Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
Kandiah57
கருத்துக்கள உறவுகள்6Points4042Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20018Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31977Posts
Popular Content
Showing content with the highest reputation on 07/27/24 in all areas
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ஏன். ?? இப்படி முடிவுக்கு வந்தீர்கள்??? இது யாழ்ப்பாணம் எனவே சாதி பிரச்சனை இருக்கலாம் ஏழையாக இருக்கலாம் படிப்பு குறைவாக இருக்கும் வேலை வெட்டி இல்லாதவன் ஆகவும் இருக்கும் பெண் அழகுகாகவுமிருக்கும் பெண் பெரிய சொத்துக்கள் உடையவள். ஆக இருக்கும் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரே ஒரு காரணம் போதாது 🤣😂😂🙏 அவரை ஒருவரும். காதலிக்கவில்லை அவர் தான் பலரையும் காதலித்தவர். 😂😂🙏3 points
-
சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்
3 pointsசிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவை விடவும் அங்கிருந்த பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த விடயமே மனதை நிறைவாக்கியது. பணம் இல்லாத அனைவருக்காகவும் ஷீலாம்மாவிடம் தினமும் உணவு உள்ளது. பணத்தில் ஏழையாக இருந்தாலும் இதயத்தில் பணக்காரராக எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களின் வாழ்க்கை இது” என சிங்கள இளைஞன் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/07/blog-post_108.html3 points
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் வை கோ ஐயா. 2009 மே க்குப் பின்னான கசப்பான அனுபவங்களை மறந்து.. தேசிய தலைவர் மீது கொண்டிருந்த தார்மீக ஆதரவுக்கு மதிப்பளித்து வை கோ ஐயா மட்டுமல்ல.. தமிழக நேச சக்திகள் எல்லோரும் ஈழத்தமிழர் விடயத்தில்.. ஒருங்கிணைந்து செயற்படுதல் அவசியம். உள்ளூர் அரசியலில் எப்படியான அணுகுமுறைகளை கொண்டிருந்தாலும்.2 points
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
விட்டால் தமிழர்கள் தான் ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்கள் நல்லவர்கள் என்று சொன்னாலும் சொல்லுவீங்க போல இருக்கே. உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி 1990 வரை. சோவியத் உடைவின் போது தனிநாடானது. இப்போ சோவியத்தில் இருந்து உடைத்த அத்தனை நாடுகளையும் நேட்டோவில் இணைச்சாச்சு. உக்ரைன் தான் பாக்கி. நேட்டோ விரிவாக்கமே தான் ரஷ்சிய- உக்ரைன் போருக்கான முக்கிய மறைமுகக் காரணம். நேரடிக்காரனம்.. டான்பாஸ் பிராந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை பறித்து உக்ரைனின் ஆக்கிரமிப்புக்குள் வைத்திருக்க முனைந்தது. இதில்.. ரஷ்சியாவினது உக்ரைன் மீதான போர் எப்படி ஆக்கிரமிப்பாகும். மேற்கு ஐரோப்பாவிற்கும் நேட்டோவுக்கும் நன்மையில்லாமலா இவ்வளவு கோடிகளை ஐரோப்பிய ஒன்றியமும்.. பிரிட்டனும்.. அமெரிக்காவும் கொட்டிக் கொடுக்கினம்..??! எதுஎப்படியோ.. நீங்கள் பிரஞ்சு எஜமானர்கள் வாய்வழி வருவதே சத்தியம் என்று நம்பும் மட்டும் நீதி எதுவென்று விளங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மேற்குலகின் சொத்துக்களும் ரஷ்சியாவில் உள்ளன. ஆனால் ரஷ்சியா இவர்கள் அளவுக்கு மட்டமான காரியம் செய்யவில்லை. இன்றுவரை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திடம் இருந்து சுருட்டிய காசையும் ஐரோப்பிய ஒன்றியம் விடுவிக்கவில்லை.. தமிழர்களின் பேரழிவின் போது கூட ஐரோப்பிய ஒன்றியமோ அமெரிக்காவோ உதவி அளிக்கவில்லை. ஆனால்.. சொறீலங்காவுக்கு வாரி வழங்கினதும் இல்லாமல்.. இப்போ வரிச்சலுகளையும் அளிக்கினம்.. சொறீலங்காவை பொருண்மிய நெருக்கடியில் இருந்து மீட்க. இப்படியாப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம்.. நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. தமக்கான அடிமைக் கூலிகளை கூட அமர்த்தி வைக்க.. அகதி அந்தஸ்தை பாவிக்கினம்.2 points
-
குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
2 pointsஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார். பின்னர் அந்தப் படத்தை தேடி பார்த்தேன். 2011ம் ஆண்டு வந்த படம். அதற்கு இரண்டு வருடங்கள் முன்னரே வந்திருக்க வேண்டும், தணிக்கை பிரச்சனையால் வரவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து விட்டே வெளியே விட்டிருந்தார்கள். ஆனாலும் மிஞ்சிய படமே அருமையாக வந்திருந்தது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜவின் முதல் படம். ஆண் தாதாக்களின் மத்தியில் ஒரு சில அப்பாவிகளும், ஒரு அபலைப் பெண்ணும் என்று கதை போகும். முடிவில் 'ஆண்கள் எல்லாமே சப்பை.........' என்று படம் எதிர்பாராத ஒரு திருப்பத்துடன் முடியும், அந்த அதிர்ச்சியில் உடனேயே படத்தை திருப்பி இன்னொரு தரம் பார்க்க வேண்டி இருந்தது. சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இரண்டு பெண் தாதாக்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் மலர்க்கொடி என்னும் பெண் தாதாவின் வாழ்க்கை எந்த சினிமாவிலும் கூட இதுவரை சொல்லப்படாத ஒரு ஆரண்ய காண்டக் கதை. ஊரில் இயக்கங்கள் முளை விட்டுக் கொண்டிருந்த காலம். அப்பொழுது சரிக்கு சரியாக சில சண்டியன்களும் அங்கே இருந்தார்கள். அப்பொழுது இயங்கங்கள் அவர்களை அடக்க ஆரம்பித்திருக்கவில்லை. சண்டியன்கள் பெரும்பாலும் நல்ல கட்டுமஸ்தாகவே இருந்தார்கள். அப்போது நான் ஒரு குட்டிப் பையன், ஆதலால் இவர்கள் என்ன சண்டித்தனம் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு எல்லோரையும் போலவே தான் அவர்களும் தெரிந்தார்கள், ஆனால் நல்ல கட்டான உடம்புடன். ஒரு நாள் இந்த தாதாக்களில் ஒருவர் ஒரு கிணற்றுக்குள் இறந்து மிதந்தார். யாரோ அவரைக் கொன்று போட்டு விட்டார்கள் என்றே எல்லோரும் இரகசியமாக பேசிக்கொண்டனர். ஊரிலும், சென்னையிலும், இராமாயணத்திலும் இந்த தாதாக்கள் பொதுமக்களுடன் அநேகமாக உரசவும் இல்லை, உறவாடவும் இல்லை. