Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20014
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/12/24 in Posts

  1. அமெரிக்காவில் எங்களுக்கு உகந்த இடங்களில் இவை இரண்டுமே சிறந்தவை, கொழும்பான். இந்த இரண்டில் எது சிறந்தது என்றால், நான் கலிஃபோர்னியாவே சிறந்தது என்று சொல்வேன். வேலை வாய்ப்புகளில் கலிஃபோர்னியாவே ஆகச் சிறந்த மாநிலம். செலவு அதிகம் தான். ஆனால் பொதுவாகவே இங்கு சம்பளமும் அதிகம். வீட்டு விலைகள் இரண்டு மாநிலங்களிலும் அதிகம் என்றாலும், கலிஃபோர்னியாவில் வீட்டு விலை எக்கச்சக்கமாக கூடிப் போயிருக்கின்றது. இது ஒரு பெரிய பிரச்சனையே. கலிஃபோர்னியாவின், குறிப்பாக தென் கலிஃபோர்னியாவின், வருடம் முழுவதுமான காலநிலை மிகச் சிறந்தது. வருடத்தில் பத்து மாதங்கள் வெறும் ரீ சேட்டுடன் இரவு பத்து மணிக்கும் கிரவுண்டில் பந்து அடிக்கக் கூடிய காலநிலை. அமெரிக்காவின் மேற்குக்கரை ஒப்பீட்டளவில் துவேஷம் குறைந்த பிரதேசம். பொதுவாகவே இந்தப் பக்கம் உள்ள மக்கள் இறுக்கமும், பழைய நம்பிக்கைகளும் குறைந்தவர்கள். இரண்டுமே அழகானவை. இந்து சமுத்திரத்திற்கும், அத்திலாந்திக் சமுத்திரத்திற்கும் (புளோரிடா கரைகள்) அவ்வளவாக வித்தியாசம் இல்லை. ஆனால் பசுபிக் சமுத்திரம் (கலிஃபோர்னியா கரைகள்) எப்போதும் ஓங்கி ஓங்கி அடிக்கும். அத்துடன் எப்போதும் குளிரான கடல், அலாஸ்காவுடன் தொடர்பு இருப்பதால். நீண்ட, அகன்ற கடற்கரைகள், மலைகள், வெளிகள், தோட்டங்கள். கடைசியாக 1994ம் ஆண்டு பெரிய ஒரு பூமியதிர்வு கலிஃபோர்னியாவில் வந்தது. இங்குள்ள வீடுகளும், தெருக்களும், பாலங்களும், எல்லாமே பெரிய அதிர்வையும் தாங்கக் கூடிய வகைகளிலேயே கட்டப்படுகின்றன. என்னுடைய தெரிவு கலிஃபோர்னியா............. மிக நீண்ட நாட்களாக, 27 வருடங்கள், இந்த மாநிலத்தில் இருப்பதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
  2. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு) 4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்) 5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன். 6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். 7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா. (சின்னம்: வீணை) # தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) # மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும். # அங்கஜன் இராமநாதன் எந்தக் கட்சியில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. # அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன். # சிறீரெலோ என்னும் கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. # சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.
  3. 1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தான் அது. 9 எம் பிக்களை ஈபிடிபி பெற்றுக் கொண்டது. யாழ் மாவட்டத்தில் தீவகத்தில் மட்டுமே தேர்தல் இடம்பெற்றது. ஒரு சில எம் பி கள் நூற்றுச் சொச்ச வாக்குகளை மட்டுமே பெற்று தேர்வானார்கள். அதில் ஒருவர் பிற்காலத்தில் தினமுரசு ஆசிரியராக இருந்த அப்பிள் என அழைக்கப்பட்ட ரமேஷ். (பின்னர் 1999 இல் டக்கிளசால் வெள்ளவத்தையில் ஈபிடிபி வாங்கிய (நெல்சன் வீதி இலக்கம் 15) வீட்டை எவர் வைத்திருப்பது தொடர்பாகவும், ரமேஷ் குமார் பொன்னம்பலத்துடன் இணைய முயற்சித்ததாலும் கொல்லப்பட்டார்.) புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக நினைவில்லை. ஆனால் தம் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் சிறி லங்கா வின் தேர்தலை நடாத்த அனுமதிப்பது தனி நாட்டுக் கோரிக்கை யின் அடிப்படையில் விரோதமானது என்பதால் நடாத்த விடவில்லை.
  4. குமாரசாமி அண்ணை, உண்மையில்… பல கட்சிகள் உருவாக தமிழரசு கட்சியின் செய்கைகளும் முக்கிய காரணம். ஆனால்… அதை பலர் இங்கு மூடி மறைத்துக் கொண்டு கருத்து எழுதுகின்றதை பார்க்க சிரிப்பாக இருக்குது. 😂 அது சரி…. வெள்ளை அடிக்கிற வேலையில் இறங்கியவர்களிடம் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 🤣
  5. நானும் குமாரசாமிய சுருக்கி " வட குமார" எண்ட பேரில கட்சி தொடங்குவம் எண்டு பாக்கிறன். சின்னம் வடலி 😁
  6. முன்னர் சேர்ந்திருந்த அரசுகளிடம் ஏன் இவைபற்றி கதைக்கவில்லை? எனது பங்கிற்கு 1) கொழும்பு —-யாழ் நெடுஞ்சாலை 2) தீவகங்களுக்கு ஓடும் கப்பலில் ஏறவே பயமாக உள்ளது. கீழ்த்தட்டு மேற்தட்டு கூரை என்று மக்களை ஏற்றுகிறார்கள். விபத்து நடந்தால் கீழ்த் தட்டில் உள்ளவர்கள் வெளியே வரவே முடியாது.
