Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    20351
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88816
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10275
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/20/24 in Posts

  1. மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
  2. மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். "தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள். இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம் வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும் ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
  3. தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர். சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவரின் கவனச் சிதறலால் நிகழ்ந்தது என்றும், அதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோரி தூர்தர்ஷன் துரிதமாக அறிக்கை வெளியிட்டது. அதாவது, ஆளுநர் அலுவலகம் சொன்னதன்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கத் தானாகவோ தூர்தர்ஷன் இவ்வாறு பாடவில்லையாம். இதை நம்புவதற்கு தமிழ்ச் சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையா, என்ன ! தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்க வேண்டியது தமிழ் மக்களிடம்; ஆர்.எஸ்.எஸ்.ரவியிடம் அல்ல (ஆர்.என்.ரவி என்பது ஆர்.எஸ்.எஸ்.ரவியானது நமது கவனச் சிதறல். ஆளுநரும் தூர்தர்ஷனும் நம்பித்தான் ஆக வேண்டும்). மன்னிப்புக் கேட்கும் முகமாக மனோன்மணியம் சுந்தரனார் பாடிய அந்த முழுப் பாடலையும் ஒளி பரப்புவதே சிறந்த பரிகாரமாக அமையும். அதில், "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்த ஆரியம் (சமஸ்கிருதம்)" என்று சுந்தரனார் அடிக்கும் ஆணியில் ஆளுநரும் சங்கிகளும் கதறுவது தமிழர்தம் காதுகளில் தேனிசையாய்ப் பாயும். இனி அந்த முழுப் பாடலும் பொருளும் இதற்கு முன் கேளாதோர் வாசித்து இன்புறத் தரப்பட்டுள்ளன (தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட வாழ்த்திற்காக மூலப் பாடலில் நீக்கப்பட்ட பகுதி தடித்த எழுத்துகளில்) : பாடல் : "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!" பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது அன்றைய தமிழக அரசின் மாண்பு. இக்கட்டுரைக்கான எனது முகநூற் பதிவு கீழ்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/MiYLxthH6xdEt9oP/
  4. போருக்கு பின்னரான மீழ் கட்டமைப்பு, நிர்வாக நெருக்கடி, மீழ் குடியேற்றம், ஆக்கிரமிப்பு நிலங்கள் விடுவிப்பு, பாதிக்கப்பட்ட மக்களிற்கான புனர்வாழ்வு, பாதுகாப்பு என்பன இன்னமும் உருப்படியாக நிறைவேற்றாத நிலையிலேயே தொடர்ந்தும் இப்பாதிக்கப்பட்ட மக்களை வைத்திருக்க இலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் விருபுகின்ற இந்த நிலையிலே, சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினால் கூட எதனையும் செய்ய முடியாத நிலையிலேயே தற்போது வரை இந்த வட கிழக்கு மக்கள் வாழ்கை நிலவுகிறது. பொதுவாக ஏனைய நாடுகளில் இவ்வாறான பாதிப்புள்ளாகும் நாடுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகள் மூலம் மேம்படுத்த முயல்வார்கள் ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனத்தினை பிரதிநித்துவம் செய்யும் கட்சிகள் திட்ட மிட்டே இந்த பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து வருகின்ற நிலையிலே பிராந்திய கட்சிகள் செல்வாக்கினை இழக்கும் போது இப்பிராந்திய மக்கள் மேலும் நலிவுறும் நிலை உருவாகும். இது நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பொருளாதார ரீதியில் நலிவுற செய்யும். இதனை புரிந்து கொள்ளவோ அல்லது ஒரு தொலைநோக்கு பார்வையோ மக்களிடம் இருக்காது, இதனை மக்களிடம் எடுத்து செல்ல படித்த இளைஞ்சர்கள் முன்வர வேண்டும்.
  5. பொறுங்கள்! மக்களிடம் கொள்ளையடித்து உகாண்டாவிலோ வேறெங்கிலோ பதுக்கி வைத்திருக்கும் பணம், பலமடங்காக நாட்டுக்கு திரும்பி வரப்போகுதென முன்னறிவிப்பு வந்திருக்கு இச்சம்பவத்தின் மூலம். நல்ல சகுனம்!
  6. மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும். -மாவை ரசிகர் மன்றம்.- ஜேர்மன் கிளை. 😂 @Kandiah57, @குமாரசாமி, @nochchi, @Paanch. 🤣
  7. உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள். ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு புரியும் என்கிறீர்கள். 😁 கற்பனைகளாலும் புனைகதைகளாலும் வெறியூட்டப்படும் ஒரு இனம் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களுக்குப் பாதகமாய் முடிவதே வரலாறு.
