அவ்வாறே 1963 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, கச்சேரிகளுக்குப் பதிலாக மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியதுடன், இதனை ஆராயவென்று மாவட்ட சபைகள் ஆணைக்குழுவினையும் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையினை சிறிமாவிடம் சமர்ப்பித்திருந்தபோதும் கூட, அதுகுறித்து எந்த நடவடிக்கையினையும் எடுக்க அவர் மறுத்திருந்தார். 1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனநாயக்க மாவட்ட சபைகளை உருவாக்குவதற்குத் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி அவரது அரசாங்கத்தினால் 1968 ஆம் ஆண்டு மாவட்ட சபைகளுக்கான யோசனையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவரையில் பண்டாரநாயக்க தலைமையில் மாவட்ட சபைகளையும், பிராந்திய சபைகளையும் தீர்வாக 1940, 1947 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் முன்வைத்த சுதந்திரக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி, 1968 இல் டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த மாவட்ட சபைகளை முன்னின்று எதிர்த்துத் தோற்கடித்தது. எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பினால் கலக்கமடைந்த டட்லியும் தான் முன்வைத்த மாவட்ட சபைகள் எனும் யோசனையினை மீளப்பெற்றுக்கொண்டார். 1928 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐம்பது ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் நாம் மாகாண சபைகளுக்கும், மாகாண சபைகளில் இருந்து பிராந்திய சபைகளுக்கும், பிராந்திய சபைகளில் இருந்து மாவட்ட சபைகளுக்கும், தற்போது மீளவும் மாவட்ட சபைகள் / மாகாண சபைகளுக்கும் வந்து நிற்கிறோம். இவற்றிற்குள் சிறிமாவின் "உடனடி நடவடிக்கைகளையும்" டட்லியின் "தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்" நாம் பார்த்துவிட்டோம். இக்காலத்தில் ஆணைக்குழுக்களுக்கும், பரிந்துரைகளுக்கும், அறிக்கைகளுக்கும் குறைவே இருக்கவில்லை. தாமே முன்வைத்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தி தமிழர்களின் தாயகத்தின் இருப்பினை ஏற்றுக்கொள்ளும் அரசியல்த் தைரியமும், நாகரீகமும் சிங்களத் தலைமகளிடம் இன்றுவரை உருவாகவில்லை. ஆனால், இதே காலப்பகுதியில் தமிழர்களுடன் தாம் செய்துகொன்ட அனைத்து உடன்படிக்கைகளையும் கிழித்தெறிந்த அதேவேளை, தமிழரின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைக்கும் கைங்கரியத்துடன் தமிழ் மக்களை முற்றான அரச அடக்குமுறைக்குள் சிங்கள அரசுகள் தள்ளிவிட்டிருக்கின்றன. திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கிய தீர்வென்பது வெறுமனே கோட்பாட்டு அடிப்படையிலானது மட்டுமல்ல. அது தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அடைந்துகொள்ள முன்னெடுத்திருக்கும் இடையறாத போராட்டத்தின் அடிப்படையில் இருந்து, நிதர்சனத்திலிருந்து உருவாக்கப்பட்டிருப்பது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறோம். தமிழர்களின் கோரிக்கைகள் 1950 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விலிருந்து ஆரம்பித்து, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் அரச இராணுவ அடக்குமுறைகளினூடாக உருவாக்கப்பட்டிருக்கும் நியாயமான, தர்க்கரீதியிலான அவசியத்திலிருந்து தனிநாடு எனும் தவிர்க்கமுடியாத கோரிக்கையில் வந்து நிற்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது இன்னுயிரை ஈர்ந்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது உடைமைகளையும், வாழ்வாதாரத்தினையும் இழந்து நடத்திவரும் போராட்டம் இது. தமது சகோதரர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈர்ந்தும், வாழ்வினை இழந்தும் அவர்கள் தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். ஆகவே, திம்புவில் நாம் அறிவிக்க விரும்புவது, தமிழ் மக்களின் தேசம் குறித்து மட்டுமே திம்புவிலோ அல்லது வேறு எங்கிலோ எம்மால் பேசமுடியும் என்பதனையும், அது தவிர்த்து வேறு எது குறித்தும் எவ்விடத்திலும், எப்பொழுதிலும் நாம் இனிமேல்ப் பேசப்போவதில்லை என்பதை வெறுப்புக்கள் இன்றியும், நிதானமாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். மேலும், இலங்கை அரசு இனிமேல் எம்முடன் பேசுவதானால் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வொன்றிற்கூடாக மட்டுமே பேசமுடியும் என்பதனையும் ஐய்யந்திரிபுற தெரிவித்துக்கொள்கிறோம். இதைத்தவிரவும் இன்னுமொரு விடயம் குறித்தும் நாம் கருத்துக்குற விரும்புகிறோம். அதனை பிறிதொரு அறிக்கையினூடாக நாம் தெரிவிப்போம்.
