Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31977
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/27/24 in Posts

  1. CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல, மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது. இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம். இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர். நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை. நிற்க, தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது? ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)
  2. உண்மை தான் தமிழர்கள் இரண்டு பகுதியும் நடந்த விதம் பிழை எந்தவித பிரயோஜனம் அற்றது சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள் தமிழனைக்கொண்டு தமிழனை அடிக்கிறார்கள். நாங்களே’ எங்களை பிரிக்கிறோம் கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂 குறிப்பு,......அண்ணை நீங்களும் ஒன்றை உடையுங்கள். 😂🙏
  3. நீங்கள் விரும்பின்னால் உங்கள் பெயரையே நீங்கள் சூட்டி மகிழலாம். எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை.🙌😌
  4. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்சிகளை ஆதவன் தொலைக்காட்சியில் நேரலையாக நேயர்கள் கண்டுதரிசிக்க முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். https://athavannews.com/2024/1397203
  5. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திரட்டி போராடுகிறார். ஒருவகையில் அதற்கு ஒப்புக்கொள்ளும் முதலாளி, மற்றொருபுறம் ஆபத்தில் சிக்க வைக்கிறார். அது என்ன? சிவனணைந்தானுக்கு வாழை சுமப்பத்திலிருந்து விடுதலை கிடைத்ததா என்பது திரைக்கதை. தன் வாழ்வின் உச்சபட்ச அழுகையின் தருணங்களையும், மகிழ்ச்சியின் நினைவுகளையும் ஒரு சேர கோத்து ‘உணர்வுபூர்வமான’ படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சொற்ப கூலிக்காக, உயிர்கொடுத்து வாழைத்தாரை சுமந்து செல்லும் அம்மக்களின் வாழ்வியலையும், அது சிறுவனின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சமரசமின்றி அழுத்தமாக பதிவு செய்கிறது படம். அதேசமயம் கண்ணீர் மழையை பொழியும் காட்சிகளை உருக்கி உருக்கி வடிக்காமல், வெகுஜன ரசனையை ஈர்க்கும் படத்தின் திரைமொழி கவனம் பெறுகிறது. சிவனணைந்தான் மற்றும் அவனது நண்பனுக்கு இடையிலான நட்பு, ரஜினி, கமல் ரெஃபரன்ஸ், “நம்மூர்ல ரஜினி படம் தான் ஓடுது. கமல் படம் எங்க ஓடுது” என்ற வசனம், அதையொட்டிய காட்சிகள், ‘பூவே உனக்காக’, ‘பிரியமுடன்’ போஸ்டர்கள், கர்சீஃப் காட்சி என ஜாலியாக நகரும் படத்தின் தொடக்கம் ரசிக்க வைக்கிறது. தனக்கு பிடித்த ஆசிரியை மீது அந்தப் பருவத்தில் விளையும் ஈர்ப்பை எந்த வகையிலும், கொச்சையாகவோ, மிகைப்படுத்தியோ சொல்லாமல் மிக கவனமாக நேர்த்தியாக கையாண்டியிருப்பது பாராட்டுக்குரியது. நிகிலா விமலிடம், மாணவன், “நேத்து எங்க அம்மா மாதிரி அழகா இருந்தீங்க டீச்சர். இன்னைக்கு அக்கா மாதிரி” என சொல்லும் வசனம் அழகு! இதற்கு மறுபுறம், மற்றொரு காதலையும், மெல்லிய உணர்வுடன் 2 ரெட்ரோ பாடல்களின் வழியே கடத்தியிருந்தது அட்டகாசமான திரையனுபவம். கொத்தடிமை வாழ்க்கை, ஒரு ரூபாய் கூலி உயர்வு போராட்டம், அதனால் ஏற்படும் இழப்பு, இடைத்தரகர்களின் வஞ்சகம், கம்யூனிஸ்ட், அம்பேத்கர் குறியீடுகள் என உழைக்கும் மக்களின் வலியை அழுத்தமாக பதிய வைக்கிறது படம். எல்லாவற்றையும் தாண்டி கட்டிப்போட்டு உலுக்கும் இறுதிக் காட்சியின் தாக்கத்தை படம் முடிந்தும் உணர முடிகிறது. மாரி செல்வராஜின் ‘உருவக’ காட்சிகளின் டச் இப்படத்தில் நிறைந்திருக்கிறது. தேர்ந்த கலைஞர்கள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு, வலி, வேதனை, கண்ணீர், தாயிடம் கெஞ்சி மன்றாடுவது, களைப்பினால் சோர்ந்து வீழும் இடம் என உணர்வுகளை நடிப்பில் வரித்து மிரட்டியிருக்கிறார் சிறுவன் பொன்வேல். உற்ற தோழனாக, டைமிங்கிலும், யதார்த்தமான நடிப்பிலும் ஈர்க்கிறார் மற்றொருவர் சிறுவன் ராகுல். பால்ய கால ஆசிரியரை நினைவூட்டும் நிகிலா