Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    20018
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/26/24 in all areas

  1. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின் மலிபன் தெருவிலே அந்த ஹோட்டல் திறக்கப்பட்டதால் , அந்த ஹோட்டலுக்கும் மலிபன் ஹோட்டல் என்ற பெயரையே சூட்டினார் திருவாளர் அப்புஹாமி அவர்கள் . அவரது உதவி ஒத்தாசைக்கென்ன தங்களின் சகோதரர்களான A.G.விக்ரமபால மற்றும் A.G.ஜினதாச ஆகியோரையும் இணைத்து கொண்டார் . கூட்டு முயற்சியாலும் , கடின உழைப்பாலும் அவரின் வர்த்தகம் வேகமாக வளர்ந்ததோடு , அது பல கிளைகளையும் பரப்பியது . மலிபன் ஹோட்டலுக்கு மக்களின் அபிமானமும் , வரவேற்பும் பல மடங்கு பெருகுகிறது. அதை அப்படியே தக்கவைத்துக்கொண்ட அப்புஹாமி அவர்கள் அடுத்த கட்ட முயற்சிகளை சிந்தித்து , செயலாற்ற தொடங்குகிறார் . அந்த முயற்சியிலே குதிக்கிறார் . அந்த சிந்தனையும் முயற்சியும் , அப்புஹாமி அவர்களை கொழும்பு கொட்டாஞ்சேனையில் , ஒரு பேக்கரி தொடங்கி , வியாபாரத்தை விரிவுபடுத்த வைக்கிறது . . பேக்கரியும் தொடங்கியாயிற்று , அங்கே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த தரம் மற்றும் சுவை கொண்ட தயாரிப்புகளின் மதிப்பும் அதிகரிக்கிறது . இதனால் , ஹோட்டலுக்கு போலவே , பேக்கரிக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் , நற்பெயரும் கிடைக்கிறது . அப்புஹாமி வழங்கிய நல்ல வியாபாரமே , வாடிக்கையாளர்களிடம் இருந்து அவருக்கு நல்ல மதிப்பை கொடுத்தது . வியாபாரத்தின் தாரக மந்திரம் வாடிக்கையாளர்கள் என்றால் , அந்த வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுப்பதும் சிறப்பானதாய் இருக்க வேண்டும். அப்படி சிறப்பானதை கொடுத்தால் தான் , வாடிக்கையாளர்களையும் நாம் தக்க வைக்க முடியும். இதனை செவ்வனவே செய்தார் அப்புஹாமி , விளைவு நல்ல வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டனர் , அந்த வாடிக்கையாளர்கள் தக்க வைக்கப்பட்டதால் , இவரின் வர்த்தக பெயரும் மக்கள் மனதில் பதிந்தது . வாடிக்கையாளர்களும் உள்ளனர் , நல்ல பெயரும் இருக்கிறது , இது ஒரு வரமல்லவா ? இப்போது அடுத்த கட்டத்தை பற்றி யோசித்தார் அப்புஹாமி . ஒரு இயந்திரமயமாக்கல் மூலமான உணவு உற்பத்தி செயல்முறையை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார் . அந்த முடிவே , 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் , நாட்டின் முதலாவது இயந்திரம் மூலம் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் உற்பத்தியை இலங்கை தீவுக்கு அறிமுகம் செய்கிறது . அப்புஹாமி முதல் வியாபாரம் பழகிய இடத்தின் பெயரையே , தனது பிஸ்கட் நிறுவனத்திற்கும் வைக்கிறார் - அதுவே மலிபன் என்பதாகும் . 1935 ம் ஆண்டு தொடக்கம் 1954 ம் ஆண்டு வரையான , வெறும் 19 ஆண்டுக்குள் ஒரு இமாலாய சாதனையே இதுவாகும் . இன்று மலிபன் நிறுவனமானது பிஸ்கட் துறையில் மட்டுமல்ல , பால்மா வியாபாரத்திலும் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது . சிறிய ஆரம்பமே பெரிய அடைவுகள் என்பதற்கு அப்புஹாமி மெலிபன் வீதியில் ஆரம்பம் செய்த மெலிபன் ஹோட்டலும் , இன்றைய அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறந்த எடுத்துக்காட்டு . முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு அப்புஹாமி நல்லதொரு உதாரணம் . அது போல , கம்பீரமாய் வளர்ந்து நிற்கும் மலிபன் நிறுவனம் ஒரு சான்று . படித்ததில் பிடித்தது Copied from : Hafy Abdeen https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0N4hCg53DXZ5xmsoZEyYozSLAkkSA2kGzrfZ88qJNtoxGfS8DDadftdLBUu8h856Cl&id=100068724064386&mibextid=cr9u03
  2. விடுதலைப் புலிகள் என்பது கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பால், ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் குறியீடு. எம் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக அடையாளப்படுத்தி வைத்திருக்கும் முறைமை இது. அவர்கள் மீதான தடை என்பது, ஈழத்தமிழர்களின் தமிழ் தேசிய போராட்டத்தின் மீதான தடையாகும். எம் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மீதான தடையாகும். புலிகள் மீதான தடைதான், அவர்கள் பெயரைப் பயன்படுத்தி குளிர்காயும், அவர்களின் சொத்தை கொள்ளையடித்த பலர் மீதான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை தடுத்துக் கொண்டு இருக்கின்றது. இலங்கை, இந்திய அரசுகளை விட இப்படியானவர்களுக்குத் தான் புலிகள் மீதான தடை நீடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. விசுகு கூறியது போன்று, யார் குற்றியும் அரிசி ஆனால் சரி.
