Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 08/07/24 in all areas
-
எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் காசு, பிள்ளைகள் கூடினால் காசு என்று மீளத் தரும் நாடுகளில் இருக்கிறீர்கள். இருந்த படியே, ஜனநாயகம், அகதி அடைக்கலம், அங்கே பிறந்தவனுக்கே உரிமை என்று எதுவும் கொடுக்காத நாட்டைப் பார்த்து எச்சில் ஊறுகிறீர்கள் என நினைக்கிறேன். அதனால் தான் திரும்பத் திரும்ப "ஏன் அங்கே நீங்கள் தங்காமல், ஜேர்மனிக்கு வந்தீர்கள்?" என்று கேட்கிறார்கள் என நினைக்கிறேன்.4 points
-
சும்மா ஏத்தவில்லை. காசு கொடுத்து ரிக்கேற் எடுத்து வந்தேன். அதனால் நன்றி இல்லை. ஆனால் ஜேர்மனிக்கு நன்றி உண்டு.3 points
-
இந்நாளில் தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களில் ஜிகாத், முஸ்லீம் ஊர்காவல்படை , அரசபடைகளுடன் இணைந்து பணியாற்றும் முஸ்லீம் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான எம் தமிழ் மக்களையும், இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான நூற்றுக்கு மேற்பட்ட எம் உறவுகளையும் நினைவு கூருகிறோம். இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தம் உறவுகளை பலிகொடுத்து அநாதையாக நிற்கும் எம் தமிழ் உறவுகளுக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.3 points
-
இது பற்றி ஐரோப்ப அகதி விடுதியில் வசித்த ஒரு பெரியவர் தெரிவித்ததை நான் ஏற்கெவே இங்கே எழுதி இருந்தேன். எங்களை எல்லாம் இலங்கையில் இருந்து அழைத்து வந்து மேற்குலகநாட்டில் உயர்ந்த வாழ்க்கை அமைத்து தந்தது ரஷ்யாவின் விமானம். நாம் ரஷ்யாவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஈழதமிழ் தோழர்கள் உரை நிகழ்தினார்களாம்.2 points
-
வாட்ஸப்பில் இருந்து.. Dr முரளி வல்லிபுரநாதனின் குறிப்பு — மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 ———- பகுதி 2- மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் ? ஏற்கெனவே முதலாம் பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் "மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக, இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்தவித சிகிச்சையும் இன்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்" என்பதையும் "அதற்கு காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்து இருந்தேன். இந்த இரண்டாம் பகுதியில் ஒரு நோயாளி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பதை விரிவாக ஆராய்வோம். "அதிகாலை இரண்டு மணியளவில் குருதிப் பெருக்குடன் அனுமதிக்கப்பட்ட தாயார் காலை 7.30 மணி வரை வைத்தியரினால் பார்வையிடப்படவில்லை" என்பதே தற்போது சம்பந்தப்பட்ட பலராலும் கூறப்படும் குற்றச்சாட்டாகும். 1. வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு அனுமதிக்கும் வைத்தியர் ஆரம்ப சிகிச்சை விடுதிகள் [preliminary care unit] உள்ள வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவில் உள்ள வைத்தியர் நோயாளர்களை முதலில் ஆரம்ப சிகிச்சை விடுதிக்கு அனுமதிப்பார்கள். அங்கு ஆகக் கூடியது நான்கு மணிநேரம் நோயாளர்கள் பராமரிக்கப்படுவார்கள். அதன் பின்னர் வீடு செல்லும் நிலையில் உள்ளவர்கள் வீட்டுக்கும் ஏனையவர்கள் உரிய விடுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவர். நோயாளி ஒருவரை விடுதிகளுக்கு அனுமதிக்கும் போது அவரது நோய்நிலையைக் கருத்தில் கொண்டு அனுமதிக்கும் வைத்தியர் (admitting officer) எந்த விடுதியில் நோயாளியை அனுமதிக்கவேண்டும் என்ற முடிவினை எடுப்பார். ஏனைய வைத்தியசாலைகளில், வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் நோயாளியைப் பார்வையிட்டு நோய்நிலை அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அல்லது சாதாரண விடுதிக்கு நோயாளியை அனுமதிப்பர். ஆரம்ப சிகிச்சை விடுதிகள் இருக்கும் வைத்தியசாலைகளில் கூட மகப்பேற்றியல் விடுதிக்குரிய நோயாளிகள் எவராவது விடுதியில் அனுமதிக்கப்பட வேண்டுமானால் -தாமதங்களைத் தவிர்த்து உடனடியாக உரிய துறைசார் வைத்தியர்கள் சிகிச்சைகளை ஆரம்பிக்க வசதியாக- நேரடியாகவே மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கும் நடைமுறை உள்ளது. 2. விடுதியில் கடமையில் இருக்கும் வைத்தியர் (duty officer) ஒரு நோயாளி விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இரவில் அனுமதிக்கப்பட்டால், அவரைப் பார்வையிட்டு உரிய ஆரம்ப சிகிச்சைகளை ஆரம்பிப்பது, தேவை ஏற்படின் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவிப்பது ஆகியன அவ்வேளையில் கடமையில் இருக்கும் வைத்தியரது பொறுப்பாகும். மன்னாரில் குறித்த தாயாரை வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்ட வைத்தியர், அவரை அனுமதிக்கும்போது "சிகிச்சைக்கள (ward ) வைத்தியர் உடனடியாகப் பார்க்க வேண்டும்" என்ற குறிப்புடன் அனுப்பி இருந்ததாகவும், தாயார் விடுதிக்குள் அனுமதிக்கப்பவுடன், விடுதித் தாதி விடுதிக் கடமையில் இருந்த வைத்தியருடன் தொடர்பு கொண்டு தகவலைக் கூறியும் வைத்தியர் வரவில்லை என்றும்" குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 3. கடமையில் இருந்த தாதியர் நோயாளியின் நிலைமை மோசமடையும் போது சிகிச்சை களத்துக்கு பொறுப்பான வைத்தியர் நோயாளியை வந்து பார்க்கவில்லை என்றால் தாதி பொறுப்பான வைத்திய நிபுணருக்கோ அல்லது தாதிய நிர்வாகிகளுக்கோ அறிவிக்க வேண்டும். 