விமல், க்ளோசப் ஷாட்களில் முகத்தில் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி, இனம்புரியா உணர்வுகளைக் கொண்ட சிறுவனை ‘ஹேண்டில்’ செய்யும் முறையில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆக்ரோஷமான இளைஞனாக கூலிக்காக போராடும் கலையரசன், வாழைத்தாரை தாங்குவது போல கதாபாத்திரத்தை நேர்த்தியாக தாங்கி கிராமத்து பெண்ணாக ஈர்க்கும் திவ்யா துரைசாமி கச்சிதமான தேர்வு. சிறுவனின் தாயாக நடித்துள்ள ஜானகி இறுதிக்காட்சியில் அட்டகாசமான நடிப்பால் பாரத்தை இறக்கிவிடுகிறார். அவருக்கு தனி பாராட்டுகள்! கமல் குறித்து பேசும் காட்சியில், ‘நாயகன்’ பட இசையை மெல்லிதாக ஓட விடுவது, உருக்கமான காட்சிகளுக்கு உயிரூட்டி உணர்வுகளாக்கியிருப்பது, தேவையான இடங்களில் அமைதியின் வழியே அழுத்தம் சேர்ப்பது என சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் மிரட்டுகிறார். ‘தென்கிழக்கு தேன் சிட்டு’, ‘பாதவத்தி’ பாடல்கள் சிறப்பு. கறுப்பு வெள்ளையிலும், ஷில்அவுட்டிலும் காட்சிகளை நனைத்து, மூச்சிறைக்க ஓடும் சிறுவனின் உணர்வுகளை கடத்தி, மாரி செல்வராஜின் நினைவுகளுக்கு உயிரூட்டுகிறது தேனி ஈஸ்வரின் கேமரா. ஒலிக்கலை நேர்த்தி. பொறுமையாக நகரும் கதை தான் என்றாலும் எங்கேயும் அயற்சி ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக கடப்பது பலம். மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் காட்சிகள் சுற்றுவதாக சிலருக்கு தோன்றலாம். வெறும் வலியை மட்டும் திணித்து கடத்தாமல், வெகுஜன ரசனையிலும், திரை அனுபவத்திலும் கவனம் செலுத்தியிருக்கும் உன்னதமான இப்படம் இறுதியில் உங்களை ஆட்கொள்ளும். வாழை Review: மாரி செல்வராஜின் உன்னத படைப்பு தரும் தாக்கம் என்ன? | mari selvaraj directorial Vaazhai movie review - hindutamil.in
  6. பாரிஸ் 2024 பராலிம்பிக்கில் சாதிக்கும் குறிக்கோளுடன் 8 இலங்கை மாற்றுத்திறனாளிகள் Published By: VISHNU 26 AUG, 2024 | 08:17 PM (நெவில் அன்தனி) டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு உட்பட 8 மாற்றுத் திறனாளிகள் இலங்கை தாய்திருநாட்டுக்கு புகழீட்டிக்கொடுக்கும் குறிக்கோளுடன் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ளனர். ஜப்பானின் கோபே பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் வென்ற நுவன் இந்திக்க கமகே, சமித்த துலான் கொடிதுவக்கு, பாலித்த பண்டார பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழா புதன்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையவுள்ளது. டோக்கியோ 2020 பராலிம்பிக் F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் (65.61 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் ஜப்பானில் இந்த வருடம் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் (66.49 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்த சமித்த துலான் கொடிதுவக்கு பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக பங்குபற்றுகிறார். ஜப்பானின் கோபே நகரில் உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பராலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக சமித்த துலான் தெரிவித்தார். 'நான்கு வருடங்களுக்கு முன்னர் பராலிம்பிக்கில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் வென்றுகொடுத்தையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது பாரிஸ் பராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளேன். அதற்காக நான் கடந்த பல மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தேன். உலக பராமெய்வல்லுநர் போட்டியில் சாதித்தது போன்று பாரிஸிலும் சாதித்து இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுப்பேன்' என்றார் அவர். கோபே நகரில் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவுக்கான குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற பாலித்த பண்டார, ரி44 வகைப்படுத்தல் பிரிவுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திக்க கமகே (11.83 செக்.) ஆகியோரும் இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறுகின்றனர். இவர்கள் மூவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்றெடுப்பார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது. பெண்களுக்கான வு44 வகைப்படுத்தல் பிரிவு நீளம் பாய்தலில் ஜனனி தனஞ்சன பங்குபற்றுகிறார். அவர் உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 5.08 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரப் பெறுதியைப் பதிவு செய்திருந்தார். இந்த நால்வரைவிட ஆண்களுக்கான வு46 வகைப்படுத்தல் பிரிவு 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் ப்ரதீப் சோமசிறி, வு42ஃ63 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் ப்ரசன்ன ஜயலத், பெண்களுக்கான ளு9 வகைப்படுத்தல் பிரிவு 400 மீற்றர் சுயாதீன நீச்சல் போட்டியில் நவீத் ரஹீம், ஆண்களுக்கான சக்கர இருக்கை ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் சுரேஷ் தர்மசேன ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். பராலிம்பிக் வரலாற்றில் 2012இலிருந்து 2020வரை இலங்கை ஒரு தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கு46 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் தினேஷ் ப்ரியன்த தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார். ரியோ டி ஜெனெய்ரோ 2026 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இதே நிகழ்ச்சியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு இம்முறை பராலிம்பிக்கில் பங்குபற்ற முடியாமல் போனது. அவருக்கு ஏற்பட்ட காய வடு முற்றாக நீங்கியுள்ளதால் எதிர்காலத்தில் பரா மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்ற உலக பரா மெய்வல்லுநர் சங்கம் தடைவிதித்துள்ளது. அவரை விட ப்ரதீப் சஞ்சய (வெண்கலம் - லண்டன் 2012 பராலிம்பிக்), சமித்த துலான் கொடிதுவக்கு (வெண்கலம் - டோக்கியோ 2020 பராலிம்பிக்) ஆகியோரே பராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மற்றைய இரண்டு இலங்கையர்களாவர். https://www.virakesari.lk/article/192073
  7. வடக்கு கிழக்கில் அரச திணைக்களங்களில் உள்ள பெயர்பலகையில் தமிழ் முதலிடம் வகிக்கின்றது என கூறி அதை அகற்றியவர்களும் இதே கட்சி புண்ணியவான்கள் தான் ...
  8. நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம், f2.8, க்ராப்ட், டெனோயிஸ்டு” என்று குறிப்பிட்டார். இந்த புகைப்படம், பகிரப்பட்டதிலிருந்து 6.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 7,400 லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. பலரும் இந்த இடுகைக்கு பதிலளித்துள்ளனர். சிலர் இந்த படத்தை “நம்பமுடியாதது” என்றனர். எக்ஸ் பயனர் ஒருவர், “இது மனதைக் கவருகிறது” என்றார். மற்றொருவர் “இந்த புகைப்படம் என் இதயத்தை தொட்டது” என்று பதிலளித்தார். https://thinakkural.lk/article/308471
  9. அர்ஜுனாவும் இரும்பு மோதிரமும்- நிலாந்தன் ஒரு கனேடிய நண்பர், அவர் ஒரு பொறியியலாளர், இரும்பு மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அதற்குப் பின்னால் உள்ள கதையைச் சொன்னார். கனடாவில், கியூபெக் பாலம் 1907ஆம் ஆண்டு மனிதத் தவறுகளால் நொறுங்கி விழுந்தது. அதில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு தவறு இனிமேலும் நடக்க கூடாது என்ற சங்கல்பத்தோடு பொறியியலாளர்களுக்கான சத்தியப்பிரமாணம் ஒன்றைக் குறித்துச் சிந்திக்கப்பட்டது. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பொறியியலாளர் Haultain ஹோல்டேய்ன் 1922ஆம் ஆண்டு பொறியியலாளர்களுக்கான தொழில்சார் சத்தியபிரமாணத்தை அறிமுகப்படுத்தினார். 