  8. என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள். இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.
  9. இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த, முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும், இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி, அனுபவம் தேவைப்படும் நிலையில் உள்ள இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை.
  10. நான்தாண்டி காத்தி நல்ல முத்துப் பேத்தி ..........! 😍
  11. மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை தீர்க்கப்பட்டதா என்பதை, அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம்.
  12. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம் 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம் 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 6 28) வன்னி தமிழரசு கட்சி 4 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 3 30)திருமலை தமிழரசு கட்சி 2 31)அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 2 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி 4 33)அம்பாந்தோட்டை இலங்கை பொதுஜன முன்னணி 6 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 6 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 3 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி 42) மன்னர் தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44) வவுனியா தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி 47) திருகோணமலை தமிழரசு கட்சி 48) அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) இலங்கை பொதுஜன முன்னணி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 54)தமிழரசு கட்சி 9 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 27 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10
  13. இல்லை இவர்களில் ஊழல் லஞ்ச பெறாத, ஊக்குவிக்காத மற்றும் சொத்து மதிப்பை தரும் தமிழர்களுக்கு வாக்களிக்கலாம்.
  14. சுமந்திரன் தனது நோக்கங்களை அடைவதற்கு கையாளாக சிறீதரனை பாவிக்கிறது. உண்மையான நட்பு கிடையாது. முன்பு உள்ளூராட்சி தேர்தலின்போதாக இருக்கலாம், மாவை பதவிவிலகவேண்டும் என சுமந்திரன் அறிக்கை விட்டபோது, அவரின் தலைமை பதவிக்கு சிறீதரனையே கொம்பு சீவினார். அது சறுக்கி விடவே இவரின் தந்திரத்தை புரிந்துகொண்ட சிறீதரன் ஒட்டியும் ஒட்டாமலுமே சுமந்திரனுடனான உறவை வைத்துக்கொண்டார். அதன் பின் தமிழரசுக்கட்சி தலைவர் பதவி சிறீதரனுக்கு வந்ததே, அந்த கட்சி நீதிமன்றத்திற்கு போக காரணம் என்கிறார்கள். அப்போ; பதவியேற்க தான் தயார் என அறிக்கை விட்ட சிறீதரன், இப்போ; பதவியை ஏற்க இழுத்தடிப்பதற்கு என்ன காரணம்? மது பானசாலை அனுமதி பெற்ற பெயர்கள் என்கிற விஷயம் அடிப்பட்டபோது சிறீதனின் பெயரும் முதலில் அடிபட்டது, இது இப்போதல்ல பலகாலமாக பேசப்பட்டது. இப்போ, அவசரமாக விசாரணை, அது மதுவுக்கு அடிமையான ஒருவர் பரப்பிய வதந்தி என்று அறிக்கை விட்டதும், சுமந்திரன் ஓடிப்போய் அந்த பெயரை வெளியிடுங்கள் நாங்கள் அவர்களை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விட்டதும், அந்தகையோடேயே நானும் சிறிதரனும் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறோம் என அறிவித்ததும், இதற்கு பின்னால் ஒரு நய வஞ்சக திட்டமுண்டு. இருவர் மனதுக்குள்ளும் நீறு பூத்த நெருப்புப்போல் ஒரு பகை உள்ளது. அது எப்போதும் வெடிக்கலாம் அல்லது அடக்கி வாசிக்கலாம், அது தேர்தலின் பின் வரும் முடிவுகளை பொறுத்தது.
  15. அதுதானே உங்கள் பணி. அதற்காவே காத்திருப்பீர்கள், உடனே வந்துவிடுவீர்களே!
  16. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்.. by Karunya.
  17. எந்தப் புத்தகத்திலும் நன்மையான விடயங்களை எடுப்பதில் தப்பில்லையே? (கொழுத்திப்போடுவோம், எரியட்டும்) 🤣
  18. உங்க புரளி கதையை நிப்பாட்டுங்க கொஞ்சம் விட்டால் கலவரத்தை இங்கு உருவாக்கி விட்டு விடுவியல் .