  3. லூசுத்தனத்தின் உச்சக்கட்டம். 😡 வருடாவருடம் குளம் குட்டைகளை தூர் வாருங்கடா......நீர்தேக்கங்களை பராமரியுங்கள். தண்ணிபஞ்சமும்....கடல் நீரும் உள்ளே வராது. எனது சிறுவயது முதல் சிரமதான பணிகளில் ஈடுபட்டவன் நான். ஒவ்வொரு மனிதனுக்கும் சிரமதான சிந்தனை இருந்தாலே போதும் . எந்தவொரு அரசையும் தங்கியிருக்க தேவையில்லை.
  4. வேலை இல்லா திண்டாட்ட காலம் போய், ஆனால் வேலையும், புதிய தொழில்களுக்கான தேவையும் நிறைய இருக்கும் நேரத்தில், அவற்றைச் செய்ய ஆள் இல்லை என்ற நிலையில் தாயகம் உள்ளது. சாக்கடை மட்டுமல்ல, மனிதர்களின் பிணங்கள் அழுகி அழியும் ஆறு அது.
  5. காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு.
  6. எனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது. குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன். ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும். 97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன். எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.
  7. அந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......! 😁
  8. இது இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு முடிவா... அல்லது தான் தோன்றித்தனமாக அறிக்கை விடும் சுமந்திரனின் முடிவா என்பதை அறிய ஆவலாக உள்ளது. எப்படியோ தமிழரசுக் கட்சிக்கு, கடைசி ஆணி அடித்து... புதைகுழியில் மூட ஒரு ஆள் கிடைத்துள்ளது. அது விரைவில் நடக்கும் போலுள்ளது. 😂
  9. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழரசுக் கட்சி இருக்குமாயின் அதுவே தமிழர் தரப்புக்கு அக்கட்சி வரலாற்றில் செய்த ஒரேயொரு நன்மையாக இருக்கும்.
