Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்20Points87990Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3054Posts -
யாயினி
கருத்துக்கள உறவுகள்9Points10209Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்6Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 08/05/24 in all areas
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
உங்கள் கருத்தோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை..காரணம் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கிறது...மிருகங்கள் சில தங்களின் சூழ் நிலைக்கு ஏற்ப தங்கள் இரை தேடலை மாற்றிக் கொள்கின்றன.அந்த வகையில் தான் ஈன்ற கருவை தானே உண்டு பசியாறும் தன்மை எல்லா வகையான விலங்குகளுக்கும் இல்லை.எங்காவது அறப்படிச்சதுகள் ஏதாவது ஏழுதினால் அதை எல்லாம் உண்மை என்று 2024ல் எடுத்துக் கொண்டு வாழ தொடங்கினால் மனித சமுதாயத்தில் முக்கால் வாசிப் பேர் சுய புத்தியற்றவர்களாகத் தான் வாழ வேண்டி இருக்கும்..எங்காவதிருந்து காவிக் கொண்டு வந்து இணைக்கும் போது ஒன்றுக்கு பல முறை அதன் உண்மை தன்மையை அறிந்து பகிருங்கள். அடுத்து அம்மம்மா ,அப்பம்மா காலத்தவர்கள் நிறைய சமய சம்பிரதாயங்கள் என்று பின் பற்றிக் கொண்டு வந்தவர்களாவர்..அந்த வகையில் ஓர் பெண் மகப் பேறு முடிந்ததும் பின் பற்றக் கூடிய விடையங்களை சில வரைமுறைகளை சொல்லிக் கொடுப்பது இயல்பாக இருந்திருக்கலாம்.அதையும் நான் முற்று முழுதாக நம்ப மாட்டேன்..ஆனால் பிறந்த பிள்ளையை அடித்து துன்புறுத்தும் அழவுக்கு எல்லாம் முன்னைய கால பெற்றோர் இருந்ததில்லை.அப்படி பார்க்கப் போனால் உடல் வலுவிளந்து வாழும் எத்தனையோ பேர் இப்போது இந்தப் பூமியில் வாழ்ந்தே இருக்க இயலாது. எது எப்படி இருப்பினும் மேற் கொண்டு வருபவர்களும் தங்கள் மனதில் தோன்றுவதை எழுதட்டும்..மேலே செய்தியில் இணைக்கபட்ட பெண்ணின் நிலை சில வேகைளில் ஏற்கனவே ஏதாவது மனதளவில் தாக்கமுடையவராக இருந்திருக்கலாம்..முக்கியமாக கணவர் வெளியிடத்தில் தங்கி வேலை செய்பவராக இருக்கும் பட்பத்தில் பெண்ணுக்கு உதவிகளற்ற ஓர் நிலையில் மனது பாதிக்கப்பட்டு இருக்கலாம்..அல்லது பிள்ளை பிறந்த பின் சில , பல காரணிகளால் ஏற்பட கூடிய மன தாக்கமாக கூட இருக்கலாம்..ஆகவே ஏழுந்தமானக ஒரு சமுதாயத்தின் மேல் குறை கண்டு அம்மம்மா மற்றும் அப்பம்மா காலத்தை எல்லாம் தேர் மாதிரி இழுக்க இயலாது.5 points
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsதனித்து நின்று களமாடும் சிங்கம் கப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்.,💪2 points -
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsஇல்லையே,. ரணில் யாழ்ப்பாணத்தில். வடக்கு இளைஞர்களுக்கு அபிவிருத்தி தான் தேவையானது என்று எந்தவொரு தீர்வு பற்றியும் பேசவில்லை காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது ....காணி அதிகாரம் தந்துவிட்டு எப்படி எங்கே வடக்கில். ஆயிரம் விகரைகள். கட்ட முடியும்?? பொலிஸ் அதிகாரம் தந்தார்கள் என்றால் 25% சிங்களவர்களை குற்றவாளிகள் என்று கைது செய்து சிறையில் அடைப்பீர்கள் .. ரணில் என்ன பால் குடியா. ?? முன்யோசனைகள். உள்ள மனிதன் சுருக்கமாக சொன்னால் உங்களை போன்றவரில்லை சுமத்திரன். பச்சை பொய்யான். மற்ற முடியாது நீதிமன்றத்தில் பொய் பேசிப் பேசி பழகி விட்டது தமிழ் மக்கள் சுமத்திரனுக்கு ஒரு வாக்கும் போடக்கூடாது அரசியலை. விட்டு துரத்த வேண்டும் அப்போ தமிழர்கள் தப்பித்துக்கொள்ளலாம்.2 points -
வங்கதேசத்தில் வன்முறை - 25 பேர் பலி
2 pointsஇவ்வளவு அமளி துமளி நடக்கு.. உள்ளூர் நாட்டமை..! ஏதாவது அமைதி காக்கும் படைய அனுப்ப வேண்டாமா..?2 points
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsதற்செயலாக, ரணில் தேர்தலில் வென்றால்.... கிடைக்க இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்காக, செம்மறி ஆடு, பெரிய திட்டம் போடுகின்றது. 😃 சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து... காலத்தை வீணடித்த மாதிரி, செம்மறி ஆடும் ஆயத்தப் படுத்துகின்றது. 😂 "சோழியன் குடும்பி சு(ம்)மா ஆடாது." 🤣2 points -
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு இரணுவ முகாமில் இறங்கியுள்ளார். இவரின் சகோதரி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்திற்கு சென்று இனி சகோதரியுடன் தங்குவதே இவரின் தற்போதைய முடிவு என்று சொல்லப்படுகின்றது. இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த நாடாவது கொஞ்சமாவது உருப்படுவது போலத் தெரிந்தால், அடுத்த கணமே அந்த நாடு அதல பாதாளத்திற்கு தள்ளப்படும். அதற்கேற்ப அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் முன் யோசனையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்து, பிராந்திய வல்லரசின் வேலையை இலகுவாக்கிக் கொடுப்பார்கள்.2 points
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsநான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை. சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார். இப்போ… யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣2 points -
குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
2 pointsஒரு நாள் பின் வளவுக்குள் போட்டிருந்த பனம் பாத்தியை சுற்றி நின்று கொண்டனர். இது என்ன, இதை தோண்டிப் பார்க்கப் போகின்றோம் என்று அவர்கள் ஒரே ஆரவாரம். அப்ப தான் பனங்கிழங்கே பிடிக்க ஆரம்பித்திருக்கும். இது பனம் பாத்தி, இதற்குள்ள பனங்கொட்டைகளை தாட்டிருக்கின்றோம், அவை முளைத்து கிழங்காக வரும், இன்னும் இரண்டு மாதங்கள் போக வேணும்............ இதையெல்லாம் அவர்களுக்கு இங்கிலீசில் சொல் என்று என் வீட்டார் எனக்குச் சொன்னார்கள். இதை இப்ப இங்கிலீசில் சொல்லச் சொன்னாலே அது ஒரு நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எனக்கு நம்பிகையில்லை.............. 🤣.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொதிகளில் ஆணுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இது உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னேற்பாடே. ஆண்களுக்கு மட்டுமன்றி எல்லாப் பெண்களுக்கும் வழங்கப்படும்.2 points- யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