1925ஆம் ஆண்டு அவருடைய மேற்பார்வையின் கீழ் பொறியல் பட்டதாரிகள் இரும்பு மோதிரம் அணிந்து சத்தியபிரமாணம் செய்து கொண்டார்கள். முதலாவது தொகுதி இரும்பு மோதிரங்கள் உடைந்து விழுந்த கியூபெக் பாலத்தின் இரும்புத் தூண்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. இது கனேடியப் பொறியியலாளர்களுக்கான பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். மருத்துவர்களுக்கும் அவ்வாறு உலகளாவிய “ஹிப்போகிரடிஸ் ஓத்” என்று அழைக்கப்படும் சத்தியப்பிரமாணம் உண்டு. பொறுப்புக்கூறல் எனப்படுவது மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் மட்டுமல்ல எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். ஒரு சமூகப் பிராணியாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் அது பொருந்தும். மருத்துவர் தவறுவிட்டால் உயிர் போகும் உறுப்புகள் போகும்.பொறியியலாளர் தவறுவிட்டால் பாலம் இடிந்து விழும்; அல்லது கட்டடம் இடிந்து விழும்; உயிர் போகும்; உறுப்புகள் போகும்; சொத்துக்கள் போகும். ஆசிரியர் தவறுவிட்டால் ஒரு தலைமுறையின் எதிர்காலம் நாசமாகும். தலைவர்கள் தவறு விட்டால் ஒரு நாடு அழிந்து போகும். எனவே மனிதத் தவறுகளுக்கு மனிதர்கள் பொறுப்புக் கூற வேண்டும். சமூகத்தின் மிகச்சிறிய அலகாகிய குடும்பத்துக்குள் குடும்ப அங்கத்தவர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். நிறுவனங்களுக்குள் கட்டமைப்பு சார்ந்து,தொழில் தர்மம் சார்ந்து,பதவிவழி சார்ந்து,பொறுப்புக்கூற வேண்டும். தலைவர்கள் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்.ஆகக் குறைந்தது எல்லா மனிதர்களும் தங்களுடைய மனச் சாட்சிக்காவது பொறுப்புக் கூற வேண்டும். மருத்துவர் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை அதிகப்படுத்தியுள்ளார். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் சமூகத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தங்களை அவர் அதிகப்படுத்தியுள்ளார். அவர் எப்பொழுதும் நேரலையில் தோன்றினார். அப்பாவித்தனமாகவும் வெகுளித்தனமாகவும் தனக்குச் சரியெனப்பட்டதை நேரலையில் கூறினார். அவரிடம் உள்ள அப்பாவித்தனமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளாத துணிச்சலும் கலகக் குணமும் அவரை மக்களுக்கு நெருக்கமானவர் ஆக்கின. அதேசமயம் அந்த அப்பாவித்தனமும் அவசரமும் நிதானமின்மையும் பக்குவமின்மையும் ஊடகங்கள் முன் அவரை சிலசமயம் பலவீனமானவராகவும் காட்டின. சுகாதாரத்துறை தொடர்பாக அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வெவ்வேறு ஊடகவியலாளர்கள் ஏற்கனவே முன்வைத்திருக்கிறார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த மு.தமிழ்ச்செல்வன் அதுதொடர்பாக கட்டுரைகள் எழுதியிருந்தார். ஆனால் அர்ஜுனா இதில் எங்கே வேறுபடுகிறார் என்றால், அவர் அந்த சிஸ்டத்துக்குள் இருந்துகொண்டே அந்த சிஸ்டத்தைக் கேள்வி கேட்கின்றார் என்பதுதான். அதுதான் அவருக்கு கிடைத்த கவர்ச்சி. அந்தக் கவர்ச்சியை அவர் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வாரா இல்லையா; அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எத்தகையது; அவருடைய தனிப்பட்ட சுபாவம் எத்தகையது… போன்ற எல்லா விடயங்களுக்கும் அப்பால்,அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு துறைசார் உயர் அதிகாரிகள் பதில் கூறுவதே பொருத்தமானது. ஏனெனில் அர்ஜுனா மருத்துவத்துறை சார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மருத்துவத்துறைக்கு அது தொடர்பில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தில் கிராமவாசிகள் அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகள் என்று அழைப்பார்கள். அங்கு மருந்தும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது என்று பொருள். ஆனால் அவை மெய்யான பொருளில் தர்மாஸ்பத்திரிகள் அல்ல. அங்கே வேலை செய்யும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தச் சம்பளம் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து திரட்டப்படுவது. அங்கு வழங்கப்படும் இலவச மருந்தும் சிகிச்சையும்கூட மக்களுடைய வரிப் பணம்தான். எனவே அங்கே யாரும் யாருக்கும் தானம் செய்யவில்லை. யாரும் யாரிடமும் தானம் பெறவும் இல்லை. ஆனால் வாங்கும் சம்பளத்துக்கு மேலதிகமாக தமது தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்கள் அநேகர் உண்டு. தாம் பொறுப்பேற்ற நோயாளியை