  10. பயங்கர மாஃபியாக்கள் போல் 3000 டொலரை கொள்ளை அடித்திருக்கிறார்கள். 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவரிடமிருந்து கொள்ளை அடிக்கச் சொல்லி கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது. 2) கிளிநொச்சியை சேர்ந்த... ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப் பட்ட பெண்மணி... மூன்று அடியாட்களை அமர்த்துகின்றார். 3) அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு, கொள்ளையடித்துக் கொண்டு மீள பிரத்தியேக படகில் ஏறி தப்பி சென்றுள்ளார்கள். 4) யாழ்.கொள்ளைக்காரி... ஒன்றரை வருடமாக பிடிபடாமல் பொலீசுக்கு தண்ணி காட்டியுள்ளார். கேள்வி: 1) கனடா ஐயப்பன் கோவில் தலைவருக்கு இவர்கள் ஊருக்குப் போகும் விடயம் எப்படி தெரிந்தது. 2) இவர்கள் ஐயப்பன் கோவிலுக்குப் போன இடத்தில், இலங்கைக்கு செல்வதாக அவரிடம் தெரிவித்தார்களா... அல்லது வேறு ஆட்களுக்கு சொல்ல... அவர்கள் மூலம் இந்தச் செய்தி பரவி அவரின் காதுக்கு எட்டியதா? 3) அவர் கனடாவில் வசித்துக் கொண்டு, ஒரு பெரும் பொறுப்பில் இருந்து கொண்டு... 3000 டொலருக்கு ஏன் ஆசைப் பட்டார். ஊரில் கொள்ளையடித்தவர்களை சிங்கள போலீஸ் எப்படி கையாளப் போகின்றது என்று தெரியவில்லை. சிலவேளை இரண்டு பக்கமும் காசை வாங்கிக் கொண்டு வழக்கை இழுத்தடித்து காலப் போக்கில் மக்கள் அந்தச் சம்பவத்தை மறந்திருக்கும் நிலையில்... எல்லோரையும் விடுதலை செய்ய சந்தர்ப்பமும் உள்ளது. ஆனால்... முதலில் இந்த கனடா ஐயப்பன் கோவில் தலைவர் மீது கொலை முயற்சி, கொள்ளை போன்றவற்றை தூண்டியதாக கனடா பொலிசில் ஒரு முறைப்பாடு செய்து 50 வருசமாவது மறியலில் போட வேண்டும். ஒரு வசதியான நாட்டில் வாழ்ந்து கொண்டு... 3000 டொலருக்கு கொள்ளை அடிக்க நினைக்கும் இந்த எருமை ... உலகில் வெளியில் நடமாடவே அருகதை அற்றவன்.
  11. மிகவும் தவறான அனுமானம். வைகோ கொள்கை பிடிப்பு இல்லாத, நேரத்துக்கு நேரம் நிறம் மாறுகின்ற, கூட்டணி மாறுகின்ற அரசியல்வாதி. வாரிசு அரசியலை எதிர்த்து குரல் கொடுத்து, அதனால் திமுக வில் இருந்து 1991-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி விலக்கப்பட்டு, அதனால் இவருக்காக 5 தீக்குளித்து உயிரை கொடுக்க இவரால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) 1994-ம் ஆண்டு, மே மாதம் உருவாக்கப்பட்டது. அதன் பின் திமுக வில் இருக்கும் போது, பரம வைரியாக இருந்த ஜெயலலிதாவுடன் 1998 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து தோற்றார். பின் 5 இற்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாண்டு போக காரணமான, வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து பிரிந்த திமுகவை / கருணாநிதியை ஆதரித்து அவர்களுடன் 1999 இல்கூட்டணி வைத்து பெரியளவில் சறுக்கினார். பின் வந்த காலத்தில் தவறான கூட்டணிகளை அமைத்து தன் அரசியல் கட்சியை நாசமாக்கியது மட்டுமல்லாமல், விஜயகாந்தின் கட்சியையும் நாசமாக்கினார். ஈற்றில் எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்தாரோ, அதே வாரிசு அரசியலை துரை வைகோ வின் மூலம் தன் கட்சிக்குள்ளும் நுழைத்து தொடர்கின்றார். நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அரசியல் கோமாளி இவர், இவரின் இந்த நிலைக்கும், எம் இனத்துக்கான போராட்டத்துக்கான ஆதரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  12. வாக்களிக்கும் வயதை அடைந்த பின் நான் இலங்கையில் வாக்களித்த போது, இவருக்கு மட்டுமே (கொழும்பில்) வாக்களித்து இருந்தேன். அதன் பின் எந்த சிங்கள தலைவர்களுக்கும் நான் வாக்களித்தது கிடையாது. மஹிந்த காலத்தில் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டதுடன் தாக்குதலுக்கும் உள்ளானார். இறுதி வரைக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். ஆனாலும், அதே தமிழ் மக்களால் புறக்கணிப்பட்டவரும் ஆவார். ஆழ்ந்த இரங்கல்கள்.