Postpartum depression is not a character flaw or a weakness. Sometimes it's simply a complication of giving birth. If you have postpartum depression, prompt treatment can help you manage your symptoms and help you bond with your baby. https://www.mayoclinic.org/diseases-conditions/postpartum-depression/symptoms-causes/syc-20376617 What Is Postpartum Depression? Postpartum depression (PPD) is a complex mix of physical, emotional, and behavioral changes that happen in some women after giving birth. According to the DSM-5, a manual used to diagnose mental disorders, PPD is a form of major depression that begins within 4 weeks after delivery. The diagnosis of postpartum depression is based not only on the length of time between delivery and onset but on the severity of the depression. Postpartum depression is linked to chemical, social, and psychological changes that happen when having a baby. The term describes a range of physical and emotional changes that many new mothers experience. PPD can be treated with medication and counseling. The chemical changes involve a rapid drop in hormones after delivery. The actual link between this drop and depression is still not clear. But what is known is that the levels of estrogen and progesterone, the female reproductive hormones, increase tenfold during pregnancy. Then, they drop sharply after delivery. By 3 days after a woman gives birth, the levels of these hormones drop back to what they were before pregnancy. In addition to these chemical changes, the social and psychological changes of having a baby create an increased risk of depression. Most new mothers experience the "baby blues" after delivery. About 1 out of every 10 of these women will develop a more severe and longer-lasting depression after delivery. About 1 in 1,000 women develop a more serious condition called postpartum psychosis. Dads aren’t immune. Research shows that about 1 in 10 new fathers get depression during the year their child is born. https://www.webmd.com/depression/postpartum-depression2 points- ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானால் முறைப்பாடளிக்க முடியும்; பொலிஸ்!
எந்த பெண் கூப்பிடுவாள் என ஏங்கி தவிக்கும் ஆண்கள் அதிகமாக வாழும் உலகம் இது ...இதில எவன் துஸ்பிரயோகம் பற்றி பொலிஸில் புகார் கொடுப்பான்😅2 points- குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
2 pointsஅண்மையில் இந்திய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஒருவர் தனது கதையை கூறினார் ..அவருக்கு இப்ப வயது 60 க்கு மேல்... இந்திய இராணுவம் இவரை சுற்றிவளைப்பின் பொழுது கைது செய்து கோவிலுக்கு அழைத்து சென்று விட்டனர் .அணிந்திருந்த அரைகாற்சட்டையுடன் . தமிழ் தெரிந்த ,தமிழ்படங்கள் படங்கள் பார்க்கின்ற மேலதிகாரி போல் இருக்க வேணும் இவரை கண்டவுடன் டேய் இவனை பார்த்தால் கமலஹாசன் போல இருக்கிறது இவனை வீட்டை கொண்டு போய் விடுங்கோடா என கூறி அனுப்பியுள்ளார் இவர் போக பயத்தில் மறுப்பு தெரிவித்து அங்கயே நின்றாராம் .(போக சொல்லி பின்னால் சுட்டு விடுவார்கள் என்ற பயத்தில்) பின்பு அதிகாரி தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் இறக்கி விட்டாராம்... கருப்பர்களுக்கு மத்தியில் ஒருவன் சிவலையாகவும் அழகாகவும் இருந்தவுடன் அவன் போராளி அல்ல என இந்திய இராணுவ அதிகாரி முடிவெடுத்துள்ளார்... இந்தியன்2 படத்தில் வரும் கமல் போலத்தான் அவர் இப்ப இருக்கின்றார்2 points- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsபுலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂2 points- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
2 pointsஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். அதற்கு... சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣2 points- வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
2 pointsஅர்ச்சனா வைத்தியர் தானாகவே தான் அந்த இறந்த பிள்ளையின் குடும்பத்தோடு போண் எடுத்து கதைச்சு எல்லா விபரங்களுக்கும் கேட்டு அறிந்த பின் தான் வருகிறேன் என்று சொல்லி உள்ளதாக அவரது லிங்கிலயே பார்த்திருக்கிறேன்.மக்கள் சும்மா எங்க நியமனம் கிடைக்குதோ அங்கே வாங்களன் என்று சொல்வது வழமை தானே.அது மட்டுமல்ல வேறு யாரும் போய் அந்த குடும்பத்திற்கு உபத்திரவம் குடுக்காதீங்கோ,அப்படி யாரும் வந்தால் அயலவர்கள் யாராவது பார்த்து திருப்பி அனுப்பி விடுங்கோ என்று அர்ச்சனா சொல்லி இருந்தார்..இன்னும் சாவகச்சேரி பிரச்சனையே முற்றுப் பெறாதவரயில் சும்மா இருந்திருக்கலம், இருக்கலாம் ஏன் ஓடு பட்டு திரிந்து தானே பிரச்சனைகளை விலைக்கு வாங்கிறார்.அவரை குறை சொல்வதோ அல்லது குறை கண்டு கொள்வதோ என் நோக்கம் அல்ல..ஆனால் நிறைய பிழை விடுகிறார்.எங்க போனாலும் யூருப் வால் பிடியள் .2 points- வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
2 pointsமன்னார் வைத்தியசாலைக்கு நேரில் சென்று நீதி, நியாயம் கேட்கும் துணிவு ஒருவருக்காவது உள்ளது. இதை பாராட்டத்தானே வேண்டும்?2 points- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
1 pointநீங்கள் எல்லோரும் முட்டாள்தனமாக எந்த நடைமுறை சார் சாத்தியமான அணுகுமுறையும் இன்றி வாய்போன போக்கில் தூற்றுகிறீர்கள். ஆதலால் நீங்கள் எல்லோரும் தமிழ்த் தேசியவாதிகள். நான் தூற்றவில்லை. ஆதலினால் துரோகி, அடிவருடி. யதார்த்தவாதி வெகுசன விரோதி என்று காரணம்இல்லாமலா சொன்னார்கள்? 😏1 point- இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
யார் கண்டது கூகிள் மொழிமாற்றம் ai வைத்து செய்ய போகிறார்களாம் 😃முதன் முதல் ரகள ராவுக்கும் சும்மா வுக்கும் அகேன்னத்துக்கும் ai காலில் தலையை ஆட்டி அலற போகுது 😂 அதன் பின் ட்ரம் தமிழில் கதைக்க வெளிக்கிட்டால் சிங்களவன் 😂வெண்டுடுவான். சும்மாவே கொண்டு வா என்ற கட்டளையை கொன்றுவா என்று கேட்டு தொலைத்து மதுரையை ஏற்கனவே எரித்து தொலைத்து விட்டோம் . இது வேறையா ?1 point- இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
🤣.... சாஸ்திரியார் குசால் குமாரும் இதையே தான் சொல்லியிருக்கின்றார்............... யாழ் களத்தில் ஏற்கனவே இந்தச் செய்தி வந்துவிட்டது................. ட்ரம்பும் இங்கே களத்தில் இருக்கின்றாரோ.......😜.1 point- இஸ்ரேல் vs இரான்: மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் மூளுமா? அமெரிக்கா என்ன சொல்கிறது?