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்ந்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. எப்போதாவது இந்த வட்டத்தை மீறி வந்து, அப்பாவிகளுடன் உரசியவர்கள் பின்னர் அநியாயமாகவே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இங்கு பல வருடங்கள் வேலைக்கு இப்படியான நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் ஒரு இடத்தை தாண்டியே போய் வந்து கொண்டிருந்தேன். அந்த இடத்தை, அங்கு நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீர்கள். உதாரணம், டென்சில் வாஷிங்டனின் 'Training Day' படம். இந்த ஊர்களினூடு போகும் பெரும் தெருக்களால் காரை ஓடிக் கொண்டு போவதில் எந்த சிக்கலும் இல்லை. காரின் கண்ணாடிகள் மூடி இருக்கும், சில நிமிடங்களில் இந்த ஊர்களைக் கடந்து விடலாம். ஆயிரக் கணக்கில் கார்களும், வாகனங்களும் போய்க் கொண்டிருக்கும். ஒரு நாள் என்னுடைய கார் அந்த ஊர் ஒன்றில், பெருந்தெருவில் நின்றுவிட்டது. யூடியூப்பை பார்த்து நானே காரில் ஒரு திருத்த வேலை செய்திருந்தேன். எனக்கு இது நல்லாகவே வேணும். சுத்தியலால் ஒரு ஆணியைக் கூட ஒழுங்காக அடிக்கத் தெரியாத எனக்கு யூடியூப் ஒரு அசட்டுத் துணிவைக் கொடுத்திருந்தது. பின்னால் வந்த சிலர் உதவி செய்து, என்னையும் காரையும் பெருந்தெருவில் இருந்து அந்த ஊருக்குள் இறக்கி விட்டிருந்தனர். முதல் தடவையாக அந்த ஊரில் கால் அன்று தான் வைத்தேன். அங்கிருந்து காப்புறுதி நிறுவனத்தை கூப்பிட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒருவர் வந்தார். என்னை விட ஒன்றரை மடங்கு உயரமும், இரண்டு மடங்கு அகலமும் இருப்பார். அவர்களுக்கே உரிய கடும் குரலில் என்ன நடந்து விட்டது என்றார். அவர்கள் கடுமையாகக் கேட்பதில்லை, ஆனால் அவர்களின் சாதாரணமே எங்களுக்கு கடுமையாகத் தான் தெரியும். என்னிடமிருந்து கார்ச் சாவியை வாங்கினார். காருக்குள் போய், காரைத் திறந்து ஏதேதோ செய்தார். என்னுடைய யூடியூப் வேலை இயந்திரப் பகுதியில் நன்றாக உள்ளுக்குள் இருந்தது, இலேசில் எவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. பின்னர் எனக்கு அருகிலேயே அந்தப் பெரிய மனிதன் நின்று கொண்டிருந்தார். காப்புறுதி நிறுவனம் காரைத் தூக்கிக் கொண்டும், என்னை ஏற்றிக் கொண்டு போகவும் ஒருவரை அனுப்பினது. வந்த வாகனத்தில் ஏறி விட்டு அவரை திரும்பிப் பார்த்தேன், 'பார்த்துக் கொள்...' என்றார் அந்தப் பெரிய மனிதன். எங்களை இங்கே எவரும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் ஒரு பகிடியாகவே சொல்லிக் கொள்வோம். நாங்கள் அவர்களுக்கு எந்த விதத்திலும் ஒரு பொருட்படுத்தக் கூடிய 'எதிராளி' இல்லை என்று சொல்லியும் சிரிப்போம். கிட்டத்தட்ட அந்த தமிழ் படத்தில் வந்த 'சப்பை' என்ற பாத்திரம் போல நாங்கள். இங்கு பெண்களும் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதையும் நான் இங்கே சொல்லவேண்டும்.2 points
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அடப்பாவிகளா .......இன்றைக்கு அரை படுவதற்கு நானா கிடைத்தேன்.......! அவருக்கு முதன்முதல் காதல் போலிருக்கு.......அதுதான் காதலி கூப்பிட்டதும் முன்பின் யோசிக்காமல் வீட்டிக்கு போயிருக்கிறார்...... பார்க்கிற சந்திக்கலாம், பஸ்ராண்டில சந்திக்கலாம் ஆனால் வீட்டில போய் சந்திக்கலாமோ...... அனுபவம்தான் ஆசான்......அத்தான் அடுத்தடுத்து வரும் காதல்களில் விவரமாய் தேறி விடுவார்.......! நான் ஒரு காதலை சேர்த்து வைக்கப் போய் 3 வருடத்துக்கு மேல் பெண் வீட்டுப்பக்கமே போகவில்லை.....பின் மருதடி விநாயகர் தேரில் அன்றுதான் நண்பனையும் அந்தப்பெண்ணையும் கையில் குழந்தையுடன் சந்தித்தனான்......! 😂 இந்தக்கதையில சில காதல்களும் இருக்கு படித்துப்பார்க்கவும்.......!2 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரான்ஸ் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சி உலகிற்கு சொல்லும் செய்தி என்ன?2 points
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
காதலி இல்லாத ஆட்கள்.... எரிச்சலில் வாள் வெட்டு நடத்தியுள்ளார்கள் போலுள்ளது.2 points
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள். பிரக்சிற் வாக்கெடுப்பின்போது பிரக்சிற்றுக்கு ஆதரவாக தமிழர்களில் 99 வீதமானவர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள் என்பதே. ஐரோப்பா தமழ்மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். அந்த வகையில ஐரோப்பிய ஒன்றயத்தில் இருப்பது நல்லது என்று தமிழ்மக்களின் சார்பு நிலையில் இருந்து கூட அவர்கள் யோசிக்கவில்லை.அவர்களுக்கு யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது.தாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி எண்ணம்.உண்மையில் ஐரோபாவில் வந்தவர்களை அங்கே வாழ வசதியில்லாமல் வந்தவர்கள் என்ற குருட்டுக்கண்கொண்டு பார்க்கிறார்கள். உண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இஙகிலாந்தை விட நல்ல வசதியான வாழ்க்கை இருக்கிறது.நம்மவர்கள் வருவது ஆங்கில மூலக்கல்வி என்ற ஒன்றுக்காககத்தான் என்பதே.2 points
-
யாழ்.கொள்ளைக்காரி கைது
2 pointsஇவர்கள் புலத்தில் இருக்கும்போது செய்த தொழில் என்னவென்று ஆராய்ந்தால் புரியும், இலங்கையின் கூலிப்படைகளின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் செய்த சமூக சீர்கேடுகள். சிலது புலிகளை சாட்டி புலம்பெயர்ந்துதுகள், சிலது கூலிப்படையோடு சேர்ந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது எல்லாவற்றையும் கொள்ளையடித்து உரியவர்கள் தட்டிக்கேட்டபோது அதே கூலிப்படையின் அடக்குமுறையை பாவித்து அவர்களின் வாயை அடக்கி, பின் ஆமியால் பாதுகாப்பில்லை என்று படகில் போய் புகலிடம் பெற்றிருக்குதுகள். அந்த நாடும் பரிவிரக்கம் கொண்டு இவர்களை ஏற்று நல்வாழ்வளித்தால், அவர்களால் தம் தொழிலை விட முடிவதில்லை, அந்த நாட்டின் சுதந்திரத்தையும் வசதியையும் அனுபவித்துக்கொண்டு தமது பரவணிக்குணத்தை அரங்கேற்ற விடுமுறை என்கிற பெயரில் நாட்டுக்கு வருவதும், இங்குள்ள சமூக விரோதிகள், இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் காவல் துறை எனும் காவாலித்துறையை பயன்படுத்துவதும், தம்மை ஏதோ பெரிய பணக்காரர் போல பந்தாகாட்டுவதும், பின்னாளில் சரண் அடைந்த நாட்டில் தாம் அனுபவிக்கும் வசதிகளை இழப்பதோடு நம் இனத்தின் மீது அந்த நாட்டு மக்கள், அரசு காட்டும் இரக்கத்தையும் அக்கறையையும் நன்மதிப்பையும் எங்களுக்காக அவர்கள் எழுப்பும் நீதிக்கான குரலையும் இழக்கச்செய்யும். அதனால் கேடுகெட்ட கூட்டம் வெட்கப்படப்போவதுமில்லை, பாதிக்கப்படப்போவதுமில்லை. அதெல்லாம் உண்மையான உயிர், சொத்து, தொழில் உறவுகளைதொலைத்தவர்களையே சேரும்.2 points
-
புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
🤣.......... பாரதியார் சில வருடங்கள் காசியில் தங்கி இருந்தார், உறவினர் வீடொன்றில். அங்குதான் அவர் முதன் முதலாக குடுமியை அறுத்தெறிந்து விட்டு படு ஸ்டைலான தலை வெட்டிற்கும், மீசைக்கும் மாறினார். அதனால் அவரை அவர் வீட்டார்கள் பந்தியில் இருக்க அனுமதிக்கவில்லை. வெட்டிய குடுமியை கங்கைக்குள் தான் போட்டாரா என்று சரியாகத் தெரியவில்லை. இந்த கலாநிதி சிதம்பரமோகன் அவர்களை இன்று தான் கேள்விப்படுகின்றேன். தேடியதில், இவர் தலைமையில் சமீபத்தில் வட்டுக்கோட்டையில் பாரதியார் பிறந்ததின விழா கொண்டாடி, இவர் அங்கே ஒரு உரையும் ஆற்றியதாக இருக்கின்றது. இன்று காலையில் இருந்து எங்கே போனாலும் பாரதியாரே பாதையில் குறுக்காக நிற்கின்றார். இன்று வாசித்த வேறு ஒரு கட்டுரையில் இது இருந்தது: "பாரதி முதன் முதலில் தமிழை நவீனப்படுத்தினாலும் அவர் அதைப் புனிதப்படுத்தவில்லை. ஆனால் அந்த புரட்சிக்கவி பாரதியையே நம்முடைய ஹிப்போக்ரட் சமூகம் புனிதப்படுத்தி வைத்திருக்கிறது. அவர் பாடலை கர்நாடக சங்கீதத்தில் பாடுவது, அவரைப்போல தங்கள் குழந்தைகளுக்கு வேடம் அணிவிப்பது என இதெல்லாம்தான் புனிதப்படுத்தும் வேலை. அவர் கவிதைகளில் நான்கு வரியை மனப்பாடம் பண்ணி வைத்துக்கொள்வது உட்பட… பாரதி மது அருந்துவார், கஞ்சா புகைப்பார், சைட் அடிப்பார் என்றெல்லாம் சொன்னால் இந்தச் சமூகம் முகம் சுளிக்கும். அதைக் கேட்க விரும்பாது. அவரைப் பட்டினியில் போட்டு சாகடித்த சமூகம் எனச் சொன்னால், அது ஏதோ அண்டார்டிக்கா சமூகம் என நினைத்து உச்சு கொட்டும். கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பலவேடிக்கை மனிதரைப் போலே – என இந்தச் சமூகத்தின் மனிதர்களைத்தான் திட்டி இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல் மனப்பாடம் செய்து கொண்டாடும்."2 points
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointமுதல் நாள் பதக்க வரிசை: Country G S B Total CHN 2 0 0 2 GBR 0 1 1 2 USA 0 1 1 2 AUS 1 0 0 1 KOR 0 1 0 1 KAZ 0 0 1 11 point
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
அதற்காக நாம் போராடாமல் இருக்கவில்லையே?1 point
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
நாங்க உக்ரேனுக்கு எவ்வளவும் கொடுப்போம். ஆனால் ரசியாவுக்கு ஒருவரும் கொடுக்க் கூடாது.1 point
-
குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
1 pointகனக்க சொல்ல விரும்பவில்லை. உங்களைப் பற்றி நீங்களே சொல்லும் போது நான் என்ன பெரிதாக சொல்ல இருக்கு? கிளிநொச்சிக் கொள்ளைக்காரி விசயம் கேள்விப்பட்டதும் ஆரண்யகாண்டம் படம் நினைவுக்கு வந்துவிட்டது. இந்த ஆரண்யகாண்டத்தை கவிஞர் வேறு ஒன்றுக்கு கையாண்டிருப்பார். அந்தப் பாடல் வரிகள், ‘ஆரண்ய காண்டமதைத் தொடங்கு அயோத்தி பஞ்சணையில் உறங்கு சாகுந்தலம் படிக்க இறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு அம்மம்மா என்னம்மா…’1 point
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
1 point
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
வடிவாய் வென்று இருக்க வேண்டும் ஆனால் இலங்கை அணிக்கு இப்படி தோப்பது இது முதல் முறை இல்லை...................... இலங்கை கப்டன் அசலங்கா 20ஓவர் விளையாட்டுக்கு சரி பட்டு வர மாட்டார்...................தனது முதலாவது கப்டன் போட்டியில் 2பந்துக்கு 0 வெளி ஏறினார் இலங்கை அணிக்குள் எப்ப அரசியல் புகுந்திச்சோ அப்பவே அனுபவமான வீரர்கள் இப்ப இருக்கும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொடுக்கவே முன் வருவதில்லை................................1 point
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் நல்ல விடயம். வாழ்வா சாவா?? பார்த்திடலாம்...1 point
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பேரன்களை யாராவது மறப்பார்களா? மசாலைத்தோசை சுடும் கமலா கரீஸ்.1 point
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointவிளையாட்டுத் திடல் உங்களை அன்புடன் வரவேற்கிறது.... பதக்கப்பட்டியலை ஒவ்வொரு நாளும் தரவேற்றுங்கோ.1 point
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
