Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8907
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3055
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/20/24 in all areas

  1. எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். போராடடா, ஒரு வாளேந்தடா வாழும் வரை போராடு சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு தோல்வி நிலையென நினைத்தால் அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா) இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்னிச் சோழன்
  2. தங்க மீன்கள் -------------------- சுவாமி விவேகானந்தர் அவரது புகழ்பெற்ற சிகாகோ சொற்பொழிவில் ஒரு தவளைக் கதை சொல்லியிருப்பார். கடலில் இருந்து கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு தவளை, அங்கேயே இருக்கும் தவளைகள், அவைகளின் உரையாடல்கள் என்று அந்தக் கதை போகும். இது எங்கேயும் எடுத்து விடுவதற்கு நல்ல வசதியான ஒரு கதை. 'என்னையே தவளை என்று சொல்கிறியா..........' என்று எந்த விவாதத்தையும் வாக்குவாதமாக மாற்றக் கூடிய தன்மையுள்ளது சுவாமியின் இந்தக் கதை. கதையின் சாராம்சத்தை, அதிலுள்ள தத்துவத்தை விட, எனக்குப் பிரச்சனையாகவே இருந்தது கடல் தவளை ஒன்று கிணற்று நீருக்குள், அந்தச் சின்ன வட்டத்திற்குள் உயிர் வாழுமா என்னும் உயிரியல் சந்தேகமே. கலர் கலரான கடல் மீன்கள் வட்டி என்று சொல்லப்படும் முருகைக்கல் பகுதியில் கூட்டம் கூட்டமாக ஓடித் திரியும். அவைகளை பிடித்து வந்து வீட்டுக் கிணற்றுக்குள் விட்டிருக்கின்றேன். அடுத்த அடுத்த நாட்களில் அவை கிணற்று மேல் நீரில் உயிரற்று மிதந்து கொண்டிருக்கும். ஒரு தடவை நண்பன் ஒருவன் இரண்டு வளர்ப்பு மீன் குஞ்சுகள் கொடுத்தான். கோல்ட் ஃபிஷ், தங்க மீன் குஞ்சுகள். ஒரு பொலித்தீன் பைக்குள் தண்ணீர் நிரப்பி மீன் குஞ்சுகளை உள்ளே விட்டு எடுத்து வந்தேன். வீட்டில் மீன் தொட்டி கிடையாது. என்ன செய்வது என்று தெரியாமல், குஞ்சுகளை கிணற்றுக்குள் விட்டு விட்டேன். கிணறு இருபது அடிகள் ஆழமிருக்கும், அதில் எப்போதும் ஆறு அடிகளுக்கு தண்ணீர் இருக்கும். சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் உப்பாக இருந்தாலும், எங்கள் வீட்டுக் கிணறு உப்பு இல்லை. அப்பப்ப கிணற்றுக்குள் குதித்து ஏற்கனவே சில தடவைகள் அடி வாங்கியிருக்கின்றேன். குடிக்கிற தண்ணி கிணற்றுக்குள் குதித்தால் அடிக்காமல் என்ன செய்வார்கள்? இன்னும் சில அடிகளையும் தாங்கிக் கொண்டு, தேவையென்றால், கிணற்றுக்குள் குதித்து இரண்டு குஞ்சுகளையும் பார்த்துக் கொள்வோம் என்ற ஒரு இரகசிய திட்டமும் என்னிடம் இருந்தது. இரண்டு குஞ்சும் அப்படி ஒரு வேகத்தில் வளர்ந்தன. இடைக்கிடை மேல் நீருக்கு வந்து போய்க் கொண்டும் இருந்தன. நீருக்குள் இருக்கும் பொருட்கள் கொஞ்சம் பெரிதாகத் தான் தெரியும். அதனால் இந்த இரண்டு தங்க மீன்களும் உண்மையில் எவ்வளவு தான் பெரிது என்று ஒரு தடவை கிணற்றுக்குள் குதித்தே பார்த்தேன். அந்த அளவில் தங்க மீன்கள் அங்கு எங்கேயும் இருக்கவேயில்லை. அம்மாவிற்கு அந்த மீன்களை மிகவும் பிடித்து விட்டது. நேரம் கிடைக்கும் போது போய் கிணற்றை எட்டிப் பார்ப்பார். தான் பார்க்கும் போதெல்லாம் அந்த மீன்கள் மேலே வருகின்றன என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். நாட்கள் போகப் போக, கிணற்றுக் கட்டிலும் இருக்கத் தொடங்கினார். தண்ணி அள்ளும் போது வாளியை பார்த்து போடும் படியும் எங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார். தங்க மீன்களில் கிணற்று வாளி தப்பித்தவறியும் பட்டு விடக் கூடாதாம். அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் மீன் தொட்டி ஒன்று செய்தார்கள். பெரிய மீன் தொட்டி, ஐந்து அடி நீளம் இருக்கும். ஊரில் அப்பொழுது பலரும் மீன் தொட்டிகள் செய்தனர். நானும் போய் அந்த மீன் தொட்டியைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஆனாலும் எங்களின் தங்க மீன்களுக்கு கிணறே சரியென்று தோன்றியது. ஒரு நாள் காலையில் வெளியே போன நான் பின்னேரமே வீடு திரும்பினேன். முக்கால்வாசி நாட்கள் இப்படியானவையே. அம்மா ஓடி வந்து, மீனைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள் என்றார். சொல்லும் போதே கோபமும் சோகமும் அம்மாவில் தெரிந்தது. அப்பாவின் நண்பர்கள் வீட்டில் இருந்து வந்து பிடித்துப் போனதாக அம்மா சொன்னார். அத்தாங்கு போட்டு, அதற்குள் சோற்றுப் பருக்கைகளை போட்டு, எங்களின் தங்க மீன்களை ஏமாற்றிப் பிடித்து இருந்தார்கள். அப்பா அசரவேயில்லை. அப்பாவின் நண்பர் வீட்டுக்காரர்கள் இரண்டு நாட்களில் எங்கள் தங்க மீன்களை திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று மிகச் சாதாரணமாக சொன்னார் அப்பா. இரண்டு நாட்களில் வந்து விடும் தானே என்று அம்மாவும், நானும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம். இரண்டு நாட்களின் பின், எங்களின் தங்க மீன்கள் அங்கே தொட்டியில் இறந்து விட்டதாக சேதி வந்தது. அம்மா நாங்கள் அங்கே அந்த வீட்டில் இருக்கும் வரை கிணற்றை இடைக்கிடை எட்டிப் பார்த்தபடியே இருந்தார்.
  3. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் பொருள் தேடி வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை இல்லாமல் மாறும் பொருள் தேடி அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க இயற்கை தந்த பரிசாகும் இதில் நாட்டினைக்கெடுத்து நன்மையை அழிக்க நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் நல்லதை வளர்ப்பது அறிவாற்றல் அல்லதை நினைப்பது அழிவாற்றல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
  4. வாழ்த்துக்கள் அருமையான தகவல்கள் பிரியன் அச்சுனாவில். குற்றம் இருக்கலாம் ஆனால் அவர் சொன்ன குற்றசாட்டுகள் உண்மையானது எனவேதான் அர்ச்சுனா பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம் அவரால் முன்வைக்கப்படும் குற்றசாட்டுகள் குற்றவாளிகள் பற்றி ஆராய்வு செய்யவும் 🙏
  5. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து. நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
  6. இவற்றில் இருக்கும் பல விடயங்களை ஒரே இரவில் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. ஆனால், ஒரு தலைமுறையில் மாற்றலாம். செய்ய வேண்டிய சில விடயங்கள் இவை தான்: 1. "மருத்துவர் தான் கடவுள்" என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். "உலகத்திலேயே ஒரேயொரு மருத்துவர் தான் எனக்கு இருக்கிறார்" என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும். சில இடங்களில் பொருளாதார நிலை இதை அனுமதிக்காது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும், இதை ஊக்குவிக்கவும் , பரவலாக்கவும் வேண்டும். 2. ஆரோக்கியம் பற்றிய கல்வியும் அறிவும் (health literacy) எல்லோருக்கும் இருக்க வேண்டும். நீரிழிவு என்றால் என்ன, தொண்டையில் புற்று நோய் என்றால் என்ன, என்பது போன்ற ஒவ்வொரு விடயமும் பயனாளருக்குத் தெரிய வேண்டும். எல்லோரும் செல்போனோடு திரியும் காலத்தில் இது சாத்தியம். விடயம் தெரிந்தால் கேள்வி கேட்கலாம். 3. மருத்துவ தேவை சார்ந்து சில சட்டங்களை இயற்றும் முயற்சியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். நோயாளியின் உரிமைகள் எவை, நோயாளி பற்றிய தகவல்கள் (medical records) யாருக்குச் சொந்தம், ஆகக் குறைந்த சேவை நியமம் (minimum standard of care) என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு சட்டங்கள் மூலம் பதில்கள் வழங்கப் பட வேண்டும். இந்த சட்டப் பதில்களை வைத்துக் கொண்டு மருத்துவ சேவையின் பயனர்கள் நிவாரணம் தேட முடியும். இந்த வழிகளில் முன்செல்லாமல், முகநூல் பதிவுகளில் கோபத்துடன் எழுதுவதால் பயன்கள் இருக்காது. ஆற்று நீரில் போட்ட இலை போல அடிபட்டுப் போய் விடும் இந்தப் பதிவுகளெல்லாம்.
  7. ஆரம்பத்தில் புலிகள் பயன் படுத்திய பாடல்கள் இவைகள். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்….’ (உலகம் சுற்றும் வாலிபன்) ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….’ (அரச கட்டளை) ‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….’ (ஆயிரத்தில் ஒருவன்) ‘அச்சம் என்பது மடமையடா….’ (மன்னாதி மன்னன்) ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ (ஊமை விழிகள்) கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) ‘சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு…’ (கலங்கரை விளக்கம்) ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்’ (ஆனந்தஜோதி) சிலகாலங்களின் பின்னர் இந்தப் பாடல்களும் சேர்ந்து கொண்டன ‘இரவும் ஒருநாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா’ ‘சிறுத்தைகளே ஒன்று சேருங்கள் - இந்த ஜெகத்தை ஜெயிக்க வாருங்கள் கொட்டம் அடித்த குள்ள நரிகளின் ரத்தம் குடிக்க வாருங்கள்’ ‘ஒரு காலம் வரும் நல்ல நேரம் வரும் எங்கள் கண்ணீரிலே தீயும் தோன்றலாம்’ ‘இது எந்தன் ராஜ்சியம்தான்’ https://myspb.wordpress.com/2012/01/13/1260-இது-எந்தன்-ராஜ்ஜியம்-தான/ ‘தேவனின் கோவிலில் ஏற்றிய தீபம் தெருவினில் கிடக்குது இது என்ன ஞாயம்?’ (இந்தப்பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)
  8. தமிழர் தாயகம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வில் உள்ளடக்கப்பட வேண்டிய இரண்டாவது அடிப்படை அம்சம் எதுவென்பதைத் தமிழர் தரப்பு முன்வைத்தது. தமிழ் மக்கள் இலங்கையில் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்ந்து, தமது இருப்பினைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, அவர்கள் சரித்திர காலம் முதல் வாழ்ந்துவரும் நிலப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, அப்பகுதி தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்று அங்கீகரிக்கப்படவேண்டும் என்று கோரினர். இலங்கையில் தமிழர்களுக்கென்று தாயகம் ஒன்று இருக்கின்றது என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். தமிழர்களின் தாயகம் என்பது யதார்த்த ரீதியில், சரித்திர ரீதியில், நிர்வாக ரீதியில், நடைமுறையில் இயங்குவதாக அவர்கள் மேலும் எடுத்துக் கூறினர். சரித்திர ரீதியில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது பூர்வீகத் தாயகங்களிலேயே வாழ்ந்துவருவதாக அவர்கள் கூறினர். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சரித்திர ரீதியில் வாழ்ந்துவருகையில், சிங்களவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்துவருவதாக அவர்கள் எடுத்துரைத்தனர். 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் இலங்கையினை ஆக்கிரமித்தபோது வடக்குக் கிழக்கினை யாழ்ப்பாண இராஜ்ஜியம் ஆண்டு வந்ததாகவும், இலங்கையில் கரையோரப் பகுதிகளான மேற்கையும், தெற்கையும் கோட்டே இராஜதானி ஆண்டுவந்ததாகவும், நாட்டின் மத்திய மலைப்பகுதியினை கண்டி இராஜ்ஜியம் ஆண்டுவந்ததாகவும் அவர்கள் சான்றுகளுடன் வெளிப்படுத்தினர். யாழ்ப்பாண இராஜ்ஜியம் அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் கோட்டே இராஜ்ஜியமே முதன் முதலாக கொண்டுவரப்பட்டதுடன், அதன் ஆட்சியாளர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தமது இராஜ்ஜியத்தின் இறையாண்மையினை போர்த்துக்கேய மன்னனிடம் தாரைவார்த்தனர். யாழ்ப்பாண இராஜ்ஜியம் 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் வெற்றிக்கொள்ளப்பட்டதுடன், கண்டி இராஜ்ஜியம் 1815 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது. காலணித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் இறையாண்மை, இலங்கை சுதந்திரம் அடைந்த தருணத்தில் தமிழ் மக்களிடத்திலேயே கொடுக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். நிர்வாக ரீதியில், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கும் கிழக்கும் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் தனியாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1621 ஆம் ஆண்டிலிருந்து 1815 வரையான இரு நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயரை ஒல்லாந்தர் வெற்றிகொள்ள, பிற்காலத்தில் ஒல்லாந்தரை ஆங்கிலேயர்கள் வெற்றிகொண்டிருந்தனர். 1833 ஆம் ஆண்டு முழு இலங்கையினையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் கொழும்பிலிருந்தே மாகாணங்களை ஆண்டுவந்தனர். அப்படியிருந்தபோதிலும், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனி அலகாகக் கருதப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வேறாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதே நிர்வாக நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டே வருகின்றன. சிங்கள அரசுகள் தமது அரசியல் தீர்வுப் பொதிகள் ஊடாக, சட்டங்கள் ஊடாக, அரசியல் யாப்புக்களூடாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமென்றே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1958 ஆம் ஆண்டு செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கில் பிராந்திய சபைகளை ஏற்படுத்துவதென்றும், அப்பிராந்தியங்களில் வாழும் மக்கள் விரும்பினால் வடக்கும் கிழக்கும் இணைந்துகொள்ளமுடியும் என்றும், அப்பிராந்தியங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் ஒத்துக்கொண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தில், "உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கும்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும், 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை 1965 இல் செய்துகொள்ளப்பட்ட செல்வா டட்லி ஒப்பந்தம் மேலும் மெருகூட்டியிருந்தது. தமிழ் மொழியினை ஆவணங்களை உருவாக்கும் மொழியாக ஏற்றுக்கொள்ளவும் டட்லி அரசு இணங்கியிருந்தது. 1966 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் தமிழ் மொழி ஆவண உருவாக்கல் மொழியாக பிரகடணப்படுத்தப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகம் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1972 ஆம் ஆண்டின் யாப்பு, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பாவிக்க அனுமதி வழங்கியிருந்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மொழியினை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தேசிய மொழியான தமிழ் மொழியினை நிர்வாகத்திற்குப் பாவிக்கவும் ஏற்றுக்கொண்டிருந்தது. இவற்றுள் மிகவும் தீர்க்கமான வாதமாக முன்வைக்கப்பட்டது மூன்றாவதாகும். சிங்கள அரசுகளும், சிங்கள மக்களும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமாகவே கருதிவருகின்றனர் என்பதே அந்த வாதமாகும். 1950 களின்போது தமிழர்கள் தமது மொழிக்கான அந்தஸ்த்துக் கோரி கூக்குரலிட்டபோது, "உங்களின் தாயகத்திற்கே ஓடுங்கள்" என்று கூறியே சிங்களவர்கள் அவர்களை அடித்து விரட்டினர். உங்களின் தாயகம் என்று அவர்கள் குறிப்பிட்டது வடக்குக் கிழக்கினையே. மேலும், 1958, 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளின்போது, ஆட்சியில் இருந்த ஒவ்வொரு சிங்கள அரசுகளும், தமிழர்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு ரயில்களிலும், கப்பல்களிலும் அனுப்பி வைத்தன. தமிழர் தரப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் ஒருவர் பின்வருமாறு உணர்வுபொங்கக் கேட்டார், "இலங்கையின் தெற்கில் நாம் தமிழர்கள் என்கிற காரணத்திற்காகத் தாக்கப்படும்போது எமது பாதுகாப்பிற்காக நாம் எங்கு செல்வோம்? கொழும்பில் எமக்கெதிரான படுகொலைகள் நடைபெறும்பொழுது சிங்கள அரசாங்கங்கள் எம்மை எங்கே அனுப்பிவைத்தன? நாம் வடக்குக் கிழக்கிலேயே தஞ்சமடைந்தோம், ஏனென்றால் அதுவே எங்களின் தாயகம்".