🤣.......... உலகம் ஈரானை சும்மா உசுப்பி விட்டுக் கொண்டிருக்கின்றது. அவர்களே தாங்கள் வைத்திருக்கின்ற பழைய சாமான்களில் பழுதாகப் போய் விட்ட பாகங்களை புதிதாக எங்கே வாங்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்....... இதில சண்டைக்குப் போ, சண்டைக்கு போ என்றால் அவர்கள் எங்கே போவது........1 point- தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
ஒரு கூடை முழுக்க முட்டாள்களை போட்டால் என்ன நடக்கும்? எது நடக்குமோ அதுவே இங்கு நடக்கின்றது.1 point- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
அமெரிக்கா அப்பிடி ஒரு நாளும் செய்யாது. நீதி நேர்மையாகத்தான் நடக்கும்.பலஸ்தீனா,உக்ரேனில் பார்க்கவில்லையா? 😂 அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீதி நேர்மை நியாயம். அமெரிக்காவால் தான் ஈழத்தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும். 😎1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம். அதுவல்ல நான் கூற வந்த விடயம். உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை இயற்கை அல்லது செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே.. ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… அதுல, ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂 உங்களுக்கு Life Time settlement Confirm. Meera Ramesh1 point- மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
கடன் குடுத்த நன்றிக்கடனுக்காகவாவது சிரிலங்கா அதிபர் மனிசியை கூப்பிட்டு தன்னோட வைச்சிருக்க வேணும்.1 point- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
எதைத் தான் எழுதுவது இந்த கொலைகாரக் கூட்டத்தைப் பற்றி? இப்படியாக பல கேஸ்கள் இருபது ஆண்டுகள் முன்பு கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். லேடி ரிட்ஜ்வேயில் கைக்குழந்தைக்கு கை அகற்ற வேண்டிய நிலை வந்த அசமந்த நிலை, ஒரு புற்று நோய் நிபுணரான மருத்துவருக்கே எச்.ஐ.வி தொற்றிய இரத்தத்தை ஏற்றிய கதை, நோயுற்ற சூலகத்தை விட்டு விட்டு நல்ல சூலகத்தை அகற்றிய கதை என்று சம்பவங்கள் பல, ஆனால் எதற்கும் நடவடிக்கையென்று எதுவும் எடுக்கப் பட்டதாக நான் அறியவில்லை. ஒரு பட்டத்தை எடுத்து, தங்களுக்கு மேல் மேற்பார்வை செய்யவோ அறிக்கையிடவோ யாரும் இல்லையென்று வந்து விட்டால் எந்த நிபுணரும் இந்த அசமந்த மருத்துவ சேவையாளர்கள் போலத் தான் நடந்து கொள்வர்- complacency?. இலங்கையில் Sri Lanka Medical Council என்ற மருத்துவர்களைப் பதிவு செய்து பணி செய்ய அனுமதிக்கும் அமைப்பும் இருக்கிறது. இவ்வளவு அக்கப் போர் நடக்கிறது, இந்த அமைப்பு இதைப் பற்றி ஒரு மூச்சும் விட்டதாகவோ, தற்காலிகமாவேனும் சம்பந்தப் பட்ட மருத்துவர்களின் அனுமதியை மீளப் பெற்றதாகவோ தெரியவில்லை. இந்த தாயின் மரணத்தினாலாவது ஏதாவது நன்மை நடக்கட்டும்!1 point- குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
1 point🤣.......... 87ம் ஆண்டில் காலி பூஸா முகாமுக்கு போகாமல் சில பேர் தப்பினதிற்கும் ஹாட்லியில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் காரணம்.......... ஆனால், பாடசாலை அதிபர் (பாலசிங்கம் மாஸ்டர்) அங்கு வர முன்னரே கப்பலில் ஏற்றப்பட்டவர்களை இராணுவம் திரும்ப இறக்கி விடவில்லை, காலியில் போய் தான் கப்பல் நின்றது...............1 point- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக, 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/ விசுகண்ணையின் பகிர்வு. நன்றியோடு இத்திரியிலும் அங்கே என்ன நடந்தது?? அந்த இளம் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியும் கொடுமையும் அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை வாசித்துப் பாருங்கள். மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார். திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார். வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார். அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம். தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர். ‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார். காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார். நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள். காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம். அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார். அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம். ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? என பத்திரகாளியாக மாறியது மட்டும்தான் செய்யக் கூடியதாக இருந்ததாம். தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம். இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம். 1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா? 2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்) 3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்? 4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா? 5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா? மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா? இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா? இவை பொதுமக்களிற்குத் தெரியாதா? நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன? சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ ? copied post https://www.facebook.com/share/b8EK2FpTq7HrEq8S/1 point- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