  7. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  8. நேற்று சிலோனுக்கு ரெலிபோன் எடுத்து ஒரு நண்பருடன் கதைத்தேன்.அரசியல் பற்றி கதைக்கும் போது ...தமிழ் அரசியலில் சுமந்திரனை மாதிரி ஒரு பச்சைக்கள்ளன் ஒருத்தனும் இல்லை என சொன்னார்.பாராளுமன்ற கதிரைக்காக சுக போக வாழ்க்கைக்காக எதையும் செய்யக்கூடியவர் என சொல்லி திட்டித்தீர்த்தார். இன்னுமொரு விடயத்தையும் சொன்னார். அதாவது இவங்கள் செய்யிற பொய் பிரட்டுக்களால தமிழ்ச்சனம் அனுர பக்கத்துகுத்தான் வாக்களிக்கும் போல கிடக்கு என்றார். வெறுப்பு அரசியல் காலம் பெரிசுகள் வழமை போல வீட்டுக்குப் போடுவார்கள். போனஸ் க்கு அடிபாடு நடக்லாம். சுமந்திரன் தேர்தலில் வெல்லாவிட்டால் போனசில் வரலாம்.
  9. ரமேஷ்நடராஜா என்பது சொந்தப் பெயர் அப்பிள், ஆளின் அழகை பார்த்து சொல்லும் பெயர். அற்புதன் நடராஜா என்பது தினமுரசில் அவர் பாவித்த பெயர்
  10. M. A. Sumanthiran 5h · 2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா? இந்த நாட்டுக்கு வயது எத்தனையோ, அத்தனை வயது தமிழரசுக் கட்சிக்கும் உண்டு. அன்றிலிருந்து இன்று வரை தமிழர் தம் சுயாட்சிக்கான ஓயாத அரசியற் குரலாகத் தமிழரசுக் கட்சி ஒலித்து வந்திருக்கிறது. இன்று எம் மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. போரின் பின்னான இந்தப் 15 ஆண்டுகளில் தனித்த தமிழ் அரசியலால் விளைந்த நன்மைகள் என்ன? தமிழ்த் தேசியம் இன்றும் அவசியமானதா? தென்னிலங்கையில் மக்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாற்றத்தில் நாமும் இணைந்து கொண்டால் என்ன? போன்ற கேள்விகளை எமது மக்கள் பலர் கேட்கிறார்கள். இந்த நிலைக்கு மக்கள் வந்திருப்பதற்கு போரின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் நாம் கண்ட மறுதலிக்க முடியாத கோளாறுகள் பலவும் காரணம் என்பது நிதர்சனம். இதற்கு இந்த அரசியல் வெளியில் பயணித்து தவறியவர்களுக்கும், அப்படிப்படவர்களைக் கிரமமாக அப்புறப்படுத்தத் தவறியவர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது. நிற்க, தமிழ்த் தேசிய அரசியலுக்கு இன்றும் தேவைப்பாடு இருக்கிறதா என்ற கேள்வியை மாற்றம் வேண்டும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய கடைப்பாடு இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியோடு ஊழல் எதிர்ப்பு, அரசியல் கலாச்சார மாற்றம், சட்டத்தின் முன் சமவுரிமை என்ற விடயங்களில் தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடுண்டு. அந்த விடயங்களிலே நாம் அந்தக் கட்சியின் அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் சிறுபான்மைகள் தொடர்பான நிலைப்பாடுகள் மாற வேண்டும். எண்ணிக்கையில் சிறிதான மக்கள் கூட்டங்களுக்குப் பெரும்பான்மை மக்களது அரசியல் அபிலாசைகளைத் தாண்டிய, பிரத்தியேகமான அரசியல் அபிலாசைகள் இருக்கின்றது என்பதை அந்தக் கட்சி வெளிப்படையாக ஏற்க, குறிப்பாக சிங்கள மக்களிடையே சொல்ல இன்றும் தயங்கி வருகிறது. ஊழலற்ற இலங்கை என்பது மட்டும் தமிழர் எம் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது. தமிழர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி ஆளும் கட்சிக்குப் கணிசமான வாக்குகளைச் செலுத்துவதென்பது, தமிழர்களுக்குத் தேசியப் பிரச்சினை ஒன்றில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுவான நிலைப்பாட்டை மெய்ப்பிப்பதாகவே அமையும். அனுர குமார திசானாயக 2015-2017 வரை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்த் தேசிய வெளியிலிருந்து தமிழ் வாக்குகள் அகல்வது, அந்த அரசியலமைப்பு நிறைவேற்றல் நடவடிக்கையில் தமிழரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாட்டை நீர்த்துப் போகப்பண்ணும். இந்தத் தேர்தலில் 2024 இல் தமிழ்த் தேசிய அரசியல் அவசியமா என்ற கேள்விக்குப் மக்கள் சொல்லும் பதில் கனதியானது. அந்தப் பதில் தீர்க்கமான “ஆம்” ஆக இருக்க வேண்டும். இல்லாது போனால் எமது பிரதேசங்களில் (எமது ஆட்புலத்தில்), எமது வாழ்வாதாரத்தை (எமது ஆதாரத்தை), நாமே ஆளுகை செய்யும் எமது நீண்ட கால அரசியல் போராட்டத்தின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவதாய் வந்து முடியும். இதனாற் தான் வேட்பு மனுத்தாக்கிய கையோடு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் சிலைக்கு நாம் மாலை அணிவித்தோம். நாம் அன்றும் இன்றும் ‘தமிழ் அரசு’க் கட்சி. 