'மறுநாள் காலை 7.30 மணியளவில் குழந்தையைப் பார்ப்பதற்காக வந்த குழந்தைகளுக்கான வைத்தியரே குழந்தையின் தாயார் மிகவும் மோசமான நிலையில் அவதானித்து உரிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தார்' என்று வைத்தியசாலையின் உள்ளகத் தகவல் கூறுகிறது. அதேவேளை, மரணமடைந்த இளம் தாயாரது தாயார் "மகளது நிலமை மோசமாக உள்ளதாக கூறியபோது "தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தம்மை விரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 'காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுததாகவும், நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியதாகவும்,தாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டதாகவும், இந்நிலையில் தாம் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள், பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்' என்றும் கூறியுள்ளார். வயோதிபத் தாயாரது கூற்றின்படி "காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். " என்பதும் தெரியவருகிறது. இதிலிருந்து வயோதிபத் தாயார் விளங்கிக் கொண்டது போல ஏழு யணியளவில் அவரது மகள் விழுந்த பின்னரும் வைத்தியர்கள் வந்ததாகக் கொள்ள முடியாதுள்ளது. மாறாக உள்ளகத் தகவல் கூறியவாறு, 7.30 மணிக்கு குழந்தைகளுக்கான வைத்தியர் வந்தபோது இளம் தாயார் இருந்த நிலையைக்க கண்டு பதறி அழைத்த பின்னரே மருத்துவர் பலர் வந்துள்ளார்கள் எனக் கொள்ளவேண்டியுள்ளது. மேலும், மகப்பேற்று விடுதியில் நோயாளியைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வதற்குத் தாதியர்களோ சிற்றூழியர்களோ உதவவில்லை என்பதும் துலாம்பரமாகிறது. உதவவேண்டியது அவர்களது கடமையாகும். உதவியிருந்ததால் அவர்களுக்குத் தாயாரின் பாரதூரமான நிலைமை தெரியவந்திருக்கும். 4. பொறுப்பான வைத்திய நிபுணர் வைத்திய நிபுணர் தமது விடுதியில் அதுவும் மகப்பேற்று விடுதியில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாகக் கடமை வைத்தியர் அவசர அழைப்புகளுக்குக் குறித்த நேரத்திற்குள் வராது போனால் தாதியர்கள் நேரடியாக மகப்பேற்று நிபுணருக்கே அறிவிக்கும் ஒரு பொறிமுறையைச் செயற்படுத்தலாம். 5.மருத்துவ அத்தியட்சகர் மருத்துவமனைகளில் அன்றாடம் இடம்பெறக்கூடிய தவறுகளை இனங்கண்டு அவற்றை மீளவும் நடக்காதிருக்க உறுதிப்படுத்த வேண்டும். அதற்காகப் பல பல சுற்றறிக்கைகள், வழிகாட்காட்டிகள், மற்றும் விதிக்கோவைகள் உள்ளன. இந்த விடயத்தில் தற்போதுள்ள -புதிதாகக் கடந்த மாதமே பொறுப்பேற்ற- வைத்திய அத்தியட்சகரைக் காட்டிலும் முன்னர் இருந்தவர்கள் கட்டாயமாகப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆவர். மேலும் கடந்த கால மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தமது சொந்த மாவட்ட வைத்தியசாலையின் இழிநிலையைக் கவனிக்காது வெளிநாட்டுப் பயணங்களையும் தமது சொந்த வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தார்மீகப் பொறுப்பாளிகள் ஆவர். வேறுவிதமாகச் சொல்வதானால் சிந்துஜாவின் அநியாயச் சாவுக்கான கர்ம வினையானது நோயாளியைப் பாராதிருந்த பெருங்குடி வைத்தியர், மற்றும் அசட்டையாக இருந்த தாதியை மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைவரையும் சேரும். இது இவ்வாறிருக்க, 'மேற்படி விடுதியில் அந்த இரவில் கடமையில் இருந்த மருத்துவர் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மாதத்தில் 2 வாரங்களே மன்னாருக்கு வருகை தந்து கொண்டு- ஒவ்வொரு நாளும் வேலை செய்பவராகவும், அத்துடன் தினமும் 4-6 மணி நேரம் வேலை செய்வதாக போலி குறிப்புகளை எழுதி- மாதம் 120 மணி மேலதிக வேலை செய்வதாகக் கணக்குக் காட்டிப் பல மாதங்களாக முழுச் சம்பளத்தையும், அத்துடன் மேலதிகக் கொடுப்பனவாக மாதம் தோறும் பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டியவர்' என்றும் உள்ளகத் தகவல் சொல்கிறது. இதை விடத் தென்பகுதியில் பல பதவி வெற்றிடங்கள் இருந்த போதும் 'ஐஸ் அடிப்பதற்காக' வடக்குக்கு வந்தவர் என்பதும், 'இரவு 9 மணிக்கு பின்னர் இவர் வேறு உலகத்தில் இருப்பதாகவும், நோயாளிகளைக் கவனிப்பதில்லை' என்பதும் வைத்தியசாலையினுள் கூறப்படும் குற்றச்சாட்டாகப் பொதுமக்கள் மத்தியில் பேச்சடிபடுகிறது. இந்த வைத்தியரை ஆரம்ப விசாரணையின் பின் தண்டனைக்குரிய குற்றம் என்ற பெயரில், அவரது சொந்த இடத்துக்குப் பாதுகாப்பாக "தண்டனை இடமாற்றத்தின் மூலம்" அனுப்ப GMOA மாபியா திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலே குறிப்பிட்ட அனைத்து நடைமுறை மீறல்களுக்கும் வழிகாட்டிகளாக, பாதுகாவலர்களாக சுகாதாரத்துறைத் தொழிற்சங்கங்களே