  9. ”அன்புள்ள சைனுவுக்கு, நான் இங்கு நலம், நீயும் …” கேரளாவின் கிராமம் ஒன்றில் ஆற்றுமணல் அள்ளும்தொழில் செய்பவன் நஜீப். எப்போதும் நீரோடு விளையாடும் தொழில் ஆதலால் அடிக்கடி இருமலும் காய்ச்சலும் அவனை வாட்டுகின்றது. அம்மாவின் வற்புறுத்தலுக்கு இணங்க சைனுவை திருமணம் செய்து கொள்கின்றான். சைனு நான்கு மாதக்கர்ப்பிணியாக இருந்தபோதுதான் கருவட்டாவில் இருந்த ஒரு நண்பர், சவூதி அரேபியா செல்வதற்கான ஒரு விசா விலைக்கு இருப்பதாக சொல்கின்றார். இந்தத் தொழிலின் அவஸ்தையும் பட்ட கடன்களும் அவனுக்குள் வேறு ஒரு ஆசையை விதைக்கின்றன. சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் தன் ஊர்க்காரர்கள் விடுமுறையில் ஊருக்கு வரும்போது அவர்கள் மேனியில் இருந்து கிளம்பும் வாசனைத்திரவியங்களும் கைகளிலும் கழுத்திலும் புரளும் கனத்த தங்கச்சங்கிலிகளும் மனைவி மக்களுக்கு வாங்கி வரும் நகைகள், கடிகாரங்கள், துணிமணிகள், டேப் ரிக்கார்டர், விசிபி ஆகியனவும் இங்கே வந்தபின் வாங்கும் கார், ஏசி போன்ற ஆடம்பர சாதனங்களும் நஜீப்பை தூண்டி விடுகின்றன. அரேபியாவில் சில வருடங்கள் வேலைக்கு சென்று சம்பாதித்து ஊர் திரும்பி வாழ்நாளெல்லாம் நிம்மதியாக இருந்துவிடலாம் என்று கனவு காண்கின்றான் நஜீப். சைனுவும் இவனது ஆசையை தூண்டி விடுகின்றாள். ஆற்றுமணல் அள்ளி, பிறக்கப்போகும் நபீலையோ சஃபியாவையோ எப்படிக்கரை சேர்ப்பது என்று அவனைக்கேட்கின்றாள். உம்மாவையும் ஆறு மாதக்கர்ப்பிணியான சைனுவையும் பிரிந்து பம்பாயில் விமானம் ஏறி சவூதி அரேபியாவின் ரியாத்தில் வந்து இறங்குகின்றான். இவனுடன் அதே ஊர்க்காரனான ஹக்கீம் என்ற இருபது வயதுக்கும் குறைவான இளைஞனும் வருகின்றான். பம்பாயில் இரண்டு வாரங்கள் இருந்தபோது ‘ஹக்கீம், நீ இங்கேயே இருந்து ஹிந்தி சினிமாவில் சான்ஸ் தேடு, கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும்!’ என்று நஜீப் அவனிடம் சொல்கின்றான், அந்த அளவுக்கு ஹக்கீம் ஒரு அழகன். விசயம் என்னவெனில் நஜீபை வேலைக்கு அனுப்பியவர் அவன் என்ன வேலைக்காகப் போகின்றான் என்று அவனிடம் சொல்லவும் இல்லை, இவனும் கேட்கவில்லை! ரியாத் விமானநிலையத்தில் தன் முதலாளி வந்து அழைத்துச் செல்வார் என்று பல மணி நேரம் காத்திருந்தபின் இரவு நேரத்தில் அங்கு வந்த ஒரு அரேபியன் இவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு நடக்கின்றான், அவன் ஆடை மிகவும் அழுக்கடைந்து நாற்றம் வீசுகின்றது, அவன் மேனியில் இருந்தும் மிகக்கெட்ட துர்வாடை வீசுகின்றது, அவனது ஆடையும் அப்படியே. இருவரும் அவன் பின்னால் நடக்க, ஒரு துருப்பிடித்த பிக்அப் (சிறிய சரக்கு வாகனம்) வண்டியின் பின்னால் உட்கார்ந்து இரவு முழுக்க பாலைவனத்தின் ஊடாகப்பயணிக்கின்றார்கள். வழியில் ஒரு இடத்தில் வண்டி நிற்க ஹக்கீமை இறக்கிவிடுகின்றான். மீண்டும் பயணித்து மையிருளில் நஜீப் வந்து சேர்ந்த இடம் எது? அங்கே வீசிய சாணம், மூத்திர வாடை ஆகியவற்றை வைத்து கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் என்பதை உணர்ந்து கொள்கின்றான். கட்டிலில் ஒரு கொடூரமான ஒருவம் படுத்துள்ளது. அவன் உடலில் இருந்து வீசும் நாற்றமோ எல்லாவற்றையும் தாண்டியதாக மிகக்கொடூரமாக உள்ளது. சகிக்கமுடியவில்லை. வேறு கட்டில் எதுவும் இல்லாதபடியால் வெற்றுத்தரையில் மணலில் படுத்து உறங்குகின்றான். விடியும்போது அவனைப்பார்க்கின்றான். மிக நீண்டும் சிக்குப்பிடித்தும் தொங்கும் தலைமுடியுடனும் தாடியுடனும் பல வருடங்களாக வெட்டப்படாத நகங்களுடனும் நிறம் மாறி அழுக்கடைந்துபோன உடையுடனும் இருக்கும் அவனிடம் இவன் பேச முயற்சிக்க அவனோ ஒரே ஒரு சொல்லைக்கூட பேசாமல் வெறித்துப்பார்க்கின்றான். வெளிச்சத்தில்தான் தெரிகின்றது, எல்லையற்ற மிக மிக நீண்ட மணலைத்தவிர வேறு எதுவும் அற்ற, புல் பூண்டு செடி கொடி எதுவுமற்ற, கண்ணுக்கு எட்டிய தொடுவானம் வரை ஒரே ஒரு மனிதனும் இல்லாத ஒரு பாலைவனத்தின் நடுவே தான் இருப்பதை பார்க்கின்றான். ஆடுகளையும் ஒட்டகங்களையும் பார்க்கின்றான். தான் இருப்பது அவற்றை மேய்க்கவும் கட்டவும் ஆன மஸாரா என்ற தொழுவம் என்று உணர்கின்றான். சற்றுத்தொலைவில் உள்ள ஒரு கூடாரத்தில் தன்னை அழைத்துவந்த அர்பாப் (முதலாளி) இருப்பது தெரிகின்றது. இவனுக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரிகின்றது, தான் இனி எப்போதுமே மீள முடியாத நரகத்தில் வந்து விழுந்துவிட்டதை உணர்கின்றான். ஆடுகளுடனும் ஒட்டகங்களுடனும்தான் தன் எதிர்காலம் கழியப்போகின்றது என்ற உண்மை, ஒரே நாளில் தன் வாழ்க்கை பெரும் பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட உண்மை சுள்ளென உரைக்கும்போது கையாலாகாமல் மனம் குமைந்து அழுகின்றான். வெட்டவெளியில் (தனியாக அதற்கென இடம் இல்லாததால்) மலம் கழித்து வந்தபின் வாளியில் தண்ணீர் எடுத்து கழுவப்போகும் நொடியில் அவன் மீது பெல்ட் அடி விழுகின்றது. புரிந்துகொள்ளும் முன் அர்பாப் அவனை தன் பெல்ட்டால் அடித்துப்புரட்டி துவைத்து விடுகின்றான். தண்ணீர் மிக அரியபொருள், குண்டி கழுவப்பயன்படுத்தும் உன்னை கொன்றுவிடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கின்றான். ஆற்றுநீரில் விளையாடுவதே வாழ்க்கையென இருந்த நஜீப்புக்கு தண்ணீர் இங்கே கிடைத்தற்கரிய பொருளாகின்றது. குபூஸ் எனப்படும் ரொட்டியும் அதை நனைத்துச்சாப்பிட தண்ணீரும் தருகின்றான். காலை உணவு குபூசும் தண்ணீரும், மதிய உணவு குபூசும் தண்ணீரும், இரவு உணவு குபூசும் தண்ணீரும். தவிர அர்பாப்பின் கையில் எப்போதும் துப்பாக்கியும் பைனாகுலரும் இருப்பதையும் பார்த்து இங்கிருந்து தப்ப எண்ணுவதும் சாவதும் ஒன்றே என்பதை தெரிந்துகொள்கின்றான். பகலில் தீயெனச்சுட்டெரிக்கும், இரவில் மோசமாக குளிர்ந்துவிடும் பாலைவனத்தில் நக நுனியளவும் புல்லும் கூட இல்லை எனில் எதன் பொருட்டு இந்த ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்க்க வேண்டும்? இறைச்சிக்காகவே வளர்க்கப்படும் இந்தப் பிராணிகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் அவற்றுக்கு உடற்பயிற்சி அளிப்பதே இந்த மஸாராவின் நோக்கம். அவ்வளவுதான். அப்படியெனில் நேற்றிரவு ஹக்கீமையும் இப்படியான ஒரு மஸாராவில்தான் இறக்கிவிட்டிருப்பான், அதுவும் இங்கே அருகில்தான் இருக்கக்கூடும். வெயிலிலும் குளிரிலும் பரந்துபட்ட ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்ப்பது மட்டுமே இவன் வேலை. நஜீப் நினைத்ததுபோல அது அப்படி ஒன்றும் எளிதான வேலையாக இல்லை. மிகப்பரந்த எல்லையற்ற மணற்பெருவெளியில் உச்சந்தலையில் தீயை வைத்து எரிப்பதுபோல் அனல் கக்கும் பாலையில், ஆடுகள் திசைக்கொன்றாக ஓடும். காலையில் அவற்றை வெளியேற்றி அவற்றில் ஒன்று கூட தப்பாமல் ஒன்று சேர்த்து இருட்டுவதற்குள் மஸாராவிற்குள் அடைப்பது என்பது உயிர்போகின்ற பெரும் அவஸ்தையாக உள்ளது. சிறிய தவறு நேர்ந்தாலும் அர்பாப் தன் பெல்ட்டால் அடித்து துவைக்கின்றான், கட்டி வைத்து அடிக்கின்றான், பட்டினி போடுகின்றான். வந்து சேர்ந்த தொடக்க நாட்களில் தன் நிலையையும் உம்மாவையும் சைனுவையும் பிறக்கப்போகும் குழந்தையையும் எண்ணி இரவுகளில் கண்ணீர் சிந்தி அழுதுகொண்டு இருந்த நஜீப்பின் நினைவுகளில் இருந்து காலப்போக்கில் அவர்கள் மறைந்து விடுகின்றார்கள், ஆடுகளும் ஒட்டகங்களும் மட்டுமே அவனுக்கு உறவுகளாகி விடுகின்றன. ஆடுகளுக்கு அவன் பெயரும் வைத்து அழைக்கின்றான், அவற்றுடன் பேசுகின்றான், அதன் மூலம் மனிதர்களுடன் தான் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றான். நாளடைவில் அவனது தலைமுடியும் தாடியும் நீண்டு வளர்ந்து சிக்குப்பிடித்து தொங்குகின்றன, நகங்கள் வெட்டப்படாமல் அழுக்கடைந்து நீள்கின்றன, அணிந்திருக்கும் ஒற்றை ஆடையும் அழுக்கடைந்து முடைநாற்றம் வீசுகின்றது. குளிப்பதே இல்லாததால் உடலில் அழுக்கு சேர்ந்து கொப்புளங்கள் தோன்றி துர்நாற்றம் வீசுகின்றது. ஆடுகளிலிருந்தும் ஒட்டகங்களில் இருந்தும் வெளிப்படும் சிறு பூச்சிகளும் பேன்களும் அவனது உடலின் மறைவிடத்தில் வந்து குடியேறுகின்றன. மனிதர்களுடன் பேச மறந்தவனாகின்றான். வந்து சேர்ந்த நாள் முதலாய் தான் பார்க்கும் கொடூர மனிதன் ஏன் தன்னுடன் ஒற்றை வார்த்தையும் பேசாமல் இருக்கின்றான் என்பதற்கான காரணத்தை நஜீப் புரிந்துகொள்கின்றான். ஒருநாள் காலை இந்தக் கொடூரமனிதனும் காணாமல் போகின்றான். எப்படியோ அவன் தப்பித்துவிட்டான், நன்றாக இருக்கட்டும் என்று அல்லாவை பிரார்த்திக்கின்றான். எல்லாம் வல்ல இறைவன் தனக்கும் ஒரு வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகின்றான். தன் மேய்ச்சல் எல்லையையும் தாண்டி கண்ணுக்கு எட்டாத நெடுந்தொலைவுக்கு இவன் சென்று பார்க்கின்றான். பாலைவன மணலில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனிதனின் கை வெளியே தெரிய அதிர்ச்சி அடைகின்றான். கையில் இருக்கும் குச்சியால் மண்ணை தோண்டும்போது ஒரு இடுப்பு பெல்ட் வெளியே தெரிகின்றது. அது அந்தக் கொடூர மனிதன் அணிந்திருந்த பெல்ட் அல்லவா! எனில் தன் வாழ்க்கை? யா அல்லாவே! இதுதான் உன் கருணையா? இதே பாலைவன மண்ணில்தானே நபிமார்களுக்கு காட்சியளித்து வசனங்களையும் அறிவுரைகளையும் வாரி வழங்கினாய் அல்லாவே, நஜீப்பின் வாழ்க்கையை இப்படியே நீ முடித்து விடுவாயா எல்லாம் வல்ல இறைவனே? நரகத்தையும் சொர்க்கத்தையும் குர் ஆனில் வாசித்துள்ளேன், உண்மையான நரகம் இதுதான்! மூன்று வருடங்கள் ஓடியபின் நரகத்தின் படுகுழியில் இருந்து தப்பிக்கும் அந்த ஒரே ஒரு பெருவாய்ப்பு, இனி என்றுமே வராத ஒரே வாய்ப்பு வந்து சேர்கின்றது. மஸாராவில் இருந்து தப்பிக்கின்றான், அடுத்த மஸாராவில் இருக்கும் ஹக்கீமுடன் சோமாலியா தேசத்தவனான இப்ராஹிம் காத்ரி காட்டும் வழியில் இரவோடு இரவாக நரகத்தில் இருந்து வெளியேறுகின்றார்கள். இந்த நெடிய பாலைவனத்தின் நீள அகலங்களையும் குணத்தையும் நன்கு அறிந்தவனும் வளர்த்தியும் உடல் வலுவும் கொண்டவனும் ஆன காத்ரி அல்லா அனுப்பிய தூதுவனாக நஜீப்புக்கு தெரிகின்றான். ஆனால் அந்த இரவில் அவனுக்கு திறக்கப்பட்டது வேறொரு நரகத்தின் நுழைவாயில் என்பதை பொழுதுவிடியும்போது உணர்கின்றான் நஜீப். “ஆடு மேய்ப்பவனாக வேலை கிடைத்தபோது என் கனவிலிருந்து அது எத்தனை தொலைவில் இருந்தது என்பதை வலியுடன் நினைத்துப்பார்த்தேன். தூரத்தில் இருந்து பார்க்க நன்றாகத் தெரிவனவும் என்னவென்றே தெரியாதனவும் குறித்து நாம் கனவு காண்பது கூடாது. அத்தகைய கனவுகள் நனவாகும்போது அவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன” என்று நொந்து பேசும் நஜீப்பின் குரலில் ஒலிப்பது யாருடையது? நஜீப்பின் குரல் அல்ல. தன் குடும்பத்தின் எதிர்காலத்தின் பொருட்டு பொருளீட்டும் ஒரே ஒரு ஒற்றை ஆசையில், பெற்றோரையும் மனைவி பிள்ளைகளையும் உறவுகளையும், விட்டுவிட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் அரேபிய பாலைவனங்களில் அடக்குமுறை எனும் நுகத்தடியை சுமந்தவாறே உழைத்து ஓடாகி மனித உணர்வுகள் மரத்துப்போய் வெறும் கூடாக திரியும் பல லட்சம் இந்திய உழைப்பாளிகளின் குரல் அது. உண்டும் உண்ணாமலும் உறங்கியும் உறங்காமலும் எவனோ ஒரு அரேபிய முதலாளியின் நலன்பொருட்டு தமது சொந்த மண்ணில் இருந்து சுமந்து வந்த சொர்க்கபுரிக் கனவுகள் அனைத்தையும் பாலைவன மண்ணில் புதைத்துவிட்டு “நான் இங்கு நலமாக உள்ளேன், நீ நலமா? சாப்பாட்டுக்கும் வசதிகளுக்கும் குறைவில்லை, எட்டு மணி நேரமே வேலை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுது போகின்றது. ஒரு குறையும் இல்லை. நீங்கள் உங்களை பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை தேடுகின்றது. … எப்படியிருக்கிறாள்? … எப்படியிருக்கின்றான்? இன்னும் ஆறு மாதத்தில் வந்து விடுவேன் என்று பிள்ளைகளிடம் சொல். நீ எப்படி இருக்கின்றாய்? வரும்போது சின்னவனுக்கு வாட்சும் பெரியவளுக்கு ….” என்று மனைவிக்கு எழுதும் கடிதங்களில் நஜீப் சொல்லும் அப்பட்டமான வெளிறிய பொய்கள் பொங்கி வழிகின்றன. தன்னைப்படைத்த அல்லா ஏதாவது ஒரு உருவத்தில் வழியைத் திறந்துவிடுவான் என்று நஜீப்பும் ஹக்கீமும் இப்ராஹிம் காத்ரியும் தொடர்ந்து மூன்று இரவுகள், மூன்று பகல்கள், ஒரு சொட்டுத்தண்ணீரும் இல்லாமல் புல் பூண்டும் இல்லாத பாலைவனத்தில் ஓடுகின்றார்கள். தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒரு கட்டத்தில் பித்துப்பிடித்து இருவரையும் அடிக்கும் ஹக்கீம், ரத்த வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளி நஜீப்பின் கண் முன்னே பாலைவனமண்ணில் சுருண்டு விழுந்து சாகின்றான். நஜீப் மயக்கமடைகின்றான். நஜீப் சொன்னபடி பாம்பேயில் இருந்திருந்தால் ஒருவேளை அழகிய இளைஞனான ஹக்கீம் ஹிந்திப்படங்களில் நாயகனாக வலம் வந்து இளம்பெண்களின் கனவுகளை தொந்தரவு செய்திருப்பானோ? பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம், வளைகுடா குறித்த பல கற்பனைகளையும் கதைகளையும் கலைத்துப் போடுகின்றது. வாசனை திரவியங்களின் பின்னே வீசும் ரத்தக்கவிச்சி நம் மூக்கை துளைக்கின்றது. ஜொலிக்கும் தங்க நகைகள் கிலுகிலுக்கும் ஒலியின் பின்னால் பாலைவனத்தில் முறிபடும் எலும்புகளின் ஓசை கேட்பதை உணர முடிகின்றது. இறை நம்பிக்கை, வாழ்க்கை, வளைகுடா நாடுகளின் பளபளக்கும் கொழுத்த வசதி வாய்ப்புக்களின் பின்னே ஒளிந்திருக்கும் இருட்டான பொருளாதார அரசியல், உழைப்புச்சுரண்டல் என பல்வேறு அடுக்குகளை தன் எழுத்தில் மறைத்துவைத்துள்ளார் பென்யாமின். இவற்றில் எதையுமே அவர் நேரடியாக நூலில் எங்குமே எழுதவில்லை, ஆனால் வாசிப்பவனை யோசிக்க வைப்பதில் வெற்றி பெறுகின்றார். 2009இன் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. மலையாள மொழியில் எழுதப்பட்ட நூலை தமிழில் எழுதப்பட்ட நூல் என்று உணரத்தக்க விதத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் விலாசினி, பாராட்ட வேண்டும். ...... ஆடு ஜீவிதம், பென்யாமின், தமிழாக்கம்: விலாசினி, எதிர் வெளியீடு. - மு இக்பால் அகமது https://veligalukkuappaal.blogspot.com/2022/01/blog-post.html?m=1