1 pointஇன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 19 28 27 74 2 China 21 17 14 52 3 France 12 14 18 44 4 Great Britain 10 12 16 38 5 Australia 12 11 8 31 6 Republic of Korea 11 8 7 26 7 Japan 10 5 11 26 8 Italy 8 10 6 24 9 Canada 5 4 8 17 10 Netherlands 6 5 4 15 11 Germany 6 5 2 13 12 Brazil 2 4 5 11 13 Hungary 3 3 2 8 14 Spain 1 2 5 8 15 Romania 3 3 1 7 16 New Zealand 2 4 1 7 17 Sweden 2 3 2 7 18 Ukraine 2 2 3 7 19 Ireland 3 0 3 6 20 Israel 1 4 1 6 21 Switzerland 1 1 4 6 22 Belgium 2 0 3 5 23 Greece 0 1 4 5 24 Croatia 2 1 1 4 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Chinese Taipei 1 0 3 4 30 Poland 0 1 3 4 31 Uzbekistan 1 0 2 3 32 Jamaica 0 2 1 3 32 Mexico 0 2 1 3 32 DPR Korea 0 2 1 3 35 India 0 0 3 3 35 Tajikistan 0 0 3 3 37 Azerbaijan 2 0 0 2 37 Philippines 2 0 0 2 37 Serbia 2 0 0 2 40 Czech Republic 1 0 1 2 40 Guatemala 1 0 1 2 42 Kosovo 0 1 1 2 42 Turkey 0 1 1 2 44 Dominican Republic 0 0 2 2 44 Malaysia 0 0 2 2 44 Moldova 0 0 2 2 47 Algeria 1 0 0 1 47 Argentina 1 0 0 1 47 Chile 1 0 0 1 47 Dominica 1 0 0 1 47 Ecuador 1 0 0 1 47 Norway 1 0 0 1 47 Slovenia 1 0 0 1 47 Saint Lucia 1 0 0 1 47 Uganda 1 0 0 1 56 Armenia 0 1 0 1 56 Colombia 0 1 0 1 56 Denmark 0 1 0 1 56 Ethiopia 0 1 0 1 56 Fiji 0 1 0 1 56 Mongolia 0 1 0 1 56 Tunisia 0 1 0 1 63 Austria 0 0 1 1 63 Cape Verde 0 0 1 1 63 Cuba 0 0 1 1 63 Egypt 0 0 1 1 63 Grenada 0 0 1 1 63 Indonesia 0 0 1 1 63 Lithuania 0 0 1 1 63 Portugal 0 0 1 1 63 Slovakia 0 0 1 11 point- ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே - அனந்தி சசிதரன்
Published By: VISHNU 05 AUG, 2024 | 05:55 PM நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன். அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன். ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன். https://www.virakesari.lk/article/1903621 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசிறீசபாரட்ணத்தின் உத்தரவில் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் சுட்டுக் கொன்ற தாஸ் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் கலந்துகொள்வதற்காக பிரபாகாரன் வெளியே வந்திருந்தார். புரட்டாதி 18 ஆம் திகதியுடன் மூன்று மாத கால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரவிருப்பதனால், அதற்கு முன்னர் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் சந்திப்பொன்றினை நடத்த இந்தியா முயன்று வந்தது. தலைவர் பிரபாகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலக்குமார் பிரபாகரனைப் பார்த்து "உங்களின் பொடியன்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் கொன்றதாக மக்கள் பேசுகிறார்கள்" என்று கூறினார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அதே மக்கள்தான் சிறியின் பொடியன்களே அவர்களைச் சுட்டதாகவும் கூறுகிறார்களே?" என்று பாலக்குமாரைப் பார்த்துக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சிறீசபாரட்ணம் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, "இல்லையில்லை, எனது பொடியன்கள் இதனைச் செய்யவில்லை" என்று மறுதலித்தார். ஆனால், இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்றது சிறீ சபாரட்ணத்தின் டெலோ உறுப்பினர்கள் தான். சிறீசபாரட்ணத்தின் நேரடி அறிவுருத்தலின்படியே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கான உத்தரவு சிறீசபாரட்ணத்தால் பின்வருமாறு வழங்கப்பட்டிருந்தது, "இரண்டு கூட்டணிக்காரர்களுக்கு மண்டையில் போடுங்கள்". டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த தாஸிற்கே சிறீசபாரட்ணத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தாஸ் இரு குழுக்களை இக்கொலைகளைச் செய்ய அனுப்பி வைத்திருந்தார். தர்மலிங்கத்தின் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த புளொட் அமைப்பின் சென்றியில் இருந்த உறுப்பினர்கள் அன்று வீட்டிற்கு வந்த காரினை அடையாளம் கண்டிருந்தனர். புளொட் சார்பாக திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்டவரான தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் தனது தகப்பனாரின் படுகொலையில் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதை முற்றாகத் தவிர்த்திருந்தார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அமைப்புக்களில் ஒன்றே எனது தகப்பனாரைப் படுகொலை செய்தது" என்று மட்டும் கூறினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணி தனது அமைப்பிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அவ்வறிக்கையில் டெலோ அமைப்பும் கைய்யொப்பம் இட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் எதற்காக சிறீசபாரட்ணம் கொல்வதற்கு முடிவெடுத்தார் என்பது இன்றுவரை தெரியாத புதிராகவே இருக்கிறது. சில காரணங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தன. ஒரு தரப்பின் செய்தியின்படி ஏதோ ஒரு உளவுத்துறையின் ஏவலின்படியே சிறீசபாரட்ணம் இக்கொலைகளைச் செய்தார் என்று கூறப்பட்டது. இன்னொரு தரப்போ, புலிகளும் டெலோ அமைப்பும் கலந்துகொள்ளாத நிலையில், ஈழத்தேசிய விடுதலை முன்னணி ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும், கூட்டணி