இயக்கமல்லாதோரால் இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதல் பாடல் தமிழீழ விடுதலைப் போரிற்கு இயக்கமல்லாத குடிமையாளர்களால் (civilians) இசையுடன் பாடலாகப் பாடப்பட்ட முதற் பாடல்: "ஓ! மரணித்த வீரனே" இப்பாடலானது வியட்னாமியக் கவிதை ஒன்றின் தமிழ் வடிவமாகும். இதற்கு அமரர் யாழ். ரமணன் அவர்கள் தலைமையிலான குழுவினர் இசையமைக்க, அக்குழுவைச் சேர்ந்த எஸ். திவாகர் அவர்கள் பாடினார். இதனை மொழிபெயர்த்ததும் யாழ். ரமணன் அவர்களே ஆவார். இது கொண்டு முதன் முதலில் வெளியான இறுவட்டு உதயம் ஆகும். இவ்விறுவட்டிற்கு சேர்ப்பதற்காக இதன் மூல இசையான வேகமான இசையிலிருந்து அதன் வேகம் குறைக்கப்பட்டு மாவீரருகென்று மெள்ளமான இசை சேர்க்கப்பட்டு பாடப்பட்டு அதன் பின்னரே இறுவட்டில் சேர்க்கப்பட்டது. இதை தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செய்தனர், மூலப் பாடல் பாடியோர். அத்துடன் "மாவீரர் புகழ் பாடுவோம்" என்ற மாவீரர் பாடல் தொகுப்பு இறுவட்டில் இப்பாடல் வெளியாகி உள்ளதென்பது நானறிந்த தகவலாகும். பாடல் வரி: "ஓ மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா! உன் பாதணிகளை எனக்குத் தா! உன் ஆயுதங்களை எனக்குத் தா! "உன் இறுதிப் பார்வையை, பகையை வெல்லும் உன் துணிவை, எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை, "தப்பியோடும் உன்விருப்பை, தனித்து நிற்கும் தீர்மானத்தை, உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்.. "உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு... "உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா! எஞ்சிய வீடுகளின் பிழைத்தவர்கள் மத்தியிலே! "உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றி சொல்வதற்கு இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு "வார்த்தைகள் போதவில்லை, வரலாறு பாடுமுன்னே!" மூல இசை வடிவமும் நிகழ்படமும்: இந் நிகழ்படமானது 1984ம் ஆண்டு தமிழீழத்தில் படம்பிடிக்கப்பட்டு பதிவாக்கப்பட்டது. இதுவே தமிழீழ விடுதலைப் போரிற்கு இரண்டாவதாக இசையுடன் பாடப்பட்ட பாடலாக இருக்குமென்பது அறுதியிடப்படா மெய்யுண்மையான தகவலாகும். ஆதாரம்: இரு கண்களையும் இழந்த ஈழத்தின் எழுச்சி பாடகர் திவாகர் ஐயாவுடன் ஓர் சிறப்பு நேர்காணல் *****1 point
-
புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
புலிகளின் இசையுடன் கூடிய முதல் பாடல் புலிகளால் இசையும் சேர்த்து முதன் முதலில் முழுமையான பாடலாகப் பாடப்பட்ட பாடல்: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன், மாத்தையா (பின்னாளில் இந்தியாவுடன் சேர்ந்து தமிழருக்கு வஞ்சகம் செய்தான்), மற்றும் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோரை "பாசறைப்பாணர்" தேனிசை செல்லப்பா அவர்கள் சென்னையில் சந்தித்து நெருங்கிய நண்பரானார். அதன் பின்னர் 1981ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்த தவிபு மக்கள் முன்னணியின் அப்போதைய தலைவரான அஜித் மாத்தையாவின் அயராத முயற்சியில் திரு செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிநாடாவில் வெளியிடப்படலாயிற்று. இவ்வாறு இவரால் அப்போது வெளியிடப்பட்டவற்றில், இப்போது அறியப்படும் பாடல்களில், எஞ்சியிருப்பது 1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடல்தான் தமிழீழத்தின் இசையுடன் கூடிப் பாடப்பட்ட முதல் பாடலாக அறியப்படுகிறது. இது தலைவருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதனை எழுதியவர் "உணர்ச்சிக் கவிஞர்" காசி ஆனந்தன் ஆவார். இதற்கு முன்னர் - 1981,1982 ஆண்டுகளில் - ஏதேனும் வெளியிடப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆதாரம்: ஈழநாதம் 22.04.1990 பாடல் வரி: "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமைவிலங்கு தெறிக்கும் "பாரில் தமிழ்மண் வீரம் படைக்கும் பகைவன் ஓடும் சேதி கிடைக்கும் போரில் வெற்றி முரசு முழங்கும் புலிகள் கழுத்தில் மாலை துலங்கும் "கூண்டுபறவை சிறகு விரி்க்கும் குனிந்த முகங்கள் நிமிர்ந்து சிரிக்கும் மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும் "வானம் நமது கொடியை அழைக்கும் மாற்றார் முகத்தில் நாணம் முளைக்கும் மானம் நமக்கோர் மகுடம் வழங்கும் மண்ணில் நமது பெயரும் விளங்கும்" *****1 point
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 14] உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்று இன்று அழைக்கப்படுவது, இப்போதைய ஈராக் ஆகும். அங்கு தான் பண்டைய மெசொப்பொத்தேமியா நகரம் இருந்தது. அங்கு வாழ்ந்த பண்டைய சுமேர் மக்களை, அதாவது சுமேரியனை உள்ளடக்கிய அந்த முதல் நாகரிகத்தை, சிலவேளை திடீர் நாகரிகம் என வரலாற்று அறிஞர்கள் கூறுவர். மெசொப்பொத்தேமியாவில் உள்ள டைகரிஸ் மற்றும் யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் [Tigris and Euphrates rivers] இடைப் பட்ட பகுதியில், கிறிஸ்துக்கு முன், கிட்டத்தட்ட 4000 ஆண்டு அளவில் திடீர் என உண்டாகிய நாகரிகம் இது ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன், சுமேரியர்களே உலகின் முதல் எழுத்து வடிவத்தை உண்டாக்கியவர்கள் என, இதுவரை அறிவியல் ரீதியாக கிடைத்த சான்றுகளில் இருந்து நம்பப்படுகிறது. இந்த எழுத்துக்களின் வடிவம் ஆப்பு எழுத்து அல்லது கூனிபோம் எழுத்து [Cuneiform script] என்று அழைக்கப்படும். இவை முக் கோண வடிவம் கொண்டவை ஆகும். அவர்களே முற்காலத்திய நகர் சார்ந்த நாகரிகத்தை, தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைத்தவர்கள். இங்கு தான், கிறிஸ்துக்கு முன், 3500 க்கும் 3000 ஆண்டுகளுக்கு இடையில் விவசாய குடியிருப்பாளர்களான இவர்கள், இந்த நகர் சார்ந்த நாகரிக அமைப்பை நிறுவினார்கள். இதில் மிகவும் சிறந்து விளங்கியது 'ஊர்' என்ற நகரமாகும். ஆனால் குழப்ப மூட்டும் ஒரு கேள்விக்கு, அதாவது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதற்கு நாம் விடை தேட வேண்டி உள்ளது. அப்போது தான், இந்த திடீர் சுமேரியர்களைப் பற்றிய மர்மம் தீர்க்கப் படும். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி இருந்தது. ஆனால் அது அவர்களை சுற்றிய பகுதி எதன் உடனும் ஒத்து போக வில்லை. அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள் என நம்பப்படுகிறது .