  10. பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தினை 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் சங்கம் இணையத்தளத்தில் எழுதிவந்தார். செய்திச் சேகரிப்பில் பல்லாண்டுகள் பயணித்த சபாரட்ணம் அவர்கள், இனச் சிக்கல் தோன்றியதற்கான மூலக் காரணங்கள் தொட்டு, போரினூடான காலம், இனச்சிக்கலின் பின்னால் இருந்தவர்கள், அவர்களின் செயற்பாடுகள் ஆகியவற்றினை ஒரு செய்தியாளன் எனும் நிலையில் இருந்துகொண்டு எழுதுகிறார். முதலாவதாக, இவரால் தொகுக்கப்படும் செய்திகளின் விபரங்கள் வேறு எந்த இணையத்திலோ அல்லது அச்சாகவோ இதுவரை வெளிவரவில்லை என்பதாலும், இவரால் சங்கம் இணையத்தில் தரவேற்றப்பட்ட இத்தொடரின் சில அத்தியாயங்கள் அழிந்துவிட்டதனாலும், இவரால் பதியப்பட்ட பல பிரச்சினைகள் இன்றுவரை அவ்வாறே உயிர்ப்புடன் இருப்பதாலும் இத்தொடரினை முழுமையாக மீள்பிரசுரம் செய்கிறோம் என்று சங்கம் இணையம் கூறுகிறது. திரு சபாரட்ணம் அவர்கள் நீண்டகால செய்தியாளராக கடமையாற்றியதால் தமிழர் சரித்திரத்தின் மிக முக்கியமானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை அவர் பெற்றிருந்தார் என்றும், ஒரு வரலாற்றாசிரியராக அவரால் எமது போராட்டம்பற்றியும், தேசியத் தலைவர் பற்றியும் இதுவரை எவரும் எழுதாதாத கோணத்திலிருந்து எழுத முடிந்ததாகவும் சங்கம் கூறுகிறது. மூன்று பாகங்களாக இத்தொடரினை எழுதிய சபாரட்ணம் அவர்கள் , பாகம் ஒன்றினை 1954 இலிருந்து 1983 வரையான காலப்பகுதியென்றும், பாகம் இரண்டினை 1983 இலிருந்து 1986 வரையான பகுதியென்றும், பாகம் மூன்றினை 1985 இற்குப் பிற்பட்ட காலத்திலிருந்தும் எழுதி வந்திருந்தார். ஆனால், 2010 இல் அவரது மறைவுடன் பாகம் 3 பதிவேற்றப்பட முடியாது போய்விட்டது. பாகம் மூன்று பதிவேற்றப்படாதுவிட்டாலும் கூட, பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவற்றின் தொகுப்பினை யாழில் பதிவிடலாம் என்று நான் நினைக்கிறேன். எமது போராட்டச் சரித்திரம், தலைவர் மற்றும் போராளிகள் பற்றிய பதிவொன்று எம்மிடம் இருப்பது நண்மையானதே. இத்தொடர் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்படுவது தேவையானது என்று யாழ்க்கள நண்பர்கள் நினைக்குமிடத்து, இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து எழுத யோசிக்கிறேன். உங்களின் கருத்துக்களைச் செவிமடுக்க விரும்புகிறேன், ரஞ்சித் https://sangam.org/pirapaharan-volume-1-and-2-by-t-sabaratnam-reposted/
  11. "பெண்ணை மதித்திடு" கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” என்று. அது மட்டும் அல்ல, மகாவம்சம் என்ற பாளி காவியத்தின் படியும், சிங்கள இனம் என்று ஒன்று உலகில் தோன்றாத கி.மு. 3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய, மகாசேனனால் கோகர்ணம் (திருகோணமலை), எரகாவில்லை (ஏறாவூர் ?), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகியவற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக கூறுகிறது. மகாசேனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில்தான் இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் அங்கு சைவ தமிழர்கள் அல்லது நாகர்கள் கிருஸ்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததை உறுதிப்படுத்துகிறது. அப்படி 2300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஒலித்த, தமிழர் வாழ்ந்த திருகோணமலையில், புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகத்தின் அண்மையில், உயர்ந்து நிற்கும் பிரபல சட்ட நிறுவனம், "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சிறப்பான திறனுக்கு இலங்கை முழுவது பெயர்பெற்று இருந்தது. அதன் சுவர்களுக்குள், தினசரி எண்ணற்ற கதைகள் வெளிப்பட்டன, ஆனால் பெண்களுக்கான மரியாதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை தழுவுவதற்கும், அதனால் பெண்ணை மதித்திடும் ஒரு நிலை அங்கு காண முடியவில்லை. "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்" என்கிறார் மகாகவி பாரதியார். அவரின் வார்த்தைகளுக்கிணங்க இருபத்து ஓராம் நூற்றாண்டின் இணையில்லா ஆற்றலாக வலம் வருவது பெண்ணின் ஆற்றல். செய்யும் செயலில் நேர்மை, துணிவுடன் ஆற்றும் பணி, அளப்பரிய அறிவாற்றல் கொண்டு பெண்கள் பலர் வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து பெண்ணை மதித்திடு! ஆனால் இதற்கு எதிரானது தான் "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" கட்டிடத்துக்குள் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்ணை மதிக்காது வளர்வதுதான் ஆண்மைக்கு அழகு என்பதை, எப்படியோ ஆண் குழந்தைகளின் மனதில் பதிய விட்டிருக்கிறோம். அது தான் நாம் விட்ட பெரும் தவறு. 'பொம்பிள்ளை பேச்சை கேட்க்காதே', 'அவா பொம்பிள்ளை தானே', 'ஒரு பொம்பிளைக்கு எவ்வளவு திமிரு பாரு' என்ற அன்றாட சொற்களை வீட்டில் வெளியில் கேட்டு கேட்டு வளர்ந்தவன், தான் பெரியவனாக மாறியதும் , அதையே கடைப்பிடிக்கிறான் என்பதே உண்மை. நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரான ஆர்.நடராஜ் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவர் தனது கூர்மையான அறிவுத்திறன், ஈர்க்கக்கூடிய நீதிமன்றத்தின் இருப்பு மற்றும் மற்றவர்கள் சாத்தியமற்றதாகக் கருதும் வழக்குகளை திறனாக வாதாடக்கூடியவர். அவருக்கு தொழில் முறை திறமை இருந்த போதிலும், ஆர்.நடராஜ் ஒரு குறிப்பிடத்தக்க சிலவற்றில் பின்னடைவும் கொண்டு இருந்தார். அவர் தனது நிறுவனத்தில் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் திறனை அடிக்கடி அல்லது என்றும் கவனிக்கவில்லை. பாலின வேறுபாடுகள் பற்றிய அவரது கருத்து பழமையானது, அது ஆண்கள் வழிநடத்தும் மற்றும் பெண்கள் பின்பற்றும் பாரம்பரிய வளர்ப்பால் வடிவமைக்கப்பட்டது. இந்த எண்ணம் அவரது அன்றாட உரையாடல்களில் எப்பொழுதும் பிரதிபலித்தது. அவர் ஒருபோதும் வெளிப்படையாக பெண்களை அல்லது தனது சக பெண் வழக்கறிஞர்களை அவமரியாதை செய்யவில்லை என்றாலும், அவரது மனதில் சிறு வயதில் இருந்தே பதித்திருந்த மறைமுகமான சார்பு அவரது முடிவுகளை பாதித்தது. கூட்டங்களின் போது அவர் பெண் சக ஊழியர்களை அடிக்கடி குறுக்கிட்டு, அவர்களின் வெற்றிகளுக்கு திறமையை விட அதிர்ஷ்டம் காரணம் என்று கூறினார், மேலும் அவர்களின் திறன்களுக்கு கீழே உள்ள பணிகளை மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கினார். அதனால் பெண் ஊழியர்கள் தங்கள் திறன்களைக் காட்ட , வெளிப்படுத்த அங்கு முடியவில்லை. நிறுவனத்தின் கூட்டாளிகளில் வாகைச்செல்வி ஒரு பிரகாசமான மற்றும் உறுதியான இளம் பெண் வழக்கறிஞர். வாகைச்செல்வி தனது அர்ப்பணிப்பு, வழக்கு விவரங்களுக்கு தக்க வழியில் எப்படி வாதாட முடியும் என்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் சிக்கலான சட்டப் புதிர்களை அவிழ்க்கும் வினோதமான திறனுக்காக அறியப்பட்டார். இருப்பினும், அவரது திறமைகள் பெரும்பாலும் ஆர்.நடராஜ் அவர்களால் வேண்டும் என்றே கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பது உண்மை, அவர் அவளை ஒரு வருங்காலத் தலைவராகக் அல்லது முன்னணி வழக்கறிஞர் ஆக காட்டிலும் விடாமுயற்சியுள்ள ஒரு தொழிலாளி தேனீயாகக் தான் கண்டார். அது தான் அவர் தெரிந்தும் தெரியாமலும் விடும் தவறு!! வாகைச்செல்விக்கு அவளது ஆண் சகாக்கள், தன் திறனுக்கு குறைவாக அல்லது சமமாக தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் பெறுவதைப் பார்த்தபோது விரக்தி அதிகரித்தது. இருந்தபோதிலும், அவள், வாகைச்செல்வி, தொழில்முறையாக தனது கவனத்தை என்றும் தளர்த்தவில்லை. மற்றும் அவளது சிறந்த வேலையை வழங்குவதில் பின்வாங்கவும் இல்லை. அவளது உறுதியும் விடாமுயற்சியும் அவள் எதிர்கொண்ட சவாலுக்கு எதிராக மௌனத்தால் மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் வாகைச்செல்வியின் வீடு இருந்தது. அலுவலகத்தில் மட்டும் அல்ல, இங்கேயும் அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த குந்தில் சாய்ந்து இருந்து வெளியே பார்த்துக்கொண்டு வாகைச்செல்வி இருந்தாள். அவள் அறிவில் கடலாக இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பழக்கவழக்கங்களில் பெண் என்பவள் இப்படித்தான் என எழுதி வைத்து விடார்களே? முற்றத்தில் மாமரம். அதில் விளையாடுற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக துள்ளி குதித்து ஓடி விளையாடுகின்றன. அவற்றின் வாழ்க்கையில் வேறுபாடை அல்லது அணியாய இழைகளை அவள் காணவில்லை. அவளுக்கு சற்று தள்ளி துணி ஒன்று வளையில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. ‘அம்மாட பழஞ்சீலை அதனுள் அவளின் ஆறுமாச பெண் குழந்தை. அவள் இண்டைக்கு என்னமோ அழாமல் இருக்கிறது. அங்கே தவழ்கிற குளிர்ந்த காற்றிலே தூங்கிப்போய் விட்டதோ? அந்த அமைதியான சூழலிலும் வாகைச்செல்வி மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. அவள் தன்னை ஒருதரம் கண்ணாடியில் பார்த்தாள். இந்த அழகை அனுபவிக்க துடிக்கும் ஆண்கள், ஏன் பெண்ணை சமமாக மதிப்பத்தில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை? "சினிமாவிலே வருகிறமாதிரி, பெண் விடுதலைக் கொடியை ஏந்திக் கொண்டு வெளிக்கிட முடியுமா? சினிமாத்தனங்களை ரசிக்கிற ஆண்களும். ஏதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ம். நியவாழ்வு என வருகையில் ‘வாழ்க்கைப் பிரச்சனை’ என்று சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறார்கள்" அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு அப்பொழுது கார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji ( 1866 – 1954) யின் நினைவுதான் வந்து. இவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகும். பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் காலத்திலேயே வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களுள் அவள் முதன்மையானவள். "பெண்களுக்கு எல்லாம் ஓர் முன்னோடி" அவள் தனக்குள் பேசிக்கொண்டாள். "ஏன் தான் இந்த ஆண்கள் இன்னும் அதை விளங்கிக்கொள்ளவில்லை. அதிலும் என் பாஸ் ஆர்.நடராஜ் இன்னும் பின்னோடி, காலம் வரும் , கோலம் புரிவான்" தனக்குள் சிரித்துக் கொண்டாள். அடுத்த நாள் வாகைச்செல்வி அலுவலகம் சென்ற போது, அங்கு பல பில்லியன் ருபாய் வழக்கை எதிர்கொள்ளும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு பிரதிநிதித்துவப்படுத்த அவளின் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது அறிந்தாள். அது தான் அவளுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அறிவுசார் சொத்துரிமை (இலங்கை வழக்கு - புலமைச் சொத்து) என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். இதற்கான சட்டம் சிக்கலான விவரங்களை உள்ளடக்கியது. ஆர்.