பேச்சுக்களில் கலந்துகொள்ளச் சம்மதித்தமைக்காகவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம், புலிகள் மீது தமிழ் மக்களிடையே ஏற்பட்டு வந்த நன்மதிப்பினையும், அவர்களுக்கான ஆதரவினையும் களங்கப்படுத்தவே இப்படுகொலைகளைப் புரிந்துவிட்டு அவற்றினை புலிகள் மீது சுமத்த சிறீ எத்தனித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்கொலைகளுக்கான காரணங்கள் எவ்வாறானவையாக இருந்தபோதும், இக்கொலைகளை தனது ஆதாயத்திற்காக இலங்கையரசு பாவித்துக்கொண்டது. தில்லி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான ஒற்றைக் காரணமாக ஆளாளசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகளைப் பாவித்த ஜெயார், தமிழர் மீதான யுத்தத்தில் புதிய உத்தியொன்றைனை அறிமுகப்படுத்தினார். புரட்டாதி 2 ஆம் திகதி மாலை பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை காவிச் சென்ற இராணுவ வாகனம் மீது போராளிகள் தாக்குதல் நடத்த எத்தனித்த போது, அண்மையில் வாங்கப்பட்ட புதிய உலங்குவானூர்திகளைக் கொண்டு போராளிகள் மீது இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிகவும் தாழ்வாகப் பறந்துவந்த உலங்கு வானூர்திகள் அப்பகுதியெங்கும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்ட மேலும் பலர் காயமடைந்தனர். பருத்தித்துறையில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டமை அதுவரை நடந்துவந்த போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. போராளிகளுடனான சண்டைகளில் நிலப்பரப்பு மீதான ஆதிக்கத்தைச் சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியிருந்த இராணுவத்தினருக்கு வானில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கிடைத்தமையானது, போராளிகள் மீது தமது ஆதிக்கம் மீள நிலைநாட்டப்பட்டுவிட்டது என்கிற மனோநிலையினை ஏற்படுத்தியது. 1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அரச படைகள் போராளிகளின் நிலைகள் என்று தாம் கணிப்பிட்ட பகுதிகள் மீது தொடர்ச்சியாக வாந்தாக்குதல்களை நடத்துவதை வாடிக்கையாக்கிக் கொண்டன. ஆனால், நிலப்பரப்பு மீதான போராளிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. புரட்டாதி 2 ஆம் திகதி ஏறாவூர் பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய நன்கு ஆயுதம் தரித்த போராளிகள் ஏழு பொலீஸாரைக் கொன்றதோடு இன்னும் 12 பேரைக் காயப்படுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது போராளிகளால் கிர்ணேட்டுக்கள், ஆர்,பி.ஜி உந்துகணைகள், மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாக அரசு கூறியது.1 point- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
தமிழ் சிறி அண்ணா இது யாரோ கிலப்பி விட்ட புரளி போல் தெரியுது....................சீடிவி கமரா உள்ள இந்த தொழிநுட்ப காலத்தில் கொட்டல்களில் இப்படியான விளையாட்டுக்கள் காட்ட முடியுமா அந்த அந்த நாட்டை சேர்ந்த விளையாட்டு கொச் மார் இப்படியான சம்பவங்களை கண்டும் காணாது போல் இருப்பார்களா.......................................1 point- தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி?
தமிழ் சினிமாக்களில் ஏன் இந்த கொலைவெறி? -தயாளன் என்னதான் ஆயிற்று தமிழ் சினிமாவிற்கு? ரத்தம் தெறிக்கும் கொலைகள், மனதை பதற வைக்கும் கொடூர வன்முறைகள் இல்லையென்றால் படமே பார்க்கமாட்டோம் என தமிழ் சினிமா ரசிகர்கள் சபதம் செய்துவிட்டார்களா? நல்ல சினிமாவை நோக்கிய நகர்வில் தமிழ் சினிமா எப்படி திசைமாறியது என ஒரு அலசல்; தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் ஒரு காட்சி. கொலைகளை செய்து விட்டு வரும் தனுஷை அவரது தங்கை நீர் ஊற்றி குளிப்பாட்டுவார். தண்ணீர் முழுவதும் இரத்தமாக ஓடும். இது போல பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு நானும் நன்கு ஆற அமர குளித்தேன். நீர் சிவப்பாக மாறவில்லை எனினும், உடல் முழுக்க இரத்த வாடையும், வெட்டுப்பட்ட சதைகளின் குவியலுமாகவே மனம் முழுக்க நிரம்பி இருந்தது. மனம் முழுக்க இரத்த சகதி தெறித்தது போன்ற உணர்வு. இந்தப் படத்தின் இயக்குனரும் நடிகருமான தனுஷிடம் “ஒய் திஸ் கொலை வெறி?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளைக் கூட ரசனையாக அணுகிக் கொண்டிருந்த தமிழ் சினிமா வன்முறை, ஆபாசம், இரத்த ஆறு ஓடும் கொலைகார சினிமாவாக மாறி நிற்பது ஏன்? சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான சூப்பர் ஸ்டார் படங்கள் அனைத்துமே வன்முறை, குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறல், போதைப் பழக்கத்தை இயல்பாக்கும் காட்சிகள் என்பதாகவே உள்ளன. விக்ரம், மாஸ்டர், ஜெயிலர், லியோ, மஹாராஜா என்று தொடர்ந்து தற்போது ராயன் அதன் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெரும் வெற்றி இயக்குனர்களாக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், நித்திலன் ஆகியோரது வரிசையில் மிகச் சிறப்பான நடிகரான தனுஷும் இந்த வெறியாட்ட ஜோதியில் கலந்திருக்கிறார். நல்ல சினிமாவை நோக்கிய பாய்ச்சலில் தமிழ் சினிமா இடறி அதல பாதாளத்தில் விழுந்தது எப்படி? சற்று தமிழ் சினிமாவின் வரலாற்று இயங்கியலை திரும்பிப் பார்த்தால் ஓரளவுக்கு நமக்கு பிடிபடக்கூடும். ஆரம்ப கால சினிமாவில், எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையான வில்லன் பாத்திரங்களில் நடிக்க அற்புதமான நடிகர்கள் இருந்தனர். எம். என். நம்பியார், அசோகன், டி எஸ். பாலையா, எம். ஆர். ராதா, ஆர். எஸ். மனோகர், செந்தாமரை ஆகியோரின் வில்லன் பாத்திர வடிவமைப்புகள் ரத்தம் தெறிக்கும் வன்முறையை அடிப்படையாக கொண்டு அமையவில்லை. பெரும்பாலான படங்களில் வில்லன் மனம் திருந்திவிடக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களை மன்னித்து ஏற்கக் கூடிய நாயகர்களின் பாத்திரங்கள் இருந்தன. வில்லன்கள் “அபூர்வமாகவே” கொல்லப்பட்டனர். திரையில் இரத்தம் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இல்லை. எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நம்பியார் மோசமான வில்லத் தனத்தை செய்தாலும் இறுதிக் காட்சியில் மனந்திருந்தி மன்னிப்பு கோருபவராகவே இருந்தார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் வில்லனாக வந்த பாலாஜி மற்றும் நம்பியார் ஆகியோர் தங்கள் தவறுகளுக்காக மனந்திருந்தி வருந்துபவர்களாகவே இருந்தனர். அப்படத்தில் சிவாஜியின் பாத்திரம் ஹீரோ எனினும், தன் காதலியை உடனுக்குடன் சந்தேகிக்கும் அவரது கறுப்பு பக்கத்தையும் இயக்குனர் காட்டத் தவறவில்லை. எம்.