ஆனால் கடல் வழியாகவோ தரை வழியாகவோ எனத்தெரியாது? என்றாலும் சில உண்மைகள், அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டக் கூடியவையாக உள்ளன. உதாரணமாக சுமேரியன் கடவுள் அடிக்கடி குன்றில் நிற்பது போலவே, அவர்களின் இலக்கியத்தில் எடுத்துச் சொல்லப் படுகிறது. இதை தமிழ் கடவுள் முருகனுடன் ஒப்பிடலாம். மேலும் அவர்களுடைய முன்னைய கட்டிடங்கள் மரக் கட்டைகளை அடிப் படையாக கொண்டவை ஆகும். ஆகவே, மரங்கள் செறிந்து இருக்கும் ஓர் இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். தொல் பொருளியலின் படி, அவர்கள் [சுமேரியர்கள்], தங்களை கறுத்த தலையினர் என அழைத்ததுடன், அவர்கள் நாடோடியினர் எனவும் எங்கு இருந்து வந்தார்கள் என சரியாக இன்னும் அடையாளம் காணப்படாதவர்கள் எனவும் அறியப்படுகிறது. அவர்கள் மெசொப்பொத்தேமியாவில் இருந்த இரண்டு ஆறுகளுக்கு, அதாவது யூபிரிடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகளுக்கு [the Tigris and the Euphrates] இடையிலும் அருகிலும் குடியேறி, சகல கூறுகளையும் கொண்ட, சிறப்புடைய நாகரிகத்தை மேம்படுத்தினார்கள். அவர்கள் வேளாண்மையை ஒரு ஒழுங்கு முறை படுத்தி, நீர்ப் பாசனத்தை விருத்தி செய்து, முதலாவது சக்கரத்தையும் குயவர் பயன் படுத்தும் சக்கரத்தையும் செய்து ஒரு தொழில் நுட்ப முன்னேற்றம் அடைந்தார்கள். அது மட்டும் அல்ல, ஒரு வித குடியாட்சி நிலை நாட்டி, கிறிஸ்துக்கு முன் 4000 ஆண்டளவில், நகரங்கள் அமைத்தார்கள். பேராசிரியர் சாமுவேல் நோவா கிராமர் [professor Samuel Noah Kramer (September 28, 1897 – November 26, 1990)] அவர்களது வாழ் நாள் உழைப்பால், சுமேரியர்கள் நல்லதோர் கவிதைகளும் இலக்கியங்களும் எழுதியது தெரிய வந்தது. எப்படியாயினும் அவர்களும் அவர்களை வென்று அங்கு வாழ்ந்தவர்களும் அதாவது பாபிலோன், அசிரிய மக்கள் போன்றோர்களும் [Babylon and Assyria] அந்த நாகரிகத்தை, நகரத்தை கைவிட்டு தீடீரென மறைந்து போனார்கள். அவை, அந்த சிறப்பு மிக்க முதல் நாகரிகம், 2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டது. சுமேரியன் முதலில், படம் எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான். அங்கு ஒவ்வொரு உருவ வடிவமும் ஒரு முழு சொல்லை குறித்தது. உதாரணமாக, 'டு' [du] என்ற சொல், பாதத்தின் [foot] படம் மூலம் குறிக்கப்பட்டது. ஆனால் பாதத்தின் படம் மேலும் நில், போ, வா, கொண்டு வா, போன்ற வற்றையும் குறிக்கலாம். ஒருவினைச் சொல்லை தெரிவிக்க, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சின்னம் அல்லது குறியீடு ஒன்றாக போடப்பட்டன. உதாரணமாக, ஒரு தலை கிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால், அது 'தின்' அல்லது 'சாப்பிடு' [eat] என்பதை குறிக்கும். சுமேரு எழுத்து மிகவும் சிக்கலானது. அதனால் ஒரு சில எழுத்தாளர்கள் தான், அதில் தேர்ச்சியடைந்தார்கள். கிட்டத்தட்ட 250 பேர் அளவில் இருக்கலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவர்களை சுமேரிய அறிஞர்கள் [sumerologist] என அழைப்பர். சுமேரியன் தனது நிலத்தை அல்லது நாட்டை "கி .என் .கிர்" [KI.EN.GIR, the "Land of the Lords of Brightness"] என அழைத்தார்கள். இதன் பொருள் 'ஒளி மயமான கடவுளின் நாடு' ஆகும். சுமேரிய மொழியில் சமயத்தை குறிக்கும் சொல் கிடையாது. ஏனென்றால், அங்கு ஆலயத்தின் வழிபாடு குடும்ப வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இயற்கை வழிபாடே அங்கு காணப்படுகிறது. என்றாலும் நாளடைவில் மனித உருவம் இந்த இயற்கை சக்தியுடன் இணைந்து விட்டது. பண்டைய சுமேரியன் தனது பல நேரங்களை கடவுளுக்கு அற்பனித்தார்கள். இது, இந்த அற்பனிப்பு, வழிபாட்டாலும் தியாகம் அல்லது பலியாலும் கையாளப்பட்டது. ஆலயம் பல வேறு பட்ட நோக்கத்திற்காகவும் பாவிக்கப் பட்டது. என்றாலும், அங்கு முக்கிய செயல்பாடு, வழிபாடும் கல்வியும் ஆகும். ஒவ்வொரு ஆலயமும் கல்வி நிலையம் வைத்திருந்தன. அங்கு மாணவர்கள் கணிதமும் எழுத்தும் படித்தார்கள். சுமேரியரின் ஆசிரியர் 'உம்மை' [ummia] என்று அழைக்கப்பட்டார். ஒரு துணை அல்லது ஒருதார மணம் அங்கு நிலவியது. என்றாலும், காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி, அவர்களின் சமூகத்தில், பொறுத்துக் கொள்ளப் பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப் பட்டது [Monogamy was the normal practice, although concubines were tolerated]. பொதுவாக, குடுப்பத்தின் மூத்தவர் மண வாழ்க்கையை ஏற்பாடு செய்தனர். மேலும் சுமேரியரின் வீடுகள் பொதுவாக ஓர் அடுக்கு வீடு. இது சுட்ட அல்லது சூரிய ஒளியில் காய்ந்த களிமண் செங்கல்லால் கட்டப் பட்டது. இது நவீன வீட்டிற்கு உரிய எல்லா வசதியையும் கொண்டுள்ளது. மேலும் செல்வந்தர்கள் ஈரடுக்கு வீடு கட்டி வாழ்ந்தார்கள். இசை அவர்களின் வாழ்க்கையுடன் ஒட்டியிருந்தது. அது மட்டும் அல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கும் கவிதைகளும் பாடல்களும் தாராளமாக காணப்பட்டன. மேலும் ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட போது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். ஆயினும் பல வருடங்களுக்கு பின்பு தான் பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான, சாமுவேல் நோவா கிராமர் [samuel noah kramer], இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இக் காதல் கணவனுக்காக, முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு [sumerian king Shu-sin [Cu-Suen]] உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை, அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே, உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும். இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ["Man