நடராஜ், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, தனது நிர்வாகத்தில் இருந்த சிறந்த வழக்கறிஞர்கள் குழுவைக் கூட்ட முடிவு செய்தார். பலருக்கு ஆச்சரியமாக, திறமைமிக்க நடுத்தர அகவை கொண்ட வாகைச்செல்வி ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், தற்செயலாக ஒரு மூத்த பங்காளிகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது விதி தலையிட்டது, கடைசி நிமிட மாற்றாக வாகைச்செல்வி அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். ஆர்.நடராஜ் அவளின் திறமையில் எந்த நம்பிக்கையும் இல்லாத போதிலும், வாகைச்செல்வி, அதை தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்க எண்ணினாள். கார்னிலியா சொராப்ஜியாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேரத்துடித்தனர். கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது பெண்கள் யாரையும் இதுவரையில் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததில்லை அதனால் உங்களையும் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நிச்சயம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சபதமேற்கிறார் கார்னிலியா. அதை செய்தும் காட்டினார். அந்த வரலாறு வாகைச்செல்விக்கு புத்துணர்வு கொடுத்தது. அந்த உற்சாகம் தந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் விரைவில் அவள் தனது உண்மையான தகுதியை நிரூபித்தாள். அவளுடைய நுண்ணறிவு இன்னும் இன்னும் கூர்மையாக இருந்தது, அவளது வாதங்கள் அழுத்தமானவை மட்டும் அல்ல சட்டத்தின் நுணுக்கங்களை எடுத்துரைத்தது. மேலும் தொடர்பில்லாத எதிர் கட்சியின் வாதங்களை முறியடிக்கும் அவளது திறன் ஒப்பிடமுடியாதது. வழக்கு முன்னேறும்போது, ஆர்.நடராஜ், வாகைச்செல்வியின் விதிவிலக்கான திறமையைக் தெரிந்தும் தெரியாமலும் கவனிக்கத் தொடங்கினார். வெற்றி அலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றுவதில் அவளது பங்களிப்புகள் முக்கியமானவையாக இருந்தன. படிப்படியாக, ஆர்.நடராஜ்ஜனின் கருத்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அவர் வாகைச்செல்வியை ஒரு திறமையான வழக்கறிஞராக மட்டும் பார்க்காமல், நிறுவனத்தின் முக்கிய சொத்தாக பார்க்கத் தொடங்கினார். இந்த வழக்கின் உச்சக்கட்டம் பரபரப்பான விவாதமாக மாறி நீதிமன்றத்தை கலக்கியது. வாகைச்செல்வியின் புத்திகூர்மையான நுணுக்கமான வாதம் எல்லோரையும் அசத்தியது. எதிர்க்கட்சிகளின் வாதங்களை மிக நுணுக்கமாக நேரடியாக தகர்த்து, சட்டப்பூர்வ புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல, வழக்கின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழமான புரிதலையும் அவள் வெளிப்படுத்தினாள் . இதனால் அவளின் நிறுவனம் இந்த வழக்கை வென்றது, கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு இலகுவாக வெற்றியைப் பெற்றது. இது, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" இல் கடமை புரியும் எல்லோராலும் பரவலாக கொண்டாடப்பட்டது. வெற்றிக்குப் பிறகு, ஆர்.நடராஜ் நீண்ட பயணத்தின் பின், தன்னை மாற்றி அமைத்துக் கொண்டார். தன் முன்னைய தவறுகளை உணர்ந்தார். மிக முக்கியமாக, அவர் தனது நிறுவனத்தில் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை அடிப்படையில் குறைபாடுடையது என்பதை அவர் புரிந்துகொண்டார். வாகைச்செல்வியின் வெற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் தன்னை அறியாமலே அவரின் வாய் முணுமுணுத்தது. "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே --அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை [பெற்றோர்] வளர் ப்பினிலே '' ஒரு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் அல்ல, அவளும் இந்த சமூகத்தின் பங்காளி, என்பதை சில பெண்களும் கூட மறந்து விடுகின்றனர் என்பதே உண்மை. இன்று வரை எத்தனையோ மாற்றங்கள், வளர்ச்சிகள் சமூகத்தில் உருவான பின்னும் இன்னமும் பெண்களை மதிக்காமை தொடர்கின்றன. பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நியாயமான மாற்றத்தை விரும்புகின்றதும் புரிந்து கொள்கின்றதுமான நிலைமை இழுபறியாகவே உள்ளது. என்றாலும் ஆர்.நடராஜ் இன்று பெண்களை மதிக்கத் தொடங்கியது, அவரது நிறுவனத்துக்கு பெருமை சேர்த்தது. ஆர்.நடராஜ்ஜனின் மாற்றம் படிப்படியாக ஆனால் ஆழமானதாக இருந்தது. அவர் தனது பெண் சகாக்களின் கருத்துக்களை தீவிரமாகத் மதிக்கத் தொடங்கினார், அது மட்டும் அல்ல, அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து மதிப்பிடத் தொடங்கினார். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தினார். நிறுவனத்திற்குள் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வழிகாட்டல் திட்டங்கள் நிறுவப்பட்டன. இந்த மாற்றத்தின் அடிப்படையில் வாகைச்செல்வி தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தார். அவள் ஒரு மூத்த பங்குதாரர் ஆனார், அவளது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்தது. ஆர்.நடராஜ்ஜுடனான அவளது உறவு, அவளது பங்கு ஒரு வழிகாட்டியாக மற்ற பெண் ஊழியர்களுக்கும் இருந்து, பரஸ்பர மரியாதை மற்றும் போற்றுதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமமானவர்களின் உறவாக அது உருவானது. "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் திருகோணமலையில் மட்டும் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள சட்ட சமூகங்களில் ஒரு அலை போல் அங்கும் தாக்கி மாற்றங்களை ஏற்படுத் தூண்டியது. இதனால் மெதுவாக, பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு பரந்த இயக்கம் வடிவம் பெறத் தொடங்கியது. வாகைச்செல்வியின் கதை பரவலாக எல்லா சமூக தளங்களிலும் பகிரப்பட்டது, இது விடாமுயற்சியின் சக்தி மற்றும் சமூக விதிமுறைகளை சவால் செய்வதன் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக மாறியது. ஆர்.நடராஜ்ஜனின் இந்த மாற்றம் ஒரு வெற்றிகரமான பாலின சமத்துவத்திற்கான பயணமாக அமைந்தது. பணியிடத்தில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பதன் தாக்கத்தை இது எடுத்துக்காட்டியது எல்லா ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சட்ட வல்லமைக்காக மட்டுமல்ல, பன்முகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காகவும் அரசால் கௌரவிக்கப்பட்டது . பெண்களுக்கு உண்மையான மரியாதை என்பது வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றியது என்பதை தொடர்ந்து அது நினைவூட்டியது. வாகைச்செல்வியின் உருவப்படம் நிறுவனத்தின் புகழ் மண்டபத்தில் தொங்கியது, திறமை அங்கீகரிக்கப்பட்டு பாரபட்சமின்றி வளர்க்கப்பட்டால் என்ன என்ன சாதிக்க முடியும் என்பதன் அடையாளமாக அது எல்லோருக்கும் நினைவூட்டியது . மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு "பவுத்தர்களது [பவுத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதப்பட்டது போல, தங்களது ஒவ்வொரு சந்திப்பிலும், அதன் முடிவில் , "பெண்ணை மதிக்கவும்" என்ற நெறிமுறை அங்கு எதிரொலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. வாக்குண்டாம், பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும் நூல் நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். பொருள்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும். நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். பொருள்: நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும். இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு. பொருள்: இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும். பொருள்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர் நட்பு. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா. பொருள்: கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில் மட்டும் பழங்களைத் தரும். அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும். உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து விளையுமோ தான். பொருள்: கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால் உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை. நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம். பொருள்: அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். குணம் நாம் தோன்றிய குலத்தின் அளவே. நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. பொருள்: நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும் அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நல்லது. தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. பொருள்: தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக் கெடுதியே. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. பொருள்: உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும். பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். பொருள்: நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும். பொருள்: தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம். பொருள்: கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன். கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. பொருள்: காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும் இல்லை. வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம். பொருள்: புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும். அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு. பொருள்: நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு. பொருள்: குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு. சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? பொருள்: தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும். ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி-தோழி நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன். பொருள்: தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது. நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே. அது நம் முன் ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது. உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு. பொருள்: வ்யாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று விடுகிறது. எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும். இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும். எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்? கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம். பொருள்: சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே. நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். பொருள்: குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர் நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். பொருள்: தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து வாழும். விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து கொண்டிருப்பர். மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. பொருள்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். பொருள்: கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத் தரும். தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு அதன் கன்று அழிவைத் தரும். வாழ்க்கைக்குப் பொருந்தி நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள். சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று? பொருள்: தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம் குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம் மாறுவதில்லை மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம். பொருள்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான். அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும். சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். பொருள்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர். மூதுரை முற்றிற்று. https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_21.html
  13. வைத்தியசாலையில் சற்றுமுன் பதற்றம் | மிரட்டிய வைத்தியர்
  14. ஒரு கட்சித் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவர் தெரிவில் தன் விருப்புவெறுப்புக்களைத் தெரிவிப்பது கேவலமானது!