  11. முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?" அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்...... "அன்பே என்னை மன்னித்துக் கொள். இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள். நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று... பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...! 😂 🤣 Nicole Santana
  12. ஓம். யாழ்.கள தேர்தல் கணிப்பு ஒன்றை @கந்தப்பு அவர்கள் நடத்த இருக்கின்றார்கள். தேர்தல் மனுக்கள் விண்ணப்பிக்கும் நாள் நேற்றுடன் நிறைவு பெற்றறாலும், இலங்கை தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அநேகமாக நாளை அந்த முடிவு தெரியும் என நினைக்கின்றேன். அதற்குப் பின் கந்தப்பு அவர்கள் கேள்விக் கொத்தை தயாரிப்பார் என எண்ணுகின்றேன். நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
  13. யாழ் இந்துவின் மைந்தன், சமூகசேவகன், ஷப்றா யுனிக்கோ பைனான்ஸ் லிமிட்டட் உரிமையாளன், மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் உற்ற நண்பன் மதிப்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள்!
  14. இனி யாரையாவது குரங்கு என்று திட்டுவீர்களா??? https://www.facebook.com/share/v/4Em3x82sFadc5WPB/
  15. "மதமும் மரணமும்" [கிறிஸ்தவம்] மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன. இரவு - பகல், காலை - மாலை, இன்று - நாளை இது போன்று 'இம்மை' எனும் சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக, இவ்வுலகில் வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவன் இறைவனால் வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால், அவனுக்கு வெகுமதியாக சொர்க்கமோ, அப்படி இல்லாது, தனது உடல் மற்றும் மனோ [மனதில் எழும்] இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வானாயின், அதற்கு தண்டனையாக நரகமோ, இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில், அதாவது மறுமையில் இறைவனால் வழங்கப்படும் என்பதே சமயங்களின் கோட்பாடாகும். இதன் மூலம் மக்களிடம், பொறுப்புணர்வு, நேர்மை, நற்பண்பு, உளத்தூய்மை, பொறுமை, மனநிறைவு போன்றவற்றை ஏற்படுத்த சமயம் முயல்கிறது. உதாரணமாக, தன் செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் உணர்வினால் உலகச் செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நிறைவேற்றவும், நன்னடத்தையை மேற்கொள்ளவும் இது தூண்டுகிறது எனலாம். அவ்வாறே அனைத்துச் சிரமங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது. மரணமும் சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று எமக்காக காத்திருக்கிறது என்றால், அண்டம் முழுவதையும் படைத்துக் காக்கும், எல்லாச் சக்திகளும் பொருந்திய, உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும், இயற்கை முறைக்குள் அடங்காத, ஒருவர், அதாவது சமயம் போதிக்கும் கடவுள் மாதிரியான ஒருவர் [supernatural being like a god] அதில் ஈடுபடவேண்டும். ஆகவே நாம் சமய விரிவுரையை / பாடத்தை [religious texts] கவனமாக, முழுமையாக, மரணத்தை பற்றிய, மனிதனின் நம்பிக்கை தகவல்களை அறிய கட்டாயம் அலச வேண்டும். 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே பின்பற்றின போதிலும், அதன் பின் பெருங் கற்காலத்தில் [மெகாலிதிக் காலம் / megalithic period] தாய் தெய்வ வழிபாட்டுடன், கல்லில் கடவுளுக்கு புற உருவங் கொடுத்து, இறந்தவர்களின் மற்றும் மூதையார்கள் வழிபாட்டு மரபுகளுக்கு அதி முக்கியம் கொடுத்த போதிலும் [attached great importance to the cult of the dead and ancestors], மெகாலிதிக் கற்காலத்துக்கு பின்னான சங்க காலத்தில், சேயோன், மாயோன், கொற்றவை, ஐயனார் போன்ற குலமரபு தெய்வங்கள் [tribal gods] இருந்த போதிலும், அதன் பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக, பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள். அதன் பின் உலக செல்வாக்கினாலும் மற்றும் வலுக்கட்டாயமான மத மாற்றங்களாலும் சில தமிழர்கள் இஸ்லாமிய, கிருஸ்துவ மதங்களுக்கு மாறினார்கள். இப்பொழுது 80% இற்கு கூடியவர்கள் இன்னும் சைவத்திலும் 20% யிலும் குறைவானவர்கள் மற்ற மதங்களிலும் பொதுவாக காணப்படுகிறார்கள். உலகளாவிய ரீதியில், உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் இறுதி பகுதியில் அல்லது அதற்குப் பின் சைவ, வைஷ்ணவ சமயங்களும் பிராமண இந்து சமயத்துக்குள் உள்வாங்கப்பட்டது. அதனால் சைவ சமயம் இந்து மதத்திற்குள் ஒரு பிரிவாக அல்லது ஒரு கலப்பாக காணப்படுகிறது. ஆகவே இன்று பல சமயங்களின் வாக்கியங்கள் அல்லது கருத்துக்கள் [பாடங்கள் / texts] எம்மிடையில் இருக்கின்றன. அங்கு காணப்படும் அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக் கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப் பற்றி ஒரே மாதிரி சொல்ல வில்லை. மரணத்தைப்பற்றி பல அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது. மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எப்படி எங்களுக்கு தெரியும், எந்த நூல், எம்மை சரியாக, முறையாக அறிவுபூர்வமாக வழிகாட்டும் என்று ? கிறிஸ்தவ மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும், ஒருவரின் கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும், அவரின் இவ்வுலக