of my heart, my beloved man, your allure is a sweet thing, as sweet as honey......."] இதனை என்னால் இயன்ற வரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன். கட்டாயம், உங்களுக்கு இது, சங்க கால காதல் பாடல்களை ஒரு வேளை, நினைவூட்டலாம்? "அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே ! உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே! உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது" "நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே எனது சுய விருப்பத்தில், நான் உன்னிடம் வருவேன் ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னைக் உன்னுடன் கொண்டு போ" "நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன் காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை உன்னுடன் தூக்கிப் போ" "மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே!" "இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட விடு வீரனே! நீ என்னை கவர்கிறாய், எனவே என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன் என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்" "உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது எனக்குத் தெரியும் மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது எனக்குத் தெரியும் இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு" "வீரனே! நீ என்னை விரும்புவதால், நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால் எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!! "என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும் எனது "ஷு-சின்" அரசனே! உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின், தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின், அளவு சாடியின் மூடி போல, அங்கே உன் கையை எனக்காக மூடு [வை] மரச் சீவல் சாடியின் மூடி போல அங்கே உன் கையை எனக்காக விரி [பரப்பு]" [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] குறிப்பு: ஷு சின்: கி.மு 2037 - 2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர். என்லில்: மழை மற்றும் காற்று கடவுள் [Shu - sin or Cu - Suen: was king of Sumer and Akkad, and was the penultimate king of the Ur III dynasty. "Lord (of the) Storm" / Ellil is one of the most important gods of Mesopotamia.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 15 தொடரும் படம்-[01]: நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமேரியர்கள் வாய்க்கால் முறையை பாவித்தார்கள் படம்-[02]: மெசெப்பொத்தோமியா கல்வி படம்-[03 & 04]: பண்டைய மெசெப்பொத்தோமியா படம்-[05]: ஊர் நகரத்தின் மாதிரி.ஊரில் உள்ள அரச சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைவினை கலைப்பொருள் இதுவாகும் படம்-[06]: காதலர்கள் [கோவலன் கண்ணகி]1 point
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இந்த விசயத்திலை @suvy பெரிய அனுபவசாலி. கன காதலை பார்த்தவர். 😂 அவரின் அபிப்பிராயத்தையும் கேளுங்கோ ஏராளன். 🤣1 point
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ஏராளன். வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல் விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂1 point
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
நன்றிகள் பல. கத்தப்பு அண்ணை அருமையான இணைப்பு சில விடயங்கள் ஏற்கனவே வாசித்து உள்ளேன் ... இது மிகவும் பூரணமான. தகவல்கள் அடக்கியது 🙏🌹1 point
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைகோவின் மதிமுக தோன்றிய வரலாறு 2011 இல் யாழில் வந்தது.1 point
-
பழைய சோறு சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு நல்லதா? - அறிவியல் விளக்கம்
கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 26 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் தமிழர் உணவு மரபில் ‘பழைய சோற்றுக்கு’ எப்போதும் தனித்த இடம் உண்டு. சர்வதேச அளவில் பழைய சோறு விளைவிக்கும் நன்மைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதை அண்மைக் காலமாகக் காண முடிகிறது. பழைய சோறு உள்ளிட்ட நொதித்த உணவுகள் நம் உடலுக்கு வழங்கும் நன்மைகள் என்ன? அவை எப்படி நம் உடலுக்குள் செயலாற்றுகின்றன? நொதித்த உணவுகள் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்டுகளின் முறிவு மூலம் நொதித்த உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நொதித்தல் செயல்முறையானது பயன்படுத்தப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் போன்ற பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பழைய சோற்றில் சுற்றுச்சூழலில் இருந்தே பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய உணவுகளின் நன்மைகள் குறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் குடல் இரப்பை இயல் நிபுணர் ஜஸ்வந்த் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். சர்க்கரை, செயற்கை இனிப்பு, செல்போன் கதிர்வீச்சு ஆகிய மூன்றும் புற்றுநோயை உண்டாக்குமா?20 ஜூலை 2024 குடல் நலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு மிக முக்கியமானவை. நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு மிக முக்கியமானவை. நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றை செல் உயிரினங்கள் அடங்கியுள்ளன. நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளை இவை செய்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடலுக்கு