உள்ளன. நோயாளியைச் சுத்தப்படுத்த முன்வராது சம்பளம் பெறும் சிற்றூழியரில் தொடங்கி, கடமைக்கே வாராது சம்பளம் பெறும் வைத்தியர்கள் மற்றும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காது கையறுநிலையில் உள்ள மருத்துவ நிர்வாகிகள் அனைவரும் தத்தமது கடமைகளைச் செய்ய வேண்டுமானால் முதலில் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்கள் இல்லாதொழிக்கப்படவேண்டும். எனவே, சிந்துஜாவின் சாவு மன்னாரில் இடம்பெற்ற கடைசி அநியாயச் சாவாக இருக்க வேண்டுமாயின், 1. கவனக்குறைவாக இருந்த குற்றவாளி தண்டிக்கப்பட்டுச் சிறைக்கு அனுப்ப பட வேண்டும். அதைச் செய்வதற்குத் தன்னார்வ சட்ட ஆலோசகர் ஒருவர் இறந்தவரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களால் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, அந்த கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகளாலேயே இந்த வழக்கு முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திறமையுள்ள சட்டத்தரணிகள் எவரையும் கொண்டிராத இந்தக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை நம்பிய வைத்தியர் அர்ச்சுனாவை விளக்கமறியலில் இருந்து மீட்கும் முயற்சியில் படுதோல்வி அடைந்துவிட்ட நிலையில், இவர்களால் வழிநடத்தப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய நட்டஈடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சுயாதீன நீதியாளர்கள் அக்குடும்பத்தைப் பாரமெடுத்து நீதி பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். 2. தற்போதைய மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை என்பது உண்மையில் -GMOA மாபியாக் கும்பலால் வழங்கப்படும் ஆதரவுடன்- அறுபது வைத்தியர்களில் அரைவாசி வைத்தியர்களே ஒரு குறித்த நாளில் கடமைக்கு சமூகமளிப்பதால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைப் பற்றாக்குறை என்பதைப் புரிந்து கொண்டு, அனைத்து வைத்தியர்களும் தினசரி கடமைக்குச் சமூகமளிப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர கண்காணிப்பும் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். உரிய கணக்காய்வுகளை மேற்கொண்டால் மோசடி செய்யப்பட்ட பல மில்லியன் ரூபாய்களை மீளப்பெற முடியும் என்பதுடன் அனைவரையும் வேலைக்கு வரவைக்கவும் முடியும். 3. இனியாவது பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் தமது பிரதேச வைத்தியசாலையில் என்ன நடக்கிறது என்பதைக் கண் திறந்து பார்த்து உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். கடந்த காலத்தில் சுகாதாரத் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட நிபுணராக கடமையாற்றியவன் என்ற வகையில் மாவட்ட பொது வைத்தியசாலையாக மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக உள்ளேன். 3. சூட்டோடு சூடாக மன்னார் மக்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் ஊடாக உரிய அழுத்தத்தைச் சுகாதாரத் தொழிற்சங்க மாபியாக்களுக்கு எதிராகப் பிரயோகிக்க தவறினால் இன்னும் பல சிந்துஜாக்களை மன்னார் இழக்க நேரிடலாம். நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் சமுதாய மருத்துவ நிபுணர் 6.8.20242 points
-
எனது தந்தை இதற்கு எதிர்மாறு! தொழிலாளர் நியாயமன்றில் சாதரண எழுதுவினைஞராக கடமையாற்றியபோது தொழிலாளர் நியாயமன்றின் நீதிபதி தனது தனிப்பட்ட வேலைகளுக்கு மன்றின் அலுவலக உதவியாளரை உபயோகித்தமையை சுட்டி எதிர்த்தமையால் 8 ஆண்டுகள் வேலையால் இடைநிறுத்தப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் வழக்காடி வெற்றிபெற்று மீளப்பணியில் இணைந்து சிரேஸ்ட எழுதுவினைஞராகவும் பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தன்னளவில் நேர்மையாகவும் தனக்குத் தெரிய ஊழல்கள் இடம்பெறாத வண்ணமும் பார்த்துக் கொண்டார். வேலை நேரத்தில் அலுவலகத்தில் இருப்பதை கட்டாயமாகப் பின்பற்றுவார். பிழை என்றால் நேரடியாகவே கண்டித்துவிடுவார். இதனால் மேலதிகாரிகளில் இருந்து சிற்றூழியர் வரை அவரில் அச்சம் கலந்த மரியாதை வைத்திருந்தார்கள்.2 points
-
மந்திகை ஆஸ்பத்திரியைப் பற்றி உதயனில் பல குறைபாடுகளை ஒருவர் அடிக்கடி எழுதுகின்றார்! சிற்றூழியரை மருத்துவர் என்று தவறாக இந்த முறைப்பாட்டில் எழுதியுள்ளார். ஆனாலும் அம்புலன்ஸை வேலைக்கான போக்குவரத்துக்காக பாவிக்கும் அளவிற்கும், நோயாளிகளின் அவசர தேவைகளை மதிக்காத அளவிற்கும் சீரழிவுகள் பல காலமாக உள்ளன. இப்போது கவனம் இப்படியானவர்கள் மேலிருந்தாலும் மாற்றங்கள் வராது!2 points
-
இது நடப்பதற்கு முன்னரான காலங்களில் தென் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால் உயிருடன் எரிக்கப்பட்டும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர். இவற்றை முழுமையாக வாசிக்க இந்த ஆவணத்தை வாசிக்கவும். காத்தான்குடி நடப்பதற்கு முன்னர், முதல் நான்கு நாட்களில் மட்டும் பல தமிழர்கள் எரித்து கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போரில் முஸ்லிம்களால் படுகொலையான அனைத்து தமிழ் தியாகிகளுக்கும் எமது அஞ்சலிகள்😭2 points