ஆர்.ராதா, டி. எஸ். பாலையா, பி.எஸ்.வீரப்பா, அசோகன், மனோகர் போன்றவர்களின் வில்லத்தனத்தில் குரூரத்தை விட, மெல்லிய குசும்புத்தனமும் இருந்தது. நாடகங்களிலிருந்து சினிமாக்களுக்கு வந்தவர்கள் என்பதால், இவர்களின் வில்லத்தனத்தில் நாடகத்தனம் அதிகம் இருந்தது. ஶ்ரீதர், பாலசந்தர் ஆகியோரின் வருகைக்கு பிறகு படங்களின் வில்லன்கள் புதிய பரிமாணம் எடுக்கத் தொடங்கினர். காதலிக்க நேரமில்லை படத்தில் டி எஸ் பாலையாவின் நகைச்சுவை வில்லன் பாத்திரம் இன்றளவும் ஒரு சாதனையே. திரைக்கதை, எதிர்பார்த்ததையும் கோரியதையும் கச்சிதமாக செய்தனர் அந்தக் கால வில்லன்கள். 1970களுக்கு பிறகான புதிய அலை இயக்குனர்களின் வரவால், ஹீரோ – வில்லன் என்ற இயங்கியல் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியது. யதார்த்தவாத வில்லன்களின் அகவுலகை இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, தேவராஜ் மோகன், பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களின் படங்களில் ஹீரோ வில்லன்களின் பரிமாணம் புதிய கட்டத்தை அடைந்தது. வில்லன் ரஜினிகாந்த் ஹீரோவானார், ஹீரோ ஜெய்சங்கர் வில்லன் ஆனார். ஹீரோவின் பண்புகளும் வில்லனின் பண்புகளும் புதிய வடிவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் ஏற்று நடித்த பாத்திரம் ஆழமான உளவியல் சிக்கல் கொண்ட வில்லனை நமக்கு அறிமுகம் செய்தது. அந்த வில்லன் பாத்திரத்தின் வன்மத்தை காட்சிப் படிமங்களால் நமக்கு கடத்தினார் இயக்குனர் மகேந்திரன். 1980களின் பிற்பகுதியில் உருவான நாயக பிம்ப கதைகள் வில்லனுக்கு வேறொரு பரிமாணத்தை தந்தன. நாயகன், தளபதி, தேவர்மகன், அமரன் போன்ற படங்களில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் தமிழ் சினிமாவில் முதல் முதலாக இரத்தம் தெறிக்கும் கொடுர அனுபவத்தை தரத் தொடங்கின. நாயகனில் போலீஸ் அதிகாரியை நாயகன் அடித்தே கொலை செய்யும் காட்சி, தளபதி படத்தில் கையை வெட்டி கொலை செய்யும் காட்சி, தேவர் மகனின் இறுதிக்காட்சியில் நாசர் தலை துண்டித்து கொல்லப்படும் காட்சி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. 1990களில் தொடங்கிய இந்தப் போக்கு மெதுவாக வளர்ச்சியடைந்து, 2000 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெளிவந்த பருத்தி வீரன், சுப்பிரமணியபுரம் படங்களில் முக்கியமான திருப்பத்தை அடைந்தது. பருத்தி வீரன் மிகச் சிறந்த கல்ட் கிளாசிக் என்றாலும், அதன் கிளைமாக்ஸில் காட்சிப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறைக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் பேரதிர்ச்சி மதிப்பீடுகளை கொண்டிருந்தன. வன்முறை எப்படி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதின் தார்மீக அடிப்படையைக் கூட இப்படம் நிராகரித்திருந்தது. சுப்பிரமணியபுரம் படத்திலும் வில்லன் கழுத்தறுத்து கொல்லப்படும் காட்சியில் ரசிகர்கள் பதறுவதற்கு பதில் “கொல், கொல்,” என்று ஆவேசமாக கத்துவதை பார்க்க முடிந்தது. துரோகத்தை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் எல்லை மீறி இருந்தது. கலைக்கப்பட்ட தலைமுடி, லுங்கி, மதுரை வட்டார வழக்கு, நட்புக்காக கொலை கூட செய்வார்கள் என்ற கிளிஷே என இது போல பல படங்கள் வர ஆரம்பித்தன. 2010களுக்கு பிறகு, குறும்படங்கள் எடுத்து இயக்குனர்கள் ஆனவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தனர். இது தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பீட்சா, பத்மினியும் பண்ணையாரும், சூது கவ்வும் போன்ற படங்கள் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கினர். ஆனால், தமிழ் சினிமாவில் நிகழ்ந்ததோ தலை கீழான சம்பவங்கள். குறும்பட இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் படங்களை இயக்குவதிலும் பெரும் சம்பளம் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பி வழிந்தது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கதை தயார் செய்யும் நோக்கத்தில் தங்களது படைப்புத் திறனை வன்முறைக் காட்சிகளை விதம்விதமாக படமாக்குவதில் இவர்களுக்கு வெறியே வந்து விட்டது. மாஸ்டர் படத்தில் அதுவரை ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி கொடூர வில்லனாக நடித்தார். ஈவிரக்கம் இல்லாமல் இரத்த வெறி கொண்ட வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் பின்பு மிகப் பெரும் நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் போதை, இரத்த வெறி கொண்ட வன்முறைக் காட்சிகள், தலை துண்டிக்கப்பட்டு சாகடிக்கப்படும் பெண் கதாபாத்திரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படும் மனிதர்கள் என்று பெரும்பாலான காட்சிகள் வன்முறை வெறியாட்டத்தையும் போதை கலாச்சாரத்தையும் முன்வைத்தன. அது போலவே லியோ படத்திலும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்ய முயலும் தேவையற்ற பாத்திரங்கள், நூற்றுக்கணக்கானோரை வெட்டிச் சாய்க்கும் ஹீரோ, பெற்ற மகளை நரபலி கொடுக்க தயாராகும் வில்லன் என்ற எல்லா கேடுகெட்ட தனங்களையும் லியோ படம் தனக்குள் வைத்திருந்தது. அசுரன், வட சென்னை படங்களை இயக்கிய வெற்றி மாறனும் இந்த வன்முறை காட்சிப்படுத்தலில் சளைத்தவர் இல்லை. விடுதலை படத்தில் இடம்பெற்ற பெண்களை சித்திரவதை செய்யும் காட்சியிலும், ஒரு பெண் தலை முண்டமாக விழும் காட்சியிலும் வன்முறையை ஒரு ரசனையாக வளர்த்தெடுப்பதில் நிபுணத்துவம் கொண்டவர்களாக மாறி வருகிறார் வெற்றி மாறன். சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் நல்ல மன நிலையோடு இருப்பவர்களை நிலை தடுமாறச் செய்யக் கூடியவை. விஜய் சேதுபதி நடித்த மஹாராஜா படமும், குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் வில்லன் பாத்திரங்களை அடிப்படையாக கொண்டிருந்தது. வில்லன் என்பவன் கொல்லப்பட்டே ஆக வேண்டும். அந்த கொலையை ரசிகர்கள் விரும்பும் அளவு வில்லன்களின் குற்ற செயல் கொடூரமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தே திரைக்கதை எழுதப்படுகிறதா என்ற ஐயம் நமக்கு எழாமல் இல்லை. தற்போது வெளியாகி உள்ள ராயன் திரைப்படத்தின் கதையே வன்முறை மட்டும் தான். முதல் காட்சியில் துவங்கும் கொலை வெறி இறுதிக் காட்சி வரை வெட்டப்பட்ட தலைகளாகவும், அறுக்கப்பட்ட சதைத் துண்டுகளாகவும், ஆறுகளாக ஓடும் இரத்த ஓட்டங்களாகவும் படம் முழுக்க வன்முறை, வன்முறை. மிகச் சிறந்த நடிகரான தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. பார்வையாளர்களை துணுக்குறச் செய்யும் ட்விஸ்ட்களை உருவாக்குவதற்காக அப்பட்டமான கொலைவெறி தாண்டவம் ஆடியிருக்கிறார் தனுஷ். ஏன்? எதற்கு என்று தெரியாமல் எதிர்ப்படும் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்கிறார். தங்கையை பாலியல் வன்முறை செய்த வில்லனை கொலை செய்வதன் மூலம் வன்முறைக் காட்சிக்கான நியாயத்தை பார்வையாளர்களிடம் உருவாக்குகிறார். நமக்கு படம் பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழுகிறது. இவையெல்லாம் எந்த ஊரில் நடக்கிறது. அங்கு காவல்துறை என்ற ஒன்று இருக்காதா? நீதிமன்றங்கள் இருக்காதா? ஊடகங்கள் இருக்காதா? நாமெல்லாம் ஏதேனும் வேற்று கிரகத்தில் வாழ்கிறோமா என்ற ஐயம் எழுகிறது. குறிப்பாக, இந்த படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களின் தன்மை தான் சிக்கலான அம்சமாக மாறுகிறது. கதையோட்டத்தில் நாயகன் அல்லது நாயகியுடன் ஏற்படும் முரண் காரணமாக வில்லன் பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த வன்முறைப் படங்களில் வில்லன் எடுத்த எடுப்பிலேயே சமூக விரோத கும்பல் தலைவனாகவோ அல்லது போதைப் பொருள் அல்லது கடத்தல் கும்பல் தலைவனாகவோ இருக்கிறான். வில்லன் பாத்திரத்தின் மீது இன்னும் தீவிரமான வெறுப்பை உருவாக்குவதற்காக சிறுமிகளையோ, குழந்தைகளையோ பாலியல் வன்முறை செய்பவனாக உருவாக்கம் செய்யப்படுகின்றன. ஏனென்றால், இந்த வில்லன் திருந்துபவன் அல்ல; இவனையெல்லாம் திருத்த முடியாது, கொல்வதைத் தவிர, ஹீரோவுக்கு வேறு வழியே இல்லை என்ற தீர்மானத்தை பார்வையாளரின் மனதில் உருவாக்கவே இந்த வகையான வினோத வில்லன்கள் உருவாகிறார்கள். ஜெயிலரின் வில்லன் பாத்திரத்தில் நடித்த விநாயகன் என்கிற அற்புதமான நடிகரை கோமாளி வில்லனாக சித்தரித்திருந்தார் நெல்சன். விக்ரமில் விஜய் சேதுபதி போதை பயன்படுத்தியவுடன் அவருக்கு அசுர பலம் வருவது போல் காட்சிப்படுத்தி இருந்தார் லோகேஷ். இவர்கள் நாயகன் வாழ்வில் குறுக்கிடும் போது அவரால் கொல்லப்படுகிறார்கள். மற்றபடி இந்த வகை வில்லன்கள் சமுக விரோதிகள் இவர்கள் எதிர் நாயகர்கள் அல்ல. பார்வையாளர்களின் ஆர்கசத்தை தூண்டி வன்முறையால் கொல்லப்பட்டு, அதுவும் குரூரமான முறையில் நாயகனால் கொல்லப்படுவதற்காக உருவாக்கப்படும் பிம்பங்கள். வன்முறை கதைக்களம் எடுக்கவே கூடாது என்பதல்ல, அதை எப்படி காட்சியாக முன் வைக்கிறோம் என்பதில்தான் இயக்குனர்களின் கலை ஆளுமையும், பொறுப்பும், கடமையும் அடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற Zone of interest சினிமாவும் வன்முறை குறித்த சினிமா தான். ஆனால், அப்படம் கலை நேர்த்தியுடனும் பொறுப்புணர்வோடும் எடுக்கப்பட்டு உள்ளது என்பதை புரிந்து கொண்டால் தமிழ் சினிமா முன் வைக்கும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு அறுவெறுப்பானவை என்பது புரியும். சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள். வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள். ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள். இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு யு சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி. கன்னடத்திலும் மலையாளத்திலும் வரும் நல்ல சினிமாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாட துவங்கியிருக்கிறார்கள். எனவே, ரசிகர்கள் வன்முறையை விரும்புகிறார்கள் என்ற சாக்கு போக்குகள் இனி செல்லாது. இந்த போக்கு தமிழ் சினிமாவை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி. தமிழ் சினிமா இயக்குனர்களே “என்று தணியும் இந்த கொலை வெறி? சினிமாவை பார்க்கும் மென்மையான மனம் படைத்த குழந்தைகள், பெண்கள், மூத்தவர்கள்.. இவர்களை ஒரு நிமிடம் உங்கள் மனங்களில் நிறுத்திப் பாருங்கள். கலை என்பது மனித நேயத்தை வளர்ப்பதற்கு மாறாக மனித மனங்களில் வெறுப்பை,வன்மத்தை விதைத்து விடக் கூடாதல்லவா? கட்டுரையாளர்;- தயாளன் ஆவணப்பட இயக்குனர் https://chakkaram.com/2024/08/03/தென்னிந்திய-தமிழ்-சினிமா/1 point- கருத்து படங்கள்