நல்ல பாக்டீரியாக்களை வழங்கும் வேலையை பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள் வழங்குவதாக கூறுகிறார் மருத்துவர் ஜஸ்வந்த். “குடல் ஆரோக்கியமாக இல்லையென்றால், கசிவு குடல் நோய்க்குறி (leaky gut), ஐபிஎஸ் எனப்படும் குடல் அழற்சி நோய், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். இதில், கசிவு குடல் நோய்க்குறி இருந்தால், குடல் பாதுகாப்பற்றதாக மாறிவிடும், விஷத்தன்மையுள்ள பொருட்கள் அனைத்தும் குடலில் சுற்றிக்கொண்டே இருக்கும். அவை எல்லா இடங்களுக்கும் பரவுவதால், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம், ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். கல்லீரலில் கொழுப்பு (fatty liver) தேங்கும். இவையெல்லாம் ஏற்படாமல் இருக்க புரோபயோடிக் பாக்டீரியாக்கள் உதவுகின்றன” என்கிறார் ஜஸ்வந்த். பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை13 ஜூலை 2024 படக்குறிப்பு,நொதிக்க வைத்த மாவில் செய்யப்படும் இட்லி போன்ற உணவுகளும் குடல் நலத்திற்கு நலன் பயக்கும் உணவாகும். குடலை சமநிலையாக வைத்திருக்கும் வேலையை இந்த பாக்டீரியாக்கள்தான் உறுதிப்படுத்துகின்றன. பெருங்குடல் ஆரோக்கியத்தையும் இந்த பாக்டீரியாக்கள்தான் பாதுகாக்கின்றன. “பழைய சோறு போன்ற நொதிக்க வைத்த உணவுகள், புரோ பயோட்டிக் பாக்டீரியாக்களை வழங்குகின்றன. பழைய சோறு ப்ரீபயோட்டிக்காகவும் செயல்படுகிறது. இந்த புரோபயோட்டிக் மற்றும் ப்ரீபயோட்டிக் இரண்டும் உடலுக்குள் வேதிவினை புரிந்து, போஸ்ட்-பயோடிக்குகளையும் வழங்குகின்றன. அதில் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு எதிராக செயல்படும் ஏஜென்ட்டுகள் உள்ளன. இதுபோன்று சுமார் 2,000 ஏஜென்ட்டுகள் இதில் உள்ளன” என்கிறார் அவர். நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை ஊறவைக்கும் போதும் இத்தகைய பலன் கிடைத்தாலும் அவை அதிகமாக பழைய சோற்றிலிருந்து கிடைப்பதாக அவர் தெரிவித்தார். “கலப்பட உணவுகள், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, குடலில் ஏற்கெனவே உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்” என அவர் கூறுகிறார். சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்3 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,“குடல் நலமாக இருக்கும்போது பெரிதளவில் எவ்வித நோயும் பாதிக்காது” நோயெதிர்ப்பு சக்தி குடல் ஆரோக்கியமாக இருந்தால் பலவித நோய்கள் தடுக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நொதித்த உணவுகள் வழங்கும் நுண்ணுயிரிகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஜஸ்வந்த் கூறுகிறார். “குடல் நலமாக இருக்கும்போது பெரிதளவில் எவ்வித நோயும் பாதிக்காது” என அழுத்தமாக கூறுகிறார் அவர். மன அழுத்தம், பதற்றத்தை குறைக்குமா? இது கொஞ்சம் சுவாரஸ்யமானது. மருத்துவ உலகில் குடல் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகிறது. ஏனெனில், குடலுக்கு மூளைக்கான அணுகல் உள்ளது. “அதனால், இந்த பாக்டீரியாக்கள் நம்முடைய முதல் மூளையில் உள்ள செல்களுக்கு வலுகொடுக்கும். எனவே, மன அழுத்தம், பதற்றத்தை இத்தகைய உணவுகள் தணிக்கும். அதனால், இந்த பாக்டீரியாக்களை நம் உடலின் ஒரு உறுப்பாக பாவிக்க வேண்டியுள்ளது” என்கிறார் ஜஸ்வந்த். பழைய சோறு சாப்பிட்டால் உடல்பருமன் ஏற்படும், நீரிழிவு நோயாளர்கள் அதை சாப்பிட கூடாது என கூறப்படுவது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்தார். “உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படும்போது, உடல்பருமன் ஏற்படாது. நொதித்த உணவுகளை சாப்பிடும்போது ஊட்டச்சத்துகள் நன்றாக கிரகிக்கப்படுகின்றன. அதனால் இந்த கூற்று தவறானது” என்கிறார் ஜஸ்வந்த். கம்பு, மாப்பிள்ளை சம்பா, கவுனி ஆகிய பாரம்பரிய அரிசி வகைகளில் பழைய சோற்றை நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் ஆபத்தல்ல என கூறுகிறார், சென்னையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். இதுதவிர, பெருங்குடலில் அல்சரை கட்டுப்படுத்த இத்தகைய நொதிக்க வைத்த உணவுகள் பயனளிப்பதாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c0352y18j02o1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
1 point- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
ஆனால் சமூக நலன் என்று பார்க்கும் போது இவ்வாறான மூட நம்பிக்கைகளை களைவதுதான் சிறப்பு, பெருந்தொற்று காலத்தில் சில நல்லடக்கங்கள் மத கோட்பாட்டிற்கெதிரானது என ஒரு தரப்பு மக்களை உசுப்பி விடுவது போல செயற்படுவது சரியாக இருக்காது, அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இறுக்கமான சட்ட ஒழுங்கு நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.1 point- விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
யேர்மன் Esprit என்ற பாஷன் நிறுவனம் ஒன்று சுவிச்லண்டிலும் ஐரோப்பாவிலும் உள்ளது. நட்டப்பட்டு இறுதியில் முறிந்துவிட்டதாக (bankrupt) அங்கே வேலைபர்த்த ஒருவர் மூலம் அறிந்தேன்.அந்த பெயர் பிரபலமானதால் அதை பயன்படுத்தி இலாபம் அடையலாம் என்பதற்காக வேறு ஒரு பலம் கொண்ட நிறுவனம் அதை வாங்கி நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டதாம் ஆனால் அப்பபடி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் வாங்கிய நிறுவனம் இலாபம் அடைவதோடு அங்கே வேலை செய்பவர்களும் வேலையை இழந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இங்கே நீங்கள் இருவரும் சொன்தே சரி. தடை நீக்கப்பட்டால் புலிகள்கட்சியை வழி நடத்த பொறுப்பானவர்கள் இல்லை. புலிகளின் பெயரை பாவித்து தமிழர்களிடம் பணம் கொள்ளை அடிப்பது தான் நடைபெறும்1 point- புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!