  13. யேர்மன் Esprit என்ற பாஷன் நிறுவனம் ஒன்று சுவிச்லண்டிலும் ஐரோப்பாவிலும் உள்ளது. நட்டப்பட்டு இறுதியில் முறிந்துவிட்டதாக (bankrupt) அங்கே வேலைபர்த்த ஒருவர் மூலம் அறிந்தேன்.அந்த பெயர் பிரபலமானதால் அதை பயன்படுத்தி இலாபம் அடையலாம் என்பதற்காக வேறு ஒரு பலம் கொண்ட நிறுவனம் அதை வாங்கி நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டதாம் ஆனால் அப்பபடி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் வாங்கிய நிறுவனம் இலாபம் அடைவதோடு அங்கே வேலை செய்பவர்களும் வேலையை இழந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இங்கே நீங்கள் இருவரும் சொன்தே சரி. தடை நீக்கப்பட்டால் புலிகள்கட்சியை வழி நடத்த பொறுப்பானவர்கள் இல்லை. புலிகளின் பெயரை பாவித்து தமிழர்களிடம் பணம் கொள்ளை அடிப்பது தான் நடைபெறும்
  14. ஆட‌த் தெரியாத‌வ‌லுக்கு என்ன‌ தான் ந‌ட‌ன‌ம் சொல்லி கொடுத்தாலும் மேடேல‌ போய் சுத‌ப்புவா அதே போல் தான் இல‌ங்கை கிரிக்கேட் அணியும் இவ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை முன்னாள் ஜாம்பாவான் அர‌விந்த‌ டி சில்வா ஆலோச‌னை சொன்னாலும் வீர‌ர்க‌ள் உப்பு ச‌ப்பில்லாம‌ தான் விளையாடுவின‌ம்................... இந்தியா 20 ஓவ‌ர் தொட‌ரையும் ஒரு நாள் தொட‌ரையும் வெல்லும் சில‌து குருட்ல‌க் வேலை செய்தால் ஏதாவ‌து ஒரு தொட‌ர‌ வெல்ல‌க் கூடும் ஈழ‌ப்புரிய‌ன் அண்ணா......................
  15. நல்ல விடயம் சுவியர். ஒரு வயதுக்கு மேல்... கட்டாயம் நீங்கள் செய்வது போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வைத்தியரின் நேரடி பார்வைக்கு சென்று வருவது சிறப்பு. 👍 🙂
  16. அண்ணை தொடர்ந்து இரத்தச் சக்கரை அளவுகளை கண்காணிக்கிறனிங்களா? இரவு உணவின் பின் 12 மணித்தியால விரதத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் பகலில் உணவருந்தி 2 மணிநேரத்தின் பின்னான இரத்தச் சக்கரை அளவும் கண்காணிப்பது அவசியம்.
  17. அப்படி என்னதான் உளவள ஆலோசனை? எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ? இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.
  18. அதை அவர் தனது உடல் நிலையைப் பொறுத்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்......! அது அவரது சீனி அளவைப் பொறுத்தது ....... என்வரையில் எனக்கும் சுகர் உண்டு......காலையில் ஒரு அளவான சீனி போட்ட பால்கோப்பி பின் தோட்டத்துக்குள் வேலைகள் செய்வேன்.......10 / 11 க்குள் ஒரு தேநீர் சீனியுடன் அல்லது பனங்கட்டி ஒரு துண்டு + இரண்டு பிஸ்கட் ........ மதியம் ரெண்டு மரக்கறி தயிர் அல்லது மோர், அப்பளம் +மிளகாய்யுடன் சாப்பாடு சிறிது நேரத்தின்பின் ஒரு மணித்தியாலம் நித்திரை பின் கொஞ்சம் வீட்டு வேலைகள் 4 /5 ல் சீனி போட்ட தேநீர் +நொறுக்குத்தீனி (வாரத்துக்கு ரெண்டு விழாக்கள் நடப்பதால் பலகாரப்பைகள் எப்பவும் மேசையில் இருக்கும்).......இரவு தோசை 3, இடியப்பம் 5, இட்லி 3, நூடில்ஸ் + குஸ்குஸ் ஒரு கையளவு இவற்றுள் ஏதாவது ஒன்று ....... பின் மெட்ரோபோமின் 500 ஒன்று அல்லது இரண்டு குளிசை அதன்பின் உறக்கம்......... கண்டநேரமும் கண்டபடி சாப்பிடுவதில்லை ....... (என்னவோ தெரியாது தோசை + சாம்பல் சாப்பிடும்போது மட்டும் பாதிகிளாஸ் கொக்கோகோலா குடிப்பேன் அது மிகவும் பிடிக்கும்...... குளிசையும் 2 போடுவேன்).........! வீட்டில் நிக்கும் நாட்களில் இவை தவறாமல் நடக்கும்......மற்றும்படி மகள், மகன், பெறாமக்கள் எங்க வீட்டில் நிக்க விடுகினம்.......பாதிநாட்கள் வாகனத்துடன் தெருவிலதான் சீவியம்.......அதனால் பிளாஸ்கில் கோப்பியும் பிஸ்கட்டும்தான் தெய்வம்......! 😂
  19. மறைந்த யாழ் கள உறுப்பினர் சோழியனின் அனுபவப்பதிவு https://www.yarl.com/forum2/showthread.php?tid=8301
  20. கந்தர்மட பிரஜைகள் @தமிழ் சிறி
  21. இது கனடாவில இருக்கிற ஐயப்பன் கோயில் பிரச்சனை போல கிடக்கு..... அனலைதீவிலையும் ஒரு ஐயனார் கோயில் இருக்கு எண்டதையும் இஞ்ச உள்ள பக்த அடியார்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
  22. இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல.... இங்குள்ள துருக்கி, பாகிஸ்தான் எல்லாரிடமும் இந்தக் குணம் உள்ளது. வேலை இடத்தில் முதலாளியை பந்தம் பிடித்துக் கொண்டு காரியம் சாதிப்பார்கள். அவர் வேறு இடத்துக்குச் சென்றவுடன் கீழ்த்தரமாக கதைப்பார்கள். இதுகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். 😂