காப்பாற்றுவதற்காக ஊண் உறக்கமின்றி சேவை புரியும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவமனைக்குப் போகக்கூடாது என்பதனை ஒரு தவம் போல கடைப்பிடிக்கும் மருத்துவர்கள் உண்டு. தனியார் மருத்துவத் துறைக்கு போனாலும் அங்கே நோயாளியின் நிதிநிலையைக் கருத்தில் எடுத்து காசு வாங்காத மருத்துவர்கள் உண்டு. வாங்கிய காசை உண்டியலில் சேகரித்து தானம் செய்யும் மருத்துவர்கள் உண்டு. எனவே அர்ஜுனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் மருத்துவர்களுக்கும் பொருந்தாது. போர்க்காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. பெருந்தொற்றுநோய் காலத்தில் உயிரைக் கொடுத்து உழைத்த மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. இப்பொழுதும் தொழிலைத் தொண்டாகச் செய்யும் மருத்துவர்களுக்கு அது பொருந்தாது. அரச மருத்துவமனையை தர்மாஸ்திரியாக பார்க்கும் மக்கள் அங்கு மருத்துவர்கள் தாதியர்களும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தர்மமாக இல்லை எனும் பொழுது அதிருப்தி அடைகிறார்கள், கோபமடைகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவத்துறை மீதான விமர்சனங்கள் அந்தக் கோபத்தை அதிகப்படுத்துகின்றன. அந்தக் கோபங்களை கேள்விகளை அதிருப்தியை அர்ஜுனா குவிமயப்படுத்தினார். அதனால்தான் சாவகச்சேரியில் அத்தனை மக்கள் திரண்டார்கள். சில நாட்களுக்கு முன் சம்பந்தரின் அஞ்சலி நிகழ்வில் திரண்டதைவிட அதிக தொகையினர் ஒரே நேரத்தில் திரண்டார்கள். அர்ஜுனா எப்பொழுதும் நேரலையில் தோன்றினார் அதுதான் அவருடைய பலம். பின்னர் அதுவே அவருக்கு பலவீனமாகவும் மாறியது. அரச மருத்துவமனைகளை தர்மாஸ்பத்திரிகளாக கருதும் ஒரு சமூகத்தின் மத்தியில் மருத்துவர்களுக்கு உயர்வான பவித்திரமான ஒரு இடம் உண்டு. பொதுவாக மருத்துவர்கள் அந்த பவித்திரமான ஸ்தானத்தை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆனால் அர்ஜுனா வெளியே வந்தார். பல மாதங்களுக்கு முன் கண்டாவளையைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் வெளியே வந்தார். இப்பொழுது முகநூலில் சில மருத்துவர்கள் அவ்வாறு வெளியே வருகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் விதிவிலக்கு. பொதுவான மருத்துவர் குணம் என்பது தனக்குரிய பவித்திரமான ஸ்தானத்தைப் பேணுவதுதான். ஆனால் அர்ஜுனா அப்படியல்ல. அவர் மருத்துவர்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொதுவான பிம்பத்துக்கு வெளியே நிற்கிறார். நேரலைமூலம் அவர் சமூக வலைத்தளங்களில் கட்டியெழுப்பியிருக்கும் பிம்பமும் திடீர் வீக்கமாக இருக்கலாம். அவர் தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை, பலவீனங்களை சிஸ்டத்தின் மீதான விமர்சனங்களாக மாற்றுவதில் வெற்றி கண்டு விட்டார் என்ற ஒரு விமர்சனமும் உண்டு. எனினும்,அவர் சார்ந்த சிஸ்டத்தின் மீது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள் விசாரணைக்குரியவை. திணைக்களம் சார்ந்த உள்ளக விசாரணைகள் உண்மைகளை வெளியே கொண்டு வரலாம். அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் அதை மணந்து கண்டுபிடிக்கலாம். அர்ஜுனா எழுப்பிய கேள்விகள் தொடர்பாக உண்மைகளை புலனாய்ந்து வெளியே கொண்டுவர வேண்டிய துறைசார் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அது ஊடகத்துறை சார்ந்த பொறுப்புக் கூறல். அதேசமயம் துறைசார் அரச உயர் அதிகாரிகள் அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக மக்களுக்கு பதில்கூற வேண்டும். அதைவிட முக்கியமாக அர்ஜுனா ஒரு பொறியைத் தட்டிப்போட்டதும் அது எப்படி சாவகச்சேரியில் தீயாகப் பரவியது என்பதற்குரிய சமூக உளவியலையும் தொகுத்து ஆய்வுசெய்ய வேண்டும். அர்ஜுனாவின் கலகம் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவலாகக் காணப்பட்ட அதிருப்தி,கோபம்,பயம், சந்தேகம் போன்றவற்றின் தொகுக்கப்பட்ட விளைவுதான். ஏற்கனவே பொதுப் புத்திக்குள் இருந்த பயங்களையும் கோபத்தையும் அதிருப்தியையும் அர்ஜுனா ஒருங்குவித்தார் என்பதுதான் சரி. அர்ஜுனாவின் விமர்சனங்கள் விவகாரம் ஆகிய பின் சில நாட்கள் கழித்து யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஒரு குறிப்பை முகநூலில் போட்டார். அது போதனா வைத்தியசாலை மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் நோக்கிலானது. ஆனால் அதற்கு கீழே வந்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், 500க்கும் அதிகமான கருத்துக்களில் 90 விகிதத்துக்கும் அதிகமானவை மருத்துவத் துறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவை. அதில் ஒரு செய்தியுண்டு. பொதுசன மனோநிலை ஏன் அவ்வாறு அதிருப்தியோடும் கோபத்தோடும் காணப்படுகின்றது? ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு துறைசார்ந்த பொறுப்புக்கூறல் தொடர்பில் விழிப்பு அதிகரிப்பது நல்லது. ஒவ்வொருவரும் தொழில் சார்ந்தும் அறம் சார்ந்தும் குறைந்தது மனச்சாட்சிக்காவது பொறுப்புக்கூற வேண்டும். ஒரு மருத்துவர் கூறியதுபோல, பொது வைத்தியசாலைகளில் கழிப்பறைகளை பயன்படுத்துவதிலும் பொதுச்சொத்தை நுகர்வதிலும் பொதுமக்கள் எவ்வளவு தூரம் பொறுப்போடு காணப்படுகிறார்கள்?எல்லாப் பொது மருத்துவமனைகளிலும் கழிப்பறைகள் மோசமாகக் காணப்படுகின்றன. ஏன் அதிகம் போவான்? முருகண்டியில் கழிப்பறைக்குக் காசு வாங்கப்படுகின்றது. ஆனால் அந்தக் கழிப்பறையின் சுகாதாரச்சூழல் எப்படியிருக்கிறது? மேற்கத்திய சமூகத்தின் சமூகப் பொறுப்பை கண்டுபிடிக்கக் கூடிய இடங்களில் ஒன்று கழிப்பறைகள் ஆகும். அங்கே பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக இருக்கும். அது நலன்புரி அரசுக் கட்டமைப்பு. தவிர அங்கே கழிப்பறைகள் உலர்ந்தவை. ஆனால் நமது கழிப்பறைகளோ ஈரமானவை. எனவே எமது சூழலுக்கு ஏற்ப வித்தியாசமாகச் சிந்தித்து கழிப்பறைகளில் சுத்தத்தைப் பேண வேண்டும். ஆனால் பொதுக் கழிப்பறைகளை வைத்து ஒரு சமூகத்தின் பொறுப்புணர்ச்சியை மதிப்பிடலாம். எனவே பொறுப்புக்கூறல் எல்லாத் தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்களில் தொடங்கி அரசாங்கம் வரை அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பொறுப்புக்கூறல் என்ற வார்த்தைக்கு அதிகம் பிரயோக அழுத்தம் உண்டு. அரசியல் அடர்த்தி உண்டு. 2015 ஆம் ஆண்டு ஐநாவில் நிறைவேற்றப்பட்ட30/1 தீர்மானம் பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு உரியது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு யாருமே இதுவரை பொறுப்புக் கூறவில்லை. இவ்வாறு அரசியல் அர்த்தத்தில் பொறுப்புக் கூறப்படாத ஒரு நாட்டுக்குள், அல்லது பொறுப்புக்கூற யாருமற்ற ஒரு நாட்டுக்குள், பொறுப்புக் கூறலை பன்னாட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு சிறிய மக்கள் கூட்டம்,தனக்குள்ளும் அந்தந்தத் துறை சார்ந்து அல்லது ஆகக்குறைந்தது அவரவர் தமது மனச்சாட்சிக்காவது பொறுப்புக் கூறத்தானே வேண்டும்? https://www.nillanthan.com/6828/
  10. தன் குடும்பவிடயங்களை எப்படிப்பொறுப்போடு நோக்கிப் பேணுதல்போல், பொதுத்துறைகளில் வேலைசெய்வோர் சிந்தித்தாலே சமூகமாற்றம் தானாக நிகழும். உண்மையில் சில மருத்துவர்களின் சேவைநோக்குப் போற்றுதற்குரிவை. அப்படியான அனுபவங்களின் ஊடாக உணர்ந்துதான் பார்க்க முடியும். சுயநல நோக்குடைய மருத்துவர்களால், நன் நோக்கோடு செயற்படும் மருத்துவர்களையும் ஒரே தராசிற் போட்டுவிட முடியாது
  11. பொப் இசைப் பாடகர் பரமேஸ்வரனின் மகள் பிரபாலினி பிரபாகரனின் இசையில்.
  12. பகிர்வுக்கு நன்றி பிரியன் . .......! 👍
  13. லூசு என்றாலும் இறுக்கிப் பூட்டிச் சரிப்படுத்தி விடலாம். மரவள்ளிக் கட்டையை நாட்டிவிட்டு… ஒவ்வொருநாளும் கிழங்கு வந்துவிட்டதா என்று புடுங்கிப் பார்ப்பவரை என்னென்று சொல்வது.?????🤔
  14. இவ்வாறான சந்திப்புக்களில் மொழிபெயர்ப்பாளர்களும் அழைத்துச் செல்லப்படுவது வழமையான நடைமுறை. ஆகவே மொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தான் பேசப்போகும் விடயம் குறித்து சிறிதரன் நிச்சயம் சிலதடவைகளாவது ஆங்கிலத்தில் பேசிப் பார்த்திருக்கலாம். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்திருக்கிறார், ஆங்கிலம் ஓரளவிற்குத் தெரிந்திருக்கும்.