நடத்தையை பொருத்தும், அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது. அதாவது கிருஸ்துவர்கள் ஒரு மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள். உடம்பு இறந்து அது எரிக்கப்பட்டாலும் அல்லது புதைக்கப்பட்டாலும், தங்களது தனித் தன்மை வாய்ந்த ஆன்மா [unique soul / உயிர்] தொடர்ந்து வாழ்கிறது என்றும், அது கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடு எழுப்பப்படுவர் [raised] எனவும் நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்டு [crucifixion] மூன்று நாட்களின் பின், இயேசு இறப்பில் இருந்து எழும்பியவர் என்ற நம்பிக்கை அல்லது புராணம், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அதாவது இயேசுவின் போதனையை பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும் [their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த புதிய உயிர்த்தெழுதல் [resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். இயேசு அவளை நோக்கி: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;" என்று யோவான் 11:25-26 இலும், "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்று யோவான் 3:16 இலும் கூறப்பட்டுள்ளது. தேவனை நம்புகிறவன் எவனோ, கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ, தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ, அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றும் பைபிள் பயமுறுத்துகிறது. எனவே, பல கிறிஸ்தவர்கள் தாம் இறந்த பிறகு, ஆண்டவனுக்கு முன்னால் தாம் இருத்தப் பட்டு, அங்கே வாழ்நாளில் அவர்கள் செய்த அல்லது செய்யத் தவறிய செயல்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறார்கள். இந்தப் பயம் தான் ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை வழிபாட்டில் ஈடுபட வைக்கிறது மற்றும் அவர்களை ஒரு கட்டுப் பாட்டிலும் வைக்க உதவுகிறது. சில கிறிஸ்தவர்கள், தாம் இறக்கும் போது தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும், மேலும் சிலர், காலத்தின் முடிவில் ஒரு தீர்ப்பு நாள் [Day of Judgement] இருக்கும் என்றும், அங்கு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும் நம்புகிறார்கள். கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளதால், கடவுளை நிராகரிக்க அங்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு என்றாலும், தந்திர உபாயமாக [உத்தியாக] புகுத்தப்பட்ட நரகத்தின் [Hell] மேல் உள்ள பயத்தின் காரணமாக, அதை தடுக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடம் ஒன்று [Purgatory] மேலே உள்ளதாக நம்புகிறார்கள். பரலோகத்திற்கு போகும் இறந்தவர்கள், தாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு சுத்திகரிப்பு தேவைப்பட்டால், முதலில் அங்கு செல்லவேண்டும் என்று நம்புகிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. ஊர்காவற்துறை தொகுதி. புங்குடுதீவும் அதற்குள் அடக்கம்.
  17. 72 ஆ? இன்றுடன் நான் மதம் மாறி அல்லாவை 5 தரமும் வணங்க போகின்றேன் 🙏
  18. அது வங்கியில் அவரது வங்கி கணக்கில் இருக்கிறது 🤣 பணம் பெற்றுக் கொண்ட பின். புங்குடுதீவு போய் பார்த்தார் அங்கே மக்கள் இல்லை எனவேதான் வீதிகள் புனரமைக்கப்படவில்லை 🙏[. யாவும் கற்பனை ] 😂
  19. நன்றி நல்லதொரு பதிவு. இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இவர்கள் சொர்கத்தில் 72 கன்னிககைகள் கொடுக்கப்ப்டும் என கூற‌ப்பட்டுள்ளது.
  20. சுமந்திரனின் இன்னுமொரு பைத்தியக்காரத்தனமான அலட்டல். தேர்தல் வேட்பாளர்களின் வயதை கூட்டி, பின் அதை பிரித்து... சராசரி வயதை சொல்லிக் கொண்டிருக்குது, இந்த முத்தின பைத்தியம். அது தேர்தலில் வெல்ல போதுமா...? இதை நம்பி பின்னாலை கூட்டம் திரியுது.
  21. உண்மை. ஆளும் தரப்பினருடன் சேர்ந்து விட்டால் சுகம் அனுபவிக்கலாம் என வௌவால் போல தொங்கும் கூட்டம், தங்கள் பழைய எஜமானரையும் கட்சியையும் துறந்து வேறொரு பிறப்பெடுக்க முயற்சிக்கின்றனர். புதிய மொத்தையில் பழைய கள் குடுக்க முயற்சிக்கின்றனர், குடிப்பவர் யார்? அனுரா குடிப்பாரானால் முன்னையவர்கள் துரத்தியடிக்க பட்டிருக்க மாட்டார்களே. மாற்றத்தை வேண்டித்தான் மக்கள் இவரை நாடினர், அது அவருக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் அவாவை நிறைவேற்றி வைக்க வேண்டியது இவரின் கடமை. இது இவருக்குள்ள பாரிய பொறுப்பு, இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டால் இவர்களுக்கோ, வேறு யாருக்கோ இப்படிப்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் இவர்களே நினைத்தாலும் திரும்பி வராது. சந்திரிக்கா நழுவ விட்டு இப்போ புலம்புகிறார். மஹிந்த மனதுக்குள்ளேயே குமுறுவார், நான் செய்த தவறு அவர்களின் தலைவரை கொன்றதுதான் என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்கள் செய்யாததை வேறொருவர் செய்து புகழடைவதை விரும்பவில்லை, தடைக்கற்களாக இருக்கிறார்கள். தங்கள் வாரிசுகள், சொத்துக்களுக்காக பொன்னான நாட்டை அடகு வைத்து அழிக்கிறார்கள். கண் கெட்டபின் நீலிக்கண்ணீர் வடித்து, நமஸ்காரம் செய்வதில் பயனில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கும், அது யாருக்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை.
