Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3054
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    15791
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/21/24 in all areas

  1. பொறுமையாக இருந்து சரியான முடிவுகளை கீழே இணைக்கப்பட்டுள்ள திரியில் இணைக்கவும். உத்தியோகப்பற்ற முடிவுகளை இணைப்பதை தவிருங்கள். நன்றி
  2. அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்வளையம் வைத்துள்ளார்.
  3. இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 😀
  4. அம்பலாங்கொடவும் இப்படித்தான் வந்திருக்கின்றது........... இதுக்கு மேலயும் என்னத்தை எண்ணுறது... இங்கே சின்னப் பிள்ளைகள் விளையாடும் லீக்கில் ஒரு அணி இன்னொரு அணிக்கு ஐந்து கோல்கள் இடைவெளிக்கு கூட அடிக்கக் கூடாது என்ற ஒரு விதிமுறை இருக்குது (Mercy Rule).......... அநுர செய்யிறது கொஞ்சம் கூட சரியே இல்லை.............🤣.
  5. நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான். அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார்.
  6. நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கி ஒற்றுமையாக தொடர்சசியாக அரசியல் வேலைதிட்டங்களை முன்னெடுத்து இலங்கையில் தமிழரின் அரசியல், பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தான் உண்மையான ஒற்றுமை.
  7. பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும் உயிரினம். இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. கற்பனை செய்து பாருங்கள் ; 500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡
  8. அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......! 👍
  9. தரவுகள் நிறைந்த சிறப்பான கருத்து.
  10. மொத்தமாகக் கூட்டினால் 0.25%........... இங்கு கடனுக்கான வட்டி விகிதத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் கழிவும் இதே அளவே...........🤣.
  11. கண்ணுக்கு முன்னுக்கு கத்தரிக்கோலோடு நிக்கிறார்களே எண்ட பயம் கூட இல்லாது போய்ட்டு..என்னத்தை சொல்லுறது..😄
  12. எவ்வளவு தான் வெளுவெளென்று வெளுத்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே. இதுவும் சாதனை தான்.
  13. சிங்களதேசம் மற்றத்துக்கு தயாராகி விட்டுது.ஜனநயக முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளை தண்டிக்கத்தயாராகிவிட்டது.ஆனால் தமிழர்கள் எந்த சிந்தனையுமின்றி இலு்கிறார்கள்.
  14. @Kapithan , உத்தியோகப்பற்றற்ற / ஆதாரமற்ற தேர்தல் முடிவுகளை இணைக்க வேண்டாம்.
  15. எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்????? முழு முட்டாள் பிசாசே. ..
  16. ஜனாதிபதியாக வர வேண்டிய சஜித்துக்கு…. சுமந்திரன் ஆதரவு கொடுத்து தோற்கப் பண்ணிய ராசி இல்லாத கோஷ்டி என்று, அனுர… இவர்களை தள்ளியும் வைக்கலாம். 🤣
  17. அனுரா சேர்த்துகொள்வாரா எனப்து தான் பிரச்சனை?
  18. வடக்கு கிழக்கைச் சேர்ந்த பலர் அந்தப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும், விசுகு ஐயா. ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர். அவர்களில் பலர் தபால் மூலமே வாக்களித்திருப்பார்கள். மற்ற நாமல் ராஜபக்சவிற்கு (Namal Rajapaksha; பெயரில் ஒரு h அதிகமாக இருக்கின்றது....😜) 67 வாக்குகள் கிடைத்திருக்கின்றது.......... ஐந்து ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் நின்றது போல, இங்கே இரண்டு நாமல்கள்.........
  19. டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.
  20. ரணிலுக்கு வேண்டும் என்றால் அனுர மேல் பயம் இருக்கும் . ஆனால் அணுரவிற்கு இருக்காது . கோத்தா + மகிந்தவே தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிக்கு வழிவிட்டவர்கள். இலங்கையில் தேர்தல் முடிவுகளை புறம் தள்ளி ஆட்சி செய்யும் முறை ஒரு போதும் நிகழ்ந்தது இல்லை.
  21. அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பது அதிகம்..... ரணில் மாத்தையாவே அவர்களின் விருப்பமாக இருக்கும்...... சம்பளம் கூடுதல்லே.....
  22. உள்ளிருக்கும் பாசக்கார உறவுகளின் விசுவாசமான தகவல்கள்... 😃
  23. ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க… அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி… இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். “சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂
  24. புராணத்தில் வாலி எதிராளிகளிடமிருந்து அவர்களின் பலத்தில் அரைவாசியை பிடுங்கி எடுத்து விடுவார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. வாலியின் அநுரகுமார இங்கே அப்படி எடுக்கின்றார் போல...........🤣. மூன்று பேரும் முப்பத்தி சொச்சம் எடுக்கட்டும்........... இந்த இரண்டாவது வாக்குகளை எண்ணும் algorithm நடைமுறையில் எப்படிப் போகுது என்று பார்ப்பதற்கு இதுதான் ஒரேயொரு சந்தர்ப்பம்.........
  25. உங்கள் அரசியல் புரிதல் அவ்வளவுதான், வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறீர்கள்.😂
  26. அரியம் தேர்தலில் நின்றிருக்காவிடில்… தமிழ்ப்பகுதிகளின் வாக்குப் பதிவு 15 வீதமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு மக்கள் வெறுப்பில் உள்ளார்கள்.