  15. முள்ளிவாய்க்கால் சாபங்கள் ஏதோ ஒரு வகையில் பலித்துக்கொண்டே இருக்கின்றது.
  16. ஊரில் எனக்கு கொஞ்ச காணி பூமியள் இருக்கு..... அதை பராமரிப்பவர்கள் வந்து ஒருக்கால் காணி பூமியளை பார்த்து விட்டு போகுமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வந்தால் குல தெய்வத்திற்கு பொங்கல் பொங்கி கழிப்பு செய்தால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.
  17. 1) காணொளியை பார்க்கவும்”. 2) கற்பூரப் புத்தியையா உங்களுக்கு லபக்கெனப் பற்றிப்பிடித்துவிட்டீர்கள். 🤣 இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடமே நான் கேட்பது. 🤣
  18. இந்தியா சாஸ்திரியார் குஜால் குமாரைக் கேட்டால், சரியாக எந்த நாளில் மூன்றாம் உலக மகாயுத்தம் தொடங்கப் போகுது என்று அந்த நாளைக் கூட குறித்துக் கொடுப்பாரே.................🤣. பைடன் போட்டியில் இருக்கும் போது என்ன கெத்தாக இருந்தார் ட்ரம்ப்......... இப்ப தினமும் ஏதாவது நித்திரையில் உளறுவது போல என்ன என்னவெல்லாமோ சொல்லுகின்றார்........ இரண்டு தேர்தல்களும் முடிந்தால் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டார்கள்.............
  19. உங்கள் கருத்துதான் நமதும் இன்னாருக்கு குத்த வேண்டாம் என்று சொல்பவர்களால் அதற்குரிய விளக்கம் சரியாக கொடுக்க முடியவில்லையே ? நேரடியாக பெட்டி என்று எழுதலாமே ?
  20. இங்கே யாரும் மக்களுக்கு அறிவுரையோ அல்லது அரசியலோ செய்யவில்லை. அதே மக்களின் ஒரு பகுதியினரின் ஒரு முடிவை அவர்களைப் போலவே செய்து பார்க்கலாம் என்று மட்டுமே எழுதுகிறோம். அவ்வளவு தான்.
  21. சிறப்பாக சொன்னீர்கள் . யாருக்கு நீ வாக்கு போட வேண்டும் என்று சொல்வதே தமிழர்களை அவமானபடுத்துவதாகும் இப்போது ஒரு இனவாத தந்திர பிரசாரத்தை கடைபிடிக்கின்றனராம் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது மானம் உள்ள தமிழனின் கடமை
  22. ❤️............ ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் இவர்கள் போன்றோரால் ஏனம் ஒதுக்கத்தக்க வேண்டிய ஒன்றில்லை என்ற விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் 'சேத்துமான்', 'பன்னி குட்டி' என்னும் வேறு இரண்டு படங்களிலும் பன்றிகள் நடுவில் நின்றன. சேத்துமானில் பன்றியையே வீட்டிலேயே சமைக்க விடாத ஒரு பகுதியினரைக் காட்டி இருப்பார்கள். படத்தின் முடிவு கொஞ்சம் அதிர்ச்சியானது. பன்னி குட்டியில் பன்றிகளைப் பற்றியும், வேறு பல மூடநம்பிக்கைகளையும் காட்டி இருந்தனர். பன்றி மட்டும் இல்லை, வாத்து மற்றும் செம்மறியாடு போன்றவையும் ஒரு ஒப்பீட்டளவில் கீழாகவே பார்க்கப்படுகின்றன. அவைகளுக்கும் ஒரு காலம் வரும்............👍.
  23. ஊழல் அற்ற சிறந்த நிர்வாகத்தை நாங்கள் உருவாக்குவோம். - நாமல் ராஜபக்ச.- சஜித், ரணில், அனுரா.... எல்லாரும் மேடையில பேசுற பேச்சை பார்த்தால்... அடுத்த வருசமே டுபாய், கத்தார் ஷேக் எல்லாம் இலங்கை வந்து.. வேலை தேடுவாங்க போலை இருக்கே.... 😂 🤣
  24. யார் அதிகம் பிச்சையிடுவார்களோ அவர்கள் பக்கம் சாயவேண்டும் என்றாகிவிட்டது ஈழத்தமிழர் நிலைமை. ☹️
  25. அதை மட்டும் சொல்ல மாட்டோம். ஆனால் பொது வேட்பாளருக்கு வாக்கு போடவே கூடாது. நேற்று ஊரிலுள்ளவர்களுடன் பேசியபோது பொது வேட்பாளருக்கான ஆதரவு வலுக்கிறதாக சொல்கிறார்கள்.