  23. பின்னை என்ன செய்யிறது விசுகர். வசிப்பது அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர நாடு. பலரும் மதிக்கும் கௌரவமான பதவி, அதுகும் கோவிலில்... இப்படியான பெருமைகளை கொண்ட ஒருவன் செய்யும் வேலையா இது. உண்மையிலேயே ஆத்திரம் வருகின்றது. இவனால்... அந்தக் கோவிலுக்கும், கனடாவில் வசிக்கும் மக்களுக்கும்... 3000 டொலருக்காக கொள்ளையடிக்க முயன்றவன் என்ற கெட்ட பெயர். இவனை கோவில் தலைவராக தெரிவு செய்த மக்கள் முகத்தில் சேறை அள்ளி பூசிவிட்டு நிறைகிறான் இந்தப் பர * சி. எங்களது மக்கள் எவ்வளவு கேவலமான முன்னுதாரணங்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்க வேதனையாக உள்ளது.
  24. கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம் படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தின் பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் கூறுகிறார். வைரத்துக்கு பேர் போன பன்னா நகரத்தில், விலைமதிப்பற்ற வைரக் கல்லை கண்டெடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் குத்தகைக்கு எடுக்கிறார்கள். மலிவு விலைக்கு வைர சுரங்கங்களை குத்தகைக்கு விடும் அரசாங்கம் மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), பன்னாவில் இயந்திரங்களின் மூலம் வைரச் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வைரங்களை தேடும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கூட்டுறவு குழுக்களுக்கு ஆழமற்ற சுரங்கங்களை இது குத்தகைக்கு விடுகின்றது. அவர்கள் தங்களிடம் இருக்கும் அடிப்படை கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் வைரத்தை தேடி வருகின்றனர். சுரகங்களில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு வைரக்கல்லும் அரசாங்க வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், பின்னர் அரசாங்கம் அந்த கல்லை மதிப்பிடுகிறது. "இந்த சுரங்கங்கள் 200-250 ரூபாய்க்கு [குறிப்பிட்ட காலத்திற்கு] கூட குத்தகைக்கு விடப்படும்" என்று மாநில அரசின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, பன்னாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது. அரிதாகதான் நிகழும். படக்குறிப்பு,கண்டெடுக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 8 மில்லியன் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஏழைத் தொழிலாளியின் கைகளில் மின்னிய வைரக்கல் பலர் சிறிய வைர கற்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ராஜு கவுண்ட் தோண்டி எடுத்திருப்பது பெரிய வைரக்கல். எனவே இது மிகப்பெரிய நிகழ்வு என்று சிங் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னாவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள சுரங்கத்தை தனது தந்தை குத்தகைக்கு எடுத்ததாக கவுண்ட் பிபிசியிடம் கூறினார். மழைக்காலத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் கிடைக்காத போது அவரது குடும்பம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார். "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், வேறு எந்த வருமானமும் இல்லை, எனவே நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து வருகிறோம் " என்று அவர் கூறினார். இதற்கு முன்பு மக்களுக்கு வைரம் கிடைத்த கதைகளைக் கேட்ட அவர், தனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதாக கூறுகிறார். புதன்கிழமை காலை, விலைமதிப்பற்ற வைர கல்லை தேடும் தனது அன்றாட பணியைச் செய்ய அவர் சுரங்கப் பகுதிக்குச் சென்றார். ''உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்க போகிறேன்'' படக்குறிப்பு,கவுண்ட் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்கள் "இது கடினமான வேலை. நாங்கள் ஒரு குழி தோண்டி, மண் மற்றும் பாறை துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு சல்லடையில் இட்டு, கழுவுவோம். பின்னர் வைரங்களைத் தேட ஆயிரக்கணக்கான காய்ந்த, சிறிய கற்களை கவனமாக சல்லடை செய்வோம்" என்று அவர் விவரித்தார். அன்று மதியம், அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இத்தனை