  30. 🤣........... கடவுளும் இறங்கி வந்து எத்தனை அதிபர்களிடம் தான் தனித்தனியாக 'சரி சரி, போதும் போதும், காணும் போங்கோ....' என்று சொல்ல முடியும்? எவரும் ஒரு தடவை வந்தால், அதற்குப் பிறகு விட்டு விட்டுப் போக மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றார்களே. நல்ல காலம் அமெரிக்காவில் இரண்டு தடவைகள் தான் என்ற அரசியல் சட்டம் ஒன்று இருக்கின்றது. இவர் மீண்டும் வந்தாலும் இங்கு ஒன்றும் கெட்டு விடப் போவதில்லை. 'கடுமையான குளிர்' என்று ஜோ சொல்லவில்லை, தனக்கு தடிமன்/ஜலதோசம் என்று தான் சொல்ல வந்தவர். மொழிபெயர்ப்பில் ஜோவின் தடிமன் அமெரிக்காவில் கடும் குளிர் என்று ஆகிவிட்டது. இங்கு கோடை காலம்.........வெயில் பல இடங்களில் உச்சியை பிளக்கின்றது..........🤣 ஜோ தன்னால் இப்பொழுது 110 மீட்டர் தடைதாண்டி ஓடும் ஓட்டம் ஓட இயலாது, ஆனால் மற்றபடி எல்லாம் செய்ய முடியும் என்றும் சொன்னார்............ முக்கியமாக ட்ரம்பை தன்னால் வெல்ல முடியும் என்று சொன்னார்......😜.
  31. மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே..... துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்....😎
  32. 2010 உல‌க‌ கோப்பையில் அக‌ன்ரீன‌ அணிய‌ 4-0 என‌ வென்ற‌வை அப்பேக்க‌ ப‌ய‌ங்க‌ர‌ துடியாட்ட‌மாய் விளையாடின‌வை..................2014 உல‌க‌ கோப்பையிலும் அதே துடியாட்ட‌ விளையாட்டு தொட‌ர்ந்த‌து.......................அந்த‌ உல‌க‌ கோப்பை வென்ற‌ பிற‌க்கு . அதுக்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் சின்ன‌ அணிக‌ளிட‌ம் உல‌க‌ கோப்பையில் 2-0 என‌ தோத்த‌வை...................இத்தாலி ம‌ற்றும் கொல‌ன்ட் ஓட‌ ஒப்பிடும் போது ஜேர்ம‌ன் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் க‌ல‌ந்து கொள்ளுகிற‌ நாடு........................... 2026க‌ளில் புதிய‌ சாத‌னை ப‌டைப்பின‌ம் என‌ ந‌ம்புவோம் புல‌வ‌ர் அண்ணா........................ என‌க்கு டென்மார்க் அணிய‌ விட ஜேர்ம‌ன் அணிய‌த் தான் அதிக‌ம் பிடிக்கும்.....................2002உல‌க‌ கோப்பையில் ப‌ல‌மான‌ பிரான்ஸ்ச‌ வீழ்த்தி டென்மார்க் 2-0 வென்ற‌தை ம‌ற‌க்க‌ முடியாது😁..................................
  33. எப்ப பார்த்தாலும் கடன் கடன் கடன் நாய் காலைத் தூக்கியது போல எந்த நாட்டவரைக் கண்டாலும் பிச்சைப் பாத்திரம் தான்.
  34. சுமத்திரனுக்கு மட்டும் சாவு வராதவர் போல் ஆடுகிறார் 😀 சம்பந்தருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றதுக்கே ஒரு திரி பலபக்கம் ஓடிக்கொண்டு இருக்கு . அங்கை என்னடா என்றால் அநாதை பிணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட அவர்களின் கட்சி காரர் கூட கொடுக்கவில்லை என்று தமிழ் வின் அழுது வடியுது .