  19. விழப்போகும் வீட்டை அதிலிருந்து தடுத்து நிறுத்த, வைக்கப்படும் வீசுகால் (கம்பு). எப்போதெல்லாம் வீடு வீழ்ச்சியை காணுதோ அப்போவெல்லாம் புதியவர்களை ஆகா ஓகோ என்று பாராட்டி வீட்டிற்குள் வரவேற்பார்கள். வீழ்ச்சி தடுக்கப்பட்டபின் அவர்களை விமர்சித்து, நாறடித்து, சேறடித்து, சவால் விட்டு விரட்டுவார்கள். இதுதான் தொடரும் வரலாறு. சி. வி. விக்கினேஸ்வரன், சசிகலா ரவிராஜ். இப்போ இவர் மாட்டிக்கின்னார். சோழியன் குடுமி சும்மா ஆடாது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செல்வநாயகம், கட்சி என்று சட்டாம்பி ஆற்பரித்ததுக்கு பின்னால் இவருக்கு கொடுக்கப்பட்ட முகவரி, கட்டியம் என்று புரிகிறது. செல்வநாயகம் கட்டியெழுப்பிய வீட்டை குட்டிச்சுவராக்கிப்போட்டு மீண்டும் அவரையே அழைக்கிறார்கள் புனரமைப்பதற்கு. அதற்கு முன், வீட்டை அரித்து பலவீனமாக்கும் கறையான்கள் அழிக்கப்படவேண்டும். இல்லையேல் வீட்டை காப்பாற்ற முடியாது.
  20. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள் ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன் காலிக் குவளையோ! மக்கள் விடமோ.. அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...
  21. லண்டன் தமிழ் பிபிசி சமயம் பரப்பும் வேலையிலும் இறங்கி விட்டது . கடந்த நவராத்திரி விழாவை குறிப்பிட்ட இடத்தில் கொண்டாட கூடாது என்று 1௦௦௦ பேர்க்கு மேல் பெட்டிசம் போட்டு விட்டார்கள் என்று கரோ கவுன்சில் அனுமதி கொடுக்கவில்லை என்கிறார்கள் .
  22. திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.
  23. என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.
  24. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  25. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  26. வசி, இம்முறை யாழ் மாவட்டத்தின் மொத்த அங்கத்தவர் தொகையே 6 தான். நீங்கள் 10 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்.
  27. புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவற்றை செய்ய மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறுக்கும் உங்களை போன்றவர்கள் மக்கள்,ஜனநாயகம், சமஉரிமை, கடமைகள் பற்றி பேசுவதெல்லாம் மற்றவர்களை முட்டாளாக்க மட்டுமே. போய் வேற இடங்களில் விளையாடவும்.
  28. பிரச்சாரத்திற்குப் போகமல் இருக்க நல்ல வழி.தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வாக்குக் கேட்பதை விடஆஸ்பத்திரியில் படுத்திருப்பது நல்லது
  29. 👍............. ஆளுநர் உரையில் கூட உரையில் எழுதிக் கொடுக்கப்பட்ட திராவிடம், திராவிட நாடு போன்ற சொற்களை ஆளுநர் தவிர்த்தே இருந்தார். இப்பொழுது 'அப்பா குதிருக்குள் இல்லை.........' என்பது போல ஆளுநர் சார்பாக அறிக்கை விடுகின்றனர். இந்த ஆளுநரால் திமுக அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கலாம் என்பதே ஒன்றிய அரசின் திட்டம், ஆனால் நடப்பது என்னவோ எதிர்மாறாகவே. ஆளுநர் எதைச் செய்தாலும், அது திமுகவிற்கு ஆதரவாகவே முடிந்துவிடுகின்றது.........🤣. இவரின் ஐந்து வருட பதவிக்காலம் முடிந்து விட்டது. ஒன்றிய அரசு இவரை மாற்றிவிடும் போல.
  30. சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் இலங்கையில் இயலாமையுடன் கூடிய நபர்களின் சமூக உள்ளடக்கம் எனும் வேலைத்திட்டத்தினை ஆதரித்து பரிந்துரையாடல் எனும் நிகழ்வு இயக்கச்சி றீ(ச்)ஷா இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, நேற்றையதினம் (19.10.2024) இயக்கச்சி றீ(ச்)ஷா பண்ணையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை நடைபெற்றுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் இயலாமையுடன் கூடிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இயலாமை உள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடி முன்மொழியப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பான முன்வைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கலந்து கொண்டோர் குறித்த பரிந்துரையாடலில் இயலாமையுடன் கூடிய நபர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தல், உரிமைகள், கல்வி சுகாதாரம், வாழ்வாதாரம் , மருத்துவம், சம்பந்தமாக அவர்கள் அடைய வேண்டிய தேவை, அவற்றை பூர்த்தி செய்ய தேவையான விடயங்கள், செய்ய இயலாமையாக, சவாலாக இருக்கும் விடயங்களை எவ்வாறு தீர்ப்பது தொடர்பான பரிந்துரையாடல் விழிப்புணர்வு செயற்பாடு நடைபெற்றுள்ளது. மேலும் இதன்போது, சிறப்பு விருந்தினராக றீ(ச்)ஷா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன், பிரதம விருந்தினராக வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் வாகீசன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலாளர்கள், மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். https://tamilwin.com/article/seminar-for-special-needed-people-in-reecha-1729425003
  31. பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு. ஆகவே, இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல், தாமாக யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர் தமது தேவைகளை மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர்.