நாள் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஈடாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. "நான் தோண்டி எடுத்த கற்களை சல்லடை செய்து பார்த்தேன், கண்ணாடித் துண்டை போன்று மின்னும் ஒரு கல்லை கவனித்தேன். அதை என் கண்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தேன், ஒரு மெல்லிய பளபளப்பைக் கண்டேன், என் கைகளில் இருப்பது ஒரு வைரம் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் விளக்கினார். கவுண்ட் பின்னர் தன் கடின உழைப்பால் கண்டுபிடித்து எடுத்த வைர கல்லை அரசாங்க வைர அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அது எடைப் போடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்கப்படும் என்றும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்ட பிறகு கவுண்ட் தனது பங்கைப் பெறுவார் என்றும் சிங் கூறினார். கவுண்ட் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்றும் நம்புகிறார். அதற்கு முன்பு, அவர் தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க விரும்புகிறார். தனக்கு வைரம் கிடைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றெல்லாம் நான் பயப்படவில்லை, காரணம் என்னுடன் வசிக்கும் 19 உறவினர்களிடையே இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் கவுண்ட். இப்போதைக்கு, தனக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து திருப்தியாக இருக்கிறார். "நாளை, நான் வைரத்தை தேட மீண்டும் சுரங்கத்திற்கு செல்கிறேன்," என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cv2gzzjg8gro
  25. கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப்ப சொல்கிறார். ஆனால், தனுஷ் தன் தம்பிகளோடு சரவணன் வீட்டுக்கு சென்று கொலை செய்கிறார். சரவணனை கொலை செய்தது யார் என்று ஒரு பக்கம் போலீசும், ஒரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் தேடுகிறார்கள். இறுதியில் தனுஷின் வாழ்க்கை என்ன ஆனது? தம்பிகள், தங்கையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தனுஷ், ராயன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் வெகுண்டு எழுவது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு சபாஷ் போட வைத்து இருக்கிறது. நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார் துஷாரா விஜயன். அன்ணனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடிப்பு அரசி என்றே சொல்லலாம். துறுதுறு இளைஜனாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார் சந்தீப் கிஷன். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். செல்வராகவனின் நடிப்பு பிரமிப்பு. சரவணன், வரலட்சுமி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் அசுரன் என்று ஏற்கனவே நிரூபித்த தனுஷ், தற்போது இயக்கத்தில் அசுரன் என்று நிரூபித்து இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் போட்டி போட்டு நடிக்க வைத்து இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் என சபாஷ் போட வைத்திருக்கிறார் தனுஷ். படத்திற்கு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமான் இசை. பின்னணியில் மிரட்டி இருக்கிறார். பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். https://www.tamilstar.com/raayan-movie-review/
  26. தலைங்கம் அதிருகின்ற‌து. யாழ் கொள்ளைக்காரி!! ரிவெல்வர் ரீட்டா, பிஸ்டல் பரிமளா, கன் பயிட் காஞ்சனா, அரிவாள் சொர்ணக்கா வரிசையில், பேதையவள் பெயர் என்னவோ?
  27. ஈழம் என்பது தமிழின் மறுவடிவம். தமிழ் இனிமையான தேனாகும். இதை நான்மட்டும் சொல்லவில்லை, ஆன்றோரும் சான்றோரும் அறிந்தோரும் இன்றுவரை சொல்கிறார்கள். தேன் தேனாகவே இனிமையுடன் இருக்கும், அது சிலவேளை பழுதடைந்தால் அதற்குக் காரணமும் இதர உயிரினங்களே! தேன் தானாக உற்பத்தியாவதில்லை அதனைப் பூக்களே உற்பத்தி செய்கின்றன. உற்பத்திசெய்யும் பூக்கள் வாடும், அழுகும், சருகாகும் ஆனால் தேன் தேனாகவே இருக்கும். ஈழம் ஈழமாகவே இருக்கும். பூக்களைப்போல் வந்த, வரும் மனிதர்களை வைத்து ஈழத்தைக் குறைகாண்பது தவறு.🤔🙏
  28. நாசா தலைவரிடம் நாசூக்கப் பேசிவிட்டேன் போல இருக்கு.....மன்னிச்சுக்கோங்க..