1 point1 point- குறுங்கதை 26 - ஆகஸ்ட் இரண்டு
1 point1 point- 5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
பேராண்டி கவனம் உடம்பு புண்ணாக போகுது சொல்லிட்டன் . நானும் நீங்களும் அடித்து கொள்வது போல அல்ல இனிய இரவு உங்களுக்கு .1 point- 5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
மேற்குநாடுகள் சீனாவிடம் பிச்சையெடுக்க வேண்டிய தூரம் தொலைவில் இல்லை.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை
அருமையாக இருக்கின்றது.......மிகவும் அழகிய நிகழ்ச்சி........பயிற்றுனருக்கும் பிள்ளைகளுக்கும் பாராட்டுக்கள்.........! 👍 நன்றி விசுகர்........!1 point- யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
பிறந்த உடனே தாய் தனது குட்டி(களை)யைச் சாப்பிடும் பழக்கம் மிருகங்களிடம் இருப்பதாக நான் அறிந்திருக்கிறேன். மனிதர்களில், தாய் வன்முறையாளாக மாறுவதை எனது அம்மம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அதன் காரணமாகத்தான் பச்சை வயிற்றுத்(பிள்ளை பிரசவித்த) தாய்மாருடன் வயதான பெண் உறவினர்கள் படுத்துறங்குவதாக கூறினார்.1 point- இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointஇதோ நான் சொன்னதற்கான அடுத்த கட்டம்: மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/1 point- இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் ரத்து
ரணிலுக்கு சுமந்திரன் கொடுத்த ஆதரவைக்கண்டு ..மோடி மாத்தையா அதிர்ச்சி அடைந்திட்டரர்...யாழுக்கையும் வந்தாரெண்டால்...மனுசன் இலங்கைக்கே .நினைச்சுப்பாராது...1 point- வைத்தியர் அர்ச்சுனா மன்னாரில் கைது
1 point- சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
1 pointகம்பவாரிதி இப்போது என்ன கூற வருகின்றார்? அரசியல் செய்வது ஒன்றும் தவறான விடயம் இல்லை. இலவச கல்வி பெற்று மருத்துவராகி பின் சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழிலை தமது வசதிக்கேற்ப பயன்படுத்துவது தவறு. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நோயாளிகளை ஏமாற்றுவது தவறு. மருத்துவர் அர்ச்சனா அரசியலில் ஈடுபடுவதால் குடி மூழ்கி போகாது.1 point- தமிழ் பொது வேட்பாளர் யார்? சசிகலா ரவிராஜ் அல்லது நீதிபதி. ம. இளஞ்செழியன்?
பக்கச் சார்பான ஊடகவியலாளர் இரா. மயூரதன். தோற்கப்போகும் ஒன்றிற்காக பலியாட்டை மஞ்சள் பூசிக் குளிக்க வைக்க ஆயத்தம் செய்கின்றனர். 🤣1 point- பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
CrowdStrike என்னும் Cybersecurity மென்பொருள் ஒன்றால்.... நான் நினைக்கிறேன் கொரியன் காரன் தான் புகுந்து விளையாடியிருக்கிறான். ருசியனும் சப்பை மூக்கரும் கொரியனும் என்று மூவரும் கூட்டுச்சேரக்கியே நினைத்தனான். 😄😄1 point- அம்பேத்கரின் பத்து கடிதங்கள்
1 point'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26, அலிப்பூர் சாலை, தில்லி, தேதி: 14 செப் 1956. அன்புக்குரிய பண்டிட் ஜி, நான் இப்போது எழுதி முடித்த ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலின் உள்ளடக்கப் பகுதியின் அச்சிடப்பட்ட இரண்டு கையேட்டு நகல்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். புத்தகம் அச்சகத்தில் உள்ளது. உள்ளடக்கத்தைப் பார்க்கையிலேயே இது எவ்வளவு கடுமையான உழைப்பைக் கோரும் பணி என்று உங்களுக்குப் புரியும். 1956 செப்டெம்பரில் புத்தகம் விற்பனைக்கு வந்துவிடும். ஐந்து வருடங்கள் இந்தப் புத்தகத்திற்காக உழைத்துள்ளேன். புத்தகத்தின் தரத்தை உள்ளடக்கக் கையேடு சொல்லும். அச்சிடுவதற்கு மிகவும் அதிகமாகக் கிட்டத்தட்ட ரூ. 20,000/- வரை செலவாகும். இது என்னுடைய சக்திக்கு மிஞ்சியது. எனவே எல்லாத் தரப்பினரிடமும் விளம்பரம் செய்துகொண்டிருக்கிறேன். புத்தரின் 2500 வருட நினைவைக் கொண்டாடும் இந்த வருடத்தில், அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும் எல்லா நூலகங்களுக்கும் வழங்கும் விதமாக இந்திய அரசு ஐந்நூறு பிரதிகளை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பௌத்தத்தின்மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிவேன். எனவேதான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் உண்மையுள்ள, பி.ஆர். அம்பேத்கர். ___________________________________________________________________ எண்:2196-றிவிபி/56, புதுதில்லி, செப்டம்பர் 15, 1956. அன்பான அம்பேத்கர், தங்கள் 14ஆம் தேதிக் கடிதத்திற்கு. நீங்கள் கேட்டுக்கொண்டபடி அதிக அளவு உங்கள் புத்தகத்தின் பிரதிகளை வாங்க இயலுமா என்பது சந்தேகமே. புத்த ஜெயந்தியில் வெளியீடுகளுக்கென ஒரு தொகையை ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தற்போது பூர்த்தியாகிவிட்டது. உண்மையில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகிவிட்டது. எங்களால் நிதி அளிக்கப்பட வேண்டிய பௌத்தம் குறித்த சில நூல்கள் இதனால் மறுக்கப்பட்டது. இருந்தும் தங்கள் கடிதத்தைப் புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன். புத்த ஜெயந்தியின்போது வெளிநாட்டினர் பலரும் வருவார்கள். தில்லியிலோ மற்றெங்கோ விற்பனைக்கு வைப்பீர்களென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். தங்கள் உண்மையுள்ள, ஜவஹர்லால் நேரு.1 point- சில வாரங்களில் 3 ஆவது உலக போர் : இந்திய ஜோதிடரால் பரபரப்பு!
குசால் குமார் என்ற சாஸ்திரியாரின் பெயர் அசத்தலாக இருக்கின்றது. இந்தப் பெயரில் யாராவது யாழ் களத்திற்கு வந்து விடப் போகின்றார்கள்...........🤣.1 point - ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.