  15. கடலில், தவளை மீன் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். தவளை? இரண்டு தங்க மீன்களும் இறந்து போனது கவலைதான். சில வீடுகளில் தலைவன் முடிவெடுத்தால் தடுக்க வாய்ப்புகள் குறைவுதான். உங்கள் வீட்டில் கண்டிப்பாக அவருக்கு இரகசியமாக அர்சசனைகள் கிடைத்திருக்கும். நல்லது செய்வதாக நினைத்து சிலர் செய்யப் போக அது தவறாகப் போகவும் வாய்ப்பிருக்கிறது. இப்படியே போனால், ரசோதரன் ஆடு வளர்த்தார், குருவி வளர்த்தார், மீன் வளர்த்தார். நாய் வளக்க இல்லையே என்று சொல்லும் அளவுக்குப் போய்விடும்
  16. 🤣............ நீங்கள் இருவரும் ஒரே விடயத்தை வேறு வேறு விதமாக சொல்லியிருக்கின்றீர்கள்.......👍 எல்லாம் முடிந்து, இதுவும் ஒரு அரிசிக் குடோன் ஆகிய பின், இதில் ஊழல் இருக்கின்றது என்று யாராவது ஆதாரபூர்வமாக நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றும் சொல்லப் போகின்றார்கள்......நேற்றும் அங்கு ஒருவர் சொல்லியிருந்தார்........🫣.
  17. பொதுவாகவே எம்ஜிஆர் படங்களில் புரட்சி, எழுச்சிப் பாடல்கள் இருக்கும். இல்லாவிட்டால் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் அவருக்குப் பொருந்தாது. அவரது படங்களில் இடம் பெறும் புரட்சிக் கருத்துக்கள், சில பாடல்களில் முழுமையாக இருக்கும் பலவற்றில் ஆங்காங்கே பட்டும் படாமலும் தெளித்தும், தெரியாமலும் விடப்பட்டிருக்கும். ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ என்ற பாடலின் இறுதி வரிகள் இசைத்தட்டில், ‘இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதிவரவில்லை என்றால் வாளை உயர்த்து’ என்றிருந்தது. ஆனால் தணிக்கை குழுவினரது கெடுபிடியால், நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து’ என்று படத்தில் இடம் பெற்றிருக்கும். 77 இல் என்று நினைக்கிறேன். சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. கொழும்பில் கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்ததன. எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்ற பாடல்களை கே.எஸ்.ராஜா வானொலியில் சுழல விட்டுக் கொண்டிருந்தார். எல்லாப் பாடல்களிலும் நேரடியாகத் தெரியாத தெளித்து விடப்பட்ட புரட்சி வரிகள் மட்டும் இருந்தன. ‘உலகத்தில் குருடர்கள் சரிபாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதி மயங்காதே’ என்ற ஒன்றை இங்கே உதாரணத்துக்குத் தருகிறேன். இந்த ஒலிபரப்புக்குப் பின்னால் கே.எஸ்.ராஜாவை சில காலம் வானொலியில் காணவில்லை. “கே.எஸ்.ராஜாவை நாலாவது மாடியில் வைத்து விசாரிக்கிறார்கள்” “அப்துல் ஹமீதுவின் உட்குத்து” என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருந்தன. எது எப்படியோ கே.எஸ்.ராஜா பல மாதங்கள் இலங்கை தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் இல்லை என்பது தெளிந்த உண்மை. அரச கட்டளை படத்தில், ரி.எம்.எஸ் பாடிய “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…” பாடல் முழுப் புரட்சிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் பிரச்சாரப் பாடலாக்கினார்கள். பாடலின் இறுதி வரியில் இருந்த, “உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ -அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ…” வரிகளை இளைஞர்கள் எடுத்துக் கொண்டார்கள். அரசகட்டளையில், பி.சுசீலா பாடும் ஒரு பாடல் மக்களை ஒன்று திரட்டி போராட அழைப்பது போல் இருக்கும். “பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?-உன் பழங்காலக் கதை இங்கு யாரைக் காக்கும்? தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா? -நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா?…” ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, சங்கே முழங்கு, சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய, ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம் ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்’ அதே படத்தில் இன்னுமொரு பாடல், ‘வீரமகன் போராட வெற்றி மகள் தாலாட்ட….’ மன்னாதி மன்னன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய, ‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை’ தனது மகனின் வீர மரணத்துக்கான ஒரு பாடல் மகாதேவி படத்தில் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட, ரி.எஸ்.பகவதி பாடியிருப்பார். முன்னர் இந்தப் பாடலை வைத்து ஒரு பத்தி எழுதியிருந்தேன். ‘மானம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்வது நமது சமுதாயம் மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும் மாறிவிடாது ஒருநாளும்…’ இப்படி நிறைய எம்ஜியார் பாடல்களில் தேடி எடுக்கலாம்.
  18. AMIS DES ARBRES Iny Vaini · 1 j · L'impressionnant arbre de Ceiba en Amérique du Sud ! ஒரு கலைமான் போலப் படுத்திருக்கு......! 🙏
  19. "வண்ணத் தேரில் அமர்ந்து வருகின்றான் பார்த்தசாரதி" என்ற பாடல் என நினைக்கின்றேன். முழுமையான பாடல் தெரியவில்லை. அப்போது இது மிகப் பிரபல்யமான பக்திப் பாடல். இந்திராகாந்தி காலத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் பார்த்தசாரதி (தமிழ் பிராமணர், எமக்கு ஆதரவான கருத்தை கொண்டிருந்தவர்) இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கு வருகின்ற காலம் அது. அதன் பின் இந்தப் பாடலை... இலங்கை வானொலியில் ஒலி பரப்பாமல் தடை செய்திருந்தார்கள். பிற் குறிப்பு: மேற் குறிப்பிட்ட தகவல் எனது நினைவில் இருந்து எழுதியவை. தவறுகள் இருக்கலாம். அறிந்தவர்கள் திருத்துவது வரவேற்கப் படுகின்றது.
  20. அடிமைகள் ஒரு போதும் தாங்கள் இன்னாருக்கு அடிமை என்று சொல்ல விரும்புவது கிடையாது. அந்த காலத்தில் அரசர் காலை கடனை முடித்தவுடன் பெல் அடிப்பாராம் உடனே அடிமைகள் பஞ்சை துக்கி கொண்டு ஓடி போய் துடைத்து விடுவார்களாம்அதுக்கே அடி பாடு அடிமைகளுக்குள் நடக்குமாம் அதே போல் செம்பு என்ற காரணத்தை இங்கு நான் விளக்க வேண்டி வராது புரிந்து கொள்வீர்கள் . கனக்க வேண்டாம் இப்பவும் தாலி கொடியில் ராஜ ராணியின் படம் போடும் வழக்கம் இருக்குதே அப்படி படம் போடும் உண்மையான காரணம் பலருக்கு தெரிவதில்லை .
  21. ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..! March 11, 2024, 1:18 pm IST பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவிதம் நாவலை பென்யாமின் எழுதியிருந்தார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் வெளியாகும்வரை பென்யாமின் அறியப்படும் எழுத்தாளராக இருக்கவில்லை. நாவல் வெளிவந்த ஒரேயிரவில் ஸ்டார் எழுத்தாளராக கொண்டாடப்பட்டார். ஆடு ஜீவிதம் உடனடியாக பெஸ்ட் செல்லர் வரிசையில் இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் ஆடு ஜீவிதம் நாவல் 100 மறுபதிப்புகளை மலையாளத்தில் கண்டது. இதுவொரு சாதனை. பிறகு தமிழ், தாய், ஒடியா, அரபு, நேபாள, இந்தி, கன்னடா என்று பல மொழிகளில் இந்நாவல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. இது வெளியான காலகட்டத்தில் நாவலை திரைப்படமாக்கும் தனது விருப்பத்தை இயக்குநர் பிளெஸ்ஸி பென்யாமினிடம் தெரிவித்தார். அதற்கான வேலைகள் தொடங்கின. பிறகு, படத்தின் பட்ஜெட் ஒரு மலையாள சினிமாவுக்கு மிகப்பெரியது என உணர்ந்து, பட முயற்சியை கைவிட்டனர். ஆனால், பிளெஸ்ஸியின் மனதிலிருந்து நாவல் மறையவில்லை. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2017 ல் பிருத்விராஜை வைத்து ஆடு ஜீவிதம் படத்தை எடுப்பதாக அறிவித்தார். 2018 ல் ரஹ்மான் இசையமைப்பாளராக படத்தில் இணைந்தார். கோவிட் காலகட்டத்தில் படப்பிடிப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆடு ஜீவிதத்தை படமாக்க வேண்டும் என்ற விதை பிளெஸ்ஸின் மனதில் விழுந்து, சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு வரும் மார்ச் 28 படம் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படைப்பாளியாக பிளெஸ்ஸியின் காத்திருப்பு பாராட்டப்பட வேண்டியது. 2004 ல் தனது 51 வது வயதில் காழ்ச்சா என்ற தனது முதல் படத்தை பிளெஸ்ஸி இயக்கினார். குஜராத் பூகம்பத்தில் பெற்றோர்களை இழந்து, கேரளா வரும் சிறுவனின் பின்னணியில் உருவான காழ்ச்சா புதியதொரு அனுபவத்தை மலையாள ரசிகர்களுக்கு தந்தது. அடுத்தப் படம் தன்மாத்ராவில் அல்சைமரால் நினைவுகளை இழக்கும் குடும்பத் தலைவனின் கதையை படமாக்கினார். இரண்டு படங்களும் வசூல், விருதுகள் என இரண்டு திசையிலும் கொடிகட்டிப் பறந்தன. அதன் பிறகு இயக்கிய பளிங்கு, கல்கத்தா நியூஸ், பிரம்மரம் படங்கள் சுமாராகவே போயின. 2011 ல் பிரணயம் படத்தின் மூலம் பிளெஸ்ஸி மீண்டும் ரசிகர்களை ஆச்சரிப்படுத்தினார். கடைசியாக அவரது இயக்கத்தில் ஸ்வேதா மேனனின் பிரசவத்தை படம் பிடித்து எடுத்த களிமண்ணு திரைப்படம் வெளியானது. ஒரு படைப்பாளி சாதாரணமாக யோசிக்காத பகுதிகளில் சிந்தனையை செலுத்துகிறவர் பிளெஸ்ஸி. ஒரு படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மகத்தானது. அவரது திரைவாழ்க்கையின் உச்சமாக கருதப்படும் படம் ஆடு ஜீவிதம். மார்ச் 28 வெளியாகும் இப்படம், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://tamil.news18.com/entertainment/cinema-aadu-jeevitham-movie-is-releasing-after-14-years-of-waiting-1374650.html
  22. ஆடு ஜீவிதம் இன்றுதான் பார்த்தேன், கலங்க வைத்துவிட்டார் பிரித்விராஜ், எனது முதல் நாள் அனுபவம் காட்டாரில்😪, 2-3 கிழமை சோக அனுபவம்
  23. ஒரு வைத்தியசாலையிலயே 25 பேர் வைத்தியர்களாக இருந்து கொண்டு பணி செய்யாது இருந்தால் வைத்தியர்கள் பற்றாக்குறை வரும் தானே...