  29. இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த ஒரு போட்டியினூடாக பிரகாசித்தாலும் அவர் பத்திரன மலிங்க போல பந்தை வீசுபவர் ஆனால் அவருக்கு மற்றீடான தில்சான் மதுசங்க இடது கை பந்துவிச்சாளர் திறமையானவர் அவருக்கு பதிலாகவே உள்ளே வந்துள்ளார் ஆனால் அவர் திறமையின் பிரகாரம் நுவான் துசாராவிற்கு பதிலாக வந்திருக்க வேண்டியவர் அவரது ஆரம்ப பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பொதுவாக வீசும் உள்ளே வரும் பந்து போல பந்தின் மேலாக விரல்களால் வீசும் நுணுக்கமான ஓப் கட்டர் வீரர்களை குழப்பும் திறன் வாய்ந்தது, ஆடுகளமும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம், இலங்கை எதிர்பாரா வெற்றியினை பதிவு செய்யும் என கருதுகிறேன்.
  30. ஊரில அப்படி படுத்தா அமெரிக்காவிலும் அப்படியா படுக்கணும்?
  31. ஜெய‌ல‌லிதா த‌மிழ் நாட்டில் அம்மா உண‌வ‌க‌ம் ந‌ட‌த்தின‌ மாதிரி க‌ம்பீர் டெல்லியில் க‌ஸ்ர‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு 1ரூபாய்க்கு ப‌சியோட‌ வார‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ த‌ர‌மான‌ சாப்பாடு கொடுக்கிறார் இவ‌ர் குடுக்கிற‌ 1ரூபாய் சாப்பாடு வேறு உண‌வ‌க‌த்தில் போய் சாப்பிட்டான் 50 ரூபாய்க்கு மேல‌ வ‌ரும்......................அந்த‌ 1 ரூபாயும் வேண்டாம‌ இல‌வ‌ச‌மாய் குடுத்தால் இன்னும் ந‌ல்லா இருக்கும்....................கோடி காசோட‌ வாழும் க‌ம்பீர் இதை ஒரு ச‌ம்முக‌ சேவை மாதிரி செய்கிறார்............................ இவ‌ரை போல‌ ஒவ்வொரு மானில‌த்திலும் குறைந்த‌து 5000 பேர் த‌ன்னும் இருந்தால் ம‌க்க‌ள் ப‌சியால் வாட‌ மாட்டின‌ம் ஆய்வு சொல்லுது ப‌ல‌ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌மாம்...........................ஊழ‌ல் முறை கேடு செய்து அர‌சிய‌ல் வாதிக‌ள் உல‌க‌ அள‌வில் வைச்சு இருந்தால் அதுங்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை இப்ப‌டி தான் இருக்கும்...........................
  32. இல்லை, இத் திட்டம் இங்கு அமெரிக்காவில் நடைமுறைக்கு வராது. இது ஒரு வெறும் பேச்சு, அது வெறும் பேச்சாகவே முடியும். சமீபத்தில் நடந்த ஜி - 20 மாநாட்டின் போது, உலகம் முழுக்க மிகப் பெரிய பணக்காரர்களிடமிருந்து 2% அதிக வரி ஒன்றை அறவிட்டால் அதனால் உலகிற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று ஒரு பொருளாதார அறிஞர் (பிரெஞ்சு பொருளாதார அறிஞர் கேப்ரியால் ஜிக்மேன்) ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் இலாபமோ அல்லது சொத்தோ சேர்க்கும் பெரும் பணக்காரர்கள் இந்த வகையில் வருவார்கள். இங்கு குடியரசுக்கட்சி ஆட்சியில் இருந்தால், உலகமே இதற்கு சம்மதித்தாலும், இதற்கு குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இலேசில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அவர்களின் 'வரி எதிர்ப்பு' கொள்கை என்பது இந்த அளவில் தான் நடைமுறை சாத்தியமானது.