  22. இந்தப் பெருமளவிலான சுயேச்சைகளின் களமே அனுராவை நோக்கிய மடைமாற்றத்திற்காகவும் இருக்கலாம். யாரறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. ஒருமுறை மகிந்தவிற்கு…. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைமை வந்த போது, இவர் போன்ற சிலரை விலைக்கு வாங்க வேண்டி வந்தது. அந்த நேரம் பல கோடிகளில் நல்ல விலைக்குப் போனவர்தான் இவர். 🙂
  24. குட்டையை குழப்பி மீன் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு, மீன்கள் குழப்பத்தில் குட்டையை விட்டு வெளியேறி வேறொரு குட்டையையோ, நீர்நிலையையோ தேடஆயத்தமாகி விட்டன என்பது தெரியாமலிருக்கலாம். எந்த சின்னம் எந்த கட்சிக்கு என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத சின்னம், தங்களை ஏமாற்றிய சின்னம், தங்களால் தூக்கி எறியப்படவேண்டிய சின்னம் எது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதிலொரு குழப்பமுமில்லை மக்களுக்கு. இப்போ முளைத்த சின்னத்தால் தமக்கு எதுவும் நடக்காது ஆகவே அந்த சின்னத்தையோ வேட்பாளரையோ பற்றியோ மக்கள் நினைவில் வைத்திருக்கவோ சிந்திக்கவோ மாட்டார்கள். இவர்கள் செய்யும் கூத்து, ஒரே ஒரு சின்னம், அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.
  25. இந்தத் தலைமுறை மக்கள், சென்ற தலைமுறை மக்களை விட மன அழுத்தத்துடன் அதிகமாக வாழ்கின்றார்கள். காரணம்… 25 வயது வரை கல்வி, பின் 30 வயது வரை நல்ல ஒரு வேலையில் கால் பதிக்க போராட்டம், பின் தனக்கென வீடு கட்டும் கனவு என்று அவர்களின் தேடல் விசாலமாகும் போது குடும்பத்துடன் இயல்பாக இருக்கும் தன்மை குறைவாக காணப்படுகின்றது. எல்லாவற்றையும் வெட்டி ஆடி…. தான் சாதித்து விட்டேன் என்ற நிம்மதி வரும் போது… அவன் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கின்றான். மிக முக்கியமாக மேலே குறிப்பிட்டவை…. அந்த அந்தக் காலத்தே அந்தந்த வேலைகளை திட்டமிட்டு செய்பவர்களுக்கானது. திட்டமிடாமல் வாழும் வாழ்க்கை… இறுதி வரை நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரப் போவதில்லை.
  26. முன்பு தேர்தல் என்றால்…. ஐந்து அல்லது ஆறு கட்சிகள்தான் போட்டியிடும். அவை மக்களுக்கு பழக்கமான கட்சிகள் என்ற படியால், மக்கள் குழம்பாமல் வாக்கு போட்டு விட்டு சென்று விடுவார்கள். இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣
  27. பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு நான் வெகுவாக ரசித்து ரசித்துக் கழுவி ஊற்றிய ‘96’ திரைப்படத்தின் இயக்குநரது அடுத்த படம் ஒரு நல்ல மலையாளப் படம் போல இருப்பதாகச் சிலர் சொன்னதைக் கேட்டு காணச் சென்றேன். திரு. கமல் அவர்கள் பாடிய பாடலோ வேறொரு பிம்பத்தைத் தந்தது. சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள், நேசங்கள், துக்கங்கள், துயரங்கள் என முகம் பதினெட்டு கோணலாகும் வரை கிட்னி, கணையம், கல்லீரல், மண்ணீரல் எல்லாவற்றையும் பிழி பிழியென்று பிழிந்தெடுக்கப்போகிறார்கள் என்ற என் எண்ணம் தவிடு பொடியானதில் மகிழ்ச்சியே. நன்னெறிப் பிரசங்கங்கள் எல்லாம் இல்லாமல் போகிற போக்கில் மனதை வருடி நல்லுணர்வைத் தந்த படம். இந்த இயக்குநருக்குப் படமாக்கல் சிறப்பாக வருகிறது என்பதில் சந்தேகமில்லை. ‘மெய்யழகன்’ என்பதை ஒரு முழு நீளப் படம் என்பதை விட நல்ல தேர்ந்த நான்கைந்து சிறுகதைகள் மிக இயல்பாக ஒன்றாகக் கோர்க்கப்பட்ட தொகுப்பு. கம்பீரமாகச் சீறி வரும் ‘தோனி’ காளை, சைக்கிள் கதை – உணர்வுப்பூர்வமாகப் புன்னகை பூக்கச் செய்பவை. அதிலும் போலீஸ் ஒருவர் வந்து காளையைப் பார்த்ததும் காக்கியைக் கழற்றி விட்டு ஏறு தழுவுதலில் கலந்து கொண்டு காக்கிச் சட்டை அணிந்து மீண்டும் போலீஸ் ஆக மாறிய பின் பொய்யான விறைப்புடன் ‘தடை செஞ்சிருக்காங்கன்னு தெரியும்ல? அப்புறம்?’ என மென்னகையுடன் மெய்யழகனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்லும் காட்சி ரொம்பவே ரசனையாக இருந்தது. வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் சென்று தூத்துக்குடி வரையிலான பயணம் – ‘தோழர்’ மெய்யழகனின் கதாபாத்திரத்தை மனதிற்கு மிக நெருக்கமாக அழைத்து வந்தது. எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டிய சக உயிருக்கென கண்ணீர் விடும் உணர்வைக் கடத்திய அழுத்தமான வசனங்களும், அதை அழுகையும் சோகமும் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய மெய்யழகனின் முகமும் என் கண்களிலும் லேசாக நீர்த்திரையிட்டது. ‘பேசிட்டே இருக்காங்க’ என பெரும்பாலானோரால் சலித்துக்கொள்ளப்பட்ட இரண்டாம் பகுதிதான் கலவையான உணர்வுகளைத் தந்து ரொம்பவே ரசிக்க வைத்தது. ‘படத்தின் நீளத்தைக் குறைக்க’ என்ற காரணம் சொல்லப்பட்டாலும் கத்தரிக்கப்பட்ட காட்சிகளின் தெரிவு எழுப்பும் ஒரே கேள்வி ‘இந்த அளவு கூட உண்மையையும் நியாயத்தையும் ஒருவன் பேசக் கேட்கும் துணிவில்லையா? மனசாட்சி உறுத்துகிறதா?’ முதல் பாதி முழுக்க கல்யாண வீட்டைச் சுற்றியே கதை நிகழ்ந்ததில் ‘அய்யயோ! அடுத்த பாதியில் சொந்தங்களுடன் மீண்டும் சேர்வதான வழக்கமான(cliché) பூச்சுவேலைகள் நிரந்திருக்குமோ’ என கொஞ்சமே கொஞ்சம் சலிப்பு படர்ந்தது. பின் அமைந்திருந்த கதை அமைப்பு அதை வேரோடு பிடுங்கி எறிந்து ஆசுவாசமளித்தது. இரு தனி நபர்களுக்கு இடையிலான தூய்மையான அன்பு அழகியல் ததும்ப பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. படம் முடிந்த உடன், அதன் தாக்கம் மனதில் இருத்திச் சென்ற குறுநகையில் நானும் ஒரு நொடி மனம் பிறழ்ந்து உறவுகளை நினைத்தபடியே இருள் தெளிக்கப்பட்ட வானைப் பரிவோடு பார்த்தவாறே வந்து கொண்டிருந்தேன். உறவுகளில் அரிதான வெகு சில நல்ல உள்ளங்கள் அகக்கண்ணில் வந்து குளிர்ச்சியைப் படர விட்டுச் சென்றன. சடாரென்று மீதமுள்ள வன்மக் கிடங்குகள் வரிசையாக நினைவில் ‘இந்தா நானும் வந்துட்டேன்ல...’ என வரத் துவங்க, ‘சில்லென்று ஒரு காதல்’ திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தைப் போல் ஒரு நொடி யோசித்துப் பின் முகம் சுழித்தவாறே ‘ச்சை…முடியாது…முடியாது’ என்று அபூர்வமாக என்னுள் எட்டிப் பார்த்த சினிமாத்தனத்தை எள்ளி நகையாடியது மனம். “உங்க வீட்டுக்கு என் பங்களிப்பு இருக்கக் கூடாதா?” என அருள்மொழி கேட்காமலேயே அவரின் தேவைக்காகத் தனது மொத்த சேமிப்பு, காணாததற்கு மனைவியின் நகைகளையும் அடகு வைத்துத் தருவதாகக் கூறும் மெய்யழகனின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தில் இருந்து சற்றே துருத்திக் கொண்டு மிகையாகவும் மடமையாகவும் தோன்றியது. ஒரு காட்சியில் மெய்யழகன் அருள்மொழியிடம் பல காலம் முன்பு அவர் அப்பாவிடம் இருந்து அடித்துப் பிடுங்கி வீட்டை வாங்கிக் கொண்ட உறவுகளைத் தனக்காக மன்னிக்கும்படி கேட்பார். எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடம் அது. நம்மை ஏமாற்றியவர்கள், நமது இயல்பே மொத்தமாக மாறி நம்முள் இறுக்கம் படரக் காரணமானவர்கள் மீது எழும் வெறுப்பு அவர்களிடமிருந்து நம்மை ஒதுங்கி இருக்கச் சொல்லிப் பணிக்கும். மனம் காலப்போக்கில் அவர்களை முற்றிலும் அந்நியர்களாக்கிவிடும். பிறகு ‘மன்னிப்பு’ என்னும் வார்த்தைக்கு என்ன பெரிய பொருள் இருக்கப் போகிறது? அவர்களுக்குத் தீங்கும் நினைக்க வேண்டாம்; கவலையும் கொள்ள வேண்டாம். மீண்டும் போய் உறவைப் புதுப்பிக்கும் எண்ணம் இல்லாத பட்சத்தில் நமக்கு நிகழ்ந்ததையும் நிகழ்த்தியவர்களையும் அடியோடு மறப்பதுதானே இயற்கையாக இருக்கும்? ‘ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுச் செல்ல இந்த செயற்கைப் பெருந்தன்மை எல்லாம் எதற்கு?’ என்றே தோன்றியது. இயக்குநரின் இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமைகள் – எரிச்சலூட்டும் பெருந்திணை மற்றும் அநியாயத்திற்கு நல்லவனாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் ஆண் கதாபாத்திரம். ஒரு வேறுபாடு – முழுக்க முழுக்க இப்படி ஒருவர் இருக்க வாய்ப்பில்லையெனினும் எல்லாவற்றையும் மீறி ‘இப்படத்தில்’ மெய்யழகனின் கதாபாத்திரம் ரசிக்கக்கூடியதாக இருந்தது. இன்னோரு படத்த பத்திலாம் எதுக்குப் பேசீட்டு? அருள்மொழியின் உறவுக்காரப் பெண் வந்து தன் கணவன் வியாபாரத்தில் படுதோல்வி அடைந்த சொந்தக் கதை, அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட சோகக் கதையைக் கூறிய பின் “பேசாம உன்னையே கல்யாணம் பண்ணிருக்கலாம்” என்று அருள்மொழியிடம் ஏக்கத்தோடு கூறுவார். இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் இருக்கின்றன. அப்பெண் தனது மணவாழ்வில் இருந்து வெளிவரவில்லை. மணமுறிவு ஆகியிருந்தாலும் கூட மணவாழ்க்கையில் இருக்கும் இன்னொரு ஆணிடம்(நகைச்சுவையாகக் கூட) இப்படிச் சொல்வது எப்படிச் சரியாகும்? பின்னர் கல்யாண