  26. Published By: DIGITAL DESK 3 26 AUG, 2024 | 01:14 PM இலங்கையில் 97 வயது மூதாட்டி ஒருவர் முதுமாணிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் லீலாவதி தர்மரத்ன என்ற மூதாட்டி பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளந்தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர் பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவித்துள்ளார். லீலாவதி தர்மரத்ன இதற்கு முன்னர் ஆசிரியையாகவும் நோட்டரி அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/192017
  27. சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த மடைத்தனத்தை தானே திரும்ப திரும்ப செய்கிண்றீர்கள் ...
  28. "அப்பா நாங்கள் accidents இல் ஒருவர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன், அவர் பாவம் என்று கடந்து விடுகின்றோம்... ஆனால் அவருக்கு பின்னால் அவர் அம்மா, அக்கா, அப்பா, பிரெண்ட், என்று எத்தனை பேர் துடிதுடித்து போவினம் என்று நாங்கள் நினைப்பதே இல்லை" என் மகள் இப் படம் முடிந்த பின் காரில் வரும் போது கூறியது. நேற்று மகளையும் கூட்டிக் கொண்டு மாரி செல்வராஜின் வாழை படம் பார்க்க போனோம். உன்னதமான திரைமொழியில், மிகச் சிறந்த உடல் மொழியில், நடப்பவற்றை சினிமா என நம்ப முடியாத காட்சிகளில், உயிரோட்டமான இசையில், பதைக்க வைக்கும் கிளைமாக்ஸில் வாழை எம் முன் விரிகின்றது. சிவனணைந்தான் எனும் சிறுவனின் பார்வை மற்றும் அனுபவத்தின் வாயிலாக வாழை ஒரு கிராமத்தில் கூலிக்காக சுரண்டப்படும், அதனை கேள்வி கேட்கும் சாதாரண மனிதர்களின் நாளாந்த கடின வாழ்வை பேசுகின்றது. குலை குலையாக வாழை குலைகளை சுமந்து வியாபாரிகளுக்காக உழைக்கின்ற ஏழைகளுக்கு கடும் பசியில் கூட ஒரே ஒரு வாழைப்பழத்தை சாப்பிட தானும் கொடுக்க மறுக்கும் உலகை மிக இயல்பாக வாழை காட்டுகின்றது. பதின்ம வயதில் ரீச்சர் மேல் வரும் ஈர்ப்பை கவிதையாக காட்டிய விதமும் அருமை. கொஞ்சம் கூட தனக்கு சம்பந்தம் இல்லாத, கேள்விப்படாத, கற்பனை செய்ய முடியாத, மாந்தர்களின் வாழ்வைஎ என் மகளுக்கு கூட உணர்வு பூர்வமாக புரிய வைக்கிறது மாரி செல்வராஜின் திரைமொழி. பல நாட்களுக்கு சிவனணைந்தான், அவன் காதல், அவனது அக்கா, சுற்றம், நட்பு, கிராமம், மாடு, அந்த கோழி எல்லாம் என் நினைவுகளை விட்டு அகலாது..
  29. அந்த அளவிற்கு... இந்த அரசியல்வாதிகள் சுத்த ஞானசூனியங்களாக இருந்திருக்கின்றார்கள். அதுகளை கொண்டாடிய சனங்களை என்னவென்று சொல்வது.
  30. வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்! தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. "வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா? 1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா? அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன? 2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது. 3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை? குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. 4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்? மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது. 5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள். 6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்? இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை. விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும். இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம். மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும். நன்றி திருநாவுக்கரசு தயந்தன் 2024.08.06 https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/
  31. இவ்வாறான மருத்துவர்களிடம் நானும் தம்பியும் சேவைகள் பெற்றுள்ளோம்.
  32. அண்மைக்காலத்தில் மேற்கின் நடவடிக்கைகளைக் கவனித்தால் "உக்ரேன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தூண்டிவிடிவது போல இருப்பதைக் காணலாம். உக்ரேனை வேகமாக அழிக்க வேண்டும் " என மேற்கு விடும்புகிறது போல,🥺
  33. எனது வாழ்நாளில் மூன்றாம் உலகப்போரை பார்ப்பேன் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது.. கடந்த மாதம் வரை இது மூன்றாம் உலகப்போராக மாறாது என்ற நம்பிக்கை இருந்தது.. ஆனால் இப்பொழுது மேற்கு அதை விரும்புவதுபோல் தெரிகிறது.. பலம் உள்ளவர்கள் வைப்பதுதான் இந்த உலகில் சட்டம்.. ஆக வெகுவிரைவில் அதை பார்க்கலாம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.