  33. அதே...... சீமானும் ஈழப்பிரச்சனையை தன் அரசியலில் சேர்க்காமல் இதர கொள்கைகளை முன்னெடுத்திருந்தால் உச்சிக்கு சென்றிருப்பார். ஈழம் எனும் ஒரு சாக்கடை.
  34. ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?
  35. இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர். பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார். எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!
  36. படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை.
  37. நமது புதிய குடிவரவாளர்களும் தொடங்கி விட்டார்கள்.மார்க்கம்/ லாறன்ஸ் பகுதியில் நடை பாதையில் ஜலம் கழிக்கினம் ஜயா.சன்சிற்றி பிளாசாவிலும் வாகனங்களின் அருகில் இதே விளையாட்டு நடக்கிறது என்றும் அறிந்தேன்.நான் பொய்யாக எல்லாம் வந்து எழுத மாட்டேன்..இப்போ எல்லாம் கனடாவே வேணாம் என்ற மாதிரி ஆகிவிடுகிறது.லோறன்ஸ் பகுதி எல்லாம் பஸ்ராண்டில் நிற்பதற்கு கூட பயமாக இருக்கிறது..😏
  38. எப்படி கண்டு பிடித்தார்கள். ?? நேரடியாக கையும் மெய்யுமாகவா.?? அல்லது காமாரா பொருத்தியிருந்தார்களா. ?? 50 டொலர் அபாரதம் விதித்தபடியால். அமெரிக்கா விதிகள் சுத்தமாக இருக்கிறது 🤣😂 இல்லையென்றால் வீதியில் சிறுநீர் கழிப்பது தொடர்ந்து இருக்கும் இந்த அபராதம் விதிக்கும் நடைமுறைகளை கனடா ஏன். பின்பற்றக்கூடாது. ??? இங்கே நான் இருக்கும் பகுதியில் சில இடங்களில் எல்லாரும் நாய் வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் தெருக்களில் நிறைய இடங்களில் நாய்யின். மலம் இருக்கும் பார்த்து பார்த்து நடப்பது உண்டு ஆனால் இப்போது இல்லை எல்லோரும் ஒரு சிறிய பைய்யுடன். நாய்களுக்கு பின்னால் திரிவார்கள் அது மலம் கழிந்த பின்னர் அள்ளிக் கொண்போய். குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள் அறிவிப்பு பலகைகளில் எழுதி வைத்தும் உள்ளார்கள் கனடா கடற்கரையில் எழுதி வையுங்கள் இங்கே மலம் கழித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்று 😂😂🤣
  39. அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர். நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.
  40. ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக் காட்டியது... . இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது... . என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது... . இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்... . இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்... . அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்... . அவனுக்கு வந்த டோக்கன் எண் 999 . அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்... . பணத்தை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்து செல்லும்போது... எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது.. . அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப் பந்தயம் நினைவுக்கு வந்தது... . நேராக குதிரைப் பந்தயம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்.. . வாயில் எண் 9 வழியாக உள் நுழைந்தான்.... . அங்கிருந்த முகவரை சந்தித்தான்... ஐயா மொத்தம் எத்தனை பந்தயங்கள் நடக்க இருக்கிறது... மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்றால் நான் 9-வது போட்டியில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.... . பந்தயமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன் என்று மொத்தப் பணத்தையும் கட்டினான்... . எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது ‌பந்தயம் வந்தவுடன் தானும் கலந்து கொண்டான்... . போட்டி துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண் கொண்ட குரையின் மீது தன் மொத்தப் பணத்தையும் கட்டினான்.... . இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போட்டியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன் நம்பினான்... . அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தயம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்... என கேட்டார்... . அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று... . போட்டி துவங்கியது... . குதிரைகள் சீறிப் பாய்ந்து ஓடின... . பந்தயம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.... . போட்டி முடிந்தது.... . இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....😜😝😜😝 பழமையும் புதுமையும்
  41. @ஏராளன் உங்களுக்கு ஒரு விசயம் தெரியமா? @Maruthankerny தான்தான் ஹிருணிக்காவை பிணையில் எடுத்து விட்டதாக முகநூலில் சொல்லிக் கொண்டு திரிகிறார். உண்மையாக இருக்குமோ... 😂 @விசுகு, @ஈழப்பிரியன், @தனிக்காட்டு ராஜா எல்லோருக்கும் இந்த விசயம் தெரியும். 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.