வேலையில் தன்னை ஈடுபடுத்தும் பொருட்டு எழுந்து செல்கையில் தற்செயலாகத்(என்று நம்ப நாம் என்ன…?!) தவறான திசையில் நடக்கத் தொடங்கித் திரும்பிப் போகும் போது பட்டும் படாமல் அருள்மொழியின் தோளைத் தடவிச் செல்வார். அந்தத் தொடுதலில் தென்படும் வாஞ்சை நெருடவில்லையா? இன்னொரு காட்சியில் பந்தியில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருக்கும் அருள்மொழியை ஏக்கத்தோடு/பாசத்தோடு… ஏதோ ஒரு கண்றாவியான உணர்வோடு திரும்பிப் பார்ப்பார். இவ்வகையான ஒழுக்கத்திற்கு மாறான பொருந்தாக் காதல் மீது இயக்குநருக்கு ஏன் இவ்வளவு தீராக் காதல்? Emotional affair தவறில்லை என்பது போல அதை இவ்வளவு மேன்மையாகக் காட்டுவதன் பெயர் ரசனை அல்ல. இவரது முதல் படத்தின் கதைக்கரு முழுக்க முழுக்க இதுதான். அழகியல், மென்னுணர்வுகள் என்ற போர்வையில் அநாகரிகத்தை நியாயப்படுத்தவோ சாதாரணமாக்கவோ முடியாது. இதுவெல்லாம் கவித்துவம் என்று நினைப்பவர்களுக்குத் தங்கள் துணை இதைப் போல் வேறு ஒருவரிடம் சொல்வதும் அதே கவிதை மண்ணாங்கட்டியாகத்தான் தெரியுமா? என்று மண்டையில் உறைக்குமாறு கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. படத்தின் மொழியிலேயே கூறுவதாயிருந்தால் இந்தப் புளிப்புக் காட்சிகள் நீங்கலாக ‘நெல்லிக்காய் சாப்டுட்டுத் தண்ணி குடிச்சாப்ல இருந்துச்சு’ படம். வெகு சில எழுத்துப் பிழைகளோடு வாசிக்கக் கிடைத்த ஓர் அருமையான கவிதை! நன்றி 'திண்ணை' இணைய இதழ். https://puthu.thinnai.com/2024/10/06/பெருந்திணை-மெய்யழகா/
  28. நல்ல ஒரு விமர்சனம், நன்றி. நானும் திரையில் பார்த்தேன். வெண்ணாற்றின் கரையோரம் அமர்ந்து சோழ வரலாற்றில் தொடங்கி ஈழம் வரை செல்லும்போது உறவுகளை இழந்தது கண் முன் வந்து நின்றது. அதிலும் கரிகாலன் கதையை தெரிவு செய்திருக்கிறார்கள். சூர்யா முன்பு ஒரு படத்தில் சொன்னதை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறார். "1 லட்சம் சனம் பக்கத்து நாட்டிலே சாகிற போது எங்களால் என்ன செய்ய முடிந்தது". இது பிரேம் குமாரின் இரண்டாவது படமாகும், மேலும் அவரது முதல் படமான 96 போலவே கதைக்களமும் மிக எளிமையானது. அங்கு, இரண்டு பிரிந்த காதலர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இங்கு, பிரிந்த இரண்டு உறவினர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.
  29. பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.
  30. தவறான புரிதல். நான் சிங்களத்தின் ஆற்றலாளர்களையே குறிப்பிட்டேன். தமிழர் தரப்பையல்ல. முதலில் மற்றவனை நோக்கி ஒற்றைவிரலைச் சுட்டும்போது, எம்மை நோக்கி நான்குவிரல் என்று யோசித்தால் முதலில் தாங்கள் கண்ணாடியின் முன்னின்று யோசித்திருக்க வேண்டும். நன்றியுடன் நொச்சி
  31. ஒருவிதத்தில் மறதியும் நல்லதுதான். சில விடயங்களை மறந்தால்தான் மனிதன் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். நதி போல் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேங்கிய குட்டைதான். ஹிட்லர் செய்த கொடுமைகள் உலகம் அறிந்த விடயம். அதற்காக யேர்மனியை ஒதுக்கி வைத்தார்களா? ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு ஒரு யேர்மனிய மாது தலைமைதான் தாங்க முடியுமா? பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, நண்பர்கள் என்று கருதியவர்களால் வந்த ஏமாற்றங்கள், பெற்றவர்கள்,உறவினர்கள் உடன் பிறப்புகள், நண்பர்கள் ஆகியோரின் இழப்புகள், வாழ்க்கையில் பட்ட துன்பங்கள், அவலங்கள், அவமானங்கள் என்று எல்லாவற்றையும் தலையில் தூக்கி வைத்தால் எப்படி நகர முடியும்?
  32. கடைசியில் என்னையும் இவர்களை ஆதரிக்க வைக்கப் போகின்றார்கள். உண்மையில் நல்ல விடயங்களை செய்ய தொடங்கியுள்ளார்கள் போல் உள்ளது. கந்தளாயில் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய கால விவசாயத்துக்கு வழங்கியுள்ளார்கள் நேற்று. இதுவும் மிகச் சிறந்த ஒரு செயல்.
  33. ஏற்கெனவு அப்படி உறுதி அநுரகுமார திசாநாயக வேறு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சொல்லியிருக்கின்றார் 😄
  34. மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்?
  35. தவத்தின்ட இந்த மனமுடைந்த குழுவுக்கு சுமந்திரனுக்கெதிரான புலம்பெயர் விடுதலை முன்னணியினரும் பட்டாசு குழுவினரும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது!