-
ஆசான் ஜெயமோகனின் தளத்தில் இமைக்கணம் நாவல் பற்றிய எனது “வாசக நயப்பு” வெளிவந்துள்ளது😀 https://www.jeyamohan.in/203567/2 points
-
இனிக் கொஞ்சம் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சொம்புகளும் ரணிலுக்கு வாக்கு பெடாவிட்டால் நாமல் வந்து விடுவார். ஆகவே ரணிலுக்கு வாக்குப் போடுங்கள் என்று கிளம்புவார்கள்.2 points
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன். எனும் திரியில் இருந்து பல தனிமனித தாக்குதல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன. களவிதிகளை மீறும் கருத்துக்களை உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து யாழ் களத்தின் தரத்தைப் பேணமுடியும். இதற்கு கள உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோருகின்றோம்.1 point
-
ஆரம்பத்தில் இருந்தே இந்த விசர்க் கூத்தை, நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியை நான் எதிர்த்து எழுதி வந்துள்ளேன். // இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை. அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல. தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும். //1 point
-
போர் ஆக்கிரமிப்பை எதிர்த்து என்றால் அது திணிக்கப்பட்டதாகிவிடும். எனவே மண்ணுக்காக போராடுபவர்கள் எம்மை போல போராளிகளே. அவர்களை கோமாளிகள் என்பவர்களால் மண் மீட்பை ஒருபோதும் உணரமுடியாது ... அது தான் நியம்.1 point
-
ஆமாம் நிச்சயமாக நாங்கள் வலிய போரிடவில்லை வலும் காட்டாயமாக போரிட வைக்கப்பட்டோம். போரட்ட முறைகள் வன்முறைகளாக இருக்கலாம் காரணம் சரியானது இதனை கில்லாறி கிளிட்டன். 15. ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளார்1 point
-
மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும், நியாயமும் கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் (V.S.Sivakaran) வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் நேற்று (06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் மற்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், முதல் கட்ட விசாரணை “மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரியராஜ் சிந்துஜாவின் (வயது-27) மரணத்தை தொடர்ந்து அவரது கணவர் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் கவனத்திற்கு உடன் கொண்டுவந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். வைத்தியசாலை தரப்புடன் உடனடியாக தொடர்பு கொண்டு, குறித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வலியுறுத்தி தொடர்ந்தும் விசாரனைகள் தொடர்பாகவும் ஒவ்வொரு நாளும் விசாரித்து வருகிறோம். உள்ளக ரீதியான வைத்தியசாலையின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் விசாரணைகளும் நிறைவடைந்துள்ளன. கள அறிக்கையும் முடிவடைந்துள்ளது. நான்கு விதமான முதல் கட்ட விசாரணை தற்போது முடிவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக மத்திய சுகாதார அமைச்சினால் இவ்வாரம் மன்னார் மாவட்ட டபொது வைத்தியசாலைக்கு விசாரணைக்குழு வருகை தந்து முதல் கட்ட விசாரணைகளை முன்னெடுக்க உள்ளனர். இடம்பெற்ற நான்கு கட்ட விசாரணைகளின் போது சில நபர்கள் குற்றவாளிகளாக, குற்றம் சாட்டப்பட கூடியவர்களாக சம்பவ தினத்தன்று கடமையில் இருந்தவர்கள் அசண்டையீனமாக நடந்து கொண்டுள்ளார்கள் என சிலரை அடையாளமிட்டுள்ளார்கள். கவனயீனமான செயல்பாடு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இரு வேறு தரப்பாக வைத்தியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சும், ஏனையவர்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சுக்கும் வைத்திய தரப்பினராலும், ஏனைய விசாரணை தரப்பினராலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே பரிந்துரைக்கப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு வரவில்லை. சாதாரண ஒரு விடயத்தை கூட அவர்களின் கவனயீனமான செயற்பாடு ஒரு மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 நாட்களை கொண்ட பிள்ளையின் தாய் மரணிப்பது என்பது பிறந்த பிள்ளையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே வைத்தியத்துறை இவ்வாறான மோசமான நிலைப்பாட்டிற்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும். எனவே தொடர்ச்சியாக சாக்குப்போக்கு பதில்களை கூறி எடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமைவாக செயற்படாமல் விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறை விசாரணை கடந்த காலங்களில் கூட மருத்துவத்துறைக்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிளிநொச்சியில் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விசாரணை அப்படியே காணாமல் போய் விட்டது. யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்ட மை தொடர்பான விவகாரம் பேசு பொருள் அற்று போய்விட்டது. வவுனியா