மிக விரைவில் வடக்கில் பெளத்தம் தனது கால்களை ஆள ஊன்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பயிற்சியாக இருக்குமோ,....?1 point- மலிபன் பிஸ்கட்
1 pointநீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும் படுத்தது இல்லை......பார்க்கலாம்......!1 point- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உக்ரேன் யுத்தத்தை ஆரம்பித்ததில் அதுவும் ஒரு காரணம்.1 point- வினா விடை
1 point- மலிபன் பிஸ்கட்
1 pointஎனக்கு ஏறத்தாள 15 வருடங்களாக 6-6.1-6.2 இப்படியே போகிறது. குளிசை போடுவது நல்லது என்று டாக்ரர் சொல்லுவார்.ஏற்கனவே 1997 இல் இருந்து பல குளிசைகள் போடுறபடியால் இன்னொரு குளிசை தேவையா என்று யோசிக்கிறேன். ஆனாலும் 6.4 க்கு மேலே போனால் குளிசை எடுக்கத் தான் வேண்டும். 97இல் இருந்து 3 மாதத்துக்கொரு தடவை முழு ரத்த சோதனை செய்கிறேன். எங்களுக்கும் கூட்டல் கழித்தல் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.1 point- மலிபன் பிஸ்கட்
1 pointஅந்த மெஷின் இருக்கு அது வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பது சராசரி 120 ல் இருந்து 160 க்குள் இருக்கும்.......எனக்கு 90 க்கு கீழே போனால் உடம்பில் களைப்பு தெரியும் அப்போது ஒரு யூஸ் ஏதாவது குடிப்பது வழக்கம்........ஆயினும் கடடாயமாக மூன்று மாதத்துக்கு ஒருதடவை வைத்தியரின் பரிந்துரையுடன் laboratoir றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை உண்டு...... அது 7 / 8க்குள் இருக்கும்......! 😁1 point- இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
இது இலங்கை தமிழரசு கட்சியின் செயற்குழு முடிவா... அல்லது தான் தோன்றித்தனமாக அறிக்கை விடும் சுமந்திரனின் முடிவா என்பதை அறிய ஆவலாக உள்ளது. எப்படியோ தமிழரசுக் கட்சிக்கு, கடைசி ஆணி அடித்து... புதைகுழியில் மூட ஒரு ஆள் கிடைத்துள்ளது. அது விரைவில் நடக்கும் போலுள்ளது. 😂1 point- இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
இந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழரசுக் கட்சி இருக்குமாயின் அதுவே தமிழர் தரப்புக்கு அக்கட்சி வரலாற்றில் செய்த ஒரேயொரு நன்மையாக இருக்கும்.1 point- வினா விடை
1 point- தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம்
கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம் படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தின் பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் கூறுகிறார். வைரத்துக்கு பேர் போன பன்னா நகரத்தில், விலைமதிப்பற்ற வைரக் கல்லை கண்டெடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் குத்தகைக்கு எடுக்கிறார்கள். மலிவு விலைக்கு வைர சுரங்கங்களை குத்தகைக்கு விடும் அரசாங்கம் மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), பன்னாவில் இயந்திரங்களின் மூலம் வைரச் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வைரங்களை தேடும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கூட்டுறவு குழுக்களுக்கு ஆழமற்ற சுரங்கங்களை இது குத்தகைக்கு விடுகின்றது. அவர்கள் தங்களிடம் இருக்கும் அடிப்படை கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் வைரத்தை தேடி வருகின்றனர். சுரகங்களில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு வைரக்கல்லும் அரசாங்க வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், பின்னர் அரசாங்கம் அந்த கல்லை மதிப்பிடுகிறது. "இந்த சுரங்கங்கள் 200-250 ரூபாய்க்கு [குறிப்பிட்ட காலத்திற்கு] கூட குத்தகைக்கு விடப்படும்" என்று மாநில அரசின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, பன்னாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது. அரிதாகதான் நிகழும். படக்குறிப்பு,கண்டெடுக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 8 மில்லியன் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஏழைத் தொழிலாளியின் கைகளில் மின்னிய வைரக்கல் பலர் சிறிய வைர கற்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ராஜு கவுண்ட் தோண்டி எடுத்திருப்பது பெரிய வைரக்கல். எனவே இது மிகப்பெரிய நிகழ்வு என்று சிங் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னாவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள சுரங்கத்தை தனது தந்தை குத்தகைக்கு எடுத்ததாக கவுண்ட் பிபிசியிடம் கூறினார். மழைக்காலத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் கிடைக்காத போது அவரது குடும்பம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார். "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், வேறு எந்த வருமானமும் இல்லை, எனவே நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து வருகிறோம் " என்று அவர் கூறினார். இதற்கு முன்பு மக்களுக்கு வைரம் கிடைத்த கதைகளைக் கேட்ட அவர், தனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதாக கூறுகிறார். புதன்கிழமை காலை, விலைமதிப்பற்ற வைர கல்லை தேடும் தனது அன்றாட பணியைச் செய்ய அவர் சுரங்கப் பகுதிக்குச் சென்றார். ''உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்க போகிறேன்'' படக்குறிப்பு,கவுண்ட் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்கள் "இது கடினமான வேலை. நாங்கள் ஒரு குழி தோண்டி, மண் மற்றும் பாறை துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு சல்லடையில் இட்டு, கழுவுவோம். பின்னர் வைரங்களைத் தேட ஆயிரக்கணக்கான காய்ந்த, சிறிய கற்களை கவனமாக சல்லடை செய்வோம்" என்று அவர் விவரித்தார். அன்று மதியம், அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இத்தனை நாள் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஈடாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. "நான் தோண்டி எடுத்த கற்களை சல்லடை செய்து பார்த்தேன், கண்ணாடித் துண்டை போன்று மின்னும் ஒரு கல்லை கவனித்தேன். அதை என் கண்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தேன், ஒரு மெல்லிய பளபளப்பைக் கண்டேன், என் கைகளில் இருப்பது ஒரு வைரம் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் விளக்கினார். கவுண்ட் பின்னர் தன் கடின உழைப்பால் கண்டுபிடித்து எடுத்த வைர கல்லை அரசாங்க வைர அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அது எடைப் போடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்கப்படும் என்றும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்ட பிறகு கவுண்ட் தனது பங்கைப் பெறுவார் என்றும் சிங் கூறினார். கவுண்ட் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்றும் நம்புகிறார். அதற்கு முன்பு, அவர் தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க விரும்புகிறார். தனக்கு வைரம் கிடைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றெல்லாம் நான் பயப்படவில்லை, காரணம் என்னுடன் வசிக்கும் 19 உறவினர்களிடையே இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் கவுண்ட். இப்போதைக்கு, தனக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து திருப்தியாக இருக்கிறார். "நாளை, நான் வைரத்தை தேட மீண்டும் சுரங்கத்திற்கு செல்கிறேன்," என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cv2gzzjg8gro1 point- விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைகோ ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் வாதாடவில்லையா?1 point- விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
ஆமாம் சிறப்பு வாய்ந்த ரொம்பவும் சரியான பதிவுகள் வை.கோ. இல்லாமல் தமிழ் ஈழ போராட்ட வரலாற்றை எழுத முடியாது 👍🙏1 point- விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
எனக்கும் பிடிக்கும் அந்த காலத்தில் இவரது பேச்சுக்களை தேடி விரும்பி வாசிப்பேன். எங்களை இலங்கை தமிழர்களை ஆதரித்த. காரணத்தால் தான் இவருக்கு இந்த நிலமை. அல்லது பல நல்ல அமைச்சர் பதவிகளை வகித்து சிறப்பாக வாழ்ந்து இருக்கலாம்1 point- விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வைக்கோவின் அரசியல் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் வந்த செய்தியில் இவர்கள் கட்சியிலிருந்து வேறுவேறு கட்சிகளுக்கு இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களே தாவிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். புலிகளின் தடையை காங்கிரசால்த் தான் ஏதாவது செய்யலாம் என்று சொல்கிறார்கள்.1 point- ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள்.1 point- அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன்
இவ்வாறான மருத்துவர்களிடம் நானும் தம்பியும் சேவைகள் பெற்றுள்ளோம்.1 point - ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.