  24. எல்லாம் எங்கடை பள்ளிக்கூடங்கள் சொல்லித்தந்த பழக்க வழக்கங்கள்.....பள்ளிக்கூடங்களிலை சேர் எண்டு கூப்பிடாட்டில் அடி விழும்.😂
  25. நாங்கள் இருந்த காலத்தில் வைத்தியரை சார் என்று கூப்பிட்டதில்லை. "டொக்ரர்" என்றே மரியாதையாக அழைத்துக் கொள்வார்கள். இலங்கையில் ஆசிரியரைத் தவிர வேறு இடங்களில் மிகக் குறைவாகவே சார் பாவிப்பார்கள். தமிழ்நாட்டில்.... ஒவ்வொரு இரண்டாவது சொல்லிலும் சார், சார்... என்று சொல்லி வெறுப்பேத்துவார்கள். இந்த "சார்" வியாதி... "சுமந்திரன் சார்" என்று அவரின் செம்புகள்... அழைக்கத் தொடங்கியதில் இருந்து, நம்மூரிலும் ஆரம்பித்துள்ளது என நினைக்கின்றேன். 😡 இந்த அரசியல்வாதிகளலால்... ஊருக்கு ஒரு நன்மையையும் இல்லை. 😗 மாறாக கெடுதலே அதிகம். 🤕 @பெருமாள்
  26. மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி போராளிகளுக்கான ஆதரவுத்தளத்தினை வியாப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராளிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர்கள் நாடுகடத்தப்பட்ட சம்பவம் கொழும்பில் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. ஆவணி 24 ஆம் திகதி இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையினை வெகுவாகப் பாராட்டிய இராஜாங்க அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ், "நடந்துவரும் சம்பவங்களால் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறோம், இலங்கையில் சமாதானத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாரென்பதை இந்தியா இப்போது புரிந்துகொள்க்ள ஆரம்பித்திருக்கின்றது" என்று பூரிப்புடன் கூறினார். பாலசிங்கமும் ஏனையோரும் நாடுகடத்தப்பட்ட விடயம் கொழும்பில் பெருத்த மகிழ்வினை ஏற்படுத்திவிட்டிருந்தது. நாடுகடத்தல் விவகாரமே சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலு தலைப்புச் செய்தியாக தீட்டப்பட்டு பரப்புரை செய்யப்பட்டது. தமிழ்ப் போராளிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆப்பினைச் சொருகும் இலங்கை அரசின் கைங்கரியம் வெற்றிபெறத் தொடங்கியிருந்ததுடன் அதன் விருப்பின்படியே நிலைபெறவும் ஆரம்பித்திருந்தது. இதனால் மிகவும் உற்சாகமடைந்து காணப்பட்ட ஜெயார் அன்று பிற்பகல் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில், "சமாதானம் என்றால் நாமும் சமாதானத்திற்குத் தயார், போரென்றால், நாம் போருக்கும் தயார்தான்" என்று மிகுந்த அகம்பாவத்துடன் சூளுரைத்தார். திருக்கோயிலில் தமிழர்களைத் தொடர்ச்சியாக வேட்டையாடும் சிங்களத்தின் விசேட அதிரடிப்படை மிருகங்கள் அதன்படி அவர் போருக்கே தன்னையும் தனது அரசாங்கத்தையும் தயார்ப்படுத்தி வரலானார். இருநாட்களுக்குப் பின்னர், ஆவணி 26 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமான திருக்கோயிலுக்குள் பிரவேசித்த விசேட அதிரடிப்படையினர் கிராமத்தைச் சுற்றிவளைத்து, அங்கிருந்த 26 இளைஞர்களை இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். பின்னர் தம்மால் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் போராளிகள் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால், இப்படுகொலை குறித்து அறிக்கை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பு கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த அப்பாவிகள் என்று உறுதிப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய புலிகள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஆறு கடற்படையினரும் முகாமில் பணியாற்றிவந்த பெண் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், தமிழ்நாட்டிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. போராளிகளுக்கான ஆதரவுத்தளம் வியாப்பித்து வளர ஆரம்பித்திருந்தது. ஆவணி 27 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பாலசிங்கத்தை மீளவும் சென்னைக்கு வரவழைக்க வேண்டுமென்று கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளை விடுவிக்குமாறு கோரியும் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் இந்தியாவிடம் "பாலா அண்ணையை மீளவும் சென்னைக்குக் கொண்டுவாருங்கள்" என்கிற கோரிக்கையினை இந்தியாவிடமும், "தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எமது சகோதரர்களை விடுதலை செய் அல்லது நீதிமன்றில் நிறுத்து" என்று இலங்கை அரசையும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது சத்தியாக்கிரக நிக‌ழ்வினையடுத்து ஏழு நாள் பாதயாத்திரை நிகழ்வினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தனர். புரட்டாதி மாதத்தின் இறுத்திப்பகுதியில் ஆரம்பித்த பல்கலைக்கழக மாணவர்களின் பாத யாத்திரை யாழ்க்குடாநாட்டின் கிராமங்கள் அனைத்தினூடாகவும் வலம் வந்தது. இரவுவேளைகளை பிரதான கோயில்கள், ஆலயங்களில் களித்த அவர்கள் வீதி நாடகங்கள், வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம் மற்றும் பட்டி மன்றம் ஆகிய படைப்புகளையும் மக்கள் முன் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கலை கலாசார நடைமுறைகளும், வழக்கங்களும் முழுமூச்சாக மக்களை விழிப்படைய வைப்பதில் ஈடுபடுத்தப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை தமிழ் மக்களை அரசிற்கெதிராகவும், அதன் கருவிகளான படைகளுக்கெதிராகவும் வெகுண்டெழ வைத்திருந்தது. ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த உணர்வெழுச்சி நிகழ்வுகள் சமூகத்தின் அனைத்து அமைப்புக்களையும் வீதியில் முழுமூச்சுடன் செயற்பட வைத்திருந்தது. மாணவர்கள் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்க, அன்னையர் முன்னணியினர் அன்னையர் பேரணிகளில் முன்னின்று செயற்பட்டார்கள். மீனவர்கள், விவசாயிகள், வலைஞர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்றி இருந்தவர்கள் என்று அனைவருமே தம் பங்கிற்கு பேரணிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். போராளிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்துவந்த ஆதரவுத்தளம் ஆளமாகவும், விரிந்தும் வளர்ந்து வரலாயிற்று. தமிழ்த் தேசிய உணர்வு அனைவரிடத்திலும் தகன்றுகொண்டிருந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இதுவே மிகவும் முக்கியமான திருப்பம் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தம்மை தனியான தேசம் என்று எண்ணிச் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். இலங்கை நாட்டின் ஒரு அங்க‌மாக தாம் கருதப்படுவதை அவர்கள் முற்றாக வெறுத்தார்கள். தொடர்ச்சியாக அவர்கள் மீது நடத்தப்பட்டு வந்த செல்த் தாக்குதல்கள், தாழப்பறந்த விமான‌ங்களில் இருந்து பொழியப்பட்ட குண்டுகள், மக்கள் வாழிடங்களைத் தகர்த்த குண்டுகள், இலக்குவைத்து அழிக்கப்பட்ட அவர்களின் வாழ்வாதாரம், படுகொலைகள் ஊடாக கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டமை ஆகிய அடகுமுறைகள் போன்றவை அவர்கள் தமக்கென்று தனியான தேசம் ஒன்று நிச்சயமாகத் தேவை எனும் மனோநிலைக்குத் தள்ளிவிட்டிருந்தன. சிங்களப் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் 40 வருடங்கள் பணியாற்றியவன் என்கிற வகையில், அவர்களுள் தமிழ் மக்கள் அன்று நடத்திய போராட்டங்களினதும் அவர்களின் மனோநிலையினதும் தீவிரத்தினை புரிந்துகொண்டவர் என்று ஒருவரை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்திருந்தது. 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 15 ஆம் திகதி வெளிவந்த லங்கா கார்டியன் பத்திரிக்கையில் மேர்வின் சில்வா தனது ஆக்கத்தில் "நிகழ்வுகளின் போக்கும், கடிதங்களும்" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார். "விரிவடைந்து வரும் தளம்" எனும் பந்தியில் அவர் இவ்வாறு எழுதுகிறார், "வடக்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் புதிய குணாதிசயத்தினைக் கொண்டிருப்பதனை நாம் கவனத்தில் கொள்வது வசியமானது. உண்மையிலேயே இந்த குணாதிசயம் புதியதுதான் என்றால் அதுகுறித்து ஆரய்வதும், அது ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்கள் குறித்தும் நாம் சிந்திப்பதும் அவசியம்" என்று அவர் எழுதினார். ஆனால் ஏனைய சிங்களப் பத்திரிக்கையாளர்களோ அரசியல் அவதானிகளோ அவர் கூறுவதைச் சற்றும் சட்டைசெய்ய மறுத்திருந்தனர்.
  27. பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பழிவாங்க பாலசிங்கத்தை நாடுகடத்திய இந்தியாவும், நடுவானில் நாடகமாடிய சந்திரகாசனும் தலைவருடன் பாலா அண்ணா பாலசிங்கம் விடுத்த அறிவிப்பைச் சாட்டாக வைத்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் செயலில் இறங்கினார்கள். பாலசிங்கம் தனது மதிய உணவிற்காக தான் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பிற்குத் திரும்பியிருந்தார். இச்சம்பவம் குறித்து தனது புத்தகத்தில் எழுதும் அடேல், "அன்று சென்னையில் வெய்யில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சோர்வு மிகுதியால் பாலா தூங்கச் சென்றுவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்து, குளித்துவிட்டு மீளவும் அலுவலகம் நோக்கிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தவேளை திடீரென்று நாம் தங்கியிருந்த தொடர்மாடியை நான்கைந்து பொலீஸ் ஜீப் வண்டிகள் சுற்றிவளைத்துக் கொண்டன". "காக்கி சீருடையணிந்த பொலீஸார் எமது தொடர்மாடியிலிருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்துக்கொண்டனர். பாலசிங்கத்திற்கு நன்கு பரீட்சயமான உயர் பொலீஸ் அதிகாரியான ஜம்போ குமார் முன்னே வர அவர் பின்னால் இன்னும் சில அதிகாரிகள் வந்து எமது தொடர்மாடியின் கதவைத் தட்டினர். பாலசிங்கம் கதவைத் திறந்தவுடன், அதிகாரி உங்களை நாடுகடத்தியிருக்கிறோம் என்று அறிவித்தார். நீங்கள் இங்கிலாந்துக் கடவுச் சீட்டினைக் கொண்டிருப்பதால் இங்கிலாந்து செல்லும் அடுத்த விமானத்தில் உங்களை ஏற்றி அனுப்பப் போகிறோம் என்று கூறிவிட்டு அவரை அவசர அவசரமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அவரை அவர்கள் இழுத்துச் சென்றபின்னர், நாம் ஆட்டோ ஒன்றில் ஏறி எமது அரசியல் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கிருந்த‌ மூத்த போராளிகளிடம் பாலாவின் நாடுகடத்தல் விடயத்தைக் கூறினேன். பிரபாகரன் அந்த நாட்களில் இலங்கையின் வட பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். தன்னையும் இந்தியா பழிவாங்கக்கூடும் என்று அனுமானித்திருந்த பிரபாகரன் அப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து வந்தார்". பாலசிங்கத்திற்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக புலிகளின் அரசியல் அலுவலகத்திலேயே அடேல் காத்திருந்தார். அவரை எங்கே அழைத்துச் சென்றார்கள் என்கிற தகவல்கள் எதனையும் இந்திய அதிகாரிகள் தனக்குத் தர மறுத்தமையினால் மரீனாவில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு அடேல் சென்றார். பாலசிங்கத்திற்கு ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட வேண்டிய இன்சுலின் மருந்துபற்றி பொலீஸாரிடம் பேசினார் அடேல். இதனையடுத்து சென்னையின் இரகசியமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலசிங்கத்திடம் அடேலை பொலீஸார் அழைத்துச் சென்றனர். பாலசிங்கத்தை பொலீஸார் சித்திரவதை செய்யவில்லை, கண்ணியமாகவே நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தக் கட்டிடத்தைச் சுற்றி நூற்றுக்கண்க்கான பொலீஸார் காவலுக்கு நின்றிருந்தனர். பாலசிங்கத்தை மீட்டெடுக்க புலிகள் அதிரடியான தாக்குதல் ஒன்றினை நடத்தலாம் என்கிற அச்சத்தினாலேயே பொலீஸாரைக் குவித்துவைக்கவேண்டியிருப்பதாக அதிகாரிகள் அடேலிடம் தெரிவித்திருக்கிறார்கள். மறுநாளான ஆவணி 24 ஆம் திகதி மாலை இலண்டன் நோக்கிச் செல்லும் விமானத்தில் பாலசிங்கத்தை ஏற்றி நாடுகடத்தியது இந்தியா. தான் விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் புலிகளின் அரசியல் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி தருமாறு பாலசிங்கம் பொலீஸாரிடம் கேட்டார். அனுமதியும் வழங்கப்பட்டது. அலுவலகத்திலிருந்த மூத்த போராளிகளுடன் சிறிய கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். தன்னை நாடுகடத்துவது பற்றி கலவரம் அடைய வேண்டாம் என்று போராளிகளிடம் கூறிய அவர், இந்தச் சம்பவத்தை மூலமாக வைத்து தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் மக்களை ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அடேலுடன் பேசும்போது, "சென்னையிலேயே தங்கியிருங்கள், இன்னும் சில வாரங்களில் திரும்பி வருவேன்" என்றும் கூறினார். டெலோ அமைப்புச் சார்பாக பேச்சுக்களில் ஜகலந்துகொண்ட நடேசன் சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகியோரும் நாடுகடத்தப்பட்டனர். இங்கிலாந்துக் கடவுச் சீட்டினை வைத்திருந்த சத்தியேந்திரா எதிர்ப்பெதுவும் இன்றி இன்னொரு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார். பின்னாட்களில் இந்திய விசுவாசியாக மாறிப்போன தந்தை செல்வாவின் புத்திரன் சந்திரகாசன் இலங்கைக் கடவுச் சீட்டினை வைத்திருந்தபோதிலும் அமெரிக்காவிற்கு எந்நேரமும் வந்துசெல்லும் அனுமதி சந்திரகாசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து பொம்பே செல்லும் விமானத்தில் அவரை பலவந்தமாக அதிகாரிகள் ஏற்றியனுப்பினர். பொம்பே நோக்கிச் செல்லும் விமானத்தில் பலவந்தமாக ஏற்றப்பட்ட சந்திரகாசன், அதிகாரிகளின் கடும்போக்கினைக் கண்டித்து விமானத்தினுள்ளேயே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். எதனையும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று நியு யோர்க் நோக்கிச் செல்லும் எயர் இந்தியா விமானத்தில் ஏற்றினார்கள். நியூ யோர்க் செல்லும் வழியில் அசாதாரணமான காலநிலையினால் பொஸ்ட்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானத்திலிருந்து இறங்கமாட்டேன் என்று அவர் அடம்பிடித்தார். தன்னை மீளவும் சென்னைக்கே அழைத்துச் செல்லுமாறு பிடிவாதம் பிடித்த அவர், "நான் இந்தியாவிற்கு எதிராக எதனையும் செய்யவில்லையே? பிறகு ஏன் நாடு கடத்துகிறீர்கள்?" என்று கேட்டார். பொஸ்ட்டன் விமான நிலையத்தில் அவருடன் பேசிய இந்திய அதிகாரிகள், சில வாரங்களுக்கு அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தாம் அவரை நிச்சயம் இந்தியாவிற்கு மீள அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், அவர் மசியவில்லை. பிடிவாதமாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு அடம்பிடித்தார். வேறு வழியின்றி ஆவணி 26 ஆம் திகதி இந்திய அதிகாரிகள் அவரை மீளவும் பொம்பே நோக்கி அழைத்துச் சென்றார்கள். பொம்பே விமான நிலையத்திலும் விமானத்தை விட்டுக் கீழிறங்க மறுத்த சந்திரகாசன் தன்னை சென்னைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். நாடுகடத்தல் நாடகம் ஆரம்பித்து சரியாக மூன்று நாட்களின் பின்னர் சந்திரகாசன் மீளவும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
  28. போறது மட்டுமில்லை... கமல் ரசிகர்கள் ரஜனியை நக்கல் அடிப்பினம் ரஜனி ரசிகர்கள் கமலை வழிச்சு ஊத்துவினம் விஜய் ரசிகர்கள் அஜித்த கன்னா பின்னா எண்டு திட்டுவினம் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு மண்டையில தலமயிரே இல்லை எண்டுவினம் இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்... ரஜனிக்கு கமல்காசனை மாதிரி டான்ஸ் ஆடவே தெரியாது எண்டுறன்... 😄 நீச்சல்தெரியாதவன் தண்ணீக்க நிண்டு தத்தளிக்கிற மாதிரி ஒரு டான்ஸ்! 🤣 தேவையா இது? 😂
  29. இந்த வைத்தியர்களை இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டிக்கு அனுப்பினால் சில பதக்கங்களாவது கிடைக்கும்.