விவகாரமும் காணாமல் போய் விட்டது. கிளிநொச்சியில் கொரோனா வைத்தியசாலையில் பல இலட்சம் ரூபாய் ஊழல் என நிரூபிக்கப்பட்டு பெயர் குறிப்பிட்ட நபர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என விசாரணை குழு நியமிக்கப்பட்ட போதும் இன்று வரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குற்றம் சாட்டிய நபரை காவல்துறை விசாரணைக்கு அழைத்தனர். மன்னார் வைத்தியசாலையிலும் கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து குறிப்பிட்ட காலங்களில் இவ்வாறான ஒரு சம்பவங்கள் இடம் பெறாத வகையில் தடுத்திருந்தோம் எனினும், அவர்களின் கவனயீனமான செயற்பாடுகள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது வைத்தியசாலையில் 61 வைத்தியர்கள் உள்ளனர். 56 வைத்தியர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 5 வைத்தியர்களே மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். எனவே நீங்கள் மீண்டும் மன்னாரிற்கு வந்து மன்னார் மாவட்டத்தில் குறைந்த வருடங்களாவது கடமையாற்ற வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பெண்ணின் உடற்கூறு அறிக்கை மன்னார் மாவட்ட வைத்தியர்கள் மன்னாரிற்கு பணிக்காக வருகிறது இல்லை. அதன் விளைவாக வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பணி செய்கின்ற நிலை உள்ளது. எனவே இந்த நிலையை மன்னார் வைத்தியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். விசாரணை முழுமை பெற சில நாட்கள் காத்திருக்க வேண்டும். விசாரணை நிறைவடைந்து வைத்தியசாலை தரப்பினராலும், மத்திய சுகாதார அமைச்சினாலும் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றது என்பதற்காக நாங்கள் சில நாட்கள் காத்திருக்கின்றோம். குறித்த பெண்ணின் உடற்கூறு அறிக்கை இன்னும் வரவில்லை. குறித்த அறிக்கையும் இவ்வாரம் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வெளிவந்த பின்னர் 3 அல்லது 4 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு இழப்பீட்டையும் குறித்த குழந்தையின் எதிர்காலத்திற்கான வழி வகையையும் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் நஷ்ட ஈட்டையும் வழங்க முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும், நியாயமும், கிடைக்க வேண்டும். வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள். அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.” என்றார். https://ibctamil.com/article/young-mother-died-in-mannar-investigations-17229855881 point
-
போரை பெரும்பாலோர். எதிர்க்கிறார்கள். நானும் தான் இரண்டு பக்கத்தையும். எதிர்க்கிறேன். ஒரு பக்கத்தை ஆதரிப்பது போரை ஆதரிப்பது ஆகும்1 point
-
முரளி வல்லிபுரநாதன் இந்த விடயத்தில் வழங்கும் ஆதரவு சீர்திருத்த முயற்சிகளுக்கு மிகவும் பலம் சேர்க்கக் கூடியது. ஆனால், பயன்படுத்திக் கொள்ள முன்வருவார்களா என்பது தான் சந்தேகம். அர்ச்சுனாவை நடத்திய விதம், தற்போது 4 விசாரணை செய்து விட்டு நடவடிக்கையெதுவும் எடுக்காமல் இருக்கும் நிலை என்பவற்றை வைத்துப் பார்த்தால், மன்னாரில் அதிகாரத்தில் இருக்கும் எல்லோரும் ஒரே "elite கிளப்பில்" உறுப்பினர்களாக இருக்கின்றனர் எனப் புரிகிறது. மிகப் பொருத்தமாக இத்தகைய ஊழல் நிறைந்த elite clubs ஐ அமெரிக்காவில் "சாக்கடை-swamp"என்பார்கள். உதாரணமாக, நகர நீதிபதி, வைத்தியத்துறை தலைவர்கள், எம்.பியின் ஆட்கள், பொலிஸ் அதிகாரிகள் என எல்லா உயர் வகுப்பினரும் அனேகமாக ஒரே இடத்தில் கூடி தண்ணியடிக்கும் ஆட்களாக இருப்பர்😂. இந்த இடங்களில் தான் இந்த சாக்கடை சிஸ்ரம் உருவாகிறது.1 point
-
நன்றியுணர்சியாளர்கள் அரசியல் கதைக்க வெளிக்கிட்டால் முதலில் சிங்கள அரசிற்குத்தான் நன்றி செலுத்த வேண்டும்.ஓசியில படிப்பு தந்து ஓசியில பிஸ்கட்டும் தந்து...ஓசியில அரிசி பருப்பும் தந்து....ஒசியில கூப்பன்மாவும் தந்து படிக்க வைச்சு ஆளாக்கி விட்ட சிங்கள மாத்தயாக்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.1 point
-
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் நீங்கள் மேலே சொன்ன அனைத்தையும் செய்கிறோம் இவற்றுக்கு எல்லாம் வாய்ப்புகள் சந்தர்பங்களை வழங்கும் ஜேர்மனிக்கு வாழ் நாள் பூரவும். என்றென்றும் நன்றிகள் பல கோடி 🙏😂.1 point
-
ஊரிலை பெரிய உத்தியோகத்தில இருக்கிற பலருக்கு அரசாங்க வாகன வசதிகள் இருக்கு. அவையள்.... சந்தைக்கு சாமான் சக்கட்டையள் வாங்கப்போறதும் அதிலைதான். தங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கொண்டுபோய் விடுறதும் அதிலை தான் அப்பப்ப கோயில் விசேசங்களுக்கும் அதிலை தான்... எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் அந்த வாகன றைவர் அரசாங்கத்தாலை நியமிக்கப்பட்டவர்தான்.இருந்தாலும் அந்த பெரிய கவுண்மேந்து உத்தியோகத்தர் வீட்டுக்கு அவர் ஒரு குட்டி வீட்டுவேலைகாரர் மாதிரி இருப்பார். 😁1 point
-
1 point
-
நானும் போர் ஆதரவாளன் இல்லை தான்..ஆனால் உக்ரேனுக்கு வந்தால் இரத்தம் மற்ற நாட்டு போர்கள் நடந்து மக்கள் அழிந்தால் தக்காளி சட்னி என்கிறார்கள் பாருங்கோ அங்கதான் நான் முரண்படுகின்றன் தம்பி...1 point