  35. என் சுயநினைவால் ஓரளவு உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால் ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன். தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌
  36. எங்களுக்கு அகிம்சையும் ஆயுதப் போராட்டமும் மட்டுமல்ல பகிஸ்கரிக்கவும் தெரியும்
  37. சுமந்திரன் சம்பந்தனை மட்டுமல்ல... வாக்களித்த மக்களையும் நிர்கதியாய் விட்டவர் தானே. சிங்களத்தோடு வாழ்வது பெருமை என்று அடித்துவிட்ட விண்ணர் அல்லவா.
  38. நேற்று முந்தினம் இப் படத்தை பார்த்தேன். இவ் வருடத்தில் வந்த உருப்படியான படம். வெற்றி மாறன் எழுதிய கதை மீது இருந்த எதிர்ப்பை படம் ஈடு செய்தது. இப்படத்தில் தன்னை மிகவும் நப்பும் நண்பனை ஏமாற்றும் கதாபாத்திரத்தின் பெயர் - கருணா!.
  39. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புற்றுநோய் காரணமாகக் கடும் சுகவீனமுற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் மூலம் அறியமுடிந்தது என தென்னிலங்கை பத்திரிகையான லங்கா சார செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது கட்சிப் பதவிகளை அடுத்தவர்களிடம் கையளித்துள்ளதாகவும் அதே வேளை பாராளுமன்ற அலுவல்களிலிலிருந்து மூன்று மாத ஓய்வுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறதெனவும் அறியப்படுகிறது. கடந்த ஜனவரியில் 50 வயதை எட்டிய திரு பொன்னம்பலம் லண்டன், இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வழக்கறிஞராகப் பணிபுரிவதற்குரிய தகமைகளைப் பெற்றவர் எனினும் அவர் சட்டத்தரணியாகத் தொழில் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் அவரது த்ந்தையார் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்ரியீட்டியதுடன் அதைத் தொடர்ந்து 2004 இலும் த.தே.கூ. சார்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் சென்றிருந்தார். பின்னர் 2010 இல் அவர் த.தே.கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். ஆனாலும் 2010, 2015 பாராளுமன்றத் தேர்தல்களில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் 2020 இல் அவரும் செல்வராஜா கஜேந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல பரம்பரைச் சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தாலும் கொழும்பு பங்குச்சந்தையில் பாரிய முதலீடுகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் ஜீ.ஜீஸ் புறொப்பெர்ட்டீஸ் பிரைவேட் லிட், கீதாஞ்சலி கஜலக்ஸ்மி பிரைவேட் லிட், செறெண்டிப் லாண்ட் பி.எல்.சி, எல்.ஓ.எல்.சீ ஹோல்டிங்ஸ், லங்கா ஓறிக்ஸ் லீசிங் கொம்பனி புக்கிற் டாறா (பாம் ஒயில்) பி.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் சில அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாகவும் தனிச்சொத்தாகவும் இருக்கின்றன. https://marumoli.com/கஜேந்திரகுமார்-பொன்னம்ப/#google_vignette
  40. வெளிநாட்டு ஈழத்தமிழர் என்று பொத்தாம் பொதுவாய்க் கூற முடியாது. வெளிநாடு வாழ் தமிழர்களில் ஒரு பகுதி சிந்திக்கத் தெரியாத முட்டாள் தமிழர்கள் என்று கூறலாம்.
  41. சுமந்திரன் எவ்வாறு சம்பந்தனின் உடலை அசிங்கப்படுத்தினார்? சுமந்திரனைச் சுற்றியே தற்போதைய இலங்கைத் தமிழர் அரசியல் சுழல்கிறது,.😁
  42. வேற என்ன செய்ய முடியும். ஊருக்கு போனால் ஊரில் உள்ள சொந்த காணியையே காபாத்த முடியவில்லை. கள்ள உறுதி போட்டு காணி களவு போகப்போகிது யாருக்காவது வித்துவிடு என்று அறிவுரை கூறப்படுகிறது. நாங்கள் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி அதற்குள் வாழ்ந்துவிட்டு சாக வேண்டியதுதான். பேச்சு பல்லக்கு தம்பி காநடை என்பது போலத்தான் நமது சீவியம். அக்கம் பக்கத்து நமது ஆட்களிடம் இருந்து காணியை காப்பாற்றுவதே ஒரு போராட்டம். சிங்களவனிடம் இருந்து மண்ணை மீட்க முடியுமா என்பது…?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.