  27. கீழுள்ள விடைகளில்... ஒன்றை தெரிவு செய்யவும். 😂 அனுரகுமார திசாநாயக்க ஆகிய நான்..... A) இந்த நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றேன். B) இனி தேர்தல் பக்கமே வர மாட்டேன். C) உங்களுக்காக மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன்.
  28. எந்த வெதுப்பகம் என்று தெரிந்தால் வேறு யாராவது ஜனாதிபதியாக வந்தால் மூடுவிழா கொண்டாடடாமில்ல.
  29. தேர்தல் முடிவுகள் வரமுன்பே... அனுரவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக, கேக் தயார் நிலையில் உள்ளது. 🙂
  30. மலைப்பாம்பு (Python) நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. https://ta.wikipedia.org/wiki/மலைப்பாம்பு
  31. ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.
  32. தமிழகத்தில் இந்து மதத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், குறைந்த சாதியினர் என்று உயர் சாதியினரால் கருதப்படும் ஒரு பகுதியினர் இழிவாக நடத்தப்படுவது போன்றவை அம்மக்கள் சாதிய வேற்றுமைகள் அற்றதாகக் கருதப்படும் பெளத்த மதத்திற்கோ அல்லது இஸ்லாமிய மதத்திற்கோ மாறுவது நடக்கிறது. அம்பேத்காரின் புரட்சியும் இதன் அடிப்படையில் அமைந்ததுதான். இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வேண்டுமானால் உயர் சாதியினரின் முகத்தில் அறையும் முகமாக "உங்கள் மதம் வேண்டாம் போடா" என்று பெளத்த மதத்தைத் தழுவோர் இதன் மூலம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டைப் போல் இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களின் மத்தியிலும் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஆலயங்களுக்கு வருவதற்கான தடை, வீடுகளுக்குள் வருவதற்கான தடை, உணவருந்துவதற்குத் தனியே சிறட்டைகள், வெளியில் வைக்கப்படும் கோப்பைகள் என்று இருந்தபோதிலும் தற்போது இது திருமணம் முடிக்கும்காலத்தில் மட்டும் பாவிக்கப்படுகின்ற, உயிர்ப்புடன் இருக்கின்ற, மறுக்கமுடியாத காரணியாக இருக்கிறது. ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பெளத்தத்திற்கு மாறுவதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கின்றது. சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் உந்தப்பட்ட அருண் சித்தார்த் போன்ற துணை இராணுவக் குழு முக்கியஸ்த்தரும், சுரேன் ராகவன் போன்ற சிங்களத்திற்குச் சேவை செய்யும் புத்தி ஜீவிகளும் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். சாதிய வேற்றுமையினைக் காரணம் காட்டி சிங்கள பெளத்த மயமாக்கல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.
  33. இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
  34. ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ . ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார். ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”. “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார். பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா? பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும். கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்...... கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : ஆம், ஒருவகையில் 1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  35. வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது, ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
  36. போரும் அதன் பின் மகிந்த / கோத்தா வின் சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையுடனான ஆட்சியும், அடக்குமுறைகளும் தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் ஓரணியில் நின்று குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு அதிகமானோர் வாக்களிக்கும் போக்கை உருவாக்கி இருந்தது. மகிந்தவை எப்பாடு பட்டாவது ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே மக்கள் சரத் போன்சேக்காவுக்கு, மைத்திரிக்கு, சஜித்துக்கு வாக்களித்தனர். மகிந்தவை தோற்கடித்து மைத்திரியை கொண்டு வந்தது தமிழ் / முஸ்லிம் வாக்குகள் தான். இதனால் தான் மகிந்த தன்னை தமிழர்கள் தோற்கடித்து விட்டனர் என சிங்கள மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருந்தார், ஆனால் இன்று வெளித்தெரியக் கூடிய, அன்றாட வாழ்வில் உணரக் கூடிய இராணுவ மற்றும் அடக்குமுறைகள் வடக்கு கிழக்கில் இல்லை. இனவாதம் பேசி தேர்தலில் வெல்ல முடியாத என்ற சூழ்நிலையில் முன்னனி சிங்கள வேட்பாளர்கள். ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் (பேசும்) மக்கள் ஓரணியில் திரளக் கூடிய சூழ்நிலை இன்று இல்லை. இவர்களின் வாக்குகள் 3 ஆக பிரியும் இந்த தடவை. இந்த யாதார்த்தைப் புரிந்து கொள்ளாத தமிழ் தலைமைகள் தான் இன்று அவர்களுக்காக அரசியல் செய்கின்றனர். நாளை மறுதினம் இதனைப் புரிந்து கொள்வர்.
  37. 'முடியல்லடா சாமி............' என்று உடனேயே ஓடமுடியாது........ கந்தையா அண்ணையுடன் ஒரு இரண்டு பதிவுகளாவது நின்று பிடித்து விட்டே அப்படிச் சொல்லிக்கொண்டு ஓடவேண்டும்................🤣.
  38. யப்பா முடியலடா சாமி !! தமிழ் அகதிகளை எப்படி தமிழ் நாட்டிலும், இந்தியாவிலும் நடத்துகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு வந்து இங்கு கருத்து எழுதுங்கள்! 🙏
  39. நன்றி பகிர்வுக்கு, நாளை பணத்தை அனுப்பிவிட்டு, உங்களுக்கு தனிமடலில் அறிய தருகின்றேன், அந்த பிள்ளை நீடூழி வாழ்த்து🙏, அவர் கனவை அடைய வேண்டும்
  40. நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.