-
அண்ணை நான் உக்ரேனிய ஆதரவாளனோ ரஸ்யாவிற்கு எதிர்ப்பாளனோ அல்ல. அப்பாவி மக்களின் சாவினை ஆதரிக்காதவன்.1 point
-
அண்ணை மகிந்த ஐயாவின் வடக்கிற்கான இணைப்பாளராக முன்னர் இருந்ததாக நினைவு.1 point
-
நிச்சயமாக. இலங்கையில் வளத் துஷ்பிரயோகத்தில் முதல் இடம் அலுவலக வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தான், எல்லா மட்டத்தினரும் செய்வார்கள். 20 ஆண்டுகள் முன்பு, வவுனியாவில் உயர் பதவியில் இருந்த மருத்துவர், ICRC வவுனியா மருத்துவ மனைக்கு வழங்கியிருந்த வாகனத்தில் தான் தன் பிள்ளைகளைப் பளிக்கூடத்திற்கு ஏற்றி இறக்குவார். பின்னர் அவர் மாகாண அமைச்சராகவும் வந்தார். இப்போது வடபகுதியில் நடக்கும் அக்கப் போர் பற்றி மூச்சும் விடாமல் இருக்கிறார் 😎- காரணம் இது தான்!1 point
-
1 point
-
1 point
-
ஆஸ்பத்திரியில் வேலை செய்வோர் எல்லோரும் "மருத்துவர்கள்" அல்ல என்று இலக்கு இணையத்திற்கு யாராவது சொல்ல வேண்டும். "சிற்றூழியர்" என்று செய்தி எழுதி விட்டு, "மருத்துவர்" என்று தலையங்கம். இது தற்போது சூடாக இருக்கும் சூழலை வைத்து வயிறு வளர்க்கும் சாக்கடை ஊடக நுட்பம் என நினைக்கிறேன்.1 point
-
குறுகிய காலத்தில்… பாராளுமன்றத்தில் இருந்து விளக்கமறியல் வரை.. பல்வேறு விதமான பல அனுபவங்களை பெற்று விட்டார். இனி… நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தால்…. வெற்றிதான்.1 point
-
இனி இவை அவரை வழி நடாத்தும் ...? எம் பிள்ளைகள் என்ற நம்பிக்கை என்றும் உண்டு....1 point
-
1 point
-
அர்ச்சுனாவின் விளக்க மறியல்… அவருக்கு இன்னும் அதிக அனுதாபிகளை பெற்றுக் கொடுத்துள்ளது போல் தெரிகின்றது. மன்னார் பொலிசாரும், நீதிமன்றமும்… அர்ச்சுனாவுக்கு அனுதாப அலையை பெற்றுக் கொடுத்துள்ளதால், அவர்களுக்கும் நன்றி. 😂 🤣1 point
-
பிறகென்ன......இனி ரஷ்யா துலைஞ்சான். புட்டின் இரானுக்கு ஓட வேண்டி வரப்போகுது 🤣1 point
-
1 point
-
1 point
-
சனாதிபதித் தேர்தலும் தமிழ் பொதுவேட்பாளர் நாட்டியமும்…! சனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னாடியே தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாட ஆரம்பித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தரப்பினர் சந்தித்தவேளையிலேயே, தமிழ் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம் என ஶ்ரீதரன்- விக்கினேஸ்வரன் தரப்பும், புறக்கணிக்கப்போகிறோம் என முன்னணி தரப்பும், இல்லை யாரேனும் ஒருவரை ஆதரிப்போம் என சுமந்திரன் தரப்பும் கைகலத்ததாக தெரியவந்திருந்தது. விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் - ஶ்ரீதரன் : தவராசா : அரியம் -செல்வம் அடைக்கலனாதன் -தர்மலிங்கம் சித்தார்த்தன் - ஶ்ரீகாந்தா -சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட நிலாந்தன் போன்ற தமிழ்தேசிய பத்தி எழுத்தாளர்களும் வேலைசெய்ய ஆரம்பித்திருந்தனர். அச்சமயம் வெளிநாடொன்றில் தமிழர்களைச் சந்தித்த ஶ்ரீதரன், “சிங்கள ஓட்டுகள் மூன்று நான்காக சிதறப்போகிறது பொதுவேட்பாளரை நிறுத்த இதுதான் சிறந்த சந்தர்ப்பம். நம்மை தேடி அவர்கள் வருவார்கள். எங்கள் கோரிக்கையை முன்வைத்து அதை ஏற்பவர்களை ஆதரிப்போம், இரு வெளி நாட்டு தூதர்கள் முன்னிலையில் கையெழுத்து வாங்குவோம்” என அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை விளக்கி உரையாற்றியிருந்தார். சனாதிபதித் தேர்தல் வேண்டாம்; ஆனால் பொதுவேட்பாளரை தெரிவு செய்வோம் என இன்னொரு தலைவர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டார். கூடவே சுமந்திரன் மூளையால் யோசித்து முடிவெடுப்பவர், நான் அப்படியல்ல என்று சுயதம்பட்டம்வேறு அடித்திருந்தார். புறக்கணிக்கும் முன்னணியை தவிர்த்து கவனியுங்கள், இதில் பொதுவேட்பாளர் தேவை - அதுதான் சரியான தீர்வு என ஈடுபாட்டுடன் களமிறங்கிய ஶ்ரீதரன்- சித்தார்த்தன்- செல்வம்- விக்கி என அனைவரும் தீவிர தமிழ்தேசிய அரசியல்வாதிகள். பொதுவேட்பாளரே ஒரே திர்வு- இதோ மக்கள் தீர்மானிக்கப்போகிறார்கள் என எழுதித் தள்ளியவர் தமிழ்தேசிய பத்தியாளர் நிலாந்தன். இப்போது என்னவாகிற்று? - மெல்ல மெல்ல பொதுவேட்பாளருக்கான தெரிவு விமர்சிக்கப்பட, ஒருசில கிழமைகள் முன்பு பொதுவேட்பாளர்தான் தேவை என மக்களிடம் உணர்ச்சிகர உரையாற்றிய ஶ்ரீதரன் இருக்கும் இடம் தெரியாமல் சைலெண்ட் மோட்க்கு போய்விட்டார். முன்னால் நின்று நடத்திக்காட்டுவதுதானே தலைவருக்கு அழகு? ஒருமாதம் கூட தாக்குப்பிடிக்கமுடியாத தந்திரோபாயங்களை மக்களிடம் முன்வைக்க வெட்கமாக இல்லை? -பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் இழுபறியில் ஶ்ரீகாந்தா பக்கம் பொறுப்பை தட்டிவிட்டு விக்கினேஸ்வரன் நழுவிக்கொண்டார். தமிழ்தேசிய godfather. - இறுதியில் பொதுவேட்பாளராக எஞ்சியிருப்பது தவராசாவும் அரியநேந்திரனும் தானாம். அதிலும் அரியம் தான் தெரிவு என்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழரசு மத்திய