  32. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பினால் தமிழ தேசிய கட்சிகளில் சில இளம் உறுப்பினர்கள் இண‌ந்துள்ளனர் ..அவர்களுக்கு வாக்கு போட்டு பழசுகளை(கிழவர்கள்) சிந்திக்க வைக்கலாம்.... வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...
  33. படித்த அடுத்த தலைமுறை வரவேண்டும் செயலாற்ற வேண்டும் என்று இங்கே நடிப்பவர்கள் இத்தால் இனம் காணப்படுவார்கள்.
  34. 163 பாதுகாப்பு உத்தியோகத்தர், 20 வாகனம், 16 சமையல் காரர், தோட்டக்காரர், எந்த நேரமும் அம்புலன்ஸ் என்று மகாராஜாக்கள் போன்ற வாழ்க்கையை பதவி இழந்த பின் வாழ நினைக்கும் இவர்களின் செயல் வெட்கப் பட வேண்டியது. ஏழை மக்கள் வாழும் நாட்டிற்கு இது அளவுக்கு மீறிய செயல் என்று உணராத ஜென்மங்கள். இதற்கான செலவுகள் எல்லாம்… ஏழை மக்களின் வயிற்றை அடித்துத் தானே கொடுக்க வேண்டி உள்ளது. தங்களின் சுக போக வாழ்க்கைக்கு அரசியலை பயன் படுத்தும் கிரிமினல்கள்.
  35. எல்லாமே நாடகம் சிறியர்...ஒன்றுமே நடக்காது...எல்லாம் காவித்துணிகளின் செட்டப்...இப்ப சிங்களவி ஒவ்வொருதரினதும் நோக்கம் எம்மினத்தை ப்ரித்து சின்னாபின்னமாக்கி ..நாடற்ற அனாதைகள் ஆக்குவதுதான்...எந்தவித உதவியையும் கிடைக்காமல் செய்வது...அதன் பின்பு விசிட்டர் விச்சவுக்கு திறந்து விடுவ்து...தாமிழரின் ஆட்டம் முடிந்தது...இதில் முசுலிம் பதுங்கியிருந்து காரியம் பார்க்க கங்கணம் கட்டுகிறான்...இது தெரியாமல் .நம்மடயள் நாற்பது கட்ட்சியாக எலச்சன் கேட்கினம் ..அதிலை தொட்டுக்கொள்ள ஊறுகாய் பாவிப்பதுபோல..தேசியம் சொல்லுகினம்...தூ ...*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் இனம்..
  36. இதனைப் படமாக்க ...தமிழ் யூடுயூப்பர்...வீணி வடிந்தபடி காத்திருக்கினம் ...புத்தரே...வெயிட்டிங் கால்...அந்த கோவணங்களை துக்கிக்காட்ட ..அல்லக்கை ஒன்றும் கூடத்திரியும்...
  37. நாடு வங்குரோத்தாகியிருக்கும் நிலையில் முன்மாதிரியாக நடக்க வேண்டிய தலைவர்கள் எவ்வளவு ஊதாரித்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த நாடு எப்படி உருப்படும்? இவர்களுக்கு 3 அரச வாகனங்களே கூடிப்போய் விட்டது.
  38. நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
  39. முருகேசு சந்திரகுமார்... சஜித் பிரேமதாசவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். சின்னம்: தொலைபேசி. (கல்குலேட்டர் அல்ல) 😂
  40. சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்
  41. இந்திய றோ மற்றும் RSS வழி நடத்தலில் கோமிய கூட்டில் பக்கா தாயக தமிழ் தேசிய வியாபாரி சுமந்திரன் என்பது தெளிவாக தெரிந்து விட்டது…
  42. போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.