  30. பல வருடங்களாக பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு நன்மை செய்யாத ஊழல் மலிந்த அரச துறைகளை தட்டிக் கேட்காத இந்த தலைவர்கள் எங்களுக்கு தேவையா ஒரு வைத்தியசாலைக்கு மாறுதலாகி போன ஒரு மருத்துவ அதிகாரி 14 நாட்களில் அங்கு அதாவது சாவகச்சேரி மருத்துவமனையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஊழல்கள், போதைப் பொருள் விற்பனை, மருத்துவம் பார்க்க வரும் மக்களை தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி விடுதல், போன்ற இன்னும் பல ஊழல்களை 14 நாட்களில் வெளிக்கொண்டு வர முடியுமானால், ஏன் அரசாங்கத்தால், மத்திய அமைச்சர்களால், முன்பிருந்த மாகாணசபை அமைச்சர்களால், அரசாங்க அதிபரால், வட மாகாண ஆளுநரால், மக்கள் அதிகாரம் பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் ஏன் இந்த ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடுதலைப் போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில் மக்களை ஊழல் செய்யவிடாமல் ஆயுதம் தூக்கிய இயக்கங்களே ஆயுத முனையில் விடுதலை என்ற பெயரில் எல்லா ஊழல்கள் போன்ற எல்லா நாச வேலைகளையும் மக்களுக்கு செய்தார்கள். 2009 க்கு பின் முன்பு தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுக் கொடுக்க புறப்பட்ட மிஞ்சி இருந்த தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் இலங்கையின் மந்திரிகள் ஆனார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள், பதவிப் பெற முடியாதவர்கள் கட்சித் தலைவர்கள் ஆனார்கள். அவர்கள் இன்றும் தமிழ் தேசியம் தமிழ் மண்ணுக்காக போராடுகிறோம் என்று தான் கூறி வருகிறார்கள். 2009 முதல் இன்று வரை அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் தமிழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சேவை செய்யும் அரசாங்க துறைகளில் நடக்கும் மிக பாரதூரமான ஊழல்கள் குற்றங்களை தமது பதவிகளைக் கொண்டு தடுக்கவோ அம்பலப்படுத்தவோ இல்லை, ஏன் அவர்கள் அதை செய்யவில்லை. அந்த ஊழல் பணம் இவர்களுக்கும் பங்கு போகிறதா? மருத்துவத்துறையில் ஒரு மருத்துவர் அர்ச்சனா 14 நாளில் ஊழலுக்காக ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்றால், பல வருடங்களாக அமைச்சராக இருப்பவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க துறைகளில் நடக்கும் ஊழல்கள் தெரியாதா. மருத்துவர் அர்ச்சனா ஊழல் பற்றி போராட தொடங்கியதும், ஊழல் பற்றி வாய்மூடி மௌனியாக இருந்த மக்கள் முதல் முறையாக வழியில் வந்து போராடத் தொடங்கினார்கள். . .. மக்கள் போராடத் தொடங்கியதும் அரசாங்கமும் மந்திரியும் ஓடோடி வருகிறார்கள். ஊழலை ஒழிப்பதற்காக அல்லது ஊழலை மறைப்பதற்காகவா. வரும் செய்திகளை பார்க்கும்போது எல்லா அரசாங்கத் துறைகளிலும் மிகப்பெரும் ஊழல்கள் நடப்பதாகவே தெரிகிறது. மருத்துவ துறையில் அர்ச்சனா செய்தது போல், மற்ற துறைகளிலும் யாரும் நல்லவர்கள் வல்லவர்கள் பொது வழியில் தெரியக்கூடியதாக போராட்டங்களை தொடங்கினால் தான் அரசாங்கமும் அமைச்சரும் வருவார்களா. அவர்கள் வந்தாலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வர மாட்டார்கள். அவர்களுக்கு பதவி வேண்டும் தங்களுக்கு மட்டும் அரசாங்கத்தின் உதவி வேண்டும் என்று தமிழ் மக்களை ஏமாற்றி திரிகிறார்கள். .... தமிழ் அமைச்சரும் அரசாங்க அதிபரும், வட மாகாண ஆளுநரும் தங்கள் பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி எல்லா அரசுத் துறைகளிலும் உள்ள முறைகேடுகளை களைந்து மக்களுக்கான சேவைகளை செய்து தாங்களே உண்மையான மக்கள் சேவகர்கள் என்று நற்பெயர் எடுக்க வேண்டும். தமிழ் அமைச்சரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி வேறுபாடு இன்றி அழைத்து சிறு சிறு குழுக்களாக போட்டு எல்லா அரசு துறைகளிலும் ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மருத்துவர் அர்ஜுனா போல் மற்ற துறைகளிலும் யாரும் போராடினால் தான் மற்ற நிகழும் என்றால் தமிழ் மக்களுக்கு அமைச்சரும் வேண்டாம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம். ஆளுநர் அரசாங்க அதிபர்களும் வேண்டாம் இனியாவது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட முடிவு செய்யுங்கள். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0341331Yx66fziabTEM4vuLTivjo6UXeMuRNJtQ4tygbL21bJ3GPa56hHQbyPoL1PEl&id=100000253836437&mibextid=cr9u03
  31. நேற்று வைத்தியர் நடராஜா. ஜெயகுமார், இன்று வைத்தியர் இராமநாதன். அர்ஜுனா, நாளை?,,,,,,,,,,,🤒🤒 “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியவர் டொக்கடர் சத்தியமூர்த்தி” டொக்டர் நடராஜா ஜெயகுமாரன் யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர், யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் டொக்கடர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். யூலை 19 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கபிடல் தொலைக்காட்சியின் ‘அதிகாரம்’ நேர்காணலில் ஊடகவியலாளர் சியா உல் ஹஸ்ஸன்க்கு பதிலளிக்கும் போதே அவர் இக்ககுற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். டொக்கடர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் நடராஜா ஜெயகுமாரன், அவருடைய பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக்குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது அதனை ஆமோதித்தார். தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றார். யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் உடனயாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின், இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர் தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத் தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் தேவையான சிகிச்சைகள் உடன் கிட்டவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அங்கு மரணத்தை தழுவினார். டொக்டர் நடராஜா விஜயகுமாரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமாரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் இவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி தனிப்பட்ட முறையில் டொக்டர் நடராஜா ஜெயகுமாரனைப் பழிவாங்கவே இவ்விதமாக நடந்தகொள்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029pAjCQiXQV2sUME3vjdswko1PW8b5ZEHtFNh5RvmMg58gaU8v6JCkpxf3s8Xmuf6l&id=100075274747190&mibextid=cr9u03
  32. இது மிகவும் சிக்கலான பிரச்சனை. மருத்துவர் அர்ச்சனா தவறானவர் என கூறுவதற்கில்லை. இங்கு சம்மந்தப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அணுகுவதில், கையாள்வதில் பலருக்கும் அனுபவம் இல்லை. சமூக ஊடகம் சம்மந்தமாக தெளிவான வரையறைகள் சட்டத்தில் உள்ளதா தெரியவில்லை. சமூகத்தில் ஏற்கனவே புரையோடிப்போயுள்ள காயத்திற்கு அர்ச்சனா ஒரு தனி ஆளாக மருந்து கட்ட முடியாது. இன்று அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என செய்தி பார்த்தேன். பொதுநலன் கருதி மக்கள் நலனுக்காக குரல் கொடுத்த ஒருவர் தண்டிக்கப்பட்டால் எதிர்காலத்திலும் அர்ச்சுனா போன்று மற்றையவர்கள் குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்தால் ஊழல்களை ஒழிக்க முடியாது.
  33. வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி : சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு சாவகச்சேரி வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். சுகாதார அமைச்சு கோரிக்கை அவர் மேலும் தெரிவிக்கையில் ''அரசாங்கமும் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மத்திய அமைச்சின் கீழ் இல்லாத அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான 2 அல்லது 3 வருட செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களிடம் இதற்கான நிதியுதவிக்கான கோரிக்கைகளை சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். அதற்கான பொறுப்பினை நான் எடுத்துக் கொள்வேன். அத்துடன் இந்த செயற்திட்டத்திற்கான தயாரிப்பாளராக என்னை இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதாரத் துறையில் மாற்றம் அடுத்து நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென கேட்டிருந்தேன். இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது. அந்த செயற்திட்டத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாவும் எனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்படும். என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே இது வைத்தியர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல, தவறிழைக்கும் வைத்தியர்களுக்காகவும் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்குமான போராட்டம்.'' என தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/chavakachcheri-hospital-protest-win-doctor-archuna-1721031825
  34. இந்த‌ இள‌ம் டாக்குத்த‌ர் எத‌ற்க்கும் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும்...................இந்த‌ நூற்றாண்டில் இவ‌ர் போல் நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ளை காண்ப‌து அரிது............................
  35. வைத்தியர் அர்ச்சுனா உளரீதியாக பாதிக்கபட்டதா மற்றவர்கள் எழுதியதை பேட்டி எடுப்பவர் படித்தாராம். பின்பு டொக்டரிடமே நேரில் கேட்கிறார் நீங்கள் உளரீதியாக பாதிக்கபட்டிருக்கின்றீர்களா இந்த பேட்டி எடுத்தவர் பேட்டி எடுப்பதற்கே தகுதி இல்லாதவர்.
  36. தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏறெடுத்தும் பார்க்கமறுத்த ஒப்பந்தங்களில் பத்தோடு பதினொன்றாவதாக சேர்க்கப்பட்ட ரஜீவ் காந்தியின் தில்லி ஒப்பந்தம் திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட புலிகளின் உறுப்பினர் லோரன்ஸ் திலகருடன் பாலசிங்கம், தலைவர் பிரபாகரன் மற்றும் இந்தியாவின் டிக்ஷிட் தில்லியில் தொடர்ச்சிய ஒருவார காலம் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளும், இலங்கை அதிகாரிகளும் பேச்சுக்களுக்கான அடிப்படை ஆவணமாக ஒன்றைத் தயாரித்துக்கொண்டனர். அதற்கு "ஒப்பந்தத்திற்கான அடிப்படைகளை வரையறுத்துக்கொள்ளுதலும் அதனை புரிந்துக்கொளுவதற்குமான வரைபு" என்று பெயரிட்டனர். பின்னாட்களில் அதுவே தில்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படலாயிற்று. மேலதிகப் பேச்சுக்களுக்கான ஆரம்ப ஆவணமாக இது அமையவேண்டும் என்று ரஜீவ் விரும்பியிருந்தமையினால் அதனை "தொடக்க ஆவணம்" என்று அவர் அழைத்தார். இந்த ஆவணத்தில் இலங்கை சார்பாக ஹெக்டர் ஜெயவர்த்தனவும் இந்தியா சார்பாக ரொமேஷ் பண்டாரியும் கைய்யெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரது கைய்யொப்பங்களும் இடப்படுவதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். ஜெயாருடனான முன்னைய கசப்பான அனுபவங்களையடுத்தே இந்திய அதிகாரிகளை இதனைச் செய்தனர். முன்னர் அனெக்ஸ் சி (இணைப்பு சி) இயில் தான் கையொப்பம் இடவில்லை என்று அதிலிருந்து ஜெயார் தன்னை அந்நியப்படுத்தி நாடகமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனி 2 ஆம் திகதிய ஆவணம் எழுத்துவடிவில் இடம்பெறவில்லையென்பதாலும், அதில் தான் கையொப்பம் இடவில்லையென்பதாலும் அவ்விணக்கப்பாட்டினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆகவே, ஜெயாரின் சொந்தச் சகோதரரான ஹெக்டருடன் தாம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினைக் கூட ஜெயவர்த்தன மிக எளிதாக தட்டிக் கழித்துவிடலாம் என்று இந்திய அதிகாரிகள் ஓரளவிற்கு ஊகித்தே இருந்தனர். இணைப்பு சி இனை மேம்படுத்திய தீர்வாகவே தில்லி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக தில்லி ஒப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தில்லி ஒப்பந்தத்தில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டு, தமிழரின் நலன்களைப் பாதிக்கும் எந்தச் சட்டமும் இக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்தப்படமுடியாது என்கிற சரத்தையும் அரசியல் யாப்பினூடாக இவ்வாலோசனைகளில் உள்ளடக்குவதென்றும் இவ்வொப்பந்தம் பரிந்துரை செய்தது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மிக அடிப்படையான விடயங்களைக் கூட பூர்த்தி செய்ய தில்லி ஒப்பந்தம் தவறியிருந்தது. முதலாவதாக, தமிழரின் தயகக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தில்லி ஒப்பந்தம் நிராகரித்திருந்தது. அரசியல் யாப்பு மாற்றங்களுக்கூடாகவன்றி, பாராளுமன்றத்திற்கூடாகவே மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தில்லி ஒப்பந்தம் கூறியது. இதன்படி சிங்களக் கட்சிகள் மிகச் சிறிய பெரும்பான்மையினூடாக சட்டம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை எப்போது வேண்டுமானாலும் இரத்துச் செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. தேசிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், கோட்பாடுகளை வழங்கும் அதிகாரமும் மத்திய அரசிடமே விடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை பரவலாக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்த போதிலும், காவல்த்துறையினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே விடுவதென்று தில்லி ஒப்பந்தம் கூறியது. காணி மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இவ்வொப்பந்தம் எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் மாகாணங்களுக்கான ஆளுனருக்கும் முதலமைச்சருக்குமிடையினால தொடர்பாடல், நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கள் குறித்தும் தெளிவான வரையறைகளை இவ்வொப்பந்தம் முன்வைக்கத் தவறியிருந்தது. தில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகளைடையே தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்த வேளையில் சென்னையிலும் இலங்கையிலும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. ஆவணி 22 ஆம் திகதி திருகோணமலையில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மறுநாளான ஆவணி 23 ஆம் திகதி சென்னை அடையாறில் அமைந்திருந்த புலிகளின் அரசியல் அலுவலகத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அன்ட‌ன் பாலசிங்கம், " இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தவறி வருவதனால், எமது மக்களைக் காப்பதற்கான பதில்த் தாக்குதல்களில் நாம் இறங்குவதற்கான முழு உரிமையும் எமக்கு இருக்கிறது" என்று அறிவித்தார்.