குழுவைச் சார்ந்தவர்கள். ஶ்ரீதரன் அபினானிகள். தமிழரசுக் கட்சி ஒரு முடிவு எடுத்திருக்காத நிலையில் இவர்கள் கையைத் தூக்கியதற்காக உருப்படியான தமிழரசுத் தலைவர் கட்சியை விட்டு விலத்தவேண்டும். ஆனால் நடக்காது. -பெண் வேட்பாளர் தான் வேண்டுமென பத்மினி சிதம்பரநாதன் முதற்கொண்டு பலரையும் முயற்சித்து பலனில்லை. - பொதுவேட்பாளர் ஐடியாவை ஆரம்பித்துவைத்த ஶ்ரீதரனோ விக்கினேஸ்வரனோ இதில் தாமே முன்வந்து தேர்தலை எதிர்கொண்டிருக்கவேண்டும். இருவரும் எஸ்கேப். இனித் தெரிவாகுபவர்கள் வேலைக்காகமாட்டார்கள் என செல்வமும் சித்தார்த்தனும் விலகிக்கொள்வார்கள். -பொதுவேட்பாளராக நியமனம்பெறுபவர் ஒரு சில ஆயிரம் ஓட்டுகளை, கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் வாங்கியதைப் போல் வாங்கி சந்தி சிரிப்பார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தருவார்களென மக்கள் காத்திருக்கவேண்டுமா? இவர்கள் தான் எம் இனத்தின் காவலர்கள்- எதிர்கால தூண்கள்-, அரசியல் சாணக்கியர்கள் என இளம் அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டுமா? —— மன்னாரிலோ எங்கேயோ நடந்த சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டமொன்றில் சுமந்திரனின் பேசிய பேச்சு முக்கியமானது. 1940 களில் இருந்து தமிழர்களின் தீர்க்கமற்ற / எதிர்காலத்தை நோக்கியதற்ற ஆனால் கடந்த காலங்களில் தேங்கி நின்று அரசியல் செய்த- செய்யும் வரலாற்றை படிப்படியாக விளக்கியிருப்ப்பார். அதன்வழியிலான அடுத்த நகர்வாகத்தான் இந்த பொதுவேட்பாளர் விடயமும் என்று முடித்திருப்பார். சுமந்திரனோடு பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இருக்கும் அரசியல்வாதிகளில் உண்மையை அரசியல் பூச்சுகள் இல்லாமல் செவிட்டில் அறைந்து சொல்லும் திறமை இங்கு வேறு எவருக்கும் இல்லை. Day 1 இல் இருந்தே பொதுவேட்பாளர் விடயத்தை முழுதாக கடுமையாக எதிர்த்துவந்தது சுமந்திரன் மட்டும்தான். இருக்கலாம், விக்கி சொன்னதுபோல இப்போதிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகளில் மூளையை பாவித்து முடிவெடுக்கும் ஒருவர் சுமந்திரனாக இருக்கலாம். தேசியத்தின் பெயரில் - போர்வையில் தங்கள் இயலாமைகளையும் குறைகளையும் மறைத்து, மக்களை பேய்க்காட்டாமல், மூளையை பாவித்து அரசியல் செய்ய இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். த்தூ..! வெட்கங்கெட்ட தமிழரசியல். நன்றி முகநூல் பதிவு1 point
-
சிங்களவர்கள். எத்தனை பேரும் ஐனதிபதி வேட்பாளர்களாக. களமிறங்கலாம். ஆனால் ஒரு தமிழன் களமிறங்கக்கூடாது என்று சுத்தத்தமிழன். சுமத்திரன். சொல்கிறார். 2005 இல் புலிகள் மக்களை வாக்கு அளிக்க விடவில்லை,.ஆகையினால் ரணில் தோற்றார் என்பவர்கள் இன்று தமிழன் போட்டி இடக்கூடாது என்கிறார்கள் ஏன்?? ரணிலுக்கு ஆதரவு இருந்தால் 100 பேரும் போட்டி இடலாம். மக்கள் ரணிலை தெரிவு செய்வார்கள்,..அதிகமான சிங்களவர்கள். போட்டியிட்டால். தமிழ் மக்களின் பெறுமதியை உணர்வார்கள்1 point
-
அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை அழித்த முஸ்லிம் ஜிகாதிகள் தடயமின்றி அழிவது எப்போது? எப்போது அடுத்த இன அழிப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் திரும்பும்? அதுவரை பொறுத்திருக்கலாமா ? சொந்த முஸ்லிம்களையே சுனி சியா எனப் பிரித்துக் கழுத்தறுக்கும்போது வராத அக்கறை, சிரிய அகதிகளை,?பெண்களை பாலியல் அடிமைகளாக, மிருகங்களுக்குச் சமானமாக நடாத்தும்போது வராத அக்கறை, இலங்கையில் அகதி வாழ்க்கைக்காக கண்ணீர் விடும் கோழைத்தனத்தை என்ன சொல்வது? மனிதாபிமானம் என்று வரும்போது பலஸ்தீனியர்களின் வேதனையை புரிந்துகொண்டாலும், இவர்கள் எல்லோரும் மதம் என்று வரும்போது எல்லா முஸ்லிம்கலும் ஒரே குட்டை ஒரே மட்டையே. எனவே,...... உந்த முஸ்லிம்களுக்கு சியோனிச இஸ்ரேலும், UKயும் US உம்தான் பொருத்தமானவர்கள். 🙏 முஸ்லிம்களிடம் அமைதியை ஏற்படுத்தலாமென்பது கானல்நீர்.1 point
-
ஐயனே, அவர்கள் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை தான் இது. கட்டுரை இல்லையெனில் எதிர்வினை இல்லை. எதிர்வினை ஆற்றாமல், எமக்கு அவர்கள் செய்த - உதை விட பத்து மடங்கான அழிவுகளை நாம் மறந்து போனதால் தான் எம்மை மடையர்களாக்கி ஏதோ தாங்கள் உத்தம தேவர்கள் போன்றும் சும்ம கிடந்த சங்கை (சோனகர்) நாம் (தமிழர்கள்) தான் ஊதிக் கெடுத்தோம் என்றும் இந்தச் சோனகக் கூட்டம் மாயை செய்கிறது. எவ்வாறெயினும் மெய்யுண்மை அதுவன்று என்பதை படம் போட்டுக் காட்டத் தான் நான் உந்தக் கருத்தை எழுதினேன் (ஆவணக்கட்டும் இந்த சோனகர்கள் பற்றி எழுதியுள்ளேன்). இந்த மாயை உடைக்கப்பட வேண்டும். இப்போது கூடப் பாருங்கள், திருமலையில் தமிழர்களை முதலில் எடுத்த உடமைகளோடு விரட்டியது இந்த சோனகர்கள் தான், முதலில். வட தமிழீழ தமிழர்கள் சோனகர்களால் பாதிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது பாசமும் (இதை சோனகர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்க இயலாது) சிங்கள படைத்துறையால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீது வெறுப்பும் ஏற்படலாம், நான் கதைத்தறிந்தது வரை. ஆனால் தென் தமிழீழ மக்கள் "மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி" என்ற மாதிரி சோனகர்களாலும் சிங்களவர்களாலும் அழிந்தனர். கூட இருந்த முஸ்லிம்களே தமிழர்களை அழித்தனர், நான் கதைத்தறிந்தது வரை. இதெல்லவற்றையும் மறைத்து என்னினம் மீது கருப்பு பூசுவதை ஏற்கவியலாது இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அது போல தான் இதுவும். தவறைத் திருத்தலாம், ஆனால் வரலாறை மறந்து போகக் கூடாது. மறந்து போனால் எம்மையே அரக்கர்கள் மாதிரி கதை கட்டிப் போடுவாங்கள். ஆனால், மெய்யில் உவங்கள் தான் அரக்கத்தனம் செய்தவர்கள்.1 point