  36. உண்மை தான். அத்துடன் ஆரம்பத்தில் மிகவேகமாக அளவு 5 இல் புயலின் வேகம் இருந்தது.புளோரிடா மண்ணைத் தொடும்போது இதன் அளவு 3 ஆகி குறைந்து குறைந்து அடுத்த கரையை கடந்து அற்லாற்ரிக் கடலில் இறங்கும் போது அளவு 1 ஆகிவிட்டது. தொடங்கிய வேகத்தில் அடித்திருந்தால் மிகப்பெரும் அழிவு வந்திருக்கும். பலருக்கு விருப்பமில்லாவிட்டாலும் அரசு சொன்னதற்கிணங்க வெளியேறிவிட்டார்கள். நிறைய பேருக்கு திடீரென இன்னொரு இடத்தில் போய் 2-3 நாட்களுக்கு தங்கும் வசதி இல்லை. குறைந்த நேரத்தில் கூடிய மழைப்பொழிவு.இது தான் போன புயலிலும் நடந்தது.
  37. என்ன தம்பி அமெரிக்காவில் குடியேறப் போறீங்களோ? ஏன் உங்களுக்கு நியூயோர்க்கைப் பிடிக்காதோ? இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். 2.5 மில்லியன் மக்கள் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.
  38. இந்த தேர்தலுடன் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் போலித் தமிழ் தேசியவாதிகளின் செல்வாக்கு தாயக அரசியலில் இருந்து பெருமளவு நீங்கிவிடும் என்பதை இவர்கள் உணர்ந்து இருப்பதால் எப்பாடுபட்டாவது அதை தடுக்க, இவர்கள் இப்படித்தான் நல்ல வசதியாக வாழ்ந்து கொண்டு விண்ணாளம் கதைப்பார்கள். ஆனால் இவர்களின் சொல்லுக்கு ஐஞ்சு சதமும் பெறுமதியில்லை. வெறும் வாய்சொல் வீரர்கள்.
  39. தேர்தல் கால மழைக்கு இப்படியான முகநூல் காளான்கள் முளைத்து, ஒலியெழுப்பி பின்னர் மறைந்து போவது வழமை. இவர்கள் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்து பதில் தேடாதீர்கள்!
  40. மிகவும் பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய முன்னாள் போராளி. நேரமுள்ளவர்கள் அவரின் மனவலிமை எவ்வளவு கஸ்டம் இந்தநிலைக்கு வருவதற்கு வளர்ந்த இடம் என்று பலவிதமான விடயங்களையும் தொட்டுச் செல்கிறார் கேளுங்கள்.
  41. பிக்பாஸ் தொடங்கிவிட்டது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு வரவேண்டுமென்ற மெனக்கெடல் தொடங்கி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. நோக்கமாக அவர்கள் எதனை சொன்னாலும் பின்னால் இருப்பது பணம் புரளும் சந்தையாக இதனை மாற்ற வேண்டும். 2030ல் உங்களுக்கு புரியும். நான் பார்க்கிறேன் பார்க்கவில்லை என்பதை எல்லாம் தாண்டி அது உங்களை வந்தடையும். ஒன்று எதிர்வினை. இல்லை ஆதரவு என்றே அது தன்னை வடிவமைத்திருக்கிறது. நீங்கள் கடந்து செல்வதாக சொல்லி கொண்டால் எழுதவில்லை என்று வேண்டுமானல் சொல்லி கொள்ளமுடியும் தெரியாது என சொல்ல முடியாது. இது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வோர் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “ தான் வேடிக்கை பார்க்கு நாம்..... ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எறிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எறி.. உனக்கு ஒரு டாலர் தருவேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக் கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அதுதான் நாம் தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சியையும் சொல்லமுடியும். வரலாற்றில் அந்த நிகழ்ச்சிகளை தடை செய்த பிறகு தான் மானுட அன்பு கொஞ்சம் புரிந்தது. மீண்டும் சிதைக்க இப்படியான நிகழ்ச்சிகள் வரிசை கட்டி வருகிறது. காலம் என்பதே அப்படித்தான்.. முன்னும் பின்னுமாய் அலைக்கழிப்பது.... உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். எந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பங்கேற்பாளராக இருக்காதீர்கள். எந்த நிகழ்ச்சிக்கும் வாக்களிக்காதீர்கள். அதுதான் அவர்களின் மூலதனம். அவர்கள் பொய்யாக ஒரு எண்ணிக்கையை சொல்லுவார்கள்... ஒரு கோடி பேர் வாக்களித்தார்கள் என்பார். நாமும் இவ்வளவு பேரா ? என யோசித்து கையில் இருக்கும் அலைபேசியில் ஒரு பிரஸ் தானே என அமுக்குவோம். அங்கே தான் எல்லாம் தொடங்குகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.. அது பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நிலை.. ஆனால் அவர்கள் டார்கெட் நாம் தான். கொஞ்சம் தெளிவாக வேடிக்கை மட்டும் பாருங்கள்... எல்லாமே தலைகீழாகும்... இது நடக்க வாய்ப்பில்லைதான்... ஆனாலும்.. முயற்சிப்போம்.. முகநூலில் வந்தது...
  42. நீர்வேலியனையும். யசோவையும் எழுப்பி விடுங்கள் தொடர்ந்து நித்திரதேவியை அணைத்து கொண்டு கிடக்கிறார்கள். போலுள்ளது 🙏😂. வெள்ளமும் காற்றும் தம்பதிகளாக். வீட்டுக்குள் வரப்போகிறார்கள் 🤣😀
  43. அம்மாவின் பேட்டியை கேட்க கேட்க நெஞ்சு நோ வந்திட்டுது . .......அத்தனையும் நியாயமான பேச்சு ......முன்பென்றால் ஒரு முட்டைக் கோப்பி குடித்து ஆத்தலாம் . .....இப்ப நான் அதுவும் குடிக்கிறேல்ல ......அதைவிட பேட்டியிலும் முட்டைதான் பேசுபொருளாய் இருந்தது . .......!
  44. தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
  45. திருமண நல் வாழ்த்துகள் தலைவா.❤️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.