  37. Ramanan Santhirasegaramoorthy புகழ் Fame என்பது "இராஜ போதை" என்று சொல்வார்கள். அதாவது உலகில் உள்ள எந்த விதமான போதைப் பொருட்காளலும் தர முடியாத அதி உச்ச போதையினை தரக் கூடியது 'புகழ்' . தன்னைச் சுற்றிய உலகின் போற்றுதலுக்குரியவராக இருக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் எம் அனைவரிடத்திலும் இருக்கின்றது. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை தொடர்சியாக எடுத்து வருகின்றோம். மற்றவர்கள் எம்மை நல்லவர்கள் வல்லவர்கள் நாலும் தெரிந்தவர்கள் என்று கொண்டாட வேண்டும் என்பதற்கான சிறு முயற்சிகளையாவது நாம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்த புகழ் போதையில் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்படுவது, தன்னை உயர்வாக காண்பிக்கும் நோக்கில் மற்றவர்களை இழிவு செய்ய முற்படுவது தான் இன்று சிக்கல்களுக்கு காரணமாக மாறியுள்ளது. ஏனைய போதைகளாக மதுபாவனை, போதை மருந்து பாவனை போன்றவை சுய வதைகளாக Self Torture இருக்கும் அதனை உட்கொள்கின்றவர்களுக்கு தான் அதன் நேரடிப் பாதிப்புகள் ஏற்றபடும். அடுத்த நிலையில் அவர்களை சார்ந்த குடும்பங்கள் பாதிக்கப்படும். இந்த புகழ் போதை என்பது சமூகப் பேரழிவுகளை Social Disaster ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கின்றது. இந்த புகழ் போதை கால காலமாக மனிதர்களோடு கூடவே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நடைபெற்ற போர்களிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போர்களின் பின்னணியிலும் இந்த புகழ் போதைக்கு அடிமையானவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். இப்போது தோன்றியுள்ள "சமூக வலைத்தளப் புரட்சி" Social Media Revolutionஎன்பது சாதாரணமானவர்களையும் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும் வல்லமையை ஏற்படுத்தியிருக்கின்றது. தமக்கு புகழ் வரவேண்டும் என்பதற்காக எதனையும் செய்வதற்கு தயாரான மக்கள் கூட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது மிக ஆபத்தான திசை நோக்கி எம்மை அழைத்துச் சென்று விடுகின்றது. மிகக் கவனமாக கையாளப்பட வேண்டிய பல விடயங்களுக்கும் கூட இந்த புகழ் போதையில் அடிபட்டு வலுவிழந்து போவதை நாம் அண்மை நாட்களில் அவதானிக்க முடிகின்றது. சாவகச்சேரி மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகளையும் வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் எழுச்சியினை ஏற்படுத்திய மருத்துவர் அர்சுனா அதனை தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட புகழை தக்க வைப்பதற்காக தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இயங்குவது அந்த மக்கள் எழுச்சியினை திசை திருப்பி தனிமனித போராட்டமாக அதனை மாற்றி விடும் அபாயத்தை தோற்றுவித்திருப்பதாக பலரும் கருதுகின்றார்கள். உண்மையில் சாவகச்சேரி மருத்துவமனை மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு துறைகளும் ஊழல்களால் நிறைந்து கிடக்கின்றது. இலங்கையின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரே ஊழல் மோசடிக்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நாடு இலங்கை. அதே நேரம் மருத்துவர் அர்சுனா கூறியது போல 95 சதவீதமான மருத்துவர்கள் மிகவும் அர்பணிப்போடு சேவையாற்றி வருகின்றார்கள் என்ற உண்மையினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக அந்த மோசமான 5 சதவீதமானவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அதிகாரங்களை தம்வசம் வைத்துள்ளார்கள். அந்த அதிகாரங்களை பயன்படுத்தி தம்மை தப்பவைப்பதற்கு அவர்கள் முயல்கின்றார்கள். இந்த சந்தரப்பத்தில் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் மருத்துவர்களை வெளிப்படுத்துவதற்கு மக்களின் எழுச்சி மிக மிக அவசியமானது. மக்கள் எழுச்சியின் சிறப்பான வெளிப்பாட்டை 2022ம் ஆண்டு இதேபோன்ற ஜூலை மாதம் 9ம் திகதி இலக்கைத் தேசம் சந்தித்தது. பெரும்பான்மை சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்பாய ராஜபக்ச என்ற இலங்கையின் பலம் பொருந்திய தலைவரை நாட்டை விட்டே ஓட வைத்த மக்கள் புரட்சியின் மகத்துவத்தை நாம் மறந்து விட முடியாது. கோட்பாய ராஜபக்சவையே ஓட வைத்த பலம் பொருந்திய மக்கள் சக்திக்கு முன்பாக இந்த மருத்துவ ஊழல் கும்பலால் தாக்குப் பிடிக்க முடியாது. அனால் அதனை மேற்கொள்வதற்கான மக்கள் திரட்சியும் சரியான வழிநடத்தலும் இன்று அவசிமாகின்றது. அதனை மேற்கொள்வதற்கான சமூக அக்கறை கொண்ட தரப்புகள் முன்வரவேண்டும். எல்லாவாற்றையும் "அரச்சுனா ராமநாதன்" பாரத்துக் கொள்ளட்டும் நாம் அவரிகள் பதிவுகளுக்கு Like போட்டு Comment எழுதி Share பண்ணினால் வரலாற்று கடமை முடிந்து விட்டதாக எண்ணுவது தவறு. இந்த எண்ணத்தில் இருக்கின்றவர்களின் ஆதரவை நினைத்து புழகாங்கிதம் அடைந்து மீண்டும் மீண்டும் Live video போட்டு Viral ஆவதை தவிர்த்து மக்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்ற வழிநடத்தலை வழங்க வேண்டும். சமூக வலைத்தள எழுச்சி என்பது மிக மிக தற்காலிகமானது அடுத்த Hot Topic / Trending வரும் வரைக்குமான வாழ்நாளை Lifespan கொண்டது. இதற்கு அண்மையில் பல உதாரண்களை நாம் காண முடியும். எனவே இந்த 'சமூக ஊடகப் புரட்சியை' தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். அதேநேரம் குறிபிட்ட சில ஊழல் பேர்வழிகைள தண்டிக்கும் போர்வையில் சமூக அக்கறையுடன் தமக்கான நல்ல வசதி வாய்புகளை உதறித் தள்ளி விட்டு எமது மண்ணில் எமது மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கும் அரப்பணிப்பு மிக்க மருத்துவர்களை "சோர்வடையச்" செய்யாமால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தோன்றிய அலைக்கு சமூக ஊடகங்கள் மூலமே பதில் வழங்கி தனது கடமையினை நிறைவு செய்த விடலாம் என மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் கொண்ட எதிர்பார்ப்பு மிகத் தவறானது என்பதை அவருடை பதிவில் அவருக்கு கிடைத்து வரும் பின்னூட்டங்களே சான்று. பொறுப்பு வாய்ந்த ஒரு அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தை ஊடகங்களை அழைத்து தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது அவரின் கடமை. சாவகச்சேரி மருத்துமனை நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் யாழ் போதன வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் அல்லது அதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமை மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு இருக்கின்றது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஏனைய மருத்துவர்கள் பிரச்சினைக்குரியவரை வெளியேற்றிவிட்டு தமக்குரியவரை கொண்டு வருவதன் மூலம் தப்பித்து விட முடியாது. தம்மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றால் அவற்றை பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தலாம் இல்லாவிட்டால் அந்த தவறை சரி செய்வதற்கு முயற்சிக்கலாம். " வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல " போகும் பொது நீங்கள் எதனையும் கொண்டு செல்லப் போவதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் தெய்வத்திலும் மேலாக மக்களால் போற்றப்படும் மருத்துவத் துறையை அதன் மாண்பு கெடாமல் பாதுகாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை நீங்கள் சுமந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் சுமக்கப் போகும் மருத்துவ மாபியாவின் குழந்தை என்ற அவப்பெயரை தடுக்க முடியாது. நீங்கள் உழைப்பது உங்கள் எதிர்கால சந்ததியின் நல்வாழ்விற்கு என்று நீங்கள் நம்பினால் அவர்களுக்காக நீங்கள் சேமிக்க வேண்டியது பெரும் தொகைப் பணமல்ல நல்ல பண்புகளை தான் என்பதை அதிகம் படித்த உங்களுக்கு பாமரன் புரிய வைக்க வேண்டியதில்லை. மறுபுறம் ஒருவரை முன்னிறுத்தி 'அவரே' எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மனநிலையில் இருந்து எமது மக்கள் வெளியில் வர வேண்டும். இந்த போராட்டம் என்பது அனைவருக்குமானது என்பதை அனைவரும் கூட்டாக வெளிப்படுத்த வேண்டும். மருத்துவர் அர்ச்சுனா கூறிய பல விடயங்கள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டும், அதே நிலமை ஏனைய மருத்துவமனைகளில் இருந்தால் அவை குறித்தும் பேசப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்களை தமது தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்து பெரும் தொகை பணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் முனமையான பெயர் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அரச மருத்துவ மனைகளில் காணப்படும் வளங்களை சரியா பயன்படுத்தாமல் அதற்கு மாற்றீடாக தனியார் நிறுவனங்களை முன்னிறுத்தி அதன் மூலம் இலாபமீட்டும் செயல்பாடுகள் அனைத்தும் சரியான ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளார்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்தினால் மிகப் பெரிய மாற்றம் ஒன்றை எமது மண்ணில் நாம் ஏற்படுத்தலாம். 'விடியும் விடியும்... என்ற நம்பிக்கை இரவினை விரட்டுமே .... முடியாத என்றொன்று கிடையாது பூமியில்.. யாரும் செய்யாததை செய்தால் தானே சாதனை '
  38. சுய நிர்ணய உரிமை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய நான்குவிடயங்கள் என்று தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டவற்றில் மூன்றாவது சுய நிர்ணய உரிமையாகும். இதுகுறித்துப் பேசும்போது அரசதரப்பு குழுவின் தலைவரான ஹெக்டர் தெரிவித்திருந்த கருத்தான, "காலணித்துவ ஆட்சியின் கீழ் இருக்கும் இனங்க‌ள் மட்டுமே சுய நிர்ணய உரிமைக்கான அந்தஸ்த்தினைப் பெறுவார்கள்" என்பதனை மேற்கோள் காட்டிப் பேசினர். தமிழர்களும் அந்நியர்களின் ஆட்சியின் கீழேயே வாழ்கிறார்கள் என்றும், சிங்களவர்களால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தமிழர்கள் வாதாடினர். சிங்கள அரசுகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுவரும் ஒட்டுக்குமுறைகள் குறித்த விரிவான தகவல்களை தமிழர் தரப்பு முன்வைத்தது. இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கான பிரஜாவுரிமை மறுப்பு, தமிழர் தாயகத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் தமிழரின் தாயக இழப்பு, தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்கள் தமது தாய்மொழியினை உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிப்பதில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகள், தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், தமிழர்களின் வாழ்வையும், சொத்துக்களையும் நாசமாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், தமிழர்களின் இருப்பை முற்றாக அழித்துவிடும் நோக்கில் சிங்கள அரசுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் செயற்பாடுகள் ஆகியன உட்பட சிங்கள் தேசம் தமிழினம் மீது நடத்திவரும் ஒடுக்குமுறைகளினால், தமிழினம் சுய நிர்ணய உரிமைக்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாக அவர்கள் வாதிட்டனர். ஆனால், தமது நான்காவது கோரிக்கையான பிரஜாவுரிமை குறித்து அதிக அழுத்தங்களைக் கொடுப்பதை தமிழர் தரப்பு தவிர்த்துக்கொண்டது. 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமை குறித்து எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தையடுத்து தமிழர் தரப்பு இதுகுறித்து விவாதிப்பதைத் தவிர்த்திருந்தது. இவற்றிற்கு மேலதிகமாக, முன்வைக்கப்படும் தீர்வில் மனிதவுரிமைகளைக் காப்பதுகுறித்து அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் தமிழர் தரப்பு கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கம்சக் கோரிக்கை குறித்து விவாதிப்பதிலிருந்து சிங்களத் தரப்பு பின்வாங்கியிருந்தது. இதுகுறித்து என்னிடம் பேசிய தமிழர் தரப்புப் பிரதிநிதியொருவர், "நாம் கூறுவதை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், எதிர்த்து வாதிடுவதையோ, கேள்விகேட்பதையோ அவர்கள் தவிர்த்துவிட்டார்கள்" என்று கூறினார். தமிழர் தரப்பினரின் வாதத்தினையடுத்துப் பேசிய ஹெக்டர், காணிப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு முன்வைத்த கோரிக்கை குறித்து தான் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். திம்புவில் தமிழரின் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க நான்கம்சக் கோரிக்கையினை உள்ளடக்கிய தீர்வைக் கோரி தமிழர் தரப்பு விவாதித்து வருகையில், ஆவணி 14 ஆம் திகதி இராணுவம் மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேர்ருந்தினை மறித்து, அதிலிருந்த ஆறு தமிழ் இளைஞர்களை காட்டிற்குள் இழுத்துச் சென்ற இராணுவம் அவர்களை வாட்களால் வெட்டிக் கொன்றது. சித்திரை 10 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவம் நடத்திய படுகொலைகளின் தொடர்ச்சியாகவே இப்படுகொலையும் நடத்தப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நிச்சயம திருப்பித் தாக்குவோம் என்று தாம் எச்சரித்ததன்படி, ஆறு தமிழ் இளைஞர்களின் படுகொலைகளுக்கான பதிலடியில் புலிகள் இறங்கினார்கள். தளபதி விக்டர் தலைமையிலான 40 புலிகள் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்த முருங்கன் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள். சென்னையில் புலிகளின் அலுவலகம் விடுத்த அறிக்கையில், தமிழ் மக்கள் தாக்கப்பட்டால் இராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்பதைக் காட்டவே முருங்கன் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தது. "தமிழர்கள் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்குவோம்" என்று அச்செய்தி கூறியது. வன்முறைகள் ஆரம்பிப்பதை உணர்ந்துகொண்ட இந்தியா இரு தரப்பினரையும் பொறுமை காக்குமாறு வலியுறுத்தியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.