-
சிறியர்...இதைப்பார்த்து நம்ம காத்தான்குடி முசுலிமுகள் பொங்கப்போகினம்...முகம்தெரியாதபடியே எங்களினப் பெண்களை வளற்பவர்கள்... எம்மினப் பெண்ணின் உள்ளாடையை எப்படி மற்றவர் பார்க்க காட்டித்திரியமுடியும்... தூக்கித்திரிபவரின் தலைக்கு நம்ம சம்மேளனம் 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும்..😁1 point
-
எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை. ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர். சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர். இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான். //இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி அமெரிக்கா ஓடவைத்ததோ// கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது. மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது) அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.1 point
-
"யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!" எனும் திரியில் பொறுப்பற்ற முறையில் இறந்த குழந்தையின் மதத்தை குறிப்பிட்டு எழுதிய கருத்து ஒன்று நீக்கப்பட்டது.1 point
-
இது "வரும் ஆனால் வராது" என்ற கதையாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். மாகாண அமைச்சுக்கு யார் தவறு செய்தார் என்பது இப்போது தெரியும். அந்தப் பணியாளர்களை மத்திய அரசின் விசாரணை முடியும் வரை சம்பளமில்லாத பணி இடை நிறுத்தம் செய்யலாம், செய்தால் மத்திய அரசின் விசாரணையை பணி நீக்கம் செய்யப் பட்டவர்களே துரிதமாகச் செய்யும்படி மன்றாடுவர். என் கணிப்பு, இப்படி பணி இடை நிறுத்தம் செய்ய மாட்டார்கள். மக்கள் மறந்து நகரும் வரை மத்திய அரசின் விசாரணை தொடரும். இறுதியில் யாரும் தண்டிக்கப் பட மாட்டார்கள். சீரழிந்த சிறிலங்காவின் நடைமுறைகளில் இது புதிதல்ல. இதற்கு தீர்வு என்ன? நீதிமன்றில் பாதிக்கப் பட்ட குடும்பம் சிவில் வழக்குப் போட வேண்டும். மன்னார் மருத்துவமனைப் பணிப்பாளரையும் அந்த நேரம் கடமையில் இருந்த மருத்துவரையும் எதிராளிகளாக (respondents) குறிப்பிட்டு வழக்கைப் போட்டு வைக்க வேண்டும். சிவில் வழக்கு இழுபடும், ஆனால் பெயர்கள் வெளியே வரும், ஒரு கட்டத்தில் மாகாண அமைச்சின் அறிக்கையையும் நீதி மன்றில் சமர்ப்பிக்க வேண்டி வரும். முகநூலில் நேரம் வீணாக்குவதை தவிர்த்து சட்டத்தரணிகள் இதைச் செய்ய உதவினால் அது பயனுள்ளதாக இருக்கும்.1 point
-
1 point
-
1 point
-
இன்றைய பதக்க வரிசை: Rank Country Gold Silver Bronze Total 1 United States 19 28 27 74 2 China 21 17 14 52 3 France 12 14 18 44 4 Great Britain 10 12 16 38 5 Australia 12 11 8 31 6 Republic of Korea 11 8 7 26 7 Japan 10 5 11 26 8 Italy 8 10 6 24 9 Canada 5 4 8 17 10 Netherlands 6 5 4 15 11 Germany 6 5 2 13 12 Brazil 2 4 5 11 13 Hungary 3 3 2 8 14 Spain 1 2 5 8 15 Romania 3 3 1 7 16 New Zealand 2 4 1 7 17 Sweden 2 3 2 7 18 Ukraine 2 2 3 7 19 Ireland 3 0 3 6 20 Israel 1 4 1 6 21 Switzerland 1 1 4 6 22 Belgium 2 0 3 5 23 Greece 0 1 4 5 24 Croatia 2 1 1 4 25 Hong Kong 2 0 2 4 26 Georgia 1 2 1 4 27 Kazakhstan 1 1 2 4 27 South Africa 1 1 2 4 29 Chinese Taipei 1 0 3 4 30 Poland 0 1 3 4 31 Uzbekistan 1 0 2 3 32 Jamaica 0 2 1 3 32 Mexico 0 2 1 3 32 DPR Korea 0 2 1 3 35 India 0 0 3 3 35 Tajikistan 0 0 3 3 37 Azerbaijan 2 0 0 2 37 Philippines 2 0 0 2 37 Serbia 2 0 0 2 40 Czech Republic 1 0 1 2 40 Guatemala 1 0 1 2 42 Kosovo 0 1 1 2 42 Turkey 0 1 1 2 44 Dominican Republic 0 0 2 2 44 Malaysia 0 0 2 2 44 Moldova 0 0 2 2 47 Algeria 1 0 0 1 47 Argentina 1 0 0 1 47 Chile 1 0 0 1 47 Dominica 1 0 0 1 47 Ecuador 1 0 0 1 47 Norway 1 0 0 1 47 Slovenia 1 0 0 1 47 Saint Lucia 1 0 0 1 47 Uganda 1 0 0 1 56 Armenia 0 1 0 1 56 Colombia 0 1 0 1 56 Denmark 0 1 0 1 56 Ethiopia 0 1 0 1 56 Fiji 0 1 0 1 56 Mongolia 0 1 0 1 56 Tunisia 0 1 0 1 63 Austria 0 0 1 1 63 Cape Verde 0 0 1 1 63 Cuba 0 0 1 1 63 Egypt 0 0 1 1 63 Grenada 0 0 1 1 63 Indonesia 0 0 1 1 63 Lithuania 0 0 1 1 63 Portugal 0 0 1 1 63 Slovakia 0 0 1 11 point
-
1 point